ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் இனிய தனிமையே-கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
என் இனிய தனிமையே-கதை திரி
 

T21

Well-known member
Wonderland writer


அத்தியாயம் 1

"காதம்பரி" பெயருக்கேற்ற கம்பீரமானவள் அவள். ஐந்தரையடி பெண்ணவளின் ராஜ்ஜியம் தான் அந்த மாளிகை இல்லம். "காதம்பரி வாசா" இது தான் அந்த இல்லத்தின் பெயர்.

நிலத்தை முத்தமிடும் செந்நிற புடவையில் தலை நிறைய மல்லிகை வாசம் வீச, கொண்டை இட்டு பணக்காரர்களுக்கே உரித்தான அந்த மிடுக்கான நடையுடன் படிகளில் இருந்து கீழே இறங்கி வந்தாள். அவள் தோற்றத்தையும் மிடுக்கையும் கொலை வெறியுடன் கீழே நின்று பார்த்துக் கொண்டு இருந்தது வேறுயாருமல்ல அந்த வீட்டின் ஒரே வாரிசு வசந்த் கிருஷ்ணா. அவளுக்கு முப்பது வயதென்றால் அவனுக்கு முப்பத்திமூன்று வயது தான். ஆனால் வீட்டின் மொத்த சாம்ராஜ்யமும் அவள் காலடியில் இருக்க அவனால் என்ன தான் செய்ய முடியும்?

கீழே வந்தவளிடம் "ஒரு செக்ல சைன் பண்ணனும்" என்றான் எங்கோ பார்த்தபடி. அவளோ "எனக்கு சோறு தான் முக்கியம். சாப்பிட்டு பேசலாம்" என்று சொன்னபடி நடந்து செல்ல அவனும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான். அங்கிருந்த உணவருந்தும் மேசையில் அமர்ந்தவளோ தட்டை எடுத்து வைத்து அதில் உணவையும் வைத்தவள், அடுத்த கணமே அதை வாயில் வைத்து விட்டு கீழே துப்பியவள் "ச்சை இத மனுஷன் சாப்பிடுவானா??" என்று சீறினாள். வசந்தோ கோபத்தை அடக்கிக் கொண்டே நின்று இருக்க, அவனை நோக்கி அடுத்த கணமே சொடக்கிட்டவள் " இத சமைச்ச அந்த மகாராணியை வரச் சொல்லு" என்று சொல்ல அவள் முன்னே வந்து நின்றாள் ராதிகா. கிழிந்த.சேலையும் கலைந்த முடியுமாக வந்தவள் மீது வசந்தின் பார்வை பரிதாபமாகப் படிந்து மீண்டது. ராதிகாவோ சற்றே தழு தழுத்த குரலில், "மேடம் அது" என்று ஆரம்பிக்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்த காயத்ரி அங்கிருந்த வேலையாளிடம் "இத இவ சாப்பிட பிறகு தானே எனக்கு வச்ச?" என்று கேட்க அவனும் "ஆமா மேடம்" என்று சொன்னான். அவளோ "இத எப்படிடி சாப்பிட்ட?" என்று ஆக்ரோஷமாக கேட்க அவளோ பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நிற்க "இத கொண்டு நாய்க்கு போடு வேலா, எனக்கு வேற ஏதும் பண்ணி எடுத்து வா" என்று சொல்லி விட்டு அங்கே நின்ற வசந்திடம் "மிஸ்டர் வசந்த் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால சைன் பண்ண முடியாது, நான் சாப்பிட்ட அப்புறம் தான் சைன் பண்ணுவேன். வேணும்னா வெய்ட் பண்ணலாம்" என்று சொல்ல, அவனும் கோபத்தை அடக்கிக் கொண்டே "வெய்ட் பண்ணுறேன்" என்று சொன்னான்.

