ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Active member
Wonderland writer
அத்தியாயம் : 1

அந்த அரங்கம் முழுவதும் மாணவ மாணவியர் சல சலப்பு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. கம்பீரமான காக்கி உடையில் ஆறடி உயரத்தில் நான்கு பேர் உள்ளே நுழைந்ததும் அனைத்து சல சலப்புகளும் அடங்கி அமைதி நிலவியது. அனைத்து மாணவர்களும் கைகளை பின்னால் கட்டி அட்டேசனில் வரிசையாக நின்றிருந்தனர்.அங்கு மேடையில் அவர்களது உரையை தொடங்கியவர்கள், இன்றைய பயிற்சியாக குற்றவாளியின் வாயில் இருந்து உண்மையே வரவைக்க பயன்படுத்தும் அவர்கள் பயிற்சி நிலையத்தின் கண்டுபிடிப்பை அங்குள்ள மாணவர்களுக்கு கற்று கொடுக்க, அவர்கள் மீதே அதை பரிசோதிக்க கூறினார் அதன் தலைமை அதிகாரி ரகுராம். அவர்கள் மனதில் அவர்களின் பயிற்சியாளன் நிரஞ்சனை பற்றிய கருத்தை கூறுமாறு கேட்டார்.அப்பொழுது அனைவரின் பார்வையும் அங்கு மேடையில் ஆறடி உயரத்தில் நீல நிற சட்டையும் கருப்பு நிற கார்ச்சட்டையுமான பயிற்சியாளர் சீருடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நிரஞ்சன் மீது சிறு புன்னகையோடு பதிந்தது.நிரஞ்சன் அமைதியான முகத்துடன் விறைப்பாக நின்று கொண்டிருந்தான். "அப்போ இன்னைக்கு சார்க்கு நிறைய புரோபோசல் வரும். நிறைய பொண்ணுங்க மாட்ட போறாங்க" என்று கூட்டத்தில் ஒரு மாணவன் கத்த, சிரிப்பலை ஒன்று பரவி அடங்கியது. நிரஞ்சனின் பார்வையோ கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு மாணவியின் மீது காதலுடன் பதிந்து மீண்டது.அவளும் கூட அதை கேட்டு பதட்டத்துடன் தனக்கு இரண்டு வரிசைக்கு முன் நின்றிருந்த தன் தோழி மிதுனாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் தோழியும் ஒரு வித அச்சத்துடன் அவளை தான் பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த மாணவன் கூறியதென்னவோ அவளை அல்ல என்று அவர்கள் மூவரும் நன்கு அறிவர்.ஒவ்வொருவருடைய கையுலும் சிறிய கண்ணாடி குடுவை வழங்க பட்டது. அதில் திரவம் போன்று எதோ இருக்க, ஒவ்வொருவராக அதை பருகி அவர்களுக்கான பரிசோதனை செய்து கொள்ள ஆரம்பித்தனர்.நிரஞ்சன் மீது அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் மட்டுமே இருந்தது. யாரும் அவனை வசை பாடி எதுவும் கூறவில்லை.பிரகதியின் இதயமோ நொடிக்கு நூறு முறை துடித்து வெடித்து விடுவது போல் உணர்ந்தாள். எங்கே தான் மாட்டி கொள்வோமோ? என்ற பயமே மேலோங்கி இருந்தது. மிதுனாவுடன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தாள்."மிது இத நான் குடிச்சா? நான் எதுக்காக வந்திருக்கேன்? என்னோட பிளான் என்ன? எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். நான் இப்போ என்ன செய்வேன்? அவ்வளவு தான் முடிஞ்சது என் கதை. நல்லா மாட்டிகிட்டேன். என்னை புடிச்சி ஜெயில போட போறாங்க" என்றவளின் நடுங்கும் கரங்களை ஆதரவாய் பற்றிய மிதுனாவோ, "இது எதுவும் உண்மை இல்லை பிரகதி. நீ தைரியமா இரு. அந்த மாதிரி எந்த மருந்தும் இதுவரை யாரும் கண்டு பிடிக்கல. நீ தெளிவா இரு"என்று நம்பிக்கை கூறி சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.அவர்கள் இருவர் மட்டும் சக மாணவர்கள் விட்டு ஒதுங்கி நிற்பதை கவனித்த அதிகாரி ஒருவர். அவர்களை திட்டி உள்ளே அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர்களுக்கு இதற்காக தண்டனையும் வழங்கப்படும் என்றார்.மீண்டும் இருவரும் உள்ளே சென்று தங்களது இடத்தில் நின்று கொண்டனர். அப்பொழுது ஒரு மாணவி அதனை குடித்து "ஐ லவ் யூ நிரஞ்சன் சார்.யு ஆர் மை லைஃப்" என்று அவன் மீது தான் கொண்ட காதலை சுயநினைவு இன்றி கூறியதை கேட்டு அதை பருகாத மற்ற மாணவர்கள் சிரித்தனர்.அதை கேட்டு பிரகதியின் இதயம் வெடித்தே விட்டது என்றே சொல்லலாம். தானும் இதை போன்று உண்மையை உளறி மாட்டிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்றே நினைத்தாள். அந்த மருந்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே அதன் வேலையை காட்டும். ஏதோ போதை வஸ்துவை உட்கொண்டது போன்று இருக்கும். அதன் பின் அவர்கள் சுயநினைவு பெற்றாலும் அவர்கள் கூறிய எதுவும் அவர்கள் நினைவில் இருக்காது.பிரகதியின் முறையும் வந்தது. அதுவரை அலட்சியமாக நின்றுருந்த நிரஞ்சன் கூட, தன் விழிகளை கூர்மையாக்கி அவளை கவனித்தான். வேறு வழியின்றி சிறு நடுக்கத்துடன் பிரகதியும் அதை குடித்தாள்.அதை குடித்த பிரகதிக்கு ஒரு நிமிடம் அனைத்தும் மங்கலாக தெரிந்து பின் இயல்புக்கு மாறியது. "அவரை பற்றி என்ன இருக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல"ஆம் இது தான் பிரகதி கூறியது.அவள் கூறியதில் நிரஞ்சனுக்கு பெரிதாக எந்த அதிர்ச்சியும் இல்லை. 'அவள் மனதில் இதுவரை எதுவும் இல்லை என்றால் என்ன? இனி தான் அவள் மனதில் இடம் பிடித்து விடலாம்' என்று எண்ணினான்.மிதுனா அங்கு அவர்களுக்கு அந்த திரவத்தை வழங்கிய அதிகாரியை அர்த்தமுள்ள பார்வை ஒன்றைப் பார்க்க, அவரும் அவர்கள் திட்டம் நிறைவேறியதற்கான சிறு புன்னகை புரிந்தார்.அந்த பயிற்சி முடிந்த பின் அனைத்து மாணவர்களும் கலைந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பிரகதி மற்றும் மிதுனா செய்த தவறுக்காக அவர்களுக்கு தண்டனையாக அந்த மொத்த அரங்கையும் சுத்தம் செய்ய சொன்ன சீனியர் ஆபீஸர் குணால், அவர்களை கண்காணிக்குமாறு நிரஞ்சனிடம் கூறி சென்றார்.அவனுக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்ற இருவருக்கும் வேதனையை தான் அளித்தது.மொத்த அரங்கையும் சோர்வாக பார்த்தனர் இருவரும். "இத கிளின் பண்றதுக்கு முன்ன நம்ம கை உடைஞ்சே போயிரும்" என்று மிதுனா முகத்தை சுருக்க, பிரகதியோ "வேற வழி இல்ல, நாம இத செய்துதான் ஆகணும்" என்று கூறியவள் முகமும் தொங்கி போய் தான் இருந்தது.மூன்று மணி நேர கடும் உழைப்பில் வியர்த்து விறுவிறுக்க அவர்களுக்கான வேலையை முடித்தவர்கள் இருக்கையில் வந்து சோர்வாக அமர்ந்தனர். அவர்கள் முன் குடிநீர் குவளையை நீட்டிய நிரஞ்சனிடம் இருந்து அதனை வாங்கி குடித்தவர்கள் அங்கு சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ இரவு 9 மணி என்பதை உறுதி செய்தது. இதற்கு மேல் அவர்கள் விடுதி உணவகத்தில் சாப்பாடு கிடைக்காது என்பதை நினைத்த இருவரும் அந்த குவளை முழுவதையும் வயிற்றில் நிரப்பி இருந்தனர்.அதை குடித்த 2 நிமிடத்திலேயே மிதுனா அவள் முன் இருந்த எழுத்து மேசையில் பொத்தென்று தன் தலையினை சாய்த்து நித்திரையில் ஆழ்ந்தாள்.பிரகதிக்கோ கிறு கிறுவென வருவது போல் இருந்தது. கண்களை நன்கு விரல்களால் அழுத்தி தேய்த்து தலையை சிலுப்பி விட்டவளின் பார்வை இப்போது தெளிவாக இருந்தது.நிரஞ்சன் அவளுக்கு எதிரில் அமர்ந்து அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவனை பார்த்த அடுத்த நொடி மாட்டிக்கொண்ட திருடியை போல் கண்களை அகல விரித்து, தப்பிக்கும் வழி தேடி நாற்காலியில் இருந்தே தன் தலையை மட்டும் இரு புறமும் வேகமாக திருப்பி பார்த்தவள், சட்டென்று அவள் முன் இருந்த எழுத்து மேசையின் அடியில் தலையை கவிழ்துக் கொண்டாள்.அதை பார்த்த நிரஞ்சனுகு சிரிப்பு தான் வந்தது. அந்த மேஜையின் மேலே ஒரு விரலை மடக்கி இரு முறை தட்டினான். வேறு வழியின்றி வெளியே வந்தவள், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு "ஏன் சார் அப்படி பார்க்கிறிங்க?" என்று மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள்."நீ ஏன் எப்பவும் என்னை பார்த்து பயப்படுற?" என்று அவனும் எதிர் கேள்விக் கேட்டான்."உங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு, ஏன்னா நீங்க போலீஸ்ல்ல" என்று அப்பாவியாக முகத்தை வைத்து பதில் அளித்தாள்."நீயும் அதுக்கு தானே இங்க வந்திருக்க... போலீஸ பார்த்து தப்பு பண்றவன் தான் பயப்படுவான் நீ ஏன் பயப்படுற" கூர்மையான விழிகளுடன் அழுத்தமாக அவன் கேட்க, "நானும் தான் தப்பு பண்ண போறேனே! பெரிய தப்பு!" என்று கண்களையும் கைகளையும் பெரிதாக விரித்து கூறினாள்"நீயும் அதுக்கு தானே இங்க

