ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கானல் மேகமடி காதல் _ கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 30

இரவு தன் வீட்டிற்கு வந்த அஷ்வின் வள்ளியிடம் பேச வேண்டும் என்று கூற.. அப்போது வள்ளியும் அவர்கள் வீட்டில் தான் இருந்தாள்.

'எங்க கிட்ட பேச என்ன இருக்கு?' என்ற எண்ணத்துடன் தன்னை பார்த்து கொண்டிருந்தவளை வெளியே வரும்படி கண்ணை காட்டியவன் முன்னே செல்லவும், யோசனையுடன் அமர்ந்திருந்த வள்ளியின் தலையில் ஓங்கி கொட்டினார் அழகு பாட்டி.

" அய்யோ ஏன் பாட்டி அடிக்கிற? "என்று தலையை தடவி கொண்டு கேட்டவளின் காதை பிடித்து திருகியவர்...

" அவன் தான் உன்னை கூப்பிடுறான்ல போய் பேச வேண்டியது தானே.. அதை பண்ணாமல் பேய் முழி முழிச்சிட்டு இருக்க? " என்று சொன்னார்

" உங்களுக்கு என்ன ? நீங்க பேச சொல்லுவீங்க.. அங்க போனால் அவரு என்னை என்ன பண்ணுவாரோ? " என்றவளின் கரம் தானாக தனது கன்னத்தை வருடி கொண்டது அன்று வாங்கிய அடியின் வெளிப்பாடு!!!

" என்ன பொண்ணு நீ அதான் உனக்கும் அவனுக்கு கல்யாணம் ஆக போகுதில்லை... பின்ன என்ன போ " என்று வம்படியாக அவளை அனுப்பி வைத்தனர்.

வெளியே மரத்தின் மீது சாய்ந்தபடி நின்றான் அஷ்வின். தயக்கத்துடன் அவன் அருகில் வந்த வள்ளி " க்கும் " என்று குரலை செரும, அவளை திரும்பி பார்த்தான் அஷ்வின்.

" என்ன விஷயம் எதுக்கு வர சொன்னீங்க? " என்று கேட்டபடி சுவரில் சாய்ந்து நின்றாள் வள்ளி.

" சுத்தி வளைச்சு பேச எனக்கு விருப்பம் இல்லை? என்னை கல்யாணம் பண்ணிக்க எதுக்கு சம்மதம் சொன்ன? இப்போவே அவங்க கிட்ட போய் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லன்னு சொல்லு "

" இது என்ன அந்நியாயமா இருக்கு? நான் ஏன் சொல்லணும்.. உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னா நீங்களே வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானே "

" என்னால எப்படி சொல்ல முடியும்? "

" அப்போ நான் மட்டும் எப்படி சொல்லுறதாம்? "

"குமரன் எங்க இருக்கானே தெரியல.. சாத்வியும் இப்போ நம்ம வீட்டுல இல்லை.. இந்த நிலைமையில் கல்யாணம் அது இதுன்னு அவங்க தான் புரியாமல் பேசிட்டு இருக்காங்கன்னா நீயுமா? "

" ஒஹ் அது தான் இப்போ பிரச்சனையா? இங்க பாருங்க உங்களுக்கு கல்யாணம் நடந்தால் மட்டும் தான் மீனாட்சி அத்தையோட மனசு மாறும்.. அவங்க மனசு மாறின பிறகு சாத்வி இங்க வரதுல எந்த பிரசனையும் இருக்காது... இது எல்லாம் நடக்கணும் அப்படினா அதுக்கு ஒரே வழி நமக்கு கல்யாணம் ஆகுறது தான். அதனால நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க? " அவள் கூறுவதும் சரி தானே என்று சிறிது நேரம் யோசித்தவன்,

" அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் அப்படி தானே" என்று கேட்டான்.

" ம்ம்ம் ஆமா... ஆனால் அதுக்கு நிறையா காரணம் இருக்கு.. "

" அப்படி என்ன காரணம் ஒருவேளை எங்க அம்மா ஏதாவது உன்னை வற்புறுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சங்களா? "

" உங்க அம்மா மிரட்டி உருட்டு சம்மதம் வாங்க நான் ஒன்னும் சாத்வி கிடையாது.. இந்த வள்ளியை மிரட்ட இன்னொருத்தன் பிறந்து வரணும்" என்றவளை கோப பார்வை பார்த்தான்.

"கோவபடாதீங்க, நேரடியாவே சொல்லிடுறேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அது எந்த வகையான அன்புன்னு எனக்கு தெரியல.. அந்த ஒரே காரணத்துக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொன்னேன்."என்று வள்ளி கூற.. ஆச்சார்யமாக பார்த்து கொண்டு நின்றான் அஷ்வின்.

" என்ன பார்க்குறீங்க? நான் ஒன்னும் பொய் சொல்லல.. வாணி கூட உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணும் போதே.. எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு.. ஆனால் அப்போ அதுக்கான காரணம் என்னனு எனக்கு தெரியல.. " என்றவளை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன்..

" என்ன ஏதேதோ சொல்லிட்டு இருக்க?" என்று கேட்டான்.

" ஹான் பொழுது போகாம கலர் கலரா கதை சொல்லிட்டு இருக்கேன்.. உங்க கிட்ட எல்லாம் போய் உணர்ச்சி ததும்ப பேசுனேன் பார்த்தீங்களா என்னை சொல்லணும்... இப்போ என்ன நீங்க நம்புற மாதிரி ஒரு காரணம் வேணும் அவ்ளோ தானே.. சொல்லுறேன் கேட்டுக்கோங்க.. நீங்க என்னை அடிச்சதுக்கு எல்லாம் சேர்த்து நான் திருப்பி கொடுக்கணும் இல்லை.. அதான் உங்களை கல்யாணம் பண்ணி பழிக்கு பழி வாங்கலாம்னு முடிவு பண்ணிடேன் போதுமா? இது நம்புற மாதிரி இருக்கா? " என்றவளை முறைத்து பார்த்தான் அஷ்வின்.

" என்ன முறைப்பு?... நான் என்ன சொன்னாலும் நீங்க இப்படி ஊமை ரியாக்சன் தான் கொடுக்க போறீங்க.. அதுக்கு இந்த கதை போதும். ஆமா உங்களுக்கு ஏன் இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை ஒருவேளை இன்னும் அந்த வாணி ஞாபகத்தில தான் நீந்திட்டு இருக்கீங்களோ"

" ஏய்!!! "

" அப்படி இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க, நான் தான் பார்த்திருக்கேனே அவளை பார்க்கும் போதெல்லாம் பாம்புக்கு பல்லு விளக்கி விட்ட மாதிரி... உங்க மூஞ்சே பிரகாசமாகிடுமே... " அவளது பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் அங்கிருந்து செல்ல பார்த்தான் அஷ்வின்.

" இந்தா பெரியவரே பதில் சொல்லிட்டு போங்க... "

" ப்ச் போடி "

" ஒரு நிமிஷம் நில்லுங்க ? கொஞ்சம் பேசணும் " என்று வள்ளி கூற அங்கேயே நின்றான் அஷ்வின்.

" ஒருவேளை என்னை உங்களுக்கு பிடிக்கலயா? எங்களோட வசதி, என்னோட படிப்பு இதை எல்லாம் யோசிச்சு எனக்கு உங்களை கல்யாணம் பண்ண தகுதி இல்லன்னு நினைக்கிறீங்களா? " என்று கேட்டவளின் முகத்தில் சோக ரேகை ஓடியது..

அவளது முகத்தை இரு நொடி கூர்ந்து பார்த்தவன் " உள்ள வா " என்று அழைத்தபடி முன்னே செல்ல.. பின் தொடர்ந்தாள் வள்ளி.

உள்ளே வந்த அஷ்வின் நேராக தனது அறைக்குள் நுழைந்தான்.. பீரோவை திறந்து அதில் வாணிக்கென அவன் வாங்கி வைத்திருந்த புடவையையும், அவளது கழுத்தில் கட்ட முடியாமல் போன அந்த மங்கள நாணயும் பெரு மூச்சு விட்டபடி பார்த்தவன் அதனை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

வீட்டில் இருந்த அனைவரும் அவனை புரியாமல் பார்த்தபடி அமர்ந்திருக்க.. தன் கையில் இருந்த புடவையையும், மங்கள நாணயும் மீனாட்சியின் கையில் கொடுத்தான் அஷ்வின்.

" இது.. " என்று தயங்கியவன் பின் " இந்த தாலியை ஏதாவது கோவில் உண்டியலில் போட்டுடுங்க.. அப்புறம் இந்த புடவையை இல்லாதவங்க யாருக்காவது கொடுத்துடுங்க " என்று கூறி விட்டு சென்றவன், ஒரு கணம் திரும்பி நின்று " எனக்கு வேதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்.. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க" என்று கூறிவிட்டு வள்ளியை பார்த்து புன்னகைக்க... அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து கொண்டது.

**********
காலையில் கண் விழித்த கீதா தனது அருகில் படுத்திருந்த சாத்வியை தேடிப் பார்த்தாள்.. அங்கு அவள் இல்லை என்றவுடன் " சாத்வி எங்கயிருக்க? " என்று அழைத்தபடி வீட்டின் ஒவ்வொரு இடமாக தேடி வந்தவள்.. மொட்டை மாடியையும் விட்டு வைக்கவில்லை.. எங்க தேடி என்ன? அவள் தான் வீட்டில் இல்லையே என்பது போல ஹாலில் ஒரு கடிதம் இருந்தது.

