ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யார் குரல் இது? _ கதை திரி

Status
Not open for further replies.

Mafa97

Member
Wonderland writer
அத்தியாயம் 3
அரசலூர்.....அழகிய கிராமம்... கிராமம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டது.படித்தவர்களும் அரசு வேலையில் உள்ளவர்களும் அதிக அளவில் இருப்பதால் எந்த குறையும் இல்லாத அழகான ஊர்.மாலை 5 மணி போல் தன்னுடன் நிலா மற்றும் சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு டாக்சின் வந்து இறங்கினான் ஆரவ்.தனது காரிலேயே வந்து இருக்கலாம். ‌ஆனால் அங்கு சுவிஸ்லாந்து செல்கிறோம் என்று கூறி விட்டு வந்ததால் தான் டாக்ஸி.அங்கு பாதை ஓரமாக சில பெண்கள் நின்று கதைத்துக் கொண்டிருக்க இறங்கிச் சென்று " எக்ஸ்கியூஸ்மீ இங்க அதியமான் சார் வீடு எங்க இருக்கு ?" எனக் கேட்க அதில் ஒரு பெண் திரும்பி "ஹேய் சஞ்சனா உங்க வீட்டுக்கு போக தான் வழி கேட்கிறாங்க" என்றாள்.அதில் சஞ்சனா என்றழைக்கப்பட்டத பெண் முன்வந்து "ஹாய் அயம் சஞ்சனா. எங்க அப்பா தான் அதியமான்.நீங்க யாரு?" என்று கேட்க "ஹாய் நான் ஆரவ். நானும் என்னோட சிஸ்டர்ஸ்ஸும் இந்த ஊரைப் பற்றியும் இங்க இருக்கிற விவசாயம் ,தொழிற்சாலைகள் பற்றியும் எங்களோட ஆராய்ச்சிக்காக தெரிஞ்சிக்க வந்திருக்கோம். என்னோட பிரெண்ட் ஒருத்தன் தான் உங்க அப்பா கிட்ட பேசி தங்குறதுக்கு எல்லாம் ஏற்பாடு செய்தான் "என்று நீளமாக பேசி முடிக்க அவனது பேச்சு திறமையில் மயங்கிய சில பெண்கள் அவனை பார்த்துக் கொண்டே இருக்க,அவனை பார்த்து முறைத்தாள் சஞ்சனா." என்ன சார் இப்ப உங்களுக்கு, எங்க வீட்டுக்கு போனும் அவ்வளவுதானே" என்று கோபமாகக் கூறஅவளை விசித்திரமாக பார்த்த ஆரவ் "அதைத்தானே நான் முதல்லேயே சொன்னேன்" என்று பதில் கொடுக்க ஏதோ சொல்ல வந்த சஞ்சனாவை தடுத்தது அங்கு வந்து பேசிய நிலாவின் குரல்." என்ன அண்ணா.... அதியமான் சார் வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுதா" என்ற நிலாவிற்கு" ம்...இவங்கதான் அதியமான் சாரோட பொண்ணு சஞ்சனா "என அவளை அறிமுகம் செய்து வைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்."சஞ்சனா ஐ அம் நிலா ஸ்ரீ..ப்ளீஸ் உங்க வீட்டுக்கு போக ஹெல்ப் பண்ணுங்க"என்று நிலா கூற அவர்களுடனேயே சஞ்சனாவும் சென்று தனது வீட்டின் முன் காரை நிறுத்தச் சொல்லி மூவரையும் உள்ளே அழைத்தாள்.கார் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது தந்தை மற்றும் தாய் பாக்கியம் இருவருக்கும் மூவரையும் அறிமுகம் செய்து வைக்க "வணக்கம் தம்பி நீங்க தான் ராகுல் சொன்ன ஆரவ் தம்பியா?...உங்களுக்கு வீடு ரெடியா இருக்கு ..அதோ அந்த வீட்டில் தங்கிக்கங்க... எங்க வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா தங்க வைக்கிற வீடு தான்" என்று கூறிய மூவரையும் அழைத்து சென்றார் அவ்வீட்டை நோக்கி .அவர்களின் பின்னாலேயே வந்தாள் சஞ்சனா.வீடு சிறிதாக இருந்தாலும் நிலாவுக்கும் சம்யுக்தாவிற்கும் திருப்தியாக இருந்தது.." என்ன உதவினாலும் எங்ககிட்ட தயங்காம கேளுங்க ..."எனக் கூறிவிட்டு அங்கிருந்து சஞ்சனா ,அதியமான் இருவரும் சென்றனர் .மூன்று அறைகள், சமையலறை, ஒரு வரவேற்பறை என வீடு நேர்த்தியாக இருக்க, மூவரும் தத்தமது அறைகளில் பொருட்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் சென்றனர் .களைப்பினால் அசந்து உறங்கிக் கொண்டிருந்த நிலாவின் காதில் மீண்டும் அந்தக் குரல்...."