ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யார் அவள்? - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

Member
Wonderland writer
இறுதி அத்தியாயம்

அத்தியாயம் 10 - முன் திட்டம்
வாழ்க்கையில் முதல் தடவையாக லஞ்சத்தை எதிர்பார்திருத்தவன் தற்போது இருக்கின்ற வேலையை காத்துக்கொள்ள எப்படியாவது தப்பிச்சென்றவளை பிடித்தே ஆக வேண்டுமென பைக்கை எடுத்துக்கிளம்பிவிட்டான். எங்கு போகிறோம்? எங்கே போயிருப்பாள்? எங்கு தேடவேண்டும்? என்று எதுவும் தெரியாமல் புரியாமல் பொள்ளாச்சியின் மூலை முடுக்கிலெல்லாம் கார்த்திக்கின் பைக் புகுந்தது.

‘கார்த்திக் நீ ஒரு முட்டாள், ஒரு பொண்ணுகிட்ட போயி ஏமாந்திருக்கியே.....’

‘பொண்ணுன்னா என்ன குறைச்சல், ஷி இஸ் பிரில்லியண்ட். என்னமா ஒரு கதை சொன்னாள்’

‘உனக்கு இது வேணும்டா, வீணா மத்தவங்க பணத்துக்கு ஆசை பட்டதானே..... யூ டீசெர்வ்ட் இட். உன்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக ஒரு கதை சொல்லியிருக்காள், அத நீயும் நம்பிட்டு இருந்திருக்கியே? முட்டாள்.'

'அவள் என்கிட்டே எதிர்பார்த்த விஷயம் ரெண்டு, ஒண்ணு அவளோட கை விலங்க நான் திறந்து விடணும்.அதுக்கு நான் நம்புற மாதிரி கதை சொல்லணும். கதைல உண்மைத்தன்மை இருந்தா எல்லாரும் நம்புவாங்க. அதுக்குத்தான் அவ உண்மையான கதையையே சொல்லிட்டாள்'

'அவள் சொன்னது உண்மையான கதைன்னு நம்புறியா?'

'நிச்சயமா, அவள் சொன்ன ஒரே ஒரு பொய் என்னன்னா தான் ராதிகாங்கிறது மட்டும்தான். உண்மைய சொன்னதாலதான் எல்லாமே ரியலா இருந்திச்சு.'

'இன்னொரு விஷயம்?'

'தன்னோட அப்பா மேல இருந்த திருட்டுப்பழிய அழிக்கணும்.'

'அவர் திருடல்லங்கிறதுக்கு என்ன ஆதாரம்?'

'அதுக்குத்தானே போலீஸே அவ அப்பாவோட டெட் பாடிய தோண்டி எடுக்கும்படி வச்சிட்டா........ பிரில்லியண்ட்....'

'ஓ மை கோட்........'

'ஹேய் அவள் ஒண்ணும் போலீஸ் கிட்ட மாட்டிக்கல. போலீஸ தன்னோட பிளான்ல யூஸ் பண்ணிக்கிட்டா.'

'அது எப்பிடி?'

'அந்த நீல மலைகாட்டில படகு ரிப்பேர்னு சொன்னாங்க, யாரு ரிப்பேர் ஆக்கினாங்கன்னு யாருக்கும் தெரியுமா?'

'யூ மீன்......'

'யெஸ் எல்லாமே அவளோட பிளான் தான்...'

'எதுக்கு?'

'அப்போதானே போலீஸ் வந்து தன்னை அரெஸ்ட் பண்ணுவாங்க, அப்போதானே இப்பிடியொரு நாடகத்தை போட்டு எல்லா உண்மையையும் போலீஸ்கிட்ட சொல்ல முடியும்.'

'சரி அப்பாவ கொன்னவங்கள பழிவாங்கினவ எதுக்காக அர்ஜுன மாத்திரம் காப்பாத்தணும்.'

'அவ்வளவு பேரையும் தனியா கொல்ல முடியாதுல்ல..... பாவம் அர்ஜுன்.....'

'என்ன சொல்ல வர....'

'அர்ஜுனோட தேவை இனி அவளுக்கு இல்ல.'

'எப்பிடி அவளுக்கு அப்பாக்கு நடந்தது பற்றி தெரிஞ்சிருக்கும்?'

