ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 10

மிதுனா பிரகதி கூட்டணியில் தற்போது சாலினியும் இணைந்துக் கொண்டாள். அங்கிருந்த கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் பெண்கள் வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் ஒருபுறம் கடைகளை காலி செய்ய, ஆண்களோ வெகு நாட்களுக்கு பிறகு இந்த மாதிரியான கூட்டம் நிறைந்த இடத்திற்கு வந்திருப்பதால், அங்கு சுற்றி திரியும் வண்ண பறவைகளை தங்கள் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் திறமையால் அவர்களிடம் தொலைபேசி எண்ணையும் வாங்கிருந்தனர்.

நிரஞ்சன் கொடுத்த ஒரு மணி நேர அவகாசம் முடியும் நேரம் நெருங்க சிலர் தங்கள் பர்சேசிங் முடித்து பேருந்தில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

பெரிய அளவிலான டூரிஸ்ட் பஸ்ஸில் தான் அங்கு வந்திருந்தனர். பிரகதி பஸ்ஸில் ஜன்னல் ஓர இருக்கையை தனதாக்கி தான் வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் கொண்டு வந்திருந்த பெரிய பையினுள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு வெளியே நின்று நிரஞ்சன் பஸ்சை தட்டி அவளை வெளியே அழைக்க, அவனைப் பார்த்ததும் தானாக உதட்டில் வந்து ஒட்டிக் கொண்ட புன்னகையுடன் இறங்கினாள்.

"ஷாப்பிங் எல்லாம் முடிந்ததா?" என்று அவன் கேட்க, "ம்ம்" என்று தலையை ஆட்டினாள். "இது உனக்கு" என்று கூறி அவள் கையில் மூடியிருந்த சிப்பி ஒன்றினை கொடுக்க, அவளோ "எங்கிட்டயும் இருக்கு சார்" என்று கடலின் ஆழத்திலிருந்து பெண்கள் அனைவரும் தங்களுக்கென்று தனி தனி சிப்பியினை எடுத்து வந்திருந்ததை அவள் கூற, அவனோ "திறந்து பாரு" என்று தான் கூறினான்.

ஆச்சரியங்கள் தேக்கிய விழிகளுடன் அவனை பார்த்துக் கொண்டே அந்த சிப்பியை திறக்க, மூடியிருந்த சிப்பிக்குள் வெண்ணிற முத்து ஒன்று பளபளத்தது. விழிகள் விரிய அதனை பார்த்தவளின் இதழ்களும் விரிந்து, நங்கை அவள் முத்து பற்கள் தெரிய அழகாக சிரிக்க, அவன் இதழ்களும் தன்னவள் மகிழ்ச்சியில் தாராளகாக புன்னகைத்தது.

எல்லோரும் எடுத்தார்கள் தான், ஆனால் எவருக்கும் அதனுள் முத்துக் கிடைக்கவில்லை, எல்லா சிப்பிகளுக்குள்ளும் முத்துக்கள் உயிற்பெழுப்பது இல்லையே!

"இது எனக்கா ஆஹ்?" என்று அவள் ஆர்வமாக கேட்க, ஆச்சர்களை வெளிப்படுத்திய குடையென விரிந்திருந்த அவள் விழிகளை ரசித்தவாறே "ஆம்" என்றான். அவளோ ஆசையாக அதிலிருந்த முத்தை எடுத்து பார்க்க, அவளை பார்த்தவாறே தன் பேண்ட் பாக்கெட்டினுள் இருந்து அழகிய வேலை பாடுகளுடன் கூடிய மெல்லிய கை சங்கிலி ஒன்றையும் அவள் கையில் அணிவித்தான். அவனையே விழி விரித்து பார்த்து கொண்டிருந்தவள் மனமோ தன்னவன் கொடுத்த பரிசுகளில் ஆனந்த் கூப்பாடு தான் போட்டது. ஆங்காங்கே சிறிய ஸ்டார்ஸ் மற்றும் இதய வடிவிலான மணி தொங்கவிட பட்டிருக்க அவளுக்கு அது மிகவும் பிடித்துப் போனது.

விழி விரிய அவனை பார்த்தவளிடம் "இதுவும் உனக்கு தான் என்னோட கிஃப்ட்" என்று அவள் சந்தோசத்தை ரசித்தவாறே கூறினான். "ரொம்ப நல்லா இருக்கு சார்" என்று தன் கையை ஆட்டிட அந்த மணியில் இருந்து வந்த சத்தம் கூட அவள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கியது..


பெண்களுக்கு சர்ப்ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஏன் தெரியுமா? 'நாம் அவர்களுடன் இல்லாத போதும் தன்னவன் நினைவில் நாம் இருந்திருக்கிறோம்' என்பதே அவர்களின் எல்லை இல்லா மகிழ்ச்சிக்கு காரணமாகிறது. அவர்கள் கொடுக்கும் பொருளின் மதிப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை பெறுபவருக்கு அது பொக்கிஷமாகவே தெரியும். அதே போல் தான் பிரகதியும் உணர்ந்தாள். அப்போது தான் அவளுக்கு ஒன்று விளங்கியது. தான் அவருக்காக எதுவும் வாங்கி வரவில்லையே என்று.


"சாரி சார் நான் உங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வரல" என்று வருத்தம் தோய்ந்த குரலில் அவள் கூற, அவள் அவனுக்காக எதுவும் வாங்கவில்லை என்ற வருத்தம் துளியும் அவனுள் இல்லை. அவள் தனக்கு ஏதேனும் வாங்கி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவனுள் எழவில்லை.. ஆனால் அதற்காக அவள் வருந்துவது தான் அவன் மனதை கசக்கியது.

"உங்கிட்ட இருந்து நான் எதையும் எதிர் பார்க்கல பிரகதி" என்று உரைத்தவன் மனதினுள் 'உன் காதலை தவிர, அதையும் நீ இப்போது இருக்கும் சூழ்நிலையில் எதிர் பார்க்கவில்லை' என்று கூறிக் கொண்டான்.

ஆனால் அவள் தான் மனம் பாரமாக இருப்பது போல் உணர்ந்தாள். எதையோ யோசித்தவள் "ஒரு நிமிஷம்" என்று விட்டு வண்டிக்குள் சென்று ஒரு கவரை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

இப்போது ஆச்சர்யமாக பார்ப்பது அவன் முறையாயிற்று. அதை பிரித்து பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்தே விட்டான். நெகிழும் தன்மையுள்ள ஆரஞ்சு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளை கோடுகள் ஊடுருவ இருந்தது அந்த மீன் பொம்மை. ஆம் அதை தான் அவள் அவனுக்கு பரிசளித்ததிருந்தாள்.

'இத வச்சி நீ என்னடா பண்ணுவ' என்று அவன் மனம் அவனிடம் கேட்க.. அதை தன் முகத்தில் வெளிக்காட்டாமல் "நீ உனக்காக ஆசையா வங்கிருப்ப நீயே வச்சுக்கோ" என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தான்.

பிறகு இதை அவன் கையில் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்விக்கு அவன் பதில் அளிக்க வேண்டுமே!
பிரகதியோ அவனை விடுவதாக இல்லை, "ஆசையா தான் வாங்கினேன், ஆனா உங்களுக்கு கொடுக்கிறதுல எனக்கு சந்தோசம் தான்" என்று வெள்ளந்தியாய் பதில் அளித்தாள்.

அவளுக்கு பிடித்த பொருட்களை தன்னுடன் பகிர்ந்துக் கொள்ளும் அளவிற்கு தான் அவள் மனதில் இடம் பிடித்து விட்டதை எண்ணி புன்னகை மலர, அவள் தனக்கு கொடுத்த முதல் பரிசை எப்போதும் தன்னுடன் பத்திரமாக வைத்துக் கொள்வதாக மனதிற்குள் உறுதியளித்தவன்,
"ம்கும்" என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க அங்கு சாலினி நின்றுக் கொண்டிருந்தாள்.

அவளின் கண்கள் இருவரையும் கேலி செய்ய தயாராக 'நான் இந்த இடத்திலே இல்லை' என்று பிரகதி பேருந்தில் ஏறி இவர்கள் நின்றிருந்தற்கு எதிர் வரிசையில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

"என்ன சார் நடக்குது இங்க? கண்ணாலேயே ரொமான்ஸ் பண்றீங்க போல" என்று கேட்ட சாலினியிடம், "அப்படியெல்லாம் எதுவும் இல்ல, பிரகதிக்கு ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்தேன். அதை தான் அவகிட்ட குடுத்துட்டு இருந்தேன்" என்றதும் "அவளுக்கு மட்டும் தான் கிஃப்ட்டா எங்களுக்கெல்லாம் கிடையாதா? என்று சோகமாக முகத்தை வைத்து அவள் கேட்க, அவள் உண்மையாகவே வருந்துகிறாளோ என்று எண்ணிய நிரஞ்சன் "சாரி.. நெக்ஸ்ட் டைம் உனக்கும் சேர்த்து வாங்கிதறேன்" என்று சமாதான பதில் ஒன்றை சொன்னான்.


அவளோ அவனை பொய்யாக முறைத்த படி "நீங்க எனக்கு கிஃப்ட் எதுவும் வாங்காம இருக்கலாம், ஆனா நான் உங்களுக்காக ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன். கைய நீட்டுங்க" என்று சொல்லி அவன் கையில் அதை கட்டிவிட்டால்.


"ப்ரெண்ட் ஷிப் பேண்டா?"


"ம்ம். ராக்கி கட்டுற அளவுக்கு பெரிய மனசுலாம் இல்ல. நீங்க தான் பிரெண்ட்ஸ் ஆஹ் மட்டும் தான் இருக்க முடியும்னு சொல்லிடிங்களே" என்று உள்ளே சென்ற குரலில் சொன்னவள் வலியை அவனும் உணராமல் இல்லை. அவள் தன் மீது வைத்திருந்த காதலை மறக்க இன்னும் போராடிக் கொண்டிருப்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"ப்ரெண்ட் ஷிப் பேண்டை அவள் கையில் போட்டு விட்டவள் அவன் கையில் இருந்த பொம்மையை பார்த்து, "இது என்ன மீன் பொம்மை?" கண்டிப்பாக நிரஞ்சன் அதை வாங்கியிருக்க மாட்டான் என்பதை அறிந்து அது எப்படி அவனிடம் வந்திருக்கும் என்பதை சரியாக கணித்தவள் "பிரகதி கொடுத்தாளா?" என்று நக்கலாக சிரித்த படி கேட்க, அவனும் "ஆம்" என்று கையில் இருந்த பொம்மையை பார்த்து சிரித்த வண்ணம் தலை அசைத்தான்.


"உலகத்துல எந்த காதலியும் தன் காதலனுக்கு இப்படி ஒரு பரிசு கொடுத்திருக்க மாட்டாள்" என்று சாலினி சிரித்துக் கொண்டே கூற,
அவன் உதடுகளும் சிரித்தவாறே "ஷு இஸ் டிஃபரென்ட் டூ அதர்ஸ்" என்றான்.


நமக்கு பிடித்தவரின் விருப்பத்துக்குறியவரை சில நேரங்களில் காரணம் ஏதுமின்றி நமக்கும் பிடித்து விடுகிறது. அப்படி தான் சாலினிக்கும் பிரகதியை பிடித்து போயிற்று.


பேருந்தில் ஏறிய பிரகதியின் நினைவுகள் யாவும் நிரஞ்சனே நிறைந்திருந்தான். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் மட்டுமே அவள் கருத்தில் பதிவாகிறான். எல்லாவற்றையும் மறக்க செய்கிறான். அந்த தருணங்களை அவள் மிகவும் விரும்புகிறாள். தனக்காக மட்டுமே தன்னை நேசிக்கும் ஒருவன் கிடைப்பது வரம் அல்லவா! இப்பொழுதெல்லாம் அவன் அருகாமை கிடைக்க காத்திருக்கிறாள். தன்னுள் நடக்கும் இந்த மாற்றம் எதனால் என்று அவள் யோசிக்க, 'ஒருவேளை இது தான் காதலா?' என்ற பதிலில் ரெக்கை இன்றி விண்ணில் பறக்கும் உணர்வு தோன்றியது.