"ஒஹ்! அப்படி என்ன பண்ண போற?" என்று போட்டு வாங்க, அவளோ "அத சொல்லக்கூடாது சீக்ரெட்" என்று ஒரு விரலை தன் உதட்டிற்கு குறுக்காக வைத்துக்கொண்டாள்."பரவாயில்லை என்கிட்ட மட்டும் சொல்லு" என்று போட்டு வாங்கும் வேலையை சிறப்பாக செய்துக் கொண்டிருந்தான் அவன்."நான் சொன்னா நீங்க அந்த நரி மண்டையன்கிட்ட சொல்லிட மாட்டிங்க தானே?""இல்ல நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்" அவளின் கேலி பெயரில் சிரித்துக் கொண்டே சொன்னான்."சத்தியமா" என்று கையை முன்னாள் நீட்டியவளின் கையில் தன் கரத்தினை சேர்த்து உறுதியும் அளித்தான்.
தன் விரல் நீட்டி அவனை முன் வருமாறு அழைத்தவள் அவளே அருகில் சென்று அவன் காதில் ரகசியம் போல் கூறினாள்."என்னை உங்கள கொலை பண்ண அனுப்பி இருக்காங்க" என்று சிதம்பர ரகசியம் போல் கூறியவள் முகத்தை ஒரு நிமிடம் சாதாரணமாக திரும்பி பார்த்தவன், "யாரு? எதுக்கு?" என்று கேள்விகளை அடுக்கினான்."அவனுக்கு உங்கள பழிவாங்கனுமாம். அவனை உங்களுக்கு நல்லா தெரியும். உங்க பேட்ச் தான். அவன் பேரு??" என்று யோசித்துக் கொண்டிருந்தவள், "நல்லவனா! இருந்தா நியாபகத்துல இருக்கும் நன்னாரி பய பேரு கூட சட்டுனு நியாபகம் வர மாட்டேங்குது" என்று நெத்தியை தடவி யோசனை செய்துக் கொண்டிருக்க, "ஜூபீட்டர்" என்று நிரஞ்சன் பதில் அளித்தான்."ஹாங் ஹாங்க் அதே பீட்டர் தான்" என்று உறுதி செய்து கொண்டாள்."சரி அவன் சொன்னா நீ எதுக்கு பண்ணுற""அவன் சொல்றத நான் செய்யலைன என் தங்கச்சிய அவன் கொன்னுடுவான். பாவம் அவ சின்ன பொண்ணு" தங்கையை நினைக்கும் போதே கண்கள் கலங்கி போனது.பிரகதி கூறிய அனைத்தும் அவன் ஏற்கனவே அறிந்தவை தான். அவன் அறிய நினைத்தது பிரகதி எதற்கு இதை செய்ய ஒத்துக்கொண்டாள் என்பதை தான். அதற்கும் பதில் அவனுக்கு கிடைத்துவிட்டது.
அவனோ தன் எதிரியை பற்றிய சிந்தனையை ஒரு நொடி மூளையில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,பிரகதி அப்போது தான் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மிதுனாவை கவனித்தாள்.
"ஏய் மித்து எழுந்திரி. சார் முன்னாடி தூங்கிட்டு இருக்க பாரு. பிறகு இதுக்கும் நாம தண்டனை அனுபவிக்கனும்" என்று அவளை எழுப்ப போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் என்ன செய்வது அவள் முயற்சி எல்லாம் வீணாக தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு நிரஞ்சன் தான் அவளுக்கான ஓய்வு நேரம் என்று பிரகதியை சமாதானம் செய்தான்.

தான் அறிந்துக் கொள்ள நினைத்த


தகவல்களை கேட்டு தெரிந்த பிறகு காதல் கொண்ட மனமோ, 'தான் அவள் எண்ணத்தில் என்னவாக இருக்கிறேன்' என்பதை அறிய விரும்பியது.
அவன் நன்கு அறிவான் காலையில் அவள் அந்த திரவத்தை குடிக்கவில்லை, யார் மூலமாகவோ காப்பாற்றபட்டாள் என்பதை."ஐய்யோ நான் உங்ககிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன். நீங்க இப்போ என்ன ஜெயில்ல போட்டுருவிங்களே! ஆங்..." என்று மூக்கை உறிஞ்சி அழ ஆரம்பித்தவளிடம்,"இல்ல நான் அந்த மாதிரி பண்ண மாட்டேன்" என்று சமாதானமாக கூற,"நிஜமா" என்று கண்களை துடைத்துக் கொண்டே அவள் கேட்க, அவனோ "அதுக்கு நீ நான் சொல்றதை செய்யணும்" என்றான்."என்ன செய்யனும்?" என்று கேட்டவளிடம்,"நான் சொல்ற பையனை கல்யாணம் செய்துக்கணும்" என்று பட்டென்று கூறி விட,
பிரகதியோ "கல்யாணமா?" என்று பெரிதாக வாயை பிளந்தவள் "அதுக்கு நீங்க என்னை ஜெயில்லையே போட்டுருங்க" என்று அவசரமாக மறுத்திருந்தாள்."ஏன்?" என்று புரியாமல் வினாவியவனிடம், " இல்ல நீங்க என் வாழ் நாள் முழுதும் தண்டிக்க பார்க்கிறீங்க. அவன் என்னை அடிச்சு கொடுமை பண்ணுவான். இது தான் உங்க திட்டமா? நான் மாட்டேன்" என்று சிறு பிள்ளை போல் மூக்கை உறிஞ்சி அவள் கூற, பக்கென்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன், "அவன் உன்ன அடிக்கலா மாட்டான் நல்லா பார்த்துக்குவான்" என்று கனிவாக சொன்னான்.பிரகதியோ "என்ன நல்லா பார்த்துக்குவனா? அப்போ சரி, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று வாயெல்லாம் புன்னகையுடன் கூறியவளை பார்த்து சிரித்தவன் சிறு பிள்ளை தனமான பேச்சு வார்த்தை என்றாலும் அதை ரசிக்க தோன்றியது அவனுக்கு.
மேலும் தொடர விரும்பினான். ஆனால் அவளே அதை தொடர்ந்தாள்."அவன் எப்படி இருப்பான்?" மிகுந்த ஆவலில் அவள் கேட்க, அவனோ "என்னை மாதிரி இருப்பானு வச்சுக்கோயேன். நான் எப்படி இருக்கேன்?" என்று ஒரு பிட்டு போட,"நீங்ககக? " என்று அவனை கீழ் இருந்து மேல் ஒரு கண்ணை மட்டும் மூடி திறந்து பார்த்தவளின் பார்வை அந்த ஆறடி ஆண்மகனேயே கூச்சத்தில் எச்சில் விழுங்க செய்தது.ஸ்கேனிங் முடித்தவளோ


"நீங்க செம பிகரு சார். இந்த பொண்ணுங்களாம் உங்க மேல ஏன் இவ்வளவு பைத்தியமா இருக்காங்கனு இப்போ புரியுது. என்னை விட்டா ஆஹ் நாள் முழுதும் கூட உங்கள பார்த்துட்டே இருப்பேன். ஆனா பயத்தோடு உங்கள பார்த்து உங்கள இவ்வளவு நாள் ரசிக்க முடியாம போய்டுச்சே!" என்று வருத்தப் பட்டவள் உடனே குதுகளமாகி "இப்போ கொஞ்ச நேரம் உங்கள சைட் அடிச்சிக்கவா ஆஹ்?" என்று வெகுளியாக கேட்டவளை பார்த்து சிரிப்பு தன் வந்தது நிரஞ்சனுக்கு.சிறிது நேரம் அவனை பார்த்தவள் மிதுனாவின் பக்கம் திரும்பி மிதுனாவிற்கும் அவனை பிடிக்கும் என்றும் அவனை பின் தொடர்வதே அவள் வேலை என்றும் கூடுதல் தகவல் ஒன்றை அவனுக்கு வழங்கினாள்."ஓஹ்!" என்று மட்டும் சொல்லிக் கொண்டவன் இத்தனை நாட்கள் மிதுனாவை தான் கவனிக்காமல் விட்டதை எண்ணியவன், இந்த தகவலையும் மூளையில் ஏற்றிக் கொண்டு மிதுனாவை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு மீண்டும் பிரகதியை கவனிக்க தொடங்கினான்."நீங்க மோனிகா மேடம் ஆஹ் லவ் பண்றீங்களா?" என்று ஆர்வமாக அவள் கேட்க, இது அவனுக்கு புது புரளியாக இருந்தது.
"இல்ல அவங்க என் பிரண்ட். நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன்" என்று நிதானமாக பதில் சொன்னான்.
அவளோ "ஹ, ஹாங்க் இவ்வளவு அழகா இருக்கிற உங்களுக்கு காதலி இல்லாம இருக்குமா? யார் அந்த பொண்ணு" என்று ஆவலாக கேட்டவள், அவன் அதற்கான பதிலை கூறும் முன்பே மருந்தின் வீரியத்துடன் உடல் களைப்பும் சேர்ந்து நித்திரையின் பிடியில் அவள் முன் இருந்த எழுத்து மேஜையில் சரிந்திரிந்தாள்.
 

