ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 8

அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிய...இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டிருந்த வர்ஷினி,அதிகாலையில் தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றாள்.

அப்போது தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருக்க "வர்ஷினி... வர்ஷினி எழுந்திரு,மணி ஆகிடுச்சு பாரு அப்பறம் உங்க பாட்டி திட்ட ஆரம்பிச்சிடுவாங்க" என மகளை சாந்தி எழுப்ப,

மிகவும் கஷ்டப்பட்டு கண்ணை திறந்த வர்ஷினிக்கு கண்கள் இரண்டும் நெருப்பாய் எரிந்தது. முகம் வீங்கி கண்கள் சிவந்து பார்க்கவே பாவமாக இருக்கும் மகளை பார்க்க பார்க்க பெற்ற வயிறு துடித்தது சாந்திக்கு.

மகளின் மனம் அறிந்த பின்னும் கணவனின் இந்த ஏற்பாடுகள் மனதுக்கு மிகவும் வலியை கொடுக்க...அதனை தடுக்க முடியாமல் இருக்கும் தன் நிலையை தானே வெறுத்தார்.

அவளும் தன் அன்னையை பரிதாபமாக பார்க்க...இருவருக்கும் நேற்று இரவு கடைசியாக சண்முகசுந்தரம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.

"இந்த கல்யாணம் நடந்தே ஆகனும் அதையும் மீறி நீங்க யாராவது இதை தடுக்க முயற்சி பண்ணீங்க... அப்பறம் என்னோட வேற முகத்தை தான் பார்க்க நேரிடும்".

"அப்படி உன் படிப்புக்காக இந்த கல்யாணத்தை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தினா கூட... அதுக்கப்புறமும் உன்னால படிக்க முடியாது.நான் அதுக்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்" என உறுதியான குரலில் சொல்லிவிட்டு சென்றவரை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

அனைத்தையும் நினைத்து பெருமூச்சை விட்ட சாந்தி மகளின் தலையை கோதியபடி "போய் குளிச்சிட்டு வாடா...இன்னும் கொஞ்சநேரத்தில் உங்க அத்தை வீட்டிலிருந்து வந்துடுவாங்க. அப்போ நீ தயாரா இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்" என மகளுக்கு எடுத்து சொல்ல…

அவளும் கீ கொடுத்த பொம்மை போல எழுந்து குளிக்க சென்றாள்.

அந்த அழகான அரக்கு வண்ண பட்டு புடவையை மகளுக்கு அழகாக கட்டிவிட்டார் சாந்தி. அவளின் வெளுத்த நிறத்திற்கு அந்த புடவை மேலும் அழகுக்கு அழகு சேர்த்தது.

பள்ளி சீருடையில் சிறிய பெண் போல் இருந்த வர்ஷினியா இது என சந்தேகப்படும் அளவுக்கு...புடவை கட்டியவுடன் முகத்தில் வயதிற்கே உண்டான பக்குவம் வந்தது போல் இருந்தது சாந்தியின் கண்ணுக்கு.

கண்ணாடி எதிரில் அமர்ந்திருந்தாள் தான் ஆனால் அவளின் கவனம் முழுவதும் அங்கு இல்லை என்பது முகத்தை பார்த்தாலே தெரிந்தது.

அதிகமான அலங்காரம் எதுவும் இல்லாமலேயே தேவதை போல் இருந்த மகளை பார்க்க…அவளின் உணர்ச்சியற்ற தன்மையும் புன்னகையை தொலைத்த முகமும் அவள் மனதை படம்பிடித்து காட்டியது.இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியாதே…

மகளை ரெடி செய்து முடித்தவர் வந்தவர்களை கவனிக்க சென்றுவிட...அங்கு அறையில் இருந்தது என்னவோ . வர்ஷினியும் தர்ஷினியும் தான்.

தன் அக்காவின் நேற்றைய அழுகையே சொல்லியது அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்று நடக்கிறது என்று...அதனால் அவளும் சோகமாகவே வர்ஷினி அருகே அவளை ஒட்டிக்கொண்டே திரிந்தாள்.

நேரம் செல்ல அவளின் அத்தை குடும்பமும் வந்து விட்டனர். வர்ஷினிக்கு அவளின் அத்தை குடும்பத்தை சுத்தமாக பிடிக்காது.

சிறுவயதில் இருந்த போதே...தன் அன்னையை அனைவரும் மரியாதை இல்லாமல் நடத்துவதையும் வார்த்தைகளால் வதைப்பதையும் பார்த்து பார்த்து வளர்ந்ததால் அவளுக்கு தந்தை வழி சொந்தம் யாரையும் பிடிக்கவே பிடிக்காது.

அதுவும் இப்போதாவது சாந்தி தன் துக்கத்தை வெளியே சொல்லாமல் மறைத்துக் கொள்ளுபவர்,அப்போது அனைவரும் இல்லாத நேரத்தில் மகள்களை அணைத்துக்கொண்டு கதறுவார்.

அதனை எல்லாம் பார்த்து வளர்ந்தால் என்னவோ அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசமட்டாள் வர்ஷினி. அக்காவை பார்த்தே அனைத்தையும் செய்யும் தர்ஷினி கூட அவர்களிடம் பேசமாட்டாள்.

இங்கு இப்படியிருக்க...அங்கு காலையில் மதி எழும்போதே வீட்டில் உள்ள அனைவர் முகமும் ஏதோ ஒரு கவலையில் இருந்ததை கண்டுக்கொண்டவன் தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தான்.

"என்ன தாத்தா எல்லாரும் ஒருமாதிரி இருக்கீங்க, என்ன விஷயம் ஏதாவது பிரச்சனையா?.." என கேட்க,

அவரோ அவனை நிமிர்ந்து பார்த்து விரக்தியாக சிரித்தவர் நடந்ததை சொல்ல...அதனை முழுதாக உள்வாங்கும் முன் கதிரிடம் இருந்து அழைப்பு வந்தது.

மொபைலை எடுத்து ஹலோ என சொல்லும் முன் "டேய் எங்கடா இருக்க, அதுதான் அந்த ஸ்கூல் பொண்ணு,என பெயர் தெரியாமல் தடுமாறி 'ஆங்... உன் வாயாடிக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தமாம் டா.உனக்கு தெரியுமா தெரியாதா" என்க….

சுற்றி தனது மொத்த குடும்பமும் இருக்க,ஆல்ரெடி அவங்க இருக்குற வருத்தத்தில் தானும் அதனை அதிகப்படுத்த விரும்பாமல்….அவர்கள் முன் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தவன்,அவர்களிடமிருந்து சற்று தள்ளிவந்து "சீக்கிரம் கிளம்பி வாடா எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்" என்றவன் ஃபோனை அணைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

வீட்டில் அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக இருக்க….அவர்கள் பிரச்சனையில் தனக்கு எந்த வேலையும் இல்லை என நினைத்தவன் வேலைக்கு கிளம்பினான்.

ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் தோளில் கைவைத்து அவனை கலைத்தவன்…"டேய் என்னடா இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.அவளை நீ காதலிக்கிற தானே, அப்போ ஏதாவது பண்ணுடா" என கதிர் சொல்ல,

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் "யாருடா மாப்பிள்ளை" என கேட்க..

"யாரோ அவங்க அத்தை பையனாம் பேரு கூட என்னவோ சொன்னாங்க" என சொல்லும் போதே...

"சந்திரன்" என மதியே பதில் சொன்னான்.

"டேய் அப்போ உனக்கு அவங்க யாருன்னு தெரியுமா?.." என்ற கதிருக்கு

"ம்ம்... நல்லாவே தெரியும்.மறக்க கூடிய முகமா அது" என பல்லை கடித்தான் மதி.

"எல்லாம் தெரிஞ்சும் அப்பறம் எதுக்கு ஒன்னும் பண்ணாம இருக்க...போய் நிச்சயத்தை நிறுத்துற வழியை பாரு" என்க…

அவனோ அசால்ட்டாக "நான் எதுக்கு அதை நிறுத்தனும்.அதெல்லாம் நல்லபடியா நடக்கும்,நடக்கணும்" என அழுத்தமாக சொல்ல,

அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கதிருக்கு தான் இப்போது தலையை வலிப்பது போல் இருந்தது. 'ஒருவேளை அதிர்ச்சியில் பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்குமோ' என நினைத்தவன் "என்னடா உலர்ற,அப்போ உனக்கு எந்த வருத்தமும் இல்லையா" என்க..

"கண்டிப்பா இல்ல...சொல்ல போனால் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என சிரித்தவன் அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

கதிரோ "உன்கிட்ட இருந்து இந்த பதிலை சத்தியமா நான் எதிர்ப்பார்க்கலை டா. உனக்கு கூட லவ் வெறும் டைம் பாஸ் தான் இல்ல. அது தெரியாமல் நான் தான் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துட்டேன் போல" என சொல்லியவன் கோபத்தோடு அறையை விட்டு வெளியே வந்தான்.

வெகுநேரமாக எதையோ யோசித்து,ஒரு முடிவோடு நிமிர்ந்தவன், அதன்பின் எதை பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையை தொடர்ந்தான்.

வீடு மொத்தமும் சொந்தங்கள் நிறைந்திருக்க…வர்ஷினியின் அத்தை அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருக்கு எப்போதும் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் வர்ஷினியை பிடிக்காது தான் ஆனால் வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதித்தார்.

எல்லாம் இந்த சந்திரனால் வந்தது என மகனை மனதுக்குள்ளேயே திட்டி தீர்த்தார். அவருக்கு மகன் சொன்னது நினைவு வந்தது.

"அம்மா நான் வர்ஷினியை காதலிக்கிறேன்" என தீடீரென்று சொல்ல…அவன் பெற்றோர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவனுக்குமே அவளை பிடிக்காது.சரியான திமிர் பிடித்தவள் என அடிக்கடி சொல்லுவான்.அப்படிப்பட்டவன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தால் ஆச்சரியப் படாமல் என்ன செய்வார்கள்.

"என்னடா இப்படி சட்டுன்னு வந்து சொல்ற" என வர்ஷினி யின் அத்தை கேட்க…

அவனோ "அதெல்லாம் அப்படி தாம்மா. அவளை ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் கோயில் திருவிழால பார்த்தேன்,பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுச்சு" என்றான்.

"அவ இப்போதான் டா ஸ்கூல் படிகிறா, இப்போ போய் நாம பொண்ணு கேட்டாலும் கொடுப்பாங்களான்னு தெரியலையே" என சந்தேகமாக சொல்ல…

"அதெல்லாம் தருவாங்கம்மா. நம்ம வீட்டுக்கு வந்து வீட்டுவேலை செய்றதுக்கு எதுக்கு படிப்பு. இப்பவே இவ்வளவு திமிரா இருக்கா, இன்னும் படிச்சா நம்மளை சுத்தமா மதிக்க மாட்டாள்".

"அதனால படிச்சது போதும்ன்னு உங்க அண்ணன் கிட்ட கேளுங்க.உங்க அண்ணனுக்கும் ஆம்பளை வாரிசு இல்லை, அதனால பாதி சொத்தும் நமக்கு தான் கிடைக்கும்" என சொல்லிக்கொண்டே மேலும் தொடார்ந்தவனாக

"ஆல்ரெடி எனக்கு என்னோட பிசினஸில் கொஞ்சம் பணம் நெருக்கடி,நம்மளால அவ்ளோ பணம் எல்லாம் புரட்ட முடியாது. அதுவே உங்க அண்ணன் என்றால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.அதான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்போ வேணாலும் பணம் கிடைக்கும். பக்கத்திலேயே பணம் காய்க்கும் மரத்தை விட்டுட்டு நாம எதுக்கு பணத்துக்கு அலையனும்" என என்ன சொன்னால் தன் அன்னை வழிக்கு வருவார் என சரியாக குறிப்பார்த்து தாக்க...அவரும் உடனடியாக ஒத்துக்கொண்டார்

அனைத்தையும் நினைத்து பார்த்தவர்,இவளோட திமிரை என் வீட்டுக்கு மருமகாளாய் வரும் போது குறைக்கிற விதத்தில் குறைக்கிறேன் என எண்ணியபடி அருகில் சென்றார்.

அவளோ வந்தவரை பார்த்து மாரியாதைக்கு கூட வாங்க என சொல்லாமல் அதே திமிரோடு கண்ணாடியை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

"ஏன் இன்னும் உங்க அம்மா உனக்கு மரியாதை என்றால் என்னன்னு சொல்லி தரலியா" என கத்த…

அவரை நிமிர்ந்து பார்த்த வர்ஷினி "ஏன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி தர போறீங்களா என்ன?..உங்களுக்கு அது நிறைய இருக்கோ" என நக்கலாக கேட்டாள்.

"ஏய் என்னடி ஓவரா பேசுற. இனிமே என்கிட்ட இப்படி பேசி பாரு பேசுற வாயை கிழிக்கிறேன். இனி நான் உனக்கு அத்தை மட்டுமில்ல உன் மாமியாரும் கூட... அதனால மரியாதை கொடுத்து பழகு" என திட்டியவரை கண்டுகொள்ளாமல்

"சின்னக்குட்டி அந்த கண் மையை எடுடி" என கேட்டு வாங்கியவள்,கண்ணுக்கு அழகாக மையை தீட்டிக்கொண்டே …'இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்' என நினைத்தபடி கோபமாக வெளியே செல்லும் தன் அத்தையை பார்த்திருந்தாள்.

சற்றுநேரத்தில் விழா இனிதே தொடங்கியது.அவளை சபைக்கு அழைத்து வரும்படி சொல்ல...அவளும் அழைத்து வரப்பட்டாள்.

சபைக்கு பொதுவாக மரியாதையை செலுத்தியவள்,அங்குள்ள கம்பளத்தில் அமர்ந்தாள்.அடுத்தடுத்து நிச்சயப்பத்திரம் வாசிக்க பட...இரு வீட்டாரும் தாம்பூல தட்டை மாற்றி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என உறுதி செய்தனர்.

அனைத்திலும் வெறும் ஜடம் போல் பங்கேற்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.

அதன் பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்க… நாட்கள் நெருங்க நெருங்க வர்ஷினியின் அழுகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் இடையில் விடுமுறை முடிந்து,பள்ளியும் தொடங்கி விட்டது.

தர்ஷினி தான் தன் அக்கா இல்லாமல் அழுது கொண்டே பள்ளிக்கு சென்று வந்தாள்.

"ஓய் சின்னக்குட்டி... அக்கா வரலைன்னு ஃபீல் பண்றீயா. அதான் நாங்க இருக்கோமே அப்பறம் என்ன" என அவளின் கவலை நிறைந்த முகத்தை பார்த்து நண்பர்கள் கேள்வி கேட்க…

அவளோ "நான் ஒன்னும் அதுக்கு ஃபீல் பண்ணல.அக்கா தினமும் அழுதுகிட்டே இருக்கு தெரியுமா?..அதுக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலையாம், அதான் என்ன பண்றதுன்னு தெரியலை" என கைகளை விரித்து சொல்ல

"உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே" என சொல்லும் நண்பர்களை பார்த்து…

"அப்படி சொன்னதுக்கு தான் அக்காவை போட்டு அடிச்சிட்டாரு அப்பா' என அழுதுகொண்டே...நீங்களாவது ஏதாவது ஐடியா சொல்லுங்களேன் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு" என அந்த வாண்டுகளிடம் இந்த வாண்டு ஐடியா கேட்டு நின்றது.

அவர்களும் ஏதோ பெரிய மனிதர்கள் போல் யோசித்தவர்களுக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை. அப்போது சட்டென்று ரமேஷ் "டேய் ஒரு சூப்பர் ஐடியாடா… நாம ஏன் மதி அண்ணாகிட்ட சொல்ல கூடாது. அவரு போலீஸ் தான எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க" என சொல்ல,

தர்ஷினிக்கு ஒன்றும் புரியவில்லை."நீங்க யாரை சொல்றீங்க?.. அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திடுவாங்களா" என கேட்க

"ஆமாம்" என சொன்னவர்கள் இன்னைக்கு சாய்ந்திரம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு போகலாம்" என்றான் ரமேஷ்.

"அய்யய்யோ! நான் வரமாட்டேன், எங்க அப்பாக்கு தெரிஞ்சா அடிப்பாரு" என பயத்தோடு சொல்ல..

"இங்க பார் அதெல்லாம் நாங்க யாருக்கும் தெரியாமல் உன்னை குறுக்கு வழியில அழைச்சிட்டு போறோம்" என சொல்ல,அவளும் அரை மனதோடு சரி என்றாள்.

மாலை பள்ளி முடிந்தவுடன் மூவரும் கிளம்பிவிட...முதன்முறை தன் அக்காவுக்கு தெரியாமல் ஒரு விஷயம் செய்ய போகிறாள்,அதுவும் அவளின் நலனுக்காக.

அந்த பெரிய வீட்டை பார்த்ததும் "இவளோ பெரிய வீடா" என தர்ஷினி வாயை பிளக்க…

அந்த இருவரும் "நீ என்னன்னு நினைச்ச மதி அண்ணா வீட்டை பத்தி,உங்களை விட செம்ம பணக்காரர்" என விளக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தனர்.

என்றும் இல்லாமல் இன்று மதி வீட்டுக்கு சீக்கிரத்தில் வந்துவிட...அனைவரோடு பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.

உள்ளே நுழைந்த ரமேஷை முதலில் பார்த்த மதி…"டேய் என்னடா இந்த பக்கம்" என கேட்க,அப்போது தான் அவனின் பின்னால் வந்த சதிஷையும் அவனை தொடர்ந்து கண்களில் மிரட்சியோடு தயங்கியபடி உள்ளே வந்த தர்ஷினியையும் பார்த்தான்.

இந்த வாண்டு எதுக்காக வந்திருக்கு என நினைத்து கொண்டே நிமிர...மொத்த குடும்பமும் தர்ஷினியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அவளோ பயத்தில் தன் நண்பர்கள் பின்னால் தன்னை மறைத்தபடி நின்றிருந்தாள்.தன் தாய், அக்கா அப்பறம் பள்ளி நண்பர்கள் தவிர வேறு யாரோடும் இதுவரை பேசி பழகிடாதவள்,அத்தனை நபரை ஒரே வீட்டில் பார்த்ததிலேயே பயம் வர,அதை அதிகப்படுத்தும் விதமாக அனைவரும் அவளையே பார்ப்பது இன்னும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

"டேய் என்னடா வந்ததில் இருந்து பேசாம இருக்கீங்க?.. என்ன விஷயம்" என மதி பேச்சை தொடங்க,

"உங்களை தான் அண்ணா பார்க்க வந்தோம்" என சொல்லிய சதீஷ், ரமேஷ் இருவருமே திரும்பி தர்ஷினியை பார்த்து சொல்லு என சைகை செய்ய, அவளோ இல்லை என்பதாய் வேகமாக தலையாட்டினாள்.

"நீயே சொல்லு நான் சொல்ல மாட்டேன்" என பயத்தோடு மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.

மதிக்கு புரிந்தது அவளின் தயக்கமும் பயமும். நிமிர்ந்து தன் குடும்பத்தை பார்த்து "இப்படி எல்லாரும் சுத்தி நின்னுட்டு இருந்து சொல்ல சொன்னா சின்ன பொண்ணு என்ன சொல்லும். எல்லோரும் அவங்கவங்க வேலையை பாருங்க, இதை நான் பார்த்துக்கிறேன்" என்றவன் மூவரையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்.

உள்ளே நுழைந்தவுடன் அவளின் நண்பர்கள் இருவரும் சென்று அங்குள்ள மெத்தையில் அமர்ந்துவிட...மதியும் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

தர்ஷினி தயங்கியபடி அப்படியே நிற்க.. தன் அருகில் உள்ள நாற்காலியை இழுத்து தனக்கு எதிரில் போட்டவன் கைகாட்டி அமர சொல்ல,அவளோ தலையாட்டி மறுத்துவிட்டாள்.

"இப்படி வந்து உட்காரு, அப்போ தான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்லியபடி...அவளை கைப்பிடித்து அமரவைத்தவன், சொல்லு "இப்போ எதுக்கு என்ன பார்க்க வந்த" என்க…

" உங்களையா... அப்போ நீங்க தான் போலீசா இருக்கீங்களா?.." என அவன் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டாள் தர்ஷினி.

அவள் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கியவன் "ஆமா.. ஏன் என்னை பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையா" என இவனும் கேட்க

' இல்லை ' என தலையாட்டி "நீங்க தான் போலீஸ் யூனிஃபார்மே போடலையே" என சொல்ல…

அவனோ அவளை பொய்யாக முறைத்துக்கொண்டே "ஓ... யூனிஃபார்ம் போட்டாதான் போலீஸ்ன்னு ஒத்துப்பியா?...அங்க பாருங்க மேடம்" என சுவரில் இருந்த போட்டோவை காட்ட,அதில் காக்கி சட்டையில் கம்பீரமாக காட்சியளித்தான் மதியழகன்.

"இப்போ நம்புறீங்களா மேடம்" என மெல்லிய சிரிப்போடு கேட்க அவளிடமிருந்து "ம்ம்" என்ற பதில் மட்டும் வந்தது.

அப்போது கதவை திறந்துகொண்டு மீனாட்சி கையில் தட்டுடன் உள்ளே வந்தார்.

சிறு சிறு தட்டுகளில் மிக்சர், முறுக்கு ஸ்வீட், என இருக்க, அனைவருக்கும் கொடுத்துவிட்டு தர்ஷினியிடம் வர...அவளோ "எனக்கு வேணாம்.யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு எங்க அக்கா சொல்லிருக்கு" என்றவள் அதனை தொட்டு கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் அதில் இருக்கும் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.

