ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா கதை திரி

Status
Not open for further replies.

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3

அரசு அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நின்ற ராம். நொடிக்கு ஒரு தரம் வெளி வழியை பார்த்து கொண்டு இருந்தான்..

அவன் உடன் இருந்த பிரியாவும் தான்…

"பிரியா எங்க மா இவங்கள காணும் நேரம் ஆக ஆக எனக்கு டென்ஷனா இருக்கு…"

"அண்ணா கவலை படாதிங்க அது எல்லாம் சரியா பண்ணிடு வாங்க அண்ணா…"

"அதுக்கு இல்லமா அவங்க நாளு பேரும் தனித்தனியா ஒரு விஷயம் பண்ண நல்லாத பண்ணுவங்க..

" ஆனா சேர்ந்து பண்ண என்ன ஆகும்னு தெரியலையே
அதான் டென்ஷன் தாங்கல…."

"ஒன்னும் ஆகாது அண்ணா ஃப்ரியா விடுங்க…."

அவள் எவ்வளவு கூறினாலும் அவன் மனம் அதை ஏற்கவில்லை
பின்ன 10.30 க்கு வரனு சொன்னவங்கள இன்னும் காணுமே அந்த டென்ஷன் தான் ராம்க்கு..

இவர்கள் தவிப்பை இருவிழிகள் பார்த்துக்கொண்டு இருக்க..

அவ்விழி சுமந்த உருவத்தை நெருங்கிய ஒருவன் அவ்வுருவத்தை தொட..

திரும்பிய உருவம் அவனை கண்டு புன்னகை பூத்தது…( அது யாருமில்லைங்க அவர் தான் நம்ப ஹீரோ)..

"ஹாய் டா மச்சான் …

"ஹாய் டா சாஜிவா"

"எப்படி இருக்க.. அம்மா எப்படி இருக்காங்க .."

"நல்லாயிருக்கோம் டா ...உங்க வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க…"""

"ஃபைன் டா….

சற்று நேர அமைதிக்கு பின்..

ஜிவா "அப்றோம்… மச்சான் வேலைக்கு கேட்டு இருந்தேனே என்னச்சிடா.
இந்த முறையும் கவர்மென் ஜாப்க்கு எக்ஸாம் எழுதி இருக்கேன் டா. இருந்தலூம் வீடு இருக்கிற நிலைமைக்கு நாள் கணக்குல கிடைக்கிற வேலை செய்ய முடியாது டா..
எதவாது தொடர்ந்து போறா மாதிரி ஜாப் இருந்தா சொல்லுடா.". என்க..

சாஜிவா நிதின் இருவரும் பள்ளியில் இருந்து கல்லூரிவரை சேர்ந்தே படித்த நண்பர்கள்…

நிதின் படித்து முடித்தவுடனே. தந்தையின் கடையில் பணிபுரிய. இன்று அவர்கள் நண்பர் ஒருவனின் பதிவு திருமணத்திற்காய் இங்கு வந்தவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்..

"ஏய் மச்சான் இதுலாம் எனக்கு தெரியும் தானடா.."

"இந்த கார்ட் இது அப்பாக்கு தெரிஞ்ச ஸ்குள் . இங்க ஸ்பெசல் கோர்ஸ்காக கம்பியடர் அண்டு டைப்ரைட்டிங் சொல்லி தர ஆள் கேட்டு இருக்காங்க.."

"நீ தான் ஹாயர் லோயர் என்னு டைப் ரைட்டிங் கம்பியூட்டர் சிஸ்டம்னு எல்லாம் கத்து வைச்சிருக்கல நீ உன் சர்டிபிக்கேட் எடுத்துடு போய் இன்டர்வியு அட்டேன் பண்ணி ஜாயின் பண்ணிக்க டா…" என்க

"ரொம்ப தாங்கஸ் டா மச்சான்.."

"சால்ரி கம்மியா தான் இருக்கும் மச்சான் ஓகே தானே…."

"ஒன்னுமே இல்லாததுக்கு எதாவது ஒன்னு நல்லது தானே மச்சான்" என்று வலி நிறைந்த புன்னகையை இதழ் எட்டாமல் உதித்தான்..

"இளமையில் வறுமை கொடுமை…".


"ப்ச்.. அப்படிலா இல்ல மச்சான்.. சீக்கிரமே எல்லா….. என்று முடிக்கும் முன்

பக்கத்தில் இருந்து "எல்லாம் சரியாகிடும் மச்சான்" என்ற குரல் கேட்க..

தன் நண்பனின் குரல் என்று எண்ணிய சாஜிவா. "ம்ம் சரியான நல்லாருக்கும்" என்றான்..

"டேய் இப்போ யாருக்கு நீ பதில் சொன்ன"

"உனக்கு தான் மச்சான்.. "

"அந்த டைலாக் நா சொல்லலடா…டேய் யாருடா அது எனக்குன்னு இருந்த டைலாக்க சுட்டு சொன்னது".. என்று சுற்றி முற்றி பார்க்க…

இப்போது சாஜிவாவின் இதழலில் நண்பனின் செயலை கண்டு சிறு கேலி புன்னகை…

"விடு டா போலாம் "என்று திரும்ப…

அங்கு காரில் இருந்த ரகு..

"அடேய் அது தான் சரியாகிடும்னு சொல்லுறோம் லா தண்ணிய உத்தி அவள எழுப்புடா….

ரிஷி "நீங்க ரெண்டு பேரையும் எழுப்புங்க நான் ராம் அண்ணாக்கு கால் பண்ணி இங்க வர சொல்லுறேன்" என்று சென்றான்..

நிதின் "மச்சான் இங்க பாத்திய டா ரிஜிஸ்டர் அப்பிஸ்கே பெண்ண கடத்தினு வரானுங்க எவ்ளோ தைரியம் டா இவனுங்குளுக்கு என்க..

அதையே தான் சாஜிவாவும் நினைத்தான்..

"போலீஸ்க்கு கால் பண்ணலாம் மச்சான்.."

"டேய்..நீ சும்மா இரு அது என்ன பிரச்சனைனு தெரியாம உள்ள போகாத.. "என்ற இருவரும் அவர்களை வேடிக்கை பார்க்க தொடங்கினர்..

அசோக் "மகி செல்லம் எழுந்திரிங்க... கண்ண முழிச்சி பாருங்க நாம எங்க வந்துருக்கும் பாருங்க… "என்று கொஞ்சி கொண்டு இருக்க…

ரகு " ஹான் ஆமா டா அப்படியே மடில படுக்கவெச்சி பாலுட்டு பக்கி அந்த தண்ணிய எடுத்து அவ முகத்துல அடிச்சி எழுப்புடா…"

"அடிச்சி தானே இப்போ எழுப்புறேன் பாரு.. "என்றவன்.வாட்டர் கேனுடன் மகியை அடிக்க போக..

"டேய்... டேய் ….என்ன பண்ண போற.. ..

"அடிச்சி எழுப்ப போறேன்.."

"மகனே அவ எழுந்த உன்ன கொன்னுடுவா.. "நீ first இங்குட்டு வா.".
என்றவன்.."

மகியின் முகத்தில் தண்ணிர் தெளிக்க மெல்ல எழுந்தாள் மகி..

"என்னடா கல்யாணம் முடிஞ்சா "

"ம்க்கும்... இப்போ தான் ரிஜிஸ்டர் அப்பிஸ் வந்து இருக்கோம் எழுந்திரி.."

மகி "குரங்கு குரங்கு என் முஞ்சில என்டா மயக்க மருந்த போட்ட" என்று அசோக்கிடம் சண்டைக்கு தயராக…

ரகு "மகி அதலாம் அப்றோம் வெச்சிகாலம்
இவங்கள முத எழுப்பு… "

"ம்ம்.. ரிஷி எங்க..''

" ராம் அண்ணாவா கூட்டிடு வர போய் இருக்கான்.." இதோ வந்துடாங்க….. என்க..

ராம் " டேய் பசங்களா அண்ணி எங்க டா .."என்க

"இந்த இருக்காங்க பாருங்க .."

"என்னடா இன்னும் மயக்கம் தெளியளையா.. "

"இப்போ எழுந்திரிச்சிடுவாங்க அண்ணா டென்ஷன் ஆகாதிங்க…"

அப்பெண் மெல்ல கண்திறக்க..

"அவள் அருகில் சென்ற ராம் மதி இங்க பாரு உனக்கு ஒன்னும் இல்ல லா பாருமா மதி.."

"ரா… ராம்.. என்ன.. என்ன.. "என்று மகியை கை காட்டி எதையே சொல்ல வர

"ஐயோ நா இல்ல இவன் தான்". என்று அசோக் பின் ஒளிந்து கொண்டாள் மகி.

"அடியே கோத்து விடுர உன்ன …"என்று அவன் அவளை முன் இழுக்க..

ராமோ.. "இங்க பாரு மதிமா அது எல்லாம் எனக்கு தெரியும்.."

"இந்த இத போய் போட்டு வா ".என்று துணி மற்றும் நகைகளை கொடுக்க..

அதை கண்டே பின்பே தான் எங்கு இருக்கிறோம். தனக்கு என்ன நிகழ போகிறது என்பதை உணர்ந்த மதி பெண்…

ராமிடம் இருந்து சட்டென விலகி..

"எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு புரியாத ராம் ஏன் இப்படி பண்றிங்க.."

"இதுக்கு நீங்களும் உடந்தையா" என்று நால்வரையும் கேட்க அவர்கள் அமைதி காத்தனர்

அதை கண்ட மதி.."யாருக்கும் என் உணர்வு புரியல... புரியவும் புரியாது "...என்றவள்

ராமை நோக்கி...

"எனக்கு இந்த கல்யாணம் வேணா.. எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை.. புரிஞ்சிக்குங்க ராம்" என்று கண்ணீர் உகித்தாள்..

அதை கண்டவனின் காதல் மனம் வலித்தாலும் இதற்கு மேல் இவளை விடுவது நல்லதல்ல என்பதை உணர்ந்தவன்..

"மதிமா எனக்கு புரிஞ்சதலா தான் இந்த கல்யாணம் நீயும் என்ன காதலிக்கிறன்னு எனக்கு தெரியும்.."

"உனக்காக ஜஞ்சு வருசமா காத்திட்டு இருக்கேன் உனக்கு ஏன் என் மனசு புரியால ".என்க..

ராம் "நா உங்களுக்கு ஒத்துவர மட்டேன் ராம் .வேற நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிகோங்க.. "பெண் என்ற இடத்தில் அழுத்தம் கொடுத்து சொல்ல.

"இங்க பாரு மதி உன் கண்ணுல எனக்கான லவ் இருக்குடி உன் மனசுல நான் தான் இருக்கேன் அப்றோம் ஏன் நா வேற பெண்ண கல்யாணம் பண்ணணும் எனக்கு நீ தான் வேணும்"..

என்று இருவரும் பேசி கொண்டு இருக்க இவரையும் தடுத்து ஒரு மழலை குரல்..

"ம்மா… பீளிஸ் ம்மா …"

"எனக்காக அப்பாவா மேரேஜ் பண்ணிகோங்க ம்மா …."என்க..

இவர்கள் சண்டையை சுஸ்வாரசியாமாக பார்த்து கொண்டிருந்த அனைவரும் சற்று அதிர்ந்து அவர்களை நோக்க..

" கிருஷ் நீ எங்க இங்க ஸ்குல் போகலையா…"

"இல்லமா மகி அக்கா தான் கூட்டிடு வந்தாங்க நீங்க அப்பாவா மேரேஜ் பண்ணா நாம மூனு பேரும் ஒன்னா இருக்கலாம்ன்னு சொன்னங்க.."..

"பீளிஸ் மா எனக்காக அப்பாவா மேரேஜ் பண்ணிகோங்க ம்மா.. "என்று மறுபடியும் கூற..

ராம் மதி இருவரும் சேர்ந்து மகியை முறைக்க…

"அவனும் உங்க மேரேஜ் பாத்தா ஹாப்பியா ஃபில் பண்ணுவான் லா அதான்… "என்க..

அதை கருத்தில் கொள்ளாத ராம்
"
மதி நம்ப பையன் சொல்லுறான். இதோ நம்ப ஃப்ரேண்ஸ் இவங்க சொல்லுறாங்கன்னு மட்டும் எனக்கு ஓகே சொல்லாதா..அது என் காதலுக்கு அசிங்கம். இன்னும் எத்தனை வருசம் வேணாலும் நான் காத்து இருக்கேன் உனக்கு எப்போ தொணுதோ அப்போ சொல்லு.. என்று திரும்பி நிற்க..

