ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதலாய் ஒரு காந்தர்வம் - கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 45

மூவரும் வெளியேறி வாசலுக்கு வந்த நேரம், கவினை விசித்திரமாக பார்த்தபடி ஒருத்தன் அந்த வழியால் வந்தான் . அவனோ ஷேர்ட் இல்லாம, ஜீன்ஸ் ஒரு பக்கம் பாதி வெட்டியபடி செருப்பும் இல்லாமல் வந்தால் விசித்திரமாக தானே பார்ப்பார்கள்? மாதவனும் தர்ஷனும் முன்னே சென்று காரில் ஏறிக் கொள்ள பின்னால் காலில் கல் குத்தியதால் கெந்தி கெந்தி நடந்து வந்தான் கவின்.

அந்த வந்தவன் வேறு யாருமல்ல அவனை பீச்சில் வைத்து வம்பிழுக்கும் அந்த பையனே தான்.

கெந்தி கெந்தி வந்தவனைப் பார்த்தவன் "இது நம்ம பீச் பார்ட்டி தானே.. அந்த அக்காவோட சாபம் ரெண்டு நாளுலேயே பிச்சைக்காரன் ஆயிட்டாரு போல" என்று நினைத்துக் கொண்டே அவனை நோக்கி வந்து "இது தான் அண்ணே சொல்றது பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கணும்னு.. இப்போ பார்த்தீங்களா? ஹாலிவூட் ஹீரோ கணக்கா இருந்த உங்கள காலுல செருப்பே இல்லாம பிச்சை எடுக்க வச்சிடுச்சு விதி" என்று சொல்ல, அவனை நிமிர்ந்து ஏறிட்டு முறைத்தவன், தலையை கோதி விட்டு "டேய் வேணாம், கொலை வெறில இருக்கேன்.. கிளம்பு" என்றான். அவனோ "தப்பு பண்ணுனா தண்டனை அனுபவிச்சே ஆகணும்" என்று சொல்ல, அவனோ "டேய் நான் தப்பே பண்ணாம அனுபவிச்சிட்டு இருக்கேன்.. கடுப்பேத்தாம கிளம்பு" என்று சொல்லி விட்டு நகர, முற்பட அவன் மார்பில் கை வைத்தவன், தனது பையில் இருந்து பணத்தை எடுத்து நீட்டியவன் "பார்க்க பாவமா இருக்கீங்க" என்று சொல்ல, கவினின் பொறுமை எங்கோ பறந்து போக, "அடேய், உன்னை கொல்லாம விடமாட்டேன்" என்று சொன்னவன் நிலத்தில் இருந்த கல்லை தூக்க அந்த பையனோ "பிச்சைக்காரன் இல்லையா நீங்க? பைத்தியமா?" என்று கேட்டுக் கொண்டே ஓட ஆரம்பிக்க, கல்லை கீழே போட்ட கவின் "படுத்துறாங்கப்பா" என்று புலம்பிக் கொண்டே காரில் ஏறிக் கொண்டான்.

காரில் ஏறியவனோ "ஜனனி ரொம்ப அழுதாளா ?" என்று கேட்க, மாதவனோ "அவ சாப்பிடவே இல்ல, " என்றான். கவின் மனதில் அதைக் கேட்டு ஒரு பரவசம் உண்டான போதிலும் இந்த கோலத்தில் ஜனனியைப் பார்க்க போக வேண்டாம் என்று நினைத்தவன் " வீட்டுக்கு விடுங்க மச்சான் குளிச்சிட்டு வந்திடுறேன்" என்று சொன்னான். மாதவனும் அவனை திரும்பிப் பார்த்தவன் "அது சரி, அப்புறம் உன்னை வீட்லயே சேர்க்க மாட்டாங்க" என்று சொல்ல, தர்ஷன் சிரிக்க இருவரையும் முறைத்துப் பார்த்தான் கவின்.

மாதவனும் கவினை வீட்டில் விட்டதும் முதலில் குளியலறைக்குள் சென்று அலுப்பு தீர குளித்தவனுக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது. அடுத்த கணமே அவன் கண்கள் பிரகாசமாக மாற, உடையை அணிந்து கொண்டே வெளியே வந்தவன் நேரே மாதவனிடம் வந்து "மச்சான் எனக்கு ஒரு உதவி பண்ணனும்" என்றான். மாதவனோ "உதவியா? என்னடா அது?" என்று கேட்க அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டவன் விழிகள் விரிந்து கொள்ள, " உனக்கு என்னமோ ஆயிடுச்சு பாரு" என்று சொன்னவன் அவனை முறைத்துப் பார்த்தான் தர்ஷனோ "எனக்கும் சொல்லுங்க" என்று சொல்ல, மாதவனோ கவின் கூறியதைக் கூற "கேட்க நல்லா தான் இருக்கு.. ஆனா அண்ணி பாவமே " என்று சொன்னான். மாதவனோ ஆரம்பத்தில் அதற்கு சம்மதிக்காத போதும் இறுதியில் கவின் சம்மதிக்க வைத்து இருக்க, அவர்கள் பயணம் ஆரம்பமானது மாதவனின் வீட்டை நோக்கி.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே மாதவி ஓடி வந்து கவினை அணைத்துக் கொண்டார். அவரோ "எங்கடா போன? என் உயிரே போயிடுச்சு தெரியுமா?" என்று அழ, அவனோ "ஒண்ணும் ஆகலம்மா" என்று சொன்னவன் அவரை அணைத்து விட, சத்தம் கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்த ஜனனியோ "கவின்" என்று சொல்லிக் கொண்டே அவனை ஓடி வந்து அணைக்கப் போக, அவள் தோள்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் "யாரிந்த பொண்ணு காய்ஞ்ச மாடு கம்புல பாயிற போல ஓடி வருது" என்று கேட்க, ஷாயினியோ "எத காய்ஞ்ச மாடா?" என்று கேட்டாள். உடனே ஜனனியோ கலங்கிய கண்களுடன் மாதவனைப் பார்க்க, " மதன் அடிச்சதுல பழசை மறந்துட்டான்.. அதுவும் அந்த ஒன்பது வருஷம் சுத்தமா நியாபகம் இல்ல, அதுவும் கல்யாணம் நடந்த எண்ணமே இல்ல. தர்ஷன் தான் என்னையே அறிமுகப்படுத்தி விட்டான்" என்று சொன்னவன் கவினிடம் "பழங்காலத்து ஹீரோயின் போல ஓடி வந்தது வேறு யாருமில்லை உன் பொண்டாட்டி தான்" என்று சொன்னவன் மனமோ "எப்படி எல்லாம் நம்மளையும் பொய் சொல்ல வைக்கிறான் இடியட்" என்று திட்டிக் கொண்டே நகர, கவினோ "ஒஹ் நீங்க தான் என் பொண்டாட்டியா?" என்று ஜனனியிடம் கேட்க அவளுக்கோ மயக்கம் வராத குறை தான். அவளோ "இவருக்கு எப்போ நான் அந்த ஒன்பது வருஷத்தை நினைவு படுத்தி, எப்போ நான் வாழ ஆரம்பிக்கிறது?" என்று ரம்யாவிடம் கேட்க, அவளோ "உள்ளே அழைச்சிட்டு போய் உங்க சரித்திரத்தை சொல்லுங்க, நினைவு வந்தாலும் வரும்" என்று சொன்னாள்.