நிலா .....என்னை தேடி வந்துட்டியா..... உனக்காகத்தான் நான் காத்துகிட்டு இருக்கேன்.... வா ...."என அவளை அழைக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அந்தக் குரலுக்கு கட்டுப்பட்டவள் போல் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள்."நிலா.... வா ..."என மீண்டும் அழைக்க மெல்ல எழுந்தவள் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.காலில் காலணி கூட அணியாமல் எங்கு செல்கிறோம் என்று கூட தெரியாது அவள் நடக்க,இவ்வளவு நேரமும் அமைதியாக கேட்ட குரலுக்கு மாறாக தற்போது "ஹா....ஹா......ஹா..... வா நிலா.... வா...."என்ற அகோரமான குரல் கேட்க மெல்ல மயக்க நிலைக்கு சென்றாள் நிலா.****************நள்ளிரவில் விழிப்பு வந்தது சித்தார்த்திற்கு.நேரம் பார்க்க 12 .10 எனக் காட்டியது தனது அறையில் உள்ள பால்கனிக்கு வந்தவன் எதேச்சையாக பாதையை பார்க்க ஒரு பெண் மட்டும் தனியே நடந்து செல்வது தெரிந்தது.என்னவாக இருக்கும் என யோசித்தவன் வேகமாக கீழே இறங்கி வந்து பாதையை நோக்கி சென்றான்.அவள் அருகில் அவன் வரும் முன் அப்பெண் மயங்கி கீழே சரிந்தாள் .அவள் பாதையில் விழுந்து கிடக்க ஓடிச் சென்று அவளைப் பார்க்க அவள் உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்து இருந்தது.யார் இவள்? இதற்கு முன்பு இந்த ஊரில் அவளை கண்டதுபோல் சித்தார்த்துக்கு நினைவு இல்லை.. வெளியூர் பெண்ணாக இருக்க வேண்டும். அவள் அணிந்து இருந்த இரவு உடை கிராமத்துப் பெண் இல்லை எனக் கூறியது .மெல்ல அவள் கன்னத்தை தட்ட எந்த மாற்றமும் இல்லை . சித்தார்த்துக்கு என்ன செய்வது என தெரியவில்லை. மெதுவாக அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தான்.வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் அவளை கடத்தியவன் தனது அறைக்குச் சென்று ஒரு போர்வையைக் கொண்டு வந்து அவளின் மேல் போட்டுவிட்டு தனது தாய் தந்தையின் அறைக் கதவைத் தட்ட என்னவோ ஏதோ என்று இருவரும் எழுந்து வர இவன் விஷயம் சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் இருக்க அப்போது உறக்கம் கலைந்து வந்த அவனது பாட்டி சரளா" என்ன ஆச்சு.... யார் இந்த பொண்ணு...? பார்த்தா நம்ம ஊரு பொண்ணு மாதிரி இல்லையே ...என்னடா பேராண்டி பொண்ணை தூக்கிட்டு வந்துட்டியா ?" என நேரம் காலம் தெரியாமல் சித்தார்த்தை கலாய்க்க அவரை முறைத்துப் பார்த்தவாறு அவரிடம் நடந்ததைக் கூற,"டேய் ...அப்பறம் ஏன்டா மூணு பேரும் பாத்துக்கிட்டு இருக்கீங்க? தண்ணிய எடுத்து அந்த பொண்ணு முகத்தில் தெளிங்க" எனவும் தான் சித்தார்த்தின் தாய் அருணா ஓடிச்சென்று நீர் கொண்டுவந்து அவள் முகத்தில் தெளித்தாள்.நீர் பட்டதும் கண்களை லேசாகத் திறந்தாள் நிலா .தலை பாரமாக இருக்க அதனை பிடித்துக் கொண்டு சோபாவில் இருந்து மெல்ல எழுந்து அமர்ந்து சுற்றிப் பார்க்க யாரோ முகம் தெரியாத நால்வர் சூழ இருப்பதைக் கண்டு " ஆ......." என கத்தினாள்.அவளுடைய கத்தலில் ஓடிச் சென்று அவள் வாயை பொத்திய சரளா பாட்டி "என்னம்மா இது ...நாங்க என்னமோ உன்ன கடத்தி கத்தி வச்சு இருக்க மாதிரி கத்துற... பாவம் போனா போகுதுன்னு என் பேரன் ரோட்டில் ரோட்டில் மயங்கிக் கிடந்த உன்னை கூட்டிட்டு வந்தா ஓவராத்தான் போற..."என அங்கலாய்க்க அப்போதுதான் தான் இருக்கும் நிலை உணர்ந்து வேகமாக எழுந்து போர்வையால் தன்னை மூடிக் கொண்டாள்.தொடரும்....
 

