ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!!-கதை திரி

Status
Not open for further replies.

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!! - 10

காலை வெகு நேரமாகியும் இருவரும் எழுந்திருக்கவில்லை, கோழிக்குஞ்சு போல் அவன் கையில் உறங்கி கொண்டிருந்தவளுக்கு மூச்சு முட்ட, திமிறி எழுந்தாள் ஆத்யா.

'இந்த மாமா என்னை இன்னைக்கே போட்டு தள்ளிரும் போல' என்று நினைத்தவள் அவன் கைப்பிடியில் இருந்து உடலை விளக்கி எழுந்தாள்.

"யோவ் மாமா, உன்னை போய் மரியாதையா நடத்தணும்னு நினைச்ச, என்னையே போட்டு தள்ள பார்க்கிறயா?" என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து அடித்தே எழுப்பினாள்.
அவள் அடித்தது என்னமோ தட்டி கொடுத்தது போல் இருக்க, சுகமாக திரும்பி படுத்தான்.
"டேய் மாமா உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா, நான் அடிக்கிறதும் திட்றதும் என்னமோ கொஞ்சுற மாறி. சுகமா தூங்குவ" என்று அவனை கொட்ட, ஆ என்று கத்தியவாறு எழுந்தான் மகிழ்.

"எதுக்கு டி இப்போ என்னை கொட்டுன்ன?"
"நீ எதுக்கு டா என்னை கொல்ல ட்ரை பண்ண?"
"நான் என்னடி பண்ணேன், நீ தான் டி"
"போ டா டொமட்டோ" என்று எழுந்து குளியலறைக்குள் அவள் செல்ல, அவனுக்கு தான், 'இப்போ எதுக்கு இப்படி கத்திட்டு போறா தூக்கத்துல ஏதாச்சும் பண்ணி இருப்பமோ. இல்லையே அப்படி ஏதாச்சு நடந்து இருந்தா என்னை கொன்றுப்பாளே. வேற என்ன பண்ணோம்' என்று யோசித்து கொண்டிருக்க, காலை கடனை முடித்து வெளியே வந்தவள் உதட்டை சுழித்து, கண்ணை உருட்டி வாய்க்குள் ஏதோ சொல்லி சென்றாள்.

"அஞ்சு நிமிசத்துல பிரஷ் பண்ணி வந்தா காபி இல்லைனா நீயே தான் போட்டுக்கணும்" என்று வெளியே இருந்து அவள் கத்த, 'எல்லாம் நேரம் டி இரு உன்னை வந்து பேசிக்கிறேன்' என்று பல் துலக்க சென்றான் மகிழ்.

வேகமாக வந்தவன் பால் காய்ச்சி கொண்டிருந்தவளின் இடுப்பை பற்றி, "என்னடி காலையில் எழுந்ததில் இருந்து அதிகாரம் பறக்குது, நான் என்னடி பண்ணேன். எதுக்குடி என்னை கொட்டுன" என்று அவள் இடுப்பில் அழுத்தம் கொடுத்தான்.
"மாமா விடுங்க" என்று சொன்னது அவளுக்கே கேட்டிருக்காது அத்தனை மெதுவாக உடல் சிலிர்க்க அவள் உடல் மொழியை ரசிக்க விடாமல் பிடித்து இருந்தான்.

அவன் விடாமல் பிடித்து இருக்க, "நம்ப இன்னும் ஹஸ்பண்ட் அண்ட் வைப்பா மாறலை, ஒழுங்கா கை எடுத்தா உனக்கு நல்லது இல்லை சூடு வைச்சுருவேன்", என்றதும் அவளை திருப்பியவன், "இந்த வாய் தான ஓவரா பேசுது, கடிச்சு வைக்க போறேன்" என்று நெருங்கினான் மகிழ்.

'சும்மா இருந்தவனுக்கு நம்மளே பாயிண்ட் எடுத்து கொடுத்துட்டோமோ' என்று பயத்தில் அவனை பார்க்க, நெற்றியில் முத்தமிட்டவன்.
"நான் காபி போடறேன்" என்று அவளை நகர்த்த, "நீ கொஞ்சம் நல்லவன் தான்" என்றாள் ஆத்யா.
"பாருடா, ஆமா நேத்து இருந்து ஏன் மாமான்னு கூப்பிடற?"
"அதுவா அத்தைகிட்ட பேசும் போது, உங்க பையன் பையன்னு பேசினேன். அத்தை அதுக்கு அவன் எனக்கு பையன் உனக்கு புருஷன் குட்டிமா. ஒழுங்கா மாமா இல்லைனா அத்தான்னு கூப்பிட சொன்னாங்க. மாமா கொஞ்சம் பெட்டரா இருந்தது. அதான்" என்று அவள் மாமா என்று அழைப்பதின் காரணத்தை கூறினாள்.