சிறிது நேரத்தில் அவள் மேசைக்கு உணவு வந்து சேர, அதை சாப்பிட்டு முடித்தவள் கையைத் துடைத்துக் கொண்டே எழுந்தாள். அவனும் சைன் பண்ண செக்கை நீட்ட, அதை அலசி ஆராய்ந்து விட்டே கையெழுத்தை இட்டாள். நிமிர்ந்த தோற்றமும், வசீகரிக்கும் விழிகளும் நெற்றியில் குங்குமமும் கழுத்தில் தாலியுமாக இருக்கும் பேரழகி மட்டும் அல்ல பாசக்காரியும் கூட. வாசலுக்கு வந்தவள் அங்கே மாலை இடப்பட்டு இருந்த ஆளுயர புகைப்படத்தை வணங்கினாள். அந்த புகைப்படத்தில் இருந்தது வேறு யாருமல்ல, அந்த வீட்டின் மகாலக்ஷ்மியும் வசந்தின் தாயுமான மீனாட்சி தான். கண்களை மூடி திறந்து புகைப்படத்தில் இருந்த அவர் முகத்தைப் பார்த்தவள் "சில அநியாயங்களை பார்க்க கூடாதுன்னு நல்லவங்கள கடவுள் சீக்கிரம் எடுத்துடுவாராம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து தனது காரில் ஏறப் போன சமயம், வாசலில் நின்ற பெண்ணவளோ வீட்டை துடைத்துக் கொண்டு இருக்க, அவளை ஆழ்ந்து பார்த்தவள் "மானேஜர்" என்று கர்ஜிக்க, உள்ளே இருந்து ஓடி வந்தான் அவளுடைய பிரத்தியேக மானேஜர் மோகன்.

"இந்த பொண்ணு தான் மாசமா இருக்கான்னு தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு இவளை வேலை செய்ய சொன்ன?" என்று கேட்க அவனோ "அவ தான் மேடம் வீட்ல கஷ்டம்னு வேலை செய்யணும்னு சொன்னா" என்று சொல்ல, வேலை செய்வதை நிறுத்தி விட்டு ஸ்தம்பித்து நின்றவளை நோக்கி வந்தவள் அவள் மேடிட்ட வயிற்றில் கையை வைத்து "எப்போம்மா பிரசவம்?" என்று கனிவான குரலில் கேட்டாள். அந்தப் பெண்ணோ "இன்னும் இரண்டு மாசத்துலம்மா" என்று சொல்ல, மேனேஜரிடம் "இந்த பொண்ணுக்கு தேவையான பணத்தை கொடுத்து லீவும் கொடுத்துடு" என்று சொன்னவள் அவள் கையை பார்த்து "மாசமான பொண்ணு கைல காதுல ஒண்ணுமே இல்லாம இருக்கியேம்மா" என்று சொன்னவள் தனது கையில் இருந்த வளையலை கழட்டி அவள் கையில் போட்டு விட, அந்த பெண்ணோ கண்களில் கண்ணீருடன் அவள் காலை பற்ற போனாள். அடுத்த கணமே அவளை பிடித்து நிமிர்த்தி விட்ட காதம்பரி "குழந்தையை பெத்துட்டு நல்ல படியா வா" என்று சொல்லி விட்டு காரில் ஏற அந்த உயர் ரக கார் உயர் வேகத்தில் புறப்பட்டது. அதே சமயம் அனைத்தையும் வெளியே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த வசந்தோ "யார் பணத்தை யார் தாரை வார்க்கிறது" என்று நினைத்த சமயம், அவன் முன்னே வந்து நின்றது அவனுக்கென்று வழங்கப்பட்ட ஆட்டோ.

அவனோ அந்த ஆட்டோவைப் பார்த்தவன் "இந்த வீட்டோட ஒரே வாரிசுன்னு அடிச்சு சொன்னாலும் நம்ப மாட்டாங்க" என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே ஏறிக் கொண்டான். ஆட்டோ ஓட்டுபவனோ முன்னே இருந்த குட்டி மின்விசிறியை அவனை நோக்கி திருப்பியவன் "காத்து ஜோரா வருதா சார்?" என்று கேட்க அவனோ "நீ வேற ஏண்டா? வண்டியை எடு" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டான்.

