ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்க வா பெண்ணே _ கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 33மிரட்சியுடன் தன் கையில் வைத்திருந்த அலைபேசியின் பிளேஷ் லைட்டை ஒளிர செய்தான் ஆரியன்.


தலையில் ரத்தம் வழிந்த வண்ணம் மடிந்து கிடந்தார் அந்த ஹோட்டலின் முதலாளி.


திடீரென அதனை கண்டு பயம் அடைந்தவனின் உடலில் ஒருகணம் எந்த வித அசைவும் இல்லை.


பொழுது விடிய ஆரம்பித்தது, மணி அதிகாலை நான்கு என கடிகாரம் காட்டியது. அருகில் மாடுகளின் சத்தம் ஆரவாரமாக இருந்தது. அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவன் என்ன நினைத்தானோ விறுவிறுவென வெளியே வந்தான்.


வெளியே வந்தவன் யாரையும் கவனிக்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.


அங்கு அவன் யாரையும் கவனிக்கவில்லை ஆனால் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் வெளியே சென்ற ஆரியனை கவனித்துக் கொண்டார் சற்று தூரத்தில் பால் கறந்து கொண்டிருந்த நபர் ஒருவர்.


"இது அய்யாகண்ணு பேரன் மாதிரி இருக்கே… சட்டையெல்லாம் ரத்ததோடு இந்நேரத்தில கடையில் இருந்து வெளியே வரான்?" என்றவர் ஒருவித சந்தேகத்துடன் உணவகத்தை நோக்கி வந்தார்.


உணவகம் இப்போதும் திறந்து தான் இருந்தது.


"முத்து லிங்கம்" என்று அழைத்தபடி உள்ளே வந்தான் அந்த பால் வியாபாரி. அந்த கடையின் முதலாளி பெயர் முத்து லிங்கம் தான்.


எப்போதும் நான்கு மணிக்கு முதலாவதாக வந்து கடையை திறந்து விடுவார் முத்து லிங்கம். இப்போதும் அவர் தான் கடையை திறந்து இருப்பார் என்ற எண்ணத்தில் இவர் உள்ளே வந்தார்.


ஆனால் அங்கு அவர் கண்ட காட்சியில் அதிர்ந்து போனவர்… அக்கம் பக்கத்தினரை கத்தி அழைத்தார்.


சிறிது நேரத்தில் போலீஸ் அவ்விடத்தில் கூடியது. இது எதுவும் தெரியாமல் சங்கவி வீடு நோக்கி வந்தான் ஆரியன்.


அங்கு சிதறி கிடந்த பொருள்களும் உடைந்து கிடந்த வளையல் துண்டுகளும் ஏனோ சங்கவியை தான் ஆரியனுக்கு ஞாபகப்படுத்தியது.
அங்கு என்ன நடந்திருக்கும், இதற்கும் அவளுக்கு ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? என்பதனை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பித்து பிடித்த மனநிலையில் அங்கு வந்து சேர்ந்தான்.


சட்டை முழுவதும் இருந்த ரத்தத்தை கூட அவன் கவனிக்கவில்லை! அப்படி ஒரு மனநிலையில் தன்னை மறந்து அங்கு வந்து நின்றான்.


அந்நொடி சங்கவியை அங்கிருந்து அழைத்து செல்ல காரினை எடுத்து கொண்டு வந்தான் மதிவாணன்.


மதிவாணன் காரில் அமர்ந்திருக்க... பின் இருக்கையில் தன் பாட்டியை அமரவைத்தாள் சங்கவி, அவரும் அமர்ந்த பிறகு முன் இருக்கை நோக்கி வந்த சங்கவி, எதிரில் சற்று தூரத்தில் வந்த ஆரியனை கண்டதும் அப்படியே நின்றாள்.


"வண்டியில ஏறு" என்று மதி சொல்லவும், அந்நொடி எப்போதும் போல ஆரியனின் விழிகளும் சங்கவியின் விழிகளும் மோதிக்கொண்டது.


மதியின் வாகனம் புறப்பட்டது... ஆரியன் உறைந்து போய் நின்றான். சட்டென அவனால் எந்த வித எதிர்வினையும் புரிய முடியவில்லை.


ஆரியனை கண்டதும் அவனிடம் ஓடி வந்தான் விவேக் "என்னடா இது சட்டையெல்லாம் ரத்தம்" என்று அவன் சொன்னதும் தான் ஆரியனுக்கு நினைவு வந்தது, உடனே குனிந்து தன் சட்டையை பார்த்தான் பின்னர் வெடுக்கென திரும்பி "சங்கவி" என்று அழைத்தான்.


அவன் அழைப்பு அவளின் செவிகளை அடைந்திருந்தது. மதியும் 'யார் அவன்?' என்று கண்ணாடி வழியே பார்த்தான்.


"யார் அது? வண்டியை நிறுத்தனுமா?" என்று சங்கவியிடம் கேட்டான் மதி. பின்னால் திரும்பி பார்த்தாள் சங்கவி. ஒரு நொடி மௌனம் அடுத்த கணமே "தேவையில்லை முதலில் இங்கேயிருந்து போயிடலாம்" என்று சொன்னவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கியிருந்தது. இது ஆரியன் மீது அவள் கொண்ட காதலுக்காகவா? அல்லது அவள் செய்த கொலையின் வெளிப்பாடு மனதை அழுத்தியதாலா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.


செல்லும் அவளை பின் தொடர சொல்லி ஆரியனின் மனம் உந்தியது உடனே அவனும் பின் தொடர எண்ணினான். ஆனால் அவன் நேரம் வாகணம் கூட சதி செய்தது.


வாகனத்தை அவனால் உரிய நேரத்தில் உயிர்ப்பிக்க முடியவில்லை. தடுமாறி நின்றான்.


"என்ன ஆச்சுடா? என்ன பண்ணி தொலைஞ்ச?" என்று விவேக் மீண்டும் மீண்டும் கேட்டான்.


சங்கவி இங்கிருந்து இந்நேரம் தப்பி ஓடியதை கொண்டே அவள் தான் அக்கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் ஆரியன்.


அவனது முடிவும் உண்மைதான். உணவகத்தில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த முதலாளியை கோவத்தில் பிடித்து தள்ளினாள் சங்கவி, அவரது தலையோ அங்கிருந்த கிரைண்டர் மீது மோத சரிந்து கீழே விழுந்தார்.


தலையில் பலத்த காயம்! உடலில் இருந்து வெளியேறிய அதிகமான ரத்தத்தால் அவரது உயிர் அங்கேயே பிரிந்தது.


அடுத்து என்ன செய்வது என்று ஆரியனுக்கு புரியவில்லை... விவேக்கை அழைத்து கொண்டு வீட்டில் விட்டவன் நேராக தங்கள் தோட்டத்து வீட்டிற்கு சென்றான். அங்கு தன் சட்டையை கழட்டி போட்டவன் அந்நேரத்தில் கினத்தடியில் குளித்து விட்டு கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டான்.


நடந்த நிகழ்வுகளை அன்றே அவன் தாத்தாவிடமோ அல்லது விவேக்கிடமோ கூறி இருந்தால் இப்படி ஒரு நிலை ஆரியனுக்கு வந்திருக்காது. யாரிடமும் எதையும் கூற விரும்பாதவன் தன்னக்குள் துன்பத்தை தாங்கி உறைந்து போனான்.


வீட்டுக்கு வந்த விவேக்கிற்கு நெஞ்சமெல்லாம் படபடவென்று இருந்தது.


ஆரியன் என்ன செய்து தொலைத்தானோ என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது.


இரவு வெளியே சென்ற தன் பேரன் காலை 6 மணியாகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்றதும் அவனைத் தேடி வெளியே வந்தார் அய்யாகண்ணு.


அந்நேரம் அவர்கள் வீட்டு வாசலில் போலீஸ் சீப் வந்து நின்றது.


போலீசாரை கண்டதும் என்ன? ஏது? என்று இவர் விசாரிக்க, அவர்களது முதல் கேள்வியே "ஆரியன் உங்க பேரனா? இப்ப அவன் எங்க இருக்கான்? வர சொல்லுங்க" என்பதுதான்.


திடீரென தனது பேரனை தேடி காவலர்கள் வந்திருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் அய்யாகண்ணு.


எதற்காக? ஏன்? என்று போலீசாரிடம் அவர் காரணம் கேட்க...


"கார்த்திகேயன் ஹோட்டல் முதலாளிய கொலை பண்ணிட்டாங்க, ஸ்பாட்ல உங்க பேரனை பார்த்ததா ஒருத்தர் சாட்சி சொல்லி இருக்காரு... அதை பத்தி விசாரிக்கலாம்னு தான் வந்தேன்"


"யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா? என் பேரன் அப்படிப்பட்டவன் இல்ல" ஊருக்குள் மதிக்கத்தக்க இடத்தில் இவர் இருப்பதால் போலீசாரும் சற்று மரியாதை கொடுத்து தான் பேசினார்கள்.


"அவன் எப்படிபட்டவன்னு விசாரிச்சா தானே தெரியும்" என்றார் காவலர்.


"அவன் சின்ன பையன், கொலை அது இதுன்னு பெரிய பெரிய விசயமெல்லாம் பேசுறீங்க?"


"ப்ச்" அய்யாகண்ணுவின் பிதற்றலில் சலித்துக் கொண்ட காவலர் "உள்ளே போயி தேடுங்க" என்று சக காவலர்களுக்கு உத்தரவிட்டார்.


'என்ன நடக்கிறது?' என்று புரியாமல் அய்யாகன்னு அப்படியே உடைந்துபோய் நாற்காலியில் அமர்ந்தார்.


அந்நேரம் அவர்களது தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் வந்தார் "அய்யா நம்ம ஆரி தம்பி உங்க கிட்ட ஏதோ பேசுனுமாம்... நம்ம தோட்டத்து வீட்டுல தான் இருக்காரு, உங்களை வர சொன்னாரு" என்று இடம் பொருள் அறியாமல் சகஜமாக அவர் சத்தமிட்டு கூறிவிட, அது அங்கிருந்த காவலர்களுக்கும் கேட்டு விட்டது.


தன் பேரனுக்கு இவர்களால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பரிதவித்து போனார் அந்த பெரியவர்.


காவலரோ நேராக அந்த வேலையாளிடம் வந்தார். "எங்க வந்து இடத்தை காட்டு" என்று சொல்ல... அந்த நபரோ அய்யாகண்ணுவை பார்த்தார். "அங்க என்ன பார்வை வா" என்று இழுத்து கொண்டு காவலர்கள் செல்ல, அவர்களது வாகனத்தை தொடர்ந்து அய்யாகண்ணுவின் வாகனமும் இவரது தோட்டம் நோக்கி சென்றது.


இது எதுவும் தெரியாமல் பலத்தை யோசனையில் கண்ணுக்கு குறுக்காக கையை மடக்கிக் கொண்டு கால் நீட்டி கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான் ஆரியன்.


அவனது தோரணை ஏதோ ஒருவிஷயத்தை முடிவு செய்துவிட்டு தான் இப்படி சாதாரணமாக இருக்கிறான் என்பதை அய்யாகண்ணுவிற்கு உணர்த்தியது.


காவலர்கள் நேராக உள்ளே வந்து விசாரிக்க... அவர்களை தடுத்து மறைத்தவாறு தன் பேரனை பின் நிறுத்தி முன் நின்றார் அய்யாகண்ணு.


"அய்யா விலகி நில்லுங்க" என்ற காவலர் "எதுக்கு அந்த ஹோட்டல் முதலாளியை கொன்ன" என்று ஆரியனிடம் கேட்டார்.