Sunitha Bharathi

Active member
Wonderland writer
அத்தியாயம் ;2

நிரஞ்சன் பிரகதியை பார்த்த முதல் நாள் அவன் நினைவடுக்கில் காட்சி படமாக ஓடியது...(National Safety and Rescue Force) அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மற்றும் செயல்பாடு நிலையம். அன்று புதியவர்களின் வருகையால் அந்த கட்டிடம் முழுவதும் சீருடைகள் இன்றி வண்ண உடைகளால் நிரம்பி வழிந்தது.அவர்களுக்கான அறிமுக விழா முடிந்த பிறகு அனைவரும் வகுப்பறைக்கு அனுப்பப் பட்டனர்.நிரஞ்சனை அவர்கள் பயிற்சியாளர் என்று அறிமுகபடுத்த அவனும் அவர்களுடன் அறிமுக படலத்தை தொடங்கினான்.அவனது உரையாடலை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். எதர்ச்சயாக அவனின் பார்வை கூட்டத்தில் இருந்த பிரகதியின் மீது பதிய, அவள் சட்டென்று தலையை வேறு பக்கமாக திருப்பி கொண்டதும், அவளது திருட்டு முழியும் அவனுக்கு ஏதோ சந்தேகத்தை ஏற்படுத்தியது.அடுத்து வந்த நாட்களில் அவளின் கிறுக்கு தனமான செயல்களை ரசிக்க ஆரம்பித்தான். அப்போதே அவள் வந்த நோக்கத்தை அவன் கண்டுபிடித்து விட்டான். சில சமயங்களில் அவனை பின் தொடர்ந்து வருபவள் அவன் பார்க்கும் போது தப்பிக்க எண்ணி அவசரமாக திரும்பி சுவரில் முட்டி, கீழே விழுந்து எழுந்து ஓடுபவளை நினைக்கும் போது இன்றும் அவன் இதழ்களில் சிரிப்பை வரவழைத்தது. பல நேரங்களில் அவள் எதற்கு அனுப்பப் பட்டாள் என்பதை மறந்து அவர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடத்தில் கவனம் செலுத்துபவளை அவனும் கவனித்தான்.பழைய நினைவில் இருந்து திரும்பியவன் முன் சிறு பிள்ளை போல் தூங்கிக் கொண்டிருந்தாள் பிரகதி. அவளது தலையை மென்மையாக வருடியவன், அவளது வலது நெற்றி ஓரத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தான். அவனுக்குள் இருந்த திருடன் வெளிவர சுற்றும் முற்றும் பார்த்தவன் கைபேசியில் அவளது பிம்பத்தை பதிவு செய்து கொள்ள, அது ஏற்கனவே இருந்த அவளது எண்ணிலடங்கா புகைப்படங்களுடன் சேர்ந்துக் கொண்டதை உறுதி செய்தவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.நிரஞ்சன் தனது வீட்டிற்குள் நுழைந்த போது அவன் தந்தையின் குரலே அவனை வரவேற்றது."வொய் ஆர் யூ கெட்டிங் லேட் நிரஞ்சன்?" என்று அக்கறையுடன் தான் விசாரித்தார், NSRF இன் தலைமை அதிகாரி ரகுராம். ஆம் அவர் தான் நிரஞ்சனின் தந்தை. தன் காலத்திற்கு பிறகு அவன் இதன் தலைமை அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் ஆசை. அதற்காகவே அவனை தயார் படுத்துகிறார் என்றே சொல்லலாம்."மிஸ்டர் குணால் ஒரு வேலை சொன்னார். அதை முடிக்க தான் இவ்வளவு நேரம் ஆகிடுச்சு" என்று பொறுப்புள்ள மகனாய் பதிலளித்தான். இருவரும் அவர்களது வேலை பற்றி பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.தன் தந்தையின் ஆசையை தனது லட்சியமாக கொண்டவன். அதற்காக முழு முயற்சியும் செய்கிறான். அவன் தந்தையின் பதவியை வைத்து அங்கு அவன் எந்த சலுகையும் எதிர் பார்க்கவில்லை. அவரும் தந்தை மகன் உறவை வீட்டோடு முடித்துக் கொள்வார். அங்கு இருக்கும் அநேக நபர்களுக்கு இவர்களின் உறவு முறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.NSRF இங்கு கண்காணிப்பு, தகவல் தொடர்பு, புலன் விசாரணை, துப்பறிவு, பேரிடர் பாதுகாப்பு, குற்றங்கள் கண்டுபிடித்தல் என்று பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்களின் கல்வி தகுதி மற்றும் திறமைகளின் அடிப்படையில் அவர்களுக்கான வேலை வழங்கப்படுகிறது. அங்கு பயிற்சி முடித்து வேலையில் சேர்வது அவ்வளவு எளிதல்ல.சூரியன் தன் செந்நிற ஒளி கதிர்களை வீசி தான் வந்து விட்டதாக உணர்த்திய காலை பொழுதில், பயிற்சி அரங்கில் தூங்கிக் கொண்டிருந்தவள் முகத்தில் சிறிய ஒளி கற்றை விழுந்து தூக்கத்தை கலைக்க கண்களை சுருக்கி நிமிர்த்தவளுக்கு, அப்போது தான் தெரிந்தது தான் இன்னும் அந்த அரங்கில் தான் இருக்கிறோம் என்று. வேகமாக மிதுனாவை எழுப்பினாள். இருவரும் தங்கள் நினைவடுக்கில் எவ்வளவு தேடியும் அவர்கள் தண்ணீர் குடித்த பிறகு என்ன நடந்தது? என்று நினைவிற்கு வரவில்லை.தாங்கள் இருவரும் அசதியில் இங்கேயே தூங்கி விட்டோம் என்று நம்பி இருவரும் வெளியே வந்த வேளையில் அவர்களின் போதாத காலம் அதே குணாலின் கையில் சிக்கினர்.விடுதி அறைக்கு செல்ல இருந்தவர்களை காலை உடற்பயிற்சி நேரம் என்று மைதானத்திற்கு போகச் சொல்லி கட்டளையிட்டார். அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் கொஞ்சமும் இறங்கவில்லை. இறுதியில் இவர்கள் தான் கழிவறைக்காவது சென்று வருகிறோம் என்று அங்கேயே காலை கடன்களை முடித்து மைதானத்திற்கு சென்றனர்.அங்கே அப்படி தான் எல்லாம் சரியான நேரத்திற்கு நடக்க வேண்டும். யாருக்கும் எந்த தயவு தாட்சண்யமும் கிடையாது.அன்றைய நாளிற்கான வழக்கமான உடற்பயிற்சிகள் அனைத்தையும் மோனிகாவின் மேற்பார்வையில் முடித்து, அந்த பெரிய மைதானத்தை ஒரு முறை சுற்றி வந்தவர்கள் சோர்வாக ஆங்காங்கே நிலத்தில் அமர்ந்திருந்தனர்.கடைநிலை ஊழியர் ஒருவர் வந்து பிரகதியை நிரஞ்சன் அழைப்பதாக கூற "இவர் எதுக்கு இப்போ என்னை கூப்பிடுறார்?" என்று யோசித்தவளுக்கு பயம் சூழ்ந்து கொள்ள, மிதுனாவை தன்னுடன் அழைத்தாள். மிதுனாவும் அதற்கு தான் காத்துக் கொண்டிருந்தாள் போல, அவளுக்கு நிரஞ்சன் பிரகதியை அழைத்த காரணம் தெரிந்தாக வேண்டுமே. அதனால் அவளும் சரி என்று கூறினாள்.ஆனால் நிரஞ்சன் பிரகதியை மட்டும் தனியாக அழைத்து வரும்படி சொன்னதாக கூறியவர் அவளை மட்டும் அழைத்து சென்றார். அவளை அனுப்பி விட்டு மிதுனாவிற்கு இங்கு என்ன வேலை யாரும் அறியா வண்ணம் அவர்களை பின் தொடர்ந்தாள்.பிரகதியை அழைத்து வந்தவர் குற்றவாளிகளை விசாரிக்கும் அறைக்கு வெளியே அவளை விட்டு சென்றார். உள்ளே ஒருவன் அலரும் சத்தம் அவளை கொலை நடுங்க செய்தது. சிறிது நேரத்தில் அதில் இருந்து வெளியே வந்த மூன்று காவலர்களுடன் நிரஞ்சனும் வந்தான். பிரகதியை பார்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கு இருந்த உணவகத்திற்குள் நுழைந்தான்.இரண்டு தேநீர் கோப்பைகளை வாங்கியவன் ஒன்றை அவள் கையில் திணிக்க தன் நடுங்கும் கரத்தால் அதை வாங்கியவளை பார்த்தவனுக்கு அவளின் மன நிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது.தவறு செய்து பழக்கம் இல்லாதவர்கள் முதல் முதலில் ஒரு தவறை செய்யும் போது ஒவ்வொரு நிமிடமும் பயத்தின் பிடியில் சிக்குண்டு இருப்பார்கள். அதிலும் பிரகதியை பொறுத்த மட்டில் சிறு விஷயத்திற்கும் பயப்படுபவள் என்பதால் இது அவளுக்கு நரக வேதனையாக இருந்தது.சில நிமிடங்கள் மெளனமாக கழிய, தன் தேநீரை குடித்து முடித்தவன், இன்னும் ஒரு துளிக் கூட அதை பருகாமல் தன்னையே மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.ஒரு நிமிடம் சுற்றுபுறத்தை ஆராய்ந்தவனின் கண்களில் அவன் எண்ணியது போலவே தூணிற்க்கு பின் ஒளிந்து நின்றாள் மிதுனா.தன் திட்டத்தை செயல்படுத்த எண்ணியவன் பிரகதியை பார்த்து சிநேகமாய் ஒரு புன்னகையை சிந்த, அவளும் கடினபட்டு தன் இதழ்களை பிரித்து சிரிக்க முயன்றாள். பிறகு அவளிடம் அவளது பயிற்சியை பற்றி பொதுவான சில கேள்விகளை கேட்க அவளும் திக்கி திணறி பதிலளித்துக் கொண்டிருந்தாள்."யாரையாவது காதலிக்கிறியா?" என்று அவன் கேட்க, ' இப்போ சம்பந்தம் இல்லாத கேள்வி ?' என்று நினைத்தவள் "" என்று தலையை மட்டும் அசைத்தாள்."அப்போ ஓகே, இனி நாம இரண்டு பேரும் காதலிக்கலாம். ஐ லவ் யூ" என்று அவன் கூறியது தான் தாமதம் பிரகதிக்கு மயக்கமே வந்து விட்டது. கண்களை பெரிதாக விரித்துப் பார்த்தவளுக்கு தலை கிறு கிறுவென சுற்றி, எதிரில் இருப்பவன் முகமோ மங்கலாக தெரிய, அவள் சரிந்து கீழே விழுவதற்கு முன் நிரஞ்சன் தன் மார்பில் அவளை சாய்த்திருந்தான்.பிரகதி கண் விழத்தபோது அவள் அந்த நிலையத்தின் மருத்துவ அறை படுக்கையில் படுத்திருந்தாள். அவள் அருகில் மிதுனா நின்றுக் கொண்டிருந்தாள். நேற்று இரவு சாப்பிடாமல் இருந்தது, இன்று உடற்பயிற்சி, அத்துடன் நிரஞ்சன் அளித்த அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து அவளை மயக்கம் அடைய செய்தது."இப்போ எப்படி இருக்கு பிரகதி?" என்று விசாரித்த மிதுனாவை சோர்வாக பார்த்தவள்,"பரவாயில்லை கொஞ்சம் சோர்வா இருக்கு" என்று பதில் அளித்தாள்."சரி அவ தான் கண் முழிச்சிட்டால்ல, நீ போ அவ கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்" என்ற கறாரான குரல் கேட்டு மிதுனாவின் பின் தன் பார்வையை பதித்தவள் அங்கு கதிரையில் அமர்ந்திருந்த நிரஞ்சனை அப்போது தான் பார்த்தாள்.மிதுனா ஒரு முறை பிரகதியை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேற, அவள் செல்லும் வரை பொறுத்தவன், அவள் சென்று விட்டாள் என்று உறுதி செய்து கொண்டு, பிரகதிக்கு அருகில் வந்தவன்.
"நான் என்ன அந்த அளவுக்கு மோசமாகவா இருக்கேன்? காதலை சொன்னதும் இப்படி மயங்கி விழுந்துட்ட?" என்று உதட்டில் புன்னகையோடு கேலியாக கேட்க.
அவளோ "அது வந்து சார்..." என்று எதோ சமாளிக்க வார்த்தைகளை தேட, மேலும் அவளை தொந்தரவு செய்ய விரும்பாது "நாளைக்கு பேசிக்கலாம் நீ ரெஸ்ட் எடு" என்று கூறியவன் அங்கிருந்து சென்றான்.மிதுனா அவளது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள். பிரகதியை பின்தொடர்ந்து சென்றவள் சற்று தொலைவில் நின்றிருந்ததால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது கேட்காமலே போய் விட்டது.
அவளுக்கு இப்போது அது தெரிந்தே ஆக வேண்டும். " பிரகதியை தனியாக சந்தித்து என்ன பேசி இருப்பார். ஒரு வேளை அவள் மீது எதாவது சந்தேகம் வந்து இருக்குமா?" என்று பலவாறாக சிந்தித்து குழம்பி கொண்டிருந்தாள்.
அவள் குழப்பத்திற்கு பதில் பிரகதியிடம் மட்டுமே இருந்தது.அன்று மதியம் பிரகதி அவளது விடுதி அறைக்கு அனுப்பப்பட்டாள். அங்கு இருந்த அறைகளில் எல்லாம் இரண்டு இரண்டு மாணவர்களாக தங்கி இருந்தனர். பிரகதியும் மிதுனாவும் ஒரே அறை என்பது தான் இருவரும் நல்ல நண்பர்களாக காரணம் என்று நம்பி கொண்டிருந்தாள் பிரகதி.
அவள் மன வேதனையை புரிந்து கொண்ட ஒரு நல்ல தோழியாக தான் மிதுனாவை பார்த்தாள். அதனால் பிரகதி மிதுனாவிடம் எதையும் மறைத்ததில்லை. தான் எந்த ஒரு கட்டாயத்தின் பேரில் இங்கு அனுப்பி வைக்கபட்டேன் என்பது எல்லாம் அவளிடம் கூறியிருக்கிறாள்.
மிதுனாவும் கூட அவள் மீது பரிதாப பட்டு அவளுக்கு உதவி செய்வது போல் காட்டிக் கொண்டாள்.அறைக்குள் நுழைந்தவளின் எண்ணங்கள் முழுவதும் இன்று நிரஞ்சன் கூறிய வார்த்தைகளே நிறைந்திருந்தது.
தான் அவரை கொல்வதற்கு அனுப்ப பட்டவள் என்பதை அறியாது அவன் தன் மீது காதல் கொண்டுள்ளது சரியில்லை என்று மனம் வேதனையில் உழன்றுக் கொண்டிருந்தது.மாலை வேளையில் தான் மிதுனா வகுப்புகள் மற்றும் பயிற்சிகளை முடித்து அறைக்கு வந்தாள். அங்கு பிரகதியை கண்டவள் தன் குழப்பத்திற்கு விடையை அவளிடம் கேட்க, பிரகதியும் எப்போதும் போல் அவளிடம் அனைத்தையும் ஒப்புவித்தாள்.மேலும் தற்போதைய தன் மன வேதனையையும் அவளிடம் பகிர்ந்துக் கொண்டாள். பிரகதிக்கு சாதகமாக பேசி அவளை சமாதானம் செய்ய முற்பட்டவள் மனதில் நிரஞ்சன் அவளை காதலிப்பதாக கூறியதை வைத்து தங்களது திட்டத்திற்கு ஏதுவாக காய் நகர்த்த முடிவு செய்தாள்.மிதுனா அன்றைய இரவு உணவை முடித்து விட்டு இன்றைய நிகழ்வுகளை எல்லாம் கைபேசி மூலம் ஜூபீட்டருக்கு தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சன் பிரகதியை காதலிப்பது எலி தானாக வந்து பொறியில் மாட்டிக் கொண்டது போன்று இருந்தது ஜூபீட்க்கு. அவனை நெருங்க அவனே வழிவகுத்து கொடுத்தான். அதை வைத்து இவர்கள் திட்டம் தீட்டினர்.மிதுனா அவர்களது அறைக்கு வந்த போது கண்களில் கோபத்துடன் இயலாமையிள் நின்றுக் கொண்டிருந்த பிரகதியை தான் கண்டால்."என்னாச்சு பிரகதி?" என்று பொய்யான அக்கறையுடன் விசாரிக்க, "இங்க இவ்வளவு போலீஸ் இருந்து என்ன பிரயோஜனம் அவர்களுக்குள்ள இருக்கிற நம்பிக்கை துரோகிகள கண்டுபிடிக்க முடியலையே!" என்று வேதனையாக சொன்னவளை, "யாரை சொல்கிறா?" என்று சந்தேக பார்வைப் பார்த்துக் கொண்டிருந்த மிதுனாவை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் தன் பார்வையை வேறு புறம் திருப்பி "அதுக்குள்ள யார் சொன்னானு தெரியல, அந்த கழுவாத மூஞ்சி போன் பண்ணினான்" என்று எரிச்சலுடன் கூறினாள்."அது தானே பார்த்தேன். இவளுக்கு மூளை வேலை செய்திருந்த தான் எப்போவோ என்னை கண்டுபிடிச்சு இருப்பாளே!" என்று நக்கல் சிரிப்பு சிரித்தவள் அவள் பார்க்கும் போது சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்."போன் பண்ணி என்ன சொன்னான்?" என்று எதுவும் தெரியாதது போல் கேட்க, அவர்கள் கபட நாடகம் அறியா பிராகதியோ,"நிரஞ்சன் சாரை நான் காதலிக்கிறது போல நடிக்கணுமாம்" என்று சலிப்பாக கூறியவள் "என்னால் இத கண்டிப்பா செய்ய முடியாது மித்து. காதல்ங்கிற பெயர சொல்லி என்னால அவரை ஏமாற்ற முடியாது. அவர் மனச கொல்றது பெரிய பாவம் அதை என்னால ஒரு போதும் செய்ய முடியாது" மெய் வருத்தத்துடன் அவள் கூற,மிதுனாவோ


