ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 5"பீட்டர் அங்க என்ன நடக்குது? பிரகதி என்ன பண்ணிட்டு இருக்கா? நிரஞ்சனை போட்டாளா? இல்லையா?" என்று எதுவும் தெரியாமல் தன் அறையில் இருப்பது கொடுமையாக இருக்க, அலைபேசியில் பீட்டரிடம் கத்திக் கொண்டிருந்தாள் மிதுனா.பீட்டரோ "நடிக்க சொன்னா இவ உண்மையாவே லவ் பண்றா போல?" என்றான் எரிச்சலாக."என்ன சொல்ற?" என்று மிதுனா புரியாமல் கேட்க, அவனோ "நம்ம பிளான் வழக்கம் போல ஃபெயிலியர் தான்" என்றான் கடுப்பாக."நாம ஏன் இன்னும் அந்த பொண்ண நம்பணும்? நானே நேரடியா களத்துல இறங்கிடவா?" என்று காலம் கடத்தும் பிரகதி மீது கோபம் கொப்பளிக்க கேட்ட மிதுனாவிடம், "அவள மாதிரி நீ முட்டாள் இல்லைனு நெனச்சேன். ஆனா நீ அவள விட பெரிய முட்டாளா இருக்க. கிரைம் பிராஞ்ச் ஹெட் ஆபீஸர கொன்னுட்டு அவ்வளவு சுலபமா தப்பிக்க முடியும்னு நெனச்சியா? உன் உயிர் மேல ஆசை இல்லனா தாராளமா பண்ணு" என்று பீட்டர் நக்கலாக சொல்ல,மிதுனாவோ "ச்சே... அவசரத்துல இத எப்படி மறந்தேன். அதுக்காக தானே ஒரு பலி ஆட செலக்ட் பண்ணோம்.கொஞ்சம் லேட் ஆனாலும் எல்லாம் கரெக்ட் ரூட்ல தான் போய்ட்டு இருக்கு. கண்டிப்பா பிரகதி நிரஞ்சனை கொள்ளுவா" என்று உறுதியாக கூறியவள், "சரி இப்போ ரெண்டு பேரும் எங்க இருக்காங்க?" என்று கேட்க,அவனோ, "அவங்க போன பொருட்காட்சில ஃபயர் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சி அங்க போயிருக்காங்க" என்றான்.சிறிது நேரத்திற்கு முன் இருந்த சந்தோசமும், ஆரவாரமும் துளி கூட இன்றி அலறல்கள் மட்டுமே ஆட்கொண்டிருந்தது அந்த இடத்தில். ஆங்காங்கே போட பட்டிருந்த வண்ண கூடாரங்கள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் அந்த நெருப்பு என்னும் அசுரன் பாதி இடத்தை ஆக்ரமித்து இருந்தான்.மனிதர்களின் அலறல் சத்தம் உச்சத்தில் கேட்க, அவர்களை காப்பாற்ற தன் உயிரையும் துட்சமென நினைத்து வீரர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். பிரகதியுடன் சென்றவன் பொது மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போட பட்டிருந்த கயிற்றை தாண்டி தான் போலீஸ் என்னும் அடையாள அட்டையை காண்பித்து உள்ளே நுழைந்தான். பிரகதியும் அவனை பின் தொடர்ந்து வந்திருந்தாள்.தற்காலிகமாக அமைத்திருந்த காபி ஷாப்பின் கேஸ் சிலிண்டர் எதிர் பாராத விதமாக வெடித்ததே கோர விபத்திற்கு காரணமானது. அருகருகே இருந்த கடைகளில் பற்றிய நெருப்பு பல இடிபாடுகளை உருவாக்கியது. அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் பணியில் இறங்கினான் நிரஞ்சன். கூடாரங்கள் சரிந்து அதற்குள் பலர் சிக்குண்டிருந்தனர்.இரண்டு கம்பிகளுக்கு நடுவில் ஒருவர் மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்தவன் தன் பலம் கொண்டு ஒரு கம்பியை தூக்க அவரை வெளியே இழுக்குமாறு பிரகதியிடம் கூறினான்.பிரகதியும் அவருக்கு உதவி செய்ய கையை நீட்டியவள் அவரின் பாதி கை தீக்கு இரையாகியிருந்ததை பார்க்க முடியாமல் உடல் நடுங்க, அவரின் அலறல் வேறு அவளை நிலைகுலைய செய்தது.தைரியமெல்லம் அற்று போக நடுங்கியவாறே அங்கிருந்து ஓடி விட்டாள். நிரஞ்சன் அங்கிருந்த தீயணைப்பு வீரர் ஒருவரின் உதவியுடன் அவரை காப்பாற்றியிருந்தான்.ஓடி வந்தவள் காதில் சுற்றிலும் கதறல் ஓலம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க, இரத்தம் வடிய சிலரை ஸ்டிரேட்செரில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.உடல் முழுவதும் தீ பற்றி எறிய தன்னை நோக்கி வருபவனை கண்டு அஞ்சி நின்றாளே தவிர்த்து, காவலாளியாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து கண்களை மூடி நின்றவளின் முன் எங்கிருந்தோ வந்த நிரஞ்சன் கடினமான கோனிப்பை கொண்டு அவனை சுற்றி ஆம்புலன்ஸில் ஏற்றினான்.பிரகதியின் புறம் திரும்பியவன் "ஆபத்து உன்ன நோக்கி வரும் போது கண்ண மூடிகிட்டா அது உன்ன விட்டு போய்டாது. அதை எதிர்த்து போராடு இல்லனா அதுல இருந்து தப்பிக்க முயற்சி பண்ணனும் புரிஞ்சுதா?" என்று அப்போதும் மறைமுகமாக அவளுக்கு அவன் உணர்த்த, வழக்கம் போல் மண்டையை ஆட்டிக் கொண்டாள்.சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்த அனைவரும் வெளியேற்ற பட்டனர்.நிரஞ்சன் பிரகதியை அவள் விடுதியில் விட்டவன் "எதை பத்தியும் யோசிக்காம தூங்கு" என்று கூறி சென்றான்.அவ்வளவு பெரிய விபத்தை நேரில் பார்த்தவளால் எவ்வாறு தூங்க முடியும்? அங்கு அவள் கண்ட காட்சிகள் மன கண்ணில் வந்து போக தூங்கா இரவாகி போனது அவளுக்கு.பிரகதியை விடுதியில் விட்டவன், அடுத்து நேராக சென்றது சைபர் கிரைம் என்ற பெயரை தாங்கியிருந்த தளத்திற்குள் தான். அங்கு அந்த அறையின் பாதியை ஆக்கிரமித்து இருந்தது அந்த LED மானிட்டர்.அவன் நண்பன் வருண் நகரத்தின் முக்கிய இடங்களை சிசிடிவி மூலம் கண்காணித்து கொண்டிருந்தான். கரை படிந்திருந்த நிரஞ்சனின் சட்டையை பார்த்தவன்,"அங்க எல்லாரையும் சேவ் பண்ணியாச்சா" என்று அவன் எங்கிருந்து வருகிறான் என்பதை தெரிந்துக் கொண்டு கேட்க, நிரஞ்சனோ "ஹ்ம்ம் பண்ணியாச்சிடா. நான் உன்கிட்ட கொடுத்த வேலையை முடிச்சியா?" என்று கேட்டான்.வருணும் "அதெல்லாம் பக்காவா முடிச்சாச்சு. இன்னைக்கு உங்களை ஃபாலோ பண்ணவங்களோட லிஸ்ட் எடுத்தாச்சி. மொத்தம் பதினாலு பேர். அதுல அஞ்சு பேர் நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்கடா. அந்த ஜூபி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இத்தனை பேர் வச்சி ஃபாலோ பண்றான்?" என்று நக்கல் கலந்து சந்தேகமாக கேட்டான்.

"


எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு. கூடிய சீக்கிரம் அத கண்டு பிடிச்சிடலாம். இப்போதைக்கு அந்த பதினாலு பேரையும் எதுவும் பண்ண வேண்டாம். ஜூபிட்டர் இன்னைக்கு பிரகதிக்கு கால் பண்ணான். அதை டிரேஸ் பண்ண முடிஞ்சுதா?" என்று நிரஞ்சன் கேட்க,"இல்லடா, அவன் ஹேக்கிங் யூஸ் பண்றான். நம்ம டெக்னாலஜி வச்சி எதுவும் பண்ண முடியல" என்று வருண் உண்மை நிலவத்தை சொல்ல, அடுத்து "மிதுனாவ வாட்ச் பண்ணியா? அவ யாருக்காவது கால் பண்ணாளா?" என்று தான் கேட்டான் நிரஞ்சன்.உடனே "அந்த பொண்ணு ரூம்ல இருந்தும் மொபைல் சிக்னல் காண்பிச்சது. அதுவும் டிரேஸ் பண்ண முடியல" என்று வருண் சொல்ல, "படிச்ச பாடத்தை தப்பான வழிக்கு ரொம்ப புத்திசாலித்தனமா யூஸ் பண்றான்" என்று சலித்துக் கொண்டான் நிரஞ்சன்.வருணோ, "அந்த பொண்ணு மிதுனாவ தூக்கி நம்ம ஸ்டைல்ல விசாரிச்சிடுவோமா?" என்று ஐடியா கொடுக்க, "வேணாம்" என்ற மறுத்த நிரஞ்சன், "நாம அவனை தேடுறது அவனுக்கு தெரிய வேண்டாம். எல்லாம் அவங்க பிளான் படியே போற மாதிரி இருக்கட்டும்" என்று அவனுக்கான திட்டத்தை மனதில் போட்டுக் கொண்டான்."ஹ்ம்ம் அப்டியே இருக்கட்டும் அப்போ தானே நீ நல்ல ரொமான்ஸ் பண்ணலாம்" என்று நண்பனை கேலி செய்தவன் "ரெண்டு நாள் முன்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சவன்லாம் வாழ்றான். அஞ்சு வருஷமா லவ் பண்றேன். எனக்கு இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்க மாட்டேங்குதே!" என்று புலம்பிக் கொண்டிருந்தவனை புன்னகையோடு பார்த்த நிரஞ்சன்,"முதல்ல பிக்பாஸ் மாதிரி டுவென்டி ஃபோர் ஹவர்ஸ்ம் வாட்ச் பண்றத நிறுத்துங்கடா. நிம்மதியா ரொமான்ஸ் கூட பண்ண முடியல" என்று அலுத்துக் கொள்ள, அவனை ஆச்சர்யமாக பார்த்த வருண் "யாரு நீ? லவ்வர் இருந்தும் சிங்கிள்லா வாழ்ற என்னை மாதிரி பசங்களோட சாபத்தை வாங்கிகாத டா" என்று வெளிப்படையாகவே புலம்ப,அவன் பேச்சில் சத்தமாக சிரித்த நிரஞ்சன் "மச்சா உனக்கு இன்னொரு ரூமர் சொல்ல மறந்துட்டேன். நானும் மோனிகாவும் லவ் பண்றோமாம் டா" என்று சிரித்துக் கொண்டே கூற,"எத?" என்று ஏகத்துக்கும் அதிர்ந்த வருண் "எவன்டா அது என் வாழ்க்கைல மண்ண அள்ளி போடுறது?" என்று கடிந்துக் கொண்டான்.அவன் பதற்றத்தை கண்டு சத்தமாக சிரித்த நிரஞ்சன் "பிரசெர்ஸ் (freshers) மத்தில இப்படி ஒரு டாக் இருக்கு" என்று கூற, வருணோ"என் புரோபர்டிய உனக்கு தானம் பண்ண அவனுங்களுக்கு யாரு டா உரிமை கொடுத்தது?" என்று தனக்கு இருக்கும் ஒரே ஒரு காதலியை தன் நண்பனுக்கு தாரவார்த்து கொடுத்து விட்ட அந்த பசங்களை திட்டிக் கொண்டிருந்தான்."விடு மச்சா, உன்னை யாருக்கும் தெரியாதுல, அதனால வந்த குழப்பம் டா இது" என்று நிரஞ்சன் சமாதானம் சொல்ல, அதை ஏற்காத வருணோ "அட போடா. தெரிஞ்சா மட்டும் என்ன ஆகும். அவ என்கிட்ட உருகி உருகி பேசுறதுல கண்டு புசிச்சிட போறாங்க பாரு. அவளே வருசத்துக்கு ரெண்டு முறை வந்து காட்சி தந்துட்டு போறா!" என்று தன் காதலியுடன் நேரம் செலவிட முடியாத கவலையில் வருண் புலம்ப, நிரஞ்சன் பல் வரிசை தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்.

அப்போது "இங்க என்ன நடக்குது?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் மோனிகா. நிரஞ்சனின் மகிழ்ச்சி அவளையும் தொற்றிக் கொள்ள அவளது இதழ்களும் தானாக புன்னகையை பூசிக் கொண்டது. புன்னகை முகமாக உள்ளே வந்தவள் அவர்களின் உரையாடல் எதை பற்றி இருந்தது என்பது தெரியாமல் இருவரையும் புரியாத பார்வை பார்க்க, வருணோ "நமக்குள்ள நடக்காததெல்லாம் நடக்குது." என்று பெருமூச்சு விட, நிரஞ்சன் கண்களால் அவனை அடக்கிக் கொண்டிருந்தான்.


"என்னடா லூசு மாதிரி புலம்பிட்டு இருக்க?" என்று மோனிகா புரியாத பார்வை பார்க்க, "இப்படி என்ன புலம்ப விட்டுட்டு நல்ல புல்லா மாதிரி நிற்கிறதா பாரு" என்று அதற்கும் புலம்பியவனை கண்டுகொள்ளாது அவள் எதற்கு வந்தாளோ அதை பற்றி நிரஞ்சனிடம் கேட்டாள்.

"


ஜுபீட்டர் பற்றி இன்பர்மேஷன் எதாவது கிடைச்சிதா?""


இல்ல மோனி, ஆனா கூடிய சீக்கிரமே நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணுவோம்" என்று அவன் உறுதியாக, மோனிகாவிற்கு தான் அதற்குள் நிரஞ்சன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது."


நீ ரொம்ப ரிஸ்க் எடுக்க மாதிரி இருக்கு டா. நாம இதை ஆபீஸியலா மூவ் பண்ணலாம். முதல்ல உன் அப்பாகிட்ட இதை சொல்லிடுறது நல்லது. கண்டிப்பா அவர் ஜூபீட்டரை கண்டு பிடிக்க நமக்கு உதவி பண்ணுவார்" என்று நண்பன் மீது இருந்த அக்கரையில் கூறினாள்."வேணாம் மோனி, அப்படி செஞ்சா பிரகதிய பற்றி சொல்ல வேண்டி வரும்" என்று சொன்னதும் கோபம் தான் வந்தது மோனிகாவிற்கு, "முதல் அவளை பத்தி யோசிக்கிறத நிறுத்து. உன் காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத பொண்ணு அவ. இன்னசெண்ட் மாதிரி நடிக்கிறா டா ஏமாந்துடாத." என்று கடுப்பாக சொல்ல,அவள் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிரஞ்சன் "


அவ நடிக்கலை மோனிகா, என்னால அதை உறுதியா சொல்ல முடியும். ஜுபீட் எங்க இருக்காங்கிற விஷயம் அவளுக்கும் தெரியாது. அவனால அவளுக்கும் தான் ஆபத்து. பிரகதி அவனுக்கு தேவைப்படமாட்டானு அவனுக்கு தோணுச்சுன அவளை கொலை செய்ய கூட தயங்க மாட்டான்." என்று தன் உயிரானவள் நலனுக்காகவும் யோசித்து அவன் கூற,மோனிகாவோ, "நீ என்ன வேணாலும் சொல்லு. . எனக்கு அந்த பொண்ணு மேல நம்பிக்கை வரல டா. என்னைக்கு இருந்தாலும் அந்த பொண்ணால உனக்கு ஆபத்து தான்" என்றாள்.

"விடு பார்த்துக்கலாம்"