"நான் எதுவும் பண்ணல" என்று ஆரியன் சொல்வான் என்று அய்யாகண்ணு எதிர்பார்க்க... எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் ஆரியன்.


அவனது அந்த அமைதி அய்யாகண்ணுவிற்கு பயத்தை கொடுத்தது.


இவனது அந்த அமைதி போதுமே அவர்கள் இவனை கைது செய்ய... கைது செய்து அழைத்து சென்றனர்.


"எதுக்காக கொலை பண்ண" என்ற அவர்களது கேள்விக்கு ஆரியனிடம் பதில் இல்லை.


வெகு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான். அப்போது அவனுக்கு எதிராக இருக்கையை எடுத்து போட சொல்லி அமர்ந்தார் ஒரு காவலர், அவன் கார்த்திகேயன்.


இறந்த முதலாளி முத்துலிங்கத்தின் அண்ணன் மகன்.


தன் சித்தப்பாவின் குணநலனை ஒரு அளவுக்கு அறிந்து வைத்திருந்தான் கார்த்திகேயன்... சங்கவி காணாமல் போனது, மேலும் அவள் சார்ந்த சில பொருட்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது, அது மட்டும் அல்லாமல் ஆரியன் அவள் செல்லும் இடமெல்லாம் வெறித்து வெறித்து அவளை பார்த்து கொண்டிருந்தது இதை எல்லாம் அடிப்படையாக வைத்து இது தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை சொன்னான் கார்த்திகேயன்.


"சங்கவி யாரு?" என்று கேட்டதும் முதல் முறை அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் ஆரியன்.


"ம்ம்ம்... உனக்கும் அந்த பொண்ணுக்கும் காதல் சரி தானே?" என்று கேட்டதும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான் ஆரியன்.


"எனக்கு என் சித்தப்பா பத்தி நல்லாவே தெரியும் அப்புறம் அங்க வேலை பார்த்த ஆளுங்ககிட்டயும் விசாரிச்சேன். சோ நேத்து நயிட் அங்க ஏதோ தப்பா நடந்து இருக்கு... நீ போயி ஹீரோயிசம் காட்டியிருக்க! அடுத்து அந்த பொண்ணு இதுக்கு மேல இங்க இருந்தா போலீஸ் கேஸ் அது இதுன்னு அவள் மானம் போயிடும்னு யாருக்கும் தெரியாமல் அவளை இங்கேயிருந்து அனுப்பி வச்சு இருக்க? நான் சொல்லுறது எல்லாம் சரி தானே?" என்றவர் லத்தியை எடுத்து ஆரியனின் முகத்தை நிமிர்த்தினார்.


இவனோ அவரது கேள்விக்கு 'ஆம்' என்றும் சொல்லவில்லை 'இல்லை' என்றும் மறுக்கவில்லை.


"இப்போ அந்த பொண்ணு எங்க? அவளை எங்க மறைச்சு வச்சுயிருக்க? இப்போ நீ சொல்லலனாலும் கண்டிப்பா நாங்க அவளை தேடி கண்டு பிடிச்சிடுவோம்" என்றதும் ஆரியன் சற்று பயம் கொள்ள ஆரம்பித்தான்.


இப்போது ஆரியன் நினைத்தால் கூட இந்த வழக்கில் இருந்து சுலபமாக வெளியே வந்து விடலாம் இவன் 'இல்லை' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் இவர்களுக்கு இருக்கும் பண பலத்தை கொண்டு இந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடலாம்... ஆனால் அடுத்து என்னவாகும்? 'சங்கவியை தேடி பிடித்து விசாரிப்பார்கள் அதன் பிறகு சங்கவி இதில் மாட்டிக் கொள்வாளே' என்று எண்ணி அஞ்சினான்,
இந்த வழக்கில் சங்கவி தண்டனை அனுபவிக்க கூடாது என்று ஆரியன் விரும்பினான்.


அந்த நொடி யாரும் எடுக்கத் தயங்கும் ஒரு முடிவை துணிந்து எடுத்தான் ஆரியன் அவன் எடுத்த அந்த ஒரு முடிவு தான் இன்று அவன் அனைத்தையும் இழந்து நிற்பதற்கு ஆரம்பப் புள்ளியானது.


நிச்சயம் இந்த கொலையை சங்கவி தான் செய்திருப்பாள் என்று தீர்க்கமாக முடிவு செய்திருந்தான் ஆரியன். தான் இதில் நிரபராதி என்று நிரூபணம் ஆனால் அடுத்து இவர்களின் குறிக்கோள் சங்கவியை தேடி கண்டுபிடிப்பது தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ஆரியன் அவளைக் காப்பாற்ற எண்ணி தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டான்.


அப்போது அவனுக்கு வெறும் 19 வயது தான் எதையும் தீர யோசித்து முடிவெடுக்கும் பக்குவத்தில் அவன் அப்போது இல்லை.


அவளை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததனால் என்ன செய்கிறோம்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? என்று யோசிக்காமல் அதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இக்கொலையை நான் தான் செய்தேன் என்று தண்டனையை ஏற்க முன்வந்து வாக்குமூலம் கொடுத்தான்.


ஆரியன் சங்கவியை விரும்பியதாகவும் ஆனால் சங்கவி அவன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் முதலாளியிடம் ஆர்யனை பற்றி தெரிவித்து கண்டிக்கச் சொல்லியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் ஆரியன் அவரை பிடித்து தள்ளி விட்டதாகவும் அதில் அடிப்பட்ட வேகத்தில் ரத்தம் வெளியேறி முதலாளி இறந்ததாகவும் வழக்கு முடிக்கப்பட்டிருந்தது.


ஆரியனின் எண்ணம் சங்கவியை காப்பாற்றுவது தான் என்பதை நன்கு உணர்ந்த கார்த்திகேயன், ஆரியனது முதிர்ச்சி இல்லாத அர்த்தமற்ற செயலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்.


அந்த முதலாளியின் மீது எந்த தவறும் இல்லை என்று வழக்கு எழுதப்பட்டால் மட்டுமே சங்கவி இதிலிருந்து முழுவதுமாக வெளியே வர முடுயும் என்று ஆரியனின் மனதில் இவன் விதைத்திருக்க, அவனும் அதனை உணர்ந்து அவர்கள் போக்கிற்கே அந்த வழக்கை மாற்றியிருந்தான்.


தன் சித்தப்பாவை கொன்றவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கார்த்திகேயனுக்கு சிறிதும் இல்லை, தனது சித்தப்பா தவறானவர் என்று அவனுக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். ஆனாலும் என்ன செய்வது சொந்தத்திற்குள் ஒருவன் குற்றவாளி என்றாலும் அவன் மீது குற்றம் சாட்ட இயலாது அல்லவா? அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான் கார்த்திகேயன் தனது சித்தப்பாவிற்காக அவன் இந்த வழக்கை மாற்றவில்லை அவரை நல்லவராக காட்ட வேண்டும் என்றும் அவன் நினைக்கவில்லை... மாறாக இவரால் தன் குடும்ப கௌரவத்திற்கு எந்த வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற சுயநலத்தில் ஆரியனின் அவ்வயது அறியாமையினை பயன்படுத்தி இந்த வழக்கை மாற்றி அமைத்தான் கார்த்திகேயன்.


குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் ஆரியனுக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


ஆரியன் அமைதியாக தண்டனையை ஏற்றுக் கொள்ள முன் வந்ததால் நீலகண்டன் குடும்பத்தினராலும் இவனை வெளியே கொண்டு வர முடியவில்லை.


நாட்கள் சென்றது சிறை வாழ்க்கையை ஆரியனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.. ஒரு நாள் அமைதியாக கழிந்தது, இரண்டாவது நாள் மிக மோசமானதாக இருந்தது மூன்றாவது நாள் தன்னால் இங்கு இருக்கவே முடியாது என்ற மனநிலைக்கு வந்தான். தனிமையில் அழ ஆரம்பித்தான் அந்த சுற்றுப்புறம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உயிரோடு கொள்ள ஆரம்பித்தது.


அப்போது அங்கு அவனைப் பார்ப்பதற்காக அய்யாகண்ணுவுடன் சேர்ந்து விவேக்கும் வந்திருந்தான்.


ஐயாக்கண்ணுவினால் தன் பேரனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை கண்ணீர் வடிக்க அவனைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே வெளியேறினார்.


விவேக்கிற்கு பெரும் வருத்தம் அதைவிட இவன் மீத அதீத கோபம். இருந்தும் நிச்சயமாக ஆரியன் அப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டான் என்று விவேக் நம்பினான்.


"ஏன்டா இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ண?" என்று கேட்டான்.


இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆரியனின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வெளியேற தொடங்கியது. 'தெரியலடா அந்த நேரம் அது சரின்னு பட்டுச்சு அவளை எப்படியாவது இதிலயிருந்து காப்பாத்திடனும்னு மட்டும் தான் தோணுச்சு. ஆனா எனக்கு இங்க இருக்க பிடிக்கலடா" என்று முதல் முறை குழந்தை போல அழும் தன் நண்பனை கண்டு விவேக்கின் கண்களும் கலங்கியது ஆனால் இனி என்ன செய்ய இயலும் அதுதான் எல்லாமே முடிந்து விட்டது. இவனே சுயநினைவுடன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் இனி எப்படி இதனை மாற்றி அமைப்பது என்று புரியாமல் விவேக்கும் தடுமாறி நின்றான்.


கண்களை துடைத்துக்கொண்ட ஆரியன் "எனக்கே இந்த ஜெயில் வாழ்க்கை இவ்ளோ கஷ்டமா இருக்குன்னா, பாவம் சங்கவியால எப்படி இதை தாங்கி இருக்க முடியும்? அவளுக்காக தானே இந்த குற்றத்தை ஏத்துகிட்டேன் அது ஒரு விதத்தில் நிம்மதி தான்" இப்போதும் அவளை பற்றியே யோசிக்கும் தன் நண்பன் மீது கோவம் வந்தது.


"அப்புறம் என்னை பார்க்க அப்பாவும், அம்மாவும் ஏன் வரலை?" என்று கேட்டான்.


"இப்போதான் அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறாங்களா? கண்டவளுக்காக பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போகும் போது அவங்க உன் கண்ணுக்கு தெரியலயா?"


"நீயும் என்னை திட்டி காயப்படுத்தாதடா விவேக். அவங்க ஏன் வரலன்னு சொல்லு"


"எனக்கு சரியா தெரியலடா ஆரி, ஆனால் அங்க ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க"


"என்ன பிரச்சனை?"


"அம்மாவையும் கயல்விழியையும் காணோம், உன் அப்பாவுக்கு பக்கவாதம் வந்திடுச்சு" என்று விவேக் சொல்ல சித்த பிரம்மை பிடித்தது போல உறைந்து நின்றான் ஆரியன்.


அதற்குள் விசிட்டிங் டைம் முடிய விவேக் அங்கிருந்து சென்றான்.


சிறைக்கு வந்த ஆரியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை தன் குடும்பத்தை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.


இரண்டு நாட்களுக்குப் பிறகு அய்யாகண்ணு மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ஆரியனுக்கு தெரிய வந்தது. விவேக்கின் தந்தை மூலம் போலீசிடம் பேசி இறுதிச் சடங்கிற்காக ஆரியனை வெளியை அழைத்து வர செய்தனர்.


தாத்தாவின் உடல் தகனத்திற்கு வைக்கப்பட்டிருக்க... அங்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் நீலகண்டன்.