"இப்படி சொன்னா எப்படி பிரகதி? இத நீ செய்தா நிரஞ்சன் சாரையை எளிதா நெருங்கி உன் காரியத்த முடிச்சிடலாம்." என்று அவளுக்கு நினைவூட்டினாள்."இல்ல மித்து நான் ஏற்கனவே செய்ய போகிற காரியத்த நினச்சு தினம் தினம் செத்துட்டு இருக்கேன். இதுல இத என்னால் நிச்சயமா பண்ண முடியாது" என்று அவர்கள் திட்டத்தில் மண்ணை அள்ளி போடுபவளை என்ன கூறி சம்மதிக்க வைக்க வேண்டும் என்பது மிதுனாவுக்கு நன்கு தெரியுமே."பிரகதி இதெல்லாம் நீ யாருக்காக பண்ற? நம்ம தங்கச்சிக்காக தானே. அவன் சொல்றத நீ செய்யலனா, அவன் நம்ம தங்கச்சிய எதாவது செய்துட போறான்" என்று அவள் பயத்தை தூண்டி அவளை சம்மதிக்க வைத்தாள்.பிரகதியோ, மிதுனா தன் தங்கையை நம் தங்கை என்று பாசம் காட்டுகிறளே! என்று நம்பி அவள் வலையில் விழுந்தாள்."ஆனால் எப்படி மித்து அவரை பார்த்தாலே என் உடம்பெல்லாம் நடுங்குதே" என்று அவன் நினைப்பில் கை கால்கள் நடுக்கம் கொடுக்க பயத்துடன் கூறினாள் பிரகதி."இந்த பயத்தை முதல்ல தூக்கி போடு. அவர் கண்ணை பார்த்து பொய் சொல்ல கத்துக்கோ" என்று உற்சாகமாக அவளுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்திருந்தாள்.பிரகதியோ "நானும் உங்கள காதலிக்கிறேன்" என்று மிதுனாவிடம் சொல்வதற்கே கன கஷ்டப்பட்டால். ஒருவழியாக அவளுக்கு மூளை சலவை செய்து அவள் வழிக்கு கொண்டு வந்த மிதுனா, தங்கள் திட்ட படி பிராகதியின் கைபேசியில் இருந்து நிரஞ்சனுக்கு அழைத்து கைபேசியை பிரகதி கையில் திணித்து விட்டு, அவள் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தாள்.கைபேசியின் அழைப்பு போகும் சத்தம் பிரகதியின் இதயம் அவளை விட்டு வெளியே வந்து துடிப்பது போல் கேட்டது அவளுக்கு."ஹலோ" என்ற வார்த்தை மறு முனையில் கேட்டதும் கைபேசியை பதட்டத்தில் நழுவ விட்டிருக்க, நல்ல வேளையாக அதை மிதுனாவின் கை தாங்கி பிடித்ததால் அதன் ஆயுள் நீண்டது. மறுபடியும் அதை பிரகதியின் கையில் திணித்து "பேசு" என்று செய்கை செய்தாள்.பிரகதியும் உள்ளே சென்று விட்ட குரலில் "ஹலோ" என்றாள். அவளின் குரலை வைத்தே அது பிரகதி தான் என்பதை அறிந்து கொண்டவன் "என்ன ஆச்சரியம் அதுக்குள்ள போன் பண்ணிட்ட." என்றான்."அது..." என்று அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க அவனே அவளுக்கு எடுத்துக் கொடுத்தான் "என்ன என் நியாபகம் வந்துருச்சா?" என்று கேட்டவனிடம்,"ஆமா சொல்லு"என்று பக்கத்தில் இருந்து மிதுனா அவளை சொல்ல சொல்வதை இவனால் நன்கு உணர முடிந்தது.பிரகதி "ம்" என்று மட்டும் கூற, அவனோ "சரி எதுக்கு போன் பண்ண?" என்று கேட்க, மிதுனா அவளை நச்சரிக்க, ஒரு வழியாக சொல்லிவிட்டாள் "நானும் உங்களை காதலிக்கிறேன்" என்று. அதை கூறிய அடுத்த நொடி அந்த கைபேசி தொடர்பு துண்டிக்கப் பட்டு அங்கிருந்த பஞ்சு படுக்கையில் விழுந்தது."ஏய் ஏன் கட் பண்ண?" என்று கோபமாக கேட்ட மிதுனாவிடம், தாறு மாறாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தில் கை வைத்த படி "இல்ல இதுக்கு மேல பேசுனா நானே எதாவது சொல்லி மாட்டிப்பேன்" என்றாள் பாவமாக.


அதுவும் சரி தான்' என்று நினைத்து கொண்டாள் மிதுனா.


நிரஞ்சன் தன் எண்ண படி கயவர்களின் கை பாவையாக பிரகதி ஆட்டுவிக்க படுவதை நினைத்து தந்திர புன்னகையுடன் தன் அடுத்த திட்டத்தை வகுக்க, இங்கே மிதுனா தான் அவன் காதலிக்கு காதலிப்பது எப்படி? என்று சொல்லிக் கொடுக்க திண்டாடிக் கொண்டிருந்தாள்.
 

