ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
என் வெட்க சிவப்பழகியே...

Teaser 1

காதல் சுமந்த மங்கையின் மனக்குமுரல்கள்...

பெண்ணாக பிறந்ததற்க்கு முதன்முதலில் வருந்துகிறேன்...

கம்பீரமாக காதலை சொல்ல துணியவில்லை...

துணிந்த போது அந்த காதல் என்னிடத்திலில்லை...

மனதில் ஒருவனை சுமந்து மற்றவனின் தாலியை சுமந்து காலம் முழுவதும் எப்படி நரக வாழ்க்கை வாழ்வது... என நினைத்தவளுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது... கண்கள் முன் எமன் 'கம்' என அழைப்பது போல இருந்தது.

தாலி கட்டினவனுடன் உண்மையாக இருக்க முடியாத வலியோடு, உண்மை இல்லாத இந்த இரட்டை வாழ்க்கை எனக்கு வேண்டாம்...

ஆண்பிள்ளையாக என் அன்னை பெற்றிருந்தால் திருமணமில்லாமல் காதலின் நினைவுகளோடு வாழ்ந்திருப்பேன்... பெண் என்பதால் தானே ஊருக்கு பயந்து உறவுக்கு பயந்து இந்த திருமணம் நடக்கிறது...

மனதில் ஆசையை விதைத்து மகிழ்ச்சியாக தேவதை போலொருத்தியை கட்டி அவன் மகிழ்ச்சியாக வாழ்வான்... என் நிலை என்ன?

காதலை தெளிவாக வெளிப்படுத்திய அவனுக்கு வாழ்க்கை கரம் பிடிக்க கசந்தது ஏனோ...

உறுதி இல்லாத மனம் கொண்டவன்...

எதற்க்காக இளம் மனதில் காதல் விதை விதைத்து

அன்பு எனும் நீருற்றி...

பாசம் எனும் உரம் போட்டு...

விளைந்து அவனது கரங்களில் சேரும் முன் உதறி விட்டது ஏனோ? விடை தெரிந்தாலாவது என் ஆத்மா சாந்தி அடையும்,

விடை தெரியாமல் இந்த உலகில் இருந்து செல்ல போகிறேன்...

இது ஒரு புது பயணம். தயாராகவில்லை, துணிமணி எடுக்கவில்லை, அவ்வளவு ஏன் செலவுக்கு கூட பணம் தேவையில்லை... அப்படி ஒரு சுற்றுலாவிற்க்கு செல்ல போகிறேன்... இதழில் இகழ்ச்சி புன்னகை தழும்பியது பெண்ணவளுக்கு.

வரிசையாக நெருங்கியவர்களை மனதில் நினைத்து... கடைசியாக கண் மூடும் வேலையில் அவனது சிரித்த முகம் மட்டுமே...நேரில் இல்லை மனக்கண்ணில்.

இறந்த பிறகு இவ்வுலகில் வாழ முடியும் என்றால் அவனது மூச்சிக்காத்தாக நான் மட்டுமிருக்க வேண்டும்...

பேராசையின் உச்சம்... காதலின் பைத்தியக்காரத்தனமான செயலை திருமணக்கோலத்தில் செய்திருந்தாள் இந்த சிரிப்பழகி (சிவப்பழகி).

 

T22

Well-known member
Wonderland writer
1 சிவப்பழகி...

அந்த அறையில் ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்த பெண் சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்.

அறை முழுவதும் ஒரே தூசி, அருகில் கண்டிப்பாக ஒரு சிறு அருவி இருப்பதற்க்கான அறிகுறி தெரிந்தது, மனதில் யூகித்துக்கொண்டாள், தான் தற்போது இருக்கும் ஊரின் ஒதுக்குப்புற காட்டுப்பகுதியில் இருக்கும் ஆங்கிலேயர் கட்டிடத்தில் இருப்பது தெரிந்து ஒரு நிம்மதி ஏற்பட்டது. எப்படியும் தன்னவன் தன்னை தேடி வந்துவிடுவான் என நம்பிக்கை ஏற்பட பதற்றம் மறைந்து மெல்ல சூழலை கவனித்தாள்.

சில்லென காத்து... பாதி திறந்திருந்த கதவு வழியாக அறைக்குள் நுழைந்த குளிர் காற்று அவளது முகத்தில் படவும், முன் முடி அனைத்தும் முகத்தை வந்து மறைத்தது... இந்த முடி முகத்தில் வந்து விழுந்தால் அவளுக்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. ஒதுக்கி விட கை எடுக்க எந்திரிக்கும் போது தான் தெரிந்தது, தனது கை கட்டப்பட்டிருந்ததை.

அப்போது தான் நிழல் உருவம் மங்கிய ஒளியில் தெரிய, "யாரா இருக்கும், நமக்கு எல்லாம் எதிரியா?" மெல்ல வந்த உருவத்தை பார்த்து இதழ்கள் துடித்தது...

"நீயா?"

"நானே தான்" எதிரே இருப்பவளின் முகத்தை பார்க்க விரும்பாமல் சோர்வில் கண்களை மூடிக்கொண்டாள் குழலி.

"எதுக்கு கட்டி போட்டு வச்சிருக்க" துக்கத்தை விழுங்கிக்கொண்டு கேட்க.

"என் அண்ணாவை விட்டு நீ போகனும்"

"சரி" எதிரே இருந்தவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

"நீ நடிக்கலை தானே"

"இல்லை..."

"அப்போ இதில் கையெழுத்து போடு" கட்டப்பட்டிருந்த கை அவிழ்க்கப்பட்டது. கையெழுத்து போட்டு முடித்தவளின் கால்கள் அந்த அறையை கூட கடக்கவில்லை.

"என் விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது" அதிகாரமாக வந்த குரலை கேட்டு கசப்பாக புன்னகைத்தவள், நிறைய தூரம் நடந்தவளுக்கு கால் வலிக்க ஓய்வுக்காக ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தாள். கண்களை மூட பழைய நினைவுகள் அவளை ஆக்ரமித்துக்கொண்டது.

*******

அவளது வாழ்வில் மறக்கமுடியாத நாளது... அவளது திருமணம் சற்று நேரத்தில் மனம் ஒப்பாமல் ஒப்பனை பதுமையாக அமர்ந்திருந்தாள்.

அவளது தாய் ராகவி பல போராட்டத்துக்கு பின்னால் நடந்த திருமணம் இது. ஆனால் மனதில் தன்னவனை தவிர சுமக்க முடியாது என்று மணமேடைக்கு செல்லும் சிறிது நேரத்தில் தான் முழுமையாக புரிந்துகொண்டாள்... பழங்களை வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கை நடுங்க தனக்குள் பேசத் துவங்கி இருந்தாள், அப்படி ஒரு வலி மனதில் சூழ்ந்துகொண்டது.

காதல் சுமந்த மங்கையின் மனக்குமுரல் தொடங்கியது

பெண்ணாக பிறந்ததற்க்கு முதன்முதலில் வருந்துகிறேன்...

கம்பீரமாக காதலை சொல்ல துணியவில்லை...

துணிந்த போது அந்த காதல் என்னிடத்திலில்லை...

மனதில் ஒருவனை சுமந்து மற்றவனின் தாலியை சுமந்து காலம் முழுவதும் எப்படி நரக வாழ்க்கை வாழ்வது... என நினைத்தவளுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது... கண்கள் முன் எமன் 'கம்' என அழைப்பது போல இருந்தது.

தாலி கட்டினவனுடன் உண்மையாக இருக்க முடியாத வலியோடு, உண்மை இல்லாத இந்த இரட்டை வாழ்க்கை எனக்கு வேண்டாம்...

ஆண்பிள்ளையாக என் அன்னை பெற்றிருந்தால் திருமணமில்லாமல் காதலின் நினைவுகளோடு வாழ்ந்திருப்பேன்... பெண் என்பதால் தானே ஊருக்கு பயந்து உறவுக்கு பயந்து இந்த திருமணம் நடக்கிறது...

மனதில் ஆசையை விதைத்து மகிழ்ச்சியாக தேவதை போலொருத்தியை கட்டி அவன் மகிழ்ச்சியாக வாழ்வான்... என் நிலை என்ன?

காதலை தெளிவாக வெளிப்படுத்திய அவனுக்கு வாழ்க்கை கரம் பிடிக்க கசந்தது ஏனோ...

உறுதி இல்லாத மனம் கொண்டவன்...

எதற்க்காக இளம் மனதில் காதல் விதை விதைத்து

அன்பு எனும் நீருற்றி...

பாசம் எனும் உரம் போட்டு...

விளைந்து அவனது கரங்களில் சேரும் முன் உதறி விட்டது ஏனோ? விடை தெரிந்தாலாவது என் ஆத்மா சாந்தி அடையும்,

விடை தெரியாமல் இந்த உலகில் இருந்து செல்லப் போகிறேன்...

இது ஒரு புது பயணம் தயாராகவில்லை, துணிமணி எடுக்கவில்லை, அவ்வளவு ஏன் செலவுக்கு கூட பணம் தேவையில்லை... அப்படி ஒரு சுற்றுலாவிற்க்கு செல்லப் போகிறேன்... இதழில் இகழ்ச்சி புன்னகை தழும்பியது பெண்ணவளுக்கு.

வரிசையாக நெருங்கியவர்களை மனதில் நினைத்து... கடைசியாக கண் மூடும் வேலையில் அவனது சிரித்த முகம் மட்டுமே... நேரில் இல்லை மனக்கண்ணில்.

இறந்த பிறகு இவ்வுலகில் வாழ முடியும் என்றால் அவனது மூச்சிக்காத்தாக நான் மட்டுமிருக்க வேண்டும்...