யோசனையுடன் அதனை எடுத்து படிக்க ஆரம்பித்திருந்தாள் கீதா.

" என்னை மன்னிச்சிடு கீதா.. என்னால நீ எவ்ளவோ கஷ்டபட்டிருக்க, இதுக்கு மேலயும் உன்னை கஷ்ட படுத்த எனக்கு விருப்பமில்லை.. உன் கிட்ட சில விஷயத்தை என்னால சொல்ல முடியல... ஏற்கனவே என்னால நீ ரொம்ப கஷ்ட படுற, இதுல குமரனை பத்தியும் என் குடும்பத்தை பத்தியும் உன்கிட்ட சொல்லி, மேலும் மேலும் என் பாரத்தை உன் மேல தூக்கி போட எனக்கு விருப்பமில்லை.. குமரன் என்னை விட்டு போன பிறகு எத்தனையோ முறை உயிரோட இருக்க கூடாதுங்குற எண்ணம் எனக்குள்ள வந்திருக்கு.. ஆனால் உனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் நீ என்னை காப்பாத்திட்டு வந்திருக்க... என் அம்மா முகத்தை நான் பார்த்ததே இல்லை கீதா.. நீ என் மேல அன்போடு அக்கறை காட்டும் போதெல்லாம் என் கண்ணுக்கு நீ என் அம்மாவா தான் தெரிஞ்ச... உன் உருவத்தில் என் அம்மாவை நான் கற்பனை செய்து வச்சியிருக்கேன் கீதா. இவ்ளோ நாள் நான் யாருக்காக உயிரோட இருந்தேனோ அவனே என்னை விட்டுட்டு போயிட்டான். என் கண்ணு முன்னாடியே அவன் வேற ஒருத்திக்கு சொந்தமாகுறத பார்க்குற தைரியம் எனக்கில்லை.. அதனால் நான் போறேன்.. உன்னை விட்டு ,அவனை விட்டு இந்த வாழ்க்கையை விட்டு மொத்தமா போறேன்... " சாத்வி எழுதியிருந்த அந்த கடிதத்தை கண்ணீருடன் படித்துக் கொண்டிருந்தாள் கீதா.

" உன்னால எங்களை விட்டு போக முடியாது..உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்.." என்று கண்களை மூடி ஆழ்ந்து பெருமூச்சு விட்டு தன் கண்ணீரை உள் இழுத்து கொண்டவள் அடுத்து அழைத்தது என்னவோ கபிலனுக்கு தான்.

" சொல்லு கீதா " உயிர்ப்பே இல்லாமல் அவனது குரல் வெளிவந்தது...

" உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் "

" சொல்லு "

" நேரில பேசணும்.. கொஞ்சம் வர முடியுமா ? "

" என்னால இப்போ வர முடியாது கீதா" என்றவனது கரம் உறங்கி கொண்டிருந்த தியாவின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தது.

" சரி நீங்க வர வேண்டாம் நான் உங்க வீட்டுக்கு வரேன், ரொம்ப முக்கியமான விஷயம் சோ ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லாதீங்க"

" ம்ம்ம் கிளம்பி வா " என்றவன் அழைப்பை துண்டித்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் கபிலனது வீட்டுக்கு வந்த கீதா வாசலில் காத்திருந்தபடி கபிலனுக்கு அழைத்தாள்..

" சொல்லு கீதா வந்துட்டியா? "

" ம்ம்ம் கீழே தான் இருக்கேன்.. "

" சரி இரு நான் வரேன் " என்றவன் வெளியே வந்து கீதாவை அழைத்து வந்தான்.

" என்ன பேசணும் கீதா ? "

" எனக்கு குமரன்... சாரி கவின் எங்க தங்கி இருக்கார்னு தெரியணும்.. அவர் கிட்ட நான் கொஞ்சம் பேசணும் "

" அவன் கிட்ட உனக்கு என்ன பேச வேண்டியது இருக்கு?.. நேத்து நீயும் சாத்வியும் எங்க போனீங்க? "

" அதெல்லாம் அப்புறம் சொல்லுறேன் கபிலன்.. ஒரு எமர்ஜென்சி தியா கிட்ட அட்ரஸ் வாங்கி கொடுங்க.. "

" எனக்கே தெரியும், ஆனால் அவனை நீ எதுக்கு பார்க்கணும்னு அதை முதலில் சொல்லு அட்ரஸ் கொடுக்குறேன். " என்று கபிலன் அந்த இடத்திலேயே நிற்க...

" நீங்க என்னை தப்பா எடுத்துகிட்டாலும் பரவாயில்லை.. சாத்வி விஷயமா நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்.. "

" சாத்வி விஷயமாவா ? "

" ம்ம்ம் சாத்வி இப்படி இருக்க காரணமே அவன் தான்.. " என்றவள் சாத்வியை பற்றியும் குமரனை பற்றியும் கூறி முடித்தாள்.. அதனை கேட்டு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகி நின்றான் கபிலன்.

" இப்போ சாத்வி எங்க போயிருக்கான்னு கூட எனக்கு தெரியல.. அடுத்து என்ன பண்ணுறது யார் கிட்ட பேசுறது எதுவுமே புரியல.. "
என்று கீதா குழப்பத்துடன் நிற்கவும்.. கண்களை மூடி திறந்தபடி தியாவின் அறைக்குள் நுழைந்தான் கபிலன்.

அங்கு இன்னும் தியா உறங்கிக் கொண்டிருக்க.. நிம்மதி பெரு மூச்சு விட்டவன்.. உடனே கவினின் எண்ணிற்கு அழைத்தான்.

கவின் அழைப்பை ஏற்க...

" கவின் "

" ம்ம்ம் சொல்லுங்க "

" உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... எங்க வீட்டுக்கு வர முடியுமா? "

" தியா விஷயமாவா ? " தியா விஷயமாக இருந்தால் அலைபேசியிலேயே பதில் கொடுத்து விடலாம் என்று எண்ணியிருந்தான்.

" இல்லை சாத்விகாவை பத்தி " என்று கபிலன் சொல்லவும்,ஏற்கனவே சாத்வியின் எண்ணத்தில் குழப்பத்துடன் அலைந்த குமரனுக்கு இது ஒரு ஆதரவாக இருக்க உடனே அங்கு கிளம்பி வந்தான்.

*******

கபிலனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் கவின். அங்கு கீதாவை கண்டது..

" நீங்க இங்க தான் இருக்கீங்களா? நானே உங்களை எப்படி காண்டெக்ட் பண்ணுறதுன்னு தெரியாமல் குழப்பத்தில இருந்தேன்.. சாத்வி உங்க கூட தானே இருக்க.. அவள் இப்போ ஓகே தானே.. அவள் கிட்ட நான் பேசணும்.. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும் அவள் என்னை புரிஞ்சுப்பா" என்று ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் பேசினான்.

" இனிமேல் எதுவும் சரி ஆகாது... " என்ற கீதா, சாத்வி எழுதிய கடிதத்தை அவன் கையில் கொடுத்தாள்..

அதனை புருவம் சுருக்கி பார்த்தவன், பிரித்து படித்து முடிக்க.. அவன் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டது..

' அப்போ அவ்ளோ தான் உனக்கு என் மேல உள்ள நம்பிகையா? உன்னை விட்டுட்டு வேற ஒருத்தி கூட என்னால வாழ முடியும்னு நெனச்சியா? எப்போ தாண்டி என்னை புரிஞ்சிப்ப.. நீ இல்லாமல் என்னால எப்படிடி இருக்க முடியும்.. உன்னால என்னை விட்டு எங்கேயும் போக முடியாது... உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் ' என்று மானசீகமாக அவளிடம் உரையாடியவனது கண்கள் கலங்கியது.. அவள் எழுதியிருந்த இறுதி வரிகளை படித்த போது..

 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 31

" எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் கீதா.. என் வாழ்க்கையோட கடைசி நொடியிலயாவது அவன் கண்ணை பார்த்து அவனுக்கு உண்மையாவே என் மேல காதல் இருக்கா இல்லையான்னு கேட்கணும்? இனி அது முடியாது இல்லை... உண்மையாவே அவனுக்கு என் மேல காதல் இருந்திருந்தால் அவன் என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டான்ல்ல... என்னோட காதல் கடைசி வரைக்கும் அவனுக்கு புரியவேயில்லையே... அந்த வருத்தம் நான் மண்ணுக்குள்ள போனாலும் என் மனசை விட்டு போகாது" என்று அவள் கடிதத்தில் எழுதியிருந்த கடைசி வரிகள் இன்னுமே அவன் மனதை வேதனை படுத்தியது...