மகி "அண்ணி பீளிஸ் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை நீங்க அண்ணாவா ல்வ பண்றிங்க தானே.." என்க

"ஆ…..ஆமா... மகி ஆனா அவர் என்ன கல்யாணம் பண்ண இந்த சமூகம் அவர தப்பா பேசும் என்னால அவருக்கு ஒரு கெட்ட பேர் வரனுமா நீயே சொல்லு" என்று அழ….

மதியின் கரத்தை பற்றிய மகி ஒரு அழுத்தம் கொடுத்து..

"எதை சமுகம்ன்னு சொல்லுறிங்க அண்ணி இந்த சமூகத்தையா.. இந்த சமூகம் ஒருத்தன் கீழ விழுந்த ஐய்யா அவன் வீழுந்துடானு சந்தோசப்படும் அதே ஒருத்தன் மேல வந்துட்டா அவன் மட்டும் எப்படி மேல வந்துடான் பாருனு பொறாமைபடும்.

அப்படி பட்ட சமூகத்துகாக நீங்க உங்க நல்ல லைஃப்ப இழக்க போறிங்கள.."

"நம்ப கிருஷ் அப்பா அம்மான்னு நீங்க ரெண்டு பேர் இருந்தும் அவன் தனிமையா வாழனுமா..? சொல்லுங்க.."

அங்கு ஒரு அமைதி நிலை நிலவ..

சாஜிவாவின் விழியே மகியை தழுவி சென்றது.. ஏனோ அக்கூட்டத்தில் தனியாய் தெரிந்தாள் அவள்..

நண்பர்களுடான அவள் சேட்டையை கண்டு சிரித்தவன். முதிர்ந்த பெண்ணாய் பேசியவளை கண்டு வியந்தான். தன்னைவிட சிறிய பெண் பேசும் பாங்கை கண்டு...

அமைதியை கலைக்கும் பொருட்டு மதி..

"நான் போய் இதை போட்டுடு வரேன் ".என்க..

ராம் "ஓன்னும் வேணா நீ கம்பேனிக்கு கிளம்பு "

அசோக் "ஐய்யோ மறுபடியும் முதல இருந்த யோவ் பசிக்குத்து சட்டுபுட்டுனு பேசி முடிங்கயா "....என்று அசோக் மனதில் நினைக்க..

அதே நேரம் அவனை பார்த்த ரகு "கொன்னுடுவேன்.." என்று வீரல் நீட்டி பத்திரம் சொன்னான்..

"இவன் வேற எப்போ பாத்தாலும் நம்பல வாச்பண்ணிட்டு இருக்கான். நிம்மதியா ஒரு மைன்ட் வாய்ஸ் கூட நினைக்க முடியால…"

"அண்ணா இப்போ உங்களுக்கு என்ன…"

"நான் தான் சொன்ன ல மகி அவ என் காதலுக்காக கல்யாணத்த ஏத்துகனும் நீ சொல்லி இல்ல …"

ராமின் கரம் கோர்த்த மங்கை
"உங்களுக்கா நம்ப காதலுக்காக மட்டுமே இந்த கல்யாணம் சரியா" என்க..

தன்னவளை அணைத்தவன் முத்த திலகம் மிட்டு அனுபினான்..

பின் முனைப்பாக வேலை நடக்க

இருவரும் மாலை மாற்றிக்கொண்டு..
அப்பதிவில் கையெழுத்திட .

ராம் கையெழுத்திட்டு மதியிடம் போனாவை நீட்டினான். அதை வாங்கியவள்..

அக்காகிதத்தை பார்த்து கொண்டே வந்தவள் விழி ஒர் இடத்தை கண்டு விழிநீர் பொழிய..கண்ணீரில் நிரப்பப்படட்து அப்பெட்டி.

அப்பெட்டில் நிரம்பிய வார்த்தை அவள் ஒரு திருநங்கை என்பதை எடுத்து சொல்ல..

கையெழுத்திடும் இடத்தில் கை நடுங்க
ஆதரவாய் பிணைத்தவன்..

"என்னிக்கும் உன் கூட நான் இருப்பேன் மதிமா. எந்த ஒரு நேரத்திலும் உன் மாரியாதை குறையிர மாதிரி ஒரு பார்வை கூடா பாக்க மட்டேன். இது நான் தர வாக்குடா என்க..

"பின் தன் கொண்டு வந்த மங்கல நாணை கொண்டு மதியை தன் மனையாளாக்கி கொண்டான்..

சுற்றி இருந்த அனைவரும் ஆராவாரம் செய்ய….

ராம் மதியின் நினைவு பின்னோக்கி சென்றது…

மதி உற்றவர்களால் ஒதுக்கபட்ட திருநங்கை தவறான வழி செல்லாமல் உழைக்க விரும்பியவள் வேலை தேடி சென்ற இடம் தான் ராமின் ஓட்டல்..
அவனும் ஒர் அனாதை சிறு வயதிலிருந்து உழைத்து அவன் உருவாக்கிய கோவில் தான் அவன் ஓட்டல்.

மதி அவனிடம் வேலை கேட்டு நிற்க.

சற்று யோசித்தவன் சரி என்று சொல்லும் முன் அவள் கிளம்ப பார்க்க.

"எம்மா வேலை கேட்டு இருக்கா இல்லையானு சொல்லும் போதே கிளம்பனா எப்படி மா.. "என்க

அவள் அமைதியாய் நின்றாள்..

அவளுக்கு வேலை போட்டு கொடுத்தவன் அவளுக்காய் தங்க இடமும் தந்தான்.

சிலர் அவள் அங்கு இருப்பதை கண்டு பிடித்தமின்மையை வெளிபடுத்த.

"இது என் ஓட்டல் யார வேலைக்கு வைக்கனும் வைக்க கூடாதுனு எனக்கு தெரியும். இஷ்டம் இருந்தா வாங்க இல்லையா கிளம்பு "என்று முறைத்து நின்றான் நல்மனம் கொண்டவன்..

அதை கண்ட மதி வேலைவிட்டு செல்ல பார்க்க..

"இங்க பாரு மதி வாய்ப்பு நம்பளுக்கு எப்போவது தான் வரும் வரும் போது அத நாமா பிடிச்சி முன்னோற பாக்கனும் அதவிட்டு அடுத்தவன் சொல்லுறானு பின் வாங்குனோம் கண்ணுக்கு தெரியாம மறஞ்சி போய்டுவோம்..

போ போய் வேலைய பாரு… "என்க.

அவள் மனதில் ஒர் பாதுகாப்பை உணர்த்தியவன் இன்னும் உயர்ந்து போனான்.. அவள் மனதில்..

அப்போது கிடைத்த கான்ரேக்ட் தான் மகி கல்லூரியின் கேன்டின் கான்ரேக்ட்
அதையும் சிறப்பாய் செய்ய அங்கு கிடைத்த நட்பு பட்டாளம் தான் இவர்கள்.

அண்ணா அண்ணா என்ற அவர்களின் அழைப்பு அவனுக்கு என்றும் பிடித்தமே. அவர்களின் நட்பும்..

இருவரும் செல்லும் இடம் எங்கும் ஒன்றாய் செல்வது உதவியாய் இருப்பது மெல்ல மெல்ல காதலாய் மாற தன் காதலை மதியிடம் உரைத்தான்.

அவளோ தன் நிலை கருதி உதித்த காதலை கருக்கிட பார்த்து அவன் காதலை ஏற்க மறுத்தாள்.. பிணைப்பின் பாலமாய் அன்றும் வந்தான் கிருஷ்..

ஓட்டல் மூடிவிட்டு வரும் இரவு பாதையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க அங்கு குப்பை தொட்டியில் விற்று இருந்த குழந்தை தூக்கி அதை எங்காவது சேர்கலாம் என்ற நொடி.

"இந்த குழந்தையே நானே வளக்கிறேன் ராம் சார்." யாருமில்லாத எனக்கு ஒரு பிடிப்பா "இருக்கட்டுமே…

"என் மதி உனக்கு தான் இருக்கேன் லா."
என்க

அதற்கு அமைதி காத்தாள்.

ஒரு பெருமூச்சை விட்டவன். "சரி இவன நாம வளக்கலாம்.. ஆனா இவனுக்கு அம்மா நீனா அப்பா நான் அதுக்கு சம்மதம் நா ஓகே இல்லனா அஸ்ரமத்துல சேர்த்திடலாம் "....என்க..

சரி என்று தலையசைத்தாள் அதுவே அவனுக்கு காதலில் வென்ற மகிழ்வை தர.. அதற்கு பின் அவளை தொல்லை செய்யாது அவளுக்காய் காத்திருந்தான்.. ஆனால் இருவரையும் கண்ணின் மணிபோல் காத்து நின்றான்.

அவன் காத்திருப்பும் வற்றிபோக இதோ தடாலடியாய் முடிவெடுத்து தன்னவளை கரம் பிடித்துவிட்டான். யாரை பற்றியும் கவலையில்லை அவன் காதல் வென்றுவிட்டது..

அதே மகிழ்வுடன் அவள் இருக்க இன்னும் ஒர் மகிழ்ச்சியை தந்தான் அவள் மன்னன்.

"மதிமா இந்த பேப்பர்லையும் சைன் பண்ணு.. "என்க..

மறுகணமே அதில் கையெழுத்திட உள்ளம் மகிழ்ந்தவன்.

"இப்போ கண்ணமூடு..

"என்ன ராம்.."

" மூடு.. ஒரு சப்ரைஸ்" என்க.

கண்மூடியவள் கரத்தில் ஓர் பூங்கொத்து.. தவழ கண் திறந்தும் கண்ணீர் திரை

"நம்ப பெண்ணு. இவ தான் நம்ப கல்யாணத்துக்கு உனக்கான என் பரிசு கிருஷையும் நாம சட்டபடி தத்தெடுத்துடோம் என்க..

இப்போது இதழ் பதிப்பது அவள் முறையானது.. கிருஷூம் தன் பங்கிற்கு குதிக்க அவனையும் அள்ளி கொள்ள

அதை அழகாய் நகல் எடுத்தனர் ரிஷி மற்றும் ரகு…


எண்ணம் போல் வாழ்க்கை...????


 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4

அவ்வழகிய தருணம் நினைவுகளாக மாற்றபட.. இன்னும் சில புகைபடங்கள் எடுக்கப்பட்டது. அனைத்திலும் மகிழ்வு மட்டுமே..

அதை எட்ட இருந்து பார்த்து கொண்டு இருந்த சாஜீவா மற்றும் நிதினின் விழிகள் கூட மகிழ்ச்சியை வெளிபடுத்தி, அவ்விடம் விட்டு நகர்ந்தனர்..

நிதின். "என்ன ஒரு தருணம் ல மச்சான்..!
உண்மையாவே அந்த ராம் க்ரேட் ல..
அவர மாதிரி மனிதர்கள பாக்கும் போது பெருமையா இருக்கு..”என்க

ஜீவா அமைதியாய் வந்தான்...

”என்ன மச்சான் அமைதியா வர..”

”இதுல என்னடா இருக்கு. இதுல அவர புகழ எதுவுமில்லை.. ”

”காதல் ஒன்னுதான் மச்சான், எதையும் தாண்டி வரும் அதுக்கு எந்த தடையுமில்லை.. காற்று போல உயிரில் கலந்து உயிர் மூச்சாய் மாறிப்போய்டும்.
அவர் கிட்ட அந்த காதல் இருக்கு மச்சான்..”

”அவர் கண்ண பார்த்தியா.. முழுக்க முழுக்க காதல் தான் இருக்கு. அவர் முகத்தில அவர் காதல் வெற்றியடைஞ்ச கர்வம் இருக்கு.. இவ மட்டும் போதும் அப்படியின்ற நேர்மை இருக்கு.”

”அப்படி சந்தோசமா இருக்கிறவர் கிட்ட.. நீங்க ஒரு திருநங்கைக்கு வாழ்க்கை கொடுத்திடிங்கன்னு ஒரு தியாகி ரேஞ்க்கு பேசுனா.. அவர் காதல இகழ்வா பேசுனது போல ஆகிடும் மச்சான்..” என்க

”டேய் ஒரு மனிசன புகழ்ந்தது குத்தமாடா ஏன்டா இப்படி.. என்றவன். "இருந்தாலும் நீ சொல்லுறதும் சரிதான் வா போலாம்…”

”ம்ம்..” என்றவன் வாசல் வரை செல்ல.. ஏதோ உள்ளம் குறுகுறுக்க திரும்பி பார்த்தான், ஜீவா.. அங்கு மகி, கிருஷூடன் ஏதோ பேசி சிரித்துக்கொண்டு இருப்பதை.. ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன், சிறு புன்னகையுடன் சென்றுவிட்டான்..