காதம்பரி வண்டி அலுவலகத்தில் நின்று இருக்க, அதில் இருந்து கம்பீரமாக இறங்கியவளைக் கண்டதுமே அனைவரும் எழுந்து நிற்க, ஒரு சிறு தலை அசைப்புடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அதே அலுவலகத்துக்குள் வந்த வசந்தை ஏன் என்றும் யாரும் கேட்காமல் இருக்க, அவனும் தனது அறைக்குள் நுழைந்து இருந்தான்."மிஸ்டர் வம்சி கிருஷ்ணா, சச் அன் அட்ட்ரக்டிவ் ப்ரோபோசல்" என்று அங்கிருந்த வெள்ளைக்காரன் கைகளை தட்ட, மென் புன்னகையுடன் "தன்க் யூ மிஸ்டர் ஆல்பர்ட்" என்று சொன்னார் வம்சி கிருஷ்ணா. அறுபது வயது என்று அடித்துக் கூறினாலும் நம்ப முடியாத நிமிர்வும் ஆளுமையும் நிறைந்தவர் தான் வம்சி கிருஷ்ணா. இந்த வயதிலும் கடல் கடந்து வந்து பிசினஸ் செய்பவரைப் பார்த்தால் எதிரிகள் கூட நடுங்குவார்கள். காப்பரேட் உலகத்தையே ஆட்டிப் படைப்பவரோ இன்றும் வந்த வேலையை வெற்றிகரமாக முடித்து இருக்க, அவர் போன் அலறியது திரையில் விழுந்தது காதம்பரியின் புகைப்படம் தான். அதைக் கண்டதுமே "எக்ஸ்கியூஸ் மீ " என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்தபடி தள்ளிச் சென்றவள் "சொல்லும்மா" என்று சொல்ல, மறுமுனையில் இருந்த காதம்பரியோ "எல்லாம் நல்ல விதமா முடிஞ்சுதா மாமா" என்று கேட்க அவரும் "ஆமாம்மா நல்ல விதமா முடிஞ்சுது, அங்கே நிலவரம் எப்படி? உனக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லையே" என்று ஆரம்பித்தவர் வாய் விட்டு சிரித்துக் கொண்டே "உன்னை தொந்தரவு பண்ண ஒருத்தன் பிறந்து தான் வரணும்," என்று சொல்ல, அவளும் மென் புன்னகையுடன் "எப்போ இங்க வர்றீங்க?" என்று கேட்டாள். அவரோ "நாளைக்கு தான் பிளைட் புக் பண்ணி இருக்கேன். வந்திடுறேன்" என்று சொல்ல, "சரி மாமா அப்போ நான் வச்சிடுறேன்" என்று வைத்து இருந்தாள்.

பேசி முடித்து விட்டு போனை வைத்தவள் கண்களில் ஒரு கலக்கம் இருக்க, கையில் இருந்த போனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

இந்த கணத்தில் வசந்தோ மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி இருந்தவனின் விழிகள் கோபத்தில் சிவந்து தான் இருந்தன. இப்படி காதம்பரிக்கு அடிமையாக வாழ வேண்டிய காலம் வந்து சேரும் என்று அவன் கனவிலும் நினைத்து இருக்க மாட்டான். கோபத்தை விழுங்கியபடி இருந்தவனின் நினைவுகளில் வேறு ராதிகாவின் தோற்றம் வந்து போக, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நீரை அருந்தி கோபத்தை தணித்து இருந்தான்.

ராதிகாவோ வீட்டின் பின் பக்கம் அமர்ந்து பானையைக் கழுவிக் கொண்டு இருக்க, அடுத்து ஒரு பானையை கொண்டு வந்து அவள் அருகே வைத்த வேலைக்காரன் "இதையும் கழுவிடு" என்று சொல்லி முடிக்க முதல் அவனை ஏறிட்டு பார்த்தவள் "என்னடா பயம் விட்டு போச்சா? நான் யாரு தெரியும்ல?" என்று கேட்டாள். அவனோ ஒரு இளக்கார சிரிப்புடன் "போம்மா போம்மா நீயும் நானும் ஒன்னு, சேர்ந்து தின்னுவோம் பண்ணு" என்று சொல்லி விட்டு செல்ல, கையை பானையில் ஓங்கி அடித்தவளது கை தான் வலித்தது.


 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 2

அலுவலக நேரம் முடிந்ததுமே வீட்டை நோக்கி காதம்பரி காரில் வந்தால் என்றால் ஆட்டோவில் வந்து சேர்ந்து இருந்தான் வசந்த்.. தனது அறைக்குள் நுழைந்தவனுக்கு கொஞ்சமும் நிலை கொள்ள முடியவே இல்லை. சிறிது நேரம் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கோ இதழில் குரூர புன்னகை தோன்ற, உடை கூட மாற்றாது எழுந்து வெளியேறிச் சென்றவன் தேடிச் சென்றது என்னவோ காதம்பரியைத் தான். வழமையாக மாலை நேரத்தில் நேரத்தை செலவு செய்யும் பூங்காவினுள் நுழைந்தவன் அங்கேயே அவளுக்காக காத்துக் கொண்டு இருக்க, காதம்பரியும் குளித்து விட்டு பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவு செய்யும் வண்ணம் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டு இருந்த அந்த அழகிய பூங்காவினுள் நுழைந்தாள்.