பேராசையின் உச்சம்... காதலின் பைத்தியக்காரத்தனமான செயலை திருமணக்கோலத்தில் செய்திருந்தாள் இந்த சிரிப்பழகி (சிவப்பழகி).

தைரியம் வந்து வெட்டிக்கொண்டு ரத்தத்தை வெறித்து பார்த்து அமர்ந்திருந்த குழலி மயங்கி சரிந்தாள்.

சிறிது நேரத்தில்... தேடிப் பிடித்து மருத்துவரை அழைத்து வந்திருந்தான் வேந்தன், அவளுக்கு நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளை.

"ஆறடி உயரம் அசத்தும் அழகு, இவனையா வேண்டாம் கையை வெட்டிக்கொண்டாள்" தங்கை சங்கவி மயங்கிய நிலையில் படுத்திருந்த குழலியை பார்த்துவிட்டு வேந்தனை உத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனது பார்வையில் என்ன இருக்கிறது என பிரித்தறிய முடியாத நிலை, 'பாவம் இந்த மாமாக்கு அக்காவை ரொம்ப பிடிச்சிருக்கு போல?' மின்னலென வேந்தனின் பார்வை சங்கவியை தழுவியது. அதே நேரத்தில் குழலியும் மயக்கத்தில் இருந்து எந்திரிக்க.

அன்னை ராகவிக்கு குழலி முகத்தில் இரண்டு அடி பலமாக விட்டதும் தான் அவரது மனம் சாந்தி அடைந்தது அவருக்கு.

"ஏன் டி இப்படி செஞ்ச"

"மனசில் வேற ஒருத்தரை வச்சிட்டு என்னால இவர் வாழ்க்கையை கெடுக்க முடியாது"

"இப்ப மட்டுமென்ன வாழவச்சிட்டியா என் மகனை..." அவளது தூரத்து சொந்தமான கமலம் அத்தை, வேந்தனின் தாயார் எகிரிக்கொண்டு வர.

"மா... அமைதியா இரு" வேந்தன் தன் தாயை அடக்க.

"நீ சும்மா இருடா அமைதியான பையன்னு உன்னை எல்லோரும் சீண்டி பார்க்கறாங்க"

"மா நம்ம பக்கம் தான் தப்பு, பிடிச்சிருக்கான்னு கேட்டு இருக்கனும்"

"டேய்... நீ அமைதியா இரு, எனக்கு இப்ப என் பையனுக்கு கல்யாணம் நடந்தே ஆகனும்" வேந்தன் தாய் கமலா ஒத்தைக்காலில் நின்றார்.

"குழலி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வேந்தனை கட்டிக்கோ" ராகவி கெஞ்சினார். அவரது கண்ணீர் அவளது மனதை சுட்டாலும் சிலையாக அமர்ந்திருந்தாள். "இவளை வச்சிட்டு" முணுமுணுத்த ராகவி, கமலா இருவரையும் முறைத்துக்கொண்டிருக்க.

"நான் சொந்தத்தில் யாருகிட்டையாவது பெண் கேட்டுட்டு வரேன்" எழுந்து கதவை கூட சென்றடையவில்லை அவரது கையை பிடித்து தடுத்து வேந்தனின் கை.

"அத்த வேண்டாம்... கவ்யாணம் நிருத்திட்டு கிளம்பலாம்" முடிவாக சொல்ல.

கமலா தான் ஏற்றுக்கொள்வது போல இல்லை, "டேய்... இப்ப மட்டும் கல்யாணம் நடக்கலை நான் செத்திடுவேன். பெரியவ இல்லைன்னா என்னா, சின்னவ இருக்கால்ல மேடையில் உட்கார வை"

"சரி அண்ணி..." யோசனையோடு சங்கவி கையை பிடித்த ராகவி... கண்களாலேயே தனது இளைய மகளிடம் யாசகம் கேட்க.

அதை புரிந்துகொண்டவள், "மா... என்னமா இது" சங்கவி ராகவி கையை அழுத்தி பிடிக்க.

"படிப்பு?" மகள் கேட்டதுக்கு தான் பதில் சொல்ல முடியாதல்லவா... திரும்பி, அண்ணியையும் அண்ணன் மகனையும் பார்க்க, இருவரும் சரி என்பது போல தலையாட்ட. பல பிரச்சனைக்கு இடையே திருமணம் சிறப்பாக நடந்தது.

"அம்மா... அக்காக்கு பிடிச்சவங்க கூட கட்டிவச்சிடுமா"

"அவ என் பொண்ணில்லன்னு நிரூபிச்சிட்டா, அவ எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன"

"மா... அக்காவை அவங்க கூட சேர்த்துவச்சிட்டு வா அப்போ தான் நான் மாமா கூட அவங்க வீட்டுக்கு போவேன். அதுவரை இந்த வீட்டில் தான்" அக்காவுக்காக அன்னையையே முதல் முறையாக எதிர்த்து நின்றாள் சின்னவள்.

தாய்க்கு தான் தன் மகளின் பிடிவாதம் தெரியுமே, குழலியை அழைத்துக்கொண்டு கிளம்பினார், வேந்தனை திரும்பி நன்றியோடு பார்க்க, அவனும் கண்களை மூடி அவளுக்கு ரகசிய பத்திரம் சொல்லி அனுப்பினான்.

***

பச்சை பசேலென அந்த கிராமம் தாயையும் மகளையும் வரவேற்த்தது.

முகத்தில் தென்றல் வந்து மோத... ஆழ்ந்து சுவாசித்தவளின் நுரையீரல் நிறைத்தது அந்த ஊரின் மண்வாசனை.

'என்னவனின் மூச்சிக்காத்து கலந்திருக்கும் இடம் இது' என மானசிகமாக அந்த துக்கத்திலும் தன்னவனை தேடியது பெண்ணவளின் மனம்.

அத்தியூர் அன்புடன் வரவேற்க்கிறது. இந்த ஊர் மைய பகுதி... இதனை சுற்றி பல கிராமங்கள் இருக்கிறது. இந்த ஊர்தான் என அடித்து சொல்லியவளால், அதன் பிறகு எங்கு போகவேண்டும் என தெரியாது.

பெயருக்கு தான் உயிருக்குயிராக காதல் புரிந்தவர்கள் ஆனால், அவனை பற்றி ஒரு துரும்பும் தெரியாது.

"இதுக்கு அப்புறம் எங்கே போகனும்" கடுமையாக வந்தது அவளது தாயின் குரல், குத்துமதிப்பாக அவன் சொன்ன ஒரு வழியை கை காண்பித்தாள்.

"ஆட்டோ... இந்த பக்கம் ஊர் எதாவது இருக்கா?"

"இருக்குமா... எங்கே போகனும்" அவர் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் இருவரும் ஏறிக்கொண்டார்கள்.

தாயின் முகத்தில் அவ்வளவு கடுகடுப்பு, தன் வளர்ப்பு இப்படி ஆகிவிட்டதே என்ற தவிப்பு கோபமாக மாறி பல மணி நேரமானது.

படித்த முட்டாள் என சொல்லும்படி இருந்த மகளின் செயலை, அந்த பெற்றெடுக்காத தாயால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

திருமண கோலத்தில்... அவள், அழகு தேவதை கசங்கிய முகத்துடன் அழுத்தமான கண்களுக்கு சொந்தக்காரி பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள் கையில் சிறு கட்டு. அவளது அருகில் திருநீர் வைத்து கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்டே அமர்ந்து வந்தவரை நொடிக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டு வண்டியை ஓட்டினார் அந்த ட்ரைவர்.

'என்னாச்சி தெரியலையே... இப்படி அழுதுட்டு வராங்க இரண்டு பேரும் மாத்தி மாத்தி' அருகில் திருமணக்கோலத்தில் இருந்த குழலியின் வெறித்த பார்வை அந்த ஆட்டோக்காரரை பயம்கொள்ள வைத்தது என்று தான் சொல்லவேண்டும். இவ்வளவு அழுத்தமான பெண்ணை அவர் இதுவரை பார்த்ததே இல்லை.

ஆட்டோ ஒரு குறுகிய தார்சாலையில் சென்று அந்த அம்மா சொன்ன இடத்தில் வந்து... இரண்டு வழி பிரிந்தது.

"எந்த பக்கம் போகனும் மா?" அவள் கேட்பதை கூட காதில் வாங்காமல் வெறித்து அமர்ந்திருந்தவளை கொள்ளும் ஆத்திரம் வந்தது, அவளை உழுக்கி.

"இதுக்கப்புறம் எங்க டி போகனும்?"

"ஊர் பெயர் தெரியாதுமா?" சலனமற்ற அவளது பதிலை கேட்டு முறைத்தவர்.

"ஊர் பெயர் தெரியாது... காதல் செய்ய மட்டும் தெரியுமா? டி உனக்கு, உன்னை வளர்த்ததுக்கு நான் சும்மா இருந்திருக்கலாம்" எறிந்து விழுந்தவர்...

"யார் வீட்டுக்கு மா போகனும்... பேர் சொல்லுங்க, எனக்கு இங்க கொஞ்ச பேர் தெரியும் கொண்டு போய் விடுறேன்"

"கேட்கறாரில்ல... பெயர் ஆவது சொல்லி தொலை"

"விக்கி...!" புரியாமல் விழித்தார் ஆட்டோ ட்ரைவர்.

"என்ன வயசு இருக்கும்?"

"இருபத்து ஒன்பது"

"அப்படி யாரும் எனக்கு தெரிஞ்சி இல்லையே மா" தயங்கி தயங்கி சொல்லும் ஆட்டோகாரரை பார்த்த குழலி, "இல்லை அண்ணா அவர் இந்த ஊர் தான் எனக்கு நல்லா தெரியும்" கலங்கிய குழலியின் குரலில் அவ்வளவு உறுதி இருந்தது.

