பிழை திருத்தம்
5
பூபதி என்ன தான் ஊருக்குள்ள மாவீரன், சண்டியர்னு , பஞ்சாயத்து பண்ணிட்டு கெத்தா சிங்கம் மாதிரி நடமாடினாலும் ,வீட்டுக்குள்ள அவன் வெறும் பூனை தான்.
ஆம்பள பசங்களை அடிச்சு வளர்க்கலைனா உருப்படாம போயிரும்ங்கிறது பசுபதியோட எண்ணம்.
அடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க கொள்கை நம்ம ரகுபதியோடது.
நம்ம பூபதி சாட்சாத் ரகுபதி வளர்ப்பு, அடி தடி பண்ணாத்தான் நீதி கிடைக்கும் நியாயம் நிலைக்கும்னு தனக்குன்னு ஒரு கொள்கை வைச்சுட்டு கூட இரண்டு தடிமாடுகளையும் வைச்சுட்டு சுத்தி அழையுறது தான் இவனுடைய பொழப்பு ,
அந்த தடி மாடுகள் வேற யாரும் இல்லை, ஒண்ணு தன்னோட தாய் மாமன் பச்சைகிளி ,இன்னொன்னு நண்பன் சுரேஷ்.
33 வயசாச்சு கழுதைக்கு இன்னும் ஒரு முடிவும் தெரியலங்கிற மாதிரி கல்யாணம் முடியாம சுத்திட்டு அலையுது கேட்டா லவ் பெய்லியராமாம், என்னத்த சொல்ல கழுதைக்கு லவ்வூ ஒரு கேடு.அப்படின்னு,
அக்காக்கள் இரண்டு பேரும் பச்சைகிளிக்கு பொண்ணு பார்க்கிறதையே விட்டுடாங்க.
சுரேஷ் வீட்டிற்க்கு ஓரே பையன் , அப்பா மிலிட்டரி, அம்மா செல்லம் அந்த பக்கி வாழ்கை வாழ்வதற்கே என்ற கொள்கையோட ஜாலியா இந்த சிங்கிள் ஊர் சுத்திட்டு இருக்கு, அப்பா வந்தா தெரியும் அந்த சிங்கிள் சிக்கனல் கிடைக்காம வீட்டுக்குள்ள எந்த மூலையில கிடக்கின்னு.
இந்த இரண்டு பேரும் சாதாரணப்பட்டவங்க கிடையாது பூபதிக்கு வலக்கை இடக்கை மாதிரி.
வீட்டுல நடக்கிறது எல்லாம் ஒரு பிட் தப்பாம பூபதி காதுக்கு வந்துடும் ,இதெல்லாம் யாரால நம்ம பச்சைகிளி புண்ணியத்தால.
ஊர் நடப்பு எல்லாம் சுட சுட பூபதிக்கு வந்திடும் இது நம்ம சுரேஷ் எப்.எம் சேவையால.
இதுல எதாட்டு மிஸ் ஆகும் போது தான் ஐய்யாக்கு வீட்ல ராஜ உபசரிப்பு நடக்கும் .
பூபதி ஊள்ளூர் காலேஜ்ல தான் படித்தான், காலேஜ் போன முதல் வருடம், சார் கிளாஸ் கட் அடிச்சுட்டு , வெளியூர் தியேட்டர்க்கு படம் பார்க்க போய்யாச்சு , படம் எல்லாம் பாத்துட்டு, தியேட்டர் விட்டு வெளியேவரும் போது அவனுக்கு கெட்ட நேரம் சிக்னல்ல வந்து நின்னிச்சு ,வேற யாரும் இல்லை நம்ம பசுபதி தான் வெளியூர் ஒரு வேலையா வந்த மனுசன், தியேட்டர் வாசல்ல சண்டை போட்டு இருந்த தன் மகனத்தான், அங்கயும் ஒரு பஞ்சாயத்து வைச்சுட்டு விதி.
வீட்டுக்கு வரவும் .....
"நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிபாரு வீடு போய் சேர மாட்ட"
விஜய் மாதிரி சட்டைய தூக்கி விட்டு கொண்டே ,தன் கையில் உள்ள புத்தகத்தை காற்றில் பறக்கவிட்டு திரும்ப பிடித்து கொண்டே வீட்டிற்குள் வந்த மகனை
"பூபதி " என்ற கர்ஜனை குரல் நிறுத்தியது.
அப்போ தான் பயபுள்ள நிமிர்ந்து பார்த்தது, ஹால்ல இரண்டு வள்ளிஸூம் , பசுபதி மற்றும் நம் பச்சைகிளியும் பூபதியை அதிர்ந்து பார்த்து கொண்டிருந்ததை கவனித்தான்.
"இப்போ என்னாத்துக்கு இவிக எல்லாரும் இப்படி பேய் பிடிச்சவன பார்க்கிற மாதிரி பாக்குதுக" , என்று நினைத்து கொண்டே தன் தகப்பன் பின்னாடி நின்ற பச்சைகிளியை பார்க்க ,
அவனோ "மவன நீ செத்தடா " என்பது போல் தன் நாக்கை தொங்க போட்டு இறந்ததை போல் செய்கை காட்டினான்.
"ஏய் கூப்பிடுறன்ல இங்க வா" என்ற மீண்டும் தன் தந்தையின் கர்ஜனை குரலில் அவர் முன்னாடி வந்து நின்னவன்.
"என்னப்பா " என்றான் பவ்யமாக .
