ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யார் அவள்? - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 6 - யார் துரோகி?"ராதிகா..... ராதிகா...."

'என்னை யார் தேடுகிறார்கள், விக்ரம் உயிருடன்தான் இருக்கிறானா? கடவுள் என்னை கைவிடவில்லை' என்று நம்பிக்கை கொண்டவளாய் மெதுவாக குரல் வந்த திசையை நோக்கி தலையை உயர்த்தி அவதானித்தாள் ராதிகா.

குரல் வந்த திசையில் ராதிகா இருந்த புதருக்கு ஒரு இருபதடி தூரத்தில் உடம்பில் குருதி வழிந்தோட ஒருவன் சுற்றும் முற்றும் எதையோ தேடியபடி ராதிகா இருந்த இடத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தான்.

'அது விக்ரமா?' என கண்ணை வெளியே விட்டு அவதானித்தவளுக்கு சென்றவனின் முகம் ஒருகணம் தெரிந்ததும் அதிர்ந்து போனாள்.

'என்ன அர்ஜுன் உயிருடனா இருக்கிறானா?' சட்டென அதிச்சியடைந்தவளுக்கு அர்ஜுனின் விசுவாசம் கண் முன்னே வர "அர்ஜுன் சத்தம் போடாத" என்று குரலை தாழ்த்தி எச்சரித்தாள். ராதிகாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய அர்ஜூனுக்கும் ராதிகாவை பார்த்தது மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மகிழ்ச்சியில் நிலமை புரியாதவனாய் "ராதிகா" என நீலமலைகாடே அதிரும்படி கத்தி குதூகலித்தான் அர்ஜுன்.

"ஹலோ ராதிகா, என்ன சொல்றீங்க? அர்ஜுன் அப்போ சாகலையா? உங்கள காப்பாத்த வந்த அர்ஜுன் எதுக்கு உங்க பேர சொல்லி கத்தணும்? புரியலையே!....." இன்ஸ்பெக்டர் கார்த்திக் குழப்பத்தில் தத்தளித்தான்.

கார்த்திக்கை நோக்கி ஏளனமாக சிரித்த ராதிகாவும் "அர்ஜுன் என்ன காப்பாத்த வந்தான்னு யாரு சொன்னா?" சலித்துக்கொண்டாள்.

"அப்பிடீன்னா?"

"அவனும் விஷாலியும் தான் அவ்வளவு கொலையும் பண்ணினதே......."

"என்ன!!!!!!????" கார்த்திக் இந்த ட்விஸ்டை எதிர் பார்த்திருக்கவில்லை.

"ஆமா கார்த்திக் சார்...."

"அப்பிடீன்னா அந்தக்கத்தில இருக்கிற இன்னொரு கை ரேகை அர்ஜுனோடதானா?"

"அந்தக்கத்திய அர்ஜுன்தான் விஷாலிகிட்ட கொடுத்தான், அததவிர அர்ஜூன்கிட்ட இன்னொரு கத்தியும் இருந்திச்சு, அத நான் பார்த்தன் சார்."

"இன்னொரு கத்தியா? எங்க அது?"

"ரத்தக்கறையோட இன்னொரு கத்திய அர்ஜுன் இடுப்பில சொருகி வச்சிருந்தான். விக்ரமோட பாடிய அவன் தூக்கிட்டு போகும் போது பார்த்தன்."

அர்ஜுனிடமிருந்த கத்தியால்தான் எல்லா கொலைகளும் இடம்பெற்றிருக்கிறதென்பது கார்த்திக்கிற்கு அப்போது புரிந்தது.

"அப்புறம் என்னாச்சு?"

"அப்புறம்........ அர்ஜுன் என்கிட்ட வந்ததும் ஏதோ ஒரு துணிய முகத்துக்கு கிட்ட கொண்டு வந்தான், பிறகு கண் முழிச்சு பார்த்தப்ப கெஸ்ட் ஹவுஸ் ரூம்ல இருந்தேன். எனக்கு முன்னாடி விக்ரம் தோள்பட்டைல குண்டடி பட்ட காயத்தோட உயிர கையில பிடிச்சிட்டிருந்தான், விஷாலி விக்ரம்கிட்ட ஏதோ கோபமா பேசிகிட்டு அப்பிடியே என் கண் முன்னாடி என்னோட விக்கிய கத்தியால குத்தி கொன்னுட்டாள்......" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராதிகாவின் கண்களை கண்ணீர் மறைத்து விட்டிருந்தது.

ராதிகாவின் உணர்விற்கு மதிப்பளித்து காத்திருந்த கார்த்திக்கிற்கு அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதும் தெளிவாக விளங்கியிருந்தது. ஆனால் இந்த கொலைக்கான காரணத்தை ராதிகா மறைப்பது ஏன் என்று மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.

"அப்புறமா என்ன நடந்திச்சு?"