அவள் வருகைக்காக காத்து இருந்தது போல, அவள் உள்ளே நுழைந்ததுமே பறவைகள் சத்தம் போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்த, அவள் இதழில் ஒரு அழகிய புன்னகை. அந்த புன்னகையை நிலைக்க விடாமல் அது அடுத்த கணமே வடிந்து போனது அங்கே அவளையே பார்த்தபடி அமர்ந்து இருந்த வசந்தைக் கண்டதுமே.

அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே முட்டியில் கை குற்றி எழுந்தவன் "அப்புறம் காது, " என்றான் நக்கல் குரலில். அவள் இதனை எதிர்பார்த்தது தான். வம்சி கிருஷ்ணா வெளிநாடு சென்றதுமே அவன் தன்னுடன் தனியாக பேச முற்படுவான் என்று எதிர்பார்த்து இருந்தாள். அவள் நினைத்த போலவே அவன் இப்போது தேடி வந்து இருக்க, அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்த காதம்பரி "இது என்னோட இடம், இங்க பெர்மிஷன் இல்லாம யாருமே வரக் கூடாது" என்று சொல்ல, அவனும் "எது உன்னோட இடம்? இந்த வீடே என்னோடது தான், இடைல வந்த நீ என்னை ஆட்டி வைக்கிறியா? உன்னை அப்படியே கொன்னுட்டு ஜெயிலுக்கு போகலாம் போல இருக்கு. அவ்ளோ கொலை வெறியில இருக்கேன். சரி சொல்லு, நீ எதுக்கு இங்க வந்த?" என்று கேட்க அவளோ மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டே அவனை கேலிப் புன்னகையுடன் பார்த்தவள் "புகுந்த வீட்டுக்கு எதுக்கு வருவாங்க?' என்று கேட்டாள். அதைக் கேட்டு சத்தமாக சிரித்தவன் "புகுந்த வீடா? சரி தான்" என்று சொல்லிக் கொண்டே, அவள் அருகே வந்து "உனக்கு தேவை நான் தானே, அதுக்கு தானே இவ்ளோ கஷ்டப்பட்டு இங்க வந்து இருக்க, எனக்கு புரியுது காது, உன் ஏக்கமும் புரியுது." என்று சொன்னவன் சற்று யோசனையாக புருவம் சுருக்கி விட்டு "ஆமா நீ ப்ரெக்னன்ட் ஆஹ் இருந்த தானே, குழந்தை எங்க? கலைச்சுட்டியா?" என்று கேட்க அவள் முகமோ இறுகி போக கண்களும் கலங்கி போக, உணர்வுகளை அடக்கிக் கொண்டு அப்படியே நின்றவள் "அது உனக்கு தேவை இல்லாத விஷயம், வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு, என் பொறுமைய சோதிச்சா உனக்கு தான் நட்டம்" என்றாள் கம்பீர குரலில். அதைக் கேட்டு இதழ்களை பிதுக்கியவன் "ஓஹ் இந்த சொத்தெல்லாம் உன் பெயர்ல இருக்குன்னு சொல்லிக் காட்டுறியா? அது சரி, எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் நீயும் அந்த கிழவனும் ஆடுறீங்கன்னு நானும் பார்க்கிறேன்" என்று சொல்ல, அவளோ "அவர் உன் அப்பா, உன்னால என்ன தான் பண்ண முடியும்? எப்போவோ உன்னை வீட்டை விட்டு துரத்தி இருக்க வேண்டியது, பெத்த பாவத்துக்காகவும் உன் அம்மா கிட்ட உன்னை நல்ல விதமா பார்த்துப்பேன்னு சொன்ன வார்த்தைக்காகவும் இங்க வச்சு இருக்கிறார்" என்று சொல்ல, அதைக் கேட்டு நக்கலாக சிரித்தவன் "சப்போர்ட்டா? சரி சப்போர்ட் பண்ணிக்கோ, இங்க பாரு, அந்த கிழவன் சொல்றத கேட்டு ஆடாதே, உனக்கு தேவை நான் தானே.. எடுத்துக்கோ, நாம சந்தோஷமா இருக்கலாம், நமக்கென்ன இது புதுசா?" என்று கேட்டபடி கையை அவள் தோளில் வைக்க, அதனை கண்ணால் பார்த்தவள், "கையை எடுடா" என்று சொன்னாள். அவனோ "மாட்டேன், சும்மா சொல்ல கூடாது முதல் இருந்தத விட கும்முன்னு இருக்க" என்று சொல்ல, அடுத்த கணமே அவன் எதிர்பார்க்காமல் தனது இடையில் இருந்த கத்தியை உருவி எடுத்தவள், அவள் மணிக்கட்டில் ஓங்கி கீறி விட, "ஆஆ" என்று கத்திக் கொண்டே பின்னே சென்றவன் கையில் இருந்து ரத்தம் பீறிட்டு பாய்ந்தது.

