ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கதை திரி

Nithila

Member
அத்தியாயம் 2

View attachment 1211View attachment 1209

அன்றிரவு வேலை முடிந்து அபயும் விகர்ணனும் வீடு வந்து சேர்வதற்கே இரவு பதினொன்று மணியாகி விட்டது.. உள்ளே நுழைந்தவர்களுக்கு சோபாவில் சாய்ந்திருந்த பூங்கொடி தான் கண்ணில் பட்டாள்.


இவர்கள் கார் சவுண்டு கேட்டதும் கண்களை கசக்கிக்கொண்டு முழித்தவள்.. "ப்ச். அறிவில்லை தூங்காம உன்னை யாரு முழிச்சிட்டு இருக்க சொன்னா??" என விகர்ணனின் கடினக்குரலை சிறிதும் கண்டுக்காமல், "உங்க ரெண்டு பேருக்கும் வீட்டுக்கு வர்றதுக்கு இவ்ளோ நேரமா??.. ஏன் இப்ப மட்டும் வந்தீங்க??.. ஆபீஸை தலையில தூக்கி வச்சிட்டு நிக்க வேண்டிதானே.. அப்பனும் புள்ளையும்" என எரிந்து விழுந்தவளின் தோளில் கை போட்டு அணைத்தவாறே, "அம்மா.. ஆடிட்டிங் ஒர்க் மா.. நிறைய ஒர்க் மா.. செம்ம டையர்ட்.. நான் போய் பிரெஸாகிட்டு வர்றேன்.. ஏதாவது சாப்பிட செஞ்சு கொடுங்க ம்மா" என பூங்கொடியினை நைசாக தாஜா பண்ணி விட்டு ஓடியே விட்டான் அபய்..இறுதியில் மாட்டியது என்னவோ விகர்ணன்.. அபய் மாடிப்படி ஏறி முடிக்கும் வரை அமைதியாகவே நின்றவன் தன் கோட்டை சோபாவில் விட்டெறிந்தவன்.. கிச்சனுக்கு செல்ல அங்கு குருமாவை சுடு பண்ணிக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தவாறே, "பூங்கொடி" என ராகமாய் இழுத்தவனை கண்டு முறைத்தவள்..


"என்ன" என ஸ்ருதியோடு லயம் சேர்த்தாள் பூங்கொடி..


"இன்னைக்கு நிறைய ஒர்க் டி.. ரொம்ப டையர்டா இருக்கு" என கழுத்தில் முகம் புதைத்தவனை கண்டு சிரித்தவள்.. "இப்போ அதுக்கு என்ன பண்ணனும்??" என்றவளை கண்டு முறைத்தவன்..


ஏதோ சொல்வதற்குள், அபயின் 'அம்மா' என்ற குரலில்.. "இந்தா வந்துட்டான் மூத்த கரடி" என்ற விகர்ணனை முறைத்தவள்.. "அபயை கரடின்னு சொன்னீங்க.. அவ்ளோ தான்" என கரண்டியால் மிரட்டியவளின் கையைப் பிடித்து தலைக்கு மேலாக தூக்கியவன்.. ஒரு சுழற்று சுழற்றி விட்டு பூங்கொடியின் கன்னத்தில் தன் இதழ் பதித்தவன்.. "ஐ லவ் யூ பூங்கொடி" என சென்றவனின் முதுகை பார்த்தவளுக்கு உதட்டோரம் சிறு புன்னகை ஒன்று தோன்றியது… காதலுக்கு வயதில்லை என்பது இவர்களுக்கு நன்றாகவே பொருந்தியது..


அபய்க்கும், விகர்ணனுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தவள்.. "என்ன அபய்.. ஏதோ கஷ்டப்பட்ட பொண்ணு மேல இஷ்டப்படுறீயாமே?? உண்மையா??" என்ற பூங்கொடியின் கேள்வியில் சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு புரையேற ஆரம்பித்து விட்டது…"இல்லம்மா.. அது" என இழுத்தவனை கண்டு மென் புன்னகை ஒன்று புரிந்தவள்…. "நீ அந்தப் பொண்ணு காதலிக்கிறீயா அபய்??" என்ற பூங்கொடியின் கேள்வியில் சற்று திடுக்கிட்டாலும் அவனுக்குமே அந்த கேள்வியின் பதில் தெரியாதே..


"தெரியல்ல மா" என தட்டிலே கை கழுவி விட்டு எழுந்து தன்னறைக்கு சென்றான்… அவனைப் பார்த்த பூங்கொடிக்கு தான் வருத்தமாக இருந்தது.. அவனுக்கு அதிக பொறுப்புகளை கொடுத்து அவனின் இளமைக்காலத்தை தொலைக்க வைத்து விட்டோமோ?? என வருந்தியவளை கரங்களோடு தன் கரத்தினை கோர்த்தவன்.. "நீ வீணா கவலைப்படாதே பூவு.. அவனுக்கு அந்தப் பொண்ணு மேல இருக்கிறது காதல் தான்… அவனுக்கு அது புரியலை" என்றவனின் தோளில் ஆதரவாக சாய்ந்தவளுக்கு அபயை பற்றிய கவலை ஏனோ மனதை அரித்துக் கொண்டேயிருந்தது..


என்ன தான் பூங்கொடியிடம் சமாளிப்பாக எதையோ சொல்லி விட்டு வந்தாலும்.. அறைக்குள் நுழைந்து தன் மேல் சட்டையை கழட்டியவன் கட்டிலில் தொப்பென விழுந்தவனின் கண்ணுக்குள் வந்து நின்றாள்… அவளின் மீன்விழி பார்வையும்.. அங்குமிங்கும் அசையும் கருவிழிகளும் ஏனோ அபயின் மனதை அலைக்கழித்தது…அவள் செயினை அபய் எப்பொழுதோ மீட்டு விட்டான்… அவள் கொடுத்த அட்ரஸிற்கு கொண்டு சென்று கொடுப்பதற்கு அவன் செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை… அவனிடம் வேலை செய்பவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்தனுப்பியிருக்கலாம்.. ஆனால் அவனுக்கு ஏனோ அவளை மறுபடி பார்ப்பதற்கு ஒரு காரணம் வேண்டுமென தன் சட்டைப் பையிலேயே வைத்துக் கொண்டு திரிகிறான்…


அவளை நினைத்துக் கொண்டே இருந்தவன் எப்பொழுது தூங்கினான் என அவனுக்கே தெரியவில்லை..


அங்கு மீன்விழியாளோ ஒருவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள்..


நடுசாம இரவில் அந்த வீட்டில் கேட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஏதோ 20 - 20 மேட்ச் பார்ப்பதை போல் இன்ட்ரெஸ்ட்டாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.


அவர்களுக்கு இது பழகியது என்றாலும். ஏனோ இன்று தான் புதிதாக நடப்பதை போல் வேடிக்கை பார்த்தபடி இருந்தவர்களின் வாயும் அந்த குடும்பத்தையே மென்று தின்று கொண்டிருந்தது..


அந்த சிறு வீட்டில் வாசலில் இருந்தே நிற்க முடியாமல் வேட்டி அவிழ்ந்த நிலையில் தள்ளாடியபடி இருந்தவரை காலர் சட்டையை பிடித்து தரதரவென கால்கள் தரையில் உரசிக்கொண்டே சிறு சிராய்ப்பு ஏற்பட்டிருந்தாலும்.
அதன் வலி கூட அவரின் குடிபோதையில் மறைந்திருந்தது..அவரை இழுத்துக் கொண்டு ரோட்டில் போட்டவள்… "போய்யா.. வெளியே.. இன்னொரு அடி என் வீட்டுக்குள்ள எடுத்து வச்ச.. கரண்டைக்காலுக்கு கீழே வெட்டிருவேன் வெட்டி" என எச்சரித்த கயற்கண்ணியை முறைத்தவர்.


"ஏன்டி.. ******* உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்திருந்தா.. பெத்த அப்பனை இப்படி நடுரோட்டுல இழுத்துப் போட்டு அடிப்ப" என தள்ளாடியபடி நிற்க முடியாமல் அங்கிருந்த வீட்டின் திண்ணையில் சாய்ந்தவரை அற்ப புழுவை போல் பார்த்தவள்..


