ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னவள் நீயென கண்டேன் _ கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 28


அந்த காகிதத்தை தன் அம்மாவின் புகைப்படத்தின் கீழ் வைத்தவன்... மதியின் அறையை நோக்கி வந்தான்...

அவன் அறைக்கதவை தட்ட, மதியோ போனை எடுத்து டேபிளில் வைத்தவள், எழுந்து வந்து கதவை திறந்தாள்...

" இந்த நேரத்தில என்ன தீஷா " என்றவள் அவன் முன்னே வந்து நிற்க...

அவனோ " தூங்கலையா இன்னும் " என்று கேட்டான்...

" படிச்சிட்டு இருந்தேன் தீஷா... அது தான் " என்று ஏதோ மழுப்பியவளை ஆழ்ந்து பார்த்தவன்... " நாளைக்கு உனக்கு காலேஜ் லீவ் தானே " என்று கேட்டான்...

" ஆமா தீஷா... நெஸ்ட் வீக் டெஸ்ட் இருக்கு அதுக்கு படிக்கிறேன்... "

" ம்ம்ம்... நாளைக்கு கோவிலுக்கு போவோமா?... "

" என்ன தீஷா திடீர்னு கோவிலுக்கு "

" மனசு சரி இல்லை நிலா... உனக்கு ஓகே தானே... நாளைக்கு போகலாம் தானே " என்று அழுத்தி கேட்டான்...

" கண்டிப்பா போகலாம், தீஷா " என்றவளிடம் புன்னகைத்து விட்டு தன் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டான்...

அடுத்தநாள் கோவிலுக்கு கிளம்பி வந்தவன்... ஹாலில் அமர்ந்து மதிக்காக காத்துக்கொண்டிருந்தான்...

மதியோ கண்ணாடியில் தன்னை பார்த்து தயாராகிக் கொண்டிருக்க... அப்போது அவளுக்கு ஆதியிடம் இருந்து அழைப்பு வந்தது...

' இவரு எதுக்கு இந்நேரத்துல கால் பண்ணுறாரு ' என்று எண்ணியவள் அழைப்பை ஏற்க... எதிர் புறத்தில் இருந்தவனோ " ஹாய் பேபி " என்றான் இனிமையாக...

" இப்போ எதுக்கு கால் பண்ணுறீங்க, நான் கோவிலுக்கு போகணும் போய்ட்டு வந்து பேசுறேன் " என்றவள் அழைப்பை துண்டிக்க போக... அவனோ " நான் உன்னை வெளியே அழைச்சிட்டு போகலாம்னு பார்த்தேன்... நீ என்னென்னா கோவில்,குளம்ன்னு பேசிட்டு இருக்க... "

" என்னால இப்போ வரமுடியாது " என்ற மதி கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்... தீக்ஷிதன் வந்துவிடுவானோ என்ற பதட்டத்தில்...

" நோ... இப்போ நீ வந்தே ஆகணும்... நான் உனக்காக எப்போவும் உன்னை பிக்கப் பண்ணிக்கிற இடத்துல காத்துட்டு இருக்கேன் ... உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் உடனே வா ... " என்றவன் அவள் பதிலை எதிர் பாராமல் அழைப்பை துண்டித்தான்...

அவனை எண்ணி தலையில் அடித்துக்கொண்ட மதி... வெளியே வந்தாள்... அவளை கண்ட தீக்ஷிதன் " போகலாமா.. நிலா " என்று கேட்டபடி எழுந்தவன், வாசலை நோக்கி செல்ல... " நான் வரலை தீஷா " என்றாள் ... மெதுவாக...

அவளை திரும்பி பார்த்தவன், " ஏன்டா எதுவும் உடம்பு சரி இல்லையா... கிளம்பி தயாரா தானே இருக்க... பின்ன என்ன? " என்று அக்கறையாக அவள் அருகில் வந்தான்.

அவளோ " ஒன்னும் இல்லை தீஷா இன்னிக்கு நான் கோவிலுக்கு வர கூடாது... " என்று கூற அவனுக்கு புரிந்து போனது அவள் நிலைமை...

உடனே " சரி " என்றவன் தானும் எங்கும் செல்லாமல் இருக்கையில் அமர்ந்துகொண்டான்..

" தீஷா நீ போகலையா? "

" இல்லை நிலா... நானும் வீட்டுலயே இருக்கேன் " என்றவன் போனை எடுத்து பார்க்க தொடங்கிவிட்டான்...

' அய்யோ இவரு வீட்டுல இருந்தால் நான் எப்படி வெளியே போக முடியும் ' என்று எண்ணியவள்... " கோவிலுக்கு கிளம்பிவிட்டு போகாமல் இருக்க கூடாது தீஷா நீ கிளம்பு... " என்று எதை எதையோ கூறி அவனை கோவிலுக்கு அனுப்பினாள்...

தீக்ஷிதன் கிளம்பி சென்றபிறகு... வீட்டில் இருந்து கிளம்பியவள்... நடந்து வந்து அடுத்த தெருவில் நின்ற ஆதியின் காரில் ஏறிக்கொண்டாள்...

அவளை கண்ட ஆதி " ஹாய் பேபி... சொன்ன நேரத்துல வந்துட்ட... தட்ஸ் மை கேர்ள்.. " என்றவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்...


******

" சாவி கிளம்பிட்டியாடி " என்று காதல் பொங்க கேட்டான் மாறன்...

" அதெல்லாம் கிளம்பிட்டேன்... நீ எப்போ வருவ... சீக்கிரம் வா " என்றாள் உணர்வில்லாமல்...

" ஏண்டி கொஞ்சமாவது.. வெட்கப் படுடி... போன்ல கூட ஸ்ட்ரிக்டா பேசுற... உன்னை வச்சிட்டு "

" நான் அப்படி தான் பிடிக்கலைன்னா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கோ " என்று அவள் பொய் கோவத்துடன் கூறினாள்...

" சரிடி குட்டம்மா... அப்போ நான் போகவா... உன்னை விட்டு வேற கல்யாணம் பண்ணிக்கவா " என்று வேண்டுமென்று அவளை சீண்டினான் மாறன்...

அவன் கேட்டு முடிக்கும் முன் ... அவனை கண்ட படி திட்ட தொடங்கி இருந்தாள் சாவித்ரி.. மாறனால் அதனை காது கொடுத்து கேட்க கூட முடியவில்லை... " அம்மா தாயே சும்மா சொன்னேன் செத்தால் கூட உன்னை விட்டு போக மாட்டேன் .." என்றபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்...

அப்போது காரில் கோவிலை நோக்கி வந்துக் கொண்டிருந்த தீக்ஷிதன் ஏதோ யோசனையுடன் மாறனுக்கு அழைப்பு விடுத்தான்...

அவன் எண்ணை திரையில் கண்ட மாறன், சாவித்ரியிடம் " சாவி அண்ணன் கால் பண்ணுறாரு... நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் ரெடியா இரு " என்றவன், சாவித்திரியின் அழைப்பை துண்டித்து விட்டு தீக்ஷிதனின் அழைப்பை ஏற்றான்...

" சொல்லு அண்ணா என்ன விஷயம் " என்றான் மாறன்...

" என்னடா பண்ணுற... "

" சும்மா தான் அண்ணா சொல்லு எதுக்கு கால் பண்ண "

" கோவிலுக்கு போகணும்டா நீயும் வரியா... தனியா போக ஒரு மாதிரி இருக்கு " என்றான் தீக்ஷிதன் தழுதழுத்த குரலில்...

அதனை கேட்ட... மாறன்..."நான் வரேன் அண்ணா " என்றான் புன்னகையுடன்...

" சரிடா ... வீட்டுலயே இரு நான் வந்து உன்னை அழைச்சிட்டு போறேன் " என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு மாறனின் வீட்டை நோக்கி சென்றான்...

மாறனோ உடனே சாவித்ரிக்கு அழைப்பு விடுத்தான்...

" சொல்லு மாறா அதுக்குள்ள வந்துட்டியா ? " என்று கேட்டாள் சாவித்ரி...

" இல்லடி... சாவி நம்ம அப்புறம் வெளியே போவோம்.. அண்ணன் கோவிலுக்கு வர சொல்லுறான் அங்க போகணும்... "

" கொன்னுடுவேன் உன்னை அப்போ எதுக்குடா என்னை கிளம்பி இருக்க சொன்ன... உன்னால இன்னிக்கு வேலைக்கு கூட லீவ் போட்டுட்டேன்... இப்போ நீ வந்து என்னை அழைச்சிட்டு போகல... நான் உன்கிட்ட பேசவே மாட்டேன் " என்றாள் கோவத்தில்...

இருபக்கமும் தலையாட்டி சிரித்த மாறன்
"ஆமா பெரிய கலக்ட்டர் வேலை. நீ போகலைன்ன உடனே... இந்திய பொருளாதாரம் அப்படியே சரிந்திடும், பாரு.. சரி தான் போடி... நானும் உன்கிட்ட பேச மாட்டேன் " என்று பொய்யாக கூறியவன் அழைப்பை துண்டித்தான்...

அவளோ அவனை திட்டினாலும்... அவன், தீக்ஷிதனின் மீது கொண்ட அன்பை எண்ணி வியந்து கொண்டாள்...

மாறனுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு தீக்ஷிதன் திருப்பி வீட்டிற்கு வந்த நேரம்... அங்கு மதி இல்லாமல் இருக்கவே... வாட்ச்மேனை அழைத்து அவள் எங்கே என்று கேட்டான்... அவனோ " உங்க கார் கிளம்பின உடனே பின்னாடியே அவங்களும் கிளம்பிட்டாங்க சார் " என்று கூற...

அவனோ " எப்படி போனாங்க... நடந்தா போனாங்க ? " என்று கேட்டான்... அதற்கு வாட்ச்மேன் ஆமா என்று தலையாட்ட ... அமைதியாக உள்ளே வந்தான் தீக்ஷிதன்...

காலை பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பியவள்... மாலை ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள்...

வீட்டிற்குள் நுழைந்த மதி, தீக்ஷிதனை பார்த்து " பிரென்டை பார்க்க... போனேன் " என்று அவன் கேட்காமலே பதில் கூறியவள் அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்...

அவனோ " ம்ம்ம் " என்று மட்டும் பதில் கொடுத்தவன்... தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்...

அடுத்த நாள் இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்து அனைவரும் செல்ல... மாறனோ, தீக்ஷிதனிடம் ஒரு காகிதத்தை கொடுத்து... " ஒரு கவிதை எழுது அண்ணா " என்றான்

" எதுக்குடா? எனக்கு கவிதை எழுதுற மூட் இல்லடா " என்றான் தலையை பிடித்தபடி... மாறனோ அவனை விடாமல் தொல்லை செய்ய... இறுதியாக அவன் ஒரு காதல் கவிதையை எழுதி மாறனிடம் கொடுத்தான்...

" சூப்பர் அண்ணா... சரி வா வெளியே போவோம் " என்ற மாறன் தீக்ஷிதனின் கையை பிடித்து இழுத்தான்...

" எதுக்குடா, இப்படி இம்சை பண்ணுற... இப்போ எங்க போக போறோம்."

" கிப்ட் வாங்க தான்... என் சாவிக்கு ஒரு கிப்ட் வாங்கணும் நீயும் வா... "

" ஒஹ் அப்போ அந்த கவிதை... உங்க சாவிக்கு தானா? சூப்பர் டா " என்றவன் எழுந்துகொண்டான்...

நகை கடைக்கு வந்த மாறனோ நகைகளை பார்க்க... தீக்ஷிதனோ அமைதியாக இருக்கையில் அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தான்...

அப்போது தான் தேதியை பார்த்தவனுக்கு நாளை மதியின் பிறந்த நாள் என்று நியாபகம் வந்தது... உடனே தன் தலையில் மானசீகமாக அடித்துக்கொண்டவன்... அவளுக்காக மோதிரத்தை பார்க்க தொடங்கி இருந்தான்.

அப்போது கடைக்குள் வந்தான் ஆதி...

ஆதியோ அங்கிருந்த தீக்ஷிதனை பார்த்துகொண்டே உள்ளே வந்தவன், அவன் அருகில் வந்து அமர்ந்தபடி.. அவன் தோளில் கைபோட்டவன் " என்ன தீஷா யாருக்கு மோதிரம் எல்லாம் வாங்குறீங்க?" என்று கேட்டான் புன்னகையுடன்...

தீக்ஷிதனோ அவனை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்தபடியே... "நீங்க எங்க இங்க? " என்று கேட்டான்...

" முக்கியமான ஒருத்தருக்கு கிப்ட் வாங்கணும் அதுக்கு தான் வந்தேன் " என்றவன் தீக்ஷிதன் தேர்வு செய்து வைத்திருந்த மோதிரத்தை பார்த்தபடியே... " நீங்களும் அதுக்கு தான் வந்தீங்களா... அது தான் மான்சி ஊருல இல்லையே அப்புறம் யாருக்காக வாங்குறீங்க?" என்றான் ஒற்றை கண் சிமிட்டி...

தீக்ஷிதனோ பதில் எதுவும் கூறாமல் தான் எடுத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து பில் போட சொன்னான்...

ஆதியோ " இந்த ரிங் எனக்கும் வேணும்... இன்னொரு பேர் இருக்கா?" என்றபடி தீக்ஷிதன் பில் போட எடுத்து வைத்திருந்த மோதிரத்தை குறிப்பிட்டு... அங்கிருந்தவர்களிடம் கேட்டான்...

" இல்லை சார் இதுல வேற பேர் இல்லை சார் சிங்கிள் பீஸ் தான் " என்றார்கள் அவர்கள்...

உடனே ஆதி " இதோட அமெண்ட்டை விட ஐந்து மடங்கு பணம் நான் கொடுக்கிறேன் அந்த மோதிரம் எனக்கு வேண்டும் "என்றான் அதிகாரமாக ஆதி.

தீக்ஷிதனோ அவன் செயலை சலித்தபடியே பார்க்க... மாறனோ " அது எப்படி? இது என் அண்ணா செலக்ட் பண்ண மோதிரம் " என்றான் அழுத்தமாக...

ஆதியோ கடைக்காரரிடம் அதிகம் பணம் கொடுப்பதாகவும், அந்த மோதிரத்தை தனக்கே கொடுக்குமாறும் கிட்ட தட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்... அதனை பார்த்து கடுப்பான மாறன் எதையோ கூற வர... அவனை தடுத்த தீக்ஷிதன்...

" இந்த ரிங்கை நீங்களே வாங்கிக்கோங்க... தேவை இல்லாமல் பணத்தை வீணாக்காதீங்க... " என்று ஆதியிடம் கூறினான் தீக்ஷிதன்..

" பணத்தை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை... நான் விரும்பின பொருள் எனக்கு கிடைக்கணும்... " என்றான் ஆதி அழுத்தமாக...

அவன் கூறியதை கேட்டு சிரித்த தீக்ஷிதனோ " உங்களுக்கு வேணும்னா இது சாதாரணமா இருக்கலாம்... ஆனால் எல்லாத்தையும் பணத்தை வச்சி வாங்க முடியாது ஆதி " என்றான் தீஷ்...

" உண்மை தான் ஆனால் எந்த விஷயத்தை எப்படி அடையணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் தீஷ் " என்றான் ஆதி திமிராக...

அவனை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்த தீக்ஷிதன்... மாறனிடம் திரும்பி " உனக்கு எல்லாம் வாங்கிட்டியா? " என்று கேட்டான்...

" ம்ம்ம் அண்ணா நீ ஏதாவது வாங்கு அண்ணா " என்றான் மாறன் கெஞ்சுதலாக...

தீக்ஷிதனோ அருகில் இருந்த ஏதோ ஒரு மோதிரத்தை எடுத்து, அதனை மாறனிடம் கொடுத்து " பில் போட்டு வாங்கிட்டு வா... நான் காரில் இருக்கேன் " என்றபடி வெளியே சென்றான்...

 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 29


நகை கடையில் இருந்து வெளியே வந்த மாறன்... தீக்ஷிதனின் வண்டியில் ஏறிக்கொண்டான்...

வண்டியில் சென்றுக் கொண்டிருக்கும் போது "அண்ணா ... அந்த கிப்ட் ஷாப் கிட்ட நிறுத்து " என்றான் மாறன்..

" இப்போ என்னடா... " என்று தீக்ஷிதன் சலித்தபடியே கேட்டான்...

" இதை கிப்ட் பேக் பண்ணனும் ... நீ கார்லயே இரு... நான் பண்ணிட்டு வந்துடுறேன் " என்ற மாறன், தீக்ஷிதன் மதிக்கு வாங்கி வந்த மோதிரத்தையும், மாறன் சாவித்ரிக்கு வாங்கிய செயினையும் எடுத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தான்..

அங்கு சென்று மதிக்காக தீக்ஷிதன் வாங்கிய மோதிரத்துடன்... தீக்ஷிதனிடம் எழுதி வாங்கிய காதல் கவிதையையும் சேர்ந்து ஒரு பெட்டியினுள் வைத்தவன்.. வித் லவ் தீக்ஷிதன் என்று எழுதி... மதிக்கு கொடுப்பதற்காக அதனை பேக் செய்தான் மாறன்...

" இப்போ நீ என்ன பண்ண போறன்னு நானும் பாக்குறேன் அண்ணா... எப்போ மதி கிட்ட உன் காதலை சொல்லுன்னு சொன்னாலும்... அப்புறம் பார்க்கலாம்.. யோசிக்கிறேன்டா அப்படின்னு சொல்லி, சொல்லியே காலத்தை கடத்திட்டு இருக்க... இனி விட மாட்டேன்... உன் காதல் மதிக்கு தெரிய போகுது... ஆனால் அது உனக்கு தான் தெரியாது... சாரி அண்ணா எனக்கு வேற வழி தெரியல... நீ இந்த கிப்ட்டை மதி கிட்ட கொடுத்தால் போதும்... மதிக்கு நீ அவளை விரும்புறது தெரிந்திடும்... " என்றவன்... அந்த கிப்ட் பேக்கினை எடுத்து வந்து தீக்ஷிதனிடம் கொடுத்தான்...

" அண்ணா நீ வாங்கின மோதிரத்தையும் கிப்ட் பேக் பண்ணிட்டேன்... இதை அப்படியே மதி கிட்ட கொடுத்துடு.. இனி எல்லாம் நல்லதா நடக்கும் " என்றவன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்...

தீக்ஷிதனோ அவனை புரியாமல் பார்த்தவன்... சலிப்பாக தலையாட்டியபடியே காரை ஓட்ட ஆரம்பித்தான்...

சிறிது தூர பயணத்தில் தீக்ஷிதனுக்கு ஒரு ப்ரோடியூசர் இடம் இருந்து அழைப்பு வரவே... வண்டியை நிறுத்தியவன்... அந்த அழைப்பை ஏற்று பேசி முடித்தான்...

" என்ன ஆச்சு அண்ணா " என்று மாறன் தீக்ஷிதனின் அமைதியை உணர்ந்து கேட்டான்..

அவனோ " இன்னிக்கே மும்பை கிளம்பணும்டா அடுத்த பட விஷயமா "

" சூப்பர் அண்ணா கிளம்பிடுவோம் " என்றான் மாறன் குதூகலமாக...

" சில காரணத்துக்காக அங்க ஒன் மன்த் தங்கி இருக்க வேண்டியது வரும் போலடா... அது தான் யோசனையா இருக்கு... நிலா வேற தனியா இருப்பாள்... "

" அவங்களையும் அப்போ வர சொல்லு அண்ணா... ஜாலியா ஒரு ட்ரிப் மாதிரி போய்ட்டு வருவோம் " என்றான் மாறன் சந்தோசமாக...

" சரி டா நான் அவள் கிட்ட கேட்கிறேன் "

" அண்ணா அப்படியே நான் சாவித்ரியையும் வர சொல்லவா... ப்ளீஸ் " என்று கெஞ்சினான் மாறன்...

" டேய் ... ஒரு மாசத்துக்கு மேல ஆகும்.. அதுவும் நம்ம ஒன்னும் ட்ரிப்க்காக போகல... வேலை விஷயமா போறோம்... "
" தெரியும்... ஆனால் நம்ம எப்போவும் வேலை செய்ய போகிறது இல்லையே... நேரம் கிடைக்கும் தானே அண்ணா... "

" அதெல்லாம் சரிடா ஆனால் ஒரு வயசு பொண்ணை எப்படி அழைச்சிட்டு போக முடியும் " என்ற தீக்ஷிதன் மாறனை சந்தேகப் பார்வை பார்த்தான்...

" உனக்கு உன் தம்பி மேல நம்பிக்கை இல்லையா... கடவுளே இந்த அவமானம் எனக்கு தேவை தானா... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல்... சாவித்ரி என் பொண்டாட்டியா இருந்தால் கூட... அவள் மேல என் சுண்டு விரல் கூட படாது... உன் தம்பியோட ஒழுக்கம்... வயசுல இல்லை அண்ணா மனசுல இருக்கு " என்று அவன் நீளமாக பேச... தீக்ஷிதனோ எட்டி பின்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினான்...

மாறனோ அவன் செயலை கேள்வியாக பார்க்க... அவனோ " ரொம்ப பேசிட்ட இல்லை தண்ணீர் குடி... " என்றான் கிண்டலாக... மாறனோ பொய் கோவத்துடன் முகத்தை திருப்பி கொள்ள... அவன் தோளில் கை போட்ட படி மாறனை தன் பக்கம் இழுத்து கொண்ட தீக்ஷிதன் "சரிடா உன் சாவித்ரியையும் அழைச்சிட்டு வா... ஆனால் அந்த பெண்ணை கட்டாயப்படுத்த கூடாது... அவங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் தான் நீ அவளை அழைச்சிட்டு வரணும் புரியாதா ? " என்றான் அழுத்தமாக...

