ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரத்தம் சிறுகதை..!

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
ரத்தம்

ஒரு கொலையாளியை தேடும் நாயகியின் பயணம், அதில் இருக்கும் திருப்பங்களும், மர்மங்களையும் அறிய படித்து தங்களின் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே.!
 
Last edited:

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
ரத்தம்..

டிங்க்.. டிங்க்.. போன் அழைப்பு ஒலிக்க நட்சத்திரா தனது போனை எடுத்து.. “எஸ் நட்சத்திரா தான் பேசுறேன்..” என்க

அந்த பக்கமோ “மேடம் இங்க ஒரு கொலை நடந்திருக்கு ஒரு பெண்மணி கொடூரமா கொலை செய்யப்பட்டு அவங்க வீட்டுல பிணமா கிடக்குறாங்க நீங்க வந்தா நல்லா இருக்கும் ** இந்த அட்ரஸ்க்கு வாங்க..” என்க

”ஓகே ஓகே குணால், த்தோ வரேன்.. பத்து நிமிஷத்துல வந்துட்றேன்..” என்று அழைப்பை துண்டித்தவள் தயாராகி குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்றாள்.

நட்சத்திரா ஒரு புலன்விசாரனை அதிகாரி கணவரும் இதே துறையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்திருக்க.. இன்னும் ஒரு மாதத்தில் இவளும் பணியிடை மாற்றம் பெற்று அங்கு செல்ல இருக்கிறாள்.

ஆனால் இப்போது இந்த கொலை வழக்கில் உதவ இவளின் தோழனும், உதவியாளருமான குணால் அழைக்க இவளும் அதை ஒத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்க்க.. ஒரு நடுத்தர பெண்மணி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு படுக்கை அறையின் தரையில் பிணமாக கிடந்தார்.

கொலை நடந்த வீடு சிட்டி வெளியில் ஒதுக்குப்புறமாக ஆள் அரவம் இல்லாத இடத்தில் அங்கொரு வீடு இங்கொரு வீடுமாக இருந்த இடத்தில் அமைந்திருந்தது. அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக பார்த்த நட்சத்திரா.. குணாலை அருகில் வர சைகை செய்து அவன் வந்ததும், “குணால் இந்த கொலையை நிச்சயம் இந்த பெண்மணிக்கு நன்கு அறிமுகமானவங்க யாரோ தான் செய்திருக்கனும். இவங்க சம்பந்தப்பட்டவங்களை முதலில் விசாரிச்சாலே கொலையாளியை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..” என்க

”எப்படி சொல்றீங்க மேடம்..?” குணால் கேட்க’

“கொலை படுக்கையறையில நடந்திருக்கு.. அதுமட்டுமல்லாம அவங்க படுத்துக்கிடக்குற விதத்தை பார்க்கும் போது அந்தம்மா படுக்கையறையில் அந்த கொலையாளிக்கூட சாதரணமா பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் அவங்களை அந்த கொலையாளி தாக்கி இருக்கணும். ச்சோ கொலையாளி அந்த பெண்மணிக்கு நன்கு தெரிஞ்ச சரியா சொல்லனும்மின்னா அவங்க படுக்கையறைவரை அனுமதிக்கும் அளவு தெரிஞ்சவங்களா இருக்கணும்..” என்று கூற

“சூப்பர் மேடம்.. இதற்குதான் உங்கக்கிட்ட உதவி கேட்டது, இப்போவே நீங்க சொன்னதுபோல தகவலை சேகரிக்குறேன்..” என்க

“ம்ம்..” என்று குணாலை அனுப்பி வைத்தவள், அங்கு வந்திருந்த அந்த பெண்மணியின் உறவினர்களை தனது கூரிய விழிகள் மூலம் ஆராய்ந்தாள்.

இறந்த பெண்மணியின் தங்கை, அவரின் கணவர், இரண்டு தம்பிகள், மாமாவின் பையன், தங்கையின் மகள் என்று மொத்தம் ஆறு பேர் அங்கிருந்தனர்.

