ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ !!- கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
பகுதி -1
சுற்றியும் பாறைகள் நிறைந்த வனகாடு அது.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சூழ்ந்திருந்த மரங்கள் காற்றுக்கு இசைந்தாடி கொண்டிருக்க, அருவியில் இருந்து விழும் நீரின் சத்தமும் பறவைகளின் கூக்குரல்களுக்கு இணங்க இசையை மீட்டி கொண்டிருந்தது..

புதுவிதமான சத்தத்தில் கண்ணை சுருக்கியபடி எழுந்த நிகிலன், தன்மேல் காலை போட்டபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் ஆரூயிர் நண்பன் நகுலனை ஒரு மிதி மிதித்து விட்டு, "எப்பவும் என் ஆத்தாவோட ரேடியோ சத்தம் தானே ஓடும்.. இது என்ன புதுசத்தமாக இருக்கு.." என்று கண்ணை முழுவதும் விரித்தவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை..

அவன் மிதியில் நகுலனும் கண்ணை தேய்த்தவாறு எழுந்தமர,சுற்றியும் சுழல விட்ட அவனின் கண்களும் அதிர்ச்சியில் விரிய, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

தலையை தட்டி நேற்றிரவு என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றனர்.. எப்போதும் போன்று நகுலன் குடித்து விட்டு, "மச்சி அவ என்னைய வேணாம்னு சொல்றாடா.." என்று குடிபோதையில் புலம்ப, "டேய் அவ உன்னைய எத்தனை தடவை தான்டா வேணாம்னு சொல்லுவா.. அதுக்குனு தினமும் எதுக்குடா உயிரை வாங்கிட்டு இருக்கே?? என்று நொந்து தான் போனான் நிகிலன்..

"அப்ப அப்ப உனக்கும் நான் வேணாமா?? போங்கடா போங்க என்னோட அருமை எவனுக்குமே தெரில.. நா சாக போறேன்.." என்று எழுந்தவன் மாடியில் இருந்து குதிக்க போக, "அய்யய்யோ இவன் உண்மையாவே குதிக்க போறானோ??" என்று பதறியவாறு நகுலனை கீழே இழுத்தான்..

"மச்சி மச்சி நான் உன் ஆரூயிர் நண்பன்டா.. நீ இப்ப செத்தீனா நான் தான்டா கம்பி எண்ணனும்..இன்னும் நானு கன்னிகழியாம இருக்கேன்டா அப்பறம் அந்த பாவம் உன்னைய சும்மா விடாது.." என்று குழந்தையை கொஞ்சுவதை போல் நிகிலன் கொஞ்ச தொடங்க, நகுலனோ, "எப்படி மச்சி கம்பி எண்ணுவாங்க..??" என்று கேட்டான் அதிமுக்கியமான கேள்வியை..

"ம்ம்ம்க்கும் இந்த பரதேசிக்கு இது மட்டும் தான் கேட்டுருக்கும்.. இவனோட சேர்த்த பாவத்துக்கு இன்னும் அதைய மட்டும் தான் பண்ணல அதையும் எண்ணிருவேன் போல.." என்று நிகிலன் புலம்பினான் மனதினுள்..

"ப்ச் மச்சி சொல்லுடா.. ஒன்னு.. ரெண்டு.. மூணு.. நாலு.. இப்படிதானே எண்ணுவே.." - நகுலன்

"ஆமா ஆமா அப்படிதான் எண்ணனும்.." - நிகிலன்

"அப்ப நீநீநீ நான் எவ்ளோஓஓஓ பீல் பண்ணி பேசறதை கேட்காம எண்ணிட்டு இருப்பீயா?? அப்ப அப்ப என் மேல யாருக்குமே பாசமில்ல.. நான் சாக போறேன்.." - நகுலன்

"அடேய் நீ எம்புட்டு வேணாலும் பேசு ராசா.. நான் அத்தனையும் கேட்கறேன்.." - நிகிலன்

"போ போ உனக்கு தான் என் மேல பாசமே இல்ல.." என்று மீண்டும் நகுலன் குதிக்க போக, "அடேய் வேணாம்டா.." என்று அவனை தடுத்த நிகிலனை இழுத்து அணைத்து கொண்டு, "நீ என் உயிர் நண்பன் தான்டா அப்ப வா நம்ம சேர்ந்தே சாவோம்.." என்றவன் சரிய தொடங்கினான்..

இரவு நடந்தது நியாபகத்திற்கு வந்ததும் நிகிலன், "அடேய் அப்ப என்னைய கொன்னுட்டியாடா??" என்று அதிர்ச்சியில் நகுலனின் மேல் பாய, "எதே?? நம்ம செத்துட்டோமா.." என்று நகுலன் வாயை பிளந்தான்..

"ப்ச் அடிக்காதடா.. அப்ப ரெண்டு பேரும் மாடில இருந்து குதிச்சு செத்துட்டோமா??" - நகுலன்

"கொஞ்சம் திருத்தம் குதிக்க போனது நீயு.. என்னையும் சேர்த்து இழுத்துட்டு குதிச்சுட்டே.." - நிகிலன்

"செத்தா சொர்க்கத்துக்கு தானே போவனும் நம்ம என்ன காட்டுக்குள்ள வந்துருக்கோம்.." - நகுலன்

"ம்ம்ம்க்கும் உனக்கு சொர்க்கத்துக்கு போகனும்னு ஆசை இருக்கோ?? அதைய நீ கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாதுடா.." - நிகிலன்

"உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா எருமை.. இப்ப எங்க இருக்கோம்னு தெரியாம குழம்பிட்டு இருக்கறப்ப கூட உன் வாய் அடங்காதா??" - நகுலன்

"எங்க இருந்தாலும் எனக்கு என்ன கவலை?? என்கூடயே ஒரு பிரச்சனை ஒட்டிக்கிட்டு திரியறப்ப அதைய விடவா வேற பிரச்சனை வர போகுது.." - நிகிலன்

இதில் ஏகப்போக கடுப்பான நகுலன் பல்லை கடித்தவாறு அவனை முறைத்து விட்டு நகர, "நீ என்னைய விட்டுட்டு போனாலும் நானும் உன் பின்னாடி தான் வருவேன்.." என்றான் நிகிலன்..

திரும்பி அவனை முறைத்து "பாத்ரூம் போறேன் ஏன் நீயும் என் கூட வர்றீயா???" என்று அனல் பார்வையில் நகுலன் கேட்க, "ச்சை ச்சை கருமம் கருமம் நீயே போய் தொலை.." என்றவன் இருந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தான்..

எங்கிருந்தோ பெண்ணின் அழுகுரல் கேட்க, "ஆத்தி என்ன அழுகற சத்தம் எல்லாம் கேட்குது??" என்று பயப்பட தொடங்கிய மனதை கட்டுபடுத்திய நிகிலன், "ச்சே ச்சே இங்க யாரு வந்து அழுக போறா??" என்று தன்னை தானே சமாதான படுத்தி கொண்டான்..

மீண்டும் அதே அழுகுரல் கேட்க, பயத்தில் படபடவென அடித்த மனதும், "ஒரு வேளை பேயா இருக்குமோ?? அப்படிதானே படத்துல எல்லாம் காட்டுவாங்க.. அய்யய்யோ பேயோட காட்டுல வந்து மாட்டிக்கிட்டோமா???" என்று பயந்தவன், "அடேய் மச்சி" என்று நகுலனை தேடி ஓடினான்..

விழுந்தடித்து கொண்டு ஓடி வந்த தன் நண்பனை கண்டு, "டேய் ஏன்டா இப்படி ஓடி வர்றே??" என்று நகுலன் வினவ, "மச்சி பேய்டா இது பேயோட காடு போல.. அப்ப நம்ம ரத்தத்தை உறிஞ்சி குடிக்கதான் நம்மளைய இங்க கொண்டு வந்து போட்டுருக்கோ??" என்று நிகிலன் பயத்தில் படபடவென பேசினான்..

