ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரின் தேடல் நீய(டா)டி- கதைதிரி

Status
Not open for further replies.

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 19

இதழின் ஓரம் இரத்த வழிய முகம் சிவந்து வீங்க துவங்கியிருக்க மேலும் இரு கண்களிலும் கண்ணீர் வழிய நின்றிருந்த தன் தோழனும் ‌சகோதரனுமான விக்னேஷின் நிலைகண்டு கண்கள் சிவக்க கத்தியிருந்தான் அபிநந்தன்.. ஆருஷியின் ஆருயிர் தமையன்.‌.‌‌

அங்கு கண்களில் கனல் பறக்க நின்றிருந்த ராம் மற்றும் ரவியைக் கண்டவனுக்கு வியப்பில் ஒருநொடி இருபுருவமும் உயர்ந்தது.. பின் தான் அதிர்ச்சியில் இருந்த விக்னேஷைக் கண்டவனுக்கு அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்தான்...

முதலில் அவனின் காயங்களுக்கு மருந்திட நினைத்தவன் தன் ஆஸ்தான பிஏ விடம்

"கண்ணன் ப்ர்ஸ்ட் ஏய்டு பாக்ஸ் எடுத்துட்டு வாங்க... அப்படியே நம்ம டாக்டர்க்கு கால் பண்ணி வர சொல்லுங்க க்வீக் ..‌ " என அடுக்கடுக்காய் கட்டளைகளைப் பிறப்பித்தவன் மற்ற இருவரையும் முறைத்துக் கொண்டே விக்னேஷை கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தான்...

அபிநந்தனின் முகபாவங்களை கூர்ந்து கவனித்த ரவிக்கு தங்களைக் கண்டதும் ஒரு நொடி வியப்பில் உயர்ந்த புருவங்களைக் கண்டான்... அந்த நொடி இதற்கு காரணம் அவன் தான் என்பதை சரியாக கணித்தவன் சற்று நேரம் நடப்பதை பொறுமையாய் கவனித்தான்...

ஆனால் அதீத கோபத்தில் இருந்த ராமோ தங்கள் பிடியில் இருந்து விக்னேஷை அவன் அழைத்து செல்வதை கண்டவன் இருவரையும் தாக்க வெறியுடன் முன்னேற ரவி அவனின் கையைப் பிடித்து இழுத்தான்... " விடு ரவி அவன் தான் ஸ்ரீ யை நம்ம கிட்ட இருந்து பிரிச்சான் இன்னைக்கு அவனைக் கொல்லாம விடமாட்டேன்..." என அக்ரோஷத்தில் கத்த..

" வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் " என அவ்வறை அதிர அபி கர்ஜிக்க மீண்டும் வாய் திறந்து பேசபோன ராமை தன் கண்களாலே அமைதிப் படுத்தினான் ரவி... தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் திக் பிரம்மை பிடித்தவன் போல் இருந்த விக்னேஷ் கூட அபியின் கர்ஜனையில் தான் சுய நினைவை அடைந்தான்...

கைத்தாங்கலாக அழைத்து வந்த விக்னேஷை ஷோபாவில் அமர வைத்தவன் கண்ணில் கனலுடன் நின்ற ராமின் முன்வந்த அபி தன் முழு உயரத்துடன் நிமிர்ந்து நின்று கைகளைக் மார்புக்கு குறுக்காக கட்டியவன் தன் கண்களில் கூர்மையுடன்
" என்ன சொன்ன ஸ்ரீ ய கொன்னவனை நீ உன் கையால கொல்லனும்...... ரைட்.... அப்போ முதல்ல நீ மேலே போய்.‌‌."என அவன் தன் கையால் மேலே சைகை காட்டி "அப்புறம் அவனுங்களை கொன்னுக்கோ ... " என ஏளனமாய் உரைக்க ராம் ஒரு நொடி புரியாமல் விழித்தான்..
ரவிக்கு புரிந்தாலும் இந்த உண்மை எங்கு எப்படி மறைந்தது என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டுமல்லவா!! அதனால் கேள்வியாய் அபிநந்தனைப் பார்க்க... அதே சமயம் அவனும் ரவியைத் தான் பார்த்தான்...

ரவியை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் அண்ணன் ஆருஷி போல அபிநந்தனும் புத்திக் கூர்மையில் சிறந்துதான் இருந்தான்.

அதற்குள் அந்த அறைக்குள் அனுமதி பெற்று வந்த அபியின் பிஏ மற்றும் டாக்டர் விக்னேஷை பரிசோதித்து காயங்களுக்கு மருந்திட்டவர் ஓய்வெடுக்க சொல்லி வெளியேறினார்... அனைவரும் அபியை கேள்வியாய் பார்க்க அவனோ கண்ணனை நால்வருக்கும் காபி வாங்க வருமாறு அனுப்ப ராம் கோபத்துடன் மறுக்க ரவி அவனை சமாதானம் செய்து அவரை அனுப்பினான்...
அபி நடந்தவற்றை கூறக்கூற மூவரும் திகைத்து விழித்தனர்.... இதில் யாரைக் குற்றம் சொல்லி யாரைத் தண்டிப்பது என்றே ராமிற்க்கும் ரவிக்கும் தெரியவில்லை ..... இதில் தன்னளவு அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாய் விடைபெற எழுந்தனர்..
"ஒரு நிமிஷம் ராம்" என்ற விக்னேஷ் அவனின் அருகில் வந்து "அன்னைக்கு வன்மம் வச்சு நா அப்படி பேசலடா... எனக்கு எப்பவுமே உங்க ரெண்டு பேரையும் ரொம்ப புடிக்கும்.... என்னதான் எனக்கு ஆருஷி அண்ணாவும் அபியும் இருந்தாலும் அவங்க சென்னை வந்ததுக்கு அப்புறம் தனியாத்தான் வளர்ந்தேன் எப்பவுமே உனக்கும் ஸ்ரீக்குமான பாண்டிங் என்ன பிரமிக்க வச்சுது உங்களோட இருக்கணும்னு ரொம்ப ஆசை.... அதான் நா அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேனு நினைக்குறேன்... " என வருந்தி பேச ராம் அவனை இறுக அணைத்து கொண்டான்.

"ஸ்ரீ நம்ம கூட இல்லைனு என்னால ஏத்துக்கவே முடியலடா " என விக்னேஷ் கண்ணீர் சிந்தினான். மற்ற இருவரும் பார்வையாளராகவே இருக்க .. ரவி விக்னேஷின் தோளைத் தொட்டு ஆசுவாசப்படுத்தி சிறு தலையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றனர்.....
------------------------------------------
நள்ளிரவில் நடந்த சம்பவத்தினால் சற்று குழப்பமும் பயமுமாய் இருந்தவளுக்கு ஆதித்யா வெண்ணிற ஒளியூனுள் மறைவதைக் கண்டதும் அவனுக்கு தவறாய்தான் ஏதோ நடக்கிறது என நினைத்துக் கொண்டாள்...

"ரிஷி விடு .. ஆதிக்கு என்னமோ நடக்குது.... அவன காப்பாத்து ...." என அவனிடம் இருக்கும் தன் கையை விடுவிக்க போராட...

தன் மனங்கவர்ந்தவளின் ரிஷி என்ற அழைப்பில் ஒரு நொடி மனம் குளிர்ந்தவன் அவள் தன்னிடம் இருந்து விலக போராடுவதை உணர்ந்து அவளுக்கு நடப்பதை விளக்கும் பொருட்டு

" ஸ்ரீ நான் சொல்றதை கேளு... அவன் போகட்டும் விடு... இது தான் அவனுக்கு நல்லது" என்க...

அவன் கூறுவதை சிறிதும் புரிந்து கொள்ளாதவள் " இல்லை எனக்கு பயமா இருக்கு காலைல நடந்த மாதிரி அவனுக்கு ஏதோ ஆபத்து நா அவன் காப்பாத்தனும் என்னை விடுங்க ....." என போராட... தன் மேல் நம்பிக்கையின்றி தான் சொல்வதை நம்பாமல் செயல்படுவதைக் கண்டவனுக்கு பொறுமை எங்கோ பறந்து போனது.... அந்த அறையின் வெண்ணிற ஒளி முற்றிலும் மறைந்து ஆதியும் அதனுள் மறைந்து போக....

ஸ்ரீக்கு தாம் அருகில் இருந்தும் அவனைக் காக்க முடியாத ஆதங்கம் மொத்தமாய் ஆருஷி மேல் திரும்ப

" உன்னால தான் ஆதித்யா என்ன விட்டு போனான்.. என்னோட இந்த நிலைமைக்கும் நீதான் காரணம்... யூ ஆர் அ ச்சீட்டர்(நீ ஒரு ஏமாற்றுக்காரன்).. எங்கள நம்ப வெச்சு ஏமாத்திட்ட... உன்ன நம்பி வந்ததுக்கு ஆதித்யா வை என்னமோ செஞ்சிட்ட... " என வார்த்தைகளால் அவனின் காதல் கொண்ட உள்ளத்தை வதைக்க அவன் மனம் ஊமையாய் கதறியது...