" என்னை மன்னிச்சிடு சாத்வி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்... என் அண்ணனோட வாழ்க்கைக்காக யோசிச்சேனே தவிர உன்னை பத்தி யோசிக்காமல் விட்டுட்டேன் இதெல்லாம் என் தப்பு தான்... எனக்கு ஒரு வாய்ப்பு கொடு இனி எல்லாம் சரி ஆகிடும் மறுபடியும் எந்த தப்பான முடிவும் எடுத்திடாதடி... எனக்கு நீ வேணும், நீ கிடைச்சா போதும் அதுக்கு அப்புறம் என்ன பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்துக்கிறேன்" என்று மானசீகமாக அவளிடம் உரையாடியவன் அடுத்து என்ன செய்வது என்று வழியறியாது ஸ்தம்பித்து நின்றான்.

"இப்போ என்ன பண்ண போறீங்க கவின்? " என்ற கீதாவின் வார்த்தைகளில் தன்னிலை அடைந்தவன் அவள் பக்கம் திரும்பினான்.

" இங்க அவளுக்கு தெரிஞ்ச இடம் , பிரெண்ட்ஸ், கூட வேலை பார்க்குறவங்க அப்படி அவளுக்கு நெருக்கமானவங்க யாராவது இருந்தால் சொல்லுங்க, அவள் அங்க இருக்காளான்னு தேடி பார்க்கலாம்"

" இங்க அவளுக்கு நான் மட்டும் தான்! வேற யாரு இல்லை. வேலை செய்யுற இடத்தில கூட யாருக்கிட்டயும் ரெண்டு வார்த்தைக்கு மேல அவள் பேசினது கிடையாது"

" அப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போற இடம் ஏதாவது இருக்கா? ஒருவேளை அங்க கூட போயிருக்க வாய்ப்பிருக்குல்ல?"

" உண்மை தான் நீங்க சொல்லுற மாதிரி போயிருக்கவும் வாய்ப்பிருக்கு... இங்க ஒரு கோவில் இருக்கு, வாரத்தில ஒரு முறை எப்படியும் அங்க போயிடுவாள். சரி வாங்க நேரத்தை வீணாக்காமல் அங்க போய் பார்ப்போம் " என்று வாசல் வரை சென்ற கீதா திரும்பி கபிலனை பார்த்து " தேங்க்ஸ் " என்று கூறினாள்.. அவனோ அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தன் தங்கையின் அறையை நோக்கி சென்று விட்டான்.

குமரனும்,கீதாவும் அந்த கோவிளுக்கு வந்து சேர்ந்தனர். இருவரும் அங்கு ஒரு இடம் விடாமல் சாத்வியை தேடி பார்த்தனர்... அவள் அங்கு இல்லை என்றவுடன், பொதுவாக அவள் செல்லும் இடத்தை பற்றி மீண்டும் கீதாவிடம் விசாரித்தான் குமரன்.

கீதாவோ தாங்கள் இருவரும் சேர்ந்து வலம் வந்த அனைத்து இடத்தையும் குமரனிடம் கூறினாள்.. பாணி பூரி ஸ்டால் முதற்கொண்டு அனைத்தையும் அவனிடத்தில் கூறினாள்.

குமரன் ஒரு புறம் கீதா ஒரு புறம் என இருவரும் சாத்வியை தேடி சென்னை முழுக்க அலைந்தனர்.

********
காலையில் எழுந்ததும் வழக்கம் போல சாத்வியின் எண்ணிற்கு அழைத்தாள் வள்ளி ஆனால் எதிர் புறம் அழைப்பு ஏற்கபடவில்லை... அழைப்பு ஏற்கபடவில்லை என்றவுடன் அவளுக்கு ஏதாவது வேலை இருக்கும் என்று சாதாரணமாக எடுத்து கொண்டாள்.

பின்னர் வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு, உணவு உண்ணும் நேரத்தில் சாத்வியின் நினைவு வரவே, மீண்டும் அலைபேசியை எடுத்து அவளது எண்ணிற்கு அழைத்தாள்.. இம்முறை அழைப்பு தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்று வரவும் சற்றென்று அவள் மனதில் ஒரு கலக்கம் உருவானது.

" என்ன ஆச்சு இவளுக்கு போன் வேற நாட் ரீச்சபல்ன்னு வருது, ஏற்கனவே ஒரு மாதரி தானே இருந்தாள், குமரன் அண்ணாவை பார்த்தேன் அது இதுன்னு வேற புலம்பிட்டு இருந்தாள், ஒருவேளை அங்க எதாவது பிரச்சனை ஆகிருக்குமோ ? முதலில் அங்க கிளம்பி போகணும்... எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடுவோம்" என்று அவசரமாக உணவை மூடி வைத்து விட்டு அஷ்வினை காண மீனாட்சியின் வீட்டிற்கு வந்தாள்.

அவர்களது வீட்டிற்கு வந்தவள் அஷ்வின் இருக்கிறானா? இல்லயா? என்று அவனது அறையையே எட்டி பார்த்து கொண்டிருக்கவும்... அதனை கண்டு குரலை செருமினார் அழகம்மாள்.

" என்னடி காலையிலயே என் பேரனை பார்க்க வந்துட்ட.. அவன் மேல கொள்ள பிரியம் தான் போல "

" ஆமா ஆமா ரொம்ப ஆசை தான். அவரு எங்கன்னு சொல்லுங்க? "

" அவன் எங்கடி இங்க இருக்கான் அவன் தான் அப்போவே கடைக்கு போயிட்டானே "

" கடைக்கா!! அங்க எதுக்கு போனாரு ? "என்று மூஞ்சை சுருங்கியவளின் கன்னத்தில் இடித்தவர்..

" அவன் உழைக்குறவன்டி உன்னை மாதிரி பத்து மணி வரை படுத்து தூங்கிட்டா இருக்க முடியும் "

" க்கும் என்னமோ உங்க பேரன் மட்டும் தான் இந்த ஊருலயே உழைப்பாளி மாதிரி பேசாதீங்க பாட்டி.. நாங்களும் ஒருகாலத்தில உழைப்பாளி தான். ஏதோ ஒரு ஒரு வாரமா வேலைக்கு போகல அவ்ளோ தான் "

" எது ஒரு வருஷம் வீட்டுல சும்மா இருந்து ஊரை சுத்திட்டு வர்றது உனக்கு ஒரு வாரம் மாதிரி தெரியுதா? "

' அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சோ ' என்று இதழ் பிதுக்கி யோசித்த வள்ளி... அழகு பாட்டியை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

" சிரிச்சது போதும் எதுக்கு என் பேரனை தேடி வந்தன்னு சொல்லு ?"

" அதெல்லாம் சொன்னா புரியாது பாட்டி உனக்கு வயசாகிடுச்சு... இதெல்லாம் எங்களை போல இளமை ஊஞ்சலாடும் வயதினருக்கு தான் புரியும் " என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றி பேசினாள்.

" நானும் இரண்டு புள்ளை பெத்தவ தாண்டி எனக்கு நீ பாடம் எடுக்குற அளவுக்கு இன்னும் வளரல.. அந்த காலத்தில நான் வெத்தலையை மடிச்சு வாயில போட்டு தெருவில அப்படி இறங்கி நடந்து வந்தா... ஊர் கண்ணு முழுக்க என் மேல தாண்டி இருக்கும்.. சும்மா பேச வந்துட்டா, இளமை ஊஞ்சலாடுதாம்... ஊஞ்சல் "

" பருவத்துல பன்னி குட்டி கூட அழகா இருக்குமாம் அந்த பழமொழி கேள்வி பட்டுருக்கியா பாட்டி? "

" ஆமா அதை எதுக்கு இப்போ சொல்லுற? "

" சரி உனக்கு புரியாத வரை நல்லது " என்ற வள்ளி எழுந்து கொண்டாள்.

" ஏய் எதுக்குன்னு சொல்லிட்டு போடி "

" அவசியம் சொல்லணுமா? " நடந்து சென்றுபடியே கேட்டாள்.

" ஆமா சொல்லிட்டு போ "

" பருவத்தில நீ தெருவுல இறங்கி நடந்து போனா பார்ப்பாங்க... இப்போ நடந்து போன ' அய்யோ பாட்டிம்மா வயசான காலத்துல ஏன் இப்படி வெயிலில நடந்து வர்ரீங்கன்னு அட்வைஸ் தான் பண்ணுவாங்க " என்று கேலிபேசியவளை கோவமாக பார்த்த அழகு பாட்டி

" அடி கொழுப்பெடுத்த கழுதை " என்று திட்டியபடி அடிக்க எழுந்து கொள்ளவும்... விரைந்து வெளியே ஓடி சென்றாள்.

******

சாத்வியை காண சென்னைக்கு செல்ல முடிவெடுத்த வள்ளி, அதனை அஷ்வினிடம் கூறுவதற்காக துணிகடைக்கு வந்தாள்.

கடைக்குள் வந்தவள் அஷ்வினின் எண்ணிற்கு அழைத்து வெளியே வரும்படி கூறினாள்...

" நான் உங்களை பார்க்க தான் கடைக்கு வந்திருக்கேன் கொஞ்சம் வெளியே வர்றீங்களா? "

" இங்க எதுக்கு வந்த? "சிசி டிவி வழியே அவளை பார்த்தபடி சிடுசிடுவென பேசினான் அஷ்வின்.

" கடையில வியாபாரம் எல்லாம் எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். "என்றவள் கடையை சுத்தி பார்த்தபடி நின்றாள்... அவள் பார்க்கும் தோரனையே விட்டால் கடையில் உள்ள பொருட்களை எல்லாம் திருடி சென்றுவிடுவேன் என்பது போல இருந்தது. அதனை கண்டு தலையில் அடித்து கொண்டவன் நேராக அங்கு வந்து அவளது கையை பிடித்து தனது அறைக்குள் இழுத்து வந்தான்..

