ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Member
Wonderland writer
தூவானம் 🌧 34

காதலுக்காக
எதையும்
விட்டு கொடுக்கலாம்
காதலை தான்
ஒரு போதும்
விட்டுக்கொடுக்ககூடாது
💙💙💙💙💙💙💙💙💙💙💙

ஹாஸ்டலில் இருந்து கிளம்பிய, விக்ரமும் காவ்யாவும் தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்க்காக இருவரும் பாண்டிச்சேரி சென்றனர்.

அங்கு பீச்சில் கடலலைகள் கால் நனைக்க இருவரும் நடந்தனர், பின்பு சின்ன சின்ன விளையாட்டு, குறும்பு என அவர்களின் காதல் கேளிக்கைகள் தொடர்ந்தது.

பின் இருவரும் சாப்பிடுவதற்க்காக, ஒரு ஹோட்டலில் இருக்க, அங்கும் இருவரின், விளையாட்டும் நேசமும் தொடர்ந்தது.
அங்கு இவர்கள் மிகவும் தெரிந்த இரு கண்கள் ஆக்ரோஷமாக பார்த்து கொண்டிருந்தது.

எல்லா காதல் விளையாட்டுகளுடன் அந்த நாள் இருவருக்கும் மீண்டும் வராது என்பது போல் அமைந்தது.

இரண்டு ஒரு நாட்கள் கடந்தது, ஒர் நாள் காவ்யா தன் தோழி நிஷாவிடம் தாம் வெளியே ஒரு வேலையாக செல்வதாக கூறிவிட்டு தனது வண்டியை எடுத்துகொண்டு சென்றாள்.

சட்டென அவள் வண்டி மேல் வேறோரு வண்டி மோத அதில் நிலைகுலைந்தவள்,அப்படி கீழே விழுந்து மயங்கினாள்.

சிறிது நேரம் கழித்து கண்முழித்தவள், தான் இருந்த இடம் ,இருந்த கோலம் கண்டு அதிர்ந்து விட்டாள்.

" நான் எங்க இருக்கேன், நீங்கெல்லாம் யாரு, ஏன் என்ன கட்டி போட்டு வைச்சு இருக்கீங்க, சொல்லுங்க" என அந்த இடமே அதிரும் அளவு கத்தினாள்.அப்போது அவள் முன் அவள் தந்தை வயதொத்த ஒரு நபர் வந்து நிற்க்கவும் அப்படியே அவளுடைய கத்தல்கள் அடங்கியது.

ஆம் அது சதாசிவம்
"கண்ணு, ஏன்டா கத்துற ,எனர்ஜி வம்பா போய்டும்ல"

"முதல்ல நீங்க யாருண்ணு சொல்லுங்க"

"இங்கப்பாரு நான் யாருங்கிறதவிட நான் என்ன சொல்ல வர்றங்கிறதுதான் முக்கியம்".
என சதா சிவம் கூற காவ்யாவிற்கு குழப்பம் தான் மிஞ்சியது.

"சரி, உனக்கு புரியுற மாதிரியே சொல்லுறேன், நீ என் மாப்பிள்ளை விக்ரம் கூட சுத்திட்டு அலையுரத நான் பார்த்தேன்"

"எது விக்ரம் உங்க மாப்பிள்ளையா"

"ஆமா என் பொண்ணு ஷீலாக்கும் விக்ரம்க்கும் தான் கல்யாணம் முடிவு செய்து வைச்சுருக்கிறோம்"

"இதுக்கு விக்ரம் ஒத்துகிட்டு இருக்கமாட்டானே"

"அட சரியா சொல்லுற அவ்வளவு நம்பிக்கை"

"சின்ன திருத்தம் சார் ,அவ்வளவு காதல்"

"என்ன கருமாந்திரமோ இருந்துட்டு போகட்டும், பணக்கார பையன்னா சில எச்சக்களைங்க சுத்த தான் செய்வாங்க, அதுக்காக அதுகலையெல்லாம் சேர்த்து வைக்க முடியுமா"

"எச்சக்களை என்ற வார்த்தையில் காவ்யா ஆங்காரத்தில் "சார் , வார்த்தை ,வார்த்தைய பார்த்து பேசுங்க, இது மட்டும் விக்ரம்க்கு தெரிஞ்சுது, நீங்க அவ்வளவு தான்"

"ஆஹான், ஐயோ பயந்துட்டேன் அம்மாடி" என பயங்கரமாக சிரித்துவிட்டு தெரிஞ்சா என்ன பண்ணுவான்,வந்து என்கிட்ட காச்சு மூச்ச்னு கத்துவான், என் பொண்ண கட்டிக்க மாட்டேன் சொல்லுவான், என் கனவுல மண்ண அள்ளி போடுவான், நானும் என் கனவு கலைஞ்சு போன கோபத்தில இந்த பிஸ்டல் அ எடுத்து ஒரே போடு போட்டு தள்ளிடுவேன்( தன் பாக்கெட்டில் இருந்து பிஸ்டல் எடுத்து காட்டினார்) எனக்காக சரணடைய இதோ இவன் வருவான் , இன்னடா வருவில்ல என அருகில் இருக்கும் அடியாளை நோக்கி கேட்க அவனும் ஆமா பாஸ் என தலை ஆட்டினான்".

