ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!!-கதை திரி

Status
Not open for further replies.

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!!- 5

சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர்கள், இருவரிடமும் பேச வேண்டும் என்று ஹாலுக்கு வரச் சொல்லி சென்றார் காஞ்சனா. என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருவரும் சென்றனர்.

"ஆதும்மா இது எல்லாம் பாட்டியோட நகை, தேவிக்கு கொடுத்தது போக மீதி நகை உனக்குனு அப்போவே சொல்லிட்டாங்க. இந்தா இது பேங்க் பாஸ் புக், உனக்காக இத்தனை வருஷம் நான் சேர்த்தி வைத்தது" என்று பாலகிருஷ்ணன் பேசினார்.
"மாமா இப்போ எதுக்கு இதெல்லாம்" என்றான் மகிழ்.

"மாப்பிள்ளை இதெல்லாம் எல்லா இடத்துலையும் நடக்கிறது தான், அவசரமா கல்யாணம் பண்ணதால் சரியான சீர் வரிசை எதுவும் செய்யலை. எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான் அவளுக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்ய போறேன்" என்றவர் மகிழுக்காக வாங்கி வைத்த, செயின் மோதிரம் எல்லாம் போட்டு விட்டார்.

அவரது மனதிருப்தியை பாழாக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்தான். அப்போது பாட்டி பேச ஆரம்பித்தார்,"இந்த கிழத்துக்காக கல்யாணம் பண்ணிட்டோம்ன்னு கடமைக்கு வாழந்தீங்க, நான் வாழ்ந்து முடிச்சு எமனை எதிர்பார்கிறேன். என் பேத்தி வாய் பேசுவாளே தவிர மனசுக்குள்ள ஒன்னும் இருக்காது நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு கோயம்பத்தூர் போறீங்கனு தேவி சொன்னா. பேராண்டிக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காமே" என்றவர் சிறிது நேர இடைவெளிக்கு பின் மீண்டும் பேசினார்.

"எய்யா என் பேத்தி, சட்டுன்னு பேசிறுவா கோவத்துல அடிச்சிறாதே. நீ ரொம்ப கோவக்காரன்னு உங்கம்மா சொன்னா. அவ ரொம்ப விளையாட்டு பொண்ணு நீனு எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா " என்று அவனிடம் இருந்து அவளிடம் வந்தார்.

"ஆத்யா இங்க வா ஆத்தா. என்னடா இந்த கிழவி சாகுறதுக்குள்ள நமக்கு இப்படி பண்ணிட்டு போயிடுச்சேன்னு கோவப்பட வேண்டாம். உனக்கு நாங்க சரியா தான் செய்வோம் , நம்ம மொத்த குடும்பத்துக்கும் ஒத்த வாரிசு நீ தான் ஆத்தா. குலத்தை துளிர வைக்கிற மொத்த சக்தியும் வீட்டோட பொம்பளைக் கையில் தான் இருக்கு. நீ நம்ம குடும்பம் தலை குனியுற மாறி எதுவும் செஞ்சுற மாட்டன்னு , உன் மேல் நம்பிக்கை இருக்கு" என்று அவர் பேசி முடித்ததும் அவரை கட்டி, தப்பு பண்ண மாட்டேன் பாட்டி என்று கதறினாள் ஆத்யா.

"தியா எதுக்கு சின்ன குழந்தை மாறி பிஹேவ் பண்ணுற" என்று மகிழ் அவளை நகைத்தான்.
"நான் டுவென்டி ஒன் தான், என்னமோ ஆன்டி மாறி ரியாக்ட் பண்ணுற" என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போது , "ஹாய் அம்மு" என்று உள்ளே வந்தான் இந்தர்.

அவனை கண்ட ஆத்யாவிற்கு கை கால் எல்லாம் நடுங்க செய்தது. ஏதோ பூதத்தை பார்த்தது போல், நேற்று வரை இவனோடு வாழ போகும் நாட்களை எண்ணி கனவு கண்டு இன்று வேறு ஒருவனுக்கு மனைவியாகி அவன் முன்னே நிற்கிறோமே என்று அவள் கூனி குறுகி போனாள்.

தன்னை வேண்டாம் என்று சொன்ன தன்னவள் என்ன செய்கிறாள் தன்னை விட, அவளை இன்னொருவன் நன்றாக பார்த்து கொள்ள முடியுமா என்ற கேலி கண்ணில் இழையாட அவனவளின் அவனை தேட, உன் தேடலுக்கு பதில் நான் தான் என்று அவள் அருகே வந்தான் மகிழ்.

'பார்க்க தன்னை விட நன்றாகவே இருக்கான் தான், என்ன வேலை செய்கிறான்' என்ற யோசனையில் "அம்மு என்ன டி ஒரு நாளிலேயே இப்படி மாறிட்ட என்று மீண்டும் அவளை பேச வைக்க" முயன்றான் இந்தர்.
"எம்.வி நீங்க இந்தர் கூட பேசணும்னு சொன்னிங்கள, அது இவன் தான். நீங்க அவன்கிட்ட என்னை பத்தி தெரிஞ்சுக்கோங்க. நான் உங்களுக்கு பால் எடுத்துட்டு வறேன் என்று அங்கிருந்து ஓடி விட்டாள்.

மகிழுக்கு தான் ஒன்றும் புரியவில்லை, 'இவ எதுக்கு இவனை நம்ப கூட கோர்த்து விடுறா? சரி மாடிக்கு கூட்டிகிட்டு போவோம்' என்று நினைத்தவன்.
"வாங்க இந்தர் அப்படியே காத்தோட்டமா மாடிக்கு போய் பேசலாம்" என்று அவனை கூப்பிட சரி என்று தலை அசைப்பில் அவன் பின்னே செல்ல பெரியவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க வேக வேகமாக பாலை எடுத்துக்கொண்டு மேலே வந்தாள் ஆத்யா.
"அம்மு சாரி டி, நான் பேசுனது தப்பு தான்" என்று அவள் கை பிடிக்க அதை பார்க்கமுடியாமல் மகிழ் திரும்பி கொண்டான்.
"உன் சாரியை நான் அக்ஸப்ட் பண்ணிட்டேன் இந்தர். இப்போ எதுக்கு இங்க வந்த?" என்றாள் கேள்வியாக.

"உன் போன் வீட்டிலேயே விட்டுட்டு போயிட்ட அதை கொடுக்க தான் வந்தேன்" என்றான் இந்தர்.
"தேங்க்ஸ் இந்தர். அப்பறம் இனி என்னை மீட் பண்ணவோ என்கிட்ட பேசவோ வேண்டாம். எனக்கு கல்யாணம் ஆகிருச்சு, அதனால் நீ என்கிட்ட இருந்து தள்ளியே இரு இந்தர். உன்னை வேணாம் என்று காலையிலேயே முடிவு பண்ணிட்டேன். இப்போவும் அப்படி தான் நீ என்னை நெருங்க ட்ரை பண்ணாத" என்று அவள் பேச திரும்பி இருந்தவன் அதை வெகுவாக ரசித்தான்.

'என்ன நம்ம பொண்டாட்டி இன்னைக்கு புல் ஃபாமில் இருக்கா' என்று நினைத்த மகிழ் அவள் பேசுவதை கவனித்தான்.

"அம்மு நீ என்னடி டிபிக்கல் வைப் மாறி பிஹேவ் பண்ணுற. நான் ஒன்னும் கல்யாணம் ஆன பொண்ண லவ் பண்ணலை. நீ தான் நான் உன்னை லவ் பண்ணும் போது இன்னோருத்தரை கல்யாணம் பண்ணிருக்க, அப்பறம் என்னை லவ் பண்ண கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இல்லை" என்று அவன் பேச குழம்பினாள் ஆத்யா.

"இந்தர் என்ன சொல்ல வர எனக்கு புரியல" என்றாள் ஆத்யா.
"அம்மு நீ உன் லைப்ப பாரு ஆனால் நான் இப்பவும் உன்னை தான் லவ் பண்ணுறேன். அண்ட் லாஸ்ட் வரை உன்னை மட்டும் தான் லவ் பண்ணுவேன். உன் ஹஸ்பண்ட் ஸ்மார்ட்டா இருக்காரு என்ன பண்ணுறாரு" என்று அவன் பேசி கொண்டே போக பதிலற்று நின்றாள் அவள்.

அவன் புறம் திரும்பிய மகிழ், "நான் மகிழ் வேந்தன், சிடிஎஸ்ஸில் டீம் லீடராக இருக்கேன்" என்றான்.
"எந்த பிரென்ச் ப்ரோ நீங்க?" என்று கேட்டான் இந்தர்.
"சரவணப்பட்டி இந்தர், சரி வாங்க கீழ போகலாம் மேல வந்து ரொம்ப நேரமாகுது" என்று சொல்ல சரி என்று இந்தர் முன்னே சென்றான். கல்லாக சமைந்தவளை, "நம்ப ரூம்க்கு போய் பேசிக்கலாம். இப்போ கொஞ்சம் நார்மலா வா ப்ளீஸ்" என்று நெற்றில் முத்தமிட்டு சென்றான் மகிழ்.

