ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உறவுகள் தொடர்கதை- கதை திரி

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 6
உறவுகள் தொடர்கதை
புதிய உறவாக உடன்பிறவா அண்ணன் கிடைத்த ஆனந்தத்தில் அலைந்து கிடந்தேன். பழக்கம் இல்லாதவன் என்றாலும் அண்ணன் என்ற வார்த்தைக்குள் அவன் அடங்கி விட்டதுமே பல வருடம் பரிட்சயமானவன் போல் தோன்றினான் போலும்.

மறு நாள் அபி அக்கா தன் தீஸிஸ்(thesis) வேலைக்காக கல்லூரி சென்றிருந்தாள். அப்போது அது அறியாமல் பரணி அண்ணா அழைக்க நான் அந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினேன். கிட்டத்தட்ட நாங்கள் இருவரும் அன்று ஒரு மணி நேரம் பேசினோம். புதிய உறவிடம் தயக்கம் இன்றி விரைவிலேயே நெருக்கமான போதே எங்கள் பந்தம் வாழ்வின் எல்லை வரை தொடரும் என்று அன்றே புரிந்தது.

சில நாட்கள் செல்ல செல்ல எங்கள் உறவு பௌர்ணமி நோக்கி நகரும் நிலவைப் போல வளர்ந்து கொண்டே போனது. அபி அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவ்வப்போது இடையில் நான் சென்று பரணி அண்ணனை கலாய்பதும் அதற்கு பரணி அண்ணா தக்க பதிலடி தந்து என்னை சொல்வதறியாது திணர வைப்பதுமாய் சந்தோச பேச்சுகளில் உறவை வளர்த்தோம்.

நான் சொல்வதை சிறிதும் பொருட்படுத்தாத அண்ணனாய் பரணியும் அவனை எல்லாவற்றிலும் அபி அக்காவிடம் போட்டுவிட்டு அண்ணனிடம் அதற்கு திட்டு வாங்கும் தங்கையாய் நானும் இருப்பதே எங்களின் சிறப்பு. சில நாள் செல்ல செல்ல அவ்வப்போது செல்ல சண்டைகள் போட்டுக் கொள்வது எங்கள் உறவின் அழகை இன்னும் சற்று மெருகேற்றி காட்டியது.

இந்த உறவுக்குள் இத்தனை ஆனந்தமா என்று மயங்கி போனேன். நாங்கள் மூவரும் நால்வர் ஆனோம். பரணி அண்ணாவின் நண்பரை ஏற்கனவே அபி அக்காவிற்கு தெரிந்திருந்தது. நாங்கள் சேர்ந்து கும்மிக் கொட்டுவது போதாது என்று போபியோ என்னும் பூவேந்திரனும் சேர்ந்துக் கொள்வார். முதலில் நான் பரணி அண்ணனிடம் பேசுவதைப் போல் பூவேந்திரனிடம் பேசியதில்லை. அவ்வப்போது அக்காவை கேலி செய்ய மட்டும் இருவரும் இணைந்துக் கொள்வோமே அன்றி வேறொன்றும் பேசியதில்லை.

இவ்வளவு தொலைவில் நின்ற உறவு வேகு நாள் கழித்தே அருகில் வந்தது. இருப்பினும் அது செய்த மாயாஜலங்கள் பல. அண்ணன் என்றபோதிலும் இவனையே இக்கதையின் ஹிரோவாக எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற மனிதனை எங்குமே பார்த்திர முடியாது என்று மனதில் தோன்ற வைத்த உயிர். ஆனால் இச்சமயத்தில் அது ஒன்றும் அறியாமல் எங்கள் உறவின் அற்புத நாட்களில் சிலவற்றை பேசாமல் வீணடித்தது போல் ஆயிற்று.

இதற்கிடையில் நிலோ என்ற தோழியின் கதையை நாம் மறந்தே போய் இருப்போம். அள்ள அள்ள குறையா அன்பை அள்ளிக் கொடுக்கும் அவள் தற்சமயம் தன் அன்பை அவளது போசஸ்ஸிவ்(possessive) என்னும் ஆயுதம் கொண்டு எய்தால்.

