ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

Rishi24

Well-known member
Wonderland writer
ஆதர ஸ்வரங்கள்!!!

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

FB_IMG_1633014217308.jpg

FB_IMG_1633014211954.jpg

ஹீரோ : ஆதேஷ்
ஹீரோயின் : சுஜி

விமர்சனம் எழுத தோனல சத்தியமா.. மனசு ரொம்ப நெகிழ்வா இருக்கு.. கதை போக்குல மண உணர்வுகள் எப்பிடி இருந்துதுன்னு சொல்லலாம்னு தான் வந்தேன்..

எனக்கு ஆதேஷை பிடிக்கல!!

(????????) கீபோர்டு இமோஜி செட்டிங்ல இந்த இமோஜிஸ் தேடாம நான் சொல்ல வருவதை கேட்கவும்... மீ பாவம் ?‍♀️?‍♀️

நிஜமாவே எனக்கு ஆதேஷை பிடிக்காது... அதாவது Sourabh Raj Jain ஐ சீரியஸ்லி எனக்கு புடிக்கவே புடிக்காது...

ஒரு இரண்டு அல்லது மூணு வருஷத்துக்கு முன்னாடி மே பீ நான் டென்த் படிச்சிட்டிருந்தப்போனு நினைக்கறேன்... சிந்து பைரவின்னு ஒரு ட்ராமா போச்சு... அதுல இவன் வர்றான்... பேரு யுவராஜ்... இன்னும் கூட நான் இவனுக்கு யுவராஜ் னு தான் சொல்லுவேன்... அவனுக்கு சிந்து அவன் அம்மானு தெரியாது... அம்மா மேல அவ்வளவு வெறுப்பு... அவ்வளவு கேடி அவன்.. ரொம்ப டேன்ஜர் கேரக்டர் மாதிரி காட்டியிருந்தாங்க... அப்போ இத விட சின்ன பொண்ணு வேற.. அவன கண்டாலே பிடிக்காது எனக்கு... சரியான டெரர் மூஞ்சி... அவன கண்டாலே ஆகாதுன்னு நான் ட்ராமா பாக்குறத விட்ற அளவு அவன பிடிக்காது...

அதுக்கப்பறமா அக்கா ஸ்டோரி வந்துது... நான் கதை முன்னாடி ஒரு தடவ படிச்சிருக்கேன்... முன் போட்டோ பாக்கல... கேரக்டர்ஸ் கூட அவ்வளவா ஞாபகம் இல்ல.. மொத்தமா மறந்து போச்சு... கதை படிச்சு அரைவாசியில தான் இவன் போட்டோ கண்டேன்.... இவனா ? இதே ரியாக்ஷன் தான் எனக்கு... பொம்மு கா கதை வேற படிக்காம இருக்க முடில.. இவன் போட்டோ கண்டதும் படிக்குற மூடே போயிடுச்சு... அக்காவோட ஸ்டோரில பிடிக்காத கதை லிஸ்ட்ல இது மட்டும் முன்னாடியே வந்து நிக்கும் மனசுல.. அதுவும் அவன் ஹீரோங்குற ஒரே காரணத்துக்காக தான்..

ஆனா திரும்ப ரீரன் போட்டப்போ கொஞ்சம் பெரிய பொண்ண ஆயிட்டேன் (கட்டாயம் நம்பணும்?‍♀️)

திரும்ப அவன் போட்டோ க்ரூப்புல பாத்து மறுபடியுமாஆ ரியாக்ஷன் எனக்கு...

கதை முடிஞ்சு கமெண்ட்ஸ் ரொம்ப கவலையா வந்திருந்தது பாத்து... இவன் கெடக்குறான் நாம படிக்கலாம்னு நேத்து நைட்டு தான் ஆரம்பிச்சேன்... என்ன தான் தவிர்க்க நெனச்சாலும் முன் போட்டோ பாத்து ஆதேஷ் னு பாக்கற இடத்துல எல்லாம் இவன் மூஞ்சு தான் வந்து நின்னுச்சு... சரி இருக்கட்டும்னு கஷ்டப்பட்டு தாண்டி போனேன்...

வினித் அண்ட் அவன் வர்ற இடங்கள் ரிஷி வினித் ல இவனோட உணர்வுகள் வெளிப்பட்ற இடங்கள்ல சீரியஸ்லி அந்த உணர்வை எப்பிடி சொல்றதுன்னு தெரில... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே ஹேர்ட் ஆயிட்டேன்.. ??

அவன் வினித் கூட வீட்டுக்கு வந்த சீன்ல.. ' டாட் எழுந்துட்டாரா அப்போ நான் வர்றேன்னு' வினித் ரிஷி முக்கியம்குற ரீதியில எழுந்தப்போ சத்தியமா துடிச்சு போச்சு... என்னன்னு தெரில ரொம்பவே அழுதேன்...