அவன் சென்றதும் தன்னை சமன் செய்து கீழே வர, அனைவரிடமும் விடைபெற்ற இந்தர் ஆத்யா வந்ததும் சொல்லிவிட்டு சென்றான்.

முதல் இரவு என்று எந்த சடங்கும் வேண்டாம் என்று மகிழ் முதலிலேயே கூறியிருக்க, காஞ்சனா ஆத்யாவை அழைத்து, "குட்டிமா எங்க படுக்கிற ரூம்க்கு போறியா இல்லை என் கூட படுத்துக்கிறிய" என்றார்.
அவளுக்கு மகிழுடன் பேச வேண்டும் என்பதால், "ரூம்லேயே படுத்துக்கிறேன். தேங்க்ஸ் அத்தை, அத்தைம்மா கிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிருங்க" என்று செல்ல அவளை கண்ட அபிராமி எதுவும் பேசாது சென்றார்.

அம்மா ஏன்ம்மா என்கிட்ட பேச மாட்டேங்கிற. இன்னைக்கு ஒரு நாள் தான் நான் இங்க இருப்பேன், என்கிட்ட பேசாமல் அப்பறம் பீல் பண்ணுவீங்க. உங்களுக்காக இப்படி ஒரு கல்யாணம் பண்ணிருக்கேன், ஆனால் என்கிட்ட பேசாமல் முகத்தை திருப்பிக்கிட்டு போறீங்க" என்று அழுது கொண்டே பேசினாள்.

அவளை இழுத்துக்கொண்டு போன அபிராமி அவள் கன்னத்தில் ஒரு அரை வைத்து, "உன் போன் எப்படி இந்தர் கிட்ட போச்சு. நான் காலையில் கால் பண்ணும் போது இந்தர் தான் எடுத்தான். மாப்பிள்ளை உன்னை காப்பாத்த என்கிட்ட பொய் சொன்னாலும் எனக்கு உண்மை தெரியுமில்ல. ஏன் டி இப்படி பண்ண? நீ மட்டும் ஓடி போயிருந்தா உங்க அப்பா தாங்கி இருப்பாரா? என் மூஞ்சிலயே முழிக்காத. உனக்காக ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டோம், அதை வைச்சு நீ தான் பொழைக்கணும் இல்லை தரிசு நிலமா தான் போவ" என்று அழுதவாறு அவர் செல்ல அங்கேயே அமர்ந்து விட்டாள் ஆத்யா.

'நான் செய்ய இருந்தது தவறு தான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இவர்கள் செய்தது மட்டும் சரியா? என்னை கேட்காமல் என் விருப்பத்தை பொருட்படுத்தாமல் கல்யாண ஏற்பாடு செய்த பிறகு தானே சொன்னார்கள். நான் தவறானவனை காதலிக்கவில்லை முரண்பாடான கருத்து உள்ளவனை தான் காதலித்தேன்.

அவன் இல்லை என்றாலும், வேறு ஒருத்தனை மனம் ஏற்க சிறு கால அவகாசமாவது எனக்கு இருந்து இருக்கலாம். அதுவும் இல்லை, ஒரே நாளில் இரண்டு முக்கியமான தருணம் ஒன்று அவன் காதலை நிராகரித்தது மற்றொன்று இவன் காதலை ஏற்க திருமணம் செய்தது. இரண்டும் இரு வேறு திசையில் பயணிக்கும் உணர்வுகள்.

இது இரண்டிற்கும் நடுவே என் மனம் சிக்கி என்னை இப்படி வாட்டுவது சரி தானா? இப்படியே வாழ்க்கை முழுவதும் கலங்க வேண்டுமா?' என்று வெகு நேரம் யோசித்தவள் எழுந்து அவளறைக்கு செல்ல, தூங்குவதற்காக படுக்கையை சரி செய்து கொண்டிருந்தான் மகிழ்.

"தியா டேக் யுவர் டைம், உன் பீலிங்கில் இருந்து வெளியே வர நீ தான் ட்ரை பண்ணனும். அண்ட் ஐ யம் சீரியஸ் ரிலேஷன்ஷிப் வித் யூ. இந்தர் கூட உன்னை பார்க்கும் போது வலிக்குது, அதே மாறி தான் அவனுக்கும் இருக்கும். எங்க ரெண்டு பேரையும் நீ கன்பியூஸ் பண்ணிக்க தேவையில்ல. உனக்கு என்ன வேணும்னு நீ டிசைட் பண்ணிட்டு தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்க. சோ அது மட்டும் போதும் உன் ஃபாஸ்ட்டை நீ ஞாபகம் வைச்சுக்கணும் என்ற அவசியம் இல்லை" என்று கூறியவன் முகப்புத்தகத்தில் முகத்தை புதைத்து கொண்டான்.

அவன் பேசியதை கேட்ட ஆத்யாவிற்கு தான் அப்பாடா என்று இருந்தது. எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்று அவள் பயம் கொள்ள, ரியாலிட்டியை புரிந்து கொண்டு தனக்கும் அதை புரியவைக்க முயல்கிறான். இவன் நல்லவன் தான் போல என்று அவள் யோசிக்க, அப்போ எந்த தைரியத்தில் நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட என்ற முலையின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

கீழே படுக்க சென்றவளிடம், "ரொம்ப சீரியல் பார்பியா? நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன் மேலயே படு. இது கிங் சைஸ் பெட் தான் தரலாமா மூணு பேரு படுக்கலாம், உனக்கு இடமா இல்லை" என்றதும் சரி என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துகொண்டாள் ஆத்யா.
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!! - 6


முகப்புத்தகத்தில் சிங்களில் இருந்து மெரிட் என்று மாற்றி காலையில் தான் அவளுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்து, படுக்க போக அவனது உயிர் தோழன் தாரிக், இல்லை இல்லை அவன் உயிரை எடுக்கும் தோழன் என்றால் தான் சரியாக இருக்கும் அழைத்தான்.


இப்போ வெளியே சென்று பேச முடியாது என்பதால், எட்டி ஆத்யாவை பார்க்க அவள் கண்ணை மூடி தூங்கி இருந்தாள். இங்கேயே பேசலாம் என்று அதை ஏற்க பல பீப் வார்த்தைகளால் அவனை வாழ்த்தி அவனிடம் பேசினான் தாரிக்.


"டேய் தாரு பேச விடேன்டா, விடாமல் எவ்வளவு நேரம் தான் கழுவி ஊத்துவ , என்ன நடந்ததுன்னு சொல்ல விட்டா தானே சொல்ல முடியும். கொஞ்சம் கேப் விடு டா" என்று மகிழ் கூறியதும் தான் அவனை பேச விட்டான் தாரிக்.
"வீட்டில் பாட்டிக்கு உடம்பு சரியில்லை, அதனால் மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கேன், நாளை கழிச்சு வந்திருவேன். எல்லாரையும் கூப்பிட்டு ஒரு கெட் டூ கெதர் மாறி வைக்கலாம்ன்னு இருக்கேன்" என்றான் மகிழ்.


"டேய் உனக்கு ஏத்த மாறி அழகா ஒரு மாமா பொண்ணு இருந்தனால் தான் ஆபிஸில் இருந்த ஒரு பொண்ணயும் பார்க்கலையா?" என்றான் தாரிக் .
"நீ வேற ஏன்டா காமெடி பண்ணிக்கிட்டு, அவளை பத்து வருஷம் கழிச்சு நேத்து தான் பார்த்தேன்" என்றான் மகிழ்.


"தங்கச்சி என்ன பண்றாங்க?" என்றான் தாரிக் .
"மெடிசின் பைனல் இயர் படிக்கிற டா"
"அப்போ ஆறு வயசு வித்தியாசமா டா? சின்ன பொண்ணு பொறுமையா பேசு, உன் கோவத்தை காமிச்சுறாதே "
"நீ வேற அவ என்னை ஒரு காமெடி பீஸ் மாறி பார்கிறாள், நான் கோவப்படுவேன்னு சொன்னா கூட சிரிப்பா. சரியான வாயாடி என்னமா பேசுறா, உனக்கு தங்கச்சி ஆகுற எல்லாம் குவாலிட்டியும் அவகிட்ட இருக்கு" என்றதும் சிரித்தான் தாரிக்.
"சரி டா நான் மார்னிங் கூப்பிடுறேன்" என்று அழைப்பை துண்டித்தான் மகிழ்.