"எப்போ? அவ உன்னை சூட் பண்ண அப்புறமாவா?" என்று தன் நண்பனின் நலனுக்காக கூறுபவள் மட்டுமின்றி ஆண்கள் இருவரும் கூட அறியவில்லை அதுவும் ஒரு நாள் நிகழும் என்று.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் ; 6நேற்றைய இரவின் தாக்கத்தால் பிரகதியின் முகம் வெளரி போய் இருந்தது. வழக்கம் போல் நிரஞ்சன் தன் பாடத்தை தொடங்க. அது எதுவும் பிரகதியின் மூளையில் பதியவில்லை. கதறல்கள் மட்டுமே எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல் இருந்தது.காலை எழுந்ததிலிருந்து மிதுனாவும் அவளை இயல்புக்கு மாற்ற ஏதேதோ சொல்லி பார்த்து விட்டாள், எதற்கும் பயனின்றி அவள் மனம் கவலையை சுமந்து கொண்டு இருக்கிறது.நிரஞ்சன் அவளின் எண்ண போக்கை தெரிந்துக் கொண்டாலும் வகுப்பு முடியும் வரை அவளிடம் எதுவும் கேட்கவில்லை. வகுப்பு முடியும் தருவாயில் "நாளை நீச்சல் குளத்தில் பயிற்சி" என்ற அறிவிப்பை கொடுக்க, "ஸ்விம்மிங் பூல்லயா? அங்க என்ன சார் பண்ண போறோம். எங்க எல்லாருக்கும் ஸ்விம்மிங் தெரியும் சார்" ஒரு மாணவன் சந்தேகத்தை சுமந்து கூற, நிரஞ்சனோ "நாளைக்கு அங்க வா அப்புறம் சொல்றேன்" என்று மட்டும் தான் சூட்சகமாக சொன்னான்."ஆஹா! இவ்வளவு நாள் டிரெய்னிங்ல நாளைக்கு தான் செம என்ஜாய்மெண்ட் இருக்கும் போலவே!என்று ஆண்கள் அனைவரும் கனவில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்தனர்.அதன் பிறகு வழக்கம் போல் வகுப்பு முடிந்து அனைவரும் வெளியேறும் வரை காத்திருந்தவன், பிரகதியை கண்களாலே நிற்கும் படி கூறினான். அவளும் நிற்க, வாசல் வரை சென்ற மிதுனாவோ இருவரையும் திரும்பி ஒரு பார்வை பார்த்து சென்றாள்.இடைப்பட்ட நேரத்தில் வருண் போனிற்க்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தவன் பிரகதியிடம் பேச ஆரம்பித்தான்."இவன் எதுக்கு இப்போ திருட்டு தனமா காதலிக்கு சிக்னல் கொடுக்குற மாதிரி மிஸ்டு கால் கொடுக்கிறான்? எங்க இருக்கானு பார்ப்போம்" என்று எண்ணிக் கொண்ட வருண் சிசிடிவியின் உதவியால் நிரஞ்சனை கண்டறிந்தான். வகுப்பறையில் இருந்த கேமரா அவனை காட்டிக் கொடுத்திருந்ததுஅங்கே பிரகதியுடன் அவன் நின்றிருப்பதை பார்த்தவன், "அட பாவி! உனக்கு வாட்ச்மேன் வேலை பார்க்க தான் இந்த மிஸ்டு கால்ல? நீ நடத்து. கடவுளே அந்த பக்கம் யாரும் போய் விடக் கூடாது" என்று அவசர கோரிக்கை கடவுளிடம் வைத்தவன் புலம்பினாலும் நண்பன் மனம் புரிந்து தன் பணியை செவ்வனே செய்தான்."என்னாச்சி? இன்னும் அந்த ஆக்சிடென்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கிறியா? உன் கேரியர்ல இந்த மாதிரி இன்னும் நிறைய பார்க்க வேண்டி வரும்." என்று அவளை இயல்புக்கு மாற்ற அவன் கூற,அவளோ, "ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது? அங்க சின்ன குழந்தைகள் நிறைய இருந்தாங்க. அவங்க வலியில துடிச்சது இப்போவும் என் காதுல கேட்குது. எதுக்கு சார் இப்படி நடக்கணும்?" என்று இயலாமையுடன் கனத்த மனதுடன் கேட்டாள்."அது ஒரு ஆக்சிடென்ட். இவங்க தான் காரணம்னு நாம யாரையும் சொல்ல முடியாது. யாரோ ஒருத்தரோட கவனக் குறைவால் சம்பந்தமே இல்லாத நிறைய பேர் பாதிக்க படுறாங்க. எல்லாரும் அவங்க அவங்க வேலையை நிறைவாக செய்தாலே, அது மூலமாக நடக்குற விபத்தை தடுக்கலாம்.அந்த சிலிண்டர் வெடிச்சதுக்கு, அதுல கேஸ் ஃபுல் பண்ணவன்ல ஆரம்பிச்சி, அதை உபயோக படுத்துனவன், அந்த இடத்தில வேகமா நெருப்பு பரவுற அளவுக்கு இடைவெளி ஏதும் இல்லாமல் நெருக்கமாக ஷாப் வைக்க பெர்மிஷன் கொடுதவங்க, எல்லாரோட ஆஜக்ரதையும் இருக்கு.இங்க எல்லாருக்கும் அவசரம், எல்லாத்துலயும் அவசரம். வெற்றியை மட்டுமே நோக்கி போகிற பயணத்துல இழப்புகளை பொருட்படுத்துறது இல்ல. விடு, எல்லாம் சரியாகிடும்" என்று கூறி அவளை இயல்புக்கு மாற்ற முயன்றான்."ம்ம்" என்று உணர்ச்சி இல்லாமல் கூறி செல்ல நினைத்தவளை, இடக்கரம் நீட்டி அவள் கை பிடித்து தடுத்தவன், "அதுக்காக மட்டும் நீ வருத்த படல வேற என்ன சொல்லு?" என்று அவளையே ஆராய்ந்த படி கேட்க, அவளோ அவன் முகம் நோக்க முடியாமல் குற்றவுணர்வில் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்."நேத்து நீங்க என்கிட்ட உதவி பண்ண சொல்லி கேட்கும் போது நா அங்க இருந்து ஓடி வந்தது ரொம்ப பெரிய தப்பு. அதை நினைக்கும் போதே எனக்கு கில்டியா இருக்கு. அவர் கையை பார்க்கும் போது எனக்கு..."அந்த வார்த்தை கூட குற்றவுணர்வை ஏற்படுத்த விழிகளை அலைய விட்டவளின் கரங்களை ஆதரவாக பற்றியவன், "அருவருப்பா இருந்துச்சா?" என்று கேட்க, தன் உணர்வுகளை கூட சரியாக கணித்தவனை ஆச்சர்யமாக தான் பார்த்தாள்."அந்த இடத்தில உன்னோட அம்மாவோ அப்பாவோ இருந்திருந்தா இப்படி தான் பண்ணிருப்பியா?" என்ற அவன் கேள்வியில் குற்றயுணர்வு மேலோங்க, கலங்கிய விழிகளோடு மறுப்பாக தலை அசைத்தாள்."உன்னால முடியலனா கூட எதாவது முயற்சி பண்ணிருப்ப. ஓடி போய் இருந்துருக்க மாட்ட. இல்லையா?" என்று அவன் கேட்கும் போதே அவள் கட்டுப்பாட்டை மீறி கன்னம் தொட்ட கண்ணீரை பெரு விரல் கொண்டு துடைத்தவன், "இதுல உன்னோட தவறு எதுவும் இல்ல. நீ உதவி பண்ணலனா, உதவி பண்ண நிறைய பேர் அங்க இருந்தாங்க. என்னால உன்ன புரிஞ்சிக்க முடியும். இதெல்லாம் உனக்கு ரெம்ப புதுசு. எப்டி ரியாக்ட் பண்ணனும்னு தெரியாம நடந்துகிட்ட .அவ்வளவு தான். ஆரம்பத்தில் எல்லாரும் இப்படி தான் இருப்பாங்க. யாரும் இங்க பெர்ஃபேக்ட் கிடையாது. நான் ஜாயின் பண்ண புதுசுல எனக்கும் கூட சில தயக்கங்கள், பயங்கள்லாம் இருந்துச்சி. போக போக எல்லாம் சரியாகிடும். நீ வருத்தபடுற அளவுக்கு எதுவும் ஆகல. நா ஹாஸ்பிடல்ல விசாரிச்சிட்டேன், அவருக்கு எதுவும் ஆகல, கையில மட்டும் தான் கொஞ்சம் காயம். மத்தபடி அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை"என்று அவளின் தயங்களுக்கு விளக்கம் சொல்ல, 'எங்கே அவன் தன்னை தவறாக எண்ணிவிடுவானோ?' என்று நினைத்து மருகிக் கொண்டிருந்த வளுக்கு அவனின் இந்த பேச்சு ஆதரவாக இருந்தது."யாராவது உங்கிட்ட எதாவது உதவிக் கேட்டா? உன்னால் முடிஞ்சா தயங்காம பண்ணு. இல்லைனா அவங்களுக்கு அந்த உதவிய வேற யாராவது கண்டிப்பா பண்ணுவாங்க. ஒரு வேளை யாரும் பண்ணலனா? நாம அந்த உதவி பண்ணியிருந்த அவங்க நல்லா இருந்துருப்பங்களே! என்கிற குற்ற உணர்வு உன் நிம்மதியை கெடுத்திடும்..இங்க நிறைய பேர் உதவி செய்ய நினைச்சாலும். மத்தவங்க என்ன நினைப்பாங்க? என்கிற தயக்கதுல உதவி பண்றது இல்ல" என்று சொல்ல, தலை கவிழ்ந்து அவள் சொன்ன சாரி"யில் மென்மையாக புன்னகைத்துக் கொண்டான்."இந்த சாரிக்கெல்லாம் எந்த அவசியமும் இல்லை. உன்னோட கில்டினஸ் போக நான் வேன ஒரு ஐடியா சொல்லவா?" என்று அவன் சூட்சாகமாக கேட்க, அவன் திட்டம் அறியாத அவளோ, "என்ன?" என்பது போல் பார்க்க, அவனோ "அவரை காப்பாத்தினா எனக்கு தாங்க்ஸ் சொல்லிரு. இங்க கிஸ் பண்ணி" என்று தன் கன்னத்தை சுட்டி காட்டி குறும்பாக புன்னகைத்தான்.