Sunitha Bharathi

Active member
Wonderland writer
அத்தியாயம் : 3அன்றைய விடியல் புத்துணர்வு நிரம்பியதாக இருந்தது நிரஞ்சனுக்கு. ஆனால் மிதுனா தான் பாவம் அவன் காதலிக்கு காதல் பாடம் கற்றுக் கொடுத்து சோர்ந்து போனாள். அதனால் தாமதமாக எழுந்தவள் அவசர அவசரமாக கிளம்பி மைதானத்திற்கு வந்துக் கொண்டிருந்தாள்.அங்கு நிரஞ்சன் சாலினியுடன் பேசிக் கொண்டிருந்தான். (சாலினி, நிரஞ்சனை காதலிப்பதாக கூறிய பெண்) நிரஞ்சன் அவள் தன் மீது கொண்டுள்ள காதல் சரியல்ல என்று அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான். அவன் எவ்வளவு கூறியும் அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை.இறுதியில் வேறு வழியின்றி தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாக அவன் கூறியதையும் நம்பாதவள் அந்த பெண் யாரென்று கேட்க, அவனும் அவளிடம் மறைக்க விரும்பாமல் பிரகதியின் பெயரைக் கூறினான்.அதை கேட்டவளின் முகம் அதிர்ச்சியோடு சேர்த்து கவலையையும் அப்பி கொள்ள, எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருப்பவளின் முகம் நொடியில் கலங்கியதை பார்த்தவன் அவளுக்கு துணையாக நல்ல நண்பனாக காலம் முழுவதும் தான் இருப்பேன் என்று வாக்களித்து சமாதானம் செய்தான். அவளை இயல்புக்கு திருப்பும் பொருட்டு சிறிது நேரம் அவளுடன் பேசி அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.முழுவதும் அன்றி இருவரும் சிரித்து பேசுவதை மட்டும் பார்த்த மிதுனாவின் மூளையோ 'இருவரும் தனியாக நின்று பேசும் அளவிற்கு என்ன தொடர்பு இருக்கும்?' என்று பலவாறாக யோசித்தவள் நிரஞ்சன் சென்றதும் அதை பற்றி சாலினியிடமே கேட்க "நானும் அவரும் பெர்சனலா பேசிட்டு இருந்தோம். அதை உன்கிட்ட சொல்ற அளவுக்கு நீ எனக்கு நெருக்கம் இல்லை" என்று முகத்தில் அடித்தார் போல் பேசி சென்றவளால் நிரஞ்சன் மீது கொண்ட வஞ்சம் பன் மடங்கானது மிதுனாவிற்கு.அதை பற்றி யோசித்து கொண்டே இருவரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு வந்தவளை எதிர்க் கொண்டாள் பிரகதி. அவள் முகம் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை பார்த்து அவளிடம் என்னவென்று விசாரிக்க, மிதுனாவோ "அந்த சாலினியும் உன் ஆளும் தனியா நின்னு பேசிட்டு இருந்தாங்க" என்றதும் 'என் ஆளா? யாரை சொல்றா?" என்று வாயை பிளந்து யோசித்தவளை சிறிதும் கவனிக்காமல் மிதுனா தொடர்ந்தாள்."அந்த சாலினி தான் அவர காதலிக்கிறானு தெரியும் தானே, அப்புறம் எதுக்கு அவ கூட நின்னு தனியா பேசணும்" என்றதும் தான் பிரகதிக்கு புரிந்தது 'ஓ... நிரஞ்சன் சாரை பற்றி கூறுகிறாளா? திடீரென அவதரித்த என் காதலன் ' என்று சலித்துக் கொண்டு அவள் கூறுவதை கேட்க தொடங்கினாள்."அந்த நிரஞ்சன் நல்லவனே கிடையாது. நேற்று உன்னை காதலிப்பதாக கூறியவன் இன்று வேறொரு பொண்ண தொட்டுத் தொட்டு பேசிட்டு இருக்கான். பொறுக்கி ராஸ்கல்" என்று வாய் விட்டே அவள் திட்டுவது தாங்க மாட்டாமல் "ஏன் இவ்வளவு மோசமா திட்டுற அவர் ரொம்ப நல்லவர்பா" என்று தன் மனதின் எண்ணத்தை மறைக்காமல் அவனுக்காக பரிந்து பேசியவளை ஒரு கணம் ஆழப் பார்வை பார்த்தவள், அவள் நிரஞ்சன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முதலில் தகர்த்தெறிய வேண்டும் என்று எண்ணினாள்.
"அவ்வளவு நல்லவரா இருந்தா? அத்தனை பேர் முன்னுக்கு காதலிப்பதா சொன்ன பொண்ணுக்கிட்ட தனியா பேச என்ன இருக்கு?" என்று அவனை குறை சொல்லும் கேள்வி ஒன்றை கேட்க, பிரகதியோ "அவங்க இரண்டு பேரும் அஃப்ஷியலா கூட பேசி இருக்கலாம் இல்லையா?" என்று அப்போதும் அவனை விட்டு கொடுக்க மனம் வராமல் எதிர் கேள்வி கேட்டாள்."அவன் அந்த அளவுக்கு நல்லவனெல்லாம் கிடையாது. நான் சாலினிகிட்ட கேட்ட போது, அவ தான் தெளிவா சொன்னாலே 'நாங்க பெர்சனல் விசயம் தான் பேசினோம் அதை உன்கிட்ட கூற முடியாது'னு சொல்றா, இதுல இருந்தே நல்லாத் தெரியுதே அவன் யோக்கியம். அவள போல உன்னையும் மடக்கி விட்ட மிதப்பில திரிகிறான். அவனை நல்லவன்னு இன்னும் நம்பிட்டு இருக்காதே. இத போல எத்தனை பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி இருக்கிறானோ? யாருக்கு தெரியும். அவனை கொன்றால் கூட பாவமில்லை. அதனால அவனை கொல்றதில எந்த தவறும் இல்ல. பல பெண்களின் வாழ்க்கை காப்பாற்றபடும்" என்று இன்னும் பல வார்த்தைகளை கோர்த்து பிரகதி மனதில் அவன் பெண் இனத்தை அழிக்க வந்த ராட்சசன் என்னும் அளவிற்கு ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி எட்டுக் கட்டு கூறினாள் மிதுனா.முதலில் அவள் கூறுவதை ஏற்க மறுத்த பிரகதியின் மனது அவள் சேர்த்து கூறிய பல பொய்களை நம்பி அவன் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து 'அவள் கூறுவது சரி தானோ? அவனை கொல்வதில் தவறில்லையோ?' என்று குழம்ப ஆரம்பித்தாள். தான் ஆரம்பித்த பேச்சு வார்த்தை வீண் போகவில்லை என்ற சந்தோசத்தில் மிதுனா முன்னால் செல்ல, குழம்பிய மனதுடன் பிரகதி அவளை பின் தொடர்ந்தாள்.வகுப்பறைக்குள் அவள் அமர்ந்திருந்தாலும் அவள் மனம் தெளிவில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. நிரஞ்சன் உள்ளே நுழைந்ததும் மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நிற்க, அதனை சிறு புன்னகையுடன் ஏற்றவன் அனைவரையும் அமரும் படி கூறி வழமை போல் தன் வகுப்பை தொடங்கினான்.
அதுவரை குழப்பத்தில் இருந்தவள் அவன் சிறு புன்னகையில் எல்லாவற்றையும் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ தன் கடைவிழி பார்வையை கூட இன்று அவள் புறம் திருப்பவில்லை. 'நேற்று தன்னை காதலிப்பதாக கூறியது கனவா?' என அவளை சிந்திக்க வைத்தது அவனின் செயல்."இன்றைக்கு நாம் பார்க்க போகும் பாடம் ஹுமன் அனாலிசிஸ்" என்று அங்கு இருந்த பச்சை நிற சுவர் பலகையில் எழுதியதும் அங்கிருந்த மாணவர்களில் ஒருவன் "ஹுமான் அனாலிசிஸ்ஸா? அப்படினா என்ன சார்?" என்று கேட்க, அதை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது தானே அவன் வேலை. அவனும் அதற்கான விளக்கத்தை கூற தொடங்கினான்."நீங்க எல்லாரும் மக்களை காப்பாற்றும் ஒரு பெரிய பொறுப்பை கையில் எடுத்து இருக்கீங்க. அதை நல்ல படியா செய்வதற்கு மற்றவர்களை துல்லியமாக எடை போட பழகிக் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்க மூளை வேலை செய்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு இடத்திற்கு சென்றால், நீங்க எதற்கு சென்றீற்களோ அதை மட்டுமின்றி அங்க இருக்கும் ஒவ்வொரு நபர் மற்றும் பொருளின் மீதும் பார்வையை செலுத்தி அதை கவனிக்க வேண்டும். யாராவது உங்க கவனத்தை ஈர்த்தால் முதலில் அவர்களை சந்தேகப்படுங்க. அவர்களை உன்னிப்பாக கவனித்து அவர்களை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அதே போல அந்த இடத்திற்கு சம்பந்தமின்றி எதாவது அங்கு இருப்பது போல் உங்களுக்கு தோன்றினாலும் அதை ஆராய மறவாதீர்கள்.குற்றவாளி அந்த காலத்து படங்கள்ல வருகிற மாதிரி மரு வச்சிட்டு கைலி கட்டிட்டு வரமாட்டான், ரெம்ப நாகரீகமாக தான் இருப்பான்." என்று அவன் கூறியதும்,
"இப்போ உள்ள சினிமாவில கூட அதை ஓரங்கட்டிடங்க சார். இப்போல்லாம் ஹீரோவை விட வில்லன் தான் அழகா இருக்கிறான்" என்று ஒரு மாணவியின் குரல் ஒலித்தது.
அதை ஆமோதிக்கும் விதமாக சிறிய புன்னகையை சிந்தியவன் "அதனால் தான் சொல்றேன் நீங்க எல்லாரும் ரொம்ப கவனமா செயல்படனும். புறத் தோற்றத்தை வைத்து ஏமாந்து விட கூடாது" என்று அவன் யாருக்கு இதை புரிய வைக்க நினைத்தானோ, அவள் புரிந்துக் கொண்டது போல் முகத்தை வைத்திருந்தாலும் அவளுடன் இருக்கும் நய வஞ்சகியை அவள் கண்டுக் கொள்ளவில்லை என்பதே உண்மை."அப்படினா அழகான பொண்ணுங்க எல்லாம் ஆபத்தானவங்கனு சொல்றீங்களா சார்?" என்று கேலியாக கேட்டான் தீபக்.
அதற்கும் மென்மையாக புன்னகைத்தவறே பதில் அளித்தான்."எல்லாரையும் அப்படி சொல்லிட முடியாது. நம் கூட்டத்திற்குள் இருக்கும் குள்ள நரியை அடையாளம் காண தவறி விடக்கூடாதுனு தான் சொல்றேன்" என்றவன் அதை செயல் முறை பாடமாக விளக்கம் அளிக்கிறேன் என்று கூறி "ஒரு அழகான பொண்ணு வேண்டுமே யாரைக் கூப்பிடலாம்" என்று மாணவிகளின் வரிசையில் கை நீட்டி தேடுவது போல் பாவனை செய்தவன் பிரகதியின் முன் தனது கையை நிறுத்தினான்.அவ்வளவு தான் பிரகதிக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. 'எல்லோர் முன்னாடியும் எதாவது கூறி விடுவானோ?' என்று விழித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ அவளின் மருண்ட விழிகளை பார்த்து மனதிற்குள் சிரித்தவன் அவள் பின் அமர்ந்திருந்த சாலினியை அழைத்தான்.
அவனின் போதாத காலம் மிதுனா 'தான் கூறியது உண்மை தான் நீயே பார்த்துக் கொள்' என்பது போல் பிரகதியை பார்க்க, அவனுக்காக பரிந்து பேசிய தன் மனதை நினைத்து தானே நொந்து கொண்டாள் பிரகதி.நிரஞ்சன், மேலும் சில நபர்கள் வேண்டும் என்று தீபக், மிதுனா மற்றும் பிரகதி மூவரையும் அழைத்தான். அவன் அழைத்த நால்வரும் அவன் அருகில் சென்று நின்றனர். சாலினியின் காதில் ஏதோ கூறியவன் பின்பு மற்ற மூவர் புறம் திரும்பி, மிதுனா ஒரு மதிப்பிற்குரிய நபர் என்றும் அவளை பாதுகாக்கும் பொறுப்பை தீபக் மற்றும் பிரகதியிடம் ஒப்படைத்தான்.
அவர்களை அறையின் வாசல் அருகில் இருந்து உள் வருமாறு கூறியவன் சாலினியை அவர்களுக்கு எதிர் திசையில் இருந்து வருமாறு கூறினான்.தீபக் சாலினியை பார்த்துக் கொண்டே வர, பிரகதி சாலினியை மட்டுமின்றி நிரஞ்சன் மீதும் தன் பார்வையை பதித்திருந்தாள். இருவருக்கும் இடையில் மிதுனாவை அழைத்து வந்தனர். சாலினி அவர்களை கடந்து செல்லும் போது நிரஞ்சன் கண் ஜாடை காட்ட பிரகதி அவளை திரும்பி பார்க்க, தீபக் விழிகளும் அவள் மீதே பதிந்திருந்த சமயம், இருவரும் மிதுனாவின் "ஆஆஆ" என்ற அலறல் சத்தத்தில் திரும்பிய போது அவளோ நிலத்தில் விழுந்து கிடந்தாள்.தீபக் பிரகதி மட்டுமன்றி அனைவரின் கவனமும் சாலினி மீதே இருந்ததால் அங்கு என்ன நடந்தது? என்பதை ஊகிக்கவே சில நிமிடங்கள் எடுத்தது.நிரஞ்சன் தான் அவளை கீழே விழ செய்திருந்தான். அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டவன் யாரும் அறியா வண்ணம் பிரகதியைப் பார்த்து குறும்பாக கண் சிமிட்டிடவும் மறக்கவில்லை. விழி விரித்து ஆவென பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டுக் கொள்ளாமல் தன் பாடத்தை துவங்கினான்."நீங்க ரெம்பா கவனமாக இருக்கணும். ஆபத்து எப்படி வேண்டுமானாலும் வரலாம்." என்றவன் தங்களுக்கு பொறுப்பானவரைக் எப்படி காப்பது என்று விளக்கும் விதமாக தீபக், சாலினி மற்றும் மிதுனாவை எதிரில் வர கூறியவன் பிரகதியுடன் அவர்களை எதிர்க் கொண்டான்.அவர்கள் மூவரும் தங்களை கடக்கும் போது பிரகதியின் தோளோடு அவன் கையை பட்டும் படாமலும் வளைத்து காத்தான். நிரஞ்சன் தன்னை கீழே தள்ளியதில் ஆத்திரமுற்றிருந்த மிதுனா, பின் இருந்து பிரகதியை தாக்க முற்பட லாவகமாக ஒரு கைக் கொண்டு தடுத்தவன் 'நான் இருக்கும் போது அவளுக்கு எதுவும் நேர விட மாட்டேன்' என்பது போல் அவளை பார்த்து சிறியதாக இதழ் விரித்தவன், "இப்படி தான் ஏஎல்லா பக்கமும் கவனம் இருக்கணும்" என்று மற்றவர்கள் புறம் திரும்பி சொன்னவன், செயல் முறை விளக்கத்தை முடித்து, மற்றைய பாடத்தை தொடர்ந்தான்.வகுப்பு முடிந்து அனைவரும் வெளியேறும் வரை காத்திருந்தவன் பிரகதியிடம் மாலை வெளியே செல்லலாம் என அழைக்க, அவளோ "இல்ல நான் எங்கேயும் வர மாட்டேன்" என்று அவசரமாக மறுத்தவளை எப்படி தன்னுடன் அழைத்துச் செல்வது என்று அவன் அறிவானே. பக்கத்தில் நின்றிருந்த மிதுனாவை பார்க்க அவளோ 'இவ ஒருத்தி கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் கெடுத்து விடுவா ' என்று கறுவியவள் நிறஞ்சனிடம் "அவ வருவா, நீங்க போங்க சார்" என்று போலி புன்னகையுடன் சொல்ல, "இல்ல இல்ல... நான் வர மாட்டேன்" என்று அவள் கூறியதை இருவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.அடுத்த பயிற்சிக்கு நேரம் ஆனதால் அப்போதைக்கு அதை விடுத்து பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சென்று விட்டனர்.மாலை மிதுனா பிரகதியை நிரஞ்சனுடன் அனுப்பி வைப்பதற்கு ஒரு போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள். "காலையில் நீ தானே சொன்ன அவன் சரியான பொறுக்கினு, இப்போ அவன் கூடவே என்னை போக சொல்ற, அவன் என்கிட்ட ஏதாவது தப்பா நடந்துக்கிட்டா? நான் போக மாட்டேன்" என்று சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவளை ஓங்கி ஒரு அறை விடலாம் போல் இருந்தது மிதுனாவிற்க்கு. பிறகு "அவனை தாக்க இது ஒரு அரிய வாய்ப்பு அதை நழுவ விட்டு விடாதே. இதை முடித்து விட்டால் பிறகு நீ நிம்மதியாக இருக்கலாம்" என்று ஏதேதோ சொல்லி கஷ்ட பட்டு அவளை சம்மதிக்க வைத்தாள்.இந்த முட்டாள் பிரகதியும் அவனை தாக்கி விட்டு தாம் எப்படி தப்பிக்க முடியும் என்று எதையும் யோசிக்காமல் அவள் கூறுவதை வேத வாக்காக கேட்டுக் கொண்டிருந்தாள்.பிரகதிக்கு அழகாக ஒப்பனை செய்து விட்டவள், "அவன் சாப்பிடும் எதாவது ஒன்றில் இதை கலந்துக் கொடு" என்று கூறி விஷ தன்மையுள்ள ஒரு பொடியையும் அவளிடம் கொடுத்தாள்.நிரஞ்சன் அவன் கூறிய நேரத்திற்கு சரியாக அவர்கள் விடுதி கட்டிடத்தின் முன் நின்று அவளுக்கு அழைப்பு விடுத்தான். மிதுனாவும் சில பல அறிவுரைகளை கூறி அவளை அனுப்பி வைத்தாள்.
 