"அப்பனாஆஆ.. அப்பன் சுப்பன்னு சொன்ன?? நாக்குல சுடு வச்சி இழுத்துருவேன்.. ஜாக்கிரதை.. மூணு பொட்டப்புள்ளைங்க பெத்துப் போட்டு.. அதுக்கு சோறு போட துப்பில்லை. அர்த்த ஜாமத்துல எவனையோ வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற.. இங்க பாரு உனக்கு உயிரு மேல ஆசை இருந்தா.. அப்படியே ஓடிப்போயிடு… இல்லை.. முதுகெலும்பு ஊசியைப் போட்டு நடக்கவே முடியாதபடி கெடையில படுக்க வச்சிருவேன் பாத்துக்கோ" என மிரட்டி விட்டு உள்ளே சென்று கதவை நன்றாக தாழ்போட்டவளுக்கு தன்னையே கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த மூன்று ஜீவன்களையும் பார்க்க பாவமாக இருந்தது…


இது என்றும் வழக்கமாக நடக்கும் சண்டை. என்றாலும் அவர்களின் கண்ணீர் இன்றும் வழிந்து கொண்டு தான் இருந்தது..


எல்லாரையும் சமாதானப்படுத்தி தூங்க வைத்தவளுக்கு தூக்கம் என்பது எட்டா உயரமாக சென்று விட்டது.. வாழ்க்கையில் கவலை என்பது எதுவுமின்றி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க வேண்டிய வயதில் தன் குடும்பத்தின் முழு பாரத்தையும் தன் முதுகில் போட்டு சுமக்கிறாள் கயற்கண்ணி.. 24 வயது பாவையவள்.. அவளின் அழகிய மீன் விழியால் பல பேர் விழுந்து எழுந்தாலும் இவள் யாரையும் திரும்பி கூட பார்த்ததில்லை..


குடிகார தந்தை பாபு… அவருக்கு வாக்கப்பட்டு தன் மொத்த வாழ்க்கையின் சந்தோஷத்தையும் தொலைத்தவர் தான் சுந்தரி.. பாபுவுக்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே புடிக்கும்.. ஆண் பிள்ளை தான் தனக்கு பிறக்குமென வரிசையாக மூன்று பெண் பிள்ளைகளை பெத்து வைத்திருக்கும் உத்தமர். மூத்தவள் கயற்கண்ணி நர்சிங் முடித்து விட்டு ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.. அடுத்தவள் அங்கையற்கண்ணி காலேஜ் செகண்ட் இயர் படிப்பவள்… மூன்றாவதாக மங்கையற்கண்ணி பதினொன்று படிப்பவள்…


தன் தந்தை குடித்து விட்டு செய்யும் அட்டகாசங்களையும் ஸ்கூல் முடிக்கும் வரை பொறுத்துக் கொண்டவள்.. ஒரு நாள் கோபம் தலைக்கேற பாபுவை அடி பின்னி எடுத்து விட்டாள்.. அன்றிலிருந்து இன்று வரை கயற்கண்ணியை பார்த்தாலே சிறிது பயம் தன்னாலே வர ஆரம்பித்தது..


அவரின் பயமே இவளுக்கு தைரியத்தை கொடுக்க சிறிது சிறிதாக தன்னைத் தானே மாற்றிக் கொள்ள ஆரம்பித்தாள். அவளின் அடாவடியான பேச்சும்.. திமிரான பார்வையும் பல இளைஞர்களால் 'பஜாரி' என சூட்டப்பட்டாலும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் வீறு நடை போடுபவள் தான் கயற்கண்ணி..


அன்று விடுமுறை நாள் என்பதால் ஷாப்பிங் சென்று விட்டு கை நிறைய பைகளுடன் வந்து கொண்டிருந்தனர் ஆராவும், தியாவும்… இருவரின் முகத்தை மறைக்கும் படி வந்தவர்களின் கையிலிருந்த பைகளை அவர்கள் எஸ்கார்ட் வாங்க.. அவர்களிடம் கொடுத்து காரில் வைக்க சொன்னவர்கள் நேராக சென்றது என்னவோ புட்கோட்டிற்கு தான்.நேராக உள்ளே சென்றவர்களுக்கு விதவிதமான ஜங் புட்ஸை பார்த்ததும் சாப்பிட வேண்டுமென ஆசையில் தானே ஷாப்பிங் செல்வதாக கூறி பூங்கொடியை கழட்டி விட்டு வந்திருக்கின்றனர்..


என்னதான் பணம் கையில் தவழ்ந்தாலும் சில கட்டுப்பாடுகளை பூங்கொடியால் என்றுமே தவிர்க்க முடியவில்லை.. அதில் ஒன்று சாப்பாடு விஷயம்.. ஜங் புட்ஸ் உடம்புக்கு கெடுதல் என்பதால் அவள் என்றுமே அதை அலோவ் பண்ணியதேயில்லை…


தட்டு நிறைய பர்கர், ப்ரெஞ்ச் ப்ரை என அள்ளிக் கொண்டு வந்தவர்கள் எதிரில் வந்தவனை கவனிக்க தவறினர். அவன் மேல் மோதிய தியா தன் கையிலிருந்த அனைத்தையும் அவன் சட்டையிலேயே அபிஷேகம் பண்ணி விட்டாள்.."யூ இடியட்ட்.. பூல்.. அறிவில்லை.. கண்ணை எங்கே வச்சிட்டு வர்ற" என கோபத்தில் காட்டு கத்து கத்தியவனை கண்டு அங்கிருந்த அனைவருமே அவர்களை வேடிக்கை பார்க்க.. தியாவுக்கு தான் செய்தது தவறு என்றாலும், அவனின் அதிகாரமும் திமிரும், கோபத்தை வரவழைக்க…


"ஸாரி" சொல்ல வந்தவளின் வார்த்தைகள் கூட பின்னுக்கு சென்றது… "என்ன ரொம்ப கத்துற??.. ஹான்.. இப்போ என்ன உன் சட்டையில தானே கொட்டிச்சி.. உன் தலையில கொட்டுன மாதிரி இவ்ளோ சீன் போடுற???" என்றவள் சொல்லி முடிப்பதற்குள்.. பக்கத்து டேபிளில் இருந்த கூல்ட்ரிங்க்ஸை அவளின் தலையிலேயே அபிஷேகம் செய்து விட்டான்…


அவன் ஊற்றியதில் அதிர்ந்து நின்றவளின் அருகில் குனிந்தவன்… "இந்த தீரன் கிட்ட குரல் உசத்தி பேசுற வேலை வச்சிக்காத" என எச்சரித்தவாறே அவளின் கன்னத்தில் தட்டி விட்டு சென்றவனின் முறைத்துக் கொண்டு நின்றாள் தியா…


"அவனுக்கு எவ்ளோ திமிரு இருந்தா?? என் தலையில கூல்ட்ரிங்க்ஸை ஊத்திருப்பான்… ஏய்ய் லைட்ஹவுஸ்.... ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள்.. உன் தலையில நான் இதே மாதிரி கூல்ட்ரிங்க்ஸை ஊத்தலை.. நான் விகர்ணனோட பொண்ணு ஆராதியா இல்லைடா" என கத்தியவளை கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றனர்…


அவளோ கோபத்தில் காலை உதைத்து விட்டு வேக வேகமாக சென்றவளின் பின்னால் ஓடினாள் ஆரா.."ஹேய்ய்.. நில்லு.. நில்லு" என ஓடிவருபவளை சிறிதும் கவனிக்காமல் வேகமாக முன்னால் ஓடியவள்.. தன் காரில் ஏறியமர்ந்தாள்..உள்ளுக்குள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தவளுக்கு வீட்டிற்கு வந்து அந்தக் கோபம் சிறதும் அடங்கவில்லை.. ஆளுக்கொரு மூலையில் செப்பலை உதறியவள்… நேராக பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.. கூல்ட்ரிங்க்ஸின் பிசுபிசுப்பு அவள் உடலில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டு ஒரு வித எரிச்சலை கொடுத்தது..

