முத்தம் : 16
அடுத்த நாள் காலை முதலே அவளுக்கு பாதி ஆதிவாசி வாழ்க்கையை காட்டியவன் இப்போது ஒரு மலையின் அடிவாரத்தில் கொண்டு வந்து நிறுத்தினான்.
அமிர்தாவோ அந்த மலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே அவனை பார்க்க, அவனோ இடையில் கயிற்றைக் கட்டிக் கொண்டு மலை மேல் ஏற ஆயத்தமானன்.
எப்போதும் போல் அவன் செயலில் அதிசயத்துப் போனவள், ஆள விடு டா சாமினு ஓட்டம் பிடிக்க ஆயத்தமாக, அவள் சோல்டர் பேக்கை பிடித்து இழுத்து அவள் இடையிலும் கயிற்றை கட்டி, அந்த கயிற்றை அவனுடன் சேர்த்து கட்டிக் கொண்டு அவளுடன் மலையேறினான்.
"டீல் ஓகே ஆனதுக்கு பார்ட்டி கொடுப்பீங்கனு ஆவலா இருந்தேன். இப்படி என்ன பார்ட் பார்ட்டா வதைக்கிறீங்களே" என்று புலம்ப,
"இது தான் என்னோட பார்ட்டி. என்ஜாய் பண்ணு.."
"எங்க என்ஜாய். என் ஜோலி முடிய போறது உறுதி. எதுக்கு இந்த வீர சாகசம்லாம் பண்ண வைக்கிறீங்க. நேர் வழியாவே போகலாமே" என்று அவன் முதுகுக்கு பின்னால் இருந்து அவள் கேட்க,
"நேர் வழில போனா நாம போய் சேரவேண்டிய இடத்தை அடைய ரொம்ப நேரமாகும்" என்றான் கைகளில் பலம் கொண்டு பாறை இடுக்குகளை பிடித்து மேலே ஏறியபடி.
"இது ரிஸ்க். தவறினோம் மர்கயா தான்."
"ஆனா சரியா ஏறினா... சீக்கிரம் இலக்கை அடையலாம். எல்லாரும் போற வழில போறதுல என்ன ஸ்பேசாலிட்டி இருக்கு. உனக்குன்னு ஒரு இலக்கை நிர்ணயிச்சு, கரடு முரடா இருந்தாலும் உனக்குன்னு தனி பாதையை உருவாக்கு. அப்போ தான் உலகம் உன்ன உத்து பார்க்கும்." என்று சொல்ல,
"இது பத்தாவது புக்ல உள்ள இங்கிலிஷ் போயம் தானே. யாரும் என்ன உத்தும் பார்க்க வேணாம். உறுத்தும் பார்க்க வேணாம். பல பேர் போன வழி தான் ஷேப். அதுல போறது தான் நல்லது" என்று அவன் வயிற்றோடு இறுக்கி பிடித்தபடி அவனுடன் தொங்கிக் கொண்டே மேலே சென்றள் அமிர்தா.
மெல்லிய கார சாரமான வாக்கு வாதத்துடன் இருவரும் உச்சியை அடைந்திருக்க, அவளை ஒரு இடத்தில் ஓய்வெடுக்க விட்டவன், சாப்பிட ஏதாவது எடுத்து வருவதாக அங்கிருந்து சென்றான்.
அவன் உடைமைகள் அடங்கிய பையும் அவளிடம் தான் இருந்தது. லேப்டாப் கூட அதனுள் தான் வைத்திருந்தான். பாண்டியன் குடும்பத்தின் பெண்ணாக லேப்டப்பை திறந்து அலச ஆரம்பித்தாள். இப்போது தான் அவன் பஸ்வர்ட் தெரியுமே. திறந்து உள்ளிருந்த போல்டர்களை ஆராய, நிறைய ஹாக்கிங் சாப்ட்வேர்ஸ். ஓரளவுக்கு அவன் கொள்ளையடித்த ட்ரிக் புரிந்தது.
