ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உறவுகள் தொடர்கதை- கதை திரி

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 6
உறவுகள் தொடர்கதை
புதிய உறவாக உடன்பிறவா அண்ணன் கிடைத்த ஆனந்தத்தில் அலைந்து கிடந்தேன். பழக்கம் இல்லாதவன் என்றாலும் அண்ணன் என்ற வார்த்தைக்குள் அவன் அடங்கி விட்டதுமே பல வருடம் பரிட்சயமானவன் போல் தோன்றினான் போலும்.

மறு நாள் அபி அக்கா தன் தீஸிஸ்(thesis) வேலைக்காக கல்லூரி சென்றிருந்தாள். அப்போது அது அறியாமல் பரணி அண்ணா அழைக்க நான் அந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினேன். கிட்டத்தட்ட நாங்கள் இருவரும் அன்று ஒரு மணி நேரம் பேசினோம். புதிய உறவிடம் தயக்கம் இன்றி விரைவிலேயே நெருக்கமான போதே எங்கள் பந்தம் வாழ்வின் எல்லை வரை தொடரும் என்று அன்றே புரிந்தது.

சில நாட்கள் செல்ல செல்ல எங்கள் உறவு பௌர்ணமி நோக்கி நகரும் நிலவைப் போல வளர்ந்து கொண்டே போனது. அபி அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவ்வப்போது இடையில் நான் சென்று பரணி அண்ணனை கலாய்பதும் அதற்கு பரணி அண்ணா தக்க பதிலடி தந்து என்னை சொல்வதறியாது திணர வைப்பதுமாய் சந்தோச பேச்சுகளில் உறவை வளர்த்தோம்.

நான் சொல்வதை சிறிதும் பொருட்படுத்தாத அண்ணனாய் பரணியும் அவனை எல்லாவற்றிலும் அபி அக்காவிடம் போட்டுவிட்டு அண்ணனிடம் அதற்கு திட்டு வாங்கும் தங்கையாய் நானும் இருப்பதே எங்களின் சிறப்பு. சில நாள் செல்ல செல்ல அவ்வப்போது செல்ல சண்டைகள் போட்டுக் கொள்வது எங்கள் உறவின் அழகை இன்னும் சற்று மெருகேற்றி காட்டியது.

இந்த உறவுக்குள் இத்தனை ஆனந்தமா என்று மயங்கி போனேன். நாங்கள் மூவரும் நால்வர் ஆனோம். பரணி அண்ணாவின் நண்பரை ஏற்கனவே அபி அக்காவிற்கு தெரிந்திருந்தது. நாங்கள் சேர்ந்து கும்மிக் கொட்டுவது போதாது என்று போபியோ என்னும் பூவேந்திரனும் சேர்ந்துக் கொள்வார். முதலில் நான் பரணி அண்ணனிடம் பேசுவதைப் போல் பூவேந்திரனிடம் பேசியதில்லை. அவ்வப்போது அக்காவை கேலி செய்ய மட்டும் இருவரும் இணைந்துக் கொள்வோமே அன்றி வேறொன்றும் பேசியதில்லை.

இவ்வளவு தொலைவில் நின்ற உறவு வேகு நாள் கழித்தே அருகில் வந்தது. இருப்பினும் அது செய்த மாயாஜலங்கள் பல. அண்ணன் என்றபோதிலும் இவனையே இக்கதையின் ஹிரோவாக எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற மனிதனை எங்குமே பார்த்திர முடியாது என்று மனதில் தோன்ற வைத்த உயிர். ஆனால் இச்சமயத்தில் அது ஒன்றும் அறியாமல் எங்கள் உறவின் அற்புத நாட்களில் சிலவற்றை பேசாமல் வீணடித்தது போல் ஆயிற்று.

இதற்கிடையில் நிலோ என்ற தோழியின் கதையை நாம் மறந்தே போய் இருப்போம். அள்ள அள்ள குறையா அன்பை அள்ளிக் கொடுக்கும் அவள் தற்சமயம் தன் அன்பை அவளது போசஸ்ஸிவ்(possessive) என்னும் ஆயுதம் கொண்டு எய்தால்.

நான் யாருடனாவது நெருக்கமாக பழகினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் அன்பு தடுத்தது. அப்போது possessive என்னும் சுபாவத்தையே ஏற்க என் மனம் மறுத்தது. அதை அறவே வெறுத்தேன். இருந்த போதிலும் எங்கள் நட்புக்கு பங்கம் வராத வகையில் அவளும் அதை காட்டிக்கொள்ள வில்லை நானும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

எங்களின் நட்புக்கு பல மறக்க முடியா நினைவுகளை உருவாக்கவே நாங்கள் டவுன்ஹாலும் காந்திபுரமுமாக சுற்றினோம். அப்படி ஒரு நாள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது அந்த டப்பாவை நம் நட்பின் அடையாளமாக பத்திர படுத்தி வைக்குமாறு அவள் கூறினால். தாஜ் மஹால் காதலின் சின்னம் என்றால் இந்த ஐஸ்கிரீம் டப்பாதான் எங்களின் நினைவு சின்னம்.

எப்பொழுதும் ஊருக்கு போனவுடன் சொல்லு என்று சொல்லும் நபர்களுக்கு போவதையும் வருவதையும் மறக்காமல் சொல்வது வழக்கம். அதில் நிலோவும் ஒருத்தி. இவ்வாறே பல நாட்கள் சொல்லி செல்ல ஒரு நாள் சொல்ல மறந்தும் போனேன்.

அன்று ஊர் சென்று திரும்புகையில் பரணி அண்ணா பார்க்க வருவதாக சொல்ல காந்திபுரத்தில் இறங்கியதும் அம்மாவிடம் வந்து சேர்ந்ததைச் சொல்லி முடிப்பதற்குள் என் கைப்பேசி ஸ்விட்ச் ஆஃப் (switch off) ஆனது‌. நிலோவிடம் தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஆயிற்று.

அதற்குள் அவள் செய்த அலப்பறைகளை சொல்லி மாலாது. என்னை பற்றி தகவல் தெரியாமல் அவள் தவித்த தவிப்பு இன்று நினைத்தாலும் நெஞ்சை தொடும் நினைவாகவே இருக்கிறது.

என் அம்மாவிடம் நான் கோவை வந்து சேர்ந்ததைச் சொல்லியிருக்க கூடும் என்றென்னினாள் அவள்.ஆனால் துரதிஷ்டவசமாக என் அம்மா நம்பரும் இல்லாமல் போகவே மேலும் கவலைகள் அவள் கண்களைக் கட்டின.

கடைசி முயற்சியாக என்னால் நிலோவிடம் அறிமுகப்படுத்த பட்ட என் பன்னிரண்டாம் வகுப்பு நெருங்கிய தோழிக்கு அழைத்து என் அம்மா நம்பரை பெற முயன்றால். அவளிடமும் இல்லாமல் போகவே மனதின் பாரம் தாங்காமல் அவள் கண்கள் கலங்கின. நிலோ "ஆர்த்தி எங்க போனனே தெரில மா. அவளுக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு" என்று அவள் அம்மா மடியில் படுத்து கதறியிருக்கிறாள்.