"அதை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போங்கமா" என அன்னையிடம் இருந்து தட்டை வாங்கியவன் "இதை சாப்பிடு அப்போதான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்ல…அவளும் தயங்கியபடி வாங்கி கொண்டாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், "இப்போ சொல்லு" என்றான்.

சட்டென்று "எங்க அக்கா கல்யாணத்தை நிறுத்தனும்" என்றாள்.

ஆல்ரெடி அவள் வந்ததன் நோக்கம் அறிந்தவன் "ஏன் நிறுத்தனும்" என கேட்க,

அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் "எங்க அக்காக்கு பிடிக்கலை அதான்" என்றாள்.

"எங்க அக்கா தினமும் அழுதிட்டே இருக்கு, கல்யாணம் வேணாம்னு அப்பாகிட்ட சொன்னதுக்கு அப்பாவும் அக்காவை அடிச்சிட்டாங்க தெரியுமா?..." என அழ ஆரம்பிக்க... அதை கேட்டு கண்களை மூடிக்கொண்டான்.

சற்று நேரம் விழிமூடி இருந்தவன்,பின்னர் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக...

அவள் அருகே சென்று கண்ணீரை துடைத்தவன், "அதுக்காக தான் பெரிய மனிஷி போல கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுறியா... என்றவன், அப்போ உனக்கு உங்க அக்காவை ரொம்ப பிடிக்குமோ" என கேட்க

அவளோ கைகளை முடியும் மட்டும் அகலமாக விரித்து "இவளோ பிடிக்கும்" என்றாள்.

அந்த சிறு பெண்ணின் பதிலில்,அவனுக்கு அவள்மேல் தனிபாசம் அதிகரிக்க..மெல்ல அவள் தலையை வருடியவன் "சரி இனிமே அழ கூடாது, ஓகே வா. எல்லாம் நல்லதாவே நடக்கும் அதானால சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும் புரியுதா என்றவன், இப்போவே மணி ஆகிடுச்சு...நீ வீட்டுக்கு கிளம்பு,அப்பறம் நீ இங்க வந்ததை யார்கிட்டேயும் சொல்லாத முக்கியமா உங்க அக்காகிட்ட" என சொன்னவன் அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வர மொத்த குடும்பமும் அவனை சுற்றி கொண்டது.

அனைவரிடமும் முழுமையாக சொல்லாமல் மேலோட்டமாக விஷயத்தை சொன்னவன்,தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஏனென்றால் அவர்கள் தூண்டி துருவி கேட்கும் கேள்விக்கு அவனிடம் பதில்லை. அதனால் தான் அனைத்தையும் சொலலாமல் அரைகுறையாக எதையோ சொல்லி சமாளித்தான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 8

அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிய...இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டிருந்த வர்ஷினி,அதிகாலையில் தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றாள்.

அப்போது தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருக்க "வர்ஷினி... வர்ஷினி எழுந்திரு,மணி ஆகிடுச்சு பாரு அப்பறம் உங்க பாட்டி திட்ட ஆரம்பிச்சிடுவாங்க" என மகளை சாந்தி எழுப்ப,

மிகவும் கஷ்டப்பட்டு கண்ணை திறந்த வர்ஷினிக்கு கண்கள் இரண்டும் நெருப்பாய் எரிந்தது. முகம் வீங்கி கண்கள் சிவந்து பார்க்கவே பாவமாக இருக்கும் மகளை பார்க்க பார்க்க பெற்ற வயிறு துடித்தது சாந்திக்கு.

மகளின் மனம் அறிந்த பின்னும் கணவனின் இந்த ஏற்பாடுகள் மனதுக்கு மிகவும் வலியை கொடுக்க...அதனை தடுக்க முடியாமல் இருக்கும் தன் நிலையை தானே வெறுத்தார்.

அவளும் தன் அன்னையை பரிதாபமாக பார்க்க...இருவருக்கும் நேற்று இரவு கடைசியாக சண்முகசுந்தரம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.

"இந்த கல்யாணம் நடந்தே ஆகனும் அதையும் மீறி நீங்க யாராவது இதை தடுக்க முயற்சி பண்ணீங்க... அப்பறம் என்னோட வேற முகத்தை தான் பார்க்க நேரிடும்".

"அப்படி உன் படிப்புக்காக இந்த கல்யாணத்தை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தினா கூட... அதுக்கப்புறமும் உன்னால படிக்க முடியாது.நான் அதுக்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்" என உறுதியான குரலில் சொல்லிவிட்டு சென்றவரை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

அனைத்தையும் நினைத்து பெருமூச்சை விட்ட சாந்தி மகளின் தலையை கோதியபடி "போய் குளிச்சிட்டு வாடா...இன்னும் கொஞ்சநேரத்தில் உங்க அத்தை வீட்டிலிருந்து வந்துடுவாங்க. அப்போ நீ தயாரா இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்" என மகளுக்கு எடுத்து சொல்ல…

அவளும் கீ கொடுத்த பொம்மை போல எழுந்து குளிக்க சென்றாள்.

அந்த அழகான அரக்கு வண்ண பட்டு புடவையை மகளுக்கு அழகாக கட்டிவிட்டார் சாந்தி. அவளின் வெளுத்த நிறத்திற்கு அந்த புடவை மேலும் அழகுக்கு அழகு சேர்த்தது.

பள்ளி சீருடையில் சிறிய பெண் போல் இருந்த வர்ஷினியா இது என சந்தேகப்படும் அளவுக்கு...புடவை கட்டியவுடன் முகத்தில் வயதிற்கே உண்டான பக்குவம் வந்தது போல் இருந்தது சாந்தியின் கண்ணுக்கு.

கண்ணாடி எதிரில் அமர்ந்திருந்தாள் தான் ஆனால் அவளின் கவனம் முழுவதும் அங்கு இல்லை என்பது முகத்தை பார்த்தாலே தெரிந்தது.

அதிகமான அலங்காரம் எதுவும் இல்லாமலேயே தேவதை போல் இருந்த மகளை பார்க்க…அவளின் உணர்ச்சியற்ற தன்மையும் புன்னகையை தொலைத்த முகமும் அவள் மனதை படம்பிடித்து காட்டியது.இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியாதே…

மகளை ரெடி செய்து முடித்தவர் வந்தவர்களை கவனிக்க சென்றுவிட...அங்கு அறையில் இருந்தது என்னவோ . வர்ஷினியும் தர்ஷினியும் தான்.

தன் அக்காவின் நேற்றைய அழுகையே சொல்லியது அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்று நடக்கிறது என்று...அதனால் அவளும் சோகமாகவே வர்ஷினி அருகே அவளை ஒட்டிக்கொண்டே திரிந்தாள்.

நேரம் செல்ல அவளின் அத்தை குடும்பமும் வந்து விட்டனர். வர்ஷினிக்கு அவளின் அத்தை குடும்பத்தை சுத்தமாக பிடிக்காது.

சிறுவயதில் இருந்த போதே...தன் அன்னையை அனைவரும் மரியாதை இல்லாமல் நடத்துவதையும் வார்த்தைகளால் வதைப்பதையும் பார்த்து பார்த்து வளர்ந்ததால் அவளுக்கு தந்தை வழி சொந்தம் யாரையும் பிடிக்கவே பிடிக்காது.

அதுவும் இப்போதாவது சாந்தி தன் துக்கத்தை வெளியே சொல்லாமல் மறைத்துக் கொள்ளுபவர்,அப்போது அனைவரும் இல்லாத நேரத்தில் மகள்களை அணைத்துக்கொண்டு கதறுவார்.

அதனை எல்லாம் பார்த்து வளர்ந்தால் என்னவோ அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசமட்டாள் வர்ஷினி. அக்காவை பார்த்தே அனைத்தையும் செய்யும் தர்ஷினி கூட அவர்களிடம் பேசமாட்டாள்.

இங்கு இப்படியிருக்க...அங்கு காலையில் மதி எழும்போதே வீட்டில் உள்ள அனைவர் முகமும் ஏதோ ஒரு கவலையில் இருந்ததை கண்டுக்கொண்டவன் தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தான்.

"என்ன தாத்தா எல்லாரும் ஒருமாதிரி இருக்கீங்க, என்ன விஷயம் ஏதாவது பிரச்சனையா?.." என கேட்க,

அவரோ அவனை நிமிர்ந்து பார்த்து விரக்தியாக சிரித்தவர் நடந்ததை சொல்ல...அதனை முழுதாக உள்வாங்கும் முன் கதிரிடம் இருந்து அழைப்பு வந்தது.

மொபைலை எடுத்து ஹலோ என சொல்லும் முன் "டேய் எங்கடா இருக்க, அதுதான் அந்த ஸ்கூல் பொண்ணு,என பெயர் தெரியாமல் தடுமாறி 'ஆங்... உன் வாயாடிக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தமாம் டா.உனக்கு தெரியுமா தெரியாதா" என்க….

சுற்றி தனது மொத்த குடும்பமும் இருக்க,ஆல்ரெடி அவங்க இருக்குற வருத்தத்தில் தானும் அதனை அதிகப்படுத்த விரும்பாமல்….அவர்கள் முன் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தவன்,அவர்களிடமிருந்து சற்று தள்ளிவந்து "சீக்கிரம் கிளம்பி வாடா எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்" என்றவன் ஃபோனை அணைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

வீட்டில் அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக இருக்க….அவர்கள் பிரச்சனையில் தனக்கு எந்த வேலையும் இல்லை என நினைத்தவன் வேலைக்கு கிளம்பினான்.

ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் தோளில் கைவைத்து அவனை கலைத்தவன்…"டேய் என்னடா இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.அவளை நீ காதலிக்கிற தானே, அப்போ ஏதாவது பண்ணுடா" என கதிர் சொல்ல,

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் "யாருடா மாப்பிள்ளை" என கேட்க..

"யாரோ அவங்க அத்தை பையனாம் பேரு கூட என்னவோ சொன்னாங்க" என சொல்லும் போதே...

"சந்திரன்" என மதியே பதில் சொன்னான்.

"டேய் அப்போ உனக்கு அவங்க யாருன்னு தெரியுமா?.." என்ற கதிருக்கு

"ம்ம்... நல்லாவே தெரியும்.மறக்க கூடிய முகமா அது" என பல்லை கடித்தான் மதி.

"எல்லாம் தெரிஞ்சும் அப்பறம் எதுக்கு ஒன்னும் பண்ணாம இருக்க...போய் நிச்சயத்தை நிறுத்துற வழியை பாரு" என்க…

அவனோ அசால்ட்டாக "நான் எதுக்கு அதை நிறுத்தனும்.அதெல்லாம் நல்லபடியா நடக்கும்,நடக்கணும்" என அழுத்தமாக சொல்ல,

அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கதிருக்கு தான் இப்போது தலையை வலிப்பது போல் இருந்தது. 'ஒருவேளை அதிர்ச்சியில் பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்குமோ' என நினைத்தவன் "என்னடா உலர்ற,அப்போ உனக்கு எந்த வருத்தமும் இல்லையா" என்க..

"கண்டிப்பா இல்ல...சொல்ல போனால் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என சிரித்தவன் அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

கதிரோ "உன்கிட்ட இருந்து இந்த பதிலை சத்தியமா நான் எதிர்ப்பார்க்கலை டா. உனக்கு கூட லவ் வெறும் டைம் பாஸ் தான் இல்ல. அது தெரியாமல் நான் தான் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துட்டேன் போல" என சொல்லியவன் கோபத்தோடு அறையை விட்டு வெளியே வந்தான்.

வெகுநேரமாக எதையோ யோசித்து,ஒரு முடிவோடு நிமிர்ந்தவன், அதன்பின் எதை பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையை தொடர்ந்தான்.

வீடு மொத்தமும் சொந்தங்கள் நிறைந்திருக்க…வர்ஷினியின் அத்தை அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருக்கு எப்போதும் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் வர்ஷினியை பிடிக்காது தான் ஆனால் வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதித்தார்.

எல்லாம் இந்த சந்திரனால் வந்தது என மகனை மனதுக்குள்ளேயே திட்டி தீர்த்தார். அவருக்கு மகன் சொன்னது நினைவு வந்தது.

"அம்மா நான் வர்ஷினியை காதலிக்கிறேன்" என தீடீரென்று சொல்ல…அவன் பெற்றோர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவனுக்குமே அவளை பிடிக்காது.சரியான திமிர் பிடித்தவள் என அடிக்கடி சொல்லுவான்.அப்படிப்பட்டவன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தால் ஆச்சரியப் படாமல் என்ன செய்வார்கள்.

"என்னடா இப்படி சட்டுன்னு வந்து சொல்ற" என வர்ஷினி யின் அத்தை கேட்க…

அவனோ "அதெல்லாம் அப்படி தாம்மா. அவளை ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் கோயில் திருவிழால பார்த்தேன்,பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுச்சு" என்றான்.

"அவ இப்போதான் டா ஸ்கூல் படிகிறா, இப்போ போய் நாம பொண்ணு கேட்டாலும் கொடுப்பாங்களான்னு தெரியலையே" என சந்தேகமாக சொல்ல…

"அதெல்லாம் தருவாங்கம்மா. நம்ம வீட்டுக்கு வந்து வீட்டுவேலை செய்றதுக்கு எதுக்கு படிப்பு. இப்பவே இவ்வளவு திமிரா இருக்கா, இன்னும் படிச்சா நம்மளை சுத்தமா மதிக்க மாட்டாள்".

"அதனால படிச்சது போதும்ன்னு உங்க அண்ணன் கிட்ட கேளுங்க.உங்க அண்ணனுக்கும் ஆம்பளை வாரிசு இல்லை, அதனால பாதி சொத்தும் நமக்கு தான் கிடைக்கும்" என சொல்லிக்கொண்டே மேலும் தொடார்ந்தவனாக

"ஆல்ரெடி எனக்கு என்னோட பிசினஸில் கொஞ்சம் பணம் நெருக்கடி,நம்மளால அவ்ளோ பணம் எல்லாம் புரட்ட முடியாது. அதுவே உங்க அண்ணன் என்றால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.அதான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்போ வேணாலும் பணம் கிடைக்கும். பக்கத்திலேயே பணம் காய்க்கும் மரத்தை விட்டுட்டு நாம எதுக்கு பணத்துக்கு அலையனும்" என என்ன சொன்னால் தன் அன்னை வழிக்கு வருவார் என சரியாக குறிப்பார்த்து தாக்க...அவரும் உடனடியாக ஒத்துக்கொண்டார்

அனைத்தையும் நினைத்து பார்த்தவர்,இவளோட திமிரை என் வீட்டுக்கு மருமகாளாய் வரும் போது குறைக்கிற விதத்தில் குறைக்கிறேன் என எண்ணியபடி அருகில் சென்றார்.

அவளோ வந்தவரை பார்த்து மாரியாதைக்கு கூட வாங்க என சொல்லாமல் அதே திமிரோடு கண்ணாடியை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

"ஏன் இன்னும் உங்க அம்மா உனக்கு மரியாதை என்றால் என்னன்னு சொல்லி தரலியா" என கத்த…

அவரை நிமிர்ந்து பார்த்த வர்ஷினி "ஏன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி தர போறீங்களா என்ன?..உங்களுக்கு அது நிறைய இருக்கோ" என நக்கலாக கேட்டாள்.

"ஏய் என்னடி ஓவரா பேசுற. இனிமே என்கிட்ட இப்படி பேசி பாரு பேசுற வாயை கிழிக்கிறேன். இனி நான் உனக்கு அத்தை மட்டுமில்ல உன் மாமியாரும் கூட... அதனால மரியாதை கொடுத்து பழகு" என திட்டியவரை கண்டுகொள்ளாமல்

"சின்னக்குட்டி அந்த கண் மையை எடுடி" என கேட்டு வாங்கியவள்,கண்ணுக்கு அழகாக மையை தீட்டிக்கொண்டே …'இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்' என நினைத்தபடி கோபமாக வெளியே செல்லும் தன் அத்தையை பார்த்திருந்தாள்.

சற்றுநேரத்தில் விழா இனிதே தொடங்கியது.அவளை சபைக்கு அழைத்து வரும்படி சொல்ல...அவளும் அழைத்து வரப்பட்டாள்.

சபைக்கு பொதுவாக மரியாதையை செலுத்தியவள்,அங்குள்ள கம்பளத்தில் அமர்ந்தாள்.அடுத்தடுத்து நிச்சயப்பத்திரம் வாசிக்க பட...இரு வீட்டாரும் தாம்பூல தட்டை மாற்றி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என உறுதி செய்தனர்.

அனைத்திலும் வெறும் ஜடம் போல் பங்கேற்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.

அதன் பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்க… நாட்கள் நெருங்க நெருங்க வர்ஷினியின் அழுகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் இடையில் விடுமுறை முடிந்து,பள்ளியும் தொடங்கி விட்டது.

தர்ஷினி தான் தன் அக்கா இல்லாமல் அழுது கொண்டே பள்ளிக்கு சென்று வந்தாள்.

"ஓய் சின்னக்குட்டி... அக்கா வரலைன்னு ஃபீல் பண்றீயா. அதான் நாங்க இருக்கோமே அப்பறம் என்ன" என அவளின் கவலை நிறைந்த முகத்தை பார்த்து நண்பர்கள் கேள்வி கேட்க…

அவளோ "நான் ஒன்னும் அதுக்கு ஃபீல் பண்ணல.அக்கா தினமும் அழுதுகிட்டே இருக்கு தெரியுமா?..அதுக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலையாம், அதான் என்ன பண்றதுன்னு தெரியலை" என கைகளை விரித்து சொல்ல

"உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே" என சொல்லும் நண்பர்களை பார்த்து…

"அப்படி சொன்னதுக்கு தான் அக்காவை போட்டு அடிச்சிட்டாரு அப்பா' என அழுதுகொண்டே...நீங்களாவது ஏதாவது ஐடியா சொல்லுங்களேன் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு" என அந்த வாண்டுகளிடம் இந்த வாண்டு ஐடியா கேட்டு நின்றது.

அவர்களும் ஏதோ பெரிய மனிதர்கள் போல் யோசித்தவர்களுக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை. அப்போது சட்டென்று ரமேஷ் "டேய் ஒரு சூப்பர் ஐடியாடா… நாம ஏன் மதி அண்ணாகிட்ட சொல்ல கூடாது. அவரு போலீஸ் தான எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க" என சொல்ல,

தர்ஷினிக்கு ஒன்றும் புரியவில்லை."நீங்க யாரை சொல்றீங்க?.. அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திடுவாங்களா" என கேட்க

"ஆமாம்" என சொன்னவர்கள் இன்னைக்கு சாய்ந்திரம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு போகலாம்" என்றான் ரமேஷ்.

"அய்யய்யோ! நான் வரமாட்டேன், எங்க அப்பாக்கு தெரிஞ்சா அடிப்பாரு" என பயத்தோடு சொல்ல..

"இங்க பார் அதெல்லாம் நாங்க யாருக்கும் தெரியாமல் உன்னை குறுக்கு வழியில அழைச்சிட்டு போறோம்" என சொல்ல,அவளும் அரை மனதோடு சரி என்றாள்.

மாலை பள்ளி முடிந்தவுடன் மூவரும் கிளம்பிவிட...முதன்முறை தன் அக்காவுக்கு தெரியாமல் ஒரு விஷயம் செய்ய போகிறாள்,அதுவும் அவளின் நலனுக்காக.

அந்த பெரிய வீட்டை பார்த்ததும் "இவளோ பெரிய வீடா" என தர்ஷினி வாயை பிளக்க…

அந்த இருவரும் "நீ என்னன்னு நினைச்ச மதி அண்ணா வீட்டை பத்தி,உங்களை விட செம்ம பணக்காரர்" என விளக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தனர்.

என்றும் இல்லாமல் இன்று மதி வீட்டுக்கு சீக்கிரத்தில் வந்துவிட...அனைவரோடு பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.

உள்ளே நுழைந்த ரமேஷை முதலில் பார்த்த மதி…"டேய் என்னடா இந்த பக்கம்" என கேட்க,அப்போது தான் அவனின் பின்னால் வந்த சதிஷையும் அவனை தொடர்ந்து கண்களில் மிரட்சியோடு தயங்கியபடி உள்ளே வந்த தர்ஷினியையும் பார்த்தான்.

இந்த வாண்டு எதுக்காக வந்திருக்கு என நினைத்து கொண்டே நிமிர...மொத்த குடும்பமும் தர்ஷினியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அவளோ பயத்தில் தன் நண்பர்கள் பின்னால் தன்னை மறைத்தபடி நின்றிருந்தாள்.தன் தாய், அக்கா அப்பறம் பள்ளி நண்பர்கள் தவிர வேறு யாரோடும் இதுவரை பேசி பழகிடாதவள்,அத்தனை நபரை ஒரே வீட்டில் பார்த்ததிலேயே பயம் வர,அதை அதிகப்படுத்தும் விதமாக அனைவரும் அவளையே பார்ப்பது இன்னும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

"டேய் என்னடா வந்ததில் இருந்து பேசாம இருக்கீங்க?.. என்ன விஷயம்" என மதி பேச்சை தொடங்க,

"உங்களை தான் அண்ணா பார்க்க வந்தோம்" என சொல்லிய சதீஷ், ரமேஷ் இருவருமே திரும்பி தர்ஷினியை பார்த்து சொல்லு என சைகை செய்ய, அவளோ இல்லை என்பதாய் வேகமாக தலையாட்டினாள்.

"நீயே சொல்லு நான் சொல்ல மாட்டேன்" என பயத்தோடு மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.