யார் யார் பணத்தை கொள்ளையடித்தானோ அவர்களுடைய பர்சனல் டீடைல்ஸ் எல்லாம் பக்காவாக சேகரித்து வைத்திருந்தான். யார் பெயரில் பணம் உள்ளது, எந்த வங்கிக் கணக்கு, பிரான்ச் என அனைத்தையும் சேமித்து, அந்த நபரின் போன் அல்லது மெயிலிற்கு ஏதாவது பிளாங் மெசேஜ் அல்லது போன் கால் அனுப்பி, அவர்கள் அதை திறந்து விட்டால் மட்டும் போதும் அவர்கள் மொத்த ஜாதகமும் அவன் கையில்.
பணத்தை அடிக்க அது மட்டும் போதாது. வங்கியின் சிஸ்டம்ஸ் கூட ஹேக் செய்ய வேண்டும். தேவையற்றது என்று தூக்கிப் போடும் பொருள்களில் தான் பலரின் தலை எழுத்தே மாறிவிடுகிறது. அப்படி தான் வங்கியில் இருந்து தேவையற்ற கழிவுகள் என்று குப்பையில் கொட்டப்படும் காகிதங்கள், பத்திரங்களை அலசி அவனுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்வான். வங்கி ஊழியரின் மெயில் ஐடி கிடைத்தால் கூட போதும். மொத்த வங்கியும் அவன் வசம் ஆக்கிக் கொண்டு, தன் திட்டத்தை செயல் படுத்தி பக்காவாக அனைத்து ரெகார்டுகளையும் மாற்றி வைத்து, யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி இத்தனை நாட்கள் அனைவர் கண்ணிலும் விரல் விட்டு ஆட்டி வருகிறான்.
அவன் கையாடல் செய்த மொத்த பணத்தையும் கணக்கு பார்க்கவே தலை சுற்றியது அமிர்தாவிற்கு. பாதி வரை பார்த்தவள் அலுத்து போனாள். லேப்டப்பை மூடி வைத்து விட்டு, அவளவன் மீது தான் கண்கள் அலைபாய்ந்தது.
அவள் தேடிவந்த லேப்டப் இப்போது அவள் மடியில் இருக்கிறது. அதை திறக்கும் திறவுக் கோல் கூட அவள் கையில். இருந்தும் மனம் அதில் நாட்டம் கொள்ளவில்லை, அவள் திருடனை தான் தேடி அலைந்தது, தெரிந்தே அவனிடம் தொலைந்து போனாள். இன கவர்ச்சியோ, இளமையின் சதியோ ஏதோ ஒன்று அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்க, அவன் செயல்கள் கண்டு மிரண்டாலும் அத்தனையும் ரசிக்க தோன்றியது.
முதல் நாள் மாலை அந்த காட்டில் குதித்தவர்கள் மறுநாள் மாலையே காட்டில் இருந்து வெளிவந்து தார் சாலையை அடைந்தனர். "ரோடு வந்துடுச்சி" என்று கருநிற தார் சாலையை கண்டவள் உற்சாகமாகி குதிக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இதழ்களும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டது. போனில் சிக்னலும் கிடைக்க, யாருக்கோ அழைத்து கார் வரவழைத்தான்.
அந்த காரை பார்த்ததும் மனதில் ஏதோ இனம் புரியா வலி தோன்றி மறைந்தது. அவனை விட்டு பிரிந்து செல்லும் தாக்கமோ என்னவோ. "எப்போ சார் வீடு போய் சேருவோம்" என்று நேற்று கேட்டவள் மனமோ, அவனுடனே இருந்து விட ஏங்கி தான் போனது. அந்த ஏக்கம், தவிப்பு எதுவும் அவனிடம் இல்லை போலும். மிக மிக நிதானமாகவே இருந்தான். இருவரும் காரில் ஏற,
"சார் ரொம்ப நேரம் நடந்து வந்தது, முதுகு, கால்லாம் பயங்கரமா வலிக்குது. கொஞ்ச நேரம் முதுக சாய்ச்சிட்டு போலாமா?" என்று கேட்க, "ஹ்ம்ம்.. நீ பிரீயா பின் சீட்ல தூங்கு, நான் முன்னாடி இருக்கேன்" என்று இறங்க போனவன் கையை பிடித்து தடுத்தவள், "தூங்கணும் தான். ஆனா இங்க இல்ல. எதாவது தங்குற இடத்துல ரூம் போட்டு கொடுங்க ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்தா பிரஷ் ஆகிடுவேன். ப்ளீஸ்..." என்று முகத்தை சுருக்கி கெஞ்ச, மீன் தானாக வலையில் வந்து சிக்கும் போது, மீன் பிடிக்காமல் விடுவானா. "ஹ்ம்ம்" என்று தலையை ஆட்ட, அவளுக்கு ஏக சந்தோசம். இன்னும் கொஞ்ச நேரம் கூட அவனுடன் கழிக்கலாம் அல்லவா.