(அடுத்து: எனக்கு என்ன ஆனது என்று தெரியாமல் நாள் முழுவதும் பதறி போன அந்த இதயத்துக்கு தகவல் தெரிவிக்காத என் மீது எத்துனை கோபம் இருந்திருக்கும்‌. நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது. அடுத்த நாள் என்னை கல்லூரியில் கண்டதும் அவள் செயல் என்னவாக இருக்கும்.‌.என்னிடம் பேசுவாளா ?இல்லை என்னை ஏசுவாளா? ஏசினாலும் பரவாயில்லை ஏசிவிட்டேனும் பேசுவாளா?)
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 7
உறவுகள் தொடர்கதை


அடுத்த நாள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததுமே கோப கனலால் என்னை சுட்டு தள்ள காத்திருந்தால். நான் வகுப்புக்குள் நுழைந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட என்னை பார்த்து பேச வில்லை. அவ்வளவு ஏன் என் முகத்தை கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை‌.

அவள் கோவத்தின் காரணமும் எனக்கு தெரிந்திருந்தது. என் மீதும் தவறு இருக்கவே சாமாதானம் செய்ய வார்த்தைகள் இன்றி தவித்தேன்‌.எனவே சமாதானப் படுத்துவதற்கு மாறாக அவள் கோபமே கொள்ளாதது போல் நினைத்துக் கொண்டு நான் எப்போதும் போல பேச்சுக் கொடுத்தேன். பதில் மொழி ஒன்றும் வரவில்லை. அதற்கு காரணம் அவளது கோபம் தான் என்று எனக்கு நன்றாக தெரிந்து இருந்தது. இருப்பினும் எதுவுமே அறியாதவள் போல் வெகு சாதாரணமாக பேச்சுக் கொடுத்தேன். இதில் இன்னும் எரிச்சல் அடைந்தாள் அவள்.

கண்களில் தீப்பொறி பறக்க முறைத்து பார்த்து விட்டு தன் வேலையைப் பார்க்க தொடங்கினாள். நான் மீண்டும் சென்று ஏதும் நேராததுப் போல் படிப்பில் சந்தேகம் கேட்டேன்.தற்போது அவள் முறைக்க வில்லை. நான் எதுவுமே நடக்காததுப் போல் பேசியது முதலில் எரிச்சல் அழித்தாலும் பின்பு அது அவள் கோபத்தை தனித்தது. எதையும் நான் கண்டு கொள்ளாததால் இவளிடம் சண்டை போட முயற்சிப்பது வீண் என்று எண்ணி மனம் இறங்கினால் போலும்.

அவள் நியாயமான கோபத்திற்காக சண்டைப் போட ,அதை துளிக்கூட பொருட்படுத்தாதது போல் நடித்து அவள் மறு முறை கோபப்படக்கூட யோசிக்கும் விதமாக மாற்றி விட்டேன். இப்போது கோபத்திற்கும் வேலை இல்லாமல் இன்னும் இலகுவாக நகர்ந்தது எங்கள் நட்பு.

இதற்கு நடுவில் ரூம்மெட்களின் லூட்டி குறைந்து விடவில்லை.அறையின் கடைக்குட்டி என்பதால் அன்பில் எனக்கு எவரும் குறை வைத்தது இல்லை.ஒரு நாள் எனக்கு இடது கையில் ஏதோ தீ காயம் ஆனது போல் ஒரு சின்ன கோடு தெரிந்தது‌. ஆனால் அது எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை. தீ காயம் என்றால் கண்டிப்பாக வலித்திருக்கும் ஆக இது ஏதோ பூச்சி கடித்ததால் தான் வந்திருக்கிறது என்றனர். பின்பு என் கட்டில், மெத்தை, என் பொருட்கள் என அனைத்தையும் உதறி இனி இதில் பூச்சி இருக்காது என்று உறுதி செய்யும் வகையில் சகல வசதிகளையும் செய்து தந்தனர். போதா குறைக்கு இது நாளைக்குள் சரியாகவில்லை என்றால் மருத்துவமனை சென்ற வரலாம் என்றனர்.

வலிக்காத கடிக்கே இத்தனை அலப்பறைகள் என்றால் இதில் இரத்தம் ஏதும் வந்து இருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைக்க உதட்டில் குபுக் என்று ஒரு சிரிப்புதான் வந்தது.
இவர்கள் அன்பை நினைத்து புன்னகையும் பூரிப்புமாய் இருக்க என் பாச மணி அடித்தது

பாசங்கள் நேசங்கள் ஏதுமே
இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கை இல்லை

பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மை சேர்ந்திடுமே.
அழகாய் பூ பூத்திட வேண்டியே வேர்கள் நீர் ஈர்த்திடுமே.
இன்னோர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட வா வரம் கேட்போம்...
என்று என் கைப்பேசியின் அழைப்பு மணி அடித்தது.. அந்த வரிகளை கேட்டு ரசித்துக் கொண்டே அழைப்பை எடுத்து பேசினேன். போபியோ( bobeo) அண்ணாவின் குரல் கேட்க எப்போதும் நம்மிடம் அவ்வளவாக பேசாத பையன் நமக்கு ஏன் அழைத்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே பேசத் தொடங்கினேன்.

அவர் உடனை "அக்காக்கு கால் பண்ணேன் எடுக்கல கொஞ்சம் அக்காட குடுக்குறீங்களா " என்று பாவமாக கேட்க நான் சென்று அபி அக்காவிடம் கொடுத்தேன்.

அபி அக்கா காதில் ஒரு கெட்செட்டும்(headset) என் காதில் ஒன்றும் இருக்க அப்போது தொடங்கியது போபியோ அண்ணாவின் அக்கினி கனல் " அக்கா பரணி லா என்ன ஃபிரண்ட் (friend) அக்கா... நானும் சென்னைல தான் இருக்கேன் அவனும் சென்னைலதா இருக்கான். எனக்கு ஆஃபிஸ் மேனஜர் கூட தங்கி இருக்குறது அவ்ளோ புடிக்கலனும் தெரியும். கூப்டா உடனே ஓடி வந்துருவேனும் தெரியும். ஆனா பாருங்க கா அவன் ரூம்க்கு கூப்டவே மாற்றான். அதே ரூம்ல இருக்க மத்த ஃபிரண்ட்ஸ் லா கூப்புட்றாங்க.. இவன் தானே அக்கா என் கூட ரொம்ப க்ளோஸ்..அப்போ இவன் தானே கா என்ன கூப்பிடனும் " என்று பொறிந்து தள்ளினார்‌.

