ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருமாற்றம்

Jeyalakshmimohan

New member
Wonderland writer
index.php


என்னுரை

இந்நாவல் தமிழகத்தின் ஒரு கிராம பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அங்கு வளரும் பிள்ளைகளின் கல்வி நிலை பற்றியது. இந்த பேரிடர் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் தங்கள் வேலையை இழந்தனர். ஊரடங்கு முடிந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட்டம் நிறைய சேரும், அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருந்தது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சில மாதங்கள் வகுப்புகள் நடந்தாலும், கொரோனா தாக்கம் குறையாததால் மற்ற வகுப்பு பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை, அதனால் மாணவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. முக்கியமாக கிராம பகுதியில் வாழும் மாணவர்களின் குடும்ப சூழ்நிலை, சமூகம், வறுமை அவர்களை பெரிதும் பாதித்தது.

பள்ளியில் மாணவர்களாக துள்ளித்திரிந்த பிள்ளைகள் இன்று ஒரு குழந்தை தொழிலாளியாக, குடும்ப பாரத்தை சுமப்பவர்களாக, சிறு வயதிலேயே மணப்பெண்ணாக, ஆடு, மாடு மற்றும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்பவர்களாக உருமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நவீன காலத்தில் வளர்ந்து வரும் மாணவ சமுதாயம், தற்போது பத்து இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் தலைகீழாக மாறியுள்ளது. இந்நாவலில் கிராமத்தில் நான் பார்த்த மக்களின் வாழ்க்கை முறை, சூழ்நிலை மற்றும் பள்ளிக்கூடம் இல்லாமல் மாணவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிப்புக்குள்ளானது,கொரோனா தொற்று பரவல் காலங்களில் உரு மாற்றம் அடைந்துள்ளது என்பதை இப்பதிவின் மூலம் தெரியப்படுத்துகிறேன்.

we will see the first part of novel in next post.
 

Attachments

  • uru2.jpg
    uru2.jpg
    108.2 KB · Views: 0
Top