விலங்கு பூட்டப்பட்டிருந்த கரத்துடன் தன் தந்தையை நோக்கிச் சென்றான் ஆரியன்.. மகனிடம் எதையோ சொல்ல எண்ணி பரிதவித்து கையசைக்க முற்பட்டார் ஆனால் முடியவில்லை. இதனை எல்லாம் கண்களில் வன்மத்தோடு நீலகண்டனின் சர்க்கர நாற்காலியைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம் இந்திராவின் கணவன் யசோதாவின் தந்தை.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 34

ஆரியனின் தாத்தாவுடைய காரியம் முடிந்த அடுத்த நொடி, ஆரியன் காவலர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டான்.

தனது தந்தையிடம் ஒரு கணமேனும் பேச முடியாமல் போனதை எண்ணி நொந்தபடியே கையில் விலங்கு பூட்டப்பட்டு ஜீப்பில் சென்று கொண்டிருந்தான் ஆரியன்.

தன் தந்தையின் இந்நிலைக்கு தான் தான் காரணமோ என்று எண்ணி தவித்தவனின் மனம் அமைதியடைய மறுத்தது.

"தன் தந்தைக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? அதற்கு யார் காரணம்? தன் தாயும், தங்கையும் எங்கே சென்றனர்? ஏன் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு கூட அவர்கள் யாரும் இங்கு வரவில்லை? சித்தப்பா என்ன ஆனார்?" என்ற கேள்வியே தொடர்ந்து அவன் தலையில் ஓடிக் கொண்டிருந்தது.

மூளை கேட்கும் கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் தடுமாறியவனின் தலை சூடானது. "என்ன நடந்தது?" என்பதை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

தனது குடும்பத்தை இப்படி ஒரு நிலையில் விட்டுவிட்டு சிறை செல்ல அவன் தயாராக இல்லை.

தன் அருகில் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு வந்த காவலர்களை பார்த்தான். அதில் ஒருவரின் கையில் தான் கைவிலங்குகாண சாவி இருந்தது அவர்களை பார்த்தவண்ணமே வெளியே கவனத்தை செலுத்தியவன், தகுந்த நேரத்துக்காக காத்திருந்தான்.

ஒரு கட்டத்தில் சாலை குறைபாடு காரணமாக ஜீப் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தது, கண்களை மூடி திறந்தான். இதற்கு மேலும் பயம் கொண்டு தாமதிக்க கூடாது என எண்ணிய ஆரியன், இமைக்கும் பொழுதில் காவலர் கையில் இருந்த சாவியை பிடுங்கி விட்டு, வண்டியில் இருந்து கீழே குதித்தான்.

சுற்றி கண் பார்க்கும் திசை எங்கும் மரங்கள், காடுகளாக காட்சியளித்தது... 'எங்கு செல்கிறோம்?' என்ற கவனம் இல்லாமல் 'இங்கிருந்து தப்பித்தால் போதும்' என ஓட ஆரம்பித்தான் ஆரியன். அவனை பின் தொடர்ந்து காவலர்களும் வந்தனர்.

ஒருகட்டத்தில் அடர்ந்த காட்டு பகுதிக்குள் கண்ணிமைக்கும் நொடியில் அவர்கள் கண் தப்பி ஓடி மறைந்தான் ஆரியன்.

அதன் பிறகு அவனை பின் தொடர வழியில்லாமல், "கைதி தப்பி சென்று விட்டான்" என தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ஓய்வில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஓடி வந்தவன், உடலில் தெம்பில்லாமல் அதே இடத்தில் அப்படியே தள்ளாடி கீழே விழுந்தான். இன்னும் அவன் கையில் தான் கைவிலங்குகாண சாவி இருந்தது.

சிறிது நேரம் அவன் உடலில் அசைவேதும் இல்லாமல் போனது. கண்கள் திறக்க மறுத்தது, நாவெல்லாம் வரண்டு போய், உயிரை வெறுத்த நிலையில் சருகுகளின் மீது செயலற்று கிடந்தான்.

'எழுந்து செல், அடுத்து என்ன என்று யோசி' என்று மூளை அவனுக்கு தொடர்ந்து கட்டளை விதிக்க, ஒரு கட்டத்தில் கண்களை திறந்தவன் தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தான். அப்போது அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு எதிரில் ஒரு சிறுவன், வாயில் நுரை வடிய, குறை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

திடீரென அவ்விடத்தில் அவனை கண்டதும் துடித்து ஒரு அடி பின்னே நகர்ந்து அமர்ந்தான் ஆரியன்.

பாம்பு கடித்ததில் விஷம் பரவி கிடந்த அச்சிறுவனோ குறை கண் போட்டு மயக்கத்தில் ஆரியனை நோக்கி கரம் நீட்டினான் "என்னை காப்பாத்து...ங்க" என்று வலியில் அச்சிறுவன் கண்ணீர் வடிய கூறவும், ஒருவாறு நிதானமாகி அவன் அருகில் சென்றான் ஆரியன்.

தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்தவனுக்கு வேறு ஒருவனின் உயிரை காப்பாற்றும் கட்டாயத்தை இறைவன் வகுத்து விட்டான்.

பாம்பின் விஷம் அகற்றும் முறையான முதலுதவி பற்றி இவனுக்கும் எதுவும் தெரியவில்லை என்பதால், கண்டு கேட்டறிந்த ஞானத்தின் படி, பாம்பு கொத்திய தடத்தை கண்டறிந்து விஷத்தை முறிக்கிறேன் என வாய் வைத்து அவ்விடத்தில் உறிஞ்ச ஆரம்பித்து விட்டான்.

ஒருவழியாக காயம்பட்ட இடத்தின் வழியே வாய் வைத்து உறிஞ்சி முடிந்த அளவு ரத்தத்தை வெளியே எடுத்தான். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இவன் மயக்கமடைய ஆரம்பித்தான்.

ஆனால் சிறிது நேரத்தில் அந்த சிறுவன் கண் விழித்துக் கொண்டான்.

அரைகுறை மயக்கத்தில் கிடைந்த அச்சிறுவனுக்கு ஆரியன் செய்த முதலுதவி நினைவில் இருந்தது.
தன் உயிரை காப்பாற்ற நினைத்தவனை அப்படியே விட்டுவிட கூடாது என எண்ணிய அந்த சிறுவன், உடனே ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று கணப்பாடுபட்டு தன் உறவினர்களை அவ்விடம் அழைத்து வர சென்றான். சென்றவனும் பாதி வழிக்கு மேல் நடக்க முடியாமல் சிரமப்பட்டு நின்றான். அந்நேரம் அவனது நல்ல நேரமாக அவன் மாமா அவன் கண்ணில் பட்டார். அவரை உதவிக்கு அழைத்தவன், ஆரியனை பற்றி கூறி அவரை அவ்விடம் அழைத்து சென்றான்.

வந்தவர்கள் உடனே ஆரியணை அவர்கள் இடத்துக்கு அழைத்து சென்றனர்.

விஷத்தை முறித்து, மூர்ச்சையாகி அங்கு விழுந்தது வரை மட்டுமே ஆரியன் நினைவில் இருந்தது, அதன்பிறகு அவன் கண் விழித்து பார்க்கையில் அச்சிறுவனின் குடிசையில் இருந்தான்.

தான் இருக்கும் இடத்தை கண்டு சட்டென எழுந்து அமர்ந்தவன்... எதிரில் இருந்தவரை அதிர்ந்த முகத்துடன் பார்த்தான்.

"எழுந்துட்டிங்களா தம்பி... மலரு தம்பிக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா மா" என்று சொன்னபடி ஆரியனுக்கு எதிரில் வந்து அமர்ந்தார் மலர்கணையாளின் மாமா.

இவ்வாறு தான் மலர்கனையாளுக்கும் ஆரியனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அங்கு பாம்பு கடித்து மூர்ச்சையாக கிடந்தது வேறு யாருமல்ல மலர்கனையாளின் தம்பி தான். அந்நேரத்தில் அவன் உயிரை பற்றி கவலைகொள்ளாமல் தன் தம்பியின் உயிரை காப்பாற்றி இருக்கிறானே என்ற நன்றி எப்போதும் இவளுக்கு உண்டு... தாய், தாந்தை இறந்த பிறகு தன் தம்பி ஒருவனே தனக்கு உலகம் என்று வாழ்ந்தவளுக்கு அவன் உயிரை காப்பாற்றிய ஆரியன் கடவுளாக தெரிந்தான்.

தாய், தந்தை இல்லாத மலரையும், அவளது தம்பியையும் வளர்த்து ஆளாக்கியது அவர்களது மாமா தான்.

கையில் விலங்கோடு இருக்கும் தன்னிடம் எந்த வித நெருடலும் இல்லாமல் பேசும் இவர்களது உபசரிப்பு ஆரியனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

விலங்கு என்றதும் தான் ஞாபகம் வந்ததும் உடனே தனது கரத்தை கவனித்தான். 'இதற்கான சாவி எங்கே?' என்று தன் சட்டை பாக்கெட்டில் துலாவினான்.

"என்ன தேடுறீங்க தம்பி?" என்று மலரின் மாமா கேட்டார்.

"இல்லை ஒரு சாவி" என்றவன் 'ஒருவேளை அதனை வரும் வழியில் எங்கும் தொலைத்து விட்டோமோ' என்று யோசித்து அச்சம் கொண்டான்.

அதற்குள் "தம்பி இது உங்க கையில் இருந்தது" என்று கூறி அவனிடம் அதனை கொடுத்தார் மலரின் மாமா.

அந்த சாவியை கண்டதும் தான் ஆரியனுக்கு மூச்சே வந்தது.

உடனே அதனை பயன்படுத்தி எப்படி தன் கைவிலங்கை விடுவிக்க வேண்டும் என்று அவருக்கு சொல்லிக் கொடுத்தான். அவரும் அவன் சொன்னது போலவே செய்து கைவிலங்கை விடுவித்து விட்டார்.

அதன் பிறகு அவன் மனம் அடைத்த ஆசுவாசத்தை வார்த்தையால் கூற முடியாது.

"ரொம்ப நன்றிங்க" என்றவன் உடனே அங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் அவர் அதற்கு அனுமதிக்கவில்லை.

"இந்த நேரத்தில் இங்க இருந்து போக முடியாது தம்பி, காட்டு விலங்கு எல்லாம் நடமாடும்" இரவு நேரம் என்பதால் அப்படி சொன்னார்.

"ஆமா, என் அம்மாவும், அப்பாவும் புலி அடிச்சி தான் இறந்தாங்க, நீங்க என் தம்பி உயிரை காப்பத்தி இருக்கீங்க உங்க நல்லதுக்கு தான் சொல்லுறோம் நாளைக்கு இங்கேயிருந்து கிளம்புங்க" என்று மலர்கனையாளும் சொன்னாள்.

இப்போது அவனது உடலுக்குமே ஓய்வு தேவை பட்டது போல உடனே சரி என்று கூறினான். ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது, மனதில் பூத்த காதலுக்காக உயிர் கொடுத்த பெற்றோர்களை பற்றி யோசிக்க மறந்து விட்டோமே என்று எண்ணி எண்ணியே நொந்து போனான். அதனால் தூக்கம் தொலைந்து போனது. நடு இரவில் குடிசைக்கு வெளியே வந்து அமர்ந்து கொண்டு வானத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்தான். அப்போது அவன் தோள் மீது ஒரு கரம் வந்து விழுந்தது. திடுமென திரும்பி பார்த்தான். அவன் அருகில் வந்து அமர்ந்தார் மலர்கனையாளின் மாமா கந்தன்.

"என்ன ஆச்சுங்க தம்பி? எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க" என்று கேட்டார்.

தன் மன வேதனையை யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்குமே என்று எண்ணிய ஆரியன், தனக்கு அடைக்கலம் கொடுத்த கந்தனிடன் தன்னை பற்றி அனைத்தையும் எடுத்து கூறினான்.