நான் யாருடனாவது நெருக்கமாக பழகினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் அன்பு தடுத்தது. அப்போது possessive என்னும் சுபாவத்தையே ஏற்க என் மனம் மறுத்தது. அதை அறவே வெறுத்தேன். இருந்த போதிலும் எங்கள் நட்புக்கு பங்கம் வராத வகையில் அவளும் அதை காட்டிக்கொள்ள வில்லை நானும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

எங்களின் நட்புக்கு பல மறக்க முடியா நினைவுகளை உருவாக்கவே நாங்கள் டவுன்ஹாலும் காந்திபுரமுமாக சுற்றினோம். அப்படி ஒரு நாள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது அந்த டப்பாவை நம் நட்பின் அடையாளமாக பத்திர படுத்தி வைக்குமாறு அவள் கூறினால். தாஜ் மஹால் காதலின் சின்னம் என்றால் இந்த ஐஸ்கிரீம் டப்பாதான் எங்களின் நினைவு சின்னம்.

எப்பொழுதும் ஊருக்கு போனவுடன் சொல்லு என்று சொல்லும் நபர்களுக்கு போவதையும் வருவதையும் மறக்காமல் சொல்வது வழக்கம். அதில் நிலோவும் ஒருத்தி. இவ்வாறே பல நாட்கள் சொல்லி செல்ல ஒரு நாள் சொல்ல மறந்தும் போனேன்.

அன்று ஊர் சென்று திரும்புகையில் பரணி அண்ணா பார்க்க வருவதாக சொல்ல காந்திபுரத்தில் இறங்கியதும் அம்மாவிடம் வந்து சேர்ந்ததைச் சொல்லி முடிப்பதற்குள் என் கைப்பேசி ஸ்விட்ச் ஆஃப் (switch off) ஆனது‌. நிலோவிடம் தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஆயிற்று.

அதற்குள் அவள் செய்த அலப்பறைகளை சொல்லி மாலாது. என்னை பற்றி தகவல் தெரியாமல் அவள் தவித்த தவிப்பு இன்று நினைத்தாலும் நெஞ்சை தொடும் நினைவாகவே இருக்கிறது.

என் அம்மாவிடம் நான் கோவை வந்து சேர்ந்ததைச் சொல்லியிருக்க கூடும் என்றென்னினாள் அவள்.ஆனால் துரதிஷ்டவசமாக என் அம்மா நம்பரும் இல்லாமல் போகவே மேலும் கவலைகள் அவள் கண்களைக் கட்டின.

கடைசி முயற்சியாக என்னால் நிலோவிடம் அறிமுகப்படுத்த பட்ட என் பன்னிரண்டாம் வகுப்பு நெருங்கிய தோழிக்கு அழைத்து என் அம்மா நம்பரை பெற முயன்றால். அவளிடமும் இல்லாமல் போகவே மனதின் பாரம் தாங்காமல் அவள் கண்கள் கலங்கின. நிலோ "ஆர்த்தி எங்க போனனே தெரில மா. அவளுக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு" என்று அவள் அம்மா மடியில் படுத்து கதறியிருக்கிறாள்.


(அடுத்து: எனக்கு என்ன ஆனது என்று தெரியாமல் நாள் முழுவதும் பதறி போன அந்த இதயத்துக்கு தகவல் தெரிவிக்காத என் மீது எத்துனை கோபம் இருந்திருக்கும்‌. நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது. அடுத்த நாள் என்னை கல்லூரியில் கண்டதும் அவள் செயல் என்னவாக இருக்கும்.‌.என்னிடம் பேசுவாளா ?இல்லை என்னை ஏசுவாளா? ஏசினாலும் பரவாயில்லை ஏசிவிட்டேனும் பேசுவாளா?)
 
Top