மதிக்கு புரிந்தது அவளின் தயக்கமும் பயமும். நிமிர்ந்து தன் குடும்பத்தை பார்த்து "இப்படி எல்லாரும் சுத்தி நின்னுட்டு இருந்து சொல்ல சொன்னா சின்ன பொண்ணு என்ன சொல்லும். எல்லோரும் அவங்கவங்க வேலையை பாருங்க, இதை நான் பார்த்துக்கிறேன்" என்றவன் மூவரையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்.

உள்ளே நுழைந்தவுடன் அவளின் நண்பர்கள் இருவரும் சென்று அங்குள்ள மெத்தையில் அமர்ந்துவிட...மதியும் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

தர்ஷினி தயங்கியபடி அப்படியே நிற்க.. தன் அருகில் உள்ள நாற்காலியை இழுத்து தனக்கு எதிரில் போட்டவன் கைகாட்டி அமர சொல்ல,அவளோ தலையாட்டி மறுத்துவிட்டாள்.

"இப்படி வந்து உட்காரு, அப்போ தான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்லியபடி...அவளை கைப்பிடித்து அமரவைத்தவன், சொல்லு "இப்போ எதுக்கு என்ன பார்க்க வந்த" என்க…

" உங்களையா... அப்போ நீங்க தான் போலீசா இருக்கீங்களா?.." என அவன் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டாள் தர்ஷினி.

அவள் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கியவன் "ஆமா.. ஏன் என்னை பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையா" என இவனும் கேட்க

' இல்லை ' என தலையாட்டி "நீங்க தான் போலீஸ் யூனிஃபார்மே போடலையே" என சொல்ல…

அவனோ அவளை பொய்யாக முறைத்துக்கொண்டே "ஓ... யூனிஃபார்ம் போட்டாதான் போலீஸ்ன்னு ஒத்துப்பியா?...அங்க பாருங்க மேடம்" என சுவரில் இருந்த போட்டோவை காட்ட,அதில் காக்கி சட்டையில் கம்பீரமாக காட்சியளித்தான் மதியழகன்.

"இப்போ நம்புறீங்களா மேடம்" என மெல்லிய சிரிப்போடு கேட்க அவளிடமிருந்து "ம்ம்" என்ற பதில் மட்டும் வந்தது.

அப்போது கதவை திறந்துகொண்டு மீனாட்சி கையில் தட்டுடன் உள்ளே வந்தார்.

சிறு சிறு தட்டுகளில் மிக்சர், முறுக்கு ஸ்வீட், என இருக்க, அனைவருக்கும் கொடுத்துவிட்டு தர்ஷினியிடம் வர...அவளோ "எனக்கு வேணாம்.யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு எங்க அக்கா சொல்லிருக்கு" என்றவள் அதனை தொட்டு கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் அதில் இருக்கும் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.

"அதை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போங்கமா" என அன்னையிடம் இருந்து தட்டை வாங்கியவன் "இதை சாப்பிடு அப்போதான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்ல…அவளும் தயங்கியபடி வாங்கி கொண்டாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், "இப்போ சொல்லு" என்றான்.

சட்டென்று "எங்க அக்கா கல்யாணத்தை நிறுத்தனும்" என்றாள்.

ஆல்ரெடி அவள் வந்ததன் நோக்கம் அறிந்தவன் "ஏன் நிறுத்தனும்" என கேட்க,

அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் "எங்க அக்காக்கு பிடிக்கலை அதான்" என்றாள்.

"எங்க அக்கா தினமும் அழுதிட்டே இருக்கு, கல்யாணம் வேணாம்னு அப்பாகிட்ட சொன்னதுக்கு அப்பாவும் அக்காவை அடிச்சிட்டாங்க தெரியுமா?..." என அழ ஆரம்பிக்க... அதை கேட்டு கண்களை மூடிக்கொண்டான்.

சற்று நேரம் விழிமூடி இருந்தவன்,பின்னர் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக...

அவள் அருகே சென்று கண்ணீரை துடைத்தவன், "அதுக்காக தான் பெரிய மனிஷி போல கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுறியா... என்றவன், அப்போ உனக்கு உங்க அக்காவை ரொம்ப பிடிக்குமோ" என கேட்க

அவளோ கைகளை முடியும் மட்டும் அகலமாக விரித்து "இவளோ பிடிக்கும்" என்றாள்.

அந்த சிறு பெண்ணின் பதிலில்,அவனுக்கு அவள்மேல் தனிபாசம் அதிகரிக்க..மெல்ல அவள் தலையை வருடியவன் "சரி இனிமே அழ கூடாது, ஓகே வா. எல்லாம் நல்லதாவே நடக்கும் அதானால சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும் புரியுதா என்றவன், இப்போவே மணி ஆகிடுச்சு...நீ வீட்டுக்கு கிளம்பு,அப்பறம் நீ இங்க வந்ததை யார்கிட்டேயும் சொல்லாத முக்கியமா உங்க அக்காகிட்ட" என சொன்னவன் அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வர மொத்த குடும்பமும் அவனை சுற்றி கொண்டது.

அனைவரிடமும் முழுமையாக சொல்லாமல் மேலோட்டமாக விஷயத்தை சொன்னவன்,தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஏனென்றால் அவர்கள் தூண்டி துருவி கேட்கும் கேள்விக்கு அவனிடம் பதில்லை. அதனால் தான் அனைத்தையும் சொலலாமல் அரைகுறையாக எதையோ சொல்லி சமாளித்தான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 9

இதோ விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் இருக்க...எவ்வளவோ முயற்சித்து விட்டாள் திருமணத்தை நிறுத்த, ஆனால் அவளின் தந்தையின் மனதை கொஞ்சமும் மாற்ற முடியவில்லை அவளால்.

அவர் தன் முடிவில் உறுதியாய் இருக்க...அவளால் எதுவும் செய்யமுடியாத நிலை.தற்கொலை அவளுக்கு பிடிக்காத ஒன்று அந்த ஒரே காரணத்திற்காக தான் இன்னும் அதனை பற்றி நினைக்கவில்லை.

தற்கொலை எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது அவளால் மறுக்க முடியாத உண்மை.கடைசி நொடி வரை நமக்கான நேரம் இருக்க, அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.அதனால் இன்னும் நம்பிக்கையை இழக்காமல் இருந்தாள்.

அதற்கு முக்கிய காரணம்...ஏனோ அந்த திருவிழாவிற்கு அப்பறம் அடிக்கடி அவளின் மனக்கண்ணில் தோன்றும் அவனின் முகம், அந்த தைரியத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

வெகுநாட்களுக்கு பின் அவன்மேல் ஒரு நம்பிக்கை, இந்த கல்யாணத்தை அவன் கண்டிப்பாக நிறுத்திவிடுவான் என்று. அது ஏன் தீடீரென்று அவன்மேல் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாத போதிலும், அந்த நம்பிக்கை ஒன்று தான் இன்னும் அவளை கலங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்தமுறை தன் நம்பிக்கையை காப்பாற்றுவான் என்ற எண்ணமே பயத்தை குறைத்து அவளை இயல்பாக நடமாட வைத்தது.

நம்ம உள்மனசுக்கு ஒரு பெரிய சக்தி இருக்கு.நாம் ஒரு விஷயத்தை ஆழமாக நம்பும் போது, அது கண்டிப்பாக ஒரு நாள் உண்மையாக நடந்தே தீரும்.

அதற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான், பொறுமையாக காத்திருப்பதே...நமக்கான காலம் வரும்வரை நம்பிக்கையை கைவிடாமல் காத்திருந்தால் கண்டிப்பாக நினைத்ததை சாதிக்க முடியும்.

அதைதான் இவளும் கடைபிடித்தாள். அவளின் தெளிவான முகத்தை பார்த்து சாந்திக்கே குழப்பமாக இருந்தது.

'எப்படி அதற்குள் மாறிவிட்டாள்,ஒருவேளை உண்மையாகவே திருமணத்திற்கு தன்னை தயார்படுத்தி கொண்டாளோ' என எண்ணியவர்,தன் மகள் வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டார்.

மாலை தொடங்கி நள்ளிரவு வரை நலங்கு,பெண் அழைப்பு என களைத்து போயிருக்க… உடல் மொத்தமும் ஓய்வுக்காக கெஞ்ச, கண்களோ அதற்கு எதிரியாய் விழி மூடாமல் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தது.

அங்கு இவள் நம்பிக்கைக்கு பாத்திரமானவனோ... தன் மெத்தையில் புதைந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். அவளின் திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் முகத்தில் உறைந்த புன்னகையோடு உறங்கி கொண்டிருந்தான்.

அந்த அதிகாலை நேரத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் திருமண மண்டபம் சொந்தங்கள் நிறைந்து இருக்க...ஒருபக்கம் பெண்கள் பட்டுபுடவை சரசரக்க மண்டபத்தை வலம்வர...ஆண்கள் வெட்டி சட்டையில் உலா வந்தனர்.

சிறுசுகளோ பட்டாம்பூச்சி போல் சந்தோஷமாக பறந்துக்கொண்டிருக்க...
நெருங்கிய உறவுகள் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தனர்.

ஆக அங்கு இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக திருமணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
மணப்பெண்ணை தவிர.

மணமகள் அறையில்...மணப் பெண்ணிற்கே உரிய சகல அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் வர்ஷினி

நேரம் நெருங்க நெருங்க மனதில் பயம் பிடித்துக்கொள்ள...படபடக்கும் இதயத்தை அடக்கும் வழி தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள். வாய்விட்டு கத்தி அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

சொந்தங்கள் என்ற பெயரில் அவளை சுற்றி அத்தனை கூட்டம் இருக்க...நிம்மதியாக கண்ணீர் விடும் கொடுப்பினை கூட இல்லாமல்,அவர்கள் செய்யும் கேலி கிண்டல்களை காது கொடுத்து கேட்க முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

இதயத்தின் ஒரு மூலையில் 'அவன் வந்துடனும் வந்துடனும்' என்ற வார்த்தை மட்டும் ஓயாமல் அலறி கொண்டே இருந்தது.

எப்போதும் போல் காலையில் எழுந்த மதி...நிதானமாக தன் காலைக்கடன்களை முடித்தவன்,ஸ்டேஷனிற்கு கிளம்பினான்.

வீட்டில் அனைவரின் முகமும் இறுக்கத்தில் இருக்க...அதனை பற்றி எந்த கவலையும் இல்லாமல் கிளம்பிவிட்டான்.

வண்டியை எடுத்துக்கொண்டு வாசலை தாண்ட...அங்கு தனது வண்டியில் சாய்ந்தபடி நின்றிருந்தான் கதிர்.

"என்னடா ரொம்ப நேரமா எனக்காக வெயிட் பண்ற போல" என்றவனை முறைத்து பார்த்தான் கதிர்.

"டேய் இன்னைக்கு என்ன நாளுன்னு நினைவிருக்கா,இல்லை அதையும் மறந்துட்டியா … இன்னைக்கு தான் உன் ஆளுக்கு கல்யாணம் " என்க

"என் ஆளுன்னு சத்தமா சொல்லாத டா… இன்னைக்கு கல்யாணம் ஆக போற பொண்ணு,அப்பறம் பெரிய பிரச்சனை ஆகிடும்" என சிரித்துக்கொண்டே சொல்ல…

"ச்சீ...உன்கிட்ட போய் சொன்னேன் பார். என்னை நானே செருப்பாலாயே அடிச்சிக்கணும்" என தன்னை தானே திட்டியபடி தனக்குள் எழுந்த கோபத்தை தன் வண்டியில் காட்டி அதனை கிளப்பினான்.

இருவரின் வாகனமும் மதுரை டவுனுக்குள் நுழைய...போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் திரும்புவதற்கு பதில் மதியின் வண்டி அதற்கு எதிர்ப்புறம் சென்றது.

"டேய் எங்கடா போற" என கேட்டுக்கொண்டே அவனை பின்தொடர்ந்து செல்ல...அது சென்று நின்றது என்னவோ ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் தான்.

தன் புல்லட்டை பார்கிங்கில் நிறுத்திவிட்டு சாவியை விராலால் சுழட்றியவாறு கீழே இறங்கினான் மதி. அவன் பின்னோடு வந்த கதிர் மண்டபத்தையும் அவனையும் மாறி மாறி பார்க்க…

"அது ஒன்னுமில்ல டா...இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம ஊர் பொண்ணு கல்யாணத்தை கூட பார்க்காம போனால் நல்லா இருக்காது பாரு அதான்".

"அதுவுமில்லாமல் எங்க வீட்ல இன்னைக்கு சமைக்கவே இல்லடா...செமையா பசிக்குது, வந்தது வந்துட்டோம் கல்யாணத்தை பாரத்துட்டு ஒரேடியா மார்னிங் டிஃபனையும் இங்கேயே முடிச்சிட்டு போய்டலாம்" என சீரியஸான குரலில் சொன்னான்.

" எனக்கு வர ஆத்திரத்தில் அப்படியே உன் கழுத்தை நெறிச்சு கொல்லனும்னு வெறியே வருதுடா...உன்னை எல்லாம் பிரெண்டன்னு கூட பழகினேன் இல்ல எனக்கு இது தேவைதான். என்னால ஒரு நிமிஷம் கூட இனிமேல் இங்க இருக்க முடியாது,நான் கிளம்புறேன்" என நகர போனவனின் கையை பிடித்தவன்,

"ரொம்ப கோபப்படாத டா... எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம். இப்போ என் கூட வா" என வர மறுத்தவனை இழுத்துக்கொண்டு போனான்.

வாசலிலேயே 'சந்திரன் வெட்ஸ் மித்ரவர்ஷினி' என பெயர்பலகையில் இருக்க… ஒரு நொடி அதனை நின்று பார்த்தவன் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

"என்னங்கடி மசமசன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க…இன்னுமா அலங்காரம் பண்ணி முடியலை" என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த மரகதத்தை பார்த்து…

"அதெல்லாம் அப்பவே முடிச்சிட்டோம் அப்பத்தா என்ற உறவுக்கார பெண், இங்க பாருங்க உங்க பேத்தியை" என அங்கு தேவதையாக நின்றிருந்த வர்ஷினியை காட்டி சொல்ல...

அவரோ ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தவர் "சரி சரி ஐயர் சொல்லும் போது பார்த்து அழைச்சிட்டு வாங்க" என அறையை விட்டு வெளியே வந்தார்.

மதி,கதிர் இருவரும் மண்டபத்துக்குள் நுழைந்த நேரம் தான் ஐயர் "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என சத்தமாக குரல் கொடுத்தார்.

நேராக சென்றவன் முதல் வரிசையில் அமர்ந்துகொண்டான்.கதிரும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தான்.

கதிருக்கு மனதில் ஒரு எண்ணம் 'ஒருவேளை நண்பன் விளையாடுகிறானோ…
கல்யாணத்தை நிறுத்த வேறு ஏதாவது பிளான் வைத்திருக்கிறானோ' என எண்ணியே அவனோடு வந்தான்.

மதியோ...ஏதோ படத்தை பார்ப்பது போல் சுவாரசியமாக பார்வை சுழற்ற… அவனின் பார்வையோ ஓரிடத்தில் நிலைத்து நின்றது.

அங்கே பதுமையென நடந்து வந்துக்கொண்டிருந்த வர்ஷினியை தலைமுதல் கால் வரை தன் கண்களால் அளந்தவன்,
'பரவாயில்லை புடவையில் அழகா தான் இருக்கா ராட்சசி' என எண்ணியபடி தன் பார்வையை மாற்றாமல் அவளையே தொடந்தான் விழிகளால்.

அவளோ யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தலைகுனிந்து கொண்டே வந்து மனையில் அமர்ந்தவள் ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்.

முதல் வரிசையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு போலீஸ் உடையில் அமர்ந்திருந்தான் மதி. அங்குள்ள பாதி கூட்டம் அவன் ஊரை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் அனைவருமே அவனின் வருகையில் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டே இருந்தனர்.

தன் எதிரில் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மதியை பார்த்து முறைத்தவள் உதட்டை சுழிக்க...அவனோ 'அடங்கமாற்றாளே இவ' என எண்ணியபடி இவனும் முறைத்தான்.

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க...வெளியே முறைத்துக் கொண்டிருந்தாலும் தன்னை பார்த்தவுடன் ஒரு நொடி அவள் முகத்தில் தோன்றிய ஏதோ ஒன்றில் மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. ஆக அவளும் தன்னை எதிர்ப்பார்த்து தேடியிருக்கிறாள் என்பதே அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்க போதுமானதாக இருந்தது.

இருவரின் பார்வையையும் பார்த்த கதிருக்கு மண்டை காய்ந்து. "சைட் அடிக்கிறதுக்கு நல்ல நேரம் பார்த்தாங்க" என சலித்தபடி அமர்ந்திருந்தான்.

அதுவரை ஐயர் சொன்ன வேலையை செய்துகொண்டிருந்த சண்முகசுந்தரம் அப்போதுதான் முதல் வரிசையில் அமர்ந்திருந்த மதியை பார்த்தான்.

"எவ்ளோ தைரியம் இருந்தா இங்க வந்திருப்பான்.குடும்பத்துக்கே வெட்கம், மானம், சூடு சுரனை எதுவும் இல்ல போல" என திட்டியவாராக ... அவனை என்ன பண்றேன் பாரு" என கோபமாக மேடையை விட்டு இறங்க முயன்றார்..

"மாப்பிள்ளை இப்போ என்ன பண்ண போறீங்க?.. முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு, இப்போ தேவையில்லாமல் எந்த பிரச்சனையும் வேணாம்.கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்" என நிலைமையை சமாளிக்க முயன்றார் சந்திரனின் தந்தை .

ஆனால் சண்முகசுந்தரத்தால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை…"இல்ல மச்சான் பிரச்சனை எதும் பண்ணலை ஆனா,அவன் இங்க இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.நீங்க ஒன்னும் பயப்படாதீங்க பேசிட்டு உடனேயே வரேன்" என்றவர் அவனை நெருங்கினார்.

தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவரை பார்த்தும் பார்க்காதது போல் அமர்ந்திருந்த மதி…'என்ன மீசை நம்மளை நோக்கி வருது.வரட்டும் வரட்டும் வந்து என்ன பண்ணுறான்னு நானும் பார்க்கிறேன்' என நினைத்தவன் அவர் பேச வாய்த்திருக்கும் நேரம் திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த கதிரிடம் பேச தொடங்கினான்.

"டேய் நான் தான் அப்போவே சொன்னேனே டா, நீதான் கேட்கலை" என சொல்ல…
கேட்டுக்கொண்டிருந்த கதிருக்கு ஒன்றும் புரியவில்லை.

எப்போ என்ன சொன்னான் என யோசிக்க தொடங்க…அதற்கு வழியில்லாமல் மீண்டும் அவனே தொடர்ந்தான்.

"நான் உள்ள வந்தா எல்லாரும் பயத்துல நடுங்க ஆரம்பிச்சிடுவாங்கன்னு. இப்போ பாரு பொண்ணோட அப்பா தலைக்கு மேல அவ்ளோ வேலை இருந்தும் அதையெல்லாம் விட்டுட்டு வந்து நிற்குறதை" என்க…

"ஏய் யாருக்கு யாரு மேலடா பயம்" என ஆத்திரத்தில் அடி குரலில் சீறினார் சண்முகசுந்தரம்.

"உங்களுக்கு தான்,அதுவும் என்மேல தான்.பயம் இல்லனா எதுக்கு அவ்ளோ வேகமா வந்தீங்க?..நான் கூட எங்க நான் கல்யாணத்தை நிறுத்திடுவேனோன்னு பயத்தில், என்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள தான் வரீங்கன்னு நினைச்சேன்.ஒருவேளை அதுக்காக வரலையோ" என புருவங்களை உயர்த்த…

அவரோ "ஓ...உனக்கு அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா... பாருடா நல்லா பாரு. நீ இல்ல உங்க அப்பன் நினைச்சாலும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.வந்தது வந்துட்ட கண் குளிர கல்யாணத்தை பார்த்துட்டு கொட்டிக்கிட்டு போ" என இளக்காரமாக சொல்லிவிட்டு அவனை பார்த்து ஒரு வெற்றி புன்னகையை சிந்தினார்.

அவனோ 'பில்டப் ஓவரா இருக்கே...பாவம் நடக்க போறது தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு ' என நினைத்தவன், "கண்டிப்பா அதுக்கு தானே வந்திருக்கேன்.நீங்க கொஞ்சம் மேடையை மறைக்காமல் இருந்தால் பார்க்க வசதியா இருக்கும்" என சொன்னவனை விழிகள் இடுங்க பார்த்தார்.

அவனும் வேகமாக தலையாட்டி "நீங்க எதும் தப்பா எடு்த்துக்காதீங்க?.. நான் கல்யாணத்தை பார்க்க வசதியா இருக்கும்ன்னு தான் சொன்னேன்" என அவர் பார்வைக்கு விளக்கம் கொடுத்தவன் மேடையில் பார்வையை பதிக்க...அவரும் 'உன் முன்னாடியே இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்தி காட்டுறேன் டா' என மனதுக்குள் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் சென்றவுடன் "டேய் உண்மையை சொல்லு டா,அவர் பொண்ணை பார்க்க தானே நகர சொன்ன" என கதிர் கேட்க…

அவனும் "ஆமாடா, அப்பறம் அவனையா பார்க்க முடியும்.அவனும் அவன் மூஞ்சியும்" என மாப்பிள்ளையை காட்டி சொன்னவன், தன்னவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை படிக்க முயல...அவனால் அது முடியவில்லை.

"ராட்சசி ஒரு ரியாக்ஷன் ஒழுங்கா கொடுக்குறாளா பாரு. நிமிஷத்துக்கு நிமிஷம் முகத்தை மாத்திக்கிட்டே இருக்கா… என்ன மனநிலையில் இருக்கான்னு புரிஞ்சிக்கவே முடியலையே. இவளை வழிக்கு கொண்டு வரதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போலவே" என நினைக்கும் போதே கண்ணை கட்டியது.