"உன்ன போட்டு தள்ள எனக்கு ரொம்ப நேரம் ஆகாது , ஆனா என் பொண்ணுக்கு உன் வயசுதான், அதான் கன்னிப்பொண்ணு பாவம் வேண்டாம்னு உன்ன உயிரோடு விடுறேன், உனக்கு ஒரு நாள் டைம் என்ன செய்வியோ, எங்க போவியோ யாருக்கும் தெரியாம, விக்ரம விட்டு விலகிப்போயிடு, அதவிட்டு புத்திசாலித்தனமா ஏதோ பண்ணப்போறன்னு அநியாயத்திற்க்கு விக்ரம் உயிர காவு வாங்கிடாத ,என்ன நான் சொன்னது புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்,டேய் அவுத்து விடுங்கடா,பாப்பாவ எங்க இருந்து கொண்டு வந்திங்களோ அங்கயே கொண்டு விடுங்க , பாப்பா விக்ரம் உயிர் உன் கையில நியாபகம் வச்சுக்க"
என சதாசிவம் மிரட்டி காவ்யாவை அனுப்பி வைத்தார்.

தன் அறைக்கு வந்து வெகுநேரம் யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவளாய் இருந்தாள் .
மறுநாள் வழக்கம் போல அனைவரும் ஆபிஸில் சந்தித்தனர். வழக்கத்திற்கு மாறாக, அன்று மிகவும் மகிழ்ச்சியில் இருந்தாள் காவ்யா, தன் நண்பர்களுடன் கேலி கிண்டல் என ஒரே அட்டகாசம் தான், பின் தேவ்வை கூப்பிட்டு சில விஷயங்களை பேசியவள், அவனிடம் அவர்களின் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

நிஷாவிடமும் கூறிவிட்டாள்.
தேவ்வும், அங்க மீட்டிங், இங்க மீட்டிங், அந்த வேலை இந்த வேலை என விக்ரமை அலகளித்து பின் இரவு 8 மணிக்கு தான் வீட்டிற்க்கு சென்றனர் .

விக்ரமை வீட்டில் இறக்கி விட்டு, தேவ் காரை எடுத்து கொண்டு சென்றுவிட்டான், என்ன நடக்கிறது என புரியாமல் காம்பவுண்ட் உள் நுழைந்த விக்ரம் கண்டது நீச்சல் குளத்தில் தன் கால்களை விட்டபடி அமர்ந்திருந்த காவ்யாவை தான், அவளை பார்த்தபடியே இன்ப அதிர்ச்சியாக அவளிடம் வந்தான் விக்ரம்.

"வாட் அ சர்பிரைஸ் காவ்யா நீயா, நீயா இந்த இரவு நேரம் என் வீட்டுக்கு வந்திருக்க" என ஆச்சரியமாக கேட்க.

"ஏன் விக்ரம், என் ஹஸ்பன்ட் வீட்டிற்க்கு நான் வரக்கூடாத , ஏன் எனக்கு உரிமை இல்லையா"

" உனக்கு இல்லாத உரிமையா , இருந்தாலும் இன்னிக்கு இது புதுசா இருக்கு காவ்யா " என விக்ரம் கூறிமுடிக்கவும் மழை வரவும் சரியாக இருந்தது.

மழை வந்தவுடன், சட்டென்று காவ்யாவை பிடித்து இழுத்து கொண்டு, உள்ளே ஹால்லிற்க்கு சென்றான் விக்ரம். அங்கு தன் ஆடையின் ஈரத்தை தட்டி கொண்டிருந்த
விக்ரம் முன் பட்டு வேஷ்டி சட்டை ஒன்றை நீட்டினாள் காவ்யா.

"விக்ரம் இதை போட்டுட்டு வாங்க "

"என்ன காவ்யா பட்டு வேஷ்டி இப்போ எதுக்கு இது"

"எல்லாம் கொஞ்ச நேரத்தில் தெரியும் போய் போட்டுடு வாங்க"
என காவ்யா சொல்லவும், மறுத்து பேசமால் அதே சமயம் யோசனையோடு சென்று அதை அணிந்து கொண்டு வந்தான், அதே நேரத்தில் இளம்சிவப்பு நிறத்தில் காவ்யாவும் பட்டு புடவை கட்டிக்கொண்டு விக்ரம் முன்னாடி வந்து நின்றாள்.

"ஹேய் இந்த இந்த புடவை உனக்கு எப்படி கிடைச்சுது இது நம்ம ரிஜிஸ்டர் மேரஜ்காக வாங்கி வச்சது நீ அன்னிக்கு ஏற்கனவே புடவையில இருந்ததனால இத உன்கிட்ட கொடுக்க முடியல, சரி இது எப்படி உன்கிட்ட வந்தது" என சந்தேக மற்றும் சந்தோஷமாக விக்ரம் கேட்க.

(அந்த புடவையை மறுநாளே தேவ் ,காவ்யா விடம் கொடுத்துவிடுட்டான்.)

"ஆங் அதெல்லாம் அப்படி தான், இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா ரூம் உள்ளே போங்க நான் வர்றேன்"

"என்ன தீ ..... இதெல்லாம் , ஓரே சர்பரைஸ் பண்ற இன்னிக்கு நீ ரொம்ப சேஞ்ச் கட்டுறடி" என்ற புலம்பல் மற்றும் யோசனையுடன் ரூம் கதவை திறந்து உள்ளே சென்றவன் கண்கள் அகல விரிந்தது, அறைமுழுவதும் மலர் அலங்காரம், ஓரிடத்தில் மட்டும் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த போட்டோ அதை சுற்றி ஒளிரும் வண்ண விளக்குகள் , மெத்தை மீது வெள்ளை மல்லிகை மொட்டுக்கள் அதன் மீது ரோஜா இதல்களால் இதயவடிவில் அலங்கரிக்கப்பட்ட அலங்காரம், குளிரூட்டப்பட்ட அறை, என அனைத்தும் அவனது மனதை வேறெங்கோ அழைத்து சென்றது. அனைத்தும் கண்டு மெய் மறந்து நின்ற விக்ரம் தோளை தொட்டாள் காவ்யா.
மெல்ல திரும்பி காவ்யாவை பார்தவன்..