அவன் விழி மறைந்த நொடி, மகி நிமிர்ந்து வாசலை நேக்கி கொண்டு இருக்க.." என்ன மச்சான் பார்கிற..?” என்ற ரகுவிற்கு, ”ஒன்னுமில்லை..” என்ற தலையசைப்பை தந்து தோள்குலுக்கி சென்றாள்…

"ஏன்மா.. ஃபோட்டோயெல்லாம் அப்புறோம் எடுங்க.. இங்க கொஞ்சம் வந்து, சாட்சி கையெழுத்து போடுங்க"…

"ஹான் இதோ வந்துட்டோம். சார்." என அனைவரும் சாட்சி கையெழுத்திட.. இறுதியாய் பேனா மகியிடம் வந்தது..

மகி "அதான் நாளு பேர் போட்டாச்சில நானும் போடனுமா…?''

அசோக் "நீ தான் மச்சான் போடனும் இந்தா பிடி, போடு உன் பெயர.." என்றவன் வாய்க்குள் புன்னகைக்க..

சுற்றி இருந்த ரிஷி, ரகு, ராம் மூவரும் சேர்ந்து சிரித்துக்கொண்டு இருந்தனர்..

ரகு "என்ன ராம் அண்ணா.. உனக்கு சாட்சி கையெழுத்து உன் தங்கச்சி தானே போடனும், நீ சொல்ல மாட்டியா…"

"அதானே..! மகிமா நீ போடு…."

"அது ...அது வந்து…" என்று இழுக்க

"நம்பல கையெழுத்து போட்டாம.. விட மாட்டாங்க போலேயே..… "

அசோக் "மச்சான் நீ தான் பாக்கி சைன் பண்ணு…"...

அவர்கள் சிரிப்பதை கண்ட மதி, "ஏன் நாளு பேரும் சிரிக்கிறீங்க.."..

ராம் "மதிமா வேடிக்கை மட்டும் பாரு…".என்க

"அட சட்டுன்னு போடுமா டைம் ஆகுதுல…" என்று அந்த அலுவலர் சொன்னார்...

"இருங்க சார் போடுறேன் "என்றவள் தன் கையெழுத்தையிட்டாள்.

அதில் M…..G…. மட்டும் தெளிவாய் தெரிய மீதி எழுத்துகள் புரியவில்லை அதை கண்ட பதிவு அலுவலர்.

"என்னமா இது ஒன்னும் புரியவில்லை.." என்க

"இது என்ன புது சட்டமா சார்.. கையெழுத்த எஸ்ப்லைன் பண்ணா தான் அக்சேப்ட் பண்ணுவீங்களா..?"

"ஹீ ஹீ அப்படி இல்ல.. என்ன பெயர்னு பாத்தேன் மா.."என்று அவர் சென்றுவிட்டார்.

மதி "ஏன் மகிமா மகியின்ற ரெண்டு எழுத்த.. நீ ஏன் அவ்ளோ பெரிசா போட்டுருக்க..?" என்க..

அசோக் அடக்கபடாமல் ஓங்கி சிரித்தான்.. அவன் சிரிப்பதில் காண்டனா மகி, அவன் தலையில் ஓங்கி கொட்டி.

"மகனே! சிரிச்சா காட்டிக்கொடுக்கிற.. உன்ன அப்றோம் பாத்துகிறேன்." என்றாள் கோபமாக…

அவனோ "நாங்க வாங்காத அடியா பாத்துக்காலம்… பாத்துக்கலாம்.." என்று மதியிடம் திரும்பி

"அண்ணி.. மகியோட உண்மையான பெயர் மகி இல்ல.. வேற, மேடம்கு அந்த பெயர் பிடிக்காது அதன் மாத்திக்கிட்டா.."

"ஏன் மகி, அது அவ்ளோ மோசமான பெயரா".. என்க..

"இல்ல மதிமா.. அது ரொம்ப வாசமான பெயர்… என்ன கொஞ்சம் பழைய பெயர்.."..

"அடேய் அண்ணா சும்மா இரு.. அப்றோம் உன்ன.."

" ப்ளீஸ் ராம்.. அது என்ன பெயர்? இத்தனை வருசமா.. அது எனக்கு தெரியாம போய்டுச்சே..." என்க.

"ஹான் ரொம்ப முக்கியம், விடுங்க அண்ணி அதை…"

"அசோக் நீ சொல்லு.. நீ தான் குட் பாய் சொல்லு... சொல்லு.." என்க..

அவன் சொல்ல வாய் எடுக்க.. மகி அவன் வாயை பொத்த.. அவர்களின் சண்டை தொடங்கும் நேரம், அவர்கள் முன் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கி ஓடிவந்தாள்.. மதியின் தோழி நர்மதா..

"மதி உனக்கு ஒன்னுமில்லைல..?” அவளின் பத்திரம் பார்த்தவள்..

காவலர்களிடம் திரும்பி "சார்.. சார்... இந்த பொண்ணு தான் சார்.. மதிய கடத்திட்டு வந்தா.. பிடிங்க சார்.." என்று சொல்ல..

இவர்கள் நால்வர் மேலும் பகையில் இருந்த இன்ஸ்பெக்டர், இது தான் சமையம் என்று அவர்களை சிறைபிடிக்க துடித்தான்.

"என்னம்மா பிரஸ்ஸூ.. அன்னைக்கு அப்படி ரூல்ஸ் பேசுன.. இப்போ என் கிட்ட சிக்குனீங்களா.. இன்னிக்கு இருக்கு உங்களுக்கு.." என்று வஞ்சமாய் மொழிந்து

மகியிடம் அவன் நெருங்க.. அவனை மறைத்தார் போல் நின்றனர் அசோக், ரகு, ரிஷி.. மூவரையும் முறைத்தவன்.

"நாலு பேரையும் வண்டில ஏத்துங்க "...என்றான் கோபமாக..

அப்போதே அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராம், அவனிடம் பேச..

தன் தோழியின் மணகோலம் கண்ட நர்மதா.. ராமும் அதே கோலத்தில் இருப்பதை கண்டு, நிகழ்வை உணர்ந்தவள் தன் தவறையும் உணர்ந்தாள்..

நால்வரிடமும் மன்னிப்பு வேண்டி, காவலரிடம் தான் கேசை திரும்ப பெறுவதாக சொல்ல..

நால்வரையும் நோக்கியவன் "இந்த முறை தப்பிச்சீங்க அடுத்த முறை…" இழுத்தவன் அவ்விடம் விட்டு விலகி சென்றான்.

நர்மதா தன் வாழ்த்தை ராம் மற்றும் மதிக்கு சொல்லியவள், மதி கையில் இருந்த மழலையை கொஞ்ச..

ரகு அவளையே பார்த்துக்கொண்டு நின்றான், அவர் பார்ப்பதை உணர்ந்த மகி..

"என்ன தெரிகிறது…."

"அழகாக இருக்கால"

"அடேய்! அவங்க நம்பள விட பெரியவங்க.." என்க

"பரவாயில்லை.. என்னை நல்லா பார்த்துப்பாங்க…"

"அப்றோம் ஃபர் ஏ கைன்டு இன்ஃபர்மேஷன், நீ, தான், எங்கள விட சின்ன பெண்ணுங்க.. எங்களுக்கு எல்லாம் ஒரே ஏஜ் தான், அம்மா உன்னை சீக்கிரம் ஸ்கூல்ல சேர்த்ததுனால.. நீ எங்க கூட ஒன்னா படிக்க வேண்டியாதா போச்சி..”

"ஓஓஓ.. அப்படிங்களா சார்.. அப்போ அப்படியே திரும்பி, கொஞ்சம் அங்க பாரு ராசா” ...

"எங்க….?" என்று கேட்டுக்கொண்டே திரும்பியவன் அதிர்ந்து நின்றான்.

அங்கு அசோக் நர்மதா.. குழந்தையை கொஞ்சுவதை கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.

"ஐயோ ….!" என்று நெஞ்சில் கை வைத்தவன்..

"அடேய்..! அடேய்…! அங்க என்னடா பார்வை உனக்கு…..?"

"அது வந்து மச்சான்…"

"இங்க பாரு மச்சான், அவ உனக்கு அண்ணி மாதிரி சரியா… " என்க..

"என்னது அண்ணியா"....என்று அதிர்ந்தவன்.. "அடிங்க.. யாருக்கு யாரு அண்ணி, பிச்சிடுவேன் பிச்சி…."

அவன் பேச்சில் இன்னும் அதிர்ந்து போனான் ரகு..

"அவ எனக்கு தங்கச்சி மாதிரி…" என்க..

நிம்மதி மூச்சைவிட்டவன்,

'யப்பா பத்து நிமிஷத்துல என் மனச பதற வெச்சிடியே டா பாவி…” என்று நினைத்தவன்..

”ஹீ... ஹீ... ஹீ... ”என்று சிரித்தவன், "அதுவும் ஓகே தான் மச்சான்..” என்று மச்சானை மட்டும் அழுத்தி சொல்ல.. அவனை சந்தேகமாய் பார்த்த அசோக், மகியிடம்

"மாப்பி இவன் ஆக்டிவிடிஸ் சரியில்ல.. கொஞ்சம் கவனிக்கனும்..”

"விடு மாமே.. அவனாது வாழ்ந்துட்டு போறான்.."

நர்மதா "அச்சசோ பேபி அழறா…" என்க.. எல்லாரும் குழந்தையின் புறம் திரும்பினர்.

"பாப்பாக்கு பசிக்குது போல வாங்க.. எல்லாரும் சாப்ட போலாம்.." என்றான் ராம்.

அசோக் "அப்பா இப்பவாது சேறு போடனும்னு தோணுச்சே உங்களுக்கு, வாங்க போலாம்…" என்க

அனைவரும் கிளம்பினர்..

ராம் தன் குடும்பத்துடன் ஒன்றாய் பயணிக்க.. அவனுடன் நர்மாதவும் செல்ல விழைந்தாள்.. ரகுவும் அவளுடனே சேர்ந்து கொள்ள

ரிஷி தன் காதலியுடன், அவள் வண்டியில் ஏறி பறந்தான்..

"அடேய் துரோகீஸ்….." என்று இவர்கள் இருவரும் கத்தியது, அவர்கள் சேவியில் எட்டவேயில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு "ம்ம் நமக்கு வாச்சது அவ்ளோ தான்"... என்று தோள்மேல் கைப்போட்டு கொண்டு சென்றனர்...


நண்பனிடம் பேசி விட்டு வந்த ஜீவா.. தன் இல்லம் நோக்கி சென்றான்.

நடுத்தர மக்கள் அதிகம் வாழும் பகுதி அது, அன்றாட பிழைப்பிற்கு ஒய்வின்றி ஓடும் மக்கள் வசிக்கும் இடம்..

தன் வீட்டிற்குள் நுழைந்த கணம், கானமாய் வந்தது அவன் அன்னையின் குரல். சாயம் போன சேலையில் மெல்லிய நாடியாய் ஒரு தாய்..

"யப்பா குமரா வந்துட்டியா.. கல்யாணம்ல நல்லபடியா முடிஞ்சதா தங்கம்…"

"எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது ம்மா.. நீ சாப்டியா.. மாத்திரைலாம் போட்டியா...?"

"ம்ம் போட்டேன் தங்கம்.."

"அப்றோம் ம்மா.. நிதினை பார்த்தேன். ம்மா நாளைக்கு ஒரு வேலைக்கு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னான், நாளைக்கு நா போய்ட்டு வரேன் ம்மா.."

"ஏன் தங்கம், உனக்கு கவர்மென்ட் உத்தியோகம் போனுமின்னு தானயா ஆசை…"

"ஆமா.. அதுக்காக உங்கள பட்டினி போடனும்னு ஆசையில்லமா.."

"இது நல்ல வேலை தான், இத செய்துன்னு கூட.. எக்ஸாம்கு ரெடி பண்ணாலம் ம்மா.... நீங்க வருத்தபடாதீங்க ..” என்க…

"ம்ம் உங்க அப்பா கடைசிவரை நமக்கு துணையா இருப்பாருன்னு பார்த்த.. கடனையும், கஷ்டத்தையும் நம்ப துணைக்கு விட்டுடு போய் சேந்துடாரு.."

"என் பிள்ள ஏதாவது நல்லது நடந்து, மேல வரும்னு பார்த்த.. இந்த கஷ்டத்துல சிக்கி தவிக்கிது…" என்று, தன் வேதனையை வார்த்தையில் வெளிபடுத்த…

"ம்மா எல்லாம் சரியாகிடும் ம்மா.."

"எனக்கு ஒரே ஒரு ஆசை தான் தங்கம், உன் கல்யாணத்தை பார்த்துட்டு கண்ண முடுனா போதும்.." என்க.

"ஏன் மா.. அந்த பெண்ணு வந்து என்ன போட்டு மிதிக்கவா… பிள்ளை மேல உனக்கு பாசமே இல்ல போ..." என்று வம்பிழுக்க..

