ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
24 சிவப்பழகியே...

"ஏய் சங்குமா என்னாச்சி" மூக்கை உறிஞ்சிகொண்டே, "இன்னொரு முறை சங்கு கிங்கு சொன்னிங்க சங்கை மிதிச்சிடுவேன்... ஜாக்கரதை" கண்களை துடைத்துக்கொண்டே சங்கவி சொல்ல.

"சரி தாயே சொல்லலை விடு, எதுக்கிந்த அழுகை"

"நான் சரியான முட்டாள் உங்க காதலையும் புரிஞ்சிக்கலை அத்தையையும் புரிஞ்சிக்கலை... அதான் இப்ப புரிஞ்சிக்கிட்டையே செல்லம்"

"எங்க புரிஞ்சிக்கிட்டேன்... ரத்தக்காட்டேரி போல உங்க உயிரை தான் வார்த்தையால் உறிஞ்சி.. அக்கா கூட எல்லாம் சேர்த்து வைத்து பேசி... உங்களுக்கு வலிச்சி இருக்குமில்ல" எட்டி வேந்தனின் கன்னத்தை வருடிவிட.

"இங்க வலிக்கலை இங்க தான் வலிச்சது" சங்கவி கரங்களை பிடித்து வேந்தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தி பிடிக்க.

"சாரி..." ஏங்கோ பார்த்து சங்கவி சொல்ல அவளது பார்வையை தன் புறம் திருப்ப அவளது கையை செல்லமாக கிள்ள, "இஷ்ஷ்..." அவனது ஊடுருவும் பார்வையை பார்த்து பெண்ணவளுக்கு வேர்க்கத் துவங்கியது.

"ஓய் எதுக்கு வேர்க்குது உனக்கு?"

"தெரியலையே..."

"என் ராங்கி பொண்டாட்டிக்கு என்னாச்சி, இப்படி பயந்தாங்கோலியா இருக்கா"

"நானா... நானா பயந்தாங்கோலி" அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன், "இனி அழுதா இப்படி கடிச்சி வச்சிடுவேன்" அவளது கன்னத்தை அழுத்தி கடித்திருந்தான் வேந்தன். "சரியான பைத்தியம் எதுக்கு கடிச்ச?" அவனது தலைமுடியை பிடித்து இழுத்து ஒரு வழி செய்திருந்தாள்.

"ஏய் சண்டையை நாளைக்கு துவங்கிக்கலாம், இப்ப வா லவ் பண்ணலாம்"

"உன் பார்வையே சரியில்லை விடு நான் போறேன்" சங்கவி ஓட பார்க்க குண்டுக்கட்டாக தூக்கி வந்தவன் மெத்தையில் தன்னோடு சரித்துக்கொண்டு, "இனி எட்டு மணிக்குமேல ஒன்லி காதல் பாடம் தான் புரியுதா?" அதன் பிறகு வேந்தன் பேசவிட்டால் தானே... இருவரும் மாறிமாறி தக்களது காதலை வெளிபடுத்தத் துவங்தி இருந்தார்கள். இங்கு ஒரு ஜோடி ஹனிமூன் கொண்டாடிக்கொண்டிருக்க,

மலர் கொடி நிலையோ பரிதாபமோ பரிதாபம், கணவன் வேலைக்கு சென்றதும் அவன் தாயை வைத்து செய்ய நினைத்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவனது உயர் அதிகாரியிடம் சண்டையிட்டு வொர்க் பிரம் ஹோம் வாங்கியவன் குழந்தையை மலர் கொடி கையில் கொடுக்கவே இல்லை, அனைத்து வீட்டு வேலைகளும் கொடுத்து தியாகு அவளை ஒரு வழி செய்திருந்தான்.

அவளுக்கு தியாகு விட்டால் போதும் என்றானது... ஒரு வாரத்தில் ரொம்பவே வெயிட் குறைந்திருந்தாள். மாமியாருக்கே பாவமாக இருக்க மகனிடம் சென்று, "தியாகு இதென்ன? எல்லாம் தப்பு பாவமா இருக்கு அந்த பெண்ணை பார்த்தா"

"அம்மா... அவ ஆடுன ஆட்டம் உங்களுக்கு தெரியலை இனியும் இவளை அப்படியே விட்டா என் மக வாழ்க்கையை கேள்வி குறியா ஆக்கிடுவா, நீங்க அமைதியா இருங்க" தாயை அடக்கியிருந்தான்.

தியாகு அவளை திருத்த செய்த ஒவ்வொரு காரியமும் மலர்கொடியை இன்னும் வஞ்சம் மிகுந்தவளாக மாற்றி இருந்தது. அவளது அனைத்து கோபமும் குழலி மீதுதான் சென்றது. அவளை பழிவாங்க காத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். தியாகுவும் அவளை யோசிக்கவிடாமல் நாள் முழுவதும் எதாவது வேலைக்கு ஏவிக்கொண்டே இருப்பான்... செய்த வேலைக்கு ஆயிரம் குறை சொல்லுவான். அவளுக்கு பிடிக்காத உணவு வகையை தேர்ந்தெடுத்து சமைக்க சொல்வான்... அதை நிறைய சாப்பிடவும் வைப்பான். குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும்போது மட்டுமே கொடியிடம் கொடுக்கப்பட்டது. மற்ற நேரத்தில் தியாகு அம்மா பேத்தியை நன்றாக ஊர் சுற்றி காட்டுவார் சிறுமியாக மாறி குழந்தையிடம் விளையாடுவார் மாலை நேரத்தில் தாய் மகன் பேத்தி மூவரும் வெளியே செல்வது, முற்றத்தில் அமர்ந்து சிரித்து பேசுவது... கொடிக்கு பத்திக்கொண்டு வரும்.

இப்படியே நாட்கள் நகர, தியாகு வேலை செய்ய சொல்லும்போது மட்டுமே பேசுவான், மற்ற நேரங்களில் பேசவே மாட்டான், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தான்.

அவனது பாராமுகம் அவளை வதைத்தது என்று தான் சொல்லவேண்டும். இரவு குளித்துவிட்டு வந்தவன் அருகில் வந்து நின்ற கொடியை விசித்திரமாக பார்க்க, "சாரி"

"ஓ... மகாராணிக்கு சாரி எல்லாம் கேட்க தெரியுமா?"

"இனி அப்படி செய்ய மாட்டேன், உங்க அம்மாவை நல்லா பாத்துக்கிறேன்"

"ஓ... இதை நம்ப சொல்லுறியா என்ன"

"என்னை நம்பலையா நீங்க?"

"இல்ல இந்த ஜென்மத்தில் நம்ப மாட்டேன்" தியாகு இரவு உடை அணிந்துகொண்டு மகளுடன் மெத்தைக்கு நடுவில் படுக்க. கொடிக்கான இடம் அங்கில்லை நாள் முழுவதும் வேலை செய்ததில் அவளுக்கு கலைப்பு வேறு தரையில் தலைக்கு கை வைத்து படுத்துக்கொண்டாள், கண்களில் இருந்து ஆறாக ஓடியது அவளது கண்ணீர்... இந்த நிலையில் கூட குழலியை எதாவது செய்யனும் என்று மனதில் செல்லிக்கொண்டே இருப்பாள். இவள் இந்த ஜென்மத்தில் திருந்தப் போவதில்லை

***

குழலிக்காக காத்துக்கொண்டிருந்தவன் பொறுமை இழந்து சந்திரா வீட்டை நோக்கி போனான்.

"மா..."

"விக்கி வாபா" சந்தியா பாசத்தோடு அழைக்க, தாய் மகன் தங்கை பேசத் துவங்க, ஓரமாக அமர்ந்திருந்த குழலி அப்படியே படுத்து தூங்கத் துவங்கி இருந்தாள்.

"மா பெட்சீட் கொடுங்க குழலி தூங்கிட்டா போல"

"குழலி எந்திரி வீட்டுக்கு போய் தூங்கு"

"இங்கவே இருக்கட்டும் மா இதும் அவ வீடு தானே... உங்க கிட்ட ஒன்னு சொல்ல தான் வந்தேன்"

"அப்படியா அண்ணா நான் கூட அண்ணியை தேடி வந்துட்டிங்கன்னு நினைச்சேன்" அரசி அண்ணனை கலாய்க்க அவனும் சலிக்காமல் " அப்படியும் வச்சிக்கலாம்"

"சரி சரி... "

"என்ன வெளியே வண்டி சத்தம் கேட்குது...

"அது தான்மா சொல்ல வந்தேன்... வீடு கட்ட நாளைக்கு துவங்குறோம்"

சந்திரா தயக்கமாக பார்க்க, அவர் கையை அழுத்தி பிடித்த விக்கி, "இல்ல மா கவலை படாதீங்க, என்னோட சேவீங்க்ஸ் வச்சிதான் கட்டப்போறேன்" சந்திரா முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்த விக்கி, அவரது கன்னம் கிள்ளி சமாதானம் செய்யத் தூங்கும் குழலியை பார்த்துவிட்டு சென்றிருந்தான் அடுத்த நாள் வீட்டு வேலை துவங்க ஒருவாரம் விக்கி பிசியாகவே செல்ல குழலியை பார்வையால் மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. பேச முயற்சி செய்தாலும் முடியவில்லை. பவளமும் குழலியும் ராசியாகி போக... இடையில் ரங்கன் பவளத்தை சமாதானப் படுத்த படாத பாடுபட்டார். அவர் பொய் சொன்னது பவளத்தால் ஏற்க முடியவில்லை, கூடவே மகனுக்காகவும் அழுது தீர்த்தார். நிறைய நேரம் அழுது முடித்தவர், பவளமும் ரங்கனை புரிந்துகொண்டார், ஒரு வழியாக சமாதானம் ஆகினார்கள்.