" சரி விடுங்க தம்பி அவங்க கூப்பிடலனா என்ன நீங்களே போங்க..ஃபிரண்டுட்ட இந்த உரிமை கூட இல்லையா" என்று அபி அக்கா கூற அதை ஏற்க மறுத்த போபியோ(bobeo) அண்ணன் "அட போங்க கா எப்போ பாரு நானே தான் மானம் கெட்டு போய்ட்டு இருக்கேன்..இந்த வாட்டி அவன் கூப்பிடாம நான் போ மாட்டேன் அக்கா " என்று சொல்லிவிட்டார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள்ளே அபி அக்கா கைப்பேசிக்கு பரணி அண்ணாவின் அழைப்பு வந்தது. உடனே போபியோ அண்ணா காலை கட் செய்து விட்டு பரணி அண்ணாவிடம் போபியோ அண்ணனாவை தங்கள் ரூம்க்கு அழைக்குமாறு அபி அக்கா சொன்னாள்.

இது வரையில் அமைதியாய் கேட்டுக் கொண்டு இருந்த பரணி அண்ணா " நான்லா கூப்பிட மாட்டேன்..அவனுக்கு வரத்துக்கு உரிமை இருக்கு.. அவனே வரட்டும் ஏன் நான் கூப்டா தான் வருவானா.. அன்னியனா அவன்.. நீ என்ன சொன்னாலும் நான் கூப்பிட மாட்டேன்" என்று கூறிவிட்டு வைத்துவிட்டான்.

பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் ஓர் இதயம் தன்னை ஒருவர் எதிர்பார்க்கிறார் என்பதில் உள்ள ஆனந்தத்தை அவன் அழைக்கையில் பெற்று விடலாம் என்று துடிக்கிறது. இன்னொரு இதயம் மிகவும் எதார்தமாக அவன் வரவை எதிர்நோக்குகிறது. இதற்கு இடையில் இருவரையும் சேர்த்து வைக்கும் போராட்டத்தில் சிக்கிக் கொண்டோம் நானும் அபி அக்காவும்.

(அடுத்து : அன்பை எதிர்பார்த்த இதயத்துக்கு ஆறுதல் கிடைக்குமா, பரணி அண்ணா அழைப்பானா? இல்லை எதிர்பார்த்த இதயத்தில் ஏமாற்றமே மிஞ்சி போய் வெறுத்து போன இதயத்தால் விரிசல் விழுந்து விடுமோ இந்த வினோதமான நட்பில்..ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் சொன்ன படியே பேசாமலே போய் விடுவாரா போபியோ அண்ணா?)
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
உறவுகள் தொடர்கதை

அத்தியாயம் 8

பரணி தன்னை அழைக்காத வருத்தம் ஒரு புறம் இருக்த தானாக போய் பேசிவிட கூடாது என்ற வைராக்கியம் ஒரு புறம் இருக்க எப்போதுமே பாச கயிற்றில் கட்ட பட்ட தன் இதயத்திற்கு இதை புரிய வைக்க முடியாமல் தவிப்பில் தள்ள பட்டார் போபியோ (bobeo).

கடைசியில் வேரு வழியின்றி தானே சென்று தாவி கொண்டான் தன் நண்பனோடு. ஒவ்வொரு முறையும் இவர்கள் சண்டை முடிவதற்குள் நாங்கள் இடுக்கில் சிக்கிக் கொள்வது வழக்கம். மனதில் தன் நண்பன் மீது வருத்தங்கள் இருந்தாலும் ஒரு போதும் அவன் இறங்கி வரட்டும் என்று காத்திருந்ததில்லை போபியோ.


இவர்களின் சண்டை சட்டியில் போட்ட கடுகு போல் சிறிது நேரம் பொறிந்து தள்ளி விட்டு பின்பு அமைதியாய் நட்பிற்கு சுவை சேர்க்கும். இதுபோல் வந்த ஒரு சண்டையில் ஏமாந்து போய்விட்டோம் நாங்கள்.


இருவரின் சொந்த ஊர்களும் அருகருகே இருக்க சென்னையில் இருந்து ஒன்றாக ப‍‌‌யணம் செய்ய ஏதுவாகியது. ஆனால் அதிலும் ஒரு பூகம்பத்தை கிளப்பி விட்டனர்‌.


‌வழக்கம் போல் போபியோவிடமிருந்து அழைப்பு மணி வந்தது. ஆரம்பமானது அரங்கேற்றம்.


" பாருங்க அக்கா பரணிய என் கூட வர சொன்னா வர மாட்டேனு சொல்டான். வேலை இருக்கு லேட் ஆகும்-னு சொல்டு இப்போ பஸ் ஏறிட்டான் இதான் அவன் வேலையா.. நான் இனி அவன கூப்டவே மாட்டேன் கா" என்று பாசத்தின் பரிதாபமும் கோபத்தில் கொந்தளிப்பும் பொங்க பேசிவிட, அபி அக்கா சமாதானம் செய்ய பரணி அண்ணாவை அழைத்தாள். இருவரையும் கான்பரன்ஸ்- சில் பேச வைக்க முயன்றோம்.


அவன் வழக்கம் போல் குதர்கமாக பேச செய்வதறியாது தவித்துப் போனோம். சாமாதானம் செய்ய வழி இல்லாமல் சண்டையை சாதுவாய் கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்க முடிந்தது எங்களால். திடீர் என்று ஓட்டுனர் ஹாரன்(horn) அடிக்க அதன் ஒலி இருவரின் கைபேசியிலும் ஒரே போல் ஒலிக்க திடீர் என எனக்கு ஒரு சந்தேகம் உதித்தது. இருவரும் ஒரே பேருந்தில் சென்றுக் கொண்டு நம்மை ஏமாற்றுகின்றனரா என்று அக்காவை உறுதி செய்ய சொன்னேன்.


அவர்கள் இருவருமே இல்லவே இல்லை என்று சாதித்தனர்‌‌. கடைசியில் போபியோ அண்ணா போர்(bore) அடித்துப்போய் உண்மையை சொன்னான்.


"ஒரே பேருந்தில் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எவ்வளவு நேரம் தான் போனில் பேசுவது" என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.


இவர்கள் சண்டையில் மனம் சளித்து போன அக்காவுக்கு அது நாடகம் என்று தெரிந்ததும் கோபம் வந்துவிட்டது. இவர்களிடம் பேசவே கூடாது. இவர்களை நாம் சமாதானம் செய்ய போராடினால் ஆப்பு என்னமோ நம்மளுக்குதான். கடைசில ரெண்டு பேரும் சேர்ந்து என்ன ஏமாத்திட்டாங்க. ம்ம்ம்ம்ம்.. இனி என்ன ஆனாலும் பேசக்கூடாது என்று தனக்குள் முனகியபடி சபதம் செய்துக்கொண்டாள் அபி அக்கா.