Mafa97

Member
Wonderland writer
அத்தியாயம் 4

அவளது செய்கையைக் கண்டு சிரித்த பாட்டி "சொல்லும்மா யாரு நீ? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற ?"
எனக் கேட்க
"என் பெயரை நிலா ஸ்ரீ .
கோயம்புத்தூர்ல இருந்து இந்த ஊர்ல இருக்கிற விவசாயம் அப்புறம் தொழில்களை பற்றி எங்க ஆராய்ச்சிக்கு தகவல் சேர்க்க வந்திருக்கோம்.."
இங்க இருக்க அதியமான் சாரோட விருந்தினர் இல்லத்தில் தங்கி இருக்கோம்" என மனனம் செய்தவள் போல் ஒப்பித்தாள்.

அதியமான் என்ற பெயரைக் கேட்டதும் சித்தார்த் மற்றும் அவனின் தந்தை மதியழகன் இருவரின் முகமும் இறுகியது.
சிறிது நேரம் மௌனம் காத்த பாட்டியும் இது சரிவராது என முடிவெடுத்து
"யார் யார் கூட வந்து இருக்க... இப்ப எப்படி அங்க போறது ?"
என்று கேள்வி கேட்க
"நான் அப்புறம் என்னோட அண்ணா என்னோட பிரெண்ட் மூணு பேரும் தான் வந்தோம் .எனக்கு அங்க போக வழி தெரியாது .நாங்க இங்க வந்து இன்னும் ஒரு நாள் கூட ஆகல .."
எனக்கூறி நிலா மெல்ல விசும்ப அவளை பார்க்க பாவமாக இருந்தது பாட்டி மற்றும் அருணாவுக்கு.

"பேராண்டி ஜீப்ப எடு...நாம போய் இந்த பொண்ண அவங்க தங்கியிருக்கிற வீட்டில் விட்டுட்டு வரலாம்..."
என்று சித்தார்த்தை பார்த்து கூற அவனோ அவளை முறைத்துவிட்டு மதியழகனை பார்க்க அவர் எதுவும் பேசாமல் இருக்க சரி என தலை அசைத்து அவன் பாட்டியிடம் திரும்பி "வாங்க போகலாம்"
என சொல்லிவிட்டு முன்னே செல்ல அந்த போர்வையாலேயே தன்னை சுற்றிக் கொண்டு அவர்களுடன் சென்றாள் நிலா.

இருவரையும் ஜீப்பில் ஏற்றி அதியமான் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நிலா தங்கி இருக்கும் வீட்டை அடைந்தான் சித்தார்த்.
வீட்டை அடைந்ததும் ஜீப்பை விட்டு கீழே இறங்கிய நிலா "தேங்க்யூ சார்... பாட்டி நான் போயிட்டு வரேன் ..."
எனக்கூறி திறந்திருந்த கதவின் வழியே உள்ளே சென்றாள். அவள் உள்ளே சென்றதும் ஜீப்பை கிளப்பிக் கொண்டு சென்றான் சித்தார்த்.

*****************

அதிகாலையிலேயே விழித்த ஆரவ் தனது காலை கடன்களை முடித்து விட்டு ஊரை சுற்றி பார்க்க சென்று விட்டான் ..அவன் சென்ற சில நிமிடங்களில் எழுந்த சம்யு நிலாவைதேடி அவள் அறையில் சென்று பார்க்க நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமல் வெளியே வந்தவள் வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள தோட்டங்களையும் பார்வையிடச் சென்றாள்.

கிராமங்கள் என்றால் தனி அழகு தான். எவ்வளவு அழகான காலை பொழுது ...எங்கு பார்த்தாலும் இயற்கை எழில்....
அவற்றை எல்லாம் ரசித்தபடியே சம்யு சென்று கொண்டிருக்க
" யார் நீ..?"
என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். அங்கு வெள்ளை வேட்டி சட்டையில் பனைமரம் போல் ஒருவன் நிற்க அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள்
"முதல்ல நீங்க யாரு?" என இவள் அதிகாரமாக கேட்க
"என்ன நக்கலா... நீ யாருன்னு நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் என்னை கேள்வி கேட்கிறே?" என்று அவன் அவளை முறைத்தபடியே கூறினான்.

அவனது தோரணையில் பயந்தவள் "நான் சம்யுக்தா நேத்து தான் இங்க வந்தோம்... இப்போ சும்மா சுத்தி பார்க்கலாம் என்று வந்தேன்"
என்று மெதுவாக கூற
"நீங்க தான் கோயம்புத்தூரில் இருந்து வந்து இருக்கீங்களா? நான் கதிர் அதியமான் என்னோட அப்பா ..."
என்று தன்னையும் அறிமுகப்படுத்தினான்.

அப்போது அங்கு வந்த சஞ்சனா "அண்ணா நீ இங்கதான் இருக்கியா ?அப்பா உன்னை கூப்பிட்டாரு "
எனக் கூற அவன் அங்கிருந்து அகன்று செல்ல சஞ்சனா சம்யு இருவரும் கதை அலந்தப்படியே தோட்டத்தை சுற்றி வந்தனர் .
மூவருக்கும் அவர்கள் இங்கிருந்து செல்லும் வரை உணவை தாங்களே தருவதாக அதியமான் அன்புக் கட்டளையிட அதை மீற முடியாது சரி என்றுவிட்டனர்.