" அது எல்லாம் புரியுது அண்ணா... வண்டியை இங்கேயே நிறுத்து... அவள் வேலை செய்யுற இடம் இங்க தான் இருக்கு நான் போய் அவள் கிட்ட சொல்லி அழைச்சிட்டு வரேன்... " என்ற மாறன் இறங்கி கொண்டான்...

மாறனை இறக்கிவிட்ட தீக்ஷிதன் பின்னர் நேராக தன் வீட்டை நோக்கி வந்தான்...

மதியோ அங்கு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருக்க... அவள் அருகில் வந்தான் தீக்ஷிதன்...
"நீ எதுக்கு இந்த வேலை எல்லாம் பார்க்கிற? வேலைக்கார அம்மா எங்க " என்று கேட்டான்.

" அவங்க சமைக்கிறாங்க... தீஷா... நான் தான் சும்மா இருக்கேன்னு சொல்லி இதை பண்ணிட்டு இருக்கேன்... "

"ம்ம்ம்.. அப்புறம் நிலா இன்னிக்கு நைட் நான் ஊருக்கு கிளம்பணும்... திரும்பி வருவதற்கு ஒரு மாசம் ஆகும் நீயும் வரியா? " என்று கேட்டான் தீக்ஷிதன்...

" அய்யோ தீஷா நாளைக்கு எனக்கு செமஸ்டர் எக்ஸாம் இருக்கே... நான் எப்படி வர முடியும்... இப்போ என்ன பண்ணுறது " என்று கேட்டாள். கண்களை உருட்டியபடியே...

" சரி... நிலா எக்ஸாம் எப்போ முடியும் சொல்லு நான் திரும்பி வந்து உன்னை அழைச்சிட்டு போறேன் " என்றவனிடம் சரி என்றவள்.. மீண்டும் செடிக்கு தண்ணீர் ஊற்ற தொடங்கினாள்...

உள்ளே வந்த தீக்ஷிதனோ தனக்கு தேவையான உடைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தான்...

இங்கு மாறனோ சாவித்திரியின் காலில் விழுந்து அவளை தன்னுடன் வர சம்மதிக்க வைத்தவன்... அவளுக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொடுக்க... அவளை அழைத்து கொண்டு கடைக்கு சென்றான்...
தேவையான அனைத்தையும் வாங்கிக்கொண்ட இருவரும்... சாவித்திரியின் வீட்டிற்கு வந்து மலர்விழியிடம் அனுமதி பெற்று விட்டு கிளம்பி வந்தனர்...

தீக்ஷிதனோ தயாராகி வெளியே வந்தவன் மதியிடம் " கவனமா இரு நிலா... அன் டைம்ல வெளியே போகாத... முக்கியமா யாரையும் நம்பாத... சரியா" என்று ஆயிரம் பாதுகாப்பு விஷயம் கூறியவன் அவளிடம் இருந்து விடைபெற்று தன் காரில் ஏறிக்கொண்டான்...

காரில் ஏறியவன் அப்போது தான் பார்த்தான் மதிக்காக அவன் வாங்கி வைத்திருந்த பரிசினை... உடனே அதனை எடுத்து கொண்டு கீழே இறங்கினான்...

" என்ன தீஷா " என்று மதி கேட்க... அவனோ தன் கையில் இருந்த கிப்ட்டினை எடுத்து அவளிடம் நீட்டிய படி " அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே நிலா " என்றான்... புன்னகையுடன்...

சந்தோசமாக அவன் கையில் இருந்து அந்த பரிசினை வாங்கியவள்... அவனை அணைத்த படி " ரொம்ப நன்றி தீஷா எங்க நீ மறந்துட்டியோன்னு நினைச்சேன்... நீ தான் எனக்கு முதலில் வாழ்த்து சொல்லணும்ன்னு ஆசைப் பட்டேன்... அது நடந்துடுச்சு... " என்றவள் அவன் கன்னத்தை அழுத்தி கிள்ளிய படியே " பாத்து போய்ட்டு வா தீஷா... " என்றாள்...

அவனோ சந்தோஷமாக அவளை பார்த்து சிரித்தவன் " எக்ஸாம் முடியவும் சொல்லு... நான் வந்து உன்னை அழைச்சிட்டு போறேன்... கவனமா இரு... " என்றவன் அவளிடம் இருந்து விடைபெற்று சென்றான்...

தீக்ஷிதன் சென்ற பிறகு அறைக்குள் வந்தவள் அவன் வாங்கி தந்த... பரிசினை பிரித்து பார்க்க முயன்ற நேரம்... ஆதியிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது...

அவன் அழைப்பின் மீது ஆர்வம் வர பெற்றவள்... விரைந்து எழுந்துக் கொள்ள... தீக்ஷிதன் கொடுத்த பரிசு கீழே விழுந்தது.. மதியும் அதனை கவனிக்காமல் சென்று போனை எடுத்து பேச தொடங்கி இருந்தாள். அப்போது அவள் கால் பட்டு பரிசு கட்டிலின் கீழ் சென்றது... அதையும் அவள் கவனிக்க வில்லை ஆதியிடம் பேசிக்கொண்டிருந்த மயக்கத்தில்...

" பேபி நான் உனக்காக அங்க வெய்ட் பண்ணுறேன்... வந்திடு " என்றான் ஆதி

" இப்போவே வா... இந்த நேரத்துல! இல்லை நான் வரல " என்றவளிடம் பேசி சமாளித்தவன்... அவளை அங்கு வரவைத்திருந்தான்...

அழகிய பட்டு சேலை உடுத்தி நின்ற மதியை பார்க்க... பார்க்க ஆதிக்கு திகட்டவில்லை...

அவன் பார்வையில் நாணம் கொண்டவள்... வெட்கத்தில் தலையை தாழ்த்திக்கொண்டாள்... அவள் தாடையை ஒற்றை கையால் பற்றியவன் அவள் முகத்தை நிமிர்த்தினான்...

" ரொம்ப அழகா இருக்கடி... " என்றான் ஆதி கிறக்கமான குரலில்...

" பொய் சொல்லாதீங்க " என்று பெண்கள் வழக்கமாக கூறுவதை வழமை மாறாமல் கூறினாள்...

தனக்கு பிரியப்பட்ட ஒரு ஆண் , தன்னை அழகு என்று கூறும் போது... எந்த பெண்ணும் அவ்வளவு சீக்கிரம் அந்த வார்த்தையை ஏற்க மாட்டாள்... ' பொய் ' என்றே கூறுவாள் காரணம் அப்போது தான் அவன் மீண்டும் மீண்டும் தன் அழகை பற்றி கூறுவான். என்ற எதிர்பார்ப்பில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்...

பின்னர் இருவரும் சேர்ந்து உணவு உண்ணும் நேரம்... மதியோ " நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா ஆதி ? " என்று கேட்க... அவனுக்கோ புரை ஏறியது...
அவளோ அவனிடம் தண்ணீரை எடுத்து நீட்ட... அதனை வாங்கி அருந்தினான்...

" லவ்.... பண்ணி இருக்கேன்... ஒரே ஒரு முறை... கவி... அந்த பொண்ணு பேரு...அப்போ எனக்கு 21 வயசு... அவளுக்கு 19 வயசு... எப்படி காதல் வந்ததுன்னு எனக்கு தெரியல... அவளை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது... ரெண்டு வருஷம் வாழ்க்கை ரொம்ப அழகா இருந்தது... அப்புறம் ஒரு நாள் வந்து... ' எங்க வீட்டுல எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க... என்னை மறந்துடுன்னு ' சொல்லிட்டு போயிட்டாள்... ரொம்ப கஷ்டமா இருந்தது... அந்த வயசுல அந்த வலியை என்னால தாங்கிக்க முடியல... அதனால தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணேன்... இப்போ அதெல்லாம் நினைச்சி பார்க்கும் போது சிரிப்பு தான் வருது... அதுக்கு பிறகு என் வாழ்க்கையை என் விருப்பத்துக்கு வாழ ஆரம்பிச்சேன்...இனி காதலே வேண்டாம்... அப்படின்னு முடிவு பண்ணி... வாழ்க்கையை என்ஜோய் பண்ணி வாழ ஆரம்பிச்சேன்... அதுல நிறைய தப்பும் பண்ணி இருக்கேன்... ஆனால் உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் தோணுது... ஏன் அந்த மாதிரி தவறை எல்லாம் பண்ணினேன் சொல்லி... நீ என் வாழ்க்கையில முன்னாடியே வந்து இருக்கணும் மதி... நீ மட்டும் முன்னமே என் வாழ்க்கையில் வந்து இருந்தால் கண்டிப்பா என் வாழ்க்கை தடம் மாறி போயிருக்காது... " என்றவனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழுந்தது...

அவன் கண்ணீரை கண்டு பதறிய மதி " நீங்க என்ன சொன்னீங்கன்னு எனக்கு ஒன்னு கூட புரியல... ஆனால் நீங்க ஒரு பெண்ணை விரும்பி இருக்கீங்க அந்த பொண்ணு உங்களை விட்டுட்டு போய்டுச்சு... அது தானே " என்று அவள் குழந்தையாக கேட்க... சத்தமாக சிரித்தவன்... " உனக்கு இவ்ளோ புரிஞ்சதே பெரிய விஷயம் தான் " என்றவன் அவள் கரம் பற்றி அழைத்து வந்தான்...

எங்கும் வண்ண மின் விளக்குகள் ஒளிர... ரோஜா இதழ்களால் அலங்கரித்திருத்த அந்த மேடைக்கு மதியின் கரம்பற்றி அழைத்து வந்தான்... ஆதி...

அவளோ ஒன்றும் புரியாமல் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருத்த அலங்காரங்களை ஆச்சர்யமாக பார்த்துகொண்டு இருந்தாள்...

அப்போது அவள் எதிர்பாராத நேரம்... அவள் முன் அவன் மண்டியிட்டு நிற்க...
அவளோ அவனை கேள்வியாக... விழிவிரித்து பார்த்தாள்...

அவனோ சற்றும் தயங்காமல் அவள் கரம்பற்றியவன் " ஐ லவ் யூ " என்று கூறி அவள் கரத்தில் முத்தமிட... பெண்ணவளின் உடல் சிலிர்த்து அடங்கியது...

அவளோ வெட்கப் புன்னகையுடன் அவனை நெருங்கி நிற்க... அவனோ அந்நேரம் அருகில் இருந்தவனை கண்களால் அழைக்க... அவனும் அவன் அழைப்பின் அர்த்தம் உணர்ந்து அவனிடம் மோதிரத்தை நீட்டினான்...

அவனும் அதனை கையில் வாங்கியவன் மதியின் கரம் பற்றி அவளுக்கு அதனை அணிவித்தான்....
அவளோ எந்த மறுப்பும் கூறாமல்.... அவனை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்து கொண்டாள்...

எழுந்து நின்றவன் அவள் இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுக்க, அவளும் அவன் மீது மோதி நின்றாள்... வெட்கத்தில் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க தயக்கம் காட்டியவள்... அவன் பார்வையை தவிர்த்தாள்...

உயிர் உருக்கும்.....
உன் பார்வை....
தீன்டினாலே சருகாய் ....
என் தேகம் உதிரும் மன்னவா...

" என்ன வெட்கமா... இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ என்ன திடீர்ன்னு இந்த வெட்கம் ... ஆனால் இது கூட நல்லா தான் இருக்கு... உனக்கு என்னை புடிச்சு இருக்கா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ? " என்றவன் அவள் முகத்தை இரு கைகளால் தாங்கி பிடிக்க... அவளோ அவனை வெட்கம் மீதுற பார்க்க தயங்கினாள்...

" இந்த வெட்கம் ரொம்ப அழகா இருக்கு மதி, பதில் சொல்லு " என்றவன் அவளின் இதழில் மென் முத்தமிட்டான்...

அவனின் அந்த முதல் முத்தத்தில் பெண்ணவள் உடல் நடுக்கத்துடன் சிலிர்த்தது... " ரொம்ப அழகா இருக்க " என்றவன் மெல்ல அவள் கன்னம் வருட... உணர்ச்சியின் பிடியில் கண்கள் சொருக அவன் மீது சரிந்தாள்...

அந்த நேரத்தில் அவள் மனதில்... தீக்ஷிதனை பற்றிய எண்ணமோ, அல்லது சாவித்திரியை பற்றிய எண்ணமோ சிறிதும் இருக்கவில்லை... மதியின் மனம் முழுவதும் ஆதி ... ஆதி... ஆதி அவன் மட்டுமே நிறைந்திருந்தான்... தன்னுடைய படிப்போ.. தான் இருந்த நிலையோ, தீக்ஷிதன் செய்த உதவியோ எதுவும் அவளை தடுக்க வில்லை..

தன் மீது சரிந்தவளை கைகளில் ஏந்தியவன் அவளை தன் அறைக்குள் அழைத்து சென்று மெத்தையில் கிடத்தினான்...

அப்போதும் கண்கள் சொக்க அவனை பார்த்த மதியின் விழியில் என்ன கண்டானோ... உடனே அவள் முகம் நோக்கி குனிந்தவன்.. மீண்டும் அவள் இதழில் மெல்ல தன் இதழ் பதித்தவனால்... அவளை விட்டு விலக மனமில்லாமல் போனது...

அவள் இதழில் ஆழ்ந்து முத்தமிட்டான்... அவனின் இந்த செயலுக்கு அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராமல் இருக்கவே... அவள் அருகில் சரிந்து படுத்துக்கொண்டான்...

உணர்ச்சியின் தாக்கத்தில் அவன் நெற்றியில் வடிந்த வியர்வை துளிகள்... அவள் தேகத்தை நனைக்க... அவளை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டான்... முழுவதுமாக தனக்கு மட்டுமென அவளை தன்னுடைமை ஆக்கி கொண்ட பின்னே அவளை விட்டு விலகினான்....

பௌர்ணமியின் பனி இரவில்..

எனை மயக்கும் இளந்தளிரே

உயிர் உருகும் நேரமெல்லாம்..

உன் அணைப்பின் யோசனையே...

தீண்டா சுவை உனை பார்க்க..

தீயாய் தகிக்கும் தேகமெல்லாம்...

தீண்டி கண்டபின்னும்...

இது தெளியாதோ தீஞ்சுடரே...இங்கு இரு உயிர்கள் ஒன்றாய் சங்கமிக்கும் நேரம்... அங்கு ஒரு உயிரோ... ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருத்தது...


சில நேரம் சில மனிதர்களின் குணம் மாறுவது இயல்பு.. அப்படி மனம் தடுமாறும் போதும், தான் யார்? என்ற நிலையை மறவாமல்.. தடம் மாறாமல் வாழ்ந்தவர்கள் தான் வாழ்க்கையை வென்றவர்கள்...
 
Last edited:

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 30


தீக்ஷிதன், மாறன் மற்றும் சாவித்ரி என மூவரும் 2 மணி நேர விமான பயணத்திற்கு பிறகு மும்பை வந்து சேர்ந்தனர்...

மும்பை வந்தவர்கள் அங்கு ஹோட்டலில் தங்கி இருந்தனர்...

இரண்டு ரூம் எடுத்தவர்கள்... ஒன்றில் தீக்ஷிதனும், மாறனும்... மற்றொரு ரூமில் சாவித்ரி தங்குவதற்கும் முடிவு செய்தான் தீக்ஷிதன்...

மாறன் முகமோ வாடி இருக்க... அதை கண்ட தீக்ஷிதன் " என்னடா என் கூட தங்குறதுக்கு உனக்கு அவளோ கஷ்டமா இருக்கா.. என்ன? " என்றான் கேலியாக...

" அப்படி எல்லாம் இல்லை அண்ணா... சாவி பாவம் தனியா இருப்பாள் இல்லை... அவள் வேற ரொம்ப பயப்படுவாள் அது தான் யோசிச்சேன் "

" அதெல்லாம் நான் பயப்பட மாட்டேன் அண்ணா... நீங்க அவன் பேச்சை கேட்காதிங்க... அது இதுன்னு சொல்லி என் காலில் விழுந்து ஏமாத்தி கூப்பிட்டு வந்துட்டான் பிராடு " என்று மாறனை முறைத்தவாறே கூறினாள் சாவித்ரி...

' அய்யோ மாட்டி விட்டுட்டாளே சண்டாளி ' என்றவன் தீக்ஷிதனை பார்த்து அசடு
வழிந்தான்... அதனை பார்த்து இரு பக்கமும் தலையாட்டி சிரித்த தீஷிதன் மாறன் தலையில் தட்டியப் படியே... " வேலை விஷயமா கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு, நான் போய்ட்டு வரேன்... நீங்க ரெண்டு பேரும்.. ரெஸ்ட் எடுங்க " என்றான் தீக்ஷிதன்...

" இந்த நேரத்துல என்ன வேலை அண்ணா... இரு நானும் வரேன் " என்று மாறன் அக்கறையாக கேட்டான்...

"இல்லை மாறா... சாவித்ரி தனியா இருப்பா.. நீ அவள் கூடவே இருந்து பார்த்துக்கோ... நான் ஒரு அரை மணி நேரத்தில வந்துடுறேன் ... " என்றபடி தீக்ஷிதன் வெளியே கிளம்பினான்...

வெளியே வந்தவன்... மதியின் அலைபேசிக்கு அழைத்தான்... ஆனால் அவள் அதனை ஏற்க வில்லை... எப்படி ஏற்பாள்... அவள் தான் ஆதியுடன் சங்கமித்து கொண்டிருந்தாள் அல்லவா???

" என்ன ஆச்சு ஏன் இவள் போன் எடுக்க மாட்டேங்குறாள்... ஒரு வேளை தூங்கிட்டாளோ.. சரி காலைல பார்த்துப்போம் " என்றவன் வண்டியை எடுத்து கொண்டு... நேராக ஒரு கோவிலை நோக்கி வந்தான்... அங்கு சிறிது நேரம் இருந்தவன்... தன் மனம் அமைதி அடையவும்... திரும்பி காரில் வந்து கொண்டிருந்தான்...

வண்டியில் வந்து கொண்டிருக்கும் போதும் அவனுக்கு மதியின் ஞாபகமே மேலாக இருந்தது... ' அவள் நல்லா இருக்காளா?... என்ன ஆச்சு ' என்று அவன் யோசிக்கும் நேரம் நடு காட்டில்.. வண்டி பஞ்சர் ஆகி நின்றது...

" ஷீட் " என்று தலையில் அடித்துக்கொண்டவன்... காரில் இருந்து இறங்கினான்... பஞ்சர் ஆன காரின் டயரை பார்த்து " ஊப் " என்று ஊதியவன்... தன் போனை எடுத்து மீண்டும் மதிக்கு அழைத்தான்...

தொடர்ந்து அலைபேசி ஒலித்து கொண்டிருக்க.. கடுப்பான ஆதி... மெத்தையில் இருந்தவாறு யார் என்றும் பாராமல் அந்த அழைப்பை துண்டித்தவன்... அவளது போனை சுவிட்ச் ஆப் செய்தான்...

இங்கு தீக்ஷிதனோ அழைப்பு துண்டித்ததை பார்த்தவன் மீண்டும் முயற்சிக்க அது ஸ்விட்ச் ஆப் என்று வர... பதட்டமானவன் சாலையில் வாகனத்தை கவனிக்காமல் நிற்க அப்போது அந்த பக்கம் வந்த ஒரு லாரியோ... அவனை அடித்து வீசியது... லாரி மோதிய வேகத்தில் பத்தடி தள்ளி சென்று விழுந்தான் தீக்ஷிதன்...

அப்போது தூரத்தில் இருந்து வந்த காரில் இருந்த இரு பெண்கள் அந்த நிகழ்வினை கண்ணெதிரே கண்டனர்...

"சரண்யா வண்டியை நிறுத்து... வா அவருக்கு போய் உதவி பண்ணுவோம் "

" நமக்கு எதுக்கு மேடம் பிரச்சனை... எல்லாரும் எப்படி கண்டுக்காமல் போறாங்க.. வாங்க நம்மளும் கண்டுக்காமல் போய்டுவோம்... " என்றவள் வண்டியை நிறுத்தாமல் இருக்க...

" வண்டியை நிறுத்துன்னு சொன்னேன்... சரண்யா.. மிருகங்கள் தான் ஒரு உயிர் துடிக்கிறத ரசிச்சு பார்க்கும்... நம்ம என்ன மிருகமா.. வண்டியை நிறுத்து கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பேசாத " என்றவளின் பேச்சில் வண்டியை நிறுத்தினாள்....

வண்டியில் இருந்து இறங்கி வந்தவர்கள்...தயங்கி நிற்க... சரண்யாவோ " மேடம் ஒரு வேளை அவரு இறந்துட்டாரோ " என்று நடுங்கிய படியே கேட்க...

அப்போது தீக்ஷிதனின் கைகள் மெல்ல அசைந்தது... அதனை கண்டவள் " சரண்யா அவருக்கு உயிர் இருக்கு சீக்கிரம் வா ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகலாம்.. " என்றவள் விரைந்து அங்கு அடிபட்டு குப்பற விழுந்து கிடந்த தீக்ஷிதனின்... உடலை திருப்பினர்...