"டேய் லூசு மாதிரி எனத்தடா பேசிட்டு இருக்கே??" - நகுலன்

"நான் பயத்துல பேசறது உனக்கு லூசு மாதிரி இருக்காடா?? அங்க ஒரு பேய் அழுதுட்டு இருக்குடா.. வந்து என்னனு கேளு.. ச்சை வந்து என்னனு பாருடா.." - நிகிலன்

"என்னது பேயா??? இப்பதான் அந்த பேயை விட்டுட்டு கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா.. நேருலயே ஒரு பேய் வந்துருச்சா???" - நகுலன்

"உனக்கு உன் கவலை.. சீக்கிரம் வாடா அது கோவப்பட்டு எந்திரிச்சு வந்து நம்ம ரத்தத்தை குடிக்கறதுக்குள்ள நம்மளே அதுகிட்ட பிரெண்டாகிருவோம்.." - நிகிலன்

இருவரும் அழுகுரல் கேட்கும் இடத்தை நோக்கி செல்ல, "மச்சி பேயே வந்தாலும் என்னைய விட்டராதடா.. மீ பாவம்.." என்று கெஞ்சியவாறு நிகிலன் மிரண்ட விழிகளுடன் நகுலனின் கையை இறுக்கி பிடித்தவாறு நடந்தான்..

பாறையின் பின்னே சத்தம் கேட்க, மெதுவாக எட்டி பார்த்த இருவரும் திகைப்பில் "அடியேய் நீங்க எதுக்குடி இங்க உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க??" என்று கத்த, திடீரென்று பின்னால் வந்த சத்தத்தில் அங்கு அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மிரண்டு மரத்தோடு ஒட்டி கொண்டனர்..

"அடச்சீ இறக்குங்க நாங்கதான்.." என்று நகுலன் முன்னால் வர அவனின் பின்னே நிகிலனும் வந்தான்.. இவர்களை கண்டதும் விழிகளை பெரியதாக்கிய பெண்கள் இருவரும், "எதுக்குடா எங்களைய கடத்துனீங்க??" என்று அவர்களை கீழே தள்ளி விட்டு மொத்த, "எதே நாங்க கடத்துனோமா??" என்று அதிர்ச்சியில் தங்கள் மேல் அமர்ந்திருந்த இருவரையும் தள்ளி விட்டு எழுந்தமர்ந்தனர்..

"மச்சி அப்ப நம்மளையும் கடத்தி தான் காட்டுக்குள்ள விட்டுருப்பாங்களோ??" - நகுலன்

"அப்படி யாருக்குடா நம்ம மேல இவ்ளோ பகை" - நிகிலன்

"இந்த இடம் எங்க இருக்குனே தெரிலடா.. எப்படி மச்சி வெளில போறது??" - நகுலன்

"இது கூட பரவால்லடா.. இப்பதானே ஒரு பேயை விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு சொன்னே.. அந்த பேயே உன்னைய தேடி வந்துருக்குனா உன்மேல எம்புட்டு லவ்வுவு இருக்கும் யோசிச்சு பாரேன்.." - நிகிலன்

"அப்படியா மச்சி.. அடியேய் மாமு மேல அம்புட்டு காதலாடி செல்லம்.. இவ்ளோ காதலை வெச்சுக்கிட்டு ஏன்டி என்னைய வேணாம் வேணாம்னு சொல்றே.." - நகுலன்

இதை கேட்டு நகுலனின் புலம்பலுக்கு காரணமான ரித்திகா, "பக்கத்துல பெரிய கல்லும் இருக்கு.. பாறையும் இருக்கு அதுக்கு பக்கத்துல பெரிய அருவியும் இருக்கு.. எப்படி வசதி.." என்று கேட்டாள் முறைப்புடன்..

நிகிலனின் வாய் அமைதியாக இல்லாமல், "ஏன்மா நீ வந்தது தான் வந்தே எதுக்கு இந்த குள்ள கத்திரிக்காயை கூட்டிட்டு வந்தே.." என்று ரித்திகாவின் தோழியான ரியாவை கை காட்டி கேட்க, "ம்ம்ம்ம் வேண்டுதல் அதான்.." என்றாள் பல்லை கடித்தவாறு..

"அய்யோ ராமா எதுக்குடா எங்களைய இங்க கடத்திட்டு வந்தீங்க.." - ரிதி

"எது நாங்க கடத்திட்டு வந்தோமா?? அடியேய் நாங்களே இங்க எப்படி வந்தோம்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்.. இதுல நீ வேற.." - நகுலன்

"விளையாடாத நகுல்.. இதுனால பெரிய பிரச்சனையே வரும்" - ரிதி

"அய்யோ தங்கச்சி நான் கும்பிடற கருப்பணசாமி மேல சத்தியமா சொல்றேன் இங்க எப்படி வந்தோம்னு தெரியாம தான் குழம்பிட்டு இருக்கோம்.." - நிகிலன்

"முதல்ல இது என்ன இடம்னு தெரியுமா??" - ரிதி

"பார்த்தா தெரில சுத்தியும் மரமா இருக்கே இது காடுனு.." - நகுலன்

"அய்யய்யோ அப்ப சிங்கம், புலி எல்லாம் இங்கதானே இருக்கும்.." - ரியா

"ம்ம்ம்ம் ஆமா.. அதுக்கு பசிச்சா உன்னைய இரையா தூக்கி குடுத்துட்டு நாங்க தப்பிச்சிருவோம்.." - நிகிலன்

"ஜோக்ஸ் அப்பார்ட் நிகிலன் முதல்ல இங்க இருந்து எப்படி தப்பிக்கறதுனு யோசிங்க.." - ரிதி

"மேடம் சொல்லிட்டா கேட்டு தானே ஆகனும்.. யோசிப்போம் யோசிப்போம்.." - நிகிலன்

நால்வரும் யோசனையில் அமர்ந்திருந்த நேரத்தில் சரசரவென ஏதோ ஒரு சத்தம் காடு முழுவதும் எதிரொலிக்க, திடீரென்று கேட்ட சத்தத்தில் நால்வருக்கும் அந்த குளுமையிலும் வியர்த்து கொட்டியது..

"உண்மையாவே இது பேய் காடா தான் இருக்குமோ??" - நிகிலன்

"உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதடா எருமை.." - நகுலன்

"என்னது பேய் காடா??" என்று ரியா அழுக தொடங்க, "அடச்சீ வாயை மூடு இல்ல அந்த பேயுக்கு உன்னைய தூக்கி குடுத்துட்டு நாங்க தப்பிச்சுருவோம்.." என்று நகுலன் அதட்டியதும் கப்பென்று வாயை மூடி கொண்டாள் ரியா..

சட்டென்று அந்த சத்தம் நின்று விட, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மூச்சை வெளிவிடும் நேரத்தில் அவர்களின் பின்னால் பலத்த ஒளியில் அந்த சத்தம் கேட்க, "அம்மாஆஆஆஆஆ" என்று அவர்கள் கத்திய கத்தலில் காடே அதிர்ந்தது..தாகம் தீரும்..
 

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 2திடீரென்று பின்னால் கேட்ட சத்தத்தில் நால்வரும் பயத்தில் கத்தியிருக்க, மெதுவாக திரும்பி பார்த்தவர்களுக்கு நெஞ்சே அடைப்பது போன்று இருந்தது..

தன் இரையை தவற விட்ட புலி ஒன்று பசியில் கொடூரமாக முறைத்தபடி நின்றிருக்க, "ஆத்தி இதுக்கு பேயே பரவால்ல போல.." என்று பயத்தில் எச்சிலை விழுங்கிய நிகிலன் மரத்தோடு ஒன்றினான்..

"அப்ப நம்ம அவ்ளோதானா??" என்று மனதினுள் புலம்பிய நகுலனும் ரிதியை காண, அவளோ எந்த ஒருவித பதட்டமுமின்றி புலியை எதிர் கொள்ள தயாராக நின்றிருப்பதை கண்டவன் திகைப்பில் கண்களை விரித்தான்..

"நம்ம ஆளு பல்லியை பார்த்தா கூட பயப்படுவாளே!! என்ன இப்ப இவ்ளோ தைரியமா நின்னுருக்கா?? அய்யய்யோ என் கண்ணுக்கு தான் அவ பயப்படறது தெரியலயா??" என்று பலவாறாக போராட்டம் நடத்தியவன், "ரிதி ஆளுக்கொரு பக்கம் ஓடிராலமா??"என்று இவன் கேட்ட போதே சரியாக புலியும் இவர்களின் மீது பாய வர, அதற்குள் எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று புலியை சாய்த்திருந்தது..