ஆரவ் சம்யுக்தா இருவரும் வீட்டை அடையும்போது நிலா தீவிர யோசனையில் இருப்பதைக் கண்ட இருவரும் அவளிடம் என்னவென்று விசாரிக்க நேற்று நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினாள்.
" என்ன தூக்கத்தில் நடந்து போனியா ?எனக்கு பயமா இருக்கு ...அவங்க உன்னை காணவில்லைன்னா என்ன ஆகியிருக்கும்..?"
என்று சம்யு புலம்ப
"எனக்கும் பயமாத்தான் இருக்கு.. நிலா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பாக்கு யாரு பதில் சொல்வது? நாம இங்க இருந்து போலாமா?" ஆரவ்வும் தன் பாட்டிற்கு புழம்பினான்.

"இல்ல என்னால வர முடியாது... யாரோ என்கிட்ட ஹெல்ப் கேக்குறாங்க ...அவங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணியே ஆகணும்.. அதுவரை இங்கிருந்து நான் வர மாட்டேன்.."
என மிக உறுதியாக கூற
"அப்புறம் ஏன்டி உன்னை கஷ்டப்படுத்துறாங்க.. பயமுறுத்துறாங்க... அந்த சாமி வேற உனக்கு ஆபத்துன்னு சொல்றாரு.. அதை நினைக்கும் போது தான் பயமா இருக்கு" என்று சம்யு கூறினாள்.

"அதுத் தாண்டி எனக்கும் புரியல.. ஹெல்ப் கேக்குறவங்க ஏன் பயமுறுத்தனுதம் ...சம்திங் ராங்.. இதுல ஏதோ இருக்கு ..என்ன வந்தாலும் பாத்துக்கலாம்..." என நிலா தீர்மானமாக கூற அவளை மெல்லிய பூங்காற்று தீண்டிச் சென்றது அவளை ஆசீர்வதிப்பது போல ..
அவள் கூறியதைக் கேட்ட இருவரும் அவளுக்கு துணை நிற்பதாக கூறி தங்களது வேலைகளைக் கவனிக்க சென்றனர். ஆனால் நிலாவின் மனம் பெரும் குழப்பத்திலேயே இருந்தது.

****************
மூவரும் இந்த ஊருக்கு வருவதற்கு என்ன பொய் சொன்னார்களோ அதை நிறைவேற்ற ஊரைப்பற்றி அதன் அழகை அங்கு செய்யும் தொழில் என்பவற்றை எல்லாம் பார்வையிட ஒவ்வொரு இடமாக சென்றனர்.

செல்லும் வழியில் தான் கனவில் கண்ட எந்த காட்சியாவது தென்படுகிறதா என ஒவ்வொரு இடத்தையும் ஊன்றி கவனித்தாள் நிலா.

சம்யு ஆரவ் இருவரும் முன்னால் செல்ல அவர்கள் பின்னே ஒவ்வொரு இடத்தையும் பார்வையிட்டுக் கொண்டு வந்த நிலா ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள்‌..
அங்கு அவளை நோக்கி ஒரு மணல் லாரி வேகமாக வந்தது.. அதைக் கண்டு திகைத்த அவள் நகரப் பார்க்க கால்கள் இரண்டும் நகர மறுத்தது.. அவள் காதுகளில்
"போ... போயிடு. நிலா.." என்ற அந்தப் பெண் குரல் கவலையில் ஒலிக்க அவளால் ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாமல் கால்கள் வேரூன்றி இருந்தது..
முன்னால் சென்று கொண்டிருந்த ஆரவ் சம்யுக்தாவையாவது அழைக்கலாம் என்றால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை..
" செத்துடு ....
யாரையும் உன்னால காப்பாத்த முடியாது...."
என்ற மற்றைய கொடூரமான குரல் அவள் செவியில் கேட்க
"அம்மா.." என மனதில் நினைத்தவாறு கண் மூடினாள் நிலா..

தொடரும்....

 

Mafa97

Member
Wonderland writer
அத்தியாயம் 5திடீரென தன்னை யாரோ இழுக்க இழுத்தவருடனே சென்று பாதையின் ஓரத்தில் விழுந்தாள் நிலா.
அவளை இழுத்த சில கணங்களிலேயே லாரி அவர்களைத் தாண்டிச் சென்று இருந்தது.
தன்னை யார் காப்பாற்றியது என விழி திறந்து பார்க்க நேற்று தன்னை காப்பாற்றியவனே இன்றும் காப்பாற்றி இருக்கிறான் என்பதை அறிந்தவள் நன்றி சொல்ல வாய் எடுக்க
" அறிவில்ல உனக்கு ? லாரி வர்ரது‌
கூடவா கண்ணுக்கு தெரியல ....சிலை மாதிரி நிக்கிறே ..எப்பவுமே என்னால உன்னை காப்பாத்திக் கிட்டு இருக்க முடியாது" என சரமாரியாக அவளை திட்டினான் சித்தார்த்.