 

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 46

ஜனனிக்கோ எங்கே அவனை மீண்டும் அணைக்க கைகள் பரபரத்தாலும் மீண்டும் "காய்ஞ்ச மாடு" என்று சொல்லி விடுவானோ என்று பயந்து சோர்வாகவே அவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள். அவனும் அவள் பின்னே செல்ல, அப்போது தான் எழுந்த ரியாவோ "அப்பா" என்று சொல்லிக் கொண்டு ஓடி வர, அவனும் நடிப்பதை மறந்து அவளை அணைத்து தூக்கி முத்தம் வைத்தவள் "எப்படி இருக்கீங்க?" என்று கேட்டான். ஜனனியோ சட்டென அவனைத் திரும்பி புருவம் சுருக்கி பார்க்க, மானசீகமாக நெற்றியில் அடித்தவன் "வரும் போது தான் தர்ஷன் சொன்னான்" என்று சொல்ல, "ஓஹ் " என்று சொன்னவள் எதுவும் பேசாமல் இருந்தாள். அவனோ ரியாவிடம் சிறிது நேரம் பேசி விட்டு, அவளை வெளியே அனுப்பியவன் சாய்வாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து "அப்புறம், ஜனனி, நம்ம சரித்திரத்தை சொல்லலாமே" என்று கேட்டான். அவனுக்கும் அவளை சீண்டுவதில் ஒரு அலாதி இன்பம்.

அவளோ அவன் அருகே அமர்ந்தவள் "எனக்கு அப்பா கல்யாணம் பேசுனார், ஆனா மாப்பிள்ளையை பிடிக்கலன்னு ஓடி வந்தேன்" என்று சொல்ல வாயில் கை வைத்தவன் " பெரிய தைரியசாலி தான் " என்றான். அவளோ "அப்போ தான் உங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்" என்று ஆரம்பித்து நடந்ததைக் கூற, அவனுக்கே சற்று சங்கடமாக தான் போனது. எப்படி அவளுடனான நாள் ஆரம்பித்தது என்று அவனும் அறிவான் அல்லவா? அடுத்த கணமே "அவ்வளவு மோசமானவனா நான்?" என்று கேட்க, "உங்களுக்கும் அது தான் பெர்ஸ்ட் டைம்" என்று சொல்ல, அவனும் "பெர்ஸ்ட் டைம்னாலும் தப்பு தானே" என்றான். அவளோ "ம்ம் தப்பு தான்" என்று சொல்ல அவனும் "சாரி" என்று சொல்ல, ஆழ்ந்த மூச்செடுத்தவள் மீதி கதையை சொல்ல ஆரம்பித்தாள். அவர்கள் திருமண கதையை இப்போது கேட்கும் போது அவனுக்கே எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. "லூசு போல தாலி கட்டி இருக்கேன்" என்று நினைத்தாலும் அடுத்த மனமோ "அப்படி தாலி கட்டுனதால தான் இப்போ அவ உனக்கு பொண்டாட்டியா இருக்கா" என்று சொல்ல, ஆழ்ந்த மூச்செடுத்து நிலைப்படுத்தியவன் அவள் மேலும் சொன்னதைக் கேட்டான். அவளும் அந்த மூன்று வருடங்கள் தான் பட்ட வலியையும் அவன் அனிதாவை காதலித்ததையும் கூற, அவனோ "ரொம்ப கேவலமா நடந்து இருக்கேன்ல" என்று சொன்னான். அவளோ "நீங்க மட்டும் இல்ல, நானும் தான்.. உங்கள கட்டாயப்படுத்தி ரெண்டாம் தடவை தாலி கட்ட வச்சேன்" என்று சொன்னாள்.

அவனோ அவளிடம் " உன்னை தான் பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்ல.. அப்புறம் எப்படி மீதி நடந்திச்சு?? " என்று கேட்க அவளோ கையை பிசைந்து கொண்டு தடுமாறியவள் " அது அப்படி தான் " என்க அவனோ அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே " எப்படி தான் ?? சொன்னா தானே நினைவு வரும் " என்றான். அவளோ சற்று ஆழ்ந்த மூச்செடுத்தபடி " உங்கள பிளாக் மெயில் பண்ணினேன் " என்று சொல்ல அவனோ புருவம் சுருக்க அவளோ " ஐயோ அது தப்பு தான். இல்லன்னு சொல்லல.. நீங்க கிடைக்கும்னு அப்படி பண்ணினேன் " என்றாள். அவனோ " ஒஹ் .என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா? " என்று கேட்க.அவனை ஏறிட்டு பார்த்தவள் " ரொம்ப.. ஆனா நீங்க அவளோ என்ன ஹேர்ட் பண்ணி இருக்கீங்க " என்று சொல்ல இப்பொது வலித்தது என்னவோ அவன் மனம்.தான்.

எச்சிலை விழுங்கி கொண்டே " ஐ ஆம் சாரி " என்றான் உருக்கமான குரலில். அவளோ விழுக்கென நிமிர்ந்த்து பார்க்க உடனே சுதாகரித்தவன் " ஹேர்ட் பண்ணி இருக்கேன்னு நீ தானே சொன்ன அது தான் " என்று இழுத்தான். அவளும் " தட்ஸ் ஓகே.. " என்று சொல்லிக் கொண்டே கண்களை துடைக்க அவன் விழிகளோ அவள் இதழில் நிலைக்க " இந்த நடிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு அவள் இதழில் குடி புகுந்து விடலாமா " என்று தோன்ற தலையை உலுக்கி தன்னை தானே சமன் செய்து கொண்டவன் " ஸ்டெடி கவின் ஸ்டெடி " என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவள் எம்பி அவள் கன்னத்தில் முத்தமிட்டு " ஐ லவ் யூ கவின் " என்று சொல்லி விட்டு எழ அவளை ஏக்க பெருமூச்சுடன் பார்த்தவன் அவள் கரம் பிடித்து இழுக்க அவளோ அவன் மடியில் விழுந்தாள்.. அவள் முகத்தை ஒரு கரத்தால் பிடித்தவன் மூக்கோடு மூக்கு உரசி அவள் கன்னத்தில் கன்னம் உரச அவளோ கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவள் , அவன் ஷேர்ட்டைப் பற்றிக் கொண்டே " நினைவு வந்துடுச்சா கவின் " என்று கேட்டாள். அவனோ அவள் இதழ் வாசனையை நுகர்ந்து கொண்டே " இல்ல " என்று ரகசிய குரலில் சொல்ல அவள் விழிகளோ பட்டென்று திறந்து கொண்டது. அவனோ " நினைவு வந்தாலும் வரலன்னாலும் ஐ லவ் யூ " என்று அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவாறு கூறினான்.