அவள் கூறியதை நன்றாய் கவனிக்காதவன் தன்னை ஏமாற்றுக்காரன் என்று கூறியதில் ஆத்திரம் மிக "ஸ்டாபிட் ஸ்ரீ .... உன்கூட இருந்தா அவனும் ஆபத்துல மாட்டிப்பான்...உன்னால அவன் ஆன்மாவும் சிக்கல் மாட்டிக்கும்... அவன் வெளிச்சத்திற்கு போகுறதுதான் நல்லது " என ஆத்திரத்தில் வார்த்தையை விட ....

எதிரில் இருந்த ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது.. இதுவரை அவளிடம் இவ்வளவு கடுமையை யாரும் காட்டியதில்லை....எனவே ஆருஷியின் அதட்டலால் தானாய் அவளின் வாய் மூடிக்கொண்டது. இருந்தும் அவன் சொல்லும் உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தாள்...

ஸ்ரீ யின் கலங்கிய விழிகளை கண்ட பின்பே தான் கடுமையாக பேசியதை உணர்ந்தவன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.... பொறுமையாக கூறி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இப்படி ஆத்திரத்தில் போட்டு உடைத்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டான்... என்னதான் உடனிருந்து அவளுடன் பழகவில்லை என்றாலும் அவனுக்கு தெரியும் ஸ்ரீ யின் குணங்கள்.... சமாதானம் செய்ய அவன் அவளருகே செல்ல ஸ்ரீயோ அவனைத் தாண்டி அங்கிருந்த சுவரின் வழியே ஊடுருவி சென்றாள்...

"ஸாரி ஸ்ரீ .. ஏதோ கோபத்துல பேசிட்டேன்... நில்லு ஸ்ரீ " அவன் கூறிய சமாதானங்கள் எதுவும் அவள் செவியை சென்றடையவில்லை.. ஆருஷியும் அவள் பின்னேயே சுவற்றை தாண்டி சென்றுஅவளைத் தடுக்க முயற்ச்சிக்க அவளோ வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர ஆருஷி அவள் பின்னாலேயே சென்றான்....

அவ்வழியே சென்ற சில வண்டிகளையும் மனிதர்களையும் ஊடுருவி செல்ல ஒரு சில நொடிகளில் ஸ்ரீ ஆருஷியின் கண்முன்னேயே மறைந்து போனாள்... தன் கண்முன் கண்ட காட்சியில் அவள் மறைந்து போவதைக் கண்டவன் 'ஸ்ரீ.... ஸ்ரீ .... ' என அழைத்தவை காற்றிலேயே கரைந்து போனது..

சூரியன் வேறு மறையத் துவங்கி இருக்க இருளில் அவளைக் கவர்ந்து செல்லக் காத்திருக்கும் அவளுக்கான ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான்... எங்கு சென்றாள் என குழம்பி ஒருநிமிடம் உலகமே அவனுக்கு தட்டாமாலை சுற்றுவது போல் உணர்ந்தான்.... ஒருவேளை கடற்கரை சென்றிருப்பாளோ என நினைத்தவன் வாய்ப்பிருக்கிறது என அங்கு செல்ல சித்தரின் சக்திகளைப் பயன்படுத்தினான்.....

ஆன்மாக்களுக்கு வெளிச்சத்திற்கான பாதை திறந்து விட்டால் அவர்களுக்கான சக்திகளும் முடிந்துவிடும் அதனால் தான் ஆருஷிக்கு தனியாக எந்த சக்திகளும் கிடையாது சித்தர் அளித்த சக்தியும் அவர் கொடுத்த ருத்ராட்சமுமே அவனை இந்த பூமியில் இருக்க வைத்துள்ளது அதுவும் நான்கு நாட்களுக்கு மட்டுமே... எனில் ஆருஷியும் ஒரு ஆன்மாவா ???? ஆம் அவனும் ஆன்மா தான் அவனுக்கான வெளிச்சப் பாதையும் முன்னாடியே திறக்கப் பட்டுவிட்டது....

இருள் கவிழ துவங்கியிருந்த அந்த ஆள்நடமாட்டம் குறைந்த முன்பு ஸ்ரீயும் ஆதியும் இருந்த கடற்கரைப் பகுதியில் அலையில் தன் ஜீவனை கலக்கவிட்டு ஸ்ரீ கண்களில் கண்ணீர் வழிய கடலை வெறித்தபடி நின்றிருந்தாள்.... இன்னும் இந்த வாழ்க்கை தனக்காக என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் தனக்கிருந்த ஒரே ஆறுதலையும் இழந்து , தான் கண்மூடி தனமாய் நம்பிய ஆடவனும் பொய்த்து போனது என ஆதீத மன அழுத்தத்தில் நிற்காமல் வழியும் கண்ணீரையும் துடைக்க மனமின்றி அவளை சுற்றி நடக்கும் மாற்றங்களை கவனியாது நின்றிருந்தாள்...

மெல்ல மெல்ல இருள் கவ்வ துவங்கியிருந்த வேளையில் கடற்கரையில் அவளிருந்த பகுதி மட்டும் சற்று கூடுதலாக இருள் பரவத் துவங்கியிருந்தது குளிர்ந்த காற்று அவளின் ஆன்மாவை வருடியதில் சுயம் உணர்ந்தவள் மாறும் வானிலையில் மனம் திடுக்கிட பயத்துடனே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள்....

இதேபோல் தான் நள்ளிரவிலும் நடந்தது என உணர அவள் மனமும் ஆன்மாவும் நடுங்க ஆரம்பித்தது... அலைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த தன் கால்களை மெல்ல பிரித்து தரையை அடைய அவளின்
பின்னே 'கர்ர்..... கர்ர்ர்ர்....' என்ற உறுமலில் உயிர் உறைய நடுக்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.....

உயிர் உள்ள எவரேனும் அவ்விடத்தில் இருப்பின் இரத்தம் உறைந்து இதயம் நிச்சயம் தன் செயல்பாட்டை நிறுத்தியிருக்கும்... அவளின் கண்முன்னே அவளை வெறித்தபடி இருந்த மஞ்சள் நிறக் கண்களும் முன்நீண்ட மூக்கில் இரத்தம் பரவியிருக்க அதன் கீழ் சிங்கத்தின் பற்களை போல இருபக்கமும் நீண்ட இரத்தகறையுடன் கூடிய பற்களும் மேலும் சில இரத்தத்துளிகள் வாயிலிருந்தும் வழிய நான்கு கால்களில் நகங்கள் நீண்டு அதன் உடலில் அங்கு அங்கு காயங்களுடனும் இருந்த அந்த ஜந்து நாயா இல்லை ஓணாயா அல்லது இது வேறு ஏதோ வகை அரக்கனா எனும் சந்தேகத்தை தோன்றிவிக்கும் போல் இருந்தது...

ஸ்ரீ அதைப்பார்த்து பயந்து முதலில் அலற வாயெடுத்தவள் என்ன நினைத்தாளோ பின் தன் கைகளைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் மெல்ல பின்னோக்கி கால்களை வைக்க அந்த ஜந்துவின் உறுமல் அதிகமானது...

எப்படி இதனிடம் இருந்து தப்பிப்பது என தெரியாமல் விழித்தவளுக்கு திடீரென அந்த யோசனை எழுந்தது... முதலில் விபத்து நடந்த அன்று திடீரென மறைந்து வர்ஷினியிடம் சென்றது... அதாவது ஸ்ரீ அவளுக்கே தெரியாமல் தன் ஆன்ம சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்...தற்போது கூட கடற்கரை என‌ நினைத்ததும் ஆதித்யா வீட்டிலிருந்து மறைந்து வந்தது என வரிசையாய் நினைத்தவளுக்கு மீண்டும் அதே போல் மறைந்து இங்கிருந்து தப்பிக்கலாம் என நினைத்து முயற்சித்தாள்...

அந்தோ பரிதாபம் முன்னவே தீய ஆன்மாக்கள் அவளை சூழ்ந்து கொண்டதால் அவளால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை... எலும்பை உருக்குவது போன்று குளிரும் கெட்ட அழுகிய வாடையும் அவ்விடத்தை ஆக்கிரமித்தது....

அந்த ஜந்துவோ அவளை நோக்கி முன்னேற இவளுக்கு கண்ணீர் மட்டுமே வந்தது .. மெதுவாய் இவளும் பின் நகர சட்டென அவ்விடம் முழுதும் கருமை பரவி அவளால் எதையும் பார்க்க முடியாமல் போனது....

சிறிது நேரத்திலேயே அம்மிருகம் வேகமாய் அவளின் மீது பாய அவளோ அது தன்னை நோக்கி வருவதை அதன் சத்தத்தை வைத்து உணர்நதவள் இனி தன்னால் இவைகளிடம் இருந்த தப்பிக்க இயலாது என உணர்ந்தவள் பயத்தில் தன் இரு கைகளை மடக்கி தன் முகத்திற்கு நேராய் வைத்தவள் 'ஆ..ஆ... ' என அலறியிருந்தாள்....