அவர்களை அலசி ஆராய்ந்ததில் அங்கிருக்கும் யாரும் கொலையாளி இல்லை என்பதை அறிந்துக் கொண்டாள் நட்சத்திரா.. மேலும் இந்த வழக்கு தற்போது முடிய வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொலை செய்யப்பட்ட பெண்மணியின் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தாள். அது அடுத்தநாள் தான் கிடைக்கும் என்பதால் வீட்டிற்குள் வந்துவிட்டாள்.

அடுத்தநாள் விடியல் நட்சத்திராவுக்கு பிரேத பரிசோதனை முடிவுகளுடன் ஆரம்பமானது. அதில் அந்த பெண்மணி கத்திப்போன்ற கூர்மையான ஆயுதத்தால் தான் தாக்கப்பட்டுள்ளார் என்பதும் கொலையாளி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் பலமாக தாக்கியததால் தான் அவரின் மரணம் நிகழ்ந்துள்ளது என்பதும் விளக்கப்பட்டு இருந்தது.

இதை ஓளரவு ஏற்கனவே நட்சத்திரா அறிந்திருந்ததால் அடுத்த தகவல்களை ஆராய்ந்தால், அதில் அவர் இரண்டு நாட்கள் முன்பே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும், மேலும் அவரின் உடலில் ஒரு ஆணின் ரத்த மாதிரியும், ஒரு பெண்ணின் ரத்த மாதிரியும் கிடைத்துள்ளது என்பதை பார்க்க..

நட்சத்திராவிற்கு இந்த வழக்கில் ஒரு சுவாரசியம் ஏற்பட்டது இதை மத்த அதிகாரிகளுடன் பகிர அனைவரும் ”அப்போ..! இந்த கொலையை இரண்டு பேர் சேர்ந்து செய்திருக்கிறாங்கன்னு நினைக்கிறோம்..” என்க

அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்த நட்சத்திரா.. அப்படியும் இருக்கலாம் அது ஒரு யூகம்தான் ஆனா எனக்கென்னவோ கொலையாளி ஒரே ஆளுன்னு தான் தோணுது , அதுவும் இப்போ கிடைச்ச ரத்தத்துக்கு சொந்தக்காரங்கள யாரோ ஒருத்தர்ருன்னு தான் எனக்கு தோணுது.” என்று சொல்ல

மற்றவர்களோ “அதை எப்படி சொல்றீங்க மேடம்..?” என்க

”அவங்களை கொலை செய்திருந்த விதத்தையும் அவங்க கொலை நடந்த முறையின்னு நான் ஊகித்திருக்கு விதத்தையும் வைத்துதான் சொல்றேன். நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி கொலையை இரண்டு பேர் சேர்ந்து செய்திருந்தால் கண்டிப்பா ஒரு ஆளு அந்த பெண்மணியை கொலை செய்ய முயலும் போது மற்ற ஆளு அந்த பெண்மணியின் கையையோ காலையோ பிடிச்சிருப்பாங்க.. இல்லைன்னாக்கூட அந்த பெண்மணி எதிர்ல இருக்குற மற்ற ஆளை கைநீட்டி தனக்கு உதவ சொல்லி கேட்டு, அவர் எதுவும் உதவுலனாக்கூட அவர் மேல கோவப்பட்டு இயலாமையையில் கைக்காட்டி இருப்பாங்க.. இந்த பெண்மணி அந்த மாதிரி எந்த சைகையிலையும் இறக்கல அதனாலதான் சொல்றேன்..” என்க அங்கிருந்த அனைவரும் நட்சத்திராவின் புக்தி கூர்மையில் பிரம்மித்தனர்.

குணால் நட்சத்திராவிடம் வந்து, “மேடம் இப்போ ஒரு பிரச்சனை வந்திருக்கு, அந்த பெண்மணிக்கு சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு நாங்க சந்தேகப்பட்ட எல்லாரோட ரத்தத்தையும் சோதிச்சாச்சு, ஆனா அதுல ஒருத்தரோட ரத்தம் கூட பொருந்தல.. அதுமட்டுமில்ல அந்த பெண்மணிக்கு வேற யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு கேட்டா யாருக்கும் தெரிலேன்னு சொல்றாங்க.. என்ன பண்றது..?” என்று கேட்க