"எங்கன போயிட்டு வர்றீக...." என அவனை தீர்க்கமாக பார்த்து கொண்டே கேட்க .
"கா... கா....காலேஜ்க்கு பா " என சுத்தி முத்தி ரகுபதியை கண்களால் தேடிக்கொண்டே பதில் கூறினான், ஏனெனில் அவனை காப்பாற்ற கூடிய ஒரே தெய்வம் அவர் தான்.
"எங்கே போய்ட்டு வந்தீக மறுபடியும் சொல்லு?" என்று கேட்டுக்கொண்டே தன் சட்டையை தூக்கி இடுப்பில் உள்ள பெல்ட்டை அவிழ்த்தவாறே கேட்டார்.
அதை கண்டவுடன் பூபதிக்கு நாம இன்னிக்கு சட்னி தான் என முடிவெடுத்து விட்டான்.
"எங்கே? " என்ற மீண்டுமொரு கர்ஜனை குரலில் ,
"கா" என வாயை திறந்தது மட்டும் தான் தெரியும் பூபதிக்கு ,பெல்ட்டை வைத்து விலாசு விலாசுன்னு விலாசிட்டாரு மனுசன் , அமிர்தம் குறுக்கே வந்து,
"ஏங்க என்னாச்சு எம்புள்ளைய ஏன் இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கீக, விட்டா என் புள்ளைய கொன்னு போட்றிவீக போல " என அழவும் ,
"நகரு டி, அவன் காலேஜ் மட்டம் போட்டுட்டு ,சினிமா போய்ட்டு வந்திருக்கான் திருட்டு தனமா படவா , எவ்வளவு தைரியமா என் முன்னாடியே காலேஜ் போயிட்டு வந்தேன்னு பொய் சொல்லுவான்" ,என மீண்டும் தன் பெல்ட்டை கொண்டு கை ஓங்க,
"அண்ணா " என்ற மற்றும் ஒரு கர்ஜனை குரலில் அனைவரும் திரும்பி பார்க்க அங்க ரகுபதி நின்று கொண்டிருந்தார்.
பசுபதியின் கேள்வியும் தன் மகன் அமைதியா நிற்கிறதையும் பார்த்துட்டு ,ஏதோ தப்பா நடந்திருக்கு, பசுபதி மச்சானை சமாளிக்க தன் புருசனால மட்டும் தான் முடியும்னு,
யோக வள்ளி ரகுபதிக்கு விசயத்தை தெரிவிக்கவும் அடிச்சு புடிச்சு ஓடிவந்து விட்டார் அண்ணன் கோபம் தெரியுமே அவர்க்கு.
வேகமாக உள்ளே வந்தவர் நேராக பூபதியிடம் வந்து அவன் உடம்பை பார்த்தார் இரண்டு கைகளிலும் சிவப்பு நிறத்தில் பெல்ட் தடம்.
கண்களில் நீர் தேங்க தன் அண்ணிடம் திரும்பியவர், ஏன் இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிற அவன் உன் புள்ள தான, இப்ப என்ன படத்துக்கு தானே போய்ட்டு வந்தான் அதுக்கா புள்ளய இப்படி அடிக்குற" என ஆக்ரோஷமாக கத்தவும்.
"உன்ன, நம்ம அய்யன் அடிச்சு வளர்க்காம விட்ட அதே தப்ப நான் பண்ண மாட்டேன், இந்த வீட்டிற்க்கு ஒரு சண்டியர் போதும்" என பேசிவிட்டு விருட்டென வெளியே சென்று விட்டார் பசுபதி.
அன்றைக்கு வாங்குன பெல் அடி,அந்த பயம் இன்னும் பூபதிய விட்டு போகலையே , அதுக்காக தப்பு பண்ணாம நல்ல புள்ளையா இருக்கான்னு நினைச்சிங்கன்னா அது உங்க தப்பு, பயபுள்ள தப்பை தப்பில்லாம தெளிவா பண்ணுது ...
பச்சைகிளி ,சுரேஷ் உபயத்தோட..
புல்லட்டை எடுத்து கொண்டு லக்ஷனாவை தேடி கொண்டிருந்தான் பூபதி .
அவனுக்கு நேரோ லக்ஷனாவோட தோழி மஞ்சு நடந்து வந்து கொண்டிருந்தாள் .
அவளை பார்த்த பூபதி " அடியே மஞ்சு எங்க உன் ஜோடி லச்சு" என கேட்டவுடன் வெடுக்கென கழுத்தை நெடித்தவள் ,
"அவள பத்தி பேசாதீக , அந்த வானரங்க கூட சேர்ந்துட்டு காட்டு கோயிலுக்கு கல்லி பழம் பறிக்க போயிருக்கா , என்ன விட்டுட்டு போயிட்டா " என நெடிந்து கொள்ள.
"காட்டு கோயிலுக்கா" என யோசித்தவன் ,சட்டென்று முகம் மாற்றி , "சரி மச்சான எப்போ கல்யாணம் பண்ண போற " என கேட்டவுடன்.
அட போங்க நீங்க எனக்கு வயசு 8 ,நான் வளர்ந்து வரவும் உங்களுக்கு வயசாகி கிழவனாகிடுவீக , போங்க அம்மா தேடும் நான் வீட்டுக்கு போறேன் என்று மஞ்சு ஓடிவும் ,
தன் புல்லட்டை காட்டு கோயில் பக்கம் விட்டான்......
அவன் போய் தேடட்டும்....