மகனின் சீண்டல் மொழியில் சிரித்தவர், அவன் தலைக்கோதி "போய் குளிச்சிட்டு வா தங்கம்." என்று அனுப்பி வைத்தார்.

தன் அறைக்கு வந்தவன் குளித்துவிட்டு மாற்றுடைக்கு மாறியவன், அன்னையுடன் பேசிக்கொண்டு இருந்தான் பதிவு அலுவலகத்தில் நடந்த திருமணத்தையும் தாயிடம் பகிரந்து கொண்டு இருக்க நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

பின் தாய்க்கு உதவியாய் இரவு உணவு செய்ய உதவி உண்டு விட்டு, தன் அறைக்கு வந்தான்..

நாளை இன்டர்வூவிற்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு, படுக்கையில் விழுந்து விழி மூட..

நயனத்தின் நடுவே நின்றாள் அவனின் நினைவானவள்.. வெடுக்கென எழுந்து அமர்ந்தான். அவன் நினைவை எந்த பெண்ணும் இதுவரை ஆண்டதில்லை.

இருபாலர்கள் படித்த கல்லூரியில் படித்தாலும், தன் சூழ்நிலை கண்டு ஓர் எல்லையுடனே நிற்பவன். அவர்களாய் வந்து மனம் திறந்த போதும்.. ஒரு சொல்லில் தள்ளி வைப்பவன்..

காதல் என்று வரும் போது தெரியாத ஏற்றதாழ்வு, வாழ்க்கை என்று வரும் போது மதில் சுவராய் நிற்கும். பின் உயிர் வலி தந்து செல்லும். இப்போது இருக்கும் வலியே போதும், இன்னும் வலிகள் எதற்கு என்று விலகிவிடுவான்.

அப்படிபட்டவனை சிறுபெண் சோதித்தால்.. என்செய்வான்...?

"இன்னிக்கு தான் உன்னை பார்த்தேன், அதுக்குள்ள இப்படி கொடுமை படுத்த ஆரம்பிச்சிடியே ஏன்மா…?

உன் பெயர தவிர.. உன்னை பாத்தி எதுவுமே எனக்கு தெரியாது. தேடி தெரிஞ்சிக்க இப்போ என்னால முடியாது..

என் லைஃப்ல நான் நிறைய பண்ணணும் குட்டி.. நீ எனக்கானவனா எங்கிருந்தாலும் எனக்காக காத்திருப்ப.. அப்போ உன்னை தேடி நான் வருவேன்.. இல்லைனா இது என்னோட முதல் ஈர்ப்புன்னு கடந்து போக வேண்டியாது தான்.. இப்போ என்ன தூங்க விடுறியா ப்ளீஸ்..” என்க..

அவன் முன் கானலாய் நின்றவள்.. கனலாய் முறைத்து காற்றில் கரைந்து போக.. மென் சிரிப்புடன் இமை மூடியவனை, காதலாய் அணைத்துக்கொண்டாள் நித்ராதேவி…

ஒரு கணமே பார்த்த பெண்ணிடம் தோன்றி உணர்வை, காதல் என்று அவனால் ஏற்க முடியவில்லை.. ஆதலால் அதை ஈர்ப்பின் திரையில் மறைத்தான்.

மறைத்த மாயோனிடம் யார் கூறுவுது.. இதய ஈர்ப்பின் தொடக்கமே.. காதல் இதயத்தின் திறவு சாவி என்று...


எண்ணம் போல் வாழ்க்கை?????
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

கதிரவன் தன் பணி தொடங்கிய கணம், உலகம் எங்கும் பரவி புத்துணர்வூட்டி செல்லும் காலை பொழுது..

வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஃபேன்ட். அணிந்து, கம்பீர புன்னகையுடன் வந்த மகனை கண்ட ஜீவாவின் தாய் .. மகனை கண்ணில் ஒத்திக்கொள்ள..

"ம்மா என்ன இது "...என மென்புன்னகையுடன் கேட்டான்..

"அழகா இருக்க தங்கம்.. என் தங்கத்துக்கேத்த வைரப்பொண்ணு ,எங்க இருக்காளோ"... என்க.

ஜீவாவின் மனதில் மகியின் முகமே நிழலாட.. அதை தூரம் தள்ளியவன்,

"ம்மா.. அவ வரும் போது உங்களுக்கு தெரியும், இப்போ என்ன வாழ்த்துங்க.. நான் இன்டெர்வியூக்கு போகணும்..”

"உனக்கு எல்லாம் நல்லாத நடக்கும் தங்கம்..". என்ற தாயின் வார்த்தையை வரமென எண்ணி, தான் செல்ல வேண்டிய பள்ளி நோக்கி சென்றான்.

சாலையில் இறங்கி பேருந்து நிறுத்தம் வந்தவன், தான் செல்லும் இடத்திற்கான பேருந்தில் ஏறி அமர்ந்தான்..


"என்னடி பிள்ளை பெத்து வெச்சிருக்க.. எப்போ பாரு அந்த குலம் தெரியாத சனியன் கூட சுத்திட்டு இருக்கான்.. நீயும் அவன் கூட சேர்ந்து அந்த பொம்பள கூட கொஞ்சி குளாவிட்டு இருக்க.. இது எனக்கு பிடிக்கலா பாத்துக்க..” என்று கத்திக் கொண்டிருந்தார் ரகுவின் தந்தை..

ரகுவின் தாயோ.. "ஆமா அவங்க வந்த நாளில் இருந்து இதையே தான் புலம்பிட்டு இருக்காரு மனுசன்..". என்று நொடித்துக்கொண்டவர், தன் வேலையைச் செய்து கொண்டு இருந்தார்.

"இங்க நான் கத்திட்டு இருக்கேன், நீ அமைதியா இருக்க..அவன் ஒரு நாளாவது வீட்டுல தங்குறானா..? எப்பபாரு அந்த வீட்டுல தான்…" என்று இவர் திட்டியதும், மகி வீட்டுவரை கேட்க.

அதை கேட்ட மகியின் தாய், அவர் இன்னும் திட்டுவதற்குள் ரகுவை எழுப்ப சென்றார்..

தூங்கும் ரகுவிடம் வந்தவர்.. அவன் அருகில் அமர்ந்து மெதுவாய் எழுப்ப.

"ரகு… ரகு எழுந்திரி டா.. உங்க அப்பா கூப்பிடுறாரு பாரு…"

அவன் எழுந்து மகாவின் மடியில் படுத்துக்கொள்ள..

மெல்ல சிரித்தவர் "டேய்! சீக்கரம் எழு இல்ல.. உங்க அப்பா உன்ன தேடி இங்க வந்துடுவார்..” என்க.

"யாரு அவரு இங்க வந்துட்டாலும், என் னம்மா…”
"சரி சரி முறைக்காதீங்க.. நா போறேன். இந்த தடிமாடுங்கள எழுப்புங்க நீங்க.."

"ம்ம்ம் பாத்து போ.. படிகட்டுல உருண்டுடாதா." என்றவர்.

மீதி மூவரையும் எழுப்பி செல்ல ரிஷி, தன் இல்லம் நோக்கி சொன்றான்.

அசோக் மற்றும் மகி இருவரும் இறங்கி கீழே வர.. அவர்கள் கையில் டீ கப்பை திணித்தவர் தன் வேலையை செய்ய தொடங்கினார்..

அசோக் தாய், தந்தை இங்கு இல்லை, அதனால் எப்போதும் மகாவிட்டு பிள்ளை தான். மகாவிற்கு நால்வரும் ஒன்று என்றாலும் அசோக் மீது தனி அன்பு உண்டு..

மூவரும் ஆயூத்தமாகி வந்து, டைனிங் டேபுளில் அமர.. உணவு எடுத்து வைத்தார்.. மகாபாரதி.

இருவரும் அமைதியாய் உண்டு கொண்டிருக்க… மகா டிவி பார்த்துக்கொண்டு இருந்தவர்.

அதில் ஏதோ செய்தி ஒளிபரப்பாகி கொண்டு இருக்க.. திடீரென்று வேறு நீயூஸ் ஒளிபரப்பானதும்.. அதை கண்டவர் வெறுப்பில் தொலைகாட்சியை அணைத்தார்.

அவர் செயலை பார்த்த மகிக்கு.. அது ஏன் என்று தெரியும், அதனால் அமைதியாய் இருக்க..

அது ஏன் என்று புரியாததால் அசோக் கேள்வி எழுப்பினான்.

"மீமீ ஏன் எப்போ பார்த்தாலும் நியூஸ் பாக்குறீங்க அப்றோம் அணைச்சிட்டு போய்டுறீங்க.. ஏன் ஒரு நீயூஸ் முழுசா பாக்க மாட்டிங்களா …?"என்க.

"ஆமா பொல்லாதா நீயூஸ், இப்போ இந்த நீயூஸ் தேவையாடா."...

"ஒரு பெண்ணு விபத்துல செத்து அவளுக்கான நியாயம் கேட்டு போராட்டம் போய்ட்டு இருக்கு.. அத அப்படியே கட் பண்ணிட்டு bracking news இந்த நடிகருக்கும், நடிகைக்கும் கல்யாணம், இத்தனை நாளா மறைத்து வைத்தது இப்போ வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.ன்னு போடுறானுங்க .."

”இதெல்லாம் பார்க்கும் போது வெறுப்பா இருக்கு டா.. இவங்களோட டிஆர்பிய உயர்த்த, இப்படி நியாயமே இல்லாம நடந்துகிறாங்க... எங்க காலத்தில 99 சதவீதம் உண்மை இருந்தா ஒரு சதவீதம் பொய் இருக்கும், இந்த காலத்தில 99 சதவீதம் பொய்யும், ஒரே ஒரு சதவீதம் உண்மை மட்டும் தான் இருக்கு. இந்த மீடியாவுல, இந்த மீடியாவே எனக்கு பிடிக்கல…"..என்று கோபமாக சொல்லி சென்றுவிட்டார்.

தண்ணி குடித்துக்கொண்டு இருந்த அசோக்கிற்கு புரை ஏறியது..

"டேய் ...டேய்... பாத்து டா… இந்தா தண்ணிக்குடி,,” என்று மகி தண்ணீரை நீட்டினாள்..

"ஏன்டா..! காலையிலேயே மகாம்மாவா பாரதியம்மாவா மாற வைக்கிற.." என்க..

"அது இல்ல மாமே.. இவ்ளோ வெறுக்கிறவங்க, உன்னை எப்படி இந்த லைன்ல போக சம்மதிச்சாங்க.."..

"அது வந்து மாமே நமக்கு ஒரு விஷயம் ஏன் பிடிக்காமா போகுது.? அதுல நாம நினைக்கிறத விட அதிகமான தப்பு நடக்கிறதனால தானே…?"

"தப்பு நடக்குது.. தப்பு நடக்குதுன்னு... தள்ளியே இருந்த யார் சரிபண்றது."..

"இந்த உலகத்தில எங்க தப்பு நடந்தாலும், அதை தைரியமா எதிர்த்து கேள்வி கேட்க ஒருத்தரால முடியும் னா.. அது பத்திரிக்கையாளர்களாள தான்.”

"எழுதுக்கோல் எழுச்சியின் தூண்டுக்கோல்ன்னு..... யாரோ சொல்லியிருக்காங்க.”.

"ஆனா இப்போ அப்படியா இருக்கு. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு நியூஸ் சானல் வெச்சி அவங்க புகழையும் அடுத்த கட்சியோட குறைய சொல்லவே சரியா இருக்கு. பத்திரிகையாளர்களோட பலமே தெரியாதவன்லாம் பத்திரிகையாளனா இருக்கான்.'..

அத சரிபண்ண நான் ஒரு துரும்பா இருக்க தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தப்போ அம்மா தடை சொல்லாமா சம்மதம் சொன்னது..

இப்போ நம்ப நாளு பேரும் மீடியாவுல தான் இருக்கோம், நாம செய்ற ஒரு செயல்
நியாயத்திற்கு நேர்மையா இருந்தா மீடியா மேல இருக்கிற கோபம் கொஞ்சமாவது மட்டுபடும்..இது நம்ப அம்மாக்கு மட்டும் இல்ல.. எவ்ளோ பேர் மனசுல இந்த நினைப்பு தானே இருக்கும்.அவங்களுக்கும் தான்.

"ம்ம்ம் … "

"இன்னும் கிளம்பலையா நீங்க.." என்ற மகாவின் கேள்விக்கு ..

"ஹான் இதோ மா…".

"சரி பாய்... பாய்... நா போய் பஸ்ஸ பிடிக்கனும்"... என்று வேக வேகமாக ஓடினார் மகா…

நண்பர்கள் நால்வரும் வர.. ஒன்றாய் தங்கள் அலுவல் நோக்கி சென்றனர்..