Sunitha Bharathi

Active member
Wonderland writer
அத்தியாயம் :4கருப்பு நிற சட்டையும், அதே கருப்பு நிறத்தில் கார்சட்டையும் அணிந்து மிதமான ஒப்பணையுடன் அவள் படிகளில் இறங்கி வர வெண்ணிற நிலவொன்று கார் மேகதினூடே மிதந்து வருவது போல் இருந்தது. அவள் மீதிருந்து தன் பார்வையை திருப்ப முடியவில்லை நிரஞ்சனால்.வெள்ளை நிற டீ- சர்டும் அதே நிறத்தில் பேண்டும் அணிந்து கண்களில் கூலர்சுடன் காரில் ஒரு காலை மடக்கி சிறிய புன்னகையுடன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பவனை பார்த்த பிரகதியோ சிறிது நேரத்திற்கு முன் மிதுனா கூறிய அறிவுரைகள் அனைத்தையும் மறந்தே போனாள்.அவள் அருகில் வந்ததும் சுயவுணர்வு பெற்று அவளுக்காக கார் கதவை திறந்து விட்டவன் அவள் ஏறியதும் அதனை சாற்றி விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இயக்கத் தொடங்கினான். அவர்கள் அந்த நிலையத்தின் கட்டிடத்தில் இருந்து வெளியேறிய சில நிமடங்களில் அவர்களை பின் தொடர்ந்து ஒரு கார் வந்துக் கொண்டிருப்பது அவன் கவனத்தில் பதிந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாது இயல்பாகவே இருந்தான்.

கார் மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருக்க ஒலி பெருக்கியை ஓடவிட்டான். அதுவோ,

நீ பார்த்த விழிகள
நீ பார்த்த நொடிகள
கேட்டாலும் வருமா?
கேட்காத வரமா!
இது போதுமா?

என்ற பாடல் இசைக்க, அதனுடன் இணைந்து மென்மையாக ஒலித்த நிரஞ்சனின் குரலே கூறியது அவன் மனதில் அவள் மீதிருக்கும் காதலை.

