ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாயம் செய்தாயோ MS 15

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது யமுனாவின் கை நடுங்க ஆரம்பித்தது. தேவ் காரிலிருந்து காஷூவலாக இறங்கி டிரைவரிடம் காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு யமுனாவிடம் திரும்பி
விட்டு இறங்கு என்று கம்பீரமாகச் சொன்னான். இவன் பண்ண வேலைக்கு கொஞ்சம் கூட பயம் இல்லாம வரான் ஆமா இவனுக்கு தான் குடும்பமே கூட்டே அப்போ என்ன ஜாலியா தான் இருப்பான் ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையே கெடுத்துட்டு எப்படி இருக்கான் பாரு படுபாவி என்று மனதில் வஞ்சித்துக் கொண்டே கீழே இறங்கினாள்.

இவர்கள் வருகையை எதிர்பார்த்து இருந்ததாலோ என்னவோ வீடே வெளிச்சமாக விழாக்கோலாக காட்சியளித்தது. தேவ் மற்றும் யமுனா வீட்டு வாசலை நெருங்கும் போதே அந்த வீட்டின் மூத்த தலைவி சீதாலட்சுமி தேவ் வின் தாய் மற்றும் பிரியா இவர்களை ஆர்த்தி எடுத்தார்கள் பின்னாடி ஜெயப்பிரகாஷ் நின்று கொண்டு இருந்தார். அவர்கள் தேவுடைய தாய் தங்கையாக தான் இருக்கும் யூகித்து யமுனா இந்த குடும்பத்தையே மனதில் வஞ்சித்தாள்.

அவர்களை உள்ளே வருமாறு அழைத்தனர் தன்னுடைய லக்கேஜை வேலையாட்கள் மேலே எடுத்துச் சென்றதை யமுனா கண்டாள். அவர்களிடம் இது வரை ஒரு வார்த்தை பேசாத யமுனாவின் மனநிலை அவர்களுக்கே புரிந்தது என்ன இருந்தாலும் தன் மகன் மிரட்டி அல்லவா ஒரு பெண்ணை திருமணம் செய்து வந்திருக்கிறான். "ஆதிரா என்ன பண்றா அம்மா" என்ற தேவ் விடம் அவ பிரியா ரூம்ல தூங்குறாப்பா என்றார் அன்னை தன்னுடைய மனப் போராட்டத்தில் இவர்கள் பேசியதை தவற விட்ட யமுனாவிடம் வேலையாள் மேலே உங்க ரூம் ரெடியா இருக்குமா வாங்க என்று அழைத்தாள்.தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளோடு மாடிக்குச் சென்றாள் யமுனா வீட்டில் அனைவருக்கும் ஒரு குழப்பம் இருந்தது யமுனா விற்கு ஆதிரா பற்றி தெரியுமா இல்லையா என்று ஆனால் அவனிடம் இதைப் பற்றிக் கேட்கத் தயங்கினர்.

பிரியாவை அழைத்த தேவ் "ஆதிரா ஒரு வாரம் உன் கூடவே இருக்கட்டும் அதுக்கு அப்புறம் அவளை யமுனா தான் பாக்கனும் ஏனா இன்னும் கண்டிப்பா ஒரு மாசத்துக்குள்ள உனக்கும் திவாகருக்கும் கல்யாணம் நடக்கும் அப்புறம் ஆதிரா உன்னை நினைச்சு ஏங்கிடுவா அதனால யமுனா தான் இனிமேல் ஆதிராவ பார்க்கனும்" என்றான் தீர்மானமாக. சற்று தயங்கிய பிரியா "அண்ணா அவங்கள பார்த்தா என்னை விட சின்ன பொண்ணு மாதிரி தெரியுது அவங்க எப்படி அண்ணா ஆதிராவ பார்த்துப்பாங்க"என்று அமைதியாக கேட்டாள்." அது யமுனா வோட தலைவிதி அதைப் பற்றி நீ கவலைப்படாத"என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டான்.