'இனிமே தான் தரமான சம்பவம் நமக்கு இருக்கு.எல்லாத்துக்கும் ரெடி ஆகிடுடா மதி' என தனக்கு தானே அட்வைஸ் சொல்லிக்கொண்டு இருந்தான் மதியழகன்.

சந்திரனுக்கு மதியின் வரவு பிடிக்கவில்லை என்றாலும் அவன் எதிரில் இவ கழுத்தில் தாலி கட்ட போகிறோம் என நினைக்கும் போதே கர்வமாக உணர்ந்தான். 'இவளுக்காக தானடா அன்னைக்கு என்னை அடிச்ச, அதுக்கு இதைவிட பெரிய தண்டனையை உனக்கு யாராலும் தர முடியாது' என சந்தோஷமாகவே அமர்ந்திருந்தான்.

ஐயர் மந்திரங்களை சொல்ல தொடங்க..இந்தாங்க இதை எல்லார்கிட்டயும் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க என அங்கு நின்ற பெண்ணிடம் ஒரு தட்டை கொடுத்தார்.

அதில் ஒரு தேங்காயில் மஞ்சள் தாலி இருக்க, அரிசி மஞ்சள் நெய் கலந்த அட்சதையும் பூவும் இருந்தது.

அனைவருக்கும் அட்சதையை கொடுத்துக்கொண்டே வர...இப்போது மதியின் எதிரில் நீட்டப்பட்டது.

ஒரு நொடி அந்த தாலியையும் மித்ராவின் முகத்தையும் பார்த்தவன்,கையில் அட்சதையை அள்ளிக்கொண்டான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த வர்ஷினிக்கு அவனது செயல் கோபத்தையே கொடுத்தது.

'இவன் கல்யாணத்தை நிறுத்த வந்தமாதிரி தெரியலையே...ஒருவேளை நிறுத்த மாட்டானோ! அப்போ நான் தான் தேவையில்லாமல் அவனை நம்பிக்கொண்டு இருக்கிறேனா' என நினைக்கும் போதே விழிகளில் இருந்து அவளே அறியாமல் ஒரு துளி கண்ணீர் கீழே விழுந்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 10

அவளையே பார்த்துக்கொண்டிருந்த மதியின் கண்களில் அவளின் கண்ணீர் பட.... 'ராட்சசி இம்சையை கூட்ரா, இப்போ எதுக்கு டாமை திறக்குறான்னு தெரியலையே' என மனதுக்குள்ளேயே திட்டியவன், அவளிடமிருந்து பார்வையை திருப்பி மொபைலை பார்க்க தொடங்கிவிட்டான்.

தன் கையில் உள்ள அட்சதையை கதிரின் கையில் கொடுத்த மதி…"இதை நீயே வச்சிக்கோ ஒரே டிஸ்டர்பனஸ், ஒழுங்கா மொபைலை கூட நோண்ட முடியலை" என்றவன் தீவிரமாக எதையோ செய்துகொண்டிருந்தான் மொபைலில்.

அங்கு யாரு டென்ஷனில் இருக்காங்களோ இல்லையோ... கதிர் தான் அதிகமான டென்ஷனில் இருந்தான். அவனுக்கு பீபி தாறுமாறாக ஏற தொடங்கியது மதியின் அமைதியில். 'இது என்ன வடிவேலு ஜோக் மாதிரி ஆகிடுச்சு நம்ம நிலைமை.கல்யாணம் நடக்குமா நடக்காதா என்பதை விட மதியின்…'நடக்கும் ஆனா நடக்காது' என்பது போல் இருக்கும் அவனின் நடத்தை தான் அதிகமாக அழுத்தத்தை கொடுத்தது.

மணமேடையில் ஐயர் மந்திரங்களை ஓதி கொண்டிருந்தவர்,மாப்பிள்ளை கையில் தாலியை கொடுத்து…. கெட்டிமேளம் கெட்டிமேளம் என சொல்ல வாயை திறக்கும் நொடி சரியாக இருக்கையில் இருந்து எழுந்த மதி கையை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தவன்,

"ஐயரே ஒரு நிமிஷம் எனக்கு ஒரு டவுட்,அதை க்ளியர் பண்ணிட்டு அப்பறம் மந்திரத்தை கன்டின்யூ பண்ணுங்க" என்க…

"ஏண்டா அம்பி எந்த டவுட்டா இருந்தாலும் அப்பறமா கேட்டுக்கோ...நல்ல நேரம் முடிய போகுது,இதை முடிச்சிட்டு வெளிய ஒரு யாகம் வேற இருக்கு" என அவர் தன் வேலையில் சரியாக இருந்தார்.

அவனோ "இந்த விஷயத்தில் அப்படியெல்லாம் பொறுமையா இருக்க முடியாது ஐயரே, அதனால என் சந்தேகத்தை தீர்த்துட்டு நல்லபடியா கல்யாணத்தை நிறுத்துங்க".

"ஓ...சாரி கொஞ்சம் டங் ஸ்லிப் ஆகிடுச்சு,கல்யாணத்தை நடத்துங்க" என திருத்தி சொன்னவனை எரித்துவிடுவது பார்த்தார் சண்முகசுந்தரம்.

"உன் வேலையை காட்டிட்ட இல்ல,எனக்கு அப்பவே தெரியும் டா. நீ இதுமாதிரி ஏதாவது பண்ணுவன்னு, மரியாதையா நீயே வெளிய போய்டு, இல்லனா நானே கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவேன்" என மண்டபம் அதிர கத்தினார்.

அவனோ அதற்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் "ஐயரே நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டு கல்யாணத்தை நடத்துங்க…. நான் தடுக்க மாட்டேன்" என உறுதியாக சொல்ல,

"ஏண்டா அம்பி எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு நாழி ஆறது" என்க…

"அது ஒன்னும் இல்ல ஐயரே... நான் மாப்பிள்ளையை அரெஸ்ட் பண்ணனும், அதான் கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணட்டுமா இல்ல முடிஞ்சதும் பண்ணட்டுமான்னு ஒரே டவுட். கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்" என்றான் கூலாக.

அவன் கூற்றில் அனைவருமே அதிர்ந்து பார்க்க…"ஏண்டா அம்பி இப்போ நீ என்ன சொன்ன" என ஐயர் திரும்பவும் கேட்க….

"உங்களுக்கு காதெல்லாம் நல்லா தான் கேட்குது ஐயரே...மாப்பிள்ளை புள்ளையாண்டாவை கைது பண்ணனும்ன்னு சொன்னேன்" என அவரை போலவே சொல்லிக் காட்டினான்.அதில் பலர் அதிர்ச்சியை மறந்து சிரித்தும் விட்டனர்.

"டேய்... என்னடா நானும் போனா போகுதுன்னு பார்த்தா ரொம்ப பேசுற.என்ன சொன்ன, அரெஸ்ட் பண்ணுவியா?... எங்க அவன் மேல கை வைச்சு பாரு பார்ப்போம். அப்படி கை வெச்சிட்டு நீ எப்படி உயிரோடு வெளியே போறேன்னு நானும் பார்க்கிறேன்.போலீஸ்ன்னா பயந்துடுவோமா" என குரலை உயர்த்தினார் சண்முகசுந்தரம்.

அப்போது மனையில் இருந்து எழுந்த சந்திரன் "நீங்க அமைதியா இருங்க மாமா,இதை நான் பார்த்துக்கிறேன்.என்னை அரெஸ்ட் பண்ணுவேன்னு சொன்னியே எதுக்காகன்னு தெரிஞ்சுக்கலாமா" என எகத்தாளமாக கேட்டான்.

அவனை பொறுத்தவரை அவனின் எந்த தவறும் வெளியே தெரிய வாய்ப்பில்லை.அப்படியிருக்க, மதி தன் கல்யாணத்தை நிறுத்த தான் இப்படி பொய் சொல்கிறான் என உறுதியாகவே நம்பினான். அதனால் தான் அவனிடம் அப்படி ஒரு எகத்தாளமும்,திமிரும்.

சந்திரன் பேச தொடங்கவும் மீண்டும் அங்குள்ள நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமார்ந்தவன்,கையில் உள்ள கைக்கடிகாரத்தை பார்க்க...அப்போது மண்டபத்துக்குள் நுழைந்தனர் இன்னும் சில போலீஸார்.

'இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனை அரெஸ்ட் பண்ண இத்தனை போலீஸ் வேற...ராட்சசி இவளுக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு. இருடி கல்யாணம் முடியட்டும் அப்பறம் உன்னை என்ன பண்றேன் பாரு' என நினைத்தபடி அவளை பார்க்க…

அதுவரை அவள் முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்து,முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிய...அவளுக்கு பின்னால் பட்டு பாவாடை சட்டையில் குட்டி ஏஞ்சல் போல் நின்றிருந்த தர்ஷினி...யாருக்கும் தெரியாமல் அவனை கையை ஆட்டி சைகை செய்து அழைத்தாள்.

அவனும் ' என்ன ' என கண்களாலேயே கேட்க...அவளோ ' தேங்க்ஸ் ' என உதட்டசைத்து கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

இந்த வாண்டுக்கு எவ்ளோ சந்தோஷம்.அவங்க அக்காவுக்கு பிடிக்காத கல்யாணத்தை நிறுத்தியதும். 'ம்ம்...நம்மளை ஓவர் டேக் பண்ணிடுவா போலயே'..என நினைத்து சிரித்துக்கொணடே தலையசைத்தான் மதி.

உள்ளே நுழைந்த போலீஸார் சந்திரனை கைது செய்ய வேண்டும் என்க…

"எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருகீங்க?..ஆளாளுக்கு வந்து இதையே சொல்றீங்க?..எனக்கு காரணம் வேணும். நான் என்ன தப்பு பண்ணேன்...முதல்ல உங்ககிட்ட அரெஸ்ட் வாரண்ட் இருக்கா" என பாய்ண்ட் பாய்ண்ட்டாக பேச…

வந்திருந்த போலீசார்களோ திரும்பி அங்கு அமர்ந்திருந்த மதியை தான் பார்த்து முழித்தனர். ஏனென்றால் அவர்களுக்கே எதற்காக சந்திரனை கைது செய்ய போகிறோம் என்பது தெரியாதே...அவர்களின் மேலதிகாரியான மதி சொன்னதை அப்படியே கேட்டு தலையாட்டி வந்தவர்களுக்கு திருதிருவென முழிப்பதை தவிர வேற வழி தெரியவில்லை.

"சார் அரெஸ்ட் வாரண்ட்" என அவர்கள் மதியை பார்த்து கேட்க...அவனோ எழுந்து பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

அதை வாங்கி படித்தவர்கள் மீண்டும் அவனை பேவென பார்த்து…."சார் இதுல ஏதோ மல்லிகை சாமான் லிஸ்ட்டா இருக்கு " என்க,

"அப்படியா எங்க காட்டுங்க என அதை வாங்கி பார்த்தவன், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,மிளகாய் என வீடு சமையல் பொருட்களாக இருக்க,

"டேய் என்னடா விளையாடுறீயா… நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா தானே உன்னால வாரண்ட் வாங்க முடியும்.சொல்றது மொத்தமும் பொய்" என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே...திரும்பவும் பாக்கெட்டில் கைவிட்டு இன்னொரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

இப்போது அதை போலீஸுக்கு முன் வாங்கி...அவசரமாக படித்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. இது எப்படி சாத்தியம் என நிமிர்ந்து பார்க்க...மதியோ கால் மேல் காலை போட்டு ஆட்ட தொடங்கினான்.

அவன் சொந்தமாக தொழில் செய்கிறேன் என்ற பேரில் வட்டிக்கு ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்தான்.

அப்படி தொடங்கிய தொழில் மொத்தமும் நஷ்டத்தில் சென்றுவிட...வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வீட்டில் கேட்க,பெத்த கடமைக்கு திட்டிக்கொண்டே நிலத்தை விற்று அவரின் தந்தை பணம் கொடுத்திருந்தார்….அதுவும் போதவில்லை அவன் வாங்கிய கடனை அடைக்க,

கடைசியாக கடனை அடைக்க அவன் போட்ட திட்டம் தான் இந்த திருமணம். அவளுக்கு போடும் நகை வரதட்சணை அனைத்தையும் வைத்து கடனை அடைத்துவிட்டால் ...மாமனின் சொத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தான். அதற்காக தான் அந்த கடன்காரரிடம் திருமணம் முடியும் வரை காத்திருக்க சொன்னான்.

தன்னிடம் சரி என்று சொல்லிவிட்டு இப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பான் என இவன் நினைக்கவில்லை.

லட்ச கணக்கில் கடன் கொடுத்தவன் சும்மாவா இருப்பான். அவனுக்கு அவனின் பணம் தான் தேவை. பக்காவாக அனைத்து பத்திரமும் இருக்க எதுக்கு இவனிடம் கெஞ்ச வேண்டும் என கடன் கொடுத்தவர் போலீஸ் உதவியை நாடி சென்றுவிட்டார்.

இதோ
ஐம்பது லட்சம் பணம் மோசடி என வாரண்டில் இருந்தது. இப்போது யாரின் உதவியை நாடுவது என நினைத்தவனுக்கு அப்போது தான் ஒன்று தோன்றியது.

எப்படியும் தன் மாமாவிற்கு மதியையும் அவர்களின் குடும்பத்தையும் பிடிக்காது. இப்போ இவன் முன்னாடி பொண்ணு கல்யாணம் நிற்கக்கூடாது என நினைத்தாவது கண்டிப்பாக தனக்கு உதவுவார் என்றே எண்ணினான்.

ஏனென்றால் அவருக்கு அவரின் கௌரவம் தான் முக்கியம் என்பது அவனுக்கும் நன்றாக தெரியும்.. அனைத்தையும் எண்ணியபடி அதற்கான திட்டத்தை நொடி நேரத்தில் போட்டு விட்டு தைரியமாக நிமிர்ந்தான்.

அப்போது சட்டென்று அவன் கையில் இருந்த காகிதத்தை பறித்த மதி…."என்ன தப்பிக்க பிளான் எல்லாம் போட்டாச்சா. ஆனா எந்த பிளான்னா இருந்தாலும் இப்போ ஒன்னும் பண்ண முடியாது. சோ அவங்களோட கிளம்புற வழியை
பாரு" என்றவன்,

"உங்க மாமா ஹெல்ப் பண்ணுவாருன்னு நினைக்கிறியா?.. அதுகெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.எவ்ளோ பெரிய கொம்பனாவே இருந்தாலும் இனி கோர்ட்டில் பார்த்துக்க வேண்டியது தான்" என சொல்லிவிட்டு திரும்பி போலீசாரை பார்த்து,

"என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க அரெஸ்ட் ஹிம்" என்றான் இதுவரை இருந்த விளையாட்டு தனத்தை கைவிட்டவனாக.

அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த கதிருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 'கல்யாணம் நின்றதில் சந்தோஷம் என்றாலும், கையிலேயே வாரண்டை வச்சிகிட்டு எல்லாரையும் எவ்ளோ டென்ஷன் பண்ணிட்டான்' என எண்ணியவனாக ஒரு பார்வையாளராக மட்டுமே அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

இவ்வளவு களையபரங்கள் நடந்துகொண்டிருக்க...அதற்கு மொத்தமும் காரணமான மித்ராவோ தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாய் மகிழ்ச்சியில் இருந்தாள்.

சாந்தி தான் நிமிஷத்துக்கு நிமிஷம் கணவன் முகத்தையும் மதியின் முகத்தையும் பரிதவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரை பொறுத்தவரை இருவருமே முக்கியம் தான். எங்கே சண்டையில் மீண்டும் மதி சண்முகசுந்தரம் சட்டையில் கைவைத்து விடுவானோ என்ற பயத்தில் இருந்தார்.

அந்த வயதிலேயே கொஞ்சமும் பயம் என்பது இல்லாமல் அவரை எதிர்த்து பேசியவன், இன்று ஒரு போலீசாக என்ன செய்வானோ என்பதே அவரின் பயத்திற்கு காரணம்,

சுற்றி இருந்த அனைவரையும் பொருட்படுத்தாமல் சந்திரன் கையில் விலங்கை மாட்ட, அவன் அருகில் சென்ற மதி,

"ஏண்டா பொறுக்கி நாயே அப்பவே உன்னை அவகிட்ட நெருங்க விடமாட்டேன். இப்போ எப்படி டா அவளை விட்டுக்கொடுப்பேன். அவ எனக்கு சொந்தமானவள் என்றவன் வார்த்தையில் அழுத்தம் கொடுத்து ….எனக்கு மட்டும் தான் சொந்தம்" என கர்ஜித்தான்.

"ஆனா நீ எவ்ளோ தைரியம் இருந்தா அவ பக்கத்திலேயே உட்காருவ,எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை ஸ்டேஷனில் வந்து கவனிச்சுகிறேன்" என்றான் இரையை தேடும் சிங்கத்தின் வெறியோடு.

அவனை தடுத்து பேச வந்த சண்முகசுந்தரம் கூட அரஸ்ட் வாரண்டை பார்த்து நின்றுவிட்டார். ஆக கல்யாணம் நின்ற நிலையில் வந்திருந்த அனைவரும் கலைந்து செல்ல முயல….அதற்குள் மணபந்தலில் ஏறி நின்று,

"ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ், எல்லாரும் எங்க போறீங்க?...உட்காருங்க உட்காருங்க இன்னும் கல்யாணம் முடியலையே, அதுக்குள்ள கிளம்பிட்டீங்க என்றவன், என்ன ஐயரே நீங்க இல்லாம எப்படி கல்யாணம்" என்க…

"ஏண்டா அம்பி அதுதான் மாப்பிள்ளை இல்லையே" என அவரும் புரியாமல் பதில் சொல்ல,

"என்னையெல்லாம் பார்த்தா மாப்பிள்ளையா தெரியலையா?...இல்ல நாங்க கட்டுனா தாலி தான் கட்டாதா என்றவன், உட்கார்ந்து மந்திரத்தை சொல்லுமோய்"
என்றான்.

அவன் என்ன செய்கிறான் என அனைவரும் உணர்ந்துக்கொள்ளும் முன்பே அருகில் அத்தனை நேரம் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்து யோசனையில் நின்றிருந்த மித்ராவின் கையை பிடித்து இழுத்தவன்,மனையில் அமர்ந்து அவளையும் தன் அருகில் அமரவைத்தான்.

"என்ன அத்தை அப்படியே நிக்குறீங்க, அந்த தாலியை உங்க கையால எடுத்துக்கொடுங்க" என்க,

"டேய் உன்னை என்ன பண்றேன் பார். அவளை கட்டிக்க உனக்கென்னடா உரிமை இருக்கு" என கத்தியவராக அவனை நோக்கி வந்தார் சண்முகசுந்தரம்.

"எனக்கா உரிமையில்லை ….. சொல்ல போனால் அவனைவிட எனக்குத்தான் உரிமை அதிகம். அத்தை பையனை விட, தாய்மாமன் பையனுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு. எங்க இங்க இருக்குற எல்லாரையும் கேளுங்க... யாராவது ஒருத்தர் எனக்கு உரிமை இல்லைன்னு சொல்லட்டும் அப்பறம் எழுந்துக்குறேன்" என்றவன் சட்டமாக அமர்ந்துகொண்டு ஐயரை பார்க்க,அவரும் பயத்தில் மந்திரத்தை சொல்ல தொடங்கினார்.

"என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற,அப்பறம் உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்" என அவரும் தன் கோபம் குறையாமல் பேச…

இப்போது மனையை விட்டு எழ முயன்றாள் வர்ஷினி. 'இவ ஒருத்தி உயிரை வாங்குறதுக்குன்னே பொறந்திருக்கா' என அவள் கையை அழுத்தமாக பிடித்து…"இப்போ மட்டும் எழுந்து பாரு.அப்பறம் இருக்கு உனக்கு. கால் ரெண்டையும் உடைச்சிடுவேன், மரியாதையா உட்காருடி" என கத்த,அவன் கோபத்தில் மிரண்டவளாக அவளும் அமர்ந்தாள்.

பின்னர் தன் மாமனின் புறம் திரும்பியவன் "ரொம்ப தைரியம் தான் மாமா. இத்தனை போலீஸ்காரர் முன்னாடியே என்னை கொல்லுவேன்னு சொல்றீங்களே...பேசாம ஓரமா உட்கார்ந்து கல்யாணத்தை பார்த்து எங்களை ஆசிர்வாதம் பண்ற வழியை பாருங்க. வயசான காலத்துல கொலை பண்றேன் அதை பண்றேன்னு எதையாவது சொல்லிட்டு ஜெயில்ல போய் களி திங்க போறீங்க"

"ஏய் என்னை உன் வாயால மாமா அப்படின்னு கூப்பிடாதே" என கத்த,அவனும் சளைக்காமல் "வேற எப்படி கூப்பிடுறது மாமா" என மாமாவில் அழுத்தம் கூட்ட…. அவரோ கண்களை மூடி பற்களை கடித்துக்கொண்டு நின்றிருந்தார்.

"முன்னாடியாவது எனக்கு வெறும் மாமா மட்டும் தான். இப்போ நீங்க தான் எனக்கு மாமனாரும் கூட" என கண்ணடிக்க, இனிமேல் இவனிடம் பேசி புரோஜனம் இல்லை என அவன் சட்டை பிடிக்க செல்ல,சட்டென்று இரு போலீஸ் அதிகாரிகள் அவரை பிடித்து தடுத்தனர்.