அதனை கேட்டவர் "தப்பு பண்ணிடீங்க தம்பி, இப்படி தான் என் பையனும் பணத்துக்காக யாரோ ஒருத்தர் பண்ண கொலையை தான் பண்ணதா பழி ஏத்துக்கிட்டு அவங்களுக்காக ஜெயிலுக்கு போனான். அவனை ஜெயில்ல வச்சே அடிச்சி கொன்னுட்டாங்க, அவனுக்கும் உன் வயசு தான் இருக்கும், இன்னிக்கு உன்னை கை விலங்கோடு பார்க்கும் போது எனக்கு என் பையனையே பார்த்த மாதிரி இருந்தது. அதான் எதை பத்தியும் யோசிக்காமல் உன்னை காப்பாத்த முடிவு பண்ணி இங்க அழைச்சிட்டு வந்தோம்"

"நான் பண்ணது தப்பு தான், அது நான் ஜெயிலில் இருந்த போதே எனக்கு புரிய வந்திடுச்சு... அன்னைக்கு எனக்கு அது சரின்னு தோணிச்சு, ஆனால் இன்னிக்கு யோசிக்கும் போதும் கொஞ்சம் அமைதியா இருந்து இருக்கலாமேன்னு தோணுது. யாருக்காக இதெல்லாம் நான் பண்ணேனோ சொல்ல போனால் அவள் முகம் கூட இப்போ என் நினைவில் வர மாட்டிங்குது... அந்த உருவமே மொத்தமா என் மனசுல இருந்து அழிஞ்ச மாதிரி இருக்கு. என் மனதில் இருந்த அவள் உருவம் போல என் வாழ்க்கையும் இன்னிக்கு அழிஞ்சி போச்சு"

"அப்படி எல்லாம் சொல்லாத தம்பி... நடக்கிறது எல்லாமே நல்லதுக்காகவா தான் இருக்கும்" என்று அவர் ஆறுதல் கூற விரக்தியாக புன்னகைத்தான் ஆரியன்.

"சார் எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா?" என்றவன் அவரிடம் எதையோ கூறினான். அதன் பிறகு அடுத்தநாளே அவர் துணையுடன் தன் வீட்டிற்கு சென்றான்.

அங்கு சென்றால் போலீசார் கையில் தான் மாட்டிக் கொள்வோம் என்று அவனுக்கு தெரியும், இருந்தும் ஒரு நிமிடமாவது தன் தந்தையிடம் பேசவிட வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்ல முடிவெடுத்தான்.

நீலகண்டன் வீட்டு வாசலில் காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். தன் வீட்டை கந்தனுக்கு அடையாளம் காண்பித்து கொடுத்த ஆரியன் பின்பக்க காமோண்ட் தாண்டி வீட்டுக்குள் நுழைந்தான். கந்தன் காமோண்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார்.
அவரை அங்கிருந்து செல்ல சொன்னவன், தன் தந்தை அறைக்குள் செல்ல முயல, ஒரு கை அவனை அங்கிருந்து அழைத்து சென்றது.

அது மாணிக்கம் தான் "தம்பி இங்க என்ன பண்ணுறீங்க? வெளியே போலீஸ் நிக்குது முதலில் இங்கேயிருந்து கிளம்புங்க, மறுபடியும் அவங்க கிட்ட மாட்டிக்காதீங்கா" என்று சொன்னார்.

"அதை விடுங்க மாணிக்கம், நம்ம வீட்டுக்கு என்னதான் ஆச்சு? நான் ஜெயிலுக்கு போன நேரத்தில இங்க அப்படி என்ன தான் நடந்தது? அப்பாவுக்கு எப்படி இதெல்லாம் ஆச்சு? அம்மா எங்க? சித்தப்பா எங்க? என் தங்கச்சி கயல் எங்க?"

"எனக்கு எதுவும் தெரியாது தம்பி"

"மாணிக்கம் ப்ளீஸ் என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்க உண்மையை சொல்லுங்க" என்று கேட்ட ஆரியனின் கண்கள் கலங்கி போனது, அதனை கண்டு மனம் கலங்கிய மாணிக்கம்...

"என்ன நடந்ததுன்னு முழுசா எனக்கு எதுவும் தெரியாது தம்பி, கொஞ்சம் நாள் உடம்பு முடியாமல் நான் வீட்டுல இருந்தேன். குணமாகி திரும்பி வந்து பார்த்தா உன் அப்பா கைகால் விளங்காமல் இருந்தார், என்ன ஆச்சுன்னு வேலை செய்யுற எல்லார் கிட்டயும் கேட்டேன் யாரும் எந்த பதிலும் சொல்லல... எல்லாரும் யாருக்கோ பயந்து எதையோ மறைக்கிற மாதிரி தோணுது, ஆனால் என்ன ஏதுன்னு எனக்கும் ஒன்னும் புரியல... ஆனால் எனக்கு உன் அப்பாவோட தோழானா வீட்டுக்குள்ள வந்த அந்த வேதாசலம் மேல சந்தேகம் அதிகமா இருக்கு தம்பி, இதுக்கெல்லாம் அவர் தான் காரணம்னு தோனிட்டே இருக்கு. அவன் தான் என்னமோ பண்ணி இருக்கான்" என்று அவர் சொல்லி முடிக்கவும், நீலகண்டன் அறையில் இருந்து வெளியே வந்த வேதாசலம் அவர்களை பார்த்து விட்டான்.

"நீ" என்று ஆரியனை பார்த்து அவன் அதிர்ந்து "போலீஸ்" என்று கத்தி குரல் கொடுக்க... சத்தம் கேட்டு வாசலில் நின்ற காவலர்கள் ஆரியனை வளைத்து பிடித்து அங்கிருந்து அடித்து இழுத்து சென்றனர்.

செல்லும் அவனை வஞ்சம் கொண்டு பார்த்த வேதாசலம் சாவகாசமாக கால் மேல் போட்டு சோபாவில் அமர்ந்தார். அதனை கண்ட ஆரியனின் கண்கள் ரத்தமென சிவந்து போனது.

வேதாவின் பார்வையே சொல்லாமல் சொன்னது 'உன் வாழ்வில் நடக்கும் அணைத்துக்கும் நான் தான் காரணம் என்று'

ஆரியனின் 6 வருட சிறை தண்டனை, அவன் தப்பிக்க முயன்றதால் 7 வருடமாக நீடிக்க பட்டது.

அவன் சிறையில் வாடி கொண்டிருக்க, இங்கு வாடிய மலராக இருந்த சங்கவி கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் மறந்து மதியோட சிரிக்க ஆரம்பித்து இருந்தாள்.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 35

ஆரியன் சிறைக்கு சென்ற பிறகு, மாணிக்கத்தின் உதவியுடன் கந்தன் நீலகண்டனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். ஆரியன் இந்த உதவியை மணிக்கத்திடம் கேட்டிருந்தான்.

'தனக்கு உடல் நலம் சரி இல்லை தனது இடத்தில் சிறிது காலம் இவர் வீட்டின் வேலையை பார்த்துக் கொள்வார், இவர் எனது தூரத்து உறவு முறை' என்று வேதாசலத்திடம் கூறி அவனை எப்படியோ நம்பவைத்து கந்தனை வேலைக்கு சேர்த்து விட்டார் மாணிக்கம்.

மலர்கனையாள் தன் சகோதரனை பார்த்துக் கொண்டு அந்த காட்டு பகுதியிலேயே வசித்து வந்தாள். அப்போது அவளுக்கு பதினேழு வயது தான்! இருந்தும் தன் சகோதரனின் உயிரை காப்பாற்றி கொடுத்த ஆரியனுக்காக தங்களால் முடிந்த ஏதேனும் உதவியை செய்து விட வேண்டும் என்று நினைத்தனர்.

ஒருமாத காலம் மாணிக்கத்தின் இடத்தில் இருந்து கந்தன் நீலகண்டனின் வீட்டு வேலைகளை பார்த்தார்.

பெருமளவு கடினப்பட்டு ஒவ்வொரு நாளும் வேதாசலத்தை பற்றி அறிய முயற்சி மேற்கொண்டார்.

வேதாசலம், நீலகண்டனின் அருகில் ஒருவரையும் அனுமதிப்பது இல்லை... எத்தனையோ முறை அவரிடம் பேச வேண்டும் என்று கந்தன் முயற்சி செய்தார் ஆனால் அது முடியாமல் போனது.

இப்படியே நாட்கள் சென்றது... கந்தன் அங்கு வேலைக்கு செய்து வெகுநாட்கள் ஆனதால் பாதி சம்பளத்தை கொண்டு மாணிக்கத்தால் தன்னை பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. ஏனெனில் கந்தனுக்கு வரும் வருமானத்தில் ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொள்ளலாம் என்று தான் பேசி வைத்திருந்தனர் ஆனால் இப்போது அந்த பாதி சம்பளத்தை வைத்து மருந்து மாத்திரை என எதையும் முழுமையாக வாங்கிக் கொள்ள முடியாமல் மாணிக்கம் கஷ்டப்பட்டார்.

அதனால் அவ்வப்போது உடல் முடியும் நேரத்தில் இருவருமாக வேலைக்கு வந்தனர், அதனை கவனித்த வேதாச்சலம் "ரெண்டு பேருக்கு இங்க வேலை கிடையாது ஒன்னு நீ இந்த வேலையை பாரு இல்ல அவன் பார்க்கட்டும்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.

வேறு வழி இல்லாத மாணிக்கமும் இந்த மாத இறுதிவரை மட்டும் தனக்கு பதிலாக கந்தனை அங்கு வேலை செய்யச் சொன்னார். அவரது நிலமை கந்தனுக்கு நன்கு புரிந்தது, வருமானம் போதவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்? என்று புரிந்து கொண்டவர் இருக்கின்ற நாளைக்குள் எப்படியாவது நீலகண்டனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தார்.

அப்படியான ஒரு நாளில் மயக்கம் அடையக்கூடிய மூலிகையின் சாறை வேதாச்சலத்திற்கு கொடுக்கும் பாலில் யாரும் அறியாத வண்ணம் கலந்தான் கந்தன். அந்தப் பாலை குடித்துவிட்டு வேதாச்சலம் அவரது அறையில் மயங்கிப் போனார். அந்த நேரத்தை பயன்படுத்தி வீட்டில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் யார் கண்ணிலும் படாமல் நீலகண்டனின் அறைக்குள் நுழைந்தான் கந்தன்.

கை கால் அசைவின்றி மெத்தையில் கண்ணீர் வடிய தூக்கம் தொலைத்து படுத்து கொண்டிருந்தார் நீலகண்டன்.

இப்போது அவரை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக்கும் காரணகர்த்தா அவர்தான் என்பதை அவரும் நன்கு அறிவார். இருந்தும் நடக்கும் எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.

அன்று இவர் தம்பி அன்று செய்த தவறுக்காக இன்று இவரது குடும்பமே சின்னா பின்னமாக சிதறி கிடக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் என்று முன்பே இவருக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் குணாவின் தவறிற்கு தண்டனை கொடுத்து இருப்பார்.

ஆனால் காலம் கடந்த ஞானம் யாருக்கும் பயன்பட போவதில்லை.

நீலகண்டனின் அறைக்கு வந்து கதவை தாழிட்ட கந்தன் அவரிடம் பேச முயற்சித்தான்.. திடீரென இந்நேரத்தில் அவரை அங்கு கண்டதும் முதலில் நீலகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.. பின்னர் உடனே கந்தன் "உங்க பையன் ஆரியன் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார்" என்று சொல்லவும் நீலகண்டன் சற்று ஆசுவாசமானார்.