என்னால ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை போச்சோனு தோனுது மா என்று" தன் தாயிடம் சாய்ந்து அழுதாள் பிரியா" தேவ் ரொம்ப நல்லவன் மா கெட்டிக்காரன்" என்றார் சீதா " ஏன் சீதா யமுனா க்கு வந்த மாதிரி நிலைமை பிரியா விற்கு வந்தா நம்மளால ஏத்துக்க முடியுமா சொல்லு" என்று கேள்வியாய் கேட்டார் ஜெயப்பிரகாஷ் அதற்கு வாயடைத்துப் போனார் சீதா. இன்னும் ஆதிரா பத்தி அந்த பொண்ணுக்கு தெரியாதுனு தான் நான் நினைக்கிறேன் என்று கூறிவிட்டு உறங்க சென்று விட்டார் தேவ் வின் தந்தை. சீதாலட்சுமி யும் பிரியாவை ஆறுதல் படுத்தி விட்டு உள்ளே படுக்க சென்று விட்டார். பிரியா விற்கு ஏனொ மனது சமாதானம் அடையவில்லை நேரே பூஜை அறைக்குச்சென்று கடவுளிடம் மண்டியிட்டு வேண்டினாள் முருகா நீ தான் இந்த குடும்பத்துக்கு சந்தோஷத்தை கொண்டு வரனும் என்று வேண்டினாள்.

வேலைப் பார்க்கும் பெண்மனி காட்டிய அறையில் உள்ள சென்ற யமுனா விற்கு அப்போது தான் மூச்சே விட முடிந்தது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அறை போல இருந்த அந்த அறையை பார்த்த யமுனா விற்கு வயிறு கலக்கியது ஏதோ மர்ம குகை போல உணர்ந்தவளுக்கு அந்த அறையின் அழகை அதில் இருந்த அழகிய ஓவியங்களை ரசிக்க மனம் வரவில்லை மாறாக பயந்தாள். "பால் எடுத்துட்டு வரவாம்மா நீங்க விமானத்துலயே சாப்பிட்டிங்கனு சின்ன ஐய்யா சொன்னாரு பால் சாப்பிடுறீங்களா" என்று கேட்டாள் அந்த வேலைக்கார பெண்மணி. ஐம்பதை நெருங்கும் அந்த வேலைக்கார அம்மாவைப் பார்த்த யமுனா முதல் முறையாக தன் தாயை பிரிந்த வலியை உணர்ந்தாள் சாந்தி உயிரோடு இருந்தால் இப்போது அப்பெண்மணியின் வயது தான் ஏறத்தாழ இருக்கும். அவரைப் பார்த்து கண் கலங்கிய யமுனா யாரும் இல்லாத அனாதையாயாக உணர்ந்தாள் தனக்கு இப்போது தாய் இருந்தால் கண்டிப்பாக இந்த நிலமை வந்திருக்காது. "எனக்கு எதுவும் வேண்டாம் மா என்னை தனியா விடுங்க" என்று அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்த கமலாம்மா கவலையோடு வெளியே சென்றார்.