அவளோ அவன் விழிகளை ஆழ்ந்து பார்க்க, அவனோ "அப்புறம் என்னாச்சு?" என்று கேட்க, அவளுக்கோ வாயைத் திறந்தால் அவன் அருகாமையில் காற்று தான் வந்தது. அவனுடன் முற்றாக ஒன்றி இருந்தவள் தட்டு தடுமாறி நடந்ததை சொல்ல, இருவரின் மூச்சுகளும் ஒன்றொன்று கலந்து செல்லும் தூரத்தில் இருந்தவன் விழிகளோ பேசிக் கொண்டு இருக்கும் அவள் இதழில் படிந்து மீழ, "ரெண்டாம் தடவையும் மிரட்டி தான் எல்லாம் நடந்துச்சா?" என்று கேட்க சட்டென விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள் "ம்ம்" என்று சொன்னாள். "உங்க நிலையில இருந்து அப்போ யோசிக்கல.. காதல் வலுக்கட்டாயமாக வராதுன்னு புரியாம முட்டாள் தனமா நடந்துக்கிட்டேன்.. என் அப்பாவும் கொஞ்சம் அதிகமாவே நடந்துக்கிட்டார், ஐ அம் சாரி" என்று சொல்லி அவன் விழிகளை ஏறிட்டு பார்த்தபடி கூற, அவனோ "அப்புறம் என்னாச்சு?" என்று கேட்டான். அவளும், "அந்த டைம் ரியா கன்சீவ் ஆனா, கொஞ்ச நாள் என் கூட நல்லபடியா தான் இருந்தீங்க.. ஆனா ஒரு நாள் குடிச்சிட்டு வந்து உங்க ஸ்ட்ரெஸ் எல்லாம் என் கிட்ட கொட்டிடீங்க.. நானும் அண்ணா கல்யாணம் முடிஞ்சதுமே வார்த்தையை விட்டுட்டேன்.. அதனால ஆறு வருஷத்தை இழந்துட்டோம்." என்று சொல்லும் போது அவனுக்கும் அவளுக்கும் சேர்ந்தே வலித்தது.. இருவர் மீதும் சம அளவான தப்பு இருக்கின்றது அல்லவா? அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அதனை பெருவிரலால் துடைத்தவன் "ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்குல்ல... நான் பண்ணுன தப்புக்கு ரியலி ஐ ஆம் சாரி" என்று சொல்ல, "நானும் சாரி" என்று சொன்னாள். அவனோ "இப்போ ரெண்டு பேரும் சாரி மட்டுமே சொல்லிட்டு இருக்கோம்" என்று சொல்ல, அவளோ மென்மையாக புன்னகைத்தவள் "ரெண்டு பேருக்கும் அளவுக்கு அதிகமா காதல் இருந்திச்சு" என்று சொல்ல, அவனோ "ஆனா புரிதல் இல்ல.. கரெக்ட் ஆஹ்?" என்று கேட்டான். அவளோ "ம்ம்" என்று தலையாட்டியவள் மேலும் "உங்க இடத்தில இருந்து நானும் என் இடத்தில இருந்து நீங்களும் யோசிச்சு இருந்தாலே, இந்த பிரச்சனையை பேசி தீர்த்து இருக்கலாம்.. அந்த ஆறு வருஷ பிரிவுக்கே அவசியம் இருந்து இருக்காது" என்று சொல்ல, "ம்ம்" என்று சொன்னவன் அவள் காதருகே இதழ் பட குனிந்து "இப்போ ரியாவுக்கு தம்பியோ தங்கச்சியோ இருந்திருக்கும்" என்று சொன்னான். அவன் சொன்னதில் அவள் கன்னங்கள் சிவந்து கொள்ள, அவனை போலியாக முறைத்த சமயம், உள்ளே நுழைந்த ரியா, "அப்பா மடியில நான் தான் இருப்பேன்" என்று சிணுங்க சட்டென எழுந்து கொண்டவள் அவனை வெட்க புன்னகையுடன் பார்த்துக் கொண்டே வெளியேற அவள் முதுகை மென் சிரிப்புடன் பார்த்தவனோ "பழசெல்லாம் செட் ஆயிடுச்சு கவின், ஆனா இப்போ நடிக்கிற விஷயம் தெரிஞ்சா சாமி ஆடுவாளே," என்று நினைத்துக் கொண்டே மகளை தூக்கி மடியில் வைத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
 

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 47

அதே சமயம், அறைக்குள் குழந்தையின் உடையை மடித்துக் கொண்டு இருந்த ரம்யாவோ "என்ன சொல்றீங்க ? எல்லாமே நடிப்பா?" என்று கேட்க அவனோ "அவன் மகா நடிகன்" என்றான் மாதவன். அவளோ அவனை முறைத்தவள் "அத நீங்க சொல்லாதீங்க.. கோமா வந்த போல நடிச்ச ஆள் தானே நீங்க" என்று சொல்ல, அவனோ "ஆமாடி, அந்த டைம் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? நீ வேற என்னை க்ளீன் பண்ணுறேன்னு படுத்தி எடுத்துட்ட" என்று சொல்ல, அவளோ "ச்சீ இப்போ எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு?" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டாள். அவனோ "ஏதோ புது பொண்ணு போல சீன் போடாதே.. நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு" என்று சொல்ல, வாய் விட்டு சிரித்தவள் அவனை நெருங்கி அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க அவனோ "எனக்கு நான் வெஜ் கிஸ் தான் வேணும்" என்று சொன்னவன் தனக்கு தேவையானதை அவளிடம் எடுத்து விட்டே அவளை விட்டான்.

இதே சமயம் தாயுடன் வீட்டுக்கு வந்ததுமே அறைக்குள் வந்து ஷாயினியிடம் கவினைப் பற்றி உண்மையை கூற வாயில் கை வைத்தவள் "சரியான பிராடு பசங்க நீங்க" என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்தவள் "இருங்க அக்கா கிட்ட சொல்றேன்" என்று சொல்ல, அவனோ "வேணாம்டி" என்று சொன்னான். அவளோ "நோ, இதெல்லாம் தப்பு, அவ எவ்ளோ பீல் பண்ணுனா தெரியுமா?" என்று கேட்க அவனோ "அத கவின் இனி பார்த்துப்பான். நீ சும்மா இருடி " என்று சொல்ல., அவளோ "நான் சொல்ல தான் போறேன்" என்று சொன்னவள் ஜனனிக்கு போனை எடுக்க, அது ரிங் பண்ண ஆரம்பித்தது. அவனோ பாய்ந்து போனை ,பறிக்க அதுவோ ஸ்பீக்கரில் போடப் பட்டு கட்டிலில் தவறி விழுந்தது.

ஷாயினியோ "அக்கா" என்று ஆரம்பிக்க, அவளை சுவரில் சாய்த்து அவள் மீது முழுதாக சாய்ந்து அவள் வாயை கையால் மூட, அவளோ அவன் கையில் கடித்து விட்டான். அவனும் "ஆஅ" என்று சொல்லிக் கொண்டே விலக, அவளோ "அக்கா, " என்று மீண்டும் அழைக்க, அவனோ அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் இதழில் இதழ் பதித்து அவள் மீதி வார்த்தைகளை தனக்குள் முழுங்கிக் கொள்ள, ஜனனியும் "ஹெலோ ஹெலோ" என்று சொல்லி விட்டு தோள்களை உலுக்கியவள் போனை வைத்து இருந்தாள். ஷாயினியோ அவன் இதழ் அணைப்பில் கண்களை மூடியவள் அதிலேயே மூழ்கி விட, சிறிது நேரம் கழித்து அவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்துக் கொண்டே விலகி இருந்தான். அவளோ விழிகளை விரித்து அவனை மென் சிரிப்புடன் பார்த்தவள் "அக்கா கிட்ட சொல்லவா?" என்று மீண்டும் கேட்க அவனோ, முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் மீண்டும் அவள் இதழில் குடி கொண்டு இருந்தான்.