"விக்ரமோட பாடிய வெளில அர்ஜுன் தூக்கிட்டு போனான். அந்த டைம்ல மயக்கத்தில இருந்த போல நடிச்சிட்டிருந்த நான் விசாலிய அட்டாக் பண்ணி அவளோட கத்திய பறிச்சுட்டன், அவ என்கிட்ட இருந்து கத்திய எடுக்க ட்ரை பண்ணினா. அந்த நேரத்துல எனக்குள்ள எப்பிடி அந்தமாதிரி ஒரு வெறி வந்துதுன்னே தெரியல. கத்தியால அவளக்குத்திட்டன். அத ரியலைஸ் பண்றதுக்குள்ள அவளும் என்ன தள்ளிவிட்டுட்டாள், அங்கருந்த டேபிள் தலைல இடிச்சதுல நானும் மயங்கிட்டன். அப்புறம் இங்க ஹாஸ்ப்பிட்டல்ல தான் கண் முழிச்சன், அதுக்கப்புறம் தான் விஷாலி இறந்துட்டான்னே எனக்கு தெரியும்"

கார்த்திக்கின் ஊகம் கிளைமாக்சில் ஒத்துப்போயிருந்தது. எனவே பெரிதாக ஆச்சர்யம் எதையும் கொடுக்கவில்லை.

"அர்ஜுன் என்ன ஆனான்?"

"தெரியல சார், விக்ரமோட பாடிய தூக்கிட்டுத்தான் போனான். மே பி எஸ்கேப் ஆகியிருப்பான்"

"போட் தான் அங்கேயே நிக்குதே? ரிப்பேர் ஆகி......."

"விக்ரமுக்கும் அர்ஜூனுக்கும் அந்தக்காடு பூரா அத்துப்படி... அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்து அங்க போறவங்க. அதனால அவன் அங்கயிருந்து எங்க போயிருப்பான்னு தெரியல"

அர்ஜுன் எங்கோ தப்பிவிட்டான் என்பது மட்டும் கார்த்திக்கிற்கு புரிந்திருந்தது.

அந்த நேரம் சிணுங்கிய செல்போனில் ஆனந்தியின் பெயரைப்பார்த்ததும் தான் அவளுக்கு முன்னிரவில் "வர கொஞ்சம் லேட்டாகும்" என அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது. 'கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னன், இவ்வளவு லேட் ஆகும்னு சொல்லலையே.... பாவம் காத்திட்டு இருந்திருப்பாள்' என்று எண்ணியவாறே காதுக்குள் போனை வைத்த படி வெளியே வந்தான் கார்த்திக்.

"ஹலோ சொல்லும்மா."

"என்னங்க இன்னும் வேலை முடியலையா?"

"ஹ்ம்ம்..... இன்னும் முடியல, நீ எனக்காக காத்திட்டு இருக்க வேணாம். தூங்கும்மா. நான் வர விடிஞ்சிடும்னு நினைக்கிறன். இனியா பாப்பா என்ன செய்றாள்?"

"அவள்தான் அப்பா எங்க? அப்பா எங்கன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காள். நீங்களே உங்க செல்ல மகள்கிட்ட சொல்லிடுங்க." என்றவாறே போனை இனியா குட்டியின் காதில் வைத்தாள்.

"ஹலோ செல்லம், தூங்காம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?"

"டாடி எப்ப வருவீங்க? எனக்கு கதை சொல்ல மாட்டிங்களா?"

"டாடி கொஞ்சம் வேலையா இருக்கன்மா, நாளைக்கு நிச்சயமா டாடி வந்து கதை சொல்றன். இன்னைக்கு மம்மி சொல்ற கதைய கேட்டிட்டு தூங்கும்மா. லேட் ஆகுதில்ல."

"மம்மிக்கு கதை சொல்ல தெரியாது டாடி, நீங்க வாங்க டாடி."

"இனியா சமத்து பிள்ளை, டாடி சொன்னா கேட்டுக்கணும். இன்னைக்கு அடம்பிடிக்காம தூங்குங்க. டாடி மோர்னிங் கதை சொல்லுவன். சரியாம்மா?"

"சரி டாடி, ஐ லவ் யூ டாடி. குட் நைட்" என்ற படி போனை ஆனந்தியிடம் இனியா கொடுக்க, மறுமுனையில் கார்த்திக்கின் கண்களோ ஈரமாகி இருந்தது.

"சரிங்க நானும் தூங்கப்போறன், நீங்க சீக்கிரம் வாங்க"

"சரி ஆனந்தி, நான் கால கட் பண்ணிடுறன்"

"என்னங்க மத்தது என்னன்னா........"

"என்ன சொல்லு ஆனந்தி?"

"என்னங்க காலைல நான் பேசினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க."

"ஹேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா? பொண்ணுல பாசம் இருந்தா யாரா இருந்தாலும் அப்பிடித்தான் கோப பட்டிருப்பாங்க."