கமலா மூன்று வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறார். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்யும் ஆற்றலைக் கொண்டவர் அவர் செய்யும் சமையல் சத்யதேவின் மொத்த குடும்பத்துக்கும் ரொம்ப பிடிக்கும் ஒவ்வொரு ருக்கும் பிடித்த மாதிரி உணவை தயாரிப்பதில் கமலாம்மாக்கு நிகர் யாரும் இல்லை. யமுனா வேண்டாம் என்று சொன்ன பின் வெளியே வந்த கமலாவை எதிர்கொண்டது தேவ் தான். "கமலாம்மா என்ன ஆச்சு கையில பாலோடு திரும்பி வரீங்க" என்று யமுனாவின் மூடிய அறையை ஒரு பார்வை விட்டான். "அது வந்து சின்னய்யா யமுனாம்மாக்கு பால் குடுக்க போனேன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க " என்று தயங்கி கூறினார். "சேரி நீங்க கீழே போய் படுத்துக்கோங்க" என்று அவரை அனுப்பிய தேவ் நேராக யமுனாவின் மூடிய கதவின் அறையைத் திறந்து உள்ளே சென்றான்.அந்த அறையில் இருக்கும் பால்கனியில் வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்" யமுனா" என்று கணீரென்று அழைத்த தேவ் வின் குரலில் திடுக்கிட்டாள்." ஹலோ ரும்க்குள்ள வரதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு வாங்க" என்றாள் யமுனா. "லுக் யமுனா திஸ் ஸ் மை ஹோம் அன்ட் ஐ ஹேவ் ரைட்ஸ் டு கம் எனிவேர் இன்ஸைடு சோ ஷட் அப்" என்றான் திமிராக. "உனக்கு வேணும்னா மேல லாக் போட்டுக்கோ நீ அப்படி லாக் போடலனா கதவை தட்டிட்டு வரனும்னு இந்த தேவ்க்கு அவசியம் இல்லை" என்றவன் "நீ எக்காரணம் கொண்டும் இந்த வீட்டுல இருக்கிற யார் கிட்டயும் உன் திமிரு தனத்த காட்டக்கூடாது அப்படி எதாவது நடந்துதுனு தெரிஞ்சா நான் மனிஷனாவே இருக்க மாட்டேன் நாளைக்கு காலையிலே உன் மாமா வீட்டுக்கு போகனும் ரெடியா இரு" என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றான்.

இப்போ மட்டும் மனிஷனாவா நடந்துருக்கான் சரியான காட்டுமிராண்டி என்று தனக்குள் தேவ்வை திட்டியவள் படுக்க சென்றாள். அடுத்த நாள் காலை யமுனா எழுந்திருக்க மணி எட்டு ஆனது என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு டிரெஸ்ஸிங் டேமிளில் ஒரு நீள நிற பட்டுப்புடவை மற்றும் அதற்கேற்ற பிளவுஸ் தங்க நகைகள் இருந்தது அவள் இதெல்லாம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய அறையை யாரோ தட்டினர். நிச்சயமா அவனா இருக்காது அவனா இருந்தால் தட்டாமல் உள்ளே வந்திருப்பான் என்று நினைத்தவள் வாங்க என்று சத்தமாக சொன்னாள். அங்கே ஒரு வேலையாள் போன்ற பெண் முப்பது வயதை ஒட்டி இருக்கும் அவள் உள்ளே வந்து ப்ரேக்பாஸ்டை அந்த ரூமிலியே இருக்கும் குட்டி டைனிங் டேமிளில் வைத்து விட்டு "அம்மா உங்கள சத்யா சார் குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டவுடன் இந்த நகை புடவை கட்டிட்டு வர சொன்னாரு" என தன் கடமை முடிந்தவளாய் கிளம்பி விட்டாள்.

தன் வாழ்க்கையை நினைத்து நொந்தவள் பல் துவக்கி குளித்து விட்டு சாப்பிட்டு உடை அணிந்து வெளியே வர மணி பத்து ஆனது. கீழே இறங்கி சென்றவள் அங்கே ஹாலில் யாரும் இல்லை என்பதைப் பார்த்தாள் என்ன செய்வதென்று தெரியாமல் சோபாவில் போய் அமர்ந்தாள் "உனக்கு கிளம்ப இவ்வளவு நேரமா ஆல்மோஸ்ட் மதியமே ஆக போகுது எனக்கு நான் ஒன்னு சொன்னா அதன்படி பக்காவா நடக்கனும் காலைல உன் மாமாவ பாக்கனும்னு சொன்னா இந்நேரம் அங்க இருந்திருக்கனும் நான் உன்னை நகை போட சொல்லிருந்தேனே ஏன் போடல" என்று திமிராகக் கேட்டான். "எனக்கு இதுல லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை ஏன் இந்த கல்யாணமும் பிடிக்கல உங்களை சுத்தமா பிடிக்கல" என்று கத்தினாள். அவளை தரதரவென்று இழுத்து தனது அறைக்கு கொண்டுபோய் கதவை சாத்தினான் தேவ். இச்செயலில் அதிர்ந்த யமுனா பயந்தாள்.
 
Top