பேருந்தில் ஏறிய மகா இருக்கை இல்லாமல் நின்று கொண்டே வர.. அதை கண்ட ஜீவா..

"ஆண்ட்டி இங்க வந்து உட்கருங்க.." என்க.

"பரவால்லை தம்பி.. நீங்க தான் எங்கையோ வெளிய போறீங்க போல.. நீங்க உட்காருங்க.." என்க..

அவன் மீண்டும் சொல்ல அவன் இடத்தில் அமர்ந்தார்..

சிறு நேரம் கழித்து மகாவின் பக்கத்து இருக்கை காலியாக..ஜீவாவை அழைத்து தன்னுடன் அமர்த்திக்கொண்டார்..

தன் வருங்காலத்தின் அன்னை என்று அறியாத சஜீவா.. அவருடன் இயல்பாய் பேசிக்கொண்டு வந்தான்..

"எங்க தம்பி போறீங்க…"

"நான் வேளை விஷயமா சரஸ்வதி மெர்ட்டிகுளேஷன் வரை போறேன் ஆன்ட்டி.."

"அட!!.. தம்பி நா அங்க தான் அட்டன்டரா வேலை செய்யுறேன்.."

"நல்லது ஆண்ட்டி"... என்று அவன் அப்பள்ளியை பற்றி விசாரிக்க அவரும் தன் பள்ளியை பற்றி விவரித்தார்.

பின் இருவரும் இறங்க வேண்டிய தங்கள் நிலையத்தில் இறங்கி, நடக்க துவங்கினர். பள்ளியை நெருங்கியவுடன்

"ஆல் தி பெஸ்ட் தம்பி, கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்..". என்று வாழ்த்தி சென்றார் மகாபாரதி..

சரஸ்வதி மெர்ட்டிகுளேஷன் நல்ல முறையில் வளர்ந்து வரும் பள்ளி, அதில் மாணவர்களின் extracurricular activities க்காக டைப் ரைட்டிங் அண்டு கம்ப்யூட்டர் பற்றி கற்று தர ஒர் ஆசிரியர் தேவையாய் இருக்க.. அப்பணிக்காகவே ஜீவா வந்து இருப்பது..

தலைமையாசிரியரை கண்டவன் தன் படிப்பின் சான்றிதழ்களை நீட்ட.. அதை வாங்கி சரி பார்த்தவர். அதுவே அவ்வேலைக்கு போதுமானதாய் இருக்க .. அவனுக்கு வேலை தந்தார்.

".Mr. சஜீவ குமரன் நீங்க நாளைக்கே வேலைக்கு ஜாயின் பண்ணிக்கோங்க.. இங்க ஆறாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரையான மாணவர்கள் படிக்கிறாங்க.. நீங்க எட்டாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரை அட்டவணைப்படி கிளாஸ் எடுப்பீங்க ஓகேவா."

அனைத்தையும் அமைதியாய் கேட்டு கொண்டு நின்றான் ஜீவா..

ராமசாமி என்று ஒரு அட்டென்டரை அழைக்க.

"சொல்லுங்க ஐயா.."...

"இந்த சார் தான் நம்ப ஸ்கூல்க்கு புதுசா வந்து இருக்கிற கம்யூட்டர் சார்..".

"இவருக்கு கம்யூட்டர் லேப்ப காட்டு.. " என்றவர் ஜீவாவிடம் திரும்பி..

"இன்னைக்கு எல்லாதையும் பார்த்துக்கோங்க.. நாளையில இருந்து பசங்க கிளாஸ் வர மாதிரி நா ரெடி பண்ணிடுறேன்."... என்க.

சரி என்ற தலையசைப்பை தந்தவன், ராமசிமியுடன் சென்றான்.

இருவரும் லாப்பை அடைய.. அதனை ஒரு முறை சுற்றி பார்த்தவன்.

ஒரு புறம் முழுவதும் கம்பியூட்டர்களாகவும்.. ஒரு புறம் டைப்ரைடிங் மிஸின்னும் இருக்க.. அதன் நடுவே அவன் அமரும் நாற்காலி மேசை இருந்தது..

அவ்வறையினுள் மகா பாரதி நுழைய.. அவரை கண்டு சிநேக புன்னகையை சிந்தினான்..


அவரும் புன்னகை பூக்க..

ராமசாமி "மகாம்மா. இந்த சார் தான் கம்பியூட்டர் சார்…".

"தெரியும் அண்ணா.. HM சார் இப்போ தான் சொல்லிட்டு போனாரு.. இந்த பேப்பர்ல சைன் வாங்கிட்டு வர சொன்னாரு..” என்றவர் ஜீவாவிடம் திரும்பி.

"இந்தாங்க தம்… ..சார்.. ..இதுல ஒரு சைன் பண்ணுங்க .." என்று வருகை பதிவை நீட்டினார்.

"ஆண்ட்டி நீங்க என்ன தம்பினே கூப்பிடுங்க.. சார் லாம் வேணாம்.. சாமி அண்ணா உங்களுக்கும் தான்"... என்க.

"சார் நீங்க இங்க வாத்தியார், நாங்க வெறும் அட்டென்டர் தான், உங்கள எப்படி சார் என்று இருவரும் இழுக்க..”

"ஆண்ட்டி பஸ்ல தம்பின்னு தானே கூப்பிடிங்க.. இப்பவும் அதே தம்பி தான் சரியா..?” என்க..

"சரிங்க தம்பி .." என்று இருவரும் தலையசைக்க

"ஹான் தட்ஸ் குட்…".

"உங்க பேரு என்ன தம்பி…?...

"சஜீவா குமரன் …".

"நல்ல பேருப்பா "..

".. உங்க பேரும் தான் ஆன்ட்டி சூப்பர், எனக்கு பாரதிய ரொம்ப பிடிக்கும்.." என்க மென்புன்னகை சிந்தினார்.

ஏனோ அவரை கண்ட நொடி, தன் தாயின் சாயலை உணர்ந்தான் போலும் இயல்பாய் பிணைந்து விட்டான்.

"சரி ஆண்ட்டி என்னை நாளையில் இருந்து தான், வேளையில் சேர சொல்லி இருக்காங்க.. நான் அப்படியே கிளம்புறேன்.. நாளைக்கு பஸ்ல உங்கள பாக்கிறேன் வரேன் ஆன்ட்டி.. "

தன் நண்பனுக்கு அழைத்து தனக்கு வேலை கிடைத்த தகவலை சொல்லியவன் வீட்டு நோக்கி விரைந்தான்.

சிக்னலில் நின்ற பேருந்தில் அமர்ந்து இருந்த ஜீவா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க.. அவன் விழியில் விழுந்தாள் அவன் வேல்விழியாள்..

அது அவள் தானா..! என்று மீண்டும் ஒரு முறை பார்க்க.. அவளே தான், என்று அடித்து சொன்னது அவன் மனம்.

அவன் அமர்ந்து இருந்த பேருந்துக்கு பக்கவாட்டில் பைக்கில் அமர்ந்து கொண்டு இருந்தாள் மகி.

ஹெல்மட்டை கழட்டியவள் கலைந்த தன் முடிகற்றைகளை கண்ணாடி வழி சரிசெய்து கொண்டு இருந்தாள். அசோக் அவள் பின்னால் அமர்ந்து கொண்டு, தன் வண்டியை தனக்கு தராமல் அடம்பிடிக்கும் தோழியை எண்ணி நொந்து கொண்டிருந்தான்.

"மாப்பி இங்க பாருடி.. எல்லாரும் நம்பளையே தான் பார்கிறாங்க...ராயல் என்ஃப்ல்ட்டுல ஆம்பள பையன் பின்னாடி உட்காந்து இருந்தா அசிங்கமா பார்ப்பாங்கடி, என் செல்லம்ல பிளீஸ் இறங்குமா .." என்று கெஞ்சினான்.

"முடியாது ...முடியாது…. நீ. இப்போ இப்படியே கெஞ்சிட்டு இருந்தேன்னு வெயி எங்கையாவது வேணும்னே இட்டுன்னு போய் முட்டிடுவேன் பார்த்துக்கோ.. "

'ஆத்தாடி மாரியாத்த…. இனி என் வாயில இருந்து ஒரு வாரத்தை வராது, என்னை உயிரோட ஆப்பிஸ்ல்ல கொண்டு போய் சேர்த்துடுமா.." என்க.

"ம்ம்ம் அது…."என்க.

அன்று போல் இன்றும் தன்னவளின் சேட்டையை ரசித்தவன், அவளை விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவன் பார்வையின் தாக்கம் பெண்ணவளை தீண்டியதோ அவளும் அத்திசையை பார்க்க..

இரு ஜோடி விழிகளும் ஒன்றை ஒன்று காந்தமாய் ஈர்த்து நின்றது..

எத்தனை கணங்கள் கண்கள் நோக்கியே கரைந்ததோ.. சுற்றுபுற சத்தத்தில் முதலில் மகி சுயத்திற்கு வர.. தன்னையே விழி எடுக்காமல் பார்பவனை கண்டு..

முதலில் நெற்றி சுருக்கி, பின் புருவத்தை வில்லாய் வளைத்து, ஒயிலாய் நிமிர்த்தி.." என்ன "என்ற செய்கை கொண்டு கேட்க.

அவள் விழிகாட்டிய வித்தையில் புதைந்து நின்றவன், அவள் கேள்வியில் தன்நிலை மீண்டு ”ஒன்னுமில்லை..” என்று தலையாட்டினான்..

”ம்ம்..” என்று மேலும் கீழும் தலையாட்டியவள் சிக்னல் விழுந்ததை கண்டு வண்டியை எடுத்துக்கொண்டு செல்ல..

அவள் செயலை எண்ணி இதமாய் இதழ் விரித்தவன் அவள் சொல்லும் வழியை பார்த்துக்கொண்டு இருந்தான்..

முன்னே சென்றவள் திரும்பி மீண்டும் ஒருமுறை காந்தவிழியானை நோக்க

ஈர்ப்பில்லை இதயத்தின் காதல் என்று உணர்ந்தவன் இன்னும் இதழ் விரித்தான் தன்னுள் பூத்த காதலை எண்ணி...

எண்ணம் போல் வாழ்க்கை...???
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6

தீரத்தழல் பத்திரிக்கை அலுவலகம், நேர்மைக்கு பின்னால் இருப்பதால்.. அநியாயத்தால் அடிக்கடி அடிக்கப்படும், நியாயத்தின் குரல்.

அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த.. வண்டியை நிறுத்திய பின்னும் இறங்காமல் ஏதோ சிந்தனையில் இருக்கும் மகியை கண்டவன்..

"மகி… மகிமா…. அடியே மாரியாத்த…." என்று கத்த..

"அடேய் ஏன்டா..! இப்படி காட்டு கத்துர"...

"பின்ன ஆபீஸ் வந்து அறைமணி நேரம் ஆகுது டி, இன்னும் வண்டிய விட்டு இறங்காமா.. என்னத்த யோசிச்சிட்டு இருக்க.."...

அவன் கேள்வியில் விழித்தவள்.
'எப்படி சொல்லவாள்.. இரு காந்த விழிதனில் தான் கட்டுண்டதையும். கொற்றவனின் கோல் விழியின் தாக்கத்தில் தான் தத்தளிப்பதையும்….'

அசோக் தன்னையே பார்பதை உணர்ந்தவள்,
"அது … அது...ஒன்னுமில்லை மாமே.. ச்சீப் கிட்ட என்ன சொல்லுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். டா"...

"அதை ரிஷியும், ரகுவும் ஏதாவது சொல்லிருப்பானுங்க வா.. உள்ள போலாம்….

இருவரும் அலுவலகத்திற்குள் நுழைய..

அவர்கள் முன் வந்து நின்றார் அவர்களின் தலைமை அலுவலர், ராஜசேகர்…

"குட் மார்னிங் சார்…"..

"குட் மார்னிங் ...மகி… அசோக்….."

"இரண்டு பேரும் என் கேபினுக்கு வாங்க…"

"மகி உன்னோட அடுத்த ப்ராஜெக்ட், அந்த K.K. ஹாஸ்பிட்டல் பத்திய இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணறது. ரிஷி உன் கூட வருவான் ஓகே வா..?" என்க..

"சரி ச்சீப்…...”

"அப்புறம் அசோக், நீ ஸ்டெல்லாவ.. ஃபாலோ பண்ணு…"...

"ஐய்யோ ச்சீப்..! உங்களுக்கு வேற நல்ல ஃபிகரே கிடைக்கலையா..? போயும் போயும் அவள போய் ஃபாலோ பண்ண சொல்லுறீங்க…"..