இதில் தான் பெருமூச்சு விட்டவர்கள், அம்பு எங்கிருந்து வந்தது என்று திரும்பி பார்க்க, காட்டில் வாழும் மலைவாசிகள் இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர்..

"மச்சி இவங்களுக்கு அந்த புலியே பரவால்ல போலடா.. என்னமா முறைக்கறாங்கனு பாரு.." - நகுலன்

"எனக்கும் அதுதான்டா பயமா இருக்கு.. நம்ம நிலைமை அவ்ளோ தானா??" - நிகிலன்

"நம்மளோட இந்த நிலைமைக்கு காரணமானவன் மட்டும் என் கைல கிடைச்சான் அங்கிருக்கற பாறையை தூக்கி அவன் தலையை போட்டுருவேன்டா.." - நகுலன்

"உன்னால அங்கிருக்கற பெரிய கல்லை தூக்க முடியுமானு பாருடா அப்பறம் பாறையை தூக்கலாம்.." - நிகிலன்

இதில் நகுலன் அவனை முறைத்து பார்க்க, அருகில் வந்த மலைவாசி இருவரும், "யாரு சாமி நீங்க?? இங்கன என்ன பண்றீக??" என்று வினவ, ரியாவோ "எங்களைய யாரோ கடத்திட்டு வந்து இந்த காட்டுல விட்டுட்டாங்க அங்கிள்.." என்று கூறினாள் பாவமாக..

மெதுவாக நிகிலனோ, "அப்ப இவளை இவங்களோட பையனுக்கே கட்டி வெச்சுட்டு நம்ம தப்பிச்சரலாம்டா.. ஆசையா அவரை அங்கிள்னு கூப்பிடறா பாரு.." என்று நகுலனின் காதை கடித்தான்..

"என்ன சாமி சொல்றீக.. இங்கன இருந்து வெளில போறது அவ்வளவு லேசுபட்டது இல்ல.. வழி தவறி இங்கன வந்துப்புட்டீகளா??" என்று அவர் என்னவோ சாதாரணமாக தான் கேட்டார் உடனே நிகிலனோ, "யோவ் எங்களைய பார்த்தா சின்ன புள்ளை மாதிரி இருக்கா?? வழி தெரியாம தவறி இவ்ளோ பெரிய காட்டுக்குள்ள வந்து மாட்டே.. எவனோ எங்களைய கடத்தி இங்க போட்டுட்டு போய்ட்டாங்கடா.." என்று எகிறியவனின் கழுத்தில் இன்னொருவர் அறுவாளை வைத்திருக்க, அதன்பின் நிகிலன் கப்சிப் தான்..

"இங்கனயே நின்னு பேச வேணாம் வாங்க குடிலுக்கு போவோம்.. இங்கன தேனு எடுக்க வந்தது நல்லதா போய்ருச்சு இல்ல நீங்க அம்புட்டு தான்.." என்று இருவரில் வயதின் மூப்பில் இருந்த கருப்பன் கூற, ரிதியோ "இங்கிருந்து வெளில போறதுக்கு வழி மட்டும் சொல்லுங்க தாத்தா.. நாங்க எப்படியாவது தப்பிச்சு போக பார்க்கறோம்.. உங்களுக்கு எதுக்கு சிரமம்.." என்றாள் மறுப்பாக..

வாய் வரை வந்த வார்த்தையை கழுத்தில் இருந்த அறுவாளை பார்த்து விழுங்கிய நிகிலன்,"ரைட்டு குள்ளக்கத்திரிக்கு அங்கிள், இவளுக்கு தாத்தா.." என்று உள்ளுக்குள்ளே நினைத்து கொண்டான்..

"நாங்களும் மனுசனுக தான் சாமி பயப்படாம தகரியமா வாங்க.. ஒங்களைய பத்ரமா வெளில கொண்டு போய் விட வேண்டியது எங்க பொறுப்பு.. இந்த நேரத்துல இரையை தேடி விலங்குக நிறையா இந்த பக்கம் வரும்.. வாங்க போலாம்.." என்றழைக்க, ரியாவும், "எனக்கு பயமா இருக்கு ரிதி இவங்க கூடயே போலாம்.." என்றாள் கெஞ்சலுடன்..

"எஸ்கியூஸ் மீ தாத்தா அப்படியே இவருகிட்ட சொல்லி என் கழுத்துல இருக்கற அறுவாளை எடுக்க சொல்றீங்களா?? மீ பாவம்" என்று நிகிலன் கூறியதும், அவன் கழுத்தில் அறுவாளை வைத்திருந்த அகவன் முறைத்தவாறே அறுவாளை எடுத்தான்..

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ரிதியை சுரண்டி, "ஹே ரிதி.. என்னடா ஆச்சு.. பயப்படாம போலாம் வா.. உன்கூட இந்த மாமன் எப்பவும் இருப்பேன்.." என்ற நகுலனை ஏகத்துக்கும் முறைத்த ரிதியோ, "முதல்ல நீ இருப்பீயானு பாருடா என் சிப்ஸு" என்று விட்டு முன்னால் நடந்தாள்..

"இது உனக்கு தேவையா??" என்று நிகிலன் வாயை மூடி சிரிக்க, கடுப்புடன் முகத்தை திருப்பி கொண்டவனுக்கே சிறிது பயம் இருக்கதான் செய்தது.. இங்கிருந்து உயிருடன் செல்வோமா?? மாட்டோமாவென்று!!

முன்னால் நடந்து கொண்டிருந்த கருப்பனிடம், "தாத்தா இன்னும் எவ்ளோ தூரம்" என்று ரிதி கேட்க, "இந்த ஆத்தை தாண்டுன அம்புட்டு தான் சாமி" என்றார் அவரும்..

இதை கேட்டதும் "ஏதே ஆத்தை தாண்டி போகனுமா?" என்று ஆண்கள் இருவரும் வாய்விட்டே தங்களின் அதிர்ச்சியை வெளிபடுத்தி விட, "ஆமா சாமி அங்கன தான் எம் மக்களு இருக்காக.." என்று கருப்பன் சாதாரணமாக கூற, "சோலி முடிஞ்சுருச்சு.." என்று தலையில் கை வைத்து கொண்டான் நிகிலன்..

"தாத்தா எனக்கு தண்ணீல கண்டம்னு என் அம்மா ஆத்து பக்கமெல்லாம் விட மாட்டாங்க.." - நிகிலன்

"ஆமா தாத்தா எனக்கும் தண்ணீ சுத்தமா சேராது.. இங்க படகு எல்லாம் இல்லையா??" - நகுலன்

"அப்படினா??" - கருப்பன்

"அதான் மீன் பிடிக்கறப்ப எல்லாம் ஆத்துல ஓடிட்டு போவாங்களே.." - நிகிலன்

"அது எல்லாம் இங்குட்டு இல்ல சாமி.. அவ்ளோ ஆழமா எல்லாம் இருக்காது.. வெரசா கடத்தரலாம்.. பயப்படாம வாங்க.." - கருப்பன்

"அய்யய்யோ நான் மாட்டேன்.." - நிகிலன்

"அப்ப இங்கயே கிடந்து சாவு எனக்கு என்ன.. வாங்க தாத்தா நம்ம போவோம்.." என்று ரிதியும் ரியாவும் கருப்பனுடன் ஆற்றில் இறங்க, நிகிலனை தூக்கி தன் தோளில் போட்ட அகவன் "ஒன்னையும் தூக்கனுமா??" என்று கேட்க, பயத்தில் நகுலனோ இல்லையென்று வேகமாக தலையசைத்தான்..

கொஞ்சம் ஆழம் தான் அந்த ஆறு.. இருந்தும் நிதானமாக கால் வைத்து வந்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆற்றை கடந்து மேலேறி விட்டனர்.. அதன்பின் தான் அகவன் தன் தோளில் கிடந்த நிகிலனை இறங்கி விட்டது தான் தாமதம் அப்படியே அமர்ந்து விட்டான்..