நட்சத்திராவோ.. “என்ன குணால் எல்லாத்தையும் ஈசியா கண்டுபிடிச்சிட்டா.. சுவாரசியமே இருக்காது வர வரதான் இந்த கொலையில எனக்கு ஆர்வம் அதிகரிக்குது.” என்று கூற

குணாலோ, “உங்களுக்கு ஆர்வம் இருக்குறவரை எல்லாம் நல்லதுதான் மேடம், சரி உங்களோட அடுத்த நடவடிக்கை என்ன?” என்க

”இதுவரை யாரையெல்லாம் நாம விசாரிச்சு இருக்கோமோ, அவங்களை எல்லாம் நான் மீண்டும் ஒருமுறை விசாரிக்கணும்.. குணால்” என்க

“சரிங்க மேடம்..” என்று குணால் அங்கிருந்து அகல.. தனது மூளையில் யாருக்கும் சொல்லாமல் அவள் கண்டுபிடித்திருந்த தகவல்களை ஒருமுறை அலசி பார்த்தாள்.

அடுத்தநாள் குணால் அவள் கேட்டவாரு அந்த பெண்மணியின் சொந்தக்காரங்களையும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் என அனைவரையும் நட்சத்திராவுடனான விசாரணைக்கு வரவழைத்திருக்க..

சரியான நேரத்தில் நட்சத்திராவும் அங்கு வர விசாரணை ஆரம்பமானது. முதலில் கொலை செய்யப்பட்ட பெண்மணியின் தங்கை வர அவரை தனது எதிரில் இருந்த சோபாவில் அமர செய்தால் நட்சத்திரா..

அவளின் விசாரனை முறையில் இதுவும் ஒன்று விசாரனையின் போது நாற்காலியில் அமர செய்து எதிரில் இருப்பவரை பதற்றம் கொள்ளும் வகையில் விசாரிக்காமல் இதுபோல் ஒரு சாதரண பேச்சுவார்த்தை போல் செய்து விசாரித்தால் எதிரில் இருப்பவர் பயப்பட்டு சாதரணமாக தெரிவிக்க வேண்டிய சில முக்கிய தகவல்களை கூட பதற்றத்தில் மறக்க கூடிய நிலையை பெரும்பாலும் தவிர்க்கலாம் என்பது ஒரு யுக்தி.

மற்றொன்று அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்பதால் அவர்களை விசாரிப்பதற்கு இந்த முறையே சிறந்தது என்பது மற்றொன்று.

அந்த பெண்மணியின் தங்கையை பார்த்து “மேடம் நீங்க உங்களை பற்றியும் உங்க அக்காவை பற்றியும், இந்த கொலையில் நீங்க யாரையெல்லாம் எதற்காக சந்தேகப்பட்றீங்கன்னு உங்களுக்கு தெரிஞ்ச தகவலை சொன்னா எங்களுக்கு இந்த வழக்கை தீர்க்க ரொம்ப உதவியா இருக்கும்.” என்று சொல்ல..

தங்கை சொல்ல ஆரம்பித்தால், “மேடம் என் பெயர் சுந்தரி கொலை செய்யப்பட்டது என் கூட பிறந்த அக்கா வேதவள்ளி, அவங்க ரொம்ப நல்லவங்க மேடம், எனக்கு தெரிஞ்சு யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுத்தது இல்லை, இப்போக்கூட அவங்க கணவர் இறந்ததும் மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு தனியா வீடு வாங்கி அந்த இடத்துல தங்கிட்டு இருந்தாங்க.. எனக்கு தெரிஞ்சு அவங்கள கொலை செய்யுற அளவு யார் கூடவும் எந்த பிரச்சனையும் இல்லை.” என்க

சுந்தரியின் பேச்சை உன்னிப்பாக கவனித்த நட்சத்திரா.. சரிங்க மேடம் அவங்க அந்த இடத்திற்கு போனது பிறகு அவங்களுக்கு யாரெல்லாம் பழக்கமின்னு எதாவது தெரியுமா..?..” என்று கேட்க