எல்லாவற்றையும் நன்றாக கழுவிவிட்டு வெளியே வந்தவளுக்கு ஏனோ சாப்பிட கூட தோன்றாமல் அப்படியே அறையினிலே இருந்து விட்டாள்..… ஆனாலும் அவன் மேல் வன்மம் எழுவதை தடுக்க முடியாமல் அப்படியே உறங்கி விட்டாள்…
View attachment 1210
அருமையான பதிவு 👌👌👌👌🌹🌹🌹🌹
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4

தீரனை ஜெயிலுக்குள் கொண்டு போவதற்கு முன்பே அவன் ரீலிஸ் செய்யப்பட்டிருந்தான் அவன் தந்தையின் தயவால்.. அவன் அரெஸ்ட் ஆவதை அவர் வைத்திருக்கும் ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டார்..


மிகப்பெரிய செல்வாக்கு உள்ள மனிதர் என்றாலும் தன் பிள்ளையை விட்டு பிரிந்து இருப்பவருக்கு நன்றாக தெரியும் தன் பிள்ளையின் மேல் தான் தவறு இருக்கும் என்று.. அவன் பிடிவாதமும் அகம்பாவமும் தெரிந்தவர் ஆயிற்றே..


ஆனால் தீரனோ அபயின் மீதும், ஆராதியா மீதும் கடுங்கோபத்தில் இருந்தான்.. தன்னை அவமானப்படுத்தியவர்களின் மீது வன்மமும் பகையும் சேர்ந்தே எழுந்தது…அப்பொழுது போன் அழைக்கும் சத்தத்தில் தன் சிந்தனையில் இருந்து கலைந்தவன்.. அதில் தெரிந்த நம்பரை கண்டு புருவம் சுருக்கி பார்த்தவன்..


"என்ன வேணும் உங்களுக்கு? அதான் ஜெயிலுக்கு போகாம தடுத்திட்டிங்கள்ள?" என எரிந்து விழுந்தவனை கண்டு கோபப்படாமல் மென்மையாக,


"ரணா" என்றதும் தான் தாமதம் தான் குடித்துக் கொண்டிருந்த ஒயின் கிளாஸை விட்டெறிந்தவன்…


"டோன்ட் கால் மீ ரணா. ரணா செத்து பதிமூணு வருஷம் ஆகுது" என சீறியவனை கண்டு எதிரில் இருந்தவருக்கு பேச்சிற்கு பதிலாக கண்ணீரே வந்தது…


"தீரா" என்றதும் தான் சிறிது சமாதானம் ஆனவன்.. அமைதியாக இருந்தானே தவிர எதுவும் பேசவில்லை..


அவனின் அமைதியை சம்மதமாக எடுத்தவர். "தீரா இன்னும் ஒன் வீக்ல உனக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருக்கணும்ங்கிறது தான் உன் அம்மாவோட உயில்ல எழுதியிருக்கு??" என்றவரின் யோசனையில் ஆழ்ந்தவன்..


"ம்ம்.. தெரியும்… நான் பார்த்துக்கிறேன்" என சொல்லியவனை கண்டு பெருமூச்சுடன் போனை வைத்தார் தீரனின் தந்தை சந்தோஷ்..


அவரை வேண்டாமென்று தூக்கி எறிந்தவனால் அவனின் தாய் மூலம் வரும் பணத்தை வேண்டாமென்று சொல்ல முடியவில்லை..


பணம் தான் எதையும் தீர்மானிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன்.. பணம் இருப்பவன் ஆள்வான் என்னும் நம்பிக்கையில் வாழ்பவனை மீட்டெடுக்க வஞ்சிக்கொடி வருவாளா???


கிட்டத்தட்ட அபயை ஒரு மாத காலமாய் அலைக்கழித்துக் கொண்டிருந்தாள் கயற்கண்ணி.. அவன் தன்னை முகத்தில் அடிப்பதை போல் பேசியதை விட.. தன்னை விலக்கியது தன் ஆழ் மனதில் ரணமாய் இருந்தது…


அதன் தாக்கம் அவன் மதியம் வந்தால் நிகிதாவின் அறைக்குள் முடங்கி விடுவாள்.. நிகிதாவின் அறைக்கு சென்று விடுவான். ஆனால் நிகிதா கயற்கண்ணியை ஏதாவது சொல்லி விடுவாரோ?? என சிறு பயம் இருந்தது.. சிறு வயதிலிருந்தே அவரின் குணத்தை பார்த்தவனுக்கு அவரின் மேல் நம்பிக்கை சிறிதும் இல்லை…


அன்று வேலை முடிந்து சென்றவளை தன் வீட்டின் அருகில் போகும் வழியில் தடுத்து நிறுத்தினான்… தன் முன்னே மறைத்து நின்றவனை மீன்விழியாலே உறுத்து விழித்தவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்தவன்..

"நான் உங்கிட்ட பேசணும்"

"உங்களுக்கு எனக்கும் நடுவுல என்ன இருக்கு பேசுறதுக்கு??? நாங்க உங்க வீட்டுல வேலை செய்ய வந்த பொண்ணு.. நீங்க என்னோட முதலாளி" என கோபமாக சொல்லி விட்டு தாண்டி செல்ல முயன்றவளின் கையினை விடாப்பிடியாக பிடித்து வைத்திருந்தான்..


அவன் கையிலிருந்து தன் கையை விடுவிக்கப் போராட.. அதுவோ இரும்புப் பிடியென இருந்தது..


"ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு. அப்புறம் நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்" என்றவனின் கம்மிய குரலில் அவளின் பிடிவாதமும் சற்று தளர்ந்தது..

"ம்ம்.. சொல்லுங்க"

"நீ என்னைப் பத்தி என்ன நினைக்குற?"


"உங்களைப் பத்தி நினைக்குறதுக்கு என்ன இருக்கு… பார்த்தாலே தெரியுது.. பணத்திலேயே பொறந்து, பணத்திலேயே புரளுறவுகன்னு" என்றவளை பார்த்து கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்தவன்…


"நான் ஒன்னும் பணத்துலையே பொறளுரவன் இல்லை.. சாதாரண மிடில் கிளாஸ் கூட கிடையாது.. குப்பத்துல பொறந்த பையன்" என்றவனை பேரதிர்ச்சியுடன் பார்த்தான்..

"என்ன சொல்றீங்க?" என சற்று அதிர்ந்தவளை கண்டு மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவன்..

"ஆமா" என பூங்கொடி தன்னை வளர்த்ததிலிருந்து அனைத்தையும் சொல்லியவனை புருவ முடிச்சுடன் பார்த்தாள்..


"நீ கேட்கலாம் இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்கன்னு?? பிகாஸ் ஐ லவ் யூ... நான் உன்னை மனசார காதலிக்கிறேன்.. இந்த ஒரு மாச பிரிவை கூட என்னால தாங்க முடியல.. எனக்கு நீ வேணும். என் வாழ்நாள் முழுவதும்" என்றவனை பேரதிர்ச்சியுடன் பார்த்தவள்…


கயற்கண்ணி ஏதோ சொல்வதற்குள். "நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்.. நானும் அப்பாவும் மூணு நாள் மும்பைக்கு கான்பிரன்ஸ்க்கு போறோம்.. நான் திரும்பி வரும் போது உன்னோட பதிலை சொன்னா போதும்… அது பாசிட்டிவா இருக்கும்னு நம்புறேன்" என காரில் ஏறி சென்றவனை பார்த்தவளுக்கு என்ன முடிவு எடுப்பதென்பதே தெரியவில்லை.


பூங்கொடியின் கம்பீரத்தை பார்த்து பணத்தினால் வந்தது என நினைத்தவளுக்கு.. இல்லை ஒரு பெண்ணுக்கு கம்பீரம் பணத்தால் வருவதில்லை.. அவளின் வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவள் காணும் தோல்விகளே அவளை கம்பீரமாக செதுக்குகிறது என நினைத்தவளுக்கு பூங்கொடியின் மேல் மதிப்பும் மரியாதையும ஏற்பட்டது..