அசோக்கின் சொல்லை கேட்ட மகி, சிரிப்பை இதழ்களில் மறைத்து கொண்டு நிற்க..

அவனை முறைத்த ராஜசேகர்…

"மூதேவி.. திருவான்மியூர் பீச் கிட்ட டெட்பாடி ஒன்னு ஒதுங்கி இருக்காம்.. அங்க போய், ஏதாவது நீயூஸ் கலெக்ட் பண்ண முடியுதன்னு பாருங்க…"..

"என்னது……. டெட்பாடியா…. சார்…. சார் …..பிளீஸ் சார்…. நா வேணா மகி கூட போறேன் சார்…" என்று கெஞ்ச.

"நீ போனா சொதப்பிடுவ அசோக். சோ.. நீ ஸ்டெல்லா கூட போ…"..

"ஐய்யோ..! சும்மாவே பேய்ங்க கனவுல வந்து காவு வாங்கும், இப்போ டெட்பாடி வேற.. இன்னிக்கு நான் செத்தேன், கடவுளே! என்ன காப்பாத்த யாருமே இல்லையா …" என்று மனத்திற்குள் புலம்பிக்கொண்டு வர.

"யாரும் இல்லை அகி…."...என்று கூறிக்கொண்டு வந்தாள் ஸ்டெல்லா.

"என்னடா ... உலகம் இது! ஒரு மைன்ட் வாய்ஸ் கூட நிம்மதியா நினைக்க முடியால…ச்சைக்…."....

"ஹாய் அக்கி.."..

"ஹாய் ஸ்டெல்லா.."...

"போலாமா.. ."

"ம்ம்ம்.. போலாம்.." என்றவன் அப்போது தான் நினைவு வந்தவனாக.."ஆமா ரகு எங்க…?"

"அவன் தான் நேத்து மிஸ்ஸானா ஹீரோயின் இன்டர்வியூவா.. ரீக்கவர் பண்ண போய் இருக்கான்.."...

"எது... எது…. ஹீரோயின் நா.. இன்டர்வியூ பண்ண போயிருக்கானா..?"..

"என்ன கொடுமை ஸ்டெல்லா இது...! என்ன கொடுமை….!"

"நா மட்டும் டெட்பாடிக்கூட டேன்ஸ் ஆடனும், அவன் மட்டும் ஹீரோயின் கூட டூயட் ஆடுவானா..? "...

”மம்மி…. நியாயம் நியாயம்னு பேசுற இந்த ஆப்பிஸ்ல.. எனக்கு நியாயமில்லாமா போய்டுச்சே…ஏ….ஏ….ஏ….”
என்று ஒப்பாரி வைக்க..

"அடேய் பக்கி சும்மா இருடா "...

"அவன் சினி டிப்பார்ட் டா.. நாம க்ரைம் டிப்பார்ட்... நம்ப ப்ராஜெக்ட் இப்படி தான் வரும், வா போலாம் ….".. என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்..

"ராஜசேகர்! அரசு மருத்துவமனையில இருந்து நல்ல மருந்துகளை கடத்தி, தனியார் மருத்துமனைக்கு விற்கிறதுமில்லாம.. அங்க காலவதியான மருந்துகளை அரசு மருத்துமனையில பயன்படுத்தி.. நோயாளியா வர மக்கள.. இன்னும் இன்னும் நோயாளியா மாற்றி அனுப்புறாங்கன்னு, இத மக்கள் கிட்ட நாம எப்படியாவது கொண்டு போய் சேர்கனும் மகி.. "

"கண்டிப்பா ச்சீப், இத நாம செய்றோம்.." என்றாள் ஓர் தீவிரத்துடன்.

###############$$$$#######

காலம் அவரவர் காலநிலைக்கேட்க காற்றாய் செல்ல.. இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலை…

பள்ளியில் ஜீவா அனைத்து மாணவர்களுக்கும் பிரியமான ஆசிரியராய் மாறி போனான்.

படிப்பின் அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு நல் ஆசனாய் இருப்பவன்.. நல் நண்பனாகவும் இருந்து, அவர்களுக்கு கம்பியூட்டர் டைப் ரைட்டிங் மட்டும் இல்லாது.. பொதுவறிவுகள் பலவற்றையும் கற்று தந்தான்.. அவர்களின் அழுத்தத்தை கூட்டாது இயல்பாய் இருக்க.. அதுவே மாணவர்களின் மனதை அவன்பால் ஈர்த்தது..

ஆனால் அவனின் மனதோ.. அவன் மனதாளிடம் மட்டுமே..! அவள் விழி வித்தையில் விழுந்தவன் தான், அது ஈர்ப்பில்லை காதல் என்று, என்று உணர்ந்தானோ.. அவளையே உயிராய் எண்ணி நினைவில் வாழ்கிறான்.

பெண்ணவளும் தன் கடமையில் தொலைந்து போனாலும்.. அவள் இரவு பொழுது சிந்தனைகள் சித்தனின் சிலைவிழியிலே சென்று, சலனத்தை ஏற்படுத்தியது… உண்மையே…

இருவரும் தனித்தனியே அல்லாடுவதை இறைவன் வெறுத்தானோ சேர்த்திட துணிந்தான்..

மதியவேலை பள்ளயில் உணவிற்கு மகா, ராமசாமி , ஜீவா மூவரும் அமர்ந்து உண்டு கொண்டிருக்க..

ராமசாமி "அப்றோம் தம்பி நீங்க இங்க பார்மனென்டா…?"..

"இல்ல அண்ணா.. நான் கவர்மென்ட் ஜாப்க்கு எக்ஸாம் எழுதி இருக்கேன்.. அதுல பாஸ் பண்ணிடேனா.. ஒரு கவர்மென்ட் ஜாப்ல போய் சேர்ந்துடுவேன்.. அதுவரைக்கும் இந்த வேளை தான் அண்ணா"....

"ஏன் தம்பி, இந்த கலெக்டர், தாசில்தார் போல வருவீங்களா...?"....

ஒரு புன்னகையை இதழில் படரவிட்டவன், "அப்படியெல்லாம் இல்ல அண்ணா.. என்ன பொருத்தவரை, கவர்மென்ட் வேலைல்ல கடைசி நிலை வேலை கிடச்சா கூட.. நா சந்தோசம் தான் படுவேன் ண்ணா.."

"ஏன்னா.. நம்ப ஊருல வெறும் இரண்டு ரூபாய் ஃபாம் தரவன் கூட.. ஜம்பது ரூபாய் லஞ்சமா கேக்கிறான்.."

"அதுக்கு மேல இருக்கிறவன் அத விட அதிகமா கேட்கிறான்.."

"அப்படி பட்ட ஒரு ஆப்பிசரா இல்லாமா.. கடைசி வேலை செஞ்ச கூட.. மக்களுக்கு நல்லதை செய்யனும் அண்ணா.. அது தான் என் ஆசை" என்க.

மகாபாரதி அவனை பிரமிப்பாய் பார்க்க "ஏன் ஆன்ட்டி இப்படி பார்கிறீங்க..?" என்க..

"உன்னை போல தான், என் கிட்ட ஒருத்தர் சொன்னாரு… அவரோட நினைப்பு வந்துடுச்சி தம்பி அதான்."

"யாரு ஆன்ட்டி அது…?

"என் கணவர் தான்.. அவர் பேர் சேதுராமன்.. அவரும் நீ இப்போ பேசுன பார்த்தியா.. அப்படி தான் பேசுவாரு.."

"சாதியே வேண்டாம்னு முழக்கம் போடுவார்… மக்கள் எல்லாரும் ஒன்னுதான் பசி, வலி, காற்று, காதல், அன்பு, பாசம், மனிதம் மட்டும் போதும்னு பேசுவார்.."

"நானும் அவரும் வேற வேற சாதி, எங்க அப்பாவ எதிர்த்து கல்யாணம் பண்ணோம். என் பொண்ணுக்கு ஒரு வயசு இருக்கும் போ… போது…."..
என்று அவர் குரல் தழுத்தழுக்க.. அவர் கரத்தை ஆதரவாய் பற்றிக்கொண்டுடான் ஜீவா. அதில் மெல்ல தன்னை சரிசெய்தவர்."

"அப்றோம் என்னாச்சி ஆன்ட்டி …"

"எங்க அண்ணா.. என் காதலுக்கு எந்த எதிரிப்பும் சொல்லாமா, எங்களுக்கு உதவியா நின்னா.. அவனையும், அவரையும் ஒரே நேரத்துல கொன்னுட்டார் எங்க அப்பா.."

"போலீஸ் கம்லைன்ட் பண்ணியிருக்கலாமே ஆன்ட்டி "....

விரக்தி புன்னகை ஒன்னை சிந்தியவர் "அப்போ சாதி வெறி பிடிச்சவங்க தான் அதிகம் தம்பி.. அப்போ எனக்கு இருந்த வேதனையில என் பெண்ணையும், என்னையும் காப்பதவே போதும் போதுமின்னு ஆயிடுச்சு.. நல்ல வேளை, மூர்த்தி அண்ணா உதவியா இருந்தார்.. அவர் மட்டும் இல்லை நா
எங்க நிலைமைய நினைக்கவே பயமாயிருக்கு… " என்க.

நிமிர்வாய் நிற்பவர் உடல் நடுங்குவதை கண்டே அவர் வலி உணர்ந்தவன், தண்ணீர் கொடுத்து அவரை அமைதி படுத்தினான்.

அவரை இயல்பாக்கும் பொருட்டு "அப்படிப்பட்ட உங்க அப்பா.. எப்படி உங்களுக்கு மகாபாரதின்னு பெயர் வைச்சார்.."

மெல்ல சிரித்தவர். "இதே கேள்விய தான் அவரும் கேட்பார்"...

என்று இருவரும் பேசிகொண்டே உண்டு முடித்தனர்.

ஜீவா தன் அடுத்த வகுப்பிற்கு தயராக.. அவரிடம் வந்த மகா..

"குமரா.. இது என் விதவை பென்சன் காண ஃபாம் இரண்டு மாசமா சரியா வரல.. இத ஃபில்லப் பண்ணி வைக்கிறீயா..? நான் ஈவினிங் வாங்கிகுறேன்" என்க.

"தாங்க ஆண்ட்டி.. நான் பண்ணி வைக்கிறேன்..” என்று வாங்கியவன் மாணவர்கள் வருவதை கண்டு அவர்களை நோக்கி சென்றான்.

அனைத்து வகுப்புகளும் முடிந்த நிலையில், அந்த ஃபாம் அவன் கண்ணில் விழ.

"இத ஃபில் பண்ணி வெச்சிடலாம்..” என்று அப்ஃபைலை திறந்தவன் இன்பமாய் அதிர்ந்து நின்றான்."

ஏனெனில் அதில் இருந்த முதல் சான்றிதலே அவனவளின் முகம் பதித்த சான்றிதல் தான்.

அதை ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் போதே மகா. உள்ளே நுழைய..

"குமரா முடிச்சிடியா…?”....

"இல்ல ஆன்ட்டி.. இதுல வேற யாரோட சர்டிபிகேட்ஸ் இருக்கு.."... என்று தன்னவளை பற்றி தெரிந்து கொள்ள கேட்க.

"வேற யாரோடதா..! எங்க காட்டு…"

"அட கடவுளே…!!!.... ஃபையில மாத்தி கொண்டு வந்துட்டேன் போல.."...

"என்ன ஃபையில் ஆன்ட்டி.."...

"இது என் பொண்ணு மரிது ப்பா.. "..

"மரி என்ன ஆண்ட்டி பெயர் வித்யாசமா இருக்கு.."..

"அது அவ பெயரோட சுருக்கம் தம்பி.. அவ முழு பெயர் வேற.. அது அவளுக்கு பிடிக்காது.."..

"ஏன் ஆன்ட்டி.. அப்படி என்ன பெயர் அது?.. என்று சற்று ஆர்வமாக கேட்க..

அதை உணராத மகா சிரித்துக்கொண்டே..

"இதோ இருக்கு பாரு …" என்று அவள் பெயரை காட்ட.. பக்கென்று சிரித்துவிட்டான்…

மீண்டும் மீண்டும் சிரிக்க.. "குமரா.. அவ முன்னாடி மட்டும் நீ இப்படி சிரிச்ச.. உன்னை கொன்னே போட்டுடுவா…"

"இருந்தாலும் உங்களுக்கு ஏன் ஆன்ட்டி இவ்ளோ ஓரவஞ்சனை.. உங்களுக்கு மட்டும் ஸ்டைலா மகாபாரதி வெச்சிட்டு,
அவங்களுக்கு மட்டும் கிராமத்து ஸ்டைல்ல.. மரிக்கொழுந்துன்னு வெச்சி இருக்கீங்க..” என்று சிரிக்க.. (ஆமாங்க.. நம் ஹீரோயினோட பெயர் மகி.. மரி ...லா இல்லை மரிக்கொழுந்து..)