ஸ்ரீ யைத் தேடி கடற்கரை வந்தவனுக்கு அந்த நீண்ட இடத்தில் கரைப்பகுதி சந்தடி குறைந்து காட்சியளித்தது.. மனிதர்கள் புழங்கும் பகுதியில் அவள் இருக்க மாட்டாள் ஏனெனில் அவர்கள் அவளை ஊடுருவி செல்லும் போது தடுமாறுவதால் அவ்விடங்களில் அவள் அதிக நேரம் இருக்க மாட்டாள்.... இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டி அவளுக்கான ஆபத்தும் நெருங்கிவிடும் அதனால் ஸ்ரீ எங்கேனும் தென்படுகிறாளா என வேகமாக அவ்விடத்தை ஆராயந்தான்..

அந்த கடற்கரையின் கிழக்கு பகுதியில் ஆட்கள் அவ்வளவாக புலங்காத அவ்விடம் மட்டும் சற்று அதிக இருளாக இருக்க பதற்றத்துடன் அவ்விடம் சென்றான்.

அந்த மையிருளிலும் பாவையின் ஜீவன் ஒருவித பிரகாசத்துடன் அவனுக்கு மட்டும் மின்ன அதே நேரம் இருளில் எதையோப் பார்த்து கைகளால் தன்னை மறைத்து கத்தும் போது தான் அவனும் அங்கு நடக்கும் விபரீதத்தை உணர்ந்தான் விரைந்து செயல் பட்டவன் புயலை ஒத்த வேகத்தில் அந்த இருளைக் கிழித்துக் கொண்டு உள் நுழைந்தவன் அவளைத் தன் கைகளினால் தோளோடு அணைத்தவாறு பிடித்துக் கொண்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தான்....

யாரோ தன்னை அணைத்ததில் முதலில் பயந்தவள் பின் அந்த ஸ்பரிசத்தை யாரென உணர்ந்தவள் அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்... ஏதோ ஒரு வெளிச்சமான இடத்திற்கு வந்த ஆருஷி தன் கையணைவில் இருந்தவளை குனிந்து பார்க்க அதே நேரம் காரிகையவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்....
" ஆர் யூ ஓகே .. ஸ்ரீ" என்ற கேள்வியில் சுயம் தெளிந்தவள் அவனை விட்டு அவசரமாய் விலகி நின்றாள்...
"ஹே... ரிலாக்ஸ்.. " என ஆருஷி அவளை ஆசுவாசப்படுத்தினான்..

தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஸ்ரீயும் ஆருஷியை நோக்கி " நீங்க யாரு ??? என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தானே காரணம் .. அப்புறம் ஏன் என்ன காப்பத்துற மாதிரி நடிக்கிறீங்க ..என்ன சுத்தி என்ன நடக்குதுனு சொல்றீங்களா ... " என்று கேள்விக் கணைகளை சற்று கோபமாக கேட்டாள்... ஆருஷிக்கோ அவளின் கேள்வியில் 'என்ன அவளோட இறப்புக்கு நான் தான் காரணம்னு எப்படி தெரிஞ்சது 'என குழப்பமான மனநிலையில் சற்று திகிலுடன் ஸ்ரீ யைப் பார்த்தான்...

கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... 👇👇


என்றும் அன்புடன்
உங்கள்
AnuCharan
 

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 20

மூன்றாண்டுகள் கடும் உழைப்பினால் சென்னையில் வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தான் ஆருஷி.

கடிவாளமிட்ட குதிரை போல் அவனுக்கு உறங்கும் நேரம் தவிர மற்ற பொழுதுகளில் எல்லாம் பிஸ்னஸ் தான்... அவனின் வளர்ச்சியில் பெற்றோர்கள் மகழ்ந்தாலும் இந்த வயதிலேயே இப்படி ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதில் மிகப் பெரிய வருத்தம் இருந்து கொண்டே இருந்தது அதனை ஆருஷியிடம் எடுத்துரைக்கவும் செய்தனர்.

அதனால் வருடத்திற்கு பத்து நாட்கள் ஓய்வு எடுப்பது போல வீட்டில் காட்டிக் கொண்டு கோவை சென்றுவிடுவான்... அங்கு நான்கு நாட்கள் தன் பள்ளி கால நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அடுத்தடுத்த நாட்களில் எல்லாம் சித்தப்பா (விக்னேஷின் அப்பா) செய்யும் தொழில்களில் உதவி செய்வதோடு அவரின் அனுபவங்களையும் உடன் இருந்து கற்றுக் கொள்வான் ‌..இந்த விசயம் அவனின் பெற்றோர்களுக்கு தெரிந்தாலும் கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.....

இப்படியான நாட்களில் தான் வெளிநாட்டவருடனான புது டீலிங்கான அறிவிப்பு வந்தது.. அது சற்று பெரிய புராஜெக்ட் ஆனால் லாபமோ ஆருஷி வருடத்தில் நான்கு புராஜெக்ட் முடித்தால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம்... எனவே ஆறுமாதம் கடுமையான உழைப்பின் பயனாக அந்த டீலிங்கை வெற்றிகரமாக முடிப்பதற்கான அத்தனை வேலைகளையும் முடித்திருந்தான்..

அந்த மாதத்தின் இறுதியில் அனைவரின் கருத்துகளும் கலந்தாலோசிக்கப்பட்டு அதில் சிறந்த கம்பெனிக்கு புராஜெக்ட் தருவதாக அந்த வெளிநாட்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது..... சென்னையிலேயே முன்னிலையில் இருந்த மற்றொரு நிறுவனமான கே.கே குரூப்ஸ் ஆஃப் கம்பெனி அந்த புராஜெக்ட் தனக்கே வேண்டுமென மற்ற போட்டி நிறுவனங்களை விலைபேசி அந்த இறுதி மீட்டிங்கிற்கு வரவிடாமல் செய்திருந்தனர்..

ஆருஷியிடமும் அதேபோல் விலை பேச அவனோ மறுத்து போட்டியில் பங்கு பெறுவதாக கூறினான்.... கேகே குரூப்ஸின் உரிமையாளனான வருண் கிருஷ்ணன் ஆருஷியின் மொத்த விவரங்களையும் அறிந்து அவன் இந்த மீட்டிங்கில் பங்கு பெற்றால் நிச்சயம் இந்த புராஜெக்ட் தன் கைவிட்டு போய்விடும் அதுமட்டுமின்றி இதுவரை நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தன் கம்பெனி அதையும் இழக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தான்

பல்வேறு விதமாக ஆருஷிக்கு தொல்லைகள் தர பொறுத்துப் பார்த்தவனும் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவனை நேரில் சந்தித்து சமாதானம் பேசினான்.... வருணும் அந்த புராஜெக்ட் பெறுவதில் உறுதியாய் இருக்க ஆருஷி பொறுமையாய் " இருவரும் பங்குபெறுவோம் யாருடைய பிளான் அவர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்களுடையதை தேர்வு செய்யட்டும் .... இதில் நாம் தனிப்பட்ட விதத்தில் மோத என்ன இருக்கிறது" என பொறுமையாய் எடுத்துரைக்க இறுதியில் வருண் ஆருஷியின் பிளானிற்கு விலைபேசும் அளவு வந்துவிட்டான்..

அடுத்தவர்கள் உழைப்பைத் திருடும் அளவிற்கு அவன் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதில் இனி இவனால் நமக்கு நிச்சயம் தொந்தரவு இருக்கும் என எண்ணிய ஆருஷி அவனின் ஆணிவேர் வரை தெரிந்து கொள்ள நினைத்தான்..

ஆருஷிக்கு எப்போதும் ஒரு பழக்கம் தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி தமக்கு தொல்லை கொடுப்பவர்களிடம் முதலில் பொறுமையாய் சமாதானமாக பேசுவான் அதனை கேட்டுக் கொண்டால் தப்பிப்பர் இல்லையெனில் அவர்களின் அடிவேர் வரை தோண்டி அந்த குழியில் அவர்களையே இறக்கிவிடுவான் ..‌‌ பின் அவனிடம் கெஞ்சினாலும் வேலைக்காகாது....

வருண் கிருஷ்ணன் தொழில் சிலபல குளறுபடிகள் செய்தாலும் பெரிதாக அவனை மாட்ட வைப்பதற்கு எதுவும் இல்லை... ஆனால் அவனின் பெரிய வீக்னெஸ் பெண்கள்..அவனே தனக்கான பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும் கட்டாயப்படுத்தி தனக்கு ஒத்துழைக்க வைப்பான்.. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சென்றால் தன் பணபலத்தின் மூலம் கேஸை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவான். அவனால் இதுவரை இரண்டு மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்....அதோடு சில நேரங்களில் போதைவஸ்துகளும் பயன்படுத்துவது தெரிந்தது...