அவள் அறியாதது யாரின் மேல் மரியாதை வைத்திருக்கிறாளோ?? அவளே அவள் கையாலே பூங்கொடிக்கு விஷம் கொடுபபாள் என சிறிதும் அறிந்திருக்க மாட்டாள்..


அன்று காலை எப்பொழுதும் போல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் கயற்கண்ணியை வழிமறித்து நின்றான் ரணதீரன்..


அவன் வழிமறிக்கவும் கோபமாக அவனை பார்த்து முறைத்தவள்.. "வழியை விடு நான் போகணும்" என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்..


"உனக்கு வழிவிடுறதுக்கா நான் காலையில இருந்து இங்கே வெயிட் பண்றேன்" என் கண்களில் கோபமும், குரோதமும் போட்டியிட சொன்னவனை புருவ முடிச்சுடன் பார்த்தவள்.. "இப்போ என்னால உனக்கு என்ன ஆகணும்??" என கேட்டவளின் புத்தி கூர்மையை எண்ணி சற்று வியந்து தான் போனான்..


"பரவால்ல அபய்க்கு ஏன் உன்னை புடிச்சிருக்குன்னு இப்போ புரியுது" என நக்கலாக சொல்லியவனின் கண்களில் குரோதம் தான் தெரிந்தது..


அவனை கூர்ந்து பார்த்தவளுக்கு இவன் சாதாரணமாக தன்னை வழிமறிக்கவில்லை என்பது நன்றாக புரிந்தது.. "ப்ச்" என சலிப்புடன் அவனை தாண்டி செல்ல முயன்றவளின் முன்னால் சென்று நின்றவன்..


"ஹலோ.. என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ போய்க்கிட்டே இருக்க.. அவ்ளோ திமிரு.. உன் திமிரெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வச்சிட்டு இந்த வீடியோ பார்க்குறீயா??" என்றவன் தன் கையிலிருந்த செல்போனை அவளின் முகத்திற்கு நேராக நீட்டியபடி ஓட விட..


அவளின் தங்கை அங்கையற்கண்ணியின் கழுத்தில் யாரோ கூர்மையான கத்தியை வைத்திருந்தார்கள்.. அது லேசாக அவளின் கழுத்தை பதம் பார்த்து ரத்தம் வடிந்தது…

"அங்கை" என அவனின் போனை புடுங்க பார்க்க.. அவனோ சட்டென போனை கட் பண்ணி தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டவன் அவளை நக்கலாக பார்த்துக் கொண்டே "நான் சொல்றதை இன்னைக்கு நீ கேட்டா போதும்… அதை விட்டுட்டு.. சும்மா என்கிட்ட இருந்து உன் தங்கச்சியை காப்பாத்த ஏதாவது தில்லுமுல்லு வேலை பார்த்தா. உன் தங்கச்சி உனக்கு பொணமா தான் கிடைப்பா" என்றவனை திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் கண்ணில் கண்ணீர் வழிந்தவளை இளக்காரமாக பார்த்தவன்..

"பாருடா.. கண்ணீரெல்லாம் வருது" என நக்கலாக சொல்லியவனை வலி மிகுந்து பார்த்தாள்..

அவளின் முன்னால் ஒரு பாட்டிலை நீட்டியவன்.. "இதை உன்னோட பூங்கொடி மேடத்துக்கு.. அதாவது அபய் உயிரையே வச்சிருக்கானே அவுங்க அம்மாவுக்கு கொண்டு போய் கொடுக்கிற.. இந்த பாட்டில் உடைஞ்சாளோ?? இல்லை பூங்கொடியை காப்பாத்தணும்னு நினைச்சாளோ?? உன் வீட்டுல ஒவ்வொரு பொணமா விழும்.. அதுக்கு அச்சாரமா இப்போ உனக்கு போன் வருமே" என சொல்லி முடிப்பதற்குள் போன் அடிக்க..

எடுத்து காதில் பேசியவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்நது.. சுந்தரியை ஆட்டோக்காரன் மோதி ஆக்சிடெண்ட் நடந்திருந்தது.. உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அடி பலமே என்ற செய்தியால் அவளின் தைரியம் கூட சற்று சரிய ஆரம்பித்தது..

தன் குடும்பத்தை பாதுகாப்பதற்கு வேறு வழியில்லாமல் இந்த பாதகத்தை செய்ய நினைத்தாள்..

வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு பூங்கொடிக்கு வேலைக்காரி காபி கொண்டு செல்வது பட்டது.. இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்தவள் அவளிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தவாற அவளை கிச்சனுக்குள் அனுப்பியவள் தன் கையிலிருந்த விஷ பாட்டிலை கலப்பதற்குள் வேர்த்து ஒழுகியது..

ஒருவரின் உயிரை தான் எடுக்கப் போகிறோம் என்பதே அவளுக்கு சற்று நடுக்கத்துடன் கூடிய பயமும் ஏற்பட்டது.. பூங்கொடிக்கு ஏதாவது ஒன்றென்றால் அபயே தன்னை ஜெயிலுக்குள் தள்ளுவது உறுதி என தெரிந்தாலும் ஏனோ அவளுக்கு வேறு வழியும் இல்லை….


அதை கலந்து கொடுத்து விட்டு அறைக்குள் கூண்டுக்கிளியாய் நடந்தவளுக்கு போன் வரும் சத்தத்தில் கலைந்தவள். அதை எடுத்துப் பார்த்தவளுக்கு பிரைவெட் நம்பர் என வந்ததும் உடனே தெரிந்து கொண்டாள். அது யாரென்று, "ஹலோ.. நீங்க சொன்ன மாதிரி நான் கலந்து கொடுத்துட்டேன்" என பயமும் பதட்டமும் கலந்து சொன்னவளை கண்டு சிரித்தவன்..


"குட் கேர்ள்… இப்படித்தான் சொன்ன பேச்சை கேட்கணும்" என பாராட்டை எல்லாம் புறந்தள்ளியவள்..

"எந்தங்கச்சியை விட்ரு" என கெஞ்சியவளை சிறிதும் கண்டுக்காமல், "உந்தங்கச்சியை விடணும்னா ஆராதியா எங்கே இருக்கான்னு சொல்லு" என்றவனை கண்டு கோபத்தில்


"அவ எதுக்கு உனக்கு??' என சீறியவளை கண்டு கடுப்புடன் போனை வைத்து விட்டான்..

அவன் போனை வைக்கவும் சிறிதும் பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது.. "தன் தங்கையை ஏதேனும் செய்து விடுவானா??" என பயத்தில் கைகளை பிசைந்து கொண்டிருந்தவளுக்கு கிட்டத்தட்ட கால்மணி நேரம் கழித்து போன் போட்டவன்.. "இப்போ சொல்லு அவ எங்கே" என இறுக்கமான குரலில் கேட்டவனை கண்டு, சிறு பயத்துடன்..


"அவ லைப்ரரிக்கு நோட்ஸ் எடுக்கப் போறேன்னு போயிருக்கா??" எனறதும் போனை கட் பண்ணி விட்டான்.. அடுத்த அரை மணி நேரத்தில் ஆராதனா கடத்தப்பட்டிருந்தாள்..

ஆராதியாவுக்கு வயிற்று வலி என்பதால் அவளால் போக முடியவில்லை.. அவளுக்கு பதிலாக ஆராதனா செல்ல… இருவரும் ஒரே உருவத்தில் இருந்ததால் ஆராதனாவை கடத்தி விட்டான்.. கடத்தியவன் அறியவில்லை தன் முன்னால் நிற்பவள் ஆராதனா என்று…


தன் முன்னால் இருப்பவனை பார்த்ததுமே அடையாளம் தெரிந்து விட்டது ஆராதனாவுக்கு..


"நீ எதுக்கு என்னை கடத்திட்டு வந்த??" என்றவளை தலையை சாயத்து புருவம் உயர்த்தி பார்த்தவனுக்கு அவள் அணிந்திருந்த சுடிதாரை பார்த்து முகம் சுழித்தவாறே,


"ஆமா உங்கம்மா சீரியஸா இருக்காங்களாமே.. அப்படியா??" என ஆச்சர்யமாக கேட்பதை போல் நக்கலாக கேட்டவனை கண்டு முறைத்தவள்..