உள்ளே வந்ததும் அவனது பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு நின்ற வள்ளி.

" எதுக்கு இப்போ என் கையை பிடிச்சு இழுத்துட்டு வந்தீங்க? வெளியே இருக்கவங்கயெல்லாம் என்னை பத்தி என்ன நினைச்சியிருப்பாங்க! "

"நீ அப்படி கடையை திருட்டுத்தனமா நோட்டமிட்டுட்டு இருந்தா மட்டும் எதுவும் நினைக்க மாட்டங்களோ? "

" நான் என்ன நோட்டமிட்டேன்? துணிகடைன்னா வரவங்க அப்படி இப்படி தான் சுத்தி பார்ப்பாங்க? அதெல்லம் திருட்டுத்தனம் ஆகிடுமா? அதுமட்டுமில்லை எனக்கும் இந்த கடையில உரிமை இருக்கு அதனால் நான் எப்படி வேணாலும் பார்ப்பேன் "

" நேத்து தான் கல்யாணம் பேசி முடிஞ்சுது அதுக்குள்ள கடையில பங்கு இருக்குன்னு சொல்லி வந்து நிக்கிற? ரொம்ப விவரம் தான் "

" ம்ம்ம் பின்ன என்ன உங்களை மாதிரி விவரம் இல்லாமல் இருப்பேன்னு நெனச்சீங்களா? " என்று கேட்டவளின் பார்வை தற்செயலாக டேபிளின் மீதிருந்த புடவையின் மீது பதிந்தது அதில் இருந்த ஒரு புடவையை பார்த்து அவளது முகம் பிரகாசமானது.

கண் ரசித்ததை கரம் ஸ்பரிசித்தது... " இந்த புடவை அழகா இருக்கு, நான் எடுத்துக்கவா? " என்று ஆர்வமாக எதிரில் நின்றவனை பார்த்து கேட்டாள்.. அவளை ஒரு பார்வை பார்த்தவன்

" ம்ம்ம் " என்றபடி இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

" உண்மையாவா? " கண்கள் மின்ன அவனை பார்த்தவளது முகம் உடனே வாடியது அவனது பதிலில்..

" 39000 கொடுத்துட்டு எடுத்துட்டு போ "

" எதுக்கு ? "

" புடவை வேணும்ன்னு கேட்டல்ல? அதோட விலை தான் 39000 அதை கொடுத்துட்டு எடுத்துட்டு போ ? சும்மா கொடுக்க நீ என்ன என் அத்தை மகளா? இல்ல மாமன் மகளா? " என்று கூறியவனை புருவம் உயர்த்தி பார்த்தபடி அந்த புடவையை திருப்பி திருப்பி பார்த்தாள்..

' இந்த புடவை 39000 மா ' என்று மனதில் நினைத்து கொண்டு அதனை அவனது டேபிளின் மீதே வைத்தவள்

" இது எல்லாம் 39000 ரூபாயா! மூவாயிரம் ரூபாய்க்கு கூட பெறாது... நல்லாவே இல்லை, இப்படி தான் அதிக வேலைக்கு வித்து ஐந்து மாடியில கடை கட்டுணீங்களோ ? " என்றவளை சினம் கொண்டு பார்த்தவன் அடிக்க கை ஒங்க... திடமாக நின்றாள்..

அவளை அடிக்க ஓங்கிய கையை தன் பக்கமாக எடுத்து கொண்டவன்... " மரியாதையா வெளிய போடி... " என்று கோவத்தில் கத்தவும்.. வெளியே செல்ல முயன்றாள் வள்ளி..

" ஏய் இந்த புடவையையும் எடுத்துட்டு போ "

" எனக்கு ஒன்னும் உங்க கையால புடவை வாங்கிக்கணும்னு எந்த ஆசையும் இல்லை. எனக்கு வேண்டாம்.. இந்த 39000 புடவையை உங்க கடையில இருக்க பொம்மைக்கே கட்டி விட்டு அது கூடவே குடும்பம் நடந்துங்க... "

" திமிருடி உனக்கு என்ன வாய் பேசுற? "

"இப்படியே திட்டிட்டே இருங்க கண்டிப்பா கல்யாணத்து அன்னைக்கு நானும் ஓடி தான் போக போறேன் "

" ஒஹ் யாரு கூட ஓடிவீங்க? "

" யாரு கூட வேணா ஓடி போவேன் அப்படியே யாரும் கிடைக்கலயா இருக்கவே இருக்கான் எங்க கிளாஸ் மெட் சஞ்சய்... அவனை இழுத்துட்டு ஓஹ் அது முடியாது அவனை உருட்டிட்டாவது ஓடி போவேன்..அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை ? " என்றவளின் மீது புடவை பறந்து வந்துவிழுந்தது...

" பொண்ணு மாதிரியாடி பேசுற? "

" பின்ன எந்த மாதிரி பேசுறேனாம் " என்றவள் அவன் தூக்கி எறிந்த புடவையை அவனை நோக்கி வீசினாள். அதனை லாவகமாக பிடித்து கொண்டவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

" இங்க பாருங்க உங்க கிட்ட வாக்குவாதம் பண்ண எனக்கு விருப்பமில்ல... ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் இங்க வந்தேன்.. அதை பேசிட்டு போயிட்டே இருப்பேன். கொஞ்சம் என்னை பேச விடுறீங்களா? எப்போ பாரு பேசவே விடுறது இல்லை"

" அது சரி, நான் உன்னை பேச விடல? ஏண்டி வந்ததுலயிருந்து வெண்கல கடைக்குள்ள எலி புகுந்த மாதிரி சத்தம் பண்ணிட்டு பேச விடலன்னு குறை வேற சொல்லுற? உன்கிட்ட பேசினதுக்கே எனக்கு தலைவலிக்குது... இதுல வாழ்க்கை முழுக்க எப்படி தான் உன்கூட குப்பை கொட்ட போறேனோ! நினைச்சாலே நெஞ்சு வலி வந்திடும் போல "

" நெஞ்சு வலி வர அளவுக்கு என்னை ஏன் நினைக்கிறீங்க ? அளவா நினைங்க" என்று கூறி அவள் வெட்கபட முகத்தை சுளித்தான் அஷ்வின்.

" தயவு செய்து இப்படி முகத்தை வைக்காதடி... பார்க்க சகிக்கல "

" ஓ உங்களுக்கு பார்க்க பிடிக்கலயா? அப்போ அப்படி தான் முகத்தை வச்சிப்பேன் " என்றவள் இன்னும் நன்றாக வெட்கப்பட்டு முகத்தை மூட...

" கடவுளே " என்று சலித்து கொண்டு முகம் திருப்பினான் அஷ்வின்.

" ரொம்ப மூஞ்சை திருப்பாதீங்க.. நீங்க கடைசிவரை இந்த மூஞ்சு கூட தான் வாழ்க்கையை ஓட்டனும் " என்றவள் அவன் முன்னே வந்து நின்றாள்.

" இப்போ என்ன தான்டி உன் பிரச்சனை ? " எரிந்து விழுந்தான்.

" சாத்வி இன்னிக்கு போன் எடுக்கவே இல்லை.. அன்னைக்கு பேசும் போதே ரொம்ப மன அழுத்தத்தில பேசின மாதிரி இருந்தது. அப்புறம் குமரன் அண்ணாவை பார்த்ததாக வேற சொன்னா எனக்கு என்ன ஏதுன்னு எதுவுமே புரியல... " என்று கவலை தோய்ந்த முகத்துடன் பேசியவளை பார்த்து தானும் குழம்பி நின்றான்.

" சரி இப்போ என்ன பண்ணனும்? " அஷ்வின் கேட்டான்.

" நான் இன்னிக்கு நயிட் சாத்வியை பார்க்க சென்னை கிளம்பி போறேன்"

" தனியாவா? "

" ம்ம்ம் "

" வேண்டாம் "

" ஏன் வேண்டாம் சொல்லுறீங்க? நான் கண்டிப்பா போக தான் போறேன் "

" நான் சொல்லுறதை முழுசா கேட்டுட்டு பேசு... உன்னை போக வேண்டாம்னு சொல்லல... தனியா போக வேண்டாம்னு தான் சொல்லுறேன் "

" புரியல "

" உனக்கு என்ன தான் புரிஞ்சியிருக்கு... நானும் உன்கூட வரேன்னு சொல்லுறேன்.. எப்படியும் நம்ம கல்யாணத்துக்கு சாத்வி இங்க தானே இருக்கணும்... அதனால சேர்ந்து போய் பார்த்துட்டு அவளையும் கையோட அழைச்சிட்டு வந்திடலாம்.. அதுக்கு பிறகு குமரன் விஷயத்தை பத்தி கேட்டுக்கலாம்"

" ம்ம்ம் நல்ல ஐடியா தான்... ஆனால் மீனாட்சி அத்தை இதுக்கு ஓகே சொல்லுவாங்களா? "

" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... நீ நயிட் கிளம்பி இரு நான் வந்து வீட்டுல பேசி உன்னை அழைச்சிட்டு போறேன் " என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.