"இங்க வா என்றதும் வரமாட்டேன் நீ ஒன்னு கட்டி பிடிக்கிற இல்லை முத்தம் கொடுக்கிற. எதுவா இருந்தாலும் நீ அங்க இருந்தே சொல்லு" என்று அவள் கூறிய விதத்தில் சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு. காபியை ஆற்றி அவளுக்கும் அவனுக்கும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றான்.

"நீ என்னை இங்க எப்படி வேணாலும் கூப்பிடு, வெளிய மட்டும் உனக்கு எப்படி சொன்ன மரியாதையா இருக்குமோ அப்படி சொல்லு" என்றான்.
"உன்னை நான் ஸ்பார்க்குன்னு கூப்பிடட்டா" என்றாள் ஆர்வமாக.

"ஏன் எதனால என்னை அப்படி கூப்பிட போற"
"எல்லாம் முடிஞ்சு போய்டுச்சு அப்படினு நான் நினைக்கும் போது, நான் என் குடும்பத்துக்காக தான் இந்த கல்யாணம் பன்றேன்னு தெரிந்தும் என்னை எனக்காக கல்யாண பண்ண. நீ தான் என் லைப்போட செகண்ட் இன்னிங். ஒரு ஸ்பார்க் அதனால் தான் எல்லாத்தையும் தாண்டி வரணும்னு நான் போராடுறேன்."

"நான் உன்னை குழந்தைன்னு நினைச்சேன் பரவாயில்லை கொஞ்சம் மெச்சூரா தான் பேசுற"
"நான் குழந்தை எல்லாம் இல்லை தான், அதுக்காக சும்மா பக்கத்துல வந்த கொன்றுவேன்."
"சரி சரி ஆனால் உனக்கா என்னை ஹக் பண்ணனும்னா பண்ணு உன்னை மாறி நான் மிரட்ட மாட்டேன்"
"சரியான பிராடு பையன்.உன்னை போய் எங்க அத்தைங்க நல்லவன் வல்லவன்னு என்கிட்ட சொல்லிட்டு இருகாங்க"

"அடியே நான் நல்லவனா இருக்கனால் தான் இப்போ வர நீ நீயா இருக்க."
"போடா பட்டி" என்று நிற்காமல் ஓடி விட்டாள்.
"இருடி சிக்குவில்ல அப்போ இருக்கு உனக்கு " என்று கதியவன், நாளை எந்த ஹோட்டலில் கெட் டுகெதர் என்று தாரிக்கிடம் கேட்டு விசாரித்தான் மகிழ்.

அவள் குளித்து வர, அவனும் போய் கிளம்பி வந்தான். கேலி கிண்டல் என்று இருவரும் கிளம்பி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.
முதலில் காலை உணவை ஒரு ஹோட்டலில் முடித்து டிபார்ட்மென்ட்டல் ஸ்டோருக்கு சென்றனர்.

அவளுக்கு தெரிந்ததை அவளும் அவனுக்கு தெரிந்ததை அவனும் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அனைத்தையும் அள்ளி போட்டு பில் போட சென்றார்கள்.

ஒருமுறை எதையாவது விட்டமோ என்று யோசித்தனர், அவர்கள் இன்று வாங்கிய பொருளே இன்னும் மூன்று மாதம் வரும் என்பதை தெரியாமலே வேற என்ன வாங்கணும் என்று யோசித்து ஒருவாறு பொருட்களை வாங்கி வெளியே வந்தனர்.

அவன் நேராக ஒரு மாலில் காரை நிறுத்தி, "நாளைக்கு போட்டுட்டு போக டிரஸ் எடுக்கலாமா?" என்றதும், "எடுக்கலாம் ஆனால் நான் தான் பே பண்ணுவேன் ஓகேன்னா போகலாம்" என்றாள் ஆத்யா.

"உங்க அப்பா கொடுத்த காசை எப்படி செலவு பண்ணுறதுனு யோசிச்சுட்டே இருப்ப போல, பட் இது தான் லாஸ்ட் இனி நம்ப என்ன வாங்குனாலும் நான் தான் பே பண்ணுவேன். இப்போ நீயே பண்ணு" என்றான்.
"தேங்க்ஸ் ஸ்பார்க்" என்று குதூகலித்தவளின் கையை கோர்த்து சென்றான்.

"ஏன் ஸ்பார்க் எப்போ கேப் கிடைக்கும்ன்னு காத்துக்கிட்டே இருப்பியா?"
"பின்ன இவ்வளவு அழகான பொண்டாட்டியை கூட வைச்சுக்கிட்டு சும்மா இருந்து பாரு டி, அப்போ தெரியும்" என்றான் பாவமாக.
"எனக்கு தெரியும் அஸ் அ டாக்டரா புரியுது. ஆனால் என் உடம்பு தயாரான அளவுக்கு இன்னும் மனசு தயார் ஆகலை. என் காதலுக்கும் உன் காதலுக்கும் நான் துரோகம் பண்ற மாறி இருக்கு"
"தியா நமக்கு ஒன்னும் வயசாகவில்லை, இப்போவே எல்லாம் நடக்கணும்னு. டைம் இருக்கு பார்த்துக்கலாம், நீ என்னை லவ் பண்ணனும் அதுக்கு என் மேல உனக்கு நம்பிக்கை வரணும் அதுக்கு அப்பறம் தான் காதல் தாம்பத்தியம் எல்லாம்."