"தீ...என்னடி நடக்குது இங்க "

"இப்ப வரைக்கும் ஒண்ணும் நடக்கல, விக்கி இனி தான் நடக்கும்"என ஒரு வெட்கப் புன்னகை சிந்தினாள்.

"ஹேய் என்ன சொல்லுற நீயா இப்படி பேசுற, இதெல்லாம் ஏற்கனவே நாம டிசைட்பண்ணி வச்சுட்டோமே எப்போன்னு"
என குழப்பமாக விக்ரம் கேட்க.

"டிசைட்பண்ண மாதிரி தான் நடக்கனும்னு எந்த கட்டாயமும் இல்லையே விக்கி" என சினுங்கள் மொழியில் காவ்யா கூற
"ஹேய்...."என விக்ரம் பேச்சு எடுக்கும் முன் அவனிடம் பால்சொம்பை நீட்டினாள்.

"தீ ... ரொம்ப சினிமா பார்ப்பியோ" என கிண்டல் அடிக்க.
அவனுக்கு ஒரு சிறிய முறைப்பை பரிசாக அளித்தாள்.

"தீ என்ன இது எல்லாம் தீடிர்ன்னு புதுசா இருக்கு ,விளையாடாத டி , ஒர் அளவு தான் என்னால கன்ட்ரோல் பண்ண முடியும், நானும் சாதாரண ஆசைகள், தாபம், ஏக்கம் நிறைஞ்ச மனுசன் தான் சொன்னா புரிஞ்சுக்கோ டி, பிராங்க் பண்ணினா இப்பவே சொல்லிருடி" என அப்பாவியாக விக்ரம் கேட்க, ஒரு முடிவெடுத்து வந்தவள் பின்வாங்குவாளா என்ன.

"விக்கி, இது பேச வேண்டிய நேரம் இல்லை ம்ம்ம்..... " என அவன் முகம் அருகில் சென்று மூக்கு உரசி அவன் இதழில் மெத்துவாக தன் இதழால் தொட்டுருசினாள் காவ்யா.

காவ்யாவின் இந்த
இதழ்தொடுதழினால், தன் உடம்பில் மாற்றத்தை உணர்ந்த விக்ரம்,

"ஹேய் வேண்டாம் தீ அப்புறம், ......."
என சொல்ல முடியாமல் திணறினான், ஏனென்றால் காவ்யாவின் வெண்டை விரல்கள் அவன் மேனியொங்கும் தொட்டுறசியது.

"தீ........ என மோகனக் குரலில் தன் ஆண்மை விழித்தெல ,தன் ஆசை காதலி தீஷாவுடன் மஞ்சத்தில் சரிந்தான் விக்ரம், ஐ லவ்யூ தீஷா என்ற முனகல் உடன்.

மல்லிகை, ரோஜா நறுமனம் அவன் நாசினுள்
சென்று அவனது தலையில் மோக தாண்டவம் ஆடியது.

மன்மதன், ரதிதேவியின் ரகசியங்கள் அனைத்தும் நடந்தேறியது அம் மஞ்சத்தில்,
நின் அந்தரங்கம்,
நான் அறிய,
என் பூமேனி நீ வருட
வெட்கம் வந்து
விடுமுறை எடுக்க...
மோகம் கொள்ளுதடி
உன் மீது
என் மூச்சு முட்ட
அனைத்து கலைகளிலும், ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் இல்லை என்பது போல் ஈருடல் சங்கமித்திருந்தனர் மஞ்சமதினில்.

ஒருவருக்கொருவர் இன்பதை கொடுத்தும், அதனை பெற்றுக்கொண்டும் ,கூடலின் உச்சம் அடைந்தனர்.காதலை ஆதாரமாய் கொண்டு ஆனந்தமாய்.
மஞ்சம் நொந்தது, மலர்கள் வாடியது
ஆடைகள் அனாதையாகப்பட்டு , அங்கம் இரண்டும் களைப்புற்று , தங்கள் காதல் கண்கள் துயில் வேண்டி நிற்க, கருணை கொண்டு அவ்விரு மனமும் அவ்விரு ஜோடி கண்களுக்கும் தூயில் அருளியது.இனிய தாம்பத்தியத்தில் வெற்றி கொண்டபின்.

இன்று கதிரவன் ஏனோ விரைவில் விழித்து விட்டானோ, துயில் களைந்த பின்பும், தன் கண்களை திறவாமல் தன் அருகில் உள்ள தன் காதல் மனைவியை மஞ்சத்தில் கை நீட்டி தேடினான், அருகில் காவ்யா இல்லை ,
இல்லை என்பதை உணர்தவன் தன் கண்களை திறந்து ,தன் ஆடைகளை அணிந்து பின் வீடு முழுவதும் தீ .... தீ ... என்று தேடினான்.இவ்வளவு காலையில் எங்க சென்றிருப்பாள் என்ற யோசனையுடனே தன் கைப்பேசியை எடுத்து காவ்யாவிற்கு அழைத்தான் அது அணைத்து வைக்கப்பட்டுள்ளது என வரவும், சட்டென்று நிஷாவிற்க்கு அழைத்தான்.