*****
இங்கு குமரனும், கீதாவும் சாத்வியை தேடி ஓய்வின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்.

சாப்பாடு,வேலை என அனைத்தையும் மறந்து அவளை தேடி திரிந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனம் விட்டு போன உணர்வு...

ஒருவேளை அவள் தனக்கு கிடைக்கவே மாட்டாளோ என்ற எண்ணம் வேறு அடிக்கடி வந்து குமரனை மேலும் ரணப்படுத்தியது...

இரவு வேளை நெருங்க கீதாவை வீட்டிற்கு செல்லும் படி கூறினான் குமரன்...

" நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் "

" இல்ல அவளை பார்க்காமல் என்னால நிம்மதியா இருக்க முடியாது... " என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்று பேசினாள் கீதா " சொல்லுங்க அம்மா ?.. இங்க வந்துட்டீங்களா? வீட்டுலயா இருக்கீங்க... இல்லை அம்மா என்னால இப்போ வர முடியாது. ப்ளீஸ் ம்மா சொன்னா புரிஞ்சுக்கோங்க என்னால் இப்போ வர முடியாது " என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு தலையில் கைவைத்துக் கொண்டாள்.

அதனை கண்டு புருவம் சுருங்கிய குமரன் " என்ன ஆச்சு? " என்று கேட்டான்.

" என்னை பார்க்குறதுக்காக அம்மாவும் அப்பாவும் லண்டனில் இருந்து வந்திருக்காங்க.. "

" சரி அப்போ நீங்க கிளம்புங்க.. உங்களை பார்க்க தானே அவங்க வந்திருக்காங்க...நான் சாத்வியை தேடிக்கிறேன் நீங்க போங்க.. "

" இல்லை என்னால முடியாது.. நான் முதலில் சாத்வியை பார்க்கணும், அவளுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியணும் " என்று கவலையாக பேசியவளை மெச்சுதலாக பார்த்தான். இப்படி ஒரு தோழி கிடைக்க சாத்வி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.

"முதலில் உங்க அம்மாப்பாவை பாருங்க.. சாத்வியை பத்தி தகவல் கிடைச்சா உடனே உங்க கிட்ட சொல்லுறேன்.. இப்போ நீங்க கிளம்புங்க " என்றவன் கீதாவின் எண்ணை வாங்கி வைத்து கொண்டு அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.

*******

தனது நண்பனின் நிச்சயதார்த்தத்திற்காக வள்ளியை தன்னோடு அழைத்து செல்ல விரும்புவதாக அஷ்வின் மீனாட்சியிடம் கூறினான். சாத்வியை பார்க்க செல்வதற்காக அப்படி பொய் கூறி தன் தாயிடம் அனுமதி வாங்க முயன்றான்.

முதலில் யோசித்த மீனாட்சி .. பின்னர் தன் மகன் விருப்பப்பட்டு கேட்டதால் வேறு வழியின்றி அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

அஷ்வினுடன் தானே செல்கிறாள் என்ன எண்ணத்தில் வள்ளியின் பாட்டியும் இதற்கு எந்த வித மறுப்பு கூறவில்லை..

சென்னை செல்ல தயாரான வள்ளி, அஷ்வினது வீட்டிற்கு வந்தாள்.

அஷ்வினும் வள்ளியும் காரில் ஏறி அமர்ந்தனர்... அவர்களது வாகனம் வீட்டின் நுழைவாயில் நோக்கி செல்லும் நேரத்தில் அந்த பக்கமிருந்து உள்ளே நுழைந்திருந்தாள் சாத்விகா.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 32

அங்கு சாத்விகாவை கண்டதும் ஒரு சேர இருவரது முகமும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது..

" சாத்வி" என்று மெல்லிய குரலில் வள்ளியின் வார்த்தைகள் வெளிவரவும்... உடனே வண்டியிலிருந்து கீழே இறங்கினான் அஷ்வின். அவனை தொடர்ந்து வள்ளியும் இறங்கினாள்.

அவர்கள் முன் நிதானமாக நின்றுகொண்டிருந்த சாத்வியின் முகம் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.

" சாத்வி நீ இங்க!!! எப்படிடி இருக்க? உன்னை பார்க்கதான் நானும் இவரும் கிளம்பினோம், பார்த்தால் நீயே வந்துட்ட!" என்று பூரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டாள் வள்ளி..

சாத்வியின் முக வாட்டத்தை உணர்ந்து என்ன பேசுவது? எதை கேட்பது? என்று யோசனையுடன் நின்ற அஷ்வின், அனைத்தையும் பொறுமையாக விசாரித்து கொள்வோம் என்ற முடிவுடன் "இங்க வச்சு தான் எல்லாம் பேசுவியா? அவளை உள்ள அழைச்சிட்டு வா " என்று வள்ளியை வசைபாடிவிட்டு உள்ளே சென்றான்.

" நீ வா சாத்வி.. உன் மாமனுக்கு வாய் கொஞ்சம் கூடி போச்சு கல்யாணம் மட்டும் முடியட்டும் இந்த மனுஷனை ஒரு வழி பண்ணிடுறேன் " என்ற வள்ளியை புரியாமல் பார்த்தாள் சாத்வி.

" ஓ சாரிடி சொல்ல மறந்துட்டேன் எனக்கும் உன் மாமனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க இதை சொல்லுறதுக்காக தான் கிளம்பி வந்தோம்.. ஆனால் நீயே வந்துட்ட... சரி உள்ள வா பொறுமையா பேசுவோம்.. இல்லை மறுபடியும் உன் மாமன் கத்த ஆரம்பிச்சிடுவாரு" என்ற வள்ளி சாத்வியை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

வீட்டிற்குள் செல்ல தயங்கியபடி நிலைபடி வாசலில் நின்றாள் சாத்வி.. அவளது தயக்கத்தை உணர்ந்து " என்ன ஆச்சு சாத்வி, உள்ள வா" என்று அழைத்தாள் வள்ளி.

சாத்வியை கண்டதும் துள்ளி எழுந்தார் அழகம்மாள்.. பேத்தியை கண்ட சந்தோஷம் அவரது மனம் முழுவதும் நிறைந்திருந்த போதிலும் மனதின் ஓரத்தில் மீனாட்சி என்ன கூறுவாளோ? என்ற அச்சமும் வந்து போனது.. அந்த அச்சத்தை சுமந்தபடி அமைதியாக நின்ற அழகம்மாள் மீனாட்சியை திரும்பி பார்க்க... அதிர்ச்சியா? மகிழ்ச்சியா? என்று பிரித்தறிய முடியாத முக பாவனையுடன் நின்று கொண்டிருந்தார் மீனாட்சி

அனைவரது அமைதியையும் தயக்கத்தை பார்த்த அஷ்வின் " சாத்வி உள்ள வா " என்று அழைக்க... சாத்வியின் பார்வையோ மீனாட்சியின் மீதே நிலை பெற்றிருந்தது.

" அங்க என்ன பார்க்குற? நான் சொல்லுறேன்ல உள்ளே வா " மீண்டும் அழைத்தான் அஷ்வின்.

"உங்களை எல்லாம் பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.. வேற எந்த எண்ணமும் எனக்கில்லை, நான் உள்ளே வரட்டுமா? வேண்டாமா ? அத்தை " என்று மீனாட்சியை பார்த்து கேட்டவளின் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கவும், முகத்தை திருப்பி கொண்டார் மீனாட்சி. ஒருவேளை அவளது கண்ணீரை காண விரும்பாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாரோ என்னவோ!!

அவரது செயலில் விரக்தியா சிரித்து கொண்ட சாத்விகா, முன் வைத்த காலை தன் பக்கமாக எடுத்துக்கொண்டு வெளியே செல்ல பார்க்கவும்,

" அவளை உள்ள வர சொல்லுங்க அத்தை... " என்றபடி கலங்கியிருந்த தன் கண்ணை துடைத்துக் கொண்டு நேராக பூஜை அறையை நோக்கி சென்றார் மீனாட்சி.

"அதான் அவளே சொல்லிட்டால்ல உள்ள வா " என்று வாய் கொள்ளா புன்னகையுடன் தன் பேத்தியை அணைத்து கொண்டு உள்ளே அழைத்து வந்தார் அழகம்மாள்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசிய பின்பு தனது அறை நோக்கி வந்தாள் சாத்விகா... இன்னும் அந்த அறை அவளுடையதாகவே இருந்தது...

" இன்னும் அப்படியே இருக்கு, எல்லாத்தையும் மாத்தியிருப்பாங்கன்னு நினைச்சேன்" என்ற சாத்வியை சிறு புன்னகையுடன் பார்த்தாள் வள்ளி.

" இந்த வீட்டுல எதுவும் மாறல சாத்வி! பின்ன ரூம் மட்டும் எப்படி மாறும்.. குமரன் அண்ணாவோட ரூம் கூட இன்னும் அவருடையதா தான் இருக்கு... தினமும் உங்க அத்தை அந்த ரூமை சுத்தம் பண்ணுறதை நான் பார்த்திருக்கேன்.. இந்த விஷயத்தில மட்டும் அவங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல... உங்களை வெறுக்கிற மாதிரி பேசுறாங்களே தவிர அவங்க நடவடிக்கை எல்லாம் அதுக்கு எதிரா தான் இருக்கு " மீனாட்சியை பற்றிய தன் மன எண்ணத்தை வெளிப்படுத்தி பேசினாள் வள்ளி.