அதில் கன்னம் சிவக்க இதழ் விரித்து அழகாக சிரித்தவளின் குழி விழிந்த கன்னத்தை பிடித்து ஆட்டியவன்,"இப்படி சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு. எப்பவும் இப்படியே இரு. எல்லாம் சரி "ஆகிடும்" என்று கூறி அந்த அறையை விட்டு வெளியேறினான்.செல்லும் அவனையே மனம் நிறைவாக பார்த்து நின்றாள் பிரகதி.நாம் ஏதாவது தவறு செய்தால், அதனால் ஏற்படும் வலியை விட நம் அன்புக்கு உரியவர்கள் நம்மை வெறுத்து விடுவார்களோ? என்ற பயமே நம்மை நாமே வெறுக்க காரணமாகும்.நிரஞ்சன் அறையை விட்டு வெளிய வரும் வரை காத்திருந்த வருண், அவன் வெளியேறியதும் அவனுக்கு அலைபேசியில் அழைத்தான்."ஏன் டா? என்ன பார்த்த உனக்கு எப்டி தெரியுது? உனக்கு வாட்ச்மேன் வேலை பார்க்க சொல்ற" என்று குறைபட்டுக் கொள்ள, நிரஞ்சனோ அழகாக சிறித்தவன் "கொச்சிக்காத டா, உனக்கு ஹெல்ப் பண்ற வாய்ப்பு எனக்கு வரும்போது சிறப்பாக செய்துடுறேன்" என்று நண்பனை தாஜா செய்ய முயல,ஏற்கனவே புகைந்துக் கொண்டு இருக்கும் அவன் மேலும் கடுப்பாகி புசு புசுவென மூச்சு விட, அவன் கோபத்தை அறிந்துக் கொண்ட நிரஞ்சன் இதழ்களுக்கு அடக்கிய புன்னகையுடன், "அப்படியே கையோட அன்னைக்கு டெலீட் பண்ண போல இன்னைக்கும் ரெக்கார்டிங் டெலீட் பண்ணிடு" என்று தன் வேலையில் கவனமாக, பிரகதி திரவத்தை குடித்த முதல் நாள் அவள் உலறியதை குறிப்பிட்டு கூறினான்."பண்ணி தொலையுறேன் டா. உனக்கு ப்ரெண்ட்டா ஆஹ் இருக்கிறதுக்கு, போலீஸா ஆஹ் இருந்தும் திருட்டு தனம் பண்ண வேண்டி இருக்கு" என்று சலிப்பாக கூறினாலும் கைகள் அவன் கூறியதை சிறப்பாக செய்து முடித்தது.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் ; 7அனைவரும் நீச்சல் குளம் அருகே கூடிய இருந்தனர். அனைவரும் கருப்பு நிற பேண்டும் கரு நிறத்தில் ஸ்லிவ் லெஸ் டி- ஷர்ட்டும் அணிந்திருந்தனர்..'தண்ணீரில் இறங்கி அனைவரின் நீச்சல் திறமையை காட்ட சொல்வாரோ?' என்று அங்கு நின்றிருந்தவர்கள் எண்ணிக் கொண்டருக்கும் சமயம் நிரஞ்சன் இருவரை அழைத்து வந்தான். அவன் பின் வந்தவர்கள் கைகளில் பெரிய சாக்கு மூட்டை ஒன்றை கொண்டு வந்திருந்தனர்.நிரஞ்சன் "எல்லாரும் ரெடியா?" என்று கம்பீர குரலில் கேட்க, 'என்ன செய்ய போகிறோம்?' என்று தெரியாமலே அனைவரும் "எஸ் சார்" என்று ஒன்றாக கூறினர்.கொண்டு வந்த சாக்கு மூட்டையினை அவிழ்த்து அதிலிருந்து சிறிய அளவிலான சிலிண்டர்களை வெளியே எடுத்தனர் அவ்விருவரும். அவை அனைத்தும் ஆக்ஸிஜன் நிரப்ப பட்ட சிலிண்டர்கள்."ஐ ஹோப் உங்க எல்லாருக்கும் ஸ்விம்மிங் தெரியும்னு நம்புறேன்" அவன் சிறிது சந்தேகமாகவே கேட்க,அனைவரும் கோரசாக "எஸ் சார்" என்றனர்.புன்னகையை தவழவிட்டவன், "தென் வீ ஆர் கோயிங் டூ பிராக்டீஸ் ஸ்கூபா டைவிங்" என்று உற்சாக குரலில் சொன்னான். ஆழ் கடலில் சிக்கி தவிக்கும் நபர்களை காப்பாற்ற வேண்டி இவர்களுக்கு இது கற்றுக் கொடுக்கப் படுகிறது.அவன் சர்வ சாதாரணமாக கூறிவிட்டான். ஆனால் அங்கு நின்றிருந்தவர்கள் வெவ்வேறு உணச்சிகளை வெளிபடுத்தி கொண்டிருந்தனர். சிலர் தாங்கள் சந்திக்க போகும் புதுவித அனுபவத்தை எண்ணி மகிழ்ச்சி அடைய, வேறு சிலர் இதில் ஈடுபடுகையில் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சினர்.அதை பற்றிய சிறப்பு பயிற்சி கொடுக்க அதில் வல்லுனர்கள் இருவர் வரவழைக்க பட்டிருந்தனர்.ஸ்கூபா டைவிங் - ஆழ்கடல் நீச்சல்.SCUBA என்பதின் ஆங்கில விரிவாக்கம் 'self-contained underwater breathing apparatus' ஆகும்....வந்திருந்தவர்களில் ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்படுத்தும் முறையை முதலில் விளக்கினார். அந்த சிலிண்டரில் இருந்து ஆக்ஸிஜன் வெளியேற ரப்பர் ஓஸ் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அதில் வாய் மூலம் சுவாசம் விடுவதற்காக வாய் துண்டம் (mouthpiece) இருந்தது. ஆக்ஸிஜன் அளவை தெரிந்துக் கொள்ள ரெகுளேட்டரும், முதுகு பட்டையுடன் பயன் படுத்துபவரை இணைக்க பாதுகாப்பு கவசமும் இருந்தது.அதில் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருக்கிறதா? என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால்? காற்றழுத்ததின் காரணமாக நுரையீரல் சம்பந்த பட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று ஒரு குண்டை தூக்கி போட்டவர் அனைவரையும் பீதி அடைய வைத்தார்.ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் காரில் செல்லும் போது பெட்ரோல் காலியானால் பொடி நடையாக கூட வீடு வந்து சேர்ந்து விடலாம், ஆனால் நடு கடலில் ஆக்ஸிஜன் தீர்ந்து போனால் என்ன செய்வது? சங்குகள் கண்டெடுக்கப் படும் கடலுக்குள்ளே நமக்கு சங்கு தான்.அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று செயல் முறை விளக்கம் அளித்த பிறகே, பயிற்சியாளர்கள் பகுதியாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.இவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்தையும் சேர்த்து சொல்லி அனைவரையும் பயம் கொள்ள செய்திருந்தார்கள்.முதல் பிரிவினர் அதனை முதுகில் சுமந்து நீரினுள் இறங்கினர். அதில் மூச்சு விடுவதற்காக முதலில் சிரம பட்டனர். ஏனெனில் நிலத்தில் மூச்சு விடுவது போல் சுலபம் அன்றே! உங்கள் மூக்கு அடைத்திருக்க வாய் வழியாக சுவாசிக்க வேண்டும். சுவாசம் விடுவதாக நினைத்து வாயில் இருக்கும் மெளத் பீஸ்சை கடித்துக் கொண்டு சிரமப்பட்டு கொண்டிருந்தனர்.மற்றவர்களே இப்படி என்றால் பிரகதியை பற்றி கூற வேண்டுமா? அச்சத்தில் அல்பாய்சில் போய் விடுவது போல் இருந்தது அவளுக்கு. இதயம் வேறு தாறு மாறாக துடிக்க, தலை சுற்றி விழுந்து விட்டாள் கூட இதில் இருந்து தப்பித்து விடலாம், என்று மட்டமான யோசனையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அவளுக்கும் அதை மாட்டிவிட்டு நீரில் இறக்கியிருந்தான் நிரஞ்சன்."ஐய்யப்பா என்னை காப்பாத்துபா" என்று பயத்தில் அவசரமாக வேண்டிக் கொண்டிருந்த பிரகதியின் காதில் இன்னொரு பெண்ணின் குரலும் ஒலித்தது."அப்படியே என்னையும் காப்பாற்ற சொல்லிக் கொஞ்சம் ரிக்வஸ்ட் பண்ணு" என்று கேட்ட குரலில் பிரகதி தன் பக்கவாட்டில் பார்க்க, சாலினி தான் கடவுளிடம் ரெகாமன்டேஷனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.பிரகதி அவளை ஆராயும் பார்வை பார்க்க, சாலினியோ "இல்ல தண்ணினா எனக்கு கொஞ்சம் பயம் அதான்... உனக்கும் பயமா?" என்று கேட்டவளிடம், "சே... சே... எனக்கு தண்ணி ஒரு பிரச்சனையே கிடையாது. அவர் சொன்னத கேட்டு தான் கொஞ்சம் பயமா இருக்கு. எங்க நுரையீரல் வெடிச்சி செத்து போய்டுவோமோ என்று தான் பயமா இருக்கு." என்று பீதி ஆகி சொன்னவள் தன் பயத்தை அவளுக்கும் இடம் மாற்றி இருந்தாள்.