***
விக்கி தயங்கி தயங்கி வந்தவன்,

"சாரி குழலி தெரியாம"

"அத விடுங்க அத்தை... இன்னைக்கு என்ன சமைக்க" குழலி பவளமிடம் இயல்பாக பேச இருவரும் ராசியாகி போனார்கள்.

பவளம் சந்திராவிடம் தங்கிக்கொள்ள என சொன்னதுக்கு பவளமும் சரி விக்கியும் சரி அதனை ஏற்க மறுத்திருந்தார்கள், "நாள் முழுக்க என் பையன் கூட தானே இருக்கேன். எப்பவும் போல இருக்கலாம்" இரண்டு குடும்பமும் சந்தோஷமாக வலம் வர குழலி தான் ஒட்டும் ஒட்டாமல் சுத்திக்கொண்டிருந்தாள் வழக்கம் போல காலை எழுந்து களை பறிக்க தண்ணீ பாச்ச என வேலை செய்துகொண்டிருப்பாள். விக்கி எவ்வளவோ சொல்லி பார்த்துட்டான் அவள் காது கொடுத்து கேட்காமல் வேலை செய்துகொண்டு இருப்பாள். சமைக்க மட்டும் வீட்டுக்கு வருபவள் தூங்கும் நேரம் கூட சந்திரா வீட்டில் தான் விக்கி பேச அவள் ஒரு வாய்ப்பு கூட அளிக்கவில்லை.

விக்கி தவித்தான் வருந்தினான் அடுத்து என்ன செய்ய வீட்டு வேலை ஒருபக்கம் வேகமாக நடந்துகொண்டிருந்தது இரு குடும்பமும் கோவில் புறப்படுவது பத்தி பேசிக்கொண்டிருக்க, குழலி விக்கியை வீட்டை பார்த்துக்க சொல்லி விட்டுச் சென்றார்கள்.

சொந்தக்கார பையனை வர வைத்த விக்கி, வீட்டு வேலை பார்க்க சொல்லிவிட்டு வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கும் குழலியை தேடி போனான்.

"ஏய் அழகி...." அவனது குரல் கேட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே போக இருந்தவளை இழுத்து பிடித்து.

"ப்ளீஸ் தப்பு தான் இனி இப்படி செய்ய மாட்டேன் டா" அவளது சிவந்திருந்த முகத்தை பார்த்தவன்... என் வெட்க சிவப்பழகி" என சொல்லம் கொஞ்சினான்.

அவனது கையை தட்டிவிட்டவள் வழக்கமான வேலை பார்க்க சென்றிருந்தாள்...

அவனுக்கு இது பெரிய விஷயம் தான் ஆனால் சும்மா இருந்தவள் மனதில் காதல் ஆசையை விதைத்து அவன் சென்றது தவறு தானே? எப்படி அப்படி விட்டு செல்ல முடிந்தது இவனை நம்பி எப்படி வாழ்வது என யோசித்தாள். இவனை நம்பி வந்தாள் தான் இல்லை என மறுக்க முடியாது, ஆனால் குழலிக்கு அவனில்லாமலும் வாழ முடியாது அவனுடனும் வாழ முடியாத இரு மனநிலை குழப்பமாக நகர்ந்தது இரவு சந்திரா வீட்டில் தூங்க சென்றிருக்க.

விக்கியும் பின் தொடர்ந்து கதவை தட்ட, ரொம்ப நேரம் தட்டியும் கதவு திறந்தபாடில்லை.

"சும்மா தூங்க கூட விடாம என்னவாம் இப்ப இவருக்கு" திரும்பி படுத்துக்கொண்டாள்.

"குழலி ப்ளீஸ் மா மிஸ்சிங் யூ பேட்லி, வான்ட் டு ஹக் யூ ப்ளீஸ் குழலி சாரி எனக்கு மன்னிப்பே இல்லையா?" கதவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, "குழலி... ஐ லவ் யூ, உன்னை ரொம்ப மிஸ் செஞ்சேன்... சரியா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சி தெரியுமா. நீ வந்த அப்புறம் தான் எனக்கு நிம்மதியான தூக்கமே வந்தது"

"நடிப்பு நடிப்பு, பிரண்ட் கல்யாணத்தப்போ பார்க்கனுமே மூஞ்சில எவ்வளவு சிரிப்பு கலர் கூடி ஆள் மாறி வேற லெவல்ல இருந்துட்டு தூக்கம் வரலை அது வரலைன்னு இங்க வந்து பாவலா காட்ட வேண்டியது" குழலி முணுமுணுக்க.

"குழலி அது வந்து என்னை அப்படி பார்த்தா கோபத்தில் என்னை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சிப்பன்னு தான் சொன்னேன்" அவன் தன் விளக்கம் கொடுக்க,

"பெரிய தாராள பிரபு கல்யாணம் கட்டிக்க முடியாதவனுக்கு என்ன டேஸ்க்கு லவ் சொல்லி மனசை கெடுக்கனும்"

"புரிஞ்சிக்கோ டா டார்லிங் என் அழகி..." அவளுக்கும் புரிய தான் செய்தது ஆனால் கோபம் இருந்தது அவன் மீது.

"குழலி ப்ளீஸ் ரொம்ப குளிருது... காத்து ஹெவியா வருது... இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வேற வரப் போகுது குழலி. எனக்கு மழை சேராது உனக்கு தெரியுமில்ல, கோல்ட் வந்தா ஹாஸ்பிட்டல்ல தான் ஒரு வாரம் குடி இருக்கனும்" குழலி ஜன்னல் வழியே பார்க்க மழை தூரல் தூவத் துவங்கியது.

"இங்க எதுக்கு இருக்க உன் வீட்டுக்கு போ"

"என் வீட்டுக்கு தான் வந்து இருக்கேன்... கதவை திற குழலி" குளிரில் அவனது குரல் குழைவாக வர.

"இப்ப மட்டும் நீ வரலை நான் மழையில் நனையப் போறேன்" என ஜன்னல் நேராக வந்து நின்றவன், "என் பொண்டாட்டிக்கு என் மேல பாசமே இல்லை, திமிரெடுத்தவ.. இந்த அநியாத்தை கேட்க ஆளில்லையா" என அடிக்கும் புயல் மழையில் கத்திக்கொண்டிருக்க.

"இவனை வச்சிட்டு..." குழலி கதவை திறக்க வேகமாக ஓடிவந்து அவளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றிருந்தான்.

"சரியான பிராடு" குழலி மெத்தையில் படுத்துக்கொள்ள, அலமாரியில் இருந்த வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டவன் துண்டை எடுத்து தலையை துவட்டிக்கொண்டே மெத்தையில் உட்கார்ந்தான்.

"கீழ படுத்துக்கோ" விரைப்பாக குழலியிடமிருந்து பதில் வர.

"குழலி என்ன செஞ்சா கோபம் போகும் சொல்லு"

"என் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்யாதே" குழலி தூங்க துவங்கிவிட, அவளை தொந்தரவு தராமல் விக்கி ஒரு ஓரமாக படுத்துக்கொண்டான்.
காலையில் குழலி எழுந்திரிக்கும் முன் சாணி போட்டு அலங்கோலமாக கோலத்தை போட்டவன் சமையல் முடித்து கையில் பாலோடு வந்து எழுபினான்.

"அத்தை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே"

"ஏய் இப்படி தான் என் அம்மாவை ஏமாத்திட்டு இருக்க எழுந்திடு பல் விளக்கிட்டு வா பால் குடிச்சிட்டு சாப்பிடலாம்" குழலி பிரஸ் எடுத்துக்கொண்டு வெளியே போக, அவளுக்கு மூஞ்சி கழுவ தண்ணி எடுத்து கொடுப்பது அதனை தட்டிவிட்டு வாலியில் மூஞ்சி கழுவ.

அவள் முகம் கழுவி முடித்ததும் துண்டு கொடுப்பது, "சும்மா டிஸ்டர்ப் செய்யாத போ"

"சரி சரி பால் குடி"

"ம்க்கும்..." வேண்டா வெறுப்பாக பாலை எடுத்து குடித்தவளை குடிக்க விடாமல், "பால் நல்லா டேஸ்டா இருக்கா சுக்கு பாதாம் போட்டு இருக்கேன்"

"ச்சை..." பாதி பாலை அப்படியே வைத்துவிட்டாள்.

"தேக் யூ என்மேல எவ்வளவு பாசம் எனக்காக பால் மிச்சம் வச்சி இருக்க" எடுத்து குடித்தவன் சப்புக்கொட்டி குடித்தான், "ப்பா என்னா டேஸ்ட்டு" அப்படியே சாப்பிட துவங்க அதை வச்சிக்கோ இதை வச்சிக்கோ என அவளை ஒரு வழி படுத்தி இருந்தான்.