அவள் கோபத்தில் இருப்பதை உணர்ந்த போபியோ அக்காவை எப்படியேனும் சமாதானம் செய்து விட வேண்டும் என போராட, பரணியோ அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தான். இது அபி அக்காவை இன்னும் கோபம் ஆக்கியது.


எப்படியோ போபியோ(bobeo) கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக அக்காவை சமாதானம் செய்து விட்டான்.


இவை நடந்து முடிவதற்குள் விடுதி அறையின் உள் இருந்து ஒரே இரைச்சல் சத்தம் கேட்டது. போய் பார்த்தால் அனைவரும் கிண்டலும் கேளியுமாய் ஒருவரை ஒருவர் வம்பிழுக்க, கூச்சல் சத்தம் கீழ் அறை வரை காதை கிழித்தது. இது போக எப்போதும் போல் ஸ்பீக்கரில் பாட்டு கூடவே ஒட்டுக்கொண்டது. கதவை தப்பி தவறி திறந்து வைத்து விட்டால் நாம் பேசும் அனைத்தும் கீழே கேட்கும். அப்படி ஓர் அற்புதா அமைப்பு வேறு. அதில் ஸ்பீக்கரில் பாடல் என்றால் சொல்லவா வேணும். நாங்கள் இருவரும் மீண்டும் பேச செல்லும் ஆர்வத்தில் கதவை திறந்து வைத்து விட்டோம். பிறகு நடந்ததை விவரிக்கவா வேண்டும். கீழ் அறையில் இருந்து பொங்கி மேலே வந்தவர்கள் 'அக்கா, டவுன்ட் கொஞ்சம் கம்மி பண்ணி வச்சிங்கோங்க கா. ரொம்ப டிஸ்டர்ப்-ஆ இருக்கு. இல்லனா, வார்டன்டதா கா சொல்லனும்' என்று கெஞ்சும் தோணியில் மிரட்டி விட்டு சென்றனர். நாம் செய்த லூட்டிக்கு இந்த ரியாக்க்ஷன் கூட இல்லனா எப்படி.


அடுத்து பரணி அண்ணா பிரச்சனையை தொடங்கினான். அபி அக்காவையும் என்னையும் லீவ் போட சொல்லி கேட்க, அபி அக்கா தன்னிலையை விவரிக்க முயன்றாள்.
"உங்களுக்கே எங்க மேம் பத்தி தெரியும். ராட்சசிங்க. லீவ் போட்டா கொண்னுடுவாங்க. மார்க்ல கை வைப்பேனு மிரட்டுவாங்க. பெரிய பிரச்சனை" என்று அவள் முயற்சிக்க முன் வந்தது வீணாக போக, அதெல்லாம் தெரியாது நீ வந்தே ஆகனும் என்று பரணி முடித்தான்.


புரியாமல் பேசுகிறாய் என்று சொன்னாலும் கோபம் வந்து விடும். நாளை போனால் பிரச்சனை. போகவில்லை என்றாள் பரணி இனி பேசாமல் இருக்க வாய்ப்பு அதிகம்‌. வீம்பு காரன்.


யோசனையில் மூழ்கினாள் அபி அக்கா.


(அடுத்து: அபி அக்கா கூல் ஆன மறு புறம் பரணி அண்ணா சூடாகி விடுவாரோ?. சில நேரம் போபியோவும் பரணி அண்ணாவும் போடும் சண்டையைத் தீர்த்து வைப்பது எங்கள் வேலை. சில நேரம் அபி அக்காவும் பரணி அண்ணாவும் சண்டை போடாமல் பார்த்துக்கொள்வதே போபியோக்கும் எனக்குமான வேலை. நாளை என்ன நடக்க போகிறதோ?)
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
உறவுகள் தொடர்கதை

அத்தியாயம் 9

காலை நேரம் மரங்களின் கிளைகள் அசைய மெல்லிய சத்தத்தில் இனிமையாய் உதித்தது காலை நேரம். கண் திறக்க முயன்றால் அது மட்டும் நடப்பதாக தெரியவில்லை. கண் 'உறங்கு' என்று கட்டளையிடுவது போல் ஒட்டிக்கொள்ள எப்படியோ போராடி கண் விழித்தோம். மிக அமைதியாய் ஆரம்பித்த காலை பொழுதை அதிர்வலைகளுடன் கொண்டு போக வந்தது அந்த கால். பரணி அண்ணா காலை எழுந்தவுடன் ஃபோன் செய்து 'நீங்க வர முடியுமா முடியாதா?' என்று அதட்டும் குறளில் கேட்க இன்று கண்டிப்பா ஒரு கொலை விழ போகுது என்று நினைத்த அபி அக்காவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. எப்படியோ சாமாளித்து பார்ப்போம் என்று முடிவு செய்து அவள் பேச அங்கு ஒன்றும் எடு பட வில்லை.

கடைசியில் கெஞ்சி கூத்தாடி மதியம் தான் வர முடியும் என்று சொல்லி சமாதானம் பண்ணி பின் எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டாள். இன்று சீக்கிரம் சென்றால்தான் எதாவது சாக்கு சொல்லி மதியம் கிளம்ப முடியும் என்பதே அவரின் கணிப்பு. அதற்கு மேல் என்ன நடக்க போவது என்பது ஆண்டவன் கையில்.

அவர் செல்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த நான் இன்னும் படுக்கையை விட்டுக்கூட நகரவில்லை. வழக்கம் போல் மெதுவாக ஆடி அசைந்து பல் விலக்கி, தன் துணிகளை எடுத்து வைத்து, அங்கும் இங்கும் காரணம் இல்லாமல் நடந்து, குளிக்க போகவே மணி 9.10 ஆகி விட்டது‌. பொறுமையாக குளித்து முடித்து வெளியே வர பரபரப்புடன் வந்து நின்றாள் நிலோ. 9.25ஆகி இன்னும் இவள் கிளம்பவே இல்லையே என்ற ஆதங்கத்தில் அவளை விரட்டி கிளம்ப வைத்தாள்.

ஆனால் இன்றும் வழக்கம் போல் தான். என் சால் எங்கே என்று தேடி மடித்து போட்ட நான் அதை குத்த 'பின்' தேடி அழைந்ததில் இரண்டு நிமிடம் ஓடி விட்டது. பின் சாப்பாடு வேறு சாப்பிட்டதாக வேண்டுமே. சாப்பிடாமல் வர சொன்னால் அவ்வளவு தான் பூகம்பமே வெடித்து விடும். அதனால் தன் தலையெழுத்து என்று நினைத்துக்கொண்டு தட்டில் இருந்த டிபனை எடுத்து அவள் ஒரு புறம் ரெடி ஆக இன்னொரு புறம் நம் நிலோ அவளுக்கு ஊட்டி விட்டு முடித்தாள். நான் என்னவோ பதட்ட படுவதாக உத்தேசம் இல்லை.