அகவன் அவனை பார்த்த பார்வையில் வேகமாக எழுந்த நிகிலன் அமைதியாக அவர்களை பின் தொடர்ந்தான்..

"என்ன மச்சி ரொம்ப ஜாலியா இருந்த போலே.." - நகுலன்

"காலுல செருப்பு இல்லனு அந்த தைரியத்துல பேசறீயாடா??" - நிகிலன்

"உனக்கு என்னடா.. உன்னைய தூக்கிட்டு வந்துட்டாங்க.. நான்தான் கஷ்டப்பட்டு ஆத்தை கடந்தேன் தெரியுமா??" - நகுலன்

"என் வாய்ல அசிங்கம் அசிங்கமா வருதுடா பன்னாடை.. அவன் என்னவோ சாக்கை தூக்கி தோளுல போடற மாதிரி அசால்ட்டா என்னைய தூக்கி தோளுல போட்டுட்டான்.. அதுல குடலெல்லாம் வெளில வந்துருமோனு பயத்துல செத்து பிழைச்சேன்டா.." - நிகிலன்

"இங்க இருந்து போறப்ப அவரோட பொண்ணை நம்ம தூக்கிட்டு போறோம்டா.. இதுதான் பழிக்கு
பழி.. " - நகுலன்

"ஏன் உனக்கு வாழனும்னு ஆசை இல்லையா?? நா என்னவோ சாதாரணமா தான் அவரை எதிர்த்து பேசுனேன் அதுக்கே என் கழுத்துல அறுவாளை வெச்சுட்டாரு.. இதுல அவரு பொண்ணை தூக்கனும்னு நினைச்சே மவனே உன் தலை தனியா வந்துரும்.." - நிகிலன்

சிறிது தூரம் நடந்ததும் அவர்கள் சொன்ன குடில் வந்து விட, அங்கிருந்தவர்கள் இவர்களை கண்டதும் சூழ்ந்து கொண்டு என்னவென்று விசாரிக்க, "அடேய் சத்தியமா என்னால முடிலடா.. எனக்கு மூஞ்சு முட்டுது.." என்று நிகிலன் கதறியே விட்டான்..

அங்கு இருப்பவர்களுக்கு கருப்பன் தான் மூத்தவர் என்பதால், "இந்தாரு தள்ளி போங்கடா.. புள்ளக வழி தவறி காட்டுக்குள்ள வந்துருச்சு அம்புட்டுதான்.. இவூகளை பத்ரமா வெளில கொண்டு போய் வுடறது எம் பொறுப்புனு கூப்புட்டு வந்துருக்கேன்.." என்று அனைவரிடமும் பொதுவாக கூறுவதை போல் சத்தமாக கத்த, "சரிங்க ஐயா சரிங்க ஐயா" என்று ஒவ்வொருவரும் கலைந்து சென்றனர்..

"ஏன் மச்சி இவங்களுக்கு காது செவிடா.. இப்படி கத்துனா தான் கேட்குமா??" - நிகிலன்

"யாரு கண்டா?? அப்படியும் இருக்கலாம்.." - நகுலன்

"அது என்னவோ ஆனா இவரு கத்துனதுல என் காதுக்குள்ள குருவி பறக்கற மாதிரி இருக்குடா.." - நிகிலன்

"நான் வேணா அந்த அகவனை கூப்பிட்டு டிரீட்மெண்ட் தர சொல்லட்டுமா??" - நகுலன்

"செருப்பாலயே அடிப்பேன் பார்த்துக்க.. நண்பனாடா நீயு.. இப்பதான் அதைய மறந்தேன் அதுக்குள்ள நியாபக படுத்தி விட்டுட்டே.." - நிகிலன்

"நீங்க வாங்க சாமி.." என்று நால்வரையும் ஒரு குடிலுக்குள் அழைத்து சென்று பருக தண்ணீரை குடுத்து விட்டு, "இங்கனயே இருங்க சாமி ஏதாவது சாப்பட கொண்டு வாரேன்" என்று விட்டு சென்றார்..

"நீங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டிங்களா??" - ரிதி

"ஏன் அடங்காம என்ன ஆடிட்டா இருக்கோம்.." - நகுலன்

"உங்களைய அப்படியே விட்டுட்டு வந்துருக்கனும்.. கொஞ்சம் கூட அறிவே இல்லாம காப்பாத்துனவங்களைய கலாய்ச்சுட்டு இருக்கீங்க.." - ரிதி

"நான் எதுவும் பண்ணல எல்லாம் இவன் தான்.." - நகுலன்

"அடேய்.. அது இல்ல சிஸ்டர்.. அவரு என்னைய தூக்கி தோளுல போட்டதை தான் சொல்லிட்டு வந்தேன்.. இவன் தான் தேவை இல்லாம பேசிட்டு வந்தான்.." - நிகிலன்

"அப்படியே தூக்கி வீசிட்டு வந்துருக்கனும் உன்னைய எல்லாம்.. கொஞ்சம் கூட பயமே இல்லாம இருக்கீங்க.." - ரியா

"பாருடா வாயில்லா பூச்சி எல்லாம் நம்மளைய திட்டுது.." - நிகிலன்

"திருந்தவே மாட்டிங்க.." என்று கடுப்புடன் ரிதி எழுந்து வெளியில் கென்று விட, "ம்ம்ம்க்கும் ரொம்பதான் பண்றாங்கடா உன் ஆளு.." என்று முகவாயை இடித்த நிகிலன் படுத்து விட்டான்..

வெகு நேரமாகியும் தன்னவள் வராததை கண்டு அவளை தேடி கொண்டு நகுலன் வெளியில் வந்தான்.. அங்கிருந்த ஒருவரிடம் கேட்க, அவரோ ஒரு திசையில் கை காட்ட, நகுலனும் அங்கு சென்றான்..

கல்லில் அமர்ந்து ஏதோ யோசித்தவாறு அமர்ந்திருந்த ரிதி இவனை கண்டதும் எழுந்து செல்ல போக, அவளின் விலகலில் உள்ளுக்குள் தோன்றிய கடுப்பில் அவளின் கையை பிடித்தவன் "ஏன்டி இப்படி பண்றே?? நான் என்ன பண்ணுனேனு சொல்லி தொலையேன்டி.." என்று கடுப்பில் ஆரம்பித்தவன் சலிப்புடன் முடித்தான்..,

சிடுசிடுப்புடன் ரிதியும், "எத்தனை தடவை தான் சொல்றது உன்னைய எனக்கு பிடிக்கல பிடிக்கல பிடிக்கலனு.." என்று கத்த, சுள்ளென்று ஏறிய கோவத்தில், "அப்பறம் எதுக்குடி என் காதலை ஏத்துக்கிட்டு என் கூட ஊரு சுத்துனே.." என்று கேட்டான் ஆக்ரோஷமாக..

இதற்கு ரிதியிடம் பதில் இல்லாமல் போக அவளின் தோள்பட்டையை பிடித்தவன் "இதுக்கு மட்டும் பதில் சொல்லுடி.." என்று அனலாக கேட்க, "அப்ப பிடிச்சுச்சு இப்ப பிடிக்கல போதுமா.." என்று அவனின் கையை தட்டி விட்டவள் விறுவிறுவென சென்று விட்டாள்..

அவளின் பதிலில் சோர்ந்த மனதுடன் கல்லில் அமர்ந்த நகுலனுக்கு அவளுடன் சேர்த்து கழித்த நாட்கள் நினைவில் வர, அவனை அறியாமலே கண்ணில் வழிந்த கண்ணீர் நிலத்தை தொட்டது..தாகம் தீரும்..

கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 3தலையில் கை வைத்து அமர்ந்த நகுலனுக்கு கோவமும் ஆத்திரமும் ஒன்று சேர எழ, "காதல்னா உனக்கு அவ்ளோ ஈசியா போய்ருச்சுலடி.." என்று புலம்பியவனுக்கு காரணமே இல்லாமல் அவள் தன்னை வெறுப்பது யாரோ ஈட்டியால் இதயத்தை குத்துவது போல் இருந்தது..

அவளை முதன் முதலாக பார்த்த தருணத்தை நினைத்த போது அவனின் இதழில் அரும்பிய புன்னகையே பறைசாற்றியது அவளின் மீதுள்ள காதலை..