குளிக்க அந்த வீட்டுக்கு குழலி போக நூல் பிடித்தவாறு விக்கி பின் தொடர்ந்தான்.

"குழலி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி குளி இப்ப தானே சாப்பிட்ட"

"உன்னோட என்ன ரோதனையா போச்சி மெத்தையில் துணியை தூக்கி அடித்தவள் வெளியே கோபமாக வர,

"குழலி ப்ளீஸ் உன்னை எப்படி சமாதானப் படுத்த தெரியலை... என்ன செய்யனும் சொல்லு... செய்யுறேன்"

"என்னை தொல்லை செய்யாம செத்து போ..." குழலி கத்த வழியில் ஒரு ஆக்சிடன்ட் கோவிலுக்கு போனவர்கள் பாதியில் திரும்பி வந்துவிட்டனர் அனைவரும் குழலியை அதிர்ச்சியாக பார்க்க.

"சரி நான் செத்துப்போறேன்" விக்கி வேகமாக ஓடி அருகில் இருந்த கிணத்தில் தாவி குதித்திருந்தான்.

"விக்கி...." கிணற்றை நோக்கி வேகமாக ஓடிச் சென்று கத்தத் துவங்கி இருந்தாள்.

"எனக்கு கோபம் எல்லாம் இல்ல விக்கி வா..." என உட்கார்ந்து கிணற்றை பார்த்து கதறிக்கொண்டிருந்தாள். குழலி உயிர் பிரிந்தது போல உணர்ந்தாள்.
 

T22

Well-known member
Wonderland writer
25 சிவப்பழகியே

கலைப்பாக வந்தவர்கள் குழலி கதறுவது கஷ்டமாக இருந்தாலும் அவளுள் மறைந்திருந்த காதல் வெளிவந்ததை நினைத்து மகிழ்ச்சியே, அரசிக்குதான் குழலி அழுவது பாவமாக இருந்தது,

"அண்ணி அழாதிங்க அண்ணாக்கு நீச்சல்... தெரியும்" அவள் சொல்ல வருவது முடிக்கும் முன் சந்திரா அவளது வாயை அடைத்திருந்தார்.

"அவங்களே சரி ஆகட்டும் விடு... நீ கெடுத்துடாத" குழலி வாசலில் நின்றவர்களை எல்லாம் பார்க்கவில்லை யாரிடம் உதவி கேட்பது என அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை... உயிர் துடித்தது, அழுதாள் கதறினாள்...

"குழலி..." அவள் பின் இருந்து வந்த குரலை கேட்ட பின்பு தான் சென்ற உயிர் திரும்ப வந்தது.

"அவ்வளவு சீக்கரம் உன்னை விட்டு போகமாட்டேன் டி" தாவி அவனை அணைத்து கதறி அழுதவள் அவனது கை உடலில் எதாவது அடி பட்டு இருக்கா என சோதித்தாள், "குழலி எனக்கு நீச்சல் தெரியும் டி, எதும் அடி இல்லை"

அவனை ஆக்ரோஷமாக பார்த்தவள் சகட்டு மேனிக்கு அடித்துக்கொண்டிருந்தாள், "விக்கிக்கு வலிக்குது"

"வலிக்கட்டும்டா, எனக்கு எவ்வளவு வலிச்சி இருக்கும், தனியா விட்டுபோயிட்டு இரண்டு வருஷம் கழிச்சி பார்த்தா புது மாப்பிள்ளை போல இருந்ததை பார்த்த அப்ப செத்துட்டேன்டா நா... நா சாப்பிடாம கொள்ளாம ஒல்லியா ஆகி கன்னம் எல்லாம் ஒட்டி... இன்னும் கருப்பாகி பார்க்கவே அசிங்கமா ஆகிட்டேன், எல்லாம் உன்மேல இருந்த காதலால், ஆனா உன்ன அப்படி பார்த்ததும்... நா... நான் செத்துட்டேன் டா" அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு அவன் காலடியில் உட்கார்ந்து கதற துவங்கினாள்.

"தப்புதா... தப்புதா... நீ அழுக கூடாது நீ எந்த தப்பும் செய்யலை நான் தான் சுயநலமா ஆகிட்டேன்... ப்ளீஸ் குழலி அழுவாதடி" அவளை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அவளது அழுகை நின்ற பாடில்லை... எவ்வளவோ சமாதானப் படுத்தியும் இத்தனை வருடம் தேக்கி வைத்திருந்த அனைத்து கண்ணீரும் வெளியேற.

அவனிடம் இருந்து பிரிந்து அமர்ந்தவள், கண்களை வேக வேகமாக துடைத்து, "உனக்கு தான் நான் அழுதா அருவெறுப்பா இருக்குமில்ல" அவள் பாவமாக அவனை பார்க்க.

"இல்ல நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் என் தேவதையை ஒரு முறை விட்டு தவறு செஞ்சிட்டேன். இனி இனி எப்போதும் என் கைக்குள்ளவே வச்சிட்டு இருப்பேன். என்னை மன்னிச்சுடுவியா? நான் காத்து இருக்கேன் தங்கம்" அவளிடம் அழுகை மட்டும் நிற்க்கவே இல்லை.

"அழகி.. உண்மையிலையே சிவப்பழகி ஆகிட்ட டா" அவளது சிவந்த முகத்தை வருடிக்கொண்டே சொல்ல.

"நான் தான் ஏற்கனவே கருப்பு இன்னும் கருப்பாகிட்டேன் வெயில்ல வேலை செஞ்சி, கருப்பாகிட்டேன் அதுக்கு நீ கிண்டல் செய்வியா... எல்லாம் உன்னால தான் " அவனை கன்னத்தில் ஓங்கி அறைய அவளது வலியை குறைக்க எவ்வளவு அடி வாங்கவும் தயாராக தான் இருந்தான்.

"அடியே என் சிவப்பழகியே... உள்ள போலாமா ஈரத்துணி மண்ணு நல்லா அப்பிக்கிச்சி".

அவளது கண்ணீரை அழுத்தி துடைத்தவன் கையில் அள்ளிக்கொண்டான்.

"என்னை விட்டுட மாட்ட இல்ல ராஜா"

"ராஜா இல்ல விக்கி பாவா தா"

"நீ ஒன்னும் எனக்கு பாவா இல்ல.. மாமா" மனதில் அழுத்தி இருந்தது எல்லாம் வெளிவந்ததும் குழலி சாதாரணமாக இருக்க.

வீட்டிற்க்குள் நுழையும் போது தான் குடும்பம் ஒன்றாக இருப்பதை பார்த்தாள்.

"ஆச்சோ... விடுங்க எல்லாரும் எப்ப வந்திங்க?"

"நாங்க வந்து ஒரு மணி நேரமாச்சி"

"ஏங்க எல்லாம் பார்த்துட்டாங்களா?"

"ஆமா அண்ணி" அரசி குழுங்கி சிரிக்க அந்த வீட்டில் புன்னகை மட்டுமே நிறைந்து இருந்தது.

"உங்களை பேக் செஞ்சி அனுப்பனா என்ன ஒரே நாளில் வந்துட்டிங்க?" கைகளில் குழலியை ஏந்திக்கொண்டே விக்கி கேட்க, குழலிதான் அவனிடம் இருந்து இறங்க நெளிந்து கொண்டிருந்தாள், அந்த விடா கண்ணன் விட்டால் தானே,

"பாதி வலியில் ஒரு அசம்பாவிதம் அதான் வந்துட்டோம்"

"சரி சரி... எங்களை கொஞ்சம் நாளைக்கு டிஸ்டர்ப் செய்யாதீங்க புரியுதா" குழலி விக்கி தோளில் ஒரு அடிபோட.

அந்த குடும்பத்தில் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

விக்கி முதலில் குளித்துவிட்டு வர, குழலி மெத்தைக்கு கீழ் அமர்ந்திருந்தாள்.

" குழலி மேல உட்காரலாமில்ல டா"

"பரவால்லங்க"

"நீ எதும் மறக்கலை தானே... சரி நீ இதை எல்லாம் மறக்கற வரை நானும் கீழவே இருக்கேன், அவள் அருகில் உட்கார்ந்துகொண்டான்.

"எனக்கு உங்களை போல இயல்பா இருக்க முடியலை, கொஞ்ச நாளில் சரி ஆகிடுவேன்" குழலி தலையை தாழ்த்தி சொல்ல.

"நீ நிமிர்ந்து இருக்கனும் எப்பவும் போல, தவறு செய்த நான் தான் தலை குனியனும் புரியுது... பீ போல்டு"

"ம்ம்"

"சரி போ... குளிச்சிட்டு வா கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்"

"எனக்கு டயார்டா இருக்கு தூங்கனும்"

"சரி குளிச்சிட்டு படு" குழலி குளிக்க டிரஸ் எடுக்க போக,

"குழலி அந்த கபோர்ட் ல இருத்க டிரஸ் எடுத்துக்கோ" அவள் எப்போதும் போடும் தளர்வான நைட் பேண்ட் டீ சர்ட் இருக்க, "தேங்க்ஷ்" அதில் ஒரு செட் எடுத்துக்கொண்டு குளிக்க சென்றிருக்க, விக்கி அவளுக்கு உணவு எடுத்து வந்திருந்தான்.