அந்த காட்டுப் பகுதியில் சிறிது தூரத்தில் அமைந்திருந்த காட்டேஜிற்கு அழைத்து சென்றான். ரோட்டை பார்த்ததும் காட்டிற்குள் இருந்து வெளிய வந்துட்டோம் என்று சந்தோசப் பட்டுக் கொண்டவள், மலையின் அடிவாரம் முதல் சிறிது சிறிதாக மலையை குடைந்து இயற்கை எழிலோடு செயற்கை அழகையும் வாரி இறைத்து கட்டப்பட்டிருந்த சிறிய காட்டேஜ்களை பார்த்து முதலில் வியந்து வாயை பிளந்தாலும், பிறகு தான் மூளை வேலை செய்தது. "நாம இன்னும் காட்டுக்குள்ள தான் இருக்கோமா?" என்று குழப்பமாக கேட்க, தன் முத்து பற்கள் தெரிய அழகாக சிரித்துக் கொண்டவன், பதில் சொல்லாமல் முன்னே செல்ல, அவனை தான் குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள்.
தங்களுக்கான அறைக்கு சென்றவன் "ரொம்ப ஹீட்டா இருக்குல?" என்று கேட்டபடி டி-ஷார்ட்டை தலை வழியே கழற்ற, "ஹ்ம்.... ஜில் தண்ணில குளிச்சா செமையா இருக்கும்" என்று சொன்னவள் அறியவில்லை அவனின் அடுத்த திட்டத்தை.
"அப்போ குளிக்கலாமா?" என்று கேட்டுக் கொண்டே அவளை கைகளில் ஏந்தி, அந்த அறையில் இருந்த கதவு ஒன்றை திறக்க, செயற்கையாக வடிவமைக்கப் பட்டிட்டிருந்த சிறிய நீச்சல் குளம் முழுதும் வெண்ணிற பனிக்கட்டிகள் மிதந்துக் கொண்டிருந்தது.
அவன் அவளை தூக்கி கொண்டதற்கே அதிர்ந்து விழி விரித்தவள் அந்த அதிர்ச்சியை முழுதாக வெளிப்படுத்தும் முன்னமே அடுத்த பேரதிர்ச்சியை காட்டி இருந்தான் அல்லவா அவளின் அர்னால்ட்.
ஆம் அர்னால்டே தான், அவன் கைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தவளால் அவன் பிடியில் இருந்து விடுபடவே முடியவில்லை. 'ஒழுங்கா வீட்ட பாக்க போயிருக்கலாம்' என்று அவள் யோசித்து கூட முடிக்கவில்லை, அவளை தூக்கி நீச்சல் குளத்தில் வீச போக, "சங்கிலி கருப்பா என்னை காப்பாத்தூ..." என்று அலறியபடி அவன் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டாள்.
அவன் வீசவில்லை என்று உணர்ந்து சிறிது ஆசுவாசம் அடைந்தவள், "எனக்கு குளிக்கவே வேணாம். இந்த தண்ணில குளிச்சா ஜன்னி வந்து ஜல சமாதி ஆகி வேண்டியது தான்" என்று பயத்தில் பிதற்ற,
குறும்பு கண்களுடன் அவளை அளவிட்டவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவளை இறக்கி விட்டு, அவன் மட்டும் நீச்சல் குளத்தில் குதித்தான்.