“இல்லை மேடம், அக்கா அங்க போனதும் எங்க யார் கிட்டையும் அவ்வளவா பேசுறது இல்லை, நாங்களா எப்போவாது போன் பண்ணி பேசுறப்போ நல்லா இருக்கேன், இங்க ஒரு பிரச்சனையும் இல்லை, வாழ்க்கை நிம்மதியா போகுதுன்னு தான் சொல்லுவாங்க..” என்று கூறி முடிக்க

அவரை தொடர்ந்து விசாரித்த அனைவரும் வேதவள்ளியை பற்றி நல்லவிதமாகவும், அங்கு சென்று அவர் தங்களிடம் அவ்வளவாக தொடர்பில் இல்லை என்பதை சொல்லி விட, விசாரனையை முடித்த நட்சத்திராவிடம் வந்து இதுவரை அவர்கள் சொன்னதை கேட்டிருந்த குணால், “என்ன மேடம் இவங்களை விசாரித்ததுல இருந்து எதாவது தகவல் கிடைக்குமின்னு பார்த்த ஒன்னும் கிடைக்கல..” என்று இந்த வழக்கு நீண்டுக்கொண்டு செல்வதை எண்ணி குணால் வருத்தமாக சொல்ல..

அவனை திரும்பி பார்த்த நட்சத்திரா.. அவன் தோளில் தட்டி,”நாளைக்கு ஒரு டிரிப் போறோம் குணால், விடியக்காலையில் வந்துடுங்க.. நிறைய பயணம் செய்ய வேண்டியது இருக்கு.” என்க

குணாலோ நட்சத்திரா என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் தலையை மட்டும் சரி என்னும் விதமாக ஆட்டி வைத்தான்.

அதன்பிறகு அடுத்தநாள் விடியல் குணாலுக்கு ஒரு புதிராக விடிய அவர்களின் பயணம் தொடங்கியது. நேராக அவர்கள் சென்றது கொலைசெய்யப்பட்ட பகுதியின் பக்கத்து பகுதிகளில் இருந்த சிசிடிவி நகல்களை தேடிதான், அதில் முதலில் வேதவள்ளி தென்படுகிறாரா என்று தேட ஆரம்பிக்க.. அதில் இவர்களின் அதிஷ்டமாக வேதவள்ளி தென்பட்ட பதிவுகள் சிலது இவர்களின் தேடலில் கிடைத்தது. மேலும் ஒரு பதிவில் வேதவள்ளியும் வேறு ஒரு பெண்மணியும் பேசுவது பதிவாகி இருக்க.. அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணி துவங்கியது.

இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெண்மணி கண்டுப்பிடிக்கப்பட, விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அவர் நட்சத்திரா மற்றும் குணால் இருவர் முன்பு அமர்த்தப்பட, அவரை பார்த்து முதலில் பேச ஆரம்பித்த குணால் ”மேடம் உங்க பத்தியும், வேதவள்ளி மேடத்தை பத்தியும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்ல முடியுமா..? அவர் கொலையில் உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகமிருக்கா..?” என்று கேட்க

அவரோ, “சார் என் பெயர் பங்கஜம், நான் அங்க இருக்குற கோவில்லதான் வேதவள்ளிய அடிக்கடி பார்ப்பேன், அவங்களுக்கு பக்தி அதிகம் ரொம்ப ஆச்சாரமானவங்க எல்லா விதமான பூஜை பரிகாரங்களை ஒன்னுவிடாம சொல்லுவாங்க.. அப்படிதான் எனக்கும் அவங்களுக்கும் பழக்கம் மத்தபடி அவங்களை பத்தி எனக்கு வேற எதுவும் தெரியாது.” என்று சொல்ல

இப்போது பேச ஆரம்பித்த நட்சத்திரா.. “அவங்களுக்கு இந்த இடத்துல தெரிஞ்சவங்க வேற யாராவது இருக்காங்களா.. நல்லா யோசிச்சு சொல்லுங்க.. அவங்க உங்கக்கிட்ட வேற எதைபத்தியாவது பேசி இருக்காங்களா..? நல்லா யோசிச்சு சொல்லுங்க மேடம்..” என்க

யோசித்து பங்கஜம் சொன்ன தகவல்கள் நட்சத்திரா மற்றும் குணாலை அதிர செய்தது.