ஆபிஸில் நகுலனும் நிகிலனும் கடமைக்கென வேலை செய்து கொண்டிருக்க, யோசனை வந்தவனாக அருகில் இருந்த ரியாவிடம், "நம்ம கேபினுக்கு புதுசா ஆள் ஒருத்தர் வருவாங்கனு சொன்னாங்களே அது பொண்ணா இல்ல பையனா??" என்று ஆர்வமாக வினவினான் நகுலன்..

கணினியில் இருந்து கண்ணை அகற்றாமலே ரியாவோ, "யாரு வந்தா உனக்கு என்னடா முதல்ல வேலையை பாரு.." என்று கடுப்படிக்க, "ப்ச் பே லூசு உன் மூஞ்சியை பார்த்து பார்த்து சலிச்சு போய்ருச்சு.. ஒரு பொண்ணு வந்தா எப்படி இருக்கும்.." என்று நகுலன் கனவில் மிதந்தான்..

நிகிலனோ சிரிக்காமல், "அப்படியே அந்த பொண்ணுக்கு ரெண்டு குழந்தை இருந்தா எப்படி இருக்கும்.." என்று வினவ, "நீங்க ரெண்டு பேரும் என்கூட இருந்தா கடைசி வரைக்கும் சிங்களா தான் இருக்கனும் போல.. மொதல்ல உங்க பிரெண்ட்சிப்பை கட் பண்ணனும்.." என்று முணுமுணுத்தவாறு வேலையை தொடர்ந்தான்..

"இல்லனா மட்டும் அப்படியே உன் பின்னாடி பொண்ணுக ஓடி வருவாங்க பாரு.. நடக்கறதை பேசனும்.. நடக்காததை ஏன் பேசிட்டு இருக்கே.." என்று ரியாவும் அவனின் காலை வார, இருவரையும் முறைத்த நகுலன் "கண்டிப்பா நான் கமிட் ஆவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.." என்றவனை பார்த்து மற்ற இருவரும் நகைத்தனர்..

சிறிது நேரத்தில் எம்.டியின் அறையில் இருந்து இளம்பெண் ஒருத்தி வெளியில் வர, மொத்த அலுவலகமும் அவளை தான் நிமிர்ந்து பார்த்தது..

அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்த அவளுக்கு, பயத்தில் கைகள் நடுங்க, ரிசெப்சனில் நின்றிருந்த பெண்ணோ அவளுக்கான கேபினை காட்டியதும் புன்னகையுடன் தலையசைத்து விட்டு வேகமாக அங்கு செல்ல முயன்றவள் கால் இடறி கீழே விழுந்தாள்..

இதை பார்த்து அனைவரும் சிரிக்க, அந்த இளம்பெண்ணுக்கோ கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.. நகுலன் தான் எழுந்து சென்று அந்த இளம்பெண்ணை தூக்கி விட்டு "ஹே பேபி எதுக்கு அழுகறே?? அடி ஏதாவது பட்டுருச்சா??" என்று கேட்க, அதில் தான் தன்னிலைக்கு வந்தவள் அவனை விட்டு விலகி இல்லையென்று தலையசைத்தாள்..

"சரி வா.. இங்கயே நிற்க வேணாம்.." என்று அவளை அழைத்து கொண்டு சென்று அமர வைத்தவன் தங்களைய பற்றி கூறி விட்டு அவளிடம் பெயரை கேட்டதும் "ரத்திகா" என்றாள் மெல்லிய குரலில்..

"உன்னைய போல உன் பேரும் ஸ்வீட்டு பேபி.." - நகுலன்

"பேபினு சொல்லாதீங்க.." - ரிதி

"உன்னைய பார்த்தா அப்படிதான் இருந்துச்சு பேபி.. குட்டீஸ்க ஸ்கூலுக்கு போய் எப்படி மிரண்டுட்டு நிற்கும் அதே மாதிரி தான் நீயும் நின்னுட்டு இருந்தே.." - நகுலன்

"அந்த லூசு அப்படிதான் ரிதி.. நான் வந்தப்ப கூட இப்படிதான் பேபி காபினு கொஞ்சிட்டு இருந்தான்.. போக போக பேரை மாத்திருவான்.." - ரியா

"ம்ம்ம்க்கும் போன போகுதுனு என் நண்பன் உன்னைய பேபினு கூப்பிட்டுருப்பான்.. அதுக்கு அப்பயம் தான் தெரிஞ்சுருக்கும் நீ பேபி இல்ல பேய்னு.." - நிகிலன்

"உன்கிட்ட நானு பேசவே இல்ல.." - ரியா

"நானும் உன்கிட்ட சொல்லவே இல்ல குள்ளகத்திரி.." - நகுலன்

"ஆமா ரிதி வெளில வந்ததும் எதுக்கு அப்படி பயந்துட்டு இருந்தே.." - ரியா

"அது வந்து.. நான் இதுவரைக்கும் எங்கையும் தனியா போனது இல்ல ரியா அதான்.. எல்லாரும் என்னைய பார்க்கவும் ஒரு மாதிரி ஆகிருச்சு.." - ரிதி

"புதுசா யாராவது வந்த பார்க்கதான் செய்வாங்கமா.. அதுக்கு எல்லாம் பயந்தா எப்படி??" - நிகிலன்

"இல்ல எனக்கு பழக்கமில்ல.." - ரிதி

"போக போக பழகிரும் பேபி.. பயத்தை தூர வீசிட்டு சாதாரணமா இரு.." - நகுலன்

இதற்கும் சிறுபுன்னகையை உதிர்த்தவள், "வேலைய பத்தி உங்க கிட்ட கேட்க சொன்னாங்க.." என்று தயக்கமாக உரைத்திட, "அதுக்கென்ன தாராளமா சொல்லி தர்றேன்.." என்று ரிதியின் கையை பிடிக்க வந்த நகுலனின் கையை தட்டி விட்ட ரியா, "நானே சொல்லி தர்றேன் ரிதி.. அவன் வேணாம்.." என்றாள் சிறுமுறைப்புடன்..

அதன்பின் அவர்கள் வேலையில் மூழ்கினாலும் நகுலனின் பார்வை அடிக்கடி ரிதியை தீண்டி மீள்வதை உணர, குறுகுறுவென இருந்த அவனின் பார்வையில் ரிதியின் கன்னங்களோ செங்கொழுந்தாக சிவந்து போனது..

********

நகுலனை காணாமல் தேடி கொண்டு வந்த நிகிலன் அவன் தோளில் கை வைத்ததும் தன்னிலைக்கு வந்தவன், வறட்டு புன்னகையை சிந்தி "எப்படி இருந்த ரிதி இப்படி மாறிட்டால்லடா.." என்று கேட்டவனின் இதயம் விம்மியது..

"அவ அப்பாக்காக கூட உன்னைய வேணாம்னு சொல்லலாம் தானேடா.." - நிகிலன்

"இல்ல மச்சி அதுக்கு அவ பயந்துருப்பாளே தவிர என்னைய வேணாம்னு சொல்ல மாட்டா.." - நகுலன்

"அப்பறம் அவளுக்கு என்னதான்டா பிரச்சனை.." - நிகிலன்

"எனக்கே தெரிலடா.. முதல்ல அவ என்னைய பார்க்கற பார்வைல காதல் இருக்கும்.. ஆனா இப்ப எல்லாம் யாரோ மாதிரி பார்க்கறாடா.." - நகுலன்

"அப்படினு நீயே நினைச்சுக்காத மச்சி.." என்று அவனை சமாதான படுத்திய நிகிலனுக்கும் இந்த சந்தேகம் இருக்கதான் செய்தது..

இருந்தும் அவனிடம் கேட்டு இன்னும் அவனை வருத்த வேணாம் என்றெண்ணி வர மாட்டேன் என்றவனை வலுக்கட்டாயமாக அழைத்து கொண்டு குடிலுக்கு சென்றான்..

இரண்டு நாட்கள் அங்கயே தங்கி இருந்தவர்களுக்கு இவ்வாழ்வு கூட பிடித்து போனது.. எதிர்காலத்தை நினைத்து பணம் பணம் என்று ஓடாமல், கிடைப்பதை உண்டு, ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்பேற்பட்ட இன்பம்..