சுஜி சாக்லேட் கொடுக்கற சீன்ல ரிஷியோட பேச்சுக்கும் ஆதேஷோட பேச்சுக்கும் வினித் கிட்ட ரிஷிக்கு தான் அதிக ரெஸ்பான்ஸ் இருக்கு னு காட்டுன இடம்,

ரிஷி வினித்தை விட்டு தர கேட்ட இடத்துல அவன் மன உணர்வு, பேச்சு, வலி, கண்ணீர்...

'ஐ அம் அன்லகி அம்மா' னு சொல்லும் போதும், 'அவனுக்கு நான் அங்கிள் வேற ஒருத்தன் அப்பானு' அழும் போதும் டு பீ பிரான்க் நான் ஏங்கி அழுதேன்...

வீட்டுல படம் பாத்துட்டு கைல மொபைல் வெச்சிகிட்டு இருந்தேன்... என்னையும் மீறி கேவல் வந்துடுச்சு.. அவசரமா வெளிய போயிட்டேன்..

ரொம்ப வலிச்சுது... அவ்வளவு வருஷமா வெறுப்புல இருந்த அவனை (sourabh raj) ரொம்பவே புடிச்சது... அவன் கேரக்டர் ஆழமா பதிஞ்சு போச்சு..

அதுக்கு மேல வாசிக்க முடியாம வந்து பொம்மு கா கிட்ட சொல்ல 12 எபி க்கு அப்பறம் சேட் இல்லடா வாசிங்க ன்னு சொன்னாங்க...

இப்போ வாசிச்சுட்டேன்...

மனசு அவ்வளவு நெகிழ்வா இருக்கு... விமர்சனம் வர்ணணனகளுக்கு அப்பாற்பட்ட கதாபாத்திரங்கள்!!!

அதனால தான் விமர்சனம் போடல..

கடைசியில மனசுக்கு தோனுனது... அவன் சொல்லுவான் 'சுஜி ஏஞ்சல்னு...' ரிஷி இவானா ஏஞ்சல்னு சொல்லுவான்...

நிச்சயமா இங்க ஆண் தேவதை அவன் மட்டும் தான்!!!

அப்பான்னு தன்னை கூப்புடாம வேற ஒருத்தன் கிட்ட அவன் நெருக்கமா இருக்கறது தெரிஞ்சும் ரிஷியை சூப்பர் ஹீரோ னு சொன்ன அவன் தான் சூப்பர் ஹீரோ ❤️

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்காச்சி ?

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

நீங்க இன்னும் இன்னும் எழுதணும்... ஜெயிக்கணும்..

நன்றி.
ரிஷி.

28-08-2021.

..............................................................................

மரித்திருந்த என்னை தட்டி எழுப்பிய உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்!

காதல் காவியங்கள் இருந்தும் உன் காதலே எனக்கு காவியமாய்!!!

எனை பிறக்கச் செய்ய உனை நீயே எனக்கென தந்த போது மொத்தமாக வீழ்ந்தது இருதய நிபுணன் என் இருதயம்!!!

மகனை கையிலேந்த முடியாத நிலையில் என்னை நானே வெறுத்திருக்க என்னை மீண்டும் தந்தையாய் நெகிழச் செய்த தருணத்தை என்றும் மறவேன் நான்!

மகன் என்ற ஒற்றை சொல்லில் ஏற்படும் வலியை புதைக்க கற்றுக் கொண்டவன் என் தேவதையின் சிரிப்பில் மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்!!!

கணவனாய் ஏற்று தந்தையாய் எனை மீண்டுமொருமுறை நிறுத்திய நீ என்றும் என்னவள்... எனக்கே எனக்கானவள்!!!

- ஆதேஷ்
 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

அந்திநேர தென்றல் காற்றே!

FB_IMG_1633014332682.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : யாதவ், ஹரி
ஹீரோயின் : ருக்மணி, ராதா

சுவாரஷ்யாமான காதல் கதை...

கிருஷ்ணனின் ராதையாக அவன் மனதில் நுழைந்தவள் ராமனுக்கு ருக்மணியாக...

கிருஷ்ணனின் ராதையாக இருக்க வேண்டியவள் இராவணனுக்கு ராதையாக!

மரத்திருந்த இதயம் மழலையின் வரவில் உயிர்பெற்றிட காதல் மட்டும் ஏனோ மீண்டும் புதைந்து தான் போயிற்று போலும்!

இழந்த காதலை மீட்டெடுக்க ராமனாய் அவன் போராட சூரியன் பின் மறைந்து போகும் நிலைவை போலாயிற்று அவள் காதல்!

அவள் என்றும் அவனவள்!!!
கிருஷ்ணின் ராதை அல்ல ராமனின் ருக்மணி!!!

சகோதர உறவு விலக்கி வைத்திட காதலியிடம் அடைக்கலம் தேடியவனுக்கு எல்லாமுமாக அவள்!

காதல் வேண்டாமென அவளை எட்ட நிறுத்திய போது காயப்பட்ட காதல் எதுவும் வேண்டாமென தூக்கியெறிந்த போது மீண்டும் அவனுக்காகவே உயிர்ந்தெழுந்தது!!!