" கூடவே இருந்த எங்களாலயே இன்னும் அவங்களை புரிஞ்சிக்க முடியல " என்று கூறி விரக்தியாக ஒரு பார்வை பார்த்தாள் சாத்விகா.

" சரி அதை விடு ஏதாவது சாப்பிடுறியா? "

" வேண்டாம் வள்ளி.. அப்புறம் வாழ்த்துக்கள் "

" எதுக்குடி ? "

" மாமாவோட வாழ்க்கை அப்படியே போயிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்லவேளை அவரோட வாழ்க்கையில் நீ வந்துட்ட.. இனி அவரு வாழ்க்கை சந்தோசமா இருக்கும் அந்த நிம்மதி போதும் எனக்கு... அத்தை, பாட்டி எல்லாரையும் நல்லா பார்த்துக்கோ, சீக்கிரமே நான் போயிடுவேன் அப்புறம் நீ தான் இந்த குடும்பத்தை பார்த்துக்கணும் "

" இனி நீ எங்கேயும் போக போறது இல்லை.. இங்க தான் இருக்க போற! சும்மா அது இதுன்னு எதுவும் பேசிட்டு இருக்காத, புரியுதா? சரி இதெல்லாம் விடு அன்னைக்கு குமரன் அண்ணாவ பார்த்ததாக சொன்னியே? அப்புறம் என்ன ஆச்சு? மறுபடியும் அவரை பார்த்தியா? " என்று மெல்ல பேச்சை மாற்றினாள் வள்ளி.

" ப்ளீஸ் வள்ளி எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நீ போ " என்று கூறி வள்ளியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அனுப்பினாள்.. குமரனை பற்றிய பேச்சை முற்றிலுமாக தவிர்த்தாள்.

அதனை உணர்ந்து கொண்ட வள்ளியும், சாத்வியின் நடவடிக்கையை கவனிக்க தொடங்கினாள்... வந்ததிலிருந்து அவளது பேச்சும், நடவடிக்கையும் முற்றிலும் முறண்பாடாக இருப்பதை அறிந்து கொண்டாள். அங்கு ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது அதனால் தான் இவள் திடீரென இங்கு வந்திருக்கிறாள். என்று சரியாக யூகித்தவள், என்றோ உதவிக்காக சாத்வியிடமிருந்து வாங்கி வைத்திருந்த கீதாவின் எண்ணை தேடி பிடித்து அவளுக்கு அழைத்திருந்தாள்.

" ம்ம்ம் சொல்லுங்க " கீதாவின் குரல்.

" நான் வள்ளி பேசுறேன்? "

" எந்த வள்ளி? " வள்ளிக்கும் கீதாவுக்கு பெரிதாக பரிச்சயமில்லை.

" சாத்வியோட பிரெண்டு ஊருல இருந்து கால் பண்ணுறேன் " சாத்வியின் பெயரை கூறிய பின்பு தான் கீதாவிற்கு வள்ளியின் நினைவு வந்தது..

" ஐயம் சாரி, சரியா ஞாயபகம் இல்லை.. சொல்லுங்க" என்றவளுக்கு சாத்வியை பற்றி ஏதேனும் கேட்டால் என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்ற தயக்கம் அதிகமாக இருந்தது.

" சாத்வி இங்க வந்திருக்கா, அது உங்களுக்கு தெரியும் தானே... "

" என்ன சொல்லுறீங்க சாத்வி அங்க தான் இருக்காளா? " என்று நிம்மதி பெருமூச்சு விட்ட கீதா ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

" அப்போ உங்களுக்கு தெரியாதா? அவள் உங்ககிட்ட சொல்லிட்டு வரலையா? " என்று வள்ளி சந்தேகம் கேட்க ... நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவளிடம் கூறினாள் கீதா..

" இவ்ளோ நடந்துடுச்சா? பேசாமல் நீங்க ஒன்னு பண்ணுங்க.. சாத்விகா இங்க தான் வந்திருக்கான்னு குமரன் அண்ணா கிட்ட சொல்ல வேண்டாம்... அவள் ஊருக்கு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு அப்படிங்குற மாதிரி சொல்லுங்க.. அப்போ தான் எப்படியும் அவளை தேடி இங்க வருவாரு...இல்லன்னா அவள் இங்க தானே இருக்காள்.. எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்லி வராம விட்டுடுவாரு.. நான் சொல்லுறது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்.. அவர் இங்க வந்தா போதும் அதுக்கப்புறம் நாங்க பார்த்துக்கிறோம் "

" நீ சொல்லுறது எனக்கு புரியுது வள்ளி. ரெண்டு பேருக்குமே ஈகோ அதிகம்..இப்படி ஏதாவது பண்ணா தான் சரி பட்டு வரும்... நீங்க சொன்ன மாதிரியே நான் சொல்லிடுறேன். அப்புறம்... சாத்வி நல்லா தானே இருக்கா? அவளுக்கு ஒன்னும் இல்லையே.. கொஞ்சம் அவளை கவனமா பார்த்துக்கோங்க.. ரெண்டு வருஷம் என்கூடவே இருந்துட்டா, இப்போ அவள் இல்லங்கும் போது மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு " என்று பேசிய கீதாவின் விழியோரம் தன்னிசையாக ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

" அவளை பார்த்துக்க நான் இருக்கேன், கவலைப்படாதீங்க "

" ம்ம்ம்.. நான் குமரன் கிட்ட தகவல் சொல்லிடுறேன் "என்று கூறி அழைப்பை துண்டித்த கீதா அடுத்து உடனே குமரனுக்கு அழைத்திருந்தாள்.

" சொல்லுங்க கீதா, " நிதானமின்றி குரல் வெளிவந்தது..

" சாத்வி "

" அவளை தான் தேடிட்டு இருக்கேன்.. இப்போ வரை ஒரு தகவலும் கிடைக்கல... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சதா?"

" அது வந்து குமரன், எனக்கு என்னமோ அவள் உங்க ஊருக்கு போயிருப்பான்னு தோணுது.. எதுக்கும் நீங்க அங்க போய் பார்த்துடுங்களேன் "

" அங்க எப்படி!!!"

" எனக்கு அப்படி தான் தோணுது... எங்க போயிருப்பான்னு ஒரு இலக்கே இல்லாமல் தேடி அலையுறதுக்கு பதில் அங்க போய் பாருங்களேன்.. அவள் அங்க இருந்தால் நமக்கு நிம்மதி தானே.. ஒரு வேளை அங்க போறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலைன்னா சொல்லுங்க... நானே போயி பார்த்துட்டு வரேன் "

" அவளுக்கு முன்னாடி எனக்கு எதுவும் பெருசில்ல.. நானே போயி பார்த்துட்டு, உங்க கிட்ட தகவல் சொல்லுறேன் " என்று கூறி அழைப்பை துண்டித்த குமரன்.. இரண்டரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது ஊரை நோக்கி பயணமானான்.

********

அடுத்த நாள் காலையில் அவர்களது ஊருக்கு வந்திறங்கினான் குமரன்.. காரை வெளியே நிறுத்திவிட்டு தங்களது வீட்டை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன், தயக்கத்துடன் நுழைவாயிலை கடந்து நடந்து வந்தான்.

அவனது கார் வாசலில் நின்ற போதே, அவனை அடையாளம் கண்டு கொண்டு ஒரு புன்னகையுடன் அவனை நோக்கி வந்தாள் வள்ளி.

" அண்ணா " என்ற வள்ளியின் அழைப்பில் அவள் புறம் திரும்பியவன் இயல்பாக சிறு புன்னகையை உதிர்த்தான்.

" எப்படி இருக்கீங்க அண்ணா? "

" ம்ம்ம் இருக்கேன்.. சாத்வி இங்க தானே இருக்கா? " கீதா போன் செய்து ஊருக்கு சென்று பாருங்கள் என்று கூறிய போதே குமரனுக்கு சந்தேகம் உருவானது... குரலில் எந்த வித பதட்டமுமின்றி கீதா பேசிய போதே,சாத்வி அங்கு தான் இருக்கிறாள் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்து விட்டது. இருந்தும் சாத்வியை காண வேண்டும் தன் நிலையை அவளுக்கு புரியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மீண்டும் தன் இல்லம் நோக்கி வந்திருந்தான்..

" தெரியல அண்ணா நீங்களே வீட்டுக்குள்ள போய் பார்த்துக்கோங்க " என்று கூறிய வள்ளியை பார்த்து இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் வீட்டிற்குள் நுழைய போகும் சமயம் அந்த பக்கம் இருந்து வெளியே வந்தான் அஷ்வின்.

குமரனை கண்ட அஷ்வின் ஒரு கணம் அப்படியே நிற்க.. குமரனது அழைப்பு தான் முதன்மையாக வெளிவந்தது..

" அண்ணா " என்று அழைத்த மறுகணம் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அஷ்வின்.

அடியை வாங்கி கொண்டு கல்லென நின்ற குமரனின் இதழோரம் ஒரு புன்னகை துளிர்க்க.. நிமிர்ந்து அஷ்வினை பார்த்தவன் " அண்ணா " என்று மறுபடியும் அழைக்க... அவனை அணைத்திருந்தான் அஷ்வின்.