நிறைய பேசினான் நிறைய சாரி கேட்டான் தயக்கமாக நெத்தி முத்தம் கொடுத்தான் குழலி பட்டும் படாமல் தான் அவன் அருகில் உட்கார்ந்திருந்தாள்.

அவளை வற்புறுத்தவில்லை சாதாரணமாக இருக்க சொல்லி.

தலையணையில் முகத்தை புதைத்து படுத்திருந்தாள், அவளை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி படுத்து அவளை பார்த்தவாறு இருக்க, அவளது உடல் குழுங்குவதை பார்த்து பரிதவித்தான்.

"குழலி அழுவாத மா"

"ஏன் நான் அழுதா அருவெறுப்பா இருக்கா" அவனிடம் பதில் இல்லை என்றுவளது கண்களுக்கு மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான். அவளது கண்ணீரின் வலி அவனுள் ஊடுறுவியது, சிறிது நேரத்தில் அவளது அழுகை நின்றது அவளது கன்னத்தில் சிறிது நேரம் இளைப்பாரியவன் அவளது இதழை நெருங்க குழலி கண்கள் பட்டாம் பூச்சியாக மாறி படபடத்தது.

நூல் இடைவெளியில் இருந்தவன் இருவருக்குள்ளான கடைவெளியை அதிகப் படுத்தினான்.

"சாரி குழலி தூங்கு"

"ஏன் உனக்கு முத்தம் கொடுத்தா அருவெறுப்பா இருக்கா"

"உன் நல்லதுக்கு தான் விலகி போனேன்... என்னை சீண்டிட்ட இனி உனக்கு தான் சேதாரம்"

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது கழுத்தில் பின் கை விட்டு இழுத்து முதல் முத்தத்தை உரிமையாக குழலி எடுத்துக்கொண்டாள்.

பல முத்தங்கள் கடந்து அவளின் அனுமதியோடு அடுத்தகட்ட தாம்பத்தியத்தில் இருவரும் இணைந்தனர்.

மாறி மாறி காதலை கொடுத்தும் காதலை பெற்றும் இருவரும் தங்கள் இணையின் மன வலிக்கு மருந்தாகி போனார்கள்.

நிம்மதியாக நிறைந்த காதலோடு இருவரும் காதலால் வலம்வர இரண்டு வீட்டுக்கும் திருப்தியே... இடையில் ராகவியை சென்று பார்த்து வந்தார்கள் குடும்பத்தோடு. போனில் சங்கவிக்கு விஷயம் சொல்ல அவள் குதித்து சந்தோஷத்தில் வேந்தனை அடித்து ஒரு வழி செய்திருந்தாள்.

இரு ஜோடிகளின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றிருக்க, வேந்தனும் சங்கவியும் ஒருத்தரை ஒருத்தர் நன்கு புரிந்துகொண்டார்கள்.. இடையில் கமலாவிடம் வீடியோ கால் பேசி பேசி தோழிகளாக மாறி வேந்தனை வைத்து செய்தார்கள்.

****

கொடி அவளுக்கான நாளை பார்த்து காத்திருந்தாள், அது ஒரு மூகூரத்த
நாள், குழந்தையை கொடியிடம் வேறு வழி இல்லாமல் விட்டுவிட்டு தியாகுவும் அவன் அன்னையும் பக்கத்து டிஸ்ட்ரிக்கில் நடக்கவிருக்கும் திருமணத்துக்கு சென்றிருக்க.

"எப்படியும் இவங்க வர... சாயந்திரம் ஆகிடும் இப்பவே போய் இரண்டு பேரையும் பிரிச்சி எடுக்கனும்" ஒரு முடிவோடு கொடி கிளம்ப.

"காலையிலையே எங்க போயிட்டா?"


சமையல் கட்டில் உருட்டுவது கேட்கவும் பூனை நடை போட்டவன் அவளை பின்னிருந்து அணைத்துக்கொள்ள.

"எங்க என்ன இது விடுங்க" கணவனாக குழலி விக்கியை ஏற்றுக்கொண்டாள் ஆனால் காதலானாக ஏற்க முடியவில்லை. விக்கியும் அவளை வற்புறுத்தவில்லை அவள் போக்கில் விட்டுவிட்டான், காதலை அள்ளி அள்ளி கொடுத்தான் அவளோ பெற்றுக்கொண்டு இருந்தாள், கணவனை நன்கு பார்த்துக்கொண்டாள்.

இருவரும் ஒருவர் அணைப்பில் இருக்க, "சிவப்பழகி கிஷ் மீ "

"உங்களை வச்சிட்டு... காலையிலையே போங்க வேற வேலை பாருங்க"

"ப்ளீஸ் ஒன்னே ஒன்னு டே புல்லா உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்" இருவரும் நூல் இடைவெளியில் இருந்து, கண்கள் இரண்டும் கவ்விக்கொள்ள முத்தமிட நெருங்கும் போது காலிங் பெல் அடித்தது.

"நகருங்க யாருன்னு பாருங்க" கதவை திறந்தவன் கொடியை எதிர்பார்க்கவில்லை, "வாங்கக்கா..." குழலி விக்கி பின் நின்றிருந்ததை பார்த்த விஷக் கொடி,

"நான் உன்கிட்ட தனியா பேசனும்"

"குழலி காபி எடுத்துவா" அவள் உள்ளே போன உடனே, கொடி அவள் அறைக்குள் வைத்திருந்த சில காகிதங்களை எடுத்து வந்தவள், அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பத்திரம் இருந்தது, ஆம் ரங்கன் அந்த வீட்டை தவிர மற்ற அனைத்தையும் கொடி பெயரில் எழுதி வைத்திருந்தார்.

கொடியின் பிளான் அந்த வீடில்லை இருவரை பிரிக்க ஒரு துரும்பு இடையில் டிவோர்ஸ் பத்திரத்தை வைத்திருந்தாள்.

விக்கி வேகமாக அனைத்திலும் கையெழுத்து போட்டவன் கொடியிடம் கொடுக்க அவளே பத்திர படுத்திக்கொண்டாள். இது எதுமா சமையல் கட்டில் இருந்த குழலிக்கு தெரியவில்லை தெரிந்து இருந்தால் அவள் குழலி சூழ்ச்சியில் சிக்கி இருந்திருக்க மாட்டாள்.

குழலி காபி எடுத்துக்கொண்டு வந்தவளிடமிருந்த காபியை வாங்காமல் விக்கியை பார்த்து , "எனக்காக நீ செய்வன்னு நான் நினைச்சி கூட பார்க்கலை"

"நீங்க தம்பியா என்னை நினைக்கலனாலும் எனக்கு எப்பவும் நீங்க அக்கா தான்... உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன்"

கொடி கிளம்பும் போது குழலியை பார்த்து, "வரட்டா குழலி" நக்கல் பொதிந்த குரலில் சொன்னவள் அங்கு இருந்து கிளம்புவது போல கிளம்பி... விக்கி வீட்டைவிட்டு வெளியே போகும் வரை காத்திருந்தவள், குழலி மாடி தோட்டத்தை சுத்தி பார்க்க சென்றவளை ஆள் வைத்து தூக்கி இருந்தாள் அந்த விஷ கொடி.
 

T22

Well-known member
Wonderland writer
26 சிவப்பழகியே....

சில மாதத்தில் தன் வாழ்க்கையை இப்படி புரட்டி போட்டுடுச்சே... மரத்தில் சாய்ந்து ஆதி முதல் கொடி கடத்தியது வரை தீவிரமாக மனதில் அசைபோட்டாள். இருட்ட போவது தெரியவும் வீட்டை நோக்கி நடந்து வந்தாள் குழலி.

வீட்டில் யாருமில்லாததை ஆராய்ந்தவளுக்கு இப்போதுதான் கணவனின் அக்கா செய்த சூழ்ச்சி தெரிந்தது. அவள் வீட்டுக்கு வரவும் புல்லட்டில் கண்கள் கலங்க உடல் சோர்வாக வந்துகொண்டிருக்கும் கணவன் தெரிய. ஆம் நாள் முழுவதும் மனைவியை காணாமல் துடித்து போய்விட்டான், ஒரே நாளில் அவனது தோற்றம் மாறி இருந்தது.

அவனை பார்த்தும் பார்க்காதது போல உள் நுழைந்தவளை கொல்லும் ஆத்திரம் வந்தது அவனுக்கு.

"எங்க போயிருந்த?" கோபமாக வந்த வார்த்தையில் அத்துணை பரிதவிப்பு இருந்தது.

"மாடு மேய்க்க"

"பொய் சொல்லாத, உன்னை காணோம்'ன்னு ஊர் முழுக்க தேடினேன்"

"என்ன புது அக்கரை வேண்டாத மனைவி மீது" சமையல் கட்டில் நுழைந்தவளை பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டான். "பேசியே சாகடிக்காதடி..."

அவளிடம் மௌனமான பார்வை மட்டுமே...

"இப்படி போகாதடி என்னை விட்டுட்டு" அவனின் அணைப்பை ஏற்க்கவுமில்லை விலக்கவுமில்லை.