"நான் பேசினத கேட்டு நீங்க குழப்பிக்காதீங்க, நானோ நீங்களோ மனசால யாருக்கும் எந்தக்கெடுதலும் செய்யல, இப்பிடி ஒரு கஷ்டத்த கொடுத்த ஆண்டவனுக்கு அதுக்குரிய தீர்வையும் கொடுக்கத்தெரியும்."

"ஆண்டவன் என்ன செய்றானோ தெரியல, ஆனா நான் எப்பிடியும் நம்ம பொண்ண காப்பாத்திடுவன், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீ ஒண்ணும் யோசிக்காம போய் தூங்கும்மா."

"ஹ்ம்ம்.... சரிங்க, உங்கள நம்பாம வேற யார நான் நம்புவன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ஆனந்தி.

கார்த்திக்கிற்கு ஆனந்தியின் பேச்சு சற்று ஆறுதலாகவே இருந்தது.

கார்த்திக் போனில் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவ்விடம் வந்த கிருஷ்ணமூர்த்தி கார்த்திக் கதைத்து முடிக்கும் வரை அருகிலே காத்துக்கொண்டிருந்தார்.

ஆனந்தியிடம் கதைத்துவிட்டு திரும்பிய கார்த்திக் "கிருஷ்ணமூர்த்திண்ணா பிரிண்ட் எடுத்துடீங்களா?"

"ஆமா தம்பி, அதான் உங்ககிட்ட குடுத்திட்டு போலாம்னு வந்தன்."

கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த புகைப்பட பிரதிகளை பார்த்த கார்த்திக், ராதிகாவின் வாக்கு மூலத்தை கிருஷ்ணமூர்த்திக்கு கூறினான்.

"கார்த்திக் தம்பி, இந்தப்பொண்ணு சொல்றத பார்த்தா தற்காப்புக்காகத்தான் அந்தக்கொலைய செய்திருக்குது. இந்தப்பொண்ணுக்கு உதவுறதால உங்க மனசாட்சிக்கு நீங்க பயப்படத்தேவையில்ல. கொலை பழிய அந்த ஓடிப்போன அர்ஜுன் பயல் மேல போட்டு இவள காப்பாத்துங்க. நியாயமா பார்த்தா அர்ஜுன் தானே குற்றவாளி. எதுவும் யோசிக்காதீங்க. இந்தப்பொண்ணோட அப்பா பெரிய கம்பனி முதலாளின்னு கேள்விப்பட்டன், பெங்களூர்ல கோடீஸ்வரங்களாம். நீங்க தப்பு பண்றீங்கன்னு மட்டும் யோசிக்காதீங்க."

"ஹ்ம்ம்..... அந்த தப்பிச்ச பையன எப்பிடியும் கண்டுபிடிச்சிடனும். அப்போதான் எனக்கு எந்த குற்ற உணர்வும் இருக்காதுண்ணே."

"சரி தம்பி, தேர்தல் பிரச்சார பாதுகாப்புக்கு போனவங்களும் வந்துட்டானுங்க, அவனுகளையும் ஸ்பாட்டுக்கு அனுப்பி காட்டுக்குள்ள தேட சொல்றன். மற்றது இன்னொரு விஷயம், இந்தப்பசங்களோட பேரன்ட்ஸ் கோயம்புத்தூருக்கு ப்லைட்ல வாறாங்களாம். எப்பிடியும் ஏர்லி மோர்னிங் வந்திடுவாங்கன்னு நினைக்கிறன். எதையும் சொதப்பிடாதீங்க, இனியா கண்ணுதான் நமக்கு முக்கியம். இந்தக்கழிசடை பசங்கள பற்றி யோசிக்க வேணாம்"

ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் கதைப்பதையே பிழையாக எண்ணும் பழமைவாதியான கிருஷ்ணமூர்த்தி ராதிகா மற்றும் அவளது நண்பர்களை கழிசடை என்று கூறியது கார்த்திக் எதிர் பார்த்ததுதான். அவன் எதிர்பார்க்காதது இன்னும் சிறிது நேரத்தில் ராதிகாவின் பெற்றோர் அங்கே வந்து விடுவார்கள் என்பது தான்.

கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிவிட்டு ராதிகாவினதும் மற்றைய நண்பர்களின் பெற்றோர் வந்ததும் அவர்களை கூட்டிவருமாறு சொல்லி அனுப்பிவிட்டான் கார்த்திக். பின்னர் வேக வேகமாக ராதிகா இருந்த வார்டுக்கு சென்றான் கார்த்திக்.

ஏன்? இன்னும் ராதிகா தன்னிடம் மறைத்து வைத்துள்ள அந்த ஒரு விடயத்தை கேட்பதற்குத்தான்!

"ராதிகா இன்னும் போலீஸ முட்டாளாக்க வேணாம், உங்களுக்கு தெரிஞ்ச உண்மைய மறைக்காம சொல்லிடுங்க. நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் உங்களுக்குத்தான் நஷ்டம்" திடுதிடுப்பென உள்ளே நுழைந்த கார்த்திக் இவ்வாறு கூறியதும் ராதிகா எதுவும் புரியாமல் விழித்தாள், புரியாதது போல் நடித்தாள்.