எப்போதும் இவர்களுக்கு உணவு கொண்டு வரும் பொன்னியை காணாமல் வேறொருவர் வந்திருக்க, "ஏன் நீங்க வந்துருக்கீங்க.. முதல்ல ஒருத்தரு வருவாங்களே.." என்று குழப்பத்துடன் கேட்டான் நகுலன்..

"அவுகளைய அழைக்க இன்னைக்கு பட்டணத்துல இருந்து வந்துப்புட்டாகனு அவுக போய்ட்டாக.." என்று அப்பெண் வெள்ளந்தியாக கூறிட, "பட்டணத்துல இருந்தா..?? அவங்க எதுக்கு இவங்களைய அழைச்சுட்டு போறாங்க.." என்று சந்தேகத்துடன் ரிதி கேட்க, "அது எல்லாம் சொல்லபுடாது சாமி நீவுக சாப்புடுக நான் போறேன்.." என்றாள் அவசரமாக..

சாப்பிட்டு விட்டு இதே குழப்பத்தில் மிதந்திருந்த ரிதி இதற்கு மேல் முடியாது என்றெண்ணி தங்களைய காப்பாற்றி அழைத்து வந்த கருப்பனை தேடி சென்றாள்..

"தாத்தா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.." - ரிதி

"உம்மைய பாக்க நானே வரனும்னு இருந்தேன்.. அதுக்குள்ள நீவே வந்துபுட்டே.." - கருப்பன்

"என்னைய எதுக்கு தாத்தா பார்க்க வரலாம்னு இருந்தீங்க.." - ரிதி

"பட்டணத்துல இருந்து ஆளுக வந்துருக்காக சாமி அவுக கூட நீவுகளும் கெளம்பி போயிருக.. நா அவுககிட்ட இத பத்தி பேசிக்கறேன்.." - கருப்பன்

"அதைய பத்தி தான் நானும் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன் தாத்தா.. அவங்க எதுக்கு இங்க வர்றாங்க.." - ரிதி

"அது உமக்கு வேண்டாதது சாமி.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவுக வந்துருவாக.. ஒங்களைய பத்ரமா வெளில விட வேண்டியது என் பொறுப்பு.." - கருப்பன்

"நீங்க சொல்லியே தீரனும் தாத்தா.. அவங்க எதுக்கு பொன்னி அக்காவை அழைச்சுட்டு போறாங்க.. அவங்களுக்கு இப்பதானே கல்யாணம் ஆகிருக்குனு சொன்னாங்க.." - ரிதி

"இதுதான் எங்க வாழ்க்கை சாமி நீ அதுல தலையிடாம கெளம்பு.." - கருப்பன்

"நீங்க சொல்ற வரைக்கும் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன் தாத்தா.. நானும் கேட்கனும்னு இருந்தேன் இங்க ஒரு குழந்தையை கூட காணோம்.. யாருக்குமே குழந்தை இல்லையா??.. " - ரிதி

"இங்கன நடக்கறது வெளில போக கூடாதுனு உத்தரவு இருக்கு சாமி.. அதைய தெரிஞ்சுப்புட்டு நீ எனத்த பண்ண போறே??" - கருப்பன்

"எனக்கு தெரிஞ்சுக்கனும் தாத்தா அவ்ளோதான்.. இதைய நானும் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன் என்னைய நம்பி நீங்க தைரியமா சொல்லலாம்.." - ரிதி

"இந்த பொண்ணு சொல்லாம எம்மைய விடாது போல.. இதே வெளில எவனாவது கிட்ட கேட்டுருந்தா மரத்துல கட்டி தொங்க விட்டுருப்பான்.. நல்லவேளை இந்த பொண்ணு தப்பிச்சுச்சு.." என்று மனுதினுள் மருகினார்..

"சாமி நாங்க மொதல்ல வேறொரு மலைபகுதில தான் இருந்தோம்.. அங்க இருந்தப்ப எம் மக்களு அதிகமா தான் இருந்தாக.. அங்க வந்த மழைல எங்க குடிலு எல்லாம் அடிச்சுட்டு போனதுல தான் இங்கன வந்தோம்.. பட்டணத்துல இருக்கற ஒரு ஆளுதான் எங்களுக்கு தேவையானதை அம்புட்டும் செஞ்சு தர்றேனு சொல்லி அதுக்கு பதிலா நாங்க எம் பொண்ணுகளை அவுக கூட அனுப்பி விட கேட்டாரு.. மொதல்ல நாங்க மறுக்கதான் செஞ்சோம்.."

"ஆனா நாங்க இங்கனயே புள்ள குட்டிகளை வெச்சு என்ன பண்றதுனு அவுக கூட அனுப்பி விட்டரலாம்னு ஒன்னா பேசி பொறவு தான் குழந்தைகளை அனுப்பி விட்டோம்.. பொண்ணுக முழுகாம இருந்தா அவுகளே வந்து கூப்புட்டு போய் குழந்தை பொறக்கற வரைக்கும் அங்கனயே வெச்சு பார்த்துப்புட்டு குழந்தை பொறந்ததும் குழந்தையை அவுக எடுத்துப்புட்டு எம் பொண்ணுகளை இங்கன கொண்டு வந்து விட்டுருவாக.."

"அதுனால தான் இங்கன குழந்தைக ஆருமில்ல.. எங்களுக்கு உதவுற ஆளு இடைல எப்பவாவது வந்து இங்கன இருந்துப்புட்டு அவுக கூட எம் பொண்ணுகளையும் கூப்புட்டு போவாரு.. அப்டி போனா எம் பேத்தி அங்கன என்ன செஞ்சுப்புட்டு இருக்கானு தான் தெனமும் தோணும்.."

"எங்களுக்கு இம்புட்டு தூரம் வந்து செய்யறதே பெரிசுனு வுட்டுருவோம்.. நாங்க இந்த காட்டை வுட்டு வெளில வந்தாலும் என்னவோ மிருகத்தை விட கேவலமா பார்ப்பாக அதுக்கு இங்கனயே இருக்கற வரைக்கும் இருந்துக்கலாம்னு தான் எதையும் கேட்டுக்கறது இல்ல சாமி.. எம் பொண்ணுக எங்க இருந்தாலும் நல்லா இருந்தா அதே போதும் எங்களுக்கு.." என்று மனதில் இருக்கும் அனைத்தையும் கருப்பன் கொட்டி விட, இதனை கேட்ட ரிதிக்கு இவர்களின் அறியாமையை நினைத்து அழுவதா?? சிரிப்பதா?? என்று புரியாமல் போனது..

ரிதி வாயெடுக்கும் முன்னே வெளியில் காரின் சத்தம் கேட்க, "அவுக வந்துட்டாகனு நெனைக்கறேன் சாமி இப்ப சொன்னதை மறந்துப்புட்டு ஊரு போய் சேரு.. எங்கன தலைல இப்டி எழுதியிருந்தா ஆரால மாத்த முடியும்.." என்றவர் வேகமாக எழுந்து வெளியில் சென்றார்..

அவரின் பின்னே ரிதியும் வந்து நிற்க, குடிலுக்குள் இருந்த மற்ற மூவரும், "என்னடா கார் சத்தம் எல்லாம் கேட்குது" என்றவாறு வெளியில் வந்தனர்..

கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவனை கண்டு திகைத்த நகுலனின் இதழ்களோ "துரோகி" என்று முணுமுணுக்க, ரிதியோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவனை பார்த்தாள்..

தாகம் தீரும்.. 

T21

Well-known member
Wonderland writer


பகுதி - 4காரில் இருந்து இறங்கியவனை கண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் நின்றிருக்க, மலைவாழ் மக்களோ சிறிது குனிந்து கைகள் இரண்டையும் கட்டியவாறு வணக்கம் வைத்தனர்..

புஜங்கள் இரண்டும் திமிறி இருக்க, பரந்த நெஞ்சில் பரவியிருந்த சுருள்முடிகள் அவன் கையை நீட்டும்போதும் மடக்கும்போது வெளியில் எட்டி பார்த்து பின்பு ஒளிந்து கொள்ள, அவன் கழுத்தில் இடம் பெற்றிருந்த தங்க செயினும், கண்ணில் இருந்த கூலரோ இப்போது சட்டையின் நடுவில் இடம் பெயர்ந்து இருந்தது..