'அர்ஜுன் சொல்லியிருக்கலாம், ஏன் அவளோட அப்பா கூட அவரை ஹோட்டல்ல வச்சிருந்த ஒரு வாரத்துல சொல்லியிருக்கலாம். அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல.'

‘அப்பிடீன்னா அந்த நெக்லஸ்?’

'நெக்லஸ் அவளோட பியூசருக்கு தேவைதானே, எல்லாருமே சுயநலவாதிங்க கார்த்திக்.'

‘ஆமால்ல.... என்னதான் அப்பாவ கொன்னவங்களோட ஒண்ணா அர்ஜுன் இருந்திருந்தாலும் அவனை தன் கூட சேர்த்துக்கிட்டான்னா அது சுயநலம் தானே. எல்லாருமே சுயநலவாதிங்கதான் கார்த்திக். இங்க யாரும் உன்னையே உன்னோட இனியா குட்டிய பற்றியோ யோசிக்க போறதில்ல.’

இப்படியாக தனக்குள்ளே சம்பாஷணைகளை நடத்திய நெஞ்சில் அச்சத்தையும் மகளையும் கண்களில் கண்ணீரையும் சுமந்தபடி பைக்கில் பெட்ரோல் தீரும்வரை எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தான்.மூன்று வாரங்களுக்கு பிறகு, பொள்ளாச்சி"ஏங்க இங்கயே இருந்து என்னங்க பண்ண போறீங்க? வெளில நாலு பேர போயி பார்த்தாத்தானே யாருகிட்ட இருந்தாவது நமக்கு ஏதாவது கிடைக்கும்?" ஆனந்தியின் குமுறலில் சற்றும் தொய்வில்லை.

"அப்பிடி யாரு காலையாவது புடிச்சு பணம் வாங்கிறதுக்கு விஷத்த குடிச்சு செத்துப்போயிடலாம். உன்னோட பேச்சை கேட்டுத்தான் இப்போ இருந்த வேலையும் இல்லாம ஆறு மாச சஸ்பென்ஸில இருக்கிறன். இன்னும் வெளில போய் இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்துகிறதுக்கா....." கார்த்திக் வேலை பறிபோன கோபத்தினை ஆனந்தியிடம் காட்டிக்கொண்டிருந்தான்.

"சும்மா உங்க வீரத்தை என்கிட்ட காட்டாதீங்க. ஒரு பொண்ணு உங்கள ஏமாத்திட்டு போயிருக்கா. என்ன போலீஸோ?" என்று கார்த்திக்கின் கோபத்தை மேலும் கிளறிவிட்டாள்.

என்னதான் கோபப்பட்டாலும் ஆனந்தி சொல்வது உண்மைதானே, தான் ஒரு கையாலாதவனாகிவிட்டேன் என்பது கார்த்திக்கிற்கு தாங்க முடியாத வலியைக்கொடுத்தது.

மகளையும் காப்பாற்ற துப்பில்லை, வேலையையும் காப்பாற்ற முடியவில்லை. கட்டின மனைவியிடமும் மரியாதையில்லை, இனி வாழ்வதிலும் அர்த்தமில்லை என்று முடிவெடுத்த கார்த்திக் கனத்த இதயத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.

வெளியே செல்ல முற்பட்ட கார்த்திக்கை எதிரில் வந்த நபர் மறித்து "சார் இங்க கார்திக்கின்கிறது?" என்று இழுத்தான்.

"நான் தான் சொல்லுங்க" என்று வேண்டா வெறுப்பாக பதிலளித்தான் கார்த்திக்.

"சார் நான் ஸ்பீட் மெயில் கொரியர்ல இருந்து வரன், உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு."

"எனக்கா? எங்கயிருந்து? யாரு அனுப்பியிருக்கா?"

"ராதிகான்னு போட்டிருக்கு சார்." என்று கூறிவிட்டு கார்த்திக்கிடம் கையெழுத்து வாங்கி ஒரு பெட்டியை ஒப்படைத்துவிட்டு கிளம்பினான் அவன்.

பார்சலில் ஊட்டி அட்ரஸையும் ராதிகாவின் பெயரையும் பார்த்த கார்த்திக்கிற்கு எதுவும் புரியவில்லை. பெட்டியை உடைத்த கார்த்திக்கிற்கு உள்ளே ஒரு கடதாசியும் ஒரு சிறிய துணிப்பையும் இன்னொரு பெரிய பார்சலும் காத்திருந்தன. சந்தேகத்துடன் கடதாசியை திறந்த கார்த்திக்கிற்கு அது ஒரு கடிதம் என விளங்கியது.