"என்ன உளர்ற??" என்றவளின் போன் அடிகக.. எடுத்து பேசியவளின் முகமோ குப்பென வியர்க்க ஆரம்பித்து விட்டது..


"ஆரா.. அம்மாவுக்கு என்ன ஆச்சின்னு தெரியலடி.. ரத்தமா வாந்தி எடுக்காங்க.. ஹாஸ்பிட்டல்ல கூப்பிட்டு வந்தா அவுங்களோட உடம்புல பாம்போட விஷம் கலந்திருக்குன்னு சொல்றாங்க.. அது என்ன விஷம்னு தெரிஞ்சா தான் அம்மாவை காப்பாத்த முடியுமாம்" என அழுது கொண்டே சொன்னவளை கேட்டு உடலும் உள்ளமும் பதறியது..


அவளுக்கு எல்லாமே புரிந்து விட்டது.. "இவன் தான் அதற்கு முழு முதற் காரணம் என்று??" கோபத்துடன் நேராக அவனின் சட்டையை பிடித்தவள்.. "எங்கம்மாவுக்கு என்ன விஷம் கொடுத்த.. இப்போ சொல்லப் போறீய்யா?? இல்லையா??" என்றவளின் கதறலை ரசித்தவாறே


தன் முன்னால் நின்றவளின் எதிரில் சோபாவில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தவன்.. "ம்ம். உங்கம்மாவை காப்பாத்தணும்னா நீ இந்த பார்ம்ல கையெழுத்துப் போட்டு ரெடியாகிட்டு வா" என ஈவு இரக்கமின்றி பேசுபவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..


அதில் தாலியும், பட்டுச்சேலையும் அல்லவா இருந்தது . தன் எதிரில் இருந்த தட்டை வெறித்துப் பார்த்தவள்.. கண்களில் கண்ணீருடன் தன்னிலை விட்டு "ப்ளீஸ். அம்மா ரொம்ப சீரியஸா இருக்காங்க.. அவுங்களுக்கு என்ன விஷம் கொடுத்தீங்க" என்றவளை இளக்காரமாக பார்த்தவன்.


"ப்ச். பேசுறதுக்கு டைம் இல்ல.. போய் ரெடியாகுடி" என்றவனின் கணீரென்ற குரலில் தட்டை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவள் அவன் கொடுத்த பட்டுச்சேலையே கட்டிக்கொண்டு வந்தாள். அவளின் முன்னால் பார்மை நீட்ட.. மறு பேச்சின்றி கையெழுத்தும் போட்டுக் கொடுத்தாள்…


அவளை இளக்காரமாக பார்த்தவன்.. "அன்னைக்கு என்னடி சொன்ன?? உங்கண்ணன் பெரிய கொம்பன்னு சொன்னல்ல??.. இன்னைக்கு காப்பாத்த சொல்லடி உங்க நொண்ணனை வந்து உங்கம்மாவை" என நக்கலாக சொல்லியவன்..


அவளின் அருகில் வந்து இறுக்கமாக அணைத்தவன் அவளின் கண்ணீரை சுண்டிவிட.. அவளோ அவன் அணைப்பில் இருந்து விடுபட போராடியவள்.. "ப்ச்ச்.. விடு.. விடு என்னை" என போராடியவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கினான் ரணதீரன்…


அவன் கொடுத்த அதிர்ச்சியில் கீழே குனிந்து பார்த்தவளுக்கு போன் அடிக்கும் சத்தத்தில் உடல் தூக்கிவாரிப் போட்டது..


மெதுவாக எடுத்தவளுக்கு, "ஆரா அம்மாவுக்கு பரவாயில்லைடி" என்றதும் தான் சற்று நிம்மதியாக இருந்தது…


ஆனால் போன் ஸ்பீக்கரில் இருந்ததால் போனில் வந்த வாய்ஸை கேட்டு அதிர்ந்து நின்றான் தீரன்…


"போன்ல பேசுனது யாரு??" என்றவனின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் "எந்தங்கச்சி ஆராதியா" என்றவளை தன் அணைப்பில் இருந்து சட்டென விலக்கினான்..

"அப்போ நீ யாரு??" என்றவனின் அதிர்ச்சியை கண்கள் இடுங்க பார்த்தவள் "ஆராதனா" என்றவளை எரிக்கும் பார்வையில் முறைத்துக் கொண்டு நின்றான் தீரன்....


இருவரும் உருவத்தில் ஒன்று போல் இருந்ததால் ஆராதியாவை பழிவாங்க ஆராதனாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்…


"என்கிட்ட சண்டை போட்டது யாரு?" என தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் கேட்டவனை கண்டு எரிச்சலுடன் பார்த்தவள்.. "அவதான் சண்டை போட்டா" என்றவளை உறுத்து விழித்தாவாறே, ஒரு நிமிடம் திக்கென இருந்தாலும் அலட்சியமாக உதட்டை சுழித்தவன்…


"ஆராதியாவா இருந்தா என்ன?? ஆராதனாவா இருந்தா என்ன?? உன்னை கஷ்டப்படுத்தினா அபய் துடிப்பான்ல அது போதும் எனக்கு" என்றவனை அறுவெறுப்பாக பார்த்தவள்..


"அப்போ உன்னோட டார்கெட் அவ.. நான் இல்லை.. அப்படித்தானே.. நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?? நீ தாலி கட்டினா உன்னோட வாழுவேன்.. உன் காலுக்கடியில விழுந்து கிடப்பேன்னு நினைச்சியா??... நோ.. நெவர்.. எப்பவும் நான் நானா தான் இருப்பேன்.. இந்த தாலி எனக்குப் புடிக்கலன்னா இதை கழட்டி எறியவும் நான் தயங்க மாட்டேன்" என கழட்டப் போனவளின் கையைப் பிடித்து முறுக்கியதில் மணிக்கட்டு லேசாக பிசங்க ஆரம்பித்தது…


"ஆஆஆ.. அம்மா" என்றவளின் கண்ணீர் அவனையும் அசைத்துப் பார்த்தது… மெதுவாக அவளை விட்டவன் அவள் கையைப் பார்க்க.. ஏற்கனவே சிவந்த நிறத்தில் இருப்பவளுக்கு கை சற்று வீங்கி மேலும் சிவப்பாக மாற ஆரம்பித்தது…


 

Nithila

Member
அருமை 👌👌👌, கயர்கண்ணியிடம் அபி தன் காதலை சொன்னது தீரனுக்கு எப்படி தெரிந்தது தீரன்க்கும் கயர் என்ன சம்பந்தம் அவளைவைத்து அபியை பழிவாங்க பூங்கொடிக்கு விஷம் கொடுக்க அவள் தங்கைவைத்து மிரட்டி அவளை செய்ய செய்வதுடன் தியா என்று நினைத்து ஆராவிற்கு தாலி கட்டுவது என்ன அவளையும் அவள் தாய்க்கு ஆபத்து எனகூறி அவன் செயலுக்குவுடன் பனியவைத்துவிட்டான் அவள் தியா இல்லை என்று தெரிந்த பின்னும் இவளை வைத்து தியாவை பிழிவாங்க நினைப்பது என்ன ஆனால் ஆரா கண்ணீர் அவன் தீரன் மனதை வலிக்க செய்வது ஏனோ திருமண மேஜிக்கா 🤭🤭🤭🌹
 

Madhusha

Well-known member
Wonderland writer
மீன் விழி 5

கான்பிரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்த விகர்ணனுக்கோ சற்று படபடப்பாக இருந்தது.. உள்ளுணர்வு திரும்ப திரும்ப தன்னவளை தேடியது.. ஏனென்றே தெரியாமல் தன்னவளின் நினைவுகள் அலைக்கழிக்க அவனால் கான்பிரன்ஸில் உட்கார கூட முடியவில்லை..