"என்ன நடந்தது யார் அவர்?" என்று வேதாச்சலத்தை குறிப்பிட்டு கந்தன் கேட்க, நீலகண்டன் எதையோ சொல்ல முயற்சி செய்தார்! ஆனால் அவரது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை? அவர் சொல்ல வருவது கந்தனுக்கும் சரியாக விளங்கவில்லை.

நான் சொல்ல வருவது இவருக்கு புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நீலகண்டன் ஒரு அலமாரியை நோக்கி தனது கரத்தை நீட்டினார்.

அவரது கரம் காட்டும் திசை பார்த்த கந்தனும் அந்த அலமாரியை திறந்து அதனுள் ஏதாவது இருக்குமா? என தேட ஆரம்பித்தார்.

அந்த அலமாரி முழுக்க துணிகளும் பைல்களும் மட்டுமே இருந்தது அவர் எதை குறிப்பிடுகிறார் என்பதை கந்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை...

கந்தனுக்கு தன் மனதில் உள்ளதை புரிய வைக்க முயற்சி செய்து தோற்றப் போன நீலகண்டனின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

அடுத்து தனது குடும்ப புகைப்படத்தை நோக்கி கரத்தினை நீட்டினார் நீலகண்டன். அதனைப் புரிந்து கந்தன் அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அவர் அருகில் செல்ல.. அதில் குணாவை குறிப்பிட்டு எதையோ சொல்ல முனைந்தார்.

ஆனால் முழுவதுமாக அவரால் சொல்லி முடிக்க முடியவில்லை. அவர் உதடு தாண்டி வார்த்தை வர மறுத்தது... தனது இயலாமையை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டார்.

நல்ல வேளையாக கந்தன் கலைத்துப் போட்ட அலமாரியிலிருந்து விழுந்த விசிட்டிங் கார்டு ஒன்று சரியாக நீலகண்டனின் கண்ணில் பட்டது.

அதனைக் கண்டதும் கண்ணீருடன் புன்னகைத்த நீலகண்டன் "ஆஆ... து" என்று குதூகலமாகி வேகமாக அந்த விசிட்டிங் கார்டை நோக்கி கரத்தை நீட்டினார்.

அவர் கைகாட்டிய இடத்தில் நிறைய பைல்களும் இருந்தது, இதுவா? இதுவா? என்று கந்தன் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு கடைசியாக அந்த விசிட்டிக்கார்டை குறிப்பிட்டு காட்டினான்.

அதனை கையில் எடுத்ததும் நீலகண்டன் "ஆமாம்" என்று வேகமாக தலையாட்ட அதனை அவரிடம் கொண்டு வந்தான் கந்தன்.

"இங்க போ... என் தம்பி" அந்த போட்டோவில் இருக்கும் குணாவின் முகத்தையும் அந்த விசிட்டிங் கார்டையும் குறிப்பிட்டு போ போ என்று அவர் சைகை செய்ய ஆரம்பத்தில் கந்தனுக்கு அது புரியவில்லை ஆனால் இந்த இடத்திற்கு இவர் தன்னை செல்ல சொல்கிறார் என்பதை மட்டும் கந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது.

உடனே அனைத்து பைல்களையும் எடுத்து அலமாரியிலேயே வைத்துவிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தியவன் அங்கிருந்து சென்றான்.

கந்தன் வேதாச்சலத்திற்கு கலந்து கொடுத்த மருந்து இயல்பான தூக்கத்தை மட்டுமே மனிதனுக்கு கொடுக்கும் அதனால் வேதாச்சலத்திற்கு பெரிய அளவுக்கு உடலில் அசதியோ அல்லது தன் நிலை எண்ணி பிறர் மீது சந்தேகமோ ஏற்படவில்லை.

அடுத்த நாளே அந்த விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த விலாசத்தை சென்றடைந்தான் கந்தன். செல்லும் முன் நீலகண்டன் குறிப்பிட்டு காட்டிய அந்த முகமுடையவர் யார் என்பதை மாணிக்கத்திடம் கேட்டறிந்து விட்டு தான் அங்கு சென்றான் "இவர் தான் நீலகண்டனின் தம்பி குணா" என்று மாணிக்கம் சொல்லியிருந்தார்.

அந்த விசிட்டிங் கார்டு இருக்கும் விலாசம் ஒரு மருத்துவமனையுடையது... அங்கு சென்று யாரிடம் எப்படி விசாரிப்பது என்று கந்தனுக்கு விளங்கவில்லை... காடு மலை என்று மட்டும் பார்த்து வளர்ந்தவனுக்கு அந்த இடம் சற்று மலைப்பாக இருந்தது.

அவனது நல்ல நேரமோ என்னவோ பிழைப்புத் தேடி, தங்களது காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் வாழ வந்த ஒரு நபரை கண்டு கொண்டான்.

அங்கு அவர் துப்புரவு பணியாளராக இருந்தார். கந்தனை அவர்தான் முதலில் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் சிறிது நேரம் தங்களது சொந்த விஷயங்களை பேசிவிட்டு இறுதியாக எனக்கு இப்படி ஒருவரை பற்றிய தகவல் தெரிய வேண்டும் என்று வந்த விஷயத்தை பற்றி அவரிடம் கூறினார் கந்தன்.

அவரோ அங்கு தனக்குத் தெரிந்த பியூன் ஒருவருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து குணாவை பற்றி விசாரித்தான்.

"அவரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இங்கதான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தாரு ஆனா ஒரு நாள் ஹாஸ்பிட்டல் உள்ள புகுந்து யாரோ அவரை கடத்திட்டாங்க, இது வெளியே தெரிஞ்சா ஹாஸ்பிட்டல் பேர் கெட்டுப் போயிடும்னு சொல்லி அவர் காணாமல் போனதாக அப்படியே அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க" இதனைக் கேட்ட கந்தனும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றார்.

அப்போது அந்த பியூனோ ஏதோ நினைவு வந்தவனாக... "அவருடைய அறையில் ஒரு டைரி கிடைச்சது. பார்க்குறதுக்கு நல்லா இருந்தது, அதனால தூக்கி போட மனசு இல்லாமல் நான் தான் அதை எடுத்து வச்சேன்"

என்று அவர் சொன்னதும் உடனே அதை எடுத்து வரச் சொன்னான் கந்தன்.

அந்த டைரி முழுக்க ஆங்கிலத்தில் ஏதேதோ எழுதி இருந்தது.

அங்கிருந்த மூவருக்கும் ஆங்கிலம் சரிவர படித்து புரிந்து கொள்ள தெரியாது என்பதால்... அதனை மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான் கந்தான்.

அவன் மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதை தூரத்தில் காரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம்.

****
 

Mythili MP

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 36

கந்தன் எப்படியும் வீட்டிற்கு தான் வந்தாக வேண்டும் என்பதை எண்ணி வேதாசலம் அவனது வரவிற்காக காத்திருந்தார்.

ஆனால் அவர் நினைத்திருந்த நேரத்தை விட நான்கு மணி நேரம் கழித்தே கந்தன் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான்.

'இவ்வளவு நேரம் இவன் எங்கு சென்றுவிட்டு வருகிறான்? அப்போதே இவனை பின் தொடர்ந்திருக்க வேண்டுமோ?' என்று எண்ணினார்.

மருந்தவமனையை விட்டு வெளியே வரும் பொழுது அவன் கையில் இருந்த டைரி இப்போது இல்லை. அதையும் கவனித்து இருந்தார். ஆனால் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.

கந்தனை அடிப்பதோ? கொல்லுவதோ? வேதாவின் எண்ணம் இல்லை.

பிறர் தன் வாழ்க்கையையும், வழியையும் மாற்றியமைக்காதவரை, இவனும் யார் வாழ்க்கையையும், வழியையும் மாற்றியமைப்பதில்லை,

தன் வேலையை முடித்து விட்டு அமைதியாக இங்கிருந்து கிளம்பி விடலாம் என்பது தான் வேதாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் தேவை இல்லாமல் தானே இந்த பிரச்சனைக்குள் வந்து மாட்டிக் கொண்டார் கந்தன்.

கந்தன் அமைதியாக வீட்டிற்குள் வரவும், சோபாபில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த வேதாசலம், அவனை அழுத்தமாக பார்த்தவாரே "போன வேலை முடிஞ்சுதா?" என்று கேட்டான்.

திடீரென செவி நுழைந்த அவனது குரலில் கந்தனுக்கு தூக்கி வாரி போட்டது.

வாசலில் மட்டும் அல்ல வீடு முழுக்க ஒரு வேலையாட்கள் கூட இல்லை. உள்ளே வரும் பொழுது வாட்ச்மேன் இல்லாததை கண்டும், கருத்தில் கொள்ளாமல் சகஜமாக உள்ளே வந்த கந்தனுக்கு இப்போது அண்டம் எல்லாம் நடுங்கியது போல தோன்றியது.

"என்னங்க ஐயா" முகத்தில் தோன்றிய பதட்டத்தை மறைத்தவாறு திரும்பினான் கந்தன்.

"என்னன்னு உனக்கு தெரியாது இல்ல, நான் எதைப் பத்தி கேட்கிறேன்னு உனக்கு புரியாது இல்ல?" என்று சூட்சமமாக கேள்வி கேட்டவர், அவன் முகத்தை ஒரு கணம் தலை உயர்த்தி பார்க்க... மிடறு விழுங்கி முழித்தான் கந்தன்.

"இல்லைய்யா நீங்க என்ன கேக்குறீங்க எனக்கு உண்மையா ஒன்னும் விளங்கலங்க" என்றவர் தன் முகத்த இயல்பாக வைக்க கடும் பாடுபட்டார்.

"அப்போ நீ சொல்ல மாட்ட, சரி நானே சொல்றேன்! அந்த ஹாஸ்பிட்டல்ல உனக்கு என்ன வேலை? இன்னைக்கு நீ எதுக்காக அங்க போன?"

"எ,எ... என்ன? நான் நான் எங்க போனேன்?" என்று அவர் இப்போது வரை சமாளிக்க பார்க்க, வேதாச்சலத்திற்கு கோபம் தலைக்கு ஏறியது உடனே தனக்கு முன்னால் இருந்த டீபாயை எட்டி உதைத்தார். அந்த சத்தத்தில் கந்தனுக்கு தூக்கி வாரி போட்டது அமைதியாக தலை குனிந்து கொண்டவன் "இல்ல எனக்கு உடம்பு சரியில்ல அதனாலதான் அங்க போனேன்" அவரது கோபத்தைக் கண்டு ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டும் என்று இப்படி ஒரு பதிலை சொன்னான்.

"இதை என்னை நம்ப சொல்றியா? ஹான்? சொல்றா? இதை நீ என்னை நம்ப சொல்றியா?" என்று கேட்டவர் கந்தனை நோக்கி வந்து நொடி பொழுதில் அவன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினார். அந்த துப்பாக்கி நீலகண்டனுடையது.

அவர் கையில் துப்பாக்கியை கண்டதும் விழி பிதுங்கி அரண்டு போய் நின்றான் கந்தன்.

"சொல்லு யார் நீ? எதுக்காக இங்க வந்த? வந்த நாளிலிருந்து நானும் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன். உன் நடவடிக்கையே சரியில்லை, எப்போ பாரு நீலகண்டனோட ரூமுக்கு போக முயற்சி பண்ணிக்கிட்டே இருக்க, எப்பவும் உன் கண்ணுல ஒரு பதட்டமும் தேடலும் இருந்துட்டேயிருக்கு சொல்லு எதுக்காக நீ இங்க வந்த? யார் சொல்லி நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? அந்த பாண்டியன் தான் உன்னை இங்க அனுப்பினானா? சொல்லுடா?" என்றவர் துப்பாக்கியை மேலும் அவன் நெற்றி பொட்டில் வைத்து அழுத்த, கந்தனோ அவர் சொன்ன பாண்டியன் என்ற நபரை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

"சொல்லுடா? அவன் தான் உன்னை இங்க அனுப்பினானா? என்ன சொல்லி அனுப்பினான் சொல்லு?" என்று அவர் மேலும் கோபம் கொள்ள "பாண்டியன் யாரு?" என்று எதிர் கேள்வி கேட்டான் கந்தன்.