பொதுவாகவே ஆருஷி தன் எதிரிகளை தொழில் மூலமாக அடிப்பான் யாருடைய சொந்த வாழ்க்கையிலும் தலையிட மாட்டான்.. ஆனால் வருண் விசயத்தில் அவனால் அதைக் கடைபிடிக்க இயலவில்லை பெண்களை பெரிதும் மதிப்பவன் இப்படியொருவனின் முகத்திரையை சமூகத்தின் முன் பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி அதற்கான எல்லா ஆதாரங்களையும் திரட்டினான் ..

புது புராஜெக்டின் மீட்டிங்கிற்கு இன்னும் ஒரு வாரம் இருந்த நிலையில் அன்று அபியும், விக்னேஷும் படிப்பு முடிந்து சென்னை வரவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்துவிட்டு ஆபிஸில் இருந்து வீடு திரும்பினான்... தன் கார் பழுது என்று விக்னேஷ் இங்கிருக்கும் வரை பயன்படுத்திய காரை எடுத்துவந்திருந்தான் ...

வேலைப்பளுவில் மதிய உணவை மறந்திருந்தவன் வழக்கமாக உணவு எடுத்துக் கொள்ளும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றிருந்தான்...எப்போதும் போல் உணவை உண்டு முடித்தவனுக்கு அலைப்பேசி ஒலியெழுப்ப அபியிடம் இருந்து கால் வந்திருந்தது அவனிடம் பேசிக்கொண்டே அவனுக்கான லெமன் ஜூசைக் குடித்தான்....

அலைப்பேசியில் பேசாமல் குடித்திருந்தால் அதன் சுவை வேறுபாட்டை உணர்ந்து நடக்கும் விபரிதத்தை தடுத்திருக்கலாம் ஆனால் அவனின் கவனம் சிதறியிருக்க முழு ஜூசையும் குடித்திருந்தான்...உணவிற்கான தொகையை செலுத்திவிட்டு காரில் வந்தவனுக்கு சிறிது நேரத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது....

தன்னைப் பற்றிய ஆதாரங்களை ஆருஷி சேகரித்து வைத்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட வருண் அவனைத் தடுக்க நேரடியாக மிரட்ட சிறிதும் பயமின்றி "இந்த புராஜெக்டை உன் கண் முன்னே பெற்று அதன் பின்பு இந்த சமூகத்தின் முன் உன் முகத்திரையை கிழிப்பேன்"என சவால் வேறு விட்டிருந்தான் ஆருஷி.

வருண் சமூகத்தில் நல்ல பெயரோடு இருப்பவன் நாளை இந்த விசயம் வெளியில் வந்தால் பெரிய அசிங்கம் என உணர்ந்தவனுக்கு அவனின் பேச்சுகள் தூபம் போட எந்தவொரு விசயத்தை தனக்கு செய்ய நினைத்தானோ அதையே அவனுக்கு திருப்பித் தர வேண்டும் என்று நினைத்தான் ..

தன் திட்டத்தை செயல்படுத்த இருபத்தி நான்கு மணி நேரமும் அவனை ஃபாலோ செய்து அவன் குடிக்கும் ஜூஸில் போதை மருந்தை கலக்கி இருந்தான் அத்தோடு நில்லாமல் ஆருஷியின் காரின் பிரேக் பழுது ஆவது போல் செட் செய்திருந்தான்... போதையில் கார் ஓட்டியதால் விபத்து என‌ அவனுடைய பெயரைக் கெடுப்பதே வருணின் நோக்கம்..

இதுவரை மதுபானம் சிகரட் என எந்த தீயப் பழக்கங்களையும் தொட்டு கூட பார்த்திராதவன் உடலில் கலந்த போதை வஸ்துவால் முற்றிலும் நிதானம் இழந்துதான் போனான்.... காரை நிறுத்த முயற்சி செய்ய அந்நேரம் பார்த்து வண்டியின் பிரேக் வேறு செயலிழந்தது....

நடக்கும் விபரீதத்தை உணர்ந்தும் உணராமலும் போதை நிலையில் இருந்தாலும் இத்தனை வருடங்கள் கார் ஓட்டி பழக்கமானதில் அவனின் கை மற்றும் கால்கள் சற்று நிதானத்துடனே காரினை இயக்கிக் கொண்டிருந்தது...

இருந்தும் முதல்முறை உடலில் கலந்த போதைவஸ்து அவன் உடலில் வீரியத்துடன் செயல்பட ஆரம்பித்து இருக்க சிறிது நேரத்திலேயே முற்றிலும் நிதானத்தை இழந்திருந்தான்.....

கடினப்பட்டு ஓட்டியவன் எவருக்கும் பாதிப்பு வராமல் நிறுத்த ஆள் நடமாட்டம் குறைந்த அந்த ஒரு வழிப் பாதையில் காரினை செலுத்தினான்....

அதற்கு முன்பே தன் மொபைலில் வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்திருந்தவன் வருண் பற்றி முழுவதும் கூறிவிட்டு "எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு அந்த வருண் தான் காரணம் அபி அவன சும்மா விட்டுடாத.... " என்று போதையில் உளறிக் கொண்டு இருக்கையிலேயே அவன் கண்கள் சொருக ஆரம்பிக்க "அபி என்னால கன்ட்ரோல் பண்ண முடியலடா ... "என்றான் உள்ளே போன குரலில்.....

அவனின் உடல் சிறிது சிறிதாக கட்டுப்பாட்டை இழந்து தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியிருக்க வண்டி வேகமெடுத்தது தாறுமாறாக ஓடிய காரில் சட்டென ஏற்பட்ட அதிர்வில் மீண்டும் கண்களை திறந்தான் ஆருஷி... வெளியில் இருந்து பார்ப்பவருக்கு கார் வேகமாக செல்வதுபோல் தான் தெரியும் ஏனெனில் ஆருஷி முடிந்தமட்டும் காரை சீராய் செலுத்தினான்....

அந்த வழியே வந்த ஸ்ரீ யின் வண்டியில் மோதியதில் ஏற்பட்ட தீடீர் அதிர்வு அவன் கவனத்தில் பதியாமல் இருந்தாலும் ஆருஷி ஆன் செய்து வைத்திருந்த ரெக்கார்டரில் அந்த சத்தமும் தெளிவாய் பதிவாகி இருந்தது... அந்த பாதையின் முடிவு நெடுஞ்சாலையை அடைந்திருக்க மீண்டும் பேச ஆரம்பித்தான்...

"அபி நம்ம அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோடா.... அவங்களை தனியா விட்டுடாத " என நாகுழற கூறினான்...

ஏனோ அவனுக்கு சிறிதும் நம்பிக்கையில்லை சுயநினைவில் இருந்திருந்தால் நிச்சயமாக தன்னைக் காக்க ஏதேனும் முயற்சி செய்திருப்பான்.... தன்னவளின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்ததை உணர்ந்தானோ என்னவோ தன்னைக் காக்கும் மார்க்கத்தையும் கைவிட்டான்...

வருணைப் பற்றி தான் சேகரித்த ஆதாரங்கள் இருக்கும் இடத்தைக் கூறியவனுக்கு தற்போது முழு மயக்கம் ஏற்பட்டு இருந்தது....

அடுத்தடுத்த சில நொடிகளிலேயே எதிரில் வந்த கன்டெயினர் மீது அவனின் கார் தாறுமாறாக மோதியிருக்க தனக்கு என்ன நிகழ்கிறது என்று அறியாமலேயே உயிரை விட்டிருந்தான்....

அன்று நள்ளிரவில் சென்னையை அடைந்த அபிநந்தனையும் விக்னேஷையும் தன் அண்ணனான ஆருஷியின் மரணமே வரவேற்றது...விசயம் கேள்விப்பட்டு மருத்துவமனை அடையும் முன்பே அவனின் பெற்றோர்கள் அங்கு சூழ்ந்திருந்தன.... கண்ணீருடன் அபி மற்றும் விக்னேஷை கட்டிக் கொண்டு அவர்களின் அன்னை கதற இருவரும் எவ்வாறு ஆறுதல் சொல்வது என தெரியாமல் விழிகளில் வழியும் தண்ணீருடன் நின்றிருந்தனர்...

சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்ட அபி விக்னேஷை பெரியவர்களுக்கு துணையாய் இருக்க வைத்துவிட்டு தன் அண்ணனின் விசுவாசியான பிஏ கண்ணனை அழைத்து விசாரிக்க விபத்தைத் பற்றிய முழு விவரமும் அறிந்து கொண்டான்..

மேலும் "போதையில் வண்டி ஓட்டியதால் கன்டெய்னரில் மோதி பிரபல தொழிலதிபர் சாவு" என அடுத்தநாள் வரவிருந்த செய்தியை தன் பத்திரிக்கை நண்பனின் மூலமாக அறிந்து கொண்ட அபிக்கு இரத்தம் கொதித்தது.... அவனுக்கு தான் தன் அண்ணனைப் பற்றி தெரியுமே... நிச்சயம் இதில் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தவன் முதலில் இந்த செய்தியை மாற்ற எண்ணி தன் இன்னொரு நண்பனின் தந்தை அரசியலில் இருப்பதால் அவனின் உதவியை நாடி ஒரு நாள் இரவில் அனைத்தையும் மாற்றியிருந்தான்....