"என்ன சொல்றீங்க கார்த்திக் சார், நீலமலைக்காட்டில அன்னைக்கு நடந்த சம்பவம் முழுதையும் நான் சொல்லிட்டன். வேற என்ன சொல்லணும். இனியும் சொல்றன்னா புதுசா கிரியேட் பண்ணித்தான் சொல்லணும்."

"மிஸ் நான் உங்ககிட்ட புதுக்கதை கேட்கல, பழைய கதை கேட்கிறன்."

"பழைய கதையா?" என்று எதுவும் விளங்காதது போல ராதிகா கேட்டாள்.

"மிஸ் ராதிகா, விஷாலியும் அர்ஜுனும் உங்க பிரெண்ட்ஸ கொலை பண்ணியிருக்காங்க, உங்களையும் கொலை பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க. அப்பிடீன்னா அதோட மோட்டிவ் என்ன? அவங்க காசுக்காகவோ பணத்துக்காகவோ கொலை பண்ணிட்டாங்கன்னு பொய் சொல்லாதீங்க. அத நம்புற அளவு முட்டாள் நான் இல்ல. உங்களோட கதைய கேட்கும் போதே இது ஒரு பழிவாங்கல்னு தெளிவா தெரியுது. அதே போல விஷாலி யாருன்னே தெரியாதுன்னும் சொல்லாதீங்க. உங்களுக்கு அவள் யாருன்னு தெரியும். அடலீஸ்ட் இப்பவாச்சும் யாருன்னு கெஸ் பண்ணியிருப்பீங்க. ஸோ டைம் வேஸ்ட் பண்ணாம எனக்கு தேவையான இன்போர்மேசன குடுத்தீங்கன்னா என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். இல்லன்னா வெரி சாரி, நீங்க செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும். இஸ் இட் கிளியர்?"

கார்த்திக் மூச்சு விடாமல் தனது அனைத்து சந்தேகங்களையும் கேட்டதில் ராதிகாவிற்கு மூச்சு வாங்கியது. இவ்வளவு நேரமும் வெளிவராத பயம் எனும் உணர்வு இப்போது அவள் முகத்தில் வெளிப்பட்டது.

சில நிமிட அமைதியை பொறுத்துக்கொள்ள முடியாத கார்த்திக் சட்டெனத்திரும்பி "சாரி மிஸ் ராதிகா, என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. உண்மை என்னான்னு முழுசா தெரியாம இதில இறங்கிறது எனக்குத்தான் ரிஸ்க்." என்று கூறிய படி வெளியே செல்ல முற்பட்டான்..... இல்லை இல்லை வெளியே செல்ல போவது போல பாசாங்கு செய்தான்.

"சார் நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறன்......" கார்த்திக் எதிர்பார்த்த அந்தப்பதில் கிடைத்தது.

ராதிகாவை முறைத்துப்பார்த்த கார்த்திக் "எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க மிஸ், நேரம் ரொம்ப குறைவா இருக்குது" பொறுமையிழந்தவனாக கத்தினான்.

"விஷாலிய இதுக்கு முன்னாடி நான் பார்த்தது கூட இல்ல, ஆனா அவள் எங்க எல்லாரையும் கொலை பண்றதுக்காக வந்திருக்காள்னதுமே அவள் மாணிக்கத்தோட பொண்ணாத்தான் இருப்பாள்னு புரிஞ்சுக்கிட்டேன்"

"யாரு மாணிக்கம்?"

"நீலமலைக்காட்டில இருக்கிற விக்ரமோட கெஸ்ட் ஹவுஸ்ல இருந்த வேலைக்காரர்."

"யார் அவர்? அவர் இப்போ எங்க?" என்று புருவத்தை உயர்த்தி நீலமலைக்காட்டில் நடந்த ரகசியத்தை கேட்க தயாரானான் கார்த்திக்.- தொடரும்-​
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 7 - பெண்ணாசை"யார் அவர்? அவர் இப்போ எங்க?" என்று புருவத்தை உயர்த்தி நீலமலைக்காட்டில் நடந்த ரகசியத்தை கேட்க தயாரானான் கார்த்திக்.

"மாணிக்கம் ரொம்பகாலமா விக்ரமோட வீட்டில வேலை செய்து வந்தவர், இன் பாஃக்ட் மாணிக்கத்துக்கு சின்ன வயசா இருக்கும் போதே அங்க வேலைக்கு சேர்ந்துட்டார். முழுப்பெயர் மாணிக்கராஜா. அவருக்கும் விக்ரமோட அப்பா சண்முகவடிவேலுக்கும் ஒரே வயசுதான். சண்முகவடிவேல் கூடவே வளர்ந்தபடியா அவருக்கு மாணிக்கத்த ரொம்ப பிடிக்கும். விசுவாசத்துக்கு இன்னொரு பெயர் மாணிக்கம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பார்."