"உன்னை... வச்சிக்கிட்டு, கேட்டியா, இப்பவாவது புரியுதா? பாவி இல்லாத ஒருத்தனுக்கு அமைஞ்ச நல்ல வாழ்க்கையை விட்டுட்டு வந்துட்டியே" அவளை அடிக்க அவருக்கு கை பரபரத்தது.

"வெளியாட்கள் முன்னாடி எதும் செய்ய கூடாதுன்னு பார்க்கிறேன்" அவள் கையில் இருந்த போனை வாங்கியவர் அவளது கல்லூரி தோழிக்கு அழைத்தார்.

அவளும் பயத்தோடு போனை எடுத்து காதில் வைக்க, "அம்மா சொல்லுங்க மா" என பம்பிய குரலோடு,

"அந்த பையனோட அட்ரஸ் வேணும்"

"எனக்கு தெரியாதுங்களேன்மா" அவளும் பயத்தோடு சொல்ல.

"உங்க கூட படிச்ச எதாவது பையனுக்கு போன் போடு"

"ஒரு நிமிசம் மா"

"கான்பிரண்ஸ் கனக்ட் செய்" அதிகாரமாக உரைக்க.

"சரி மா" என பம்பினாள் குழலி தோழி மகிழா.

ஒரு வழியாக பாடு பட்டு அவரின் தந்தை பெயர் கண்டு பிடித்து சொல்ல. அந்த ஆட்டோ காரருக்கு தெரியவில்லை.

"நீங்க ஊருக்குள்ள போங்க... அங்கே கேட்டு தெரிஞ்சிக்கலாம்" உச்சக்கட்ட கோபத்தில் இருந்தார் குழலியின் தாயார்.

குழலி முகத்தில் தென்றல் அடித்தது. அவளது புடவை காற்றில் பறக்க, அதை இழுத்து பிடிக்க திரும்பும் போது அவளவனை பார்த்துவிட்டாள்.

"மா... அவரு தான்" கையை நீட்டி தாயிடம் காட்ட,

"அவனை பாலோவ் செய்யுங்க"

"இவர் பெயர் விக்கி இல்லமா ராஜா"

"ராஜா வா?" சட்டென விரிந்தது குழலியின் விழி.

"பேர் கூட சரியா தெரியாம என்னாடி காதல் இது... கருமம் பிடிச்ச காதல்"

"மா... அப்படி சொல்லாதே மா" பரிதாபமாக தாயை பார்க்க.

"அவனையும் இந்த காதலையும் எதாவது சொல்லிட்டா வரிஞ்சி கட்டிட்டு வந்துடுவியே" ஆட்டோ சீட்டில் தலைசாய்த்து படுத்தார் குழலி அன்னை ராகவி.

குழலி நெஞ்சம் படபடத்தது, 'தன்னை பார்த்தால் என்ன சொல்லுவானோ?' என்ற பயத்தில் அன்னை கையை பிடித்துக்கொண்டாள் குழலி. சட்டென விழிகளை திறந்து, குழலியின் கையை தட்டிவிட்டவர், "இனி நீயாரோ நான் யாரோ. பெத்த கடனுக்கு தான் உன்னை விட்டு போக வந்திருக்கேன். இனி நீயாச்சி அவங்களாச்சி, என் சாவுக்கு கூட வரக்கூடாது"

"மா..." முட்டிக்கொண்டு வந்த அழுகையை புறங்கையால் துடித்தவள் ஆதரவு அற்ற நிலையில் தான் இருந்தாள்.

'ஏன் விக்கி ஏன், எதற்க்கு இந்த திடீர் முடிவு, வலிக்குது டா, உன்னை நினைச்சிடாடு வேறு ஒருவனை எப்படி நான் கட்டிப்பேன்னு நீ நினைச்ச'

விக்கி என்ற பெயரில் இவளுக்கு அறிமுகமானவன் வேறாகவும் ஒருவருடத்தில் இப்போது ராஜா என பார்க்கும் இவன் உருவம் வேறாகவும் தெரிந்தது.

கம்பிரமாக அவனது புல்லட்டில் இருந்து இறங்கியவன்... தனக்கு பின் ஆட்டோ சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தான்.

திருமணக் கோலத்தில் நின்றிருந்தவளை பார்த்த அவனது கண்கள் விரிந்துகொண்டது.

தனிமையான வீடு, சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலென இருந்தது, தூரத்தில் ஒரு வீடு தெரிந்தது. வீட்டுக்கு முன் பெரிய மாட்டுத் தொழுவம்... நாட்டு மாடுகள் அணிவகுத்து கட்டப்பட்டிருந்தது.

"யார் நீங்க?" குழலியிடம் பார்வையை திருப்பாமல் அவள் அன்னை ராகவியை பார்த்து கேட்க.

"போதுமா... இது தான் நடக்கும்ன்னு எனக்கு தெரியும்" மகளின் முட்டாள் தனத்தை கடிந்துகொண்டவர்.

"உங்க அப்பாவை பார்க்க வந்து இருக்கோம்" ராகவி தன்னால் முடிந்த அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்த முயன்றாள்.

"பா... உங்களை பார்க்க யாரோ வந்து இருக்காங்க" விக்கி என்கிற ராஜா அவளை ஒரு பொருளாக கூட மதிக்கவில்லை.

"யார் நீங்க" கம்பீரமாக ஹால்ல இருந்து குரல் கொடுத்துக்கொண்டே வந்தவர், கம்பீரமான தோற்றம்... மூறுக்கு மீசை, பளபளக்கும் சிவப்பேறிய கண்கள்... பார்த்த உடனே தெரியும் கோபக்காரர் என்று.

"வணக்கம்... இது என் பொண்ணு உங்க பையனும் என் பொண்ணும் ஒருத்தர்க்கு ஒருத்தர் விரும்பி இருக்காங்க... இன்னைக்கு இவளுக்கு கல்யாணம். மணமேடையில் இருந்து எழுந்து வந்துட்டா... பெத்த கடனுக்கு சேர்த்து வைக்கலாம்ன்னு வந்தேன்" குழலி அம்மா ராகவி சொல்லி முடிக்க... குடும்பத்தில் உள்ள அனைவரும் ராஜாவை விக்கித்து பார்த்தார்கள்.

"இவங்க சொல்றது எல்லாம் உண்மையா ராஜா?" அவரது கம்பிர குரலில் இதயத்தில் ஒரு அதிர்வு ஏற்படவும். அதனை மறுக்க தலை அசைக்க வந்தவன் தன்னையும் மீறி, "ஆமா... ஆனா இப்ப காதலிக்கலை"

"இப்ப பத்தி எந்த அவசியமும் இல்லை..." தனது துணைவி பவளத்தை பார்த்தவர்.

"போய் பூஜை அறையில் இருக்கும் தாலியை எடுத்துவா"

"என்னங்க இது...,

"பா...!" தாயும் மகனும் ஒருசேர அதிர்ச்சியாகி, உதிர்த்த வார்த்தைகளை முடிக்ககூட இல்லை.


கதைபிடித்திருக்கா செல்லம்ஸ்... இரண்டு வரி சொல்லிட்டு போங்க😍😍😍

Commend thread
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
2 சிவப்பழகியே...

"சொன்னதை செய்யனும்" ரங்கன் கர்ஜிக்க... தாயும் மகனும் ஒரு சேர அமைதியாகினார்கள். மனைவி பிள்ளைகள் மீது அளவுக்கதிகமாக பாசம் இருந்தாலும் அதை ஒருபோதும் வெளிபடுத்தியதில்லை இந்த முறுக்கு மீசை.

"என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்க... உள்ளே போ... போய் எடுத்துட்டு வா" பவளத்துக்கு தனது கால்களை எடுத்துவைக்கவே அவ்வளவு சிரமமாக இருந்தது. தாலி எடுத்து வந்து கணவனிடம் நீட்ட, ரங்கன் வாங்கி மகனிடத்தில் கொடுத்து.

"போ... போய் தாலியை கட்டு உன்னை வளத்ததுக்கு சும்மா இருந்து இருக்கலாம், ச்சை... படிக்க அனுப்புனா காதல் செஞ்சி சரி அதை கூட ஏத்துக்கலாம். இப்படி ரு பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு ஏமாத்திட்டா வர"

"பா...!" வந்ததில் இருந்து குழலியை பார்க்காத விக்கிரம ராஜா அவளை எரிக்கும் பார்வை பார்த்தான்.

தந்தையின் அதட்டலில் முதலில் அதிர்ந்தாலும், தன்னை சமன் செய்து கொண்டவனுக்கு இந்த திருமணத்தில் துளி கூட விருப்பமில்லை தந்தை சொல்லை மீரவும் முடியாமல் அவள் அருகில் வந்து நின்றான். ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

என்றும் உயர்த்தாத அவனது குரலை அவன் தந்தை முன் முதல்முறை உயர்த்தினான்.

"எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமல்லை" உறுதியாக சொன்னான்.

குழலிக்கு கண்களில் குளம் கட்டியது. இருந்தும் விடாபிடியாக கண்ணீரை இழுத்து பிடித்து வைத்திருந்தாள். தனது பலவீனத்தை அனைவர் முன் காட்ட விருப்பமில்லை அவளுக்கு.

"ராஜா... மானத்தை வாங்கிடாத பா, காதலிச்சது உண்மை தானே தாலியை கட்டு.பெண் பாவத்தால நான் நிம்மதி இல்லாம தவிக்கிறது போதும் பா..." அடக்கிய கோபத்தோடு ரங்கன் சொல்ல.