அதற்கடுத்த ஒருவாரத்திற்குபின் ஒரு மாலை வேளையில் நட்சத்திராவும், குணாலும் ஒரு ஓட்டுவீட்டின் கதவை தட்டி காத்திருக்க.. ஒரு வயதான பெரியவர் வந்து கதவை திறக்க.. அவரை பார்த்த குணால், “சார் நாங்க போலீஸ் அதிகாரிங்க உள்ள வரலாமா..? உங்களை விசாரிக்கணும்.” என்க

அந்த பெரியவரோ பதற்றத்தமாக அவர்களை உள்ளே அனுமதிக்க.. உள்ளே சென்றவர்கள் அந்த ஒற்றை அறை வீட்டை கண்களால் சுற்றிப்பார்க்க.. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. அப்போதுதான் குளித்துவிட்டு தலையை துவட்டியவாறே வீட்டிற்குள் வந்த ஒரு இளம்பெண், ”தாத்தா நான் குளிச்சிட்டு வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல உங்களுக்கு சாப்பாட்டு செஞ்சுட்றேன்..” என்று சொல்லிக்கொண்டே வந்து நட்சத்திராவின் மேல் இடித்துவிட்டு மிரண்டு விழிக்க..

அவளை பார்த்த நட்சத்திரா, “மீனாட்சி உன்கிட்ட பேசதான் நாங்க வந்தோம், நாங்க ரெண்டு பேரும் போலீஸ்.” என்று சொல்லிமுடிக்கவும்.

இடித்தற்கே மிரண்டு விழித்தவள், தற்போது நட்ச்த்திரா சொல்லிய தகவலில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய தரையில் மடங்கி கதறி கதறி அழ ஆரம்பித்தாள்.

அவளின் நடவடிக்கையை பார்த்து அந்த பெரியவரோ, “மீனாக்குட்டி! ஏன்டா இப்படி அழுறீங்க..?” என்னாச்சு உங்களுக்கு..?” என்று பதற..

அவரை பதற்றத்தை குறைக்க முயன்ற குணால், ”ஒன்னுமில்லை சார், உங்க பேத்திக்கு போலீஸுன்னா பயம் போல அதான் அழுவுறாங்க.. மேடம் இதை பார்த்துபாங்க நம்ப வெளிய நின்னு பேசலாமா..?” என்று அவரை வெளியில் அழைத்துச் செல்ல..

அவர்கள் சென்றதும், மீனாட்சியின் அருகில் அமர்ந்த நட்சத்திரா, அவளின் தோளில் கைவைத்து, “இங்க பாரு மீனாட்சி, உனக்கு தெரிஞ்சதை நீ சொன்னாதான் உன்னை கைது செய்யாம என்னால பார்த்துக்க முடியும், நீ தான் உண்மையை சொல்லனும், வேதவள்ளிய யார் கொன்னாங்கன்னு உனக்கு தெரியுமா..? யார் மேலையாவது உனக்கு சந்தேகம் இருக்கா..? உன் ரத்தம் எப்படி அவங்க மேல இருந்தது..? உனக்கு வேதவள்ளி என்ன பண்ணாங்கன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் உன் மூலமா தெரிஞ்சதான் என்னால உன்னை காப்பத்த முடியும் அதற்குதான் கேட்டேன்..” என்க
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
ரத்தம்..