முகம் முழுவதும் ரத்தமாக இருந்த போதிலும் அவன் முகத்தை அடையாளம் கண்டுக் கொண்டு நொடி பொழுதில் ஒரு மடி அவன் தலையை தாங்கியது...

"தீஷ்... " என்றவளின் குரல் கண்ணீருடன் நலிந்து ஒலித்தது...

அவள் குரல் கேட்டு அரை மயக்க நிலையில் கண்களை மெல்ல திறந்தான் தீக்ஷிதன்...

இமை முழுவதும் ரத்தமாக... இருந்தவனின் கண்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டது...

அவளை அடையாளம் கண்டு கொண்டவனின் கரம் தன்னிச்சையாக மேலே எழும்ப.... அவன் இதழ்களோ... " மான்சி " என்று முணுமுணுதது... அவள் கன்னம் தொட மேலே எழுந்த அவன் கரம் நிலை இல்லாமல் அப்படியே கீழே சரிந்தது. அவன் மீண்டும் மயக்கமாகி இருந்தான்...

" தீஷ்... " என்ற மான்சியின் கதறல்... அவன் செவிகளையும் சென்றடைந்திருக்கும்...

"மேடம் உங்களுக்கு அவரை தெரியுமா? " என்று சரண்யா கேட்கவே...

" தெரியும்... சரண்யா... நீ உடனே வண்டியை எடு... " என்றவள் தீக்ஷிதனை தூக்க முயல அவளால் அவனை அசைக்க கூட முடியவில்லை... கண்கள் முழுவதுமாக கண்ணீர் பெருக்கெடுக்க... " சீக்கிரம் வா சரண்யா " என்று கதறியவள்... சரண்யாவின் துணையுடன் அவனை காரில் படுக்க வைத்தாள்...

செல்லும் வழி எங்கும் அவன் பெயரை சொல்லி சொல்லியே அவனை நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்தாள்...

"தீஷ் என்னை பாரு... உனக்கு ஒன்னும் ஆகாது... உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்.... கொஞ்சம் சீக்கிரமா போ சரண்யா"

அவர்களின் கார் மருத்துவமனைக்கு வந்ததும்... தீக்ஷிதனை எமர்ஜன்சி வார்டில் சேர்த்தனர்...

மான்சியோ இடிந்து போய் இருக்கையில் அமர்ந்திருந்தாள்... " இவரு எப்படி இங்க வந்தாரு. அப்போ மாறன்... கண்டிப்பா மாறனும் இவரு கூட தான் வந்து இருப்பான் " என்று எண்ணியவள் பதட்டத்துடன் தன் போனை எடுத்து மாறனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல... அடுத்த அரை மணி நேரத்தில் மாறனும் அங்கு வந்திருந்தான்...

" மான்சி... அண்ணனுக்கு என்ன ஆச்சு நீ எப்படி இங்க " என்று பதட்டத்துடன் கேட்டவன் அறையின் கண்ணாடி வழியே தீக்ஷிதனை பார்த்தான்...

தீஷிதனின் நிலையை கண்ட மாறனின் கண்களில் இருந்து கண்ணீர் வர... அதனை தன் கை கொண்டு துடைத்தாள் சாவித்ரி. " அழாதீங்க அவருக்கு ஒன்னும் ஆகாது " என்று அவள் சமாதானம் கூறினாள்...

அப்போது எமர்ஜன்சி அறையில் இருந்து வெளியே வந்த டாக்டரை கண்டவர்கள்... விரைந்து அவரிடம் சென்றனர்...

" அவருக்கு ஒன்னும் இல்லை தானே " என்று மான்சி பதட்டத்துடன் கேட்டாள்...

" இப்போது எதுவும் சொல்ல முடியாது... 12 மணி நேரத்துக்கு பிறகு தான் எதையும் சொல்ல முடியும்... " என்றவர் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார்...

டாக்டர் கூறியதை கேட்ட மான்சி... அப்படியே நிலைகுலைந்து கீழே அமர்ந்து அழ தொடங்கி இருந்தாள்...

அவள் கண்ணீரை கண்ட மாறன் அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன். " அழாத மான்சி அண்ணாக்கு ஒன்னும் ஆகாது " என்று கூறியவனின் சட்டையை ஆக்ரோஷமாக பற்றியவள்... " உன்னை நம்பி தானே நான் அவரை விட்டுட்டு வந்தேன்... நீ இருந்தும் கூட எப்படிடா அவருக்கு இந்த
நிலைமை வந்தது... நான் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன்... நான் தான்... " என்றவள் இயலாமையுடன்... சுவரில் சாய்ந்தாள்...

அழுது அழுது அவள் கண்களில் கண்ணீர் கூட வத்தி போனது... வறண்ட குளமாக அவள் கண்கள் காட்சியளித்தது...

மாறனின் அருகில் இருந்த சாவித்ரியோ " யார் அவங்க.. உன் சட்டையை பிடிக்கிறாங்க " என்று அவள் ஆதங்கத்துடன் கேட்டாள்...

" ப்ளீஸ் சாவி உனக்கு சொன்னால் புரியாது... விடு... கொஞ்சம் நேரம் அமைதியாக இரு " என்றவன் சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்து கொண்டான்...

மான்சியோ " அவருக்கு ஒன்னும் ஆகாது ... ஒன்னும் ஆகாது ... எல்லாம் சரி ஆகிடும் " என்றவள் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்... அவள் செயலை கண்ட மாறனுக்கோ மனம் பாரமாகி போனது...

மான்சி அருகில் வந்த சரண்யா " மேடம் நீங்க இப்படி எமோசனல் ஆகாதீங்க... இப்போ உங்க ஹெல்த் இருக்க கண்டிஷன்க்கு இது நல்லது இல்லை ப்ளீஸ்... " என்றவள் அவள் அருகில் அமர்ந்தாள்...

அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே... 12 மணி நேரமும் அதே இடத்தில் சிலையாக அமர்ந்திருந்தாள் ... சிறிது கூட கண்மூட வில்லை... அங்கிருந்த மற்றவர்கள் கூட சிறிது நேரம் கண் அயர்ந்தனர்... ஆனால் மான்சியோ... தீக்ஷிதன் இருக்கும் அறையை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்...

சரண்யாவோ பசி தாங்க முடியாமல்... அவளும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்தவர்களுக்கு டீயும்.. பிஸ்கட்டும் வாங்கி வந்தாள்...

சரண்யா அதனை சாவித்ரிக்கு கொடுக்க.. அவளோ மாறனை பார்த்தாள்... மாறனோ " வாங்கிக்கோ " என்று கூற... அதனை வாங்கியவள்... குடிக்கத் தொடங்கினாள்...

மாறனோ வேண்டாமென்று மறுத்து விட... மான்சியிடம் டீயை கொடுக்க.. மான்சியோ... அமைதியாக அமர்ந்திருந்தாளே தவிர அவள் இமை கூட அசைவில்லை...

அப்போது மீண்டும் பரிசோதனை முடிந்து வெளியே வந்த மருத்துவர் " இனி எந்த பிரச்சனையும் இல்லை அவரு ரொம்ப நல்லா இருக்காரு... " என்று கூற... அப்போது தான் சுயநினைவு பெற்றாள் மான்சி

" நாங்க இப்போ அவரை பார்க்க முடியுமா டாக்டர் " என்று மாறன் கேட்க...

" கொஞ்சம் நேரம் பொறுத்து போய் பாருங்கள் " என்றவர் அங்கிருந்து செல்ல...

மான்சியின் முகத்தில் அப்போது தான் நிம்மதி பரவியது...நிம்மதியாக இருக்கையில் அமர்ந்தவள் முகத்தை மூடி அழ தொடங்கினாள்..

அப்போது தீக்ஷிதனின் அறையில் இருந்து வெளியே வந்த செவிலியர்
" பேசன்ட் கண் முழிச்சிட்டாங்க.. இப்போ நீங்க போய் பார்க்கலாம் ? " என்றார்.

உடனே மாறன்.. உள்ளே செல்ல முற்பட்ட நேரம் திரும்பி மான்சியை பார்த்தவன்
" நீ முதலில் போ மான்சி " என்றான்...

அவளோ " வேண்டாம் " என்று தலையாட்டியவள்... கண்ணீருடன் அங்கிருந்து எழுந்து சென்றாள்... அவளை தொடர்ந்து சரண்யாவும் செல்ல... மாறனோ " மான்சி நில்லு மான்சி "என்றவன் அவளை தொடர்ந்து பின்னே சென்றான்...

" மறுபடியும் எங்க போற மான்சி.. உனக்கு அண்ணா மேல அப்படி என்ன கோவம் " என்று மாறன் ஆதங்கமாக கேட்டான்

"கோவமா எனக்கா... அதுவும் என் தீஷ் மேல... " என்றவளின் இதழோரம் விரக்திப் புன்னகை உதிர்ந்தது..

" பின்ன என்ன மான்சி? ஏன் அண்ணாவை பார்க்காமல் போற.. "

" எனக்கு பயமா இருக்கு மாறா.. எங்க மறுபடியும் தீஷ் எனக்கு மட்டுமே வேணும்னு சுயநலமா நான் யோசிக்க ஆரம்பிச்சிடுவேனோன்னு பயமா இருக்கு... என் காதல் தான் இல்லன்னு ஆகிடுச்சு, அவர் காதலாவது அவருக்கு கிடைக்கணும்.. அவர் அந்த பொண்ணோட சந்தோஷமா... " என்றவளுக்கு அதற்கு மேலே பேச வார்த்தை வராமல் அங்கிருந்து சென்றாள்... அவள் நடையில் இருந்த தளர்வே அவள் மனதின் சோர்வை எடுத்து கூறியது...

நீ கொடுத்த வலிகளுடனே வாழ பழகி கொண்டேன்...

மீண்டும் எனை நெருங்காதே நொறுங்கி விடுவேன்...

செல்லும் அவளையே வெறித்து பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்த மாறனின் தோளில் கைவைத்த சாவித்ரி " வா மாறா... அவரை போய் பார்ப்போம் " என்று அழைக்க... அவனும்... அவளுடன் சேர்ந்து தீக்ஷிதன் அறைக்குள் வந்தான்...

" அண்ணா " என்றபடி மாறன் கண்ணீருடன் அவன் நெஞ்சில் சாய்ந்தான்...

" டேய் எழுந்திரு டா... இப்படி படுத்து நீயே என்னை மேல அனுப்பிடுவ போல " என்று அவன் சிறு புன்னகையுடன் கூறினான்...

" சும்மா இரு அண்ணா நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா " என்றவன் தீக்ஷிதனின் கரம் பற்றினான்...

தீக்ஷிதனின் கண்களோ வாசலையே பார்த்தபடி இருந்தது... அதனை கண்ட மாறனோ " என்ன அண்ணா யாரை தேடுற " என்று கேட்க...

" மான்சி எங்கடா ? "

" அது அண்ணா... மான்சியா அவள் எங்க இங்க.. உனக்கு என்ன ஆச்சு எதுக்கு திடீர்னு மான்சி பேர சொல்லுற " என்ற மாறன் தடுமாறினான்...

" பொய் சொல்லாத மாறா... நான் அவளை பார்த்தேன்... எனக்கு நினைவு இருக்குடா அவள் எங்க ? வெளிய இருக்காளா? " என்றவன் எழுந்துகொள்ள.. முயற்சிக்கவும் அவனை தடுத்த மாறன்...

" அண்ணா ப்ளீஸ் நீ ஸ்ட்ரைன் பண்ணாத... அவள் இங்க இல்லை ண்ணா.. அவள் போயிட்டாள் "

" ஏன்டா? என்னை பார்க்க பிடிக்கமால் போயிட்டாளா... இதுக்கு மேல என் முகத்தை பார்க்க கூடாதுன்னு சொல்லி போயிட்டாளா? நான் என்னடா தப்பு பண்ணேன்... நான் அவள் கிட்ட மன்னிப்பு கேட்கணும்டா" என்ற தீக்ஷிதனின் கண்கள் கலங்க... விழியோரம் கண்ணீர் வழிந்தது....

 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 31


சூரிய ஒளி அறையில் பரவ... மெல்ல கண்களை திறந்தாள் மதி...

அவள் தன்நிலையை உணரவே சில வினாடிகள் எடுத்துக்கொண்டாள்...

தான் இருக்கும் கோலம் உணர்ந்தவள் வேகமாக எழுந்துகொள்ள நினைக்க... அவளால் சிறிது கூட அசைய முடியவில்லை... அந்த அளவிற்கு அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தபடி துயில் கொண்டிருந்தான் ஆதி...

எழுந்துகொள்ள பார்த்தவள் முடியாமல் போகவே... தான் செய்த தவறின் வீரியம் அவளுக்கு சிறிது சிறிதாக புரிய ஆரம்பித்தது...

செய்த தவறு புரியவும்... மௌனமாய் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது... அவள் கண்ணில் வழிந்த கண்ணீர் ஆதியின் விரல்களை நனைக்க... அந்த ஈரத்தில் கண் விழித்த ஆதி "ப்ச் " என்றபடி திரும்பி அவள் முகம் பார்த்தான்... " ஏண்டி அழுகுற? " என்றவன் அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடியவன்... பின்னர் தன் இதழ்களை அவள் இதழ்களில் இருந்து மெல்ல பிரித்தெடுத்தான்...

அவளோ எந்த உணர்வும் இல்லாமல் " தப்பு பண்ணிட்டேன்... பெரிய தப்பு பண்ணிட்டேன் " என்று கூறியவள் கண்ணீருடன் அவன் முகம் பார்த்தாள்...

'ப்ச் எல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் எல்லாருக்கும் ஞானோதயம் வரும் போல' என்று எண்ணியவன் தன் தலையை கோதியபடியே எழுந்து அமர்ந்தான்...

" எதுக்கு பேபி இப்போ அழுகுற... உனக்கு என்ன வேணும் சொல்லு ... நீ இப்போ கூட சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாம் " என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்...

அவளோ பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க , ஆதிக்கோ கோவம் தலைக்கேறியது " என்ன தாண்டி பிரச்சனை உனக்கு... நான் என்ன பண்ணனும் இப்போ... இப்படி அழுது வடியாத கோவம் வருது " என்றான்... அழுத்தமாக... அவளோ அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்... எழுந்து அமர்ந்து கொண்டாள்...

" சாரி பேபி... நீ இப்படி அழுகுறத பார்க்கிற அப்போ ஏதோ நான் உன்னை ஏமாத்தி நமக்குள்ள இது எல்லாம் நடந்த மாதிரி எனக்கு கில்டியா பீல் ஆகுது... நீ நோ சொல்லி இருந்தால் கண்டிப்பா நான் உன் மேல கை வச்சி இருக்க மாட்டேன்... உனக்கு எப்படியோ எனக்கு தெரியல... ஆனால் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்... ஐ லவ் யூ மதி ப்ளீஸ் அழாத... கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்... இந்த ஆதிக்கு இனி எப்போவும் இந்த மதி தான்... நீ மட்டும் தாண்டி என் வைப் " என்றான் அவள் கன்னம் தாங்கியபடி...

அவளோ பதில் எதுவும் பேசாமல் அமைதிகாக்க... அவனோ " நான் பிரேஷ் ஆகிட்டு வரேன்... பொறுமையா பேசிக்கலாம் " என்றவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்...

அவன் குளித்து முடித்து விட்டு திரும்ப வரும்போது அவள் அங்கு இல்லாமல் இருந்தாள்... " மதி " என்று அழைத்தவன் அவள் அங்கு இல்லாமல் இருக்கவே... விரைந்து வெளியே வந்தான்...

வெளியே இருந்த வேலை ஆட்களிடம் மதியை பற்றி விசாரிக்க... அவள் அப்போதே இங்கிருந்து சென்று விட்டாள் என்று
கூறினார்கள்...

அவனோ விரைந்து வந்து தன் அறையில் இருந்த போனை எடுத்து அவள் அலைபேசிக்கு அழைக்க... அது ஸ்விட்ச் ஆப் என்று வந்தது... கோவத்தில் தன் போனை தூக்கி போட்டு உடைத்தவன்... தலையில் கைவைத்த படி அமர்ந்துகொண்டான்...

' ரொம்ப அவசர பட்டுட்டோமோ... அவள் என்னை பிடிக்கும்ன்னு ஒரு தடவை கூட சொல்லவே இல்லையே... அப்புறம் நேத்து ஏன் அவள் என் தொடுகைக்கு சம்மதிக்கணும். ஒண்ணுமே புரியல ' என்று பல்வேறு கேள்வியை தனக்குள் கேட்டவன் இறுதியாக குழம்பியது தான் மிச்சம்...

கால் போன போக்கில் நடந்து வந்த மதி எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கும் தெரியவில்லை...

இங்கு தீக்ஷிதனோ மாறனிடம் " டேய் நிலாவுக்கு ஒரு போன் பண்ணுடா நேத்து போன் பண்ணினேன் அவள் எடுக்கவே இல்லை " என்றான்.

மாறனும் மதிக்கு அழைக்க போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது... அதனை தீக்ஷிதனிடம் கூறவே அவனோ வீட்டில் இருக்கும் தொலைபேசிக்கு அழைக்க சொன்னான்.. மாறனும் அது போலவே அழைக்க...

அழைப்பை ஏற்றார் அவன் வீட்டு வேலை கார அம்மா ... உடனே மாறன் " அண்ணா போன் எடுத்துட்டாங்க " என்று அவனிடம் கொடுக்க... போனை வாங்கிய தீக்ஷிதன் " நிலா அங்க இருக்காளா? சாப்பிட்டாளா? " என்று கேட்க... அவரோ மதியின் அறைக்குள் சென்று பார்க்க... அவள் தூங்கிகொண்டிருந்தாள்.. அதனை அவள் தீக்ஷிதனிடம் கூற... அவனோ " அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க... நேரத்துக்கு சாப்பிட சொல்லுங்க..." என்றவன் அழைப்பை துண்டித்தான்...

தீக்ஷிதனோ மருந்துகளின் வீரியத்தில் கண் அயர்ந்தான்... அந்த நேரம் மான்சி மாறனுக்கு அழைத்து அவன் உடல் நிலையை பற்றி கேட்டு அறிந்துகொண்டாள்..

" இப்போ அவரு என்ன பண்ணுறாரு ? "

" அண்ணா தூங்குறாரு மான்சி... " என்றவனிடம் " நான் ஒரு பத்து நிமிஷத்துல அங்க வரேன் " என்றவள் அழைப்பை துண்டித்தாள்...

சொன்னது போலவே பத்து நிமிஷம் கழித்து மருத்துவமனைக்கு வந்தாள் மான்சி...

"நான் அவரை பார்க்கணும் மாறா.. "

" அண்ணா உன்னை ரொம்ப தேடினார் மான்சி... "

" எதுக்கு மன்னிப்பு கேட்கவா ? "
என்று விரக்தியாக கூறியவள், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்...

உடல் முழுவதும் காயத்துடன் கண் மூடி படுத்துகிடந்தவனை பார்த்த மான்சியின் மனம் கனத்து போனது... கண்ணீருடன் அவன் அருகில் வந்தவள்... அவன் அருகில் அமர்ந்து, அவன் தலை பக்கத்தில் தன் தலையை சாய்த்தபடி சரிந்து படுத்துக்கொண்டவள்... கண்ணீருடன் அவன் கன்னம் வருடினாள்...

' லவ் யூ தீஷ் ... என்னால உன்னை மறக்க முடியாது... எனக்கு உன் மேல இந்த காதல் , எப்போ வந்ததுன்னு தெரியல ஆனால்... நீ இல்லாமல் நான் இல்லை தீஷ்... இப்போ வரை என் அன்பு உனக்கு விளையாட்டா தான் தெரியுதா?... என் காதல் உண்மை தீஷ்... அது ஏன் உனக்கு புரியல... நீ உயிரோட இருக்க வரை தான் இந்த உலகத்தில் நான் உயிரோட இருப்பேன் உனக்கு ஏதாவது ஆச்சு... நானும் உன் கூடவே வந்துடுவேன்.... ' என்று தனக்குள்ளே அவனிடம் பேசிக்கொண்டவள்.. அவன் நெற்றியில் இதழ் பதிக்க போக அப்போது தீக்ஷிதன் கூறிய ' நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன் மான்சி... எனக்கு உன் மேல எப்பவும் காதல் வராது ' அந்த வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்கவும்... பட்டென்று கண்களை திறந்தவள் தன் உணர்வுகளை அடக்கி கொண்டு அவனை விட்டு விலகினாள்...

அப்போது அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளி... அவன் இமைகளை நனைத்தது... அதில் முகம் சுருக்கி கண் விழித்த தீக்ஷிதன், தனக்கு எதிரில் நிற்கும் மான்சியை பார்க்க.. அவளோ அவன் முகம் பார்க்க முடியாமல் முகத்தை திருப்பியவள் அங்கிருந்து செல்ல முயன்றாள்...

" மான்சி " என்று தீக்ஷிதன் எழுந்து கொள்ள முயன்று முடியாமல் போக... " மான்சி என்னை பாரு " என்றவன் அவள் கரம் பற்றினான்...

அவளோ அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை அவன் முகம் பார்க்காமல் வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்தவள், அங்கிருந்து செல்லும் முன்... கால் தடுக்கி கீழே விழுந்தவளின் கைப்பையில் இருந்து சில மாத்திரைகள் கீழே விழுந்தது...

உடனே அதை தீக்ஷிதனிடம் இருந்து மறைக்க முயன்றவள் விரைந்து அதனை மீண்டும் தன் கைப்பைக்குள் எடுத்து போட்டுக்கொண்டாள்...