"எத?


நுரையீரல் வெடிக்குமா?" மேலும் பயந்து போய் கேட்டாள் சாலினி.

"


பின்ன ஆக்ஸிஜன் தீர்ந்து போன வெடிச்சிரும் தானே" என்று இவள் ஏதே அதை பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டது போல் கூறினாள். பிரகதி நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை வரும் என்றதும் அவ்வாறே அதை புரிந்துக் கொண்டாள்.கடவுளிடம் சில பல பிரார்த்தனைகளை அடுக்கிவிட்டு, தங்கள் பயிற்சியை தொடர்ந்தனர் இருவரும். இங்கு வந்து இத்தனை நாட்களில் இதுவே முதல் முறை பிரகதியும் சாலினியும் பேசிக் கொண்டது.முதலில் சிரமபட்டவர்கள் ஒரு சில நிமிடங்களில் அதில் மூச்சு விட தாமாகவே பழகியிருந்தனர்.இவர்களின் இந்த பயிற்சி மறுநாள் இதை விட அழம் அதிகமான கல் குவாரி நீரினுள் இருந்தது. பாசிகள் படிந்து இருந்ததால் அந்த தண்ணீர் பச்சை நிறமாக காட்சியளிக்க, அவர்களுக்கு நீரினுள் மீன் போல் நீந்துவதற்கு ஏதுவாக ரப்பர் போன்ற சாதனத்தை காலில் அணிவித்திருந்தனர்.மேலும் நீரினுள் சரியாக பார்ப்பதற்கு அதில் பயன்படுத்தும் கண்ணாடியும் வழங்கப் பட்டது. நீரினுள் வாய் திறந்து பேச முடியாததால், சைகை மூலம் பேச சில சம்பாஜைகள் கூட கற்றுக் கொடுக்கபட்டது.

'


ஓகே நான் நலமாக இருக்கிறேன்'👌👌👌.... 'நீருக்கடியில் செல்லலாம்' 👎👎👎... 'மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, வேறு ஏதேனும் சிரமம் இருந்தாலோ! கையை கிடைமட்டமாக நீட்டி விரல்களை தளர்வாக அசைக்க வேண்டும் . 'மேலே செல்ல வேண்டும்' 👍👍👍... இவையே கற்றுக் கொடுக்க பட்டது.பயத்தினை சுமந்து அதில் குதித்தவர்கள் கூட அடியில் செல்ல செல்ல நீரின் குளுமை ஆட்கொள்ள, சுற்றிலும் தெரிந்த பச்சை வண்ண பவள பாறைகளின் அழகில் சொக்கிதான் போனார்கள்...ஆட்களை பார்த்ததும் தன் தாயின் வாயிற்குள் தஞ்சம் புகும் அந்த மீன் குஞ்சுகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. குவாரி என்பதால் உபயோகமின்றி கிடந்த சில டயர்களும், துரு பிடித்த மோட்டார் பம்புகளும் கூட கவனத்தை ஈர்த்தது. பாறைகளின் கூர்மை பிரமிப்பை ஏற்படுத்த, மேலே இருந்து பார்க்கும் போது அத்தனை பெரியதாக தெரியவில்லை, நீருக்கடியில் ஒருமுறை அந்த வலிய பாறைகளை வலம் வந்தவர்களை பார்த்து மீன்களும் தவளைகளும் அதன் இடுக்குகளில் ஒளிந்துக் கொண்டு அவர்களுடன் கண்ணாமூச்சி ஆடியது என்றே சொல்லலாம்.முதல் முறை பயத்தினாலும், பக்கத்தில் நீந்திய பெண் இடித்துக் கொண்டு வந்ததாலும் இவைகளை எல்லாம் சரியாக பார்க்க முடியவில்லை பிரகதியால். ' பாவம் அந்த பொண்ணு பிரகதியை விட பயந்து போய் இருப்பா போல இவளை துணைக்கு வச்சிட்டு சுத்திருக்கு'"எதுக்கு பாறையை சுத்தி காட்டுறாரு? கண்டிப்பா எதாவது இல்லாம இருக்காது. என்ன இருக்கு ?" என்று ஏதோ பெரியதாக காட்ட போகிறார் என்ற எண்ணத்தில் கண் முன் இருந்த காட்சிகள் அவள் எண்ணத்தில் பதியவில்லை.காலையில் ஆரம்பித்து மதிய உணவு இடைவேளை முடிந்து இரண்டாம் கட்டமாக அனைவரும் இம்முறை உற்சாகமாக பயிற்சி மேற்கொண்டனர்.கடந்த முறை அவள் எண்ணத்தில் பதியாத இந்த உயிர்ப்புகள் அனைத்தும் இந்த முறை அவளை மதி மயங்க செய்தது என்றே கூறலாம். அவளும் அதை ரசனையுடன் பார்த்து வலம் வந்தாள்.மாலையில் அங்கிருந்து கிளம்பியிருந்தனர். நீரினுள் அதிக அழுத்தம் காரணமாக நான்கு பேருக்கு காதில் சேவிப்பறைகள் கிழிந்து விட்டது, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுநாள்


கடலுக்குள் சாகசம் நிகழ்த்த அவர்கள் மிகுந்த எதிர் பார்ப்புடன் இருந்தனர். கடலுக்குள் இருக்கும் அதிசயங்களை அவர்களுடன் சேர்ந்து நாமும் நாளை காண்போம்.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 8

"ஓகே கைஸ், ஆர் யூ ரெடி டூ கோயிங் அட்வன்சர்ஸ்" என்று நிரஞ்சன் தன் ஆளுமையான குரலில் கேட்க
"எஸ் சார்" என்று உற்சாகமாக கத்தினர் அவனின் மாணவர்கள்.

"கடலுக்குள் நீங்க வாழ் நாளில மறக்க முடியாத புதுவித அனுபவத்தை பெற போகிறீர்கள், வண்ண வண்ண மீன்கள், கடல் ஆமைகள், இன்னும் நிறைய உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது" என்று அதை காண வேண்டும் என்ற ஆசை வலையை அவர்கள் மீது வீசி, அனைவரையும் போட்டில் ⛵ ஏற்றி நடு கடலுக்கு அழைத்து சென்றான்...

அவன் கூறிய உவமைகளை எண்ணி கற்பனைகளில் திளைத்திருந்தவர்களுக்கு அவற்றை கண்களில் நிரப்பிக் கொள்ள பேரவா எழுந்தது.

பிரகதியும் ஃபைண்டிங் நீமோவில் பார்த்தவைகளை மனக் கண்ணில் கொண்டு வந்து "ஐஐஐய் ஜாலி" என்று ஆவலோடு பயணித்தாள்.
போட் நடு கடலுக்கு வந்ததும் அதை நிறுத்தினார் அதன் ஓட்டுநர்.

அவர்கள் சாகசம் மேற்கொள்ள ஆயத்தமாக, ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டனர்.

"எல்லாத்திலையும் பொண்ணுங்களுக்கு தான் முதல் உரிமையா? நாங்க தான் முதல்ல போவோம்" என்று ஆண்கள் குழு அவாவில் முந்திக் கொண்டது.

"சரி, நீங்களே முதல்ல போங்க" என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விட்டனர் பெண்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு நடக்க போவதை அறிந்திருந்தால் இவ்வாறு கூறி இருக்க மாட்டார்களோ என்னவோ?

நீந்துவதற்க்கு தேவையான உபகரணங்களை அணிந்துக் கொண்டு போட்டில் இருந்து பின் புறமாக சாரிந்து கடலில் குதித்தனர். ஆண்கள் குழுவுடன் நிரஞ்சனும், பெண்கள் குழுவுடன் மோனிகாவும் செல்வதாக தீர்மானித்து இருந்தனர்.

நிரஞ்சனும் அவர்களுடன் கடலுக்குள் குதிக்க, ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டார்கள். தரையை தொட்டவர்கள் அங்கு பல வியப்புகளை பார்த்து ரசித்தனர்.
அவர்களின் இந்த மகிழ்வான தருணத்தை ஸ்கூபா பயிற்சியாளர் புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க, அவர் கேமராவை கையில் எடுத்ததும் அதன் முன் சென்று நின்றுக் கொண்டான் தீபக் .

பிறகு அவனுக்கு இது பொன்னான தருணம் அல்லவா! ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்து லைக்ஸ்சை அள்ளலாமே. அது மட்டுமின்றி இந்த மாதிரியான சாகசம் நான் மேற்கொண்டேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆதாரம் கேட்பார்களே? அதற்காகவும் தான் முந்திக் கொண்டான். அவன் பின்னால் நின்றிருந்த சிவா 'நாங்களாம் ஃபோட்டோல தெரிய வேண்டாமா?' என்று அவனை பின்னுக்கு தள்ளி முன் வந்து நிற்க, அங்கு அவர்களுக்குள் ஒரு கலவரமே நடந்தது.

அவர்கள் அங்கே புதிய உலகில் சஞ்சரிக்க, மேலே போட்டில் இருந்த பெண்களுக்கு கடல் நீர் கலந்த உப்புக் காற்று பிடிக்காமல் சில உடல் உபாதைகள் ஏற்பட்டது.

போட் சென்று கொண்டிருந்தால் கூட இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. ஒரே இடத்தில் நிற்பதால் அது மெல்லிய கடல் அலைகளின் தாக்கத்தால் ஆடிக் கொண்டிருக்க, அனைவருக்கும் தலை சுற்றி குடலை பிரட்டிக் கொண்டு வாந்தி வருவது போல் இருந்தது.

படகின் ஒரு மூலையில் தலையை வெளியே நீட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் பிரகதி. 'ஐயோ! இப்படி வாந்தி எடுத்தா குடல் வாய் வழியா வெளிய வந்திரும் போல இருக்கே, மித்து' என்று தன் ஆருயிர் தோழியின் நினைவு வர அவளை அங்கிருந்தே தலையை திருப்பி தேடினாள்.