கண்ணாடி முன் தலையை சீவ ஆரம்பித்து கையில் கோர்வையாய் முடியை வைத்துக்கொண்டு கிளிப் எங்கே என்று தேட ஆரம்பித்தேன். அது கண்ணில் சிக்குவதாக இல்லை. அய்யோ இவளோட தினமும் போராட்டமா இருக்கே என்று நினைத்துக்கொண்டு என்னை பார்த்து முறைத்தாள். என்னிடம் பல தடவை அவள் சொல்வதுண்டு கிளிப் எடுத்து வைத்துக்கொண்டு தலை சீவ சொல்லி, ஆனால் அது என் அறிவுக்கு எட்டவே இல்லை.
அவளுக்கு சொல்லி சலித்து போய் விட்டது. இன்று அவளே இறங்கி தேட ஆரம்பித்தாள்.

"எங்க தான் போடுவியோ மா. உன்ன தினமும் கிளப்பி கூடீடிட்டு போறதுலயே எனக்கு சீக்கிரம் வயசாகிடும் போல. எப்போதும் கட்டில் ல பேக்கிங்கோட வந்த கயிர கலட்டாம வச்சுருப்பாங்கலே அதுலதானே மாட்டிருப்பா" என்று சொல்லிக்கொண்டே திரும்ப அதே கயிற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது அந்த கிளிப். அல்லாவின் கிருபை என்று நினைத்துக்கொண்டு என்னிடம் எடுத்து நீட்டிவிட்டு இனியாவது சீக்கிரம் கிளம்பு தாயே என்பது போல் பாவமாக ஒரா பார்வை பார்க்க, இப்போதுதான் சற்று பரபரப்பாக கிளம்பினேன்.

இப்போ மணி 9.35. தடுக்கி விழும் தூரத்தில் கல்லூரி என்றாலும் தடுக்கி விழவே படிகள் கணக்கில்லாமல் இருக்கிறதே. அதை கடக்கவே கண் கட்டுமே. மூனு மாடி. அதுவும் 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ஏற நினைத்தால் பரலோக ஏணியில் ஏற வாய்ப்பு அதிகம்‌. எப்படியோ ஒரே நிமிடத்தில், கார் காரர்களிடம் அவசரமாக ரோட் கிராஷ் பண்ணியதற்கு திட்டு வாங்கி கல்லூரி வாசலை வந்தடைந்தோம்.

எங்களின் குறும்பு இந்த நேரத்திலும் ஓயவில்லை. நடந்து கேட் பக்கத்தில் சென்றுக்கொண்டு இருக்கையில் எதிரில் ஒரு குதிரை நிற்க அதை பார்த்துவிட்டு நிலோ என்னிடம் 'இந்த குதிரை திடிர்னு என் பக்கம் திரும்பி தூக்கி வீசுற மாதிரி வந்தா என்ன பண்ணுவ' என்று கேட்டாள். அதற்கு என் ஒரு வரி பதில் 'விட்டுட்டு ஓடிடுவேன்' என்பதுதான்.

என் வார்த்தைகளை கேட்டவள் அதிர்ச்சியில் என்னை கண்கொட்டாமல் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு 'அடி பாவி நீயெல்லாம் ஒரு ஃபிரண்டா. தோழிக்கு ஒன்னுனா பாஞ்சு வந்து காப்பாத்துவனு பாத்தா பயந்து ஓடிருவேனு சொல்ற. உசுரே போனாலும் உன் கிட்ட காப்பாத்துன்னு கேட்க மாட்டே மா' என்று அதே அதிர்ச்சியில் பேசிவிட்டு மீண்டும் விறு விறு நடையை நடந்தோம். ஏதோ அன்று எங்கள் நல்ல நேரமாக மேம் 5 நிமிடம் தாமாதமாக வர போய் நாங்கள் தப்பித்தோம்.

மதியம் லஞ்ச் பிரேக் விட்டதும் ஓட்டம் பிடித்தேன். எனக்கு முன் அபி அக்கா அங்கு இருந்தாள். இருவரும் கிளம்பி பஸ் ஏறி நேரத்திற்கு ஓடி போய் சேர்வதற்குள் போதும் என்றாகிவிட்டது. ஆனால் அங்கு போய் பார்த்தால் அவர்களை காணவில்லை. ஃபோன் செய்து கேட்டால் இப்போதான் வந்துட்டு இருக்கோம் என்று சொல்ல எங்களுக்கு வந்த கோபத்திற்கு கடித்து குதறிவிடலாம் போல் தோன்றியது.

இதோ வந்துட்டோம் இதோ வந்துட்டோம் என்று சொல்லி அரை மணி நேரம் கழித்து அரை வாங்க தாயாராய் வந்தார்கள். அதிலும் பரணி அண்ணா சேர மாட்டார். தன் மேல் தப்பே இல்லாதது போல் ரொம்ப கேஷுவலாக வந்து நிற்பான். என்ன செய்ய இப்போதும் நாங்கள் திட்ட எங்கள் கையில் கிடைத்தது போபியோதான். ஒழுங்கா நேரத்துக்கு வர மாட்டீங்களானு அபி அக்கா திட்டுனப்ப 'எல்லாம் இந்த பரணி நாலதான் அக்கா' என்று பாவமாய் பதில் கூறியவனை மேலும் திட்ட மனம் வரவில்லை.

பசியில் சாப்பிடாமல் வந்த எங்களுக்கு 'முதலில் சாப்பிட அழைத்து செல்ல வில்லை என்றால் நடக்குறதே வேற' என்று சொல்ல தோன்றியது‌. ஆனால் எங்கள் கண் பார்த்து கண்டு பிடித்தான் போபியோ. அதுவரை சாப்பிடகூட அழைக்காத பரணி, வேகமாக முந்திக்கொண்டு முன் சென்றான். இப்படி பொண்ணுங்கள பின்னாடி விட்டு முன்னாடி நடக்குறதுதான் அண்ணனுக்கு அழகா என்று நான் கேட்டதும் சட்டென திரும்பி பார்த்தவன் 'நீ பொண்ணா' என்று கேட்க, நான் கோபத்தில் கத்தினேன். கடைசியில் ஒரு வழியாக காவலன் போல் பின் தொடர்ந்தான்.

விடாமல் பேசும் அவனின் குறள் மௌனம் ஆனது. அதன் காரணம் அறிய திரும்பி பார்த்தவுடன்தான் தெரிந்தது அவன் கண்கள் அங்கு நடந்து வந்து கொண்டிருந்த பெண்களை ஆராய்வதில் பிஸியாக இருந்ததால் வாய் வேலை செய்ய மறுத்தது என்று. தங்கமான தங்கையாக அவன் தலையில் ஒரு தட்டு தட்டினேன். கேட்பான அந்த கோபியர் கொஞ்சும் கண்ணன். அவர்கள் அருகில் வர, யார் என்றே தெரியாத அந்த கன்னிகளைப் பார்த்து 'ஹாய்' என்று காதோரம் கத்த இந்த குறும்புக்காரனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று கொதித்து எழ பின் சிரித்துக்கொண்டே இவன் இப்படிதான் என்று மனம் பழகிக்கொண்டது.