சிறுது நேரம் முழித்து இருந்தவன் எப்போ உறங்கினான் என்று தெரியவில்லை, காலை ஆத்யா எழுப்பும் போது தான் எழுந்தான்.
காலையில் எழுந்து குளித்து, பட்டு புடவை உடுத்தி, தலையை பின்னலிட்டு அதில் சரமாக பூ வைத்து, சின்ன பொட்டு வைத்து வகுட்டில் குங்குமம் வைத்து அக்மார்க் பொண்டாட்டியாக நின்றிருந்தாள் ஆத்யா.


அவளை பார்த்து பிரீஸ் ஆனவனை கிள்ளி நிகழ்விற்கு வந்தவள், "ஒழுங்கா குளிச்சிட்டு வா எம்.வி காலங்காத்தால சைட் அடிச்சுகிட்டு" என்று அவன் தலையில் தட்டி வெளியே சென்றாள்.
'அவ்வளவு பப்ளிக்காவா தெரியுது, இன்னும் பயிற்சி வேணும் போல' என்று குளித்து வெளியே வர அவனுக்காக புது உடையை எடுத்து வைத்திருந்தாள். அதை உடுத்தி வெளியே வந்தவனை முதல் முதலாக கவனித்தாள்.


'நல்லா தான் இருக்கான் சைட் அடிக்கலாம் தான்' என்று மனதில் நினைத்தவள், "ஏன் எம்.வி உனக்கு எத்தனை கேர்ள் பிரிண்ட்ஸ் இருகாங்க?" என்று ஆத்யா கேட்க காபி குடித்து கொண்டிருந்த நந்தகுமார் துப்பி விட்டார், மற்றவர்கள் வாய்க்குள் சிரித்து அவன் என்ன சொல்ல போகிறான் என்று பார்க்க, "என் ஃபஸ்ட் லவ் அண்ட் லாஸ்ட் லவ் நீ மட்டும் தான் தியா" என்று அவன் கூற வாயை பிளந்து அமர்ந்தவள் அருகே இருந்த ராம்குமாரிடம், "ஏன் மாம்ஸ் உங்க பையனுக்கு ஏதாவது ப்ரோப்லேம் இருக்குமோ, இருபத்தி ஏழு வயசு வரை லவ்வே வரலைன்னு சொல்லுறாரு எதுக்கும் ஒரு டாக்டர் கிட்ட கன்சல்ட் பெட்டர் என்றதும் தேவிக்கு புரை ஏறி விட்டது.


அங்கு வந்த காஞ்சனா, அவள் காதை திருகி, "குட்டிமா அவன்கிட்ட சொல்லட்டா" என்று கிசுகிசுக்க, வெளிப்படையாக அதிர்ந்தவள், "அத்தை ப்ளீஸ் அவங்ககிட்ட எதுவும் சொல்லதீங்க" என்று கெஞ்ச அவன் அவள் அருகே வந்து அமரவும் சரியாக இருந்தது அவனுக்கு காபி போட காஞ்சனா உள்ளே சென்றார்.


காலை உணவு செய்ய தேவி எழுந்து செல்ல, இருவருக்கும் சிறிது தனிமை அளித்து நந்தகுமாரும் சென்று விட இருவரும் தனித்து விட பட்டனர்.
"தியா செக்அப் போலாமா?" குறும்பு கூத்தாடும் குரலில் கேட்க, "என்ன?" என்று அப்பாவியாக முகத்தை வைத்து கேட்டாள்.


அதற்குள் இருவருக்கும் காபி வந்துவிட, அமைதியாக குடிக்க ஆரம்பித்தனர்.
"ஏன் தியா நீயே டாக்டர் தான பேசாமல் நீ வேணா என்ன செக் பண்றியா எனக்கும் கான்போர்ட்டா இருக்கும் என்றதும்" குடித்து கொண்டு இருந்த காபியை துப்பியவள், விட்டால் போதுமென எழுந்து சமையலறைக்கு ஓடி விட்டாள். அவளது செய்கையை கண்ட மகிழ் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்.


காலை உணவை அங்கு முடித்து அனைவரும் மகிழ் வீட்டை அடைய, விமர்சையாக மதியணவை உண்ட பிறகு அபிராமி பாலகிருஷ்ணன் தம்பதி கிளம்ப, அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள் அவ்வளவு நேரம் வாயாடிய ஆத்யா. மொத்த குடும்பமும் சமாதானம் செய்ய, கொஞ்சம் அமைதி ஆகினாள்.


எப்படியோ சமாதானம் ஆகிவிட்டாளே என்று பெருமூச்சு விட்டு அவர்களை கோவை அனுப்ப தேவையானதை செய்ய, மகிழோ தானே அங்கே பார்த்து கொள்வதாக கூறி ஓய்வெடுக்க சென்றான்.
அவன் பாட்டுக்கு அவன் அறைக்கு சென்றுவிட அவளுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது.


யாரும் தன்னை கூப்பிட போவதில்லை, அவள் அறையிக்கு அவன் எப்படி உரிமையாக வந்தானோ அதே போல் தான் இங்கயும் என்று மெதுவாக அவன் அறைக்கு வந்தாள். அத்தனை நேர்த்தியாக இருந்தது பார்க்கவே மியூசியம் போல் இருக்க, இது ரூம் தான இவன் என்ன இப்படி வைச்சு இருக்கான். நமக்கு வேற எடுத்த பொருளை அங்கேயே வைச்சு பழக்கம் இல்லை சரி பார்த்துக்கலாம் என்று படுக்க தூக்கமே வரவில்லை அவளுக்கு, திரும்பி அவனை பார்க்க நன்றாக தூங்கினான்.


இவனுக்கு மட்டும் படுத்ததும் எப்படி தான் தூக்கம் வருதோ என்று புலம்பியவள் எழுந்து அவனை எழுப்ப ஆரம்பித்தாள்.
"எம்.வி எழுந்திரீங்க?"
"தியா தூக்கம் வருது, பீலிங் ஸ்லீப்பி?" என்றான்.
எப்படி எழுப்புவது" என்று யோசித்தவள், "உங்களை செக் பண்ணட்டா" என்றதும் பதறி எழுந்தான் மகிழ்.


"அடியே என்ன பேசுற, ஒழுங்கா படு" என்று அவள் கை வளைவில் வைக்க, அவ்வளவு தான் அவனது அருகாமை அவளை இம்சித்தது.
அப்போது தான் யோசிக்க ஆரம்பித்தாள், 'நான் ஏன் இவனோட அருகாமையில் என் வசத்தை இழக்கிறேன்? காதல் இல்லை இதுக்கு பேரு அது எனக்கு தெரியும், ஒரு வேளை கல்யாணம் ஆகிருச்சு அதனால் இப்படி இருக்கானா? அப்படி தான் இருக்கும் என்று அவன் தூங்கியதும் அவன் கைகளை விளக்கி வெளியே சென்றாள்.


அங்கு அவன் பார்த்து கொள்வதாக சொன்னாலும் அவர்களுக்கு தேவையானதை லிஸ்ட் போட்டு கொரியர் மூலம் அவன் இருக்கும் வீட்டிற்கு அதை அனுப்பி வைக்கும் வேலை ஒரு புறம் நடக்க, தேவி அவளுக்கு தேவையான உடைகளை அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்ததில் சிலதை இங்கு போட எடுத்து வைத்து மற்றதை அங்கு பார்சல் செய்யும் வேலையில் இருக்க, ஆயாசமாக இருந்தது அவளுக்கு.


அவர்களுக்கு போர் அடிக்காமல் எப்பவும் போல் அவள் வாய் அளந்து கொண்டு, மகிழை பற்றி கேட்டும் போது அனைவரும் சொல்லி வைத்தது போல், அவனுக்கு கோவம் வராது ஆனால் வந்தா கண்ட்ரோல் பண்ண முடியாது, அதை மட்டும் பொறுத்துக்கோ. உனக்காக அவன் கொஞ்சம் மாறலாம் என்று அவளிடம் கூற இவனுக்கு கோவம் எல்லாம் படத்தெரியுமா என்று யோசித்தாள். விரைவில் அவளே அதற்கு காரணமாக போவதை தெரியாமல்.


பொட்டி படுக்கை எல்லாம் கட்டி ரெடியாக இருக்க இரண்டு காரில் அவர்களை அங்கு விட கிளம்பி சென்றனர். பாலகிருஷ்ணன் மட்டும் தனியாக வந்திருக்க, கஷ்டமாக இருந்தது. இன்னும் தன் அன்னை தன் மீது கோவமாக உள்ளார் என்பதை தெரிந்து கொண்டாள்.


காலம் தான் அனைத்தையும் மாற்றும் என்று அதன் மேல் அனைத்தையும் போட்டு கிளம்பினாள்.
நேற்று வரை தன் வாழ்வு இப்படி மாறும் என்று யாராவது சொல்லி இருந்தால் சண்டைக்கு சென்றிருப்பாள், நடந்து முடிந்ததை எதுவும் மற்ற முடியாது என்பதை உணர்ந்து நடக்க வேண்டியதை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் ஆத்யா.