"யாருயா அது காலைலயே போன் போடுறது" என தூக்கத்தில் எரிச்சல் கொண்டு தனது கைப்பேசியை எடுத்து பார்த்தாள் நிஷா

" விக்ரம் ஏன் காலைலயே போன் பண்றான், ஹலோ விக்ரம் சொல்லு"

"நிஷா காவ்யாகிட்ட கொஞ்சம் போன குடேன், அவ போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது"

"ஏய் என்ன உளர்ற , காவ்யா உனக்கு ஏதோ சர்பிரைஸ் கொடுக்கனும்னு நேத்தே அங்க வந்தாள்ல, அதுக்கப்புறம் அவ இன்னும் இங்க வரவேஇல்லையே"

"என்னது அங்க வரலையா நிஷா நேத்து என் கூட தான் இருந்தா ஆனா, காலைல அவள காணோம் அதான் ஒருவேலை அங்க வந்துருப்பாளோன்னுதான்"

"விக்ரம் இவ்வளவு சீக்கிரம் அவ எந்திக்க சான்சே இல்லை ,அங்க தான் ஏதாவது ரூம்ல தூங்கிட்டு இருப்பா நல்லா தேடி பாரு "

" இல்லை நிஷா , நான் வீடு எல்லாம் ஒரு இடம் விடாம தேடி பார்த்துட்டேன் அவள காணோம், எனக்கு பயமா இருக்கு, நீ அமரன்க்கு விஷயத்தை சொல்லிட்டு அவனையும் கூட்டிட்டு இங்க வாயேன்"

என பதட்டமாக நிஷா விடம் பேசிவிட்டு தேவ்க்கும் போன் செய்து வரச்சொன்னான்.
ஹாலில் விக்ரம் அமர்ந்திருக்க அவனை சுற்றி அமரன், நிஷா, தேவ் என அனைவரும் ஒருவித பதட்டத்துடன் அமைதியுடனும் அமர்ந்திருந்தனர்.

அமைதியை கலைக்கும் விதமாக அமரன் பேச ஆரம்பித்தான்.

" என்னாச்சு விக்ரம், எங்க போனா காவ்யா, நேத்து உங்களுக்குள்ள ஏதும் பிரட்சனையா, ஹா சொல்லு, நீ இப்படி அமைதியா இருந்தா,எப்படி காவ்யாவ கண்டு பிடிக்கிறது" என அவனை உலுக்க, அவன் ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் அமைதியாக இருந்தான்.

"சரி விக்ரம் நேத்து காவ்யா எந்த ரூம்ல இருந்தா" என விக்ரமிடம் அமரன் கேட்க தாங்கள் இருந்த அறையை கை காமித்தான் விக்ரம்.

அமரன் சட்டென எழுந்து அந்த அறையில் ஏதேனும் கிடைக்குமா என கண்டறிய அறையினுள் சென்றபின் தான் தெரிந்தது, அவர்களிடைய நடந்தது ஊடல் இல்லை கூடல் என்றே, அறையை முழுவதும் நோட்டமிட்டவன் கண்களில் சிக்கியது டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கடிதம், அதனை எடுத்தவன் உடனே வெளியே வந்தான்.

"ஹேய் விக்ரம் , காவ்யா லட்டர் எழுதி வச்சுருக்கா இத நீ பாக்கலயா"என அமரன் கூறவும் சட்டென்று அதை வாங்கி படித்தவன் அப்படியே இடிந்து மீண்டும் சோபாவில் விழுந்தான்.

அமரன் அந்த கடிதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
அன்புள்ள விக்கி,
என்ன மன்னிச்சிரு விக்கி, நான் உன் கூட நூறு வருஷம் சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு ஆசை பட்டேன், என் ஆசை இப்படி கனவா போகும்னு நினைக்கல, நான் உன்ன விட்டு போறேன் விக்கி, ஏன் எதுக்குன்னு என்ன கேட்காத, அத சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை, ஆனா போறேன், நீங்க யாரும் தேடி வரமுடியாத இடத்திற்கு போறேன், ஒரு நாள் , ஒரே ஒரு நாள் உனக்கு மனைவியா உன் கூட வாழ்ந்த சந்தோஷத்தோட போறேன் விக்கி, என்ன தேடாத நான் ராசி இல்லாதவ , என்ன மறந்துவிட்டு நீ ஒரு வேற ஒரு வாழ்க்கைய வாழு விக்கி , நான் போறேன் விக்கி.
இப்படிக்கு உன்நினைவுகளுடன்
காவ்யா என்ற உன் தீஷா...
கடிதத்தை அமரன் வாசித்து முடிக்கவும்,

"இல்லை இல்லை , காவ்யா ஏன்டி இப்படி பண்ண உனக்கு என்னதான் பிரட்சனை "என அழுது கத்தி விட்டான் விக்ரம் .

ஒரே நாளில் எல்லாம் இருண்டு விட்டது, அனைவருக்கும்...
நாட்கள் , வாரங்கள் ஆனது வாரங்கள் மாதங்கள் ஆனது, மாதம் ஒன்பதை கடந்தது,காவ்யா எங்க போனாள் என்பதே தெரியவில்லை, அமரன், எவ்வளவோ தனது பதவியை பயன்படுத்தி, எல்லா இடங்களிலும் தேடி பார்த்து விட்டான், காவ்யா கிடைக்கவில்லை.