அவர்கள் வழக்கமாக போகும் ஹைதிராபாத் ஹோட்டல்குள் நுழைந்து பசியில் இருந்த என்னையும் அபி அக்காவையும் விட முட்ட முட்ட சாப்பிட்டு எழுந்தான் பரணி. நல்ல வேலை நம்ம கூட இருக்கான் இல்லனா இது சாப்பிட்டேன் அது சாப்பிட்டேன் என்று சொல்லி வெறுப்பேத்திருப்பான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்து போகும் இடம் என்ன என்று நால்வருக்குமே தெரிந்ததுதான்.

மெல்ல நடந்து, சிரித்து பேசி, ஐஸ்கிரீம் சாப்பிட கிலேசியர் பார்க் கடை உள்ளே நுழைந்ததும் குளிர் பிரதேசம் போல் அந்த இடம் கொஞ்சம் நடுக்கம் தந்தது. கூட இருப்பவன் இப்படி குறும்பு பண்ண இவங்க மட்டும் ஏன் இப்படி அமைதியா இருக்காங்க என்று யோசித்து கொண்டு அபி அக்காவிடம் கேட்க என் தம்பி எப்போதும் அப்படிதான் ரொம்ப அமைதி என்று சொல்லி போபியோவுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தாள்.

அங்கு வேலை பார்ப்பவர்களே எங்களை எழுந்து போகச் சொல்லும் பாணியில் பார்க்கும் அளவுக்கு அலப்பறைகளை கூட்டி நீண்ட நேரம் பேசிய பின்பே எழுந்து சென்றோம். பின் அவர்கள் பஸ் ஏறி ஊர் செல்ல நாங்கள் விடுதி திரும்பினோம்.

இந்த உறவுகள் உணர்வுகளில் கலக்க ஆரம்பித்தது. இவர்களை விட்டு பிரிந்து ஒரு வாழ்வா என்பது போல் தோன்றியது. ஃபோன் கால்களில் அண்ணனின் உறவும் வழு பெற்றது. மறு புறம் அவ்வப்போது அபி அக்கா போபியோவுக்கு கால் செய்து தான் பரிட்சைக்கு படித்தவற்றை அவனுக்கு சொல்லித் தந்து அவனை கொள்வதுண்டு. இப்படி அழகாய் இமைப்பொழுதில் மாதங்கள் கழிய இவர்களை பிரிந்து விடுவோம் என்ற எண்ணம் மனதை வாட்ட ஆரம்பித்தது. இவர்களின் இணக்கம் பிணக்கம் ஆகி விடுமோ என்ற அச்சமும் இவர்களும் மற்ற நட்பு கதைகள் போல் இனி நம் வாழ்வில் வெறும் நினைவுகளாக மாறி விடுவார்களோ என்ற எண்ணமும் சேர்ந்து குழப்பத்தில் திளைக்க வைத்தது‌.


(அடுத்து: அழகாய் அரங்கேறிய உறவு, சிறு சண்டை இல்லாத இனிமை, ஒரு வருடம் தாண்டிய பாசம் இதில் பிரிவுக்கு என்ன வேலை. இதையும் கடக்குமா இந்த உறவுகள். விடைதர காத்திருக்கிறது அடுத்த பகுதி)
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
உறவுகள் தொடர்கதை

அத்தியாயம் 10

நான் இருந்த ரூம்மில் அனைவருமே என்னைவிட ஐந்து வயது பெரியவர்கள். அவர்களின் தீசிஸ் வொர்க் முடிவடையும் நாள் நெருங்க இவர்கள் என்னுடன் இருக்க போவது கொஞ்சநாள் தான் என்னும் எண்ணமும் அவ்வப்போது வந்து செல்லும். அதையும் தாண்டி தீசிஸ் என்ற பெயரில் கார்த்திகா அக்கா அடித்த லூட்டிகள் இன்னும் நினைவில் இருக்கிறது.


அவள் தேடி பிடித்த கம்பெனி அப்படி. போகமலே சர்ட்ஃபிகேட் தந்து விடுவார்கள். இது கார்த்திகா அக்காவுக்கு மிகவும் வசதியாக போனது. நாங்கள் காலை எழுந்து அவசர அவசரமாக காலேஜ் கிளம்ப நாங்கள் டாடா சொல்லும் நேரத்தில்தான் அவள் கண்ணை சிமிட்டிக்கொண்டு அரை கண்ணில் டாடா சொல்வாள். 'நாங்க கிளம்புறப்ப நீங்க தூங்குறத பாத்த வயித்தெரிசலா இருக்கு கா' என்று அபி அக்கா தினமும் பொறாமையில் பொங்கி விட்டு கிளம்புவதுண்டு. இப்படி நாட்கள் செல்ல மாற்றங்களும் சூழ் கொண்டது. வேலை என்பதை செய்து பழக்கபடாதவள் நான். கடை குட்டிக்கு கிடைத்த வரம் இதுதான். சின்ன பொண்ணு என்று சொல்லி அவர்களே முக்கால்வாசி வேலையை செய்து விடுவார்கள். இப்போது பாவம் தீசிஸ் வேலை ஆரம்பிக்க அவர்களுக்கு மற்ற வேலைகளை பார்க்க நேரமே கிடைப்பதில்லை. படுத்து படுத்து பொழுதை கழித்த கார்த்திகா அக்கா கூட இப்போது பிஸி ஆகிவிட்டாள். இப்போதுதான் தான் தூங்கி கிடந்ததின் துக்கம் அறிந்தாள். செய்யாத வேலையை எல்லாம் செய்ததாக எழுத வேண்டும். அதற்கு அது என்ன வேலை என்று தெரிய வேணடுமே.. அந்த தேடல் மண்டை வெடிப்பது போல் இருந்தது கார்த்திகா அக்காவுக்கு.


முன்பெல்லாம் வாரம் ஒரு முறை ரூமை சுத்தம் செய்ய, எனக்கு டஸ்ட் அலர்ஜி என்பதால் எனக்கு மட்டும் சேர் கொடுத்து வெளியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க அனுப்பி விடுவர்‌. ஒரு நாளும் ரூம் துடைத்தது இல்லை இந்த ஒரு வருட சரித்திரத்தில். இப்போதோ அக்காகளுக்கு இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை. அந்த வேலையை நான் கையில் எடுக்க முடிவு செய்தேன். ஒரு நாள் எல்லோரும் தீசிஸ் வேலைக்காக காலேஜ் செல்ல நான் மட்டும் ரூம்மில் இருந்தேன். அவர்கள் வருவதற்குள் சுத்தம் செய்து விடலாம் என இறங்கி இரண்டு மணி நேரம் கழித்து ஒருவழியாக முடித்துவிட்டேன்.