அதில்தான் ஆருஷியால் ஏற்படுத்தப்பட்டு இருந்த விபத்தைத் பற்றியும் தெரிந்து கொண்டவன் அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் முழுவிவரமும் அறிந்து அதனை சாதா விபத்து போல் மாற்றியிருந்தான் இதில் ஸ்ரீயின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கையிலேயே ரவியைப் பற்றித் தெரிந்து கொண்டவனுக்கு நிச்சயம் அவன் தன்னை தேடி வருவான் என்பதில் உறுதியாய் இருந்தான் ... இறுதியில் அதேபோல் தான் நடந்ததும்...

காவல்துறையிலிருந்து ஸ்ரீ விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் வரை அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி அமைத்து சாதாரண விபத்து போல் செய்திருந்தான் இவை அனைத்திலும் ஆருஷியின் பிஏ உடனிருந்து உதவி செய்தார்...

அனைத்தும் முடிந்து அபி வீட்டிற்கு வர அங்கு நடு ஹாலில் முகம் மட்டும் தெரிய உடல் முழுதும் வெண்ணிற துணியால் மூடப்பட்டு கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப் பட்டிருந்த ஆருஷியைக் கண்டு துக்கம் தொண்டையை அடைக்க அருகில் சென்று தன் கைகளால் அந்த கண்ணாடிப் பெட்டியைத் தடவினான் அபி....

இங்கிருந்து வெளிநாடு செல்கையில் ஏர்போர்ட்டில் கம்பீரமாய் தன்னை வழியனுப்பிய அண்ணனின் காட்சி கண்முன்னே வர அவனுக்கு எதிரில் இருந்த உருவங்கள் கண்ணீரினால் மூடப்பட்டது.... விக்னேஷ் ஓடிவந்து அபியைக் கட்டிக் கொண்டு அழ அவனாலும் தாங்க இயலாது கண்ணீர் வடித்தான்...ஆருஷிக்கான இறுதி சடங்குகள் முடிய இரண்டு நாட்கள் கழித்து விபத்தான கார் மற்றும் இதர பிற ஆருஷியின் பொருட்களும் அபியிடம் ஒப்படைக்கப்பட்டது....

அதில் செயலிழந்திருந்த ஆருஷியின் மொபைலை சரிசெய்து பரிசோதித்தவனுக்கு அவன் கடைசியாய் பயன்படுத்திய ரெக்கார்டரை ஓபன் செய்ய அதில் அவன் பதிவிட்டிருந்த வாய்ஸ் மெஸேஜைக் கேட்டான்...அனைத்தையும் கேட்ட அபியின் முகம் இறுகிப் போனது....

நடந்த உண்மைகளை அறிந்தவன் தன் அண்ணனின் ஆசையான அந்த வெளிநாட்டு புராஜெக்ட்டை கடினப் பட்டு வருண் முன் பெற்றதோடு அவன் விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழிக்க ஆரம்பித்தான் ...இதை விக்னேஷிற்கு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டான்..
இறுதியில் இதற்கு எல்லாம் மூலக் காரணமான வருணனை தேடுகையில் அவன் அபிக்கு பயந்து வெளியூரில் பதுங்கிக் கொண்டான்...

ஏனெனில் மீட்டிங்கின் போதே அபியின் பார்வையில் ஆருஷியின் மரணத்தில் தனக்கு சம்பந்தம் இருப்பது அவனுக்கு தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் அத்தோடு அவனின் ஆட்கள் ஒவ்வொருவராய் மர்மமான முறையில் மரணமடைவதையும் அறிந்த வருண் தன் உயிரைக் காக்க தலைமறைவாகி விட்டான்....

வருணைத் தேடிக் களைத்த அபி புது புராஜெக்டில் கவனம் செலுத்தியிருந்த சமயத்தில் ஒருநாள் காலை "பிரபல தொழில் அதிபர் வருண் கிருஷ்ணன் வால்பாறை சொகுசு பங்களாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்"என்ற செய்தியே வந்தது.... இதைக் கேட்ட அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை....

அவனோ விக்னேஷை வைத்துக் கொண்டு முழுநேரமும் தொழில் மற்றும் குடும்பம் என மிகவும் பிஸியாய் இருந்ததில் ரவியை மறந்தே போயிருந்தான்..
அந்த சமயத்தில் தான் நூல் பிடித்து ராமும் ரவியும் அபியை நெருங்கியிருந்தனர்...

-------------------------------------------
லேட்டா யூடி போடறதுக்கு முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க மக்களே:rolleyes::)...சொந்த வேலைப் பளுவினால் தாமதமாகிவிட்டது.....

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇

 

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 21அரசு அளித்திருந்த குவார்ட்டர்ஸ் மொட்டைமாடியில் அமர்ந்து அபிநந்தன் கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ராமிற்கும் ரவிக்கும் தோன்றியது எல்லாம் விதி வலியது என்பதே ....இதில் அப்பாவியாய் மாட்டி பலியான ஸ்ரீ க்கு எந்தவிதத்தில் நியாயம் செய்வது என அறியாமல் இருவரும் இருள் கவ்விய அந்த தொலைதூர வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..நீண்ட நெடிய அந்த மௌனத்தை உடைத்த ரவி "ராம் நாளைக்கு நீ ஊருக்கு கிளம்பு .... வீட்ல கேஸ் பத்தி ஏதும் கேட்டாங்கன்னா இது விபத்துனு சொல்லிவிடு... " என்க .."சரி ரவி... இனி நீ இங்க என்ன செய்ய போறீங்க ... பேசாமல் நம்ம ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துரு" என மெல்ல வினவினான் ராம்..."அதுக்கு கொஞ்சநாள் ஆகும் ராம்.‌ அதுவரை நான் இங்க இருக்கணும்... இப்போதைக்கு நம்ம குடும்பத்துக்கு நீ ரொம்ப தேவை ... உன்னால மட்டும் தான் அவங்களை பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும்.... "என்றான் ...அவன் சொல்வதும் சரியே... ராம் ஸ்ரீ இருவரும் இருந்தால் அந்த இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது...ஸ்ரீ யின் இழப்பிலேயே அனைவரும் மூழ்கி இருந்தால் மிச்ச வாழ்க்கையும் சோகத்திலேயே கழிந்துவிடும் எவரேனும் ஒருவராவது அவர்களை பழைய நிலைக்கு திரும்ப வைக்க முதல் படி எடுத்து வைக்க வேண்டும்... அது நிச்சயம் ராமால் மட்டுமே முடியும் என்பதில் ரவி உறுதியாய் இருந்தான்....எனவே அடுத்த நாளிலேயே அவனை பொள்ளாச்சி அனுப்பி வைத்திருந்தான்...----------------------" என் பேத்தி உனக்கு என்ன பாவம் செய்தாள்.. ஏன் அவளோட வாழ்க்கையை இப்படி பாதியிலேயே முடித்து வைத்தாய் சொல்லு... இதுவரை உன்னை கடவுளாய் நினைத்து பூஜித்த எங்களுக்கு நீ உண்மையிலேயே கல் தான் என்பதை உணர்த்திவிட்டாய்.... உன்னைப் போய் என் பேத்தி நம்பி நிதமும் உன்ன தொழுதாலே அதற்கெல்லாம் கிடைத்த பரிசுதான் இதுவா " என மானசீகமாய் தன் மனதின் ஆற்றாமையை மௌனமாய் மொழிந்து கொண்டு...

அந்த சிவன் சன்னிதானத்தில் இருந்த சிவலிங்கத்தை வெறித்துக் கொண்டிருந்தார் வள்ளி (ஸ்ரீயின் பாட்டி)...ஸ்ரீ மற்றும் சுந்தரத்தின் மரணத்திற்கு பிறகு உயிரற்ற நடைபிணமாகத் தான் இருந்தார் இன்று வற்புறுத்தி அவரின் பேரன்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்...அவ்வழியிலேயே சிவன் கோவில் இருக்க அதனுள் நுழைந்திருந்தார்...எங்கோ கேட்ட மணியோசையில் தன்னுணர்வு பெற்றவர் லிங்கத்தின் மீதான பார்வையை விலக்க அவரின் அருகிலேயே குருஜி சோகம் அப்பிய முகத்துடன் பரிதாபமாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.... குருஜியை பார்த்தவுடன் அவருக்கு நினைவு வந்ததெல்லாம் ஒருமுறை ஸ்ரீ க்கு வரன் பார்க்கலாமா என கேட்க சென்ற அன்று ஸ்ரீ யின் ஜாதகத்தைப் பார்த்து அவரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே...அந்த சம்பவத்திற்குப்பின் வள்ளி பாட்டி பல முறை சென்று அவரிடம் உண்மையை கூற சொல்லி கேட்க அவரோ எதுவும் கூற மறுத்து விட்டார்....அதனை நினைவு கூர்ந்தவராய் தன் கூர்மையான பார்வையால் நோக்கினார் வள்ளி பாட்டி...