கல்லூரி என்று நினைக்கும் போது, தானாக வந்து ஒட்டிக்கொண்டது இந்தரின் நினைவுகள். என்ன தான் தனக்கு அவன் வேண்டாம் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று யோசித்தாலும், அவனை விட்டு மனம் முழுதாக அகலவில்லை.


கண்கள் மோதலால்
இது வந்த காதலா நினைத்தேனே
நான் நினைத்தேனே ஊசி தூரலால்
நீ பேசு காதலா தவித்தேனே நான்
தவித்தேனே காற்றாய் மாறி
காதலிக்கிறேன்
கண்ணே ஒரு
முறை சுவாசம் கொள் நானும்
உன்னை சம்மதிக்கிறேன் என்றே
இங்கொரு வாா்த்தை சொல்
மன்னவனே மன்னவனே உயிாில்
உயிராய் கலந்தவனேதிருடிய இதயத்தை
திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என்
காதலா​

நேற்று பொழுதுல
நான் கண்ட கனவுல
பாா்த்தேனே உன்னை
பாா்த்தேனே காதல் வயசில
நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனேஇதயத்தோடு இதயம்
சோ்த்து ஒரு முறையாவது
பூட்டிக்கொள் கண்களோடு
கண்கள் வைத்து ஒரு
முறையாவது பாா்த்துக்கொள்
காதலனே காதலனே வாழ்வே
உனக்கென வாழ்கிறேனே​
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!! - 7

வீட்டிற்கு வந்து அவர்களை விட்டு அன்றே அனைவரும் கிளம்பினர். வந்ததும் வராததுமாக முக்கியான டீம் மீட்டிங் இருக்கு என்று அரக்கப்பரக்க கிளம்பினான் மகிழ்.

காஞ்சனா செய்த உணவை கூட நேரமில்லை என்று கூறி சாப்பிடாமல் சென்று விட்டான். அவசரத்தில் என்னிடம் சொல்லாமல் சென்று விட்டான்.

மதியம் போல அனைவரும் சென்று விட வீடே வெறுமையாக இருந்தது, ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்தாள். அது மூன்று படுக்கை அறையுடன் கூடிய வீடு. அவன் அறைக்கு சென்று தன் பொருட்களை எல்லாம் அடுக்க ஆரம்பித்தவள் நினைவில் அழையா விருத்தாளியாக வந்து அமர்ந்தான் இந்தர்.

ஆமாம் நான் லவ் பண்ணேன் இல்லைனு சொல்லவே இல்லை, காதலிச்சவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைச்சது தப்பு இல்லை. ஒரு நிர்பந்தத்தில் தான் நான் மகிழை கல்யாணம் பண்ணேன் இல்லைனு சொல்லவில்லை அதற்காக எல்லாத்தையும் உடனே மறந்தும் இவனை ஏத்துக்க முடியாது. உன்னை பத்தி நினைக்க மாட்டேனு இந்தரோட நினைவை தூக்கி போடவும் முடியலை என்றவள் கண்ணில் நீர் வழிந்தது.

அலமாரியில் ஏதோ எடுக்க திரும்ப, பேலன்ஸ் இல்லாமல் எதையாவது பிடிக்கலாம் என்று பிடிக்க, அது கையோடு விழுந்து சுக்குநூறாக உடைந்தது அதை சுத்தம் செய்ய கை வைக்க கை முழுவதும் கண்ணாடி கீறல்கள். போச்சு இவன் இன்னைக்கு வந்து இதை ஒடச்சதுக்கு திட்ட போறான், வந்த அன்னைக்கு இப்படி பண்ணிட்டேன்.

ஒரு வேளை இது அவன் எக்ஸ் கொடுத்ததாக இருந்து வந்து பார்த்து நம்மள அடிச்சுருவானோ என்று பலவாறு யோசிக்க, கை வலிக்க ஆரம்பித்தது. வீட்டில் ஏதாவது ஃபஸ்ட் எயிட் கிட் இருக்கிறதா என்று பார்க்க அப்படி எதும் கிடைக்காததால். அவளே வெளியே சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து, அந்த இடத்தை சுத்தம் செய்து விட்ட பிறகு கையை துடைத்து கட்டு போட்டு படுத்து விட்டாள்.

இரவு வீட்டின் அழைப்பு மணி அடிக்க மகிழ் வந்திருந்தான், கூடவே ஒரு புதியவன் வர, வாங்க என்று அவனை அழைத்து உள்ளே சென்று குடிக்க தண்ணீர் கொடுத்தாள். என்ன ஆனாலும் தன் இடது கையை மட்டும் காட்டக்கூடாது என்று ஒவ்வொன்றாக செய்தாள்.

"ஹாய் தங்கச்சி, நான் தாரிக் இந்த வீணா போனவனோட உயிர் நண்பன். எனக்கே சொல்லாமல் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான் பிராடு பையன். அப்பறம் எங்க ஆபீஸ் சார்பாக ஒரு சின்ன கெட் டூ கெதர் இருக்கு இந்த வீக் எண்டு, அவனை கிளப்பி கூட்டிட்டு வந்திரு, மயக்க ஊசி போட்டாவது" என்றதும் அவனை ஏன் என்று பார்த்தாள்.

"இது வரை அன்அஃபீசியல் பார்ட்டி ஒன்னு கூட அவன் அட்டென்ட் பண்ணது இல்லை" என்றதும், "நான் கூட்டிட்டு வந்திறேன் அண்ணா என்ன சாப்பிடுறிங்க?" என்றாள் ஆத்யா.

"இன்னோரு நாள் சாப்பிடுறேன்ம்மா பை" என்று கிளம்பினான் தாரிக்.
"எம்.வி எனக்கு மேகி மட்டும் தான் சமைக்க தெரியும், இன்னைக்கு ஒரு நாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு மாவு ஆட்டி வைச்சிடுறேன்" என்றதும் "சரி தியா, நான் போய் பிரஸ் ஆகிட்டு வறேன் என்று உள்ளே போனவன் குளித்து இரவு உடை அணிந்து வர, டேபிளில் ஏதோ குறைவது போல் இருக்க ஆத்யாவை அழைத்தான் மகிழ்.

"தியா இங்க வா", என்றதும் "போச்சு மாட்டிக்கிட்டேனா?" என்று அறைக்கு சென்றாள்.
"இங்க ஏதாவது இருந்ததை நீ பார்த்தியா?"
"ஆமாம் தெரியாமல் என் கைப்பட்டு உடைஞ்சிருச்சு, கடையில் தேடுனேன் . கிடைக்கில வேற வாங்கி தறேன், சாரி என்று கண்ணை மூடினாள்".

"எதுக்கு நர்வஸ் ஆகுற? என்ன அங்க இருந்ததுன்னு மறந்துட்டேன் அவ்வளவு தான்" என்று சொன்னவன் அப்போது தான் கவனித்தான் தான் வந்ததில் இருந்து அவள் ஒரு கையை பின் புறம் கட்டியவாறு சுற்றுவதை பார்த்தவனுக்கு, அவள் ஏதோ தன்னிடம் மறைப்பதாக தோன்றியது.

"சரி போ, நான் வறேன்" , என்றதும் இப்போது முன்னே சட்டென்று கையை மாற்றி அவள் நன்றாக புரிந்தது அவள் எதையோ மறைப்பது.
எவ்வளவு நேரம் தன்னிடம் இந்த கண்ணாமூச்சி ஆடுகிறாள் என்று அவள் செய்கையை ரசித்தான்.

சாப்பிடும் போது அவளிடம் தண்ணீர் கேட்க, அவள் சாப்பிடும் ஆர்வத்தில் எடுத்து கொடுக்க, அவள் கையை பிடித்து கொண்டான்.
"தியா" என்று அவன் போட்ட சத்தத்தில் பயந்தே விட்டாள்.

"என்னடி இது கையில் காயம் இதை தான் வந்ததில் இருந்து மறைச்சுட்டு இருந்தியா?" என்று அவன் கத்த,
"அந்த கிளாஸ் டால் விழுந்துருச்சு அதை கிளீன் பண்ணும் போது கையில் பட்டுருச்சு. வீட்டுக்கு வந்த அன்னைக்கே இப்படி ஆனால் வீட்டில் எல்லாரும் பயப்படுவாங்க, யார்கிட்டயும் சொல்லாத ப்ளீஸ்" என்று கண்ணை சுழட்டி, மூக்கை சுருக்கி அவள் பேச அவன் கோவம் எல்லாம் எங்கே அவனிடம் இருந்தது அது பல மையிலுக்கு அப்பால் சென்று விட்டது.