அவனின் சத்தத்திலேயே முன்னால் நடந்து கொண்டிருந்த ஆரவ் சம்யு இருவரும் திரும்பி பார்த்தனர் .
யாரோ ஒரு ஆடவன் மேல் நிலா படுத்திருக்க அவனும் அவளின் இடையில் கை வைத்து அணைத்தவாரே அவளை திட்டிக் கொண்டிருந்தான்.

இக்காட்சியைக் கண்ட இருவரும் நிலாவிடம் ஓடி வந்தனர் .
அவர்கள் அங்கு வந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த நிலா சித்தார்த் இருவரும் அவர்களின் பார்வை வித்தியாசத்தை கண்ட பிறகே தாங்கள் இருக்கும் நிலை உணர்ந்து வேகமாக விலகினார்கள்.

அவளிடம் வந்த சம்யு
" நிலா என்னாச்சு.. ஏன் இப்படி விழுந்து இருக்க ?"
என கேள்வி கேட்டுக் கொண்டிருக்க நிலா பேசும் முன்னே சித்தார்த்தே நடந்த அனைத்தையும் சொல்ல ஆரவ் சம்யு இருவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது...

அவளை அணைத்த சம்யுவின் கண்களில் இருந்து இரு துளி நீரும் வெளியே வந்தது. சித்தார்த்தின் முன் எதுவும் பேசாமல் நிலைமையை சமாளிக்கும் விதமாக ஆரவ்வே பேசினான்.

"தாங்க்ஸ் சார் ...எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... ரொம்ப ரொம்ப நன்றி..."
என்று ஆரவ் அடி மனதிலிருந்து கூற "ஐயோ ...என்ன இது சின்ன உதவி தானே அப்பறம் இப்படி சார்னு எல்லாம் கூப்பிடாதிங்க...ரொம்ப வயசானவர் மாதிரி ஃபீல் ஆகுது... என்னோட பெயர் சொல்லியே கூப்பிடுங்க..." என நட்புக் கரம் நீட்ட அவனை ஆரவ்விற்க்கு மிகவும் பிடித்துப் போனது.

"என்னையும் பேர் சொல்லியே கூப்பிடுங்க... ஐ அம் ஆரவ்... இது என்னோட சிஸ்டர்ஸ்.. கூட பிறந்தவங்க இல்லை. இருந்தாலும் கூட பிறந்தவங்க மாதிரி தான்...
நாங்க இங்க எதுக்கு வந்திருக்..."
என ஆரவ் தாம் வந்த காரணத்தை கூற வர அவனை தடுத்த சித்தார்த்

"எனக்கு எல்லாம் தெரியும்... என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க... நானும் அக்ரில எம் எஸ் சி பண்ணிட்டு இங்க எங்களோட விவசாயத்தை இயற்கை முறையில பண்றேன்"

என்று கூற போன உயிர் வந்தது மூவருக்கும். அவனின் ஆரம்ப வாக்கியத்தில் நாம் இங்கு எதற்காக வந்தோம் என்பது அவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ந்தவர்கள் அவனின் வாக்கியத்தின் பிற்பாதியில் சற்று ஆசுவாசம் அடைந்தனர்.

"என்ன அப்படிப் பாக்குறீங்க ?...நேத்து நைட்டு உங்க சிஸ்டர காப்பாத்தினது நான் தான்... அவங்க தான் நீங்க எதுக்காக வந்து இருக்கீங்கன்னு சொன்னாங்க ..."
என அவனே மீதியையும் கூறி முடித்தான். இப்போது முழுதாக தெளிந்த ஆரவ்
" தாங்க்ஸ்....." என ஆரம்பிக்கும் முன்னே
"அதை விடுங்க.. எனக்கு டைம் ஆச்சு நான் வரேன் .."
என்று ஆரவ்விடம் கூறியவன் திரும்பி நிலாவை ஒரு நொடி பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் நிலாவிடம் சரமாரியாக கேள்வி கேட்க நிலாவும் நடந்தவற்றை விவரித்தாள்.
" ஐயோ கடவுளே !!! இங்க வந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல... அதுக்குள்ள இது இரண்டாவது கண்டம்.
இப்ப என்னடி பண்ண போறோம் ..."
என்று சம்யு கவலை தோய்ந்த முகத்துடன் நிலாவைப் பார்த்து கேட்க அவளும் தெரியவில்லை எனும் விதமாக தலையசைத்தாள்.

"சரி இங்க இதெல்லாம் பேச வேண்டாம். வாங்க போகலாம்.." எனக் கூறி இருவரையும் அழைத்துச் சென்றான்.

************************

அன்று இரவு கண்ணன் ஆரவ்வின் போனுக்கு அழைப்பு விடுக்க அவரது அழைப்பை கண்டதும் அங்கு ஹாலில் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து யோசனையில் இருந்த இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றான்.

" ஹலோ சொல்லுங்கப்பா..." என்று அவன் கூறியதும் பெண்கள் இருவரும் நிமிர்ந்து அவனைப் பார்த்தனர்.