சட்டென எழுந்தவன் அபயிடம் கூட சொல்லாமல் கிளம்பி விட்டான்.. அவனின் இதயத்துடிப்பு சற்று அதிகரித்தது.. வெளியில் வந்தவன் பூங்கொடிக்கு போன் போட. பூங்கொடி போன் ரிங்க் போய்க்கொண்டேயிருந்ததே தவிர அதை எடுப்பதற்கு யாருமில்லை..


பரிதவிப்புடன் மறுபடி மறுபடி அழைத்தவனுக்கு செகண்ட் கால் ஆராதியா வந்தாள்.. சட்டென அட்டென்ட் பண்ணியவன்.. "தியா போனை அம்மா கிட்ட கொடு" என தவிப்புடன் சொல்லியவனை கண்டு அழுகை தான் வந்தது… "அப்பாஆஆஆஆ… அம்மாவுக்கு" என்றவளுக்கு அடுத்த வார்த்தை தந்தியடித்தது.


அவளின் அழுகையே பெரிதாக ஏதோ நடந்திருக்கிறது என மூளையில் பதிந்தாலும்… மனதோ ஏதும் நடந்திருக்கக்கூடாது என தவித்தது… "இப்போ அழாம சொல்றீயா?? இல்லையா??" என்றவனின் கர்ஜனையில் கண்ணில் வழிந்த கண்ணீர் சட்டென நின்றது... "அம்மாவுக்கு யாரோ விஷம் கொடுத்துட்டாங்க ப்பா" என்ற வார்த்தையில் விகர்ணன் காதில் வைத்திருந்த போன் நழுவி தரையில் விழுந்து உடைந்தது..


மனமெல்லாம் வலிக்க "என்னை விட்டுப் போயிருவீயாடி நீ??" என மனதுக்குள் கேட்டவன்.. அதிரடியாக சாட்ட்ர்ட் பிளைட் பிடித்து சென்னை வந்து தரை இறங்கினான். சென்னை இறங்கும் பொழுது கூட அபயிடம் அவன் விஷயத்தை சொல்லவில்லை..


அபய் கேட்டதற்கு "அர்ஜன்ட ஒர்க்" என மட்டும் சொல்லியவன் பிளைட் பிடித்து காரை ஓட்டப் போன அபயை தடுத்து தானே காரை எடுத்தான்.. சென்னை டிராபிக்கில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டினான் விகர்ணன்..

கண்மணி ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருந்ததால் அவன் யாரிடமும் விசாரிக்காமல் நேராக மூன்றாவது ப்ளோரை வந்து சேர்ந்தான்.. அவனுக்கு நன்றாக தெரியும்.. தன்னவளை இங்கு தான வைத்திருப்பாளென.. அங்கு அப்பொழுது தான் வந்துக் கொண்டிருந்தனர்.. வருணிகாவும் அவள் பையன் மஹத்தும்… விகர்ணனை பார்த்து புன்னகைத்த வருணிகாவை முறைத்தவாறே பூங்கொடி இருந்த அறைக்கு செல்ல.. அங்கிருந்த நர்ஸிடம் "அவுட்" என்ற கர்ஜனையில் அங்கிருந்த நர்ஸ் நடுநடுங்கி வெளியே சென்று விட்டாள்…


ஆக்ஸிஜன் மாஸ்க் கொண்டு சுவாசித்துக் கொண்டிருந்த பூங்கொடியை பார்க்க பார்க்க மனய் தாளவில்லை.. ஏனோ இதயத்தை யாரோ கை கொண்டு புடுங்கி எடுப்பதை போல் வலித்தது.. தன்னவளா இது?? எப்பவும் ஒரு இடத்தில் நிற்காமல் அனைவரையும் பம்பரமாக சுழட்டி விடுபவளா இவள்?? என்றவனின் மனம் வலிக்க.. அவளின் கைகளோடு தன் கையை கோர்த்தவன்…


"என்னை விட்டுப் போகணும்னு நினைச்சே நானே உன்னை கொன்னுருவேன்டி" என்றவனுக்கு கதவு படாரென திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கு கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தான் அபய்.. அவனின் உயிருக்கும் மேலானவள் அல்லவா…

பின்னாலே தியா அழுதழுது சோர்ந்து நின்றவளை பார்க்கும் பொழுதே அவளின் தவிப்பு புரிந்தது.. தாங்கள் இல்லாமல் சிறு பெண் என்ன பாடுபட்டிருப்பாள் என நினைப்பதற்குள் ஓடி வந்து அணைத்தவளை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகியது.. இவளே இப்படியென்றால் அபயை திரும்பி பார்க்க.. அவனோ எதுவுமே பேசவில்லை.. வெறித்த பார்வையுடன் பூங்கொடியை தான் பார்த்தான்..


குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை தடவி கொடுத்தவனின் கண்ணீர் அவள் கைகளில் சிறிது சிறிதாக கண்ணின் கருவிழிகள் அசைய மெல்ல இமைகளைத் திறந்தாள் பூங்கொடி..


அவள் கண் விழித்ததும் அனைவரும் சூழ, அவர்களை பார்த்து புன்னகைக்க முயன்றவளுக்கு உடலின் வலிகள் புன்னகைக்க முடியவில்லை… விகர்ணனை பார்த்தவள் லேசாக சிரித்தவாறே ஆக்ஸிஜன் மாஸ்க்கை வெளியே எடுத்தவள்..., "அவ்ளோ சிக்கீரத்துல உன்னை விட்டுப் போயிருவேன்னு நினைச்சியா?? உன்னை எவ்ளோ கொடுமைப்படுத்த வேண்டியிருக்கு" என்றவளை பார்த்து முறைத்தவன்..


"வீட்டுக்கு வா யாரு. யாரை கொடுமைப்படுத்திறாங்கன்னு தெரியும்" என மிரட்டியவனை கண்டு சிரித்தவள் அபயை பார்க்க.. அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் தீர ஒரு மூச்சு அழுது தீர்த்தான்… அவனை சமாதானப்படுத்துவதற்குள் பூங்கொடி ரொம்பவே டையர்டாகி போனாள்…


எல்லாரையும் சுற்றிப் பார்த்தவளுக்கு ஆரா அங்கில்லாமல் இருப்பது அப்பொழுது தான் புரிந்தது.. "ஆரா எங்கே??" என்றவளின் கேள்வியில் இருவரும் தியாவை பார்க்க… "ஆரா நோட்ஸ் எடுக்க லைப்ரரி போயிருக்காம்மா.. நான் போன் பண்ணி சொல்லிட்டேன் மா.. இப்போ வந்திடுவா" என்றதும் அமைதியானவளுக்கு பெற்றவளாய் மனம் பதை பதைத்தது .


அங்கு ஆராவோ சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக் கொண்ட சிறு முயலாய் பரிதவித்துக் கொண்டிருந்தாள்… அவளின் அலைப்புறும் கண்களும், சொல்ல துடிக்கும் உதடுகளையும் ரசித்தவாறே அங்கிருந்த ஒயினை எடுத்து சிப் சிப்பாய் அருந்திக் கொண்டிருந்தான் தீரன்…


அவள் உடுத்திருக்கும் சேலை அவளுக்குப் பிடிக்கவில்லை போல நிமிடத்திற்கு ஒரு முறை சேலையே ஆங்காங்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தாள்.. தன்னை பார்ப்பவனை எதிர்பார்வை பார்த்தவள்.. அவன் கண் போகும் இடமறிந்து அவளும் குனிந்து பார்க்க… அவளின் வெண்ணிற இடுப்பு பளீச்சென அவன் கண்ணைப் பறித்தது..