"பார்த்து பண்ண மாட்டிய இல்லை செய்ய தெரியலைனால் நான் வர வரைக்கும் வெயிட் பண்ணு சரியா?" என்றதும் பூம்பூம் மாடு போல் தலையாட்டினாள்.
'இவளோட ரியாக்ஷன்லாம் நம்பலை கொல்லுதே, நம்ப தான் அவளை விரும்பி கல்யாணம் பன்னிருக்கோம் அவள் வேற வழி இல்லாமல் தான் பண்ணிருக்கா அதை அப்போ அப்போ ஞாபகம் வச்சுக்கோ வேந்தா' என்று அவன் மனம் அவனை வார, சரி சரி ஓவரா பேசாத நான் அவளுக்கு தெரியாம சைட் அடிச்சுக்கிறேன்.

அவள் அறியாமல் அவளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டு எல்லாம் பொருளையும் ஓரம் கட்டி தட்டை கழுவி வைத்து உள்ளே செல்ல, ரூமிற்குள் குட்டி போட்ட பூனை போல் அங்குமிங்கும் நடக்க, எதுக்கு இவ ரூம்குள்ள வாக்கிங் போற என்ற யோசனையில் வந்தான் மகிழ்.

"தியா என்னாச்சு தூங்காம நடந்துகிட்டு இருக்க, நாளைக்கு காலேஜ் போகவேன்டாமா?" என்று அவள் அருகே வந்தான்.
"எம்.வி பெட் சின்னதா இருக்கு எப்படி ரெண்டு பேரு தூங்க முடியும்" என்று அவள் பாவமாக கேட்க ரசனையாக பார்த்தவன்.
"நான் என்ன உன்னை ரேப்பா பண்ண போறேன் ஒழுங்கா போய் படு டி லூசு" என்று அவளை முறைத்தவாறு, முகப்புத்தகத்தை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் போனை பார்க்கும் போது தான், இந்தர் கொடுத்த போனை தன் வீட்டிலேயே விட்டு வந்தது நினைவு வர அவனை கூப்பிட்டாள்.
"எம்.வி நாளைக்கு என்னை காலேஜில் ட்ரோப் பண்ணி பிக்கப் பண்றிங்களா? ஒரு ஒன் வீக் அதுக்கு அப்புறம் வேற அல்டெரேஷன் பண்ணிக்கலாம். அப்புறம் நாளைக்கு எனக்கு போன் வாங்கணும் பழைய போனை வீட்டிலேயே வைச்சுட்டு வந்துட்டேன்" என்றாள் ஆத்யா.

"தியா டெய்லியும் மார்னிங் நானே உன்னை ட்ரோப் பண்ணிட்றேன், ஈவினிங் கேப் புக் பண்ணி வந்திரு வீட்டுக்கு. உனக்கு போன் வாங்கிட்டேன் கார்லையே வைச்சுட்டு வந்துட்டேன் மார்னிங் எடுத்து தரேன்"
"எப்படி உங்களுக்கு தெரியும் என்கிட்ட போன் இல்லைனு, காலையில் அத்தை போன் பண்ணாங்க உன் போனை வீட்டிலேயே வைச்சுட்டு வந்துட்டேனு. போன் இல்லாமல் எப்படி காண்டாக்ட் பண்றது அதான் வாங்கிட்டு வந்தேன்" என்றதும், "சூப்பரு நான் போய் போனை எடுத்துட்டு வறேன்" என்று அவன் கூப்பிடுவதை கூட காதில் வாங்காது சிட்டாக பறந்து விட்டாள்.

இவள் என்ன இப்படி குழந்தை மாறி நடந்துக்கிறாள், எப்படி தான் இவளை சமாளிக்க போறனோ என்று அவள் பின்னே சென்றான் மகிழ்.
"தியா பொறுமை" என்று கார் கதவை திறந்து, புது போனை எடுத்து கொடுத்தான்.
அதை வாங்கியவள் துள்ளி குதித்து ஓடினாள் உள்ளே.
'குழந்தை பிள்ளையை கல்யாணம் பண்ணி வைச்சு நம்மள ஏமாத்திட்டாங்க' என்று அவளது செய்கையை நினைத்து அவள் பின் சென்றான்.

போன் கூடவே அவன் சிம் வாங்கி இருக்க அதை போனில் போட்டு, அதில் இருக்கும் புதுமையை பார்த்து லயித்தாள்.
"தியா மீதியை நாளைக்கு பாரு, டைம் ஆச்சு பாரு தூங்கு"
"எம்.வி நம்ம செல்ஃபீ எடுக்கலாம் வா" என்று கூப்பிட அவனும் ஆசையாக அவள் அருகே வந்தான்.

"நீ ஏன் இவ்வளவு பெருசா இருக்க கொஞ்சம் குனி" என்று அவனை இழுத்து வித விதமாக செல்ஃபீ எடுத்த பின் தான் தூங்க சென்றாள்.

'ரொம்ப கஷ்டம் இவளை சமாளிக்கிறது, இங்க இருந்து அவளோட காலேஜ் பக்கம் தான், கொஞ்ச நாள் போகட்டும். வழி எல்லாம் தெரிஞ்சதும் வண்டி வாங்கி கொடுத்து தனியா அனுப்பனும். பொத்தி பொத்தி ரொம்ப கெடுத்து வைச்சு இருகாங்க. இதில் வேற இந்த இந்தர் அவனை என்னால் புரிஞ்சுக்க முடியலை. அத்தைகிட்ட என் நம்பர் வாங்கி என்கிட்டயே என் பொண்டாட்டியை நல்லா பார்த்துக்க சொல்லுறான். அவகிட்ட பேசுறதை தப்பா நினைக்க கூடாதாம். அவள் நேத்தே அவனோட காதலை தூக்கி போட்டுட்டு தான் கல்யாணம் பண்ணியிருக்காளாம். ஏன் இதை தெரியாமயா அவளை கல்யாணம் பண்ணிருக்கேன். இதுல அவளை சந்தேகம் படக்கூடாதாம். அவளே ரெண்டு மனசா இருக்கலாம் உடைஞ்சு போய் இருக்கலாம், இதில் நானும் அவளுக்கு சப்போர்ட்டா இல்லைனா அவ இதில் இருந்து மீண்டு வர கஷ்டப்படுவாளாம்.
யப்பா சாமி முடியல, இது பத்தலைன்னு இந்த அம்மாவும் சித்தியும் ஒரு பக்கம். அந்த பக்கம் அப்பா சித்தப்பா, நான் என்னமோ குரங்கு மாறியும் இவ பூமாலை போலவும் ரொம்ப தான் பன்றாங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க எத்தனை பேர் தவமா தவம் இருந்தாங்க? என் பாழாப்போன மனசு இவ போட்டோவை பார்த்ததும் அவளோட பக்கம் சாஞ்சுருச்சு. அவளோட ஸ்டடீஸ் முடியுற வரை அவளை லவ் பண்ணிட்டே இருக்கிறது தான் ஒரே சாய்ஸ் எனக்கு' என்று யோசித்தவாறு தூங்கி போனான் மகிழ்.

தொடரும்.....
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!!- 8


காலை பரபரப்பாக சமையல் அறையில் எதையோ உருட்டி கொண்டிருந்தவளிடம் வந்தான் மகிழ்.
"இங்க என்ன தியா பண்ற, காலேஜ் கிளம்பிளயா?"
"சாப்பாடு எப்படி வரும் சமைச்சா தான வரும் அதான் செய்றேன்" என்று அவனை பாராமல் கொதிக்கும் குழம்பில் உப்பு சரியாக இருக்கிறதா எண்று பார்த்தாள் ஆத்யா.

"உனக்கு சமைக்க தெரியுமா?" என்று ஆச்சர்யமாக கேட்டான் மகிழ்.
"தெரியாது காலையில் அத்தைக்கு கால் பண்ணி கேட்டு சமைச்சு இருக்கேன். திங்ஸ் எதுவுமே இல்லை இப்போதைக்கு கொஞ்சமா கடையில வாங்கினேன். இன்னைக்கு மட்டும் ஈவினிங் என்னை பிக்கப் பண்ணுங்க, வீட்டுக்கு தேவையானதை வாங்கிட்டு வந்தரலாம்" என்றாள் அடுப்பில் இருந்து பார்வை எடுக்காமலே.

"சரி தியா. இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, நாளைக்கு ஷாப்பிங் போகலாம் அப்படியே உனக்கும் ஏதாவது திங்ஸ் வாங்கணும்னா வாங்கிக்கலாம்" என்றவனிடம் சரி என்று கூறியவள், "சமைச்ச பாத்திரத்தை கழுவிரு நான் போய் குளிச்சிட்டு வந்தறேன்" என்று சமையலை முடித்து சென்றாள்.