"இல்ல பா அது முடிந்து போன விஷயம்... திரும்ப அந்த புதை குழியில் விழுக நான் தயாராக இல்லை"

தாயின் முறைப்புக்கு பயந்து தலை குனிந்து நின்றவள் விழுக்கென விக்கியை நிமிர்ந்து பார்க்க, 'என் காதல் உனக்கு புதை குழியா?' கண்களால் கேள்வி கேட்டவள் விழிகள் ஒரு சிமிட்ட, இவ்வளவு நேரம் விடாப்பிடியாக பிடித்துவைத்திருந்த கண்ணீர் சரம்சரமாக வழிந்தது.

"முடிவா என்ன சொல்லுற?"

"முடியாது பா..."

"நீ தாலி கட்டினா இந்த வீட்டில் இருக்கலாம் இல்லைன்னா... இடத்தை இப்பவே காலி செய்யலாம்" முடிவாக சொன்னார் ராஜாவின் அப்பா ரங்கன்.

"ஏங்க இப்படி எல்லாம் பேசுறிங்க... ஏதோ ஒரு பெண்ணுக்காக நம்ம பையனை போய் விரட்டுறீங்களே" கணவன் ரங்கன் சொன்னதை கேட்டு துடிதுடித்தார் இந்த தாய். அந்த துடிதுடிப்புடன் சேர்த்து இலவச இணைப்பாக புதியதாக வாழ்க்கை கேட்டு வந்த குழலி மீது கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் நீங்காமல் அவர் மனதில் குடி கொண்டது அந்த வெறுப்பு தீ. இந்த தீ தனிந்து குழலியை வாழவைக்குமா? இல்லை அவளை தீக்குள் சிக்கவைக்குமா? காலம் தான் பதில் சொல்லும்.

அவளது அக்கா மலர்கொடி, திருமணமாகி தாய்வீட்டிலேயே செட்டில் ஆகிய கேஸ்... கணவன் தியாகு... வேலை நிமிர்த்தமாக அடிக்கடி வெளியூர் போக வேண்டி வரும் அவனுக்கு தாய் உண்டு கமலா. மலர் அடாவடி குணம் கொண்டவள், மாமியாரிடம் ஒத்துப்போகவில்லை. பல பிரச்சனை தொடர்ந்து வர தியாகு பொறுமை இழந்து ஒருநாள்.,

"உனக்கு என்ன பிரச்சனை" என கேட்டேவிட்டான்.

"எனக்கு இங்கே செட் ஆகலை, நீங்களும் வீட்டில இருக்குறதில்லை, என் நிலமை புரிஞ்சிக்கோங்க தியாகு. உங்க அம்மாவும் வீட்டில் இருப்பதில்லை நானும் எவ்வளவு நாள் தனியாவே இருக்கறது பைத்தியம் பிடிப்பதுபோல இருக்கு" என நீலிக் கண்ணீர் வடிக்க, அவனே மனைவியை தனிமை வாட்டுது என புரிந்துக்கொண்டான். அவளது நடிப்பை உண்மை என நம்பி இளகினான் அவளது கணவன்.

"சரி இப்ப என்ன செய்யலாம், நீயே சொல்லு"

'அப்பாடா... இதுக்கு தானே இவ்வளவு அக்கப்போர் செஞ்சேன்' மனம் மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சி முகத்துக்கு வருவதற்க்குள் மலர்கொடி தடுத்து நிறுத்தி

"நான் அம்மா வீட்டுக்கே போகட்டா... நீங்களும் வாரத்துக்கு இரண்டு நாள் தானே வரிங்க... அப்ப நான் இங்கே வந்திடுறேன்" தேன் வடிய பேசினாள் இந்த விஷ கொடி.

இவள் இப்படி சொன்னதும் தியாகுக்கு இவளது நடவடிக்கையில் சிறு குழப்பம் இருந்தது, மலர்கொடிக்காக யோசிக்கவில்லை, தன் தாய்க்காக யோசித்தான், வயதான காலத்தில் நிம்மதியாவது அம்மா இருக்கட்டும் என யோசித்து சரி சொல்லினான்.

விடுமுறை தினங்களில் தியாகு வீட்டுக்கு பொறுப்பாக தான் வந்தாள், அது ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.

அவள் கருவுற்றாதும் தியாகுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி, வேலை முடித்து வீடுமுறை அன்று மாமியார் வீட்டுக்கு வந்தவன் மனைவிக்கும் அவளது குடும்பத்துக்கும் கை நிறைய பொருட்கள் வாங்கி வந்தான்.

"கொடி... வா அம்மாவை பார்த்து விஷயத்தை சொல்லிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திடலாம்" ஆசையாக அவளது கரத்தை பற்றி அழைத்த கணவனிடமிருந்த கையை பிரித்து எடுத்தவள், "இந்த நேரத்தில் ட்ரேவல் செய்ய கூடாதுங்க அதான்" அவனுக்கும் மலர்கொடி சொல்லும் காரணம் சரியாக பட அன்று விட்டது தான், குழந்தையை காரணம் காட்டி வீட்டோட தங்கி இதோ... குழந்தைக்கு மூன்று வயதாகிவிட்டது.

வரமாட்டேன் என நேராக சொல்லாவிட்டாலும், வராமல் சப்புக்கட்டு சொல்பவளை எதிர்த்தும் அவனால் பேச முடியவில்லை, இயல்பாகவே இளகிய குணம் படைத்தவனாக அவன் தாய் வளர்த்தது தவறாகியது இங்கு.

தியாகு வற்புருத்தி கூட்டிபோக முடியும், தன்னிடம் கோபம்காட்டாது தாயிடம் கோபம் காட்டும் குணமுடையவள் என அறிந்தவன்,

அம்மா நிம்மதியாக இருக்கட்டும் என அவள் போக்கில் விட்டுவிட்டான். தியாகு நினைத்தது என்னவென்றால் எப்படியும் மச்சானுக்கு கல்யாணம் ஆனால் தானாக வந்துவிடுவாள் என. அவனுக்கு தெரியவில்லை மலர்கொடியின் உண்மை சுய ரூபம், தம்பி கல்யாணத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதே அவள் தானென்று.

என்றுமே தாய் பக்கம் பேசாத மலர்கொடி, இன்று இந்த அநீதியை தட்டிக்கேட்க தாய் அருகில் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து நின்று, "அம்மாவை எதுக்கு திட்டுறீங்க?" ஆளாளுக்கு பேச... என் விக்கி என எப்போதும் முணுமுணுக்கும் அவளது மனம் முதல் முறையாக வேற்று மனிதன் ராஜாவாக பார்த்தது.

"எனக்காகக யாரும்... ப்ளீஸ் சண்டை போடாதிங்க, கடைசியா ஒரு முறை கேட்டு பாக்கலாம்' ன்னு தான் வந்தேன்... என்னை மன்னிச்சிடுங்க. அம்மா போலாம் மா?" ராஜாவின் கண்கள் குழலியை வெறித்து இருந்தது... மானிறத்துக்கு சற்று கூடுதல் நிறம், கலையான முகம், கூர் மூக்கு அதில் அவனுக்காக குத்தி இருந்த மூக்குத்தி, அனைவரது பார்வையும் குழலி மீதிருக்க. ராகவிக்கு மகளின்செயல் பிடிக்காவிட்டாலும் அவளது தவிப்பு புரிந்தது. எப்படியாவது இருவரையும் சேர்த்துவைத்துவிடலாம் என நினைக்க. இங்கு மகளே தன்னோடு திரும்ப வருகிறேன் என சொன்னதை பதறிய தாய். கோபமாக குழலியிடம்,

"நீ எங்கே வர? நீ இங்கயே இருந்தாலும் சரி... எக்கேடோ கெட்டு போனாலும் சரி... என் குடும்ப மானத்தை கெடுத்தது பத்தாதா... உன்னால என் சொந்த பெண் வாழ்க்கை நாஸ்தியா ஆகிடுச்சி. படிச்சி பெரிய ஆளாக வர இருப்பவளின் கனவை சிதச்சிட்ட இல்ல. உன்னை சொந்த பெண்ணா நினைச்சதுக்கு, என் பெண் வாழ்க்கையை கெடுத்துட்ட டி பாவி, இப்ப வீட்டுக்கு வந்து அவளது மீதி வாழ்க்கையும் கெடுக்க பார்க்குற. இனி நீயாரோ நான் யாரோ வீட்டுப்பக்கம் வந்திடாத" ராகவி ஆட்டோவில் ஏறிக்கொள்ள.

"மா....!" குழலிக்கு வரவிருந்த வார்த்தை தொண்டையில் சிக்கிக்கொண்டது. தன் நிலை இப்படி ஆகிவிட்டது கதறி அழுதாள்.

"ஆட்டோகாரரே வண்டியை எடுங்க" சைட் மிரர் வழியாக ராகவி தனியாக நின்றிருந்த மகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார் ராகவி.

"ராஜா... தாலியை கட்டு" ரங்கனுக்கு மகனின் செயல் கோபத்தை ஏற்படுத்தியது. விக்கிரம ராஜாக்கும் வேறு வழி தெரியவில்லை, தந்தை சொன்ன ஒரே காரணத்துக்காக அவளது கழுத்தில் வேண்டா வெறுப்பாக மூன்று முடிச்சை போட்டவன் விறுவிறுவென வீட்டிற்க்குள் நுழைந்து அவனுக்கு ஒதுக்கப்பட்ட முதல் தளத்திற்க்கு புகுந்துகொண்டான்.