அன்று மாலை தாமோதரனிடம் வந்த கவின் "ஜனனியை அழைச்சிட்டு போறேன் மாமா" என்று சொல்ல, ஜனனியின் தாயோ " ஐயோ மாப்பிள்ளை, தேய்பிறை முடியட்டும்.. நல்ல நாளா பார்த்து நாங்களே அனுப்பி வைக்கிறோம்" என்று சொன்னார். அவனுக்கோ "நானும் ஜனனியும் சேர எவ்ளோ தடை?" என்று நினைத்தவன் "சரி மாமா அப்போ நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே ஜனனியைப் பார்க்க அவளோ தவிப்புடன் அவனைப் பார்த்தாள். மாதவனோ "எதுக்கும்மா நல்ல நாள் கெட்ட நாள்?" என்று எரிச்சலாக கேட்க, கவினோ "மச்சான் மனசில பாலை வார்த்தார்" என்று கவின் நினைத்துக் கொள்ள, ஜனனியின் தாயோ "நாள் கொள் பார்க்காம கல்யாணம் பண்ணி தான் இவ்ளோ பிரிவு, இனியாவது நல்ல நாளுல எல்லாம் நடக்கட்டும்" என்று சொல்ல, கவினோ மானசீகமாக நெற்றியில் அடித்தவன் "சரி அத்தை நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே ஜனனியைப் பார்க்க அவளோ அவன் பின்னால் ரியாவை தூக்கிக் கொண்டே வந்தவள் "ஆபீசுக்கு வந்துடுங்க" என்று சொன்னாள். அவனோ "ஆ, மச்சான் சொன்னார். நான் உங்க ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறேன்ல.. சரி .வந்திடுறேன். அங்க நாம மீட் பண்ணிக்கலாம்" என்று சொல்லி கண் சிமிட்ட அவளோ "ம்ம்" என்று சொன்னவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இதழ் குவித்து முத்தம் ஒன்றை கொடுப்பது போல சைகை செய்ய அவனோ "டெம்ப்ட் பண்ணுறாளே" என்று நினைத்தவன் மென் புன்னகையுடன் அங்கிருந்து புறப்பட்டு இருந்தான். காமத்தில் கரை கண்ட போதிலும் முதல் இருந்து காதலிக்க ஆரம்பித்தவர்களுக்கு ஒரு இனம் புரியாத பரவசம் மனதில்.

 

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 48

அன்றிரவு கவின் மனம் முழுதும் ஜனனியே நிறைந்து இருக்க, அவன் தூக்கம் எங்கோ தொலைந்து போனது என்றால் ஜனனியும் அவன் நினைவிலேயே மகளை அணைத்துக் கொண்டே படுத்து இருந்தாள். அடுத்த நாள் காலையில், எழுந்தவன் விறு விறுவென ஆயத்தமானவன் ஹாலுக்குள் வர, ஷாயினியோ அவனை முறைத்துப் பார்த்தாள். கவினோ ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டு இருந்த தர்ஷனைப் பார்த்தவன் "என்னடா எல்லாம் சொல்லிட்டே போல, " என்று சொல்ல, அவனுக்கோ புரையேற ஷாயினி ஓடி வந்து கவினை முறைத்துக் கொண்டே அவன் தலையில் தட்ட, தர்ஷனோ "ஆஅ, வலிக்குதுடி" என்று கத்தினான். கவினோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்ந்து தட்டை திருப்பி சாப்பிட ஆரம்பித்தான். அவளோ பொறுமை இழந்து அவன் அருகே வந்தவள் "உங்க கிட்ட ஓபன் ஆஹ் கேக்கிறேன்.. எதுக்கு அவ கிட்ட பொய் சொல்றீங்க?" என்று கேட்க அவனோ ஆழ்ந்த மூச்செடுத்தவன் "இத அப்போவே கேட்டு இருக்கலாம்ல, அவன் தலையும் உடைஞ்சு இருக்காது" என்று சொன்னவன் மேலும், "எனக்கு அவ கிட்ட நிறைய மன்னிப்பு கேட்கணும்.. எப்படியும் எனக்கு எல்லாம் நினைவு இருந்து அத பத்தி பேச போனாலே பேச வேணாம்னு தான் சொல்லுவா.. ஆனா எனக்குள்ள நிறைய குற்ற உணர்ச்சி இருக்கு.. அதனாலேயே அத பத்தி பேசி மன்னிப்பு கேட்க நினச்சேன்.. அவ்ளோ தான்.. வேற ஒரு காரணமும் இல்ல. சீக்கிரமே உண்மையை சொல்லிடுவேன்" என்று சொல்ல "ஒஹ் அவ்ளோ தானா விஷயம்?" என்று சொன்னவள் " இன்னும் ரெண்டு இட்லி அதிகமா சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு செல்ல, இருபக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டான்.

கவினோ அலுவலகம் சென்றதுமே "என்னடா உன்னை இவ்ளோ நாளா காணோம்?" என்று தான் எல்லாரும் கேட்டார்கள். அவனும் அவர்களிடம் நடிக்க விரும்பாமல் சர்வ சாதாரணமாக உடல் நிலை சரி இல்லை என்று கூறி விட்டு பேச ஆரம்பித்து இருந்தான். அதே சமயம், தனது அறைக்குள் வந்த ஜனனிக்கோ சி.சி.டி வி யில் கவின் தெரிய, மென் புன்னகையுடன் எழுந்தவள் அவனை தேடி சென்றாள். அதே சமயம், கவின் அருகே வந்த அர்ச்சனா "உங்க கூட கொஞ்சம் பேசணும்" என்க, அவனோ "பேசு" என்றான். அவளோ சுற்றிப் பார்த்து விட்டு "தனியா பேசணும்" என்று சொல்ல, அவனோ "தனியாவா? " என்று புருவம் சுருக்கி கேட்டான். அவளோ அங்கிருந்த ஸ்டோர் அறையைக் காட்டி, "அங்க வாங்க " என்று சொல்லி விட்டு செல்ல, அவனோ "அப்படி என்ன தனியா பேச போறா ?" என்று யோசித்துக் கொண்டே பின்னால் சென்றான். அந்த அறை சற்று தனியே தான் அமைந்து இருந்தது. அந்த இடத்தில் நடமாட்டமும் குறைவாக இருக்க, உள்ளே சென்றவள் அவனும் சென்றதுமே கதவை மூட போக, அவள் கையை பிடித்து தடுத்தவன் "வேணாம் திறந்தே இருக்கட்டும், நீ பேசுறது ஒண்ணும் வெளியே கேக்காது.. எனக்கு சும்மாவே காலம் சரி இல்ல, நீ வேற ரூமை பூட்டி என்னை டைரக்ட் ஆஹ் சொர்க்கத்துக்கு அனுப்பாதே" என்று சொன்னான். அவன் சொல்ல வருவது அவளுக்கு புரியவில்லை என்றாலும் "ஆஹ் ஓகே" என்று சொன்னவள் வாசல் பக்கம் யாரும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டே "உங்கள பார்க்கலன்னு சொன்னதும் என்னவோ போல இருக்கு" என்று சொன்னாள். அவனோ "என்ன போல இருக்கு?" என்று கேட்கும் போதே ஒரு சின்ன சந்தேகம் அவள் நின்ற தோற்றத்தைப் பார்த்து. அவளோ தலையைக் குனிந்தபடி "ஐ திங்க், ஐ லவ் யூ" என்று சொல்ல, அவனோ நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.