காவ்யா வளர்ப்பு தந்தை, தாய் ஆன, ரகுராம் மற்றும் அகிலாவும் சென்னையிலேயே தங்கிவிட்டனர், தங்கள் மகளை பற்றி ஏதேனும் தெரிந்து விடாதா என்று அவர்களுக்கு ஆறுதலாக அமரனும், நிஷாவும் இருந்தனர்.
காவ்யா வை மறக்கமுடியாமல் எந்த விருப்பு
வெறுப்புமின்றி ஒரு பொம்மை போல் நாட்களை ஓட்டி வந்தான் விக்ரம்.

இந்நிலையில் தான் அமெரிக்கா வில் இருந்து விக்ரமை வளர்தவர்களை வரவைத்து, விக்ரம் பிஸ்னஸ் நஷ்டம் அடைந்ததில் விக்ரம் மிகவும் மனமுடைந்து விட்டான் அவனது மனநிலையை மாற்ற கல்யாணம் மட்டுமே ஒரு தீர்வு என நம்ப வைத்து, அவர்களை வைத்தே விக்ரம்க்கும், ஷீலாக்கும் கல்யாணத்தை தந்திரமாக ஏற்பாடு செய்துவிட்டார் சதாசிவம் .
விக்ரமை வளர்த்தவர்களும்,காவ்யாவை வளர்த்தவர்களுக்கும் ஏன் சதாசிவம்த்திற்கும் கூட இது வரை தெரியாது விக்ரம்க்கும் காவ்யாவிற்கும் பதிவு திருமணம் நடந்து விட்டது என்று.

எல்லாம் தெரிந்தும் அமரன் ஒன்றும் சும்மா இருக்க வில்லை அவனும் ஒரு திட்டத்தை தான் போட்டு கொண்டிருந்தான்,
நாளும் கூடி வந்தது அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்க.
 

Naga Novels

Member
Wonderland writer
அத்யாயம் 💖 35

கல்யாண மண்டபத்தில்
தான் நினைத்தப்படி தன் மகளுக்கும் விக்ரம்க்கும் ஒரு வழியாக கல்யாணத்தை நடத்திட மண்டபம் வரை வந்து விட்டார் சதாசிவம், மணமகன் மணமேடை வந்தாகிவிட்டது, மணமகளும் வந்தாகிவிட்டது,
மிகவும் சந்தோஷ மிதப்பில் இருந்தார்.

இந்தருணத்திற்க்காக காத்திருந்தார் போல், தான் கையில் உள்ள அரஸ்ட் வாரண்ட் உடன் மண்டபத்தினுள் நுழைந்தான் அமரன்,

"மிஸ்டர், சதாசிவம், யூவராண்டனர் அரஸ்ட்" என தன் கையில் உள்ள கைவிலங்கை உயர்த்தி காட்டினான்.

"என்ன அமரன் எங்க வந்து என்ன பேசுறீங்க, என்ன எதுக்கு அரஸ்ட் பண்ணப்போறீங்கன்னு தெரிஞ்சுக்கிடலாமா"

"15 வருஷத்துக்கு முன்னாடி, குமரன் லெட்சுமி தம்பதி கொலை கேஸ்க்காக,மற்றும் அதை விசாரித்த கார்த்திகேயன்சிபிஐ ,
கொலைக்காகவும்"

" வாட் என்ன உளர்ற, அது அக்ஸிடன்ட் கேஸ் என கோரட்ல தீர்ப்பாகி முடிஞ்ச கேஸ் அதுக்கு இப்ப எப்படி அரஸ்ட் பண்ண முடியும் , அதுமட்டும் இல்லாமல் அந்த ஆபிசர் கார்த்திகேயன் அவன் தான் ராஜினாமா பண்ணிட்டு ஊரை விட்டே போயிட்டானே, அது எப்படி கொலை ஆகும், என்ன அமரன் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளராம ஒரு நல்ல டாக்டர் ஆ போய் பாருங்க, இப்போ இந்த கல்யாணத்தை நடத்த விடுங்க, ம் ம்... ஐயரே ஆரம்பிங்க" என சதாசிவம் கூறிமுடிக்க.

மணமேடையில் இருந்து விக்ரம் எழுந்தான், "அங்கிள், அதான் அமரன் எதோ சொல்லுறார்ல பார்ப்போம்,போலீஸ் அவங்க வேலையை பார்க்கட்டும் "

"மாப்பிள்ளை "

"அங்க பேசுங்க அங்கிள்"

"அமரன், ஒரு கேஸ் கோர்ட்டாலே தீர்ப்பானதுக்கு அப்புறம் அத எப்படி மறுபடியும் ஓபன் பண்ண முடியும் "

"என்ன மிஸ்டர் சதா, எவ்வளவு பெரிய ஆள் நீங்க இது கூட தெரியாமல் இருக்கீங்க, அது எப்படின்னா அந்த கேஸ்க்கு சம்பந்தப்பட்ட அதாவது உறவுகள், இரத்த பந்தங்கள் யாராவது மேல் முறையீடு பண்ணா கேஸ் எப்பனாலும் ஓபன் ஆகும்யா" என சிரிப்புடன் கூறினான் அமரன்.

சதாசிவம் விக்ரமை பார்க்க விக்ரம் மணமேடையில் இருந்து எழுந்து கீழே வந்தான்.

"நான் தான் அங்கில், என் தாய் தந்தை கேஸ்க்காக மேல்முறையீடு பண்ணேன், ஆனா இதுல நீங்க சம்பந்தம் படுவீங்கன்னு நினைத்து கூட பாக்கல"

"என்ன தலை சுத்துதா சதா தெளிவாக சொல்லுறேன் கேட்டுக்கோங்க..."