*விருப்பம் பாதி

தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால்
கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா

துரும்பை பிடித்தே கரையில் எழவா*


என்று முடிவெடுக்க தெரிய நிலை என்றாலும் இன்பமாக மேலே பறந்துக் கொண்டிடுந்தவள் "பிரகதிதீதீ" என்று காதிற்கு அருகில் நின்று கத்திக் கொண்டிருந்த மிதுனாவின் குரலில் நிகழ் உலகிற்கு தொபுக்கடீரென்று வந்து விழுந்தாள்.


"என்ன மித்து?" என்று சாதாரணமாக கேட்டவளை கொலை வெறியுடன் பார்த்தவள், "எத்தனை முறை கூப்பிடுறது? என்ன லூசு மாதிரி கைய பார்த்து சிரிச்சிட்டு இருக்க" என்று கடுப்பாக கேட்க, "அதா?" என்று சிறிது வெட்கம் வேறு வந்து ஒட்டிக் கொண்டது அவளுக்கு.

"அய்ய! இது வேறயா?" என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் மிதுனா.


பிரகதியோ தன் கையில் இருந்த கைச்சங்கிலியை காட்டி, "இங்க பார்த்தியா? நிரஞ்சன் சார் கொடுத்தாங்க. நல்லா இருக்குல" என்று மீண்டும் மீண்டும் கையில் இருந்த சங்கிலியை வருடிக் கொண்டிருந்தவளை ஏகத்துக்கும் கடுப்பாகி பார்த்தாள் மிதுனா. ஆனால் எதையும் வெளிக்காட்ட முடிய நிலை அல்லவா அவளுக்கு.

அவன் பெயரை உச்சரிக்கும் போது அத்தனை காதல் இருந்தது அவள் குரலில். மிதுனாவும் ஒருமுறை அவள் கையைப்பிடித்து பார்த்து "ஹாங், நல்லா தான் இருக்கு" என்று சலிப்புடன் கூறினாள்.


அதை உணராத பிரகதியோ உற்சாகமாக தன் கை பையில் இருந்து அவன் கொடுத்த மூடியிருந்த சிப்பியிணை அவளிடம் நீட்டி "இதுவும் அவர் தான் கொடுத்தார். அவருக்கு கடலுக்கடியில இருந்து கிடைச்சுதாம். திறந்து பாரு" என்று ஆசையாக அவளிடம் காட்ட, ஏதோ வேண்டா வெறுப்பாக அதை திறந்தவளின் கண்கள் பளிச்சிட்டது. 'அவருக்கு மட்டும் எப்படி முத்து கிடைச்சிருக்கு?' என்று யோசித்தாள். அதை வெளிக்காட்டாமல், "எதாவது கடையில வாங்கி வந்து, உன்கிட்ட சீன் போடுறாரு. நம்ம யாருக்கும் முத்து கிடைக்கலையே, அப்படி இருக்கும் போது அவருக்கு மட்டும் கிடைச்சுதாமா? அவர் என்ன சொன்னாலும் நம்பிருவியா?" என்று 'உனக்கு அவன் மீது இருக்கும் கிறக்கத்தை இப்போதே போக்கி விடுகிறேன்' என்று மனதில் நினைத்து அவள் கூற,


பிரகதியோ "அவர் எதுக்கு பொய் சொல்லணும்?" என்று அவள் கூறுவதை ஏற்க முடியாமல் கேட்டாள். "இப்படி சொன்னா தானே உன்ன இம்ப்ரஸ் பண்ண முடியும். இங்க பாரு பிரகதி இந்த பசங்களலாம் எப்பவும் நம்ப கூடாது. இந்த மாதிரி ஏதாவது பண்ணி ஈசியா பொண்ணுங்க லைஃப்ல நுலைஞ்சிடுவாங்க. அப்புறம் அவங்க வாழ்க்கை தான் கேள்வி குறியாகும்? சாதாரண பொண்ணுங்களுக்குகே அப்படினா? உன்னை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு? நீ எதுக்கு வந்தேங்கிறதையே அடிக்கடி மறந்திடுற" நீ மறந்தா என்ன அதை நியாபக படுத்துவதற்கு தானே நான் இருக்கிறேன் என்று அவளை மூளை சலவை செய்யும் முயற்சியில் மிதுனா இறங்கிருக்க, அதை கெடுக்கும் விதமாக வந்து சேர்ந்தாள் சாலினி.


பிரகதியின் கையில் இருந்த முத்தினைப் பார்த்து "பிரகதி யு ஆர் சோ லக்கி. உனக்கு இது கிடைச்சிருக்கு. இனி உன் லைஃப்ல சந்தோசம் மட்டும் தான் நிறைஞ்சிருக்கும்" அவள் மனதார வாழ்த்த. அப்போது தேவதைகள் அவளை ஆசிர்வதித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


சாலினியின் பேச்சு மறுபடியும் பிரகதியின் மனதில் சந்தோசத்தைக் கொண்டு வந்தது. இந்த மூன்று நாட்களில் அவள் வாழ்வில் இரண்டு நல்ல விசயங்கள் நடந்துள்ளன. ஒன்று சாலினியுடனான நட்பு. மற்றொன்று, இந்த மூன்று நாட்களில் ஒரு முறைக் கூட ஜூபீட்டார் அவளுக்கு போன் செய்யவில்லை. அதுவே அவளுக்கு பெரு நிம்மதியாக இருந்தது. 'ஒருவேளை கஜினி சூர்யா மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டானா? அப்படி மட்டும் நடந்துச்சினா ஐயப்பா அவனை உன் கோவிலுக்கு கூட்டிட்டு வந்து அவனுக்கே மொட்ட போடுறேன்' என்று வேண்டுதல் ஒன்றை வைத்தவள் 'அச்சச்சோ உன் கோவில்ல யாரும் மொட்ட போட மாட்டங்களே!' என்று சிறிது யோசித்து '90 நாள் விரதம் இருந்து நடந்தே உன் கோவிலுக்கு வர வச்சிடு' என்று அல்டெர்னட் வேண்டுதல் ஒன்றையும் அவள் இஷ்ட தெய்வமான ஐயப்பாவிடம் டீலிங் பேசிக் கொண்டிருந்தாள்.


ஆனால் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் சரியான சந்தப்பதிற்காக அவளிடம் இருந்து விலகி காத்துக் கொண்டிருப்பதை.
அவர்கள் வாகனம் பயிற்சி நிலையத்தை நோக்கி புறப்பட அங்கு நடந்த நிகழ்வை எல்லாம் வெற்றிக் களிப்புடன் பார்த்த படி அங்கிருந்து நகர்ந்து சென்றான் ஜுபீட்டர்.


 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 11

நாட்கள் அதன் வழமை போல் நகர, நிரஞ்சனின் தந்தை ரகுராம் அன்று அவசரமாக தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். பணியை முடித்து வீடு திரும்பிய நிரஞ்சனின் கண்ணில் பதிந்தது என்னவோ நிலைபாடு இல்லாமல் குழம்பி போய் இருந்த அவன் தந்தையின் முகம் தான்.
இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட தன் தந்தையை அவன் இவ்வாறு பார்த்ததில்லை. எப்போதும் கம்பீரமாக யாருக்கும் அஞ்சா நெஞ்சுடன் இருக்கும் தன் தந்தையே அவனின் ரோல்மாடல். எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக கையாள்பவரின் முகம் இன்று அந்த தைரியத்தை தளர்த்தி ஆபத்தை கண்டு அஞ்சுவதாக தெரிந்தது அவனுக்கு.
"டாட் எனித்திங் சீரியஸ்?" என்று அவர் பதட்டத்தை உணர்ந்து தன் உதவி தேவை படுமோ? என்று அவன் கேட்க, "நோ மை சன். ஐ ஆம் கோயிங் டூ ஆபீஷியல் ட்ரிப். வர கொஞ்ச நாள் ஆகும். டேக் கேர் ஆஃப் யுவர் செல்ஃப். பை" என்று அவசரமாக சொல்லிவிட்டு தன் வாகன ஓட்டியை அழைத்துக் கொண்டு அவர் கிளம்பிவிட்டார்.நிரஞ்சனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றினாலும், அதை தன் தந்தை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அதை பற்றி ஆராயாமல் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
இரவு உணவை அவன் வீட்டில் வேலை செய்யும் குமார் அண்ணா பரிமாற, அவருடன் இணைந்து சாப்பிட்டு முடித்தவன் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
குமார் கடந்த பத்து வருடங்களாக தந்தைக்கும் மகனுக்கும் சமைத்துப் போட்டு, அந்த வீட்டில் தன்னையும் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டார். ரகுராமும் நிரஞ்சனும் கூட அவரை வேலையாளாக அன்றி தங்களின் சொந்தமாகவே கருதினர். இரவு உணவு அனைவரும் சேர்ந்து உண்டு சிறிது நேரம் கதைப்பது வழமையே.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் துண்டிக்க பட, மெழுகுவர்த்தியின் உதவியை நாடி குமார் உறங்க செல்ல, நிரஞ்சனும் தன் அறையை நோக்கி சென்றான். அறையின் கதவை திறந்தவன் ஒரு நிமிடம் உறைந்து நின்று விட்டான்.அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து இருந்ததால் அதன் வழியாக உள்புகுந்த காற்று மெழுகு வர்த்தியை அணைத்திருக்க, அந்த அறை முழுவதும் ஆரன்ஜ் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்பதை பார்த்தவனின் இதழ்கள் தானாக வளைய, அதன் அருகில் சென்று மீன் பொம்மையை கையில் எந்தியவனின் உதடுகள் தானாக உச்சரித்து அவள் பெயரை. விளக்குகள் எரியும் போது வெளிக்காட்டது இருள் சூழ்ந்திருக்கும் போது அதன் ஒளி மிளிரும். இருளில் தானாக ஒளிரும் வகையில் அந்த மீன் பொம்மை உருவாக்கப்பட்டிருந்தது."பிரகதி உன்னை எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுனே தெரியல. இதை நீ என்கிட்ட கொடுக்கும் போது ரொம்ப சைல்டிஷா இருந்தது. பரவாயில்லை உனக்கும் கொஞ்சம் மூளை இருக்கு. யூஸ்ஃபுல் கிஃப்ட் தான் கொடுத்திருக்க. இட்ஸ் மீன்ஸ் தட், என் வாழ்க்கை இருளில் மூழ்கும் நேரத்தில் நீ எனக்கு ஒளியாவாய்" என்று புன்னகை ததும்ப அந்த மீன் பொம்மையுடன் படுக்கையில் சரிந்தான்.
இதில் இப்படி ஒரு விசயம் இருக்கும் என்று அவளுக்கும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த அளவுக்கு யோசித்தெல்லம் அவள் மீன் பொம்மையை வாங்கவில்லையே. அது பார்க்க அழகாக இருந்தது அதனால் மட்டுமே அதை வாங்கினாள். அன்று வாங்கிய பொருட்களில் அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதை அவனுக்கு பரிசளித்தாள்.
சில நேரங்களில் நாம் அறியாமல் செய்யும் காரியம் கூட மற்றவர் மனதில் நம் மதிப்பை கூட்டி விடுகிறது. அதை நான் தெரிந்து செய்யவில்லை என்று கூறி நாம் ஏன் அதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே.
நிரஞ்சன் கூறியது போலவே முந்தையதை காட்டிலும் அவர்களது பயிற்சி கடினமாக்கப்பட்டது. காலையில் ஃப்ரெஷ் ஆப்பிள் போல் வருபவர்களையெல்லாம் மாலை வரை பிழிந்து சக்கையாக தான் அனுப்புவார்கள். நம் லட்சியத்தை அடைய அதற்கான முயற்சியும், கடின உழைப்பும் தேவை தானே.
அன்று காலை வேளையிலே பிரகதி மிதுனாவிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தாள். "லூசா டி நீ, யாராவது தன் லவ்வர்க்கு இப்படி ஒரு பொருளை கிஃப்ட் பண்ணுவாங்களா? அவரு என்ன சின்ன குழந்தையா? பொம்மை வச்சி விளையாடுறதுக்கு. அதை போய் கொடுத்திருக்க. உன்ன பத்தி என்ன நினைப்பாரு?" என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாட்கள் கழித்து மிதுனா ஏன் இதை பற்றி பேசுகிறாள்? அதை பிரகதி யோசிக்காமல் இருக்கலாம். ஆனால் மிதுனா காரணம் ஏதுமின்றி எதையும் செய்யும் ஆள் கிடையாதே!
"அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் அவருக்கும் பிடிக்கும்னு நினைச்சி கொடுத்தேன்" என்று அப்பாவியாய் முகத்தை வைத்து பதில் கூறினாள் பிரகதி.