அவனோ வலியுடன் அவளை பார்த்தவன் "பொண்ண நீ? ராட்சஷி" என்று திட்ட, அவளோ வாய் விட்டு சிரித்தபடி "ஆமா, உனக்கு நான் ராட்சஷி தான்.. உன் அம்மா ஸ்தானத்துல இருக்கிற என் மேல கை வைக்கிறியா? சீவிடுவேன்.. இப்படி எல்லாம் நீ பண்ணுவன்னு தெரிஞ்சு தான் கைல கத்தியோட சுத்துறேன்.. நீ சொல்றத கேட்டு அப்படியே நடக்க உன் பின்னாடியே நாய்க்குட்டி போல சுத்தி திரிஞ்ச காதம்பரி இல்லடா, இப்போ நான் காதம்பரி வம்சி கிருஷ்ணா, கொன்னுடுவேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்ல, வலி பொறுக்க முடியாமல் துடித்துக் கொண்டு இருந்தவனுக்கு அவள் பேச்சு வேறு ஆத்திரத்தைக் கூட்டியது.

அவளும் அந்த இடத்தை விட்டு நகர போக, கணவனின் கூக்குரல் கேட்டு அங்கே ஓடி வந்து இருந்தாள் ராதிகா. போகும் போது அவளைப் பார்த்தவன் "புருஷன காய போட்டு இருக்கியா என்ன? என் மேலயே கை வைக்கிறான். அடங்கி இருக்க முடிலனா, ரெண்டு பேரும் கிளம்புங்க" என்று சொல்லி விட்டே அவள் கையில் இருந்த கத்தியை தூக்கி ராதிகாவிடம் கொடுத்தவள் விறு விறுவென செல்ல, ராதிகாவோ அதிர்ந்து நின்றவள் அவள் சென்றதும் கோபமாக வசந்தை நோக்கி சென்றாள். வசந்தோ "வா ராதி" என்று சொல்லிக் கொண்டே கையை காட்டியவன் "அந்த சனியன் என்ன பண்ணி இருக்கான்னு பாரு" என்று சொல்ல, ராதிகாவோ "உன்னால கொஞ்சம் அடங்கி இருக்க முடியாதாடா? உன்னை கட்டிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே.. இங்க பாரு, நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரில, இந்த சொத்து மறுபடி நம்ம பேருக்கு வரணும், எப்படி இந்த ராதிகா இருந்தாளோ அதே போல இருக்கணும், இப்போ வரை நான் அமைதியா இருக்க காரணமே இந்த சொத்து மட்டும் தான். ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல, எத்தனை கோடி தெரியும்ல" என்று சொல்லும் போதே அவள் விழிகள் பேராசையில் விரிந்து கொள்ள, அவனுக்கோ காயப்பட்ட தன்னை பற்றி கவலைப்படாமல் சொத்தை பற்றி பேசும் மனைவி மேல் கோபம் வந்தாலும் காட்ட முடியாமல் தவித்தவன் "ராதி இத பாருடி, ரொம்ப வலிக்குது" என்றான். அவளோ "ஒரு கனவு காண விடுறியா?" என்று திட்டியவள் அவன் கையை தூக்கி பார்த்து விட்டு "சின்ன காயம் தான், வா மருந்து போட்டு விடுறேன்" என்று சொல்லிக் கொண்டே முன்னே சென்றவள் ஒரு கணம் நின்று, "அவளை அடைஞ்சு தான் இந்த சொத்து நம்ம பக்கம் வரும்னா அது கூட ஓகே தான்," என்று சொல்ல, அவன் இதழ்களோ "அது தானே பார்த்தேன். எங்கடா நீ திருந்திட்டியோன்னு நினச்சேன்" என்று சொல்லும் போதே அவன் இதழில் ஒரு குரூர புன்னகை தோன்றியது.