"நீங்களும் குமரன் நண்பரா இருந்தது, பின் அவர் வளர்ச்சி , புகழ் ,பணத்தை பார்த்து அவர் கூட பார்டனரா ஆனது, எங்கே ரகுராம் இருந்தா உங்க குட்டு உடைந்து விடுமோ என்று, அவரை குமரன்ட்ட இருந்து பிரித்தது, பின்னர் உங்கள் சுயரூபமும், ப்ராடுதனமும் தெரிந்து குமரன் உங்க கூட இருந்த எல்லா டீலிங்கையூம் கேன்சல் செய்தது அது தாங்க மாட்டாம, ஆளவச்சு அவர் கார் பிரேக் கட் பண்ணி ஆக்ஸிடன்ட் மாதிரி அவரை குடும்பத்தோட சாகடிக்க நினைத்தது, அதில் தப்பித்த அந்த குழந்தை விக்ரம் இரண்டு தடவை ஆசிரமத்தில் கொலை பண்ண பார்த்தது, என எல்லாம் தான் அத விட இன்னொன்று என்ன தெரியுமா ?
அந்த கேஸ்ஸ கண்டு பிடிக்க வந்த
கார்த்திகேயன் என்ற சிபிஐ ஆபிசரை கார்ரோட வைச்சு எரிச்சு துள்ளத்துடிக்க கொன்னு (என்ற வார்த்தை யை சொல்லும் போதே அமரன் கண்கள் நெருப்பானது) அவர் குடும்பத்தையும் அழிக்க வீட்டுக்கு அடியாளை அனுப்புனியே, அங்க கோட்டவிட்டடா, உன்கிட்ட வந்து சொல்லிருப்பாங்களே கார்த்திகேயன் குடும்பத்தை அழிச்சாச்சுன்னு,
( புண் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு) பின்ன அப்படி சொன்னாதானே நீ பேமன்ட் பண்ணுவ,
ஆனா உண்மை என்ன தெரியுமா , அவனுங்க வந்து வெறும் வீட்டத்தான் பார்த்தானுக ,
என்ன புரியலையா சதா, மிஸ்டர் கார்த்திக்கேயன் அவரின், தவப் புதழ்வன் இன்னும் உயிரோட தான் இருக்கான்"

"என்ன முழிக்கிறிங்க சதா, ஓ... யாரா இருக்கும் இந்த கூட்டத்தில இருக்கானா அப்படின்னு தானே பார்க்குறீங்க ஹா.....
ஹா .....ஹா ..... கூட்டத்தில இல்லை சதா உன் முகத்துக்கு முன்னாடி கையில விலங்கோட அன்னிக்கு அவரு செய்ய வேண்டிய கடமைய இன்னிக்கு அவர் மகன் முகிலமரன் செய்யப்போறான் " என கம்பீரமாக காட்டில் அனைத்து மிருங்களும் அஞ்சிநடுங்கும் அளவு ஒலிக்கும் சிங்கத்தின் கர்ஜனை போல் கர்ஜித்தான் முகிலமரன் என்ற அமரன் .

எதற்கும் அசராதவன் போல் "என்ன அமரன் நல்லா கதை சொல்லுறீங்களே நீங்கள் போலீஸ்க்கு வந்ததுக்கு பதிலா சினிமால கதை எழுத போயிருக்கலாம், கதை எல்லாம் நல்லா இருக்கு, ஆனா அதுக்கு சாட்சி வேணுமே அது தெரியாதா?"

"ஹய்யோ சதா, இத்தனை வருஷம் கழித்து அரஸ்ட் பண்ண வந்துருக்கனே அது கூட ரெடி பண்ணாமலா இருப்பேன் எத்தனை வேண்டும் ஒண்ணா ரெண்டா ஆங்..... என சொடக்கிட்டவன் மாமா எனக்கூப்பிட்டான்.

அமரன் மாமா எனக்கூப்பிடவும் அங்கு வந்து நின்ற மனிதனை பார்த்து சதாசிவம் விக்கித்து விரைத்து நின்றார்

" என்ன சதா இது யாருன்னு தெரியுதா ராமசாமி எஸ் ஐ , என்னடா ஊர விட்டு போனவரு எப்படி என் கூடன்னு பார்க்கிறீயா, சதா என்னயும், எங்க அம்மாவையும் காப்பாத்தி என்னை வளர்த்தவரே இவர் தான், இவர் தான் கண்ணால பார்த்த சாட்சி, அப்புறம் சதா, எங்கப்பா ஒண்ணும் உன்ன மாதிரி முட்டாள் இல்லை , ஆதாரத்தை எல்லாம் பத்திரமா ஒர்ரிடத்தில் சரியா என் கையில கிடைக்குமாறு பண்ணிவச்சுட்டுதான் போய்ருக்காரு, அதான் இவ்வளவு வருஷம் கழித்தும் நீ வசமா மாட்டி இருக்க பிளடி.... பிச் என பல்லை கடித்தான் அமரன்.

சதாசிவம் சிலையாகிப்போனார், மெல்ல விக்ரம் அவரை தாண்டி வர ,விக்ரம் அவரை ஒரு புழுவைப்போல பார்த்தான்.