ஆனால் அந்த மாத்திரைகள் தீக்ஷிதனின் கண்களில் பட்டது " மான்சி என்ன இது... உனக்கு என்னடி ஆச்சு பதில் சொல்லு... மான்சி " என்று அவன் பதட்டத்துடன் கேட்க கேட்க... அறையை விட்டு வெளியேறியிருந்தாள் மான்சி...

அவள் செல்வதை பார்த்தவன் " மாறா " என்று சத்தம் கொடுக்க... மாறன் உள்ளே வந்தான்.. " மான்சியை கூப்பிடு டா... நான் அவள் கிட்ட பேசணும்... அவளுக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கு போலடா மாறா... ப்ளீஸ் அவளை கூப்பிடு " என்றான் கெஞ்சுதலாக... உடனே மாறன் வெளியே வந்து பார்க்க... மான்சி அங்கு இல்லை...

இப்படியே நாட்கள் சென்றது... ஆதியோ கல்லூரியில் வைத்து மதியை சந்தித்து பேசினான்.. ஆனால் அவளோ உணர்வில்லாமலே அவனிடம் பேசினாள்... அவள் செய்த தவறு அவளை அமைதியாக்கியது... அதிகம் யாரிடமும் இப்போது எல்லாம் அவள் பேசுவது இல்லை... கல்லூரி முடிந்த உடனே வீட்டுக்கு வந்துவிடுவாள்... ஆதியும் அவளை தொல்லை செய்ய விரும்பாதவன்... அவளுக்கான இடத்தை கொடுக்க நினைத்தான்...

இங்கு பட வேலைகளை அதிகப்படியாக மாறனே பார்த்துக்கொண்டான்... சாவித்ரி திஷிதனுக்கு உதவியாக .. மருத்துவமனையில் இருந்து அவனை கவனித்துக்கொண்டாள்... அவ்வப்போது தீக்ஷிதன் தூங்கும் நேரம் மான்சி வந்து அவனை பார்த்து விட்டு செல்வாள்...

இப்படியே ஒரு மாதம் முடிந்திருந்தது... தீக்ஷிதனின் உடலும் முழுமையாக குணமாகி இருந்தது... அதன் பிறகு படம் சம்மந்தமான அனைத்து வேலைகளையும் அவனே பார்த்துக் கொண்டான்...

தீஷிதன் தினமும் மதிக்கு போன் செய்து அவளை பற்றி அறிந்து கொள்வான்... ஆனால் தனக்கு நடந்த விபத்தை பற்றி அவன், அவளிடம் கூற வில்லை... அவளும் எதுவும் கேட்கும் மனநிலையில் இல்லை... அவன் போன் செய்தால்... ஏதோ குற்ற உணர்ச்சி மேலுற அவனிடம் ஒரு இரு வார்த்தைகள் மட்டுமே பேசுவாள்... அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல்... " எனக்கு தூக்கம் வருது நான் படிக்கணும்... " அது இது என காரணம் சொல்லி போனை வைத்து விடுவாள்...

இங்கு தீக்ஷிதனோ அனைத்து வேலையையும் முடித்தவன் நாளை காலை வீட்டிற்கு திரும்பி வருவதாக மதியிடம் கூறினான்... அவளும் சரி என்று அழைப்பை துண்டித்தாள்...

இரவில் குளித்து முடித்து வெளியே வந்தாள் மதி... அப்போது அவளுக்கு ஆதியிடம் இருந்து அழைப்பு வந்தது... எந்த உணர்வும் இல்லாமல் அழைப்பை ஏற்றாள்...

" மதி... என்னடி பண்ணுற... உடம்பு இப்போ பரவயில்லையா... " என்று அக்கறையாக கேட்டான்...

" ம்ம்ம் " என்றவள் அமைதிகாத்தாள்...

" என் கூட வந்துடுறியா ? மதி... நீ நார்மலாவே இல்லை " என்றான் ஆதி கண்களில் வலியுடன்... அவளுக்கும் அதே வலிதான்... ஆனால் எதையும் அவள் வார்த்தை வெளிகாட்டவில்லை ...

" பயமா இருந்தால் சொல்லு... உங்க வீடு எங்கன்னு மட்டும் சொல்லு நான் வந்து உங்க வீட்டில் இருக்கவங்க கிட்ட பேசுறேன் " என்று கூற... அவளோ " ப்ளீஸ் ஆதி " என்றவள் அழைப்பை துண்டித்தாள்...

அழைப்பு துண்டிக்க படவும்... ஆதியோ விரக்தியுடன் காரின் இருக்கையில் சாய்ந்து கொண்டான்... ' இந்த காதல் ஏன் தான் இவள் மேல வந்து தொலைஞ்சிதோ... இருக்கவும் முடியாமல் விலகவும் முடியாமல்... கடவுளே என் நிலமை யாருக்கும் வர கூடாது... ' என்றவனின் மனம் கனத்து போனது...

இங்கு மதியோ தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் வடிக்க... அப்போது அவள் கண்ணீல் தீக்ஷிதன் அவளுக்காக கொடுத்து சென்ற பரிசு பெட்டி கண்ணில் பட்டது... அதனை விரைந்து வெளியே எடுத்தவள்... அதனை பிரிக்க தொடங்கினாள்...

அதில் ஒரு மோதிர பெட்டியும்... அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது...

வெந்நீரில் பூத்த தாமரையாய்
என் இதயம் தவிக்குதடி
உன் ஓர பார்வையில் எனை
ஆளமாட்டாயா என்று...
உயிரான என் சகியே...
உறவாக வருவாயா?

என்று எழுதி வித் லவ் தீக்ஷிதன் " என்று எழுதி இருக்க... அதனை பார்த்த மதிக்கு கண்ணெல்லாம் இருட்டியது... ' தீஷா என்னை விரும்புறானா ? ' என்றவள்...

" தீஷா" என்று கதறி அழுதாள்... " அய்யோ தப்பு பண்ணிட்டேன் ... பெரிய பாவம் பண்ணிட்டேன்... பாவம்... பண்ணிட்டேன்... நான் எப்படி இப்படி மாறினேன்... இது நான் இல்லை... நான் பழைய மதி இல்லை... என் முகத்தில் இரத்த அழுக்கு போகவும் என் மனசுல அழுக்கு வந்துடுச்சு... என் முகம் இப்படி அழகா மாறாமல் இருந்து இருந்தால் இந்த தப்பு நடந்து இருக்குமா... கண்டிப்பாய் நடந்து இருக்காது... என் படிப்பு, தீஷா கொடுத்த வாழ்க்கைன்னு எல்லாத்தையும் மறந்துட்டு இப்படி ஒரு தப்பு பண்ணி இருக்கேனே.. " என்றவள் தன் கன்னத்தில் மாறி மாறி தானே அடித்து கொண்டாள்... " நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் தீஷா... நீ எனக்கு கொடுத்த வாழ்க்கையை நான் தப்பா பயன்படுத்திக்கிட்டேன்... நான் பாவி.. தீஷா நான் பாவி... என் மேல உயிரா இருந்த உனக்கே நான் பாவம் பண்ணிட்டேன்... உன் பாசத்தையும், நம்பிக்கையையும் நான் பொய் ஆக்கிட்டேன்.. என்னால எல்லாருடைய வாழ்க்கையும் போயிடுச்சு... நீ அன்னிக்கு எதுக்கு என்னை காப்பாத்தின தீஷா... என்னை அன்னிக்கு நீ அப்படியே விட்டுவிட்டு போய் இருந்தால் இன்னிக்கு உன் வாழ்க்கை நல்லா இருந்து இருக்குமே ... கடவுளே... என்னை மாறி ஒரு பெண்ணை ஏன் என் தீஷா வாழ்க்கையில் கொண்டு வந்த... ஏன்???" என்றவள் கதறி அழுதாள்...


அப்போது ஊரில். இருந்து வந்த தீக்ஷிதன் " நிலா " என்றவாறு அறைக்குள் நுழைந்தான் ..

...வழிமாறிய பயணம் ஒருபோதும் சரியான இடத்தில் நிறைவு பெறாது...
 

Mythili MP

Well-known member
Wonderland writer
தி 32

தீக்ஷிதனின் குரல் மதியின் செவியை சென்றடையந்த நேரம்... தாயின் குரல் கேட்டு விழிக்கும் சேயை போல... அவனை ஓடிச் சென்று அணைத்து கொண்டாள் மதி... அவள் செயலில் ஒன்றும் புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தவன்... " என்ன ஆச்சு நிலா? " என்று கேட்க ..அவளோ கண்களில் வலியையும், கண்ணீரையும் ஒன்றாய் சுமந்த படி அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவள்... கண்கள் இருள்சூழ அவன் மீதே மயங்கி சரிந்தாள்...

" நிலா " என்ற தீக்ஷிதன் அவளை விழாமல் பிடித்து கொண்டபடி.. அவளை எழுப்ப முயன்றும் அவள் எழுந்து கொள்ள வில்லை என்பதால் அவளை கைகளில் சுமந்து கொண்டு... காரில் அவளை அமரவைத்தவன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்...

மருத்துவமனையில் அவளை பரிசோதித்த மருத்துவர், மதியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்..." உட்காருங்க.. " என்று டாக்டர் கூற...

தீக்ஷிதனோ , மதியை அமர சொன்னான்... அவள் அமர்ந்ததும், தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டவன். " என்ன ஆச்சு டாக்டர் அவங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே " என்று பதட்டத்துடன் கேட்டான்...

அதற்கு மருத்துவரோ சிரித்த படியே... " பயப்பட ஒன்னும் இல்லை, அவங்க கர்ப்பமா இருக்காங்க... இந்த மாதிரி நேரத்துல மயக்கம் எல்லாம் சாதாரணம் தான்... " என்று கூற ... தீக்ஷிதனுக்கோ ஒரு நொடி பூமியே தன் சுழற்சியை நிறுத்தியது போல இருந்து... அதே அதிர்ச்சியுடன் தீக்ஷிதன், மதியின் முகம் பார்க்க... அவளோ பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் அவன் முகம் பார்க்க தைரியமும் இல்லாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள்.

அவள் தலை குனிந்து இருப்பதே தீக்ஷிதனுக்கு அவர் கூறியது உண்மை என்று அப்பட்டமாக உணர்த்தியது... ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன் " உண்மையா டாக்டர் " என்று கேட்டான்... ஏனெனில் மதி அவ்வாறு நடந்து கொள்ள மாட்டாள் என்று அவன் மனம் இன்னும் நம்பியது... ஆனால் விதி யாரை விட்டது...

" என்ன தீக்ஷிதன் இப்படி கேக்குறீங்க.. அவங்க கர்ப்பமா தான் இருக்காங்க... உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா. நீங்க வேற இடத்தில் கூட செக் பண்ணிக்கோங்க " என்று அவர் கூற... தீக்ஷிதனோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல்... தன் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு நின்றான்...

அப்போது உள்ளே வந்த நர்ஸ், " டாக்டர் 8 ம் நம்பர் ரூம்ல இருக்க பேசன்ட்க்கு பிரசவவலி வந்துடுச்சு கொஞ்சம் சீக்கிரம் வாங்க " என்று கூற... அவரோ உடனே அங்கு செல்ல கூடிய நிலை வர, இவர்களிடம் இருந்து விடைபெற்று அங்கு சென்றார்...

அவர் செல்லவும் மதி " என்னை மன்னிச்சிடு தீஷா நான் ... தப்பு.. " என்றவள் பேசி முடிக்கும் முன் அவளை கை நீட்டி தடுத்தான் தீக்ஷிதன்...

வலியும், கோபமும் ஒரு சேர அவள் முகத்தை பார்த்தவன் " உன்னை குழந்தைன்னு நினைச்சேன் நிலா... ஆனால் நீ " என்றவனால் அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் போனது... இனியும் அங்கு நின்றால் எங்கு அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில் விறுவிறுவென காரை நோக்கி வந்தான்...

அவனை பின் தொடர்ந்து வந்தவள் காரில் ஏறாமல் தயங்கியபடியே நிற்க.. அவளை தீ பார்வை பார்த்தவன், சரிந்து அவள் புறமாக இருந்த கார் கதவை திறந்து விட்டபடி " உள்ளே ஏறு " என்றான் கட்டளையாக... அவன் குரலில் இருந்த கோவத்தை உணர்ந்தவளுக்கு ஒரு வித நடுக்கமும் பதட்டமும் தொற்றி கொள்ள... மெதுவாக வந்து காரில் அமர்ந்து கொண்டாள்..

வீடு செல்லும் வரை... இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கூட பார்க்க வில்லை... மௌன நிலையில் அந்த பயணம் முடிவடைய... வீட்டில் மதியை இறக்கி விட்டவன்... காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல முயல.. அவன் கரம் பற்றி தடுத்தாள் மதி " தீஷா நான் உன்கிட்ட பேசணும் ப்ளீஸ்.. " என்று அவள் கண்ணீருடன் நிற்க, அவனோ " நீ பேசின வரை போதும் நிலா " என்றவன் அவள் கையை தன் கையில் இருந்து பிரித்தெடுத்த நேரத்தில் தான் அவள் கையில் அந்த மோதிரத்தை பார்த்தான் தீக்ஷிதன்...

அதை கண்டு அதிர்வுடன் அவள் முகம்பார்க்க... அவளோ இப்போது அந்த மோதிரத்தை மறைக்கும் பொருட்டு கையை பின்னாடி வைத்து கொண்டாள்... அவள் செயலில் கோவம் கொண்டவன் அவள் கையை பிடிவாதமாக பிடித்து பார்க்க... அவளோ " அது ... " என்று தடுமாறினாள்...

" உனக்கும் ஆதிக்கும் என்ன சம்மந்தம் ... அவனை உனக்கு எப்படி தெரியும்? " என்று அவன் ஆக்ரோஷமாக கேட்க... அவளோ பதில் கூறமுடியாமல் திருதிருவென முழித்தாள்...

" பேசும் போது முகத்தை பார்த்து பேசு... " என்றவன் " அப்போ இதுக்கு எல்லாம் காரணம் அவன் தானா?" என்று கண்களில் தீப்பறக்க அவள் முகம் பார்த்தான்... அவளோ ' ஆம் ' என்று தலையாட்டிய அடுத்த நொடி... காரினை எடுத்துக்கொண்டு ஆதியின் வீட்டை நோக்கி சென்றான் தீக்ஷிதன்...

மதியோ தீக்ஷிதனுக்கு உண்மை தெரிந்து விட்டது... என்று எண்ணியவள் வலியுடன் இனியும் இங்கேயே இருந்து அவரை கஷ்டப் படுத்தக் கூடாது என்று நினைத்தவாறே... கால் போன போக்கில் நடக்க துவங்கி இருந்தாள்...

அப்போது வழியில் மலர்விழியுடன், சாவித்ரி வண்டியில் செல்வதை பார்த்த மதி... ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள்... தான் காண்பது கனவா?நனவா? என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்ட மதி... அது உண்மை தான் என்று அறிந்துக் கொண்ட பின்...

" சாவி... என் சாவி... அவள் எப்படி இங்க... ஒரு வேளை வேற யாரோவா இருக்குமோ... இல்லை இல்லை... இது என் சாவி தான்... " என்று நெஞ்சில் கைவைத்து கூறி கொண்டவள்... சிக்னலில் நின்ற சாவித்ரியின் வண்டியை நோக்கி ஓடினாள்.... நெரிசலில் அவள் செல்லும் நேரம் சரியாக சிக்னல் எடுக்கப்படவும்... சாவித்ரியின் வண்டி... நகர தொடங்கியது.... அதனை கண்ட மதி கண்களில் கண்ணீர் தேங்க... " சாவித்ரி ... " என்று கத்தினாள்...

அந்தோ பரிதாபம்... அந்த சாலையின் இரைச்சல் சத்தத்தில் மதியின் குரல் சாவித்திரியின் செவியை அடையாமல் போனது...

எப்படியாவது அவளை காண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளால் சுத்தி இருந்த வாகனங்களை கவனிக்க முடியாமல் போனது. " சாவித்ரி... சாவி ... நான் தான்டி மதி.. உன் மதி... " என்று கத்தியவள் அவளை பின்தொடர்ந்து ஓடினாள்...

அப்போது பின்னால் வரும் வண்டியை சரியாக கவனிக்காதவள்... " சாவித்ரி... சாவித்ரி... " என்று கத்திகொண்டே ஓடினாள்... ஒரு கட்டத்தில் வண்டியில் சென்றுக் கொண்டிருந்த சாவித்ரி.... பின்னால் அமர்ந்திருந்த மலரிடம் " அக்கா என்னை யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு இல்லை " என்றவள் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி பின்னால் திரும்பி பார்த்தாள்.

அப்போது யாரோ ஒருவர் தன்னை அழைப்பதை பார்த்த சாவித்ரிக்கு... தூரத்தில் மதியின் முகம் சரிவர அடையாளம் தெரியவில்லை... காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால்... அவளுடைய முகம் சிறிது மாற்றம் அடைந்திருந்தது... மேலும் அவள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடை இவை அனைத்தும் அவளை அடையாளம் கண்டு கொள்ளும் படி இல்லாமல் இருந்ததால்... சாவி குழம்பி போனாள்...

அப்போது மதி அவளை சிறிது நெருங்கி... " சாவித்ரி... மதி டி ... உன் மதி " என்று கண்ணீருடன் கூற... அவள் கண்கள் உணர்த்தியது ... அவள் தான் மதி என்று... முகத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் அவள் கண்கள் அவளை காட்டிக்கொடுத்தது...

அவள் யார் என்று அறிந்துகொண்ட சாவித்ரியின்.. கண்களில் தன்னிச்சையாக ஒரு துளி கண்ணீர் வழிய, இதழ்களோ... மென்மையாக விரிந்தது...

அந்நேரம் பார்த்து மதியின் மீது ஒரு லாரி மோத வர... அதை கண்ட சாவித்ரியோ பதறி போய் " மதி.... " என்று கத்தினாள்... அப்போது ஒரு கரம் அவளை லாரி மோதாமல் தன் பக்கம் பிடித்து இழுத்து கொண்டது....

லாரி மோதாமல் மதி...காப்பாற்றப் பட்டுவிட்டாள்... என்று அறிந்து நிம்மதி பெரு மூச்சு விட்ட சாவித்ரி... அவள் இருந்த இடம் நோக்கி மலருடன் விரைந்தாள்...

" பார்த்து வர மாட்டீங்களா ? இப்படி தான் நடு ரோட்டில் வருவீங்களா ... கொஞ்சம் கவனமா இருங்க. " என்றாள் மதியை காப்பாற்றிய மான்சி... ஆம் அவள் மான்சியே தான்... தீக்ஷிதன் குணமான உடனேயே... இனி அங்கு இருக்க கூடாது என்று முடிவெடுத்து மான்சி... சென்னை வந்திருந்தாள்... அவள் சென்னை வந்ததற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது... அது அவள் அடுத்த கட்ட சிகிச்சையை பற்றி நிலானியிடம் பேசுவதற்காகவே...

" இல்லைங்க .. என் அத்தை பொண்ணை பார்த்த சந்தோசத்துல கவனிக்கலை .. ரொம்ப நன்றிங்க... " என்று மதி மான்சியிடம் கூற... அவளோ மதியை பார்த்து இதமாக புன்னகைத்தவள் " கவனமா இருங்க... " என்று கூறியபடி அங்கிருந்து சென்றாள்...

மான்சி செல்லவும்... சாவித்ரி மதியை நெருங்கவும் நேரம் சரியாக இருந்தது... மதியை நெருங்கிய சாவித்ரி " மதி... " என்று சந்தேகமாகவும்... ஆவலுடனும் கேட்க... அவளோ " மதி தான் உன் மதி தாண்டி " என்றவள் அவளை காற்று புகாத அளவுக்கு கட்டி அணைத்தாள்... அவள் வலிகள் தீர இப்போது அவளுக்கு ஒரு ஆதரவு தேவையாக இருந்தது... அதற்கு தான் கடவுள் சாவித்ரியை இந்த நேரத்தில் மதியிடம் சேர்த்துவைத்துள்ளாரோ? என்னவோ....

மதியை அழைத்து கொண்டு சாவித்ரி மலர்விழியின் வீட்டிற்கு வந்தாள்...

அவர்களுடன் சிறிது நேரம் பேசிய மதி... சாவித்ரியிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற, சாவித்திரியோ அவளை அழைத்து கொண்டு மாடிக்கு வந்தாள்...

அங்கு வந்தவள் சாவித்ரியிடம் " நான் தப்பு பண்ணிட்டேன் சாவி... பெரிய தப்பு பண்ணிட்டேன்... " என்று கூற... அதை காதில் வாங்காத சாவித்ரி...

"நீயாவது தப்பு பண்ணுறதாவது... நீ என் மதிடி.. நீ தப்பு பண்ண மாட்ட... " என்றவள் கர்வமாக கூற... மதியின் முகத்தில் வேதனையான புன்னகை வெளிப்பட்டது...

" நீ எப்படி இங்க வந்த சாவித்ரி... இவங்க எல்லாரும் யாரு ? மங்கை அத்தை எங்க ? " என்று கேட்க...

சாவித்ரியோ நடந்த அனைத்தையும் மதியிடம் ஒன்று விடாமல் கூறினாள்... இன்று வரை... மாறனை பற்றியும் சேர்ந்து கூறினாள்...