"சாரி... ஆரம்பத்திலிருந்து நான் செய்தது தப்பு தான் இனி யாருக்காகவும் உன்னை விடமாட்டேன்டி. என் மேல சத்தியம்" அவன் யூகித்திருந்தான் தன்னை விட்டு செல்ல இந்த காரணம் மட்டும் தானே இருக்கு என.

"எனக்கு பசிக்குது"

"இரு நான் போட்டுவந்து ஊட்டி விடுறேன், பால் சாதம் உனக்கு பிடிக்குமில்ல"

"பரவாயில்லையே நியாபகம் வச்சி இருக்கிங்களே" குத்தலாக சொன்னாள்.

"சாரி"

"சாரில எல்லாம் சரி ஆகிடுமா?"

"ஆகாதுதான்... ஆனா என் நிலையை பூரிஞ்சிக்கோ சிவப்பழகியே..." அவனது உடைந்த வார்த்தையை கேட்ட பிறகு மனதில் கரையானாக அறித்துக்கொண்டிருப்பதை கேட்காமல் விட்டவள் அமைதியாக அமர்ந்திருக்க.

சாதம் பிசைந்துவந்து ஊட்டிவிட அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

"நான் ஒன்னு கேட்கட்டா?"

"ம்ம்..." பரிதவிப்போடு தன்னவளை பார்த்தான்.

"ஓன்னா ஊஞ்சலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகட்டா?" வெறித்த பார்வையில் கேட்டவளின் அடிபட்ட மனதை எப்படி சரி செய்வது என அவனுக்கு தெரியவில்லை.

கையணைவில் அவளை அழைத்துச் சென்றவன் முதலில் தான் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டான், அவனது மார்பில் தலை சாயித்தவள் அப்படி ஒரு துக்கம் அடைத்தது. பழைய நினைவுகளுக்கு சிக்க துவங்கிய மனதை இழுத்து பிடித்தவள் தன்னவனின் அருகாமையில் நிம்மதியாக தூங்கினாள்.

மாலை வெயில் அவளது முகத்தை செம்மை நிறமாக காட்ட, இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த காதலும் காமமும் போட்டி போட்டுக்கொண்டு தன்னவளிடம் காட்டிவிட முயன்றுகொண்டிருக்க.

மூச்சை இழுத்து விட்டு மனதை சமன் செய்தவன், பூக்குவியலாக தன்னவளை தூக்கி மெத்தையில் படுக்கவைத்துவிட்டு விலகிய புடவையை சரி செய்து போர்வை போர்த்தியவன்.

"என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, என்னை விட்டுமட்டும் போகாதே" பாதி தூக்கத்தில் இருந்தவள்.

'உனக்கு நான் கொடுக்க போகும் தண்டனை நீ விரும்பாத தனிமை தான்' என மனதில் சொல்லிக்கொண்டே மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தாள்.

நடு ஜாமத்தில் எழுந்தவள் அருகில் சுருண்டு படுத்திருக்கும் கணவனை நேராக படுக்க வைத்தாள்.

அவனது அடர் சிவப்பு நிற இதழ்கள் அவளை வாவென அழைக்க வீட்டைவிட்டு போக நினைத்த முடிவை மறந்திருந்தாள்.

காதல் கொண்ட மனம் அவளின் ஈடுபாட்டில் இல்லாமல் மெல்ல தன்னவனின் உதட்டை நெருங்க.. நூல் இடைவெளிதான் தன்னை சுதாரித்துக்கொண்டு எழ இருந்தவளை தன்னோடு இறுக்கிக்கொண்டு, அவள் விட்டதை இவன் துவங்கி இருந்தான். அவனது ஒவ்வொரு முத்தம் முன்னும் சாரி... சாரி மட்டுமே.

உடல் காதலால் குழைந்திருந்தாலும் உள்ளத்தில் ஏற்பட்ட வலி யூகித்துக் கொண்டிருந்தது. அவனது மொத்த காதலையும் தொடுகை மூலமும் முத்தத்தின் மூலமும் காட்டிக்கொண்டே இருந்தான்.

அவளது புடவையில் கை வைக்க துடிக்க கையை அடக்கியவன், "குட்டி... உனக்கு ஓகே வா" பட்டென கண்களை திறந்தவள் அவனது தவிப்பை புரிந்துகொண்டு மனைவியின் கடமையை நிறைவேற்ற தன்னவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

கசப்பான பழைய நினைவுகளை மறந்த இரு காதல் ஜோடிகளும் காதலின் எல்லை எதுவரை என ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது.

காலை தலைவனுக்கு அழகாக விடிந்திருந்தது... அருகில் தன்னவளை தேட அவள் வீற்றிருந்த இடம் காலியாக இருந்தது.

"அதுக்குள்ள எழுந்துட்டாளா... மாடுகூட பேசிட்டு இருப்பா" அவனது இதழ்களில் புன்னகை நிரம்பி வழிந்தது.

நேற்றைய நினைவுகளில் மூழ்கியவனுக்கு அந்த இதமான காலை பொழுது ரம்மியமாக இருந்தது.

இரவு அவளை அங்கமங்கமாக ரசித்தது நினைவுக்குவர... வெளியில் படாத பாகங்கள் வெண்ணை கட்டிபோலவும் வெயில் படும் பாகங்கள் கருத்தும் காணப்பட்டது, உடனே முகம் சுருங்கியது. அதுக்கு காரணமும் தனது ஈகோ தானே என தன்னை கடிந்து கொண்டவன்.

"கருத்து போயிடுச்சி முகம் கை எல்லாம், இனி வெயில்ல வேலை செய்யவிடக்கூடாது" எழுந்து தயாராகி வந்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லை, தன்னவள் தன்வீட்டில் இல்லை என்பது.

'எப்படி அவன் கையோழுத்து போடலாம்' குழலி கோபத்தில் அவன் கண்களில் படர்ந்திருந்த காதலை மறந்திருந்தாள்.

அவள் கருத்தில் இருந்தது எல்லாம் டிவோஸ் பத்திரத்தில் இருந்த அவன் கை எழுத்து மட்டுமே.

வானத்தை பார்த்து அந்த புதிய இடத்தில் கால் வைத்தவளுக்கு அத்துணை நிம்மதியாக இருந்தது, கழுத்திலிருக்கும் பாரம் தவிர...

என்ன செய்ய தமிழ் நாட்டு பெண்ணா போயாச்சே கழற்றி எறிய தயங்கி நின்றவள் நேராக வெறும் காலில் சுடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஒரு பேருந்தில் ஏறினாள்.

அது எங்கே செல்கிறது அவளுக்கே தெரியாது, கையில் ஒரு பை அதில் உடைந்த போன், தாய் வேண்டா வெறுப்பாக தந்த அவளுக்கான நகை... ஏ. டி. எம் கார்ட் அதை கையில் வைந்திருந்தவள் கண்ணில் ஏ. டி. எம் மெஷின் கண்ணில் பட.

அருகில் இருந்த கண்டக்டரை அழைத்து,

"அண்ணா பஸ் எப்போ எடுப்பிங்க?"

"இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பிடும் மா..."

"சரி..." என தலை அசைத்தவள் கை பையை கையோடு எடுத்துக்கொண்டு பேலன்ஸ் செக் செய்து பார்க்க அவளது தேவைக்கு அதிகமாகவே நிறைய தொகை இருந்தது.

தங்கை அல்லது தாய் போட்டு இருப்பாங்க என நினைத்தவள்... பாஸ்வேர்டு போடும் போது பல நினைவுகள், அவனது பிறந்த நாள் முதலிலும் தனது பிறந்த நாள் கடைசியில் வருவது போல பாஸ்வேர்ட் வைத்திருந்தாள்... பழைய நினைவுகளை நினைத்தவளுக்கு கசந்த புன்னகை இதழ் ஓரத்தில்.

இனி நினைக்க கூடாது கண்களை மூடி , 5...4...3...2...1 பின்னிருந்து எண்ண துவங்கியவள் 1 முடித்ததும் மூச்சை மெதுவாக உள் இழுத்து மெதுவாக வெளியேற்றினாள்.
அவளது டென்சனை குறைக்கும் மருந்து இது.

முழு பணத்தையும் இரு முறை பாதி பாதியாக எடுத்தவள் கார்டை கையோடு உடைத்து அந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வெளியே வந்து, பஸ்சில் ஏறி உட்கார்ந்தாள்.

கையோடு டிக்கட் வாங்கியவள்... ஜன்னல் வழியாக மாலை நேரத்து வெயிலை வெறித்து பார்த்தாள். முந்தைய நாள் நினைவு பாரபட்சம் காட்டாது வந்து சென்றது.

கைகள் தானாக அவளது கழுத்திற்க்கு இன்னும் அழகு சேர்த்த மஞ்சள் கயிரை எடுத்து,

அன்று அலைந்ததில் உடல்லெல்லாம் முள்ளாக குத்தியது... தூங்கி எழுந்தா சரியா இருக்கும், பஸ்சில் வேறு கூட்டமில்லை. ஜன்னல் பக்கம் பையை நகர்த்தி வைத்தவள் முந்தானையை எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.

அசதியாலா? இல்லை மனவலியிலா ஏதோ ஒன்று அவளது மூளை சோர்வுர செய்து ஆழ்ந்த நித்திரைக்கு அழைத்து சென்றது.