சதாசிவத்தின் மகள் ஷீலா, ச்சே இவ்வளவு மோசமானவரா நீங்க, அப்படி அந்த பணத்தை வச்சு என்னதான் பண்ணப்போறீங்க மண்னுக்குள்ள போகும் போது கொண்டுட்டா போகப்போறீங்க ச்சே, என்ன மன்னிச்சுரு விக்ரம்... என கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
அப்போது விக்ரம்க்கு ஒரு போன் வருகிறது...

இங்கு காவ்யாவின் நிலை

வானம் கருத்து இருந்தது, இடியும், மின்னலும் நீயா ,நானா என போட்டி போட்டுக் கொண்டிருந்தது. உங்களுக்கு நான் என்ன சலைத்தவனா என்று காற்றின் நடனமும் அங்கு அரங்கேறியது.
இவை அனைத்தையும் சமாதானப்படுத்த மழையானது பொழிந்து மண்ணை குளிர்வித்துக் கொண்டிருந்த தருணம்.

மழையின் சத்தத்துடனே," ஆ ..... அம்மா...... ஆ...வலிக்குதே........ ஆ....." என்ற கர்பிணி பெண்ணின் அலறல் சத்தம் விண்ணை கிழித்தது..

"இருமா , கொஞ்சம் பொறுமா, இதோ ஹாஸ்பிட்டல், வந்துட்டோம், இதோ இப்போ கொழந்த பொறந்திடும் என் ராசாத்தி " என மயிலம்மா அமைதி படுத்திக் கொண்டிருந்தாள்.

"அம்மா , முடியல மா " என கர்பிணி மறுபடியும் வலியில் துடித்தாள்.

"ஆங், பேஷன்ட் பேரு என்னமா" நர்ஸ் மேரி அவசரப்படுத்த.

" அது ..... அது வந்து டாக்டர் ரேவதி அம்மாவோட......" என மயிலம்மா வார்த்தைகளை தேடினார்.

" ஓ... மேடம் ரேவதியோட பேஷன்ட் ஆ.... சரி சரி" என அந்த நர்ஸ் அந்த பெண்ணை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றாள் .

மருத்துவர் ரேவதிக்கும் தகவல் தந்து ,அவரும் வந்துவிட்டார்.
மீண்டும், மீண்டும் அந்த பெண் பிரசவ வழியில் துடிக்க, மருத்துவரும் மருத்துவம் பார்க்க.
வீல் ....... என்ற அலறல் உடன் குழந்தை பிறந்தது. மருத்துவர் மகிழ்ச்சி யுடன் அதை மயிலம்மாவிடம் தெரிவிக்க.மயிலம்மாவோ.....

"டாக்டர் அம்மா என் பொண்ணு எப்படி இருக்கு" என்ற மயிலம்மா வார்த்தையில் ஒரு வித பதட்டம் தெரிந்தது .

"ஆங், அவங்க நல்லா இருக்காங்க...என்ன மயிலம்மா ,பொண்ணு மேல ரொம்ப பாசம் போல என பேசிக்கொண்டிருக்கும்போதே நர்ஸ் வெளியே வர ,"நீங்க போய் அவங்கள பார்க்கலாம் " என மருத்துவர் அவ்விடம் இருந்து சென்றுவிட்டார்.

நாட்கள் மூன்றாக ஓடியது , அந்த பெண் பிறந்த அந்த பிஞ்சுவின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு "அம்மாவிற்கு வேற வழி தெரியலடா ,அம்மா வை மன்னிச்சிருடா என கண்களில் கண்ணீர் படற ,யாருக்கும் தெரியாமல் குழந்தையை விட்டு விட்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.

"மலேசியா செல்லும் விமானம்,ஒரு சிறிய
வானிலை பிரச்சனையின் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக கிளம்பும்" என்ற ஏர்போர்ட்டின் அறிவிப்பில் யாரும் தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ என அச்சத்தில் அமர்ந்து இருந்தாள், அந்த பெண்.
நிலைமை சரியாகி, விமானத்திற்கு அனைவரும் கிளம்பினர்.

விமானத்தின் ஜன்னல் வழியாக அந்த டெல்லியை பார்க்கிறாள்.
விமானம் சிறு அறிவிப்புகளுடன் கிளம்பியது.

"இனி யாராலும், என்னை கண்டுபிடிக்க முடியாது" என தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

"உங்க பெயர் என்ன?" என்று விமானப்பணிப்பெண் அழைக்கவும் , தன்னிலை வந்தவள்.

"மிதிலா"
என் பெயர் "மிதிலா". என்றதுடன் விமானம் வானில் பறந்து, அவ்விடம் விட்டு மறைந்தது.
யார் இந்த மிதிலா?
உலகம் அறியா அந்த சிறு ஜீவனை விட்டு எதற்கு பிரிந்தாள்?
யார் அவளை தேடுகிறார்கள்"

- தொடரும்

என்றதோடு திரையில் நாடகம்
முடிந்தது.

"என்ன டிவில நாடகத்தை இப்படி முடிச்சுட்டான், இன்னும் கொஞ்ச நேரம் போட்டு இருக்கலாம்ல" என சலித்து கொண்டாள் காவ்யா .