அவனின் கூர்விழிகள் அங்கிருக்கும் அனைவரையும் தீண்டி பின்பு புதியதாக நின்றிருந்த இவர்களின் மேல் படர தொடங்க, அவனின் பார்வையிலே, "இவுக காட்டுக்குள்ள வழி தவறி வந்துப்புட்டாக.. நான்தான் பத்ரமா வெளில கொண்டு போய் வுடறேனு அழைச்சுப்புட்டு வந்தேன்.." என்று பவ்யமாக கருப்பன் கூறினார்..

அவரை பார்த்த அவனின் பார்வையில் என்ன இருக்கிறது என்பது புரியாமல் பயத்தில் கருப்பன் தலையை குனிய, கார் சாவியை விரலில் சுழற்றியவாறு அழுத்தமான நடையுடன் அவர்களை நெருங்கினான் அவன் விக்ரம்..

"இன்னும் உயிரோடு தான் இருக்கீங்களா?? நான்கூட அப்பவே செத்து போயிருப்பீங்கனு நினைச்சுட்டேன்.." என்று நகைப்புடன் நகுலனிடம் கேட்டாலும் அவனின் விழிகளோ அமைதியாக நின்றிருந்த ரிதியையே தீண்டியது..

நகுலனும் சற்று ஏளன நகையுடன் "நீங்களே இருக்கறப்ப நாங்க சாவோம்னு நினைச்சீங்களா மிஸ்டர்.விக்ரம்.." என்றிட, இதில் அழுத்தமாக பதிந்திருந்த அவனின் இதழோ சிறிது விரிந்து, "அப் கோர்ஸ்" என்றவனது கூர்பார்வை அப்போதும் ரிதியிடமே நிலைகுத்தி நின்றது..

நிகிலன் சலித்தவாறு, "அப்படி என்னதான்டா எங்கமேல உனக்கு வன்மம்.." என்று கேட்க, கலகலவென சிரித்த விக்ரம், "இதோ நிற்கறானே உன் பிரெண்டு அவன் எதுவும் சொல்லலயா?? இல்ல பொண்ணு வந்ததுக்கு அப்பறம் உன்னைய கலட்டி விட்டுட்டானா??" என்று வினவியவனின் குரலில் இருந்தது கேலியும் கிண்டலும் மட்டுமே..

"இப்ப எதுக்கு நடந்து முடிச்சதை பத்தி பேசிட்டு இருக்கே??" - நகுலன்

"ஆரம்பிச்சது உன் நண்பன் தான்.. நான் இல்லயே.." - விக்ரம்

"தாத்தா இவன் யாரு?? எதுக்கு இங்க வந்திருக்கான்.." - நகுலன்

"சாமி இவரு தான் இங்கன எல்லாமும் செய்யறது.. இவரு கூட தான் ஒங்களையும் அனுப்பி வுடலாம்னு ஐயாகிட்ட பேசிருக்கேன்.." - கருப்பன்

இதை கேட்டதும் அங்கிருந்த மரத்தில் சாய்ந்து நின்ற விக்ரம் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு, "கருப்பன்" என்றழைத்தான் குரலை உயர்த்தி..

"சொல்லுங்க ஐயா.." என்று பவ்யமாக அவனிடம் குனிந்ததை கண்டு ரிதிக்கு கோவம் பொத்து கொண்டு வர பல்லை கடித்தவாறு முகத்தை திருப்பியவளை ஆராய்ந்தவாறே, "இன்னும் ரெண்டு நாளு கழிச்சு தான் இங்க இருந்து கிளம்பறதே.. நான் தங்கறதுக்கும் குடில் வேணும்.." என்றான் கட்டளையுடன்..

கருப்பனும் தலையசைத்து தன் மக்களை வேகமாக வேலை வாங்க, விக்ரமை கண்டதில் இருந்து நகுலனுக்கு எரிச்சல் மண்டி கிடந்ததால் அவனை தீப்பார்வை பார்த்தவாறே வேறுபுறம் சென்று விட, அவர்களுக்குள் என்ன சண்டை என்று புரியாமல் நிகிலனும் அவனை பின் தொடர்ந்து சென்றான்..

விக்ரமை சலனமின்றி நோக்கிய ரிதி, பின்பு உறுத்து விழித்தவாறு நின்றிருந்த ரியாவை இழுத்து கொண்டு குடிலுக்குள் நுழைந்து விட, அவர்கள் சென்றதும் தோளை குலுக்கியவாறு விக்ரமும் அகன்றான்..

சிடுசிடுவென முகத்துடன் இருந்த நகுலனிடம், "உனக்கும் அவனுக்கும் என்னதான்டா பிரச்சனை.." என்று நிகிலன் அலுத்து கொள்ள, நிமிர்ந்து அவனை படுபயங்கரமாக முறைத்து "நான் தனியா இருக்கனும்.." என்றான் நகுலன்..

அவனை கூர்ந்து பார்த்த நிகிலனும் எதுவும் பேசாமல் அகன்று விட, வந்ததில் இருந்து விக்ரமின் பார்வை ரிதியை தீண்டுவதை தான் நகுலனால் ஏற்று கொள்ள முடியவில்லை..

"உனக்கு என்னதான்டி பிரச்சனை" என்று நினைத்த நகுலனின் மனதோ அவளிடம் காதலை கூறிய தருணத்தை நோக்கி சென்றது..


******


நாட்கள் வேகமாக ஓடியிருக்க, அந்த அலுவலகத்தில் ரிதியும் அவர்களுள் ஒருவராக மாறியிருந்தாள்.. முதலில் எல்லாம் அலுவலகம் செல்லவே அலுத்து கொண்டிருந்த நகுலன் இப்போது நேரம் தவறாது அவனின் பேபியை காண வந்துருவான்..

அனைவரிடமும் சாதாரணமாக ரிதி பழகினாலும் அவளின் கருமணிகள் நகுலனையே தான் சுற்றி வரும்.. இவளிடம் கூறாமல் அவன் எங்கையாவது சென்று விட்டால் அவன் எங்குவென்று அவளின் விழிகள் தேடிதேடியே ஓயும் நேரத்தில் சரியாக அவளின் முன்பு வந்து விடுவான் அவளின் கள்வன்..

ஒருநாள் ரிதிக்கு உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுத்திருக்க, அவள் இல்லாமல் நகுலனுக்கு தான் எந்த வேலையும் ஓடவில்லை.. "மச்சி ரிதி நல்லா இருப்பா தானே??" என்று நிகிலனிடம் கேட்க, அவனோ முறைப்பை பதிலாக குடுத்து விட்டு வேலையை தொடர்ந்தான்..

அவன் பதிலுரைக்க வில்லை என்று அடுத்து ரியாவிடம் இதே கேள்வியை கேட்க, அவளோ பத்ரகாளியாக மாறி, "அடேய் ஏன்டா ஏன் இப்படி?? காலைல வந்ததுல இருந்து இப்படி பாடாபடுத்தறே?! அதான் அவ நல்லா இருக்கானு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே போன் பண்ணி சொன்னா?? நீயும் வேலை பார்க்காம எங்களையும் பார்க்க விடாம சாவடிக்கறே?? இனி வாயை திறந்த நான் லீவு போட்டுட்டு வீட்டுக்கே போய்ருவேன்.." என்று பொங்கி விட்டாள்..

பின்ன என்ன?? வந்ததுல இருந்து கேட்டதையே கேட்டுட்டு இருந்தா கோவம் வரதானே செய்யும்.. எல்லாம் காதல் படுத்தும்பாடு!!

