ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

❤️❤️ என்னவள் ♥️♥️14

priyalini

Member
Wonderland writer
பிரியாவின் அம்மா ஒரு விபத்தில் இறக்க, தன் அக்காவின் மகளை தனது மகளாக பார்த்து கொண்டார் சுசீலா . சுசீலா அக்கா மீரா இருவரும் தமிழ்நாடு தான் என்ற போதிலும் இவர்களின் குடும்பம் இவர்களின் அப்பா காலத்திலே
உத்திரப்பிரதேசத்தில் இருந்தனர்.


பிரியாவின் தாத்தா அங்கு ஒரு மத்திய அரசு வங்கி ஒன்றில் கிளார்க் மற்றும் சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தார்.

மீரா படித்து முடித்து தந்தைப் போல வங்கியில் கிளார்க் வேலை செய்ய அங்கு வந்த ஒரு தமிழர் மீது காதல் கொண்டு தங்கள் பெற்றோர் மற்றும் தங்கை சம்மத்ததுடன் திருமணம் செய்தார்.

மீராவின் கணவர் தமிழகத்தில் தாங்கள் பெரிய பணகார குடும்பம் என்றும் தாங்களின் வீட்டிற்கு சிறு காலம் தாழ்த்தி சொல்லி அவர்களிடம் மீராவை அழைத்து சொல்வதாக சொல்லி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.

இதற்கிடையில் மீராவின் பெற்றோர் இழப்பு போன்றவை நிகழ அந்த வீட்டின் மகனாக மாறி பேனார்.

அப்போது சுசீலாவும் படித்து வங்கியில் வேலைக்கு சேர்ந்தார்.

மீரா கருவுற்றிருக்க, தங்கள் வீட்டில் சொல்லி மீராவை அழைத்து செல்ல சென்ற வேந்தன் வரவேவில்லை.

அவரின் மீது நன்மதிப்பு கொண்ட சகோதரிகள் அவர் வருகைக்காக ஏங்க, பிரியாவும் பிறந்தாள். இருவரும் இளம்பெண்கள் மற்றும் ஆண் துணை இல்லா வீடு என்று அங்கு இருக்கும் சில ஆண்களின் பார்வ தவறாக படிய அதன் விளைவாக சுசீலா, மீராவுடன் கை குழந்தை பிரியாவுடன் தங்கள் அத்தை வீட்டிற்கு புறபட்டனர். அவர்களின் குடும்பம் டெல்லியில் இருந்தது. சுசீலா அத்தை அண்ணன் மகள்களை தனது மகள் களாக பார்த்துகொண்டார்.

அது மட்டும் இன்றி தனது ஒரே மகன் ரகுநந்தனை சுசீலாவிக்கு திருமணம் செய்து கொண்டார். ரகுநந்தன் காலேஜ் ஒன்றில் புரபஷனராக பணியாற்றினார்.

அப்போது தான் மீரா மற்றும் அத்தை ரெயில் விபத்தில் இறந்தது.
பிரியாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுசீ மற்றும் ரகுவிற்கு சிறுது தனிமை கொடுக்க எண்ணி சென்ற இருவரும் இறந்தனர்.

உத்திரபிரதேசத்தில் மீரா இறந்த செய்தி வெகு சிலருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு பிரியா ரகு மற்றும் சுசீயின் மூத்த மகளானாள். இருவரும் அவள் மீது அளவு கடந்த பாசம் வைத்து வளர்ந்தனர்.

பிரியாவும் சித்தி மற்றும் சித்தப்பா மீதும் மிகுந்த பாசம் மற்றும் அன்பு கொண்டாள்.

தனது தாய் இறப்பு அறிந்த போதிலும் தந்தை பற்றி கேட்டவளிடம் நடந்ததை சொல்ல தந்தை மீது அடிநெஞ்சில் பாசம் கொண்ட போதிலும் கோபம் நிறைய இருந்தது.

பூமியும், பிரியாவும் ஒன்றாகவே வளர்க்கப்பட்டனர். இருவரும் மிகுந்த பாசம் கொண்டனர்.

காலம் வேகமாக விரைய பிரியா எட்டாம் வகுப்பும் சிறியது பூமிகா மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்க சுசீலா மற்றும் ரகு இருவரும் தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்தனர்.

அப்போது பிரியா ஒன்பதாவது பயில பிரபலமாக பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டனர் ரகு தம்பதி. அதற்கு பிரியாவின் மதிப்பெண்ணும் மிகவும் உதவியது.

பிரியா இயல்பிலேயே மிகவும் அமைதி தனக்கு நன்கு தெரிந்த மற்றும் பழக்கமான வர்களிடம் மட்டுமே பேசுவாள்

மற்றபடி வேறு யாருடனும் தேவைக்கு அதிகமாக பேச மாட்டாள்.

அவள் சேர்ந்தது வேதா கல்வி நிலைய பள்ளியில்.

அந்த பள்ளியில் தான் ஷியாம் மற்றும் சுகன்யா இருவரும் எட்டு முடித்து ஒன்பதில் படிக்க தொடங்க சேர்ந்தாள் பிரியா.
சுகன்யா எட்டு இரண்டு வருடம் பயில விளைவு தம்பி உடன் ஒன்றாக ஒன்பாதவது. அதே பள்ளியில் விஜய் 12வது படிக்கிறான்.

பிரியா மற்றும் ஷியாமின் விதி இங்கு இருந்து தான் தொடங்குகிறது.

ஷியாம் கலகலப்பானவன். வீட்டில் அறுந்த வால் மற்றும் நண்பர்கள் என்ற பெயர் கொண்ட குரங்கு பட்டாளம் கொண்டவன்.ஆனால் படிப்பில் படு கெட்டி. வகுப்பில் ஏன் பள்ளியில் முதல் மாணவன்.
 
Top