அவர்கள் வந்து பார்த்து 'உன்ன யாரு இதெல்லாம் செய்ய சொன்னது' என்று திட்டினார்கள். பின் ஆர அமர பேசி சிரித்து நாட்கள் சென்றது. இடை இடையே அவர்கள் கேள்விகள் அம்புகளாய் பறக்கும்


"நாங்க போக போறோமே உனக்கு வருத்தமா இல்லையா" என்று அவர்கள் கேட்க சிரிப்பையே பதிலாக தர 'இவ என்ன நினைக்கிறானே தெரிலயே' என்று சொல்லி சொல்வதுண்டு. விட்டு போகும் உறவுகள் தொடருமா என்று தெரியவில்லை. ஆனால் போகும்போது இவளை தனியாக இங்கு விட்டு போக கூடாது என்ற அவர்களின் எண்ணம் என்னை பூரிக்க வைத்தது‌.


இந்த விடுதியில் சாப்பாடும் சரியாக இல்லை‌. நாங்களும் இனி உன்னுடன் இருக்க போவதில்லை‌. பேசாம உனக்கு வேற நல்ல ஹாஸ்டல் பாத்து கொடுத்துட்டு போறோம் என்பது அவர்களின் பேச்சு. இவர்கள் இல்லாமல் ரூம் முழுவதும் இவர்கள் நினைவு மட்டும் இருக்க அங்கு இருப்பது சற்று சங்கடமாகவே தோன்றியது. இங்கு இருந்தால் இவர்களை மிஸ் பண்றோம் என்கிற எண்ணம் அதிகம் ஆகும் என்பதால் நானும் வேற ஒரு விடுதியைத் தேடுவதே உகந்ததாக எண்ணினேன். அவர்களும் என் எண்ணத்திற்கு ஏற்ப என் குணத்துக்கும் பொருந்தும் வகையில் ஒரு விடுதியை தேடினார்கள். அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தார்கள்.
எங்கள் விடுதிக்கு பின்புறம் இருக்கும் விடுதியை சொல்லி..ஆனால் அங்கு எல்லாம் ரொம்ப மார்டனா இருப்பாங்க. டக்குனு பழக மாட்டாங்க. ஆர்த்தி அடிக்குற வாய்க்கு அது செட்டே ஆகாது என்று அவர்களே முடிவு செய்து அதை நிராகரித்து விட்டனர். அடுத்த தேடல் துவங்கியது.


ஒரு நாள் என் தோழியிடம் இருந்த என் புத்தகத்தை வாங்க அவர்கள் ஹாஸ்டலுக்கு போனோம். என்னுடன் அபி அக்காவும், கார்த்திகா அக்காவும் வர அவர்களுக்கு விடுதியை பார்த்தும் பிடித்துவிட்டது. உள்ளே சென்று பார்த்தால் டபிள் காட்டாக இல்லாமல் அவர்அவர்க்கு தனியாக கட்டில், காற்றோட்டமான இடம், ரூம்க்கு ஒரு கப்போர்ட் மற்றும் ஒரு டேபிள் என மிக சவுகரியமாக இருந்தது அந்த அறை. பின் அவள் என் புத்தகத்தை எடுத்து வருவதற்குள் மற்றவர்களிடம் சாப்பாட்டை பற்றி விசாரித்து விட்டு அதுவும் நன்றாக இருப்பதை உறுதி செய்த அவர்களுக்கு எல்லாம் ஓகேவாக இருந்தது. எங்கள் விடுதி நோக்கி நடக்கும் போது 'இந்த ஹாஸ்டல் ஓகே ல'என்று பேசிக்கொண்டு வந்தனர். "எனக்கு இந்த ஹாஸ்டல் வேண்டாம்" என்று உறுதியாக நின்றேன். அங்கு வசதிகள் சகலமும் உண்டு. ஆனால் நம் ரூம்க்கு புதிதாக யாரோ வந்திருக்கிறார்களே என்று பார்க்க கூட அவர்கள் தலையை நிமிர்த்த வில்லை. முகம் முழுக்க மொபைலில் புதைந்திருந்தது‌. பேசும் போது தோழமையோடு பேசினாலும் அந்த பேச்சே அத்தி பூத்தார் போல் இருந்தது. சற்று எங்களின் விடுதியை யோசித்து பார்த்தேன்.


அப்போது என்னுடைய ஃபோனோ கீப்பேட் செட். அது சில நேரங்களில் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும். அது கூட தெரியாமல் அரட்டை அடிப்பதுண்டு. மூன்று நாள் கழித்து அம்மாவின் அழைப்பு வருமே என்று நினைக்கும் போதுதான் அதன் நியாபகமே வரும். ஆனால் கால் செய்து கண்டு பிடிக்கவும் முடியாதே...என்னோடு சேர்ந்து எல்லோரும் ரூம் முழுக்க தேடுவார்கள். பேக் அத்தனையும் தூக்கிப்போட்டு தேடி கடைசியில் கையில் சிக்கும்‌. அப்படி இருக்க நான் அங்கு பார்த்த காட்சி எனக்கு வேறு விடுதியே வேணாம்,ஆனபடி ஆகட்டும் இங்கேயே இருக்கேன் என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளியது.


இருக்கும் நாட்களை எப்போதும் விட இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக களித்து விட்டு போக நினைத்தனர். இருப்பினும் என் மனதில் எண்ணம் எல்லாம் வரப்போகும் ரூம்மெட்களை நினைத்தே உருண்டோடியது. அவர்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள்? இதுவரை சண்டையே வராத ரூம்மில் இனி சண்டை வந்தால் எப்படி சமாளிப்பது? நிம்மதி எல்லாம் போய்விடுமோ? இப்போது இருக்கும் இவர்களுடனான நட்பு இந்த பிரிவோடு ஒரேடியாக முடிந்து விடுமா? திரும்ப சந்திக்க முடியுமானு கூட தெரிலயே.அப்புறம் எப்படி தொடர்பில் இருப்பார்கள்? என்று பல கேள்விகள் ஓடியது. அதை நினைவுக்கு வராமல் தடுப்பது நாங்கள் செய்யும் சேட்டைகளும் காமெடியும் தான்.


ஒரு புறம் பயமும் மறுபுறம் மகிழ்ச்சியும் கலந்த மனநிலையில் பயணிக்க அவ்வப்போது இவர்கள் பாசத்தையும் காமெடியையும் கலந்து தருவதுண்டு.