"' இதோ இங்கதான் இருக்காங்க ..."
என்று நிலாவிடம் போனை நீட்ட
" அம்மு... என்னம்மா அங்க போனதும் இந்த அப்பாவை மறந்துட்டியா...?" என்று கேட்க துடித்து விட்டாள் நிலா.

"என்னப்பா இது இப்படி பேசுறீங்க...? வந்த களைப்புல மறந்துட்டேன்... அதுக்காக இப்படி தான் பேசுவீங்களா??
ஐ லவ் யூ சோ மச் பா..." என்று அவள் கண்ணீருடன் கூற ...

"ஐயோ அம்மு அப்பா சும்மா சொன்னேன்டா... இதுக்கு எல்லாம் போய் அழுவாங்களா?"
என்று அவளை சமாதானம் செய்தவர் "சரிடா அப்பாக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு டா ....
வீடியோ கால் பண்ணட்டா?"
என்றதும் அவள் உட்பட மற்ற இருவரும் திகைத்தனர் ..

அப்படி அவர் வீடியோ கால் செய்தால் தாங்கள் பொய் சொல்லி இங்கு வந்தது தெரிய வரும் என்பதால் வந்த பயமே அது.

உடனே தன்னை சமாளித்த நிலா
"என்னப்பா நீங்க இது ...உங்களைப் பார்த்தா உங்ககிட்டவே வரத் தோணும் ‌.. ட்ரிப் முடிஞ்சு நேர்லயே வர்ரேன் உங்களைப் பார்க்க... ப்ளீஸ்பா"
என்று அவரை சமாதானம் செய்தாள்.

மகள் தன்னை பார்க்க ட்ரிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வந்து விடுவாள் என்று உணர்ந்தவர் மேலும் அதைப் பற்றி பேசாது
"ஒரு போட்டோ அனுப்பு டா..." என்று கூற ஐயோ என்றானது மூவருக்கும்.

"என்னப்பா இது நீங்க.... சின்ன பசங்க மாதிரி. என்னோட பழைய போட்டோஸ பார்த்துட்டு இருங்க நான் சீக்கிரமே வந்துடுவேன்..."
என்று மேலும் ஏதேதோ கூறி அழைப்பை துண்டித்தாள். அதன் பிறகே மூவரும் பிடித்து வைத்த மூச்சை விட்டனர்‌.

இரவு உணவை முடித்து மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு , நாளை முதல் வேலையாக ஊர் தலைவரை சந்திக்க வேண்டும் என்ற முடிவுடன் தூங்கச் சென்றனர் ..
சம்யு நிலாவுடன் தூங்குவதாக
கூற மறுத்துவிட்டாள் நிலா ‌.

இன்றும் நிலாவுக்கு கனவு வந்தது ..
ஆனால் இது பழைய கனவு போல் இல்லாது ஒரு உண்மை நிகழ்வு போல் தோன்றியது நிலாவிற்கு ....

தொடரும்....
 

Mafa97

Member
Wonderland writer
அத்தியாயம் 6

நிலாவின் கனவில் ....
காட்சி மங்கலாக இருந்தது... யாரோ ஒரு பெண்ணும் ஆணும் காதலர்கள் போல் தெரிகிறது.. இருவரும் சந்தோஷமாக ஏதோ பேசி சிரித்து தங்க நேரத்தை கழிப்பது போலவும் ஒரு காட்சி தோன்றியது.... அவளுக்கு முகம் தெளிவில்லாமல் இருக்க நிலாவால் யாரென்று அவர்கள் இருவரையும் அடையாளம் காண முடியவில்லை..
இப்பொழுது வேறொரு காட்சி தோன்றியது ..ஒரு பெண் குழந்தையுடன் இருவரும் சந்தோசமாக இருக்கும் காட்சி தான் அது.
அக் குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் போல.. திடீரென்று காட்சி மாறியது...அடுத்தக் காட்சியில் அந்தப் பெண் துடிதுடித்து இருப்பது போல கட்சி தோன்றியது...

திடுக்கிட்டு விழித்தால் நிலா. நினைத்தவள் சுற்றுமுற்றும் பார்க்க தனது அறையிலேயே இருப்பதை உணர்ந்து மேசையின் மேலே இருந்த நீரை பருகினாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்துக் கொண்டே எழுந்து சென்று ஜன்னல் வழியே வானத்தை வெறித்துப் பார்த்தாள்...

" கடவுளே !!!என் கிட்ட என்ன தான் சொல்ல வருது இந்த கனவு... அப்படி என்றால் அந்த உயிர் இழந்த அந்த பெண்தான் தன்னிடம் கனவில் காப்பாற்ற சொல்லி உதவி கேட்கும் பெண்ணா ???"என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தாள் நிலா..