அடுத்த நாள் காலையில், வீடே பரபரப்பாக இருந்தது வம்சி கிருஷ்ணாவின் வருகையை எதிர்பார்த்து. அறுபது வயது என்று அடித்து கூறினாலும் நம்ப முடியாத இளமையான தோன்றம் கொண்டவரோ கனிவும் கண்டிப்பும் ஒருங்கே கொண்டவர். அவர் மகன் தான் வசந்த் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அப்படி அவனுக்கு எதிர்ப்பதம் அவர். சற்று நாள் முன்னர் தான் காதம்பரியை திருமணம் செய்து அவர் சொத்தையும் அவள் பெயருக்கே மாற்றி எழுதி வைத்தார். அதுவரை ராதிகாவின் அடாவடியால் தவித்து போன வேலையாட்களுக்கு விமோச்சனம் தான் இந்த காதம்பரியின் வருகை.

அந்த மாளிகை வீட்டின் முன்னே வந்து நின்றது வெள்ளை நிற உயர் ரக கார். கார் மட்டும் அல்ல, அவர் மனதும் வெள்ளை தான் என்பதற்கு சான்று தான் இறங்கியதும் தனது வீட்டின் தோட்டக்காரனை பார்த்து அவர் சிந்திய புன்னகை. அதே புன்னகையுடன் வீட்டினுள் நுழைய போனவர் முன்னே வந்து ஆரத்தி தட்டுடன் நின்ற காதம்பரியோ அவருக்கு ஆரத்தி எடுக்க, அவரோ "என்னம்மா ஒரு வாரம் தானே போனேன், அதுக்கு எதுக்கு ஆரத்தி" என்று கேட்டார். அவளோ "எல்லாரோட கண்ணும் உங்க மேல தான் மாமா" என்று சொல்லி விட்டு ஆரத்தியை வேலையாளிடம் கொடுக்க, அவரும் உள்ளே சென்ற கணம் வாசலில் ஓரமாக கையில் கட்டுடன் நின்று இருந்தான் வசந்த். அவன் கையைப் பார்த்தவர், "கைல என்னாச்சு?" என்று புருவம் சுருக்கி கேட்க அவனோ "அடிபட்டிச்சு" என்று சொன்னான். காதம்பரியோ "கையை ஒழுங்கா வச்சுட்டு இருந்தா ஏன் அடிபட்டு இருக்க போகுது" என்று கேட்டு விட்டே கணவனுடன் உள்ளே செல்ல, அவனோ "இந்த குத்தல் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல" என்று சொன்னவன் திரும்பி அவர்களையே அனல் தெறிக்க பார்த்துக் கொண்டு நின்று இருந்த ராதிகாவைப் பார்த்தான்.
 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3அறைக்குள் நுழைந்ததுமே "சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க போறீங்களா மாமா? இல்ல ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிட போறீங்களா?" என்று கேட்டபடியே அவர் உடைகளை எடுத்துக் கொடுக்க, அவரோ "குளிச்சுட்டு வரேன். காபி மட்டும் கொடும்மா, ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் சாப்பிடலாம்" என்று சொல்ல, அவளும் "சரி மாமா" என்று சொல்லிக் கொண்டே வெளியேற வம்சியும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டார்.

இதே நேரம் அறைக்குள் கோபமாக வசந்த் அமர்ந்து இருக்க, உள்ளே நுழைந்த ராதிகாவோ "அவளை அன்னைக்கே போட்டிருக்கணும், தப்பு பண்ணிட்ட" என்று சொல்ல, அவனோ "புள்ள பூச்சி போல இருந்தாடி, இந்த புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்?" என்று சொல்லிக் கொண்டே பழைய நினைவுகளை சுழல விட்டான்.

வசந்த் கிருஷ்ணா, தாய் இல்லாத பணக்காரப் பையன் என்றால் கேட்கவும் வேண்டுமா? பெண்கள் போதை, குடி கும்மாளம் என்று அலைந்து திரிபவனுக்கு பெண்கள் என்னவோ கிள்ளுக் கீரை தான். ஊரில் இருக்கும் அனைத்துப் பெண்களும் தன்னை சந்தோஷப்படுத்த தான் பிறந்து இருக்கின்றார்கள் என்னும் நினைப்பு அவனுக்கு. பெண்களின் குணநலம் அறிந்து அதற்கேற்ப வேடம் பூண்டு அவர்களை அடைவதில் கில்லாடி என்றால், காதலி என்னும் பெயரில் அவன் பணத்துக்காக அவனுடன் சுற்றித் திரிந்த ராதிகாவோ பார்த்தது என்னவோ மாமா வேலை தான்.

அவளுக்கு பெண்கள் என்றால் அவளுக்கு பணம் தான் முக்கிய நோக்கம். காதலன் எந்த பெண்ணுடன் சென்றாலும் அதை பற்றி அவளுக்கு கவலை இல்லை. இப்படியான அரக்கர்களிடம் சிக்கிக் கொண்ட பாவை தான் இந்த காதம்பரி.