ராகவி இவ்வளவு நேரம் வீராப்பாக பிடித்துவைத்திருந்த கண்ணீரை வெளியே விட்டவர் ஒரு நிம்மதியோடு வீட்டுக்கு போக... இதைவிட பெரிய பூகம்பம் காத்திருப்பதை எதிர்கொள்ள மன உறுதியோடு போனார்.

அவனது ஆத்திரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என அவனுக்கு தெரியவில்லை.

"நீ உள்ளே போ மா?" ராங்கன் தவிர யாரும் மூச்சே விடவில்லை.

ராஜாவாட்டம் இருந்த புள்ளையை வந்து இப்படி பெயரை கெடுத்துவிட்டாளே... கோபமாக போனதை வேறு தாயால் தாங்க முடியாமல் கழுத்தை நெடித்துக்கொண்டு போனார் பவளம்.

குழலிக்கு தன் வாழ்க்கையை நினைத்து சிரிப்பு தான் வந்தது.

மலர்கொடியோ... குழலியை மேலிருந்து கீழ் பார்த்து, "கலர் கம்மி எப்படி தான் என் தம்பி இவகிட்ட மயங்கினானோ தெரியலை, சரியான மாயக்காரியா இருப்பா போல" வெளிப்படையாகவே அவளை ஏளனமாக பார்த்துசொல்ல.

'பௌடர் பத்து கோட்டிங் கொடுத்தா காக்கா கூட கலரா இருக்குமாம்' மலர்கொடி முகத்தை பார்த்து மனதில் கவுண்டர் கொடுத்தாலும். இவளின் பேச்சி... மனதில் முள் தெய்த்தது. அவன் வீட்டிலேயே ரங்கா தான் பேசினார் அவரும் அதன் பிறகு போனோடு ஊர் தலைவருக்கான மிருக்கோடு கட்டளையிட்டுக்கொண்டு இருந்தார்.

இப்படி ஒரு பெண் இருப்பதை கண்டுக்க கூட இல்லை.

மலர்கொடி தியாகுவின் மகள் தத்தி தத்தி நடந்து வந்தவள்..." நீங்க யாரு?" என மழலையில் மிளற்ற.

"அத்தை டா தங்கம்... பாப்பா பேர் என்னா?"

"பாப்பா...சிட்டு" என அவளது அரிசி பற்க்களை காட்டி சிரிக்க, குழந்தையை அள்ளி முத்தமிட்டு சிறிது நேரம் அவளோடு விழையாட. அதன் பிறகு தனியாக விளையாட போய்விட்டாள்.

குழலி வரவேற்ப்பறையில் எவ்வளவு நேரம் தான் நிற்ப்பது... ஓரமாக போடப்பட்டிருந்த ஒற்றை சோபாவில் அவளை போலவே ஆதறவற்று தனியாக இருந்ததன் மீது நுனியில் அமர்ந்துகொண்டாள்.

மலர்கொடியின் குழந்தை விளையாடுவதை பார்த்துக்கொண்டே... அலைச்சலில் ஏற்பட்ட அசதியால் எப்படி தூங்கினாள் என தெரியவே இல்லை...

வீலென மலர்கொடியின் குழந்தை கத்தவும் தான் எழுந்துகொண்டாள்.

கொடி அவளது குழந்தையை வேகவேகமாக அடித்துக்கொண்டிருந்தாள்.

"ஐயோ! குழதந்தையை எதுக்கு அடிக்கிறீங்க கன்னம் எல்லாம் சிவந்திடுச்சே... ஏங்க இப்படி நடந்துக்கிறீங்க?" குழந்தையை அவளிடமிருந்து பிரித்தெடுத்து கையில் வைத்துக்கொண்டாள்.

"ஏய் யாருடி நீ எதுக்கு என் குழந்தையை தூக்குற"

'இவ என்ன லூசா? குழந்தையை அடிச்சதுக்கு காப்பாத்துனா சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கா'

"மலர் எதுக்கு பாப்பாவ அடிக்கர?"

"பாரு டா தம்பி... இவளுக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா கண்டவளை எல்லாம் அத்த கூப்பிடுவா"

விருட்டென கையில் இருந்த குழந்தையை கீழே விட்டவள், "சரி நா... நா தெரியாம சொல்லி கொடுத்துட்டேன்" சட்டென கலங்கிய கண்களோடு விக்ரம ராஜாவை பார்க்க.

அவனது பார்வை சாதாரணமாக தான் இருந்தது காதலில் தோற்றது பத்தாது என வாழ்க்கையில் தோத்த உணர்வு குழலிக்கு.

"மாமா... மாமா" ராஜாவின் கைகளில் தேம்பித்தேம்பி அழுத குழந்தையின் அழுகைக்கு தான் தான் காரணம் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மூச்சி முட்டியது அவன் சொன்னதுக்கு நேர்மாறாக இருந்தது இந்த குடும்பம்.

வேகமாக அந்த இடத்தை விட்டுச்சென்றவள் வீட்டிற்க்கு பின் புறம் வந்து நின்றுகொண்டு.

"நா வந்திருக்க கூடாது தப்பு செஞ்சிட்டேன்... தப்பு... வேணாண்ணு போனவங்க பின்னாடி வந்து தப்பு செஞ்சிட்டேன்... எவ்வளவு அசிங்கப் பட்டாலும் இந்த வீணாப்போன மனசு என் புத்தி சொல்லுற பேச்சே கேட்கமாட்டங்கிதே" மனதால் உடைந்து அங்கிருந்த தென்னை மரத்தில் சாய்ந்து கீழே உட்கார்ந்தவளை நோக்கி வலிமையான காலடி சத்தம் கேட்டது...

கண்களை திரும்பிப்பார்க்க... முன்னிருப்பவரின் தோரணையில் குழலி மிரண்டிருந்தாள்.

தைரியமான பெண்ணை கோழையாக்கி இந்த காதல் இன்னும் என்னென்ன பரிமானம் எடுக்குமோ.

இது வெறும் ஆரம்பம்தான்...

கதை பற்றி சொல்லுங்கள் செல்லம்ஸ்💐💐💐

 

T22

Well-known member
Wonderland writer
3 சிவப்பழகியே...

"ஏன்டி உனக்கு அறிவு இல்லை... என் பேத்தியின் கன்னத்தில் அப்படி அடிச்சி இருக்க" சம்பந்தமில்லாமல் வந்து பேசிய அத்தையைப் குழப்பமாக பார்த்தாள் குழலி,

"நானா?" விக்கித்து நின்றவளின் முன் பவளம் கொலை வெறியுடன் நின்றிருந்தார்.

"இல்லை... அத்த"

"எது அத்தையா?" கன்னத்தில் பொழிரென அடிவிட்டு தான் மறு வார்த்தை பேசினார் பவளம்.

"அத்தை சொத்தைன்னு பேசுற வேலை எல்லாம் வச்சிக்காத, உன் புத்தி தெரிஞ்சிதான் என் மவன் சனியன் விட்டுச்சின்னு வந்து இருக்கான். விடாது துரத்தி வந்து அவன் வாழ்க்கையை வீன் செஞ்சிட்டியேடி பாவி. திமீரெடுத்தவ என் பேத்தியவா அடிக்கற சாவடிச்சிடுவேன்" பவளம் அடித்தது கூட குழலிக்கு வலிக்கவில்லை... அவர் உதிர்த்த வார்த்தை அவளது அடிப்பட்ட நெஞ்சை இன்னும் ஆழமாக குத்தி கிழித்திருந்தது.

பவளம் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டே வந்த ராஜாவை பார்த்தவள் மனதால் அவனிடம் மன்றாடினாள் கண்களால் கொஞ்சினாள், 'விக்கி... நீ அங்கே தானே இருந்திங்க? நடந்ததை சொல்லுங்க டா ப்ளீஸ்' அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் எதுவும் பேசாமல் வந்து நின்றவனிடம் இருந்த நிமிர்வை பார்த்து...

விரக்தியில் சிரித்தாள், கண்களில் குளம்கட்ட... புறங்கையால் துடைத்தவள் அப்படியே அமர்ந்து அங்கே கட்டப்பட்டிருந்த மாட்டில் கண்கள் பதித்திருந்தாள்... மனதில் மின்னல் வெட்டியது

பவளம் பேசியது அடித்தது எல்லாம் எங்கோ சென்று மறைந்து கொண்டது.

"விக்கி..." என வாய்வழியே வந்ததை நிறுத்தி... "ராஜா... நீங்க காப்பாத்தின மாடு இது தானே?" அவன் பதில் சொல்லவில்லை. போட்டோவில் பார்த்தது நினைவிருக்க அவளையும் மீறி அவளது கால்கள் வேகமாக சென்றது.

கருப்பு நிற காளை, ராஜாவிடம் மட்டும் நாய்குட்டியாக பழகும், மற்றவர்களுக்கு அது சீறும் வேங்கை. அருகில் செல்லமட்டுமில்லை அந்த திசையில் செல்ல கூட மற்றவர்கள் பயம்கொள்வார்கள். அப்படி பட்டவன் இந்த காளை.

"குட்டி பக்கம் போகாதே" அவனது செல்ல அழைப்பு எல்லாம் அவள் காதுக்கு கேட்கவே இல்லை. விறுவிறுவென அருகில் சென்றுவிட்டாள்.

மிக அருகில் வந்ததும் தான் அவளுக்கு அதனின் கண்களை பார்த்து பயம் தொற்றிக்கொண்டது.

இருந்தும் அதனை வருடிவிட கைகள் பரபரத்தது, கண்களால் முன் இருந்த மாட்டின் தலை பகுதியில் கை வைத்து மெதுவாக நீவிவிட... ராஜா துடிதுடித்து அவள் அருகில் வருவதற்க்கும் இருவரும் ராசியாகி போனார்கள். அவளது கண்கள் வழியே ராஜாவை பார்த்திருப்பான் போல இந்த காளை. அமைதியாக அவளிடத்தில் தலையை கொடுத்திருந்தான்.