"அடேய் பேசாம உன் எழவெடுத்த காதலை ரிதிகிட்ட சொல்லி தொலை.. அப்பவாவது உன்கிட்ட இருந்து விமோசனம் கிடைக்குதானு பார்ப்போம்.." - நிகிலன்

"என்ன மச்சி பொசுக்குனு இப்படி சொல்லிட்டே??" - நகுலன்

"பொறவு எப்படி சொல்றது.. சத்தியமா என்னால முடிலடா.. நீயே யோசிச்சு பாரு.. நீ வாயை திறந்தாலே ரிதி ரிதினு தான் வார்த்தையே வருது.." - நிகிலன்

"ஆமா தெய்வமே அவகிட்ட உன் வீணாபோன காதலை சொல்லி தொலைஞ்சுருடா என்னாலயும் முடில.." - ரியா

"உங்களுக்கு என் நிலைமையை பார்த்தா கிண்டலா இருக்குல்ல?? காதலிச்சு பாருங்கடா அப்பறம் தெரியும் அதோட வலி என்னனு.." - நகுலன்

"ஏன் நீ கிணத்துல விழுந்தது பத்தலனு எங்களையும் தள்ளி விட பார்க்கறீயா?? கொன்றுவேன் ஒழுங்க உன் வேலையை பாரு.." - நிகிலன்

"நான் ஆல்ரெடி விழுந்துட்டேன்.. அதைய புரிஞ்சுக்க வேண்டியவங்க புரிஞ்சுக்கலயே.." என்று முணுமுணுத்த ரியாவின் விழிகள் ஏக்கமாக நிகிலனை தீண்டி மீண்டது..

அந்த நாளை கர்மசிரத்தையுடன் தள்ளியவன் அடுத்த நாள் இவன் வருவதற்கு முன்பே ரிதி வந்து அமர்ந்திருந்தாள்.. நகுலனுக்காக ஏக்கத்துடன் அமர்ந்திருந்தவள் அவன் வருகிறானா?? என்று பார்க்க நிமிர்ந்த போது தன்னையே குறுகுறுவென பார்த்தவாறு நின்றிருந்த நகுலனை கண்டதும் இவளின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எறிந்தது..

"என்ன மேடம் என் தொல்லை இல்லாம நேத்து நிம்மதியா இருந்துருப்பீங்க போல.." - நகுலன்

"அப்படி எல்லாம் இல்ல.." - ரிதி

"பட் எனக்கு தான் உன்னைய பார்க்காம இந்த பேபி வாய்சு கேட்காம வேலையே ஓடல.." - நகுலன்

"அதான் ரியாவும் நிகிலன் அண்ணாவும் வந்துருப்பாங்களே.." - ரிதி

"அவங்களும் நீயும் ஒன்னா??" - நகுலன்

"பின்ன இல்லையா??" - ரிதி

"இல்லையே" என்ற நகுலன் அவளின் கையை எடுத்து துடித்திருந்த இதயத்தின் மீது வைத்தவன், "இந்த துடிப்பு எப்பவும் உனக்காக மட்டும் தான் பேபி.. என் இதயத்தை எப்பவே நீ எடுத்துக்கிட்டே.. அப்படியே என் காதலையும் சேர்த்து எடுத்துக்கோ பேபி.." என்று அவளுள் மூழ்க நினைத்தவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் பெண்ணவள் தலை குனிந்து கொண்டாள்..

"அப்படியே இவனையும் எடுத்துக்கமா என்னால இவன் டார்ச்சல் தாங்க முடில.." என்று பின்னால் இருந்து வந்த நிகிலனின் குரலில் தன்னிலைக்கு வந்த ரிதி கையை உருவி கொள்ள, திரும்பி அவனை முறைத்த நகுலன் "ச்சை இவனை வெச்சுக்கிட்டு ஒரு ப்ரோப்போஸாவது ஒழுங்க பண்ண முடியுதா??" என்று மனுதினுள் கருவினான்..

"நீவிர் நினைப்பதை யாமும் அறிவேன் பராபரமே.. சற்று நேரம் கடந்து வருகிறேன்.." என்ற நிகிலன் அப்போது தான் வந்த ரியாவையும் இழுத்து கொண்டு கேண்டினுக்கு சென்றான்..

அவன் சென்றதும் மீண்டும் ரிதியிடம் தன் காதலை கூற, ரிதியோ அதை மறுத்து கொண்டிருக்க, "பேபி பேபி ப்ளீஸ்டி என் செல்லம் தானே நீ.." என்று ரிதியை கொஞ்சியவாறு கெஞ்சி கொண்டிருந்தான்..

அவன் மீது ரிதிக்கு காதல் இருந்தாலும் தன் தந்தையை நினைத்து பயத்தில், "முடியாது நகுலன் என் அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.. வேலையை மட்டும் பாரு.." என்று மறுத்தவாறு இருந்தாள்..

இதில் கடுப்பானவன், "ஏன்டி என்னைய கல்யாணம் பண்ணி வாழ போறது நீயா?? இல்ல உன் அப்பாவா?? எதுக்கெடுத்தாலும் இப்படி பயந்துட்டு இருந்தா சரியாகிருமா?? என்னைய காதலிக்கறீயா?? இல்லையா?? அதை மட்டும் சொல்லு.." என்று முடிவுடன் கேட்க, "அது அப்பா..." என்று மறுபடியும் பயத்தில் மிரண்டவளின் கையை தூக்கி தன் தலை மேல் வைத்த நகுலன், "இப்ப சொல்லு.." என்றான் அழுத்தமாக..

எப்படி அவளால் மறுக்க முடியும் இந்த இடைப்பட்ட காலத்தில் நகுலனின் அக்கறையிலும் குறும்பிலும் அவன் மேல் காதல் துளிர் விட்டிருந்ததே!! நேற்று கூட அவனை பார்க்க முடியாமலும் அவனின் குரலை கேட்காமலும் தவித்த தவிப்பு இவள் மட்டுமே அறிவாள்!! இருந்தும் இது தன் தந்தைக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்ற பயத்தில் எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல் அவனை மறுத்தவாறு இருப்பது..

எதிர்வினை தராமல் அமர்ந்திருந்த ரிதியிடம், "சொல்லு ரிதி உனக்கு பிடிக்கலனாலும் தைரியமா சொல்லு.. உன்னைய டார்ச்சல் எல்லாம் பண்ண மாட்டேன்.." என்று விடாமல் கேட்கும் நகுலனை வெறித்து பார்த்தவள், "உங்களைய நானும் காதலிக்கறேன் தான்.. ஆனா என் அப்பா.." என்று மீண்டும் தந்தையை பற்றி பேச வந்தவளின் வாயை தன் கையால் மூடினான்..

"உன் அப்பாவை சமாளிச்சு அவருகிட்ட சமாதானம் வாங்க வேண்டியது என் பொறுப்பு போதுமா?? சும்மா சும்மா அப்பா அப்பானு சொல்லாத தாயே எனக்கு லவ் மூடே கெடுது.." என்று ரிதியின் பட்டு கன்னத்தை கிள்ளியவாறு கூறிய நகுலனின் தொடுதலில் சில்லிட்ட மேனியை பெரும்பாடு பட்டு அடங்கியவள் அவனை பாராமல் தலையை குனிந்து கொண்டாள்..

அதில், "பாருடா என் பேபிக்கு வெக்கம் எல்லாம் வருது.." என்று கலாய்த்த நகுலன், மேலும் "என்னைய விட்டு போகாம மாட்ட தானே பேபி.." என்று கசங்கிய முகத்துடன் கேட்க, அவனின் கையை பற்றிய ரிதியோ, "கண்டிப்பா போக மாட்டேன் நகுலன்.. என் அப்பா சம்மதிக்கற வரைக்கும் உங்களுக்காக காத்திருப்பேனே தவிர மறக்க மாட்டேன்.. உங்களைய மறந்தா அதுதான் என் கடைசி நிமிடமா இருக்கும்.." என்றாள் காதலுடன்..

அன்று அத்தனை காதலுடன் கூறிய ரிதி தான் இன்று தன்னை வார்த்தைக்கு வார்த்தை பிடிக்கவில்லை என்கிறாளே!! அவள் கூறும் ஒரே வார்த்தையால் ஆடவன் துடிக்கும் துடிப்பை பெண்ணவள் எப்போது அறிவாளோ???

*******

இதே நேரம் ரிதியும் விக்ரமும் விழிதனை ஒன்றோடு ஒன்று கலக்க விட்டு தங்களை மறந்து நீருக்குள் நின்றிருந்தனர்..தாகம் தீரும்..Comment pls


 
Last edited:
Status
Not open for further replies.
Top