"அது அவரோட அம்மா பெயர் தம்பி, அதையே அவர் பொண்ணுக்கும் வெச்சிட்டார்.. அது பிடிக்காம தான் மகின்னு மாத்திக்கிட்டா.. வெளிய மட்டும் தான் மகி, மத்தபடி எல்லா இடத்துலையும் மரிக்கொழுந்து தான். அவ அப்பாக்காக மாத்தாம விட்டுட்டா…".

"நைஸ் ஆன்ட்டி….” என்றவன், அதை கையில் எடுத்து, ஒரு முறை வாசித்து பார்க்க..

"மரிக்கொழுந்து…. ”

அப்பெயர் அவன் நெஞ்சம் முழுதும் வாசமாய் நிறைந்தது..

"என்ன ஆன்ட்டி, இந்த இடமெல்லாம் காலியா இருக்கு..?

சாதி என்ற இடம் எதுவும் போடாமல் இருப்பதை கண்டு கேட்க..

"அது எங்களுக்கு தேவையில்லைன்னு முடிவு பண்ணி பல வருஷமாச்சி தம்பி.."

"அந்த சாதியால தான், நான் என் அண்ணாவா.. என் கணவர.. என்னை உயிரா பார்த்துகிட்ட.. எங்க அப்பாவா இழந்தேன்.. எங்க மேல வெச்ச பாசத்த இழந்து, எங்களையே கொல்ல துடிச்சவர்.. "

"அப்படிப்பட்ட சாதியோட நிழல் கூட.. என் பொண்ணு மேல படக்கூடாதுன்னு தான் அதை எடுத்துடேன்… அவளுக்கும் அதையே தான் சொல்லிக்கொடுத்தேன்.."

இப்போது பிரம்மிப்பாய் பார்ப்பது அவனின் முறையானது..

இருவரும் பள்ளியை விட்டு வெளியே வர.

அவனின் சிலைப்பெண்ணவள் சித்திரமாய் அமர்ந்திருந்தாள்

"மரிம்மா….” என்று மகா அழைக்க..

திரும்பி பார்த்தவளும் விழி விரித்து நின்றாள்.. நித்தம் கனவில் வந்து கானலாய் மறைபவனை கண்டு..

இருவரும் மகியை நெருங்க..

"மரிம்மா ரொம்ப நேரமா நிற்கிறீயா..?"

"இல்ல மீமீ ..இப்போ தான் வந்தேன்..".

"அவள் திகைத்த முகமே.. அவளுக்கு தன்னை ஞாபகம் இருப்பதை உணர்த்த..
உள்ளம் மகிழ்ந்தவன் அமைதியாய் இருக்க..".

"அப்றோம் மகி, இது தான் நான் சொல்லுவேன் லா குமரன் தம்பி, அது இவர் தான் "... என்க

"குமரா.. இது என் பொண்ணு மரி…” என்க.

தன் கரத்தை அவள் முன் நீட்டியவன் அவளை சீண்டி பார்க்கும் பொருட்டு "நைஸ் நேம் மிஸ். மரிக்கொழுந்து.." என்க..

அவன் கரத்தை பற்றியவள். அவன் கூறியதை கேட்டு சட்டென்று நிமிர்ந்தாள் "இவனுக்கு எப்படி என் நேம் தெரியும்..!” என்று அவனை நோக்க.. அவன் மகாவை பார்த்து வைத்தான்.

"இது நீ பார்த்த வேலை தானா தெய்வமே…".. என்று நினைத்தவள்

அவனிடம் திரும்பி " இங்க பாருங்க Mr.குமரன்..”

"சாஜீவ குமரன்" என்று தன் முழு பெயரை சொல்ல.

"அவன் பெயர் அழகா இருக்கின்னு சொல்லி காட்டுறான் சர்த்தான் போடா.." என்று நினைத்தவள்

" நா மகி தான், மரிக்கொழுந்தெல்லாம் இல்லை.. அப்படி கூப்பிடாதீங்க.."

"எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சியிருக்கு.. " என்று சொல்லில், அழுத்தம் கொடுத்து சொல்லியவன்.

"ஆமா டி.. என் பெயர் அழகு தான்.." என்று அவள் முன் குனிந்து சொல்ல

அவனை முறைத்தவள் "ம்மா.. வா போலாம்….” என்றாள்.

"நாம போகனும் நா.. நீ முதல அவன் கையவிடனும் அப்போ தான், இடத்த காலி பண்ண முடியும்.." என்ற மகாவின் குரலில், தன் கையை அவனிடமிருந்து பிரித்துக்கொண்டவள்.

"நேரம் காலம் தெரியாம மொக்க பண்றதே.. இந்த அம்மாக்கு வேலையா போச்சி…" என்று முணுமுணுக்க

அதை கேட்ட சாஜீவ் சிரித்துவைக்க. அதை கண்டு இன்னும் முறைத்தாள்.

முறைக்கும் பெதும்பையை கண்டு
கண்சிமிட்டி "...பாய்ய் …" என்று செய்கை செய்ய.. பக்கவாட்டமாய் திரும்பியவள்.

”இவன் கண்ண பார்க்கவே கூடாது டா சாமி.. ஐஞ்சி நிமிசத்துல ஆளை உள்ள இழுத்துகிறான்..” என்றவள் திரும்பி செல்ல..

அவனும் மென்னகை ஒன்றை வீசி சொன்றான்.

தேட வேண்டாம் என்று நினைத்த தேவதை.. தன்னருகிலே இருப்பதை எண்ணி மனம் மகிழ்ந்தான்.

விழி விசையில் தொடங்கிய காதல், உணர்வால் பிணைந்து உள்ளத்தில் இணையுமா….?

எண்ணம் போல் வாழ்க்கை...??
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7

”அம்மா ஏன் அவன் கிட்ட என் பெயர சொன்ன பாரு.. வேணும்னே கிண்டல் பண்றான்..”

”மரிமா.. இப்படி மரியாதை இல்லாம பேசதா, அவன் உன்னை விட பெரியவன் டீச்சர் வேற.. அதுகான மரியாதையை தரனும் பாத்துக்கோ…”

”ம்க்கும்….” என்று நொடித்தவள்..

”ம்ம்ம சாஜீவ குமரன் நல்ல பேரு தான், சாஜீவகுமரன், மரிக்கொழுந்து..” என்று சொல்லி பார்த்தவள்.

”ச்சைக்…. நல்லாவே இல்லை..” என்றவள் அப்போது தான் தன் மனம் செல்லும் பாதை உணர்ந்து திடுக்கிட்டு நிற்க..

அவள் தலையில் கொட்டிய அசோக்.
”நடு ஹால்ல நின்னுட்டு என்ன கனா கண்டுட்டு இருக்க…?”

”ஆ...ஆ. பக்கி வலிக்குதுடா.. என்றாவள். "ஒன்னுமில்லை சும்மாதான் அதுக்கு ஏன்டா கொட்டுனா..” என்று தலையை தேய்த்துக்கொண்டு சொன்னாள்.

”இல்லையே..! ஏதோ பேர் சொன்னாப்போல இருந்துச்சி…”

”ஆமா டா.. இப்போ அது ரொம்ப முக்கியம் அத விடு, ரிஷி, ரகு எங்க..?”

”அவனுங்க.. அவங்க ஆளுங்க பின்னாடி சுத்த போயிருப்பானுங்க..” என சொல்லிக்கொண்டு இருந்தவன்.

”அம்மா...மா….மா…” என்று கத்த அவன் தலையை தட்டியிருந்தான் ரிஷி.

”உனக்கு ஏன்டா வயித்தெறிச்சல்..? வேணா நீயும் ஒரு பெண்ண கரேக்ட் பண்ணு..” என்க.

”பண்றேன் டா.. பண்ணி உங்க முன்னாடி கெத்தா.. மாஸா.. நிக்கல என் பேரு…”

”பேரு……” என்று மூவரும் கோரஸாக கேட்க..

”அசோக் இல்லை டா..”

”இப்போ மட்டும் இவர.. பெயர் சொல்லி தான் கூப்பிடுறோம் பாரு போடா… பார்போக்கி வாயா..“ என்றான் ரகு.

”Mr.ரகு.. நர்மாதா மேட்டரை வீட்டுல போட்டு கொடுக்கவா...” என்று கண்ணடித்து கேட்க..

”ஹி..ஹி..ஹி.. மச்சான்.. நாமயெல்லாம் அப்படியா பழகி இருக்கோம்.. நீ அழகன்டா உனக்கு லா ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி..” என்று அவனை மலையிறக்கினான் ரகு..

”ரிஷி.. இன்னிக்கி நைட் அந்த ஹாஸ்ப்பிட்டல்ல மருந்துங்களை கடத்துறாங்களாம்… நீ கவர்மென் ஹாஸ்பிட்டல் போ.. நான் அந்த KK ஹாஸ்பிட்டல் போறேன்.. இந்த வீக்ல இந்த ப்ராஜெக்ட நாம முடிக்கிறோம்.”

”ஓகே மகி ஆனா.. டேக் கேர்… ஃபோன கைலையே வெச்சிக்கோ..”

அசோக்'' நாங்க இரண்டு பேரும் சும்மா தானே இருக்கோம்.. உங்க கூட வரோமே..”

ரகு ”ம்ம்.. ஆமா ஒரு மாறல் சப்போர்ட் இருக்கும் லா. இரண்டு பேரும் ஒன்னா இருந்த ஓகே.. தனித்தனியா வேற போறீங்க.. அது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு..” என்று தன் மனதை மறைக்காது சொன்னான்

மகி ”அதுல்லாம் வேணா மாப்பிஸ், எதாவதுன்னா பாத்துக்கலாம் அந்த அளவுக்கு ஓர்த் இல்ல அவனுங்க..” என்று, அங்க நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல் பேசினால் பெண்ணவள்..

”குரங்கு குட்டிங்களா.. மொக்க போடாமா சாப்ட வாங்க..” என்ற மகாவின் குரலில் அனைவரும் சாப்பிட சென்றனர்.######################$$$$$$$#####

”தங்கம் போதுமா... இன்னும் கொஞ்சம் வெக்கவா..” என்ற தாயிடம்

”ம்மா.. போதும், நீ சாப்பிட்டு எழுந்திரி, மாத்திரை போடனும் லா..”

”சரி டா தங்கம்….”என்றவர் தன் படுகைக்கு செல்ல

அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன், தன் அறைக்கு சென்று படுகையில் விழ.
அவனை வாசமாய் அணைக்க வந்தாள்.. அவனின் மரிக்கொழுந்து..

அவள் நினைவு வந்தவுடன் வேகமாய் எழுந்தவன், தன் பார்சை தேடி எடுக்க.. அதில் தான் வைத்த தன்னவள் நிழற்படத்தை, கண்ணில் நிறைத்தான்..
காரிகையின் காதலன்.

அந்த ஃபையில் இருந்த மகியின் படத்தை அவர்களுக்கு தெரியாமலே சுட்டு விட்டான்.

”ஓய் கொழுந்து உன்னால மாமன் திருட்டு பையனா ஆயிட்டேன் டி..

என்னை என்னடி பண்ணி வெச்சிருக்க.. என் மனசு உன்னையே தேடுது.. உன் கண்ணுலையும் எனக்கான காதல் தெரியுதுடி.. அடுத்த முறை உன்னை பார்க்கும் போது.. என் லவ்வ கண்டிப்பா உன் கிட்ட சொல்லுவேன். ஆனா கல்யாணம், நா லைஃப்ல கொஞ்சம் செட்டில் ஆனதும் பண்ணிக்கலாம் சரியா..?” என்னமோ அவள் முன்னே இருப்பது போல் பேசிக்கொண்டு இருந்தவன் காதில் ஓர் அழகிய பாடல் கேட்க.. அதில் தன்னவளை கண்டவன் அந்த நொடியே அப்பாடலை தன் காலர் டியூன்னாக செட் செய்தான்.

எரியோனவன் எழிலின் நினைவில் கண்ணுறங்க.. காந்தள் மலரோ.. தன் கடமையாற்ற சென்றது….


########################################

மகி இருட்டில் தன் கையில் இருந்த மினி கேமிராவில்.. அங்கு நடப்பதை காணொலி பதிவாய் எடுத்துக்கொண்டு நிற்க.. கே. கே. மருத்தவமனையின் முதன்மை தலைவரும் சில கதர் வெட்டி அடியாட்களும் நின்று மருந்துகளை மாற்றிக்கொண்டு இருந்தனர். அதை அனைத்தையும் தன் கேமிராவில் சேமித்து வைத்துக்கொண்டிருந்தாள்.