"உனக்கு பிடிச்சதெல்லாம் அவருக்கும் பிடிச்சிருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே!" மிதுனாவின் குரல் சற்று தணிந்து ஒலித்தது. அவள் காரியம் நடந்தேற வேண்டுமே!"இப்போ என்ன பண்றது? நான் வேணா அவர்கிட்ட போய் இது உங்களுக்கு வேணானு சொல்லி வாங்கிட்டு வந்திடவா?" அப்பாவியாய் கேட்டாள் பிரகதி."அது உன் விருப்பம். ஆனா அதுக்கு பதிலா நீ அவருக்கு ஒரு நல்ல கிஃப்ட்ட கொடுக்கணும்" என்றதும்"கிஃப்ட் டா? அதுக்கு நான் இப்போ எங்க போவேன்? வீக் எண்ட்ல தான் அவுடிங்கும் அலோ பண்ணுவாங்க, அப்போ போய் ஏதாவது வாங்கி கொடுக்கவா?" என்று அவள் அப்பாவியாய் மிதுனாவிடம் ஆலோசனை கேட்க, இதற்காகவே காத்திருந்த மிதுனாவோ, "உன் பெஸ்ட் ப்ரெண்ட் நான் இருக்கும் போது நீ எதுக்கு வீக் என்ட் வரைக்கும் காத்திருக்கனும். நா உனக்காக ஏற்கனவே ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிடேன். இதை நீ அவர்கிட்ட கொடு" என்று கூறி ஒரு சிறிய பாக்ஸ்சை அவள் கையில் கொடுத்தாள்.அதை பிரகதி திறந்து பார்த்தாள். அதற்குள் அழகிய வாட்ச் ஒன்று இருந்தது.

"


மித்து இது சூப்பரா இருக்கு.. கண்டிப்பா நிரஞ்சன் சார்க்கும் பிடிக்கும்"

"


ஹ்ம்ம்.. கண்டிப்பா பிடிக்கும். இது டிஜிட்டல் வாட்ச் இதுல நிறைய ஃபேஸிலிடிஸ் இருக்கு. அவரோட மொபைல் கூட இதுல கனெக்ட் பண்ணிக்கலாம்""வாவ்.. சூப்பர் மித்து.. யு ஆர் மை பெஸ்ட் ப்ரெண்ட் ஃபோரெவர்" என்று அவளை கட்டி கொண்ட பிரகதியை விளக்கி நிறுத்தி, "இன்னொரு முக்கியமான விஷயம் இதை நீயே வாங்கி கொடுக்கிறதா கொடுக்கணும் புரியுதா? இல்லனா 'என்னடா இந்த பொண்ணு இவ்வளவு முட்டாளா இருக்குதேனு நினச்சிடுவார்' என்று தன் மீது நிரஞ்சனுக்கு சந்தேகம் ஏதும் வந்து விட கூடாது என்று அவள் தெளிவாக தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்து முடிக்க, அதை பிரகதி எந்த அளவிற்கு திறம்பட செய்வாள் என்பது அவள் செயல்படுத்தும் போது தான் அவளுக்கே தெரியும்.அதை அவனிடம் சீக்கிரம் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் அன்றைய பயிற்சிகளை எல்லாம் விரைவாக முடித்தவள் அவன் கவனத்தை தன் மீது திருப்ப என்ன செய்வது என்று தன் வல கரத்தின் ஆட்காட்டி விரலை பற்களின் நடுவில் வைத்து கடித்து யோசித்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவன் அவள் அருகில் வந்தான்."அதுக்கு ஏன் இப்போ இந்த தண்டனை? என்று கேட்டு வாயில் இருந்த விரலுக்கு தன் கையால் விடுதலை கொடுத்தான். அவனை பார்த்து சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறையாக, "நல்ல வேளை நீங்களே வந்துடிங்க. உங்க கிட்ட ஒரு கிஃப்ட் கொடுக்கணும். அதை எப்படிக் கொடுக்கிறதுனு தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்று கூறினாள்.

"


என்ன திடீர்னு" என்று சந்தேகத்தை மனதில் தேக்கியவன் முகத்தில் புன்னகையுடன் கேட்க,

"கொ


டுக்கணும் தோணுச்சு..." என்று இழுத்தவள் உற்சாகத்துடன் அந்த பாக்ஸ்ஸை அவனிடம் நீட்டினாள்.அதை திறந்து பார்த்தவன் புரிந்துக் கொண்டான். இதை கண்டிப்பாக பிரகதி வாங்கியிருக்க மாட்டாள் என்று. பிறகு யார் இதை அவளிடம் கொடுத்திருப்பார்கள் என்பதையும் அவன் அனுமானித்திருந்தான்.கண்டிப்பாக பீட்டர் தான் மிதுனா மூலமாக பிரகதியிடம் கொடுத்து தன்னிடம் சேர்த்திருக்க வேண்டும். அப்படியானால் இது வெறும் வாட்ச்சாக மட்டும் இருக்காது. வருணிடம் கொடுத்து இதை ஒருமுறை செக் பண்ண வேண்டும் என்பதை மனதில் பதிவு செய்து கொண்டான்.

"


நல்லா இருக்குல்ல, இதுல நீங்க உங்க மொபைல் கூட கனெக்ட் பண்ணிக்கலாம்". என்று அவள் ஆர்வமாக அதை பற்றி கூறிக் கொண்டே அவன் கையில் அணிவிக்க, அவளின் ஆர்வத்தையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்."


இதை நீயா வாங்கின?" என்று அவன் சாதாரணமாக தான் கேட்டான்.. இவள் தான் மாட்டிக் கொண்ட தோரணையில் உலற ஆரம்பித்தாள்.

"


ஆமா நான் தான் வாங்கினேன். நீங்க கேட்கிறதா பாத்தா நான் என்னமோ வேற யாரோ வாங்கி கொடுத்ததை, நானா வாங்கினதா பொய் சொல்லி உங்ககிட்ட கொடுக்குற மாதிரி சொல்றீங்க.""நான் அந்த மாதிரியெல்லாம் எதுவும் சொல்லல. பார்க்க ரொம்ப காஸ்ட்லியா இருக்கு. இதோட விலை என்ன?" என்று கேட்கவும் திரு திருவென முழித்தவள் "கிஃப்ட் கொடுத்தா அது நல்லா இருக்கானு மட்டும் தான் பாக்கணும். இப்படி விலையெல்லம் கேட்டு ஆராய்ச்சி பண்ணக் கூடாது. உங்களுக்கு பிடிச்சிருக்கானு மட்டும் சொல்லுங்க" என்று ஒரு வழியாக சமாளித்து விட்டதாக எண்ணிக் கொண்டாள்."ஹ்ம்ம்.. நல்லா இருக்கு. ஆனா எனக்கு இதவிட நீ கொடுத்த ஃபிஷ் டால் தான் ரொம்ப பிடிச்சிருக்கு" என்றதும் "உங்களுக்கு அது பிடிச்சிருக்கா? நான் அப்பவே சொன்னேன் இந்த மித்து தான் 'உனக்கு பிடிச்சதெல்லா அவருக்கும் பிடிக்குமானு?' கேட்டு இன்சல்ட் பண்ணிட்டா" உற்சாகமாக ஆரம்பித்து கவலையோடு முடிக்க.

அவனோ "


தட்ஸ் சோ மீன் ஃபுள்" என்றான் நிறைவான குரலில்.

'


மீன் பொம்மைல என்ன மீன் ஃபுள்?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, "உன் மித்து கிட்ட சொல்லு, என் பிரகதிக்குப் பிடிச்சதெல்லா நிரஞ்சனுக்கும் பிடிக்கும்" அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக் கூற, அவன் சொற்களின் தாக்கத்தில் 'இது எனக்கான காதல்' என்ற உணர்வு தோன்றிட. ஒருமுறை அவனை தாவி அனைத்து விடுவித்தாள்.
அவளாக தன்னை நெருங்கி வருவது அவனுக்கும் பிடித்தது .

'


வருணை எப்படி சந்தித்து இதை பற்றி கூறுவது? ஒருவேளை அவன் இப்போதிருந்தே தன்னை கண்காணித்து கொண்டிருந்தால்? நான் வருணுடன் பேசுவது சரியாக இருக்காது' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வருண் அவன் எதிரில் நடந்து வர, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தான் .வருண் நிரஞ்சனை பார்த்துக் கொண்டே வர, நிரஞ்சன் அவனுக்கு கண்ஜாடை காட்டி பின்தொடர்ந்து வருமாறு கூறி அருகில் இருந்த டாய்லெட்டினுள் நுழைந்தான்.

'


நீ டாய்லெட் போறதா இருந்தா போகவேண்டியது தானேடா? என்ன எதுக்கு டா உன் பின்னாடி வர சொல்ற?' என்று புலம்பிய படியே அவனும் உள்ளே சென்றான்.வருண் உள்ளே நுழைந்ததும் பின்னால் இருந்து அவன் வாயை பொத்தி அவன் கையில் ஒரு டிஷ்சு பேப்பர தினித்து விட்டு வெளியேறினான் நிரஞ்சன்.வந்த வேகத்தில் அவன் எதாவது வாயை திறந்து காரியத்தை கெடுத்து விடக் கூடாதே. அதனால் தான் இவ்வாறு செய்தான்.

'


எதுக்கு இப்போ அவன் கை தொடச்ச டிஷு பேப்பர என் கைல கொடுத்துட்டு போறான். பக்கத்துல இருக்குற வேஸ்ட் பாக்ஸ் ல நீயே போடா வேண்டிய தானே? உனக்கு போடதுக்கு அவ்வளவு வழியா டா?' என்று குறை கூறினாலும் நண்பன் காரணம் இன்றி எதையும் செய்ய மாட்டான் என்பதை அவன் அறிவானே! அதை பிரித்து படித்தவனுக்கு அவன் செயலின் அர்த்தம் புரிந்தது.அதில் குறிப்பிட்டு இருந்த படி இரவு நிரஞ்சன் வீட்டிற்கு வாசல் வழி அன்றி குறுக்கு வழியில் நுழைந்தான் வருண்.

"


டேய்.. இப்படி உன் வீட்டு சுவர் ஏறி குதிச்சி வரதுக்கு, அந்த வாட்ச்ல மட்டும் எதுவும் இல்லாம இருக்கணும் அப்புறம் இருக்குடா உனக்கு. கண்ட்ரோல் ரூம்ல ஹாய்யா ஓசில ஏசி காத்து வாங்கிட்டு இருந்தவன இப்படி காம்பவுண்ட் சுவர் ஏற வச்சிட்டானே" என்று எப்போதும் போல் புலம்பினாலும் அவன் வீட்டில் இருந்த இரகசிய அறைக்கு வந்து சேர்ந்தான்.பிற எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ் இயக்கத்தை தடை செய்யும் டிவைசை ஆன் செய்தவன் நிரஞ்சன் கையில் இருந்த வாட்சை கழட்டி ஆராய ஆரம்பித்திருந்தார்கள்.அவர்கள் எண்ணியது போலவே நிரஞ்சனின் மொபைல் அதில் கனெக்ட் செய்ததால் அதில் இருந்த தகவலும், அதை தவிர அதில் பொருத்தப்பட்டிருந்த மைக்கின் உதவியால் அவன் சாதாரணமாக பேசுவதும் கூட தெளிவாக கேட்கும் படி செட் செய்திருந்தான்."என்ன மச்சான் வாட்ச் குள்ள செட் பண்ணி வச்சிருக்கான்? சில்லி பாய். இப்படி எடுத்து அப்படி தூக்கிப் போட்டா முடிஞ்சிட போகுது" என்று அதை தூக்கி போட போனவனை தடுத்தவன், "அதையெல்லாம் அப்படியே வச்சிடு" என்று கூறிய நண்பனை வினோதமாக , "இது இருந்தா நீ எப்படி ஃப்ரீயா உன் வேலைய பாக்க முடியும்? நாம பேசுறது எல்லாமே அவனும் கேட்பான் டா" என்று சொன்னான்.