அவள் இருந்த மூலையின் நேர் அடுத்த மூலையில் மிதுனாவும் அதையே தான் செய்துக் கொண்டிருந்தாள். "மித்து நீயுமா?" என்று அனைவரையும் சுற்றி பார்க்க,
எல்லோரும் ஆளுக்கொரு மூலையை ஆக்கிரமித்து இருந்தனர். சிலர் உடல் சோர்ந்து போய் அங்கேயே படுத்திருக்க, "அப்பாடா, நான் மட்டும் இல்ல எல்லாரும் இதே நிலமையில தான் இருக்காங்க." என்று எண்ணி, தான் மட்டும் தனித்து தெரிய மாட்டோம் என்ற அற்ப சந்தோசம் வந்தது அவளுக்கு.

பரிட்சையில் தான் மட்டும் தான் முட்டை வாங்கி விட்டோமோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் போது மொத்த வகுப்பும் தோல்வியை தழுவி இருந்தால் கிடைக்கும் பாருங்கள் ஒரு நிம்மதி அப்படி தான் இருந்தது பிரகதிகும். வயிற்றை பிரட்ட அவளின் அனுமதியின்றி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி விட்டாள்.

ஆடவர் பட்டாளம் தங்கள் சாகசத்தை முடித்து மேலே வர, மோனிகா பெண்கள் அணியை தயார் படுத்தினாள். அனைவரும் தட்டு தடுமாறி எழுந்து, அவள் சொல்படி கேட்டு தங்களை சமன் செய்து கொண்டு தயாரானார்கள் ஒருத்தியை தவிர.

"என்னடா? இந்த பொண்ணுங்க எல்லாம் இப்பவே பியுஸ் போன பல்ப் மாதிரி ஆகிட்டங்க" என்று கலாய்த்து கொண்டே தங்கள் முதுகில் சுமந்து கொண்டிருந்த சிலிண்டரை கழற்ற தொடங்கினர்.


அப்போது "சார் உங்களை மோனிகா மேம் கூப்பிட்டு வர சொன்னாங்க" என்று ஒரு பெண் கூறி செல்ல, அவனும் மோனிகா அருகில் சென்றான்.

அனைத்து பெண்களும் சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டு குதிக்க ரெடியாக நிற்க, அங்கு தரையில் சோர்வாக அமர்ந்திருந்த பிரகதியின் அருகில் மோனிகா மண்டியிட்டு அமர்ந்தவாறு அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தை "நான் யூனிஃபார்ம் போட மாட்டேன், ஸ்கூல்கு போக மாட்டேன்" என்று அடம் பிடிப்பது போல் அவளும் "சுவிமிங் சூட் போடா மாட்டேன், கடலில் குதிக்க மாட்டேன், பிளீஸ் என்னை கரையில கொண்டு விட்டுடுங்க" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அங்கு நின்று கொண்டிருந்த சில பெண்களும் சுவிம் சூட் அணிந்து தயாராக இருந்தாலும், அவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.
"ஆமா மேம் நாங்களும் வரல" என்று கூறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகே சென்ற நிரஞ்சன் பிரகதியிடம் "இவ்வளவு தூரம் வந்துட்டு இப்போ மாட்டேன் சொன்னா எப்படி பிரகதி, ஒருமுறை உன் பயத்தை ஒதுக்கி வச்சிட்டு தண்ணில இறங்கு. இப்போ நீ பயந்து வர மாட்டேன் சொன்னா? அப்றமா இதையெல்லாம் பார்க்க முடியலையேனு வருத்த படுவ. உன்னால அவங்களும் பின் வாங்குறாங்க பாரு" என்று அவளால் மற்றவர்களும் நீருக்குள் செல்லாமல் பயத்தை சுமந்து பின்வாங்குகிறார்கள் என்று நிலவரத்தை புரிய வைக்க முயன்றான்.


ஆனால் அவளோ "இல்ல நான் வரல" என்று அதிகப் படியான உடல் உபாதைகளால் சோர்வாக, கண்கள் வேறு மங்களாக தெரிய பாதி மயக்க நிலையில் கூறினாள்.

"இப்படியெல்லாம் சொன்ன நீ கேட்க மாட்ட" என்று சொன்னவன் "மோனிகா அவளுக்கு சூட் மாட்டி விடு" என்று அவன் கூறிய அடுத்த நொடி மோனிகா அவளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் மாட்டி ரப்பர் பட்டைய காலில் மாட்டி அவளை தூக்கி குதிக்க ஏதுவாக படகின் விலும்பில் உட்கார வைத்தாள். இவை எல்லாம் பிரகதி மறுப்பு சொல்ல வாய் திறக்கும் முன் மோனிகா செய்து முடித்திருக்க வேறு வழியின்றி குதிக்க தயாரானவள் நிரஞ்சனை பார்த்து "நீங்களும் வாங்க சார் பிளீஸ்" என்று கெஞ்ச, இங்கு பசங்களுக்கு அவன் உதவி தேவைப்படும் என்று அறிந்தும் அவளை இந்த நிலையில் தனியாக விட மனமின்றி சரி என்று ஒத்துக் கொண்டான்.


அனைவரும் மூன்று நான்கு பேராக மூக்கை பிடித்துக் கொண்டு பின் புறமாக சரிந்து தண்ணீரில் விழ, பிரகதியும் பாதி மயக்க நிலையில் விழுந்தால். அவளுக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. அவள் சுய நினைவில் தான் இருக்கிறாளா? இல்லையா? என்பது கூட அவளுக்கு தெரியவில்லை. அறுவை சிகிச்சை செய்ய நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தினால் ஒரு சில நிமிடங்கள் அந்த மருந்தின் வீரியத்தில் இது தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் உணரும் நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்களே ,அப்படி தான் இருந்தது அவளுக்கும்.
அனைவரும் தங்கள் இடது புறம் ஒருவர் கையும், வலது புறம் ஒருவர் கையும் பிடித்துக் கொண்டு வட்டமாக நீரின் அடி ஆழத்தை நோக்கி சென்றனர்.


ஒவ்வொரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் அவர்களின் நிலையை அறிந்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வரவழைக்க பட்டிருந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் "ஓகே வா கீழே செல்லலாமா? 👎👎👎" என்று சைகையில் கேட்க, அனைவரும் "ஓகே 👌👌👌" என்று அதே முறையில் பதில் அளித்தனர்.


கடல் நீரின் குளுமை மயக்க நிலையில் இருந்து பிரகதியை விடுவித்து இருந்தாலும், பதட்டமும் பயமும் அவளை விட்டு நீங்கவில்லை. நிரஞ்சன் அவளிடம் "ஓகே வா" என்று கேட்க, பயத்தில் "இல்லை, மேலே செல்லலாம்" என்பது போல் சைகை செய்தவள், 'காது அடைத்து விட்டது' என்று காதை காட்டி புரிய வைக்க முயற்சித்தாள்.


அவனும் அதை உண்மை என்று நம்பி, 'ரெண்டு செகண்ட் மூக்கை புடிச்சிகோ' என்று சைகையில் கூற, அவளும் அதை செய்தாள். 'இப்போ ஓகே வா?' என்று கேட்க, மறுபடியும் இல்லை என்ற பதிலே அவளிடம் இருந்து வந்தது. அவளை சந்தேகமாக பார்த்து அவள் பொய் உரைக்கிராள் என்பதை புரிந்துக் கொண்டவன் செல்லமாக முறைத்து அவள் கை பிடித்து கீழே இழுத்து செல்ல, 'கண்டுப்பிடிச்சிடாரோ?' அசடு வழிய அவள் சிரித்தது மௌத் பீஸ்சை தாண்டி வெளியே தெரியவில்லை என்றாலும் அவனுக்கு புரிந்தது.

ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் அவர்களின் நிலை இவ்வாறே அறிய பட்டது, பிரகதியும் "கீழே வேண்டாம் மேலே சென்று விடலாம் 👍👍👍" என்று கூறி சைகை செய்ய அவள் பேச்சையெல்லாம் யார் கேட்டா?


நண்பகலை நெருங்கும் வேளை என்பதால் கடலின் மேற்பரப்பில் சற்று வெப்பம் அதிகமாக இருந்தது. ஆனால் நீரின் அடியில் கதிரவனின் தாக்கம் ஏதுமின்றி உடல் சிலிர்க்கும் குளுமையும், அவர்கள் வாயில் இருந்த மௌத் பீஸ் வழியாக சுவாசிக்கும் போது வெளியேறும் நீர் குமில்களின் சத்தம் அன்றி வேறு எதுவும் கேட்கவில்லை.


வண்ண வண்ண பூஞ்சைகள் தான் முதலில் அவர்களை வரவேற்றது. தரையில் விரிந்து குச்சி போல் நீட்ட நீட்டமாக சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் நீரோட்டம் காரணமாக சிறிது அசைந்து அவர்களை "எங்கள் உலகிற்கு வாருங்கள்" என்று அழைப்பது போல் இருந்தது.


அதை உணவாக உட்கொள்ளும் சிறிய வகை மீன்கள் அதில் உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்க, இவர்கள் அவற்றை தொந்தரவு செய்யாமல் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பார்த்து சென்றனர்.