"ரொம்ப லக்கி டா நீ. அவன் உன்னை செல்லமா பாத்துக்கறானில்ல... நானெல்லாம் யாரோ தானே அவனுக்கு" காளையிடம் அவள் பேச்சிவார்த்தை நடத்திக்கொண்டிருக்க.

வந்த வேகத்தில் ராஜா இருவரும் ராசி ஆனதை எல்லாம் கவனிக்காதவன், குழலியை ஒரு கையால் இழுத்து... விட்ட அரையில் அவன் மீதே மயங்கி சரிந்தாள். நேற்றிலிருந்து சாப்பிடாதவளால் இந்த திடீர் அடியை தாங்க முடியாமல்.

"குட்டி... குட்டி... என்னாச்சி" அவளது விக்கியின் குரல் கேட்டு மெல்ல கண் திறந்தாள்.

"மாமா..." இடைநிறுத்தி, "எனக்கு பசிக்குது சாப்பாடு தறிங்களா?" அவன் தோளிலையே மீண்டும் சோர்வாக சரிந்துகொண்டாள்.

"டேய் அதை தூக்கிட்டு உள்ள வா... என் தலை எழுத்து இதுக்கெல்லாம் வடிச்சி கொட்டனும்' ன்னு" ராஜா ஒரு பெரு மூச்சுடன் முன் சென்ற தாயை வெறித்து பார்த்தான். அவளை குழந்தை போல தூக்கிக்கொண்டு, 'ஏன் குட்டி வந்த' தூக்கி போய் அவனது அறையில் படுக்க வைத்து தண்ணீர் தெளித்தான்.

"கீழே போய் சாப்பிட்டு வா" சொன்னதோடு சரி, அவன் பாட்டுக்கு கிளம்பி போயிட்டான். பசி வெட்கமறியாது என சும்மாவா சொன்னாங்க... முதலில் தயங்கினாலும், பவளம் முன் வந்து நின்றாள்.

"எனக்கு பசிக்குது"

"ஓ... மகாராணி உட்கார வச்சி போடனுமோ? போய் போட்டு சாப்பிட மாட்டிங்களோ? சமையல் ரூம் அங்க இருக்கு போ...போய் கொட்டிக்கோ" குழலியை கேவலமாக பார்த்தார் பவளம். பெரியதாக குழலி அலட்டிக்கொள்ளவில்லை. இதையேல்லாம் முன்னவே அவள் யூகித்தது தான்.

"நானே போட்டுக்கிறேன்" கிட்சனுக்கு போகும் வழியில் ராஜா கம்பிரமாக சோபாவில் உட்கார்ந்திருப்பதை ஓரக்கண்ணால் பார்த்து சாப்பாடு போட்டுவந்து அவன் அருகில் வந்து உட்கார்ந்து சாப்பிட்டாள்.

"ராஜா கோபமா?" அவனது கண்கள் தொலைக்காட்சியில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியிலையே நிலைத்து இருந்தது.

"நீங்க சாப்பிட்டிங்களா?"

அவனிடம் அமைதி மட்டுமே, அவனது உடையை ஆராய்ச்சி பார்வை பார்த்தவள் சுற்றி யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்டு.

"இந்த ட்ரெஸ் செமையா இருக்க. நாட்டுக்கட்டை டா நீ. பொங்களப்போ நான் சொன்னேனில்ல உங்களுக்கு நல்லா இருக்கும்'ன்னு... பேர் மட்டுமில்லை, நீங்களே ராஜா கணக்கில் தான் இருக்கிங்க" அவனும் பேசவில்லை, அவன் பேசவேண்டும் என குழலியும் நினைக்கவில்லை. தனக்கு தோன்றுவது எல்லாம் பேசிக்கொண்டே வயிற்றை நிரப்பினாள்.

"உங்க அம்மா சமையல் நல்லா இருக்கு, ஆனா உங்க அம்மா சாப்ட்ன்னு சொன்னிங்க எவ்வளவு டெரர் தெரியுமா, கடைசி பல் ஆடுவது போல இருக்கு விட்ட அறையில்" ராஜா குழலியை பார்த்து முறைக்க, அவனது முறைப்பில் மிரலாதவள் எதிர்த்து காதல் பார்வை வீசினாள்.

"அச்சோ... என்னை தப்பா நினைக்காதிங்க, அவங்க பிள்ளை மேல இருந்த பாசத்தில் பட்ட கோபம்... சி ஈஸ் ரியலி ஸ்வீட், என் அம்மா போல எல்லாம் இல்ல அவங்க" கண்களில் மலர்ந்த கண்ணீரை அடைக்கியவள் அமைதியாக பாதி சாப்பாட்டை சாப்பிட்டு தயக்கத்தோடு சாதத்தை கையில் அள்ளி அவன் வாய் அருகே கொண்டு சென்றாள்.

என்ன என்பது போல ராஜா பார்த்துவைத்தான்.

"ஒருவாய் வாங்கிக்கோங்க" அவளுக்கு ஆசையாகவும் ஏக்கமாகவும் இருந்தது, திருமணம் அதன் சார்ந்த சடங்குகள் தான் சரியாக நடக்கவில்லை... மாற்றி மாற்றி ஊட்டிவிடுவதாவது நடக்குமா என்ற ஆசையில் நீட்ட ராஜா அவளது கையை தட்டிவிட்டான்... குழலி கையில் இருந்த சாதம் அந்த ஹாலில் சிதறிது.

அவளை கோபமாக முறைக்க, "சா... சாரி" காதலால் பதற்றத்தில் அவன் நெருங்கும் சமையங்களில் நடுங்கும் அவளது உடல் முதல் முறையாக, அவனது கோபப் பார்வையின் தாக்கத்தால் நடுங்கியது.

மெதுவாக எழுந்தவள், கீழே சிதறி இருந்த சாப்பாட்டை எடுத்து தட்டில் போட்டு கை கழுவ, அப்போது தான் மாடுகளுக்கு தண்ணீர் கட்டிவிட்டு வந்த பவளம் கண்ணில் இந்த காட்சி பதிய, "ஏய் என்ன இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? இப்படி பாதி சாப்பாட்டை கைகழுவி விட்டு இருக்க"

"அது... அது"

"என்ன? அது இதுன்னு, இனி உனக்கு தனியா சமைச்சிக்கோ, டேய் உன் பொண்டாட்டி சமைக்கிரதை சாப்பிடுறியா இல்லை நான் சமைப்பதை சாப்பிடுறியா?"

"மா... தேவையில்லாம கண்டவளை எல்லாம் என் பொண்டாட்டி சொல்லாத" ராஜா கத்திவிட்டு அவன் அறையில் நுழைந்துகொள்ள.

குழலிக்கு தன் வாழ்க்கை போகும் திசையை பார்த்து சிரிப்புதான் வந்தது. அவள் எடுத்துவந்த ஒரு சோல்டர் பேகில் இரண்டு செட் ஆடை கொஞ்சம் பணம், அவள் அணிந்திருந்த சொர்ப்ப நகை. வீட்டிலே இருந்தா தமக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என அஞ்சினாள். ஆனால் அதற்க்கு என்ன செய்வது யோசனையில் தட்டை கழுவி வைத்துவிட்டு தயங்கி தயங்கி ராஜா அறைக்குள் நுழைய அவனே... அவனுக்கு பிடித்த ஊஞ்சலில் அமர்ந்து தலையை சரித்து படுத்திருந்தான்.

"ராஜா..."

....

"அத்தை கிட்ட சொல்லிடுங்களேன் தனியா எல்லாம் சமைக்கவேண்டாம்ன்னு"

"நீ தனியா சமைச்சி சாப்பிட்டுக்கோ... என்ன வேணும் சொல்லு தாலி கட்டின கடனுக்கு வாங்கி தந்திடுறேன்"

"இல்ல, வேண்டாம்"

"அப்புறம் சாப்பிடாம பட்டினி கடந்து செத்து எங்க குடும்ப மானத்தை கப்பல் ஏத்த பிளான் பண்றியா?"

"இல்ல... என்டயே காசு இருக்கு"

"என்ன ஒரு.... கோடி வச்சி இருப்பியா" அவனது குரலில் ஏக்கத்துக்கு கேலி இருந்தது.

"2000 இருக்கு"

"ஹா... ஹா" சரி அது தீந்துட்ட அப்புறம் என்ன செய்யுவ, என்ட தானே வந்து நிக்கனும்"

"இல்லை நிக்கமாட்டேன், நா.. நா வேலைக்கு போவேன்"

"ஓ... இந்த இடத்துல எனக்கு தெரிஞ்சி எந்த கம்பெனியுமில்லையே"

"இங்கே என்ன வேலை கிடைக்குமோ... அதை பார்ப்பேன்"

"ஓ... ஐ சீ..."

"சரி வேலை போட்டு தரேன் செய்றீயா, நீ நினைக்குற அளவுக்கு எல்லாம் காசு வராது. ஒரு நாளைக்கு 200 அரை நாளைக்கு 100" ராஜா சொல்ல.

தலையை நன்கு ஆட்டினாள், பாவம் அவளுக்கு தெரியப் போவதில்லை... அவளால் ஒரு மணி கூட வேலை பார்க்க முடியாது என.

"அம்மாகிட்ட சொல்லுறேன், அவங்க என்ன வேலை செய்யனும்' ன்னு சொல்லுவாங்க"

"ம்ம்ம்ம்..."