தப்பிச்சோம் டா சாமி என்று மூச்சு வீட்டுக் கொண்டவள், வடைக்கு ஆசைப்பட்ட காக்கா பிரியாணி ஆக போவது தெரியாமல், கரையில் அமர்ந்து காலை மட்டும் நீரில் நனைத்தபடி அவனை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நீந்தியவன் கரை ஒதுங்கி கை நீட்ட, அக்கறையாக அவனுக்கு கை கொடுத்து தூக்கி விட்டாள். உடல் முழுதும் நீர் சொட்ட சொட்ட அவள் கரம் பற்றி மேலே எழும்பிய கேடியோ, அவள் இடையை பற்றிக் கொண்டே அவளுடன் பின்னால் சரிய, அவன் திட்டம் புரியாமல் கை கொடுத்து சிக்கிக் கொண்டது மீன் குஞ்சு.
இருவரின் பாரம் தாங்காது சில அடிகள் நீர் மேலெழும்பி தெறிக்க, நிரப்பப் பட்ட பனிக் கட்டிகள் நீரின் அழுத்தத்தில் விலகி செல்ல, அது தந்த குளுமை மட்டும் உடல் முழுதும் பரவி மெய் சிலிர்க்க வைத்தது.
முழுவதும் மூழ்கி மேலெழும்பியவள், இருமிக் கொண்டே 'ஏன் இந்த சின்ன புள்ள விளையாட்டு' என்பது போல அவனை பார்க்க, மீண்டும் ஒரு மந்தகாச புன்னகை மட்டுமே அவன் இதழ்களில்.
சிரிப்பு என்ன விலை என்று கேட்கும் இதழ்களுக்கு சொந்தக்காரன் இப்போதெல்லாம் அதிகமாக சிரிக்கிறான். ஆனால் அந்த ஒவ்வொரு புன்னகைக்கும் பலியாவது அவள் அல்லவா.
எப்போதும் போல் கயவன் என்று தெரிந்தே காயப்பட விளைந்தது அவன் மீன் விழிகள். இன்னமும் அவன் கரங்கள் அவள் இடையை பற்றிக் கொண்டிருக்க, அவள் கரங்களோ அவள் வியந்து ரசிக்கும் அவன் படிக்கட்டு தேகத்தில் தான் பதிந்து இருந்தது. உடல் முழுதும் மைனஸ் டிகிரியில் விறைத்து போனாலும், அவன் நெருக்கம் உள்ளுக்குள் அனலை மூட்டியது.
அவள் விரல்கள் பரிசித்துக் கொண்டிருக்கும் கல் தூணை அவள் விழிகளும் ஆசையாக வருட, அவள் விழி மொழியில் முழுதாக அவள் தன் வசம் ஈர்க்கபட்டதை உணர்ந்து கொண்டவனும் அவள் வசம் எப்போதோ வீழ்ந்து விட்டான்.
"ஓய் டிரன்ஸ்லேட்... டூ யூ நோ பாடி லாங்குவேஜ்" குளிருக்கு சூடேற்றியது அவன் காந்த குரல்.
உலக மொழிகளை கற்று தேர்ந்தவளுக்கு உடல் மொழி பற்றி வகுப்பு எடுக்க ஆரம்பித்தான். அவளோ விழிகள் நிமிர்த்தி மிரட்சியாக அவனை பார்க்க, அவள் விழிகள் நோக்கி குனிந்தவன் இதழ்கள் அனிச்சையாக மூடிக் கொண்ட அவள் இமைகள் மீது மென்மையாக பதிந்தது.
ஆணவனின் வன்மையை கண்டு வியந்தவள், அவன் மென்மையான அணைப்புகளிலும், தீண்டல்களிலும் பனிக் கட்டியாக உருகி தான் போனாள்.
தேகம் எனும் காட்டில் மோகத் தீ பரவும் போது பனி மலையும் உருக தானே செய்யும்.