"ஏன் மாமா அவனை பிடிக்கவா இத்தனை போலீஸ்ன்னு நினைச்சீங்க…
அவனையெல்லாம் மண்டையில் இரண்டு தட்டு தட்டினா அவனே எழுந்து போயிருப்பான். ஆனா உங்களை அவ்ளோ சீக்கிரம் அசைக்க முடியாதா அதான் இப்படி" என்றவன்,

"என்ன ஐயரே தூங்கிட்டீங்களா?..நாழி ஆறது நாழி ஆறதுன்னு சொல்லிட்டே இருந்தீங்களே...இப்போ மட்டும் ஆகலையோ" என சொல்லும் போதே அவர் தாலியை எடுத்து கொடுத்து, கெட்டிமேளம் கெட்டிமேளம் என சொல்ல…

திரும்பி தன்னவள் முகத்தை பார்க்க,தனது கயல்விழி கண்களை உருட்டி,கண்களில் தேங்கிய கண்ணீரோடு அவனையே முறைத்து கொண்டிருந்தாள் வர்ஷினி.

தன் தலைவனின் கரம் பிடிக்கும் நொடி வெட்கத்தில் முகம் சிவக்க நிற்கும் பெண்களுக்கு மத்தியில்...கோபத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்த பெண்ணவளை ரசனையுடன் பார்த்தவாறே அனைவரும் முன்னிலையில் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக, அனைத்து இன்ப துன்பங்களிலும் உனக்கு உற்ற துணையாக இருப்பேன் என அக்னியின் சாட்சியாக அவளின் கரம் பிடித்தான் மதியழகன்.

அவன் மனதில் எதையோ சாதித்த உணர்வு.இத்தனை வருடங்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விடைபெற்று சென்றது போல் உணர்ந்தான் தன்னவளின் அருகாமையில்

அங்கிருந்த முக்கால் வாசி பேருக்கு அந்த திருமணம் நடந்ததில் மகிழ்ச்சியே. சந்திரனை விட மதியை பற்றி அந்த ஊர் மக்களுக்கு நன்றாகவே தெரியும். பிரிந்திருந்த குடும்பம் இதன் மூலம் ஒன்று சேர்ந்தால் போதும் என்றே எண்ணினர் அனைவரும்.

அனைத்தையும் தடுக்க முடியாமல் கோபத்தின் உச்சியில் அவளின் தந்தை இருக்க….அவளின் தாயோ கண்களில் தோன்றிய ஆனந்த கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டு இருவரையும் வாழ்த்தினார்.

தன் பிறந்தவீட்டு சொந்தம் மீண்டும் இணைந்ததிலும், தான் தூக்கி வளர்த்த அண்ணன் மகனே தனக்கு மருமகனான வந்ததில் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தார் சாந்தி. இப்போதே பிறந்த வீட்டோடு இணைந்து விட்டோம் என்ற மகிழ்வில் தன் கணவரை பற்றி மறந்துதான் போனார்.

தர்ஷினிக்கு ஒன்றும் புரியாமல் தன் அக்காவின் முகத்தை பார்க்க,அதில் கோபத்தை கண்டவள் இந்த கல்யாணத்திலும் தன் அக்காவிற்கு விருப்பம் இல்லை என நினைத்துக்கொண்டு மதியை முறைத்தாள்.

'அடிப்பாவி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிச்சது என்ன, இப்போ அவங்க அக்காவை பார்த்துவிட்டு தன்னை முறைக்கிறது என்ன' என நினைத்தவனுக்கே ஆச்சிரியமாக இருந்து இருவர்களின் பிணைப்பை பார்த்து. முகம் பார்க்கும் கண்ணாடி போல் வர்ஷினி உணர்வை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக தான் இருந்தாள் தர்ஷினி.

தன் அக்கா சிரித்தாள் இவளும் சிரிப்பாள்,அவள் அழுதாள் இவளும் அழுவாள். இனிமேல் அவளுடன் ஒன்றாக இருக்க முடியாது என்பது தெரியும் போது அந்த சிறுபெண்ணின் மனம் என்ன பாடுபட போகிறதோ?...
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 11

திருமணம் நல்லபடியாக முடிய,அனைவரும் கலைந்து சென்றனர்.எஞ்சி இருந்தது என்னவோ சண்முகசுந்தரமும் அவரின் தங்கை குடும்பமும்,ஒரு சில போலீஸ்காரர்கள் மட்டுமே.

மதி தாலி கட்டிய அடுத்த நிமிடமே சண்முகசுந்தரத்தை பிடித்திருந்த போலீசார் தங்கள் பிடியை தளர்த்த...அடுத்த நிமிடம் மதியின் சட்டையை பிடித்து தூக்கி இருந்தார்.

அவனோ அசராமல் "என்ன மாமா பழிக்கு பழியா….அன்னைக்கு நான் உங்க சட்டையை பிடித்தேன் என்றதுக்காக இப்போ நீங்களும் என் சட்டையை பிடிக்கிறீங்களா" என கேட்டான்.

"யாருக்கு யாருடா மாமா...அந்த உறவெல்லாம் முடிஞ்சு போய் பல வருஷம் ஆகுது.திரும்பவும் அதை ஒட்ட வைக்க முடியாது" என கத்தினார்.

அவனோ " அதான் முடிஞ்சி போன உறவை திரும்பவும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிட்டேனே மாமா….உடைந்தது எல்லாம் ஒட்டி பத்து நிமிஷம் ஆகுது" என பொறுமையாவே சொன்னான்.

சந்திரனின் பெற்றோர்கள்,தங்கள் மகன் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியில் அத்தனை நேரம் இருந்தவர்கள்,இப்போது இந்த கல்யாணத்தை பார்த்து கோபத்தில் கொதித்தனர். அதுவும் மதி மற்றும் சண்முகசுந்தரம் இருவரின் வாக்குவாதத்தை கேட்டு இன்னும் கோபம் அதிகரித்தது.

"வெட்டிவிட்ட சொந்தத்துக்காக எங்களை இப்படி நம்பவச்சு கழுத்தை அறுத்துட்டியே" என சண்முகசுந்தரத்தை பார்த்து அவரின் தங்கை மேகலா கேட்க…

"என்னம்மா பேசுற நீ,என்னமோ நான் கல்யாணத்தை நிறுத்துன மாதிரி சொல்ற. உன் பையன் ஒழுங்கா இருந்திருந்தா, இந்த கல்யாணம் ஏன் நிற்க போகுது. மொத்ததுக்கும் அவன் தான் காரணம்" என இவரும் பேசினார்.

"வட்டிக்கு பணம் வாங்கி இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்கு, ஆனா இதை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்கீங்க?..அப்போ நீங்களும் எல்லாத்துக்கும் உடந்தை அப்படி தானே" என திருமணம் நின்ற கோபத்தையும் மதியிடம் தோற்ற அவமானத்தையும் மொத்தமாக வார்த்தைகளில் கொட்டினார் தங்கையிடம்.

இதற்கு என்ன பதில் சொல்வது என திருதிருத்த தங்கையை பார்த்து விரக்தியாக சிரித்தவர் "அப்போ என்னை ஏமாற்றி தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்ச...எல்லாம் எதுக்கு இந்த பணத்துக்கும் சொத்துக்கும் தானே.போதும் இதுவரைக்கும் உங்களை நம்பி ஏமாந்தது,இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல எல்லாம் இன்னையோடு முடிஞ்சுது" என்க,

"ஏம்ப்பா சண்முகம்.... இப்படி பட்டும் படாம பேசுற,என்ன இருந்தாலும் அது உன் தங்கச்சியா.இந்த பய தான் ஏதோ கொக்கு மாக்கு பண்ணி, நம்ம ஊட்டு புள்ளை மெல்ல வீண் பழியை போட்டு கல்யாணத்தை நிறுத்திருக்கான்' என அங்கு நின்றிருந்த மதியை காட்டி சொன்னவர், அதுக்கு ஏன் நீ என் மக மேல கோபத்தை காட்டுற" என மரகதம் ஆதங்கமாக சொல்ல,

"அம்மா நீங்க இதில் தலையிடாதீங்க?...என்னை எப்படி ஏமாத்திருக்காங்க தெரியுமா?.. எங்க உன் பொண்ணுகிட்ட கேளு,அவங்க பையன் வாங்குன கடனை பத்தி ஒன்னுமே தெரியாதுன்னு.எல்லாம் நம்பிக்கை துரோகம்" என்றவர் இப்போது மதியை நோக்கி திரும்பினார்.

அவனும் "ஓய் பொண்டாட்டி என்ன அப்படியே நிற்கிற வா... என அவளின் கைபிடித்து வந்தவன்,தன் அத்தையை பார்த்து' அத்த வாங்க வந்து மாமாவோட சேர்ந்து நின்னு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க" என்க..

அவரும் வந்து கணவனோடு சேர்ந்து நின்றார். மணமக்கள் இருவரும் அவர்களின் காலில் விழ, சண்முகசுந்தரமோ தன் கால்களை தள்ளி வைத்து திரும்பி நின்றுக்கொண்டார்.
"என் பொண்ணு செத்து போய் ரொம்ப நேரம் ஆகுது" என்க…

அவரின் வார்த்தை பெற்ற தாயாக அத்தனை வலியை கொடுக்க,கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார் சாந்தி.அவரோ அதனை கண்டுகொள்ளாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

தன் அத்தையின் கண்ணீர் அன்று போல் இன்றும் அவனை தாக்கியது தான்.ஆனால் முயன்று தன் மாமன் மேல் எழுந்த கோபத்தை கட்டுப்படுத்தியவன்,

அவரை திசை திருப்பும் பொருட்டு…."அத்தை அவரு இல்லனா என்ன, நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க.அதெல்லாம் நல்லவங்க வார்த்தை தான் பலிக்கும் இவரு சொல்ற வார்த்தையெல்லாம் பலிக்காது. அதனால தேவையில்லாம மனசை போட்டு வறுத்திக்காதீங்க" என்றான்.

பின்னர் சிறிது நேரத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு இருவரையும் வாழ்த்தினார் சாந்தி.இனிமேலாவது மகள் சந்தோஷமா வாழணும் என மனதார கடவுளை வேண்டிக்கொண்டார்.

"சரி அத்தை நாங்க கிளம்புறோம்" என மதி சொல்ல…

"நான் உங்க கூட வரமாட்டேன்" என வர்ஷினி சொன்னாள்.

"ஓ….அப்போ என் கூட வராம என்ன பண்றதா இருக்கீங்க மேடம்" என மதி பற்களை கடிக்க..

"நான் எங்க வீட்டுக்கே போறேன்" என்றாள் வர்ஷினி.

"உன்னால முடிஞ்சா போய் பாருடி….இதுக்கு முன்னாடி அமைதியா இருந்த மாதிரி இப்பவும் இருக்கமாட்டேன். இப்போ நீ என் பொண்டாட்டி,என்னை விட்டுட்டு உங்க அப்பா வீட்டுக்கு போகனும்னு நினைச்சா... நான் செத்ததுக்கு அப்பறம் போய்க்கோ".

"ஆனா, இப்போ உனக்கு பிடிக்குதோ இல்லையோ என் கூட தான் வாழ்ந்தாகனும்" என ஆத்திரமாக சொல்ல…

அவனை முறைத்துக் கொண்டிருந்தவளின் பார்வை 'அவனின் நான் செத்ததுக்கு அப்பறம் போ ' என்ற வார்த்தையில் இதயம் நின்று துடித்தது.என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என வலியுடன் அவனை ஏறிட,

"என்னப்பா இது...இன்னும் வாழ்க்கையை தொடங்க கூட இல்லை, அதுக்குள்ள சாவை பத்தி பேசிக்கிட்டு" என சாந்தியும் ஆதங்கமாக சொன்னவர்,

மகளின் புறம் திரும்பி "நீ அங்க தான்டா இருக்கணும். அதுதான் இனி உன் வீடு" என மகளுக்கு தாயாய் அறிவுரை வழங்கியவர்.

பின்னர் மகளை பிரியும் துயரில் அவளை அணைத்துக் கொண்டு அழுதுவிட்டார் சாந்தி.அவளும் அழ தொடங்க….அங்கு ஒரு பெரிய பாச போராட்டமே நடந்தது.

அதற்குள் தர்ஷினி தன் அழுகையை தொடங்க…"அக்கா எங்கையும் போகாதா பிளீஸ் என் கூடவே இருந்துடேன்" என கதற...அவளை எப்படி சமாதான படுத்துவது என்றே அவளுக்கு புரியவில்லை.அவளுக்கு நன்றாகவே தெரியும் தான் இல்லை என்றால் அவள் எப்படி தவித்துக் போவாள் என்று.

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் "சின்னக்குட்டி அழாத டா...அக்கா எங்கேயும் போகலை டா,ஒரே ஊரில் தான் இருக்க போறோம் அடிக்கடி பார்த்துக்கலாம்" என சமாதான படுத்த,அவளோ எதற்கும் கட்டுபடவில்லை.

பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு இது இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது தெரிந்துவிட…. அவனே தர்ஷினி அருகில் சென்றான்.

அங்குள்ள இருக்கையில் அவளை அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தவன், தர்ஷினியின் கையை பிடித்துக்கொண்டு எதையோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான். முதலில் அவனை பார்த்து முறைத்துவிட்டு விலக முயன்றவளை பேசியே வழிக்கு வர வைத்திருந்தான் மதி. அனைவரிடமிருந்தும் சற்று தள்ளி அவளை அழைத்து பேசியதால் யாருக்கும் அவன் என்ன சொன்னான் என சுத்தமாக விளங்கவில்லை.

ஆனால் அதுவரை அழுது கொண்டிருந்த தர்ஷினி அவன் வார்த்தைகளில் அழுகையை மறந்து சிரித்தே விட்டாள்.

இருவரும் பேசிக்கொண்டே ஹைய் ஃபை கொடுத்து கொள்ள...அதை தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு ஆச்சிரியமாக இருந்தது.

சிரித்துக்கொண்டே வரும் தங்கையை பார்த்து இவளின் முகமும் சற்று தெளிந்தது. ஆனால் என்ன சொல்லி அவளை சமாளித்தான் என்பது மண்டையை குழப்ப…."அவகிட்ட என்ன சொன்னீங்க?.."என வர்ஷினி மதியை பார்த்து கேட்க..

அதற்கு அவனோ "அது எனக்கும் என் மச்சினிச்சிக்கும் உள்ள ரகசியம், அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது போடி" என்றான்.

பின்னர் அவளின் தாயும் தங்கையும் சிரித்துக்கொண்டே விடைக்கொடுக்க...தன் மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.

தன் அருகில் வந்துக்கொண்டிருந்த நண்பனை பார்த்து "இங்க ஒருத்தரை சமாளிக்கவே உயிர் போய்ட்டு உயிர் வந்தது. அங்க வீட்டில் ஒரு கூட்டமே இருக்கே என்ன பண்ண போறேன்னோ" என புலம்ப…

"அதெல்லாம் நல்லபடியா முடியும் டா" என சிரித்துக்கொண்டே சொன்ன நண்பனை பார்த்து முறைத்தவன் "உனக்கு உன் ரூட் கிளியர் ஆகிடுச்சு...அப்போ சிரிக்க தானே செய்வ" என சொன்னவனை அதிர்ந்து பார்க்க,

"ரொம்ப ஷாக் ஆகாத, அதெல்லாம் எனக்கு முன்னமே தெரியும்" என கூலாக சொன்னவன் நீ டியூட்டிக்கு கிளம்பு என்றான்.

வண்டியில் ஏறியவன் திரும்பி பார்க்க...அங்கு கைகளை கட்டிக்கொண்டு வண்டியில் ஏறாமல் நின்றிருந்தாள் வர்ஷினி.

"ஓய் பொண்டாட்டி வண்டில ஏறுடி" என்க,அவளோ முடியாது என உதட்டை சுழித்தாள்.

"இருடி உன்னை"...என காலை தரையில் ஊன்றி எட்டி அவளின் இடையை பற்றி இழுக்க...அவளோ அவன் மேலேயே வந்து விழுந்தாள்.

அதிர்ச்சியில் தன் கருவிழி இரண்டையும் சுழற்றி அவனை பார்க்க...அந்த காந்த விழியின் ஈர்ப்பு விசையில் தன்னை தொலைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

அவளையே விழுங்கிவிடுபவன் போல் பார்த்தவன்,முயன்று தன் பார்வையை மாற்றிக்கொண்டு
"எனக்கு வண்டி ஓட்ட ஒரு கை போதும்,உன்னை இப்படியே தூக்கிட்டு போக நான் ரெடி நீ ரெடியா" என கேட்க…

அதில் இன்னும் பதட்டம் அடைந்தவள் 'எங்கே சொன்னதை செய்துவிடுவானோ' என பயத்திலேயே அவனிடம் இருந்து பிடிவாதமாக விலகி பின் இருக்கையில் அமர்ந்தாள்.

சிறு குழந்தையாய் இருக்கும் போது தந்தையோடு பைக்கில் சென்றது ஏதோ நிழல் போல் நியாபம் இருந்தது, அவ்வளவு தான்.அவளுக்கு விவரம் தெரிந்து இதுவரை இருசக்கர வாகனத்தில் சென்றது இல்லை.

இதுவே முதல் பைக் பயணம். நன்கு பழக்கப்பட்டவருக்கே சேலையில் அமர்ந்து வருவது சிரமமாக இருக்கும். இதில் முதன்முறை செல்லும் அவளுக்கு அதுவும் பட்டு புடவையிள் உட்கார முடியாமல் வழுக்கியது. மிகவும் கஷ்டபட்டு ஏறி அமர வண்டியும் நகர்ந்தது.

சிறிது தூரம் சென்றிருக்க,அவளின் தடுமாற்றம் கண்டு வண்டியை ஓரமாக நிறுத்தியவன், "ஏய் ஒழுங்கா உட்காருடி எங்கயாவது விழுந்து வார போற" என்க…

அவளோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "இந்த புடவை வழுக்குது. நான் என்ன பண்ண...அதுவுமில்லாம பத்திரமா பிடிச்சிக்க கம்பி கூட ஒன்னுமே இல்லையே" என சொல்ல,

"ஏண்டி ஆறடி உயரத்தில் நான் இருக்கேன், என்னை பிடிச்சிக்க வேண்டியது தானே" என்றவன் வண்டியில் அமர்ந்து அவளையும் அமர சொன்னவன் அவளின் கரம் பிடித்து தன் இடையை சுற்றி போட்டுக் கொண்டான்.

"பத்திரமா பிடிச்சுக்கோ" என சொல்லி வண்டியை எடுக்க...அவளோ அதெல்லாம் வேணாம் என கையை எடுத்துக் கொண்டவள் அவனின் சட்டையை மட்டும் பிடித்துக்கொண்டாள் அவனை தொடாமல்.

அது அவனுக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுக்க... 'இருடி இப்போ நீயே வந்து என்னை பிடிப்ப,பிடிக்க வைக்கிறேன்' என நினைத்தவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.

அவனின் வேகத்தில் பைக் தாறுமாறாக செல்ல...ஒரு நிலையில் அவளால் சுத்தமாக சமாளிக்க முடியாமல் விழுந்து விடுவோமோ என அஞ்சியவளாக அவனின் இடையோடு கை தொடுத்து கெடியாக பிடித்துக்கொண்டாள்.

ஒரு கை அவன் தோளில் இருக்க ஒரு கையோ அவன் இடையை வளைத்திருந்தது. அவனோ மகிழ்ச்சியில் விசில் அடித்துக்கொண்டே, அவளோடு இருக்கும் ஒவ்வொரு மணி துளியையும் ரசித்துக்கொண்டே வண்டியை செலுத்தினான்.

"கொஞ்சம் ஸ்லோவா போங்களேன்" என அவளும் மெல்லிய குரலில் சொல்ல அதை கேட்கும் நிலையில் அவனில்லை. வேண்டுமென்றே ஸ்பீட் பிரேக்கரில் பார்த்து பார்த்து வண்டியை விட, அவளோ பயத்தில் அவன் முதுகில் முகம் புதைத்து அவனை கட்டிகொண்டாள்.

அவளின் அந்த ஒற்றை அணைப்பு அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மொத்த உணர்வையும் தட்டி எழுப்ப போதுமானதாக இருந்தது. இப்போது அவனுக்கே 'அய்யோ தேவையில்லாம அவளை பயமுறுத்துறேன் பேர்வழின்னு பண்ண காரியம் இப்போ நமக்கே வம்பா போச்சே…

இப்போ என்ன செய்து தள்ளி அமர சொல்லுவது….என யோசித்துக்கொண்டே வந்தவன் தன் ஊரின் எல்லைக்குள் நுழைந்தான்.

சிறிது நேரத்தில் வண்டி கொஞ்சம் நிதானமாக செல்ல, அவனில் இருந்து பிரிந்து கண்விழித்து பார்த்தவள்,ஊருக்குள் நுழைந்து விட்டதை உணர்ந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.ஆனால் கையை விலக்கவில்லை.

ஒருவழியாக வீட்டினுள் வண்டியை செலுத்தியவன்,அதனை நிறுத்திவிட்டு வந்தான்.

முகத்தில் பயமும் தயக்கமும் நிறைந்திருக்க,அவனை ஏறிட்டு பார்த்தவளை பார்த்து "நம்ம வீட்டுக்கு வர என்னடி பயம் உள்ள வா" என அவளின் கரம் பிடித்து அழைத்து சென்றான்.

அவன்மீது மலையளவு கோபம் இருந்தாலும் அவனின் இந்த செயல் அவளுக்கு பிடித்து தான் இருந்தது. மண்டபத்திலும் ஒரு நொடி கூட அவள் கையை விளக்காமல் தன் கைக்குள்ளேயே வைத்திருந்தான்.அவனின் அருகாமையே ஒருவித தைரியத்தை கொடுக்க அவனோடு உள்ளே சென்றாள்.