அர்ச்சனாவோ கவினை ஏறிட்டுப் பார்க்க அவனோ " நீ சொன்னது எனக்கு வேற மாதிரி கேட்டிச்சு " என்று சொல்லும் போதே அவன் இதயம் நின்று துடித்தது. அர்ச்சனாவோ " சரியா தான் கேட்டிருக்கு.. எனக்கு உங்கள பிடிச்சி இருக்கு கவின் " என்க நெஞ்சில் கை வைத்தவன் " உன் வயசென்ன என் வயசென்ன.. நீ ரொம்ப சின்ன பொண்ணு " என்று சொல்ல " அப்போ அவ சின்ன பொண்ணா இருக்கிறது தான் பிரச்சனையா? " என்று கேட்க சட்டென பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த கவினோ மயங்கி விழாத குறையாக அதிர்ந்து நின்றான். அங்கே கைகளை மார்புக்கு குறுக்கே காட்டியபடி நின்று இருந்த ஜனனியோ அவனை உறுத்து விழித்து " சட்டுன்னு எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்ல முடில.தானே கவின் உங்களுக்கு " என்று கேட்க அவனோ " போச்சுடா .. " என்று நினைத்தவன் மேலும் " அத தான் சொல்ல.வந்தேன் " என்று சொல்ல அவளோ " என் கிட்ட பேசாதீங்க " என்று கலங்கிய கண்களுடன் சொல்லி விட்டு விறு விறுவென செல்ல அவனுக்கோ மயக்கம் வராத குறை தான். அவள் பின்னே ஓடிச் சென்றவன் அவள் கையை பிடித்து " இதே தப்பு தான் மதி விஷயத்திலயும் பண்ணுன.. என்ன கொஞ்சம் பேச விடு " என்று சொல்ல.அவளோ அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் " மதி பத்தி நான் உங்க கிட்ட சொல்லவே இல்லையே.. அப்போ நடிச்சீங்களா? " என்று கேட்க அவன் விழிகள்.விரிந்து கொள்ள அவளை பற்றி இருந்த கையை சட்டென விட்டான்..
 

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 49

அவனோ இடுப்பில் கை வச்சு "ஆமாடி நடிச்சேன் தான், " என்று சொல்ல, அவளோ "எனக்கு உண்மையாவே இருக்க மாட்டிங்களா?" என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிப் போக, அவனோ "இதுக்கு மேல பேசுனா கொன்னுடுவேன்.. முதல் சொல்லுறத கேளு," என்று சொன்னான். அவளோ மேலும் பேச வந்தவளுக்கு அவன் சொல்ல வருவதைக் கேட்டால் தான் என்ன என்று தோன்ற, பேச வந்ததை விழுங்கிக் கொண்டு "சரி சொல்லுங்க" என்று சொன்னாள். அவனோ அவள் விழிகளைப் பார்த்து "உன் கிட்ட நிறைய மன்னிப்பு கேட்கணும் ஜனனி.. எப்படியும் பழசை பேசாதீங்கன்னு நீ சொல்லுவ.. ஆனா எனக்கு மனசு உறுத்திட்டே இருக்கும்.. அது தான் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்னு அப்படி பண்ணுனேன்" என்று சொல்ல, அவளுக்கு கொஞ்சம் மனம் சாந்தி அடைந்தாலும் அர்ச்சனா விடயத்தினை அவள் விடுவதாக இல்லை. அடுத்த கணமே "சரி அத விடலாம். இப்போ ஏன் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லல்ல,?" என்று கேட்க, "தப்பு தாண்டி" என்று சொன்னவன் அவள் முகத்தை அதிரடியாக தாங்கி, கன்னத்தில் முத்தம் பதிக்க அவள் விழிகளோ விரிந்து கொண்டன. அவனோ அவள் காதருகே "ஆபீஸ்ன்னு தான் கன்னத்தில கிஸ் பண்ணுனேன்.. இல்லன்னா" என்று இழுக்க, அவனை முறைத்தபடி அவள் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள் அவள். அவனோ இருவரையும் அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த அர்ச்சனாவிடம் "சாரி அர்ச்சனா, எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட இருக்கு, உனக்கு அதெல்லாம் ஆட்சேபனை இல்லன்னா " என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அவளோ "ச்சை, கல்யாணம் பண்ணுனவன் எனக்கு வேணாம்" என்று சொன்னாள். ஜனனியோ " பேசுற பேச்சைப் பாரு" என்று அவன் இடையில் கிள்ளி விட்டு விறு விறுவென செல்ல, "ஆ" என்று அலறியவன் "கொஞ்சம் நில்லுடி" என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் சென்றான்.

இந்த விஷயம் அங்கு இருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான்.. எல்லாரும் வாயில் கை வைத்து நிற்க, ஜனனியோ தனது அறைக்குள் கோபமாக செல்ல, அவனோ பின்னால் சென்றான். உள்ளே சென்றதும் அவனை திரும்பி பார்த்தவள் "அதென்ன ஆட்சேபனை இல்லன்னா" என்று கேட்க அவனோ "சும்மாடி, தப்பு பண்ணுறவன் பொண்டாட்டி முன்னாலேயே இப்படி பேசுவானா?" என்று கேட்க அவளுக்கு முதல் போல கோபம் வரவில்லை. ஆனாலும் அவனை போலியாக கோபித்துக் கொண்டாள். அவனுக்கு தெரியாத அவள் நிஜமாக கோபம் கொண்டால் எப்படி இருக்கும்? போலியாக கோபம் கொண்டாள் எப்படி இருக்கும் என்று?

அடுத்த கணமே, கதவு மூடி இருப்பதை உறுதி செய்தவன் அவள் இடை பற்றி தன்னுடன் நெருக்க, அவளோ "அப்புறம் என்ன சொன்னீங்க? ஆபீஸ் என்கிறதால தான் கன்னத்துல கொடுத்தீர்களா? அந்த ரெஸ்டூரண்ட்ல கொடுத்தது மறந்து போச்சா? பெரிய உத்தமன் போல சீன் மட்டும்" என்று சொல்ல, அவனோ "இப்போ உனக்கு வேணும்னா சொல்லு கொடுத்துட்டு போறேன்" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அவளோ "ச்சீ நான் அப்படி சொன்னேனா?" என்று கேட்டுக் கொண்டே அவன் மார்பில் கை வைத்து தள்ள முயன்றாள் .