"ஆமாடி, உன் புருஷனுக்கு இன்னிக்கு கல்யாணம் ,அத பத்தி கவலைபடாம , நாடகம் முடிஞ்சு போச்சேன்னு கவலை படு" என காவ்யாவின் அம்மா அகிலா திட்ட, ரகுராம் புன்னகையுடன் பார்த்தார் அப்போது தீடிரென வயிற்று வழி வந்து காவ்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள், நிஷா அமரனுக்கு தொடர்பு கொள்ள, அது எடுக்காமல் போகவும் குழந்தை பிறக்கவும் சரியாக இருந்தது,

கல்யாண மண்டபத்தில்
போனை எடுத்து யார் என்று கேட்ட விக்ரம் அதில் கிடைத்த மகிழ்ச்சி யோடு

" மச்சான், எனக்கு பொண்ணு பொறந்துருக்காடா, குட்டி தேவதை வந்து பிறந்துருக்காலாம் " என அமரனை கட்டி அணைத்து முத்தமிட்டான்..

"ச்சீ ,எவன்டா இவன் இத போய் உன் பொண்டாட்டிக்கு கொடு, இங்கு ஒரு மாங்கா மடையன் மறுபடியும் குழப்பதில இருப்பான் கொஞ்சம் மந்திரிச்சு விட்டுட்டு வாறேன்".

"இன்னா சதா ,யாரு அந்த பொண்டாட்டின்னு யோசிக்கியா வேற யாரு நம்ம காவ்யா தான், ஓகோ, நாம தான் மிரட்டி அனுப்பிட்டமே பின்ன எப்படினு பாக்கியா, நீ மிரட்டுனது, அவ பயந்து ஊருக்கு போக பஸ் ஏறுனவரைக்கும் உண்மைதான், ஆனா என்கிட்ட மாட்டிடாலே , ( என நக்கலாக சிரித்தான் ) அப்படி பொத்துனாப்புல புடிச்சுட்டு வந்து விக்ரம் வீட்ல தான் வச்சிருந்தோம்,இப்ப என் தங்கச்சிக்கு பொண்ணு பொறந்து இருக்கா " பாவம் அத பார்க்கதான் உனக்கு குடுத்து வைக்கல வா நடைய கட்டு உன் மாமியார் வீட்டிற்க்கு, என சதா சிவத்தை இழுத்து கொண்டு போகவும், இப்படி கேடுகேட்ட அப்பாவா என கண் கலங்கிய ஷீலா விடம் விக்ரம் அப்பா அம்மா ஷீலா பக்கத்தில் வந்து உனக்கு நாங்க இருக்கோமா நீ கவலைபடாத என்று தங்கள் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினர்.
நாட்கள் ஓடியது , சதாசிவத்திற்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறை வாசம் தாளாமல் சிறையிலேயே மரடைப்பு வந்து இறந்து விட்டார் என செய்தி தொலைகாட்சி மற்றும் நாளிதழில் செய்தி வெளியானது.

மீண்டும் கல்யாண மண்டபத்தில் அனைவரும் கூடினர், அங்கு மணமக்களாக அமரன் - நிஷா, விக்ரம்- காவ்யா அவர்களின் மூன்று மாத குழந்தை அகிலா, ரகுராம் கையில்..

ஷீலா மண்டபத்தில் அமர்ந்துஇருக்க அவளுக்கு விக்ரமிடம் இருந்து அழைப்பு வருகிறது, நிமிர்ந்து பார்த்தால் அங்கு விக்ரம் மணமேடையில் ஐய்யர் கூறுவதை உளரிக்கொண்டிருந்தான், பின்ன யார் என்று அதை ஆன் செய்து பேசினாள் ஷீலா அதே குரல் அவள் விக்ரம் என காதலித்த குரல், தயக்கத்துடன்

"ஹலோ நீங்க யாரு"

"நான் தான் உன் காதல்"

"என்ன"

"திரும்பி பாரு"

ஷீலா திரும்பி பார்க்க அங்கு தேவ்
நின்றான்

"நான் இருக்கேன் ஷீலா ஐ லவ் யூ" என தேவ் கூறிய அடுத்த நிமிடம் ஓடிச்சென்று அவனை அணைத்து கொண்டாள்.

"அப்போ இவ்வளவு நாள் பேசுனது உன் கூட தானா தேவ்"

"ஆமா மேடம் போன்ல உருகி உருகி காதலிச்சது என்ன தான்" என தேவ் கூற"ஐ லவ் யூ தேவ்" என்ற வார்த்தை யோடு அங்கு ஒரு புது உறவு உருவானது.
கெட்டிமேளம் கெட்டிமேளம் என ஐய்யர் கூற விக்ரம்,காவ்யா கழுத்திலும், அமரன் நிஷா கழுத்திலும் மாங்கள்யம் பூட்டினர்..

ஷீலா அடுத்து நம்ம கல்யாணம் தான் என தேவ் ஷீலா காதோரம் கூற, வெட்கத்தில் அவன் தோளிலே முகம் புதைத்தாள் ஷீலா.

இந்த மூன்று ஜோடிகளும், வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ நாமும்
வாழ்த்துவோம்..........

🙏🙏🙏🙏🙏🙏சுபம்🙏🙏🙏🙏🙏🙏

அன்பு நட்பூக்களே, தொடர் நல்லபடியாக முடிந்தது, உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன் 😁😁😁

தெய்வங்களே இதுவரை கமெண்ட்ஸ் பண்ணாண்டாலும் பரவாயில்லை இப்பவாவது கதை எப்படி இருந்தது என்று கமெண்ட்ஸ் போடுங்கப்பா 😃😃😃😃😃

இதுவரை ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் என் மனதார நன்றி கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீண்டும் அடுத்த தொடருடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
😊😊😊😊😊

முடியலபா பீலிங்ஸ்ஸா இருக்குபா
😭😭😭😭

நட்புடன்
👩‍💻💙 நாகா 💙
 
Status
Not open for further replies.
Top