ஒரு நாள் பகல் என்றும் பாராமல் பப்புக்கு சென்று விட்டு ராதிகாவுடன் திரும்பிக் கொண்டு இருந்தான் வசந்த். அப்போது ஒரு முக்கியமான கால் வர, காரை ஓரமாக பார்க் பண்ணி விட்டு போன் பேசிக் கொண்டு இருந்தவன் கண்ணில் தான் அங்கிருந்த பூ கடையில் நின்று பூ வாங்கிக் கொண்டு இருந்த காதம்பரி தென்பட்டாள். மாசு மருவற்ற அழகிய வதனம், வளைவுகளுடன் கூடிய மேனி என்று அவள் பேரழகியாக இருக்க, இவன் கண்களோ அவள் மேனியில் படிந்து மீள, "ஐ வில் கால் யூ பேக்" என்று சொல்லிக் கொண்டே போனை வைத்தவனோ "ப்பா" என்று வாய் விட்டு சொல்ல, அவன் அருகே இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்த ராதிகா, எட்டி அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்தாள்.

அவன் விழிகளோ அவள் மேனியில் படிவதைக் கண்டவள் "வேணுமா?" என்று கேட்க அவனோ "கிடைக்குமா?" என்று தான் கேட்டான். அவளோ "கொடுக்கிற பணத்தை பொறுத்து கிடைக்கலாம்" என்று சொல்ல, காதம்பரியையே பார்த்துக் கொண்டு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தவன் "செமயா இருக்கா தானே" என்று கேட்க அவளோ "ம்ம் நாட் பேட் " என்று சொல்லிக் கொண்டே சிகரெட்டை அவனிடம் நீட்ட அவனும் அதனை புகைக்க ஆரம்பித்தான்.

புகையுடனேயே ராதிகாவை முத்தமிட, அவளோ பணத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இந்த முத்தம் எல்லாம் ஒன்றுமே இல்லை தான். அடுத்த நாளே காதம்பரியைப் பற்றி விடயங்களை தேடி எடுத்தவள் அவள் தாய் தந்தை இல்லாத பெண்ணென்று அறிந்து கொண்டது மட்டும் இன்றி, அவளுக்கு ஒரு சகோதரியை தவிர யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டாள். "அப்போ நமக்கு ஈஸி டார்கெட் தான்" என்று நினைத்தவள், அவள் கெமிஸ்ட்ரியில் முது மாணி கல்வி கற்றுக் கொண்டு இருப்பதையும் அறிந்தவள் "ரொம்ப படிப்பாளி போல" என்று நினைத்துக் கொண்டே அவள் தினம் சென்று வரும் இடங்களைப் பற்றியும் தகவல் சேகரிக்க தொடங்கினாள். அவள் மாலை நேரத்தில் யோகா க்ளாஸ் போவதை அறிந்தவளுக்கு அது தான் சரியான தருணமாக பட, வசந்த்திடம் வந்தவள் விடயத்தை சொல்ல, அவனோ "இதுக்காக நாம யோகா க்ளாஸ் போகணுமா என்ன?" என்று சலித்தாலும் "படுற கஷ்டத்துக்கு அவ வேர்த் தான்" என்று சொல்லிக் கொண்டே அந்த வகுப்பில் ராதிகாவுடன் போய் சேர்ந்து கொண்டான். அங்கே போகும் முன்னரே, "எந்த பொண்ணுக்காகவும் இவ்ளோ கஷ்டப்பட்டது இல்ல ராதி, எல்லாருமே பணத்தை காட்டினா போதும் ட்ரெஸ்ஸை கழட்டுவாளுங்க" என்று தரம் தாழ்ந்து பேச, ராதிகாவோ "அது நம்ம சரவுண்டிங் பொண்ணுங்க தான் வசந்த், இவ ரொம்ப ஆச்சாரமான பொண்ணா இருக்கா, உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு ஆள மாத்திடலாம்" என்று சொல்ல, அவனோ "நோ நோ செம செக்சியா இருக்கா, ஒரு கை பாத்துடலாம்" என்று சொன்னவன் யோகா வகுப்பில் தனது லீலைகளை ஆரம்பித்து இருந்தான். போதாதற்கு ராதிகா வேறு காதம்பரிக்கு கேட்கும் வண்ணம் "வசந்த் ஒரு ஜென்டில் மேன் தான், அவனை கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வச்சவ"என்றெல்லாம் பேசி அவளுக்கு வசந்த் என்றால் யார் என்று தேடும் அளவுக்கு ஆர்வத்தை அதிகரிக்க, அவளும் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் "வசந்த்னா யாரு?" என்று கேட்டாள்.