"


கேட்கட்டும், நான் முன்னாடியே சொன்னது தான். நாம அவனை தேடுறது அவனுக்கு தெரியக் கூடாது. நாம ரெண்டு பேரும் வேணா வேற மாதிரி பேசிக்கலாம்" என்று அவன் கண்ணடித்து கூற,

"


டேய்.. இவ்வளவு நாள் சிங்கிள் ஆஹா இருந்த, இப்போ தான் உனக்கும் ஆள் இருக்கு தானே? இந்த வேற மாதிரி பேசுறது எல்லாம் அவகிட்ட வச்சுக்கோ எங்கிட்ட வேணா" என்று சலித்துக் கொண்டவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

"


மச்சா உனக்கே வாட்ச் செட் பண்ணவன் அந்த பொண்ணு பிரகதிக்கு இந்த மாதிரி ஏதாவது செட் பண்ணாமலா இருப்பான்?" என்று கேட்க,

"


கண்டிப்பா அவளுக்கே தெரியாம அவகிட்ட இது மாதிரி டிரான்ஸ்மிட்டர் கொடுத்திருப்பான். அதனால் தான் அன்னைக்கு பிரகதிகிட்ட பேசும் போது கூட எதுக்கும் இருக்கட்டும்னு ஜமர் யூஸ் பண்ணேன்" என்று அவன் பிரகதி திரவத்தை குடித்து உலறிய நாளை குறிப்பிட்டு கூறினான்."அதை முதல்ல கண்டுபிடிச்சு அவகிட்ட இருந்து அதை ரிமூவ் பண்ணனும் டா. அப்போ தான் டைரக்ட்டா பேசி அவளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்க முடியும்" என்று அதை எப்படி கண்டு பிடிப்பது என்று இருவரும் யேசனையில் மூழ்கினர்.

"


சார் பத்து நாள் டிரெய்னிங்கிற பேருல எங்களை கொண்ணு எடுத்துடிங்க. கொஞ்சம் ரிலக்ஸ்சேஷன்காக அவுட்டிங் எங்கயாவது போலாம் சார்" அனைவரின் சார்பாக தீபக் கேட்க,"


அவுட்டிங் தானே போய்டலாம். எல்லாரும் ரெடியா இருங்க" என்று கூறி செல்பவனையே ஆச்சர்யமாக பார்த்தனர் அனைவரும்."


என்னடா இவ்வளவு சீக்கிரம் ஒத்துகிட்டார்?" சுபாஷ் தன் சந்தேகத்தை கேட்டான்.

"


நம்மல பார்க்கும் போது அவருக்கே பாவம் ஆயிடுச்சி போல. அதான் ஒத்துக்கிட்டார். மனசு மாறதுக்குள்ள ஒரு நாள்ல போய்ட்டு வர மாதிரி ஏதாவது நல்ல இடமா கூகிள்ல தேடுங்கடா" கட்டளையிட்டவனும் தேடுதல் வேட்டையை தொடங்கி இருந்தான்.அவர்களுக்கு தெரியவில்லை எல்லாரும் ரெடியா என்ற வார்த்தையின் அர்த்தம்.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 12"எல்லாரும் ரெடியா?" என்று வழக்கமான கம்பீரக் குரலில் நிரஞ்சன் கேட்க, "எஸ் சார்" என்று சுரத்தையே இல்லாமல் ஒலித்தது அனைவரின் குரலும். ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் தங்களின் முன்னிருந்த அந்த பெரிய மலையை பார்த்து திகைத்து நின்றிருந்தனர்."சார் அவுட்டிங் கேட்டதுக்கு இப்படி சிட்டிய விட்டு அவுட்டர் கூட்டி வந்து மலை ஏற விட்டிங்களே!" சிவா தங்கள் ஆசைகள் எல்லாம் நிராசையான வருத்ததில் புலம்ப, நிரஞ்சன் தன் மின்னல் புன்னகையை சிந்தினான்.அவர்கள் மலை ஏறுவதற்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொடுத்தவன், செஃப்டி பெல்டை எவ்வாறு அணிய வேண்டும்? எப்படி பிடிமானமாக ஏற வேண்டும்? என்பதையும் கற்றுக் கொடுத்தான்."இவ்வளவு நாள் வேக வைச்சது பத்தலைனு, இப்போ ஒரேயடியா கிரில்டு சிக்கனா மாத்த முடிவு பண்ணிடிங்களா சார்?" கேமா பெண்கள் சார்பாக கேட்க,அப்போது தான் அவர்கள் திசையில் பார்வையை பதித்தான் நிரஞ்சன். இவர்களின் போதா காலம் இன்று சூரிய பகவான் ஒன்பது மணிக்கே உச்சத்தை தொட்டு விட்டார் போல! அவரின் கதிர் வீச்சால் வியர்வை வடிய சோர்ந்து போய், ஆங்காங்கே இருந்த சிறிய பாறைகள் மீது அமர்ந்திருந்தனர் பெண்கள் அனைவரும்.எப்போதும் போல் இப்போதும் ஆண்களுக்கே முன்னுரிமை வழங்கினர். ஆனால் இம்முறை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை."போன தடவ நாங்க தானே ஃபர்ஸ்ட் போனோம். இந்த தடவ நீங்க போங்க" என்று நியாதிவதியானா தீபக் கூற, அதை மறுத்து பேசிக்கொண்டிருந்தவர்களை அடக்கியது நிரஞ்சனின் குரல்."வீ ஆர் கோயிங் ஃபர்ஸ்ட்" என்று கட்டளையிட்டவன் ஆண்கள் அணியினை அழைத்து கொண்டு முன்னேறினான்.அவர்கள் நிலையத்தின் ஆட்கள் நான்கு பேர் முதலில் ஏறி மேலே செல்ல, அவர்களை தொடர்ந்து ஆண்களும் ஏற தங்கள் கையில் இருந்த கயிற்றை சுற்றி மேலே ஏறிய, அது சரியாக மாட்டுவதற்கேசிறிது சிரமப் பட்டனர்.எப்படியேனும் கஷ்டபட்டு அதை மாட்டியவர்கள், சிலபல சிராய்ப்புகள் மற்றும் இரத்த களரிகளுடன் தான் உச்சியை அடைந்தனர்.அடுத்து பெண்களை தயாராக்கினாள் மோனிகா. கயிறின் ஒரு முனையை தாங்கள் அணிந்திருந்த பெல்ட்டுடன் இணைத்தவர்கள், மறுமுனையை மலை மேல் உயரத்தில் வீசி அது வலுவான பிடிமானத்தை அடைய போராடிக் கொண்டிருந்தனர்.பிரகதிகோ 'எங்க தவறி கீழ விழுந்துருவோமோனு வீட்ல மொட்ட மாடிக்கு கூட போக மாட்டேன் டா. அப்படி பட்ட என்ன இவ்வளவு பெரிய மலையை ஏற சொன்னா எப்படி என்னால முடியும்? நோ நெவர் முடியவே முடியாது. ஐயப்பா எல்லாரும் சேர்ந்து என்ன இப்படி கொடுமை படுத்துறாங்களே! இதல்லாம் நீ கேட்க மாட்டியா?' என்று மனதுக்குள்ளே அவள் அழுவது வெளியே யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை, ஒருவனை தவிர. நிரஞ்சன் மேலே நின்று அவளின் முக பாவனைகளை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.ராட்டினம் சுற்ற அழைத்த போதே விட்டால் போதும் என்று ஓடியவள் ஆயிற்றே! ஆனால் அவள் பயத்தைப் போக்கிக் கொள்ள இதில் ஏறி தான் ஆக வேண்டும். அவளுக்காக எப்போதும் அவனிடம் தனி அக்கறை இருக்கிறது. ஆனால் அது அவளை பலவீனமாக்கிவிடக் கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான்..நீண்ட நேரம் கயிற்றை கையிலே வைத்துக் கொண்டு நிற்பவளை பார்த்த மோனிகா "பிரகதி த்ரோ இட்" என்று கூற. "ஹ்ம்ம்" என்று தலை அசைத்தவளோ 'ஐயப்பா சரியா மாட்டக் கூடாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை. இப்படியே நின்னுடனும். அப்புறம் அவங்களே வெக்ஸ் ஆகி திரும்ப கூட்டி போயிடுவாங்க' என்று அழகான திட்டம் ஒன்றை போட்டு அதை முடித்துக் கொடுக்கும் பொறுப்பையும் ஐயப்பாவிடம் கொடுத்தாள்.அவர் இருக்கும் பிஸியில் இவளை கவனிக்கவில்லை போலும்!கயிறு சரியாக சென்று மாட்டியது. 'ஐயப்பா! உன்ன என்ன செய்ய சொன்னா என்ன செஞ்சி வச்சிருக்க?' கோபமாக கயிறையே பார்த்து முறைத்து கொண்டிருந்தவளின் அருகில் வந்த மோனிகா,"வெரி குட் கோ அகய்டு" முன்னேறி செல் என்று கட்டளையிட்டவளின் வார்த்தைக்கு அடிபணிந்து அன்னார்ந்து மலையை பார்த்தவளுக்கு உச்சியில் இருக்கும் கல் 'நான் இப்போ உருண்டு வந்துடுவேன்' என்று அவளை பயமுறுத்துவது போல் இருந்தது.அவளோ 'நானும் இப்போ அழுதுடுவேன்' என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றுருந்தாள். இவற்றையெல்லாம் ஆவலாக மேல் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.ஒருவாறு அனைத்து பெண்களும் கயிறை சரியாக போட்டு பாதி மாலையை ஏறி இருந்தனர். அப்போதும் அடிவாரத்தை அளந்துக் கொண்டிருந்தவளை பார்த்த மோனிகா "கரியப் பிரகதி கொஞ்சம் வேகமா ஏறு" என்று கத்த "எஸ் மேம்" என்று அவள் முனங்கியது யாருக்கும் கேட்டிருக்காது.'ஐயப்பா.. இன்னைக்கு என்ன சாவடிக்காம விட மாட்டாங்க போலவே! உன்னை நம்பி தான் ஏறுறேன் பாதில அத்து விட்டுட்டு போய்டாத' என்று மனதை திடபடுத்திக் கொண்டு ஏற ஆரம்பித்தாள்.அவர் தான் அப்பவே பிஸி ஆயிட்டரே இது மட்டும் கேட்டிருக்கவா போகுது.தட்டு தடுமாறி பாதி மலையை ஏறியவளின் போதாத காலம், அடுத்து அவள் கால் வைத்த இடத்தில் கற்கள் உருண்டு கீழே விழ, நிலை தடுமாறி குனிந்து கீழே பார்த்தவள் தலை கிறு கிறுவென சுற்றியது. கைகள் நடுங்க அதன் பிடியையும் விட்டவள் "அம்மா ஆ.." என்ற அலறலுடன் கயிறின் உதவியால் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தாள்."பிரகதி" பல்வேறு விதமான குரல்கள் அவள் செவிய எட்டியது. கண்களை இறுக மூடிக் கொண்டவள், நாவெல்லம் வறண்டு விட்டது. இதயம் வெளியே வந்து துடிப்பது போன்ற ஒரு உணர்வு. விழுந்து விடும் பயத்தில் கைகள் தானாக கயிறை பற்றிக் கொள்ள, அதையே இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள்."பிரகதி டோண்ட் பனிக். நீ சேஃபா தான் இருக்க. கண்ண திறந்து பாரு" மிக அருகில் கேட்ட மோனிகாவின் குரலில் கண் திறந்தாள். அவள் அருகில் இரண்டு கால்களையும் பாறையில் ஊன்றி ஒரு கையால் கயிறை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் பிரகதியை பிடித்துக் கொண்டிருந்தாள் மோனிகா.கண் திறந்து அவளை பார்த்தவள் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய, தான் பிடித்திருந்த கயிற்றை விடுத்து அவளைக் கட்டிக் கொண்டாள்."பிரகதி உனக்கு எதுவும் ஆகல ரிலாக்ஸ்""இல்ல மேம் என்னை கீழ இறக்கி விட்ருங்க. எனக்கு பயமா இருக்கு. நான் வீட்டுக்கு போறேன்" என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.அவள் அழுவதை பார்க்க பாவமாக தான் இருந்தது மோனிகாவிற்கும். "யு ஆர் ஸ்ட்ராங் கேர்ள்" அடுத்த வார்த்தையை கூட பேச விடாமல் "ஐ அம் நாட் ஸ்ட்ராங்" என்று சொல்லி அழுதுக் கொண்டிருப்பவளை என்ன கூறி சமாதானம் செய்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை."நம்ம கனவுகளை லட்சியத்தை அடைய நாம நிறைய போராடனும், எதுவும் ஈஸியா கிடைச்சிறாது. உன்னோட குறிக்கோளை நோக்கி முன்னேறு. உன்னோட பயத்துனால அதை இழந்திடாதே" என்று அவள் தைரியம் ஊட்ட, எதையும் கருத்தில் கொள்ள தயாராக இல்லாத பிரகதியோ, "எனக்கு எந்த குறிக்கோளும் இல்ல, லட்சியமும் இல்ல. எனக்கு எதுவும் வேண்டாம். பிளீஸ் என்னை விட்ருங்க" என்று கீழே பார்த்து பயத்தில் அவளை மேலும் இறுக்கினாள்.ஹ்ம்கும் மோனிகாவும் விட தயாராக இல்லை. "கீழ பாக்காத, அந்த வானத்தை பாரு. அதை தொட போறேங்கிற ஆசையை உனக்குள்ள வளர்த்துக்கோ, உனக்கு ஆச இல்லையா? அந்த ஆகாயத்த தொட்டு மேக கூட்டங்களை கலைத்து விட" சிறு பிள்ளைக்கு ஆசை காட்டுவது போல் கூறிக் கொண்டிருந்தாள் மோனிகா.அண்ணார்ந்து பார்த்தவள் கண்கள் சுருங்க மீண்டும் குனிந்து விட்டாள். 'வெயில் வெளுத்து வாங்குது. இதுல எங்க நான் ஆகாயத்துல மேகத்த பாக்குறது. ஐயப்பா.. இன்னைக்கு என்ன ஒரே அடியா மேல அனுப்பாம விட மாட்டாங்க போலயே!' என்று மைண்ட் வாய்சில் புலம்பிக் கொண்டிருந்தாள்."பிரகதி உன்னால முடியும் டிரை பண்ணு. மேல வா" மிதுனாவின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டு உச்சியை பார்த்தாள். மிதுனா மட்டுமின்றி ஒரு சில பெண்களும் கூட தங்கள் இலக்கை அடைந்து இருந்தனர். இன்னும் சிலர் அதை நெருங்கி விட்டனர். இவள் மட்டும் தான் பாதியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்."பிரகதி" சாலினி அவளை அழைக்க, அவளை பார்த்தவளின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தது. ஏனென்றால் சாலினி நிரஞ்சன் அருகில் நின்று, "நீ கிளம்பி வீட்டுக்குப்போ. இங்க எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்" என்று நிரஞ்சனை சுட்டிக் காட்டி அவள் கூற, அவளை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரகதி.சாலினியின் எதிர்மறை வார்த்தையின் அர்த்தம் புரியாமல் நிரஞ்சன் அவளை விசித்திரமாக பார்க்க, அவளோ "இப்போ எப்படி மேல வர்றானு மட்டும் பாருங்க சார்" என்று கள்ள சிரிப்புடன் கூற, அப்போது தான் அவனுக்கும் புரிந்தது."மோனிகா கேன் ஐ கம்" நான் வரவா என்று அவன் கேட்க, "நோ நீட், வீ கேன் மெனேஜெட், இல்ல பிரகதி" என்று கேட்டாள் மோனிகா.பிரகதியோ சாலினியைப் பார்த்துக் கொண்டே "எஸ் மேம்" என்று உறுதியான குரலில் கூறினாள்.அதன்பிறகு மோனிகா சொன்னது போல் தன் லட்சியத்தை அடைய முன்னேறினாள். எப்படியேனும் நிரஞ்சனிடன் சென்று விட வேண்டும் என்று அவனை பார்த்துக் கொண்டே தன் அடிகளை எடுத்து வைத்தாள். அதில் வெற்றியும் கண்டால்.அவள் மேலே சென்றதும் மிதுனா அவளை கட்டிக் கொண்டு "சூப்பர் பிரகதி" என்று கூறியவாறே அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தாள்.சாலினியும்ம் அருகில் வந்து "ஐய்யோ இந்த சான்ஸ்ம் போச்சா" என்று பொய்யான வருத்தத்துடன் கூற "உனக்கு நான் எப்பவும் சான்ஸ் தர மாட்டேன்" என்று புன்னகையுடன் கூறியவள் அவளையும் கட்டிக் கொண்டாள்.தன்னை மேலே வர வைப்பதற்காக சாலினி போட்ட திட்டம் தான் இது என்பதை பிரகதியும் அறிவாள் தானே. ஆனால் விளையாட்டுக்காக கூட அவளால் அவள் நிரஞ்சனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியவில்லை என்பதே அவள் இப்போது உணர்ந்துக் கொண்ட உண்மை.இவற்றையெல்லாம் வெறும் பார்வையாளனாக மட்டும் நின்று பார்த்துக் கொண்டவன் மோனிகாவை நோக்கி நகர்ந்தான்."தாங்க்ஸ் மோனிகா. பிரகதிக்கு உறுதுணையா இருந்ததுக்கு" அவளுக்கு நன்றி தெரிவித்தான்."நான் என் வேலையை தான் செய்தேன். இப்பவும் அந்த பொண்ணு மேல எனக்கு எந்த நம்பிக்கையும் வந்திடல" என்று கூறி சென்றாள்.தனக்காக தன் காதலியை வெறுக்கும் தன் தோழி சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.மோனிகா அனேக நபரை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல, நிரஞ்சன் மீதம் இருக்கும் ஒரு சிலரை தான் அழைத்து வருவதாக கூறி பின் தங்கினான்.மிதுனாவும் சாலினியும் தாங்கள் உபயோகித்த கயிறை சுற்றி மடித்துக் கொண்டிருக்க, பிரகதி ஒரு பாறையின் மீது அமர்ந்து தன் கயிறை சுற்றிக் கொண்டிருந்த நிரஞ்சனை முறைத்துக் கொண்டிருந்தாள்.நக்கல் சிரிப்புடன் அவளை பார்த்தவாறே தன் வேலையை தொடர்ந்தான். இருவரையும் பார்த்த சாலினி எப்போதும் போல் அவர்களை கேலி செய்யும் குரலில்,"ஹலோ ரோமியோ ஜூலியட் நாங்க இன்னும் இங்க தான் நிற்கிறோம்' என்று கூற, அப்போதும் நிரஞ்சன் மீதருந்து தன் பார்வையை திருப்பாமல் முறைத்துக் கொண்டிருந்தாள் பிரகதி.அவள் முறைப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. நீங்க முன்னாடி போங்க நாங்க வர்றோம்.. அவர்கள் இருவரையும் அங்கிருந்து அகற்றும் முயற்சியில் இறங்கினான்."அப்படியெல்லாம் உங்கள நம்பி எங்க ப்ரெண்ட்ட விட்டுட்டு போக முடியாது" என்று சாலினி சொன்ன தோனியில் சத்தமாக சிரித்து விட்டான்.பிரகதி, சாலினி புறம் திரும்பி அவளுக்கும் ஒரு முறைப்பை பரிசளிக்க. "இப்படி அன்பா பார்த்து போக சொன்னா போக போறோம். வா மித்து நாம மோனிகா மேம் கூட ஜாயின் பண்ணிக்கலாம்" என்று மிதுனாவும் சாலினியும் கிளம்பினர்.