" லவ் பண்ணுறியா சாவி " என்று மதி இயல்பாக கேட்க...

வெட்க சிரிப்புடன் " ஆம் " என்ற சாவித்ரி " மாறன் ரொம்ப நல்லவருடி... அப்படியே உங்க அப்பா மாதிரியே... என்னை அவருக்கு ரொம்ப புடிக்கும்... ஆனால் அதை சொல்லவோ, காட்டவோ தெரியாது... அப்போ அப்போ ஏதாவது... என்னை கோவப்படுத்துற மாறி பேசுவான்... என்கிட்ட சண்டை போடலைன்னா அவனுக்கு தூக்கமே வருது... சரி அதை விடு.. நீ எப்படி இங்க வந்த... " என்று கேட்க..

மதியோ... நடந்த அனைத்தையும்.... ஒன்று விடாமல் கூற ... சாவித்திரியின் முகமோ... அனலாக மாறிக்கொண்டே வந்தது. இறுதியாக... அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறியவுடன், சாவித்திரியின் கைரேகையோ மதியின் கன்னத்தில் பதிந்திருந்தது...

கண்ணீருடன் அவள் அடித்த வலியை பொறுத்து கொண்ட மதி... " சாவி... நான் வேணும்னு பண்ணலைடி... ஏதோ தெரியாமல் " என்றவள் அவள் கரம் பற்ற... அதனை உதறியவள்... " என்னடி வேணும்னு பண்ணல... என்னமோ அவன் உன்னை கடத்திட்டு போய் உன் வயித்துல புள்ளையை கொடுத்த மாதிரி பேசுற... உணர்ச்சி வேகத்தில் நீ பண்ண இந்த தப்பு... உன் வாழ்க்கையை எப்படி ஆக்கி இருக்குப்பாரு... அவன் கூட நீ இருக்கும் போது ... உன்னோட நிலைமையோ... இல்லை உனக்கு வாழ்க்கை கொடுத்த அந்த மனுசனோட எண்ணமோ... அவ்ளோ ஏன் என்னோட எண்ணம் கூடவா உனக்கு வராமல் போச்சு... அந்த எண்ணம் உன் மனசுல இருந்தால்... உன்னால அப்படி ஒரு தப்பை பண்ணி இருக்க முடியுமாடி... சொல்லு... நம்ம எந்த சூழ்நிலையில் வாழ்ந்தோம் ... உன்னால எப்படிடி இப்படி எல்லாம்... நான் இதுவரை என்னை கூட நம்பியது இல்லைடி. ஆனால் உன்னை நம்பினேன்... ஆனால் நீ வரம் கொடுத்தவன் தலையையே பதம் பார்த்து இருக்கியே... இவ்ளோ தைரியம் உனக்கு எங்க இருந்து வந்ததுடி... அதுலயும் இப்போ குழந்தை வேற " என்றாள் ஆதங்கத்துடன்...

மதியோ கலங்கிய விழியுடன்... " வேணும்னா இந்த குழந்தையை... கலைக்க... " என்று அவள் கூறி முடிக்கும் முன்... சாவித்ரி... அவளை மீண்டும் அறைந்திருந்தாள்...

" கொன்னுடுவேன்டி உன்னை... என்ன பேச்சு பேசுற... ஒரு உயிர்க்கு கூட பாவம் பார்க்க முடியாத அளவுக்கு, உன் மனசுல ஈரம் இல்லாமல் போய்டுச்சா... நீ எப்படிடி இப்படி மாறின... நீ பண்ண தப்புக்கு இன்னும் உருவம் கூட பெறாத அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு டி... நீ பண்ணுறதுக்கு எல்லாம் பேரு என்ன தெரியுமா? " என்றவள் மதியை ஒரு மார்க்கமாக பார்த்தாள்...

" என்னை வேணும்ன்னா இன்னும் நாலு அடி அடிச்சிக்கோ... ஆனால் என்னை அப்படி பார்க்காத சாவி... ரொம்ப வலிக்குதுடி... என்னை அப்படி பாக்காத, சாவி... நீயே என்னை தப்பா பார்த்தால்... நான் செத்துருவேன் டி... நான் வேணும்னு பண்ணலைடி... அந்த அளவுக்கு என் மனசு மரத்து போச்சுடி... நீ ஏன்டி என்னை விட்டுட்டு போன நீ என் கூடவே இருந்து இருந்தால் எனக்கு ஏன்டி இது எல்லாம் நடக்க போகுது... நான் ஏண்டி இது எல்லாம் பண்ண போறேன்.. நான் வேணும்னா செத்துடுறேண்டி..." என்ற மதி மாடியில் இருந்து குதிக்க போக ... விரைந்து வந்து அவளை பிடித்து தன் பக்கம் இழுத்த சாவித்ரி... மீண்டும் அவள் கன்னத்தில் அறைந்தாள்...

" மறுபடியும் மறுபடியும் ஏண்டி தப்பு பண்ணுற... நீ செத்துட்டால் எல்லாம் சரி ஆகிடுமா... ஏன்டி??? ஏதாவது பண்ணுவோம் கொஞ்சம் அமைதியா இரு " என்றவள் மதியின் வேதனையை தாங்கிக்கொள்ள முடியாமல் அவளை தன்னோடு சேர்ந்து அணைத்திருந்தாள்...

மதியும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவள்.." என்னை மன்னிச்சிடு சாவி... " என்று கூற...

" நான் உன்னை மன்னிக்கிறது இருக்கட்டும்... உனக்கு வாழ்க்கையை கொடுத்த அவர் கிட்ட முதலில் மன்னிப்பு கேளு... அவர் இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தேன் அப்படின்னா? ஒன்னு உன்னை இந்நேரம் கொன்னு இருப்பேன்... இல்லை கோவத்தில் உன்னை நாலு அடி அடிச்சு... நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு இருப்பேன்... ஆனால் அவரு அது எதையும் பண்ணல... இது ஒன்னு போதும்டி அவரு எப்படி பட்டவருன்னு தெரிந்துக்க..." என்றவளிடம் " ம்ம்ம்.. " என்றவள் சாவித்திரியின் மடியில் படுத்துக்கொண்டு வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள்...

இங்கு ஆதியை தேடி வந்த தீக்ஷிதன்... நேராக அவன் வீட்டிற்குள் நுழைய... அப்போது வெளியே வந்த ஆதி... தீக்ஷிதனை பார்த்து இதமாக புன்னகைக்க... தீக்ஷிதனோ அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன்... அவன் சட்டையை கொத்தாக பிடித்து " ஏண்டா இப்படி பண்ண? என் நிலா " என்றவன் மெல்ல கண்களை மூடி திறந்து " மதியை ஏன்டா ஏமாத்தின... சின்ன பொண்ணுடா அவள்... அவளை போய், உன் தேவைக்கு பலி ஆக்கிட்டியே " என்று கூறியவன் அவனை தீயாய் முறைத்தான்...

ஆதியோ... ஒரு சிறு புன்னகையுடன் அவன் கரத்தை தன் சட்டையில் இருந்து பிரித்தெடுத்தவன்... " அது எனக்கும் மதிக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம்...அதை கேட்க நீங்க யாரு ? " என்று திமிராக கேட்டவன்... இருக்கையில் சென்று அமர்ந்தபடியே...
" என்ன சொன்னீங்க??? சின்ன பொண்ணை ஏமாத்திட்டேனா! அவள் என்ன குழந்தைய நான் குச்சிமிட்டாய் காட்டி ஏமாத்துறதுக்கு... லுக் மிஸ்டர் தீஷ்... நான் ஒன்னும் அவளை ஏமாத்தவும் இல்லை... கட்டாயப்படுத்தவும் இல்லை... அதுவும் இல்லாமல் உள்ளங்கையில் தேனை வச்சிட்டு ஈ ஓட்டுற பெரிய மனசு எல்லாம் எனக்கு இல்லை... "

"அவளை ஏமாத்தலை அப்படின்னா அப்போ அவளை கல்யாணம் பண்ணிக்கோ" என்று தீக்ஷிதன் ஆக்ரோஷமாக கூற...

" கல்யாணமா ???? " என்ற ஆதியின் முகத்தில் நொடியில் ஒரு ஏளன புன்னகை தோன்றி மறைந்தது....

இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்... நம்முடைய அக அழகை பிறர் கண்களுக்கு தெரியாமல் படைத்ததற்கு..

புற தோற்றத்தை காட்டிலும், ஆயிரம் மடங்கு அசிங்கமான ஆசைகளை கொண்டது நம் அக தோற்றம். அதை இல்லை! என்று வெளியே நாம் மறுத்தாலும்.. உண்மை எதுவென அந்த அகம் அறியும் அல்லவா! அதனால் தான் இறைவன் அதனை பிறர் கண்களுக்கு தெரியாமல் வைத்திருக்கிறான் போல.. விந்தை தான். அவன் நம்மை படைத்தவன் ஆயிற்றே.. இதை எல்லாம் அறிந்து தான் ஒருவரது மன எண்ணம் பிறருக்கு புரியாமல் படைத்திருக்கிறான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 33


"அவளை ஏமாற்றலை அப்படின்னா அப்போ அவளை கல்யாணம் பண்ணிக்கோ" என்று தீக்ஷிதன் ஆக்ரோஷமாக கூற...

" கல்யாணமா ???? " என்ற ஆதியின் முகத்தில் நொடியில் ஒரு ஏளன புன்னகை தோன்றி மறைந்தது....

பின்னர் இருக்கையில் இருந்து எழுந்துகொண்ட ஆதி... இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய படியே " அவள் எங்க ? " என்று கேட்டான்...

" நான் கேட்ட கேள்வி பதில் சொல்லு ஆதி... அவளை ஏமாத்தணும்னு நினைச்சே.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. "

" தீஷ்... உங்களுக்கு எப்படி அவளை தெரியும்.. என்னை அவள் கிட்ட அழைச்சிட்டு போங்க மீதி எல்லாம் உங்களுக்கு தானே புரிய வரும் " என்றவன், நான் யாரையும் ஏமாத்தல, நம்புங்க.... ஒரு நிமிஷம் " என்றவாறு.. தன் அறைக்குள் சென்று... ஒரு பைலை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தவன்...
" போகலாமா? "என்று கேட்டான்...

தீக்ஷிதனுக்கும் அவன் கூறியது தான் சரி என்று பட்டது இருவரையும் ஒன்றாக வைத்து பேசுவதே சிறந்தது... என்று எண்ணியவன் ஆதியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தான்....

இங்கு சாவித்ரியோ " நீ வீட்டுக்கு போகலையா ? " என்று மதியிடம் அக்கறையாக கேட்க, அவளோ " இல்லடி என்னை போக சொல்லாத, நான் இங்கேயே இருந்துக்கிறேன்... " என்றாள் கண்ணீருடன்...

" தப்பு பண்ணுற மதி... இனிமேல் உன்னால என் கூட இருக்க முடியாது. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு... முதலில் உன்னை பார்த்துக்கிட்ட அந்த மனுஷன் கிட்ட நீ பண்ணிய தப்புக்கு மன்னிப்பு கேளு... நானும் உன்கூட வரேன்... " என்று அவளுக்கு எடுத்து கூறியவள் மதியை அழைத்துக்கொண்டு... மலரிடம் கூறி விட்டு வெளியே வந்தாள்.. அப்போது மாறனோ தற்செயலாக சாவித்திரியின் வீட்டிற்கு வந்தான்...

அவனை கண்ட மதி அப்படியே உறைந்து நின்றாள்... சாவித்ரியோ விரைந்து அவன் அருகில் சென்றாள்...

" மாறா நீ எங்க இங்க? அதுவும் இந்த நேரத்தில்... " என்று அவள் கேட்க... அவனுடைய பார்வையோ அங்கு நின்ற மதியின் மீது படிந்திருந்தது... அவன் பார்வையை உணர்ந்த சாவித்ரி " என்ன பார்க்குற அவள் என் அத்தை பொண்ணு தான்.. நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்ததாக சொன்னேன் இல்லை அது இவள் தான்... இன்னிக்கு காலைல தான் பார்த்தேன்... " என்றவள் மதியிடம் திரும்பி " மதி இவர் தான் மாறன்... நான் சொன்னேன் இல்லை " என்று கூறும் போது...

மாறனோ மதியை பார்த்து " ம்ம்ம்... இப்போ எங்க கிளம்பீட்டீங்க? " என்று கேட்க... சாவித்ரியோ " அவளை அவள் வீட்டில் கொண்டு போய் விடணும், ஆமா நீ எங்க இங்க" என்றாள்...

" உன்னோட சில திங்க்ஸ் என்னோட பேக்ல இருந்தது...அதை உன்கிட்ட கொடுக்கலாம்ன்னு தான் எடுத்து வந்தேன்.. " என்றவன் " சரி வாங்க நான் உங்களை அழைச்சிட்டு போறேன் " என்றபடி காரில் அமர... சாவித்திரியும், மதியும் பின்னே சென்று அமர்ந்து கொண்டார்கள்...

மதிக்கோ ஒரு வித பயமும், பதட்டமும் இருந்து கொண்டே இருந்தது... அவள் இதயம் துடிக்கும் சப்தம் வெளியே கேட்கும் அளவுக்கு... அவள் மனதில் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது...

மதியை பார்க்க வீட்டிற்கு வந்த தீக்ஷிதனும், ஆதியும் ஒரு சேர காரில் இருந்து இறங்கினர்... பின்னர் வீட்டிற்குள் வந்த தீக்ஷிதன் மதியை தேட... அவள் தான் அங்கு இல்லையே... உடனே வீட்டில் வேலை செய்பவரிடம் மதியை பற்றி தீக்ஷிதன் கேட்க... அவரோ " அவங்க உங்க கார் கிளம்பிய கொஞ்சம் நேரத்தில் கிளம்பிட்டாங்க" என்று கூற.. ஆதியும், தீக்ஷிதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்...

ஆதியோ " அவள் உங்க வீட்டில் தான் இவ்ளோ நாள் இருந்தாளா? " என்று கேட்க... " ம்ம்ம் " என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல்... அவளை தேடி செல்ல முடிவு செய்தவன் வாசலுக்கு வரவும்... மாறனின் கார் உள்ளே நுழைந்தது...

மாறனின் காரில் இருந்து மதியும், சாவித்ரியும் கீழே இறங்கினர்... மதியோ அங்கிருந்த ஆதியையும், தீக்ஷிதனையும் மாறி மாறி அதிர்ச்சியுடன் பார்த்தாள்...

" ஏய் இவரு வீட்டுலையா நீ தங்கி இருந்த நீ சொன்னவர் இவரு தானா ? " என்று மதியிடம் கேட்ட சாவித்ரி அவளை கொலைவெறியுடன் பார்த்தாள்... மதியோ " ம்ம்ம் " என்று தலை குனிய... " ரொம்ப நல்லவருடி என்ன மதி நீ " என்ற சாவித்திரிக்கு மேலும் அவளை கஷ்ட படுத்த மனமில்லாமல் போனது...

மதியிடம் வந்த ஆதியோ " எப்படி இருக்க மதி... தீஷ் வீட்டில் தான் நீ இருந்தன்னு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்லை " என்று கேட்க... மதியோ தலைகுனிந்து கொண்டாள்...

மாறனுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை... ஒன்று புரியாமல் நின்றவன் அங்கிருந்த சாவித்திரியின் காதருகில் குனிந்து " இங்க என்ன தாண்டி நடக்குது... வேற மொழி படம் பார்த்த மாதிரி ஒண்ணுமே புரியலடி " என்றவனை முறைத்து பார்த்த சாவித்ரி " கொஞ்சம் சும்மா இரு எனக்கும் தான் ஒன்னும் புரியலை " என்றவள் அமைதியாக நின்றாள்...

ஆதியோ, தீக்ஷிதனிடம் " தீஷ் எனக்கும், மதிக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு " என்று கூற... தீக்ஷிதனோ அவளை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்தான்... என்றால் மாறனுக்கோ கோவம் தலைக்கேறியது... அதே கோவத்துடன் மாறன் சாவித்ரியை பார்க்க.. சாவித்திரியோ " உண்மை தான் " என்றவாறு தலையாட்டி அவனை கெஞ்சுதலாக பார்த்தாள்...

"நீங்க பார்க்குறதை பார்த்தால் நீங்க யாரும் நம்பலை போலவே " என்ற ஆதி, மதியின் கழுத்தில் கைவைத்தவன் அவள் மறைத்து போட்டிருத்த தாலியை எடுத்து வெளியே போட்டான் ... அதனை கண்ட மாறனுக்கு அது அதிர்வாக இருந்தது.. அவன் மனம் முழுவதும் " மதி தன் அண்ணனை ஏமாற்றி விட்டாள் " என்ற எண்ணமே மேலோங்கி இருக்க... வலியுடன் தீக்ஷிதனை பார்த்தான் மாறன்...

தீக்ஷிதனின் இதழில் ஒரு விரக்திப் புன்னகை மட்டுமே வெளிப்பட்டது... ஏனென்றால் அவள் தான் இது வரை அவள் சம்மந்தப்பட்ட எந்த விஷயத்தையும் அவனுக்கு தெரியப் படுத்தாமல் மறைத்திருக்கிறாளே! .. அந்த வலி அவனுள் இல்லாமலா போகும்....

மேலும் ஆதி திருமண புகைப்படத்தையும்.. கல்யாண பதிவு பத்திரத்தையும் தீக்ஷிதனிடம் எடுத்து காட்டியவன் " நான் யாரையும் ஏமாத்தல தீஷ் " என்று கூறிவாறு தன் கன்னத்தை வருடினான்..

" சாரி " என்ற தீக்ஷிதனோ ஒரு மென் புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்...

அவனை பின்தொடர்ந்து " அண்ணா " என்றழைத்தவாறே மாறன் செல்ல... சாவித்ரி மதியிடம் நின்று கொண்டிருந்தாள்... வாசல் வரை சென்ற மாறன்.. சாவித்ரியிடம் திரும்பி வந்து அவளை தீ பார்வை பார்த்தவன் அவள் கரம் பற்றி தன்னோடு அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்..

இங்கு ஆதியோ, மதியிடம் " நீ தீஷ் பத்தி என்கிட்ட ஏன் சொல்லல " என்று கேட்டான்.

அவளோ கண்ணீருடன் தலை குனிந்தவள் " என் தப்பு தான் ... " என்றபடி நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்... அதை கேட்ட ஆதிக்கே மதியின் மீது கோவம் வந்தது..

" நீ பண்ணியது தப்பு இல்லை மதி துரோகம் " என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மதி...

" இதுக்கு மேலயும் என்னால உன்னை இங்க விட்டுட்டு போக முடியாது இப்போவே என் கூட வா... கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகிடும்... எனக்கும் தீஷ்க்கும் எப்போவும் கருத்து வேறுபாடு இருக்கும், அதையும் மீறி எனக்கு அவரு மேல அதிக மரியாதை இருக்கு... எத்தனையோ முறை நானே அவரை ரொம்ப வியப்பா பார்த்திருக்கேன்.. நீ இப்போ இது எல்லாம் சொல்லும் போது... இன்னும் அவரு மேல எனக்கு மரியாதை அதிகம் ஆகுது... அவரு கூட ஒர்க் பண்ணிய நிறைய ஹீரோயின் என்கிட்ட சொல்லி இருக்காங்க அவரு கூட இருப்பது தாயோட கருவறையில் இருக்க மாதிரி... அவ்ளோ பாதுகாப்பு இருக்கும்ன்னு சொல்லுவாங்க... அது இப்போ எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது... ஒரு தாய் குழந்தையை கருவில் பாதுகாக்குற மாதிரி அவர் உன்னை பாதுகாத்து இருக்காரு... அவர் இடத்தில் வேற ஒருவர் இருந்து இருந்தால்... இந்நேரம் உன் நிலைமை என்ன ஆகியிருக்குமோ... " என்றவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்...

மதியோ கண்ணீருடன் " நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் இல்லை... நான் யாருக்குமே உண்மையா இல்லை... தீஷாவுக்கும் சரி உங்களுக்கும் சரி... " என்றவள் தலை குனிந்துகொண்டாள்...

அவள் வேதனையை காண விரும்பாதவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் " ம்ம்ம் சரி முடிஞ்சதை பத்தி பேசி இனி எதுவும் மாறப்போறது இல்லை.. நானும் நிறையவே தப்பு பண்ணி இருக்கேன்... அதை எல்லாம் சரி பண்ண முடியலைனாலும்... மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருப்போம்... நம்ம வாழ்க்கையை புதுசா தொடங்கலாம் " என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்...

வீட்டிற்குள் வந்த தீக்ஷிதன்... இருக்கையில் தலையில் கைவைத்த படி அமர்ந்திருந்தான்... அவன் அருகில் வந்த மாறன்... " அண்ணா விடு அண்ணா... எனக்கு அப்போவே தெரியும்... ஆரம்பத்தில் இருந்தே அவள் மேல எனக்கு நம்பிக்கை இல்லை... " என்று அவன் கூறிக் கொண்டிருக்க... அவனை கை நீட்டி தடுத்த தீக்ஷிதன் " மாறா ப்ளீஸ்... உன் பங்குக்கு நீயும் எதையாவது பேசாத... என்னை கொஞ்சம் தனியா விடு மாறா " என்று கூறியவன் அவன் அறைக்குள் செல்லும் நேரம் " தீஷா " என்று அழைத்தாள் மதி...