"அவன் யாரா? அப்போ உன்னை இங்க அனுப்பியது யாரு?"

"ஆரியன்... நீலகண்டன் அவரோட மகன்" என்றவர் ஆரியன் தப்பித்தது தொடக்கம் தங்களை சந்தித்தது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தார்.

"உங்கள பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காகவும் அவங்க அப்பாவுக்கு பாதுகாப்பா இருக்கறதுக்காகவும் தான் என்ன இங்க வேலைக்கு சேர சொன்னான்" என்று கந்தன் சொன்னதைக் கேட்டு அந்த இல்லமே அதிரும் அளவிற்கு சத்தமிட்டு சிரித்தார் வேதாச்சலம்.

"யாரு? நீ அந்த கை,கால் விளங்காதவனுக்கு பாதுகாப்பா? எங்க அவனை உன்னால காப்பாத்த முடியுமா?" என்று கந்தனை இழிவாக நினைத்து அவர் பேச, அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தார் வேதாச்சலம். அவர் கையில் இருந்த துப்பாக்கி இப்போது கந்தன் கையில் இருந்தது.

ஒரே அடி, அந்த ஒரு அடிக்கு உதட்டோரம் ரத்தம் வழிய தரையில் விழுந்து கிடந்தார் வேதாச்சலம்.

"காட்டுலையும், மேட்டுலையும் வளர்ந்தவன் ஐயா நான், இன்னும் கூட இரண்டு அடி சேர்த்து அடிச்சிருந்தா இப்போ நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்க, அப்புறம் துப்பாக்கி ஒன்னும் எனக்கு புதுசில்ல" என்று கந்தன் சொன்னதும், கோபம் கொப்பளிக்க எழுந்து வந்து கந்தனை தாக்க முன்னேறினார் வேதாச்சலம், ஆனால் மீண்டும் அவர் கன்னத்தில் ஓங்கி இவன் அறைய பொத்தென்று சோபாவில் போய் விழுந்தார் அவர்.

"ஐயா நீங்க வயசுல பெரியவங்க, உங்கள அடிச்ச பாவம் எனக்கு வேண்டாம்னு தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தேன். இப்ப சொல்லுங்க, அப்படி என்ன உங்களுக்கு இந்த குடும்பத்து மேல அவ்வளவு வெறி?"

"வெறியா? எனக்கா? என்னுடையது வெறும் ஆதங்கம்... எனக்கு இருக்கிற வலி துரோகத்தோட வலி... அது சொன்னாலும் உனக்கு புரியாது, நான் ஒன்னும் யார் குடும்பத்தையும் பிரிக்கவோ சிதைக்கவோ இங்க வரல, எனக்கு இவனுங்க பண்ண பாவத்துக்கும் துரோகத்துக்கும் தான் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டிட்டு இருக்கானுங்க... அவனுங்க கஷ்டப்படுறதை நான் கண் குளிர பார்த்திட்டு இருக்கேன் அவ்ளோதான். நான் ஒன்னும் இவங்க யாரையும் கொல்லனும்னு நினைக்கல, சொல்லப்போனால் இவனுங்க எல்லாம் இப்போ உயிரோட இருக்கிறதே என்னால தான். அந்த உயிர் நான் இவனுங்களுக்கு போட்ட பிச்சை, உனக்கு இவனுங்கள பத்தி என்னடா தெரியும்? இவனுங்க எல்லாம் நல்லவனுங்கன்னு நினைக்கிறியா? போடா முட்டாள்... கட்டின பொண்டாட்டியவே சத்தமே இல்லாம கொன்னுட்டு அண்ணனும் தம்பியும் சேர்ந்து அது ஒரு விபத்துன்னு அவங்க சொந்தக்காரங்க கிட்ட ஆடுன நாடகம் எல்லாம் உனக்கு தெரியுமா? இல்ல நம்பி வீட்டுக்குள்ள விட்ட நண்பனோட மகளை பலாத்காரம் பண்ணி சிதைச்சு போட்டுட்டு வந்ததது உனக்கு தெரியுமா? இவனுங்களுக்காக நியாயம் கேட்டு நீ என் முன்னாடி நின்னுட்டு இருக்க?"

இந்த இரண்டு தப்பு மட்டும் இல்லை அண்ணனும், தம்பியும் சேர்ந்து கணக்கில வைக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட தப்பையும் பாவத்தையும் பண்ணி இருக்கானுங்க... அண்ணனும் தம்பியும் பண்ண பாவத்துக்கு, அவங்க குடும்பம் என்ன பண்ணும்னு நீ கேட்கலாம்? அது எனக்கு புரியுது! ஆனா இவனுங்களோட இந்த வக்கிர புத்தியால பாதிக்கப்பட்டு மகளை இழந்த இன்னொரு அப்பனுக்கு புரியாது, இதோ அங்க கிடக்கிறானே கை, கால் விளங்காமல் இந்த வீட்டோட முதலாளி நீலகண்டன் அவனோட தம்பி குணசேகரனை பற்றி உனக்கு தெரியுமா? பதினைந்து வயசை தாண்டாத மூணு சின்ன பொண்ணுங்களை பலாத்காரம் பண்ணி இருக்கான். அதுல ஒன்னு என் பொண்ணு" என்று சொன்ன வேதாச்சலத்தின் கண்களில் இருந்து சட்டென ஒரு துளி கண்ணீர் விழுந்தது.

இதனைக் கேட்டதும் துப்பாக்கியை ஏந்தி இருந்த கந்தனின் கரங்கள் தளர்ந்தது.

"தம்பி தப்பு பண்ணுவான் அண்ணன் அதை மறைப்பான். அப்ப பாதிக்கப்பட்டவனோட நிலைமை என்ன ஆகும்? அவன் குடும்பம் என்ன ஆகும்? இத பத்தி எல்லாம் இவனுங்களுக்கு எந்த கவலையும் இல்லை... பணம் இருந்தா மட்டும் போதும் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு நினைக்கிற கேவலமான ஜென்மம் இவனுங்க, இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ணி நீ இங்க வந்து நிக்கிறனா நீயும் அவனுங்களை போல கேவலமானவன் தான்...

என் குடும்பத்தில் எனக்கு ஆயிரம் பிரச்சனை, ஆனால் அப்படி இருந்தும் நான் என் மனைவி என் பொண்ணுனு வாழ்க்கை அமைதியா தான் போச்சு... ஒரு நாள் என் நண்பன் நீலகண்டனோட தம்பி குணாவை நான் சந்திச்சேன். நண்பனுடைய தம்பி தானேனு வீட்டுக்குள்ள விட்டேன். அவனும் நான் தொழில் தொடங்க பண உதவி பண்றேன்னு சொன்னான், அதை எல்லாம் நான் நம்பினேன். ஏன்னா அன்னைக்கு நான் இருந்த சூழ்நிலை அப்படி, பணம் எனக்கு அவ்ளோ முக்கியமா இருந்தது. நல்லவன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா அவன் நாகமா மாறி என் பொண்ணு மேலேயே விஷத்தைக் கக்கி விட்டான். அவனோட தப்பை மறைக்க, அவன் அண்ணன் நீலகண்டனோ, ஏதோ நானே என் பொண்ணை வேறு யாருக்கோ கூட்டி கொடுத்த மாதிரி பொய்யா என் போன்ல இருந்து மெசேஜ் அனுப்பி, என் பொண்டாட்டியை அதை நம்ப வைத்து, என் பொண்டாட்டி என்னை பிரிஞ்சு போயி என் குடும்பமே சிதைஞ்சு போச்சு... இது தான் நடந்ததுன்னு அப்ப எனக்கு தெரியாது, இவன் தான் இவ்வளவு பெரிய பாவத்தை எனக்கு பண்ணி இருக்கான்னும் எனக்கு தெரியல... என் பொண்டாட்டி, என் குழந்தையை கூட்டிட்டு எங்கேயோ போயிட்டா, அவங்களை கண்டுபிடிக்கறதுக்காகவாது உயிரோட இருக்கணுமேன்னு வேற வழி இல்லாமல் வேலை கேட்டு, உதவி கேட்டு நீலகண்டனோட வீட்டுக்கு போனேன்"

**
தன் வீட்டு வாசலில் வைத்து வேதாச்சலத்தை கண்ட நீலகண்டனின் முகம் கலவரமானது.

'எதுக்கு இவன் இங்க வந்து இருக்கான்? ஒருவேளை உண்மை ஏதாவது தெரிஞ்சு இருக்குமோ?' என்று அச்சம் கொண்டு வெளியே புன்னகைத்தபடி வேதாச்சலத்தை வரவேற்றார் நீலகண்டன்.

குணாவோ அப்போதுதான் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தான். அவனுக்கு வேதாச்சலத்தை பார்த்ததும் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது குற்றமுள்ள மனது குறுகுறுக்க ஆரம்பித்தது வேதாவின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் கடினப்பட்ட அங்கு நின்று கொண்டிருந்தான்.

அந்நொடியில் உண்மை எதுவும் அறியாத வேதாச்சலமோ தன் மகளுக்கு நடந்த அநீதியை பற்றியும் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதைப் பற்றியும் நீலகண்டனிடம் கூறி கண்ணீர் வடித்தார்.

பாவம் செய்தவனிடமே, பரிகாரம் கேட்டு நிற்கும் இழி நிலைக்கு வேதாச்சலம் தள்ளப்பட்டிருந்தார்.

எல்லாவற்றையும் பொறுமையா பேசிக்கொள்ளலாம், பார்த்துக் கொள்ளலாம் என்று வேதாச்சலத்திற்கு ஆறுதல் கூறிய நீலகண்டன் அன்று இரவே குணாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று அவனிடம் பேசினார்.

குணாவோ "வேதாச்சலத்துக்கு பணத்தை கொடுத்து இங்கிருந்து அனுப்பி வைத்து விடலாம்" என்று சொல்ல, அதற்கு நீலகண்டனோ "அவன் நம்ம கூட தான் இருக்கணும். அவ நம்ம கண் பார்வையிலே இருக்கிறது தான் நமக்கு நல்லது ஒருவேளை அவன் மனைவியை கண்டு பிடிச்சு அவங்க கூட சேர்ந்திட்டான் அப்படின்னா, ஏதோ ஒரு கட்டத்தில் உன் மேல அவனுக்கு சந்தேகம் வர வாய்ப்பிருக்கு"

"எப்படி சொல்லுறிங்க, கண்டிப்பா அவனுக்கு எதுவும் நியாபகம் இருக்காது, ஏன்னா அவன் நிதானமா இருக்கும் போதே நான் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன், சோ அவனுக்கு என் மேல சந்தேகம் வர வாய்ப்பே இல்லை"

"அப்படி சொல்ல முடியாது குணா.. இவனுக்கு நியாபகம் வராமல் கூட போகலாம். ஆனால் அவன் பொண்ணுக்கு உன் முகம் ஞாபகம் வந்துசுன்னா என்ன பண்ணுறது? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிஞ்சா நம்ம தொழில் பண்ண முடியாது, நம்ம யாரும் குடும்பத்தோட வாழவும் முடியாது, நீ இப்படி ஒரு தப்பு பண்ணி இருக்கேன்னு உன் பொண்டாட்டிக்கு தெரிய வந்தா அவ கண்டிப்பா உன்ன விட்டுட்டு போய்டுவா, நான் உனக்கு சப்போர்ட் பண்ண விஷயம் என் பொண்டாட்டிக்கு தெரிய வந்தா, அவள் கண்டிப்பா அமைதியா இருக்க மாட்டா, வக்கிலுக்கு படிச்சவ, நீதி நியாயம்னு அவங்க பக்கம் நின்னுட்டு நம்மள ஒண்ணுமே இல்லாமல் ஆக்கிடுவா... அப்புறம் நம்ம அப்பாவை பத்தி உனக்கே நல்லா தெரியும், இதையெல்லாம் தாங்கிக்கவே மாட்டாரு... இந்த உண்மை வெளியே வந்தா ஆரியன் முகத்தில் கூட நம்மால முழிக்க முடியாது, அவன் நம்மளை அசிங்கமா நினைப்பான்"

"இப்போ என்னதான் அண்ணா பண்ண சொல்ற?"