"


என்ன? இப்போ எதுக்கு மொறைச்சி சிரிப்பு காட்டிட்டு இருக்க" என்று அவன் மேலும் சிரித்தவாறே கேட்க, 'என்ன சிரிப்பு காட்டுறேனா?' என்று கோபமாக அவன் பக்கத்தில் வந்தாள்.

"


சிரிக்கிறத மொதல்ல நிறுத்துங்க" அவள் கோபமாக தான் கூறினாள். ஆனால் அவனுக்கு அது இன்னும் அல்லவா சிரிப்பை தூண்டியது.
'சரி நிறுத்திபோம் இல்லனா அழுதுட போற' என்று கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

"


நீங்க ஏன் சாலினிய பார்த்து சிரிச்சிங்க" என்று பெசஸிவ்நஸ் தலை தூக்க அவள் கேட்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது."எப்போ?" என்று ஏதும் அறியாதவனாய் அவன் கேட்க, "நான் அங்க மலைல தொங்கிட்டு இருந்தப்போ. நான் அங்க கஷ்ட பட்டுட்டு இருக்கேன். நீங்க சாலினிகிட்ட நல்லா சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருகிங்க"

'"


இந்த கேள்வி உனக்கே பைத்தியகாரதனமா தெரியலையா?""இல்ல தெரியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டவள் மறுபடியும் அவன் முகம் நோக்கி "இனி நீங்க சாலினிய பார்த்து சிரிக்க கூடாது" என்று சொல்ல, அவளை ரசித்தவன் "சிரிச்சா?" என்ன பண்ணுவ என்று தன் ஒற்றை புருவத்தை தூக்கி கேட்க, "ஹ்ம்ம் பார்க்குற இந்த கண்ணு ரெண்டையும் தோண்டி வெளிய போட்டுருவேன்" அவள் அவன் முன் இரு விரல்களை நீட்டி கூற, தன் மீது அவள் எடுத்துக் கொள்ளும் உரிமையை கூட புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான்.

"


ஐயோ பிரகதி!" என்ற ஆண் குரலில் இருவரும் தங்களுக்கு பின்னால் திரும்பி பார்க்க, ஒரு பெரிய பாறைக்கு பின்னால் இருந்து வெளியே வந்தான் தீபக். அவசரமாக இயற்கை அழைக்க சற்று ஒதுங்கியவன் இவர்களின் உரையாடலை இலவசமாக கேட்டுக் கொண்டான்.'ஐயப்பா.. இவன் எங்க இருந்து இப்போ திடீர்னு மொலச்சான். போச்சி போச்சி கேம்ப் ஃபுல்லா தண்டோரா போட்டுடுவானே!' மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தாள்.அவர்கள் அருகில் வந்தவன் "என்ன நீ சாரையே மிரட்டிடு இருக்க? என்ன சார் நீங்களும் கேட்டுட்டு மலை மாதிரி நிற்கிறிங்க?" என்று இருவரையும் சந்தேக கண்ணோடு பார்த்தவன் "சம்திங் ராங்" என்று எல்லாம் புரிந்தவனாக புன்னகைத்தான்.

"


என்ன பிரகதி மலையையே சாச்சிட்ட போல?" அதே சந்தேக குரலில் கிண்டலடிக்க, பிரகதிக்கு தான் ஐய்யோ என்றிருந்தது.நிரஞ்சன் அவன் தலையில் தட்டி அவனைப் போக சொல்ல அவனும் நக்கலாக சிரித்துக் கொண்டே சென்றான்.

"


நாமளும் போகலாமா?" பிரகதியிடம் நிரஞ்சன் கேட்க, "ஹ்ம்ம்" என்று திரும்பி நடந்தவள் தவறியும் நிமிர்ந்து அவன் முகம் காணவில்லை.சிறிது தூரம் சென்றவள் அப்படியே ஓரமாக இருந்த சிறிய கல்லின் மீது இருந்து விட்டாள்."என்னாச்சி?" அக்கறையாக கேட்டவனிடம் "முடியல சார். கால்லாம் ரொம்ப வலிக்குது" பாவமாக முகத்தை வைத்து அவள் சொன்னது அவனுள் வலியை ஏற்படுத்தியது.

"


இன்னும் கொஞ்ச தூரம் தான் வா போகலாம்" அவன் அவளை அழைக்க, அவளோ கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு "இல்ல என்னால முடியல நீங்க போங்க" என்று அவள் கூறிய அடுத்த நொடி காற்றில் மிதந்து அவன் கைகளில் குடியேறி இருந்தாள்.நிரஞ்சன் அவளை குழந்தை போல கைகளில் அள்ளிக் கொள்ள, காதலாக அவனைப் பார்த்தவள் தன் கைகள் இரண்டையும் மாலையாக அவன் கழுத்தில் போட்டிருந்தாள்.பல்வேறு தடைகளை கடந்து அவர்களின் இந்த மலை பயணம் மறக்க முடியாத பயணமாக மாறியது பிரகதிக்கு.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 13

தன் முன் பரிமாற பட்டிருந்த உணவு வகைகளை விழி விரிய ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரகதி. இன்று ஞாயிற்று கிழமை அவர்களுக்கு ஓய்வு நாள் என்பதால் நிரஞ்சன் அவளை வெளியே அழைத்து வந்திருந்தான். இரவு எட்டு மணியை கடந்திருக்க இருவரும் உணவருந்த ஹோட்டலுக்கு வந்திருந்தனர். அவள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய மெனுக் கார்டை அவளிடம் கொடுக்க, அதை அப்படியே அவன் புறம் திருப்பி தள்ளியவள், "நீங்களே ஆர்டர் பண்ணுங்க சார். நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்" என்று கூறி சென்றவள் வந்து பார்த்து அதிசயத்து தான் போனாள்.