சட்டென சேலையை இழுத்து விட்டவளை கண்டு உதட்டை சுழித்தவன்.. "ம்ஹும்.. இப்போ மறைச்சிக்கலாம்.. இன்னைக்கு நைட் எப்படி மறைக்கப் போறன்னு நானும் பார்க்கிறேன்" என்றவன் மெல்ல எழுந்து அவளின் அருகில் சென்றவன். வேண்டுமென்றே அவள் ஏற்றி விட்ட சேலையை தன் ஆட்காட்டி விரலால் இறக்கியவன் ஒரு விரலால் இடுப்பில் கோலம் போட.. தன் கையைத் தடுத்தவளின் கரத்தை அழுத்தமாக பற்றியவன் சட்டென ஒரு சுழற்று சுழற்றியவன் அவளின் பின்புற தேகம் முழுவதிலும் தன்னுடலோடு ஒட்டி நின்றவன்.. அவளின் கழுத்தை சுற்றி தன் வலது கரம் கொண்டு வளைத்தவன்… "யூ லுக் சோ ஹாட் பேபி" என்றவனின் உதடுகளோ அவளின் கழுத்தில் முத்தமிட.. முதன் முறை ஆண்மகனின் முத்தத்தில் உடல் முழுவதும் ஹார்மோன்ஸ் எழுந்து உடல் சிலிர்க்கவில்லை. மாறாக கோபமும் எரிச்சலும் சேர்ந்தே வந்தது..


"ப்ச்ச்.. விடு என்னை.. விடுன்னு சொல்றேன்ல??" என்றவளை இன்னும் நெருக்கமாக தன்னோடு உரசியவாறே அணைத்துக் கொண்டவன்.. "உன்னை விடுறதுக்காடி கல்யாணம் பண்ணேன்" என கணீரென்றெ குரலில் சொல்லியவனின் உதடுகளோ ஆங்காங்கு அலைந்து அவளின் பட்டுக்கன்னத்தில் முத்தமிட.. சட்டென அவனைப் பிடித்து தள்ளியவள் ஓங்கி அறைந்து விட்டாள்..


பிடிக்காதவனின் அருகாமையும், முத்தங்களும் எந்த பெண்ணுக்கும் இனிப்பதில்லை.. அது கணவனாகவே இருந்தாலும்… மாறாக எரிச்சல் தான் தோன்றும்.. தாலி கட்டி விட்டாலும் அதை உணரும் முன்பே அவன் தன்னிடம் அத்துமீறுவதை எரிச்சலுடன் பார்த்தாள்..


அவள் தன்னை அடித்ததை அவமானமாக எண்ணியவன் சட்ட அவளை தூக்கி தோளில் போட்டவன் அசுரனாய் படியில் ஏறியவன் மிகப்பெரிய ரூம் ஒன்றில் நுழைந்தான்… ரூமா அது என்று வியக்கக்கூடிய அளவில் பிரம்மாண்டமாக இருந்தது.. அதிலிருந்த கட்டிலில் கிட்டத்தட்ட பத்து பேராவது உருளலாம். அவ்வளவு தாராளமாக வட்ட வடிவில் இருந்த பெட்டில் தூக்கிப் போட.. அதுவோ ஆராதனாவை உள்வாங்கி மேலே சற்று உயரத்தில் தூக்கிப் போட்டு பிடித்தது..


அவன் போட்ட வேகத்தில் அவளின் சேலை அதிகமாகவே நெகிழ்ந்து அவளின் அழகினை அப்பட்டமாக காட்டியது… அவளை தன் விழியாலே கொய்யும் பார்வை பார்த்தவனின் விஷமமான பார்வையும், அதில் தெரிந்த மோகப் பார்வையும் இவளுக்கு பயத்தை மூட்டினாலும், சற்று தைரியமாக எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளுடன் சேர்ந்தே பெட்டில் சரிந்தான்...


அவளின் உடல் எடையை தாங்க முடியாமல் சற்று மூச்சு முட்டியது ஆராதியாவுக்கு.. அவனை தன் மேலிலிருந்து விலக்க நினைத்தவளின் கைகளை சிறைப்பிடித்தவனுக்கு அவளின் மருளும் மான் விழிகளும், அவளின் பெண்மையின் தவிப்பையும் ரசித்தவன்.. அவளின் முகத்தில் விழுந்து அழகிய வதனத்தை மறைத்த முடிகளை தன் ஒற்றை விரலால் அழகாக காது பக்கம் ஒதுக்கியவன.. அவளின் தன் தாடி உரசியவாறே, "பேபி.. பர்ஸ்ட் நைட் கொண்டாடலாமா??" என்றவனின் வார்த்தையில் தன் முழு பலத்தையும் திரட்டி அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்.. தீரன் சுதாகரிப்பதற்குள் டேபிளில் அழகுக்காக வைத்திருந்த பூஞ்சாடியை வைத்து அவள் தலையில் அடித்தவள்.. அவன் சுதாரிப்பதற்குள் புள்ளிமானாய் ஓடி விட்டாள்…


அவள் ஓடிய ஓட்டததுக்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தால் வம் நாட்டுக்கு தங்கப்பதக்கமே கிடைத்திருக்கும்.. அப்படியொரு ஓட்டம்.. தன்னை தீரன் பின்தொடர்கிறானா?? என பார்க்கக்கூட தோன்றாமல் வந்த வழியில் உள்ள ஆட்டோவில் ஏறியவள்.. கண்மணி ஹாஸ்பிட்டல் அட்ரஸை சொல்லி விட்டு ஆட்டோவின் பின்னால் சாய்ந்தவளின் இதயத்துடிப்பின் சத்தம் அவளுக்கே கேட்டது…

ஹாஸ்பிட்டல் வாசலில் வந்து இறங்கியவளின் கண்களோ தானாக தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை பார்த்தாள்.. இதை வீட்டில் சொல்ல ஒரு நிமிடம் போதும்.. அதன் பின்பு அண்ணாவும், அப்பாவும் அவனுக்கு கொடுக்கும் தண்டனையை நினைத்துப் பார்த்தவளுக்கு உடல் கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்தது…


"அதை கழட்டி எறி" என ஒரு மனம் ஆணையிட.. அதன் படி தாலியில் கை வைத்தவளுக்கு அதை கழட்டதான் முடியவில்லை.. அப்பொழுது தான் வருணிகாவின் மகன் மஹத் வரவும்.. சட்டென தாலியை தன் சேலைக்குள் மறைத்தவள்.. தன்னுடைய லுஸ் ஹேரை தாலிக்கயிறு தெரியாத வண்ணம் அட்ஜஸ்ட் பண்ணினாள்..


"ஆன்ட்டி உள்ளே தான் இருக்காங்க தனு… இப்போ அவுங்களுக்கு ஓகே.. வா நானே கூட்டிப் போறேன்" என்றவன் பதட்டத்தில் இருந்த ஆராதனாவின் கைகளோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டான…

அவள் இருந்த பதட்டத்தில் கவனிக்கவில்லை.. ஆனால் அவளின் பதட்டத்தை வேறு மாதிரி புரிந்து கொண்டான் மஹத்.. அவளை ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு அவள் மேல் தான் வைத்த காதல் இன்னும் பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை... பூங்கொடியை நன்றாக பார்த்தபின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது… அன்றிரவு ஏனோ பூங்கொடியுடன் அடம் பிடித்து தங்கி விட்டாள்.. விகர்ணனும் அபயும் ஹாஸ்பிட்டலிலேயே தங்கினர்..


அபய்க்கு முழுவதும் கோபம் கோபம் மட்டுமே.. தன் வீட்டிற்குள் நுழைந்து தன் தாயின் உயிரோடு விளையாடிருக்கும் நபர் மட்டும் அவன் கையில் சிக்கினால்.. அப்படியே ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து விடுவான் அப்படியொரு ஆவேசத்தில் இருந்தான்..


தன் வீட்டிலிருந்து அனைத்து வேலைக்காரக்ளை நிப்பாட்டியவன் அனைவரிடமும் சிங்கமாய் உறுமியவனுக்கு கிடைத்த பதில்.. "கடைசியாக பூங்கொடி குடித்த காபி கயற்கண்ணி கொடுத்தது என்பது மட்டுமே" என்றவன் சிறிதும் தாமதிக்கமால் கயற்கண்ணியை தேடி அலைய… இந்த திமிங்கலத்தின் வாயில் நுழையாமல் மீன்விழியால் மாட்டினாள்.. கொத்தித் தான்பானா??


