Subi Mithra
Well-known member
Best wishes 

எல்லாருமம கதையை கண்டிப்பா முடிச்சே ஆகனும்..... சில சூழல் ஓகே பட் சும்மா ஆர்பிச்சிட்டு comment இல்ல views இல்லனு விடக் கூடாது சொல்லிடுங்க... ஏன்னா இந்த ஜெனர் பாதியில் விட்டால் ஃபாலோ பண்ண வாசகர் நிலை...ஹாய் நண்பர்களே
இம்முறை T23 ஆரம்பிக்கலாமா?
இம்முறை நம்ம கரு Mystery, Suspense, Thriller- MST -T 23
உங்கள் நாவலின் கரு இது மூணுல ஒண்ணா கண்டிப்பா இருக்கணும்...
அதுல காதல், குடும்பம், நகைச்சுவை, fantasyன்னு என்ன வேணும்னாலும் இருக்கலாம்...
ஆனா படிக்கிறவங்களுக்கு Grip feel நாம கொடுத்தே ஆகணும்... அடுத்தது என்னன்னு அவங்க யோசிச்சுட்டே கதை படிக்கணும்...
வாசகர்களுக்காக தான் கதை எழுதுறோம்... சோ அவங்க ஒரு Mystery, Suspense, Thriller படம் பார்த்த ஃபீலை நாம கதை மூலம் கொடுக்கலாம்...
Mystery, Suspense, Thriller ன்னா கொலை தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல... நீங்க எல்லா பக்கமும் யோசிக்கலாம்... குடும்ப கதைகள்ல கூட mystery, suspense இருக்கலாம்... எப்படியாவது போட்டியின் கருவுக்கு நியாயம் பண்ணிடுங்க...
ஷார்ட் ஆஹ் சொல்ல போனா, சாதாரண காதல் கதைகள், திருப்பங்களே இல்லாத குடும்ப கதைகள் வேண்டாம்...
வித்தியாசமான கதைகளை ரொம்பவே எதிர்பார்க்கிறேன்... நானும் வாசகர்களோடு சேர்ந்து கதைகளை வாசிக்க ஆர்வமா இருக்கின்றேன்... உங்களோட கற்பனைவளத்தை எல்லா பக்கமும் சிதற விட்டு கதையை எழுத ஆரம்பிச்சிடுங்க...
போட்டி விதிமுறைகள்...
1. இது அடையாளத்தை மறைத்து எழுதப்படும் போட்டி... உங்களது இஷ்டப்படி முகப்புத்தகத்தில் வேறு ஐடி உருவாக்கி லிங்க்கை ஷெயார் செய்யலாம்... சைட் ஐடி என்னால் வழங்கப்படும்... முதலில் பதிவு செய்யும் 25-30 எழுத்தாளர்களுக்கு மட்டுமே அனுமதி...
2. நாவலின் வார்த்தைகள் 25000-35000 வரை இருக்கலாம்.
3. நாவல் சொந்த கற்பனையாகவே இருக்க வேண்டும்... படங்களின் தழுவலாகவோ, வேறு நாவல்களின் தழுவலாகவோ இருக்க கூடாது... ஏற்கனவே வெளி வந்த கதைகளும் மீண்டும் இந்த போட்டியில் பதிவிட அனுமதி இல்லை...
4. ஒருவர் ஒரு கதை மட்டுமே எழுத வாய்ப்பு வழங்கப்படுகின்றது...
5. போட்டியின் வெற்றி வியூஸ், வாசகர் தீர்ப்பு மற்றும் நடுவர் தீர்ப்பை வைத்து முடிவு செய்யப்படும்...
6. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு விபரங்கள்...
முதல் மூன்று வெற்றியாளர்களின் கதைகளும் "மகதீரா" பதிப்பகத்தினால் 2024 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வெளியிடப்படும்... அவர்களுக்கு நாவலின் ரோயால்டியாக தலா 2000/= வழங்கப்படும்...
7. பின்வரும் தகவல்களை மின்னஞ்சல் மூலம் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
உண்மையான பெயர்-
விலாசம்-
வாட்ஸ் அப் எண் - (போட்டி சம்பந்தமான அறிவுப்புகளுக்காக)
நாவலின் தலைப்பு-
8. மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய இறுதி நாள்- 12/5/2023
9. போட்டி ஆரம்பிக்கும் நாள்- 20/5/2023
10. போட்டி முடியும் நாள்- 20/7/2023
போட்டி முடிந்து இரு வாரங்கள் கழித்து வாசகர்களுக்கான ஓட்டிங் ஆரம்பிக்கப்படும்...
11.சிறந்த விமர்சகர்கள் மூவருக்கு தலா 500/= மற்றும் 'மகதீரா' பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நாவல் ஒன்றும் வழங்கப்படும்...
விஷேட அறிவித்தல்- வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக மகதீரா பதிப்பகத்தினால் நாவல் பதிப்பித்தே ஆக வேண்டும்... நாவல் பதிப்பிப்பதற்காகவே நான் இந்த போட்டியை நடத்த தீர்மானித்து இருக்கின்றேன்... அதனால் வெற்றி பெற்ற பின்னர் நாவலை பதிப்பிக்க முடியாது என்று கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும்...
ஆனால் சில எழுத்தாளர்கள் நாவல் பதிப்பிக்க விரும்பாத சமயம், போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்...
அப்படியான எழுத்தாளர்களுக்கு
Guest Performer ஆக அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகின்றது...
நீங்கள் கதையின் பெயரை மெயில் செய்யும் நேரம், Guest Performer ஆக கலந்து கொள்வதை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்...
ஏதும் சந்தேகம் இருந்தால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்...
ஆத்விகா பொம்மு & Team