காரிகை 3
வழக்கம் போல இனியா வேலைக்கு செல்ல அன்று தான் லீலாவதியை மீண்டும் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தது இருந்தது.
இனியா " குட் மார்னிங் மேடம்" என்க
லீலாவதி " மார்னிங்" என ஒரு வார்த்தையில் முடித்து விட்டு பைலில் ஆழ்ந்து விட இனியா பிரியா அறைக்கு சென்றாள்.
அங்கு இனியா பார்த்ததோ பிரியாவின் மேல் ஒருவன் கை போட்டு பேசிக்கொண்டு இருக்க பிரியாவோ தரையை பார்த்தவாறு தலை குனிந்து நின்று இருந்தாள்.
இனியா "பிரியா" என்று அழைக்க பிரியா அந்த ஆடவனின் கையை தட்டிவிட்டு வேகமாக வந்து அவளின் பின் வந்து நின்று கொண்டாள்.
இனியா "யார் நீங்க? " என்று கேட்க
அவனோ "நீ யார்? இங்க என்ன பண்ற? பிரியா இங்க வா" என்று அழைத்தது மட்டும் அன்றி பிரியாவை அவன் புறம் அழைக்க கையை நீட்ட இனியா அந்த கையை தட்டி விட்டாள்.
அப்போது அங்கு வந்த ராணி "தம்பி அவங்கதான் பாப்பாவ பாத்துக்க வந்திருக்கும் கேர் டேக்கர்" என்று கூறி விட்டு இனியாவிடம் "இவர் பாப்பாவோட அத்தை பையன் ராஜேஷ் தம்பி" என்க
இனியாவோ சரி என்ற தலைப்பில் அசைப்புடன் நின்று விட
ராஜேஷ் அப்பொழுது தான் அவளை கவனித்து பார்த்தான்.
முழு கை வைத்த சுடிதார் அணிந்து துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி முடியை பின்னல் போட்டு இருந்தாள். காதில் சின்ன தோடு, கழுத்தில் மெல்லிய சங்கிலி மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.
பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு கதவு வரை சென்றவன் சட்டென திரும்பியவன் இனியா என்று அழைக்க இனியாவும் திரும்பி பார்க்க
ராஜேஷ் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் பார்வை அவளின் முகத்தில் இருந்த மச்சத்தில் வந்து நின்றது.
அவன் காதுக்குள் பல வருடங்களாக கேட்கும் குரல் மீண்டும் கேட்க மச்சத்தில் பார்வை பதித்தவாறு அவன் அப்படியே நின்று விட இனியா அவனை சார் என்று சத்தமாக அழைக்கவும் கனவில் இருந்து விழித்தவன் போல சாரி என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
இனியாவும் பிரியாவிடம் வந்து "யாராவது உன்னை தொட்டு பேசறது பிடிக்கலனா நீங்க என்ன டச் பண்ணி பேசறது பிடிக்கலனு சொல்லிடணும் தெரிஞ்சவங்க தானே அப்படினு அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு கூடாது தப்பு யார் பண்ணாலும் தப்பு தான் பிடிக்கலனா பிடிக்கல அப்படினு சொல்லிடணும் புரியுதா? " என்று கேட்க அவளும் சரி என்று
தலையை ஆட்டினாள்.
அதன் பிறகு நேரம் ஓடிவிட பிரியா மத்திய உணவிற்கு பின்னர் உறங்கி விட அதற்கு மேல் பிரியாவின் அறையை கொஞ்சம் சரி செய்தபின் தோட்டத்தில் சிறிது நேரம் இருந்து வரலாம் என்று கிளம்பினாள்.
அப்போது அங்கு வந்த ராணி "வாம்மா நானே உன்னை தேடி தான் வந்தேன் பெரியம்மா ரூமில் ஒரு பைல் இருக்காம் அதை எடுத்து ட்ரைவர் கிட்ட குடுத்து விட சொன்னாங்கம்மா எனக்கு அது எதுனு தெரியலை நீ வாம்மா" என்று அழைக்க சரி இதை எடுத்து கொடுத்து விட்டு போகலாம் என்று ராணி கூறிய அறைக்கு சென்றாள்.
அங்கு அவர்கள் கூறி பைல் ஒரு மேசைக்குள் இருக்க அதை எடுத்து கொடுத்து விட்டு திரும்ப அங்கு இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நிற்க ராணி யிடம் இந்த படத்தில் இருப்பவர் யார் என்று கேட்க
ராணியோ "இவங்க தான் பாப்பாவோட பெரியம்மா" என்றவர் குரலை குறைத்து இவங்க தான் ஐயாவோட முதல் மனைவி எனக்கு கூறி இனியாவை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து சென்றார்.
அங்கு இருந்து தோட்டத்தில் சென்று அமர்ந்த இனியா தன்னை மறந்து அங்கேயே ஏதோ ஒரு எண்ணத்தில் அமர்ந்து விட அப்பொழுது அங்கு வந்த ராஜேஷ் அவளை பார்த்து விட்டு அவளின் அருகே வந்து அமர்ந்தான்.
திடீரென தான் அருகில் யாரோ ஒருவர் வந்து அமரவும் தன் நினைப்பில் இருந்து வெளி வந்தவள் அமர்ந்தது யார் என பார்க்க தன்னை உரசியபடி அமர்ந்து இருந்தவனை பார்த்து சட்டென எழுந்து கொள்ள
அவனோ அவளையே பார்த்து கொண்டு இருக்க எரிச்சல் ஆன இனியா "சொல்லுங்க சார்" என்று கேட்க
ராஜேஷ் "நீங்க தான் சொல்லனும் வேலை நேரத்தில் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க மேடம்? " என்று எதிர் கேள்வி கேட்க
இனியா "பிரியா தூக்கிட்டு இருந்தாங்க அதான் கொஞ்சம் நேரம் வெளியே இருக்கலனு வந்தேன் சார்" என்கிறார்
ராஜேஷ் "என்ன இரண்டு மணி நேரமாவா? " என்று கேட்க
இனியா குழப்பத்துடன் கை கடிகாரத்தை பார்க்க மணி நான்கை தாண்டி இருக்க "சாரி சார் இனி இப்படி நடக்காம பார்த்து கொள்கிறேன்" என்று கூறி விட்டு உள்ளே செல்ல போக
ராஜேஷ் "நீங்க கிளம்பலாம் இனியா இனி நான் பார்த்துப்பேன் இனி கவனமா இருங்க" என்று கூறிவிட்டு கிளம்ப
இனியாவோ என்னாச்சு நமக்கு இப்படி இருக்க மாட்டோமே எதுக்கு அப்படி அவ்வளவு நேரம் அங்க இருந்தோம் என்று குழப்பத்துடன் செல்லும் அவளை தூரத்தில் இருந்து ராஜேஷ் பார்த்து கொண்டு இருந்தான்.