#கோதையை_ஆளும்_அவளவனே யூடி இனி ரெகுலரா வரும்
அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஒரு டிஸர்
டீஸர்:
"ஆமாங்க, மாடியில் நேத்து நைட் பாட்டு கேட்க போனாளாம்... கீழே இறங்கும் போது விழுந்துட்டாளாம், அதனால கை அப்படி ஆகிருச்சாம். அப்படியே காய்ச்சலும் வந்துருச்சு" என்று விவரமாக கூறினார்.
பிரகாஷோ, எதுவும் பேசாமல் அவன் அறைக்குள் புகுந்துக் கொள்ள, "அம்மா, நான் வெளியே போயிட்டு வரேன்" என்று வாசலுக்குச் சென்ற விஜய்யிடம்,
"காபி குடிச்சிட்டு போகலாம் விஜய்" என்று அன்னை கூறினார்.
"இல்ல ம்மா, நான் போயிட்டு வந்துடுறேன் நீங்க கோதையை பத்திரமா பார்த்துக்கோங்க" என்று கூறி விட்டு வெளியில் சென்றான்.
"இவன் நினைச்சா கோதையை துன்புறுத்துறான், தீடிர்னு அக்கறையா பார்த்துக்க சொல்றான். இவனை புரிஞ்சுக்கவே முடியல விஜயா" என்று டைனிங் ஹாலில் ஆறுமுகம் கூற, தன்னுடைய அறையில் படுத்துக் கொண்டு இருந்த கோதைக்கும் அது காதில் விழுந்தது. அவளுடைய மனதிலும் இந்த விஷயம் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
'சில நேரம் அரக்கன் மாதிரி நடந்துக்குறான், சில நேரம் என் கிட்ட பேசாமல் அமைதியா இருக்கான். இப்போ என்னை உண்மையாகவே அக்கறையா பார்த்துக்கிட்டான்... இவனை புரிஞ்சுக்கவே முடியலையே!' என்று கோதை நினைக்கும் போதே,
'அவன் தானே என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தான் அந்த குற்ற உணர்ச்சி தான்... வேற எதுவும் இருக்காது' என்று தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டாள் கோதை.