"ஓகே மிஸ், அதெல்லாம் சரி, இந்த கொலைகளுக்கும் மாணிக்கத்துக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுங்க?" கார்த்திக் கதை கேட்க பொறுமையில்லாதவனாக இருந்தது ராதிகாவிற்கும் புரிந்தது.

"அதத்தான் சொல்ல வரன் சார், விக்ரமோட அப்பாட இந்த சிநேகிதம் விக்ரமோட அம்மா மஞ்சுளாதேவிக்கோ விக்ரமுக்கோ கொஞ்சம் கூட பிடிக்கல, அதாவது ஒரு வேலைக்காரன வீட்டில ஒருத்தனா பார்க்கிறது பிடிக்கல. இத தெரிஞ்சுக்கிட்ட விக்ரமோட அப்பா மாணிக்கத்த தான் புதுசா வாங்கின நீலமலைக்காடு பங்களாவுக்கு அனுப்பி அங்கேயே இருந்து அந்த பங்களாவ பார்த்துக்கொள்ளும்படி சொல்லியிருந்தார்"

"அப்புறம்?......."

ராதிகாவும் கார்த்திக்கின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தாள்.

"கார்த்திக் சார் நான் இப்ப இந்த ரகசியத்தை உங்ககிட்ட சொன்னா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு எப்பிடி நம்புறது? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு உங்க போலீஸ் புத்திய காட்டீட்டிங்கன்னா?"

"மிஸ் உங்களுக்கு வேற ஆப்சன் இல்ல, என்கிட்ட சொல்லாட்டி கோட்ல வக்கீல் முன்னாடி சொல்ல வேண்டி வரும். பரவால்லயா?"

"அதுக்கில்ல சார், நான் சொல்லப்போற விஷயம் செத்துப்போன என்னோட பிரெண்ட்ஸுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும், எங்க பேரண்ட்ஸ் யாருக்கும் தெரியாது. அதான்......." என்றபடி இழுத்தாள்.

தனக்கு அந்த ரகசியம் தெரிந்தால் மாத்திரமே ராதிகாவின் அப்பாவிடமிருந்து கிருஷ்ணமூர்த்தி சொன்னபடி ஏதாவது கறக்கலாம் என்ற விடயத்தில் தெளிவு பெற்றிருந்தான் கார்த்திக். எனவே தனக்கு கிடைக்கப்போகும் துருப்புசீட்டை அடைய சில பொய்களை சொல்லத்தயங்கவில்லை கார்த்திக்.

"நீ என்ன முழுசா நம்பலாம்மா, இந்தக்கொலைகள அர்ஜுன்தான் செய்தான்னு நிரூபிக்கிறது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமில்ல. ஆனா அதெல்லாம் உன்னோட கைலதான் இருக்கு. நீ செய்த குற்றத்துக்கும் ஒரு விலை இருக்கு."

"நான் உங்கள நம்புறேன் சார், ஆனா நீங்கதான் நான் சொல்றத நம்பாம இன்னமும் என்னோட கைல விலங்கு மாட்டியிருக்கீங்க. நான் வாஷ் ரூமுக்கு போகணும். அடலீஸ்ட் அதுக்காச்சும் விலங்க கழட்டி விடலாமே."

தற்போது ராதிகா தன்னை முழுவதுமாக நம்புவதே தனக்கு அவசியம் என கண நேரத்தில் முடிவெடுத்த கார்த்திக் ராதிகாவின் கை விலங்கை திறந்து விட்டான்.

கை விலங்கிலிருந்து விடுபட்டதும் ராதிகா உடனடியாக வாஷ் ரூமுக்குள் சென்றாள்.

'ச்சா.... ஒரு பொண்ணுகிட்ட எப்பிடி விசாரணை பண்ணனும்னு கூட நமக்கு தெரியலையே, அவளும் பொம்பள போலீஸ்னா கேட்டிருப்பா, ஒரு ஆம்பளைகிட்ட எப்படி கேட்பா? நம்மதான் புரிஞ்சு நடந்திருக்கணும்' என்று தனது அசண்டையீனத்தை நினைத்து நொந்து கொண்டான் கார்த்திக்.

சிறிது நேரத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

"தேங்க்ஸ் கார்த்திக் சார், உங்களோட லைஃபே இந்த கேஸ் மூலமா மாறப்போகுது. நான் எல்லாத்தயும் சொல்லிடுறன்".

"சொல்லுங்க"

"இது மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சு, அப்போ நானும் விக்ரமும் பர்ஸ்ட் இயர் காலேஜ்ல படிச்சிட்டிருந்தோம். அப்ப வந்த பர்ஸ்ட் செமெஸ்டர் ஹாலிடேய்ஸ்ல முதல் தடவையா நாங்க நீலமலைக்காட்டில இருக்கிற விக்ரமோட பங்களாவுக்கு போனோம்."