அவனோ அவளை உடும்புப் பிடியாகா பிடித்து இருக்க, அவளோ "கவின் என்னை விடுங்க" என்று ஆரம்பித்தது அவன் இதழ்களுக்குள் தான் முடிந்து இருந்தது. ஆழ்ந்த அழுத்தமான முத்தம் அவள் இதழில் பதித்தவன், ஒற்றை முத்தத்தில் அவள் உயிர்வரை ஊடுருவ அவளோ அவன் சிகை கோதி அவன் முத்தத்துக்கு பதில் வழங்கினாள். திருமணம் செய்து ஒன்பது வருடங்கள் கழித்து இருவரும் ஒருங்கே உருகிக் கரையும் முதல் முத்தம் அது. கசக்குமா என்ன? நீண்ட நேரம் அவள் இதழில் குடி கொண்டவன் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவள் கழுத்தில் முகம் புதைக்க, அவளுக்கோ அலுவலகம் என்று எண்ணம் வர, அவன் மார்பில் கை வைத்து தள்ளி இருந்தாள். அவனோ அவளை மோகப் பார்வை பார்த்துக் கொண்டே "சத்யமா முடியலடி, இன்னும் ரெண்டு வாரம் எப்படி தான் இருக்க போறேனோ?" என்று சொன்னவன் மேலும் "இங்க நின்னா ஏதாவது பண்ணிடுவேன்.. நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேறி போனான். அவளோ அவன் செய்த சாகசத்தில் களைத்து போனவள் இதழ்கள் எரிய ஆரம்பித்தன. அவள் பற்தடம் பட்டு காயம் உண்டாகி இருக்க, அப்படியே சென்று இருக்கையில் அமர்ந்தவளுக்கு வெட்கத்தில் கன்னம் சிவந்து போனது.

அதே சமயம், வெளியே வந்தவனிடம் அவன் நண்பர்கள் "சொல்லவே இல்லையே சார் நீங்க" என்று சொல்ல, அவனோ "சாரா, அவ புருஷனா இருந்தாலும், உங்களுக்கு பிரெண்ட்ஸ் தான்.. ஜாலியா நாம பேசிக்கலாம்" என்று சொல்ல, அங்கிருந்தவனோ "நான் சொன்னதெல்லாம் மறந்திடு மச்சான்" என்று சொல்ல, அவனோ "ஜனனியை பார்த்து ராட்சசின்னு திட்டுனத தானே" என்று கேட்டு வாய் விட்டு சிரிக்க, அவனோ அவன் கையை பிடித்தவன் "இத காலா நினச்சு கேக்கிறேன் மச்சான்" என்று சொல்ல, அவனோ "சரி சொல்ல மாட்டேன்" என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டான்.
 

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 50

அன்று மீட்டிங் ஒழுங்கு செய்யப்பட்டு இருக்க, அவனோ அவளை ஏறிட்டுப் பார்க்காமல் போனையே தான் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளுக்கும் அவனை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் இருந்த ஒரே காரணம் அவன் சிவந்த விழிகளே அவன் உணர்வுகளை எடுத்து உரைத்துக் கொண்டு இருந்தது. மீட்டிங் முடிந்தும் கூட அவனுக்கு இருப்பு கொள்ளவே இல்லை. அன்று மாலை, அலுவலகம் முடிய, காரை எடுத்துக் கொண்டு வந்த ஜனனியின் கார் முன்னே கையை காட்டினான் கவின். அவளோ காரை நிறுத்த, உள்ளே ஏறிக் கொண்டவன் "வண்டி ஸ்டார்ட் வர மாட்டேங்குது, என்னை வீட்ல டிராப் பண்ணு " என்று சொன்னான். அவளோ "எங்க பார்ப்போம்" என்று சொல்ல, அவளை முறைத்தவன் "சொன்னா கேளுடி, நான் ட்ரைவ் பண்ணுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவளை மற்றப்பக்கம் இடம் மாற்றி விட்டவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

அவளோ "சரியான பிராடு" என்று சொல்ல, அவனோ "அப்படியே வச்சுக்கோ" என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்ட ஆரம்பிக்க, அது அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் ஊரெல்லாம் தான் சுற்றி திரிந்தது. அவளோ ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து "கவின், வீட்டுக்கு போற எண்ணமே இல்லையா?" என்று கேட்க, அவனோ காரை ஓட்டிக் கொண்டே "இல்ல" என்று சொன்னான். அவளோ " இருட்டிடுச்சு கவின்" என்று சொல்ல, அவனும் "அது தான் எனக்கு வேணும்" என்று சொல்ல, அவன் என்ன செய்ய போகின்றான் என்று அவளுக்கும் புரியவே இல்லை. அவன் பிரேக் அடித்த இடத்தில் சுற்றி பார்த்தாள் அது யாருமே இல்லாத தனியான ஒரு கடற்கரை ஓரம். உடனே அவள் "இங்க எதுக்கு வந்திருக்கோம்?" என்று கேட்க, அவனோ "இதுக்கு மேல நல்லா நாள் பார்க்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல, ஐ நீட் யூ ஜனனி" என்று சொல்ல, அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிய "இங்கேயா?" என்று கேட்டவளை அவன் ஏன் என்றும் கேட்கவே இல்லை. அவள் முகம் தாங்கி இதழ்களைக் கவ்விக் கொண்டவன், அவளது மறுப்புக்களை எல்லாம் தாண்டி அவளை தன்னுடைமை ஆக்கி விட்ட விலக, அவளோ "என்ன பண்ணி இருக்கீங்க கவின்" என்று செல்லமாக கோபித்தவளுக்கு அவன் முகத்தைக் கூட பார்க்க கூச்சமாக இருந்தது. அவனோ முன் சீட்டில் தாவி ஏறியவன், ஷேர்ட்டை எடுத்து போட்டுக் கொண்டே கண்ணாடியூடு அவனையே முறைத்தவளைப் பார்த்தவன் "இப்படியே இருந்தா மறுபடி பின்னாடி வருவேன்" என்று சொல்ல, "ச்சீ" என்று சொன்னவள் உடைகளை சரி செய்து கொண்டே முன்னால் ஏறி அமர்ந்தாள்.

அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் " நிஜமா செம அழகா இருக்க ஜனனி" என்று சொல்ல, எட்டி அவன் வாயை பொத்தியவன் "ப்ளீஸ் கவின், போகலாம்" என்று வெட்கத்துடன் சொல்ல, அவளோ அவள் கரத்தில் இதழ் குவித்து முத்தமிட்டுக் கொண்டே காரை உயர் வேகத்தில் கிளப்பினான். அவன் வீட்டிற்கு வந்ததும் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு இறங்கிக் கொள்ள, அவளும் வெட்கத்துடன் காரை ஓட்டிக் கொண்டே தனது வீடு நோக்கி சென்றாள்.