" ஏண்டா இப்படி பண்ண? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமல்ல.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? எதுக்கு எங்களை இப்படி தவிக்க விட்டு போன ? "என்ற அஷ்வின் கண்ணீருடன் நின்ற குமரனை தோளோடு அணைத்தபடி உள்ளே அழைத்து செல்ல முற்பட்டான்..

சத்தம் கேட்டு, அழகம்மாள் அங்கு வந்து சேர்ந்தார். இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் காய் நறுக்கி கொண்டிருந்தார் மீனாட்சி.

அழகம்மாளோ " அய்யா குமரா " என்று விரைந்து வந்து அவனை அணைத்து கொண்டவர் மாறி மாறி அவனது கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் பாசத்தையும் பரிதவிப்பையும் அவனுக்கு புரிய வைத்தார்.

" எப்படிப்பா இருக்க? "

" இருக்கேன் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க? "

" நீயும் அவளும் இல்லாமல் நம்ம வீடு நிம்மதியாவே இல்லப்பா.. இப்போ தான் நீங்க வந்துட்டீங்களே இனி எல்லாம் சரி ஆகிடும்... " புடவை தலைப்பில் கண்ணீரை துடைத்தபடி பேசினார்.

" எல்லாம் நான் வந்த நேரம்னு சொல்லு பாட்டி " நிலைமையை சகஜமாக்க சிரித்துக்கொண்டே வள்ளி கூறவும், அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அஷ்வின்.

" யாரு காரணமா இருந்தா என்ன? எல்லாரும் நல்லா இருந்தா போதும்" என்று மீனாட்சியின் குரல் ஒலிக்க... அங்க பார்வையை திருப்பினான் குமரன்..

அவரோ அவனை கவனிக்காததை போல.. காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தார்.

" நம்ம அத்தை வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தையா!! ஏன் பாட்டி ஒருவேளை உண்மையாவே உங்க மருமகள் திருந்திட்டாங்களோ!"

" சும்மா இருடி நீ வேற? " என்று வள்ளியை அடக்கியவர் .. " நீ உள்ள வா குமரா " என்று அவனது கரம் பற்றி அழைக்க... அவனது பார்வையோ மீனாட்சியின் மீது பதிந்திருந்தது... கால்களோ அவரது அனுமதிக்காக காற்றில் காத்திருந்தது...

அதனை உணர்ந்து கொண்ட அஷ்வின் " அம்மா அவனை உள்ள வர சொல்லுங்க " என்று கூற... எதுவும் பேசாமல் எழுந்து கொண்டவர் " சொந்த வீட்டுக்குள்ள வரதுக்கு யாரோட அனுமதியையும் எதிர்பார்த்து தயங்க வேண்டிய அவசியம் இல்லை " என்று கூறிவிட்டு சென்றார்.

ஒரே வார்த்தையில் அவன் இந்த வீட்டு பிள்ளை அவனுக்கு இங்கு உரிமை உள்ளது, அவனை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று கூறியிருந்தார்.

அவரது வார்த்தையில் மென்மையாக புன்னகைத்து கொண்ட குமரன் வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.


" சாத்வி எங்க? " வள்ளியிடம் கேட்டான் குமரன்.

" அது... "

" எனக்கு தெரியும் வள்ளி சொல்லு அவள் எங்க? "

" ரூம்ல தான் இருக்கா, வந்ததில இருந்து சாப்பிடவே இல்லை... உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு ஓரளவுக்கு தெரியும்.. அவள் நினைச்சுட்டு இருக்க மாதிரி கண்டிப்பா நீங்க தப்பு பண்ணியிருக்க மாட்டீங்க எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. கோபப்படாமல் கொஞ்சம் பொறுமையா அவளுக்கு புரியவையுங்க... அவள் புரிஞ்சுப்பா" என்று கூறி அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் வள்ளி.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 33

ஒரு வித தயக்கத்துடன் சாத்வியின் அறை கதவை தட்டினான் குமரன்.. அந்த பக்கம் எந்த எதிர்வினையும் இல்லை என்றவுடன் மெல்ல கதவில் கரம் வைத்து தள்ள முயன்றான்.. கதவு உள் பக்கமாக பூட்டியிருந்தது!!!

புருவம் சுருக்கியவன் " சாத்வி " என்று அழைக்க... அவளிடத்தில் பதில் இல்லை .. அந்நேரம் பார்த்து அறையில் ஏதோ விழுந்தது போல சத்தம் கேட்க்கவும்... " சாத்வி " என்று அவனது குரல் ஓங்கி ஒலித்தது.

அவனது சத்தத்தில் மீனாட்சி உட்பட அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

" என்ன ஆச்சுடா? " குமரனது பதட்டத்தை உணர்ந்து கேட்டான் அஷ்வின்.

" சாத்வி கதவை திறக்க மாட்டிங்குறாள்... "

" உள்ளே எதுவும் வேலையா இருப்பாடா... "

" ஒருவேளை குளிச்சிட்டு இருக்காளோ என்னவோ?" வள்ளியின் குரல்.

" இல்லை ஏதோ விழுந்த மாதிரி சத்தம் கேட்டது... எனக்கு தப்பா தோணுது" என்ற குமரன் கதவை தள்ள முயன்றான்.. அவனை தொடர்ந்து அஷ்வினும் கதவை தள்ளினான்... இருவரது விசையிலும் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது.

அங்கு சாத்வியோ தூக்கு மாட்டிய நிலையில் அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்... அதனை கண்டு அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர். அவளது நிலையை கண்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கை கால்கள் நடுக்கம் கண்டது.

விழிகள் நிலைகுத்திய நிலையில், அவளது இயக்கம் மட்டுப்படவும் " சாத்வி " என்று பயத்துடன் அலறினாள் வள்ளி. உடனே விரைந்து செயல் பட்ட குமரன் கயிறு அவளது கழுத்தை நெறிக்காதவாறு கால்களை தூக்கி பிடித்துக் கொண்டான்...உடனே சமையலறை நோக்கி சென்ற மீனாட்சி கத்தியுடன் வெளியே வந்து அதனை அஷ்வினிடம் கொடுக்க, அவனோ கட்டிலின் மீதேறி நின்று சாத்வியின் கழுத்தில் சுற்றியிருந்த கயிறை அறுத்து எடுத்தான்.

பின்னர் மெதுவா அவளை கீழே இறக்கிய குமரன், மெத்தையில் படுக்க வைத்தான். இன்னுமே சாத்வியின் கண்கள் மேல் நோக்கி பார்த்துக் கொண்டிருக்க, சுற்றி இருந்தவர்களுக்கு பயம் பிடித்துக் கொண்டது...

" சாத்வி என்னை பாரு... சீக்கிரம் யாரவது தண்ணி எடுத்துட்டு வாங்க.. " என்று குமரன் கூறவும், உடனே தண்ணீரை எடுத்து கொண்டு வந்தாள் வள்ளி.

தண்ணீரை வாங்கி அவளது முகத்தில் அடித்துத் தெளித்தவன், அவளுக்கு நீரை புகட்டி விட்டான். அவளது தொண்டை குழியில் நீர் இறங்காமல்,அனைத்தும் வெளியே வழிந்தது.. " சாத்வி தண்ணீ குடிடி.. என்னை பாரு.. ஏண்டி இப்படி பண்ண " உடைந்து ஒலித்தது குமரனின் குரல்.

சாத்வியை மடி தாங்கியிருந்த குமரனின்,கண்ணீர் துளிகள் அவளது கன்னத்தில் பட்டு தெரித்தது...

"ஒன்னும் ஆகாது குமரா நீ அழாத... அவள் நம்மள விட்டு எங்கேயும் போக மாட்டா? "

" எனக்கு பயமா இருக்கு பாட்டி " என்றவனின் தலையை வருடி கொடுத்த அழகம்மாள், சாத்விக்கு நீரை புகட்டி விட்டு தொண்டை குழியில் நீர் இறங்க தடவிக் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவளது சுவாசம் சீரானது.

சாத்வியின் சுவாசம் சீரான பின்பு தான் அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதியா இருந்தது..

மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பியிருந்த சாத்வியின் கண்கள் அப்போது தான் குமரனை அடையாளம் கண்டு கொண்டது... உடனே தன் கண்களை மூடி மூடி முழித்தவள், தட்டு தடுமாறி எழுந்து கொள்ள முயலவும், அவளை தூக்கி கட்டிலின் விளிம்பில் சாய்வாக அமரவைத்தான் குமரன்.

சிறிது நேரம் சுற்றி இருந்தவர்களை பார்த்தபடி இருந்தவள்... சோர்வாக தலை சாய்த்து கொண்டாள்.

" சாத்வி இப்போ எப்படி இருக்கு " என்று கேட்டபடி குமரன் அவளது கன்னத்தில் கைவைக்கவும், முகத்தை திருப்பிக் கொண்டாள் சாத்விகா. அவளது செயலில் கண்களை மூடி திறந்தவன் " என்ன தாண்டி உன் பிரச்சனை ஏன் இப்படி எல்லாம் நடத்துக்கிற? " என்று கேட்கவும்... அவனை சினம் பொங்க பார்த்தாள்.