அவளுக்கு பிடித்த உணவு வகைகளை அல்லவா டேபிளில் அடுக்கி வைத்திருந்தான். சிக்கன் பிரியாணி, கீ ரோஸ்டட் சிக்கன், தவா பன்னீர், வீட்ச் பரோட்டா, நாண், செட்டிநாடு சிக்கன் கிரேவி இன்னும் பல. அவைகளை எல்லாம் கண்களில் நிரப்பியவளின் இதழ்கள் தானாக விரிந்துக் கொள்ள, அவற்றை பார்த்தவாறே நிரஞ்சனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

இன்னும் கூட அவளால் நம்ப முடியவில்லை. 'தனக்குப் பிடித்தவைகள் அவருக்கு எவ்வாறு தெரிந்திருக்கும்?' என்ற சிந்தனையிலேயே அவன் முகம் நோக்க, அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தில், தான் காண நினைத்த இன்ப அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய அதை ரசித்தவன் அவளிடம் "சாப்பிடு" என்று கண் அசைத்து அவளுக்கு பரிமாற ஆரம்பித்திருந்தான்.

நொடியும் தாமதிக்காது அவற்றை எல்லாம் விழுங்க ஆரம்பித்திருந்தாள் பிரகதி. 'எனக்கு பிடிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணடிக்க அவள் விரும்பவில்லை. 'நமக்கு சோறு தான் முக்கியம்' என்பது போல் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள். நிரஞ்சன் என்று ஒருவன் தன் எதிரே இருப்பதையே கன நேரம் மறந்து தான் போனாள்.

ஹோட்டலுக்கு வெளியே மின்னிக் கொண்டிருந்த குட்டி குட்டி சீரியல் பல்ப் வெளிச்சம் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையை ஒட்டி இருந்த பெரிய அளவு ஜன்னல் கண்ணாடியில் பிரதிபலித்தது. மிதமான மஞ்சள் நிற லைட்டுகள் உள்ளே போடப்பட்டு அந்த இடத்தையே ரம்மியமாக மாற்றியது.

கோதுமை நிற தேகம், அழகான குட்டி கண்கள், கூர் நாசி, ரோஜா இதழ்கள், இடை வரை நீண்டிருந்த கூந்தல், அதை அழகாக பின்னி போட்டிருந்தாள். அதற்கு காரணம் எப்போதும் பேண்ட் சர்ட்டில் வலம் வருபவள் இன்று சுடிதாருக்கு மாறியிருந்தாள் அல்லவா! வான் நீல நிறத்தில் டாப், பிங்க் நிறத்தில் சால் அவள் கழுத்தை சுற்றி தவழ்ந்து கொண்டிருந்தது.

அவள் ரசித்து ருசித்து சாப்பிடும் அழகை எதிர் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து ஒரு கையை கன்னத்தில் முட்டுக் கொடுத்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான் காவலன் என்ற பெயரில் சுற்றித் திரியும் அவளின் கள்வன்.

ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவள் "செமையா இருக்கு சார். நீங்களும் சாப்பிடுங்க. கேண்டீன்ல போடுற காஞ்ச சப்பாத்திய சாப்டு சாப்டு நாக்கு செத்து போச்சி. ஜெயில்ல கூட நல்ல சாப்பாடு போடுவாங்க போல. சாப்பாடா சார் போடுறாங்க?" என்று அலுத்துக் கொண்டவள் உண்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அவளின் பாவனையில் மெலிதாக சிரித்தவன் "இந்த மாதிரி சாப்பாட தினமும் சாப்ட ஹெல்த் இஸ்யூஸ் வரும். அந்த சாப்படுல தான் புரோடீன் அதிகமா இருக்கு. அதனால் தான் அந்த சாப்பாடு போடுறாங்க" என்று அழகாக காரணத்தை கூறியவனை ஒருமுறை நிமிர்ந்து வாயை மென்றவாறே பார்த்தவள் 'எங்கே இதற்கு மேல் பேசினால் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவாறோ' என்ற அச்சத்தில் சாப்பிடுவதற்கு தவிர வேறு எதற்கும் அவள் வாயை திறக்கவில்லை.

இன்னும் அவன் சாப்பிடாமல் இருப்பதை கவனித்தவள், "நீங்க சாப்பிடலயா சார்?" என்று கேட்க, "நீ சாப்பிடு" என்று மட்டும் தான் அவனிடம் இருந்து பதில் வந்தது..
'ஏன் சாப்பிடாம இருக்கால்? ஒரு வேளை நான்வெஜ் சாப்பிட மாட்டாரோ? இல்ல வேற ஏதாவது ஸ்பெஷல ஆர்டர் பண்ணிருக்காரா? என்னவா இருக்கும்?' என்ற சிந்தனை ஒரு புறம் இருக்க, 'ஏதுவா இருந்தாலும் அப்புறம் கேட்டுக்கலாம்' அவள் செய்யும் வேலையை நொடி நேரம் கூட வீணாக்காது செய்துக் கொண்டிருந்தள்.

அவளால் முடிந்த அளவு அதில் இருந்ததில் பாதியை சாப்பிட்டவள் நிமிர்ந்து அவனை பார்த்து "போதும் சார்" என்று தாயிடம் கெஞ்சும் குழந்தை போல் கூற, அவனும் "சரி போய் ஹேன்ட் வாஷ் பண்ணிடுவா" என்று அனுமதி அளித்தான்.

அவள் கை கழுவி விட்டு வர, அவள் விட்டு சென்றவற்றை அவன் உண்ண ஆரம்பித்திருந்தான். அவள் வந்ததும் ஒரு ஐஸ்கிரீம் பவுலை அவள் கையில் கொடுக்க, அதையும் ருசித்தவாறே "எங்க அப்பா கூட இப்டி தான் நானும் என் தங்கச்சியும் சாப்பிட்ட அப்புறம் தான் சாப்பிடுவாங்க" என்று சொன்னாள். அவன் செயலில் இன்று அவள் தந்தையை கண் முன் பார்த்த உணர்வு அவளுக்கு.

நடுத்தர வர்க்க குடும்ப தலைவரின் செயல் அது. தங்கள் பிள்ளைகளை வெளியே அழைத்து சென்றால், அவர்களுக்கு பிடித்தவற்றை வாங்கி கொடுப்பவர் தனக்காக எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டார். ஆசைக்காக வாங்கியவர்கள் அனைத்தையும் உண்ண முடியாமல் தவிக்க, தங்கள் குழந்தைகளின் வயிறும் மனமும் நிரம்பிய பிறகே ஒரு தந்தை அவற்றை உண்ண ஆரம்பிப்பார். பணத்தின் அருமை தெரிந்தவராயிற்றே! சாப்பாட்டையும், பணத்தையும் வீணடிக்க விரும்ப மாட்டார்கள்.

நிரஞ்சனுக்கு பணம் பற்றிய கவலை இல்லையென்றாலும் உணவை வீணடிக்க அவன் விரும்பவில்லை. ஒரு தாயாக அவளை சாப்பிட வைத்தவன் பின்பு தான் சாப்பிட ஆரம்பித்திருந்தான்.

அவள் தன் தந்தையின் நினைவில் ஆரம்பித்து தன் தாய் மற்றும் தங்கையின் நினைவில் ஆழ்ந்திருக்க, அவள் குடும்பத்தை பற்றிய பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அவளே வழி வகுத்து கொடுத்ததாக கருதினான்.
"உன் அப்பா, அம்மா என்ன பண்றாங்க? உங்க வீட்டுல எத்தன பேரு?" சாப்பிட்டவாறே அவன் கேள்விகளை தொடுக்க, அவளும் குளிர்ந்த பனிக்கூளை தொண்டைக்குள் அனுப்பியதன் விளைவாக நெஞ்சு வரை பரவிய குளிரை கண் மூடி அனுபவித்தவாறே பதில் அளிக்கலானள்.

"எங்க வீட்டுல அப்பா, அம்மா, நான் அப்புறம் என் குட்டி தங்கச்சி. நாங்க நாலு பேரும் தான். என் சொந்த ஊர் கோயம்புத்தூர். அம்மா அங்க ஜிஎச்ல ஸ்டாஃப் நர்ஸா ஒர்க் பண்றாங்க. அப்பா பிரைமரி ஸ்கூல் ஹெட் மாஸ்டர். தங்கச்சி என்ன விட ரொம்ப சின்ன பொண்ணு, எனக்கும் அவளுக்கும் டிவெல் இயர் டிஃபரன்ஸ் (12 years difference) எயிட்த் படிச்சிட்டு இருக்கா" அவ்வளவு தான் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"தங்கச்சி எந்த ஸ்கூல்ல படிக்கிறா? தினமும் வீட்டுல இருந்து தான் ஸ்கூல்க்கு போவாளா?" அவன் முக்கியமாக தெரிந்துக் கொள்ள நினைத்ததை கேட்டான். எப்படி அவள் தங்கையை வைத்து பீட்டர் பிரகதியை மிரட்டுகிறான் என்று அவன் தெரிந்துக் கொள்ள நினைத்தான்.

"ஊட்டில ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா" அவள் பீட்டர் பற்றிய நினைவு துளியுமின்றி நிரஞ்சன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்து கொண்டிருந்தாள்.
ஆனால் நிரஞ்சன் கவனமாக அவனுக்கு எந்த வகையிலும் சந்தேகம் வந்து விட கூடாது என்பதை மனதில் வைத்தே அவளிடம் கேள்விகளை கேட்டான். பிரகதி அன்று அணிவித்த வாட்ச் இன்றும் அவன் கையில் இருந்தது. அதனால் மிக கவனமாக வார்த்தைகளை கையாண்டான். இந்த வாட்ச் மட்டுமின்றி பிரகதியிடமும் ஏதாவது இருக்கும் என்பது அவன் கணிப்பு.

'அப்படினா ஊட்டியில பிரகதி தங்கச்சி ஹாஸ்டல்ல இருந்து தான் யாரோ பீட்டருக்கு உதவி பண்றாங்க' தன் எண்ணவோட்டத்தில் இருந்தவனை கலைத்து பிரகதியின் குரல்.
"இப்போ உங்களை பத்தி சொல்லுங்க?" அவனை பற்றி அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் அவளும் கேட்டாள்.

"என் வீட்டுல நான், அப்பா, எங்க வீட்டுல வேலை பார்க்குற குமார் அண்ணா மூனு பேர் மட்டும் தான். அப்பா பெயர் ரகுராம்" என்று அவன் முடிக்கும் முன் அவசர குடுக்கையாக "உங்க அப்பா பெயரும் ரகுராமா? நம்ம ஹெட் ஆபீஸர் பெயர் கூட ரகுராம் தான். என்ன ஒரு ஒற்றுமைல" என்று அவள் படபடவென கூறி முடிக்க,
"அவர் தான் என் அப்பா" என்று அவன் சொல்ல, வாய்க்குள் திணித்த ஐஸ்கிரீம் ஸ்பூன் அப்படியே நிலைத்தது. "எத? அவர் தான் உங்க அப்பாவா?" அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள்.

"அங்கே நிறைய பேருக்கு இது தெரியாது. அதனால உனக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல" அவன் எந்த அலட்டலும் இல்லாமல் சாதாரணமாக கூறினான்.
இதுவரை இல்லாத ஏதோ ஒரு உணர்வு பிரகதியை தாக்கியது. அவள் அவனை காதலிக்கிறாள் என்பதையே அவள் மனம் இப்போது தான் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் அவன் குடும்ப பின்னனி வேறு அவளை பயமுறுத்தியது. தங்கள் உறவை நிச்சயம் அவன் தந்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று வீண் கவலை கொள்ளும் தன் மனதின் ஓட்டத்தை அவளால் நிறுத்த முடியவில்லை.