அவள் சொன்னது போல, பாத்திரத்தை கழுவி, அவள் செய்த உணவை ருசி பார்த்தான். அருமை என்று சொல்லவில்லை என்றாலும் சாப்பிடும் படியாக தான் இருந்தது.
அவள் வருவதற்குள் காபி போட்டு குடித்தவன், அலுவலகம் கிளம்ப அறைக்கு வர சேலையோடு போரிட்டு கொண்டிருந்தாள் ஆத்யா.

"என்னடி சேரியா கட்டிட்டு போற காலேஜ்க்கு?"
"ஆமா, ஒழுங்கா சீக்கிரம் கிளம்பு என் ஹச்.ஓ.டியை பார்க்கணும், அப்போ தான் கிளாஸ்க்குள்ள விடுவாங்க. கார்டியன்னு சைன் பண்ணனும்"
"சரி சரி நீ ஏன் சேரி கட்டுற, சுடி, ஜீன்ஸ் ஏதாவது போடு. உன்னை ஒருமாறி பார்ப்பாங்க" என்றான் மகிழ்.

"லுக் எம்.வி, நம்ப என்ன பண்ணாலும் தப்புன்னு சொல்ல இங்க ஆயிரம் பேர் இருக்காங்க. அதுக்காக நம்ப வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது. இன்னைக்கு வெள்ளிகிழமை கோவில் போக சொன்னாங்க அத்தை. அதனால் தான் சேரி, என்னை கேள்வி கேட்காமல் சீக்கிரம் போய் குளி" என்று தலைவாரி நெற்றியில் பொட்டு வைத்தவள். அவளது தோழிக்கு போன் செய்து தான் இன்று கல்லூரி வருவதாகவும் தனது பேக்கை எடுத்து வருமாறு கூறி அழைப்பை துண்டித்தவள்.

தன் திருமணத்தை அனைவரும் எப்படி எடுத்து கொள்வார்கள் என்று கலக்கம் ஏற்பட்டது. அவர்களது காதல் குறைந்த நபர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தாலும், இதன் பின் தன்மீது அவர்களது பார்வை எப்படி இருக்கும் என்று அனுமானித்து இருந்தாள்.

இனி நடப்பதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் என்று முடிவில் கிளம்பினாள். எப்பவும் போல போர்மல் உடை அணிந்தவன், தலையை சீவி வெளியே வர கடிகாரத்தையும் ரூமையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்ன தியா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?"
"எல்லாரும் பொண்ணுங்க கிளம்ப தான் லேட் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க, இங்க எல்லாம் உல்ட்டாவா நடக்குது. நான் கிளம்பி ஒரு மணி நேரமாக வெயிட் பண்ணுறேன். இப்போ தான் வரீங்க, சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்" என்று அவனை இழுத்துக் கொண்டு போனாள்.

இருவரும் சாப்பிட்டு கோவிலுக்கு போய் இருவர் பேரிலும் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு, வெளியே வர மணி ஏழே முக்கால் ஆகிவிட்டது. அவர்கள் வீட்டில் இருந்து இருபது நிமிடம் என்பதால் எட்டரை மணி கல்லூரிக்கு பொறுமையாக சென்றான் மகிழ்.

"இங்க பாருங்க, என் மனசுல இருக்கிறதை எல்லாம் சாமிகிட்ட சொல்லிட்டேன் இப்போ தான் மனசு லேசா இருக்க மாறி இருக்கு. இப்போ அதை உங்க கிட்ட சொல்லணும். எனக்காக ஒரு அரைமணி நேரம் நான் பேசுறதை கேளுங்க ப்ளீஸ்" என்றதும் "என்ன தியா என்ன சொல்லணும்" என்றான் மகிழ்.

"உங்களை வேற வழி இல்லாமல் கல்யாணம் பண்ணலை, அதே மாறி காதலோடவும் பண்ணலை. எனக்கும் இந்தருக்கும் ரெண்டு வருஷ காதல். நான் தான் அவனை ப்ரொபோஸ் பண்ணேன். அவன் இதுநாள் வரை லவ் யூ சொன்னது இல்லை, ஆனால் செயலால் காமிச்சு இருக்கான்.

என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, கொஞ்சம் டைம் வேணும். உங்க உணர்வை என்னால் காயப்படுத்த முடியலை அதே மாறி தான் இந்தரையும் காயப்படுத்த முடியாது.

உங்களை கல்யாணம் பண்ணிட்டேன், எப்போ இருந்தாலும் என் வாழ்க்கை உங்க கூடத்தான் அதை முடிவு பண்ணி தான் உங்களை கல்யாணம் பண்ணேன்.

வெறும் தாலிக்காக உங்களை கல்யாணம் பண்ணலை. அப்பறம் ஏன் அப்படிங்கிற கேள்வி எனக்குள்ளும் இருக்கு தான். இன்னும் அதற்கான பதிலை நானே கண்டு பிடிக்கலை. சீக்கிரம் அதை தெரிந்து என் கடந்த காலத்தை மறந்து உங்க கூட வாழுவேன்.

அதுக்கு எனக்கு டைம் வேணும், என்னை சந்தேக.." என்று பேச வந்தவளின் வாயில் விரலை வைத்தவன்.

"தியா ஐ டிரஸ்ட் யூ அண்ட் நீ என்கிட்ட எதையும் எஸ்பிளைன் பண்ண தேவை இல்லை. நீ எனக்கு சொந்தமானவை, என்னோட சரி பாதி. உன்னை தப்பா நினைச்சா என்னை நானே அசிங்கப்படுத்திக்கிற மாறி. இதை பத்தி இனி பேச வேண்டாம். கிளம்பலாம்" என்று வண்டியை அவள் கல்லூரிக்கு விட்டான் மகிழ்.

இருவரும் ஜோடியாக இறங்க, அங்கு பலர் ஆச்சர்யமாகவும் சிலர் அதிர்ச்சியாக பார்த்தனர்.
அதை பார்த்தவளுக்கு மனதில் கிலி உண்டாக, மகிழை பார்த்தாள் அவன் சாதாரணமாக இருக்க, அவளும் முகத்தை சாதாரணமாக வைத்து அவனை கூட்டிக்கொண்டு ஹச்.ஓ.டி அறைக்கு சென்றாள்.

தங்கள் திடீர் திருமணம் அதனால், அவள் படிப்பு தடை படக்கூடாது என பேசி அவருக்கு புரிய வைத்தான் அவரும் சில பல அறிவுரைகள் தர ஒருவழியாக பேசி முடித்து அவளுடன் வெளியே வர பேக்குடன் நின்றுக் கொண்டிருந்தவள் வேகமாக வந்தவள் கையில் அதை திணித்து வேகமாக நடந்தாள்.

"சஹானா நான் சொல்றதை கேட்டு கோச்சுக்கோ டி" என்று அவள் பின்னே போனாள் ஆத்யா.
பாருடா நம்ப ஆளுக்கு கெஞ்சலாம் தெரியுமா என்று அவளை தொடர்ந்து செல்ல, அவர்கள் போய் நின்றது அவன் கார் அருகே தான்.

அவ்வளவு நேரம் எதுவும் பேசாத்தவள், "ஹாய் அண்ணா, நான் சஹானா. அபி ஆண்டி நேத்து கால் பண்ணி பேசினாங்க. நீங்க வருவீங்கன்னு, அதான் சீக்கிரம் வந்தேன்" என்று அவள் படபடவென பேச, அவளை பிடித்து விட்டது மகிழுக்கு.

"ஹாய் தங்கச்சி. நான் மிஸ்டர் ஆத்யா, பேரு மகிழ் வேந்தன். சண்டே வீட்டுக்கு வா டா பேசலாம், இப்போ ஆபீஸ்க்கு டைம் ஆச்சு நீங்க கிளாஸ்க்கு போங்க" என்றான் மகிழ்.
"நீங்க சொல்லணும்ன்னு இல்லை அண்ணா நானே வந்திருவேன், நீங்க போங்க நான் பார்த்துகிறேன்" என்றாள் சஹானா.

"தியா லஞ்ச் கேன்டீனில் சாப்பிட்டுக்கோ" என்று பணத்தை கொடுக்க என்கிட்ட இருக்கு என்றாள்.
"அதை பத்திரமா வை சேவிங்ஸில், இதை செலவு பண்ணு" என்று சில நூறு ரூபாய் நோட்டுகளை அவள் கையில் திணித்து போயிட்டு வறேன் என்று இருவரிடமும் விடைப்பெற்று கிளம்பினான்.

அவன் சென்ற பிறகு சஹானாவிடம் நடந்தது அனைத்தையும் கூறினாள், இந்தர் மீது வருத்தம் இருந்தாலும் அவளால் அதை தப்பு என்று சொல்ல முடியவில்லை. அவன் வளர்ந்த சூழ்நிலை அவனை இப்படி மாற்றி உள்ளது என்று நினைத்தவள், ஆத்யாவுடன் வகுப்பறைக்கு சென்றாள் சஹானா.