அவளும் அதை உணராமல் இல்லை. ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லை என்பதே அவளை பாடாய் படுத்தியது. மேலும் மிதுனா அவனை பற்றி கூறிய தவறான கருத்துகளும் அவளை அரித்துக் கொண்டிருந்தது.தான் மட்டும் இப்படி ஒரு கட்டாயத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தால், மிதுனா அவ்வாறு கூறாமல் இருந்திருந்தால், இந்நேரம் அவன் கை கோர்த்து அவன் தோள் சாய்ந்து தான் மேற்கொள்ளும் பயணம் எவ்வளவு இனிமையானதாக அமைந்திருக்கும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் மெல்லிய கை விரல்களில் தன் வலிய கரத்தின் விரல்களை பொருத்தி இருந்தான்.அதில் அவள் மனம் நெகிழ்ந்தாலும் அதை அனுபவிக்க, தான் தகுதியானவள் இல்லை என்ற நினைப்பே அவளை கொன்றது.சிறிது நேரத்தில் வண்டி நின்றதும் தன் சிந்தனைகளை புறம் தள்ளியவள் கார் கதவை அவன் திறக்க கீழே இறங்கினாள்.அப்போது தான் அந்த இடத்தை பார்த்தாள். அது ஒரு பொருட்காட்சியகம். வாசலில் அனைவரையும் வரவேற்க ஒரு சில கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் உடை அணிந்து சிலர் சிறு குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க, இரு புறமும் இராட்சத பலூன்கள் வானுயர உயர்ந்து நின்றது.அதை அடுத்து மனித குலம் எவ்வாறு தோன்றி இருக்கும் என்று விளக்கும் பொருட்டு சில உருவங்கள் உருவாக்க பட்டிருந்தது.அதை தாண்டி உள்ளே வருபவர்களை ஆதிக் காலத்திற்கு கொண்டு செல்லும் முனைப்பில் உருவாக்க பட்டிருந்த உருவ பொம்மைகளும் விலங்குகளும் பார்ப்போரை இலகுவாக கவர்ந்தது. ஆதி மனிதன் வேல் கொண்டு மிருகங்களை வேட்டையாடுவது, நெருப்பை பற்ற வைத்து அதில் குளிர் காய்வது என சில உவமைகள் இடம் பெற்றிருந்தது.ஆதி கால மனிதன் முதல் தற்போதைய பரினாம வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி, நாகரீக மாற்றம் முதலியனவும் இடம் பெற்றிருந்தது.இவை எல்லாவற்றையும் கடந்து வந்தவர்கள் அதில் ஒரு பகுதியாக அமைந்திருந்த புத்தக கண்காட்சி அறைக்குள் நுழைந்து அங்குள்ள புத்தகங்களை பார்வை இட்டனர்.அது எதிலும் அவள் மனம் முழுமையாக ஈடுபடவில்லை என்பது அவன் அறிந்திருந்தாலும் காரணம் அறிந்துக் கொண்டே அவளை கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை, மாறாக அந்த சூழ்நிலை அவள் மனதை மாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தான்.அவன் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அதுவரை அவள் கை பிடித்து வலம் வந்தவன், அவள் கரத்தினை விடுத்து தனக்கு உபயோகப்படும் ஏதேனும் புத்தகம் இருக்குமா? என்று அறிவியல் பிரிவில் நின்று பார்க்க, தன் அருகில் நின்றிருந்தவளை காணாமல் ஒரு நொடி பதறினான்.அவளை விழிகள் தேட, அவளோ ஃபெயிரி டைல் புத்தக வரிசையில் நின்று கொண்டு எதையோ ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள்.அதை பார்த்தவனுக்கு தான் காதலிப்பது ஒரு குமரியை தானா? என்ற சந்தேகமே வந்துவிட்டது. பல குழந்தைகளின் நடுவில் கொஞ்சம் வளர்ந்த குழந்தையாகவே அவள் தெரிந்தாள். இவளை அனுப்பி தன்னை கொலை செய்ய திட்டம் போட்ட ஜுபீட்டர் தன்னை அவ்வளவு பலவீனமாக நினைத்து விட்டானா? என்று அவனால் எண்ணாமலும் இருக்க முடியவில்லை.சிறிய புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து தன் வேலையை பார்க்க சென்று விட்டான். சில நிமிடங்களில் அவள் வந்துவிட "போகலாமா?" என்று கேட்டவன் "நீ எதுவும் வாங்கலையா? தீவிரமா படிச்சுட்டு இருந்தியே?" என்று கேட்கபிரகதியோ "அங்க இருக்கிற எல்லா புக்ஸ்ம் நான் படிச்சி முடிச்சிடேன், சும்மா பார்த்திட்டு தான் இருந்தேன்" என்று அவள் ஏதோ உலகில் உள்ள அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன் என்ற தொனியில் சொல்ல "பெரிய ஆளு தான் போ" என்ற அவனின் பொய்யான மேச்சுதலை அவள் இனம் கண்டுக் கொள்ளவில்லை.அப்போது அவள் செல்போன் ஒலிக்க, அதை எடுத்து பார்த்தவளின் முகம் மறுப்படியும் இருண்டு போனது. அதை வைத்தே தெரிந்துக் கொண்டான் அழைத்திருப்பது யார் என்று. "எதாவது இம்போர்டன்ட் கால்லா ஆஹ் இருக்க போகுது. அட்டென்ட் பண்ணி பேசு. நான் அங்க வெயிட் பண்றேன்" என்றவன் முன்னே சென்று விட்டான்.ஜூபீட்டர் தான் அழைத்திருந்தான். மனமே இன்றி அதை எடுத்தவள் தான் செய்ய வேண்டிய வேலையை நினைவு கூறவே அழைக்கபட்ட அழைப்பை பேசிவிட்டு துண்டித்தாள். இவள் தான் அந்த விஷ பொடியை ஜூபீட் கொடுத்ததாக கூறி மிதுனா விடம் கொடுத்தாள். அதை அன்றே தான் வீசி எரிந்திருக்க கூடாதா? என்று இன்று நினைத்து என்ன பயன்.அதன் பின் அவர்களின் கை பாவையாக மாறி அவளுக்கு இட்ட கட்டளையை முடிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.அருகில் குளிர்பான கடை ஒன்றை பார்த்தவள் அவனையும் அழைத்துக் கொண்டு அதற்குள் நுழைந்தாள். அவனுக்கும் சேர்த்து தானே வாங்கி வருவதாக அவள் கூற அவனும் மறுக்கவில்லை. இரண்டு குளிர்பானங்கள் வாங்கியவள் அவன் பார்க்கிறானா? என்று நோட்டம் பார்க்க, அவனோ செல்போனில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க. அவள் வைத்திருந்த மூலிகை பொடியை கையில் எடுத்தவள் நடுங்கும் தன் கரத்தினைக் கடினப்பட்டு அடக்கியப் படி, 'அதை அதில் கலந்துவிட' கூறி மூளை சமிக்ஞை செய்தாலும், கிளாஸ் வரை சென்ற தன் கரத்தினை மிகவும் வெறுத்தாள்.தன்னால் ஒரு போதும் இதை செய்ய முடியாது என்ற நிதர்சனம் விளங்க அதை அப்படியே கசக்கி அருகில் இருந்த குப்பை கூடையில் போட்டவள் நீண்ட மூச்சு ஒன்றை வெளியிட்டு நிம்மதியாய் அவன் அருகில் சென்று அமர்ந்தாள். 'மடியில் கணம் இல்லையென்றால் வழியில் பயம் இல்லையென்று' கூறுவார்களே அதே போல் உணர்ந்தாள். இப்போது தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.அவளின் ஒவ்வொரு செயலின் உள் அர்த்ததினை அறிபவனால் இதை அறிந்துக் கொள்ள முடியாதா என்ன? 'என்ன செய்கிறாள் என்று தான் பார்ப்போமே?' என்று அமைதியாக அவன் இருந்து விட்டான்.ஒவ்வொரு இடத்திலும் தனித்தனி நபர் அவர்களை கண்காணிப்பதையும் அவன் தெரிந்துக் கொண்டான்.அவள் கொடுத்த குளிர்பானத்தை பருகியவன் அவள் முகம் இன்னும் எதையோ யோசித்து கொண்டிருக்க "என்ன கேட்கணுமோ கேள்" என்று அவன் அனுமதி அளிக்க ' நான் ஏதோ கேட்க நினைக்கிறேன் என்று எப்படி கண்டு பிடித்தார்?' என்று நினைத்தவள் தான் தெரிந்துக் கொள்ள விரும்பியதை கேட்டாள்."நீங்களும் சாலினியும் காலையில என்ன பேசிக்கிட்டீங்க?" என்று அவளுக்கு அதி முக்கிய கேள்வியை கேட்டாள்.அவனும் பிரகதியிடம் எதையும் மறைக்காமல் கூறினான். அவன் தன்னை காதலிப்பதை வெளிப்படையாக இன்னொரு பெண்ணிடம் கூறியது உள்ளுக்குள் தித்திப்பாய் இருந்தாலும், 'தாங்கள் இருவரும் காதலிப்பதாக பிறருக்கு தெரிந்தால் மற்றவர்கள் பார்வைக்கு நான் என்னவோ அவனை மடக்கி விட்டதாக தானே கூறுவார்கள். உடன் இருக்கும் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டுமே!' என்று அவள் எண்ணி வருந்துவதை அவனிடமே கூறினால்."எதுவென்றாலும் நான் பார்த்துகிறேன்" என்று அவளை சமாதானம் செய்தான்.எல்லாவற்றுக்கும் மேலாக மிதுனா கூறியது போல் எதுவும் இல்லை. இவன் தனக்கவன் என்று கர்வம் கொண்ட மனதை அவள் எதிர்கவோ மறுக்கவோ விரும்பவில்லை.அவனும் எதையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் அவளுடன் இயல்பாக பேச, அவளும் எந்த சலனமும் இன்றி அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். மறுபடியும் அவனிடமிருந்து எந்த அழைப்பும் வந்துவிட கூடாது என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.அங்கிருந்து வெளியேறி பொருட்காட்சியின் மற்றைய இடங்களை சுற்றி பார்க்க சென்றனர். ராட்சத ராட்டிணம் ஒன்று அவர்களை திகைக்க செய்தது. மாலை மங்கிய வேலையில் அவர்கள் உள்ளே நுழைந்த போது ஒருசில மின் விளக்குகளே போடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இருள் சூழ அனைத்து விளக்குகளும் போடப்பட்டு அந்த இடமே பிரம்மாண்டமாக காட்சியளித்தது.இராட்டிணத்தை பார்த்தவன் அதில் ஒருமுறை ஏறி பயணிக்க விரும்பி அவளிடம் கேட்க, அவளோ 'எவ்வளவு உயரமா இருக்கு! நாம இதில் ஏறின நேரம் பார்த்து எதாவது கோளாறு ஏற்பட்டு அந்தரத்தில நின்று விட்டால்? இல்லை ஒருவேளை எதாவது கம்பி அறுந்து அது உடைந்து விட்டால் நம் கதி? இல்ல இல்ல வேண்டவே வேண்டாம்' என்று நினைத்து பயந்ததை அவனிடம் எப்படி கூறுவது "நாம என்ன சின்னக் குழந்தைகளா? ராட்டிணம் சுற்ற. நீங்க ஒரு போலீஸ் ஆபீஸர், இதில எல்லாம் போனா உங்க இமேஜ் எண்ணவாகிறது? வேண்டாம்" என்று சமாளித்து மறுத்து விட்டாள்.' போலீஸ்காரன் ராட்டிணத்தில போக கூடாதா? இது எந்த ஊர் சட்டம் டா?' என்று நினைத்துக் கொண்டவன் அறிவான் அல்லவா அவளின் உண்மை காரணத்தை. வம்படியாக அதில் ஏற்றி அவள் பயத்தை இப்பொழுதே குறைத்து விடலாம், ஆனால் அவள் இப்பொழுது தான் தன் இயல்பை வெளிக்காட்ட முன் வந்துள்ளால். அதனால் அவளை கட்டாய படுத்த மனம் வரவில்லை.அடுத்து இருந்ததை பார்த்தவள் 'பொருட்காட்சில இதையெல்லாம் வைத்து ஏன்டா என் உயிரை வாங்குறீங்க?' என்று எண்ணி பிரகதி அரண்டு நிற்க, நிரஞ்சனோ "வா இங்க போகலாம் ஃபுல் த்ரிலேர இருக்கும்" என்று ஆளை கொலை நடுங்க வைக்கும் அந்த பேய் குகையை பார்த்து அவன் அவளை இழுக்க 'எங்கே தன்னை அதற்குள் இழுத்து சென்று விடுவானோ! ' என்ற அச்சத்தில் அவன் கையை உதறிவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடிவந்து விட்டாள்."என்னாச்சி?" என்ற படி அவள் அருகில் அவன் வர "சின்ன பசங்க வர இடத்தில இதெல்லாம் யார் சார் வைக்கிறதுக்கு அலோ பண்ணா? இதை பார்த்திட்டு போய் நிம்மதியாக தூங்க முடியுமா? வெரி பேட். இதையெல்லாம் நான் என்கரேஜ் பண்றது இல்ல. அதனால உள்ள வர மாட்டேன்" என்று முறுக்கிக் கொண்டு முன்னே நடந்தவளை புன்னகையுடன் பின் தொடர்ந்தான்.பாம்புகள் கண்காட்சி பார்க்க அழைக்க அதற்கும் மறுப்பு தெரிவித்தாள். " என்ன சார் நீங்க பாம்பு பல்லி பார்க்கணும்னா டிஸ்கவரி சேனல் பார்க்க வேண்டியது தானே""அப்போ இங்க இருக்கிற எந்த தீம் குள்ளேயும் போகறதா ஐடியா இல்லை, அப்படி தானே?""ஏன் இல்ல அதான் வந்துட்டே நம்ம ஏரியா" என்று அவள் உற்சாகமாக கூற, இப்போது மறுப்பு தெரிவிப்பது அவன் முறை ஆயிற்று.முழுவதும் பனிக்கட்டிகள் கொண்டு தயாரிக்க பட்டிருந்தது அந்த மாளிகை. வெண்ணிற பளிங்கு மண்டபமாய் அது அனைவரையும் உருக வைத்தது. தாங்கள் அணிந்திருக்கும் உடையை கருத்தில் கொண்டே அவன் மறுத்தான்."இல்லை வேணாம் பிரகதி. ஸ்வெட்டர் கூட போட்டுக்கல, உள்ள குளிர் அதிகமாக இருக்கும் உனக்கு குளிரும் வேண்டாம்""நானெல்லாம் ஸ்னோ குயின் எல்சா மாதிரி எந்த குளிரும் என்ன எதுவும் செய்யாது. ஒரு வேளை உங்களுக்கு பயமா இருந்தா சொல்லுங்க போய்ட்டு வந்ததும் சூட ஒரு கப் டீ வாங்கி தரேன் குடிச்சா எல்லாம் சரியா போய்டும்" என்றாலே அப்போதும் அவனை விடுவதாக இல்லை.
அவன் கை பிடித்து இழுத்து சென்றாள். அவனும் பூ மாலை ஒன்று மலையை இழுப்பது போல அவள் இழுப்பிர்க்கு அவளுடன் சென்றான்.ஆங்காங்கே வான் நீல நிற மெல்லிய மின் விளக்குகள் மின்ன, குளிர் இதமாக உடலை சிலிர்க்க வைக்க வெளியே இருந்த வெம்மை முழுவதும் அடங்கி தனி ஒரு உலகிற்குள் நுழைந்தது போன்று இருந்தது.
பனிக்கட்டிகள் கொண்டே பாலங்கள் அழகிய வேலை பாடுகளுடன் அமைந்திருக்க, ஆங்காங்கே குளிர் இடங்களில் மட்டும் வாழும் பென் குயின் தத்தி தத்தி நடை பயின்று கொண்டிருந்தது. சிறிய நீரோடையும் அமைந்திருந்தது.அவள் கூறிய எல்சாவின் உருவம் பனிகட்டியால் உயிர் பெற்று நின்றுக் கொண்டிருந்தது. அது மட்டுமின்றி இன்னும் சில உருவங்களும் பனிகட்டிகளால் உயிர் பெற்றிருந்தது. கிறிஸ்துமஸ் மரம், செண்டா அவர் இஷ்ட வாகனமான குதிரைகள் பூட்டிய ஜேரட் வண்டியில் பவனி வங்துக் கொண்டிருந்தார்.அவற்றை எல்லாம் அவள் எல்லை இல்ல மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்து பார்த்துக் கொண்டிருக்க, தன் விரல் கோர்த்து அவள் வியந்து பார்க்கும் அழகை அவன் ரசித்திருந்தான்.அதில் இருந்து வெளியே வந்தவள் அருகில் நின்றிருந்த ஐஸ்கிரீம் வண்டியை பார்த்து ஓட, "இப்போ வேணாம் பிரகதி, கோல்ட் புடிச்சுக்கும்" என்று அவன் மறுக்க "முதல் முதலா வெளிய கூட்டி வந்திருக்கீங்க, ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்டிங்களா? பிளீஸ் ஒண்ணே ஒண்ணு" என்று குழந்தை போல் முகத்தை வைத்து அவள் கெஞ்ச, அவன் என்ன சொல்வான் "ஒன்று தான் வாங்க வேண்டும்" என்று சொன்னது தான் தாமதம், அடுத்த நொடி அந்த ஐஸ்கிரீம் வண்டியின் அருகே நின்றிருந்தாள்.முதலில் ஒன்றை வாங்கியவள் " இது என்னோட பேவரைட் கூட இது மட்டும் வாங்கிகிறேன். அட முதல்லையே இதை பார்க்காமல் விட்டுடேனே இதுவும். இது எப்படி இருக்கும்? இது நான் சாப்பிட்டதே இல்லையே இதுவும்" என்று கூறி ஐந்து வகையான ஐஸ்கிரீம் முழுங்கிருந்தாள். "இது.. " என்று அடுத்து அவள் கை நீட்டும் முன்பே அவளை தள்ளிக் கொண்டு வந்தான்.சில நிமிடங்கள் கழித்து.....