"நாங்கன்னா யாரு யாரு?"

"நான், விக்ரம், அர்ஜுன்,ராகுல்,மனீஷா, மாதேஷ் அண்ட் ரீமா."

"யாரு மாதேஷ் & ரீமா?" கார்த்திக் ஆர்வமிகுதியில் புருவத்தை உயர்த்தினான்.

"மாதேஷ் அண்ட் ரீமா லவ்வர்ஸ். எங்களோட சீனியர்ஸ். மாதேஷ் தமிழ்நாடு ஹோம் மினிஸ்டர் ரங்கராஜோட பையன். ரீமா எம் எல் ஏ பழனியப்பனோட பொண்ணு. விக்ரமுக்கு மாதேஷ முன்னாடியே பழக்கம். அதனாடி அவங்களையும் கூட்டிகிட்டு போனோம்."

"அந்த டைம் மாணிக்கமும் அங்கதான் இருந்தாரா?"

"ஆமா, அவர் அங்கதான் இருந்தார்."

"சரி, அப்புறம்......."

"வழமையைப்போல நல்லா என்ஜாய் பண்ணினோம்......"

"வெயிட் வெயிட் வெயிட் ..... நீங்க அங்க என்ஜாய் பண்ணினதெல்லாம் நான் கேட்கல, அதுக்கு எனக்கு நேரமும் இல்ல. என்ன ப்ரோப்ளம் நடந்துச்சு. அத மட்டும் சொல்லுங்க..."

"சொல்றன் சார்."மூன்று வருடங்களுக்கு முன்னர், நீலமலைக்காடு

"பிரெண்ட்ஸ் என்னையும் ரீமாவையும் இப்பிடி ஒரு இடத்துக்கு கூட்டி வந்து இவ்வளவு சந்தோசப்படுத்தின விக்ரமுக்கு தாங்க்ஸ் சொல்லி அவன வெளியாளாக்க நான் விரும்பல. அவன் என்னோட கூடப்பிறக்காத தம்பி. இ லவ் யூடா விக்ரம்." போதையில் எதையோ உளறிக்கொண்டிருந்தான் மாதேஷ்.

விக்ரமும் மாதேஷின் தோளுடன் தோள் கொடுக்க மீண்டும் ஆட்டம் பாட்டம் தொடங்கியது.

அனைத்து குடிமகன்களுக்கு குடிமகள்களுக்கும் ஓடி ஓடி பணிவிடை செய்து கொண்டிருந்தார் வேலைக்காரர் மாணிக்கம்.

சில மணி நேரம் தொடர்ந்த குடியும் கும்மாளத்தையும் தற்காலிகமாக இடை நிறுத்திய மாதேஷ் ரீமாவை தன்னருகே அழைத்து அணைத்துக்கொண்டான்.

"ரீமாவுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமுன்னு அடுத்த வாரம் வர்ற அவளோட பேர்த் டேக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருந்தன். ஆனா அத இன்னைக்கு குடுக்கிறதா முடிவு பண்ணிட்டன். பிகாஸ் டுடே இஸ் த ஹப்பியஸ்ட் டே இன் மை லைஃ ப்." என்று கூறிய படி உள்ளே தனது அறையினுள் சென்று ஒரு சிறிய பாக்ஸினை கொண்டு வந்தான் மாதேஷ்.

அனைவரின் கண்களும் அகலமாக விரிய உள்ளேயிருந்து ஒரு வைர நெக்லஸை எடுத்த மாதேஷ் அதனை ரீமாவின் கழுத்தினில் போட்டு விட்டான்.

இரத்தினக்கற்கள் பதித்த அந்த நெக்லஸினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா.

ஆனந்தக்கண்ணீர் சொரிந்து கொண்டிருந்த ரீமாவினை ஆரத்தழுவிக்கொண்டிருந்தான் மாதேஷ். இருவரும் "ஐ லவ் யூ", "உனக்காக எது வேணுமுன்னாலும் செய்வன்டி செல்லம்", "நீயில்லாம நானில்லை" போன்ற சினிமா வசனங்களை தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரின் அந்நியோன்னியத்தையும் குலைக்கும் விதமாக அர்ஜுன் முந்திரிக்கொட்டை மாதிரி அந்த கேள்வியைக்கேட்டான்.

"மாதேஸ்ண்ணா இந்த நெக்லஸ் ஒரு அஞ்சு லட்சம் வருமா?"

காதல் மயக்கத்தில் இருந்த மாதேஷ் அர்ஜுன் குரல் கேட்டு திரும்பி "என்ன அஞ்சு லட்சமா? என்னோட டார்லிங்க்கு வெறும் அஞ்சு லட்சமா? இதில இருக்கிற ஒரு ரத்தினக்கல்லோட பெறுமதியை அஞ்சு லட்சத்தை தாண்டிடும்டா முட்டாள்" என்று அர்ஜுன் மீது வெறுப்பை உமிழ்ந்தான் மாதேஷ்.

