ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

UUUK- கருத்து திரி

Ruby

Well-known member
இந்த ஸ்மித் பையன் அவன் காதலை உணரகுள்ள நம்மளை நல்லா கடுப்பு ஏத்துறான்... அவன் கலாச்சாரம் சரி தான்.. தப்பு எல்லாம் நம்ம வாணி மேல தான்... தன்னை காக்கவோ, தாங்கவோ,ஆறுதல் சொல்லவோ ஆள் இல்லாத போது இன்னும் விழிப்புடன் இருக்கணும்.. காதல் வந்தது வரை சரி தான்.. ஆசிரமத்தில் வளர்ந்த பெண் இன்னும் கொஞ்சம் விழிப்போடு எதிர்பார்த்தேன்... காதலுக்கும், மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது சரி! மூன்று வருடம் கழித்து அவனுக்கு மயங்கியது தப்பு மிகப் பெரிய தப்பு.. அவளுக்காக அங்கீகாரம் இல்லாத போது அவளும் தப்பு செய்து விட்டு, அவனுக்கு புரியாத ஒன்றை, அவனில் இல்லாத ஒன்றுக்கு வருத்தப்படுவது அவளின் தவறு தான்.. அவன் வரையில் அவன் சரியாக தான் இருந்து இருக்கான்... விக்கி அண்ட் ஷீலா அவனை திட்டுவதும் கோபப்படுவது பார்க்க எனக்கு சிரிப்பா வந்தது.. அட அறிவீலிகளா தப்பெல்லாம் நம்ம மக்கு மேல தான் கோபம் இவள் மேல் தான் படனும்.. அவளின் குழந்தைக்கு காரணம், அதன் பின்னான வேதனைக்கு காரணம் அவள் மட்டுமே... விலகியவனை விடாது ஒட்டியது இவள் தப்பு...

ஆனால் அவள் எடுத்த விசயத்தில் கடைசி வரை தைரியமா நின்னா பாருங்க I like it... அவன் என்னதான் மிரட்டிய போதும் துணிந்து நின்ன அந்த நிமிர்வு அருமை... அவன் காதலை யாசித்த போதும் வேதனையில் வெந்த போதும் அமைதியா தான் இருக்கிறாள்... அவளின் அந்த தைரியம் அவள் காதலும், என்றோ காதலன் ஆகும் முன் சொன்ன வார்த்தையும் கொடுத்தது போல... அவளின் அந்த தவத்துக்கான பலன் தான் அவனின் காதல்!!!

கொஞ்சம் கூட யார் மீதும் எதன் மீதும் அக்கறை இல்லை போல அவனுக்கு... யாருக்கு கெடுதல் நடந்தாலும் அவன் ஈகோ, அவன் நினைப்பு நடக்கணும்... ஆனால் அவனுக்குள் உள்ள அந்த அப்பா பாசம் நிஜமா வியப்புக்குரியது தான்...

அப்பாவுக்காக உணர்ந்தும் உரைத்திட முடியா காதலை சுமந்து அவன் கொள்ளும் வேதனை அவனையே கொல்லுவது சிறப்பு... காதலை கொடுக்க முடியாது போனாலும் அவள் கேட்டதை கொடுக்க நினைக்கிறான்... லாரா அவளுமே அவள் காதலை மறக்காது இருந்தது கண்டிப்பா அந்த திருமணம் ஒரு பிழையாய் இருந்து இருக்கும்... அந்த வகையில் எப்படியோ எல்லோர் வாழ்வும் தப்பித்ததே... சந்தோஷம்...

விக்கி good friend... ஷீலா இவள் ஒரு லூசு... ஆனாலும் விக்கியை புரிந்து வந்ததால் போய் தொலையுறா...

Nice ka
 
Top