நட்சத்திராவின் ஆறுதல் வார்த்தையை கேட்ட மீனாட்சி தனது கதையை சொல்ல ஆரம்பித்தால், “மேடம் நான், வேதவள்ளி அம்மா இங்க குடிவந்த மூணாவது மாசத்துல இருந்து அவங்களுக்கு மாசத்துல ஒரு மூணு நாள் மட்டும் அவங்க வீட்டுவேலை செய்யுற சுமதி அக்கா வீட்டுக்கு தூரமா இருக்கும்போது போய் வேலை செய்யுவேன், ஏன்னா அவங்க ரொம்ப ஆச்சாரம் பார்ப்பாங்க அதுனால வீட்டுக்கு தூரமா இருக்குற மத்த பொண்ணுங்களை கூட அவங்க வீட்டுல அனுமதிக்க மாட்டாங்க.. அப்படிதான் ஒரு மூணுநாள் சுமதி அக்காக்கு பதிலா நான் வீட்டுவேலை செய்ய அங்க போனேன், அப்போன்னு பார்த்து நானும் வீட்டுக்கு தூரம் ஆகிட்டேன். சரி அவங்கக்கிட்ட சொல்லிட்டு வரலாமின்னு பார்த்த தாத்தாக்கு உடம்பு ரொம்ப சரியில்லை அவங்க தர காசுக்கு வைத்தியம் பார்க்கலாமின்னு அதை மறைச்சு அங்க ரெண்டு நாள் தொடர்ந்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன், மூணாவது நாள் எதோ பூஜை பண்ணனுமின்னு நிறைய வேலை சொன்னாங்க நானும் வயிறுவலியை பொறுத்துக்கிட்டு பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் ஆடையில கறைப்பட்டு அவங்க அதை பார்த்துட்டாங்க.. அப்புறம் ரொம்ப கோவமாகி, நான் இப்படி பண்ணதால அவங்க வீட்டு புனிதம் கெட்டு போயிட்டதாகவும், தீட்டாயிடுச்சின்னும் சொல்லி, என்னை அறைஞ்சு வெளிய தள்ளிவிட்டுடாங்க.. நானும் என் தப்பை புரிஞ்சு அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வேலைச்செஞ்ச காசைக்கூட வாங்காம வந்துட்டேன், ஆனா.. ஆனா.. “ என்று மீண்டும் கண்ணீரை உதிர்க்க..

நட்சத்திராவோ, “சொல்லு மீனாட்சி என்கிட்ட சொன்னாவாவது உன் கஷ்டம் குறையுமில்ல..? என்று சொல்ல

சிறிது தெளிந்த மீனாட்சி சொல்ல ஆரம்பித்தாள், “அவங்க இதுக்கு முன் நாங்க இருந்த வீட்டிற்கு அவங்களுக்கு தெரிஞ்ச ஒரு பையனை அனுப்ப அவன் பழைய வீட்டிற்கு வெளிய வந்து, நான் காசுக்காக அவனை தப்பு பண்ண கூப்பிட்டதாகவும், காசு இருந்தா நான் யார் கூடவும் போவேன்னு கத்தி திட்டி என்னை கேவலமா பேசிட்டு போயிட்டான், அதன்பிறகு அங்க இருந்தா எனக்கு நல்லதில்லைன்னு அங்கிருந்து இந்த இடத்துக்கு வந்துட்டேன்..” என்று சொல்லி முடிக்க

நட்சத்திராவோ, “ம்ம் உன் வேதனை புரியுது மீனாட்சி, உன்மேல எந்த தப்புமில்லை நீ எதை நினைச்சும் கவலை படாதே, சரி வேதவள்ளி உடம்புல உங்க ரத்தம் எப்படி வந்துச்சு அதையும் சொல்லேன்.., ஏன்னா இப்போ இருக்குற ஒரு முக்கிய தடயம் உன் ரத்தம் தான் அதை சொன்னாதான் உன்னை இந்த வழக்குல இருந்து என்னால காப்பாத்த முடியும்” என்க

மீனாட்சியோ, “மேடம் அந்த சம்பவம் நடந்து, அந்த அம்மா என்னை பழிவாங்க அந்த பையனை அனுப்பி என் நடத்தையை கேவலப்படுத்தியதை என்னால தாங்க முடியலை தினமும் தூங்கமுடியலை அதற்கு எதவாது செஞ்சாத்தான் என் மனசு ஆறுமின்னு தோணுச்சு, அதான் அன்னைக்கு என் காலை கிழிச்சு கொஞ்சம் ரத்தத்தை ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு போனேன். அந்த நேரம் அவங்க தனியாதான் இருப்பாங்கன்னு எனக்கு தெரியும், அவங்க வீட்டுக்கு எப்படி போகணுமின்னும் தெரியும் அவங்க வீட்டுக்குள்ள போயி அவங்க படுக்கையறைக்கு போக அவங்க என்னை பார்த்து கோபம் அடைந்தாங்க.. நான் அவங்களை பார்த்து, “என்ன அம்மா என் ரத்தத்தை பார்த்தே வீடு தீட்டாயிடுச்சுன்னு சொன்னீங்களே இப்போ நீங்க அதே என் ரத்தத்தால தீட்டாக போறீங்க அப்புறம் உங்களை என்ன பரிகாரம் செஞ்சு தீட்ட கழிச்சுக்க போறீங்களோ பண்ணிக்கோங்கன்னு சொல்லி என் ரத்தத்தை அவங்க மேல ஊத்திட்டு வந்துட்டேன் அவங்க அதை என் மாதவிடாய் ரத்தமின்னு நினைச்சு அருவருத்து போகணுமின்னு நினைச்சேன்.. ஆனா..” என்று இழுக்க