"அவன் நம்ம கூடவே இருக்கட்டும், கூடவே இருந்து தொழிலை பார்த்துக்கட்டும்... அவன் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடு நாளைக்கு உண்மை தெரிய வந்தாலும் நம்ம கொடுத்த பணம் அவனை பேச விடாம ஊமை ஆக்கிடும்.. நம்மள எதிர்த்து நிற்க அவனுக்கு திராணி இருக்காது" என்று அண்ணனும் தம்பியும் பேசி முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

நாட்கள் அப்படியே சென்றது, நீலகண்டனின் கண் பார்வையிலேயே வேதாச்சலம் இருந்தார். குணா வாரத்திற்கு ஒரு முறை சைக்காடிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட்டுக்கு செல்வான்.

ஆனால் கடந்த சில மாதங்களாக, அவன் ட்ரீட்மென்ட் எடுக்க செல்லவில்லை... மாத்திரையும் எடுத்துகொள்ளவில்லை. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்தான். அவன் அண்ணன் நீலகண்டன் வந்து 'என்னடா இது?' என்று கேட்டால் 'என்னை மன்னிச்சுடு மறுபடி அதுபோல தப்பு எதுவும் நடக்காது' என்று கூறி மண்டியிட்டு அழ ஆரம்பித்து விடுவான், உடனே அண்ணனும் மன்னித்து விட்டு செல்வான்.

இப்படியே நாட்கள் சென்றது வேதாச்சலம் நீலகண்டனின் தொழிலை நன்றாக பார்த்துக் கொண்டார், இங்கு அவர் தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தவும், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் போனது.

"எல்லாவற்றையும் உன்னை நம்பி தான் ஒப்படைக்கிறேன்" என்று நீலகண்டன் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக முழுமூச்சாக தொழிலை பார்த்துக் கொண்டார் வேதாசலம்.

இப்படியே நாட்கள் மாதங்களாக கடந்தன... அப்படியான ஒரு நாளில் குணாவின் மனைவி மீண்டும் கருத்தரித்திருந்தாள்.

இந்த சந்தோஷமான விஷயத்தை முதலில் தன் குடும்பத்திடம் சொல்லி மகிழ்ந்தவள் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள். இரண்டு நாள் ஆனது, அவளது அண்ணன் விஸ்வநாதன் கூட வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு சென்று விட்டான் ஆனால் குணா இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அப்போது நீலகண்டன் தொழில் விஷயமாக வெளியூர் சென்று இருந்தார்.

கணவன் வருவான் என்று பொறுத்து பொறுத்து பார்த்த குணாவின் மனைவி, உடனே நீலகண்டனின் எண்ணிற்கு அழைத்தாள். "அவர் எங்க மாமா? ரெண்டு நாளா போனே எடுக்கல" என்று அவள் கேட்கவும், "அவன் என்கூட இல்லம்மா, கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்னு காலையில கால் பண்ணி இருக்கும் போது சொன்னான்... என்னம்மா ஏதாவது அவசரமா?"

"ஒன்னும் இல்ல மாமா" என்று கூறி அழைப்பை துண்டித்த குணாவின் மனைவி, நேராக அவனை தேடி கெஸ்ட் ஹவுஸ்கு சென்றாள். அங்கு அவனோ முழு போதையில் நான்கு பெண்களுடன் ராசலீலை புரிந்து கொண்டிருந்தான்.

அதனை கண்டு தாலி கட்டிக்கொண்டவள் சும்மா இருப்பாளா? கொதித்து எழுந்தாள். ஆங்காரம் கொண்டு அவனிடன் நியாயம் கேட்டாள்.

நல்லவனுக்கு நியாயம், அநியாயம் புரியும்... தரம் கெட்டவனுக்கு புரியுமா என்ன?

தரம் இல்லாதவன், தரம் தப்பி வாழ்பவர்கள் முன்பு வைத்து தரம் அற்ற வார்த்தையால் தாரத்தை வசை பாடினான்.

எல்லாம் அவனுக்காக என்று கண்ணீரை மறைத்து பொறுத்து பொறுத்து வாழ்ந்து வந்தவளுக்கு அந்த வார்த்தைகளை தாங்க முடியாமல் நெஞ்சம் கனத்து போனது. அவன் கரு தாங்கிய வயிறு கலங்கி நின்றது.

குழந்தை இறந்த மூன்றாம் நாள் முடிவதற்குள் உன் வக்கிரம் போக்க முந்தி விரித்தேனடா பாவி, உன்னோட சேர்ந்து அன்று நானும் பாவியாகி போனேனே அந்த பாவத்தை என் பிள்ளை மன்னிக்குமா? அந்த காயம் மறைவதற்குள் மீண்டும் அவனுக்கு உயிர் கொடுத்து என் கருவறையில் ஏந்தி நிற்கிறேனே நாளை இப்படி ஒருவனுக்காகவா என்னை சுமந்து நின்றாய்? என்று அந்த உயிர் கேட்டால் அவன் முகம் பார்க்க, என் மூச்சு நிற்குமே? துரோகி என்று உள்ளம் வெதும்பி கண்ணீர் பெருகி, அவன் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தாள்.

அவனோ அப்போதும் தகாத வார்த்தை சொல்லி அவளை அடித்து தள்ள, அவளோ நிலைத்தடுமாறி, மாடிப் படியில் இருந்து கீழே விழுந்தாள்.

'உன்னோட வாழ்வதை காட்டிலும்... என் கரு சுமந்த உயிரோடு வீழ்வது மகிழ்ச்சி' அவள் ஜீவன் பிரிந்தது.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 37

அவன் தள்ளிவிட்ட வேகத்தில் கீழே விழுந்தவளை திரும்பிப் பார்க்கக் கூட மனமில்லாமல் அந்த நான்கு பெண்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தன் படுக்கை அறைக்குள் நுழைந்தவன் சல்லாபத்தில் திளைக்க ஆரம்பித்தான். அந்தப் பெண்களும் போதையில் இருக்க நடக்கும் எதையும் அவர்களும் கருத்தில் கொள்ள முனையவில்லை.

என்று தன் குழந்தை இறந்த மூன்றாம் நாள் இவனோடு கூடினாலோ அன்றே அவள் மறித்து விட்டாள். இது அவளுக்கு இரண்டாவது மரணம். உயிரில்லா உடலை எத்தனை தான் காயப்படுத்தினாலும் அதற்கு உணர்வு என்பது இருக்காது, அவள் அவனோடு வாழ்ந்த வாழ்க்கையும் அது போல தான்.

சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு அளவுக்கு போதை தெளிந்து இறங்கி கீழே வந்த குணா அப்போதுதான் அவளது மனைவியை கவனித்தான்.

நடந்த எதுவும் அவன் நினைவில் இல்லை உடனே உள்ளம் படபடக்க அவள் அருகில் சென்றான். தலையில் வழிந்த ரத்தம் உறைந்து போய் தரையில் கிடந்தது. உடல் குளிர்ந்து காணப்பட்டது. அதனை உணர்ந்ததும் குணாவின் கண்கள் பயத்தின் மிகுதியில் விரிந்து கொண்டன.

உடனே அவளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திய எண்ணியவன், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அச்சடலத்தின் அருகிலேயே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

வெகு நேரம் யோசித்தான், அவன் அழைத்து வந்த அந்த நான்கு பெண்களும் போதை மிகுதியில் இன்னும் அறையில் உறங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

உடனே தன் மனைவியின் சடலத்தை தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான்.

அந்த வீட்டின் பின்புறம் தென்னந்தோப்பு இருந்தது. அதனுடன் ஆழமான கிணறும் இருந்தது.

பேசாமல் இவளது உடலை கிணத்தில் தூக்கி போட்டு விடலாமா? என்று ஆரம்பத்தில் யோசித்தவன், பின்னர் வேண்டாம் குழிதோண்டி புதைத்து விடலாம் என்று முடிவு செய்தான்.

தோட்டத்தை பராமரிக்க வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியையும், கடப்பாறையையும் கொண்டு, தனது மனைவிக்கு ஆரடியில் குழி வெட்டினான்.

குழியை வெட்டி முடித்துவிட்டு தன் மனைவியை தூக்கி குழியில் படுக்க வைத்தவன் மண் கொண்டு அவளை பாதியாக மூட, முகம் மட்டும் தெரிந்தது.

அப்போது அவனுக்கு பின்னால் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. சருகுகளின் ஓசையை கொண்டே யாரோ வருகிறார்கள் என்பது உணர முடிந்தது... அந்த சத்தத்தை கேட்டதும் குணாவின் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க ஆரம்பித்தது. முகத்தில் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது. மிடரி விழுங்கி மிரட்சியுடன் மெதுவாக பின்னால் திரும்பிப் பார்த்தான்.

அங்கு வந்து கொண்டிருந்தது வேதாச்சலம். இந்நேரத்தில் அவனை அங்கு கண்டதும் 'என்ன செய்வது?' என்று புரியாமல் நடுங்கிய கரத்துடன் நின்றவன் அவன் வருவதற்குள் இவளை புதைத்து விட வேண்டும் என்று வேக வேகமாக மண்ணை எடுத்து அவளது முகத்தை மூட ஆரம்பித்தான்.

"என்ன பண்ணிட்டு இருக்க? ரெண்டு நாளா நீ வீட்டுக்கே போகலையாமே? அதான் என்ன ஏதுன்னு உன் அண்ணன் பார்த்துட்டு வர சொன்னான். மதியமே வந்து இருப்பேன் ஆனால் ஆபீஸ்ல வேலை அதிகமா இருந்ததால வர முடியல நேரம் ஆகிடுச்சு" என்று சாதரணமாக சொல்லிக் கொண்டே அவன் அருகில் சென்றவன், அந்த குழியை பார்த்ததும் "ஆமா என்ன குழி இது? எதுக்கு?" என்று கேட்டான்.

"அது... அது... அது ஒன்னுமில்ல, சரி வா உள்ளே போய் பேசலாம்" என்றபடி குணா, வேதாவை அங்கிருந்து அழைத்துச் செல்ல பார்க்க.. வேதாவின் பார்வையோ இன்னும் அந்த குழியின் மீதே இருந்தது.

"ஒரு நிமிஷம்" என்ற வேதா குணாவின் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தான். "எதுக்காக நீ ரொம்ப பதட்டமா இருக்க, முகம் எல்லாம் வியர்த்து இருக்கு, என்ன ஆச்சு உனக்கு?"