"அப்பிடீன்னா இது எவ்வளவு வரும்?" ஆர்வ மிகுதியில் விக்ரம் வாயை தொறந்தான்.

"இதோட விலை அறுபது லட்சம்" விலையை சொன்னவுடன் நண்பர்கள் மத்தியில் ஒரு நிசப்தம்........

சில வினாடிகள் நீடித்த அமைதியை அர்ஜுனின் குரல் மீண்டும் குலைத்தது.

"ரீமா அக்கா நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க." என்று கூற ரீமாவும் பதிலுக்கு 'ஆம்' என்பது போல தலையசைத்தாள்.

இங்கு நடப்பதையெல்லாம் ஒரு மூலையில் நின்றபடியே நோட்டமிட்டுக்கொண்டிருந்தார் மாணிக்கம்.

நண்பர்கள் எல்லோரினதும் வஞ்சப்புகழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஓய அன்றைய தின கேளிக்கை கொண்டாட்டங்களும் முடிவுக்கு வந்தன. அடுத்த நாள் ஊருக்கு புறப்பட வேண்டியிருந்ததால் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கும்மாளத்தை முடித்துக்கொண்டனர் விக்ரமும் சகாக்களும்.

அனைவரும் தம் படுக்கைக்கு சென்ற பின்னரும் அவ்விடத்திலேயே அசையாமல் இருந்தாள் ராதிகா. விக்ரமுக்கும் ராதிகாவின் எண்ணம் என்னவாகவிருக்கும் என்று ஓரளவுக்கு விளங்கியிருந்தது.

"ராதிகா.......... என்ன யோசனை?" என்று சிரித்தபடியே கேட்டான் விக்ரம்.

முறைத்துப்பார்த்த ராதிகாவும் "விக்கி உனக்கு தெரியாதா?" என்று உறுமினாள்.

"சரிடி செல்லம், கோபிக்காத.... சீக்கிரமே உனக்கும் ஒரு நெக்லஸ் வாங்கித்தாறன். ஓகேயா?"

"எனக்கு நீ நெக்லஸ்ல்லாம் வாங்கித்தர தேவையில்லை...."

"அடடா, நான்தான் வீணா வாய குடுத்திட்டானா?" என்றபடி சிரிக்கத்தொடங்கினான் விக்ரம்.

"சிரிக்காத விக்கி, நான் சீரியசா கதைக்கிறன்" என்று மீண்டும் எரிந்து விழுந்தாள் ராதிகா.

"நெக்லஸும் வேணாம்கிற, சிரிக்கவும் வேணாம்னா, அப்ப என்னதான் வேணும்?"

"நெக்லஸ் வாங்கித்தர வேணாம்னு தான் சொன்னன், நெக்லஸே வேணாம்னு சொல்லல விக்கி."

"புரியல."

"எனக்கு அந்த நெக்லஸ் தான் வேணும்!!!!!"

"ராதிகா உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா? அத எப்பிடிடி ரீமா குடுப்பாள்? இல்ல, அத வாங்கத்தான் என்கிட்ட பணமிருக்கா? அறுபது லட்சமாம்..... " என்று வாயைப்பிளந்தான் விக்ரம்.

"உன்ன யாரு வாங்க சொன்னா, நீ எடுத்திடு.... சிம்பிள்...."

"களவெடுக்க சொல்றியா?"

"ஹேய் நீ ஒண்ணும் உத்தமன் மாதிரி என்கிட்ட நடிக்காத. நீயும் ராகுலும் அர்ஜுனும் சேர்ந்து அங்கிள் கிட்ட இருந்து பணம் எடுத்தது, ராகுலோட பழைய கேர்ள் பிரெண்ட் அனிதாவோட செயின எடுத்ததெல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா?"

"சரி சரி, எல்லாத்துலயும் உனக்கும் பங்கு கொடுத்தத மறந்துடாத....... எல்லாம் ஓகே. முன்ன செய்ததெல்லாம் சின்ன சின்ன திருட்டு. பிடிபட்டிருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு செய்தது.. இது ரிஸ்க் அதிகம்டி."

"விக்கி உனக்கு அந்த நெக்லஸ் மேல ஆசை இல்லைன்னு மட்டும் சொல்லிடாத. அந்த நெக்லஸ மாதேஷ் எடுத்ததும் உன்னோட ரியாக்சன் என்னன்னு நானும் பார்த்தன். அது மட்டும் எங்ககிட்ட இருந்தா எவ்வளவு கெத்துன்னு தெரியுமா?" விக்ரமின் ஆசையை தூண்டினாள் ராதிகா.

"நீ சொல்றது எனக்கு புரியுது, தனியா எப்பிடி செய்றதுன்னு.........."