தூங்கி எழுந்ததும் பேருந்து தனது கடைசி நிறுத்தத்தில் நிற்க்கவும் சரியாக இருந்தது.

பையில் எல்லாம் சரியா இருக்கிறதா என சோதித்தவள். தனது புடவையை பார்த்தாள், கசகசவென இருந்தது... காலையில் ஊத்திய சாம்பார் கரை தெரிய,' நான் சமைச்சி வைத்ததை அவர் சாப்பிட்டு இருப்பாரா?' அவனை விட்டு வந்த போதிலும் குழலியின் நினைவுகள் அவனையே வட்டமடித்தது, "பைத்தியக்காரத்தனமான காதல்" கசந்த புன்னகை அவளிடத்தில்.

"ச்சே இதை கவனிக்கலையே நம்ம... காலையில் கவனிக்கும் நிலையிலா இருந்தோம்" பெருமூச்சொன்றை தாராளமாக விட்டு, கண்கள் இரண்டும் தண்ணீரை தேடியது.

"என்ன இந்த ஊரில் யாருமே இல்லை... காடு போல இருக்கே?" அருகே தண்ணீர் விழுவது போல சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையை நோக்கி குழலியின் கால்கள் தானாக நடந்தது.

இவள் ஒரு இயற்க்கை பிரியை... அது இவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். ஆம், அவளின் விருப்பு வெறுப்பு யாருக்கும் தெரியாது. அதே போல அவளை சுற்றி இருக்கும் மற்றவர்களைப் பற்றியும் அவளுக்கு தெரியாது.

சிறு அருவி அதற்க்கு எதிர் புறம் ஒரு வீடு அதை தொடர்ந்து ஒரு தோட்டம்... அதன் பிறகு வீடு என அணிவகுத்தது போல ஒரு ஐந்தாறு வீடுகள் தென்பட்டது, ஆனால் ஆள் அரவம் தானில்லை. அங்கிருந்த கல்லின் மேல் உட்கார்ந்தவள், தண்ணீரில் காலை விட்டு புடவையில் படிந்திருந்த கரையை முடிந்த அளவுக்கு நீக்கினாள்.

"என்னவன் வாங்கித் தந்த முதல் புடவை..." மனதில் தோன்றிய என்னத்தை அவளால் தடுக்க முடியவில்லை, அந்த முந்தானையில் இருவர் பெயரும் நெய்யபட்டிருந்தது, குட்டியாக இடையில் இணைந்த இதயம் விக்கி குழலி அதனை ஆசையாக வருடி இருந்தாலும் வருடி முடிக்கும் போது உடலில் ஒரு இறுக்கம் உருவானது.

தலையின் மேல் ஏறிய சூடு குறையவேண்டுமெனில் குளிர்ந்த நீரை தலையில் ஊத்த வேண்டும் அவளது மூளை வேகமாக வேலை செய்தது... சிறு ஊற்றின் அருகே இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு நடந்து வந்தவள் சலனமின்றி நின்றிருந்தாள் கொட்டும் அருவியில் சில நிமிடங்கள்.

மனம் கொஞ்சம் சாதாரணம் ஆகும் வரை அப்படியே நின்றிருந்தவள் மெதுவாக கீழிறங்கி வர.

கழுத்திலிருந்த தாலி பாரமாக தெரிந்தது, அவனை நினைவு படுத்தும் எதுவும் எனக்கு வேண்டாம்... என உருதியாக நினைத்தவளுக்கு கழற்ற தான் கை வரவில்லை.

ஊருக்கு உள்ளே போகும் வழியை கேட்டு நடந்தவள் தீடீரென நின்று, குழலி இது கழுத்தில் இருந்தா உனக்கு நிம்மதியே கிடைக்காது டி" வேகமாக கழற்றியவள் தூக்கி எறிய கையை தூக்கி இருந்தாள்.

அவள் தூக்கி ஏறிய இருந்த கையை தடுத்திருந்தது விக்கியின் கரங்கள்.

"இவ்வளவு என்னை வெறுத்திடுவேன்னு நினைக்கலை குழலி" அவள் கையிலிருந்த தாலியை பறித்து பேக்கட்டில் போட்டவன் அவளை அழைத்துக்கொண்டு நேராக சென்றது ராகவி வீட்டிற்க்கு தான் வேந்தனும் சங்கவியும் அப்போது தான் ஹனிமூன் முடித்து வந்திருந்தார்கள்.

"அத்த உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கலையாம், விட்டு ஓடிட்டு தாலியை வேற கழட்டி தூக்கி போட்டுட்டா"

"இனி அவளை தொந்தரவு செய்யமாட்டேன், நீங்க அவளுக்கு பிடிச்ச போல மாப்பிள்ளை பார்த்து கட்டிவைங்க. டிவோஸ் பத்தி எந்த பிராப்லமும் இல்லை‍ மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணாததால எந்த இஷுவுமில்லை" விக்கி அப்படி சொன்னதும் தான் குழலிக்கு பல்ப் எறிந்தது.

"விக்கி... சாரி சாரி" இவனை பின்னிருந்து அணைத்து ஜபம் போல சொல்லிக்கொண்டிருந்தாள்.

விக்கிக்கு தான் அவளது போக்கு வித்தியாசமாக இருந்தது, அவளை இழுத்து முன் நிறுத்தியவன்.

"நீ பைத்தியமா டி, பக்கம் வந்தா விலகி போற தூரம் போனா பக்கம் வர"

அவனை தயக்கத்தோடு பார்த்து நடந்ததை சொல்லத் துவங்க, இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்லி, இனியும் பொறுத்திருந்தால் நல்லா இருக்காது.

முதல் வேலையாக பேக்கட்டில் இருந்த தாலியை அவள் கழுத்தில் பேட்டுவிட்டான்.

'என் உயிரை ஆள் வைத்து கடத்தும் அளவுக்கு வந்துவிட்டதை அவனால் ஏற்கமுடியவில்லை, தியாகு வீட்டை நோக்கி பயணமாக விக்கி குழலியிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இந்த விஷயம் கேள்விபட்ட தியாகு விஷ கொடியை பெல்ட்டை கழற்றி தாறுமாறாக அடித்து துவைத்து இருந்தான், "இனி நீ என் வாழ்க்கையிலும் இல்லை வீட்டிலும் இருக்க கூடாது வெளியே போடி" வெளியே தள்ளிவிட, சரியாக குழலி காலடியில் வந்து விழுந்தாள்.

"குழலி சாரி இனி இப்படி செய்யமாட்டேன். அவர் கிட்ட சொல்லேன் ராஜா ப்ளீஸ் உன் கிட்ட எழுதி வாங்கி வந்த சொத்து எல்லாம் கொடுத்திடுறேன்" தியாகுவிற்க்காக அனைத்தையும் துறக்க துணிந்திருந்தாள்.

"எனக்கு... என் தம்பி இடத்தில வேற ஒருத்தனை பார்க்க பிடிக்கலை அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிட்டேன்... பா மா சொல்லுங்கமா அவர்கிட்ட" மலர் கொடியை பார்க்க பாவமாக இருந்தது.

"எல்லாம் என் தப்புதா... என் மனைவியை பத்தி யோசித்து என் பொண்ணை பத்தி யோசிக்காம தப்பு செஞ்சிட்டேன். சாரி மாப்பிள்ளை, வா கொடி நம்ம வீட்டுக்கு போலாம், நீ இவர் வாழ்க்கை கெடுத்தது போதும்" தந்தை கையை உதறிவிட்டவள், "இல்ல எனக்கு அவரு தான் எல்லாம், என் புருஷன் குழந்தையை விட்டு நான் வரமாட்டேன்" குழந்தையை தூக்க போக தியாகு வேகமாக குழந்தையை தூக்கி அணைவாக பிடித்துக்கொண்டான்.

"ஏங்க இனி இப்படி செய்ய மாட்டேன், இந்த ஒரு தரம் மன்னிச்சிடுங்க. அத்தையை நல்லா பாத்துக்குறேங்க... ப்ளீஸ்" தியாகுக்கு குழலியை கடத்தும் அளவுக்கு போனதை ஏற்கமுடியாமல் பிரிய துணிந்திருந்தான்.

"சித்தி அவர்கிட்ட சொல்லுங்களேன், என் பொண்ணு... அவர் இல்லாம நான் வாழமாட்டேன் செத்திடுவேன்" குழலிக்கும் விக்கிக்கும் கஷ்டமாக இருந்தாலும் எதும் பேசவில்லை.

"மாப்பிள்ளை இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்களேன். இனி அவ இப்படி நடந்துக்கமாட்டா" சந்திரா சொல்வது எல்லாம் தியாகு கேட்கும் நிலையில் இல்லை.

"டேய் இவ்வளவு பேர் சொல்றாங்க உனக்கென்ன பிடிவாதம்... கொடி நீ உள்ள போமா" தியாகு அம்மா கொடியை உள்ளே போக சொல்ல, மா நீ இதில் தலையிடாத..." அவன் கர்ஜிக்க கொடி வெளியே போனா நானும் போயிடுவேன்" தியாகு மௌனமாகிவிட.