மீண்டும் கண்களை மூடி படுத்துக்கொண்டான் அவனது காலடியில் அமர்ந்தவள்.

"இது உங்களுக்கு பிடிச்ச இடம் தானே , கீழே பச்சை பச்சையா..., மேலே வானம் அழகா இருக்குங்க"

"கடுப்படிக்காம எழுந்து போடி" அவனது கர்ஜனைக்கு பயப்படாமல் அவன் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் ஒரு நொடியில் ராஜாவின் உச்சி முதல் பாதம் வரை மின்னல் வெட்டியது.

தன்னவள் தன்னிடம் வந்துவிட்டாள் என்ற சிலிர்ப்பா? இல்லை வேண்டாம் என்பவள் அழையா விருந்தாளியாக வந்த வெறுப்பா என அவனுக்கு தெரியவில்லை.

சிலையாக இருந்தவனை தட்டி எழுப்பியது அவளது கடைக்கண் கண்ணீர்.

"ச்சி... அழுரதே உனக்கு வேலையா?" அவனது மடியில் இருந்து பிரிந்து எழுந்துகொள்ள.

ராஜாவும் எழுந்து அழுத்தமாக காலடிகளோடு அந்த இடத்தை விட்டு செல்ல.

ஆசை வார்த்தை எல்லாம் இன்று கீரலா... என பாடல் வரி தான் குழலிக்கு நினைவுக்கு வந்தது. 

T22

Well-known member
Wonderland writer
4 சிவப்பழகியே...

இரவு உணவு அமைதியாக முடிந்தது. குழலி தான் தயங்கிக்கொண்டே நின்றிருந்தாள், எதாவது சொல்லிவிட்டாள் தாங்க முடியாதே என்று.

'விக்கி பசிக்குது, என்னை சாப்பிட சொல்லமாட்டியா?' அவனது கடைக்கண் பார்வைகூட அவள் மீது பதிக்கவில்லை. அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும், மலர்கொடி அவளது குழந்தைக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள்.

'மா சாரி மா... உங்களை தலை குனிய வச்சதுக்கு ஒரே நாளில் இவ்வளவு பட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு மா' மனதாள் மட்டுமே குழலியால் மன்னிப்பு கேட்க முடிந்தது.

உணவு ஊட்டிக்கண்டிருந்த கொடி, புதிதாக உறவு கொண்டாட வந்தவள் மீது ஆத்திரமாக வந்ததே, 'எப்படியாவது இவளை துரத்திடனும் ச்சை... நம்ம ராணி போல இங்க வந்து வாழலாம்ன்னு பார்த்தா இது வேற இடஞ்சலா வந்து நிக்குது'

குழந்தையிடம் அவனது தங்கை கண்டித்து வைத்திருந்தாள், 'இனி அத்தை என யாரையும் அழைக்க கூடாது, அதே சமயத்தில் குழலியிடம் பேசக்கூடாது. அருகில் கூட செல்ல கூடாது' என மிரட்டியதில் இருந்து அந்த பாப்பா இவளை திரும்பி கூட பார்க்கவில்லை. பெரியவர்களின் ஒதுக்கத்தை தாங்கிக்கொண்டவளால் அந்த பச்சை குழந்தையின் ஒதுக்கத்தை ஏனோ தாங்க முடியவில்லை, 'அப்படி என்ன பெரிய பாவம் செய்துவிட்டேன்' தனக்குள் எழுந்த கேள்வியை கேட்க நா துடித்தது. கேட்டால் மட்டுமென்ன விடையா கிடைத்துவிட போகிறது இங்கு என வந்த உணர்வு நிறைந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள், ஆனால் அது ஜீரனம் தான் ஆகவில்லையே.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க பவளம் கிட்சனில் முணுமுணுத்துக்கொண்டே பாத்திரத்தோடு சேர்த்து குழலியையும் கழுவி ஊத்திக்கொண்டிருந்தார்.

"கண்ணுல கொள்ளி வைக்க, என் மவனை வெறிச்சி வெறிச்சி பார்த்துட்டு இருக்கா, முதல்ல சுத்தி போடனும் திமிர் எடுத்தவ. என் பேத்தி மேலையே கை வச்சி இருக்கா அதை தட்டிக்கேட்க போனா மயக்கம் போட்டு விழுந்து ஒரு நாடகம் வேற ஆடுறா" அவர் மெதுவாக முணுமுணுத்தது பாவம் குழலிக்கு கேட்கவில்லை.

"அத்த... சா..." சாப்பாடு என முடிக்ககூட இல்லை, அவர் பார்த்த பார்வையில் அத்தையை விழுங்கி.

"எனக்கு பசிக்குது... சாப்பாடு" அத்தையை கண்டு, அந்த பயம் இருக்கட்டும் என்பது போல பார்வை பார்த்துவைத்தார்.

"சாப்பாடு..."

"அது எல்லாமில்லை, தனியா சமைச்சிக்க சொன்னேன்"

"தனியா சமைக்க எதும் இல்லையே"

"அந்த பாத்திரத்தில் இருப்பதை போட்டுக்கோ"

"தேங்ஸ்..." தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு வெளியே வர, குழலியை பவளம் குரல் தடுத்தது.

"இன்னைக்கு மட்டும் தான்.. நாளைக்கும் இப்படி வந்து நிற்க்காதே. ஒரு பருக்கை சோறு கூட தரமாட்டேன்" அப்போது தான் அக்கா மகளிடம் விளையாடிவிட்டு உறங்க போனவனுக்கு நன்றாக காது கேட்டது.

திரும்பி வந்தவனை பார்த்து குழலிக்கு மிகுந்த மகிழ்ச்சி, நமக்காக தான் வருகிறான் என நினைத்தவள் அவனை ஆசையோடு பார்வையால் பருகினாள்.

"மா... நாளைக்கு கூட்டிட்டு போய் கடை எங்கே இருக்குன்னு காட்டிடுங்க, இனி தனியா சமைச்சிப்பா. நீங்க டென்சன் ஆகாதிங்க மா. ஏற்கனவே பிபி ஏகத்துக்கு ஏறிட்டு இருக்கு" தாயின் உடல் நலத்துக்காக பேசியவனை என்ன சொல்வது தாய் மீது பாசம் வைக்காத சொல்லும் அளவுக்கு குழலி சுயநலம் பிடித்தவளில்லை. தனக்காக ஒரு வார்த்தை கூடவா பேசக்கூடாது என மனம் குமுறியது.

"சரி நான் டென்ஷன் ஆகலை டா... இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்தது சொல்லவே இல்லை" பவளம் மகனிடம் செல்லமாக கோபித்துக்கொள்ள.

"எப்பவும் போல டேஸ்ட் செம மா... இதுக்கு எல்லாம் எதுக்கு கோபம் சொல்லுங்க... அலுப்பாக இருக்குமா"

"தூங்க போட்டா, சரி... அந்த பொண்ணு எங்க தூங்கும்"

"உங்க இஷ்டம் மா உங்க கூட தூங்க வச்சிக்கோங்க, அப்பா வெளியே தானே படுக்கிறார்" தாயின் பதிலை கூட எதிர் பார்க்காமல் வேகமாக மாடி படிகளில் ஏறியவனை வெறித்தது குழலியின் கண்கள்.

'இதை எல்லாம் எதிர் பார்த்துதானே வந்தாய் கலங்காதே குழலி' தனக்கு தானே ஆறுதல் படுத்திக்கொண்டு... விக்கி பின் சென்றாள், கையில் சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு.

"ஏய் நீ எங்க போற?" பவளத்தின் குரல் இடைமறிக்க.

"சாப்பிட..."

"ஏன் இங்க உட்கார்ந்து சாப்பிட்டா இறங்காதா? என் பையனை நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா?"

"இங்.. இங்கே உட்கார்ந்து சாப்பிடுறேன்"

'மா உன்னை கஷ்டபடுத்தியதுக்கு தண்டனை மா இது எல்லாம்'

அந்த பெரிய அறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து சாப்பாட்டில் கை வைக்கும் போதே... வெளியே கார் வந்து நிற்க்கும் அரவம் கேட்கவும்.

தனது அறையில் இருந்து வேகமாக வந்த மலர்கொடி, "மா... இவளை எங்காவது போக சொல்லு, அவர் சீக்கிரம் வந்துட்டார் போல"

"இன்னும் மாப்பிள்ளைக்கிட்ட சொல்லலையா?"

"இல்ல மா வந்ததும் சொல்லிக்கலாம்'ன்னு விட்டுட்டேன்"

"நேரம் பாத்து சொல்லு மாப்பிள்ளை கோபித்துக்கொள்ள போறார்"

"நான் பார்த்துக்கிறேன் மா"

"என் வெறிக்க பார்த்துட்டு இருக்க, அதான் சொல்லுறா இல்ல, வேகமா போ"

"எங்க போவது?"

"தம்பி ரூமிர்க்கு போ" மலர்கொடி சொல்ல, பவளம் படபடத்து நின்றார். குழலி தலை மறையும் வரை பார்த்து நின்றவர், அவள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு வாசலுக்கு சென்றார்,

"வாங்க மாப்பிள்ளை..." பவளமும், ரங்கராஜனும் அழைக்க.

"அட... என்ன மாமா அத்தை உங்ககிட்ட எவ்வளவு முறை சொல்லுறது சுதாகர் சொல்லி கூப்பிடுங்கன்னு"

"ஹா... ஹா எனக்கு மாப்பிள்ளை கூப்பிட தான் பிடிச்சி இருக்கு" ரங்கராஜன் சொல்ல.

"என் குட்டி என்ன செய்யுறா?" மனைவியிடம் தவப்புதல்வியை பற்றி கேட்க.

