ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

19 நிந்தன் காதல் தித்திக்குதே. கதைக்கான விமர்சனங்கள்

Sriraj

New member
வணக்கம்.

Twist 21 போட்டி

கதை விமர்சனம்


கதை எண்: 19 - நிந்தன் காதல் தித்திக்குதே


நாயகன் - அர்ஜூன்
நாயகி - தாரா


அர்ஜூன் - அழகன். மருத்தவ துறையில் இருப்பவன். ஆனால் குணமோ சிறிது அழுத்தம் நிறைந்தது. எண்ணங்களுக்கு ஏற்ப சிறிது மனநிலையில் இருப்பவன். கோபம் - அன்பு - உரிமை - பொறாமை என மாறி மாறி வலம் வருபவன். உடையவளுக்கு அழகான காதல் கணவன்.


தாரா - அழகிய மனம் படைத்தவள். சுட்டித்தனம் நிறைந்தவள். தோழனுக்கு ஏற்ற தோழியாவாள்.உடையவனுக்கு அழகிய காதல் மனைவி.


அழகான காதல் கதை. 😊


யதார்த்தமான வாழ்வில் சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் திருமண பந்தம்…😒

வாழ்வெங்கும் வர கூடிய இனிய உறவின் அழகிய பந்தம்…😊

இரு வேறு குணங்கள் படைத்த இருவர் தங்கள் வாழ்வில் இணைகிறார்கள்..😒

இணைந்தவர்கள் தங்கள் மனதின் உணர்வுகளை வெளிகாட்டது
எளிமையாய் வாழ…😊

நாட்கள் செல்ல,

நட்பை பார்த்து உறவின் உரிமை உணர்வு வெளி வர…
அவ்உரிமை உணர்வோ சில நேரங்களில் பொறாமை கொள்ள செய்ய…😊

பொறாமையும் அழகு தான் போல…
அப்பொறாமை மனதை திறக்க செய்ய…😊

திறந்த மனம் பல இனிய உணர்வுகளை பரிசளிக்க…😊

அழகிய காதல் கலாட்டாக்கள் அரங்கேற..
சுவாரஸ்ய அன்பில் பல சுவாரஸ்யங்கள் ஒன்று சேர…😊


எல்லா இனிமை நேரத்தில் சோதனை என்று வருமே அதே போல் இங்கும் வந்தது…😒

வந்த சோதனையில் யார் வென்றனர் யார் தோற்றனர் என்பது கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…😉


குடும்பத்தின் அன்பு, காதல், பாசம், விட்டு கொடுத்தல், கேலி, கிண்டல்கள், நகைச்சுவை என இருக்கும் அழகிய காதல் கதை.😊😊

அழகிய கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.💐💐

நிந்தன் காதல் தித்திக்குதே…

நித்தமும் நம் கனவுகளில் நாம் இருக்க…
நிஜத்திலும் நாமே இருக்க…
நமது அன்பின் உறவால் நித்தமும் நம் காதல் நம்மை தித்திக்கே செய்து நம்மை மகிழ்வில் ஆழ்த்துகிறதே எனது நாயக(கி)னே(யே)...❣❣


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…💐💐


அன்புடன்
ஸ்ரீராஜ்
 
  • Love
Reactions: T21

Shayini Hamsha

Active member
டுவிஸ்ட்21 நாவல் போட்டி

நிந்தன் காதல் தித்திக்குதே

தலைப்புக்கு ஏற்ற தித்திப்புடன் கூடிய அருமையான காதல் கதை

கதையின் நாயகி தாரா கலகலப்பான
குறும்புக்காரி ! 😃😃😀🤩😍 இவள் இருக்கும் இடங்களில் சேட்டைக்கு பஞ்சம் இல்லை.அவளின் அத்தைப் பையன் கிருஷ் , பாசக்காரன். உயிர் நட்புக்கு அடையாளமானவன். 😍😍

இருவரும் சிறுபராயம் முதல் உற்ற நண்பர்களாக ஒருவருக்கு ஒருவரென உறுதுணையாக பழகி பேச்சில் மட்டுமல்ல அவ்வாறே நிஜத்திலும் வாழ்ந்து வருகின்றனர்..

மறுபுறம் , நீண்ட நாட்களின் பின்னர் தனது குடும்பத்தைக் காண தனது தாய்நாட்டுக்கு வருகிறான் கதையின் நாயகன் அர்ஜீன்.

கல்வி மற்றும் தொழில் நிமித்தம் அயல் நாட்டிற்கு சென்று சிறிது காலத்தின் பின்னர் , தாய்நாட்டுக்கு வருகை தந்தவனின் நெஞ்சை பாவையவள் அவளின் அழகாலும் குணத்தாலும் கவர ,

எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காதவன், தனது நேசத்திற்குரிய பெண்ணவள் மீதுள்ள காதலை மனதில் புதைத்து, பெற்றவர்கள் பார்க்கும் பெண்ணத் திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பது தான் விதியின் சதியோ!...

மறுபுறம் தாராவை கொல்ல வேண்டுமென பின்புலத்தில் வெறி கொண்டு துரத்துவோர்..


● ஒரு கட்டத்தில் அர்ஜீன் நிச்சயத்தை நிறுத்த காரணம் என்ன ? தாராவும் அர்ஜீனுக்கும் திருமணம் நடந்ததா?

● அர்ஜீன் அவனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தினானா ?

● தாராவை கொல்ல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிப்பவர்கள் ,
அர்ஜீன் திருமணத்தை எதற்காக நிறுத்துகின்றனர்? எல்லாம்
மீதி கதையில்...


இவர்களுடன் காதலி ஜனனியை கைப்படிக்கும் நாயகனின் சகோதரன்
கிருஷ்..

அர்ஜீன் : அமைதி பேர் வழி ! நல்ல மருத்துவன்.அன்பானவன். ஆனாலும் மனங்கவர்ந்தவளிடம் காதலை வெளிப்படுத்த தயங்குகிறான்.

தாரா : கலகலப்பான பெண் , குறும்பு செய்வதற்கென்றே பிறப்பெடுத்த
அழகிய அன்பான நங்கை..

கிருஷ் :- உயிர் நட்புக்கு சிறந்த
உதாரணம் , தாராவுடன் கிருஷ்
இருக்கும் இடங்களில் கலகலப்புக்கு
பஞ்சமில்லை. நட்புக்காக இவன்
செய்யும் செயல்கள் அருமை 😍😍🥰😘😘😘

ஜனனி :- ஜாடிக்கு ஏற்ற மூடி.குறும்பு செய்வதில் அக்காவான தாராவிற்கு கொஞ்சமும் சளைத்தவளில்லை இவளும் கிருஷும் கியூட்டான டொம் & ஜெரி


அழகான தித்திப்பான காதல் கதை. உங்கள் தமிழும் அருமை.. சில வார்த்தைகளில் அர்த்தம் புதிதாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

அருமையான தித்திப்பான காதல் கதை தந்தமைக்கு நன்றி..

மேலும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் ஷாயினிeiYZ1U248506.jpg

●●●●●●●●●●●●●●●●●●

கதைக்கான திரி

●●●●●●●●●●●●●●●●●●●

 
Last edited:
Top