"அது வேற ஒன்னுமில்ல, காவலுக்கு இருந்த நாய் திடீரென செத்திடுச்சு, அதான் அதை புதைச்சிட்டு இருக்கேன்"

"ஓ" என்று மௌனமாக தலையசைத்த வேதா, இன்னும் அந்த குழியையே பார்த்துக் கொண்டிருக்க, "வாடா இதை அப்புறம் பார்த்துக்கலாம், நம்ம முதலில் உள்ள போகலாம்" என்ற குணசேகரன், அவனின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லப் பார்க்க, தூரத்தில் குறைத்தபடி நின்ற நாயை கண்டு நகர மறுத்த வேதா, அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை விடுவித்துக் கொண்டு அந்த குழியின் ஒரு ஓரத்தில் தெரிந்த குணாவின் மனைவியுடைய புடவையை எடுக்க முனையை, வளையல் அணிந்த அவளின் கரம் தெரிந்தது. அதனை கண்டதும் வேதாவுக்கு தூக்கி வரிபோட்டது.. அதிர்ச்சி மாறாமல் அப்படியே குணாவை திரும்பிப் பார்த்தான்.

"என்னடா இது? யார் இது?" என்று வேதா தொடர்ந்து கேள்விகளை கேட்க, கோபமான குணா ஒரு கட்டத்தில் வேதாவை பிடித்து தள்ளிவிட்டு "இது உனக்கு தேவையில்லாத விஷயம் முதல்ல நீ இங்கயிருந்து கிளம்பு" என்று அதிகாரமாக கூறினான்.

"வேணா குணா நீ எதோ தப்பு பண்ணி இருக்க, அதை மறைக்கிறதுக்காக மேலும் மேலும் தப்பு பண்ணிட்டு இருக்க"

"தப்போ? சரியோ? அது என்னோட விஷயம் அதுல உனக்கு எந்த பங்கும் கிடையாது. அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை? மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு இல்லன்னா என்னை நீ வேற மாதிரி பார்ப்ப"

"என்னடா மிரட்டுரியா?"

"இதை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி, ஆனா இப்போவே நீ இந்த இடத்தை விட்டு போகணும், இல்லன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன்" என்று இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நீலகண்டனிடமிருந்து வேதாவிற்கு அழைப்பு வந்தது.

உடனே அழைப்பை ஏற்றான் வேதாச்சலம் அழைத்தது யார் என்று தெரியாமல் குணா இவனைத் தாக்க முன்னேறவும், பக்கத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து ஓங்கி இருந்தான் வேதா.

அவனது இந்த செயலில் ஒரு அடி பின்னே நகர்ந்தான் குணா.

"சொல்லுடா நீ வீட்டுக்கு வந்துட்டியா?"

"ஆமா, இப்போதான் வந்தேன். குணாவை பார்த்துட்டு வந்துட்டியா? அவன் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருந்தானா?"

"அவன் அங்க தான் இருந்தான்"

"சரி இப்போ நீ எங்கே இருக்க?"

"வேலை அதிகமா இருந்ததால, நான் இப்போதான் கெஸ்ட் ஹவுஸ்கு வந்தேன்"

"ஓகே"

"கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு உடனே நீ இங்க கிளம்பி வரியா?"

"என்ன ஆச்சு வேதா? குணா பக்கத்துல இருக்கானா? போனை அவன் கிட்ட கொடு" என்றதும்... அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

வேதா கீழே விழுந்து கிடந்தான்.

"வேதா... குணா" என்று போனில் கத்திய நீலகண்டன்... அடுத்த நொடியே தங்கள் கெஸ்ட் ஹவுஸ்கு கிளம்பினான்.

போனில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் குணா இவனை தாக்க முன்னேறினான், உடனே அவனை தடுக்கும் பொருட்டு வேதா மண்வெட்டியை முன்னால் நீட்ட, அது குணாவின் கன்னத்தை பதம் பார்த்தது.

தன்னை அடித்த ஆத்திரத்தில், கோவம் தலைக்கேறி வேதாவை ஓங்கி மிதித்து கீழே தள்ளி இருந்தான் குணா.

"யாரு மேலடா கை வைக்கிற? நாங்க போட்ட பிச்சையில உயிர் வாழற நீ என்னையே எதிர்க்கிற அளவுக்கு ஆகிட்டியா?" என்று சினம் பொங்க கத்திய குணா பக்கத்தில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து வேதாவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான்.

"சாவுடா... உன்னை எல்லாம் அப்பவே கொன்னுருக்கணும்... என்னை கேள்வி கேக்குற அளவுக்கு ஆளாகிட்டியா நீ? அப்போவே சொன்னேன், இவனை இந்த வீட்டுக்குள்ள சேர்க்காத, நமக்கு தான் இது தேவை இல்லாத பிரச்சனைன்னு, ஆனால் என் அண்ணன் கேட்கலை...உன் பொண்ணை தொட்ட அன்னைக்கே, உங்களை எல்லாம் குடும்பத்தோட கொழுத்தி போட்டு வந்திருந்தா இன்னிக்கு எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. அப்படி நாங்க பண்ணியிருந்தா இன்னிக்கு நீ என் கண்ணு முன்னாடி நின்னு இப்படி எல்லாம் கேள்வி கேட்டுட்டு இருப்பியா? உனக்கு இந்த அளவுக்கு இடம் கொடுத்த என் அண்ணனை சொல்லனும்டா, சாவுடா எச்சை நாயே" என்று மூச்சு முட்ட அவனை அடித்து வீழ்த்தியவன் தென்னை மட்டையை தூக்கி எறிந்து விட்டு அதே இடத்தில் வெறி பிடித்தவன் போல் அமர்ந்து கொண்டிருந்தான்.

கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று கருத்தில் கொள்ளாமல் நடந்த உண்மையை எல்லாம் சொல்லாமல் சொல்லி இருந்தான் குணா.

அத்தனை அடிக்கும், வலிக்கும் மத்தியிலும் அவன் சொன்ன வார்த்தைகள் வேதாவின் மனதில் ஊடுருவி சென்று ரணத்தை கொடுத்தது.

தன் நண்பனின் சகோதரன் தான் தெரிந்தே திட்டமிட்டு தனது மகளுக்கு இத்தனை பெரிய அநீதியை இழைத்திருக்கிறான் என்பதை வேதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாள் யாரை உண்மையான நண்பன் என்று நம்பி இருந்தானோ அவனும் இவனோடு சேர்ந்து தனக்கு இத்தனை பெரிய துரோகத்தை செய்து விட்டானே, என்பதை அறிந்து கொண்ட வேதாவின் விழியோரம் கண்ணீர் வழிந்தோடியது.

துரோகமிழைத்தவனின் இடத்தில் தான் இத்தனை நாட்கள் வாழ்ந்தோமா? அவனது பணத்தில் தான் உணவு உண்டோமா? என்று நினைக்க நினைக்க வேதாச்சலத்தின் மனம் ரணமாக வலித்தது. இருந்தும் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் அடிவாங்கி கொண்டிருக்கும் தன் இயலாமையை எண்ணி கண்ணீர் வடித்தவர் அடி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த இடத்திலேயே மயக்க முற்றார்.

பத்து நிமிடத்தில் நீலகண்டன் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தார்.

குணாவின் எண்ணிற்கும் வேதாச்சலத்தின் எண்ணிற்கும் மாறி மாறி அழைத்தார் இருவரது அழைப்பும் ஏற்கப்படவில்லை.

கெஸ்ட் ஹவுஸ் முழுக்க தேடினார், படிக்கட்டின் கீழே ரத்தம் சிந்தி கிடந்தது அதனை புருவம் சுருக்கி பார்த்தவர் படியேறி மேல் அறைக்குச் சென்றார், அங்கு ஆடைகள் அலங்கோலமாக அந்த அறையில் தான் இன்னும் அந்த நாலு பெண்களும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதனைக் கண்டு முகம் சுளித்த நீலகண்டன் மற்ற அறையிலும் தேடி விட்டு மீண்டும் கீழே வந்தார்.

ஆங்காங்கே இரத்தத்துளி விழுந்து கிடக்க அதனை பின்பற்றிய படியே வீட்டின் பின்புறம் வந்தவர் தூரத்தில் குணாவை கண்டதும் வேகமாக அவனிடம் ஓடினார்.

அங்கு குணாவோ கண்களில் வெறி கூடிப்போய் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் அப்படி அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் பேச்சு மூச்சு இல்லாமல் உடல் எங்கும் இரத்த காயத்துடன் மடங்கி கிடந்தான் வேதாச்சலம். அதனைக் கண்டதும் நீலகண்டனின் உள்ளம் நடுநடுங்கி போனது...

"இப்போ என்னடா பண்ணி தொலைஞ்ச? இவனுக்கு என்ன ஆச்சு?" என்றவன் வேதாச்சலத்தை எழுப்ப முயன்றான்.. ஆனால் அவரோ எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தார். ஆனால் சுவாசம் சீராக தான் இருந்தது அதனை பார்த்த பிறகு தான் நீலகண்டனுக்கு மூச்சே வந்தது.

"என்னடா ஆச்சு சொல்லித் தொலை எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க?" என்று அவர் கேட்க கேட்க அப்படியே சிறிதும் அசைவில்லாமல் சிலை போல அமர்ந்திருந்தான் குணா, அதை கண்டு பொறுமை பறந்து போக, ஒருகட்டத்தில் அவனை ஓங்கி அறைந்திருந்தார் நீலகண்டன்.

அவர் அறைந்த வேகத்தில் நிதானத்திற்கு வந்த குணா தனக்கு எதிரே தன் அண்ணனை கண்டதும் "அண்ணா" என்று கதறியபடி கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.

"தப்பு பண்ணிட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சுடு அண்ணா, எல்லாம் என்னால தான் நான் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது. நான், சாகணும் நான் சாகணும்" என்றவன் அருகில் இருந்த கிணற்றுள் குதிக்க போக விரைந்து வந்து அவனைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்ட நீலகண்டன் அவனை அணைத்துக் கொண்டு "என்னடா ஆச்சு? ஏன் இப்படி பண்ற? எனக்கு உன்னை விட்டா வேற யாருடா இருக்கா? சொல்லு என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். உனக்கு அண்ணன் நான் இருக்கேன் டா... என் உயிரே நீதானேடா" இன்று கண்ணீர் மல்க பேசியவரை தானும் அணைத்துக் கொண்டு அழுதபடியே நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் குணசேகரன்.

"நானே என் பொண்டாட்டிய கொன்னுட்டேன் எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது... ப்ளீஸ் அண்ணா நீ என்னை மன்னிச்சிடுண்ணா... அந்த வேதாச்சலத்துக்கு வேற சந்தேகம் வந்துடுச்சு அவன் போலீஸ் கிட்ட போயோடுவானோங்குற பயத்தில தான் அடிச்சேன். நான் ஒரு கொலை பண்ணிட்டேன். அப்போ நான் ஜெயிலுக்கு போயிடுவேனா அண்ணா? ஜெயில் எல்லாம் வேண்டாம் அண்ணா நான் உன் கூடவே இருக்கணும் ப்ளீஸ் அண்ணா, என்னை விட்டுட்டு போயிடாத" இன்று குழந்தை போல தன் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த குணாவின் தலையை மெதுவாக கோதிவிட்ட நீலகண்டனின் உள்ளம் கனத்துப் போனது.

பாசம் என்ற ஒன்றிற்காக செய்யக்கூடாத அத்தனை தவறுகளையும் செய்த தன் தம்பியின் பக்கம் நிழலாக நின்று, அவனது நிஜத்தை மறைத்துக் கொண்டிருந்தார்.

அதனால் தவறே செய்யாதவள் பழியை சுமந்து மண்ணோடு மண்ணாக மக்கி போயிருந்தாள்.

 
Status
Not open for further replies.
Top