"எவரி க்ரீயேட்சர்ஸ் நீட் டூ சம் பாடி கனெக்ஷன்" என்று அவள் காதில் பள்ளியறை பாடத்தை விளக்க, அவளுக்கோ நெஞ்சு முழுவதும் பயம் இருந்தாலும், அவன் அருகாமை மதி மயங்க செய்தது. சரியா? தவறா? யோசிக்க கூட அவள் மூளைக்கு அவகாசம் கொடுக்காது, அவன் நினைவையும், அவன் மயக்கும் வார்த்தைகளை மட்டுமமே சிந்தையில் ஏற்றி அவன் மீது பித்தம் கொள்ள வைத்தான்.
அவன் இதழ்கள் அவள் கன்னகதுப்பில் மெல்ல உரசி, உணர்ச்சி வயப்படும் நேரத்தில் கன்னத்து முத்தம் கூட காம விருந்தில் அசைவம் தான் என்று சொல்லியவன் இதழ்கள் அவள் கழுத்து நரம்பில் முத்தமிட, விழிகள் கிறங்கி இமைகள் மூடிக் கொண்டவள் உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்த உணர்வில் அவன் முதுகில் நக தடங்கள் பதிய அழுந்த பற்றிக் கொண்டாள்.
அவள் உடலின் சென்சிடிவ் பாய்ண்ட் தேடி அவன் விரல்களும், இதழ்களும் ஊர்வலம் போக, அவன் சீண்டல்களுக்கு கை பொம்மையாகி போனாள் பேதை பெண்ணவள்.
காதலை அவன் யாசிக்கவும் இல்லை, இவள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இதழ்கள் சொல்ல மறந்த காதலை விழிகள் விளக்கிட, விளக்கவுரை எழுதியது இருவரின் மேனியும்.
காதல் இல்லாது கட்டில் பாடம் கசந்து தான் போகும். மீண்டும் மீண்டும் அவன் தேடலும், அவள் ஒத்துழைப்பும் உணர்த்தியதே தீர காதல், இருவரின் கூடலுக்கு தீர்வு என்று.
முத்தங்கள், அணைப்புகள், சினுங்கல்கள், மெல்லிய முனகல்கள், சுக புலம்பல்கள் என கட்டிலறை பாடத்தை அவன் கற்றுக் கொடுக்க, காதலுடன் அதை வேகமாகவே கற்று தேறிவிட்டாள் அவன் காரியக்காரி.
அவள் பிறை நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அருகில் படுத்தவன், அவள் நெஞ்சு குழியில் நீந்திக் கொண்டிருந்த மெல்லிய தங்க சங்கிலியை உருட்டி விளையாடிய படி, "கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று அவன் கேட்க, ஒரு நொடி அன்னை, தந்தை, தமையன் என அனைவர் முகமும் கண் முன் வந்து போக, அப்போது தான் அவன் போதையில் இருந்து தெளிவு வந்தது பேதைக்கு.
தயக்கமாக அவன் முகம் பார்த்தவள், "வீட்ல கேட்கணும்" என்று தயங்கி சொல்ல, அவனுக்கோ சுர்ரென்று கோபம் வந்தது. அவனுடன் ஈருடல் ஓருயிராக கலந்த போது யாரிடம் அனுமதி கேட்டாள், கல்யாணத்திற்கு மட்டும் அனுமதி கேட்க வேண்டுமாமே.
"என்ன மட்டும் தெருவுல பெத்து போட்டாங்களா. எனக்கு வீடு இல்லையா, இல்ல அப்பா அம்மா தான் இல்லையா. நான் உன் விருப்பம் மட்டும் தான் கேட்டேன்" என்று கோபமாக சொல்ல, வெட வெடத்து போனாள் அவன் புதிய பரிணாமத்தில்.
கட்டிலில் கொள்ளை இன்பம் கண்ட பிறகு தாலி கொடி வேண்டாம் என்று எந்த பெண்ணால் மறுக்க முடியும். "ஹ்ம்ம்" என்று ம் கொட்ட, அவனோ "இந்த முனங்கலாம் வேண்டா. வாய திறந்து சொல்லு. சே எஸ் ஆர் நோ" என்று விடாப்பிடியாக கேட்க, "கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள் இதழ்களில் பரவிய மெல்லிய புன்னகையோடு.