அப்பொழுது கயற்கண்ணியின் செல்லில் இருந்து அபய் செல்லுக்கு வாய்ஸ் மெசேஜ் வந்தது.. அதைக் கேட்டவனின் முகமோ கோபத்தில் செந்தணலாய் மாறியது.


"தீராஆஆஆஆ" என்றவன் யாருக்கோ போன் போட இரண்டே மணி நேரத்தில் கடத்தப்பட்டிருந்தான் தீரன்.. தீரன் கடத்தப்பட்டிருப்பதை காவலர்கள் மூலம் அறிந்து கொண்ட தியாவோ ஏக சந்தோஷத்தில் இருந்தாள்… அவனுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை என நினைத்தவாறே, ஜாலியாக ஆடிக் கொண்டே வந்த தியாவை வழிமறித்த ஆராதனா… "என்னடி ரொமப ஜாலியா இருக்க??' என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டவள்..


"ஆமாடி.. ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கேன்.. எம் மேல ஜுஸை கொட்டுனது மட்டுமில்லாமல் அம்மாவுக்கே விஷம் வச்சவனை அண்ணா சும்மா விடுவானா??? தூக்கிட்டான்ல. இனி அவனுக்கு தீபாவளி தான்.. நம்மளுக்கு பட்டாசு தான்" என்றவளை சற்று கலக்கமாக பார்த்தாள்.."அவளுக்குத் தான் தெரியுமே விஷம் வைத்தது யாரென??" என்றவளுக்கு சற்று பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது..


"யாரைடி சொல்ற??" என்றவளுக்கு நாக்கு தந்தியடித்தது.."அதான்டி.. ஒரு நாள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல வச்சி ஜுஸ் ஊத்துனானே.. அவன் தான்" என்றதும் இதயத்தில் இனம் புரியா வலி ஒன்று ஊடுருவியது.. இது தான் தாலிக்கொடி உறவா??? என்றவளுக்கு கண்களின் ஒரம் கண்ணீர் கோர்க்க.. சட்டென பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்..


ஏனோ மனமெல்லாம் பதட்டமாகி ஏசி அறையிலும் வேர்த்து ஒழுகியது.. அபய்க்கு போன் போட.. அவன் வேண்டுமென்றே கட் பண்ணி விட்டான்.. "பிக்கப்… பிக்கப் ண்ணா" என்றவனின் வேண்டுதலில் ஒரு வழியாக அட்டென்ட் பண்ணியவன்..

"சொல்லு ஆரா" என்றவனின் கனிவான குரலை கேட்டவளுக்கு ஏனோ கண்ணீர் தான் வந்தது…


"ஆரா என்னாச்சி??" என்றவனுக்கு அவளின் அழுகை சத்தம் நன்றாக கேட்டது…


"அண்ணா அவரை விட்டுடு ண்ணா" என கண்ணீருடன் கேட்ட தங்கையை புருவம் சுருக்கி பார்த்தவன்.. சற்று எரிச்சலும் வந்தது... "முடியாது" என்ற ஒற்றை வார்த்தையில் பேச்சையே முடித்துக் கொண்டான்..

அவன் முடியாது என்று சொல்வான் என சிறிதும் ஆரா எதிர்பார்க்கவில்லை.. அதை நினைத்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது.. தீரனைக் காப்பாற்ற வேண்டுமெனால ஒருவனால் மட்டுமே முடியும் என மாடியேறி சென்றவள்.. நாகரீகம் பாறாது வேக வேகமாக தட்டிக் கொண்டிருந்தாள்…


கதவை திறந்த விகர்ணனுக்கு கண்கள் கலங்கி முகம் வீங்கி, கண்ணீருடன் நின்ற ஆராவை பார்த்ததும் பதறியவாறே "ஆரா" என்பதற்குள் அவனை வேகமாக அணைத்துக் கொண்டே கண்ணீரில் கரைந்தாள் ஆராதனா..


அவளின் கண்ணீர் துடைத்து விட்டு, "என்னாச்சி ஆரா??" என்றவனுக்கு அவளின் கண்ணீரே விடையாய் கிடைத்தது..

"அவரை விட சொல்லுங்க ப்பா??" என்ற பதிலிலேயே யாரை என்பதை புரிந்து கொண்டவன்.. எவனோ ஒருவனுக்காக அழும் மகளை கண்கள் இடுங்க பார்த்தவனின் தேகம் இறுகி உடல் விறைத்தது.. ஒரு வேளை தன் மகள் அவனை காதலிக்கிறாளோ?? என்று தான் தோன்றியது…


"அவனை காதலிக்கிறீயா ஆரா???" என்ற ஒற்றை கேள்வியில் வந்த கண்ணீர் கூட நின்றது.. அதிர்ச்சியில் அப்படியே நின்றவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.


"அப்பா என்ன சொல்றீங்க? காதலா?? அவன் மேலேயா?? இல்லைப்பா" என தீர்க்கமாக சொன்னவளின் பதிலில் அவளை ஆழ்ந்து பார்த்தவன். "சரி நான் அவனை விட சொல்றேன்" என்ற பதிலை கேட்டதும் தான் மனதே சற்று சமன்படுத்தியது…


ஆரா சமாதானமாகி அறைக்குள் சென்றதை பார்த்தான்.. ஆரா சென்றதும் விகர்ணன் நேராக காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.. அவனுக்கு நன்றாக தெரியும் அபய் எங்கிருப்பானேன… நேராக அவனின் தோட்டத்தின் வீட்டின் முன்பு சென்றவன். முன் கேட் வழியாக செல்லாமல் பின் கேட்டில் சென்றவன்.. மோட்டார் சுற்றினை போட அங்கு போடப்பட்டிருந்த டைல்ஸ் தன்னால் திறந்தது…


வேகமா உள்ளே சென்றவனுக்கு அங்கு குற்றுயிருமு குலையிருமாக தொங்க விடப்பட்டிருந்த தீரனை பார்த்ததும் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை…


அழுத்தமான காலடியோசையை கேட்ட அபய்க்கு நன்றாக புரிந்தது வந்திருப்பவர் யாரென்று.. எரிச்சலுடன் திரும்பியவன்.. "என்ன டாட்.. பிரச்சனை அந்த ஆராக்கு??" என சிடுசிடுத்தவனை கண்டு, கோபப்படாமல்


"கூல் அபய்.. அவளுக்கு தன்னால ஒரு உயிர் போயிருமோன்னு தவிக்குறா.. அவளுக்காகவது இவனை விடு?" என்ற விகர்ணனை கோபத்துடன் முறைத்தான்…

"என்ன டாட்.. விளையாடுறீங்களா?? நம்ம இல்லாத நேரம் நம்ம ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிதைக்க பாத்திருக்கிறான்.. அவனைப் போய் விட சொல்றீங்க??" என சற்று குரல் உயர்த்தி பேசிய அபயை கூர்ந்து பார்த்தவனின் பார்வையில் பொருள் அறியா சிறு குழந்தையாய் நின்றான் அபய்..


"எனக்குப் புரியல டாட்??" என வாய்விட்டு சொல்லியவனை கண்டு சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவன்…


"அபய் நம்ம வீட்டுல ரொம்ப டிபரெண்டான ஆளுன்னா அது ஆரா மட்டும் தான்.. அவளுக்கு இந்த சண்டை அடிதடி, குரல் உசத்தி பேசுறது இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.. இவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திருக்கு.. இவன் உன்கிட்ட மாட்டிக்கிட்ட விஷயம் எப்படியோ அவளுக்கு தெரிஞ்சிருக்கு.. இப்போ இவனுக்கு ஏதாவது ஆச்சினா அவ வெறுப்பை தான் நாம சம்பாதிக்கணும்… சோ.. இவனை விடு. பார்த்துக்கலாம். இப்படி ஒரு எதிரி இருக்கிறதும் நல்லதுக்கு தான.. நம்ம பலம் என்னன்னு நாம தெரிஞ்சுக்கலாம்" என்ற விகர்ணனை சற்று கடுப்புடன் தான் பார்த்தான் அபய்..
 

Attachments

  • images.jpeg
    images.jpeg
    21 KB · Views: 3
Last edited:
Top