"தனியா இல்ல விக்கி, அதுதான் ரிஸ்க். கூட இருந்தவங்க எல்லாருக்கும் பங்கு இருந்தாத்தான் நமக்கு சேஃப்."

ராதிகா சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட விக்ரம் நள்ளிரவில் ரகசிய கூட்டத்தை கூட்டி அனைவரையும் கூட்டுகளவாணியாக்கினான்.

திட்டத்தைக்கேட்டு பயந்த அர்ஜுன் "மாட்டிக்கிட்டா நிச்சயம் ஜெயில்தான். அதோட இந்த நெக்லஸ வெளியில போடவும் முடியாது. போட்டா மாட்டிடுவம். இங்க வச்சு காணாம போனா அது நம்ம எடுத்ததுன்னு தெளிவா தெரிஞ்சிடும். ஸோ இப்ப எடுக்க வேணாம். தேவைன்னா பிறகு பார்த்துக்கலாம்." பயத்தை வெளிக்காட்டாமல் களவை பிற்போட ஐடியா கொடுத்தான்.

"அர்ஜுன் சொல்றதிலயும் பாயிண்ட் இருக்கு. இப்ப அவசரப்பட வேணாம்னு எனக்கும் தோணுது." அர்ஜூனுடன் துணைக்கு ராகுலும் இணைந்தான்.

"இல்லடா, முன்னாடி அந்த நெக்லஸ பார்த்தப்ப எனக்கும் அது எனக்கு சொந்தமாயிருக்கணும்னு தோணிச்சு. இப்போ ராதிகா சொன்னதுக்கப்புறம் அத விட்டு போக மனமில்ல. இன்னைக்கு விட்டா இனி சான்ஸ் கிடைக்காது. இப்போ எடுத்து எங்கயாவது மறைவா வச்சிடலாம். இன்னும் ஒரு வருஷத்துல மாதேஷ் அண்ட் ரீமாவுக்கு காலேஜ் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் அவங்கள பார்க்கவே போறதில்ல. அப்புறம் நம்ம ஆட்சிதான்."

"நாளைக்கு என்னடா பதில் சொல்லுவ?" இது பயத்தில் பேச்சு மூச்சற்று இருந்த மனீஷாவின் குரல்.

"அதான் மாணிக்கம் இருக்காருல்ல......" என்று சொல்லி விட்டு கபடச்சிரிப்பு சிரித்தான் விக்ரம்.

"டேய் விக்கி அவர் பாவம்டா, போலீஸ்கிட்ட மாதேஷ் போய்ட்டா நம்ம மாட்டிக்குவம்" அர்ஜுனுக்கு மனம் கேட்கவில்லை.

"அடேய் அரசியல் தெரியாம இருக்கிறியேடா, இந்த அறுபது லட்சம் எங்கேயிருந்து வந்திச்சு, அவ்வளவும் அவனோட அப்பா ஊழல் செய்து வந்த பணம். அதனால நிச்சயமா போலீஸ்ல கேஸ் போட மாட்டான். என்ன சொல்ற ராதிகா?"

"எனக்கும் இந்த சான்ஸ விட விருப்பமில்ல, அதேபோல இந்த விஷயம் எங்களுக்குள்ள மாத்திரம்தான் இருக்கணும். இது சக்ஸஸ் ஆச்சுன்னா எல்லாருக்கும் ஷேர் இருக்கு. மாணிக்கம் மேல இப்ப பழிய போட்டுட்டு அப்புறமா அவருக்கும் ஏதாவது செட்டில் பண்ணிடலாம்."

"அப்பிடீன்னா உடனடியா மாணிக்கத்த தலைமறைவாக சொல்லிடனும்." என்று மனீஷாவும் தன் பங்குக்கு ஐடியா கொடுத்தாள்.

குறுக்கிட்ட விக்ரமோ "மாணிக்கம் அப்பாவுக்கு ரொம்ப விசுவாசமான ஆளு, அதோட நேர்மை, உழைப்பு அப்பிடி இப்பிடீன்னு பிதற்றுற கேஸ். ஸோ அவர்க்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்துக்கணும். தெரிஞ்சா எல்லா பிளானும் சொதப்பிடும்." என்று கூற,

"விக்கி சொல்றதும் சரிதான், அப்பிடீன்னா மாணிக்கத்திட்ட வேற ஏதாவது சொல்லி ஊருக்கு அனுப்பிடனும்." என்று ராதிகா கூற,

"அதுவும் நைட்டோட நைட் அனுப்பிடனும், நாளைக்கு அந்தாள் இங்க இருந்த தடம் இருக்க கூடாது. அத நான் பார்த்துக்கிறன்." என்று விக்ரமும் தீர்வொன்றை கூற, மேலும் எதுவித சிக்கல்களும் இல்லாதது போல அனைவரும் அடுத்து திருட்டொன்றுக்கும் மறுநாள் நாடகம் ஒன்றிற்கும் தயாராகினர்.- தொடரும்-​
 
Status
Not open for further replies.
Top