எப்போது தூங்கினாள் என்று தெரியாமல் யோசனை செய்த படியே ஜன்னலின் அருகே கீழே தரையில் உறங்கினாள் பாவையவள். காலையில் எழுந்த சம்யு நிலா எங்கே என்று பார்க்கலாம் என நினைத்து தரையில் நுழைந்தவள் கீழே தரையில் தூங்கிக் கொண்டிருந்த நிலாவை கண்டவள் மனதில் பாரம் ஏற மெல்ல அவள் அருகில் சென்று அவளை தட்டி எழுப்பினாள்..

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலா இவள் கட்டியதில் விழித்து எழுந்து கண்களைத் திறந்து மலங்க மலங்க விழித்தாள்..
" என்னடி நிலத்தில் இப்படி தூங்கி இருக்க... மறுபடியும் கனவு ஏதாச்சும் வந்ததா?"
என்று சோகமாக கேட்க
அவளை சமாளிக்கும் விதமாக
"அது... அது... ஒன்னும் இல்லடி ஆரவ் அண்ணா எங்கே ?"
என்று கதையை மாற்றினாள்.

அவளுக்கு சொல்ல விருப்பம் இருந்தால் தங்களிடம் சொல்வாள் என எண்ணியவாறே
அவள் கேட்ட கேள்விக்கு
"வெளியே போயிருக்கார்.. இன்னிக்கு ஊர் தலைவரை பார்க்கப் போகணும்னு ரெடியாகி இருக்கச் சொன்னாரு எங்க ரெண்டு பேரையும்..." என்றவள் அங்கிருந்து சென்றாள்.

சம்யு சென்றதும் பெருமூச்சுடனே எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தவள் இன்று மறக்காமல் தந்தையுடன் பேசிவிட்டு தனது அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றாள்.. ஆரவ் வந்ததும் காலை உணவை மூவரும் சேர்ந்து உண்டு விட்டு வெளியே வந்தனர்...

அப்போது சஞ்சனாவும் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
அவளைக் கண்டதும்
" ஹாய் சஞ்சனா .."
என்று நிலா கூற அவளும் பதிலுக்கு " ஹாய்..." என்று கூறி கை அசைத்துக்கொண்டே இவர்கள் அருகில் வந்தாள்.
" என்ன மூணு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?" என்ற கேள்வி நிலாவிடம் என்றாலும் பார்வை என்னவோ ஆரவ் மேலேயே இருந்தது..

அதனை கண்டு கொண்ட சங்கு வேண்டும் என்றே...
" சஞ்சனா ஏன் கேட்கிறீங்க? நீங்களும் எங்க கூட வரீங்களா என்ன ??"
என்று கேட்க ஆரவ் திரும்பி சம்யுவை முறைத்தான்.. அவனை பார்த்து கண் சிமிட்டி மீண்டும் சஞ்சனாவிடம் பார்வையை பதித்தாள் சம்யு.

"எனக்கு ஒன்னும் வேலை எல்லாம் இல்ல.. உங்க கூடவே நானும் வர்றேன்..." என்று அவர்களுடன் சேர்ந்து நடந்தாள்.
" சரி நீங்க எங்க போறீங்க ?"
என்று அவள் கேட்க நிலாவும் "சஞ்சனா எங்களுக்கு ஊர் தலைவரை பார்க்கணும். அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?" என்று கூற நடந்து கொண்டிருந்தவள் சட்டென்று நின்று விட்டாள்.

அவளை திரும்பி பார்த்த ஆரவ் "என்ன மேடம் உங்களுக்கு.. அவங்க வீட்டுக்கு வழி தெரியாதா?" என்று நக்கலாக கேட்க அவனைப் பார்த்து "இல்ல.. அது வந்து.. வந்து.. எங்களுக்கும் அவங்களுக்கும் ஆகாது ..எங்க அப்பாவுக்கு நான் வந்தது தெரிஞ்சா அப்பா என்னைத் தான் திட்டுவாரு.." என்று மெல்லிய குரலில் கூற அவளை பார்க்க பாவமாக இருந்தது மூவருக்கும்.. என்ன சொல்வது என்று தெரியாமல் என்றனர் மூவரும்.

மேலும் தொடர்ந்தவள் "வந்து.. நீங்க இப்படியே போய் மதியழகன் வீடு எங்க இருக்குன்னு கேட்டா எல்லாரும் சொல்லுவாங்க... ஊருக்குள்ள ரொம்ப பெரிய ஆளுங்க... பணக்காரர்க வேறு... எல்லோருக்கும் தெரியும்.." என்று கூறிவிட்டு தனது வீட்டை நோக்கி செல்ல திரும்பினாள்..
" சஞ்சனா ஈவினிங் எங்களை ஊர் சுற்றி பார்க்க கூட்டிட்டு போங்க ஓகேயா..."
என்று சம்யு கேட்க சந்தோஷமாக தலையசைத்து அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றாள் சஞ்சனா.