நட்சத்திரா மீனாட்சியிடன் தனக்கு தேவையான தகவல்களை வாங்கிக் கொண்டாள்.

அதற்கடுத்த மூன்றாம் நாளில் சுந்தர் தனது காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் கார் சாவியை கையில் சுற்றிக்கொண்டு ஒய்யாரமாக நடந்துவர, வீட்டின் ஹாலில் அவனுக்குமுன் நட்சத்திரா காக்கி உடையில் அமர்ந்து, “சுந்தர் இதுதான் உங்க கடைசி கார் பயணமா இருக்கும், இனி ஜெயில் வேன்லதான் நீங்க பயணம் செய்ய வேண்டியதா இருக்கும்..” என்று சொல்லி அமர்ந்திருக்க..

சுந்தர் தப்பிக்க வெளியில் செல்லமுயலவும், குணால் சக அதிகாரிகளுடன் வாசலை மறைத்து நின்றான்.

அவனை பிடித்து விசாரிக்க உண்மையை கக்க ஆரம்பித்தான், “என் பெயர் சுந்தர் மேடம், வேதவள்ளி ஆண்ட்டிய இங்க வந்து ஒரு இரண்டு மாசத்துல இருந்து எப்போவாது வழியில பார்க்கும் போது பேசி பழகிட்டேன். நான் ஒரு சின்ன வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன் அது நஷ்டத்துல இருந்தது. அந்த ஆண்ட்டிக்கிட்ட நல்லவிதமா பழகி சில லட்சங்கள் கடனா வாங்கி எனது வியாபரத்துல கொஞ்சம் லாபம் பார்த்துட்டு வந்தேன். அப்படி போயிட்டு இருக்கும்போதுதான் அந்த மீனாட்சிய பழிவாங்க என்கிட்ட உதவிக்கேட்டாங்க நானும் அவங்க சொல்லிக் கொடுத்தமாதிரியே பண்ணேன். அப்புறம் எல்லாம் நல்லா போயிருக்கேன்னு பார்த்தா.. அடுத்த ஒரு வாரத்துல என்ன கூப்பிட்டு.. ’அந்த பொண்ணால இந்த வீடு தீட்டாயிடுச்சு, இந்த வீட்டைவிட்டு வேற வீட்டுக்கு போலாமின்னு இருக்கேன், நான் உனக்கு தந்த பணத்தை எனக்கு உடனே தான்னு சொல்லிடாங்க..’ நான் இப்போ எப்படி மேடம் உடனே தரமுடியுமின்னு கேட்டேன் அவங்க.. ’அதெல்லாம் எனக்கு தெரியாது தீட்டான இந்த வீட்டுல இருக்க எனக்கு ஒருமாதிரி இருக்கு இல்லேன்னா உன் வீட்டை எனக்கு எழுதி தந்துடு அப்படின்னு சொல்லிடாங்க..’ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல சரி அவங்கக்கிட்ட பேசிப்பார்க்கலாமின்னு அவங்க வீட்டுக்கு போயி பார்த்தா மீனாட்சி அவங்க மேல அவ ரத்தத்தை ஊத்திட்டு போயிட்டா.. நான் போயி ஆண்ட்டி என்னாச்சுன்னு கேட்டேன் அவங்க மீனாட்சி மேல இருந்த கோவத்துல ஒரு கத்திய எடுத்து என்கிட்ட கொடுத்துட்டு ‘சுந்தர் என்ன இப்படி பண்ண அந்த மீனாட்சிய இந்த கத்தியால குத்திடுடா என்று சொல்லிக்கொடுக்க.. நான் அந்த நிமிஷம் யோசிச்சேன், மீனாட்சிய கொன்னா கொலைகேஸ்ல நான் மாட்டிக்கிட்டாலும் ஆண்ட்டி தப்பிச்சிடுவாங்க.. ஆண்ட்டிய கொன்னுட்டா என் பணப்பிரச்சனை தீர்ந்திடுமின்னு யோசிச்சு அவங்களை குத்தி கொலை பண்ணிட்டு மீனாட்சி வந்த அதே வழியில வந்துட்டேன்..” என்று கூறிமுடிக்க.