"அப்போ உங்களுக்கு இதெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரிந்து உள்ளதே சரியா.. " என நேரடியாக விசயத்திற்கு வர...குருஜி தெரியும் என்பது போல் தலையசைத்தவர்... சன்னிதானத்திற்கு அருகில் இருந்த திண்ணையில் அமர அவரை அழைத்து சென்றார்.."நீங்கள் முன்னாடியே இதைப் பற்றி எங்களிடம் தெரிவித்திருந்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்தேனும் ஸ்ரீயைக் காத்திருப்போம்... ஏன் இப்படி எங்ககிட்ட இருந்து மறைத்தீர்கள். உங்கள் மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது "என கண்ணீருடன் ஆதங்கமாய் வினவினார்...குருஜி " விதியை யாராலும் மாற்ற இயலாது அம்மா... நீங்கள் என்ன முயற்சி செய்து இருந்தாலும் ஸ்ரீயை காப்பாற்றியிருக்க இயலாது... என்ன நடக்க வேண்டுமோ அது கட்டாயம் நடந்தே தீரும்...

உங்கள் பேத்தி ஒரு அதிசய குழந்தை அவளின் உடல் உங்கள் வம்சத்தில் உருவாகி இருந்தாலும் அவளின் ஜீவன் அரக்கனை அழிக்கும் சக்தி வாய்ந்தது..."என்றவர்

ஸ்ரீ யினது பிறப்பு ரகசியத்தை வள்ளி பாட்டியிடம் கூறினார்...அவர் கூறியதை கேட்டவருக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வர மறுத்தன...மேலும் தொடர்ந்த குருஜி "அவளுடைய உடல் வேண்டுமானால் அழிந்திருக்கலாம் ஆனால் அவளின் ஜீவன் இன்னும் இவ்வுலகை விட்டு செல்லவில்லை.... அதற்கான நேரமும் வர வில்லை... அனைத்தும் சரியானதும் அவள் உங்களிடமே வந்து சேருவாள்... நம்பிக்கையுடன் அந்த சிவபெருமானே கதி என தொழுது வாருங்கள்... நல்லதே நடக்கும் ... " என்றவர் மேலும் சில முக்கியமான விடயங்கள் அவரிடம் கூறியவர் அதன்படி செய்ய சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.. ...வள்ளி பாட்டிக்கு அவரிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருப்பினும் அவர் கடைசியாக கூறிய செய்தி சற்று மனத் தெளிவை அளித்தது..மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை மனதில் கணக்கிட்டவர் வீட்டை நோக்கி சென்றார்...

----------------------ஆருஷி தனக்கு நடந்தவற்றை கூறி முடிக்கையில் ஸ்ரீயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...."ஸாரி ரிஷி ... உன்ன ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்... எதிர்பாராம நடந்த விபத்துக்கு நீ என்ன பண்ணுவ... ஆமா அந்த வருண் எப்படி இறந்தான்..." என்றதும் அவனுக்கு அன்றைய இரவு நினைவுக்கு வந்தது..." தன் மரணத்தை முதலில் ஏற்றுக் கொள்ளாத ஆருஷி ...ஆக்ரோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாது தன் உயிரற்ற உடலின் அருகிலேயே இருந்தான் ...அங்கு தன் உறவுகள் கதறுவதை பார்த்தவனுக்கு தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனை தடம் தெரியாமல் அழிக்கும் வெறி அதிகமானது...ஆனால் அபிநந்தன் சமயோஜிதமாய் செயல்படுவதை பார்த்தவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது... இனி அவன் தன் குடும்பத்தையும் தொழிலையும் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கையில் தன் மரணத்திற்கு காரணமான வருணைத் தன் கையாலேயே கொல்ல நினைத்தான்...தன் ஆன்ம சக்திகள் மூலம் அவனின் இடத்தை ஒரு நிமிடத்தில் அடைந்தவன் அந்த சொகுசு பங்களாவில் அவன் உடல் முழுதும் காயத்தை ஏற்படுத்தி மாடியில் இருந்து குதிக்க வைத்திருந்தான்...ஆக்ரோஷமான ஆன்மாக்களால் தன் இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இயலும் என்பதை ஆருஷி நன்கு உணர்ந்திருந்தான்...அதற்கு மனவலிமை மிகவும் அவசியம்.. அவனின் மரணத்தை தன் கண்கூடாக பார்த்தவனுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.. அதன்பின்னரே அவனுக்கான வெளிச்சப்பாதை திறக்க அதனுள் செல்ல வேண்டியவனை சித்தர் தன் சக்திகள் மூலம் தடுத்திருந்தார்...அவனோ ஒரு நிமிடம் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு 'உண்மையை சொல்லுவோமா ...வேணா இப்பதான் கொஞ்சம் மலையிறங்கி இருக்கா மறுபடியும் எதும் சொல்லி கோவிச்சுக்கிட்டு போயிட்டா... இப்பவே சென்டிமென்ட்அ வச்சு தான் கவர் பண்ணிருக்கேன் ' என பலவாறு சிந்தித்தவன்..."தெரியல ஸ்ரீ ... ஆமா ரிஷி ரிஷி னு சொல்றியே அது யாருனு தெரிஞ்சுக்கலாமா " என பேச்சை மாற்றியவன் கேலியாய் ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவ ,அவன் அழகில் ஒரு நிமிடம் சொக்கி தான் போனாள்.. அவன்பால் மயங்கி துவங்கிய மனதை கட்டுப்படுத்தியவள் குரலை செருமிக் கொண்டே"அதானே உங்க பேரு " என்க .. அவனோ "என்னோட பேரு ஆருஷினு சொன்ன மாதிரி நியாபகம்" என தாடையில் கைவைத்து யோசிப்பதுபோல் பாவனை செய்தான்...அவன் சொன்ன பாணியில் அசடு வழிய சிரித்தவள் "எனக்கு ரிஷினுதான் கேட்டுது.. வேணாம்னா சொல்லுங்க இனி ஆரு....ஷினே கூப்புடுறேன் " என இழுத்து சொல்ல ஆருஷியோ வேகமாக மறுத்து"நீ ரிஷினே கூப்பிடலாம் " என்றான்... எளிதில் அவனுடன் ஒட்டியதை எண்ணி ஸ்ரீக்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது அவன் பெயர் சொன்ன கணமே அவள் மனதிற்கு ரிஷியாகவே பதிந்து போனான்...அவர்கள் கடற்கரைக்கு மறுகோடியில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க அந்த தெருவிளக்கு விட்டு விட்டு எரிய ஆரம்பித்து இருந்தது....தீடீரென அந்த பகுதியில் அதீத குளிர் பரவ ஆரம்பித்து இருக்க அவ்விடமே அழுகிய வாடையில்