கிட்டத்தட்ட தினமும் அவர்களுக்கு இதுவே வாடிக்கையாகி போக, மூன்று வாரங்கள் கழித்து நல்ல நாள் என்று சொல்லி ஜனனியை அழைத்து போக சொல்லி இருந்தார்கள் தாமோதரனும் மனைவியும். அவனும் வீட்டுக்கு மாதவி தர்ஷன் சகிதம் வந்து சேர, அன்று சோர்வாக இருந்த ஜனனியின் முகமோ சற்று படபடப்பாக இருந்தது. கவினுக்கு அவள் முகமே ஏதோ சரி இல்லை என்று எடுத்துக் கூற, தனியே சந்திக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டு இருந்தான். ரம்யாவோ "ஜனனி, ஏன் இவ்ளோ டல் ஆஹ் இருக்க?வீட்டை விட்டு போற சோகமா?" என்று கேட்க, அவளோ "ம்ம்" என்று சொன்னவள் கவினை ஏறிட்டுப் பார்க்க, அவனோ கண்களை வெளியே காட்டி விட்டு முன்னே நடக்க, அவளும் ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு வீட்டின் பின் பக்கம் அவன் பின்னே நடந்து வந்தான். அவள் வந்ததுமே "வீட்டை விட்டு வரோம்னு சோகமா இருக்கியா? பக்கத்தில தானே.. உனக்கு எப்போ தோணுதோ அப்போ அம்மா வீட்ல வந்து இரு" என்று சொல்ல, அவளோ "ஐயோ கவின்.. அதெல்லாம் பிரச்சனையே இல்ல, வேற ஒரு பிரச்சனை, இப்போ தான் கன்பெர்ம் ஆச்சு" என்று சொல்ல, அவனோ "என்னாச்சு?" என்று கேட்டான். அவளோ "ஐ ஆம் ப்ரெக்னன்ட்" என்று சொல்ல, அவனோ அவள் தோள்களைப் பிடித்தவள் "நிஜமாவா?" என்று விழி விரித்துக் கேட்டவன் அவளை இறுக அணைத்துக் கொண்டே "இதுக்கு எதுக்கு மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்க?" என்று கேட்க அவன் மார்பில் கை வைத்து தள்ளி நின்றவள் " ப்ரெக்னன்ட் ஆனது சந்தோசம் தான்.. ஆனா நல்ல நாள் சேரட்டும்னு பிரிச்சு வச்சு இருந்தாங்க.. இத நான் எப்படி வீட்ல சொல்லுவேன்? ஒரே கூச்சமா இருக்கு" என்று சொல்ல, அவன் விழிகள் இப்போது விரிய, "அட, அப்படி ஒண்ணு இருக்குல்ல" என்று சொன்னான். அவளோ "காலையில இருந்தே ஒரே தலை சுத்துது, சொல்லாம அப்படியே இருக்கேன்" என்று சொல்ல, அவனோ அவள் தோள் பற்றி தன்னில் சாய்த்துக் கொண்டவன் "சரி வீட்டுக்கு வா, நான் பார்த்துகிறேன்.. இத மறைச்சு ஒண்ணும் ஆக போறது இல்ல.. ப்ரெக்னன்ட் ஆன விஷயத்தை சொல்லிடலாம்" என்று சொன்னான். அப்போது அவளை தேடி வந்த ஷாயினியோ "ஆமா யார் இப்போ ப்ரெக்னன்ட்?" என்று கேட்க, கவினோ "உங்க அக்கா தான்" என்று சொல்ல, அவளோ வாயில் கை வைத்தவள் "நீங்க தான் பிரிஞ்சு இருக்கீங்களே, அப்புறம் எப்படி?" என்று கேட்க கவினுக்கு எங்கேயாவது தலையை முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. ஜனனிக்கோ பூமிக்குள் புதைந்து விடலாமா என்று தோன்ற "இந்த ஆராய்ச்சி உனக்கு ரொம்ப அவசியம் பாரு" என்று சொன்னவள் விறு விறுவென வீட்டுக்குள் செல்ல, கவினும் "இப்போ இந்த ரேடியோ எங்க எங்க அன்னவுன்ஸ் பண்ண போகுதோ?" என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னால் சென்றான்.

அவளோ நேரே ஹாலுக்குள் வந்தவள் தர்ஷனிடம் "ஜனனி ப்ரெக்னன்ட் ஆஹ்ம்" என்று சொல்ல, அது பக்கத்தில் இருந்த மாதவி காதில் விழ, "என்னது ஜனனி மாசமா இருக்காளா?" என்று சத்தமாக கேட்டு விட அது எல்லோருடைய காதிலும் விழ, ஒவ்வொருவரும் அதே கேள்வியைக் கேட்க, கவின் அருகே வந்தவள் அவன் பின்னே ஒளிந்து கொண்டு "மானமே போச்சு" என்று சொன்னான். அவனோ "சரி நான் பார்த்துகிறேன் விடு" என்று சொல்ல, "எப்படி?" என்று ஆளாளுக்கு கேள்வி கேட்க குரலை செருமிய தாமோதரன் "அந்த ஆராய்ச்சி எல்லாம் விட்டுட்டு பொண்ணை சந்தோஷமா அனுப்புற வழியை பாருங்க" என்று சொல்லிக் கொண்டார். அதைக் கேட்டதுமே சல சலப்பு அடங்க, கவினுக்கோ நெஞ்சில் பால் வார்த்த உணர்வாக, ஜனனியோ " எல்லாம் உங்களால தான்.. ஒரு மூணு வாரம் சும்மா இருக்க முடியாதா உங்களுக்கு" என்று சிணுங்க, அவனோ "ஆமா முடியாது, இனியும் முடியாது, அதுக்கென்ன இப்போ?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, அவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள் அவள்.

ரியாவோ விடயம் கேள்விப்பட்டு, "எனக்கு தம்பி பாப்பா வர போகுதே" என்று குதிக்க, எல்லாரும் சத்தமாக சிரித்துக் கொண்டார்கள்.

அதுவரை புரிதல் இல்லாமல் இருந்த அவர்கள் காதல் இன்று முதல் புரிதலுடன்..

முற்றும்
 

pommu

Administrator
Staff member
எபிலாக்

சில மாதங்கள் கழித்து,

அன்று ஜனனிக்கு வளைகாப்பு, அவளோ பட்டுப் புடவையில் தேவதை போல ஜொலிக்க, அவள் அருகே கண்ணாடி முன்னே நின்றவன் முகமோ கோபத்தின் உச்சத்தில் இருந்தது. ஜனனிக்கும் அதற்கான காரணம் தெரியும். ஆனாலும் கேட்டால் திட்டு விழும் என்று அமைதியாக கழுத்தில் மாலையை மாட்ட முயன்றாள். அவனோ "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே மாலையை பிடித்து கொக்கியை மாட்டி விட்டு நகர போக, அவன் கையை பிடித்தவள் "நிஜமாவே சாப்பிட முடில கவின்" என்று சொன்னாள். அவனோ "எல்லாரும் ப்ரெக்னன்ட் ஆனா கொஞ்சம் உடம்பு வைப்பாங்க.. நீ இருந்ததை விட எப்படி தேய்ஞ்சு போய் இருக்கேன்னு பாரு, உன்னால எனக்கும் சேர்த்து திட்டுறாங்க" என்று ஆதங்கமாக சொல்ல, அவளோ "சாரி" என்று சற்று கலக்கமாக கூறியவளுக்கு சட்டென்று கண்களில் நீர் நிறைந்து கொண்டது. அவள் அழுவது அவனுக்கு என்னவோ போல இருக்க, அவளை நெருங்கி கைகளால் கண்ணீரை துடைத்தவன் "இப்போ எதுக்கு அழுற ? போட்ட காஜல் எல்லாம் கரைஞ்சு ஓடுது பாரு" என்று சொல்ல, அவளோ அவனை போலியாக முறைத்தவள் "அப்போ நான் அழுறது பிரச்சனை இல்ல, காஜல் கரையுறது தான் பிரச்சனையா?" என்று கேட்க " ரெண்டும் பிரச்சனை தான்.. அடுத்த முறை வாட்டர் ப்ரூப் வாங்கணும்" என்று சொன்னான். அவளோ "அச்சோ " என்று நெற்றியில் வெளிப்படையாக அடித்தவள் அங்கிருந்த லிப்ஸ்டிக்கை எடுக்க, அவனோ "கொஞ்சம் வெய்ட் பண்ணு, எனனோட வேலை மீதி இருக்கே" என்று சொல்லிக் கொண்டே அவள் இதழில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