புதிதாக சேலை கழுத்தில் தாலி என்று வந்தவளை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. பின் இரண்டு வருடமாக இந்தர் இந்தர் என்று சுற்றியவள் திடீர் என்று கழுத்தில் தாலியுடன் வந்தாள் எப்படி அதை பார்ப்பது.

அனைவரும் அவளை கேள்விகளால் தாக்க, "ஆமாம் அம்முக்கு கல்யாணம் ஆகிருச்சு, டூ டேஸ் ஆகுது. எனக்கே ப்ரோப்லேம் இல்லை உங்களுக்கு என்ன? எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாருங்க" என்றவன் அவளை கண்களில் நிரப்பி அவன் இடத்திற்கு சென்று விட்டான்.

அவன் அப்படி சொல்லி சென்றாலும் தங்களுக்குள் சலசலக்க ஆரம்பித்தனர் அவள் காதில் கேட்கும் படியே.
"இந்தரை விட அழகான பணக்காரனா வீட்டில் பார்த்திருப்பாங்க அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா?" என்று ஒருத்தன் கூற, "ஆமாம் டா நல்ல ஹண்ட்ஸம்மா ஒருத்தனோட காரில் வந்து இறங்குனா, அவன் தான் இவளோட ஹஸ்பண்ட் என்று நினைக்கிறேன்" என்றான் மற்றோருவன்.

"இவளை மாறி பொண்ணுங்களால் தான் ட்ருவா லவ் பண்ற பொண்ணுங்களை கூட நம்ப மாட்டேங்கிறாங்க. காலேஜ் முடியுற வரைக்கும் கூட சுத்தவும் செலவு பண்ணவும் ஒருத்தன் வேணும். அப்புறம் வீட்டில் பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிறுவாளுங்க. இதுக்கு பேரு லவ்வுன்னு வெக்கமே இல்லாமல் சொல்லுங்க" என்று அருவருத்த குரலில் பேசினாள் ஒருத்தி.
அதை பலர் ஆதரித்து தங்களுக்குள் பேசிய படியே இருக்க, கூனி குறுகி போனாள் ஆத்யா.

அவர்கள் சொல்வதும் உண்மை தானே அதை போல் தானே நானும் நடந்திருக்கேன். தான் தவறான பெண்ணோ, இந்த பழியுடன் தன்னால் எப்படி இங்கு படிக்க முடியும் என்று பலவாறு சிந்தித்தாள். அவள் அருகே அமர்ந்திருந்த சஹானா அவளுக்கு ஆறுதல் கூற தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்டாள்.

அதற்கு மேல் அவளை யோசிக்க விடாது வகுப்பு நடக்க, மற்றதை புறம் தள்ளி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள் ஆத்யா. மதியம் உணவு இடைவேளை வர, ஆத்யாவிடம் வந்தான் இந்தர்.

"அம்மு பசிக்குது, சீக்கிரம் வா" என்றதும் எழுந்தவள், "இல்லை இந்தர் எனக்கு பசிக்கல நீங்க போங்க" என்று அமர்ந்திருக்க அவள் அலைபேசி அடித்தது.
அதை உயிர்பித்தவள், "ஹலோ சொல்லுங்க" என்றாள் சோர்வாக.
"தியா கம் அவுட், ஐ அம் வைட்டிங்" என்று எதிர்புறம் கூற தான் அருகே இருப்பவர்களிடம் மகிழ் வந்திருப்பதாக கூறி அவனிடம் விரைந்தாள் ஆத்யா.
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!! - 9

காரில் சாய்ந்து நின்று அவள் வருகைக்காக காத்திருந்தான் மகிழ். அவனிடம் வந்தவள் இடம் பொருள் எதையும் பார்க்காமல் அணைத்து அழுக ஆரம்பித்தாள். அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
"தியா காரில் ஏறு" என்றதும், அவள் ஏற நேராக அவன் வண்டியை வீட்டிற்கு விட்டான்.

வீடு வரும் வரை அழுகையில் கரைந்தவள், அவனிடம் எதுவும் பேசாது மௌனத்தை தத்தெடுத்திருந்தாள்.
வீடு வரும் வரை அமைதியாக இருந்தவன், தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டை திறக்க, அவனை தொடர்ந்து அவளும் உள்ளே சென்றாள்.

கிளாசில் தண்ணீருடன் வந்தவன் அவளிடம் கொடுக்க, அவளும் அதை மறுக்காமல் குடித்தாள்.
"நான் காலேஜ் போகல எம்.வி" என்றவளை பார்க்க பாவமாக தான் இருந்தது, எதுவும் பேசாமல் சமையலறை சென்றவன் காலையில் செய்த உணவு மீதம் இருக்க, தட்டில் அதை போட்டு அவளிடம் தர அவனையே பார்த்தாள்.

"தியா இட்ஸ் கெட்டிங் லேட். சாப்பிடு" என்றதும் சாப்பிட்டாள்.
சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவன், அவளை அணைத்து தலைக்கோதி பேச ஆரம்பித்தான்.
"தியா நம்ப எப்படின்னு நமக்கு தெரியும், யாருக்கும் போய் நான் இப்படி நான் அப்படின்னு நிரூபிக்கனும் என்று எந்த அவசியமும் இல்லை சரியா. இப்போ உன்னை இப்படி பேசுறவங்க நாளைக்கு உன்னை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடலாம். அதுக்காக இப்படி காலேஜ் போகல என்னால் முடியாது அப்படி எல்லாம் பேசாத. இந்த சீட் கிடைக்காமல் எத்தனை பேர் தற்கொலை பன்னிருக்காங்க. உனக்கு ஈஸியா கிடைக்கலை நீ எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சி இதை வாங்கியிருக்க. மத்தவங்களுக்காக இதை இழக்க போறியா. என் பொண்டாட்டி ரொம்ப தைரியசாலின்னு நினைச்சேன். என்கிட்டயே வந்து நான் ஓடி போக போறேன்னு தமன்னா மாறி சொல்லி மிரட்டுனா என் ஆசை பொண்டாட்டியா இது" என்று கேலி பேச, "வெட்டியா பேசினது போதும், கிளாஸ்க்கு டைம் ஆச்சு வாங்க" என்று அவன் கிண்டலில் இருந்து தப்பிக்க ஓடினாள் ஆத்யா.

சரியான கேடி எங்க இங்க இருந்தா நான் அவளை கிண்டல் பண்ணுவேன்னு எப்படி எஸ்கேப் ஆகுறா என்று நினைத்தவாறு காருக்கு சென்றான்.

அழுது அழுது முகம் சிவந்து போயிருக்க, சிறுகுழந்தையின் முகத்தை அழுந்த துடைப்பது போல். கைக்குட்டையில் அவள் முகத்தை துடைத்து, "என் தியா பேபி சிரிச்சிட்டே, என்ன? அப்படின்னு திமிரா பார்த்தா தான் அழகா இருக்கும். இப்படி அழுது வடிஞ்சு ஸ்கூலுக்கு போக மாட்டேங்கிற மாறி அடம் பிடிக்கும் பாப்பா எனக்கு வேண்டாம்".
"நான் ஒன்னும் பாப்பா இல்லை, நான் பெரிய பொண்ணு தான். கொஞ்சம் பீலிங் அதான் அழுதேன்" என்று அவள் முகத்தை திருப்பிக்கொள்ள சிரிப்பு தான் வந்தது.

உணவு இடைவெளி முடிய இன்னும் சில நிமிடங்கள் இருக்க, ஆத்யாவை கல்லூரிக்குள் அழைத்து வந்திருந்தான் மகிழ்.
அவளை அனுப்பியவன் போனில் தேங்க்ஸ் என்று இந்தருக்கு அனுப்பி அலுவலகம் சென்றான்.
ஆம் அவன் தான் மகிழுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வர சொன்னது.
சற்று தெளிந்த முகத்துடன் வந்தவளை பார்க்கும் போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவள் சென்றதில் இருந்து பலமுறை கேட்டும் இந்தர் வாயை திறந்து எதுவும் சொல்லாததால், அமைதியாக அமர்ந்திருந்தாள் சஹானா.
என்னதான் இந்தரும் ஆத்யாவும் காதலித்தார்கள் என்றாலும் அதற்கு முன் இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் இன்று நிம்மதி இல்லாமல் இருக்க காரணம் இந்தரின் பிடிவாதம் மட்டுமே. ஆத்யாவிற்கு நன்றாக தெரியும் இந்தர் ஒரு விடயத்தை முடிவு செய்தால் அதில் இருந்து பின் வாங்க மாட்டான் என்று, அதே போல் தன்னை இது செய் என்று நிர்பந்திங்க மாட்டான் என்றும். அவனை வேண்டாம் என்று சொன்னால் தான் நினைத்தப்படி தன்னை திருமணம் செய்து கொள்வான் என்று நினைத்தவளுக்கு அவன் கூறிய வாழ்த்துகள் சட்டை அடியாக இருந்தது.