"நம்ப டிரஸ் எடுத்துட்டு ஹாஸ்டல் போகலாமா? திங்ஸ் எல்லாம் அங்க கொஞ்சம் இருக்கு எடுத்துட்டு வந்தரலாம்" என்று அவள் பேச்சை மாற்ற அவனும் அதை விட்டு ஷாப்பிங் மோடிற்கு மனதை மாற்றினான்.

முதலில் அவளுக்கு எடுக்க சென்றார்கள், தனக்கு சாரீ வேண்டாம். வேற ஏதாவது எடுக்கலாம் என்று அவள் கூற, அவனுக்கும் அது சரி என பட அவளுக்கு முழு வேலை பாடு செய்ய பட்ட ஒரு அனார்கலியை பார்க்க, அதை பார்த்ததும் இருவருக்கும் பிடித்து விட்டது. வெளிர் ரோஸ் நிறத்தில் தங்க ஜரிகையிட்டு நன்றாக வேலை செய்யப்பட்டு இருந்தது. முழு மனதாக அதை எடுத்துவிட்டு, பின் கல்லூரிக்கு சில ட்ரஸ், வெளியே சென்றால் கட்ட சில சேலைகள் என்று அவளுக்கு முடித்து அவனுக்கு எடுக்க சென்றனர்.

அவனுக்கும் அவள் உடைக்கு ஏற்றார் போல வெளிர் ரோஸ் நிறத்தில் ஒரு சட்டையும் அதற்கு ஏற்றார் போல் காற்சட்டையும் எடுத்து மொத்தமாக பில் போட்டு வாங்கி வெளியே வர மணி ரெண்டை நெருங்கி இருக்க அங்கிருந்த புட் கோர்ட்டில் மதிய உணவை முடித்து கல்லூரி ஹாஸ்டலிற்கு சென்று அனைத்து போர்மாலிட்டீஸையும் முடித்து பொருட்களை எடுத்து கொண்டு வீடு வந்து சேர மாலை ஆறு மணி ஆகிவிட்டது.

வீட்டிற்கு வந்தவர்கள் அலுப்பில் படுத்து விட்டனர் வாங்கிய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு.

மகிழுக்கு தூக்கம் களைய இமைகளை கஷ்டப்பட்டு பிரித்து மணியை பார்க்க அது பத்தை காட்டியது. எதுவும் சமைக்கவில்லை என்பதால், எழுந்து கிட்சன் செல்ல அங்கு ஏற்கனவே அனைத்தையும் செய்து வைத்திருந்தாள் ஆத்யா.

அறைக்கு வந்தால் குழந்தை போல் தூங்கி கொண்டிருந்தாள். எப்போ இதை எல்லாம் செஞ்சா இவ என்ற யோசனையில் அவளை எழுப்ப, இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் என்று கெஞ்ச, சாப்பிட்டு தூங்கலாம் என்று எழுப்பி சாப்பிட அழைத்து சென்றான்.

"தியா எப்போ டி, இதெல்லாம் சமைச்ச"
"ஏழு மணிக்கு அப்பா கால் பண்ணாரு அப்போ தான் சமைச்சேன். நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் உன்னை எழுப்பாமல் நானும் படுத்துட்டேன்."
"உனக்கு சமைக்க, வீட்டு வேலை செய்ய கஷ்டமா இருந்தால். வேலைக்கு ஆளு போடலாமா?"
"இல்லை ஸ்பார்க், எனக்கு நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணா போதும், நம்ப ரெண்டு பேருமே செய்யலாம். வேலைக்கு யாரையும் வைக்க வேண்டாம். வீக்லி ஒன்ஸ் வீட்டை வாஷ் பண்ண வேணா ஆள் போடலாம்.வேற எதுக்கும் வேண்டாம்"
"சரி டி நாளைக்கு ஈவினிங் தான் பார்ட்டி, அது வரை என்ன பண்ணலாம்" என்று கண்ணில் குறும்புடன் அவன் கேட்க, "என்ன பார்வை ஒரு தினுசா போகுது, என்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு. நாளைக்கு வாங்கி வந்த திங்ஸ் எல்லாம் அன் பேக் பண்ணனும். சீக்கிரம் சாப்பிட்டு தூங்க வா" என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவளை சீண்டி, இப்படி ஓட விடுவதில் அவனுக்கு ஒரு இன்பம், அவள் போவதை கண்டு வாய் விட்டு சிரித்தவன். சாப்பிட்டு எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்கு சென்றான்.

சாயங்காலம் தூங்கியதால், உறக்கம் வர மறுக்க, இருவரும் பொதுபடையாகவும் தங்களை பற்றியும் பேசியவாறு படுத்தனர்.
 
Status
Not open for further replies.
Top