ஆயத்தமாகி முடிய வெளியே வந்த கவினோ "நம்ம குடும்பத்துல லைன்ல ரிலீஸ் நடக்கும் போல" என்று சொல்லிக் கொண்டான். ஆம் ஜனனிக்கு ஒன்பது மாதம் என்றால், ஷாயினிக்கு ஏழு மாதமும் ரம்யாவுக்கு மூன்று மாதமும் இருக்க, ரம்யாவோ " மூத்த பொண்ணுக்கு ரெண்டு வயசு முடிய முதல் அடுத்த பையன் கன்சீவ் ஆனேன், இப்போ அவனுக்கு ஒரு வயசே முடியல, திரும்பவுமா? எல்லாரும் உன் புருஷன் வேலைக்கு போறது இல்லையான்னு கேக்கிறாங்க" என்று அருகே வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்ற மாதவன் காதில் சொல்ல, அவனோ இதழ் பிரித்து அழகாக சிரித்தவன் "என் புருஷனுக்கு இது தான் வேலைன்னு சொல்லிடு" என்று சொன்னான். அவளோ "உங்களுக்கென்ன எனக்கு தான் வெட்கமாவே இருக்கு" என்று சொன்னவள் "அடுத்த குழந்தைக்காவது கொஞ்சம் கேப் விடலாம்" என்று சொல்ல, அவனோ "ம்ம் ட்ரை மை பெஸ்ட்" என்று சொன்னான். உடனே தர்ஷன் "அக்கா என்ன ஒரே புலம்பலா?" என்று கேட்க அவனோ "அடுத்த குழந்தைக்கு கேப் விடணுமாம்" என்று சொன்னான் மாதவன். தர்ஷனோ "அப்போ இன்னும் ரிலீஸ் பண்ணிட்டே இருக்கிற ஐடியா இருக்கா?" என்று கேட்க முகத்தை மூடிக் கொண்டது என்னவோ ரம்யா தான்.

இதே சமயம், ஒரு இருக்கையில் ஜனனி இருக்க, அடுத்த இருக்கையில் ஷாயினி இருக்க இருவருக்கும் ஒருங்கே வளைகாப்பு நடக்க, அந்த இடமே கோலாகலம் ஆனது.
 

pommu

Administrator
Staff member
சில வருடங்கள் கழித்து,

காலையில் எழுந்த ஜனனியோ " கவின்" என்று அழைக்க, அவனோ "இருடி வரேன்" என்று சொல்லிக் கொண்டே ரெண்டாவது பையனுக்கு ஆய் கழுவி குளிக்க வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தான்.. ஜனனியோ புடவையை அணிந்து கொண்டே "வர போறது உங்க பிரென்ட் தான்.. லேட் ஆயிடுச்சுல்ல, சீக்கிரம்" என்று சொல்லிக் கொண்டே மகளையும் ஆயத்தமாக்க, அவனோ "ம்ம் இந்த முறை எனக்கு டிவோர்ஸ் எடுத்து கொடுத்துட்டு கிளம்பிடுவா " என்று சொல்ல, அவனுக்கு செல்லமாக சிரித்தபடி தட்டிக் கொண்டாள்.

அனைவரும் ஆயத்தமாகி காரை எடுத்துக் கொண்டு எயார் போர்டுக்கு செல்ல, மதி வந்து இறங்கும் பிளைட்டும் அப்போது தான் லேண்ட் ஆகி இருந்தது. ரியாவோ கவினின் கையைப் பிடித்துக் கொண்டு இருக்க, மகனைத் தூக்கியபடி ஜனனி நின்று இருக்க குட்டி காற்சட்டையும் டீ ஷேர்ட்டும் அணிந்து வந்த மதியோ "ஹாய் கவின்" என்று சொல்லிக் கொண்டே வந்தவள் அவனை ஓடி வந்து கட்டி அணைக்க, இப்போது விரிந்து கொண்டது என்னவோ அவன் விழிகள் தான். "க்கும்" என்று குரலை செருமிக் கொண்டே அவளை விலக்கி நிறுத்தியவன் "ஹாய் மதி எப்படி இருக்க?" என்று கேட்டுக் கொண்டே பக்கவாட்டாக ஜனனியைப் பார்க்க அவளோ அவனை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவள் "ஹாய் மதி" என்று மதியிடம் சொன்னாள். அவளோ "ஹாய் ஹாய்" என்று சொல்லிக் கொண்டே ஜனனியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டே ஜனனியை அணைத்துக் கொண்டாள். அவளும் "எப்படி ஜேர்னி?" என்று கேட்க அவளோ "செம போர்" என்று இதழ் பிதுக்கி சொன்னவள் "ரியா குட்டிக்கு ஒன்னு கொண்டு வந்து இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே அருகே இருந்த பையை பிரித்து தேட ஆரம்பிக்க, ஜனனி அருகே வந்த கவின் "பிரென்ட் தாண்டி" என்றான். அவளோ "நான் ஒண்ணும் கேட்கலையே" என்று குழந்தையை அணைத்துக் கொள்ள, அவனோ "அப்போ எதுக்கு அப்படி பார்த்த?" என்று கேட்டான். அவளோ "எப்படி பார்த்தேன்?" என்று கேட்க அவனோ "அப்படி முறைச்சு பார்த்த?" என்று கேட்டான். அவளோ "நான் சாதாரணமா தான் பார்த்தேன், உங்க மனசுல ஏதோ இருக்கு அது தான் அப்படி தெரியுது" என்று சொல்ல, அவனோ "அடிப்பாவி, உன் கிட்ட கேட்டது ஒரு தப்பா?" என்று கேட்டான். அவளோ அடைக்கப்பட்ட புன்னகையுடன் " சரி சரி பாவமா இருக்கீங்க.. மன்னிச்சுட்டேன்," என்று சொன்னவன் மதியிடம் "ஐஸ்க்ரீன் வேணும்னா என் கிட்ட கேளும்மா, விதம் விதமா வேற வேற பிளேவர்ல செஞ்சு கொடுக்கிறேன்.. இல்லன்னா வாங்கியாவது கொடுக்கிறேன்" என்று சொல்ல, அவளோ "ஓகே எனக்கு காபி பிளேவர் ரொம்ப பிடிக்கும்" என்று வெகுளி தனமாக சொல்ல, வாய் விட்டு கவின் சிரித்தான். ஜனனிக்கும் சிரிப்பு தான், புன்னகையுடன் கவினைப் பார்த்தவன், ஒற்றைக் கையால் அவன் கன்னம் தடவி, "இங்க எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு, யாரவது இங்க ஐஸ்க்ரீம் சாப்பிட்டா கொன்னுடுவேன்" என்று சொல்ல, அவனோ முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
 

pommu

Administrator
Staff member
Status
Not open for further replies.
Top