அரசு மருத்துவமனையில் இருந்து, இங்கு வந்ததால்.. அங்கு நடந்த அனைத்தையும், தன் மினி கேமிராவில் பதிவு செய்து இருந்தான் ரிஷி.

அனைத்தையும் எடுத்துக்கொண்டு மகி அங்கிருந்து கிளம்ப.. அவள் துப்பட்டா பக்கத்தில் இருந்த இரும்பு கம்பில் சிக்கி கொண்டது. அதை உணராமல் இழுத்ததால் அது பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது.

அந்த சத்தத்தை கேட்ட அடியாட்கள், வேகமாய் அங்கு வர.. மகி தன் ஷாலை இழுத்து பிடித்துக்கொண்டு நின்றாள்.

”ஓய்! யார் நீ ..நீ.. இங்க என்ன பண்ற….?” என்க


”அது. ...அது….”. என்று திணறியவள் அவர்களை கண்டு.

”இவனுங்கு முரட்டு முட்டா பீசுங்களா தான், தெரியுரானுங்க.. சமாளிப்போம்..”

”ஆ...ஆ…..ஆ….ஆ...ஆ” என்று அழ ஆரம்பித்தாள்.

”இந்த இப்பா என்னா கேட்டோம்ன்னு, இப்படி ஓப்பாரி வைக்கிற...” என ஓர் அடியாள் கேட்க.

”என் ஃப்ரெண்ட்டுக்கு ஆக்ஸிடென்டாயிருச்சி அண்ணாத்தா.. இந்த ஹாஸ்பிட்டல்ல தான் சேர்த்து இருக்கிறதா சொன்னாங்க… அதான் தேடி வந்தேன் வழி தெரியாம இங்க வந்துட்டேன் அண்ணாத்தா…..”

”அப்படியா..?” என்று அவர்கள் சந்தேகமாய் பார்க்க.

”ஐய்யயோ..! சந்தேகமா பார்கிறானுங்களே….!”

”அப்படியோ தான் அண்ணாத்தா.. அவன தேடிக்கிட்டே இங்க வந்தேன். நம்ப அட்டகாசம் படத்துல வர தல மாதிரி நின்னீங்களா.. உங்கள பார்த்து ஜர்க்காகி (என்னடா தலக்கு வந்த சோதனை) ஓட பார்த்தேன்.. இந்த ஷால் மாட்டி... நா உங்க கிட்ட மாட்டி…” என்று மீண்டும் அழ..

அவள் தல என்று சொல்லியதில் முகம் புரிக்க நின்றவர்கள், அவள் அழுகையில் ”அட என்னமா தங்கச்சி, நீ இதுக்கு போய் அழுவுர..” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே…

”டேய் தடிமாடுங்களா.. என் மச்சான என்னடா பண்றீங்க.. வந்தன்னு வைங்க அவ்ளோ தான் டா...” என்று அங்கு வந்து நின்றான் அசோக்..

”மகிமா நா வந்துட்டேன் நீ பயப்பிடாத..” என்று அவளை மறைத்தார் போல் நிற்க

இவன் செயலை கண்டு கோபமாய் அவர்கள் முறைக்க..

”ஐய்யயோ! காரியத்தையே கெடுத்துடுவான் போலையே..” என்று நினைத்தவள்..
அசோக்கிடம் திரும்பி.

”மாப்பி வந்துட்டியா..? உன்னை தான் தேடிட்டு இருந்தேன்.

”அண்ணத்தா நா சொன்னல என் ப்ரெண்டுக்கு ஆக்ஸிடென்டாச்சினு.. அது இவனுக்கு தான், மண்டைல அடிபட்டு மென்டலாகிட்டான்..”

”என்னது மென்டலா…?” என்று கோரசாக கேட்க.. அதில் அசோக்கின் குரலும் ஒன்று,

”ஆமா அண்ணாத்தா…” என்று அழ.

அவர்களை நோக்கி ஓடிவந்தான் ரகு..

”மச்சான் இவன் இங்க தான் இருக்கானா.. டாக்டர் செக் பண்ணும் போது தள்ளிவிட்டு ஓடி வந்துடான், நீ இப்போ தான் வந்தியா வா உள்ள போலாம்..” என்று

இருவரையும் அழைத்து செல்ல.. அவ்வடியாட்கள் வந்த வழியே சென்றனர்.

அவர்கள் செல்வதை பார்த்தவள்,
ஓர் பெருமூச்சை விட்டு, திரும்பி பார்க்க.. அங்கு அசோக் அவளை முறைத்துக்கொண்டு நின்றான்.

அவள் ஜடையை பிடித்துக்கொண்டு.. ”அடியே மாரியாத்தா.. உன்னை அந்த தடியன்கள் கிட்ட இருந்து காப்பாத்த வந்த என்னை, பைத்தியம்னா சொல்லுற உன்ன..” என்று இன்னும் இன்னும் அவள் ஜடையை பிடித்து இழுக்க..

”ஆ...ஆ..ஆ.. வலிக்குது வலிக்குது விடுடா..”

”உங்கள யாருடா இங்க வர சொன்னா.. நானே அந்த முட்டா பீசுங்கள சமாளிச்சிட்டேன்..”

”நீ வந்து குழப்புனதுனாள தான், நான் அப்படி சொல்ல வேண்டியதா போச்சி..”

”ஆமா நீங்க எப்படி வந்தீங்க..?” என்க.

ரகு ”டைம் பாரு பக்கி..”

”என்ன டைம்..!” என்று பார்த்தவள், அது மணி 3 கடந்திருக்க.. இவ்ளோ நேரம் ஆகிடுச்சா…

”நா கவனிக்கள டா…”

”ம்ம் ரிஷி வேலை முடிச்சிட்டு மெசேஷ் பண்ணா..”

”உன் கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை, அதான் எப்போதும் போல gps track பண்ணி வந்துட்டோம்.”

”லவ் யூ மச்சான்ஸ்….”

என்று மூவரும் பேசிக்கொண்டே மெயின் ரோட்டில் நடந்து வர.. அவர்கள் முன் நின்றான் ரிஷி..

”மகி ஏன் இவ்ளோ லேட் நான் பயந்துட்டேன்.. என்றவன் அவளை அணைத்துக்கொள்ள..”

”ரிஷி எனக்கு ஓகே தான், அவனுங்க ஒரு டம்மிடா..” என்று அவன் முதுகை வருடிக்கொடுக்க.

”ஸ்ஸ் ஆ..” என்று அவன் முணங்கினான்

ரிஷி ”என்னாச்சி ….

ஒன்னுமில்லை மகிமா..”

அசோக் ”டேய் திரும்பு டா..” என்று அவன் முதுகை பார்க்க ஏதோ கம்பில் ஆழமாக கீறியிருந்தது.

”ஒன்னுமில்லை டா.. வெளிய வரும் போது கேட் கம்பி கீறிடுச்சி..”

”வா ஹாஸ்பிட்டல் போலாம்..” என்று மூவரும் உரைக்க..

”வேணா வீட்டுக்கு போலாம்.. அம்மா தனியா இருப்பாங்க வாங்க..” என்று கிளம்பினர்.

”ரொம்ப வலிக்குதா மச்சி..?” என்று அசோக் பாவமாய் கேட்க.

”இல்லை டா..”

”அப்போ ஐஸ் சாப்பிடலாமா..?” என்று கேட்க..

”அடேய்! உன்ன..” என்று ரகு திட்டவர..

”எனக்கும் லைட்டா பசிக்கிது என்றாள் மகி

தலையசைத்து சிரித்த ரிஷி இப்போ எதுவும் இங்க கிடைக்காதே என்க.

அதோ ஐஸ் விற்கிறாங்க இருவரும் ஒன்றாய் கை நீட்டி அந்த ஐஸ் விற்பவனிடம் செல்ல...

”இதுல மட்டும் எப்படி ஒன்னுகூடுதுங்க பாறேன்..” என்று ரிஷியும், ரகுவும் பேசிக்கொண்டே.. அங்கு தள்ளுவண்டியில் ஐஸ் விற்றுக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.

நால்வரும் ஐஸ் வாங்கி கொண்டு, அது யாரும் அதிகம் புழங்காத சாலை என்பதால்.. நடு ரோட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

”மகி உன்னுடைய வீடியோ பக்கால்ல..?” என்க.

”பக்கா மச்சான்.. இந்த ஹாஸ்பிட்டல் ச்சீப் வகையா மாட்டுனா அங்க..”

”இங்கையும் தான், ஆனா.. இங்க வெறும் கைதடிங்க தான்..”

”பரவால்ல மச்சான் பாத்துகலாம்..”

”நாளைக்கு breaking news இதுவா தான் இருக்கனும்.. எல்லாதையும் இன்னிக்கு நைட் முடிச்சிட்டு சேகர் சாருக்கு அனுப்பி, மத்த நியூஸ் சேனலுக்கும் அனுப்ப சொல்லனும், அப்போ தான் எல்லா வீத மக்களுக்கும் போய் சேரும்..”

”ம்ம்ம்.. என்று திரும்பியவள்

தன் கையில் வெறும் குச்சி மட்டும் இருப்தை கண்டு.

"அடேய் என் ஜஸ் எங்க டா?".. என்க.

"ஹான் மூச்சிவிடாமா வசனம் பேசுனா ஐஸ் அப்படியே இருக்குமா "....

"உருகி உருண்டு போய்டுச்சி…" என்று அசோக் கலாய்க்க.

"ஹானனனன் என் ஐஸ்ஸூ..". என்று சீணுங்கியவள் மூவரையும் பார்க்க.

அவள் பார்வையில் அலாட்டான மூவரும் தங்கள் ஐஸை காப்பதா ஓட…

"டேய் ஒன்டியா சாப்டா வயிறு வலிக்கும் எனக்கு கொஞ்சம் கூடுங்க டா என்று துரத்த..".

"அடியேய் வாங்கி கூடுத்ததா கரைச்சிட்டு எங்கள்தா பிடிங்க பார்கிற ஓடிடு…"...

என்று நடு ரோட்டில் சேட்டை செய்து..

ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தனர்..

வீடு வந்த நால்வரும் ஃபிரேஸ் ஆகி மாடிக்கு சென்றுவிட.

மகி ரிஷியின் காயத்திற்கு மருந்திட்டு உறங்கினாள்.

####################################


மறுநாள் காலையில் ராஜ சேகர் முன் அனைத்து ஆதாரங்களையும் வைத்து, நியூஸ் பிரின்டிங்கான சாம்ஃபளையும் வைத்து காட்ட.. அதில் யார் அதை செய்கிறார்கள்.. எப்படி மருந்துகள் மாற்றப்படுகிறது.. இதில் யார் யாரெல்லாம் உடந்தை என்பது அனைத்தும் தெளிவாய் இருக்க.. அடுத்த சில மணிபொழுதுகளில் அந்த செய்தி ஊரெங்கும் பரவியிருந்தது, தீரத்தழல் பத்திரிக்கை மட்டுமின்றி அனைத்து சேனல்களிலும் இச்செய்தியே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகியது.

மக்கள் என்னும் காட்டுத்தீயில், இச்செய்தி பற்றி எரிய.. எங்கும் போராட்டம் கிளம்ப கே. கே ஹாஸ்பிட்டல் சீல் வைக்கப்பட்டது. ஏனெனில் மருந்து கடத்தல் மட்டுமின்றி, உடல்உறுப்பு திருட்டும் அங்கு நடப்பது விசாரணையில் தெரியவர. மொத்தமாய் மூடி சீல் வைத்தனர்..

இதில் சம்மந்தபட்ட அனைவருக்கும் தக்க தண்டனை கிடைக்கும் என்று சட்டம் சொல்ல.. அது கிடைக்குமா என்பது கேள்வியே?.. இருப்பினும் மக்கள் முன் ஓர் தீயதை சுட்டிகாட்டி பெரும் தவறை நிறுத்தினர்.

அனைத்து சேனல்களும் ஒரே நேரத்தில் இதை வெளியிட்டதால்.. இதை செய்தது யார் என்று தெரியாமல்.. ஹாஸ்பிட்டல் தலைவரும், கதர் வேட்டி தலைவரும் தவித்து நின்று தண்டனை ஏற்க தயாராகினர்.

பேனா சரியாய் இருந்தால்.. சட்டம் அழித்துவிடுகிறது.
சட்டம் சரியாய் இருந்தால்.. எழுத்து மறைந்துவிடுகிறது.
இரண்டும் சரியானல் இருட்டு அகன்று, ஒளிவரும் என்பது எப்போது தெரியப்போகிறது..!


எண்ணம் போல் வாழ்க்கை.. ???

 
Status
Not open for further replies.
Top