'டியர் கார்த்திக் சார், நான் விஷாலி, உங்களுக்கு "ராதிகா". லாஸ்ட்டா ஒருதடவை உங்கள கான்டக்ட் பண்ணனும்னு யோசிச்சன், ஏன்னா உங்களுக்கும் எனக்கும் இன்னும் டீலிங் முடியலையே. இந்த சின்ன பார்சல்ல இருக்கிறது உங்க பொண்ணு இனியாவுக்கு என்னோட கிஃப்ட், பெரிய பார்சல் உங்களோட வேலைக்கு ஏதோ என்னாலான சின்ன கிப்ட்டா இத வச்சுக்கோங்க.டைம் வேஸ்ட் பண்ணிடாதீங்க. இனி உங்க வேலைல நான் குறுக்க வரமாட்டன். பெஸ்ட் ஒப் லக் சார்."

கடிதத்தை வாசித்ததும் கார்த்திக்கிற்கு உள்ளே என்ன இருக்கின்றதென்று அறிய ஆவலுடன் சிறிய துணிப்பையை திறந்தான். அவன் கண்ணை அவனே நம்பவில்லை. வைர நெக்லஸ் பல்லைக்காட்டி இழித்துக்கொண்டிருந்தது. தன் மகளுக்கான பரிசாக அந்த விலைமதிப்பில்லா நெக்லஸ் வந்ததை கார்த்திக்கால் நிச்சயமாக நம்பமுடியவில்லைதான்.

உடனடியாக பெரிய பார்சலை திறந்தவனுக்கு ஒரு ரத்தக்கறை படிந்த கத்தியும் ஒரு சாவியும் ஒரு விலாசம் எழுதிய துண்டும் கிடைத்தது. விலாசத்தில் ஊட்டியிலுள்ள ஒரு ரிசார்டின் பெயர் இருந்ததும் உடனடியாக உதகை புறப்பட்டான் கார்த்திக். அங்கு சென்று அந்த குறிப்பிட்ட ரிஸார்ட்டை கண்டுபிடித்து அந்த சாவிக்குரிய கதவைத்திறந்த போது அங்கு அவன் கண்டதோ கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்தில் காணப்பட்ட அர்ஜுனைத்தான்.

சில நாட்களுக்கு பிறகு, பொள்ளாச்சி"ஆனந்தி உங்க பொண்ணு கம்ப்ளீட்லி ஆல்ரைட். ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்."

"ரொம்ப நன்றி டாக்டர்" என்று கண் கலங்கியபடி டாக்டரின் காலில் விழப்போனாள் ஆனந்தி.

"ஆனந்தி நன்றி சொல்லனும்னா உங்க ஹஸ்பண்டுக்கு சொல்லுங்க, அவர்தான் சரியான நேரத்தில பணத்தையும் கட்ட்டினார்." என்று சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர் ஜீவானந்தம்.

ஆனந்தியும் கண்ணீர் பெருக கை கூப்பியபடி கார்திக்கினை பார்க்க கார்த்திக்கும் கண்ணீருடன் ஆனந்தியை அணைத்துக்கொண்டான்.

"ட்ரிங் ட்ரிங்......" கார்த்திக்கின் செல்போன் ரிங்க்டோன் தான் அது.

"ஹலோ சார். குட் மோர்னிங்."

"குட் மோர்னிங் கார்த்திக். கங்கிராட்ஸ், ஒரு வழியா கொலைகாரனை புடிச்சிடீங்க. ப்ரோமோஷன் லிஸ்ட்ல உங்க பேரயும் இன்க்ளுட் பண்ணியிருக்காங்க. வாழ்த்துக்கள்."

"தாங்க் யூ சார்."

"இன்னொரு விஷயம் கார்த்திக், நீங்க ஏதோ வேலைய ரிசைன் பண்ணப்போறதா ஒரு ரூமர் வந்திச்சே.... அத பத்தி ஏதாவது தெரியுமா?"

"ஆமா சார், அது ரூமர் இல்ல, உண்மைதான்."

"என்ன சொல்றீங்க கார்த்திக். ஏன் என்னாச்சு?" எஸ் பி ராஜசேகரின் குரலில் ஆச்சர்யம் கலந்திருந்தது.