அவனுக்காக பழியை சுமந்த போது அழகாக தோன்றிய அவள் காதல் அவளுக்காக அவள் மட்டுமே போதுமென அவன் வந்த போது இன்னும் பேரழகாயிற்று!

அவனுக்கு அவள் என்றும் காதலி!!!
இதயக் காதலி!!!
கிருஷ்ணனின் ராதை!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

07-09-2021.


......................................................................
 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

அர்ஜுன் பரீக்ஷித்!

PicsArt_09-21-03.46.41.png

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : அர்ஜுன் பரீக்ஷித்
ஹீரோயின் : உத்தரா

ஆழமான காதல் கதை...

கலியுக வீரனாய் பவனி வளம் வருபவன் அவனவளுக்கு மட்டும் காதல் ராக்ஷஸனாய்!!!

ராமன் நாமம் கொண்டு இதயம் நுழைந்தவன் அர்ஜுனனாகி வெளியேற கண்களுக்கு காதலனாய் தெரிந்தவன் அரக்கனாய் மாறிப் போனதன் மாயம்?

பெண்களுக்கு காவலனாய் அவதரித்தவன் பெண் மனதை புரிந்து கொள்ளாமல் போனது தான் சதியோ!

உலகத்தை தன் உதிரத்தால் காத்து தன் மகவால் சகோதரனையும் காத்த சாகசக்காரன் அவளவனுக்கு மட்டுமே அடிபணியும் குழந்தையாய்!!!

மகனாய் சகோதரனாய் கணவனாய் தந்தையாய் பல பரிணாமங்களில் மாறுபவன் அவள் என்று வந்து விட்டால் மட்டும் பலவீனனாய் ஆகிப் போவது தான் விந்தையிலும் விந்தை!

விதியாட்டத்தில் விதி எழுதுபவன் என்றும் அவனே அவனாக!

அர்ஜுன் பரீக்ஷித்!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

21-09-2021.
 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

காரிகையின் கானல் கனவுகள்!

FB_IMG_1633014541892.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : விதுன் சக்கரவர்த்தி
ஹீரோயின் : மலரழகி

சுவாரஷ்யாமான காதல் கதை...

பேனா முனையில் பாடம் கற்றுக் கொடுக்கும் எழுத்தாளனுக்கு காதலை கற்றுக் கொடுக்க வந்த மலரவள்!

முதல் காதலில் தோற்று விலகியவன் மதுவை நாட அவன் வாழ்வின் வசந்தமாய் அவள்!

காதலை அள்ளிக் கொடுத்தவன் காதலிக்கவே கூடாது என சட்டம் பேச தண்டனைகளுக்கே அப்பாற்பட்டுப் போனது அவள் காதல் விதிகள்!

காதலனாய் மனதில் சுமந்தவனின் மகவை தன்னுதிரமாய் வயிற்றில் சுமந்தவள் கனவிருந்தும் விலகிச் சென்றாள் அவன் ஒற்றை நம்பிக்கைக்காய்...

அருகிலிருந்த போது உணராத காதல் விலகிச் சென்ற பின் தேட காரிகையின் மகவே அவன் ஒரே ஆதாரமாய் வாழ்வில்!

கண்களால் அவனிடம் கடத்திய காதல் தோற்றுப் போக தன்னை நெறுப்பிற்கிரையாக்கி ஜெயம் பெற்றது அவள் அவன் மீது கொண்ட நேசம்!

கானல் கனவுகளாய் இருந்த பொக்கிஷங்கள் வாழ்வின் நிஜமாய் உருமாறிட காரிகையின் கானல் கனவுகளுக்கான நிஜ பிம்பமாய் அவள் காதல் கணவனாய் ஓர் எழுத்தாளன்!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

26-09-2021.

 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

நறுமுகையே நறுமுகையே!

FB_IMG_1633014578845.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோஸ் : துரியன், வருணன்
ஹீரோயின்ஸ் : எம்மா, கல்யாணி

சுவாரஷ்யாமான கதை...

மனைவி உயிரை காவு வாங்கத் துடிக்க, உயிரை மீட்க அவன் போராடும் போராட்டம்!

தந்தை செய்த பிழையில் தமையன் வாழ்வையே விலக்கிவிட்டு சகோகதர நலனுக்காய் நின்றது தான் இரத்த பந்தமா?

நட்பின் துரோகத்தில் நண்பனை விலக்கிட, விலகிட துடித்த காரணமே இருவருக்கும் பகையாகிப் போனது!

காதலித்து கை கோர்த்தவன் சகோதரணின் உயிருக்காய் தன் உயிரையே தன்னுள் புதைத்து கொண்டது தான் பெரும் விந்தையே!

செய்துரோகம் வலி முதுகில் இருந்தாலும் கடைசி நேர நிமிடங்களில் அவனை அழிக்கத் துணிந்த உள்ளங்களே அவன் உயிரை காக்க போராடிய உள்ளங்களாக!

கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு அவனுக்காகவே அவன் நலனுக்காகவே என்றும் ஆதாரமாய்!

நட்பின் தூரலாய் நீங்காமல் நெஞ்சில்!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

26-09-2021.

 
Top