ஏற்கனவே கல்யாணத்திற்கு சென்று வந்த ஊர் மக்கள் நடந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருக்க...அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

ஒருபுறம் தங்களை விட்டு சென்ற செல்வம் தங்கள் வீட்டுக்கே வருவதை எண்ணி மகிழ்ந்தாலும்...மதுவுடன் நிச்சயம் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற நிலையில் அவனின் செயலை ஏற்க முடியாமல் இருந்தனர்.

அதுவும் விஷயம் அறிந்த மதுவின் பெற்றோர்கள் அதுவும் அந்த வீட்டின் முடிசூடா ராணியாக வளம் வந்த சகுந்தலாவிற்கு தன் மகள் வாழ்க்கை பறிப்போனதில் கோபத்தின் உச்சியில் இருந்தார்.

இருவரும் உள்ளே நுழைய...அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வரவேற்பறையில் தான் இருந்தனர்.

இவர்களை பார்த்தவுடன் அனைவரும் எழுந்து நிற்க... வர்ஷினியை பார்த்தவுடன் அணைக்க சொல்லி துடித்த கரங்களை சகுந்தாலாவிற்காக கட்டுப்படுத்தி கொண்டு இருந்தனர் அந்த வீட்டின் பெரியவர்கள்.

இத்தனை வருடங்கள் கழித்து வரும் பேத்தியை பார்த்து கொண்டு மட்டும் இருப்பது எப்படி சாத்தியம் ஆகும்.ஆனால் வேறு வழியில்லாமல் அப்படி தான் இருக்க முடிந்தது அவர்களால்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு விஷயம் தெரிந்து சகுந்தலா ஆடிய ஆட்டம் அப்படி.

மதியின் தந்தை "என்னடா பண்ணிட்டு வந்து நிற்கிற….உனக்கு நிச்சயம் ஆகிடுச்சு அதுவாவது நியாபாகம் இருக்கா இல்லையா, இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை வச்சிக்கிட்டு பண்ற காரியமா இது" என சத்தம் போட…

அதற்குள் சகுந்தலா பேச்சை தொடங்கினார்."நாங்க உனக்கு என்ன பண்ணோம் மதி,எங்களை இப்படி ஏமாத்திட்டியே, கழுத்தை அறுத்துட்டியே டா... என் பொண்ணை பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தியா" என கண்ணீரோடு கத்த….அதனை தொடர்ந்து என கேள்விகள் நீண்டுகொண்டே போனது.ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி பண்ணிட்டியே பண்ணிட்டியே என கேட்க…

"அப்பா பிளீஸ் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க… கல்யாணத்தை நிறுத்த, வேற வழியே இல்லாம தான், இவ கழுத்துல தாலியை கட்டினேன்னு ஒரு வரியில் என்னால பொய் சொல்லிட்டு போக முடியும். ஆனா அதை நான் சொல்ல போறதில்லை.

என்னை பத்தி முழுசா எல்லாருக்கும் தெரியணும்னு
நினைக்கிறேன்.உண்மையை சொல்லனும்னா நீங்க என்னைக்கு கல்யாணத்தை பத்தி பேசுனீங்களோ அப்பவே என் மனசுல வந்த முகம் மித்ரா
முகம் தான்.

அது எப்படி…. ஏன் வந்ததுன்னு காரணம் எல்லாம் எனக்கு சொல்ல தெரியலை.ஆனா அதுக்கப்பறம் வந்த ஒவ்வொரு நாளும் அவ மட்டும் தான் என மனசுக்குள்ள இருந்தாள்.அதுமட்டும் என்னால உறுதியாக சொல்ல முடியும்.
 

Anjali

Well-known member
Wonderland writer
என்கிட்ட ஒருவார்த்தை….ஒரே ஒரு வார்த்தை முன்கூட்டியே சொல்லியிருந்தா கூட, கண்டிப்பா நான் நிச்சியத்தை நடக்க விட்டுருக்கவே மாட்டேன்.எனக்கு மது மேல எந்த விதமான காதலும் வரலை.

எனக்கு மீரா எப்படியோ அதே மாதிரி தான் மதுவும்.ஒருவேளை வர்ஷினி இதே வீட்டில் இருந்திருந்தா கூட எனக்கு அதே ஃபீலிங் தான் இருந்திருக்கும்.

அவளை விட்டு தள்ளி இருந்ததுனால தான் என்னவோ ஒவ்வொரு நிமிஷமும் அவளையே நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.

"கண்டிப்பா இப்போ அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாமல் இருந்திருந்தாலும் அவளை தவிர யாரையும் கல்யாணம் நான் பண்ணியிருக்க மாட்டேன்" என்றான் உறுதியான குரலில்.

அவன் சொன்ன விஷயம் அனைவருக்கும் புதிது. அதுவும் மித்ராவுக்கு சொல்லவே வேண்டாம், அவனை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் தந்தை 'நிச்சயம் முடிந்து விட்டது' என சொன்னதில் அதிர்ந்தவள், அவனின் பதிலில் அமைதியடைந்தாள்.

"அப்போ மதுக்கு உன்னோட பதில் என்ன மதி" என அவன் அத்தை கேட்க…

அவகிட்ட நான் பேசிக்கிறேன் அத்த...நீங்க எல்லாரும் சொன்னதுனால தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருப்பா.கண்டிப்பா அவளுக்கும் என் மேல எந்த அபிப்பிராயமும் இருக்காது" என்றான்.

"ஆஹா! நல்லா சமாளிக்கிற மதி...ஊரை கூட்டி நிச்சயம் பண்ணியாச்சு,பத்தாததுக்கு தினமும் வண்டில காலேஜுக்கு அழைச்சிட்டு போறேன்னு கூட்டிட்டு போய்ட்டு வந்தாச்சு. மொத்த ஊரும் நீங்க ரெண்டு பேரும் தான் கடிக்க போறீங்கன்னு பேசிட்டு இருந்தது.

இவளோ நடந்ததுக்கு அப்பறம் இனிமே யாரு என் பொண்ணை கட்டிப்பா….சொல்லு டா" என அவன் சட்டையை பிடிக்க…

அவனோ பொறுமையாக "என்ன அத்த பேசுறீங்க, நான் எப்படி மீராவை அழைச்சிட்டு போய்ட்டு வந்தேனோ அப்படிதான் மதுவையும்" என சொல்ல…

"போதும் நிறுத்துடா... திரும்ப திரும்ப அதையே சொல்லாத மீராவும் மதுவும் ஒன்னு இல்ல அதை முதலில் புரிஞ்சிக்கோ. அவ உன் தங்கச்சி, ஆனா மது உனக்கு அத்தை பொண்ணு. நீ வேணா தங்கை மாதிரி நினைத்து இருக்கலாம் ஆனா பாக்குற எல்லாரும் அப்படியே தான் நினைப்பாங்களா?...எப்படியோ உங்களோட சுயநலத்துக்காக என் பொண்ணு வாழ்க்கை போய்டுச்சு" என அழுதுக்கொண்டே இருந்தவர்…

கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மித்ராவின் புறம் திரும்பி…"போனவ அப்படியே போயிருக்க வேண்டியது தானே, எதுக்கு திரும்பவும் வந்து இப்படி எல்லாருடைய சந்தோஷத்தையும் கெடுக்குற.உன்னால தான் என் பொண்ணு வாழ்க்கையே போச்சு" என அவளை வார்த்தையால் கொன்றவர்,மேலும் வார்த்தைகளை விடும்முன்,

"அத்த என்ன பேசுறீங்க?.." என அதுவரை அமைதியாக இருந்தவன், தன்னவளை ஒரு வார்த்தை சொன்னவுடன் கோபத்தில் குரலை உயர்த்த…

"அப்படிதாண்டா பேசுவேன். கல்யாணமாகி ஒரு மணி நேரம் கூட முடியல, அதுக்குள்ள பொண்டாட்டிய சொன்னா கோபம் வருதோ. நான் ஒன்னும் இல்லாததை பேசலயே...அவ தானே எல்லாத்துக்கும் காரணம் என்றவர்,பாக்குறேன் அவ எப்படி இந்த வீட்டில் வாழறான்னு" என சொல்லிவிட்டு அவளை பார்க்க கூட பிடிக்காமல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

அனைவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை...திரும்பி "அம்மாடி உங்க பெரியம்மா பேசினதை எல்லாம் மனசில் வச்சுக்காத டா...ஏதோ கோபத்தில் பேசிட்டா" என அவளின் பாட்டி சமாதான படுத்த முயல,

தன் பெரிய அன்னையின் வார்த்தையில் அதிர்ந்து போனவள்,அதில் இருந்து மீளாமல் அப்படியே உறைந்து இருக்க…

அவளின் நிலை உணர்ந்து மதி தான் "மித்துமா... வா ரூம்க்கு போகலாம்" என அழைக்க,சுயநினைவே இல்லாத பொம்மை போல் அவனின் இழுப்பிற்கு சென்றாள்.

அவள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருக்க...மதி உண்மையிலேயே பயந்து போய்விட்டான்.அவனுக்கு தெரியும் அத்தையின் வார்த்தை அவளை எந்தளவு பாதித்திருக்கும் என்று.ஒருவேளை அவள் அழுதிருந்தாள் கூட இப்படி பயந்திருக்க மாட்டான்.அவளின் அமைதி தான் அவனுள் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் இருக்க...அவளோ அமைதியாக சென்று அங்குள்ள மெத்தையில் படுத்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 12

வீட்டில் உள்ள அனைவருமே சோகத்தில் இருக்க...யாரை எப்படி பேசி புரிய வைப்பது என புரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தான் மதி.

நேரம் கடக்க,மதிய உணவு கூட யாருக்கும் இறங்கவில்லை.மாலை மது வரும் நேரம், சரியாக உள்ளே தனது அறையில் இருந்து வெளியே வந்தார் அவளின் தாய் சகுந்தலா.

எப்போதும் போல் மதி அழைத்து வர செல்ல,அவனை தடுத்து "டேய் ரகு நீ போய் உன் தங்கச்சியை கூட்டிட்டு வா…. இனிமே யாரும் என் பொண்ணு விஷயத்தில் தலையிட வேண்டாம்" என்றவர் தன் மகனை அனுப்பி வைத்தார்.

இன்று தான் அவளுக்கு கடைசி தேர்வு.அதனை முடித்துவிட்டு சந்தோஷமாக வெளியே வர அங்கே அவளுக்காக காத்திருந்தான் அவளின் அண்ணன் ரகு.

"என்ன நீ வந்திருக்க,எப்பவும் அத்தான் தானே வருவாங்க என கேட்டவள்,பின்னர் யாரு வந்தால் என்ன?...
நம்மை அழைச்சிட்டு போக ஒரு ஆள் வந்தால் சரி என நினைத்துக்கொண்டு
எப்போதும் போல் வளவள என பேசிக்கொண்டே வர,எதிரில் கடந்து செல்லும் அனைவரும் அவளையே உற்று பார்ப்பது போல் தோன்றியது.எப்போதும் அதுபோல் அவள் உணர்ந்தது இல்லை.

ஆனால் இன்று தன்னை பார்க்கும் அனைவர் பார்வையிலும் ஏதோ இரக்கம்,அய்யோ பாவம் என்பது போல் பாவனைகள் இருந்தது. எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே வரும் தன் அண்ணன் கூட இன்று அமைதியாக வரவும் 'என்னாச்சு எல்லாருக்கும்' என நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தாள்.

குழப்பத்துடன் வீட்டுக்குள் நுழைய...வீடே அப்படி ஒரு அமைதியில் இருந்து,வீட்டு உறுப்பினர்கள் அனைவர் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருக்க,

ஏதோ பிரச்சனை என உணர்ந்தவளுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது... 'ஓ இன்னைக்கு மித்ராவுக்கு கல்யாணம் இல்ல, அதான் எல்லாரும் இப்படி இருக்காங்க போல' என எண்ணியவளாக தன் கல்லூரி பையை வைத்துவிட்டு முகம் கழுவி வந்தவள் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

"என்ன தாத்தா ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?.. என கேட்க,அனைவரும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாகவே இருந்தனர்.

"எல்லாரும் எப்படி சொல்லுவாங்க?...சொல்றதுக்கு தான் எதுவும் இல்லையே.போனது என் பொண்ணோட வாழ்க்கை தானே, அவங்களுக்கு என்ன கவலை " என்ற அன்னையின் வார்த்தையில் புரியாமல் முழிக்க…

அவளின் குழப்பத்திற்கு யாரும் பதில் சொல்லும் முன் அவளுக்கே புரிந்துவிட்டது மதியின் அறையில் இருந்து வெளியே வந்த மித்ராவை பார்த்து.

காலையில் படுத்தவள் வெகுநேரம் தன் அழுகையில் கரைந்து தன்னையும் அறியாமல் உறங்கியிருந்தாள். மதியும் அவளை எழுப்ப முயலவில்லை.அவள் அழுகையை மறந்து தூங்கினால் போதும் என்று விட்டுவிட்டான்.

இப்போது தான் தூக்கம் களைந்தவள், வெளியே கேட்ட பெரிய அன்னையின் குரலை வைத்து மது வந்ததை அறிந்து வெளியே வந்தாள்.

கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் தாலி,நெற்றி வகிட்டில் குங்குமம் பத்தாதத்துக்கு மதியின் படுக்கையறையில் இருந்து வெளியே வருவதை பார்த்த பின்பும் என்ன நடந்தது என்பதை அறியாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே.

அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்தவள் அழுத்தமாக மதியை பார்க்க…

அவனோ "மது சாரி...எனக்கு உன் நிலைமை புரியுது.உன்கிட்ட பல தடவை சொல்ல வந்தேன், ஆனா நீ தான் நான் ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு சொல்லி என் பேச்சை காதுலயே வாங்கலை" என்க…

"என்ன அத்தான் சொன்னீங்க?..இப்போ இந்த கல்யாணம் தேவையா.படிப்பு முடிந்து இரண்டு வருஷம் ஆனதுக்கு அப்பறம் வச்சுக்கலாம்ன்னு வீட்டுல சொல்லுன்னு தானே சொன்னீங்க"என கண்களில் கண்ணீர் வழிய அவனிடம் கேள்வி கேட்க

"மது நான் அப்படி சொன்னதே கல்யாணத்தை தள்ளி வெச்சா, அதுக்குள்ள எல்லார்கிட்டயும் சொல்லி புரியவைக்க"...என சொல்லும் போதே கை நீட்டி தடுத்தவள்,

"எதுக்கு அத்தான் சுத்தி வளைக்கணும்... ஒரே வார்த்தையில் உன்னை எனக்கு பிடிக்கலை,இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே, நானே எல்லா ஏற்பாட்டையும் நிறுத்தியிருப்பேனே"…என ஆதங்கமாக கேட்க,

அவனிடம் பதில் தான் இல்லை...அவளிடம் நேரடியாக உன்னை பிடிக்கலைன்னு எப்படி சொல்வது என தயங்கியே முதலில் பெரியவர்களிடம் பேசலாம் என்று இருந்தான். ஆனால் யாரும் அவனின் வார்த்தையை கேட்பதாக இல்லை.அதனால் தான் அவளிடம் கல்யாணத்தை தள்ளி வைக்க கேட்டான் ஆனால் கடைசியில் எல்லாம் அவனுக்கே பாதகமாக மாறிவிட்டது.

அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த மித்ரவர்ஷினி... "அக்கா அது… என ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து, யாரும் எந்த விளக்கமும் சொல்ல தேவையில்லை" என முகத்தில் அடித்தது போல் சொன்னவள் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை மதுவிடம் இருந்து.யாரின் சமாதானமும் காதில் வாங்காமல் அழுகையில் கரைந்தாள்.

ஒரு சராசரி பெண்ணாக கல்யாண கனவுகள் அவளுக்கும் இருக்கும் அல்லவா...இப்படி ஒரே நாளில் அனைத்து இல்லை என்று ஆன பின்னர், அதனை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அன்று முழுவதும் அதே நிலைமை தான் மொத்த குடும்பத்திற்கும்.

இங்கு மண்டபத்தை விட்டு சண்முகசுந்தரம் மட்டும் தனியாக சென்றிருக்க...சாந்தியும் தர்ஷினியும் பயத்தோடே வீட்டினுள் நுழைந்தனர்.

வாசல் படியில் காலை வைக்க…"இன்னொரு அடி எடுத்து வச்சீங்க, அப்பறம் இரண்டு பேர் உடம்பிலும் உயிர் இருக்காது சொல்லிட்டேன்".

"எவ்வளவு திமிர் இருந்தா...எனக்கு தெரியாம உன் அண்ணன் பையனை வரவச்சு, உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதும் இல்லாம அத்தனை பேர் முன்னாடி என் மானத்தை வாங்கியிருப்ப" என தன் ஆத்திரம் மொத்தத்தையும் கூட்டி பளார் என்று அறைய,அப்படியே தரையில் சரிந்தார் சாந்தி.

கன்னம் இரண்டும் நெருப்பாய் கொதிக்க,அவரை ஏறிட்டு பார்க்க…"முதல்ல இந்த இடத்தைவிட்டு போடி...உனக்கு கட்டுன புருஷனை விட பொறந்தவீட்டு சொந்தம் தானே முக்கியம். அங்கேயே போய்டுங்க...இனி ஒருதரம் என் கண்ணு முன்னாடி நிக்காதே" என்றவர் வாசல் கதவை பட்டென்று சாத்தினார்.

இருவரும் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.மாலை கடந்தும் கதவு திறப்பதாக இல்லை.

"அம்மா கால் வலிக்குது,அப்பறம் பசிக்குது" என்ற மகளை, தரையில் அமர்ந்து அவளையும் அமர்த்திக் கொண்டார்.

"கொஞ்சநேரம் பொருடா,வீட்டுக்குள்ள போனவுடன் அம்மா சாப்பிட தாரேன்" என்றவர் கதவை திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தார்.

இரவு எட்டு மணி போல் கதவு திறக்க...உள்ளே இருந்து வந்த சண்முகசுந்தரம் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்.

அதன் பின்னர் மகளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல "அம்மா, அப்பா திரும்பவும் அடிப்பாங்களே...நம்மளை உள்ள வரவே சொல்லலையே" என கேட்க,

"அதெல்லாம் இனிமேல் எதுவும் சொல்லமாட்டார்' என சொல்லிவிட்டு சமையலை தொடங்கினார்.

வீட்டில் எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்தாலும் பெண்களுக்கு மட்டும் சமையலறை வேலைக்கு விடுமுறை என்பது கிடைப்பதில்லையே.

காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் மனதையும் உடலையும் சோர்வடைய செய்திருக்க,இருந்தும் தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தார் சாந்தி.

மதியின் வீட்டில் அனைவரையும் இரவு உணவிற்கு அழைக்க…அனைவரும் சொல்லி வைத்தது போல் வேண்டாம் என்ற ஒரே வார்த்தையையே சொன்னனர்.

சிறிதுநேரம் பொறுத்து பார்த்த, அந்த வீட்டின் இன்றைய தலைமுறையின் மூத்த மருமகளான அனு அனைவரையும் பிடிவாதமாக இழுத்து வந்தாள் டைனிங் டேபிளுக்கு.

"இப்படி எல்லாரும் சாப்பிடாம இருந்தா மட்டும் எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுமா மாமா...வந்து சாப்டுட்டு அடுத்து என்னன்னு பார்க்கலாம்" என பிடிவாதமாக அனைவரையும் சாப்பிட வைத்தார்.

மதுவை கூட அவளின் தாய் வற்புறுத்தி உண்ண வைத்திருக்க,ஆனால் இங்கு மித்ராவை சாப்பிட அழைக்க வந்த மதியை தலையால் தண்ணி குடிக்க வைத்தாள் அவனின் மனைவி.

"ஏய்! எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்,வந்து சாப்பிடுடி காலையில் இருந்து சாப்பிடாம இருந்தால் உடம்பு என்ன ஆகும்…நீ ஹாலுக்கு கூட வர வேண்டாம் இதோ நானே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். எழுந்து சாப்பிடுமா" என பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு சொல்ல…

"இன்னைக்கு இங்க கொண்டு வந்துட்டீங்க, தினமும் இப்படியே பண்ணுவீங்களா?...அப்போ நான் இந்த ரூமுக்குள்ளயே அடிமை மாதிரி இருக்கணுமா" என கேட்க…

"இருக்கிற டென்ஷனில் நீ வர படுத்தாதடி...பிளீஸ் மித்துமா,கொஞ்சமா சாப்பிடு.மத்ததை அப்பறம் பேசிக்கலாம்" என்றான்.

அவளோ அவரசமாக எழுந்தவள் "இன்னொரு வாட்டி என்னை ' மித்து மித்துமா' இப்படி சொல்லி கூப்பிட்டீங்க அப்பறம் நடக்கிறதே வேற" என கத்த,

"ஏண்டி உனக்கு அந்த பெயரை வைத்ததே நான் தான்.என்கிட்டேயே கூப்பிடாதன்னு சொல்லுவியா. அப்படி தாண்டி கூப்பிடுவேன் உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ" என்றவன் அவனும் சாப்பிடாமல் தட்டை வைத்துவிட்டு படுக்க வர,

"இப்போ எங்க படுக்க போறீங்க" என கேட்டாள்.

"இது என்னடி கேள்வி கட்டில்ல தான்" என்றான் அவனும் கடுப்பாக.

"அதெல்லாம் முடியாது,ஒழுங்கா போய் கீழே படுங்க...உங்க கூட ஒன்னா ஒரே கட்டிலில் என்னால படுக்க முடியாது" என்றாள்.