அந்த பெண்ணோ "நானும் இப்போ தான் யாருன்னு தேடி பார்த்தேன், அதோ நிக்குறாரே அவர் தான்" என்று சொல்ல, யோகா மாஸ்டருடன் பேசிக் கொண்டு இருந்த வசந்தை முதல் முறை பார்த்தான் அவன். வெண்ணிற குர்தாவில், நிமிர்ந்த தோற்றமுமாக, சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தவனின் சிரிப்பில் மயங்கியவள் அறியவில்லை, அந்த சிரிப்பின் பின்னே மறைந்து இருக்கும் குரூரத்தை.

அன்று யோகா க்ளாஸ் முடிய, அவளை தாண்டி சென்றவனோ ஒரு கணம் திரும்பி அவளை பார்த்து "ரொம்ப இன்வால்மெண்ட் ஆஹ் யோகா பண்ணுறீங்க. கீப் இட் அப்" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்துக் கொண்டவளுக்கு இதயத்தில் ஒரு படபடப்பு. தினமும் குட் ஈவினிங் என்று ஆரம்பிப்பவர்கள் மென்மையான புன்னகையுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பிக்க ராதிகா வேறு வசந்தை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு அவள் காது பட பில்ட் அப் பண்ணி வைத்து இருந்தாள்.

ஒரு நாள் யோகா கிளாஸ் முடிய காரில் ஏறிய வசந்த் "என்ன இழவுடி இது? குட் ஈவினிங், ரொம்ப அழகா இருக்கீங்க, சோ ஸ்வீட்ன்னு பேசிட்டே இருக்க வேண்டியது தானா?" என்று சீற அவளோ "கொஞ்சம் பொறு வசந்த், அடுத்த வாரம் லவ்வை சொல்லலாம்" என்று சொன்னாள். அவனோ "எத? லவ் ஆஹ்?" என்று கேட்க அவளோ "அப்படி சொன்னா தான் அவ பக்கத்திலேயே வருவா" என்று அழுத்தமாக சொல்ல "என்னவோ பண்ணி தொலை " என்று சொன்னபடி ஒரு கட்டு பணத்தை அவள் கையில் திணிக்க அவளும் தீயாக வேலை செய்ய ஆரம்பித்தாள். அதன் விளைவு, அடுத்த வாரம் நேரே காதம்பரியிடம் வந்த ராதிகா, "உன் கிட்ட பேசணும்" என்று சொல்ல, அவளும் "என்ன பேசணும்?" என்று கேட்டாள். ராதிகாவோ "வசந்த் உன்னை லவ் பண்ணுறானாம், உனக்கு ஓகே யா இல்லையான்னு கேட்க சொன்னான்" என்று சொல்ல, இதை எல்லாம் பழகி இருக்காத காதம்பரியோ "அச்சோ, என்னால முடியாது" என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட, தோல்வியுடன் காரில் ஏறிய ராதிகாவிடம் "என்னாச்சு?" என்று கேட்டான் வசந்த். அவளோ இதழ் பிதுக்கி இல்லை என்று தலையாட்ட, "இதுக்கு தான் இங்க வார கணக்குல வந்தோமா? போடி" என்று சொல்ல, அவளோ "நாளைல இருந்து நீ வராத, அடுத்த வாரமே அவ உன்னை தேடி வருவா" என்று சொல்ல, அவனோ "எனக்கு நம்பிக்கை இல்லை. நீ சொன்னாலும் வர்ற எண்ணம் எனக்கு இல்ல, நாளைல இருந்து பசங்க கூட ஒரு வாரம் கோவா போக போறேன்" என்று சொன்னான், அவளோ "நீ போய் வர்றதுக்கு இடையில் நான் அவளை செட் பண்ணி வைக்கிறேன், " என்று சொல்லி கையை நீட்ட, அவனோ "இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல" என்று சலித்தாலும் அவள் கையில் ஒரு கட்டுப் பணத்தை எடுத்து வைத்தான்.

அவனும் கோவா போய் விட, அடுத்த நாள் முதல் முறை காதம்பரியின் கண்கள் யோகா கிளாசில் வசந்தை தேடியது.
 
Status
Not open for further replies.
Top