நிரம்ப ஆரம்பித்தது...இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்ள அந்நேரம் விட்டு விட்டு எரிந்த தெரு விளக்கு முழுதும் தன் உயிரை விட்டிருந்தது... அந்த கும்மிருட்டிலும் ஸ்ரீ ஆருஷி இருவரின் கண்கள் மட்டும் நீல நிறத்தில் ஜொலிக்க மேலும் இரு ஜோடி கண்கள் இரத்தமென பளபளத்தது...நிலைமையின் வீரியத்தை உணர்ந்த ஆருஷி ஸ்ரீயின் கைகளை பிடித்துக் கொண்டு "ஸ்ரீ அந்த பிசாசுங்க வந்துருச்சு ‌.... என்னை கெட்டியா பிடிச்சுக்கோ .. அப்போதான் அதுங்கிட்ட இருந்து தப்பிக்க முடியும் " என வேகவேகமாக கூற ஸ்ரீயும் ஆருஷி கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்...சித்தரின் சக்திகளைப் பயன்படுத்திய ஆருஷி ஒரு நிமிடத்தில் சென்னையின் மேம்பாலத்தின் மீது இருந்தான்...நள்ளிரவு ஆனதால் போக்குவரத்து குறைவாக இருக்க நடுரோட்டில் இருவரும் நின்றிருந்தனர்..." ஸ்ரீ நாம ஒரே இடத்துல இருந்தா அந்த பிசாசுங்க நம்ம சுலபமாக கண்டுபிடிச்சுரும்... அதனால அடிக்கடி நம்ம இடத்தை மாத்திக் கொண்டே இருக்க வேண்டும்.... " என்க ஸ்ரீயும் வேகமாக தலையசைத்தவள் ஆருஷி கைகளை மட்டும் விடவே இல்லை..அவளோ " ரிஷி இதுங்க எல்லாம் ஏன் என்ன பயமுறுத்துதுங்க ...அதான் என்னோட உயிரே போயிருச்சே அப்புறம் என்கிட்ட இருந்து இதுங்களுக்கு என்ன வேணும்.... " என கேட்டாள்...ஆருஷி "அதபத்தி இப்போ என்னால விரிவா சொல்லமுடியாது ஸ்ரீ அதுங்க மறுபடியும் நம்மல கண்டுபிடிக்கும் முன்னே இங்கிருந்து போகணும் .. என்னால சித்தரோட சக்திகளையும் அதிகம் பயன்படுத்த முடியாது . அப்படி செய்தால் நான் சீக்கிரமே வெளிச்சப் பாதைக்கு போயிருவேன்...அதுக்கு முன்னே உன்ன வெளிச்சத்திற்கு அனுப்பனும்..உன்னோட ஆன்மா சக்திகளை பயன்படுத்தலாம்னா நீ மனசலவுள ரொம்ப வீக் .. இடம் மாறுவதற்கு அதுவும் ரெண்டு பேரு எல்லாம் மறைய நிறைய மனவலிமை வேணும்.. " என கவலையாய் வினவ..ஸ்ரீ " என்னால முடியும் ரிஷி முன்னாடி ரெண்டு தடவை நான் மறைஞ்சு போயிருக்கேன்." என வர்ஷினியைப் பார்க்க சென்றது மற்றும் ஆருஷி விடம் சண்டையிட்டு வந்தது என இருநிகழ்வுகளையும் விளக்க ," இல்ல ஸ்ரீ அது எல்லாம் நீ உணர்ச்சிவசத்தில இருந்த போது உனக்கே தெரியாம நடந்தது ... ஆனா இப்போ உனக்கு பயம் மட்டும் தான் இருக்கு . வேணும்னா முயற்சி பண்ணி பாரு " என்க...அவளும் ஒரு இடத்தை மனதில் வைத்து கொண்டு ஆருஷி கைகளை பிடித்து முயற்சி செய்ய .. ம்ஹூம்... அவளால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர இயலவில்லை பாவமாய் ஆருஷியைப் பார்க்க.. அவனும் அவளை புரிந்து கொண்டு "பரவாயில்லை ஸ்ரீ .. நாம் வேறு எதும் வழி கண்டுபிடிப்போம்... "என யோசிப்பதற்குள் மீண்டும் அவர்கள் நின்ற சாலையின் தூரத்தில் இருந்த விளக்குகள் ஒவ்வொன்றாக விட்டு விட்டு எரிய ஆரம்பித்தது....அப்படியே நகர்ந்து நகர்ந்து அவர்கள் நின்ற பகுதியை நோக்கி ஒவ்வொரு விளக்காய் அணைந்து அணைந்து எரிய .." ஸ்ரீ அதுங்க வந்துருச்சு வா சீக்கிரம் இங்க இருந்து போவோம்" என்றவர்கள் மீண்டும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர்....❤️❤️❤️கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏👇👇

Thread 'உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி' https://pommutamilnovels.com/index.php?threads/உயிரின்-தேடல்-நீய-டா-டி-கருத்துதிரி.429/
 

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 22


தொடர்ந்து சித்தர்கள் சக்தியை பயன்படுத்தியால் ஆருஷியின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியிருந்தது....அதை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர்...


"ஸ்ரீ உன்னை சீக்கிரம் வெளிச்சத்திற்கு அனுப்பனும்... அதற்கான வழியை இப்போ நாம தேடணும் அதுமட்டுமல்ல விடியும் வரை நாம எப்படியாவது அந்த பிசாசுங்க கிட்ட இருந்தும் தப்பிக்கணும்..‌‌...ஒரே இடத்திலேயே நம்மால இருக்கவும் முடியாது"என தற்போதைய நடைமுறை பிரச்சினைகளைக் கூற எதையே யோசித்துக் கொண்டிருந்த ஸ்ரீ அப்போது தான் தங்கள் நிற்கும் இடத்தை ஆராய்ந்தாள்....


அது சென்னையின் முக்கிய பேருந்து நிலையம்... சட்டென அவளுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது அதை ஆருஷியிடமும் கூறினாள்...


"நம்மால பஸ்ல போக முடியுமா ரிஷி"என சந்தேகத்துடன் கேட்க ... அவனும் " வொய்நாட் ஸ்ரீ... பிகாஸ் நமக்கு டிக்கெட் கூட எடுக்க வேண்டியது இல்லை"என குறும்பாய் கண்ணடித்து கூற ஸ்ரீக்கு இந்நிலையிலும் அவனால் எப்படி சாதாரணமாக இருக்கமுடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது..


"ரிஷி நீ இருக்கியே "என்றாள் புன்னகையுடன்... "நாம எங்க போவது " ஸ்ரீ


"ஸ்ரீ உனக்கு பிடிச்ச இடத்தை சொல்லு அங்க போவோம்.... ஆதித்யா வை பாத்தில.. அதே போல உனக்கு எதாவது ஆசை இருந்து நிறைவேறுச்சுனா உனக்கும் வெளிச்சத்திற்கான பாதை திறக்கலாம்ல... " என்க...


"ஒரு வேளை இருக்குமோ ... அப்படினா என்னோட ஆசை என்ன.... " நாடியில் ஒரு விரலை வைத்து யோசித்தவளுக்கு சட்டென எதும் நியாபகம் வந்தால் அல்லவா.... அவளின் சிறுபிள்ளை தனமான செயலில் இதழில் புன்னகை பூக்க அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஆருஷி...


நேரம் ஆவதை உணர்ந்த ஆருஷி "ஸ்ரீ உன் ஊருக்கு போகிற பஸ் இருக்கு பாரு ... அதுல போவோமா " என்றதும் அவளோ வேகமாக மறுப்பாக தலையசைத்தாள் ... இதுவரை அவள் முகத்தில் இருந்த சிறுபிள்ளைதத்தனம் மாறியிருக்க அதில் ஒரு வித தீவிரமும் வெறுமையும் குடிகொண்டது.


அதை கவனித்த ஆருஷி"ஸ்ரீ என்னாச்சு.. உன் ஊருக்கு போக உனக்கு விருப்பம் இல்லையா" என்க.‌


" அப்படியில்லை..‌..." என இழுக்க.. ஆருஷிக்கு ஏதோ வித்தியாசமாக பட்டது... " ஸ்ரீ உண்மைய சொல்லு ஊருக்கு போவது பிடிக்கலையா இல்லை உன் குடும்பத்தை பார்க்க விருப்பம் இல்லையா" என கூற ஸ்ரீக்கு அவன் சரியாக தன் எண்ணத்தை கணிதத்ததில் ஆச்சர்யமாக பார்த்தாள்...


அவளின் அதிர்ந்த தோற்றத்திலேயே உண்மையை உணர்ந்தவன் "அப்போ உன் குடும்பத்தை பார்க்க போவதுதான் பிடிக்கல.. உண்மையை சொல்லு ஸ்ரீ கடைசியா உன் ஃபேமிலியை எப்போ பார்த்தாய்"என கேட்க அவளோ மறுப்பாக தலையசைத்தாள்...


ஆதித்யா வை போல ஒருவேளை.... என யோசித்தவனுக்கு அவள் மறுப்பின் காரணம் மட்டும் புரிவதாக இல்லை... கேள்வியாய் அவளைப் பார்க்க அவளோ தவறு செய்த குழந்தையைப் போல தலைகுனிந்தாள்....


'உணர்ச்சிகளால் தான் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப இயலும் ' என்று சித்தர் சொன்ன வார்த்தைகள் தான் ஆருஷிக்கு நியாபகம் வந்தது...


"ஸ்ரீ இப்போ நீ என்கூட வர்ற அவ்வளவுதான்... நாம உன் வீட்டுக்கு போறோம் " என கட்டளையாய் கூறினான்... ஏனெனில் அவனுக்கு தெரியும் இப்போது கெஞ்சினால் வேலைக்கு ஆகாது எனவே தான் கண்டிக்கும் குரலில் அதட்டினான்.. அவனின் கடுமையான குரலில் ஒரு நிமிடம் மனம் திடுக்கிட கண்கள் கலங்கி மறுப்பாக தலையசைத்தாள்...


" ஸ்ரீ நமக்கு வேற வழி இல்ல நாம இப்போ வேற எங்காவது போயே ஆகணும்.... என்ன நம்பு ஸ்ரீ நாம பொள்ளாச்சி போறோம்..."என்றவன் ஸ்ரீ யின் கரத்தைப் பிடித்தான்...


அவனுக்கு தன் ஊர் எப்படி தெரியும் என அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை...ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவர்களின் பயணமும் ஆரம்பமானது..


அவனின் நம்பிக்கையான வார்த்தைகளில் சிறிது தைரியம் வரப் பெற்றவள் அவன் இழுத்த இழுப்பிற்கு உடன் சென்றாள்...


அது வாரநாட்கள் என்பதால் கோவைப் பேருந்து அவ்வளவு நெரிசல் இன்றி குறைவான இருக்கைகளே நிரம்பி இருக்க அதன் சீரான பயணத்தை துவங்கியிருந்தது...


இவர்கள் இருவரும் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்... ஆருஷிக்கு சற்று பதற்றமாகவே இருந்தது எங்கே மீண்டும் அந்த பிசாசுகள் தொடர்ந்து வந்து விடுமோ என பேருந்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்...