அதுவரை எப்படியேனும் இங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தவளுக்கு அவற்றை பார்த்து மனம் ரசிக்க ஆரம்பிக்க, இதற்கு தானே நாம் ஆசை பட்டு வந்தோம். பிறகு ஏன் பயத்தை காரணம் காட்டி இதை பார்க்காமல் போவதா? என்று மனதில் ஆசை வேரூன்ற பயம் பின்னுக்கு தள்ளப் பட்டது.


சில வகை கடல் தாவரங்கள் 'இங்கு மட்டும் தான் என்னை உங்களால் பார்க்க முடியும், நிலத்தில் பார்க்க முடியாது' என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் யாரும் கடலில் வழி தவறி வேறெங்கும் சென்று விடக் கூடாது என்பதற்காகவும், தாங்கள் வந்த படகின் மேற்பரப்பு எங்கு இருக்கிறது என்பது தெரிவதற்காகவும் கயிற்றை காட்டியிறுந்தனர். அதை பிடித்துக் கொண்டே இருவர் இருவராக சுற்றி பார்க்க ஆரம்பித்தனர்.


பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பவள பாறைகளின் மேல் நட்சத்திர மீன்கள் ஒட்டிக் கொண்டிருக்க, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா வண்ணத்தில் இருந்த நட்சத்திர மீன்களை ஒரு முறையேனும் தொட்டு பார்க்க ஆசை எழும்பியது பிரகத்திக்கு.


இவர்கள் அவர்களுக்கு அந்நியர்கள் தானே! அதனால் தங்கள் ஸ்பரிசத்தை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று அந்த எண்ணத்தை கை விட்டாள். உல்லாசமாக சுற்றி திரிந்த சில மீன்கள் "இப்போ தானமா ஒரு குரூப் வந்துட்டு போச்சி அதுக்குள்ள மறுபடியுமா?" என்று தங்கள் தாவர வீட்டிற்குள் ஓடி சென்று ஒளிந்து கொண்டது.


குடுவை போன்று இருந்த பூஞ்சைகளின் உள் இருக்கும் மீன்களை வெளியே கொண்டு வரும் முனைப்புடன், பயிற்சியாளர் அதை சிறிது தட்ட, ம்ஹும் அவர்கள் வெளி வந்தாள் தானே? அவர்களும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்பது போல் உள்ளேயே இருந்துக்கொண்டானர்.

அனைவரும் அதைவிடுத்து முன்னேறி செல்ல, பிரகதி மட்டும் நான் அதை பார்க்காமல் வர மாட்டேன் என்று அதில் நின்று தட்டிக் கொண்டிருந்தாள்.
முன்னே சென்ற நிரஞ்சன் இவளை காணாது திரும்பி பார்க்க, அவள் இன்னும் அந்த முயற்சியில் தான் ஈடுப் பட்டிருந்ததை பார்த்து மென்மையாக சிரித்துக் கொண்டவன் அப்போது தான் பார்த்த்தான், அவளுக்கு பின்னால் அவளை நேக்கி ஆபத்து வந்துக் கொண்டிருப்பதை.

நொடியும் தாமதிக்காது விரைந்து அவளிடம் வந்தவன், அவள் தோள் பற்றி தன்னுடன் இணைத்து விலகி செல்ல, அது தங்களை கடந்து சென்றது. ஆனால் தலையை விட்டு பல மைல்கள் தூரத்தில் மிதந்து வந்தது போல் இருந்த அந்த ஜெல்லி ஃபிஷ்ன் வால் பகுதி நிரஞ்சனின் தோல் பட்டையை உரசி சென்றது.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 9


ஜெல்லி ஃபிஷ் நகர்ந்து சென்ற பிறகு, 'தனியாக எங்கும் நிற்காதே. அது மிகவும் ஆபத்தானது. மற்றவர்களுடன் இணைந்து செல்.' என்று சைகை மூலம் அவளுக்கு உணர்த்தினான். அவளும் சரி என்று தலையசைத்து மிதுனா மற்றும் சாலினியுடன் இணைந்துக் கொண்டாள்.

ஜெல்லி ஃபிஷ் உரசி சென்றதால் நிரஞ்சனின் கையில் திட்டு திட்டாக வீக்கம் ஏற்பட்டிருக்க, அதிலிருந்து பயங்கரமான எரிச்சல் வேறு வந்தது. இது தெரிந்தால் தன்னால் தான் இப்படி நேர்ந்தது என்று நினைத்து பிரகதி வருத்தப்படுவாள் என்பதை உணர்ந்தவன் அவற்றை வெளிக்காட்டாமல் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அவர்களுடன் சென்றான்.

சில மீன்கள் "வந்துட்டாங்கயா.... வந்துட்டாங்க..." என்பது போல் பயந்து ஓட்டம் எடுக்க, சில மீன்கள் 'உங்களை மாதிரி நிறைய பேரா பாத்தாச்சி, போங்க போங்க, போய் ஒழுங்கா சுத்தி பார்த்துட்டு வீடு போய் சேருங்க' என்று அசால்ட்டாக சுற்றிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் அளவில் பெரியதாக இருந்த மீன் ஒன்று "இது ஏ ஏரியா. நான் தான் இங்க டான்" என்று தெனவட்டாக சுற்றிக் கொண்டிருந்தது.

ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிக் காட்டுவதற்காகவே, ஆங்காங்கே உபயோகமில்லாத நான்கு கார்கள், ஏழு மோட்டார் சைக்கிள் மற்றும் பாதி உடைந்த நிலையில் இருந்த படகு ஒன்றையும் போட்டு வைத்திருந்தனர்.

அதில் ஒரு காரின் அருகில் சென்று கதவை திறக்க, ஐம்பதுக்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் கண்ணாமூச்சி ஆடும் பொது கண்டுபிடிக்க வருபவன் தங்கள் இருப்பிடத்தை கண்டறிந்து விட்டாள் அவனை இடித்து தள்ளி இவர்கள் மீது முட்டி மோதி களைந்து சென்றது

ஒவ்வொரு காரின் அருகிலும் சென்று பார்க்க, அதற்குள்ளும் பல்வேறு விதமான வண்ண மீன்கள் இருந்தன. சில மீன்கள் கார் ஸ்டியரிங்கின் இடுக்குகளில் புகுந்து சுற்றிக் கொண்டிருந்தது.

பைக் வீல்களில் இருந்த கேப் வழியாகவும் அவர்கள் குதூகலமாக ஆடிக் கொண்டிருக்க, ஒரு மீனோ பைக்கின் சையிட் மிரரில் தன் உருவத்தை பார்த்து முட்டிக் கொண்டு இருந்தது.

உடைந்து போன படகிலும் அவர்கள் மறுபடியும் ஒரு டைட்டானிக் படத்தை ஓட்டிக் கொண்டிருக்க, கடல் குதிரைகள் இன்னும் அறிய வகை பல கடல் வாழ் உயிரினங்களையும் பார்த்தனர்.

இவர்களையும் கேமரா படம் எடுக்க, இரண்டு மூன்று பேராக நின்று படம் பிடித்துக் கொண்டனர். பிரகதியும் மிதுனா மற்றும் சாலினியுடனும் இணைந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள்.

கடல் நீரின் தரை பகுதி அவ்வளவு சுத்தமாக இருக்க, அவற்றை எல்லாம் பிரமிப்பாக பார்த்துக் கடந்து சென்றனர்.

மீன் வலையில் சில மீன்கள் சிக்கி கொண்டு இருக்க, வலையை அறுத்து அவைகளை விடுவித்தனர். அவைகளும் ஒரு முறை அந்த இடத்தை வட்டமடித்து உற்சாகமாக சென்றது.

தரையில் ஆங்காங்கே சிற்பிகள் கிடக்க ஆசையோடு அவற்றை எடுத்துக் கொண்டு படகிற்கு திரும்பியது பெண்கள் அணி.

பிரகதிக்கு அங்கேயே இருந்து விடலாம் போல் இருந்தது, நிரஞ்சன் அவளிடம் 'மேலே செல்லலாமா?' என்று கேட்க, அவளோ 'வேண்டாம் கீழே இங்கேயே இருக்கலாம்' என்று ஆசையுடன் கூற, அவனுக்கும் அவளுடன் இங்கு இன்னும் கொஞ்ச நேரம் செலவிட ஆசை தான். ஆனால் மேலே உள்ள பசங்களையும் மனதில் வைத்து அவளை அழைத்து சென்றான்.


நீருக்குள் குதிக்கும் முன்பு பெண்கள் அனைவரும் எந்த நிலையில் இருந்தார்களோ! அதே நிலையில் தான் இப்போதுஆண்களும் இருந்தனர்.
"டேய் அருண்... நண்பா எங்கடா இருக்க? முடியல, என்ன கொஞ்சம் தூக்கி விடுடா" என்று சுபாஷ் அருணை அழைக்க, அங்கு அருண் நிலைமை இவனை விட மோசமாக இருந்தது. "நானே இங்க தவழ்ந்துடு இருக்கேன் டா" என்று தான் அருணிடம் இருந்து பதில் வந்தது.