காருக்குள் அமர்ந்திருந்த பிரகதியிடம் டீ கப்பை கொடுத்தவன் அவளை சரமாரியாக திட்ட தொடங்கி இருந்தான். அங்கிருந்து அவள் மகிழ்வாக தான் கிளம்பி இருந்தாள். அவள் அங்கு செல்லும் முன்னர் இருந்த மன நிலையில் இருந்து முற்றிலும் மாறி இருந்தாள். ஆனால் சிறிது நேரத்தில் குளிரில் அவள் கோழி குஞ்சாய் நடுங்கவே அவன் திட்டுவதற்கு காரணம்."வேணா வேணாம்னு சொன்னா கேட்டியா? இதுல இவங்க எல்சாவாம்" என்று அவளை கடுமையாக கடிந்துக் கொள்ள, தவறு செய்து மாட்டிக் கொண்ட சிறு பிள்ளை போல் அமர்ந்திருந்தாள்."பிளீஸ் சார் நானே ஏற்கனவே குளிர்ல நடுங்கிட்டு இருக்கேன். நீங்க வேற நடுங்க வைக்காதிங்க சார், பிளீஸ்" என்று பாவமாக முகத்தை வைத்து கெஞ்ச, அதன் பிறகு அவன் எங்கு அவளை திட்ட வாய் திறக்க முடியும்.டீ குடித்த பிறகும் குளிர் நிற்காததால் அவள் கைகளை பிடித்து உள்ளங்கையில் சூடு பறக்க தேய்த்து விட்டான். அவன் கைகளை தேய்த்து அவள் கன்னத்தில் ஒற்றினான். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்துக் கொண்டிருக்க, அந்த தனிமை அவளின் சிவந்த முகம் அவனை ஏதோ செய்தது. கன்னத்தில் வைத்திருந்த கைகள் அதிலே நிலைத்திருக்க பெரு விரல் கொண்டு மென்மையாக அவள் இதழ்களை வருட, அவள் விழிகளோ அவன் விழிகளை விட்டு அசைய மறுக்க, அவனது பார்வையோ அடுத்து நடுங்கிக் கொண்டிருந்த அவள் இதழ்களில் பதிந்திருந்தது.இயற்கையில் சிவந்த அதரங்களுடன் சேர்ந்து குளிரில் சிவந்திருந்த அவள் முகமும் அவன் மோகத்தை தூண்டி விட,


சிறிது தலையை குனிந்து அவள் கீழ் அதரங்களை தன் இரு அதரங்களுக்கும் நடுவில் மென்மையாக பொருத்தி எடுத்தவன், நிமிர்ந்து அவள் முகம் காண, அவளுக்கும் அந்த குளிருக்கு அது தேவைப்பட்டது போலும்.
அவன் முத்தமிடும் போது மூடிய தன் இமைகளை திறந்து அவள் பார்த்த பார்வையும் அவள் மறுப்பு ஏதும் சொல்லாததும் அவன் தாபத்தை மேலும் தூண்டிவிட, மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்தான். ஆனால் இம்முறை முழுமையான இதழ் தேடலை நிகழ்த்த அவளும் அவனுக்கு உடன் பட்டிருந்தாள்.இட கரம் அவள் பின் தலையில் அழுத்தியிருக்க, வல கரமோ அவள் இடையை வளைத்திருந்தது.
அவளின் இரு கரங்களும் அவன் இடையை பற்றியிருந்தது. முத்தத்தில் திளைத்திருந்தவனின் விரல்கள் அவள் வெற்று இடையில் முன்னேறி அவள் மேனியில் ஊடுருவிய சமயம், தான் செய்துக் கொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் புரிந்தவன் அடுத்த நொடி அவளை விட்டு விலகி காரில் இருந்து இறங்கி இருந்தான்."நிரஞ்சன் என்ன பண்ணிட்டு இருக்க? என்விரொண்மெண்ட் அனாலிசிஸ், ஹுமண் அனாலிசிஸ் சொல்லிக் கொடுக்கிற நீயே சுற்று புறத்தை மறந்து பொது இடத்தில் இப்படி நடந்துக்கலாமா? நீ இந்த மாதிரியெல்லாம் நடந்துக்கிட்டா, இனிமேல் உன் கூட வர்றதுக்கு இல்லை உன்னை பார்க்கவே மாட்டா" என்று தன்னை தானே நொந்துக் கொண்டிருந்தான்.இங்கே இவன் நிலை இப்படி இருக்க, அங்கோ அவளின் நிலைமை படு மோசமாக இருந்தது. அவன் சென்று சில நிமிடங்கள் கழித்தே தன்னை மீட்டிருந்தாள்."ஐயோ! அறிவுகெட்ட பிரகதி என்ன காரியம் பண்ணிட்டு இருக்க? நீ ஏன் அவரை தடுக்கல? லூசு" என்று தன்னை தானே திட்டி கொண்டவள் அப்போது தான் அதை கவனித்தாள். அவள் சட்டையின் இறுதி இரண்டு பட்டன்கள் திறந்திருக்க, அவளது கோதுமை நிற தேகம் பளிச்சென்று மின்னியது."இத எப்போ கழட்டினார்? ஐய்யோ! இந்த அளவுக்கா தன்னிலை மறந்து இருந்தேன்" என்று வாய் விட்டே புலம்பியவள் அதனை பூட்டினாள். "மித்து சொன்னது சரி தான். நான் இவர்கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். இல்லனா? முழிச்சிருக்கும் போதே ஏதோ மேஜிக் பண்ணி என்னவோ பண்ணிருவார்" என்று அவள் தவறை ஒப்புக் கொள்ள மனமின்றி அவன் மேல் பலி போட்டாள்."வாவ் சூப்பரா இருக்குல்ல சார்" என்று அவன் அருகில் அவள் குரல் கேட்க ' எதை கூறுகிறாள்?' என்ற யோசனையுடன் அவள் பார்வையின் திசை நோக்க வானில் வண்ண மின்னல்களாய் மின்னியது வானவேடிக்கை. ஆ... வென்று தங்கள் தலைக்கு மேல் வெடித்து சிதறியதை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிரகதி.பொருட்காட்சி நடைப்பெற்ற இடத்தில் இருந்து தான் இதையும் ஏற்பாடு செய்திருந்தனர். சில நொடிகள் அதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கவனத்தை திருப்பி திடுக்கிட வைத்தது அந்த பயங்கரமான வெடி சத்தம். சத்தம் வந்த திசையை பார்த்தவன் நொடியில் அதை ஊகித்து, அவளை அழைத்துக் கொண்டு துரிதமாக அந்த இடத்திற்கு சென்றிருந்தான்.
 
Status
Not open for further replies.
Top