ஸ்ரீயோ எதையும் கவனியாதவள் போல் சோகமான முகத்துடன் ஜன்னல் வழி தொலைதூர நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள்...


அவள் உயிரோடு இருந்த காலகட்டத்தில் எல்லாம் எந்த விடயத்திற்கும் இவ்வளவு பயந்தது கிடையாது அதைவிட அவளை வருத்தும் விடயங்கள் எதுவும் அவளை அணுக விடாமல் எப்போதுமே வேலி போல் அவளின் உறவுகள் பக்கபலமாக இருந்தது அப்படிப்பட்ட சூழிநிலையில் வளர்ந்தவளுக்கு இவையெல்லாம் ஒருவித பயத்தையே உருவாக்கியது.....


பேருந்து புறப்பட்டிருக்க அப்போது தான் ஸ்ரீயை கவனித்தான்‌.‌..‌ அவளின் முகம் ஒரு வித இறுக்கத்துடன் இருக்க அவளை எப்படி சமாதானம் செய்வது என அறியாமல் விழித்துக் கொண்டிருந்தான்..


ஆருஷியும் மௌனத்தையே கடன் வாங்கிக் கொள்ள ஸ்ரீ "சொல்லு ரிஷி எதுக்காக அந்த பிசாசுங்க நம்ம துரத்திட்டு இருக்கு... என்கிட்ட இருந்து அதுங்களுக்கு என்ன தான் வேணும் " என ஒருவித இயலாமையுடன் வினவினாள்...


இனி உண்மையை மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்தவன் " அதுங்களுக்கு நீதான் வேணும் ஸ்ரீ...உன்னோட ஆன்மா "என்றவன் ஆதிலிங்கத்தைப் பற்றி கூறி தற்போது அவனின் நோக்கத்தையும் விளக்கினான்...


"அதுமட்டும் இல்லை ஸ்ரீ உங்க அப்பா சிவகணத்தோட வாரிசு"என்றதும் ஸ்ரீ குழப்பமாக ஆருஷியைப் பார்த்தாள்.. ஏனெனில் அவரின் தாத்தா சிவகணம் என அவன் கூறவில்லை தந்தை என்றே அல்லவா கூறுகிறான்... எனில் உண்மையில் என்னதான் நடக்கிறது என புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டாள்....


"ஆமா ஸ்ரீ உங்க தாத்தாவோட வளர்ப்பு மகன் தான் உங்க அப்பா... "என கூற அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது... தன் தந்தை வளர்ப்பு மகனா .. இந்த உண்மை குடும்பத்தில் யாருக்கெல்லாம் தெரியும் என ஒரே குழப்பமாக இருந்தது.. இருந்தும் யாரும் இதுவரை அவரைப் பிரித்து பார்த்து நடத்தியதில்லை என்பதை யோசித்தவளுக்கு இந்த உண்மை என்னோடே போகட்டும் என்று நினைத்து கொண்டாள்...


மேலும் தொடர்ந்த ஆருஷி " சிவகணங்களுக்கு ஒரே வாரிசு அதுவும் ஆண் வாரிசு தான் அப்பிடிங்கறதுதான் நியதி ஆனா அத மாத்தி பிறந்தவதான் நீ அதுவும் சிவபக்தியோட... என்னதான் பிறப்பு சிவவம்சத்தில இருந்தாலும் உண்மையான சிவபக்தி இருக்கவங்க தான் சிவகணம்னு சொல்றதுக்கு தகுதியானவங்க.." என்க அவளுக்கு அது சரியெனவே பட்டது அவள் தந்தையோ தமையனோ சிவ வழிபாட்டை ஆதரிப்பவர்கள் கிடையாது அதே சமயம் தூற்றுபவர்களும் அல்ல... கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பது உண்மையே... என யோசிக்க


ஆருஷி "ஆனா சிவகணங்கள் வம்சத்துல பிறக்குற மூத்த பெண்ணாலதான் அவனுக்கான அழிவுனு சித்தர் சொன்னாரு ஆனா நீ ரெண்டாவது பொண்ணுதான அப்புறம் ஏன் உன்னோட ஆன்மாவ அவன் அடைய நினைக்குறானு மட்டும் புரியல ஸ்ரீ"...என்க


ஸ்ரீ "ஒருவேளை என்னோட பக்தியே அவனுக்கு பலமா இருக்கலாம் " என்றாள்...அப்படியும் இருக்கலாம் என்றே ஆருஷிக்கும் தோன்றியது .....


ஸ்ரீ " நாம வேற இடத்துக்கு போலாம் ரிஷி... "என்றாள் உள்ளே போன குரலில்...


அதைக் கேட்ட ஆருஷி "உன்னோட குடும்பத்தைதான பார்க்க போறோம் அப்புறம் ஏன் ஸ்ரீ வேணாம்னு சொல்ற" என்க


"அதுவந்து எனக்கு தெரியல ரிஷி ....என்னால அவங்கள ஃபேஸ் பண்ண முடியும்னு தோணல .... என் குடும்பத்துக்கு நான்னா உயிரு... என் தாத்தா அஞ்சு வயசுவர என்னை அவரு தோளைவிட்டு இறக்கவே மாட்டாரு, வள்ளிப் பாட்டி பாசத்தைக்கூட கண்டிப்பாதான் காட்ட தெரியும்... அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நான்தான் உலகம்... சித்தி சித்தப்பாக்களுக்கு எல்லாம் அவங்க பசங்களவிட என்னைதான் பாசமா வளர்த்தாங்க.. அப்புறம் விஷ்ணு அண்ணா , ரவியண்ணா , ....என அவள் அடுத்து கூறும் முன்


ஆருஷி "ராம் , டிவின்ஸ் நரேன், நவீன், மனோஜ் .... " என்றான் இழுவையாக... ஸ்ரீ அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனைப் பார்க்க அப்போதுதான் அவனுக்கும் தான் உளறியதை உணர்ந்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.....


---------------------------


மதிகெட்டான்சோலையின் ஒரு பகுதியோ நெருப்பில் வெந்து கொண்டிருந்தது.... ஆள்நடமாட்டம் அற்ற வனத்துறையால் தடைசெய்யப்பட்ட அந்த பகுதியில் தீப்பற்றி மளமளவென பரவ அதனை தீயணைப்பு படையினரும் , காட்டின் அருகில் உள்ள கிராம மக்களும் அணைக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர்


ஆனால் இத்தனை கலவரங்களுக்கும் காரணமானவனோ வெறிகொண்ட வேங்கையென அந்த காட்டையே ஒரு வழிப் படுத்திக் கொண்டிருந்தான் அவன் ஆதிலிங்கம்... தன்னுடைய விடுதலை அருகில் பிரகாசமாக இருக்க கையில் கிடைத்த பொக்கிஷத்தை அடைய இயாலாதது போல் அந்த ஆன்மாவை அவனால் நெருங்க முடியாமல் இருப்பதில் அதீத கோபமுற்றான் அவனின் கோபக்கணலே காட்டின் ஒரு பகுதியை எரித்துக் கொண்டிருந்தது....


பிசாசுகள் மூலம் ஒவ்வொரு முறை அந்த ஆன்மாவை நெருங்கி செல்கையிலும் ஏதோ ஒரு ஒளி தடுத்து அதை காப்பதை தன் ஞானவொளி மூலம் அறிந்தவனுக்கு நிதானம் என்பதே சிறிதும் இன்றிப் போனது...


இதற்காக கிட்டத்தட்ட அறுபது எழுபது வருடங்களுக்கு மேல் காத்திருப்பவனுக்கு இந்த தோல்வி நிதானத்தை அளித்தால் அது அதிசயமே..‌‌ தீ பரவாமல் இருக்க இரவு பகல் என ஒரு நாள் முழுதும் போராடி அந்த தீயிணை அணைத்து இருந்தனர்...அந்த காட்டின் நாற்பது சதவீத மரங்கள் முற்றிலும் அழிந்து இருக்க அதனை அப்புறப்படுத்தும் அங்கிருந்த வனத்துறை முயற்சிக்க அந்த ஊர் மக்களோ முற்றிலும் மறுத்துவிட்டனர்...


அந்த காட்டைப் பற்றி அறிந்துதான் அரசாங்கமே தடைவிதித்திருக்க மேற்கொண்டு எந்த பணியும் நடக்காமல் தீப்பிடித்ததற்கான காரணத்தைகூட விசாரிக்காமல் நெருப்பு அணைக்கப்பட்டதோடு அங்கிருந்த அனைவரும் திரும்பிவிட்டனர்...


அந்தக் காடே சாம்பலும் புகையும் நிறைந்து காட்சியளித்தது......


❤️❤️❤️❤️❤️


உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏

Thread 'உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி' https://pommutamilnovels.com/index.php?threads/உயிரின்-தேடல்-நீய-டா-டி-கருத்துதிரி.429/
 
Status
Not open for further replies.
Top