"ஏய் என்ன பத்தி என்னடி நினைச்ச,ஒரே கட்டிலில் படுத்தா உன்மேல அப்படியே பாஞ்சிடுவேன்னு நினைக்கிறியா...உன் விருப்பம் இல்லாம என் விரல் நுனி கூட உன்மேல படாது.அதையும் மீறி என்மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா சொல்லு நான் கீழயே படுத்துக்கிறேன்" என்க..

அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் "இல்லை...உங்க மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை என்றவள்,உங்களால முடியாதுனா சொல்லுங்க, நானே கீழ படுத்துகிறேன்" என்றால் உறுதியான குரலில்.

அவளின் வார்த்தை அவனுக்கு மிகுந்த வலியை கொடுக்க,அவளை பார்த்து விரக்தியாக சிரித்தவன்,

"ஓ…பரவாயில்லை என்மேல உனக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் தான்" என சொன்னவன் ஒரு பெட்ஷீட்டை எடுத்து தரையில் விரித்து அதில் படுத்துக் கொண்டான்.

"முதல் நாளே என்னை வச்சு செய்றா..இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாளோ, கடவுளே என்னை காப்பாத்து" என்றவன் தூங்க முயன்றான். ஆனால் தூக்கம் தான் வரவில்லை.அவன் மட்டுமல்ல அனைவருக்கும் அதே கதிதான்.அதிகாலையில் தன்னை மீறி உறக்கத்திற்கு சென்றான்.

மறுநாள் காலையில் தடதடவென கதவை தட்டும் சத்தத்தில் கண் விழித்த வர்ஷினி.எழுந்து அமர,கீழே படுத்திருந்த மதியோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.

"யாரது இப்படி விடாமல் கதவை தட்டுவது" என புலம்பியபடி கதவை திறக்க...அங்கே யாரும் இல்லை. கடுப்புடன் திரும்ப முயல, அப்போது தான் அங்கு இடுப்பில் கைவைத்து கொண்டு இவளையே முறைத்துக் கொண்டு நின்றிருந்த தியாவை பார்த்தாள்.

அவள் மனோகர் அனுவின் மகள் என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்.மற்றபடி யாரிடமும் பேசியது இல்லை என்பதால் அவளின் பெயர் கூட தெரியவில்லை வர்ஷினிக்கு.

முழங்காலில் அமர்ந்தவாறு "ஹாய் குட்டி உங்க பேர் என்ன?.." என சின்னவளை பார்த்து கேட்க...அவளோ முகத்தை திருப்பிக்கொண்டு,இவளின் கையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே அவளின் செல்ல தந்தை தரையில் படுத்து இருக்க,மீண்டும் திரும்பி வர்ஷினியை முறைத்தவள் எப்போதும் போல் அவன் மேல் ஏறி படுத்திருந்தாள்.

"அப்பா... அப்பா ஏந்திரு" என்க…

" வந்துட்டியா செல்லக்குட்டி" என்றவன் மகளை விழாமல் பிடித்துக்கொண்டு கண் மூடி கிடந்தான்.

"அப்பா இவங்கள வெளிய போ சொல்லு. எனக்கு பிதிக்கவே இல்ல" என சொல்ல….யாரை சொல்கிறாள் என மெல்ல கண்களை திறந்து பார்க்க,அங்கே இவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் வர்ஷினி.

உடனேயே பதட்டமானவன் "ஏய் செல்லம்... அப்படியெல்லாம் சொல்ல கூடாது.அவங்க தான் உங்க சித்தி" என்க,

"இவங்க ஒன்னும் எனக்கு சித்தி இல்ல,மது தான் சித்தி என்றவள் மித்ராவின் புறம் திரும்பி "நீ போ... உன்னால தானே எங்க மது சித்தி அழுதுச்சு. போ நீ வேணா போ" என்றாள் அழும் குரலில்.

இப்போது அழும் மகளை பார்ப்பதா,இல்லை அழ தயாராக இருக்கும் மனைவியை பார்ப்பதா என்றே அவனுக்கு தெரியவில்லை.

"செல்லக்குட்டி .. யாரு உன்கிட்ட இப்படி தப்பு தப்பா சொன்னது. இவங்களும் உனக்கு சித்தி தான்" என பொறுமையாக எடுத்து சொல்ல,

"ம்ஹும்...இல்ல ...இல்ல என வேகமாக தலையாட்டி மறுத்தவள்,எனக்கு பிடிக்கல ….நீயும் அவங்க கூட பேசாத" என கட்டளையிட,

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த வர்ஷினி,அவனை நோக்கி அழுத்தமான ஒரு பார்வையை செலுத்திவிட்டு மீண்டும் சென்று படுத்துக்கொண்டாள்.

அவனுக்கு இப்போதே மண்டை காய்ந்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை இதே நிலைமைதான் தனக்கு என எண்ணியவன், சூழ்நிலையை சரி செய்யும் பொருட்டு மகளை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

இன்று அனைவருக்கும் விடுமுறை நாள். பள்ளி கல்லூரி என எதுவும் இல்லாததால் அனைவருமே வீட்டில் தான் இருந்தனர்.

நேரம் கடக்க ...நேற்றில் இருந்து அதே பட்டு புடவையில் தான் இருந்தாள் வர்ஷினி.இப்போது குளித்துவிட்டு மாற்றிக்கொள்ள கூட உடை இல்லாததால் என்ன செய்வது என புரியாமல் யோசித்தவளுக்கு அவனிடம் கேட்கவும் மனம் வரவில்லை.

அப்படியே அமர்ந்திருந்தவள் முன் ஒரு கவரை நீட்டினான் மதி.அவளோ அதை வாங்காமல் முகம் திருப்ப…

"என்ன இப்படியே இருக்க போறதா ஐடியாவா.முதல்ல குளிச்சிட்டு வந்து இந்த டிரெஸ்ஸை போட்டுக்கோ.வீணா பிடிவாதம் பிடிக்காத" என்றவன் சென்றுவிட,

வெகுநேரம் அப்படியே இருந்தவள்,பின்னர் வேறு வழியில்லாமல் குளிக்க சென்றாள். அவள் மீண்டும் வெளிய வந்த போது அறையினுள் மதி இருந்தான்.

"வா சாப்பிட போகலாம்" என கூப்பிட…அவளோ "எனக்கு வேண்டாம்" என்றாள்.

"போதும்டி உன் உண்ணாவிரதம் நேத்து ஃபுல்லா பட்னி, இன்னைக்கும் அதையே பண்ணாத…. ஒழுங்கா சாப்பிட வா. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க" என்று பிடிவாதமாக அழைத்து சென்றான்

கிட்டத்தட்ட வீட்டின் பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க... அப்போதுதான் மதுவை சகுந்தலா சாப்பிட கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து மித்ராவை அழைத்து வந்த மதி, இவர்களுக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர வைத்தான்.

மித்ரா அமர்ந்த அடுத்த நொடி "நிம்மதியா சாப்பிட கூட முடியல இந்த வீட்டில்" என எழுந்து செல்ல முயன்ற சகுந்தலாவை பார்த்து

"நீங்க போக வேண்டாம் பெரியம்மா, சாப்பிடுங்க,நானே போறேன்" என சாப்பாட்டில் வைத்த கையை எடுத்துவிட்டு எழுந்து கொண்டாள் வர்ஷினி.

"ஏய் சாப்பிட்டு போடா...இல்லனா வா உள்ள போய் சாப்பிடலாம்" என ஒரு கையில் தட்டையும் மறுகரத்தில் அவளின் கரத்தை இறுக்கமாக பிடித்திருந்தான் மதி

"அப்பப்பா…. நானும் பார்த்ததும் தான் பார்த்தேன் இப்படி ஒரு நடிப்பை பார்க்கலைடி யம்மா.ஒரே நாளில் அவனை மயக்கி பின்னால சுத்த வச்சிட்டியே சரியான கைகாரி தான்" என தரம் தாழ்ந்த வார்த்தைகளை கோபத்தில் வெளியே விட…

அதுவரை அனைத்தையும் பொறுத்து கொண்டு இருந்தவளால் அவளின் நடத்தையை பற்றி பேசிய பின்னும் அந்த அமைதியையை கைப்பிடிக்க முடியவில்லை.

அவளுக்கு கோபம் மொத்தமும் மதியின் மேல் தான் திரும்பியது.அனைத்திற்கும் காரணம்,அவன் தன்னை மணந்து தானே.
நானா அவனை என்னை 'கல்யாணம் பண்ணிக்கோ ….கல்யாணம் பண்ணிக்கோன்னு' கெஞ்சினேன்.பொறுக்கி நான் பாட்டுக்கு இருந்தேன் தாலி கட்டி இப்படி எல்லாரும் பேசும்படி செய்துவிட்டான் என்ற ஆதங்கத்தில்,

"கையை விடு முதல்ல,எல்லாமே உன்னால தான்.என்னோட இந்த நிலைமைக்கு மொத்த காரணமும் நீ தான்" என அழுதவள்,

"எதுக்காக என்னை கல்யாணம் பண்ண….சொல்லுடா சொல்லு. என் கல்யாணத்தை நிறுத்துன்னு உன்கிட்ட வந்து கேட்டனா, இத்தனை வருஷமா இருக்கேனா செத்தனான்னு கூட பார்க்கலை தானே... அப்படியே இருந்திருக்க வேண்டியது தான.இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது அக்கறை" என அவன் சட்டை பிடித்து உலுக்க,

அதற்குள் அனைவரும் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.

"சொல்லுடா எதுக்கு இப்படி மரம் மாதிரி நிற்கிற" என விழிகளில் இருந்து நிற்காமல் தாரை தாரையாக கண்ணீர் கொட்ட…

அவனோ அவள் பேசுவதை பற்றி பெரிது படுத்தாமல் அவளை சமாதான படுத்த முயன்றவனாக "அழாதடா...எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.கொஞ்சம் பொறுமையா இரு" என்றான்.

"பொறுமையா இருக்கணுமா...பார்த்த தானே எப்படி பேசுறாங்கன்னு. நான் அவங்களை மட்டும் சொல்லல,இங்கவுள்ள எல்லாரையும் தான் சொல்றேன்.

இத்தனை வருஷம் கழிச்சு இந்த வீட்டுக்கு வந்திருக்கேன், ஆனா யாரு முகத்திலும் நான் வந்திருக்கேன் என்கிற சந்தோஷம் இருக்கா பாரு, இல்ல….எல்லாருமே மது அக்காவை பத்தி மட்டும் தான் நினைச்சாங்களே தவிர என்னை பத்தி யாருமே நினைக்கலையே.

அவங்களை பத்தி நினைச்சத்தை தப்புன்னு சொல்ல வரல,ஆனா யாருக்கும் என்னோட நிலைமை புரியவே இல்லை தானே.

இப்போ வரைக்கும் ஒவ்வொரு நாளும் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறது ஒன்னே ஒன்னு தான்,திரும்பவும் எல்லாரும் ஒரே வீட்டுல பழையபடி சந்தோஷமா இருக்கணும். அது மட்டும் தான் என்னோட ஆசையா இருந்தது.

நேத்து உன்கூட வரும் போது கூட...என்னை பார்த்த பிறகு எல்லாரும் எவ்ளோ சந்தோஷ பட போறாங்கன்னு கனவு கண்டுட்டே வந்தேன். ஆனா ஒருத்தர் முகத்தில் கூட நான் வந்ததில் சந்தோஷம் இல்லை.

"அவ்வளவு ஏன் இந்த குழந்தைக்கு கூட என்னை பிடிக்கலையே,அந்த சின்ன குழந்தை மனசுல கூட நான் கெட்டவளா தானே இருக்கேன்" என தேம்ப…
 

Anjali

Well-known member
Wonderland writer
அவள் அழுகையை அவனால் சகித்து கொள்ளவே முடியவில்லை."பிளீஸ்மா அழாத ….அவ சின்ன குழந்தைடா அவளுக்கு என்ன தெரியும்,அதையெல்லாம் நினைச்சு ஏண்டி உன்னையே வருத்திக்கிற" என அவளின் கரத்தை பிடிக்க முயல…

அவனை தள்ளிவிட்டு "நேத்து எல்லாரும் வந்ததில் இருந்து மாத்தி மாத்தி 'ஏண்டா இப்படி பண்ண...ஏண்டா இப்படி பண்ணன்னு' கேட்டாங்களே, அதுக்கு என்ன அர்த்தம்.நான் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை அவங்களுக்கு மது அக்கா கல்யாணம் நின்னது மட்டும் தான் கவலை.

அப்போ நான் யாரு இவங்களுக்கு...நானும் இந்த வீட்டு பொண்ணு தானே,அது ஏன் யாருக்கும் தோணலை.ஒருவேளை நான் மட்டும் தான் அப்படி நினைக்கிறேன் போல,உங்க எல்லாரையும் பொறுத்தவரை நான் யாரோ தான் இல்லையா" என நிறுத்தாமல் மனதில் இருந்த மொத்தத்தையும் கொட்டியவள்,மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றாள்.

எல்லாருக்கும் என்னை பிடிக்கும் என்ற நினைப்பிலாவது சந்தோஷமா இருந்திருப்பேன். உன்னால தான் இப்படி எதுக்குடா எனக்கு தாலி கட்டுன" என திரும்ப திரும்ப அதையே கேட்க…

"ஏண்டி உனக்கென்ன பைத்தியமா..திரும்ப திரும்ப கேட்டதையே கேட்டுட்டு இருக்க...இப்போ என்ன உனக்கு நான் எதுக்கு உன்னை கட்டிகிட்டன்னு தெரியணும் அது தானே"...

"ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன் போதுமா….என்னமோ நான் செய்ய கூடாத தப்பு பண்ண மாதிரி பேசிட்டு இருக்க,ஒருவேளை நான் மட்டும் கல்யாணத்தை நிறுத்தலைன்னா என்னடி பண்ணியிருப்ப" என கோபத்தில் இவனும் கத்தினான்.

அமைதியாக இருந்தாள் தானே மீண்டும் பேசுவாள் என்று எண்ணியே இவனும் பதிலுக்கு கோபத்தை காட்ட...அவன் கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதிலை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனான்.அவன் மட்டும் அல்ல மொத்த குடும்பமும் தான்.

ஒருவேளை நீ கல்யாணத்தை நிறுத்தலைன்னா...செத்து போயிருப்பேன் போதுமா. உண்மையை சொல்லனும்னா கடைசி நிமிஷம் வரைக்கும் நீ வந்து கல்யாணத்தை நிறுத்துவன்னு நினைச்சேன் தான். ஆனா இப்படி தாலி கட்டுவேன்னு நினைக்கலை.

நீ வரலைன்னா கண்டிப்பா இந்நேரம் அது நடந்திருக்கும். ஆனா இப்போ நடக்கிற எல்லாத்தையும் பார்க்கும் போது நீ வராமலேயே போய்யிருக்காலாம்னு தோணுது.

அப்படி மட்டும் நீ வராமல் இருந்திருந்தால்...இப்போ இப்படி பேசுற எல்லாரும் எனக்காக அழுதாவது இருப்பாங்க என்றவள்,திரும்பி

"ஏன் பெரியம்மா ஒருவேளை நான் செத்துருந்தா எனக்காக அழுதுருப்பீங்க தானே" என கண்ணீரோடு கேட்க…

அவளின் அந்த கேள்வியில் அவருக்குமே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவர் ஒன்றும் அவளுக்கு எதிரி இல்லையே...தன் மகளின் திருமணம் நின்ற அதிர்வில் அவளின் மேல் கோபம் இருந்தாலும் அதற்கு முன்பு வரை அவரும் அவளின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தவர் ஆயிற்றே.

தன் தங்கை மகள் என்ற பாசம் அதிகமாகமே இருந்தது. ஒரு காலத்தில் அம்மா அம்மா என தன் காலையே சுற்றி வந்த வர்ஷினியின் நினைவில் கண்களை மூடிக்கொண்டு நின்றார். ஆனால் உடனடியாக கோபம் மறந்து பேசிடவும் முடியவில்லை அவரால்.

அதுவரை அவளின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன்,அவளின் செத்துருப்பேன் என்ற வார்த்தையில் கோபம்அதிகரிக்க 'எவ்ளோ திமிர் இருந்தா நான் இருக்கும் போதே செத்து போயிருப்பேன் என சொல்லுவாள்' என்ற ஆத்திரத்தில் பளார் என்று அறைந்திருந்தான்.

அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை,அவளின் உலறல்களை நிறுத்துவதற்கு.

அதுவரை மனதில் உள்ள அனைத்தையும் பேசிக்கொண்டிருந்தவள் அவனின் அடியில் அதிர்ந்து அப்படியே உறைந்து நின்றாள்.

அதற்கு மேலும் பொறுமையை கடைபிடிக்க முடியாதவன் அவளின் கரம் பிடித்து தரதரவென்று தங்கள் அறைக்குள் இழுத்து சென்றான்.

அவளின் "விடுடா விடு" என்ற வார்த்தைக்கு கொஞ்சமும் இறங்காமல் அறைக்குள் சென்று அவளை தள்ளியவன் கதவடைத்தான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 13

அவளை உள்ளே விட்டு கதவடைத்துவிட்டு வெளியே வந்தவன் இப்போது அனைவரையும் பார்த்து கத்த தொடங்கினான்.

"இப்போ உங்க எல்லாருக்கும் சந்தோஷம் தானே...அவ வரதுக்கு முன்னாடி வரை அவளை நினைச்சு அழுது புலம்ப வேண்டியது.ஆனா வந்தவளை வான்னு கூட கூப்பிட யாருக்கும் வாய் வரலை இல்ல...

அவ பேசுனதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லுங்க?... சொன்னது எல்லாமே மறுக்க முடியாத உண்மை .இங்க எல்லாரும் மதுவை எப்படி பார்க்குறீங்களோ அதே மாதிரி தானே அவளை பார்த்திருக்கணும். ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது போல தானே நீங்களும் நடந்துக்குறீங்க" என ஆதங்கமாக கேட்டவன்,

"சத்தியமா அவளுக்கே தெரியாது நான் அவ கழுத்தில் தாலி கட்டுவேண்ணு, அப்பறம் எப்படி எல்லாத்துக்கும் அவள் காரணமாக முடியும்.

உங்ககிட்ட இருந்து நிச்சயமா இதை எதிர்ப்பார்க்கலை..அதுவும் நீங்க இரண்டு பேரும் கூட எதுவுமே பேசலயே" என தன் தாத்தா பாட்டி இருவர் முன்னும் நிற்க…

அவர்களும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து பதில் சொல்ல முடியாமல் நின்றனர்.
தங்கள் மகளின் கண்ணீர் தான் அதுக்கு காரணம் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை நாளும் தங்களை எண்ணியே தவித்திருந்த பேத்திக்கு நியாயம் செய்யவில்லையே என்று மனம் வருந்தினார்கள்.

ஒருவேளை அவளுக்கு சாதகமாக யாராவது பேசியிருந்தால் இன்னும் இந்த பிரச்சனை பெரிதாக வெடித்திருக்கும் என்பது திண்ணம்.

"எங்களை என்ன ராஜா பண்ண சொல்ற,அதிர்ச்சியில் என்ன பேசுறதுன்னு தெரியலையே. பேசி பிரச்சனையை பெருசாக்குறதை விட அமைதியா இருந்தாலாவது உன் அத்தையின் கோபம் கொஞ்சம் மட்டுப்படும்னு நினைச்சோம்" என வயதான காலத்திலும் மகிழ்ச்சி என்பது இல்லாமல் துயரத்துடன் சொன்னவர்கள் சோர்ந்து அமர்ந்துவிட்டனர்.

அடுத்து தன் அத்தையை பார்த்து திரும்பியவன் "அது எப்படி அத்த நீங்க தூக்கி வளர்த்த பொண்ணை பார்த்து இப்படி சொல்ல முடிஞ்சது உங்களால் . அவ சின்ன பொண்ணு இப்போதான் ஸ்கூல் முடிச்சிருக்கா,நீங்க சொன்ன வார்த்தைக்கு முழு அர்த்தம் கூட அவளுக்கு புரிஞ்சிருக்காது. அவளை போய் மயக்குறா,சரியான கைக்காரி அப்படி இப்படின்னு பேசிட்டீங்களே….அப்படியே பண்ணாலும் யாரை பண்றா?..என்னை, அவ புருஷனை தானே கைக்குள்ள போட்டுக்க பார்க்குறா அதுல என்ன தப்பிருக்கு சொல்லுங்க..

உண்மையை சொல்லனும்னா அவ அந்த வேலையை செய்யவே தேவையில்லை. எதுவும் பண்ணாமலே நான் அவகிட்ட மயங்கிதான் இருக்கேன் போதுமா…. இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படலை. அவ என்னை கைகுள்ள வெச்சுக்க வேண்டிய அவசியமே இல்லை, நானே அவள் கைக்குள்ள இருக்க தான் ஆசைப்படுறேன்" என்றவன்,அடுத்து யாரின் பேச்சையும் கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் அவன் சட்டையை பிடித்து "ஏண்டா இப்போ அடிச்ச" என அவன் அடித்த கன்னத்தை ஒரு கையிலும்,சட்டையை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டே கேட்க,

"அடிச்சத்தோடு விட்டுடேன்னு சந்தோஷ படு. வர ஆத்திரத்திற்கு" என பற்களை கடித்தான்.

ஆனால் வெகுநேரம் அவள்மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாதவன்,அவள் முகத்தை கரங்களில் ஏந்தி "ஏண்டி அப்படி சொன்ன,உனக்காக நான் இல்லையா" என அவளையே பார்க்க...அவளும் அவனின் பார்வைக்கு சளைக்காமல் எதிர் பார்வை பார்த்தாள்.

"நீ எனக்காக இருக்கங்குற நம்பிக்கையை, நீ எனக்கு கொடுக்கலையே...அப்பறம் எப்படி உனக்காக காத்திருப்பேன் சொல்லு" என சரியாக கேட்டாள்.