" நான் உயிரோட இருந்தால் உனக்கென்ன செத்தா உனக்கென்ன?.. அதான் நான் எப்படி போனாலும் பரவாயில்லைன்னு விட்டுட்டு போயிட்டல்ல... பின்ன என்ன? " என்று ஆதங்கத்தில் பேசியவளை சலிப்பாக பார்த்தான் குமரன்.

" அதான் எல்லாம் நடந்து முடிச்சிடுச்சே இன்னும் ஏண்டி இப்படி இருக்க? "

" ஆமா எல்லாம் முடிஞ்சு தான் போச்சு.. அதுவும் இல்லாமல் இப்போ தான் உனக்கு புதுசா ஒரு காதலி இருக்காளே.. அப்புறம் நான் எதுக்கு? இதுக்கு மேல நான் உயிரோடயிருந்து என்ன பண்ண போறேன். அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சின்னு எனக்கு யாரும் இல்லை அதுக்காக நான் எப்போவும் வருத்தப்பட்டதே இல்லை.. ஆனால் இப்போ தோணுது யாராவது எனக்குன்னு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்காது இல்லை... " என்று பேசியவளை வலிமிகுந்து பார்த்தார் மீனாட்சி.. அவரது கண்களில் தெரிந்த வலியை சாத்வியால் உணரமுடிந்தது...

" மன்னிச்சிடுங்க அத்தை.. நான் உங்களை அந்நியமா பார்த்ததாக நினைக்க வேண்டாம்.. என்ன இருந்தாலும் நீங்க எனக்கு அத்தை மட்டும் தான்னு மாமா விஷயத்தில நிரூபிச்சுட்டீங்க... அந்த வலி இன்னும் எனக்குள்ள இருக்கு அத்தை... இருந்தும் உங்க மேல உள்ள பாசத்தால தான் கடைசியாக எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்... நான் இங்க வந்தப்போ என் முகத்தை கூட நீ பார்க்கலல்ல அத்தை, உன் கையாள எத்தனை நாள் எனக்கு சாப்பாடு போட்டிருப்ப, உன் மடியில போட்டு எத்தனை நாள் என்னை தூக்க வச்சியிருப்ப... என் மேல உனக்கு என்ன அத்தை கோவம். பாலூட்டி சீராட்டி வளர்த்த அவரு மேலயே உனக்கு பாசமில்லாத போது என் மேல மட்டும் எப்படி பாசம் இருக்கும்." என்று சாத்வி ஊசியாக வார்த்தைகளை இறக்க.. கண்ணீருடன் நின்றார் மீனாட்சி.

" சாத்வி போதும் இதுக்கு மேல எதுவும் பேசாத " மீனாட்சியின் கண்ணீரை காண பொறுக்காமல் குமரன் கூறவும்.. அவனை விரக்தியாக பார்த்தாள் சாத்வி.

" ம்ம்ம் என்ன இருந்தாலும் நீங்க எல்லாரும் ஒரே குடும்பங்குறதை நான் அடிக்கடி மறந்துடுறேன்.. முட்டாள் தனமா நீ என் குமரன்னு பைத்தியக்காரி மாதிரி நம்பிட்டு இருந்திருக்கேன். அன்னைக்கே உன் குடும்பத்துக்காக என்னை விட்டுட்டு போனவன் தானே நீ... மழைவரும்னு கானல் மேகத்தை நம்பியிருக்க மாதிரி உன் அன்பை உண்மைன்னு நம்பி ஒவ்வொரு நாளும் முட்டாளா வாழ்ந்திருக்கேன். இப்போ நீங்க என்ன காப்பாத்தியிருக்கலாம் ஆனால் மறுபடியும் நான் இந்த முடிவை எடுக்க தான் போறேன்.. அப்போ உங்களால என்னை காப்பாத்த முடியாது " என்று அவள் பேசி முடிக்கும் முன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் குமரன்.

அதனை கண்டு அதிர்ந்த மீனாட்சி "என்ன பண்ணுற? " என்று கேட்டவாறு இடையில் வரவும் பார்வையாலே அவரை விலக்கி நிறுத்தினான் குமரன்.. அவளுக்கு எனக்கும் இடையில் நீங்க வராதீங்க என்பது போல இருந்தது அவனது பார்வை.

" என்னடி விட்டுட்டு போயிட்டேன், விட்டுட்டு போயிட்டேன்னு பேசிட்டிருக்க! ஆமா விட்டுட்டு தான் போனேன்.. நீ நல்லா இருப்ப, உனக்குன்னு ஒரு வாழ்க்கை, அதை நீ நல்லா வாழுவன்னு நெனச்சு தானேடி விட்டுட்டு போனேன்... அன்னைக்கு அந்த கல்யாணத்தை நிறுத்தி உன்னை நான் கல்யாணம் பண்ணியிருந்தால் மட்டும் நம்ம சந்தோஷமா வாழ்ந்திருப்போம்னு நினைக்கிறியா?.. வார்த்தைக்கு வார்த்தை உங்க குடும்பம் உங்க குடும்பம்னு சொல்லுறியே நீயும் இந்த குடும்பத்தில ஒருத்தி தானடி... இது நம்ம குடும்பம் சாத்வி.. அது ஏன் உனக்கு புரியல.. நம்ம குடும்பத்தில இருக்க ஒருத்தரை காயப்படுத்திட்டு நம்ம ரெண்டு பேரும் மட்டும் எப்படிடி சந்தோசமா வாழ்ந்திருக்க முடியும். என்னை பிரிஞ்சு நீ எவ்ளோ கஷ்டபட்டியோ அதே அளவுக்கு நானும் வேதனை பட்டிருக்கேன்... உன் வலியை நீ வெளிய சொல்லிட்ட நான் சொல்லல அவளோ தான் வித்தியாசம்.இன்னொரு பொண்ணோட என்னை பார்த்தேன்னு சொன்னியே... அப்போவே என் சட்டையை பிடிச்சு கேள்வி கேக்குறதை விட்டுட்டு சாக போறேன்னு கிளம்பி வந்திருக்க... எதுக்கெடுத்தாலும் செத்துடுவேன் செத்துடுவேன்னு சொல்லுறியே! உனக்கு மட்டும் தான் கவலை இருக்கா? இல்லை உனக்கு மட்டும் தான் வலி இருக்கா? இதுக்கெல்லாம் சாகணும்ன்னா நான் என்னைக்கோ செத்து போயிருக்கணும்.. இப்படி உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருந்திருக்க முடியாது... என் வாழ்க்கை இப்படியானதுக்கு முக்கிய காரணம் என் அப்பா தற்கொலை பண்ணிகிட்டது தான். அவரு எனக்கென்ன போச்சுன்னு எல்லாரையும் விட்டுட்டு நிம்மதியா போயி சேர்ந்துட்டாரு, அன்னைக்கு அவரு பண்ண அந்த தப்பை தான் இன்னிக்கு நீயும் பண்ணிட்டிருக்க.. தற்கொலை பண்ணிட்டு நீ நிம்மதியா போயிடுவ.. அதுக்கு அப்புறம் என்னோட நிலைமையையும் நம்ம குடும்பத்தோட நிலைமையை என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தியா? உன்னை நினைச்சு நினைச்சு, உன் சாவுக்கு நான் தான் காரணங்குற குற்ற உணர்ச்சியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொன்னுடுமேடி.. அந்த வலியை தான் எனக்கு கொடுக்கணும்னு நினைக்கிறியா? சொல்லுடி... உனக்கு ஒன்னு தெரியுமா?
அன்னைக்கு மட்டும் அவரு தற்கொலை முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்... கண்டிப்பா என் வாழ்க்கையும்.. இதோ அங்க கண்ணீரோட நிக்குறாங்களே மீனாட்சி என் அம்மா அவங்க வாழ்க்கையும் இப்படி தடம் மாறி போயிருக்காது. வாழ வேண்டிய வயசிலேயே வாழ்க்கையை இழந்து, புள்ளையை இழந்து, நிம்மதியை இழந்து, சந்தோஷத்தை இழந்து அவங்க படாத கஷ்டத்தையா நம்ம பட்டிருக்க போறோம் . இதுக்கெல்லாம் பயந்து அவங்க சாகணும்னு முடிவெடுத்திருந்தால் இன்னிக்கு நீயும் இல்லை நானும் இல்லை... அவங்க அன்பை குறைவா பேசாத சாத்வி... அவங்க இடத்தில் வேற யாராவது இருந்திருந்தால்... நம்ம இந்நேரம் தெருவில கிடந்திருப்போம்... அவங்களுக்கு என் மேல கோவம் இருக்குறது உண்மை தான்.. அதுக்காக பாசம் இல்லன்னு அர்த்தமில்லை... இன்னொரு முறை இப்படி பேசாதா... இனிமேல சாக போறேன் அது இதுன்னு ஏதாவது பேசின... நானே உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன். " என்று ஆவேசமாக பேசியவனின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது... அவன் பேசியதை கேட்டு உறைந்து அமர்ந்திருந்தாள் சாத்விகா..

குமரன் பேச பேச மீனாட்சியின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது... கண்ணீருடன் சுவரில் சாய்ந்து நின்றவரை கடந்து சென்றான் குமரன்.
 
Status
Not open for further replies.
Top