"கொடி உள்ள போமா..." அனைவரையும் பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்ட கொடியின் கண்கள் ஜோடியாக இருந்த விக்கி குழலியிடம் மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே போக.

தியாகுக்கு தான் ஆத்திரம் அடங்கவில்லை, அதன் பிறகு அனைவரும் வீடு வந்து சேர, மனதில் ஒரு திருப்தி இருந்தது.குழலி முன்பு போல விக்கியை விலகி நிற்க வில்லை, அதே போல ஒட்டியும் நிற்கவில்லை, அவன் தன்னை தவிக்கவிட்டதுக்கு தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தாள் சிறு சிறு விஷயத்தில். இடையில் புதுவீடும் கட்டி முடித்தாகிற்று. அவன் திருமணத்துக்கு பார்த்து பார்த்து செய்ய இருப்பதாக சொன்னதை எல்லாம் ரிசப்சனுக்கு செய்தான் விக்கி.

***
 

T22

Well-known member
Wonderland writer
27 சிவப்பழகியே...

கொடிக்கு உடலில் செம அடி, தியாகு அம்மா தான் பார்த்துக்கொண்டார். தியாகு அவள் இருக்கும் திசை கூட திரும்பவில்லை. இப்போது தான் அந்த மரமண்டைக்கு உறைத்தது. அதன் பின் கொடியிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்து தியாகு அம்மாவிடம் நல்ல ஒட்டிக்கொண்டாள், உடலில் புண் தான் சரியாகவில்லை. இருந்த போதிலும் தியாகு அம்மாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை. இரவு தியாகு மகளோடு அறையல் தூங்க சென்றுவிடுவான். கொடி அத்தை அறையில் தங்கிக்கொள்வாள், அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. தியாகு வெளியே சென்ற நேரம் மட்டும் மகளை கொஞ்சுவாள், முடிந்த அளவுக்கு தியாகு முன் வந்து அவனை தொந்தரவு செய்வதில்லை. அவனுக்கு தெரியாமல் சில நேரங்களில் பார்ப்பாள். அது தெரிந்தும் தியாகு தெரியாதது போல இருந்துவிடுவான். தியாகு அம்மாவுக்கு மருமகள் மாற்றம் நன்கு தெரிந்தது. இருவரும் இப்படி விலகி இருப்பதுக்கு ஒரு முடிவுகட்ட ஊருக்கு போவதுக்கு தயாராகி இருந்தார்.

"தியாகு நான் என் அக்கா வீட்டுக்கு போயிட்டு வரேன்" தியாகு அம்மா பேத்தியை ஒரு கையிலும் தூக்கிக்கொண்டு தயாராகி வந்தார்.

"என்னமா சொல்லாம கொள்ளாமல் திடீர்ன்னு?"

"அவ தான் வரசொன்னா பார்த்து பல மாசம் ஆச்சி போயிட்டு வரேன்"

"சரி வாங்க விட்டுட்டு வரேன்" வெளியே ஆட்டோ வந்து நிற்க்கும் சத்தம் கேட்க சரியாக இருந்தது.

"நான் ஆட்டோ வர சொல்லிட்டேன்"

"சரி மா இருங்க வரேன்" டேபில் மேல் இருந்த பர்ஸ் எடுத்து காசு கொடுக்க.

"என்கிட்ட நிறைய இருக்கு டா"

"பரவால்ல பெரியம்மாக்கு எதாவது வாங்கிட்டு போங்க" கையில் பணத்தை திணித்தான்.

"சரி கொடி தம்பிக்கு நேரத்துக்கு சாப்பாடு போடு டா"

"மா... அமைதி நீ போ எனக்கு கை இருக்கு போட்டுக்க தெரியும் கண்டவங்க போட தேவையில்லை" தாயிடம் எரிந்து விழுந்தான்.

தியாகு சொன்னதை கதவு பின் நின்றிருந்த கொடியின் ஒற்றை கண்ணில் இருந்த கண்ணீர் வழிந்தது அதனை துடைத்துக்கொண்டு நின்றிருக்க. 'இது நான் செய்ததுக்கு குறைவு தான்'என மனதோடு பேசிக்கொண்டாள்.

"நீ சும்மா இரு நான் சொல்லுறதை கேளு டா" அவன் தான் தாய் சொல்லை தட்டாத பிள்ளை ஆகிற்றே பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

"நியாபகம் வச்சிக்கோ... அவ சாப்பாடு போட்டா தான் சாப்பிடனும் புரியுதா" தியாகு அம்மா சொல்ல.

"மா போதும் விடுமா கடுப்பை கிளப்பாத" போகும் போது திரும்ப திரும்ப சொல்லிவிட்டுதான் சென்றிருந்தார், "சரி கிளம்புங்க"

"மலர் கொடி என் பையனை பத்திரமா பாத்துக்கோ மா"

"சரி அத்த" உள்ளிருந்து பதுங்கிய குரலில் சொன்னாள்.

"ச்சை... இவ முகத்திலையே விழிக்க கூடாது" அன்று வேற விடுமுறை என்ன செய்வது என்றே தெரியவில்லை ஹாலில் டி. வி போட்டு உட்கார்ந்திருந்தான்.

அத்தை அறையில் இருந்து வெளியே பூனை நடை போட்டவள் சமையல் கட்டிற்க்குள் நுழைந்து சாப்பாடு செய்ய துவங்கி இருந்தாள்.

சில நிமிடம் கழித்து பெருங் கூச்சல் கொடியிடமிருந்து அவள் அலறியதில் கோபம் எல்லாம் எந்த மூலைக்கு சென்றது என்றே தெரியவில்லை, பதறிக்கொண்டு முதல் ஆளாக ஓடி வந்திருந்தான்.

"கொடி என்னாச்சி..." கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகில் உட்கார்ந்து அவளது கையை சோதிக்க.

"கொடி பார்த்து வேலை செய்ய மாட்டியா" அவனது பாசமான குரலை கேட்டு கண்கள் கலங்க, " பேசிட்டிருக்கேன்ல காது கேட்குதா இல்லையா டி... என்னாச்சி"

"கஞ்சி தண்ணீ உச்சிடுச்சி" கையை காட்ட.

"சரி சரி ஒன்னுமில்லைடி வா" தண்ணீரில் கையை வைத்தான்.

"தியாகு சாரி" அழும் குரலில் சொல்ல. அவனே இவளது கையை வேகமாக விட்டு எழுந்துநின்று அவளை கோபமாக பார்வை பார்த்துவிட்டு டி. வி பார்க்க சென்றிருக்க.

கொடி அதன் பிறகு அவனை தொந்தரவு செய்யாமல் வேலை செய்திருக்க, தியாகு மனதில் கொடியின் உருவம் வந்து இம்சித்தது, அவள் உடம்பில் பெல்ட்டின் அச்சி அப்படியே தெரிந்தது.

கொடி சமையல் முடித்துவிட்டு அவன் முன் வந்து நின்று.

"ஏங்க சாப்பாடு சமைச்சிட்டேன் சாப்பிடுங்க, அத்த கேட்டா சொல்லிடுறேன் நான் தான் போட்டேன்னு" அவள் அறைக்கு சென்றிருக்க.

தியாகுக்கு கொடியின் நினைப்பு தான் அவனுக்கும் அவளது இந்த மாற்றம் புரியதான் செய்தது. அதைவிட அவளது ஆறாத புண் பார்த்து மனம் இளகியது.

"கொடி வந்து சாப்பாடு போடு"

"இதோ வரங்க" அவன் அழைத்ததில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் பரிமார அமைதியாக சாப்பிடட்டவன், சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைந்து கொடி வருகைக்காக காத்திருந்து சோர்ந்தது தான் மிச்சம் கொடிக்கு மனதில் ஒரு நிம்மதி... அத்தை ரூமில் போய் காயத்துக்கு மருந்துபோட்டுக்கொண்டிருந்தாள். அவன் அடித்த பிறகு இருந்து அறைக்கு வராததை மறந்திருந்தான்.

பொறுமை இழந்த தியாகு அவளை தேடி வர, அவள் முதுகில் இருக்கும் காயத்துக்கு மருந்து போட சிரம படுவதை பார்த்து அவளது கையை சரியாக பிடித்து புண் இருக்கும் இடத்தில் வைத்தான்.

"தேங்க்ஸ்..."

"எதாவது வேணுமாங்க... காபி டீ" கை நீட்டி மருந்தை அவள் கையிலிருந்து பிரித்து எடுத்தவன், அவளது கைகளுக்கு மருந்து பூசிவிட, மீண்டும் தேங்க்ஸ் சொன்னாள்.

"சாரி இனி அடிக்கமாட்டேன், ரொம்பா வலிக்குதா?" சோகம் அப்பி இருந்தது முகத்தில்.

"இல்ல.. ப்ளீல் பீல் பண்ணாதீங்க. அதனால தான எனக்கு அறிவு வந்தது"
கொடி அவனை சமாதானம் செய் மாறி மாறி மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகி இருந்தார்கள்.