அவன் கூறியதை எல்லாம் கேட்டு பதித்துக் கொண்ட நட்சத்திரா.. “உங்களுக்கு ஒன்னு தெரியுமா சுந்தர், நீங்க கொலை செஞ்சதை காலை கிழிச்சதுனால மெல்லமா நடந்துப்போன மீனாட்சி ஜன்னல் வழியா பார்த்துட்டா.. அவளும் இதை யாரிடமும் சொல்லாமல் இருக்க.. அவளை இதுபோல் அவமானப் படுத்துனதை வேதவள்ளியே பங்கஜம் கிட்ட சொல்லி, பங்கஜம் சிசிடிவில வேதவள்ளிக்கூட பேசுன வீடியோ எங்களுக்கு கிடைக்க.. நீங்க வேதவள்ளியை கொலை செஞ்சது.. உங்களை பத்தி வேறு யாருக்கும் தெரியாத பஞ்சத்தில், மீனாட்சி மூலமா ஆதாரம் சாட்சி கிடைச்சிடுச்சு.. உண்மை ஒரு குழந்தை சுந்தர் அதனால ரொம்ப நேரம் இருட்டில் ஒளிஞ்சுக் கொள்ள முடியாது..” என்று கூறிவிட்டு மீனாட்சியின் அந்தரங்க விஷயங்கள் மறைக்கப்பட்டு, அவள் வீட்டுவேலை முடித்து செல்லும் போது சுந்தர் கொலை செய்ததை பார்த்தாகவும், மேலும் அவள் காலில் அடிப்பட்டு அதை வேதவள்ளி துடைத்ததால் வந்த ரத்தக்கறை தான் அவர்மேல் இருந்த மீனாட்சியின் ரத்தம் என்றும் கதை திரிக்கப்பட்டு சுந்தர் தான் கொலை குற்றவாளி என்று அந்த வழக்கு முடிக்கப்பட்டிருக்க அங்கிருந்து ஒரு சவாலான வழக்கை முடித்த திருப்தியுடம் வெளியேறினால் நட்சத்திரா..

அதன்பின் வந்த ஒரு நாள், நட்சத்திரா பணியிடை மாற்றம் பெற்று தனது கணவனை காண செல்லும் பயணம் ஆரம்பிக்க சிறிது நேரமே உள்ள நிலையில், குணால் நட்சத்திராவிடம் வந்து, “மேடம் உங்கக்கூட பணிபுரிஞ்ச நாட்களை நான் மறக்கவே மாட்டேன், இப்போ இல்லேன்னாலும் வருங்காலத்துல உங்கள மாதிரி ஒரு திறமையான அதிகாரியா ஆகியிருப்பேன்..” என்று தன்னப்பிக்கையோடு சொல்ல

“அப்படி நடந்தா சந்தோஷப்பட்ற ஒரு ஜீவனா நான் இருப்பேன் குணால், வாழ்த்துகள் உங்களின் வெற்றிக்கு..” என்று கூறி விடைப்பெற்று தனது பயணத்தை ஆரம்பிக்க.. சிறிது நேரத்தில் நட்சத்திராவின் கணவன் விஷ்வா போனில் அழைக்க.. “ஹாய் விஷ்வா.. உன்னை சந்திக்கத்தான் வந்துக்கிட்டே இருக்கேன், ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்க

அந்த பக்கமும், “நானும் தான் பேபிம்மா..” என்று விஷ்வா தனது காதல் மனைவியுடம் தனது காதலை பொழிய ஆரம்பித்தான்.

முற்றும்…
 
Top