"எங்க நேர்மையான போலீஸா இருந்து என்னோட சுயமரியாதைய இழந்துடுவனோன்னு ஒரு பயம்தான் சார்."

"வாட் நான்சென்ஸ்? ரிசைன் பண்ணிட்டு என்ன பண்ண போறீங்க?"

"இன்னும் பிளான் இல்ல சார்." கார்த்திக்கின் கூலான பதில்கள் ராஜசேகரை கடுப்பாக்கியது.

"முட்டாள்தனமா முடிவெடுக்க வேணாம் கார்த்திக். உங்க பொண்ண யோசிச்சு பாருங்க."

"அவளுக்காகத்தான் இந்த முடிவே சார். அண்ட் போர் யுவர் இன்போர்மேசன், நான் ஆல்ரெடி ரிசைன் லெட்டர் கமிஷனர் சார்கிட்ட கொடுத்துட்டேன்."

"வாட்??????"

"தாங்க் யூ சார்" என்று சொல்லிவிட்டு போனை அணைத்துவிட்டு ஆனந்தியை பார்த்து சிரித்தான் கார்த்திக்.

"எப்பிடீங்க இவ்வளவு பணம்?"

"எப்பிடின்னு கேட்க வேணாம்னு சொன்னன்ல, உன்னோட புருஷன் யாரு வயித்திலயும் அடிச்சி சம்பாதிக்கலைங்கிறது சத்தியம்."

"சரிங்க நான் கேட்கல."

"கடவுள் நம்ம பிரார்த்தனை, கஷ்டம், நம்மளோட வாழ்க்கை எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருப்பாரு. நமக்கு தேவையான நேரம் கேட்டத விட அதிகமாவே கொடுப்பாரு. இந்த உலகத்துல எல்லாருமே சுயநலவாதிங்க இல்ல ஆனந்தி. நல்லவங்களும் இருக்காங்க." கார்த்திக் கூறியதில் பாதி ஆனந்திக்கு புரியவில்லை.

"எங்க போகப்போறம்ங்க?"

"லண்டன்!"பெர்மிங்ஹாம் சிட்டி, இங்கிலாந்து

பெர்மிங்ஹாம் நகரில் உள்ள ஆஸ்டன் பார்க்கில் நண்பர்களுடன் அளவளாவியபடி இயற்கையின் ரம்மியத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவி சங்கீதா மாணிக்கராஜா. சங்கீதாவாகப்பிறந்து தந்தையை கொன்றவர்களை பழிவாங்க விஷாலியாக உருவெடுத்து பொலிஸிடமிருந்து தப்பிக்க ராதிகாவாக வேஷம் போட்ட சங்கீதா.

சிறு வயதில் அப்பாவுடன் கழிந்த நாட்களையும் அவ்வப்போது அசை போட்டுக்கொண்டிருந்தவள் கடந்த சில வாரங்களில் நடந்த சம்பவங்களை அசை போடவும் மறக்கவில்லை."யெஸ் எல்லாமே நல்லதுக்குத்தான் அர்ஜுன். பிளான்ல ஒரு சேஞ்ச் அர்ஜுன்."

"என்ன விஷாலி?"

"நம்ம மும்பை போகல."

"அப்புறம்?"

"உன்ன சொர்கத்துக்கே கூட்டி போறன் அர்ஜுன். உன்னோட பிரெண்ட் கிட்ட சொல்லாத."

"எங்கன்னு சொல்லு விஷாலி?"

"டார்லிங் நான் சொன்னா கேட்க மாட்டிங்களா?"

"நீ சொன்னா எதுவும் செய்வன்டா........"

வண்டி அமைதியாக திசையை மாற்றி உதகைமண்டலம் நோக்கி புறப்பட்டது.-முற்றும்-
 

Mathithan

Member
Wonderland writer
வாசகர்களே இத்துடன் இக்கதை முடிவடைகின்றது. மீண்டும் இன்னொரு நாவலுடன் உங்களை விரைவில் சந்திக்கின்றேன். "யார் அவள்?" கதை உங்களுக்கு எவ்வித அனுபவத்தை கொடுத்தது என்பதை இங்கே கூறுங்கள். உங்களது சிறு சிறு கருத்துக்களும் என்னை மென்மேலும் எழுதுவதற்கு தூண்டும். நன்றி.
 
Status
Not open for further replies.
Top