தாலி காட்டாது அவனோடு வாழ அவள் மனம் ஒற்றுக்கொள்ளவில்லை. காதலுக்காக குடும்பத்தையும் குடும்பத்துக்காக காதலையும் விட முடியாது என்று நின்றவள், தன் காதலை காட்டிலும் தன் குடும்பம் தான் முக்கியம் என்று அவனை பிரிந்தாள்.

அனடானமி வகுப்பு என்பதால் அனைவரையும் குழுவாக பிரித்து, மருத்துவ கல்லூரியில் இருக்கும் மருத்துவரிடம் ஒரு டெமோ கிளாஸ் அட்டென்ட் செய்ய சொல்லி அங்கு வந்த ஹச்.ஓ.டி கூற மாணவர்கள் குழு பிரிக்க ஆத்யா இருக்கும் குழுவில் தங்கள் இருக்க மாட்டோம் என்று மாணவிகள் கூற, எங்களுக்கு பிரச்சனை இல்லை நல்லா டைம் பாஸ் ஆகும் என்று சில மாணவர்கள் வம்பு வழக்க, "சட் அப்" என்று கத்திய இந்தர் ஆத்யா கையை பிடித்து இழுத்து அவர்கள் முன் நிறுத்தி.

"அம்மு ஏன் டி அமைதியா இருக்க, நான் உனக்கு பொருத்தமான பையன் இல்லை சரியா. நீ ஆத்யா பாலகிருஷ்ணன் இல்லை, இப்போ ஆத்யா மகிழ் வேந்தன். உனக்குன்னு கொஞ்சம் டிக்னிட்டி இருக்கனும். அவர் ரிலேஷன்ஷிப் இஸ் ஓவர், அண்ட் யூ முவ்ட் ஆன் டு ஆ நியூ லைப். நீ இப்படி அமைதியா இருந்தா உன் மேலை தப்பு இருக்குன்னு நினைப்பாங்க. இது உன் லைப் நீ யாரை கல்யாணம் பண்ணனும் யார் கூட வாழனும் எல்லாம் நீ தான் டிசைட் பண்ணனும். மத்தவங்களுக்காக வாழ நீ ஒன்னும் சாமி இல்லை, சரியா" என்று அவளை அனுப்பி எங்கும் போக பிடிக்காமல் அங்கேயே அமர்ந்து விட்டான்.

'நான் ஏன் இப்படி இருக்கேன். எனக்கு பிடிச்சு அவளை லவ் பண்ணேன். ஆனால் கல்யாணம் செய்யாமல் அவளை என் கூட வைச்சுக்க முடியாதுன்னு நான் ஏன் யோசிக்கல. சொசைட்டி பத்தி ஏன் நான் நினைக்கல, என் அம்முவை நானே கஷ்டப்படுத்த கூடாது எங்க அப்பா மாறின்னு தானே அவளை காயப்படுத்தி அவளையே என்னை விட்டு பிரிய வைத்தேன். அப்பவும் அவளுக்கு சந்தோசம் இல்லைனா நான் ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தேன்' என்று மனதில் ஒரு புயல் அடித்து ஓய்ந்தது.

அவள் தன்னவள் இல்லை என்றாலும் அவளை காதல் கொள்ளும் மனதிற்கு தடை போட முடியாமல் தவித்தான். அவள் தன்னை விட்டு நிதர்சனத்தை புரிந்து வாழ பழகுவது போல் தானும் வாழ பழக முடிவு எடுத்தான். இன்னும் ஒரு வாரம் தான், ட்ரைனிங் ஆரம்பித்துவிட்டாள் அவள் ஒரு புறம் நான் ஒரு புறம் என்று பிரிந்து விடுவோம் அதன் பின் இறுதி தேர்வில் தான் சந்திக்க முடியும். முடிந்த அளவிற்கு அவளை விட்டு தள்ளி இருக்கிறது தான் அவளுக்கு நல்லது என்று முடிவெடுத்து, மருத்துவமனைக்கு சென்றான்.

வகுப்பு முடிந்து அனைவரும் கலைந்து போக, சஹானாவிடம் விடைபெற்று வெளியே வந்தாள் ஆத்யா. மதியம் ஒரு மணி நேரம் பெர்மிஸ்ஸன் போட்டதால் அவன் வர தாமதம் ஆகும், வெளியே இருக்கும் ஐஸ்கிரீம் பார்லரில் ஏதாவது சாப்பிட்டு இரு வந்து விடுகிறேன் என்று மகிழ் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தவள்.

மெதுவாக அந்த கடைக்கு சென்றாள், அவள் தனியாக போவதை கண்ட இந்தர் அவள் பின்னே சென்றான். அவன் வருகிறான் என்று தோன்ற நின்று அவனை பார்க்க, அவளை கண்டுக்கொள்ளாது உள்ளே சென்றான் இந்தர்.
இது வழமையாக நடக்கும் செயல் என்பதால் எதுவும் பேசாமல் அவள் பின்னே சென்றாள்.

உள்ளே சென்றவன் அவளுக்கு பிடித்ததை வாங்கி வைத்திருக்க எதுவும் பேசாமல் அதை சாப்பிட ஆரம்பித்தாள்.
"அம்மு ஏன் டி என்கிட்ட பேச மாட்டேங்கிற? ப்ரோ உன்னை தப்பா நினைச்சுப்பாங்கன்னா?"
"இல்லை இந்தர், அவருக்கு என் மேல நம்பிக்கை அதிகம். எனக்கு நீ ரியாலிட்டியை புரிந்து உன் பியூச்சர பார்க்கணும். எனக்கு தெரியும் அது அவ்வளவு ஈசி இல்லை பட் வி ஹவ் டூ" என்றவள் கையை பிடித்து "இப்போ வரை நீ மட்டும் தான் என் காதல் ஒருவேளை எனக்கு இன்னோரு காதல் வரலாம் இல்லை வராமலும் போகலாம். நீ பீல் பண்ற அளவுக்கு ஒன்னும் ஆகலை. என் அம்மாக்கு அப்பறம் என் மேல கேர் ஆஃபேக்ஷன் காமிச்சது நீ தான். நீ எனக்கு ஸ்பெஷல் தான் அம்மு எப்பவும். ட்ரைனிங் முடிஞ்சதும் எம்.டி பண்ண போறேன். அப்பறம் ஹாப்பி மெரிட் லைப்" என்று கூறி கிளம்பி விட்டான்.

அவன் போனதும் மனம் பரமானது, தன்னை காதலித்ததை தவிர அவன் வேறு எதுவும் செய்யவில்லையே, தானும் அது போல தானே என்று மனம் நினைக்க, நிதர்சனத்தை உணர்த்து உன் வாழ்க்கை வாழ பாரு என்று மூளை எடுத்துரைக்க, அவளும் அது தான் சரி என்று அவனுக்காக காத்திருந்தாள்.

அரைமணி நேரத்தில் வந்தவன் அவளிடம் மன்னிப்பு கேட்க, "அதெல்லாம் முடியாது ஒழுங்கா இன்னோரு ஐஸ்கிரீம் வாங்கி தா அப்போ தான் மன்னிப்பேன்" என்றதும், அவளுக்காக ஒரு ஐக்கோனை வாங்கி கையில் கொடுத்து கூட்டி வந்தான்.

தொடர் வேலையால் அலுப்பாக இருக்க, குளித்து வந்தவன் ஸோமோடோவில் உணவை ஆர்டர் செய்து விட்டு படுத்து விட்டான். அவளோ காஞ்சனாவிற்கு அழைத்து பேசியவள் அப்படியே ஒவ்வொருத்தராக பேசி முடிக்கும் போது அழைப்பு மணி அடித்தது. யாரு என்று பார்க்க புட் டெலிவரி மேன் நிற்க அவரிடம் பையை வாங்கி வைத்து அவனை எழுப்ப வந்தாள்.

"மாமா எழுந்திருங்க" என்று எழுப்ப, பட்டென்று கண்ணை திறந்தவன். "என்னனு எழுப்புன" என்று குறும்பாய் கேட்க. "மாமான்னு தான் கூப்பிட்டேன் உங்களுக்கு சரியா தான் விழுந்துச்சு. எனக்கு பசிக்குது சீக்கிரம் வாங்க" என்று எழுந்து சென்றாள்.

'என்னாச்சு இவளுக்கு, திடிர்னு மரியாதையா பேசுறா' என்று எழுந்து சென்றான்.
அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்திருக்க, ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் ஆத்யா.

சாப்பிட்டு எல்லாத்தையும் ஓரம் எடுத்து வைத்து, லைட் ஆப் செய்து படுக்கையில் விழுந்தாள்.
 
Status
Not open for further replies.
Top