அவனுடன் இருக்கும் போது எப்போதும் அவனிடம் மட்டும் மூளையும் மனமும் தன் செயல்பாட்டை வைத்து விடுகிறதே! அவன் அன்றி வேறு எதுவும் அவள் சிந்தனையில் இருப்பதில்லையே! அது தான் அவள் செய்யும் மிக பெரிய தவறோ! அவளின் கடமையை மறந்து அவனிடம் தஞ்சம் புக நினைக்கிறாள். ஆனால் தன்னை, தன் செயலை முழு நேரமும் கவனித்துக் கொண்டிருப்பவனை மறந்தே போனாள். அதன் விளைவை அனுபவிக்க போவது என்னவோ அவளவன் தானே!

ஹோட்டலில் பில் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் கார் கீயை ஆன் செய்ய, சற்று தொலைவில் பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த அவனின் நீல வண்ண கார் கண் சிட்டியது. அதை நோக்கி சென்றவன் திரும்பி அவள் முகம் காண, இன்னும் மனதில் எதையோ போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டு அவளை இயல்பாக்க "கொஞ்ச தூரம் வாக் பண்ணிட்டு அப்புறம் போகலாமா?" என்று கேட்க, அவள் தலை தானாக சரி என்று அசைந்தது.

சூழ்ந்திருந்த இருளை விரட்டும் பொருட்டு சுற்றிலும் இருந்த பெரிய கடைகளின் பெயர் பொரிக்க பட்ட பெரிய டிஜிட்டல் பேனர்கள் பல வண்ணங்களில் மின்னிக் கொண்டிருக்க, சிறிய கடைகள் கூட தங்களின் வெளிச்சத்தை வீதிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. தள்ளு வண்டி கடைகளும் கூட ஆங்காங்கே நின்று தன் வாடிக்கையாளர்களுக்கு உணவளித்து கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த வீதியில் இருவரும் நடந்துக் கொண்டிருந்தனர்.

அவள் கைபிடித்து நிறுத்தியவன் அவள் விழி நோக்கி "ஏன் டல்லாகிட்ட? அவர் எனக்கு அப்பானா உனக்கு மாமனார் புரிஞ்சுதா. என் அப்பா பத்தி எனக்கு நல்லா தெரியும், என்னைக்கும் என்னோட விருப்பத்துக்கு எதிரா நிற்க மாட்டார். நீ எதை பத்தியும் கவலை படாதே, எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" ஒரு காதலனாக அவளுக்கு நம்பிக்கை அளித்தான்.

"ம்ம்" என்று முனங்களாக கூறியவாறு நடக்க ஆரம்பித்தாள். இன்னும் அவள் தெளியவில்லை என்பதை அவள் செயல் உணர்த்த "பிரகதி நான் இத முன்னாடியே உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்" அவளை இந்த மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சித்தான்.

பிரகதி '' என்பது போல் அவனை ஏறிட்டு பார்க்க, "உன்னோட ஏம் என்ன?" அவள் புரியாதா பார்வை பார்த்தாள். பின்ன யு பி எஸ் எக்ஸம் எழுதி டிரெய்னிங் வந்திருப்பவளிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டால் "ஐ மீன் ஒரு வேளை நீ இதுல செலக்ட் ஆகம போயிருந்தா அடுத்து என்ன பிளான் வச்சிருந்த" உடந்தையாக சமாளித்து வைத்தான். கண்டிப்பாக அவள் லட்சியம் இதுவாக இருந்திருக்காது என்பது அவன் எண்ணம்.
அவளும் கூட இந்த துறையில் நுழைய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்தது கூட கிடையாது. அதனால் அவன் கேள்விக்கு தன் ஆசையை கூற தொடங்கினாள்.

"எனக்கு பிளே ஸ்கூல், கிண்டேர் கார்டன் இந்த மாதிரி ஒன்னு ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசை சார். ஃபுல் டைம் குட்டி பசங்களோட இருக்கலாம். கொஞ்சம் பாடம் நிறைய விளையாட்டு. நல்ல என்ஜாய் பண்ணலாம்." விழி விரிய உற்சாகமாக சொன்னவளை தன் முயற்சிக்கு கிடைத்த வெற்றியோடு பார்த்தான். அவள் கனவை பற்றி துள்ளலோடு கூறிக் கொண்டிருந்தாள்.

பேசிக் கொண்டே நடந்தவள் எதேட்சையாய் தன் கை கடிகாரத்தை பார்க்க அது ஒன்பதை தொட்டிருந்தது. "அய்யோ இவ்வளவு நேரம் ஆயிடுச்சா. உங்க கூட இருந்தா நேரம் போறதே தெரியாது. ரொம்ப லேட் ஆகிட்டுச்சு போகலாம் சார்" என்று கூற. அவனும் "சரி நீ இங்கேயே இரு. நான் போய் கார் எடுத்து வரேன்" என்று கூறியவன் வந்த வழியே திருப்பி நடக்கலானான்.

அவன் தன் காரை அடைந்து அதை ஸ்டார்ட் செய்த நேரம் அவன் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்த சத்தம் கேட்க அதை திறந்து பார்த்தான். வருண் தான் செய்தி அனுப்பியிருந்தான். தான் எப்போதும் உபயோகிக்கும் அலைபேசியை பீட்டருக்கு ஒட்டு கேட்டுக் கொள் என்று விட்டிருந்தபடியால். இவனும் வருணும் பேச தனி செல்போன் ஒன்றை ரெடி செய்திருந்தான். சிறிய தகவலாக இருந்தால் குறுஞ்செய்தியில் பேசிக் கொள்பவர்கள்.. நிரஞ்சன் பேச வேண்டிய கட்டாயம் வந்தால் ஜாமர் மூலம் வாட்ச்சின் தொடர்பை துண்டித்து அதன் பிறகு பேசிக் கொள்வார்கள்.

பீட்டர் பிரகதிக்கு அழைத்திருப்பதாக வருண் செய்தி அனுப்பியிருந்தான். எப்போதும் போல் கால் டிரேஸ் செய்ய முடியவில்லை. உடனே காரில் வைத்திருந்த ஜமார் உதவியை நாடியவன் அதன் மூலம் கையில் இருந்த பீட்டரின் காதுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தான்.

தாங்கள் இருக்கும் இடத்தை வருணிற்கு கூறியவன், பிரகதியை காத்திருக்க சொன்ன இடத்தையும் கூறினான். வருண் துரிதமாக சிசிடிவி மூலம் அந்த இடத்தை அலச, அவன் கண்ணிற்கு பிரகதி புலப்படவில்லை.

நிரஞ்சனும் நொடி நேரத்தில் காரில் அங்கு வந்து சேர்ந்தான். அவன் விட்டு சென்ற இடத்தில் பிரகதி இல்லை என்றதும் காரை விட்டு இறங்கி காரின் அருகில் நின்று அவளை தன் விழிகளால் தேட ஆரம்பித்திருந்தான்.

"பிரகதியை காணோம் டா." வருண் அதிர்ச்சியாக கூற, காற்றில் பறந்து அவளின் இருப்பிடத்தை உணர்த்திய அவளின் துப்பட்டாவை வைத்தே "ஆப்போசிட்ல நிற்குற பிளாக் கலர் கார் பின்னாடி நிற்கிற பாரு" நிதானமாக வந்த வார்த்தைகள் நிரஞ்சன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலம் வருண் செவியை எட்டியது.

அந்த ஏரியாவை அலசியவனின் கண்ணில் பிரகதி நின்றிருந்த சாலைக்கு எதிர் திசையில் ஓரமாக நின்றிருந்த வண்டியில் இருந்த இருவர் பட்டனர். தன் விழிகளை கூர்மையாக்கி அவர்களை கவனித்தான். அவர்கள் இருவரும் பிரகதியை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவனால் அவளை சரிவர காண முடியாததால் வருணின் உதவியை நாடினான். வருண் பிரகதியோட ரியாக்ஷன் எப்படி இருக்கு பார்த்து சொல்லு?" நிரஞ்சனை காட்டிக் கொண்டிருந்த கேமராவை விடுத்து எதிர் திசை சாலை கேமராவை பார்த்தான்.
"அழுவுறடா" ஏன் என்று புரியாமல் அவன் கூறினான். அவள் எதற்கு அழுகிறாள் என்பதை யுகித்தவன் உதட்டில் மெல்லிய புன்னகை , "இப்போ என்ன பண்றா" அதே நிதான குரலில் கேட்டான்.

ஒரு கையில் போனை காதில் வைத்தவாறே அருகில் இருந்த குப்பை தொட்டியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அவளின் செயலை வருண் கூறினான்.
புன்னகையுடன் ஆழ்ந்த மூச்சு ஒன்றை வெளியிட்டவன் "மச்சா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியாடா" தன்னிடம் நேரம் குறைவாக இருப்பதை உணர்ந்து கேட்டான்.

"என்னடா ஹெல்ப் அது இதுனு என்னாலமோ பேசுற, என்ன செய்யனும் சொல்லுடா. அங்க ஏதோ சரி இல்லனு தோணுது. நான் உடனே கிளம்பி வரேன்" அவசரமாக கூறிய நண்பனை தடுத்தது நிரஞ்சனின் குரல். "கண்டிப்பா நீ இங்க வந்தாகணும்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு நான் வர வரைக்கு பிரகதியை பத்திரமா பாத்துக்கணும்." என் முழு நம்பிக்கை நீ தான் என்றிருந்தது அவன் வார்த்தைகள்.
"அதெல்லாம் அவளுக்கு எதுவும் ஆகாது. நீ எங்க போற? உன் பேச்சே சரியில்ல. நீ லைன்லையே இரு நா அங்க வரேன்" அவன் கூறி முடிக்கும் முன்பே தன் காதில் கேட்ட சத்தம் பொய்யாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.. கூடவே இரண்டு நாள் முன்பு நிரஞ்சன் கூறிய வார்த்தை வேறு காதில் ஒலித்தது.

"இன்கேஸ் நான் ஹாஸ்பிடலைஸ்ட் ஆகுற சிட்டுவேசன் (மருத்துவ மனையில் அனுமதிக்க படும் சூழ்நிலை) வந்தா பீட்டர் கண்டிப்பா என்ன பார்க்க வருவான் தானே"
சீறி வந்த துப்பாக்கி குண்டு நிரஞ்சன் இடது மார்பை துளைத்திருந்தது.
தொடரும்.....
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 14


நிரஞ்சன் பிரகதியை விட்டு சென்ற பிறகு, அங்கு சற்று தொலைவில் தன் தாயிடம் ஐஸ்கிரீம் வாங்கிக் கேட்டு அழுது அடம்பிடித்து கொண்டிருந்த குழந்தையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். நிரஞ்சன் தன்னை முதல்முறை வெளியே அழைத்து சென்றது நினைவு வர கூடவே தங்களின் முதல் முத்தமும் சேர்ந்து அவளை இம்சித்து சிவக்க செய்தது.
அவன் செல்லும் திசையை திரும்பி பார்த்தவள் குழந்தையாக மாறி அவனுடன் விளையாட ஆசைப்பட்டு அங்கு எதிரில் வரிசையாக நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்களின் பின் சென்று ஒளிந்து கொண்டாள். அவன் வந்து தன்னை தேடும் பொது திடீரென அவன் முன் சென்று அவனை பயமுறுத்தலாம் என்று சிங்கத்தை அச்சம் கொள்ள முயன்றது மான்.

அப்போது தன் கையில் இருந்த அலைபேசி ஒலித்தது. நிச்சயமாக அந்த அழைப்பையும் அந்த அழைப்பிற்கு உரிமையானவனையும் அவள் இந்நேரம் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒருவனின் நினைப்பு கூட நம்மை உடல் நடுங்க செய்யுமா? என்று எண்ணும் படி தேகம் நடுங்க முகத்தில் ஆங்காங்கே வியர்வை முத்துக்கள் பூக்க நின்றிருந்தாள். ஒரு முறை முழுதாக அடித்து ஓய்ந்தது. அவள் மூச்சு விட கூட அவகாசம் கொடுக்காமல் மறுபடியும் அலறிய தன் கைபேசியை ஆன் செய்து காதருகே கொண்டு சென்றாள்.

"ஹாய் பார்பி டால் ரொம்ப சந்தோசமா இருக்க போல" என்று சன்னமாக ஒலித்த குரலில் உடல் மொத்தமும் நடுங்க வார்த்தைகள் ஏதுமின்றி நின்றிருந்தாள்.