மூவரும் நேரே சென்று பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் மதியழகன் வீடு எங்கே என்று கேட்க அவரோ
" அங்க இருக்கு பாருங்க.
அந்த பெரிய வீடு தான் மதியழகன் ஐயா வீடு ..."
என்று கூறிவிட்டு சென்றார். அவ்வீட்டை கண்ட நிலா மற்ற இருவரிடமும் திரும்பி
" என்னை காப்பாற்றினார் என்று சொன்னேன் இல்ல சித்தார்த்.. அவர் வீடு தான் இது.." என்று கூறினாள்.

இரு பெண்களையும் அழைத்து கொண்டு வீட்டின் வாயிலை நோக்கிச் சென்றான் ஆரவ்..
" சார்..." என்று ஆரவ் சத்தமிட்டு அழைக்க அவனின் குரல் கேட்டு வெளியே வந்தார் பாட்டி..

வெளியே வந்தவர் அங்கு நிலவுடன் இருவர் நின்று கொண்டு இருந்ததை கண்டு
"அம்மாடி நீ நிலா தானே .....உள்ளே வாங்க "
என்று வரவேற்றார். உள்ளே சென்றதும் மூவரையும் அமரவைத்து நிலாவிடம் நலம் விசாரித்தவர் அருணாவை அழைத்து தேநீர் கொண்டு வரச் சொன்னார்..

"பாட்டி இது ஆரவ் அண்ணா.. அப்புறம் இது என்னோட பிரண்ட் சம்யுக்தா.. நான் உங்ககிட்ட அன்னைக்கே சொன்னேன் இல்ல நாங்க இங்க எதற்காக வந்து இருக்கோம்னு.. அது விஷயமாக ஊர் தலைவரை பார்க்க வந்து இருக்கோம்.." என்று அவரிடம் கூற அவரோ
" வீட்ல தான் இருக்கான் மா.. இதோ இப்ப வந்துடுவான் இருங்க.." என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே அருணா தேநீருடன் வந்தார்.. அவருடன் பேசிக்கொண்டு இருந்தனர் மூருவரும்..

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கும் போது படிகளில் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள் நிலா.. வேஷ்டி சட்டையில் மீசையை முறுக்கி விட்ட வாரே இறங்கி வந்து கொண்டு இருந்தான் சித்தார்த் ..
நேற்று அவனை கேஷுவலாக உடை அணிந்து பார்த்தவள் அதற்கு மாறாக இன்று அவனை இப்படிப் பார்க்கவும் சில கணங்கள் கண் இமைக்காமல் அவனே பார்த்திருந்தாள்‌ தன்னை மறந்து..

"இதோ வந்துட்டான் என் பேரன்... இவன் தான் நீங்க தேடி வந்த ஆள்..." என்று கூற அவரின் சத்தத்தில் தன் மோன நிலையில் இருந்து கலைந்தாள்‌. மீண்டும் அவர் கூறிய
"இவன் தான் நீங்க தேடி வந்த ஆள்." என்றதில் திகைத்தாள்..

"என்ன பாட்டி ..இவர்தான் ஊர் தலைவரா " என்று ஆரவ் பெண்கள் இருவரின் மனதில் இருந்த கேள்வியை கேட்டு விட்டான்.
" ஆமாப்பா... எப்படின்னு யோசிக்கிறீங்களா... அது இவனோட தாத்தா தான் முதல்ல ஊர் தலைவராக இருந்தார். அவருக்கு அப்புறம் அவனோட அப்பா அதாவது என்னோட புள்ள மதியழகன் தான் ஊர் தலைவராக இருந்தான்.. அப்புறம் கொஞ்ச நாளிலேயே நான் விலகி இருக்கிறேன் வேற யாராவது ஒருத்தர் தலைவரா இருங்கன்னு சொல்லி விட்டான் என் பையன். ஆனா ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஓட்டுப்போட்டு இதோ இருக்கான்ல என் பேரன் அவனை தலைவர் ஆக்கிட்டாங்க .."
என பெருமையாக கதை சொல்லி முடிக்க அங்கே வந்து சேர்ந்தான் சித்தார்த் கம்பீரமான நடையோடு..

அவன் வந்ததும் மூவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல
பதிலுக்கு வணக்கம் சொன்னவன்
"என்ன இது... நான் ஊர் தலைவராக இருந்தாலும் ஆரவ் வயசுதான் எனக்கும்... மரியாதை தந்து என்னை பெரியவன் ஆக்க்காதீங்க.. இந்த மரியாதை எல்லாம் எனக்கு தேவையில்லை..." என்று சகஜமாக அவர்களுடன் பேசத் தொடங்கினான்.. அவர்களும் அவனுடன் சகஜமாகவே உரையாடினர்.

தொடரும்.....

ஹாய் பிரண்ட்ஸ் ...🤗🤗🤗
இது என்னோட இரண்டாவது கதை.. ஏதோ நானும் கதை எழுதுறேன்னு நினைக்கிறேன்.. இந்த கதையை கொண்டுபோக உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்.. உங்கள் கருத்துக்களை தவறாமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்..🥰🥰

இப்படிக்கு
மஃபா ❤️❤️

 
Status
Not open for further replies.
Top