நான் ஊர் சென்று வர அவர்கள் தீசிஸ் வேலை காரணமாக விடுதியிலேயே தங்கி விட்டனர். ஏதோ வாங்க காந்திபுரம் வர நான் வருகிறேன் என்று தெரிந்ததும் பஸ் டாப்பில் வெயிட் பண்ணி என்னையும் அழைத்து செல்லவே நினைத்தனர். ஆனால் நான் தெளிவாக சொல்லிவிட்டேன் நான் வர ஒரு மணி நேரம் ஆகும் என்று. அபி அக்காவும் கார்த்திகா அக்காவும் நாம் அவள் வரும்வரை எங்கு இருப்பது?ஏற்கனவே வேலை எல்லாம் முடிச்சாச்சே என்று யோசித்துவிட்டு 'பரவால நீ வா நாங்க வெயிட் பண்றோம்' என்று அவர்கள் அடம் பிடிக்க மறுக்க முடியாமல் நானும் தலை அசைத்தேன். ஒரு மணி நேரம் என்று சொன்னது ஒன்னரை மணி ஆனது. பாவமாய் வந்து இறங்கி அவர்களை பார்க்க, வெயிட் பண்ணி வெறுத்து போய் இருப்பார்கள் என்று பார்த்தால் அவர்கள் முகத்தில் பிரகாசம் சுடர்விட்டது. ஒன்றும் புரியாமல் தவிக்க என்னை விடுதிக்கு அழைத்து சென்று அவர்கள் செய்த லூட்டியை விவரிக்க ஆரம்பித்தனர்.


"நீ வர வரைக்கும் எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஆர்த்தி. ஜூஸ் கடையிலே இருபது நிமிஷத்துக்கு மேல ஓட்ட முடியில. அதுனால கார்த்திகா அக்கா ஐடியா படி கணபதி சில்க்ஸ் உள்ள நுழஞ்சுட்டோம்" என்று சொன்னதும் அதில் பெரிதாக சிரிக்க ஒன்றும் இல்லையே என்பது போல் நான் பார்க்க அவள் தொடர்ந்தாள்.


"நாங்களும் சும்மா பாக்கலாம்னுதான் போனோம். அங்க சுடிதார் பாத்துட்டு இருக்கப்ப அங்க வேலை பாக்குற ஒருத்தர் வந்து என்ன மா வேணும் என்ன பாக்குறீங்கனு கேட்டுட்டே இருந்தாரு. சரி அவர் கேட்குறாறேனு நாங்களும் சொன்னோம். உடனை இந்த சுடிதார் வேணுமா அந்த சுடிதார் நல்லா இருக்கானு கேட்க ஆரமிச்சுட்டாரு..." என்று ஷாக்காக சொன்னாள்.


"அப்புறம் என்னக்கா பண்ணீங்க. இப்படி சும்மா போறப்ப யாராவது இப்படி கேட்டா சங்கட்டமா இருக்கும்ல" என்று நான் கேட்க


"நாங்க சங்கட்ட படலயே. அவர் கம்மியான ரேட்டுக்கு காமிச்சாரு. நாங்க திரீ தவுஸ்சன்க்கு மேலதான் வேணும்னு கராரா சொல்லிட்டோம். நம்மல புரிஞ்சுக்கிட்டு விட்டுறுவாரு பாத்தா இன்னும் தீவிரமா காமிக்க ஆரம்பிச்சுட்டாரு" என்றாள் அபி.


"அக்கா என்னக்கா இது காமெடி. நம்ம இதுவரை ஆயிரத்த தாண்டி டிரஸ் வாங்குனதே இல்லையே" என்று சிரித்தேன்.


"ம்ம்ம்ம்..கேளு.‌..அதுல கார்த்திகா அக்கா எல்லோ கலர் சுடி ஒன்னு சூப்பரா இருக்குனு சொல்ல அவர் 'எடுத்துக்கோங்க
ரொம்ப நல்லா இருக்கும். துணி சூப்பரா இருக்கும்' ன்னு சர்டிஃபிகேட் குடுத்தாரு. பத்தாததுக்கு பேக் பண்ணிறலாமானு கேட்டுட்டு நின்னாரு. இவ்ளோ சொல்றாரு அவர் மனச கஷ்ட படுத்த வேணாமேனு நாங்களும் பேக் பண்ண சொல்லிட்டோம். ஆனா எங்க பர்ஸ்ச பாத்தா ஏன்கிட்ட ₹20 அப்புறம் கார்த்திகா அக்கா கிட்ட ₹20 தான் இருந்தது" என்று சொல்ல எனக்கு சிரிப்புதான் வந்தது. ஐந்து நிமிடம் வயிறு வலிக்க சிரித்து முடித்த பின்னும் அபி அக்கா நிறுத்துவதாக இல்லை.


"வெளில போனா எதுவும் வாங்கலயா ஏன் மேடம் சொல்லுங்கனு கேட்பாங்களேனு யோசிச்சோம். பேக்கிங் செக்ஷன் ல டிரஸ் ரெடியா இருக்கு ஆனா காசு இல்ல. பாத்தோம்..நிறைய டிரஸ் வாங்கிட்டு ஒரு ஃபேமிலி கிளம்பிச்சு. நாங்களும் அவர்களுள் ஒருவர் மாறி ஒளிஞ்சு ஓடி வந்துட்டோம்.வெளில வந்து என் ₹20 க்கு கலந்த வடை வாங்கிட்டு மீதி ₹20 க்கு நம்ம பஸ் டிக்கெட் எடுத்து வந்து சேந்தாச்சு" என்று அவள் சொல்ல அவளுக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை. சாதாரண கதையையே நகைச்சுவையாய் சொல்பவள். இதில் இவர்கள் செய்த நகைச்சுவையை சொல்வதென்றால் அவள் பற்றி சொல்லவா வேண்டும். அவள் சொன்ன விதத்தில் சிரிப்பும் வந்தது கதை சுவாரஸ்யமும் பெற்றது.


இப்படி பேசி சிரிக்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் எண்ணம் இனி இப்படி சிரிக்க முடியுமா? இனி இப்படி லூட்டி அடிக்க யார் இருப்பார்? என்பதுதான். அதற்கேற்ப அவர்களின் தீசிஸ் முடிந்தது. நாங்கள் பரிட்சை முடித்தால் அதன்பின் இவர்களை சந்திப்பது கேள்வி குறிதான். குடும்பத்தை தாண்டி நான் நுழைந்த இந்த புது பயணத்தில் எல்லோரும் விட்டுச்செல்ல தனிமரமாக எப்படி காலம் தள்ளுவது என்ற யோசனையில் என் துணை நிற்கும் ஒரே ஜீவன் என் கல்லூரி தோழி நிலோ தான்.


(அடுத்து: அனைவரும் சந்திக்கும் சோகம் விடுதி நட்பின் பிரிவு. அதிலும் கொடுமை எல்லோரும் செல்ல நாம் மட்டும் அந்த இடத்தில் புது உறவுகளுடன் முட்டி மோதுவதுதான். என்ன கொடுமை நடக்குமோ..இவர்கள் உறவு தொடருமா? கேள்வி குறியின் முற்றுப்புள்ளி அடுத்த பாகத்தில் புதைந்துள்ளது)
 
Top