அவள் நிலையை உணர்ந்தவன் போல் "டொண்ட் பேணிக். நான் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல தான் கால் பண்ணேன்"

'குட் நியூஸா? கண்டிப்பா எனக்கு அது பேட் நியூஸா தான் இருக்கும். என்ன சொல்ல போரானோ?' உள்ளுக்குள் அலறிக் கொண்டிருந்தது அவள் மனது.

"இது தான் நான் உனக்கு பண்ற கடைசி கால். இதுக்கு அப்புறம் நான் உன்ன எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். நீ உன் இஷ்டப்படி சந்தோசமா எந்த கண்ட்ரோலும் இல்லாம இருக்கலாம்."

மூளை ஏதோ பெரிய ஆபத்து என்று சமிக்சை செய்ய, இதயம் அதை ஏற்கும் முன் 'இனி அவன் தன் வாழ்வில் இல்லை' என்ற நினைப்பை முதலில் அனுகிரகித்த மனம் இதழுக்கு புன்னகையை அனுப்பியது.

ஆனால் அடுத்த நொடியே தன் உயிர் போகும் வலியை அனுபவித்தாள் அவன் வார்த்தைகளில்.

"கடைசியா நான் சொல்றத மட்டும் நீ செய்யணும். ஷூட் நிரஞ்சன்"
தன்னை மிரட்டி இங்கு பீட்டர் அனுப்பிய இத்தனை நாட்களில் பல்லாயிரம் முறை கேட்டிருக்கிறாள் 'நிரஞ்சனை கொன்று விடு' என்ற வார்த்தையை.

ஆனால் அப்போது அனுபவித்த வலியை விட இன்று அவள் உணரும் வலி அவள் இதயத்தில் ஆயிரம் அம்புகளை கொண்டு பாய்த்தது போல் இருந்தது.

"நோ.. என்னால அத செய்ய முடியாது. பிளீஸ் அவர எதுவும் பண்ணாத. அவர் ரொம்ப நல்லவர்" வார்த்தைகள் தந்தியடிக்க கெஞ்சினாள்.

"ரொம்ப நல்லவரா? ஹா ஹா, பரவாயில்லையே என் பார்பி டால் பேச ஆரம்பிச்சிட்டா, இதுக்காகவே அவளுக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கணுமே" அவள் செல்போனிற்கு மெசேஜ் வந்ததிற்கான சத்தம் கேட்க, "நான் தான் பார்பி டால், கொஞ்சம் அத ஓபன் பண்ணி பாரு" அவளிடம் தன் காரியத்தை சாதிக்க அவன் அணுகும் வழி இதுவே!

தன் போனிற்கு வந்திருந்த வீடியோ மெசேஜ்ஜை ஓபன் செய்தாள். சிறிது மங்கலாக தெரிந்து அதன் நடுவே தன் வியர்வை படிந்த விரல்களை அழுத்தவும், வட்ட வளையம் சுற்றி அது பிளே ஆக ரெடியானது.

சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, கூரையில் போட பட்டிருந்த விளக்கின் வெளிச்சம் அதற்கு நேர் நாற்காலியில் கட்ட பட்டிருந்தவரை தெளிவாக காட்டியது.

பதின்மூன்று வயது பெண் குழந்தை மயக்க நிலையில் கைகள் பின்னால் கட்டப்பட்டு, வாயிலும் துணி வைத்து கட்டப்பட்டிருந்தது. அதன் அருகில் முகமூடி அணிந்த ஒருவன் அவன் கையில் இருந்த துப்பாக்கியை அவள் இடது பக்க நெற்றியில் அழுத்தி பிடித்திருந்தான்.

பிரகதியின் உதடுகள் நடுங்க அருவிப் போல் தேங்கியிருந்த கண்ணீர் திரண்டு விட்டது.

"பிரித்திகா" நா குளரிய படி கைபேசியை காதில் வைத்தாள்.
"நீ செய்ய தயங்கிற வேலையை அங்க நிற்கிற என் ஆளு தயக்கமே இல்லாம செய்வான். சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பிரகதி. உனக்கு உன் தங்கச்சி வேணுமா இல்ல இப்போ புதுசா காதல் மயக்கத்த குடுத்த உன் காதலன் வேணுமா?" என்று கேட்டு ஏளனமாக சிரித்தவன், "உனக்கு டைம் இல்ல சீக்கிரம் முடிவு பண்ணு" என்று அவளை அவசரபடுத்தினான்.

அவர்கள் இருவருக்கும் பதிலாக இந்த நிமிடமே தன் உயிரை கேட்டால் கூட கொடுத்திருப்பாள். அவனிடம் பதில் கூற அழுகையில் பேச்சு கூட வராமல் தவித்தவள், கண்களை இறுக்க மூடி கீழ் உதடை பற்களால் அழுந்த கடித்து தன்னை நிலைப்படுத்த முயற்சித்தாள்.

"என்.. என் தங்க்.. தங்கச்சியை விட்ரு"
அங்கு அவன் வெற்றி புன்னகை புரிவதை இவளால் உணர முடிந்தது. நிரஞ்சன் கூறியது போல் தன்னால் பிரச்சனையை எதிர்த்து போராடவும் முடியவில்லை, அதில் இருந்து தப்பித்து ஓடவும் முடியாமல் அவனிடம் சிக்கி தவிக்கும் நிலையை எண்ணி தன் மீதே கோபம் வந்தது.

"வெரி குட். தட்ஸ் மை கேர்ள். அங்க உன் பக்கத்துல இருக்குற குப்ப தொட்டில ஒரு பாக்ஸ் இருக்கும் பாரு, அதை சீக்கிரம் எடு" வார்த்தைகளில் நிதானத்தை கையாண்டவன் அவள் செயலை அவசர படுத்தினான்.

"உனக்கு இன்னும் த்ரீ மினிட்ஸ் தான் டைம் இருக்கு. அதுக்குள்ள நீ வேலைய முடிக்கல அங்க உன் தங்கச்சி கதை முடிஞ்சிரும்" அவன் கூறியது போலவே செய்தவள் அந்த பாக்ஸ்ஸை திறக்க, அதில் கன் இருந்தது.

இதற்கு முன் பயிற்சியின் போது துப்பாக்கி ஏந்தியிருக்கிறாள் தான். ஆனால் இதை தொடும் போது அவளை உயிரோடு எரிப்பது போல் உடலெங்கும் அனல் பரவியது.

"டேக் தட் கன். உன் ஆசை காதலன் உனக்கு இதை ஹண்டில் பண்ண சொல்லிக் கொடுத்திருப்பானே? இப்போ அவனையே சுட போற" தன் திட்டம் முடிவடைய போகும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொண்டிருந்தான். "நீ இப்போ சுட போறது நேரா அவன் இதயத்தை தாக்கணும், இல்ல அங்க உன் தங்கச்சி மூளை செதறிடும், புரிஞ்சுதா" அவன் வார்த்தைகள் அழுத்தமாக வர, "ம்ம்" என்று தலை அசைத்தாள்.

"ரைஸ் யுவர் ஹேன்ட், டிரிகர்.. ஷூட் இட்" அவன் கத்தலில் கை தானாக அவன் கூறியதை செய்ய, பீட்டர் கூறியபடியே குண்டும் நிரஞ்சன் இடது மார்பை துளைத்தது.


அடுத்த நொடியே அழைப்பு துண்டிக்க பட, குண்டு சத்தத்தில் அங்கிருந்த மக்கள் அலறிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். தான் நின்றிருந்த காரில் சாய்ந்து நின்று அழுது கொண்டிருந்தவளின் கரத்தை வலிய கரம் ஒன்று பிடித்து இழுக்க, நிலையின்றி இழுத்த திசைக்கு திரும்பினாள். அவளை கீழ் நோக்கி இழுத்ததால் ஒரு காலை முட்டி போட்டு அமர அவள் நின்றுந்த காரின் கண்ணாடி உடைந்து சிதறியது.

"யாரோ சூட் பண்றாங்க. என்னையும் சூட் பண்ணிட்டாங்க" நிரஞ்சன் குரலில் சுயத்துக்கு வந்தவள் அதிர்ச்சியில் அவனை பார்க்க, அவள் கையில் இருந்த துப்பாக்கியை தன் கைக்கு இடம் மாற்றியவன் சற்று தொலைவில் காரில் இருந்த இருவரையும் குறி பார்த்து சுட, அதுவும் தவறாமல் அவர்களை துளைத்தது.

பிரகதி நிரஞ்சனை சுட்ட அடுத்த நொடி அவளை சுட உத்தரவிட்டிருந்தான் பீட்டர். நிரஞ்சன் அவர்களை கவனித்ததால் அவள் தன்னை சுட்ட அடுத்த நொடியே அவளிடம் விரைந்திருந்தான்.


அவள் புறம் திரும்பியவனுக்கு அவள் அதிர்ச்சியில் இன்னும் மூச்சுக் கூட விடாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து சிரிப்பு தான் வந்தது. அவளின் உறைந்த நிலையே அவனுக்கு உணர்த்தியது இப்போது அவள் தன்னை எதிர் பார்க்கவில்லை என்று. தன்னை சுட முயற்சித்தார்கள் என்பதெல்லாம் அவள் நினைவில் இல்லவே இல்லை. 'நான் தான் அவர சுட்டதுனு அவருக்கு தெரிஞ்சிருக்குமா?" என்று தான் அவள் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது.


அவளின் மருண்ட விழிகளை பார்த்து இதழ் மூடி சிரித்தவன் தன் செல்போனை அவளிடம் நீட்டி "ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணு" என்றான். தான் இங்கேயே இருந்தால் நிச்சயம் மாட்டிப்போம் என்ற எண்ணத்தை எல்லாம் வலியில் சுருங்கிய அவன் முகம் பின்னுக்கு தள்ள அவனிடமிருந்து போனை வாங்கி அவசரமாக கால் செய்தாள்.


அவள் கன்னத்தில் படிந்திருந்த கண்ணீரை தன் கரம் கொண்டு துடைத்து விட்டவன் "எனக்கு எதுவும் ஆகாது. தைரியமா இரு. வருண் வரவரைக்கும் என்னை விட்டு எங்கேயும் போக கூடாது" அந்த நிலையிலும் அவளின் பாதுகாப்பை எண்ணினான்.

"வருண் யாரு?" அவள் பரிட்சயமில்லாத அவனை பற்றி கேட்க, "என் ப்ரெண்ட்" என்று கூறியவன் மயக்க நிலைக்கு சென்றிருந்தான்.

"சார்.. சார்.. என்ன பாருங்க" அவள் எவ்வளவு கத்தியும் அவன் கண் திறந்த பாடில்லை.


ஆம்புலன்ஸ் வர நிரஞ்சன் மட்டுமின்றி அவன் சுட்ட இருவரும் கூட மருத்துவ மனைக்கு ஏற்றி செல்லப் பட்டனர். மருத்துவமனையில் வருண் காத்திருக்க ஸ்டிரட்செரில் இருவர் நிரஞ்சனை தள்ளிக் கொண்டு வர, விழி மூடி சுய நினைவின்றி கிடக்கும் தன் உயிர் நண்பனை காண வருணின் கண்களும் பனித்தது.


ஆம்புலன்ஸில் ஏற்றியதில் இருந்து இப்போது வரை நிரஞ்சன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து இறுக்கமாக பிடித்திருந்தாள் பிரகதி. மருத்துவமனைக்குள் நுழைந்ததும் வருண் நிரஞ்சனிடம் சென்று விட, கோபம் தெறிக்கும் பார்வையுடன் மோனிகா பிரகதியின் கைகளை அவனிடம் இருந்து பிரித்து தன்னோடு இழுத்து சென்றாள். தன் நண்பனிடம் கவனம் பதித்திருந்த வருண் இதை கவனிக்க மறந்தான்.


அங்கிருந்து மோனிகா நேராக அவளை அழைத்து வந்தது அவர்களின் நிலையத்துக்கு தான். குற்றவாளிகளை தனியாக விசாரிக்கும் டார்க் ரூமினுள் அவளை தள்ளி பூட்டி சென்றாள்.


"மேம்.. மேம்.." பிரகதியின் அழைப்புகள் அத்தனையும் அந்த அறையுனுள்ளே அடங்கி போனது.
 
Status
Not open for further replies.
Top