அவளை தீயென முறைத்த மாறன்... சாவித்ரியை இழுத்துகொண்டு வெளியே சென்றான்...

அவள் குரல் கேட்டு தீக்ஷிதனின் கால்கள் அப்படியே நின்றது...

" என்கிட்ட பேச மாட்டியா தீஷா... " என்று அவள் கண்ணீருடன் கேட்க

" நான் என்ன பேசணும்னு நீ எதிர் பார்க்கிற.. வேண்டாம்டா... நான் பேசணும்னு எதிர் பார்க்காத? " என்றவன் மீண்டும் உள்ளே செல்ல முயன்றான்.

" என்னை திட்டவாவது செய் தீஷா... இப்படி அமைதியா இருக்காத? " என்றவளை பார்த்து விரக்தியாக சிரித்தவன் " உன்னை திட்டுறதுக்கோ... இல்லை உன் மேல கோவப்படுறதுக்கோ எனக்கு எந்த உரிமையும் இல்லடா ... நான் யாரு உனக்கு??? ஏதோ பார்த்தேன்... உனக்கான எல்லாமே பண்ணினேன்... நமக்குள்ள உள்ள உறவு அவ்ளோ தான்... இதுக்கு மேல எனக்கு உன் மேல் எந்த அதிகாரமும் இல்லை " என்றவன் திரும்பி அவள் முகம் பார்த்து " வேற ஏதாவது சொல்லணுமா? " என்று கேட்டான்...

அவளோ " அவரு என்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லுறாரு... " என்று கூறிய மதியை பார்த்து இயல்பாக புன்னகைத்தவன்
" உண்மையாவே ஆதியை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு இதுவே அவன் இடத்தில் வேற ஒருத்தர் இருந்தால் இந்நேரம் உன் நிலை என்ன ஆகியிருக்கும்... அவனுக்கு உன் மேல உள்ள காதல் தான் அவனை கல்யாணம் வரை யோசிக்க வச்சி இருக்கு... உணர்வுகளுக்கு ஒரு நிமிடம் அடிமையாகி... உறவுகளை இழந்துட கூடாது... உனக்கு கிடைச்சதும் நல்ல வாழ்க்கை தான்.. தேவை இல்லாமல் கண்டதையும் யோசிக்காமல்... உன் வாழ்க்கையை வாழ பாரு... போ ... நல்லா இரு " என்றான்....

" என்னை மன்னிக்கவே மாட்டியா தீஷா " என்று அவள் கலங்கிய விழிகளுடன் கேட்டாள்.

அதற்கு விரக்தியாக சிரித்தவன்
" மறந்துட்டேன் " என்று பதில் கூற
அவளோ " என்னையா? ? என்று ஆதங்கத்துடன் கேட்க...

ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன் "எல்லாத்தையும் " என்று கூறியபடி தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான்...


 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 34


வெளியே வந்த மதி... சாவித்ரியிடம் " எனக்கு மன்னிப்பே இல்லையா டி " என்று கேட்க... அவளை கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள் சாவி...

அவள் அருகில் இருந்த மாறனோ " தப்புக்கு மன்னிப்பு இருக்கு... ஆனால் துரோகத்துக்கு மன்னிப்பு கிடையாது " என்று கோவமாக கூறினான்...

சாவித்ரியோ " ஏன் மாறா இப்படி எல்லாம் பேசறீங்க. ஏற்கனவே அவள் ரொம்ப நொந்து போயிருக்காள் " என்று கூற... மாறனோ ஏளன புன்னகையுடன் " பார்த்தா அப்படி தெரியலையே " என்றவன் அதே கோவத்துடன் காரை நோக்கி சென்றான்...

சாவித்திரியோ மதிக்கு ஆதரவாக அவளை அணைத்து கொள்ள... அதை காரில் அமர்ந்தபடி பார்த்த மாறனோ " சாவி... இப்போ வர போறியா இல்லையாடி " என்று கத்தினான்..

அதை கேட்ட மதியோ " நீ போ சாவி... நான் பார்த்துக்கிறேன் " என்றபடி ஆதியின் காரில் சென்று அமர்ந்துகொண்டாள்...

மாறனை திட்டியபடியே காரில் வந்தமர்ந்தாள் சாவித்திரி... " என்னடி முணுமுணுக்குற. " என்ற மாறன் அவளை முறைத்து பார்த்தவாறே காரை செலுத்தினான்... சாவியை வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்த மாறன் எதுவும் பேசாமல் தீக்ஷிதனின் வீட்டிற்கு வந்தான்...

அங்கு தீக்ஷிதனோ அவன் அறையில் நிலவினை வெறித்து பார்த்தபடி நின்றான்... அவன் அருகில் வந்து தோளில் கைபோட்ட மாறன்... " என்ன பண்ணுற அண்ணா" என்று கேட்டான்

" நீ எங்கடா இங்க ? வீட்டுக்கு போகலை " என்ற தீக்ஷிதன் அவனை திரும்பி பார்க்க..

" இனி மேல் இங்க தான் ... "

" அது சரி... அம்மா சென்டிமென்ட்... வீடு... விட்டுட்டு வர முடியாது அப்போ அது எல்லாம் என்ன? "

" அந்த செண்டிமெண்ட் எல்லாம் இன்னும் தான் இருக்கு... அதை எல்லாத்தையும் விட இப்போ என் அண்ணாக்கு நான் தேவை.. நீ என்ன செருப்பால அடிச்சி வெளியே போக சொன்னாலும் நான் போக மாட்டேன்... " என்ற மாறன் மெத்தையில் கால் நீட்டி படுத்துக்கொண்டான்...

" இம்சைடா நீ " என்ற தீக்ஷிதனின் இதழ்களோ மெலிதாக விரிந்துகொண்டது...

மதியை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் ஆதி... மதி, எதையோ பறிகொடுத்த போலவே முகத்தை வைத்திருக்க... " ஏண்டி எப்போ பாரு இப்படி மூஞ்சியை வச்சி இருக்க... முடியலைடி கொஞ்சம் சிரி... அட்லீஸ்ட் சிரிக்க முயற்சியாவது பண்ணு... " என்ற ஆதி அவளை பின்னால் இருந்து கட்டுக்கொண்டான்...

அவளோ அவன் பிடியில் இருந்து விலகியவள்... ஜன்னல் வழியே... தெரிந்த நிலவினை பார்த்தாள்..

எங்கேயோ தொடங்கிய அவளது வாழ்க்கை இன்று இங்கு நிலைபெற்று இருக்கிறது... அதை எண்ணியவளுக்கு ஒரு நொடி இறைவனை எண்ணி பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.. கடவுளின் செயலை என்ன சொல்வது.. எங்கோ தொடங்கிய வாழ்க்கை ஏதேதோ வழியில் பயணப்பட்டு இப்போது இங்கு வந்து நிற்கிறது.. இனி அடுத்து என்னவோ? ...

நம் வாழ்க்கையில் இது தான் நடக்கும்.. இவர் தான் நமக்காக நம்முடன் இறுதிவரை வர போகிறார், என்று யாரையும் குறிப்பிட்டு நம்மால் கூறமுடியாது. அரைநொடியில் கூட வாழ்கை மாறும்.. நம்முடன் இருப்பவரின் குணநலன்களும் மாறும்.. அவ்வளவு ஏன் நிலைமைக்கு தகுந்தாற்போல நாம் கூட நிறம் மாறலாம்.


ஆதியோ அவளையும் , அவள் பார்வை பதிந்திருக்கும் திசையையும் பார்த்தவன்... மீண்டும் அவளை பின்னால் இருந்து அணைத்தபடி " அழகா இருக்கு இல்லை... " என்றவன் தானும் அந்த நிலவை ரசித்த படியே அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்தான்...

அவளோ அவன் இதழ்களின் ஜாலத்தில் தன் வேதனை மறந்தவளாக... அவன் கைகளில் நெளிய தொடங்கினாள்... அவனோ அப்படியே அவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன் அவள் கண்களை பார்த்தவாறே " லவ் யூ மதி " என்றான்... அவளோ ஒரு மென் புன்னகையுடன் அவனை பார்த்தாள்...

" இதுக்கு என்ன அர்த்தமடி. என்னை புடிச்சி இருக்கா இல்லையா.. எனக்கு அது மட்டும் தான் முக்கியம், மத்தபடி உன்னை பத்தி எந்த விஷயமும் எனக்கு வேண்டாம்... சொல்லு புடிச்சிருக்கா இல்லையா " என்றான் கண்களில் எதிர்பார்ப்பை சுமந்த படி...

அவளோ அவன் கரம் பற்றி தன் மணி வயிற்றில் வைத்தவள்... " பிடிக்கலைன்னா இதுக்கு சம்மதித்து இருக்க மாட்டேன்... " என்றவள் கண்ணீருடன் அவன் முகம் பார்த்தாள்...

அவள் வேதனையை உணர்ந்தவன் கன்னம் தாங்கி.. நெற்றியில் இதழ் பதித்தான்... " எல்லாம் சரி ஆகிடும் மதி, லவ் யூ டி " என்று கண்ணீருடன் கூறியவனின் மார்பில் சாய்ந்தவள் " லவ் யூ " என்றாள் கண்ணீரை சுமந்த புன்னகையுடன்...

நாட்கள் அப்படியே நகர்ந்தது.. இடைப்பட்ட மாதத்தில் ஆதியின் தங்கை மஹிமாவின் திருமண ஏற்பாடுகளால்.. ஆதியால், மதியை பற்றி யாருக்கும் தெரிவிக்க முடியாமல் போனது...

மதியும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலையில் இருந்து மீண்டிருந்தாள்... ஆதியிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள்... சாவித்திரியோ வாரம் ஒரு முறை மதியை வந்து பார்த்துவிட்டு செல்வாள்... மதியை ஆதி உள்ளங்கையில் வைத்து தாங்கினான் என்றால் அது மிகையாகாது... தன் உதிரத்தை சுமப்பவளை உயிருக்கு மேலாக பார்த்துக்கொண்டான்...

மாறனோ எப்போதும் தீக்ஷிதனுடனே இருந்தான்... ஏதாவது பேசி அவனை பழைய நிலைக்கு கொண்டி வர பல முற்சிகள் செய்தான்... அதன் பிறகு படப்பிடிப்பில் இருவரும் பிசி ஆகி போனதால் மற்ற விஷயங்களை யோசிக்க நேரமில்லாமல் போனது...

இப்படியே 6 மாதம் கடந்தது... அந்நிலையில் மஹிமாவின் திருமணமும் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது...

பின்னர் ஆதி அவன் குடும்பத்தினரிடமும் மஹிமாவிடமும் மதியை பற்றியும், அவன் திருமணம் பற்றியும் கூறினான்... அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்... அவர்களோ அவனை தங்களுடன் வந்து இருக்குமாறு கேட்க... அதனை மறுத்த ஆதி " இந்த ஆதி... எப்பவும் இப்படி தான் என் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம் ஆனால் நான் மாறல... மாறவும் மாட்டேன் " என்றவன் அவர்கள் அழைப்பை நிராகரித்தான்...

பின்னர் பத்திரிக்கைகளுக்கு தங்கள் திருமணத்தை பற்றியும்... குழந்தை பிறக்கப்போவதை பற்றியும் செய்தி கொடுத்திருத்தான் ஆதி... அந்த செய்தியை படித்த தீக்ஷிதனின் இதழ்கள் தாரளாமாக விரிந்துகொண்டது...

நாம் அன்பு செலுத்திய ஒருவர்... நம்முடன் இல்லை என்றாலும் நலமுடனே இருக்கின்றார் என்ற எண்ணமே தீக்ஷிதனுக்கு போதுமானதாக இருந்தது...

அப்படி ஒரு நாளில் தான் மாறன் கிப்ட் பேப்பரில் வித் லவ் தீக்ஷிதன் என்று எழுதி மோதிரத்தை வைத்திருந்த விஷயம் தீக்ஷிதனிடம், மாறன் கூறி இருந்தான்...

" அறிவில்லையாடா உனக்கு... அப்போ அவள் என்னை பத்தி என்னை நெனச்சு இருப்பாள்... அவள் கிட்ட எதையோ எதிர் பார்த்து தான் நான் இந்த உதவி எல்லாம் பண்ணினேன்னு அவள் நினைச்சி இருக்க மாட்டாளா.. அப்படியே இல்லனாலும் கூட இந்த குற்ற உணர்ச்சி அவளை எவ்ளோ கஷ்டப் படுத்தும் தெரியுமா ஏண்டா மாறா..."

" இங்க பாரு அண்ணா... முதலில் அடுத்தவங்களுக்காக யோசிக்கிறதை நிறுத்து அப்போ தான் நீ உருப்படுவ " என்றவன் அங்கிருந்து சென்றான்...

ஒரு நாள் சாவித்ரி,மதியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது மான்சியை பற்றியும் அன்று தீஷிதனுக்கு நடந்த விபத்தை பற்றியும் கூறினாள்... " அந்த பெண்ணுக்கு அவரு மேல அவ்ளோ லவ்டி.. மாறன் அடிக்கடி பெருமையா பேசுவாரு ... ஆனால் தீக்ஷிதன் அவங்க காதலை ஏற்றுக் கொள்ளவில்லை , அவருக்கு வேற ஒரு பொண்ணு மேல தான் காதலாம் ... அந்த பொண்ணு யாருன்னு தான் தெரியல " என்று கூற மதிக்கோ இதயம் நின்று துடித்தது... ' ஒரு வேளை நம்மள மனசுல வச்சிட்டு தான் அந்த பொண்ணு காதலை அவரு ஏத்துக்கவில்லையோ ' என்று நினைத்த மதி... எப்படியாவது தீக்ஷிதனுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க... வேண்டும் அதற்கு நம் மீது அவர் கொண்ட காதல் போக வேண்டும் என்று மீண்டும் தவறான முடிவெடுத்தாள்...

அப்படியான ஒரு நாளில் ஆதித்யனோ படப்பிடிப்புக்காக மூன்று மாதம் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது... அதனால் அவனோ சாவித்ரியிடம் மதியின் உடனே தங்கி இருந்து அவளை பார்த்துக்கொள்ளும் படி கூறியவன் அன்று இரவே வெளிநாடு கிளம்பி சென்றிருந்தான்...

ஆதி சென்ற ஒரு வாரத்திற்கு பிறகு ... சாவித்ரியோ மலர்விழியின் பெண்ணிற்கு உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட தகவல் கிடைத்த உடனே... சாவித்ரி மதியிடம் கூறி விட்டு அங்கு சென்றிருந்தாள்..

வீட்டில் மதி தனிமையில் இருந்த நேரம்... குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்றவள்... நிலை தடுமாறி கீழே விழுந்தாள்...

அருகில் இருந்த பாத் டப்பில் அவள் வயிறு இடிக்க... " ஆஆஆ " என்று அலறிய படியே கீழே சரிந்தாள்... வலியில் கத்தியவள் துடித்துக் கொண்டிருக்க... அப்போது ஆதியிடம் இருந்து அழைப்பு வந்தது... அந்த வலியிலேயே அலைபேசியை எடுத்தவள் ஆதியின் அழைப்பை ஏற்றாள் " என்ன பண்ணுற மதி.. " என்று கேட்க... அவனுக்கோ எதிர் முனையில் இருந்து பதில் வாராமல் அவள் அழுகுரல் மட்டுமே கேட்க... தவித்து போனான் " ஏய் மதி என்ன ஆச்சு டி ஏதாவது பேசு " என்று கேட்க...அவளோ அதிக வலியில் மயக்கமாகி இருந்தாள்...

உடனே பதறி போன ஆதி சாவித்ரிக்கு அழைக்க...அவளது போனோ ஸ்வீட்ச் ஆப் என்று வந்தது...

தவித்து போனவன் உடனே வேறு வழி இல்லாமல் தீக்ஷிதனுக்கு அழைத்தான்...

திரையில் ஆதியின் எண்ணை பார்த்த தீக்ஷிதன் யோசனையுடன் அழைப்பை ஏற்றான்... " தீஷ் ...தீஷ். எங்க இருக்கீங்க "

" வீட்டில் தான் ஆதி .. என்ன ஆச்சு ஏன் உங்க குரல் இவ்ளோ பதட்டமா இருக்கு? "
" தீஷ்... வீட்டில் மதிக்கு ஏதோ பிரச்சனை போல... ப்ளீஸ் கொஞ்சம் போய் என்னனு பார்க்க முடியுமா ? "

" என்ன ஆச்சு... சரி ஆதி நான் இப்போவே போறேன் " என்றவன்... விரைந்து பத்து நிமிடத்தில் ஆதியின் வீட்டை அடைந்திருந்தான்...

ஆதியின் வீட்டிற்குள் நுழைந்த தீக்ஷிதன்... " நிலா " என்று அழைத்தவாறு உள்ளே வந்தான்..

அவனின் " நிலா " என்ற அழைப்பில் கண்களை... மெல்ல திறக்க முயன்றவளால் அது முடியாமல் போனது...

அவள் அறை கதவு வேறு பூட்டப்பட்டு இருக்க.. தீக்ஷிதனால் அவளை கண்டு கொள்ள இயலாமல் போனது...

மீண்டும் மீண்டும் அவன் " நிலா... நிலா " என்று அழைக்க... அவன் அழைப்பில் கண் விழித்தவள்... எழுந்துகொள்ள முடியாமல் கையை தூக்கி அவனை அழைக்க பார்த்தவளின் கண்கள் இருட்டி கொண்டு வந்தது... ஒருவாறு நிலை பெற்றவளாக எழுந்து கொள்ள முயன்றவள் முடியால் மீண்டும் விழ ... அப்போது ஏற்பட்ட வலியில்
" ஆஆ " என்று கத்தினாள்...

அந்த சத்தம் தீக்ஷிதனின் செவியை அடைந்த நேரம் மீண்டும் மயங்கி இருந்தாள் மதி... சத்தம் வந்த திசையில் இருந்த அறை கதவை திறக்க முற்பட்டான் தீஷ்...

ஒருகட்டத்துக்கு மேல் கதவை இடித்து உடைத்தபடி உள்ளே வந்த தீக்ஷிதன் மதியின் நிலைகண்டு அதிர்ந்து போனான்...

கீழே விழுந்து கிடந்தவளை கைகளில் ஏந்தியபடியே வெளியே வந்தவன்... அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்...

அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர் வெளியே வந்து அவளுக்கும், குழந்தைக்கும் ஒன்றும் இல்லை என்று கூறிய பின் தான் தீக்ஷிதனுக்கு உயிரே வந்தது...

அப்போது மீண்டும் ஆதியிடம் இருந்து அழைப்பு வரவே அழைப்பை ஏற்றான் தீஷ்...

" மதி எப்படி இருக்காள் தீஷ்... அவளுக்கு ஒன்னும் இல்லையே... நல்லா தானே
இருக்காள் " என்று கேட்டான் பதட்டத்துடன்..

" ஒன்னும் பிரச்சனை இல்லை ஆதி. ஆனால் ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க சொல்லி இருக்காங்க அவ்வளவு தான்... " என்றான்... அவன் கூறியதை கேட்டவன் ... " நான் இப்போ மதி கிட்ட பேசணும் அவள் கிட்ட கொஞ்சம் போன் கொடுக்க முடியுமா ?" என்று கேட்டான்...

தீக்ஷிதனோ உள்ளே சென்று மதியின் கையில் அலைபேசியை கொடுத்தவன்... எதுவும் கூறாமல் வெளியே வந்தான்... பின்னர் மதி ஆதியிடன் பேசிவிட்டு போனை டேபிளில் வைத்தவள் கண் மூடி படுத்துக்கொண்டாள்...

பின்னர் சாவித்ரியிடம்... தகவலை கூறினான் தீஷ்... அதனை கேட்டு அவளும் அங்கு வந்து மதியை பார்த்துக்கொண்டாள்...

தீக்ஷிதனோ அவ்வவ்போது வந்து மதியை பார்த்துக்கொண்டான்... இப்படியே நாட்கள் மாதங்களாக சென்றது...

மான்சியோ... இடைப்பட்ட காலத்தில் மீண்டும் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றவள்..
திரும்பி சென்னை வந்து சேர்ந்தாள்... அவள் மீண்டும் சென்னை வர... அப்போது மாறனை சந்தித்தவள்... தீக்ஷிதனை பற்றி கேட்க... மாறனோ மதியின் விஷயத்தை அவளிடம் கூறினான்...

அதை கேட்ட மான்சிக்கோ... இப்போதே தீக்ஷிதனை பார்க்க வேண்டும் என்று தோணியது... ஏனென்றால்... நிராகரிக்கப்படுவது எப்படி வலிக்கும் என்று அவளும் அறிவாள் அல்லவா...


துன்பத்தில் தோள் கொடுக்க அவனுக்கு ஆள் தேவை எனில்.. அப்போது அவன் விரும்பினாலும், விரும்பாவிடினும் அவன் அருகில் நான் இருப்பேன்.. அவனது காதலை பெற அல்ல.. அவனது கவலைகளை போக்க...
 

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 35


மதி நிறைமாத கர்ப்பினியாக இருந்த நேரம்... மதியை இப்போது எல்லாம் தீஷிதனே மருத்துவனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்வான்... அவனுடைய இந்த செயலும்... அன்பும் அவளுக்கு குற்ற உணர்ச்சியை அதிகமாக்கியது...

அவர் தன்னை விட்டு செல்ல வேண்டும் அதுவே அவருக்கு நல்லது... என்னை பற்றிய எண்ணம் அவர் மனதில் இருந்து நீங்கினால் மட்டுமே அவர் அவருக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்வார் என்று எண்ணியவள்... ஒரு முடிவு செய்து தீஷிதனை தேடி வந்தாள்...