"சாப்பிட்டதும் தூங்கிட்டாங்க"

"சரி... சரி"

"வாங்க சாப்பிடலாம்..." மலர்கொடி அழைக்க,

"நான் வெளியே சாப்பிட்டுட்டேன் கொடி, டயார்டா இருக்கு அதான் ஒரு நாள் முன்னவே வந்துட்டேன். நாளைக்கு எங்காவது வெளியே போய் சுத்தி பார்த்துட்டு வரலாம். கொஞ்ச நாள் லீவ் எடுத்து இருக்கேன்"

'அவங்க அம்மா பார்க்க கூட்டிட்டு போயிட்டா என்ன செய்யுறது' மலர்கொடி மனம் பதறியது.

"எங்கங்க" மனதில், 'கடவுளே அவங்கவீட்டுக்குமட்டும் போக கூடாது' மனதில் அனைத்து கடவுளையும் வேண்டினாள்.

"இன்னும் முடிவு செய்யலை தூரமா போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்"

"சரிங்க... நீங்க தூங்குங்க, நான் தேவையானதை எடுத்து வைக்கிறேன்"

"சரி கொடி... நீ போ, நான் மாமாகிட்ட பேசிட்டு வரேன்" மாமாவும் மருமகனும் வரவேற்ப்பறையில் பேசிக்கொண்டிருக்க, பவளம் மகளுக்கு உதவி செய்ய அறையில் புகுந்துகொண்டார்.

"மா இப்போதைக்கு தெரியவேண்டா வெளியே அப்புறம் நிம்மதியா இருக்க முடியாது வந்ததும் சொல்லுறேன்"

"சரி மா" பவளத்துக்கு மகனின் வாழ்க்கையை நினைத்து கலக்கமாக இருந்தது.

***

"எங்க உட்கார்ந்து சாப்பிடுறதாம், இப்படி தட்டோடு எழுப்பி அனுப்பிட்டாங்க. அவங்க மாமாவை கட்டியது போல நானும் அவங்க புள்ளையை தானே கட்டி இருக்கேன். எப்படிதான் இப்படி நடந்துக்க முடியுதோ" அவனது அறை வாசலில் நின்றவளுக்கு உள்ளே எப்படி போவது என தயக்கமாக இருந்தது.

"இப்படி ஓரமா உட்கார்ந்து சாப்பிட்டுக்கலாம்" , மாடிக்கு போக வழி தெரிந்தது. குளிரில் யார் போவது என ஓரமாக உட்கார்ந்து சாப்பிடத் துவங்க, கொலை பசி, வேகவேகமாக சாப்பிட்டவளுக்கு விக்கிக்கொண்டது. தட்டை ஓரமாக வைத்துவிட்டு இரும்பியவள் தண்ணீயை எடுத்துவராத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

இவளது இரும்பல் சத்தம் கேட்டு ராஜா எட்டி பார்க்க.

"ஏய் இங்கே என்ன செஞ்சிட்டிருக்க" சைகையால் தண்ணீர் என கேட்க, வேற்றாளை பார்ப்பது போல பார்த்து வைத்தான். சட்டென முகத்தை இயல்பாக வைத்து.

"லவ் யூ டி குட்டி" என்றான் காதல் வழிய. அவன் சொன்னதில் விக்கல் நின்று அவனை ஆச்சரியமாக பார்த்தவளுக்கு எல்லையில்லாத ஆனந்தம்.

"விக்கி... கோபம் போச்சா !"

"ராஜா... ஜஸ்ட் சாக் ட்ரீட்மென்ட்... ஐ ஹேட் யூ பாரெவர்" என்றவன் கைக்கட்டி நின்று அவளது கண்களை உத்து பார்த்தான்.

அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி கையில் தட்டை எடுத்து, இந்த முறை பொறுமையாக சாப்பிட்டாள்.

"இங்கே எதுக்கு உட்கார்ந்து இருக்க?"

"உங்க மாமா கீழே வந்திருக்காங்க, என்னை அவங்க பார்த்திடக் கூடாதுன்னு எங்கயாவது போக சொன்னாங்க. நான் உங்க ரூம்க்கு தான் வரதா இருந்தேன், உங்களுக்கு தான் நான் வந்தா பிடிக்காதே... அதான் இங்கே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்" தலை குனிந்துகொண்டு சொல்லி முடித்தவள், சாப்பிட துவங்கி இருந்தாள்.

"உள்ளே வா.."

"இல்ல நான் இங்கவே..."

"உள்ள வான்னு சொன்னேன்" அவன் சீர..

"தட்டோடு உள்ளே வந்தவள் தரையில் ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்துகொண்டாள்.

"மேலையே உட்காரு எதும் பிரச்சனை இல்லை"

"பரவாயில்லங்க" சாப்பிட்டு முடித்தவள் தண்ணீரில் கை கழுவிதட்டை ஓரமாக வைத்துவிட்டு. அவனை பார்த்தவாறு உட்கார்ந்துகொண்டாள்.

தனது அறையில் ஒருவள் இருப்பதை கூட கவனிக்காமல் அவன் எதோ தேடிக்கொண்டு இருந்தான்.

"விக்கி... என்னா தேடுறீங்க?"

"ராஜா..." அழுத்தம் திருத்தமாக சொன்னான், "ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதே"

"ம்ம்ம்" எவ்வளவு நேரம் தான் அங்கயே உட்கார்ந்து இருப்பது, எழுந்து அவனுக்கு பிடித்த இடத்திற்க்கு வந்தாள். அந்த குடை ஊஞ்சலில் மெல்ல அமர்ந்தவள்.

"இங்கே இருந்து தானே என்கிட்ட பேசுவ விக்கி... அந்த நாட்கள் எல்லாம் திரும்ப வரவே வராதில்ல" தன்னவனை பார்த்து ஏக்கமாக கேட்டாள் இந்த பாவை.

விடுமுறை தினங்களில் ஊருக்கு ஓடிவந்துவிடுவான் விக்கி. தன்னை பற்றி ஒன்றுவிடாமல் சொல்லத் தெரிந்த அவளுக்கு ஒரு வார்த்தை கூட அவனை பற்றி கேட்கவில்லை. அவனும் பெரியதாக எதையும் பகிர்ந்துகொண்டதில்லை.

முதலில் இது எல்லாம் சாதாரணமாக தெரிந்தாலும் போக போக குழலிக்கு ஒரு நெருடலாக உணரந்தாள்.

எங்கெங்கோ நினைவு சென்று கடைசியில், அவர்களது ரம்மியமான போன் காலில் வந்து நின்றது.

"விக்கி... எனக்கு கண்பியுசிங்கா இருக்கு"

"என்னாவாம் என் குட்டிக்கு?"

"உன்னை பிடிக்குது, உன் கூட இருந்தா அவ்வளவு ஹேப்பியா பீல் செய்யுறேன். எப்பவும் உன் கூடவே இருக்க நினைக்கிறேன் ஆனா... இது லவ்வான்னு தெரியலை"

"இது எல்லாம் லவ் தான் டி, என் குட்டி ராட்சசி"

"எனக்கு என்னவோ... இது பிரண்சிப்ன்னு தான் தோனுது" குழலி பதிலுறைக்க.

"சரி உனக்கு பிரண்டாவே இருக்கட்டும், ஆனா நான் எப்பவும் லவ் யூ தான்"

"எப்படி உன்னால இப்படி இருக்க முடியுதோ..." அவளது குரல் தடித்து வரவும்.

"வீடியோ கால் செய்தான்"

"இப்ப எதுக்கு வீடியோ கால்?"

"கேள்வி கேட்காம அட்டன்ட் செய்"

முகத்தையும் கலைந்திருந்த தலையையும் அவதியாக சரி செய்து முடித்து மெதுவாக கால் அட்டன்ட் செய்ய.

"எதுக்கு இந்த மூக்கு சிவந்து இருக்கு? எமோசன் ஆ ?"

"இல்லையே..."

"பொய் சொல்லாத டி"

"நீ டி கூப்பிட்டா பிடிக்குது" அவனை பார்த்து சொல்ல, அதற்க்கு மேல் அவனால் கோபத்தை இழுத்துபிடிக்க முடியவில்லை.

மெல்லிய புன்னகையை அவளை நோக்கி உதிர்த்தவன், "இங்கே பாரு குட்டி..."

"ம்ம்ம்" ஒன்றும் அறியாத சிறுமி போல முகத்தை வைத்திருந்தாள்.

"இந்த மூஞ்சை எங்கடா வாங்கின கியூட்டா அழகா இருக்கு, இந்த மூக்கு இருக்கு பாரு போதை ஏத்துது"

"ஏத்தும் ஏத்தும்... எனக்கு ஏதோ போல இருக்கு, இது எல்லாம் சரி வரும்'ன்னு எனக்கு தோனலை. நம்ம பெஸ்டியாவே இருந்துக்கலாமா? இது எல்லாம் வேண்டா உனக்கான நல்ல பெண் கிடைப்பா"

"வாயை மூடு..." அவனது கடுமையான குரலும், சிவப்பேறிய கண்களும் பார்க்கவே பயமாக இருந்தது.

"விக்..."

"என் பேர் சொல்லி கூப்பிடாதே" ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.

"நீ ஏன் கோபப்படுற"

"வாயை மூடு டி" இதுவே இவனது முதல் கோபம், சிறு சிறு விஷயத்துக்கு கோபம் வரும்தான், ஆனால் இந்த கோபத்தை அவளால் தாங்க முடியவில்லை.

இங்கே விழுந்தவளால் பின் எழமுடியாமல் போகும் என முன்பே தெரிந்திருந்தாள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருப்பாள்.
 
Status
Not open for further replies.
Top