ஹாய் நண்பர்களே...
T 22 இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்று அறிவித்து இருந்தேன்...
அடுத்த வாரம் Voting ஆரம்பித்து விடும்...
மொத்தம் பதினைந்து நாவல்கள்...
(Amazon முறையை இதில் கையாளலாம் என்று நினைத்து இருந்தேன்...)
அதில் ஐந்து நாவல்கள் வாசகர்களின் (Views & Voting) தெரிவு மூலம் இறுதி சுற்றுக்கு தெரிவாகும்...
ஆனால் இறுதி சுற்றுக்கு தெரிவாகும் நாவல்கள் ஐந்தும் மகதீரா பதிப்பகம் மூலம் வெளியிடப்படும் என்று அறிய தருகின்றேன்...
1st 2nd and 3rd நடுவர்களின் தீர்ப்பு தான்... தகுதியான நாவலுக்கு முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு... அதனாலேயே நடுவர்களின் உதவியை நாட நினைத்தேன்...
(பின் குறிப்பு- நான் இன்னும் எந்த நாவலையும் வாசிக்கவில்லை)
இதே முறையை T20 இல் கையாண்ட நேரம், வாசகர்களின் தீர்ப்பு என்று சொல்லி விட்டு இப்படி செய்வதாக சில எழுத்தாளர்கள் அதிருப்தியை என்னிடம் தனிப்பட்ட முறையில் வெளியிட்டு இருந்தார்கள்....
ஆனால் இறுதி சுற்றுக்கு வரும் நாவல்கள் எல்லாமே வாசகர்களின் தெரிவு தான்...
அதில் சிறந்த நாவலை தான் நடுவர்கள் தெரிவு செய்ய போகின்றார்கள்...
நடுவர்களுக்கு அனைத்து நாவல்களையும் வாசிப்பது தான் கடினம்... இறுதி ஐந்து நாவல்களை வாசிப்பது கடினமாக இருக்காது என்ற காரணத்தினால் ஒவ்வொரு வருடமும் இந்த முறையே கையாளப்படும் என்று இப்போது அறிய தருகின்றேன்...
voting ஐ ரொம்ப தள்ளி போடாமல் 27.06.2022 இல் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இருக்கின்றேன்... இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாராளமாக என்னை தொடர்பு கொள்ளலாம்...
பொம்மு