தீக்ஷிதனை தேடி அவன் வீட்டிற்கு வந்த மதி அவன் அறைக்குள் நுழைந்தாள்...

அவளை எதார்த்தமாக பார்த்தவன் " என்ன இந்த பக்கம் " என்று கேட்க...

" நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க... உங்களுக்கு என்ன தான் வேணும் "

" புரியல "

" எனக்கும் தான் புரியலை... உங்களை பார்க்கும் போது எல்லாம் என் மனசு படுறபாடு எனக்கு மட்டும் தான் தெரியும் ... ஏன் மறுபடியும் மறுபடியும் என் கண்ணு முன்னாடி வந்து என்னை ரணப்படுத்துறீங்க... "

" நான் அப்படி உன்னை என்ன பண்ணேன் " என்றவன் சாவகாசமாக... அவளை பார்த்தான்

" அது தான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அப்படின்னு ஆகிடுச்சே அப்புறம் மறுபடியும் ஏன்... இப்படி எல்லாம் நடத்துக்குறீங்க... உங்களோட இந்த அன்பு, அக்கறை எதுவும் எனக்கு தேவை இல்லை, என்னோட இந்த நிலைமைக்கும், குற்ற உணர்ச்சிக்கு நீங்க தான் காரணம்... நீங்க எனக்கு எதுக்கு இந்த உதவி எல்லாம் பண்ணனும்... எனக்கு இது எல்லாம் செய்ய நீங்க யாரு? ஒரு காலத்துல நீங்க எனக்கு எவ்ளோவோ உதவி பண்ணி இருக்கீங்க... இப்போவும் பண்ணுறீங்க அது எதையும் நான் இல்லன்னு சொல்லல... நீங்க எனக்கு இதுவரைக்கும் செய்த உதவிக்கு எல்லாம் எவ்ளோ பணம் செலவாச்சுன்னு சொல்லுங்க... அதை நான் ஆதி கிட்ட இருந்து வாங்கி உங்க கிட்ட கொடுத்துடுறேன்... ஆனால் தயவு செய்து என்னை விட்டு போய்டுங்க... உங்க அன்பும் அரவணைப்பும் எனக்கு வெறுப்பா இருக்கு அது உங்களுக்கு புரியுதா இல்லையா தீஷா... இனியும் என்னை பத்தி யோசிக்காமல் உங்க வாழ்க்கையை பாருங்க... " என்றவள் கண்ணீரை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டாள்...

" ம்ம்ம்ம்... இப்போ ரொம்ப நல்லாவே புரியுது... இப்போ கூட நீ இது எல்லாம் நான் கோவப் படணும்னு எதிர்பார்த்து தான் பேசுற... அது எனக்கு நல்லாவே புரியுது ஆனால் எனக்கு உன் மேல கோவம் வரல... இப்போ கூட நீ பேசுறது எல்லாம் எனக்கு ஏதோ அறியாத குழந்தை தெரியாமல் பேசுற மாதிரி தான் இருக்கு... அப்புறம் நீயே சொல்லிட்ட நான் உனக்கு செய்தது எல்லாம் உதவின்னு... செய்த உதவிக்கு காசு கொடுக்குற அளவுக்கு நீங்க வேணும்னா பெரிய ஆளாக மாறி இருக்கலாம்... ஆனால் அந்த பணத்தை வாங்கிக்கிற அளவுக்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலை... அப்புறம் உன் குற்ற உணர்ச்சிக்கு அன்னைக்கு நான் கொடுத்த கிப்ட்ல இருந்த லெட்டர் தான் காரணம்னா.. இனி உனக்கு அந்த குற்ற உணர்வு தேவை இல்லை... அது நான் வைக்கல... அது மாறன் பண்ணிய வேலை... அதுல இருந்த விஷயம் உண்மை இல்லை... "

"அப்போ நீங்க என்னை விரும்பலையா ? " என்று கேட்டவள் அவன் முகம் பார்க்க..

விரக்தியாக சிரித்தவன் "அப்போ தெரியல.... ஆனால் இப்போ கண்டிப்பா இல்லை " என்றவன் அவளின் மேடிட்ட வயிற்றின் மீது தன் கையினை அவளை தீண்டாமல் சற்று தள்ளி வைத்தவன்... " இனி என் சடலத்தை பார்க்கிற கஷ்டத்தை கூட நான் உனக்கு கொடுக்க மாட்டேன்... இதுவே நான் உன்னை பார்க்கிறது கடைசியா இருக்கட்டும்... உன் விருப்பம் போல... இனி உன் கண் முன்னாடி நான் வர மாட்டேன்... நம்ம பேசக்கூடிய வார்த்தைகள் ஒருவரை எந்த அளவுக்கு வதைக்கும்ன்னு இனியாவது தெரிந்து யோசிச்சு பேசு.. அது உன் வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது " என்றவன் அறையை விட்டு வெளியேறிய நேரம் அங்கு நின்றுக் கொண்டு அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள் மான்சி...

மான்சியை கண்ட தீக்ஷிதன் கண்கள் கலங்க.. " மான்சி " என்று அழைக்க... அவளோ " தள்ளு தீஷ் " என்றபடி அவனை கடந்து உள்ளே சென்றவள்... மதியிடம் " வாவ் ... வாவ்.. என்ன பேச்சு பேசுற... என்ன சொன்ன இவரு பண்ணிய உதவிக்கு பணம் குடுப்பியா??? ஏண்டி கேட்க யாரும் இல்லன்னு நினைச்சியா... உன் இஷ்டத்துக்கு பேசுற... அவரு பண்ணிய உதவி தாய் பாலுக்கு சமம்... அதுக்கு உன்னால எந்த விலையும் கொடுத்து ஈடு செய்ய முடியாது... அது எப்படி தேவை இருக்க வரை மட்டும் ஒரு மாதிரியும் தேவை முடிஞ்சதும் வேற மாதிரியும் மாறிடுறீங்க... "

"மான்சி ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் பேசாத அவள் ஏதோ தெரியாமல் பேசுறாள் விடு " என்ற தீக்ஷிதன் மான்சியை பிடித்து தன் பக்கம் இழுக்க... மான்சியோ " நீ சும்மா இரு தீஷ் உனக்கு ஒன்னும் தெரியாது " என்றவள் மதியிடம்... " அது எப்படிடி பாதுகாப்புக்கு ஒருத்தனையும் ***டுக்குறதுக்கு ஒருத்தனையும் உங்க மனசு தேடுது " என்று கூற... மதியோ அவள் கூறிய வார்த்தையில் கண்களில் கண்ணீருடன் வாயை மூடி அழுதாள்...

மான்சி கூறிய வார்த்தை தீக்ஷிதனின் செவியை அடைய... அவளை ஓங்கி அறைந்திருந்தான் " ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? " என்றவனுக்கு அப்போது தான் புரிந்தது அவன் மான்சியை அடித்தது...
உடனே தன் கைகளை சுவரில் ஓங்கி குத்தியவன்.. " ஏன்டி என்னை போய் உன்னை அடிக்க வச்சிட்டியே " என்றவன் மான்சியின் அருகில் வர...

அவளோ தீக்ஷிதன் அறைந்த கன்னத்தை பொத்தியபடியே பின்னே நகர்ந்தாள்...

" மான்சி சாரிமா " என்றவன் அவளை மீண்டும் நெருங்க அவளோ அவனை கை நீட்டி தடுத்தவள்... விறுவிறுவென வெளியேறினாள்....

அவளை பின் தொடர்ந்து தீக்ஷிதன் செல்லும் முன் மதிக்கோ பிரசவவலி ஏற்பட... " தீஷா " என்றவள் கத்தியபடியே கீழே அமர்ந்தாள்.

" நிலா என்ன ஆச்சு " என்றவன் அவள் அருகில் வர... அவளோ வலியில் துடிக்க ஆரம்பித்தாள்... பின்னர் அவளை கைகளில் ஏந்தியவன்... அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்....

பிரசவலியில் அவள் கதற அறைக்கு வெளியே நின்ற தீக்ஷிதனுக்கோ இருப்புக்கொள்ளவில்லை... இறுதியாக குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் தான் நிம்மதி அடைந்தான் அவன்...

செவிலியர் குழந்தையை தீக்ஷிதனிடம் எடுத்து வந்து கொடுக்க... அந்த குழந்தையை புன்னகையுடன் பார்த்தவனுக்கு அதனை தூக்குவதற்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது... பதட்டத்துடன் குழந்தையை கையில் ஏந்தியவனுக்கு.. உலகமே அழகான உணர்வு தோன்ற... குழந்தையின் ஸ்பரிசம் படாமல் நெற்றியில் மென் முத்தம் பதித்தான்...

பின்னர் ஆதிக்கு அழைத்து விஷயத்தை கூறினான் தீக்ஷிதன்... ஆதியோ " நாளைக்கு காலைல அங்கு வந்துடுவேன் தீஷ்... அதுவரை அவளை கொஞ்சம் பார்த்துகோங்க " என்றவன் விமானம் ஏறினான்...

படப்பிடிப்பை முடித்து விட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு இப்போது தான் ஆதி சென்னைக்கு வருகிறான்...

ஆதி மருத்துவமனைக்கு வரவும்... அவனிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் அங்கிருந்து சென்றான்...

அறைக்குள் வந்து குழந்தையை கையில் ஏந்திய ஆதி... அருகில் படுத்திருந்த மதியின் நெற்றியில் இதழ் பதித்தான்..

மருத்துவமனையில் இருந்து வந்த தீக்ஷிதன் அடுத்து நேராக சென்றது என்னமோ மான்சியை தேடி தான்...

மான்சியை தேடி அவள் வீட்டிற்கு வந்தவன்... உள்ளே செல்ல போக... வாட்ச்மென்னோ
" சார் யாரும் வீட்டில் இல்லை " என்று கூறினார்...

" என்ன விஷயம் எல்லாரும் எங்க போனாங்க ? " என்று தீக்ஷிதன் கேட்க...

"மான்சி மேடத்துக்கு உடம்பு சரி இல்லை அவங்களை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க " என்று கூற... தீக்ஷிதனுக்கோ இதயம் நின்று துடித்தது... " என்ன ஆச்சு... எந்த ஹாஸ்பிட்டல் " என்று கேட்க அவனோ மருத்துவமனையின் பெயரை கூறவும் அடுத்த நொடி கார்... புயலாக சீறி பாய்ந்தது... மருத்துவமனையை நோக்கி...

மருத்துவமனைக்கு வந்த தீக்ஷிதன்... அவள் சேர்க்கப்பட்டு இருக்கும் அறையை விசாரித்து அங்கு வந்து சேர்ந்தான்...

அறைக்கு வெளியே... மகேந்திரன் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார்... அவர் அருகில் வந்த தீக்ஷிதன் " மான்சிக்கு என்ன ஆச்சு" என்று கேட்க... அவருக்கோ கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வழிந்தது... பின்னர் " நான் செய்த பாவம் எல்லாம் சேர்ந்து என் மகளை பலிவாங்கிடுச்சி தீக்ஷிதன்... " என்றவர் அவன் கையை பிடித்து கொண்டு அழுதார்...

அப்போது அவன் அருகில் வந்த சரண்யா.. " தீக்ஷிதன் தானே நீங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சார் " என்று அவனை அழைக்க... அவனும் அவளுடன் சென்றான்...

" சொல்லுங்க மான்சிக்கு என்ன தான் பிரச்சனை ?"

அவளோ தயங்கியபடியே, கையை பிசைந்த படி நின்றவள் " அவங்களுக்கு கர்ப்பபை புற்று நோய் சார், அதுவும் இறுதி கட்டம்... எவ்வளவோ ட்ரீட்மெண்ட் பண்ணி பார்த்தோம்... வெளிநாட்டுக்கு எல்லாம் கூட போய் ட்ரீட் மெண்ட் பண்ணி பார்த்தோம்... ஆனால் எல்லாமே வீணா போச்சு.. கடைசியில் அவங்க கர்பப்பையை நீக்கியே ஆகணும் இல்லன்னா அவங்க உயிர் போய்டும்ங்குற நிலையில் கூட அவங்க கர்ப்பப்பையை நீக்க வேண்டாம்ன்னு தான் இருந்தாங்க... கடைசியில்... அவங்க அம்மா,அப்பா எல்லாரும் கெஞ்சி கேட்டு அவங்களை ஆப்ரேஷன்க்கு சம்மதிக்க வச்சோம்... "

' அவளுக்கு குழந்தைகள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று தீக்ஷிதன் நன்கு அறிவான் அல்லவா'

" இப்போ என்ன ஆச்சு அவள் உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே " என்று கேட்ட தீக்ஷிதனின் கண்களிளோ அவனே அறியாமல் கண்ணீர் வழிந்தது...

" இப்போ எந்த பிரச்சனையும் இல்லை சார்... அவங்க நல்லா இருக்காங்க "

தீக்ஷிதனுக்கு அவள் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற வார்த்தையே போதுமானதாக இருந்தது...

மான்சி கண்விழிக்க... அனைவரும் அவளை பார்க்க அறைக்குள் சென்றனர்...

அவர்களை தொடர்ந்து முகத்தில் வடிந்த வியர்வை துளிகளை தன் சட்டையில் துடைத்தபடி... அறைக்குள் நுழைந்தான் தீக்ஷிதன்...

அங்கு மெத்தையில் கண்கள் மூடி படுத்திருந்த மான்சி அவன் வருகையை உணர்ந்து கண்விழித்தவள் " வாங்க இயக்குனரே என்ன இந்த பக்கம்??? " என்று கேட்டவள் எழுந்து கொள்ள முயற்சிக்கவும்... விரைந்து வந்து அவள் அருகில் நின்றவன்
' வேண்டாம் ' என்று தலையசைக்க... அவளோ அவனை பார்த்து இதமாக இதழ் விரித்து புன்னகைத்தாள்...

பதிலுக்கு அவளை பார்த்து வலியுடன் புன்னகைத்தவன்... அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர போக... அவளோ.. தான் படுத்திருந்த மெத்தையை கண்களால் காட்டியவள் " இங்க உட்காரு தீஷ் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று கூறியவள்... அறையில் இருந்த மற்ற நபர்களை பார்த்து ' வெளியே செல்லும் படி ' செய்கை செய்தாள்... அவள் சொல்லுக்கு மதிப்பளித்து தீக்ஷிதனை தவிர அறையில் இருந்த அனைவரும் வெளியே சென்றனர்...

தீக்ஷிதனின் முக வாட்டத்தை கண்டு கொண்ட மான்சி " என்ன இயக்குனரே முகம் எல்லாம் தொங்கி போயிருக்கு ... நான் என்ன செத்தா போய்ட்டேன்... ஏதோ எழவு வீட்டுக்கு வந்த மாதிரி மூஞ்சியை தொங்க போட்டிருக்க? " என்று சிரித்தபடியே கூறியவளை கலங்கிய கண்களுடன் பார்த்தவன்... " அப்படி எல்லாம் பேசாதடி.. உனக்கு ஒன்னும் இல்லை நீ ரொம்ப நல்லா இருக்க... " என்றவனின் கண்களில் வழிந்த கண்ணீர்... அவன் கன்னம் நிறைத்தது...

"எனக்கு ஒன்னும் இல்லல... ஆமா... ஒன்னும் இல்லைதான்... " என்றவள் விரக்தியாக சிரித்தாள்...

"அப்போ என்னை கல்யாணம் பண்ணிப்பியா தீஷ் " என்றவளின் .. கண்களில் இருந்தது வலியா? காதலா? எதிர்பார்ப்பா? ஆசையா? என தீக்ஷிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை...

" யோசிக்கிறியா... சரிவிடு வேண்டாம் " என்றவள் கண்ணீருடன் கஷ்டப்பட்டு எழுந்து கொள்ள முயல... அவளுக்கு உதவி செய்த தீக்ஷிதன் அவளை அமரவைத்தான்...

" கல்யாணம் பண்ணிக்கிறியா தீஷ் ... ஒரு வேளை என்னை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு வேண்டாமோ என்னமோ, " என்று அவள் கூறி கொண்டு இருக்கும் போதே

" பண்ணிக்கிறேன் டி... ஏன் இப்படி எல்லாம் பேசுற.. ரொம்ப கஷ்டமா இருக்குடி "

" பரிதாபப்படுறியா தீஷ் ... என்ன பார்த்தால் பாவமா இருக்கா? இதே பதிலை நீ மூணு வருஷத்துக்கு முன்னடி சொல்லி இருந்தால் ... உனக்குன்னு ஒரு புள்ளையை பெத்துப்போட்டு செத்து போயிருப்பேன்... ஆனால் இப்போ அது முடியாது இல்லை... " ஏன் இப்படி பண்ணுற.. உன்கிட்ட நான் எதிர் பார்த்தது இந்த காதலை இல்லை... இந்த பரிதாபம் எனக்கு வேணாம்.. எனக்கு வேணாம்... நீ போய்டு... என்னை விட்டு போய்டு " என்றவள் கண்ணீருடன் அவன் மார்பில் மாறி மாறி அடித்தாள்.. அவள் கொடுத்த அடியை எல்லாம் பெற்றுக்கொண்டவன்.. கண்ணீருடன் ஒரு குற்றவாளியாக அவள் முன்னே அமர்ந்திருந்தான்...

அப்போது மான்சியின் வயிற்றில் சுருக்கென்று ஒரு வலி ஏற்படவே... "ஸ் ஆஆ " என்றபடி... அவன் சட்டையை பிடித்தவள் வலியில் கத்தினாள்...

நொடியும் தாமதிக்காமல் அவளை தன்னோடு சேர்த்தணைத்து கொண்டவன் " எமோசனல் ஆகாத வலிக்குது பாரு " என்று கூறி அவளை கண்ணீருடன் தன் தோள் சாய்த்து கொண்டான்.

உன் காதல் என்றும் ஒரு வலியாய்

எனக்குள் வாழும்...

அதற்கு உன் நினைவுகளே...

மருந்தாக.. மாயம் செய்யும் போது,

தான் உணர்ந்தேன், உன் காதல்,

எனக்கு வலி அல்ல வரமென்று. ...


" நீ நல்லா வாழணும்னு நான் ஆசைப்படுறேன் தீஷ்... எந்த குறையும் இல்லாத ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ ... இனி நான் உனக்கு வேண்டாம் " என்றவள் கண்ணீருடன் புன்னகைத்தபடியே அவன் கன்னம் தாங்கினாள்...

" மான்சி ஏண்டி " என்ற தீக்ஷிதன் அவளை இயலாமையுடன் பார்த்தான்...

" ப்ளீஸ் போய்டு " என்ற மான்சியோ ஒரு கணம் தன் வலியை மறைக்க முடியாமல் கண்ணீருடன் அவன் இதழில் தன் இதழை பதித்திருந்தாள்... கண்ணீருடன் இருவரது கண்களும் தானே மூடிக்கொண்டது....

அங்கு இருவரின் இதழ்களும் கவி பாடவில்லை... கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது...

அவன் இதழில் இருந்து மெல்ல தன் இதழை பிரித்தெடுத்தவள் " போ ... தீஷ்... இனி என்னை பார்க்க வராத... பார்க்கவும் முயற்சி பண்ணாத... " என்றவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்...

" மான்சி " என்ற தீக்ஷிதன் அவள் கரம் பற்ற... அவளோ " என்னை மறுபடியும் காயப்படுத்தாத தீஷ்... இதுக்கு மேல அழுகுறதுக்கு என் மனசுலையும் தெம்பில்லை... உடம்புலையும் தெம்பில்லை... இப்போ நான் என் காதலுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்... ஏதோ ஒரு இடத்தில் என் சந்தோஷத்திற்காக உன் வாழ்க்கையை நான் பலி கொடுத்த மாதிரி ஆகிட கூடாது தீஷ்... இது வேண்டாம்... போய்டு " என்றவள் " அப்பா... " என்று அழைக்க... உள்ளே வந்தார் மகேந்திரன் ...

மகேந்திரன்... உள்ளே வரவும் வேறு வழி இல்லாமல்"அவளை நல்லா பார்த்துக்கோங்க"
என்றவன் மான்சியை ஆழ்ந்து பார்த்தவாறே வெளியே செல்ல போனவனிடம்

" இயக்குனரே ஐ லவ் யூ... " என்ற மான்சி... தன் நெஞ்சில் கைவைத்து " இது எப்போவும் மாறாது... சந்தோசமா இருங்க " என்றவளை கண்ணீருடன் பார்த்தவன்... இயலாமையுடன் வெளியே சென்றான்...
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 36

வீட்டிற்கு வந்த தீக்ஷிதன்... தன் தாயின் புகைப்படத்தின் அருகில் அன்று அவன் வரைந்து வைத்த ஓவியத்தை எடுத்து பார்த்தான்.

அதனை பார்த்தவனின் கண்களில் வழிந்த கண்ணீர் துளி... அந்த காகிதத்தை நனைத்தது... அதில் அவன் வரைந்திருந்த ஓவியம் வேறு யாருடையதும் இல்லை... அது மான்சியுடையது தான்...

காதல் எந்தன் கண்ணில் விழுந்து தொலைந்து போனதேன்....

இதயம் துடிக்க... உன்னை நினைக்க உறைந்து போனதேன்..

காதலே.... என் தாய் மடி, கிடைத்து மறைந்ததேன்..