பெண்ணவளின் முகம் கோபத்திலும் அழுகையிலும் சிவந்து இருக்க,உதடுகளோ உணர்ச்சியின் மிகுதியில் துடித்துக்கொண்டிருந்தது. குழல் கலைந்து அந்த நிலையிலும் பார்க்க அழகோவியம் போல் தான் அவன் கண்களுக்கு தெரிந்தாள் வர்ஷினி.

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க… அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்,அவள் முகத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அவளும் அதற்கு மேல் முடியாமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கிவிட்டாள்.

சற்றுநேரம் அவளின் மனஅழுத்தம் குறையும் வரை அழ அனுமதித்து மென்மையாக தலையையும் முதுகையும் வருடி,அவளின் கோபம் குறையும் மட்டும் இதம் தந்தவன் ,அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு "அது என்னடி வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு கூப்பிடுற...ஒழுங்கா அத்தான் சொல்லு" என்க,

அப்போது தான் அவன் மார்பில் சாய்ந்து இருப்பதை உணர்ந்தவள் சட்டென்று அவனில் இருந்து விலகினாள்.

"ஏய் இப்போ எதுக்கு தள்ளி போற" என அவளின் கரம்பிடிக்க அவளை நெருங்கினான் மதி.

"ச்சீ..போடா உன்னையெல்லாம் அத்தான்னு சொல்லமாட்டேன் போ" என முகம் திருப்ப…

"ஏய் என் முன்னாடி இப்படி முகத்தை திருப்புறது,உதட்டை சுழிக்கிறது இதெல்லாம் வச்சுக்கிட்டன்னு வை, அப்பறம் நான் என்னோட வேலையை காட்ட வேண்டியிருக்கும்" என கோபம் போல் சொன்னவன்,

"ஒன்னு அத்தான்னு கூப்பிடு இல்லனா சின்ன வயசில் கூப்பிடுவது போல் மதின்னு பேர் சொல்லி கூப்பிடு" கன்னம் கிள்ள,

"அதெல்லாம் முடியாது நான் வாடா போடா தான் சொல்லுவேன். எனக்கு நீ சொல்ற மாதிரி கூப்பிட பிடிக்கலை" என்றவள்….தன் கால்களை தரையில் ஊன்றி எக்கி அவன் உயரத்திற்கு வர முயன்றவளால் அவன் உயரத்தை எட்ட முடியவில்லை.

'பனமரம்…. பனமரம்..' என மனதில் நினைத்தவள் "ஓய் கொஞ்சம் கீழ குனி" என அவனை பார்த்து சொல்ல….

அவனோ "எதுக்குடி" என கிறக்கமாக குரலில் ஒருவேளை முத்தம் தான் தர போகிறாளோ என்ற ஓவர் கற்பனையில் தன்னை அவள் உயரத்திற்கு ஏற்ப குனிந்து நின்றான்.

அவனை நெருங்கியவள், மிக நெருக்கத்தில் நின்றுக்கொண்டு "கண்ணை மூடு" என்றாள்.

அவனும் 'என்ன பண்ண போறா இவ, பில்டப் எல்லாம் ஓவரா இருக்கே '...என ஒருவித எதிர்ப்பார்ப்பில் விழி மூடி நின்றான் தன்னவளின் விருப்பத்திற்கு இணங்கி.

அவளோ அவனையே குறுகுறுவென பார்த்தபடி தன் கையின் முதலில் கட்டை விரலை மடக்கி, அதன்பின் மற்ற விரலையும் மடித்துக்கொண்டு அவனை அடிக்க தயாராக, அவனோ முகத்தில் தோன்றிய புன்னகையுடன், ஒருவித மயக்க நிலையில் இருந்தான்.

"என்னையே அடிச்சிட்ட இல்ல உன்னை என்றவள்"அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க,

அவளின் தீண்டலுக்காக காத்திருந்தவன்,அவளின் அடியில் உண்மையிலேயே வலியை உணர்ந்தான், "ஆ...அம்மா" என கதறலோடு விழியை திறக்க,அவளோ கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்.

"ராட்சசி அடிச்சது இல்லாம சிரிக்க வேற செய்றியா" என தலையை தடவிக்கொண்டே அவளை பிடிக்க முயல...அவளோ அவன் கையில் சிக்காமல் மான் போல் துள்ளி குதித்து ஓடினாள்.

அவனும் நிறுத்தாமல் "நில்லுடி,நீ எங்க ஓடினாலும் இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை" என கட்டிலை சுற்றி அவளை துரத்திக்கொண்டு ஓடினான்.

வெகுநேரம் அவனிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியவள், மூச்சரைக்க வேகத்தை குறைக்க,அப்போது தான் அவளை பிடிக்க முடிந்தது மதியால்.

"ஒரு போலீஸ் காரனையே இவளோ நேரம் ஓடவிட்டுட்ட இல்ல, அதுக்கு தண்டனையா என அவளை நெருங்க… வர்ஷினியின் கயல்விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய,

அவளை நெருங்கி நின்றவன்,எதுவும் செய்யாமல் "எல்லாத்துக்கும் கரெக்டா கணக்கு வச்சிருக்கேன்.எனக்கு ஒரு காலம் வராமலா போய்டும். அப்போ இருக்குடி உனக்கு" என்றவன் விலகி நிற்க அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.

'பொறுக்கி பொறுக்கி' என வாய்க்குள் முணுமுணுக்க,
"எதுவா இருந்தாலும் சத்தமாவே சொல்லு...நீ என்ன சொன்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்க...அவளோ பிடிப்பட்ட நிலையில் அவன் முகம் பார்க்க தவிர்த்தாள்.

நாட்கள் செல்ல...அன்றைய நாளுக்கு பிறகு அனைவரும் அவள்மேல் தங்கள் பாசத்தை வெளிப்படையாக காட்ட தொடங்கியிருந்தனர். ஆனால் அவளால் தான் அவர்களுடன் இயல்பாக பேசி பழக முடியவில்லை. அவர்கள் வம்படியாக நிறுத்தி பேசினாலும் ஓரிரு வார்த்தையில் முடித்து கொள்வாள்.

முக்கியமாக சகுந்தலா அவளிடம் எந்த வம்பிற்கும் செல்வதில்லை. அன்றைய தினம் அவளின் வார்த்தை அந்தளவிற்கு இவரையும் தாக்கியிருந்தது.

வம்பு செய்வதில்லையே தவிர,பழையபடி கோபம் மட்டும் இன்னும் குறையவில்லை. அவள் வந்தாள் கண்டுகொள்ளாமல் இருப்பார்,முன்பு போல் எழுந்து செல்வதோ, திட்டுவதோ இல்லை.அவளை கடந்து செல்ல பழகி இருந்தார்.

இங்கு இப்படி இருக்க, அங்கு தர்ஷினியோ தன் அக்காவின் பிரிவில் மருகிக்கொண்டிருந்தாள்.
நடுவில் ஒருமுறை காய்ச்சல் கூட வந்துவிட்டது. ஆனால் சாந்தி தான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டார்.

சண்முகசுந்தரம் இதற்கு முன்பாவது மனைவியின் கையில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்போது அதையும் தடுத்துவிட்டார். சாந்தியும் அவரிடம் பேச முயற்சிக்கவில்லை. அவருக்கா என்னைக்கு பேசணும்னு தோணுதோ அன்னைக்கு பேசிக்கொள்ளட்டும் என முதன்முறை தன் கோபத்தை அவரும் தெரிவித்தார்.

அப்படியே நாட்கள் செல்ல...அவர்களுக்கு திருமணம் முடிந்த பத்தாவது நாள்,வேலைக்கு சென்றவன் அதே வேகத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தான்.

அறைக்குள் நுழைந்தவன் "ஓய் பொண்டாட்டி... ஒரு இரண்டு மூணு நாளைக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணு வெளிய போகணும்" என மதி சொல்ல,

"அதை ஏன் என்கிட்ட சொல்ற,உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துட்டு கிளம்பு" என அலட்சியமாக சொன்னவள், அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் சட்டமாக அங்குள்ள இருக்கையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள் மித்ரா.

"நான் மட்டும் போக உன்னை எடுத்துவைக்க சொல்லலை,நீயும் தான் என்கூட வர" என்க.

அவளோ "நான் எதுக்கு வரணும்,அதுவும் உன்கூட...நானெல்லாம் எங்கேயும் வர மாட்டேன்" என உதட்டை சுழித்தாள்.

"உன்கிட்ட நிறைய தடவை சொல்லியிருக்கேன், என் முன்னாடி இப்படி பண்ணாதன்னு, என அவள் இதழை வலிக்கும்படி கிள்ளியவன்,சொல் பேச்சையே கேட்க கூடாதுன்னு முடிவில் இருக்கியா" என்றான் இதழை விடுவிக்காமல்…

"உன்னை வான்னு தான் சொன்னேனே தவிர, வரியா வரலாயான்னு உத்தரவு கேட்கலை.ஒழுங்கா கிளம்புற வழியை பாருடி" என்று திரும்ப..

'மூஞ்சியும் ஆளையும் பாரு, பனமரத்தில் பாதி உயரத்தில் இருந்துகிட்டு ஒரு சின்னப்பிள்ளையை எப்படியெல்லாம் மிரட்டுறான்.பொறுக்கி பொறுக்கி ' என மனதுக்குள் நினைத்தவள் வெளியே ஒன்னும் தெரியாத பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு "எங்க போறோம்,எதுக்கு போறோம்" என அடுக்கடுக்காய் கேள்விகளை முன்வைக்க,

'இவ கேள்விக்கு பதில் சொல்லியே என் காலம் போய்டும் போல' என நினைத்தவன், "ஏன் எங்கன்னு சொன்னாதான் வருவியா" என்க,

அவளும் "ஆமாம்" என்றபடி கையை கட்டிக்கொண்டு அவனையே அழுத்தமாக பார்த்தாள்.இல்ல இல்ல முறைத்தாள்.

மதியோ அவளின் முகத்தை வைத்தே அவள் நினைத்ததை கணித்தவன், அடக்கப்பட்ட சிரிப்புடன் "ஹனிமூனுக்கு தான்.கல்யாணம் ஆகி முழுசா பத்து நாள் கூட முடியலை,அதுக்குள்ள பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூனுக்கு போகாமல் கோவிலுக்கா போகமுடியும்" என அவளை பார்த்து நிதானமாக சொல்ல,

அவளோ அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள். "என்னது ஹனிமூனுக்கா" என அலறியவள், பயத்தில் அவனைவிட்டு இன்னும் தள்ளி சென்று சுவரில் பல்லி போல் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள்.

அவளின் பயத்திலும் செயலிலும் வந்த சிரிப்பை முயன்று அடக்கியவன் "சீக்கிரம் பேக் பண்ற வழியை பாரு, நைட் கிளம்பனும்" என்றவன் அறையைவிட்டு வெளியே செல்ல...அவளோ போகும் அவனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவன் மீண்டும் அறைக்குள் நுழையும் வரையிலும் கூட அந்த இடத்தை விட்டு அகலாமல் அதே அதிர்ச்சியில் இருக்க...அவளை நெருங்கியவன் "ஏய் என்னடி பகல் கனவா..? இன்னுமா பேக் பண்ணாம இருக்க" என கேட்க,

தயக்கத்துடன் "இல்ல நான் எங்கயும் வரமாட்டேன்" என முகம் பார்க்காமல் சொல்ல,

அவனும் "அப்படியா சரிவிடு நான் மட்டும் போய்கிறேன்" என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அதுவரை இருண்டு இருந்த முகம் பிரகாசமாக…

"ஹலோ மேடம் நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை, அதுக்குள்ள சந்தோஷம் ஆனா எப்படி' என்றவன், அப்படியெல்லாம் நான் சொல்வேன்னு வேற நினைப்பா...நீ வராலன்னா உன்னை தூக்கிட்டு போவேனே தவிர தனியால்லாம் போகவே மாட்டேன்" என்றான்.

வர்ஷினி அப்போதும் அடங்காமல் "இல்ல இல்ல நான் வரலை" என கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்ல,

கடுப்பானவன் "இங்க பாருடி என் பொறுமையை சோதிக்காத...நீயா வந்தா கார்ல கூட்டிட்டு போவேன்,அடம்பிடிச்சா பைக் தான்.அன்னைக்கு மாதிரி அத்தானை கட்டிபிடிச்சிகிட்டு வரவேண்டியது தான். அப்பவும் அடங்கலன்னு வை, அப்படியே தூக்கிகிட்டு பாதை யாத்திரை மாதிரி நடந்தே கூட்டிட்டு போய்டுவேன்" என மிரட்டலுக்கு இறங்க அது சரியாக வேலை செய்தது.

"ஃபிப்டி கேஜி தாஜ்மஹால் அப்படின்னு உன்னை பார்த்து பாட கூட முடியாது போல, அவ்ளோ ஒல்லியா இருக்க,என்ன ஒரு நாற்பத்து ஐந்து கிலோவாவாது இருப்பியா" என்க…

அவளோ உதட்டை கடித்து "எப்படி சரியா சொல்றான் என்னோட வெயிட்டை" என எண்ணியவள் எதுவும் பேசாமல் இவன் சொன்னதை செய்யாமல் விடமாட்டான் என தன் உடமைகளை பேக் பண்ண தொடங்கினாள்.

அவள் இங்கு வந்த அடுத்த நாள் மாலையே அவளின் உடைகள் மற்றும் அனைத்து உடமைகளும் அவளின் நண்பர்கள், அதான் அந்த வாண்டு கூட்டங்களிடம் கொடுத்து அனுப்பியிருந்தார் சாந்தி.

அதிலிருந்து உடைகளை எடுத்து வைக்க நினைத்தவளுக்கு, எதை எடுத்து வைப்பது என்பதே தெரியவில்லை. அதில் அனைத்துமே புடவையாக தான் இருந்தது. கல்யாணத்திற்காக அவளுக்கு எடுத்த புடவைகள் இவை அனைத்தும்.அதில் ஓரிரண்டு சுடிதார்கள் மட்டுமே இருந்தது.

திரும்பி அவனை திருதிருவென பார்க்க,அவள் பார்வையை உணர்ந்தவன் அவனும் அவளை பார்த்து 'என்ன' என புருவங்களை உயர்த்தினான்.

"எங்க போறோம்னு சொல்லுங்களேன் பிளீஸ், என்கிட்ட வெறும் புடவை தான் இருக்கு" என்க..

"அதெல்லாம் எதுவா இருந்தாலும் பரவாயில்லை பேக் பண்ணு. ஹனிமூன்க்கு டிரஸா முக்கியம்" என அவளை பார்த்து கண்ணடித்தவன் ஹாலிற்கு சென்றான்.

அவனின் தந்தையும் சித்தப்பாவும் சோஃபாவில் அமர்ந்து தங்கள் தொழிலை பற்றி பேசிக்கொண்டிருக்க,இவனும் சென்று அமர்ந்தான்.

"என்னப்பா இன்னைக்கு டியூட்டி இல்லையா" என கேட்க,

"இல்லப்பா போய்ட்டு தான் வந்தேன். இன்னைக்கு நைட் சென்னைக்கு போகலாம்னு இருக்கேன்ப்பா.பஎன் கூட படிச்ச ஃப்ரண்டுக்கு நாளைக்கு கல்யாணம் அதான் என்றவன்,அப்படியே மித்ராவையும் கூட கூட்டிட்டு போறேன்.அவளும் இங்க வந்ததில் இருந்து
ரூம் உள்ளேயே இருக்கா...எங்கயாவது வெளிய போனா கொஞ்சமாவது தன் கூட்டைவிட்டு வெளியே வருவாள்" என்க,அவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.

அனைத்தையும் அறையின் வாசலில் இருந்து கேட்டுக்கொண்டு நின்றிருந்த வர்ஷினிக்கு அப்போது தான் படபடக்கும் இதயம் இயல்புக்கு வந்தது.

அதற்கு மேல் எந்த கேள்வியும் கேட்காமல் வர்ஷினியும் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துவைத்தாள்,அதுவும் அவளுடையதை மட்டும்.

மதியும் தனக்கு தேவையான உடமைகளை அவனே ஒரு பையில் எடுத்துவைத்தான்.

சிறிது நேரத்தில், சாவித்திரியும் மீனாட்சியும் அறைக்குள் நுழைய,அவர்களை பார்த்து எழுந்து நின்றவள் அமைதியாக நிற்க,

'இந்தாடா இந்த புடவையும் நகையும் எடுத்துட்டு போ.கல்யாணத்துக்கு போற அன்னைக்கு இதை போட்டுக்கோ. இது நம்ம குடும்ப நகை,எந்த விசேஷத்திற்கு போனாலும் இப்படி தான் போகணும் என்றவர், இதுயெல்லாம் உனக்கு வாங்கியது தான்" என்க…

"இல்ல எனக்கு எதுவும் வேணாம்.இதை நீங்களே வச்சுக்கோங்க" என்றவள் அமைதியாக நிற்க

"ஏண்டா இன்னும் எங்க மேல உள்ள கோபம் போகலையா...மன்னிச்சிடு டா கண்ணு. நானும் தாத்தாவும் வேண்டாத நாளில்லை,கடைசி காலத்தில் நாங்க மேல போய் சேர்வதுக்கு முன்னால ஒரு தடவை உன்னை பார்த்துட மாட்டோமான்னு ஏங்கி தவிச்சுட்டு இருந்தேன். இப்போதான் மனசுக்கு திருப்தியா இருக்கு,திரும்பவும் இந்த வீட்டை வாழ வைக்கும் மகாலட்சுமி மாதிரி... என் பேத்தியே இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததில் அவ்வளவு சந்தோஷம்" என நெட்டி முறித்தார்.

அவரின் வார்த்தைகள் அவளை தாக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"அப்பத்தா இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க,அதெல்லாம் உன் பேத்தி வாங்கிக்குவா" என சொன்னவன் திரும்பி அவளை அழுத்தமாக பார்க்க,அதில் இப்போ நீ அதை வாங்கி தான் ஆகவேண்டும் என்ற கட்டளை இருந்தது.

அவளும் வேறு வழியில்லாமல் வாங்கி கொண்டாள்.அவளுக்கும் தன் அம்மாச்சியின் அழுகை வருத்தத்தை கொடுக்க,அவன் சொல்லவில்லை என்றாலும் அதை வாங்கித்தான் இருந்திருப்பாள்.

ஆனால் அவனின் முறைப்பால் அவனை மனதுக்குள் திட்டியபடி 'இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடா' என்றாள் வெளியே திட்ட முடியாத ஆத்திரத்தில்.
 

Anjali

Well-known member
Wonderland writer
இரவு கிளம்பும் நேரமும் நெருங்க,
"ஏம்ப்பா மதி எதுல போறீங்க" என அவனின் தாத்தா கேட்க,

"நம்ம கார்ல தான் தாத்தா.பஸ் டிரெயின் எல்லாம் செட் ஆகாது. அதான் நம்ம கார்லயே போகலாம்னு நினைக்கிறேன்" என்றான்.

"அதுசரிப்பா நைட் ஃபுல்லா வண்டி ஓட்டனுமே,உன்னால கண்முழிச்சி இருக்க முடியுமா...கஷ்டமா இருக்கும், வேணும்னா நம்ம ஊருக்கார பயலுவோ யாரையாவது கூட்டிட்டு போயேன்" என்க..

'இவரு என்ன, நம்ம கஷ்டபட்டு போட்ட பிளானை எல்லாம் வீணாக்கிடுவார் போலவே' என எண்ணியவன் அவசரமாக தலையாட்டி மறுத்தான். "அதெல்லாம் ஒன்னும் வேணாம் தாத்தா, எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.நானே பார்த்துக்கிறேன்" என்றான்.

அவனின் அவசரமான பதிலில் அனைவருமே சிரித்துவிட்டனர். அவனோ ஒரு அசட்டு சிரிப்பை உதிக்க,அவளுக்கோ எதுக்கு இப்போ குடும்பமே இப்படி சிரிக்குது என தனக்கு ஒன்றும் புரியவில்லையே என்ற கடுப்பில் இருந்தாள்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய், சகுந்தலா அனைவரின் சிரிப்பையும் கண்டு ஆத்திரத்தில் பல்லை கடித்தார். இது அனைத்தும் தன் மகளுக்கு நிகழ வேண்டியது என்ற கோபத்தில்.

அவருக்கு இன்னும் புரியவில்லை ஒருவேளை மதுவை அவன் மணம் முடித்திருந்தால் கூட கண்டிப்பாக இதெல்லாம் நடந்திருக்காது என்று.

மனதுக்கு பிடித்த,காதாலியுடனான தனிமை என்பது வரம் அதுவும் அதே காதலி மனைவியாக வந்த பின்னர் கிடைக்கும் தனிமை ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பேரானந்தம் அல்லவா...அந்த நிலையில் தான் இருந்தான் மதி.

நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பது இருக்கு.நல்லவர் என்று எண்ணி பார்த்தால் எதிரில் கொலைகாரன் நின்றாலும் அவன் உத்தமனாக தான் தெரிவான். அதுவே மனதில் வன்மத்துடன் பார்த்தால் பச்ச குழந்தை கூட தப்பாக தான் தெரியும்.

சகுந்தலாவின் பார்வையும் அப்படிப்பட்டது தான். தன் மகள் இருக்கவேண்டிய இடம் அது என்று எண்ணி எண்ணியே அவர் தூக்கி வளர்த்த மகள் மீதே தீராத கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொண்டார்.

அவரின் கோபம் பிற்காலத்தில் எத்தகைய விபரீதத்தை தர போகிறது என்பதை அவரும் அறியாமல் தான் போனார்.
 
Status
Not open for further replies.
Top