"என்னடா இது இப்படி ஆடுது. குலுங்குறதுலேயே எனக்கு கக்கா வந்துடும் போல இருக்கே" என்று ஒருவன் கூற, "எனக்கு ஆல்ரெடி வந்துடுச்சி டா" என்ற சத்தம் மட்டும் எங்கிருந்தோ வந்தது.


ஒருவழியாக அனைவரையும் படகில் ஏற்றி கரையை நோக்கி புறப்பட்டனர். அது கிளம்பிய சில நிமிடங்களில் ஏதோ துர்நாற்றம் குடலை பிரட்ட,
"எவன்டா அது? கூட்டத்துல விஷ வாயுவ தொறந்துவிட்டது. டேய் சிவா நீ தன?என்று அவர்களில் ஒருவனை ஓட்ட, அவனோ "ஆயா சத்தியமா நான் இல்லடா" என்று தன் மீது சுமத்தப் பட்டிருக்கும் வீண் பழியை துடைக்க போராடிக் கொண்டிருந்தான்.


ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்களில் ஒருவர் படகில் இருந்து குதித்து அவர் கையில் கொண்டு சென்ற பெட்டியில் எதையோ அள்ளிக் கொண்டு வந்தார்.
"என்ன சார் இது?" என்று அனைவரும் மூக்கை பிடித்துக் கொண்டு கேட்க, அவரோ "திமிங்களத்தோட வாந்தி" என்றதும் இன்னும் குமட்டிக் கொண்டு வந்தது அனைவருக்கும்.


"எத? திமிங்கலமா?" அனைவரும் பயத்தில் வாயை பிளக்க, தீபக் "அதை எதுக்கு சார் நீங்க எடுத்துட்டு வரிங்க?" என்று கேட்டான் அருவருப்பாக அவர் கையில் இருந்த பெட்டியை பார்த்தப் படி.


அவரோ, "இதோட மதிப்பு மார்கெட்ல கோடி கணக்கில் இருக்கும்" என்று பதிலளிக்க, "இதுவா? இதை வச்சி என்ன சார் பண்ணுவாங்க?" என்று முகத்தை சுளித்துக் கொண்டு கேட்டான்.


"பெர்ஃப்யூம் தயாரிக்க யூஸ் பண்ணுவாங்க" என்றதும் "ஐய்யே... இத வச்சா? இனி நான் பெர்ஃப்யூம்மே அடிச்சிக்க மாட்டேன்" என்று பெண்களின் திசையில் இருந்து குரல் வந்தது.


"இப்போ பண்ண முடியாது. இதை கொஞ்ச நாள் வச்சி பதப்படுத்துன பிறகு தான் யூஸ் பண்ணுவாங்க. வருஷம் ஆக ஆக இதில இருந்து நல்ல வாசனை வரும். அப்போ இதோட மதிப்பும் கூடும்" என்று அவர் அதற்கு விளக்கம் சொல்ல,


"ஒயின் மாதிரியா சார்?" என்று கேட்ட அருணை தொடர்ந்து "நம்ம நயன் மாதிரி கூட தான் டா, இல்ல சார்" என்று சுபாஷ் சொல்ல, அங்கு மொத்தமாக ஒரு சிரிப்பலை பரவ, "ஆமா ஆமா நயன் மாதிரி தான்" என்றார் அவர்.

அப்போது தான் மோனிகா நிரஞ்சனிண் கைய கவனித்தாள்.
"என்னாச்சி நிரஞ்சன்?" பதட்டத்துடன் அவள் கேட்க
அனைவருமே கூட அப்போது தான் அதை கவனித்தார்கள்.

"என்ன சார் இது கையெல்லாம் தழும்பு தழும்பா இருக்கு?" என்று தீபக் அவன் அருகில் வர, "ஒன்னும் இல்லைடா, ஜெல்லி ஃபிஷ்சோடா டேல் கைலா பட்டுடுச்சி" என்றான் சாதாரணமாக,

உடனே மோனிகா, "என்ன இவ்வளவு சாதாரணமா சொல்ற, மூணு நாளைக்கு எரிச்சல் உயிர் போகும். கவனமா இருக்க மாட்டியா?" என்று தன் நண்பனுக்காக வருந்தியவள், "கொஞ்சம் இரு ஆயின்மெண்ட் போட்டு விடுறேன்" என்றபடி முதல் உதவி பெட்டியில் இருந்து மருந்து எடுத்து காயம் பட்ட இடத்தில் போட்டு விட்டாள்.


பிரகதிக்கும் அப்போது தான் தெரிந்தது. 'அப்படியென்றால் தன்னால் தான் அவருக்கு காயம் பட்டதா? எல்லாம் என்னோட தவறு தான்' என்று கண்களில் நீர் கோர்க்க, 'நான் மட்டும் அங்கு தனியாக நின்றிராமல் அவர்களுடனே சென்றிருந்தால், இப்போது அவருக்கு இந்த நிலை வந்திருக்காதே" என்று தன்னையே நொந்து கொண்டாள்.


அவள் அழ தயாராக இருப்பதை பார்த்தவன், அனைவரும் தன்னை சூழ்ந்து நிற்பதால் அவளிடம் கண்களால் 'அழாதே' என்று கூற, மூச்சை உள் இழுத்து அழுகையை கட்டுப்படுத்தி கொண்டாள்.


கரையை அடைந்தவர்கள் கடற்கரையில் இருந்த கடைகளில் ஷாப்பிங்க் செய்ய கேட்க, நிரஞ்சனும் அவர்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கி அதற்குள் வந்து விட வேண்டும் என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தான். பயிற்சிக்கு வந்து இன்று தானே வெளிக் காற்றை சுவாசிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிலடைத்திருக்கிறது. அதனால் அனைவரும் மகிழ்ச்சியாக சுற்றி பார்க்க சென்று விட்டனர்.


நிரஞ்சனிடம் தனியாக பேச வேண்டி அனைவரும் செல்ல காத்திருந்தவள், அவன் தனித்து விடப் பட்டதும் அவன் அருகில் வந்து "சாரி, என்னால தானே இப்படி ஆகிடிச்சி" என்று மனமார வருந்தி அவன் கைகளை பார்த்துக் கேட்க.

"இதெல்லாம் ஒன்னுமில்லை. இதை விட பெரிய காயம்லாம் பட்டிருக்கு. சரியாகிடும். நீ போ. போய் உன் பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் பண்ணு. எனக்கு எதுவும் இல்ல, நா நல்லா தான் இருக்கேன்" என்று புன்னகையுடன் சொன்னவனை குற்ற வுணர்ச்சியில் பார்த்தவள் "மோனிகா மேம் மூணு நாள் எரிச்சலா இருக்கும்னு சொன்னாங்க, எரியுதா?" என்று பாவமாக கேட்க, அவனோ "லைட்டா" என்று வலியை அடக்கி ஒரு கண்ணை மூடி சொன்னவன், மேலும் "அது ஒண்ணும் பிரச்சனை இல்ல, நான் பார்த்துக்கிறேன் மா. இனி மேல் ஹெவி பிராக்டீஸ் இருக்கும். இந்த மாதிரி ஃப்ரீ டைம் கிடைக்காது. அதனால இப்போவே நல்ல என்ஜாய் பண்ணிகோ போ" என்று அவள் வருந்துவது பிடிக்காமல், அவள் மன நிலையை மாற்ற அங்கிருந்து அனுப்ப முற்பட்டான்.


"நீங்க இப்படி கஷ்ட படும் போது, என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" என்று உண்மையான அக்கறையுடன் அவள் கூற, 'எனக்கு ஒரு கஷ்டம்னாலே உன்னால தாங்கிக்க முடியலை, நீ எப்படி என்னை கொலை செய்வ?' என்று மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான்.


"அதோட எந்த பாகம் பட்டாலும் இப்படி தான் ஆகுமா?" என்று அவள் கேட்க,
"நோ அதோட தலையை தொட்டா எதுவும் ஆகாது. வால் பகுதி பட்டா மட்டும் தான் இப்படி காயமாகும்" என்று பதில் சொன்னவனிடம் மீண்டும் "ரொம்ப எறியுதா?" என்று அவன் கைகளை பிடித்து கேட்ட படி காயத்தில் பார்வையை நிலைக்க விட, அவனோ "ஹ்ம்ம்" என்று தலையை மட்டும் ஆட்டியவன், "இந்த எரிச்சலை உன்னால குறைக்க முடியும்" என்று அவள் அதரங்களில் பார்த்துக் கூற


அவன் பார்வையை உணர்ந்தவளின் முகமோ நாணத்தில் சிவந்து போனது. மெலியதாக புன்னகைத்த படி இதழ் குவித்து காயத்தில் "ஊப்ஃப்" என்று ஊதி அவன் காயத்திற்கு மருந்திட்டு அங்கிருந்து ஓடிட, வேறொன்றை எதிர் பார்த்து கேட்டவனோ, அவள் செயலில் தலை அசைத்து சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான்.


இவைகளை கோபத்தில் சிவந்த கரு விழிகள் இரண்டு பார்த்து சென்றதை கவனித்திருந்தால் வர போகும் ஆபத்தை தடுத்திருப்பானோ என்னவோ!

 
Status
Not open for further replies.
Top