உன் விழி... என் வலி, இதயம் எரித்ததேன் ...

மையல் கொண்ட மனம் அதனை... மண்ணில் புதைத்ததேன்.

தேடி கிடைக்கா நேசம்... தேகம் துடிக்கும் ஆசை... எனை வதைத்து சாம்பலாக்கியது ஏன்?...

இப்படி என் வாழ்க்கையே கேள்விகளாய் நிறைந்திருக்க... பதிலாக வேண்டிய நீ கூட என்னை கேள்விக்குறியாக நிறுத்தியது ஏன்?

என்று ஆயிரம் கேள்விகளுடன் தீக்ஷிதன் பால்கனியில் நின்று கொண்டிருக்க... அவன் அருகில் வந்த மாறன்...

" இங்க என்ன பண்ணுற அண்ணா... நீ ஏன் இன்னும் சாப்பிடலை... வா சாப்பிடுவோம் " என்று அவனை அழைக்க... கண்ணீருடன் அவன் முகம் பார்த்த தீக்ஷிதன்... வலியுடன் அவனை தன்னோடு அணைத்தான்... முதல் முறையாக தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல. கதறி அழுதான்...

அவன் அழுகையை முதல் முறையாக மாறன் பார்க்கிறான்... அவன் அழுவதை கண்ட மாறனின் கண்களும் கலங்கி போனது...

" என்ன ஆச்சு அண்ணா ஏன் அழகுற... "

" என்னால முடியல மாறா... எல்லாரும் என் உணர்வுகளோட விளையாடுறாங்கடா... ரொம்ப வலிக்குதுடா... நானும் மனுஷன் தான... எனக்கும் வலிக்கும்னு ஏண்டா யாருமே நினைக்க மாட்டிங்குறாங்க... இதுவரை யாரும் என்னை புரிஞ்சிக்கணும்னு நான் எதிர்பார்த்ததே இல்லைடா... ஆனால் முதல் தடவை யாரவது என் உணர்வுகளை புரிஞ்சிக்கிட்டால் நல்லா இருக்குமேன்னு தோணுதுடா... எல்லாருக்கும் அவங்க , அவங்க வாழ்க்கை அவங்க அவங்க பிரச்சனை... உணர்வுகள் மட்டும் தான் பெருசா தெரியுதே தவிர அது எதிரில் இருப்பவர்களுக்கு எப்படி வலிக்கும்னு ஏண்டா யாரும் யோசிக்க மாட்டேங்குறாங்க.... எல்லாரும் என்னை தேவைக்கு பயன்படுத்திட்டு 'நீ யாரு? போ' ன்னு சொல்லும் போது... ரொம்ப வலிக்குதுடா... எனக்கு என் அம்மா வேணும்டா என் அம்மா இருந்து இருந்தால் இந்நேரம் என்னை இப்படி அழ விட்டு இருப்பாங்களா??? செத்துடலாம் போல இருக்குடா... " என்ற தீக்ஷிதன்... மாறனின் தோளில் கண்ணீருடன் சாய்ந்தான்...

" விடு எல்லாம் சரி ஆகிடும் யாரு உன்னை விட்டு போனால் என்ன? உனக்கு நான் இருக்கேன் " என்ற மாறனுக்கு, மதியின் மீது கொலை வெறி ஆத்திரம் வந்தது...

கண்களை துடைத்துக்கொண்டு தன்னை ஒருவாறு நிலைப்படுத்தி கொண்ட தீக்ஷிதன்
" மாறா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்டா... நாளைக்கு உனக்கும் சாவித்ரிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன்... "

" இல்லை அண்ணா... என்னால முடியாது உனக்கு கல்யாணம் ஆகாமல் நான் சாவித்ரியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்... இது நடக்காது " என்றவன் பிடிவாதம் பிடிக்க... அவன் கையை எடுத்து தன் தலையின் மீது வைத்த தீக்ஷிதன் " நாளைக்கு உனக்கு கல்யாணம் இது என் மேல சத்தியம் " என்றவன் அறையில் இருந்து வெளியேறினான்...

மாறனோ நேராக சாவித்ரியிடம் சென்று திருமணத்தை பற்றி கூற அவளோ
" மதிக்கு இப்போ தான் குழந்தை பிறந்து இருக்கு இந்த நிலையில் அவளால் என் கல்யாணத்துக்கு எங்கேயும் வர முடியாது... அதனால அவள் வீட்டுக்கு வந்த அப்புறம் கொஞ்சம் நாள் கழித்து நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாமா? " என்று கேட்டவளின் கழுத்தை ஆக்ரோசமாக பற்றிய மாறன்
" இன்னொரு முறை உன் வாயில் இருந்து அவள் பேரு வந்தது... நான் மனுசனா இருக்க மாட்டேன்... எல்லாத்துக்கும் அவள் தாண்டி காரணம்.. என்னைக்கு அவ என் அண்ணா வாழ்க்கையில் வந்தாளோ அன்னைக்கே என் அண்ணன் சந்தோசம் எல்லாம் இல்லாமல் போயிடுச்சு... இன்னிக்கு என் அண்ணா அழுதான் டி.... இத்தனை வருஷத்தில் அவன் ஒரு முறை கூட அழுது நான் பார்த்தது இல்லை... ஆனால் இன்னிக்கு...
அவன் அழுகைக்கு காரணம் அவள் தான்... செத்தாலும் நான் அவளை மன்னிக்கவும் மாட்டேன் அவள் என் அண்ணனுக்கு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டேன்... அவள் உன் அத்தை பொண்ணு தான் ...நீ அவளை போய் பாரு பேசு... அதை நான் தடுக்க மாட்டேன்.. ஆனால் அவள் நம்ம வாழ்கைக்குள்ள வந்தால் ... நான் சும்மா இருக்க மாட்டேன் " என்று கூறி அவள் கழுத்தை விட்டவன்... " நாளைக்கு மரியாதையா கோவிலுக்கு வந்து சேரு " என்றவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்....

அடுத்தநாள் சாவித்ரிக்கும்... மாறனுக்கும் எளிமையாக கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தினான் தீக்ஷிதன்...

திருமணம் முடியவும் அவர்களை ஒரு வீட்டிற்கு அழைத்து வந்தவன் மாறனிடம்
" வீடு புடிச்சி இருக்காடா "என்று கேட்டான்..

"ரொம்ப நல்லா இருக்கு அண்ணா யாரு வீடு " என்று மாறன் வீட்டை சுற்றி பார்த்தபடியே கேட்டான்..

அவன் கையில் ஒரு பைலையும் சாவியையும் கொடுத்த தீக்ஷிதன் " உன் வீடு தாண்டா " என்று கூற... சாவித்ரியும், மாறனும் அவனை அதிர்வுடன் பார்த்தனர்...

" அப்புறம். எனக்கு தெரியும் மாறா உனக்கு டைரக்சன்ல அவ்வளவு விருப்பம் இல்லன்னு... அதனால் உனக்கு ஒரு ஹார்டுவேர் பிஸ்ன்ஸ் ஏற்பாடு பண்ணி இருக்கேன்... இது உன் வாழ்க்கைக்கு சரியா இருக்கும்... உன்னை நல்லா பார்த்துக்கடா... நான் உன் கூட இருந்தாலும் இல்லனாலும் நீ உன் வாழ்க்கையை சந்தோசமா வாழணும் " என்ற தீக்ஷிதன், மாறனை கட்டி அணைத்தான்...

" அண்ணா நீ எப்போவும் என் கூட தான் இருப்ப.. எனக்கு இது எல்லாம் எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதும்... என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொல்லு " என்ற மாறனின் தலையில் தட்டியவன்
" நான் எங்கயும் போகலைடா... நான் எப்போவும் இங்க உன்கூடவே தான் இருக்கேன்... " என்று மாறனின் நெஞ்சில் கைவைத்தபடி கூறினான் தீக்ஷிதன்...

" சரி புதுசா கல்யாணம் ஆனவங்க... ஹாப்பியா இருங்க.. நான் வரேன்டா... நான் வரேன் சாவித்ரி அவனை நல்லா பார்த்துக்கமா... கொஞ்சம் கோவப் படுவான் ஆனால் ரொம்ப நல்லவன்... என் மேல அதிக பாசம், அதனால் யாரு என்னனு கூட பார்க்காமல் பேசிடுவான்... அவனை நல்லா பார்த்துக்கமா.. அவனுக்கு என்னை விட்டால் யாரையும் தெரியாது... இனி அவனுக்கு எல்லாமே நீ தான்... நல்லா இருங்க " என்ற தீக்ஷிதன் அங்கிருந்து சென்றான்...

மாறனோ வெகு நேரமாக தீக்ஷிதன் கூறி சென்ற விஷயத்தை அசைபோட்டு கொண்டிருந்தவனுக்கு... தீக்ஷிதன் செய்யவிருக்கும் காரியம் புரியவரவே... அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தது...
" ஒஹ் மை காட் " என்று தலையில் அடித்து கொண்டவன்... நேராக தீக்ஷிதனை தேடி வீட்டிற்கு வந்தான்... ஆனால் அவன் அங்கு இல்லை...

கண்ணீருடன் அந்த வீட்டை பார்த்த மாறன்
" எங்க அண்ணா போன... ஏன் இப்படி பண்ணின... நீ இல்லாமல் நான் எப்படி அண்ணா... " என்றவன் கண்ணீருடன் அங்கேயே அமர்ந்தான்...

வீட்டில் இருந்து கிளம்பிய தீக்ஷிதன்... இந்த ஊரை விட்டு மொத்தமாக போய்விட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்...
ஆனால் இறுதியாக ஒரு முறை மான்சியை பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவன் அவளை தேடி அவளுடைய வீட்டிற்கு வந்தான்..

ஆனால் மான்சியோ அவனை பார்க்க விருப்பம் இல்லை என்று தன் தந்தையிடம் கூறி அனுப்பியவள் கண்ணீருடன்... மெத்தையில் சாய்ந்தாள்...

தீக்ஷிதனோ கனத்த இதயத்துடன் அவ்விடம் விட்டு தன் பயணத்தை தொடங்கினான்...

மாறனோ மான்சிக்கு அழைத்து விஷயத்தை கூற... அவளோ " என்ன சொல்லுற மாறா... அய்யோ ஒரு வேளை அதுக்கு தான் என்னை பார்க்க வந்தாரோ தப்பு பண்ணிட்டேனே " என்றவள்... விரைந்து வந்து வெளியே பார்த்தபடி கதறி அழுதாள்...

பின்னர்...மான்சியோ தீஷிதனை தேடி அலைந்தாள்... ஆனால் அவன் எங்கு சென்றான்,எங்கு இருக்கிறான் என்ற ஒரு சிறு தகவல் கூட அவளுக்கு கிடைக்க வில்லை..

தீக்ஷிதன் இங்கிருந்து சென்று இன்றுடன் ஆறு மாதம் முடிவடைந்திருந்தது...

மான்சியோ ஒவ்வோரு ஊராக அவனை தேடி அலைந்தாள்... இறுதியாக அவன் இருக்கும் இடத்தை பற்றிய தகவலை தன் தோழிகள் மூலம் அறிந்து கொண்டவள் அவனை காண லண்டன் சென்றாள்...

" வெளி நாட்டில் போய் ஒழிந்து இருக்கியா... இருடா இயக்குனரே உன்னை வந்து வச்சிக்கிறேன் " என்றவள் அங்கு அவனை தேடி வந்தாள்...

பூங்காவில் அமர்ந்தபடி தன் கையில் வைத்திருந்த புத்தகத்தின் இறுதி பக்கத்தில்...

'உன்னிடம் பேசவேண்டும் என்று நான் சேகரித்த எண்ணிலடங்கா வார்த்தைகள்... இன்னும் என் இதயத்தில், பத்திரமாகவே உள்ளது... என்று உன்னை காண்கிறேனோ... அன்று என் இதழ் மௌனம் காக்க.. என் இதயம் உன்னிடம்... கவி பாடும்... '
என்று எழுதியபடியே இருக்கையில் அமர்ந்திருந்தான் தீக்ஷிதன்...

அப்போது அவன் அருகில் யாரோ அமர்வதை போன்று இருக்கவே... அந்த புறம் திரும்பி பார்த்தவன் மீண்டும் தன் கண்களை புத்தகத்தின் மீது செலுத்தினான்...

அவன் கண்ட அந்த உருவம் அவன் மூளையை அடைய.. அதன் பிறகே தான் கண்டது கனவா நினைவா என்று குழம்பியவன் அருகில் அமர்ந்திருந்தவளை நன்றாக திரும்பி பார்த்தான்...

அவன் அருகில் இருந்தது வேறு யாரும் இல்லை மான்சியே தான்..

அவளை கண்டவனின் கண்கள் கலங்க... இதழ்களோ வலி மறந்து மெல்ல விரிந்துகொள்ள... " மான்சி " என்று அழைத்தவன் தன் உணர்வுகளை அடக்கியபடி... தன்னை நிலைப்படுத்தி கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்டான்..

" இன்னும் எவ்ளோ தூரம் ஓடிப்போவ தீஷ்... " என்றவள்...
ஆக்ரோஷமாக அவன் சட்டைக்காலரை பற்றினாள்...

" என்னை பார்த்தா பைத்தியகாரி போல இருக்கா உனக்கு... இந்த ஆறு மாசம் உன்னை தேடி தெரு தெருவா அலைந்து இருக்கேன்... கொஞ்சம் கூடவா உனக்கு என் ஞாபகம் இல்லாமல் போச்சு... " என்றவள் " எனக்கு என் பழைய தீஷ் வேணும்.. நீ என்னை கல்யாணம் கூட பண்ணிக்க வேண்டாம். நம்ம உறவுக்கு நீ எந்த பேரும் குடுக்க வேண்டாம்... காலம் முழுவதும் உன் கூட உன் கையை பிடிச்சிட்டு இப்படியே வாழ்ந்துக்கிறேன். ஆனால் நீ இப்படி கவலையா இருக்காத.. இதுக்கு மேல உன் கண்ணு கலங்கின அது நான் செத்ததுக்கு சமம்.. உனக்கு நான் இருக்கேன்... என்னை போ ன்னு மட்டும் சொல்லிடாத " என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்...

அவனோ கண்ணீரை உள் இழுத்த படி " போ ன்னு நீதானடி சொன்ன "

" போ ன்னு சொன்னா போய்டுவியா... போ ன்னு தான் சொன்னேன்... இப்படி தனியா ஊரை விட்டு போன்னா சொன்னேன்?? "

பதில் எதுவும் பேசாத தீக்ஷிதன் அவளை தன்னில் இருந்து பிரித்து நிறுத்தினான்...

" இப்போ உனக்கு என்ன தான் வேணும் தீஷ்... ஏன் இப்படி இருக்க... "

" தெரியல... " என்று ஒற்றை வரியில் பதில் கொடுத்தான் தீக்ஷிதன்...

" என்னால உன்னை இப்படி விட்டுட்டு போக முடியாது... என்னால உன்னை மறுபடியும் இழக்க முடியாது... என்கிட்ட வந்திடு "

" அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கோ... ரெண்டு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்... ஒரு பொண்ணு ஒரு பையன்... பையன் பேரு விக்ராந்த்... பொண்ணு பேரு வைஷ்ணவி " என்றவனை கண்ணீருடன் பார்த்தவள்.. நிலையில்லாமல் அவன் முன் நின்றவளை மனமுகந்து அணைத்து கொண்டான் தீக்ஷிதன்.

அன்று அவள் எதிர்பார்ப்புடன் கூறிய வார்த்தைகள்... இன்று அவன் வாயால் கேட்கும் போது காதல் கொண்ட மனது மீண்டும் ஒரு முறை அவன் மீது மையல் கொண்டது...

பின்னர் இருவரும்... முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்... அந்த புகைப்படத்தை மாறனின் எண்ணிற்கு அனுப்பி வைத்தான்... தீக்ஷிதன்...

தன் வாழ்க்கையை எண்ணி கவலைப்படும் ஒரே ஜீவன் மாறன் என்று அவனுக்கு தெரியாதா என்ன? ...

அந்த போட்டோவை பார்த்தவன்... ஆனந்தமாக புன்னகைத்தப்படியே... அந்த எண்ணிற்கு திருப்பி அழைத்தான்... " அண்ணா... "

" உன் அண்ணா தாண்டா "

" இவ்ளோ நாள் எங்க போயிருந்த... என் மேல உனக்கு என்ன கோவம்... "

" உன் மேல எனக்கு என்னடா கோவம் "

" சரி அதை விடு... மான்சி எப்படி அண்ணா அங்கு... நீ எப்படி அவளை கல்யாணம் பண்ணின... அவள் மேல காதல் வந்துடுச்சா " என்று மாறன் ஆர்வத்துடன் கேட்டான்...

" உண்மையா சொல்லணும்னா தெரியலடா " என்று தீக்ஷிதன் சிரித்தபடியே கூறி மாறனை வெறுப்பேற்றினான்...

மாறனோ அதை கேட்டு பொய் கோவத்துடன்
" உன்கிட்ட போயி கேட்டேன் பாரு .. சரி இங்க எப்போ வருவ "

" மறுபடியும் என்னால அங்கு வரமுடியாது மாறன்... நான் எங்கேயோ இருக்கேன்... நல்லா இருக்கேன்... இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... இது போதும் டா... நீ உன்னை பார்த்துக்கோ அது போதும் " என்றவன் மாறனிடம்... மான்சியை திருமணம் செய்து கொண்ட கதையை பேசி முடித்தான்...

பின்னர் மாறனோ " அடியே சாவித்ரி " என்று சாவித்ரியை தேடி வந்தான்...

அவளோ அங்கு சமைத்து கொண்டிருக்க... அவளை பின்னாடி இருந்து அணைத்தவன்... அடுப்பை ஆப் பண்ணியவாறு... அவளை கைகளில் ஏந்தியவன்... தூக்கி சென்று மெத்தையில் கிடத்தினான்...

" விடு மாறா சமைக்கணும் " என்ற சாவித்ரி எழுந்து கொள்ள முயல... அவளை ஒற்றை கையால் அடக்கியவன் " இன்னிக்கு நமக்கு பஸ்ட் நைட் ஸாரி இது மதியமோ... அப்போ இன்னிக்கு நமக்கு பஸ்ட் அப்டர் நூன் "

" லொள்ளு பண்ணாத மாறா? உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆனால் தான் நம்ம வாழ்க்கையை தொடங்கணும் சொல்லி சொன்ன... இப்போ என்ன... உன் அண்ணா பாசம் எல்லாம் என்ன ஆச்சு? "

" எல்லாம் அப்டியே தாண்டி இருக்கு.. என் உயிர் இருக்க வரை அவன் மேல எனக்கு அன்பு இருக்கும் " என்றவன் மான்சி, தீக்ஷிதன் திருமண புகைப்படங்களை காட்டினான்...

" வாவ் சூப்பர்... அப்போ இனி நீ என் மதியை மன்னிச்சிடுவ தானே... "

" நல்ல மூடுல இருக்கேன். இப்படி நாராசமா பேசி என்னை எரிச்சல் பண்ணாமல் நகர்ந்து படுடி " என்றவனிடன் மீண்டும் அவள் " மதி " என்று ஆரம்பிக்க... அவள் இதழை தன் இதழ் கொண்டு மூடினான்...

அடுத்த நாள் மாறனோ தீக்ஷிதன் கூறியபடியே, தீக்ஷிதன், மான்சியின் கல்யாண புகைப்படத்தை ஊடகத்திற்கு கொடுத்து செய்தி போட சொன்னான்...

அது போலவே " சினிமாவின் காதல் ஜோடிகள் திருமணம் " என்று மான்சி, தீக்ஷிதன் திருமண புகைப்படம் செய்தியாக வந்தது...

அதை பார்த்த ஆதியோ... " வாவ் என்னோட பேவரட் ஜோடி சேர்ந்தாச்சு " என்றவன் அதனை மதியிடம் சென்று காட்டினான்...

அவளோ அந்த புகைப்படத்தை ஆனந்தத்துடன் பார்த்தவள்.. ஆதியின்... நெஞ்சில் சந்தோசத்துடன் சாய்ந்துகொண்டாள்...

மான்சியோ... சமையல் அறையினுள் காபி போட்டு கொண்டிருக்க... அவள் பின்னால் வந்து அவளது தோளில் கைப் போட்ட தீக்ஷிதன் " உனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா ? " என்று கேட்டபடி அருகில் இருந்த கேரட்டை எடுத்து மெல்ல தொடங்கினான்..

" சமைக்க எல்லாம் தெரியாது... காபி மட்டும் போடுவேன்... சமையல் எல்லாம் நீங்க தான் பண்ணனும் " என்றவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்...

" அது சரி.. தள்ளு நானே சமைக்கிறேன் " என்ற தீக்ஷிதன் சமைக்க தொடங்கினான்..

சமைத்து கொண்டிருந்தவனை ஆச்சர்யமாக பார்த்தவள் " லவ் யூ இயக்குனரே " என்று கூற...

" இது எப்போவும் மாறாது " என்றவன் அவளை தன்னோடு சேர்த்தணைத்திருந்தான்...

அவள் மீது அவன் கொண்ட காதலை வார்த்தையில் உரைக்கவில்லை...
ஆனால் வாழ்ந்து உணர்த்தினான்...

என்னுயிரே 'என்னவள் நீயென கண்டேன் '

..... நிசப்த நிலவொலி....


... சுபம்...

கதையை படித்தவர்களுக்கு நன்றி ❤️
 
Status
Not open for further replies.
Top