அவள் செய்தது தவறு என அவன் உணர்ந்த போது தியாகுவிற்க்கு அவளை இன்னும் தண்டிப்பதற்க்கு மனம் வரவில்லை. தியாகு நினைத்தது போல அன்பான மனைவியாக அருமையான மருமகளாக பாசமான தாயாக அந்த வீட்டில் மலர் கொடி வலம் வர துவங்கி இருந்தாள். முன்பை விட தியாகு அவளிடன் அன்பாக நடந்துகொள்வதை பார்த்து புரிந்தது ஒன்று தான்.

அதிகாரத்தில் பாசத்தையும் அன்பையும் வாங்கமுடியாது என இனி நல்ல மனைவியாக மலர் கொடி இந்த குடும்பத்தை பார்த்துக்கொள்வாள் என தியாகுவிற்க்கும் அவன் அன்னைக்கும் நம்பிக்கை வந்தது.

***

வீடு கட்டி முடிக்கும் தருவாயில் இருக்க, தோட்டத்தில் மர நிழலில் கட்டில் போட்டு அமர்ந்திருந்தனர் அனைவரும்.

"பவளம் அக்கா கொடியை கிரகபிரவேசத்துக்கு கூப்பிடலாம்"

"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை" என பவளம் சொல்ல குழலியும் சந்திராவும்தான் பவளத்தை சரிகட்டி இருந்தார்கள்.

போனில் தியாகுவை அழைக்க அவன் தயங்கிக் கொண்டிருந்தார், என்ன தான் மன்னித்து கொடியை ஏத்துக்கிட்டாலும் அவள் செய்தது தவறு தானே.

"கொடி கிட்ட கொடுங்க மாப்பிள்ளை" தியாகுவும் தயங்கிக்கொண்டே கொடுக்க.

"மா..." அவளும் தயங்கி பேச,

"புது வீடு அடுத்த வாரம் பூஜை இருக்கு வந்திடு"

"அது வந்து..." கொடி தயங்க சந்திரா போனை வாங்கி...

"என்ன அது இதுன்னு பழசை எல்லாம் விடு புதுசா வாழலாம் வந்து சேரு" சந்திரா பாச கட்டளை போட, ரங்கனை தவிர அனைவரும் அவளிடம் இயல்பாக தான் பேசினார்கள், தம்பியிடம் பேசிக்கொண்டிருக்க,

"விக்கி... அப்பாகிட்ட கொடேன்"

"அப்பா அக்கா பேசனுமாம்"

"நான் அவ கிட்ட பேசலை போ" அவரோ எறிந்து விழுக.

தியாகு கண்கள் கலங்குவதை பார்த்து போன் வாங்கிய தியாகு, "விக்கி மாமாகிட்ட போன் கொடு"

"பா... மாமா"

அவரும் வாங்கி நலம் விசாரிக்க , "மாமா கொடி முன்ன போல இல்லை மாறிட்டா, சொத்து எல்லாம் விக்கி பேருக்கு எழுதி வச்சிட்டா. அதுமில்லாம என் அம்மாவையும் பாப்பாவையும் நல்லா பாத்துக்குறா" இது போதுமே ரங்கனுக்கு தன் மகள் இந்த குணத்தோடு இருக்க தானே அவரும் விரும்பினார். கொடியின் குணத்துக்கு அவரும் ஒரு காரணம் தான், தன் தம்பி இடத்தில் வேறு ஒருவனை அழைத்து வந்தாள் எப்படி ஏற்ப்பாள். தந்தையாக அவர் எடுத்து சொல்லி இருக்கனும் நம்ம அம்மாக்காக தான் இதை செய்தேன் என்று.

"அவ கிட்ட கொடுங்க மாப்பிள்ளை"

"பா... சாரி" கொடி சொல்லி முடிக்கும் முன், "சாரி மா உன்கிட்ட நான் எடுத்து சொல்லி இருக்கனும்" ரங்கன் வருந்த.

"பா... விடுங்க, நான் நாளைக்கே வரேன்" என அவரை திசை திருப்ப அனைவரும் அனைத்தும் சரியாகிவிட்டது என நிம்மதியாக உணர்ந்தார்கள்.

"குழலி... வா கொஞ்ச திங்ஷ் வாங்கிட்டு வரலாம்" விக்கி அழைக்க.

"வர முடியாது... எனக்கு கால் வலிக்குது" என ஊஞ்சலில் அவள் உட்கார.

விக்கி அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து அவளது பாதத்தை பிடித்துவிட துவங்கி இருந்தான்.

"குழலி"

"ம்ம்ம்ம்"

"குழலி...." இந்த முறை அழுத்தி சொன்னான்.

"ஊஞ்சல்ல உட்கார விடேன்"

"அதெல்லாம் முடியாது என் கோபம் குறையும் போது தான் உட்கார விடுவேன்"

"சரி இது வேண்டா மெத்தையிலாவது படுக்க விடேன்'

"நோ என்ன படுத்தியதுக்கு உன்னை வச்சி செய்யனும்" இது மட்டுமில்லை அவனை தனியாக நூடுல்ஸ் வாங்கி தந்து அவனை சமைக்க வைத்து சாப்பிட வைத்து கொடுமை படுத்துவது என அவனை டார்ச்சர் செய்துகொண்டு இருந்தாள். என்ன தான் அவள் கொடுமை படுத்தினாலும் அவள் எதர்பார்க்காத போது கட்டி அணைப்பது முத்தம் கொடுப்பது என விக்கி தனது சேட்டையை விட்டபாடில்லை. அவளுக்கும் அவனது அதிரடி செயலில் அதிர்ந்தாலும் பிடித்திருந்தது.

"குழலி இதுக்கு எப்போ எண்ட் கார்ட் போடுவ"

"கிரகபிரவேசம் முடியட்டும் அது வரை ஒழுங்கா நான் சொல்லுறதை கேட்கனும் புரியுதா" குழலி ஒற்றை விரலை நீட்டி செல்லமாக எச்சரிக்க.

விக்கி கண்களில் காதலை தேக்கி, "அந்த நாளுக்கு காத்துட்டு இருக்கேன் டார்லிங்" வேகமாக அவளது இதழில் தனது இதழை ஒற்றி தேன் பருகிவிட்டு வண்டாக பறந்திருந்தான் அவள் அதிர்ச்சியில் இருந்து மீளாத முன்.

"சரியான பிராடு பையன்" குழலி அவன் சென்ற திசையை பார்த்து கத்த.

"என்காது கேட்காது என சொல்லி சென்றிருந்தான், என்ன தான் அவனை வைத்து செய்தாலும் அந்த காதல் குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் சென்றது. இன்றுமட்டுமல்ல என்றும் குறையாது என இருவருக்கும் தெரியும்.

****

வீட்டு கிரகபிரவேசத்தில் அனைவரும் வந்து சென்றிருக்க குடும்ப உறுப்பினர் மட்டும் எஞ்சி இருந்தார்கள் சங்கவி வேந்தன் கமலா நன்றாக நேரம் செலவழித்து விட்டு கிளம்ப இருந்த போது ராகவியும் அவர்களோடு கிளம்ப தயாராக இருந்தார்.

இதை பார்த்த விக்கியும் குழலியும் வேகவேகமாக ராகவியை இடைமறைத்து, "அத்த எங்க போறீங்க"

"வீட்டுக்கு"

"முடியாது இனி நீங்க இங்க தான் தங்கனும்" விக்கி பிடிவாதமாக நிற்க்க.

"யோவ் மாமா என்னா கொழுப்பா நான் என் அம்மா என் கூட தான் இருப்பார்" சங்கவி சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு நிற்க.

"ஆமா மா எங்க கூடவே இருங்களேன்" குழலி சொல்ல.

"ஏங்க வேந்தன் என்ன சும்மா இருக்கிங்க, அம்மா நம்ப கூட தான் வரனும் போய் கூப்பிடுங்க"

"இங்க பாருங்க விக்கி அத்த எங்க கூட தான் வருவாங்க"

"இல்லை வேந்தன் அத்தைக்கு முதல் பொண்ணு என் பொண்டாட்டிதான் அதனால அவங்க எங்க கூட தான் இருப்பாங்க"

"இதென்ன கேவலமான லாஜிக்" வேந்தனும் விக்கியும் சண்டையை வளர்த்துக்கொண்டு போக ரங்கன் தான் இடையில் புகுந்து ஆளுக்கு ஆறு மாசம் அத்தையை தங்க வச்சிக்கோங்க என ரங்கன் சிறப்பான தீர்ப்பை சொல்ல அனைவருக்கும் இது தான் சரியாகவும் பட சரி என யோசிக்க கொடி ரங்கனின் மீசையை முறுக்கிவிட்டு, "சரியான தீர்ப்பு நாட்டாமை" என சொல்ல கொடியின் குட்டி வாயை குவித்து...." ஆமா நாட்டாமை..." கை தட்டி சிரிக்க அனைவரும் குழந்தையின் குறும்பு தனத்தை பார்த்து...

"சரியா சொன்னடா குட்டி" என குழந்தையை தூக்கி சுத்த சிரிப்பே பொறாமை படும் அளவிர்க்கு சிரிப்பு சத்தம் அந்த புது வீட்டில் எதிரொலித்தது.

இந்த சிரிப்பு சத்தம் என்றும் குறையாமல் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்து புதிய

குடும்பமாக வாழ்ந்தார்கள்...

நன்றி வணக்கம் 🙏🏻...
 
Status
Not open for further replies.
Top